Thursday, November 27, 2014

மனம் கொந்தளிக்கும் போது கவிதை பிறக்கும்


அமிதாப்பச்சன் ‘பூத்நாத்’ இந்தி படத்தில் நகைச்சுவை இழையோட நடித்தார். படம் வெற்றியடைந்தது. அதன் தொடர்ச்சியாக ‘பூத்நாத் ரிட்டர்ன்ஸ்’ படம் வெளிவந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதில்  உள்ள சுவாரஸ்யங்களை அமிதாப்பச்சன் பகிர்ந்துகொள்கிறார்.

‘பூத்நாத் ரிட்டர்ன்ஸ்‘சில் நடித்த  அனுபவம் எப்படி இருந்தது?

ரொம்ப வித்தியாசமாக இருந்தது. அதில் ஹீரோ, வில்லன் எல்லாமே நான்தான். கதாநாயகி கிடையாது. அரைகுறை ஆடை நடனமும் கிடையாது. உண்மையை சொன்னால் அந்த படத்தில் என்னோடு நடித்த பார்த்த ராவ் என்ற சிறுவன்தான் ஹீரோ.

பெரிய சூப்பர் ஸ்டாரான உங்களோடு நடிக்க அந்த சிறுவன் பயந்தானா?

பெரிய சூப்பர் ஸ்டாரா! யார் நானா? இப்படியெல்லாம் சொல்லி நான் யாரையும் பயமுறுத்துவதில்லை. இத்தனை ஆண்டுகாலம் கேமராமுன் நிற்கிறேன். இன்னமும் கேமரா எனக்கு புதிதுபோலதான் தோன்றுகிறது. நான் கற்றுக்கொள்ள வேண்டியது நிறைய இருக்கிறது. எடுத்த எடுப்பிலேயே அந்த சிறுவன் அருமையாக நடித்துவிட்டான். அந்த வயதில் எனக்கு அவ்வளவு திறமை    இருந்ததில்லை.

பூத்நாத் படங்கள் இரண்டிற்கும் என்ன வித்தியாசம்?

இரண்டும் வெவ்வேறு விதமான விஷயங்கள் கொண்டவை. முதல் படம் முழுக்க முழுக்க நகைச்சுவை. பூத்நாத் இறந்து பூத உலகிற்கு செல்வதோடு கதை முடிந்துவிடுகிறது. பிறகு மீண்டும் பூமிக்கு திரும்பி வருகிறேன். அக்ரோட் என்ற சிறுவனோடு நட்பு ஏற்படுகிறது. சமூக அவலங்களைப் பார்த்து கொந்தளிக்கிறேன். தேர்தல் களத்திலிறங்கி ஜெயிக்கிறேன். இந்த படம் தேர்தல் நேரத்தில் எடுக்கப்பட்டதால் அதன் தாக்கம் அதிகமாக இருந்தது.

படத்தின் வெற்றி யாரை உற்சாகப்படுத்தும்?

படம் வெற்றிபெற வேண்டும். எனக்காக அல்ல, என் நண்பர் தயாரிப்பாளர் ரவி சோப்ராவிற்காக! அவர் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டார். இந்தப் படத்தின் வெற்றி அவரை உற்சாகப்படுத்தும்.

படத்தில் அந்த சிறுவனோடு நடிக்க உங்களுக்கு சிரமமாக இருந்ததா?

அவனைப் போன்ற சினிமாவிற்கு முற்றிலும் புதிய சிறுவனோடு நடிப்பது கஷ்டம்தான். ஆனாலும் சுவாரசியமான விஷயமாக இருந்தது. புதுமுகமான சிறுவர்கள் கேமரா முன்பு என்ன செய்வார்கள் என்றே தெரியாது. அவர்களோடு நடிப்பது சிரமம்தான். ஆனால் அவர்களிடம் இருக்கும் திறமையை வெளிக்கொண்டுவர நாமும் கொஞ்சம் ஒத்துழைக்கவேண்டும்.

இந்தப் படத்தை யாரெல்லாம் பார்க்கவேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்கள்?

இந்தியாவில் உள்ள சிறுவர்கள் அனைவரும் பார்க்கவேண்டும் என்று விரும்புகிறேன். அதில் இந்திய அரசியல் சாசனம், தேர்தல் விதிமுறைகள் பற்றி விரிவாக சொல்லப்பட்டிருக்கிறது. முக்கியமாக என் பேத்தி ஆராத்யா பார்க்க வேண்டும் என்று விரும்புகிறேன்.

