Thursday, September 27, 2012


 

கம்பீரமும் தெளிவான குரலும் கொண்டவர் மேஜர் சுந்தரராஜன்

கம்பீரமான தந்தை வேடத்துக்கு பெருமையைச் சேர்த்தவர் நடிகர் மேஜர் சுந்தரராஜன். மேஜர் சுந்தரராஜனின் சொந்த ஊர் மதுரை அருகேயுள்ள பெரியகுளம். பள்ளிக்கூடத்தில் படிக்கும் போதே நாடகங்களில் நடிக்கலானார்.
தனது குரல் வளத்தையும், நடிப்பாற்றலையும் ஒருசேர பயன்படுத்தி மொனோ அக்டிங்கில் திறமையை வெளிப்படுத்தினார். பிறகு வேலை தேடி சென்னைக்கு வந்த மேஜர் சுந்தரராஜனுக்கு நாடகங்களில் நடிக்கும் வாய்ப்புக்கிட்டியது. நாவலாசிரியர் அகிலன் எழுதிய ‘நெஞ்சின் அலைகள்’ நாடகத்தல் முக்கியய வேடத்தில் நடித்தார்.
இந்த நாடகத்தை பிரபல டைரக்டர் எல். வி. பிரசாத் பார்த்துவிட்டு பாராட்டு தெரிவித்தார். அவர் மூலம் சினிமாவில் நுழைய வாய்ப்பு வரும் என்ற மகிழ்ச்சியுடன் இருந்தார் சுந்தரராஜன். ஆனால் வாய்ப்பு வரவில்லை. பின்னர் ‘வைஜயந்திமாலா’ என்ற படத்தில் நடிக்கும் ‘சான்ஸ்’ கிடைத்தது. அவரது துரதிருஷ்டமோ என்னவோ படம் வெளிவரவில்லை.
1962ல் சுந்தரராஜன் சினிமாவில் அறிமுகமானார். ‘பட்டினத்தார்’ படம்தான் அவரது முதல் படமாகும். டைரக்டர் கே. சோமு இயக்கிய இந்தப் படத்தில் மேஜர் சுந்தரராஜனுக்கு சோழமன்னன் வேடம் கிடைத்தது. கதாநாயகன் பாடகர் டி. எம். செளந்தரராஜன். பிறகு கொஞ்ச காலம் ‘சான்ஸ்’ வரவில்லை. சில செய்திப் படங்களுக்குக் குரல் கொடுத்தார்.
டைரக்டர் கே. பாலசந்தரின் நாடகங்களில் நடித்தார். சினிமாவில் சிறு சிறு வேடங்களில் தோன்றினாலும், நாடக நடிப்பின் மூலமே புகழ்ப் பெற்றார். கே. பாலசந்தரின் ‘மேஜர் சந்திரகாந்த்’ நாடகம் சுந்தரராஜனுக்குப் பெரும் புகழை தேடிக் கொடுத்தது.
அவருக்கு கிடைத்த இந்த வேடப்பொருத்தம் பேசும் திறன், நடிப்பு ஆகியவை, திரை உலகினிரிடையே அவரைப்பற்றி பேச வைத்தது.
1965ல் கே. பாலசந்தர் டைரஷனில் ‘நாணல்’ என்ற படத்தில் மேஜர் சுந்தரராஜன் முக்கிய வேடத்தில் நடித்தார்.
கதாநாயகி கே. ஆர். விஜயா. சரவணா பிக்சர்ஸ் தயாரித்த இந்தப் படம் நன்றாக ஓடியது. ‘மேஜர் சந்திரகாந்த்’ நாடகத்தை ஏ.வி.எம். நிறுவனத்தினர் சினிமா படமாகத் தயாரித்தனர். கே. பாலசந்தர் டைரக்ட் செய்ய, மேஜர் சுந்தரராஜன், ஜெயலலிதா முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தார்கள். இந்தப்படம் 1966ல் வெளிவந்தது.
இந்தப் படத்துக்குப்பின் ‘மேஜர் சுந்தராஜன்’ என்று அழைக்கப்பட்டார். ஸ்ரீதர் தயாரித்து டைரக்ட் செய்த வெண்ணிற ஆடை படத்தில் ஜெயலலிதா அறிமுகமானார். அவருடைய தந்தை வேடம் மேஜர் சுந்தரராஜனுக்கு கொடுக்கப்பட்டது. சிறப்பாக நடித்து மேலும் புகழ்பெற்றார். தொடர்ந்து ‘தெய்வச் செயல்’, குழந்தைக்காக உட்பட சில படங்களில் கதாநாயகனாக நடித்தார்.
‘மோட்டார் சுந்தரம் பிள்ளை’ படத்தின் மூலம் சிவாஜி கணேசனுடன் இணைந்து நடித்தார். இதனைத் தொடர்ந்து நிஜ வாழ்க்கையிலும் இருவரும் நெருங்கிய நண்பர்கள் ஆகிவிட்டார்கள். உயர்ந்த மனிதன், தெய்வமகன், ஞான ஒளி, கெளரவம் போன்றவை இருவரும் சேர்ந்து நடித்த மிகப்பெரும் வெற்றிப்படங்களாகும். எம். ஜி. ஆர். நடித்த படங்களில் மேஜர் சுந்தரராஜன் வில்லன், குணச்சித்திர வேடங்களில் தோன்றினார்.
‘நம் நாடு’ ‘ரிக்ஷாக்காரன்’ போன்றவை முக்கிய படங்கள். ரஜினிகாந்த், கமல்ஹாசன் என்று சகல நடிகர்களுடனும் நடித்தவர் மேஜர் சுந்தரராஜன். மொத்தத்தில் மேஜர் சுந்தரராஜன் 900 படங்கள் நடித்துள்ளார்.
இவற்றில் சிவாஜியுடன் சேர்ந்து நடித்தது மட்டும் 200 படங்களுக்கு மேல் மேஜர் சுந்தரராஜன் படங்களில் நடித்ததுடன் ‘கல் தூண்’ “ஊரும் உறவும்” நெஞ்சங்கள், இன்று நீ நாளை நான், அந்த ஒரு நிமிடம் ஆகிய சினிமா படங்களை டைரக்ட் செய்தார். சில தொலைக்காட்சி சீரியல்களிலும் நடித்தார். இருதய நோயினால் அவதிப்பட்ட மேஜர் சுந்தரராஜன் வடபழனியில் உள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.
பிறகு வீட்டில் இருந்தபடியே சிகிச்சை பெற்று வந்தார்.
28-02-2003 அன்று திடீரென்று மரணம் அடைந்தார். நாடகம் ஆனாலும் சரி, சினிமா ஆனாலும் சரி அவரது புகழுக்கு முக்கிய காரணமாக இருந்தவை அவருடைய கம்பீரத் தோற்றமும் தெளிவான குரலும்தான். மேஜர் சுந்தரராஜளின் மனைவி பெயர் சியாமளா. கெளதம் என்ற ஒரே மகன் மட்டும்தான் உள்ளார்.


