
இந்த நிலையில் கமலின் நெருங்கிய நண்பரான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், கமலுக்கு விஸ்வரூபம் படத்தால் நஷ்டம் ஏற்பட்டால் கமல் இயக்கும் அடுத்த படத்தில் சம்பளம் வாங்காமல் நடித்து அந்த நஷ்டத்தை ஈடுசெய்வேன் என்று கூறியுள்ளார்.
ரஜினியின் இந்தப் பேச்சு அனைத்து தரப்பிலும் உற்சாகத்தை தந்துள்ளது. இதே போல் பல முன்னணி திரையுலகினரும் கமலுக்கு ஆதரவு அளித்துவரும் நிலையில் கமலின் ரசிகர்களும் அவருக்கு உதவ டிமான்ட் டிராட்டை கமலின் ஆழ்வார்பேட்டை அலுவலகத்திற்கு அனுப்புகின்றனராம்.
No comments:
Post a Comment