இன்றைய காலகட்டத்தில் எவ்வளவு பெரிய பட்ஜெட் படமானாலும் ஒரு வாரம்தானே ஓடுகிறது?

உண்மைதான். காரணம் சினிமாவைத் தவிரவேறு பல பொழுது போக்கு சாதனங்கள் வந்துவிட்டன. தொலைக்காட்சி, வலைதளங்களின் தாக்கம் அதிகரித்து விட்டது. கையில் வைத்திருக்கும் போனிலேயே சினிமாவை பார்த்துவிடுகிறார்கள். பயணங்களிலே பார்த்து ரசிக்கும் அளவுக்கு பொழுது போக்கு அம்சங்கள் எளிமையாக்கப்பட்டுவிட்டது. அதனால் சினிமா அதிக நாட்கள் ஓடவில்லை என்பதற்காக சினிமா எடுப்பவர்களை குறைசொல்லக்கூடாது.

ஆனால் சிறுவர்களுக்கான சினிமாக்கள் குறைந்து கொண்டிருக்கிறதல்லவா?

நல்ல விஷயங்களை குழந்தைகள் மனதில் பதிவு செய்ய சினிமா ஒரு நல்ல சாதனம். நாளைய பாரதம் அவர்கள் கையில்தான் இருக்கிறது. சில்ட் ரன் பிலிம் சொசைட்டி, சிறுவர்களுக்கான நிறைய படங்கள் உருவாக ஊக்குவிக்கவேண்டும்.

கால்பந்து விளையாட்டில் அபிஷேக் பச்சன் கலக்குகிறாரே. அவரது விளையாட்டை பார்த்தீர்களா?

சமீபத்தில்கூட பிரபலமானவர்களுக்கான போட்டியில் அபிஷேக் விளையாடியுள்ளார். அதை நான் வீடியோவில் பார்த்தேன். எனக்கும் கால்பந்து விளையாட்டு அதிகம் பிடிக்கும். நமக்கு வேண்டியவர்கள் விளையாடும் விளையாட்டு நமக்கு திரில்லை தரத்தான் செய்கிறது.

காலையில் படப்பிடிப்பில் கலந்துகொள்கிறீர்கள். இரவில் டுவிட்டர், பேஸ்புக், ப்ளாக்கில் எழுதுகிறீர்கள். கவிதையும் வடிக்கிறீர்கள். இத்தனைக்கும் மத்தியில் எப்போதுதான் தூங்குகிறீர்கள்?

வாழ்க்கை வாழ்வதற்கே. தூக்கம் வரும்போது தூங்குவேன். மற்ற நேரங்களில் என் மனதுக்குப் பிடித்ததை செய்துக் கொண்டிருப்பேன். காலையில் நடிகன், இரவில் நண்பன், ப்ளாக்கில் எழுதுவது எனக்கு மிகவும் பிடிக்கும். என் அப்பா கவிஞர். அந்த வாசனை எனக்கு கொஞ்சமாவது இருக்குமல்லவா! மனம் கொந்தளிக்கும்போது கவிதைதான் எனக்கு ஆறுதல்.

‘க்வின்’ படத்தைப் பாராட்டி கங்கணா ரணாவத்திற்கு நீங்கள் வலைதளத்தில் எழுதிய கடிதம் பற்றி அவர் பெருமைப்பட்டிருக்கிறாரே?

ஆமாம். கடிதம் எழுதுவது பழைய முறைதான். ஆனாலும் அதற்குரிய மரியாதை அதிகம். கடிதத்தில் உணர்வுகளும், தனிப்பட்ட அக்கறையும் வெளிப்     படும். அந்தக்காலத்து கடிதங்களையெல்லாம் நான் பத்திரப்படுத்தி வைத்திருக்கிறேன். கடிதத்தின் அருமை எனக்குத் தெரியும். ஒருவரின் எண்ணங்களை காலம் முழுவதும் பத்திரப்படுத்த கடிதமே சிறந்தது.

நீங்கள் யாருடன் போட்டோ எடுத்துக்கொள்ள விரும்பினீர்கள்?