குணச்சித்திர நடிகர் எஸ்.வி. சுப்பையா தயாரித்த படம் காவல் தெய்வம்'

தமிழ்த் திரை உலகின் சிறந்த குணச்சித்திர நடிகர்களில் ஒருவரான எஸ். வி. சுப்பையா, சிவாஜி கணேசன் நடித்த ‘கப்பலோட்டிய தமிழன்’ படத்தில் பாரதியாராக மிகச் சிறப்பாக நடித்தார்.
எஸ். வி. சுப்பையாவின் சொந்த ஊர் நெல்லை மாவட்டம் செங்கோட்டை ஆகும். கலை துறையில் ஆர்வம் கொண்ட எஸ். வி. சுப்பையா முதலில் டி. கே. எஸ். நாடக சபா, பிறகு சக்தி நாடக சபா ஆகியவற்றில் சேர்ந்து நாடகங்களில் நடித்தார்.
இதன் பலனாக சினிமா சான்ஸ் பெற்றார். 1952ல் சினிமாவில் சிறு சிறு வேடம் ஏற்று நடிக்கத் தொடங்கினார். எஸ். பாலசந்தர் - பானுமதி நடித்த ‘ராணி’ படத்திலும், டி. ஆர். மகாலிங்கம் நடித்த ‘வேலைக்காரன்’ படத்திலும் குறிப்பிடத்தக்க வேடத்தில் நடித்தார்.
தெலுங்கில் மிக வெற்றிகரமாக ஓடிய ‘ரோஜலு மாராயி’ என்ற படம், ‘காலம் மாறிப்போச்சு’ என்ற பெயரில் தமிழில் தயாரிக்கப்பட்டது. ஜெமினி கணேசன் - அஞ்சலி தேவி ஜோடியாக நடித்த இப்படத்தில் முக்கியமான குணச்சித்திர வேடத்தில் எஸ். வி. சுப்பையா நடித்தார். சுப்பையா வாழ்க்கையில் திருப்புமுனை ஏற்படுத்திய படம் இதுதான். அவருடைய நடிப்பு மிகச் சிறப்பாக அமைந்திருந்தது. தொடர்ந்து குணச்சித்திர வேடங்களில் நடித்தார்.
அவர் நடித்த படங்கள் சுமார் 100 சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன், எஸ். எஸ். ராஜேந்திரன் ஆகியோருடன் பல படங்களில் நடித்திருக்கிறார். குறிப்பாக, சிவாஜி கணேசனுடன் எஸ். வி. சுப்பையா அதிக படங்களில் நடித்தார். ‘கப்பலோட்டிய தமிழன்’, ‘பாவமன்னிப்பு’, ‘இரும்புத் திரை’ போன்றவை பிரபலமான படங்கள்.
குறிப்பாக ‘கப்பலோட்டிய தமிழன்’ படத்தில் சிவாஜி கணேசன் வ. உ. சிதம்பரனாராக நடிக்க, எஸ். வி. சுப்பையா மகாகவி பாரதியாராக நடித்தார். என்பதைவிட பாரதியாரையே நம் கண்முன் கொண்டு வந்து நிறுத்தினார் என்று கூறுவதே பொருந்தும் ஜெமினி கணேசனுடன் செளபாக்கியவதி ‘மணாளனே மங்கையின் பாக்கியம்’, ‘வஞ்சிக் கோட்டை வாலிபன்’ ஆகிய படங்களிலும் ‘கூடி வாழ்ந்தால் கோடி நன்மை’ என்ற படத்தில் எஸ். எஸ். ராஜேந்திரனுடனும் நடித்தார்.
பழம் பெரும் நடிக்கர்கள் கே. ஆர். ராமசாமி, எம். கே. ராதா ஆகியோருடனும் சேர்ந்து நடித்திருக்கிறார். 1955ல் வெளிவந்த ‘வள்ளியின் செல்வன்’ என்ற படத்தில் எஸ். வி. சுப்பையா முக்கிய வேடத்தில் நடித்தார். அவருடன் சகஸ்ரநாமம், டி. எஸ். துரைராஜ், ஜெமினி கணேசன் ஆகியோர் நடித்தனர். எம். ஜி. ஆர். நடித்த இதயக்கனி படத்திலும், ‘நீங்க நல்லா இருக்கணும் நாடு முன்னேற’ என்றசூப்பர் ஹீட் பாடல் காட்சியில் தோன்றினார்.
எஸ். வி. சுப்பையா சொந்தமாகத் தயாரித்த படம் ‘காவல் தெய்வம்’ எஸ். வி. சுப்பையா செளகார் ஜானகி, சிவகுமார், லட்சுமி ஆகியோர் நடித்த இப்படத்தில் சாமுண்டி கிராமணி என்ற கதாபாத்திரத்தில் கெளரவ வேடத்தில் சிவாஜி கணேசன் நடித்தார். இதன் கதை வசனத்தை ஜெயகாந்தன் எழுதினார்.
வெற்றிகரமான ஓடிய படம். இது தமிழ்த் திரை உலகில் மறக்க இயலாத சிறந்த குணச்சித்திர நடிகராக விளங்கிய எஸ். வி. சுப்பையா 29.01.1980 அன்று மரணம் அடைந்தார். காலமான போது அவருக்கு வயது 57 எஸ். வி. சுப்பையாவின் மனைவி பெயர் கோமதி அம்மாள். இவர்களுக்கு 5 மகள்கள் ஒரு மகன்.