பழம்பெரும் நடிகர் திலீப்குமாருடன் சேர்ந்து போட்டோ எடுத்துக்கொள்ள நான் சினிமாவிற்கு வருவதற்கு முன்பு பல முறை முயற்சி செய்தேன். ஆனால் கைகூடவில்லை. பிறகு அவருடன் சேர்ந்து ‘சக்தி’ படத்தில் நடித்தேன். அப்போதுதான் என் கனவு நிறைவேறியது.
வாசிக்கப்பட்டது

இந்த வருடத்துக்குள் திருமணம்- . மணப்பெண் யார்? - இப்போது சொல்ல மாட்டேன்

’’இந்த வருடத்துக்குள் நான் திருமணம் செய்து கொள்வேன். மணப்பெண் யார்? என்று இப்போது சொல்ல மாட்டேன்’’ என்று நடிகர் சித்தார்த் கூறினார்.

பேட்டி


பாய்ஸ், ஆயுத எழுத்து, தீயா வேலை செய்யணும் குமாரு, ஜிகர்தண்டா ஆகிய படங்களில் நடித்துள்ள சித்தார்த்துக்கும், நடிகை சமந்தாவுக்கும் காதல் இருந்து வருவதாகவும், இருவரும் திருமணம் செய்து கொள்ளப்போவதாகவும் சினிமா வட்டாரத்தில் பரவலாக கிசுகிசுக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், சித்தார்த் சென்னையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் நிருபர்களிடம், ’’கடந்த முறை தீயா வேலை செய்யணும் குமாரு படத்தின் வெற்றியை தொடர்ந்து உங்களை சந்தித்தேன். இந்த முறை ஜிகர்தண்டாவின் வெற்றிக்காக சந்திக்கிறேன். அடுத்த சந்திப்பும் இதுபோல் ஒரு சந்தோஷமான சந்திப்பாக இருக்கும்’’ என்றார். அதைத்தொடர்ந்து நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அவற்றுக்கு சித்தார்த் அளித்த பதில்களும் வருமாறு:-

திருமணம்

கேள்வி:- அடுத்த சந்தோஷமான சந்திப்பு உங்கள் திருமணம் தொடர்பாக இருக்குமா?


பதில்:- அப்படி உறுதியாக சொல்ல முடியாது. ஆனால், இந்த வருட இறுதிக்குள் நான் திருமணம் செய்து கொள்வேன்.

கேள்வி:- அது, காதல் திருமணமாக இருக்குமா?

பதில்:- திருமணமாக இருக்கும். காதல் திருமணமாக இருக்குமா? என்று சொல்ல முடியாது.

கேள்வி:- மணப்பெண் யார்?

பதில்:- மணப்பெண் யார் என்று இப்போது சொல்ல மாட்டேன்.

ஜோடி

கேள்வி:- உங்களுக்கு பொருத்தமான ஜோடி யார்?


பதில்:- ஜோடியை நான் முடிவு செய்வதில்லை. டைரக்டர் தான் முடிவு செய்கிறார். எனக்கு பொருத்தமானவர் என்பது டைரக்டர்களுக்குத்தான் தெரியும்.

கேள்வி:- ’’சித்தார்த்தின் ரசிகை நான்’’ என்று உங்களை லட்சுமிமேனன் புகழ்ந்து இருக்கிறாரே?


பதில்:- லட்சுமிமேனன் என் ரசிகை என்று புகழவும் செய்வார். ’பாய்ஸ்’ படம் வெளியானபோது, நான் இரண்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன் என்று காலை வாரவும் செய்வார்.

ரசிகர் மன்றம்

கேள்வி:- நடிகர்களுக்கு ரசிகர் மன்றம் அவசியமா, அவசியமில்லையா?

பதில்:- எனக்கு ரசிகர் மன்றம் இல்லை. இஷ்டப்பட்ட நடிகர்கள் வைத்துக் கொள்கிறார்கள். எனக்கும், ரசிகர் மன்றத்துக்கும் சம்பந்தம் கிடையாது.

கேள்வி:- ஜிகர்தண்டா, ஒரு கொரிய படத்தின் ’காப்பி’ என்கிறார்களே?

பதில்:- அதை நீங்கள் டைரக்டரிடம்தான் கேட்க வேண்டும்.

கேள்வி:- அந்த படத்தில், நடிகரான விஜய் சேதுபதியை நீங்கள் மிரட்டி நடிக்க வைப்பது போல் ஒரு காட்சி வருகிறதே...அதுபோல் உங்களை யாராவது மிரட்டி நடிக்க வைத்து இருக்கிறார்களா?

பதில்:- என்னை யாரும் மிரட்டவில்லை. அது, சினிமாவுக்காக வைக்கப்பட்ட காட்சி. அதை ’சீரியஸாக’ எடுத்துக் கொள்ளக் கூடாது.’’இவ்வாறு சித்தார்த் கூறினார்.

28 வருடங்களுக்குப்பின், மீண்டும் தமிழ் படத்தில் நடிப்பது ஏன்


‘‘28 வருடங்களுக்குப்பின், மீண்டும் தமிழ் படத்தில் நடிப்பது ஏன்?’’ என்பதற்கு ஸ்ரீதேவி விளக்கம் அளித்தார்.

ஸ்ரீதேவி

1980களில் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய 3 மொழிகளை சேர்ந்த ரசிகர்களின் ‘கனவுக்கன்னி’யாக இருந்தவர், ஸ்ரீதேவி. தமிழில் ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகிய இரு பெரும் கதாநாயகர்களுக்கு ஜோடியாக பல படங்களில் நடித்தார்.

கடைசியாக, 1986-ம் ஆண்டு வெளிவந்த ‘நான் அடிமை இல்லை’ என்ற படத்தில் ஸ்ரீதேவி, ரஜினிகாந்த் ஜோடியாக நடித்தார். அதன்பிறகு அவர் தமிழ் படங்களில் நடிக்கவில்லை. திருமணம் செய்து கொண்டு குடும்ப வாழ்க்கையில் ஈடுபட்டார்.

28 வருடங்களுக்குப்பின்...

2 வருடங்களுக்கு முன்பு ஸ்ரீதேவி, ‘இங்லீஷ் விங்லீஷ்’ (இந்தி) படத்தின் மூலம் மீண்டும் திரையுலக பிரவேசம் செய்தார்.

அதைத் தொடர்ந்து 28 வருடங்களுக்குப்பின், அவர் மீண்டும் ஒரு தமிழ் படத்தில் நடிக்கிறார். பெயர் சூட்டப்படாத இந்த படத்தில், விஜய் கதாநாயகனாக நடிக்கிறார். ஹன்சிகா, சுருதிஹாசன் ஆகிய இருவரும் கதாநாயகிகளாக நடிக்கிறார்கள். சிம்புதேவன் டைரக்டு செய்கிறார். சிபு, பி.டி.செல்வகுமார் ஆகிய இருவரும் தயாரிக்கிறார்கள். தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மூன்று மொழிகளில் இந்த படத்தை வெளியிட திட்டமிட்டு இருக்கிறார்கள்.

பேட்டி

மிக நீண்ட இடைவெளிக்குப்பின் தமிழ் படத்தில் நடிப்பது பற்றி ‘தினத்தந்தி’ நிருபருக்கு ஸ்ரீதேவி பேட்டி அளித்தார். அப்போது நிருபர் கேட்ட கேள்விகளும், அவற்றுக்கு ஸ்ரீதேவி அளித்த பதில்களும் வருமாறு:-

கேள்வி:- ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகிய இரண்டு பெரிய கதாநாயகர்களுக்கு ஜோடியாக நடித்த உங்களுக்கு மீண்டும் அதுபோன்ற தமிழ் பட வாய்ப்புகள் வந்தபோது அதை தவிர்த்ததாக பேசப்பட்டது. இப்போது, விஜய் படத்தில் நடிக்க சம்மதித்தது எப்படி?

பதில்:- சிம்புதேவன் சொன்ன கதை எனக்கு பிடித்தது. என் கதாபாத்திரம் பிடித்தது. தென்னிந்தியாவின் பெரிய கதாநாயகர்களில் ஒருவர், விஜய். பெரிய கதாநாயகன் என்றாலும் எளிமையாக இருக்கும் அவருடைய பண்பு எனக்கு பிடித்தது. அதனால் நடிக்க சம்மதித்தேன்.

வேடம்

கேள்வி:- ராஜமவுலி டைரக்ஷனில் அனுஷ்கா நடிக்கும் ‘பாகுபலி’ என்ற தெலுங்கு படத்திலும் நடிப்பதை நீங்கள் தவிர்த்தது உண்மையா?

பதில்:- உண்மைதான். அந்த சமயத்தில் என்னிடம் ‘கால்ஷீட்’ இல்லை.

கேள்வி:- விஜய் படத்தில் உங்களுக்கு என்ன வேடம்?