படப்பிடிப்பில் புதுமுக நடிகை காயம்

கெளரவம் என்ற பெயரில் உருவாகி வரும் படத்தின் சூட்டிங்கில் ஏற்பட்ட விபத்தில், புதுமுக நாயகி யாமி காயமடைந்தார். மொழி படத்தை இயக்கி பிரபலமானவர் ராதா மோகன். இவர் தற்போது கெளரவம் என்ற படத்தை இயக்கி வருகிறார். இதில் நாயகனாக அல்லு சிரிஷ், நாயகியாக யாமி கவுதம் நடிக்கின்றனர். யாமி மும்பையை சேர்ந்தவர்.
கெளரவம் படம் மூலம் தமிழுக்கு அறிமுகமாகிறார். இந்த படத்தை பிரகாஷ்ராஜ் தயாரிக்கிறார். இதன் படப்பிடிப்பு ராஜமுந்திரியில் விறுவிறுப்பாக நடக்கிறது. இதற்காக படக்குழுவினர் அங்கு முகாமிட்டுள்ளனர். பாடல் காட்சியொன்றை படமாக்கியபோது யாமி கவுதம் கீழே விழுந்து காயம் அடைந்தார். பாடல் காட்சியில் யாமி கவுதம் சைக்கிள் ஓட்டி செல்வது போல் படமாக்கினர்.
அப்போது நிலை தடுமாறி சைக்கிளோடு கீழே விழுந்தார். அவருக்கு பலத்த அடிபட்டு ரத்தம் கொட்டியது. உடனடியாக டாக்டர் வரவழைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. வலி நிவாரண மாத்திரைகளை யாமி சாப்பிட்டு ஓய்வு எடுத்தார். இந்த விபத்தால் சூட்டிங் நிறுத்தப்பட்டது.


தண்ணி பார்ட்டிக்கு டாட்டா

மனீஷா கொய்ராலா
நடிகை மனீஷா கொய்ராலா இப்போது மது விருந்துகளைத் தவிர்த்துவிட்டதாகவும், இதனால் நல்ல ஆரோக்கியத்துடன் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். நடிகை மனிஷா கொய்ராலாவுக்கும் சாம்ரட்டஹலுக்கும் 2010ல் திருமணம் நடந்தது. சமீபத்தில் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்தனர். மனிஷா கொய்ராலா மும்பையில் தனியாக வசிக்கிறார்.
தற்போது மலையாள படமொன்றில் நடித்து வருகிறார். திருமணத்துக்குப் பிறகும் மனிஷா கொய்ராலா தொடர்ந்து மதுவிருந்துகளில் பங்கேற்று தள்ளாடித் தடுமாறி செய்திகளில் இடம்பெற்று வந்தார். இதனால் அவரது இமேஜ் ஏகத்துக்கும் டேமேஜ் ஆகிவிட்டது. இந்த நிலையில் இப்போது தான் ரொம்ப மாறிவிட்டதாகக் கூறியுள்ளார்.
அவர் கூறுகையில்; நான் ரொம்ப மாறிவிட்டேன் எதற்கும் ஆசைப்படுவதில்லை. விருந்துக்கு போவதையும் நிறுத்தி விட்டேன். இப்போது வீட்டில் ஓவியம் வரைகிறேன். இது எனக்கு மன அமைதியை கொடுக்கிறது. இதனால் என் உடல் நிலையிலும் நல்ல ஆரோக்கியத்தை உணர்கிறேன் என்றார்.


யார் என்ன சொன்னாலும் அய்யரை விட மாட்டேன்

ஜனனி
யார் என்ன சொன்னாலும் தன் பெயருக்கு பின்னால் இருக்கும் அய்யரை நீக்கப்போவதில்லை என்று நடிகை ஜனனி தெரிவித்துள்ளார்.
நடிகைகள் பலர் தங்கள் பெயருக்கு பின்னால் சாதிப் பெயரை வைத்துள்ளது பற்றி விமர்சனம் எழுந்துள்ளது.
அதிலும் குறிப்பாக ஜனனி அய்யர் பெயர் இந்த விவகாரத்தில் பெரிதும் அடிபடுகிறது.
ஜனனி அய்யர் நடித்து அண்மையில் ரிலிஸான பாகன் இசை வெளியீட்டு விழா நடந்தபோது அதில் கலந்து கொண்டு பேசிய இயக்குநர் கரு பழனியப்பன். நடிகையின் இந்த சாதி அடையாள மோகத்தைக் கண்டித்தார். இந்தப் படத்தின் நாயகி தன் பெயரை ஜனனி அய்யர் என்று வைத்திருக்கிறார். அதென்ன அய்யர்? இப்படி தன் பெயரோடு சாதி அடையாளத்தை வைத்திருப்பதை நான் ஆட்சேபிக்கிறேன் என்றார்.
இந்த விமர்சனங்கள் எல்லாம் ஜனனிக்கு தெரியாமலா இருக்கும் அதற்கு அவர் கூறுகையில், யார் என்ன விமர்சனம் செய்தாலும் சரி என் பெயருக்கு பின்னால் இருக்கும் அய்யரை நீக்க மாட்டேன் என்று தில்லாகக் கூறியுள்ளார்.


காலையில் எழுந்ததும் முகம் கழுவாதீங்க

பொலிவுடன் திகழ சல்மா கூறும் அறிவுரை
லண்டனில் நான் காலையில் எழுந்ததுமே எனது முகத்தைக் கழுவ மாட்டேன். அப்படியே விட்டுவிடுவேன். இதுதான் எனது முகம் இந்த வயதிலும் பொலிவுடன் திகழக் காரணம் என்று ஹாலிவுட் நடிகை சல்மா ஹேயக் கூறியுள்ளார்.
ஹாலிவுட்டில் இன்று வரை ஹாட் நாயகிகள் பட்டியலில் நீடித்து வருபவர் சல்மா. வயது 46 ஆனாலும் இன்னு ஜொலிக்கிறார். இவரது இளமைக்கும், வயதுக்கும் சற்றும் சம்பந்தமில்லாமல் இருப்பது ரசிகர்களை வியக்க வைக்கிறது.
இந்த நிலையில் தனது அழகு ரகசியத்தை சிக்கிசுத்துள்ளார் சல்மா. இதுகுறித்து அவர் கூறுகையில்; நான் காலையில் எழுந்ததும் முகத்தைக் கழுவ மாட்டேன் அப்படியே விட்டு விடுவேன். இதுதான் எனது முகம் பொலிவுடன் பளிச்சென, தோல் சுருக்கமின்றி விளங்க முக்கியக் காரணம்.
மேலும் எனது தோல் பாதுகாப்புக்காக நான் சிறப்பாக எதையும் செய்வதில்லை. ஆரோக்கியமாக சாப்பிடுகிறேன். இதுதான் எனது சருமம் இயல்பான நிலையில் இருக்க இன்னொரு முக்கியக் காரணம் என்னைப் போன்ற முதுமையை நெருங்கும் பெண்களுக்கும் சரி, இளம் பெண்களுக்கும் சரி நான் சொல்ல விரும்பும் அட்வைஸ் இயற்கையாக இருங்கள், இயற்கையாகவே உங்களது சருமத்தைப் பாதுகாத்து பராமரித்து வாருங்கள் அதுவே போதுமானது என்று கூறுகிறார் சல்மா.

தமிழ் படங்களில் நடிக்க விடாமல் சதி

தமிழ் படங்களில் நடிக்க விடாமல் சதி நடப்பதாக நடிகை தமன்னா ஆதங்கப்படுகிறார். ‘கோடி’ படம் மூலம் 2005ல் தமன்னா அறிமுகமானார். கல்லூ படம் பிரபலபடுத்தியது. தனுஷ், பரத் ஜோடியாக நடித்தார். சூர்யா ஜோடியாக நடித்த அயன் படம் முன்னணி நடிகை அந்தஸ்தை உயர்த்தியது.
கார்த்தியுடன் நடித்த ‘பையா’படம் ஹிட்டானதால் மார்க்கெட் இன்னும் உயர்ந்தது. தொடர்ந்து சிறுத்தை, சுறா, வேங்கை, படங்களில் நடித்தார். தற்போது திடீரென தமிழ்ப்பட வாய்ப்புகள் நின்று போய் உள்ளது.
தெலுங்கில் மூன்று படங்களில் நடித்து வருகிறார். இந்தியிலும் ஹம்மத் வாலா படத்தில் நடிக்கிறார். ஆனால் தமிழ் படங்களில் நடிக்க யாரும் அழைக்கவில்லை. தமிழ்ப்பட உலகினர் தன்னை ஒதுக்குவதாக நெருக்கமானவர்களிடம் கூறி வருகிறார். தமிழ்பட வாய்ப்புகள் தனக்கு கிடைக்க விடாமல் யாரோ மறைமுகமாக சதி செய்வதாகவும் புகார் கூறி வருகிறார்.
இந்தி, தெலுங்கு படங்களில் கவனம் செலுத்த முடிவு செய்துள்ளார். விஜயகாந்த நடித்து வெற்றிகரமாக ஓடிய ரமணா படம் இந்தியில் ரீ மேக் ஆகிறது. இப்படத்தில் அக்ஷய்குமார் ஜோடியாக நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார்.








Wednesday, September 19, 2012


 

இந்திய விடுதலைச் செய்தியை முதலில் வானொலியில் கூறிய செய்தி வாசிப்பாளர்

தனது 18வது வயதில் நாடகங்களில் நடிக்கத் தொடங்கினார். சிறிது காலம் புதுடில்லியில் வாழ்ந்த விஸ்வநாதன் 1945 இல் அகில இந்திய வானொலியில் செய்தி வாசிப்பாளராக தன் பணியைத் தொடங்கினார். 1947 இல் அகில இந்திய வானொலியில் முதலாவதாக இந்தியா விடுதலைச் செய்தியை கூறியுள்ளார்.
மேடை நாடகங்களில் நடிக்க ஆரம்பித்து கலைத் துறையில் நுழைந்தார். பூர்ணம் தியேட்டர்ஸ் என்ற நாடக குழுவை ஆரம்பித்து ஏராளமான நாடகங்களை மேடை ஏற்றினார். அந்த நாடகக் குழுவின் பெயராலேயே சாதாரண விஸ்வநாதனாக இருந்த அவர் பூர்ணம் விஸ்வநாதன் என்று அழைக்கப்பட்டார்.
எழுத்தாளர் சுஜாதாவின் 10 நாடகங்களை பூர்ணம் விஸ்வநாதன் மேடை ஏற்றி உள்ளார். 1979 ஆம் ஆண்டு துவங்கி 1997 ஆம் ஆண்டு வரை அவர் நாடகங்களை நடத்தி வந்தார். அடிமைகள், கடவுள் வந்திருக்கிறார், அன்புள்ள அப்பா, வாசல், ஊஞ்ச், சிங்கம் அய்யங்காரின் பேரன், பாரதி இருந்த வீடு உள்ளிட்ட 10 நாடகங்களை சுஜாதா எழுதி பூர்ணம் விஸ்வாதன் மேடை ஏற்றினார்.
அண்டர் செகரெட்டரி, 50 – 50 போன்ற நாடகங்களை தானே எழுதியும் நடித்துள்ளார். கடைசியாக 1997 ஆம் ஆண்டு திருவல்லிக்கேணியில் பாரதி இருந்த வீடு என்ற நாடகத்தை அரங்கேற்றினார். அதன் பின்னர் அவரது குழுவைச் சேர்ந்தவர்கள் கோகுலம் ஒரிஜினல் போய்ஸ் கம்பெனி என்ற பெயரில் நாடகங்களை தொடர்ந்து நடத்தி வந்தனர்.
டில்லி, லக்னோ, மும்பை ஆகிய நகரங்களில் இவர் நாடகம் நடித்துள்ளார். சங்கீதா நாடக அகடமி விருதை பெற்றுள்ளார். வருஷம் 16, வறுமையின் நிறம் சிவப்பு, தில்லுமுல்லு, மகாநதி, விதி, மூன்றாம் பிறை, புதுப்புது அர்த்தங்கள், கேளடி கண்மணி, ஆண் பாவம் உள்ளிட்ட 86 படங்களில் இவர் நடித்திருக்கிறார்.
சில மாதங்களாக நோய்வாய்ப்பட்டிருந்த பூர்ணம் விஸ்வநாதன் 2008, அக்டோபர் 1 ஆம் திகதி உயிரிழந்தார். மறைந்த பூர்ணம் விஸ்வநாதனுக்கு சுசீலா என்ற மனைவியும், உமா, பத்மஜா என்ற மகள்களும்,சித்தார்தா என்ற மகனும் உள்ளனர்.