பதில்:- அதுபற்றி இப்போது நான் சொல்லக் கூடாது. இது, உடையலங்காரத்துக்கு முக்கியத்துவம் உள்ள வியாபார ரீதியிலான பிரமாண்டமான படம் என்று மட்டும் கூற முடியும்.

அனுபவம்

கேள்வி:- இளைய தலைமுறை நடிகர்-நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களுடன் சேர்ந்து பணிபுரியும் அனுபவம் எப்படி இருக்கிறது?

பதில்:- அத்தனை பேருமே என்னிடம் அன்பாக இருக்கிறார்கள். மரியாதையுடன் பழகுகிறார்கள். நான் மீண்டும் நடிக்க வருவேன் என்று நினைத்துப் பார்க்கவில்லை. திட்டமிட்டு மறுபடியும் நடிக்க வரவில்லை. தமிழ் படத்தில் நடித்து பல வருடங்கள் ஆனாலும், இன்றைய நடிகர்-நடிகைகள் அத்தனை பேரின் படங்களையும் நான் பார்த்துக் கொண்டிருக்கிறேன். எல்லோருமே திறமையாக நடிக்கிறார்கள்.

தமிழ் பட உலக கலைஞர்களின் பண்பும், ஒழுக்கமும் என்னை கவர்ந்து இருக்கிறது. இதுபோன்ற கலைஞர்களுடன் இணைந்து பணிபுரியும் வாய்ப்புகள் வந்தால், தொடர்ந்து தமிழ் படங்களில் நடிப்பேன்.’’

இவ்வாறு ஸ்ரீதேவி கூறினார்.

Wednesday, November 26, 2014

நடிகை குஷ்பு காங்கிரசில் இணைந்தார்

தி.மு.க.வில் இருந்து கடந்த சில மாதங்களுக்கு முன் விலகிய நடிகை குஷ்பு, இன்று டெல்லியில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை சந்தித்து காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.

தமிழ் திரைப்பட உலகில் முன்னணி நடிகையாக விளங்கியவர் குஷ்பு. கடந்த சட்டமன்ற தேர்தலுக்கு முன்பு 2010-ம் ஆண்டு நடிகை குஷ்பு தி.மு.க.வில் இணைந்தார். தி.மு.க. பேச்சாளராகவும் வலம் வந்தார். இந்த நிலையில் தி.மு.க.வின் அடுத்த தலைவர் யார்? என்பது பற்றிய கேள்விக்கு சர்ச்சை கருத்தை வெளியிட்டு எதிர்ப்புக்கு ஆளானார்.

இதன் மூலம் தி.மு.க. தலைவர்களுக்கும், அவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. கடந்த பாராளுமன்ற தேர்தலில் நடிகை குஷ்பு ஒரு சில இடங்களில் மட்டும் பிரசாரம் செய்தார். பின்னர் அவர் உடல்நிலை குறைவை காரணம் காட்டி பிரசாரம் மேற்கொள்ளவில்லை. தொடர்ந்து அவர் கட்சிப்பணியில் இருந்து ஒதுங்கியே இருந்தார். இருப்பினும் தி.மு.க. தலைவர் கருணாநிதியின் பிறந்த நாள் அன்று சென்னை கோபாலபுரம் இல்லத்துக்கு சென்று அவருக்கு குஷ்பு வாழ்த்து தெரிவித்தார். இந்த நிலையில் நடிகை குஷ்பு ஜூன் மாதம் திடீரென்று தி.மு.க.வில் இருந்து விலகினார்.

இதனிடையே, நடிகை குஷ்புவை பா.ஜனதாவில் சேர்க்க முயற்சிகள் நடந்தன. பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பா.ஜனதாவில் அவர் இணையப் போவதாகவும் கூறப்பட்டது. குஷ்பு பா.ஜனதாவில் சேர்வது உறுதி என்று கூறப்பட்டது. ஆனால் இதனை டுவிட்டரில் குஷ்பு மறுத்தார். பா.ஜனதாவில் நான் இணைவதாக சொல்லப்படுவதில் எந்த அடிப்படை உண்மையும் இல்லை என்று கூறி இருந்தார். இந்நிலையில் டெல்லியில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தியை நடிகை குஷ்பு அவரது வீட்டில் சந்தித்து பேசினார். காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தியையும் சந்தித்து பேசினார். அப்போது அவர் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.

சந்திப்புக்கு பின்னர் நடிகை குஷ்பு செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவருடன் காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர் இளங்கோவனும் இருந்தார். குஷ்பு செய்தியாளர்களிடம் பேசுகையில், ‘‘சிறுவயது முதலே காங்கிரஸ் மீது எனக்கு ஈடுபாடு உண்டு என்றும் காங்கிரசில் இணைந்தது பெருமையாக உள்ளது என்றும் கூறினார். தமிழ்நாட்டில் மட்டுமின்றி மொத்த நாட்டின் நலனின் மீதும் எனது கவனம் இருக்கும். இந்தியாவை ஒருங்கிணைத்து வைத்திருக்கும் ஒரு கட்சி காங்கிரஸ் மட்டுமே. எனவே நான் காங்கிரஸ் கட்சியில் இணைந்தேன்.’’ என்றார்.

கதம் கதம்’

பிலிம் இன்ஸ்டிட்யூட் மாணவர் பாபு தூயவன் இயக்கத்தில் நந்தாவும் நட்ராஜும் இணைந்திருக்கும் படம்கதம் கதம்’. நந்தாவுக்கு ஜோடி சனம் ஷெட்டி. நட்ராஜுக்கு ஜோடி ஷாரிகா.

காக்கிச்சட்டையில் கறைபடாமல் வாழ நினைக்கும் போலீஸுக்கும் காக்கிச்சட்டையில் கறையோடு வாழ நினைக்கும் போலீஸுக்கும் நடக்கும் யுத்தம்தான் படம்.ஹாலி
வுட்டில்
பிரபலமான பேனாவிஷன் கேமராவை இந்தப் படத்தில் முதன் முதலாகப் பயன்படுத்தியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் யு.கே.செந்தில்குமார்.

தாஜ்நூர் இசையமைத்துள்ள ஐந்து பாடல்களையும் பிரமாண்டமாக செலவு செய்து படமாக்கியுள்ளார்களாம். காக்கிச்சட்டைக் கதை என்பதால் ஆக்ஷன் காட்சிகளை அனல் பறக்கும் வகையில் அமைத்துக் கொடுத்துள்ளாராம் சண்டை இயக்குனர் ஆக்ஷன் பிரகாஷ். “கேமராமேன் என்பதுதான் என்னுடைய அடையாளம்.

நடிகன் என்ற அடையாளம் சமீபத்தில்தான் கிடைத்தது. ஆனால் நடிப்பை மட்டும் அடையாளமாக வைத்திருக்கும் நந்தா என்னுடைய கேரக்டர் சிறப்பாக வரவேண்டும் என்று தாராளமாக எனக்கு இடம் கொடுத்ததை மறக்க முடியாதுஎன்கிறார் நட்ராஜ்
பிலிம் இன்ஸ்டிட்யூட் மாணவர் பாபு தூயவன் இயக்கத்தில் நந்தாவும் நட்ராஜும் இணைந்திருக்கும் படம் ‘கதம் கதம்’. நந்தாவுக்கு ஜோடி சனம் ஷெட்டி. நட்ராஜுக்கு ஜோடி ஷாரிகா.

காக்கிச்சட்டையில் கறைபடாமல் வாழ நினைக்கும் போலீஸுக்கும் காக்கிச்சட்டையில் கறையோடு வாழ நினைக்கும் போலீஸுக்கும் நடக்கும் யுத்தம்தான் படம்.ஹாலிவுட்டில் பிரபலமான பேனாவிஷன் கேமராவை இந்தப் படத்தில் முதன் முதலாகப் பயன்படுத்தியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் யு.கே.செந்தில்குமார்.

தாஜ்நூர் இசையமைத்துள்ள ஐந்து பாடல்களையும் பிரமாண்டமாக செலவு செய்து படமாக்கியுள்ளார்களாம். காக்கிச்சட்டைக் கதை என்பதால் ஆக்ஷன் காட்சிகளை அனல் பறக்கும் வகையில் அமைத்துக் கொடுத்துள்ளாராம் சண்டை இயக்குனர் ஆக்ஷன் பிரகாஷ். “கேமராமேன் என்பதுதான் என்னுடைய அடையாளம்.