 

15 ஆண்டுகளாக தாலி கட்டாமலேயே கணவன் - மனைவியாக வாழ்ந்த சிலுக்கு

சுமிதாவுக்கு திருமணத்தில் நம்பிக்கை இல்லை. திருமணம் செய்தால்தான் கணவன் - மனைவியா என்று கேட்டார். என்று ‘சில்க்’ சுமிதாவின் காதலரான தாடிக்காரர் டொக்டர் ராதாகிருஷ்ணமூர்த்தி கூறினார்.
சுமிதாவின் மரணத்துக்குப் பிறகு, அவர் மிகவும் சோகமாகக் காணப்பட்டார். சுமிதாவுடன் நட்பு ஏற்பட்டது எப்படி? அவருடன் உங்கள் வாழ்க்கை எப்படி இருந்தது? என்று நிருபர் கேட்டதற்கு அவர் கூறியதாவது:-
சுமீதாவுக்கு நான் தூரத்து உறவு! டொக்டருக்கு படித்து இருக்கிறேன். சிறு வயதில் இருந்தே என்னை அவளுக்குத் தெரியும். அவள் சினிமா நடிகையான போதிலும், அவளுக்கு ஆதரவு யாரும் இல்லை. தனியாகத்தான் விடு எடுத்து தங்கி வந்தாள்.
அவளுக்குத் தெரிந்த ஒரே ஆள் என்பதால் என்னை வரவழைத்து, எனக்கு பாதுகாப்பாக இருக்கும்படி கேட்டுக்கொண்டாள். நானும் எனது குடும்பத்தை விட்டு விட்டு சென்னை வந்து அவளுடன் தங்கினேன்.
நாளாக நாளாக எங்கள் நட்பு காதலாக மலர்ந்தது. நாங்கள் இருவருமே சேர்ந்தே படப்பிடிப்புகளுக்கு போவோம். பொது நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டு இருக்கிறோம். இதுபற்றி பத்திரிகைகளில் கிசு கிசு வந்தன. சுமிதாவின் தாடிக்கார காதலர் என எழுதினார்கள்.
இதற்கு முற்றுப்புள்ளி வைக்க, இருவரும் திருமணம் செய்த கொள்வோமே என கேட்டேன். சுமிதாவுக்கு திருமணம் மீது நம்பிக்கை இல்லை. ‘திருமணம் செய்தால்தான் கணவன் மனைவியா? இல்லாவிட்டால் இல்லையா என்பாள்.
‘பெண்கள் தாலி கட்டிக்கொண்ட பிறகு அவளை ஆண்கள் அடிமை போல் நடத்துகிறார்கள். இது பெண்களின் உரிமையைப் பாதிக்கும் செயல் என்பது சுமிதாவின் எண்ணமாக இருந்தது. நானும் அதனால் வற்புறுத்தவில்லை என் மீது அவளுக்கு அதிக பாசம். அவளுக்காக நான் என் குடும்பத்தை விட்டு விலகி வந்தேன். மனைவி குழந்தைகளை விட்டு விட்டு சுமிதாவுடனேயே வந்து தங்கிவிட்டேன். நானும், சுமிதாவும் கடந்த 15 ஆண்டுகளாக தாலி கட்டாமலேயே கணவன்- மனைவியாக வாழ்ந்து வந்தோம்.
கேள்வி:- சிலிக் சுமிதாவின் இந்த முடிவுக்கு பணக்கஷ்டம் காரணமா?
டொக்டர்:- நிச்சயமாக இல்லை. பணமும், நகைகளும் லொக்கரில் இருக்கிறது.
சுமிதாவுக்கு ஒரு சில ஆண்டுகளுக்கு முன்பு பணக்கஷ்டம் இருந்தது உண்மை. காரணம் அவள் இரவும் பகலும் ஆடி ஆடி சம்பாதித்த பணத்தையெல்லாம் சொந்தப்படம் எடுப்பதில் விட்டுவிட்டாள். தெலுங்கில் வீரவிகாரம், பிரேமசேச்சுடு ஆகிய படங்களையும், மலையாளத்தில் பெண் சிங்கம் என்ற படத்தையும் சொந்தமாக தயாரித்தாள்.
ஆனால் மூன்று படங்களுமே தோல்வியைத் தழுவின கையில் இருந்த பணம் எல்லாம் போய்விட்டது. இந்த அதிர்ச்சியை சுமிதாவால் தாங்கமுடியவில்லை. மிகவும் வேதனைப்பட்டாள். அந்த மனச்சோர்வில் படத்தில் நடிப்பதை கூட விட்டு விட்டாள். பிறகு 1 1/2 வருடத்துக்குப்பிறகு நடித்தாள். கடன்களை எல்லாம் அடைத்தாள். பணமும் சேர்ந்தது.
இந்த பங்களாவை கூட வாங்க நினைத்து, அட்வான்ஸ் கூட கொடுத்து இருக்கிறோம். எனவே பணக்கஷ்டம் இந்த முடிவுக்கு காரணமாக இருக்க முடியாது.
வேறு என்ன காரணமாக இருக்கும் என்று கருதுகிaர்கள்?
டொக்டர்:- சுமிதா எழுதி வைத்துள்ள கடித்தில் 5 வருடத்துக்கு முன்பு ஒருவர் எனக்கு வாழ்க்கை தருகிறேன்னு சொன்னார். ஆனால் ஏமாற்றிவிட்டார்ன்னு எழுதி இருக்கிறாள். அந்த ஏமாற்றத்தினாள் கூட இந்த முடிவுக்கு வந்து, இருக்கலாமோ என்னவோ, யாருக்குத் தெரியும்?
கேள்வி:- அந்த நபர் யார் என்று தெரியுமா?
டொக்டர்:- தெரியலையே சுமிதாவின் மனதில் என்ன இருக்கும் என்று யாருக்குமே தெரியாது.
அவள் யாரையாவது விரும்புகிறாள் என்று தெரிந்தால் நிச்சயம். நான் விலகி இருப்பேன். குறுக்கே நிற்கமாட்டேன்.
வழக்கமாக சுமிதா என் அறையில் என்னுடன்தான் படுத்துத் தூங்குவாள். அன்றைய தினம் பேத்தி உத்ரா இருந்ததால் அவளை அழைத்துக்கொண்டு பக்கத்து அறைக்குப்போய் விட்டாள். போனவள்.
ஒரேயடியாய் போய் சேருவாள் என்று நினைக்கவே இல்லை. இப்படி செய்த விட்டாளே’
‘இவ்வாறு கண் கலங்கியபடி டொக்டர் ராமகிருஷ்ண மூர்த்தி கூறினார்.
சில்க் சுமிதாவின் தாயார் நரசம்மா நிருபர்களிடம் கூறியதாவது:-
‘எனக்கு ஒரு மகளும், மகனும்தான் உண்டு. சுமிதா என் மீது அன்பை பொழிவாள். நான் ஊரில் இருந்து வந்தால் ஓடி வந்து கட்டிப்பிடித்துக் கொஞ்சுவாள். இனி யார் என்னிடம் அப்படி அன்பாக இருக்கப் போகிறார்கள். என மகள் ரொம்ப நல்ல பொண்ணு. அவளை மாதிரி யாரும் வரமாட்டார்கள்.
பெங்களூர் சூட்டிங் சென்றுவிட்டு என் ஊருக்கு வந்தால் என்னைப் பார்த்துவிட்டுத்தான் சென்னை திரும்புவாள். (இறந்த அன்று) மீண்டும் வருவதாக கூறினாள். ஆனால் அவள் வரவலில்லை. அவள் இறந்து விட்டதாக தந்தி வந்தது. மாதம் ஆயிரம் ரூபாய் அனுப்புவாள்.
நினைத்த போதெல்லாம் ஓடோடி வருவாள். இனி அவளைப் பார்க்க முடியாது. மணக்கோலத்தில் பார்க்க வேண்டியவளை பிணமாகத்தான் பார்க்க முடிந்தது எனக்கு. கொடுத்து வைத்தது அவ்வளவுதான்.
அவள் ரொம்ப கஷ்டப்பட்டு உழைத்தாள். சம்பாதித்தாள் அவளுக்கு கடன் இருப்பதற்கு வாய்ப்பே இல்லை. அவள் சாக வேண்டிய அளவுக்கு கஷ்டம் வந்தது என்று கூறுவதை என்னால் நம்பமுடியவில்லை. பாபு பாபு என்று சொல்கிறார்கள். அவர் ரொம்ப நல்லவர் என்று சுமிதா சொல்ல கேட்டுள்ளேன். நான் யாரையும்
வில்லை காலம்தான் பதில் சொல்ல வேண்டும்.இவ்வாற நரசம்மா கூறினாள்.
சில்க் சுமிதாவின் தம்பி நாகவரபிரசாத் நிருபர்களிடம் கூறியதாவது:-
'நான் சொந்த ஊரில் கார் வாங்கி விற்கும் தொழில் செய்து வருகிறேன். அக்கா எங்கள் மீது ரொம்ப பாசமாக இருந்தார். அவர்தான் எங்களுக்கு எல்லா உதவிகளையும் செய்து வந்தார்.
அக்காவின் இந்தத் திடீர் மரணம் எங்களை ரொம்ப வேதனைக்குள்ளாக்கிவிட்டது. இந்த முடிவை எடுக்கும் அளவுக்கு அவளுக்கு என்ன கஷ்டம் வந்தது என்று என்னால் எண்ணிப் பார்க்க முடியவில்லை.
அக்கா அவர் நினைத்த போது எங்களைப் பார்க்க வருவார் நான் கடந்த மாதம் இங்கு வந்து பார்த்தேன். கடந்த 10 நாட்களுக்கு முன் சென்னை வந்தபோது சூட்டிங் போய் விட்டதாக தெரிவித்தார்கள்.
டெலிவிஷன் பார்த்த போது அக்கா மரணம் அடைந்த செய்தியைக் கேட்டேன். அதிர்ச்சி அடைந்தேன்.
பாபு அக்காவுடன்தான் வசித்து வருகிறார். அவர் எப்படிப்பட்டவர் என்று எங்களுக்குத் தெரியாது. ஆனால் நல்லவர் என்று அக்கா சொல்லக் கேட்டிருக்கிறேன். வேறு ஒன்றும் எங்களுக்குத் தெரியாது.
இவ்வாறு நாகவரபிரசாத் கூறினார்.

சிநேகிதனே...சிநேகிதனே..  பாடல் பிறந்த கதை

அலைபாயுதே படத்தில் வரும் ‘சிநேகிதனே சிநேகிதனே....’ எவ்வளவு இனிமையான பாடல், ஆனால் இந்தப் பாடல் உருவான போது கவிப்பேரரசு வைரமுத்து மற்றும் மணிரத்னம் இடையே நடந்த சுவையான சம்பவங்கள் அதைவிட மிக சுவையானவை.
சினேகிதியே பாட்டின் சரணத்தில் வரும் ‘உந்தன் சட்டை நானும் போட்டு மகிழ்வேன்’ எனும் வரி கவிஞர் வைரமுத்துவுடையது இல்லையாம். கவிஞர் அவர்கள் திருமணமான கதாநாயகன் மற்றும் கதாநாயகியின் அந்தரங்கமான நெருக்கத்தை உணர்த்துவதற்காக வேறொரு அற்புதமான வரியை எழுதியிருந்தாராம்.
அது ‘உந்தன் ஜட்டி நானும் போட்டு அலைவேன்’ எனும் வைரவரி. இந்த வரியை படித்துவிட்டு இயக்குனர் மணிரத்னம், ‘கவிஞரே, எந்தக் காரணத்திற்காகவும் சினேகிதர்கள் ஜட்டியை மாற்றி அணிந்து கொள்வது தமிழ் கலாசாரத்தில் கிடையாது. மழை காலத்தின் போது வேண்டுமானால் துவைத்துப் போட்ட சட்டை மழைக்கு காய்ந்திருக்காது, ஆகவே சில நேரம் சட்டையை மாற்றி அணிந்து கொள்வார்கள், எனவே இந்த வரியை ‘உந்தன் சட்டை நானும் போட்டு மகிழ்வேன்’ என சொல்லி அப்படியே செய்தும் விட்டார்.
இதனால் கவிஞர் இயக்குனர் மணிரத்னம் மீது மிக கோபம் கொண்டார். அதே அலைபாயுதே படத்திற்கு அடுத்த பாடல் எழுதும் போது ‘அக்டோபர் மாதம் வாழ்வின் இன்பத்தை தொலைத்து விட்டேன்’ என எழுதி தன் கோபத்தை தீர்த்துக் கொண்டார். ‘அலைபாயுதே படத்தின் பாடல்களும் அக்டோபர் மாதத்தில் தான் உருவானது என்பது அனைவரும் அறிந்ததே.
இயக்குனருக்கும் கவிஞருக்கும் இடையே நடந்த சிறு ஊடல் நமக்கு காலத்தால் அழியாத இரண்டு பாடல்களை தந்திருப்பது பெரும் ஆச்சர்யம்தான் இல்லையா?