நடிகன் என்ற அடையாளம் சமீபத்தில்தான் கிடைத்தது. ஆனால் நடிப்பை மட்டும் அடையாளமாக வைத்திருக்கும் நந்தா என்னுடைய கேரக்டர் சிறப்பாக வரவேண்டும் என்று தாராளமாக எனக்கு இடம் கொடுத்ததை மறக்க முடியாது” என்கிறார் நட்ராஜ் - See more at: http://cinema.dinakaran.com/cine-news-details.aspx?id=14474&id1=3#sthash.aMVarZWh.dpuf

சூர்யா படத்திலிருந்து எமி விலகல்

சூர்யா படத்திலிருந்து எமி ஜாக்சன் விலகினார்.‘அஞ்சான்'படத்தையடுத்து சூர்யா நடிக்கும் படம்மாஸ்'. வெங்கட் பிரபு டைரக்டு செய்கிறார். நயன்தாரா ஹீரோயின். இதன் படப்பிடிப்பு வேகமாக நடந்து வருகிறது. இதில் 2வது கதாநாயகியாக நடிக்க எமி ஜாக்சன் ஒப்பந்தம் செய்யப்பட்டார். சில நாட்களிலேயே அவர் படத்திலிருந்து விலகி விட்டதாக கூறப்பட்டது. ஆனால் அது மறுக்கப்பட்டதுடன் எமி ஜாக்சன் பேய் வேடம் ஏற்கிறார் என்று பட தரப்பில் கூறப்பட்டது. இதற்கான போட்டோ ஷூட்டிலும் அவர் பங்கேற்றார்.இந்நிலையில் அவர் விலகிவிட்டது உறுதி என
கவல்
வெளியாகி உள்ளது. முதலில் அவரிடம் 25 நாட்கள் கால்ஷீட் வாங்கினர். பிறகு அதை பாதியாக குறைத்துவிட்டார்களாம். இதனால் தனது கதாபாத்திரத்தின் நீளமும் படத்தில் குறைவாகவே இருக்கும் என்று எமி கருதினார். இதையடுத்து படத்திலிருந்து விலகி கொள்வதாக கூறினாராம். தற்போது அவருக்கு பதிலாக பிரணிதா நடிக்கிறார். இவர்சகுனி' படத்தில் கார்த்தி ஜோடியாக நடித்தவர். இதுபற்றி பட தரப்பில் கூறும்போது,‘இந்த வாரம் முதல் பிரணிதா படப்பிடிப்பில் கலந்துகொள்கிறார். அவர் நடிக்கும் காட்சிகள் தாய்லாந்தில் உள்ள புக்கட் தீவில் படமாக உள்ளது' என்றனர். -
சூர்யா படத்திலிருந்து எமி ஜாக்சன் விலகினார்.‘அஞ்சான்'படத்தையடுத்து சூர்யா நடிக்கும் படம் ‘மாஸ்'. வெங்கட் பிரபு டைரக்டு செய்கிறார். நயன்தாரா ஹீரோயின். இதன் படப்பிடிப்பு வேகமாக நடந்து வருகிறது. இதில் 2வது கதாநாயகியாக நடிக்க எமி ஜாக்சன் ஒப்பந்தம் செய்யப்பட்டார். சில நாட்களிலேயே அவர் படத்திலிருந்து விலகி விட்டதாக கூறப்பட்டது. ஆனால் அது மறுக்கப்பட்டதுடன் எமி ஜாக்சன் பேய் வேடம் ஏற்கிறார் என்று பட தரப்பில் கூறப்பட்டது. இதற்கான போட்டோ ஷூட்டிலும் அவர் பங்கேற்றார்.இந்நிலையில் அவர் விலகிவிட்டது உறுதி என தகவல் வெளியாகி உள்ளது. முதலில் அவரிடம் 25 நாட்கள் கால்ஷீட் வாங்கினர். பிறகு அதை பாதியாக குறைத்துவிட்டார்களாம். இதனால் தனது கதாபாத்திரத்தின் நீளமும் படத்தில் குறைவாகவே இருக்கும் என்று எமி கருதினார். இதையடுத்து படத்திலிருந்து விலகி கொள்வதாக கூறினாராம். தற்போது அவருக்கு பதிலாக பிரணிதா நடிக்கிறார். இவர் ‘சகுனி' படத்தில் கார்த்தி ஜோடியாக நடித்தவர். இதுபற்றி பட தரப்பில் கூறும்போது,‘இந்த வாரம் முதல் பிரணிதா படப்பிடிப்பில் கலந்துகொள்கிறார். அவர் நடிக்கும் காட்சிகள் தாய்லாந்தில் உள்ள புக்கட் தீவில் படமாக உள்ளது' என்றனர். - See more at: http://cinema.dinakaran.com/cine-news-details.aspx?id=14475&id1=3#sthash.llm5g1vr.dpuf