காஜல் அகர்வாலிடம் விருந்து பெற வழி

காஜல் அகர்வாலிடம் யாராவது நீங்கள் தான் தென்னிந்தியாவின் நம்பர் ஒன் நடிகை என்று சொன்னால் இன்னொரு வாட்டி சொல்லுங்க என்கிறாராம். மேலும் அவர்களுக்கு விருந்து கொடுக்கிறாராம்.
காஜல் அகர்வால் தமிழில் விஜயுடன் துப்பாக்கி, சூர்யாவுடன் மாற்றான், கார்த்தியுடன் ஆல் இன் ஆல் அழகு ராஜா ஆகிய பாடங்களில் நடிக்கிறார்.
இது தவிர தெலுங்கில் முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்து நடித்து வருகிறார். இந்நிலையில் காஜல் தமிழ், தெலுங்கு என்று இத்தனை படங்களில் நடித்து வரும் நீங்கள் தான் தென்னிந்தியாவின் நம்பர் ஒன் நடிகை என்று பலரும் அவருக்கு ஐஸ் வைத்து வருகிறார்களாம்.
இதைக் கேட்டு உச்சி குளிர்ந்து போகும் காஜல் அந்த ஐஸ் பார்ட்டிகளிடம் இன்னொரு வாட்டி சொல்லுங்க என்று கேட்கிறாராம். அவர்களும் அதை திரும்பச் சொல்ல மகிழ்ந்துபோகும் அவர் ஐஸ் பார்ட்டிகளுக்கு விருந்து கொடுத்து அசத்துகிறாராம்.
இத்தனை படங்களில் நடிக்க ஒப்புக்கொண்டுள்ள காஜல் கால்iட்டை குழப்பியதாக சிலர் முணுமுணுக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் அங்கும், இங்கும் ஓடி, ஓடி நடிப்பதால் சில படங்களில் அவர் சம்பந்தப்பட்ட காட்சிகள் எடுக்க காலதாமதமாவதாகவும் கூறப்படுகிறது.


ராணி முகர்ஜpயுடன் ப்ரித்விராஜ் நடனம்

அய்யா படத்தில் தென்னிந்திய நடிகர்களின் காதில் புகை வரும் அளவிற்கு இந்தி நடிகை ராணி முகர்ஜியுடன் செம குத்தாட்டம் போட்டுள்ளார் ப்ரித்விராஜ்.
தமிழ் இளைஞன் ஒருவருக்கும், மராத்திய பெண்ணுக்கும் இடையே ஏற்படும் காதலைப் பற்றிய படம் தான் ‘அய்யா’. படத்தில் தமிழ் இளைஞனாக ப்ரித்விராஜும், மராட்டிய பெண்ணாக ராணி முகர்ஜியும் நடிக்கின்றனர்.
இதில் மூன்று குத்தாட்டப் பாடல்கள் உள்ளன. அதில் ஒன்றுதான் ‘ளிrலீaசீuசீ தீakலீupசீ’ இது 80 களில் வெளியான கமலின் சூப்பர் ஹிட்
பாடலின் டியூன். அதை அப்படியே இந்தப் படத்தில் பயன்படுத்தியிருக்கின்றனர். ராணி முகர்ஜியின் கிளாமர் உடையில் ப்ரித்விராஜும் கமலைப் போல் பாடல் முழுவதும் சட்டை போடாமல் படு கவர்ச்சியாக நடித்திருக்கிறார்.
தென்னிந்திய மொழியும், ஆங்கிலமும் கலந்து எழுதப்பட்டுள்ள
இந்தப் பாடலின் இடையில் 1, 2, 3, 4 என்று தமிழும் வருகிறது. ஐதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் இரண்டு நாட்கள் இந்தப் பாடல் படமாக்கப்பட்டுள்ளது.
தேசிய விருது பெற்ற மராத்திய இயக்குநர் சச்சின் குந்தல்கர், இந்தியில் இயக்கும் ‘அய்யா’ படத்தின் கதை ரொம்பவே பிடித்து போக உடனே ஓ.கே. சொல்லியிருக்கிறார் ப்ரித்விராஜ்.
பொலிவுட் படங்களில் ஏற்கனவே ‘அப்படிப்போடு’ பாடலும், ‘ரிங்கா ரிங்கா’ பாடலும் ரீமேக் ஆகியுள்ளன. அந்த வரிசையில் இந்தப் பாடலும் இடம்பெற்றுள்ளது.