சூர்யா படத்திலிருந்து எமி ஜாக்சன் விலகினார்.‘அஞ்சான்'படத்தையடுத்து சூர்யா நடிக்கும் படம் ‘மாஸ்'. வெங்கட் பிரபு டைரக்டு செய்கிறார். நயன்தாரா ஹீரோயின். இதன் படப்பிடிப்பு வேகமாக நடந்து வருகிறது. இதில் 2வது கதாநாயகியாக நடிக்க எமி ஜாக்சன் ஒப்பந்தம் செய்யப்பட்டார். சில நாட்களிலேயே அவர் படத்திலிருந்து விலகி விட்டதாக கூறப்பட்டது. ஆனால் அது மறுக்கப்பட்டதுடன் எமி ஜாக்சன் பேய் வேடம் ஏற்கிறார் என்று பட தரப்பில் கூறப்பட்டது. இதற்கான போட்டோ ஷூட்டிலும் அவர் பங்கேற்றார்.இந்நிலையில் அவர் விலகிவிட்டது உறுதி என தகவல் வெளியாகி உள்ளது. முதலில் அவரிடம் 25 நாட்கள் கால்ஷீட் வாங்கினர். பிறகு அதை பாதியாக குறைத்துவிட்டார்களாம். இதனால் தனது கதாபாத்திரத்தின் நீளமும் படத்தில் குறைவாகவே இருக்கும் என்று எமி கருதினார். இதையடுத்து படத்திலிருந்து விலகி கொள்வதாக கூறினாராம். தற்போது அவருக்கு பதிலாக பிரணிதா நடிக்கிறார். இவர் ‘சகுனி' படத்தில் கார்த்தி ஜோடியாக நடித்தவர். இதுபற்றி பட தரப்பில் கூறும்போது,‘இந்த வாரம் முதல் பிரணிதா படப்பிடிப்பில் கலந்துகொள்கிறார். அவர் நடிக்கும் காட்சிகள் தாய்லாந்தில் உள்ள புக்கட் தீவில் படமாக உள்ளது' என்றனர். - See more at: http://cinema.dinakaran.com/cine-news-details.aspx?id=14475&id1=3#sthash.llm5g1vr.dpuf
சூர்யா படத்திலிருந்து எமி ஜாக்சன் விலகினார்.‘அஞ்சான்'படத்தையடுத்து சூர்யா நடிக்கும் படம் ‘மாஸ்'. வெங்கட் பிரபு டைரக்டு செய்கிறார். நயன்தாரா ஹீரோயின். இதன் படப்பிடிப்பு வேகமாக நடந்து வருகிறது. இதில் 2வது கதாநாயகியாக நடிக்க எமி ஜாக்சன் ஒப்பந்தம் செய்யப்பட்டார். சில நாட்களிலேயே அவர் படத்திலிருந்து விலகி விட்டதாக கூறப்பட்டது. ஆனால் அது மறுக்கப்பட்டதுடன் எமி ஜாக்சன் பேய் வேடம் ஏற்கிறார் என்று பட தரப்பில் கூறப்பட்டது. இதற்கான போட்டோ ஷூட்டிலும் அவர் பங்கேற்றார்.இந்நிலையில் அவர் விலகிவிட்டது உறுதி என தகவல் வெளியாகி உள்ளது. முதலில் அவரிடம் 25 நாட்கள் கால்ஷீட் வாங்கினர். பிறகு அதை பாதியாக குறைத்துவிட்டார்களாம். இதனால் தனது கதாபாத்திரத்தின் நீளமும் படத்தில் குறைவாகவே இருக்கும் என்று எமி கருதினார். இதையடுத்து படத்திலிருந்து விலகி கொள்வதாக கூறினாராம். தற்போது அவருக்கு பதிலாக பிரணிதா நடிக்கிறார். இவர் ‘சகுனி' படத்தில் கார்த்தி ஜோடியாக நடித்தவர். இதுபற்றி பட தரப்பில் கூறும்போது,‘இந்த வாரம் முதல் பிரணிதா படப்பிடிப்பில் கலந்துகொள்கிறார். அவர் நடிக்கும் காட்சிகள் தாய்லாந்தில் உள்ள புக்கட் தீவில் படமாக உள்ளது' என்றனர். - See more at: http://cinema.dinakaran.com/cine-news-details.aspx?id=14475&id1=3#sthash.llm5g1vr.dpuf