தமன்னாவின் அழகில் மயங்கிய ரித்திக் ரோ'ன்

தமன்னாவை பார்த்து அவரது அழகில் மயங்கிய ரித்திக் ரோஷன் அவரை தன்னுடன் ஒரு படத்தில் நடிக்க அழைத்துள்ளார் என்று கூறப்படுகிறது.
நடிகை தமன்னாவுக்கு தமிழில் தான் மார்க்கெட் ஆட்டம் கண்டுள்ளது. ஆனால் ஆந்திராவில் அவருக்கு ஏக கிராக்கியாகத் தான் உள்ளது. அதிலும் சிரஞ்சீவி குடும்பத்தார் ஆதரவில் அவர் அமோகமாக இருக்கிறார். இந்நிலையில் இந்தியில் ஹிம்மத்வாலா படத்தில் கஜோல் கணவர் அஜய் தேவ்கானுடன் சேர்ந்து நடிக்கிறார்.
இந்நிலையில் அண்மையில் நடந்த நிகழ்ச்சிக்கு சென்ற தமன்னாவை பொலிவுட் நடிகர் ரித்திக் ரோஷன் பார்த்துள்ளார். தமன்னாவின் அழகில் மயங்கிவிட்டாராம். அதன் பிறகு வீட்டுக்கு சென்ற அவர் தமன்னாவுக்கு தூது அனுப்பியுள்ளார். அதாவது தன்னுடன் சேர்ந்து ஒரு படத்தில் நடிக்க வேண்டும் என்று அன்புடன் கோரிக்கை வைத்துள்ளார்.
ரித்திக்குடன் நடிக்க நான் நீ என்று நடிகைகள் போட்டி போட்டுக் கொண்டிருக்கும் போது அவரே தனக்கு தூதுவிட்டதில் அம்மணிக்கு ஏக சந்தோஷமாம். உடனே ஓ.கே. சொல்லிவிட்டார் என்று கூறப்படுகிறது.
சில நடிகைகள் வாய்ப்பு கிடைக்காமல் அல்லாடுகையில் தமன்னாவுக்கு வாய்ப்பு வீடு தேடி வருகிறது. இது தான் அதிர்ஷ்டம் என்பதோ.

கத்ரீனாவின் வீட்டுக்கு நள்ளிரவில் வந்தவர் யார்?

பொலிவுட் நடிகை கத்ரீனா கைப் வாங்கியுள்ள புது வீட்டுக்கு சல்மான் கானும், ரன்பீர் கபூரும் சத்தமில்லாமல் சென்று வந்துள்ளனர்.
பொலிவுட் நடிகை கத்ரீனா கைப் மும்பை அந்தேரி பகுதியில் டூப்ளெக்ஸ் வீடு வாங்கியுள்ளார். இந்த வீட்டில் அவர் தனது குடும்பத்தாரோடு வசிக்கவிருக்கிறார்.
இந்த புது வீட்டுக்கு முதன் முதலாக வந்தது யார் தெரியுமா? கத்ரீனாவின் முன்னாள் காதலர் சல்மான் கான் தான். அதையடுத்து கத்ரீனாவின் நண்பர் ரன்பீர் கபூர் பத்திரிகையாளர்கள் கண்ணில் படாமல் இரவு 11 மணிக்கு வந்துவிட்டு 12.45 மணிக்கு கிளம்பிச் சென்றுள்ளார்.
வீட்டை விட்டு வெளியே வந்த ரன்பீர் பத்திரிகையாளர்கள் யாரும் போட்டோ எடுத்துவிடக் கூடாது என்று விருட்டென்று காரில் ஏறிச் சென்றுவிட்டாராம்.
கத்ரீனா தான் புது வீடு வாங்கியதை யாருக்கும் கூறாமல் ரகசியமாகவே வைத்திருந்தார். ஆனால் அவரால் அந்த ரகசியத்தை காக்க முடியவில்லை. சல்மானுடன் சேர்ந்து அவர் நடித்த ஏக் தா டைகர் வசூலில் புதிய சாதனை படைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Wednesday, September 12, 2012


 

ஹன்சிகாவுக்கு சிம்புவால் கெடுபிடி

வாலு படத்தில் சிம்புவுக்கு ஜோடி சேர்ந்த காரணத்தினால் தற்போது கையை பிசைந்து ¦¡கண்டிரக்கிறாராம் ஹன்சிகா.
‘வேட்டை மன்னன்’, ‘போடா போடி’ என பிஸியாக இருக்கும் சிம்பு, வாலு படத்தை அவ்வப்போது கவனிக்கிறார். இதில் ஜோடியாக நடிக்கும் ஹன்சிகாவும், கொமெடியன் சந்தானமும் கை நிறைய படங்களை வைத்துக் கொண்டுள்ளனர்.
சிம்பு இறுதியாக நடித்த ‘ஒஸ்தி’ படம் எதிர்பார்த்த வெற்றியைத் தராததால், ‘வாலு’ மற்றும் ‘போடா போடி’ போன்ற படங்களை வெற்றிப் பாடமாக்கியே தீருவேன் என்ற வேகத்துடன் உழைத்துக் கொண்டிருக்கிறார். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட போடா போடி திரைப்படம் இப்பொழுதுதான் வேகம் எடுத்துள்ளது. இதன் கிளைமேக்ஸ் காட்சிகள் எடுக்கப்பட்டு விட்டதாக தெரிவித்துள்ளனர்.
‘வாலு’ படம் தீபாவளிக்கு ரிலீஸ் ஆகிறது என்று ஏற்கனவே சிம்பு அறிவித்துள்ளார். எனவே ‘வாலு’ திரைப்படத்தின் படப்பிடிப்பை விரைந்து முடிப்பதற்கான ஏற்பாடுகளும் நடைபெற்று வருகின்றன. எவ்வளவு பிஸியாக இருந்தாலும் ‘வாலு’ படப்பிடிப்பில் வந்து வந்து நடித்து தரவேண்டும் என்று நிம்பு ஒப்பந்தம் போட்டுள்ளதால் செய்வதறியாமல் கையை பிசைந்து கொண்டிருக்கிறாராம் ஹன்சிகா.

லட்சுமி ராய்க்கு பதில் ஷார்மி

நாகர்ஜுனா நடிக்கும் படங்களில் ஒரு ஐட்டம் டான்ஸ் கண்டிப்பாக இடம்பெற்றிருக்கும். அவரது ராசி சென்டிமென்ட் ஷார்மிதான். ஏற்கனவே ‘கிங்’ மற்றும் ‘ரகடா’ படத்தில் ஷார்மியுடன் குத்தாட்டம் போட்டதில் படம் சூப்பர் ஹிட்.
இப்பொழுது நடித்துக் கொண்டிருக்கும் ‘தமருகம்’ படத்திலும் ஒரு ஐட்டம் பாடல் உண்டு. அதில் நாகர்ஜூனா உடன் ஆட லட்சுமி ராயை புக் செய்திருந்தனர். என்ன நினைத்தாரோ எனக்கு லட்சுமி ராய் வேண்டாம் ஷார்மியே போதும் என்று கூறிவிட்டாராம் நாகர்ஜூனா.
தேவி பிரசாரத்தின் இசையில் ‘தமருகம்’ படத்தின் பாடல்கள் ரகளையாய் வந்திருக்கிறதாம். அறிமுகப்பாடல் ஐதராபாத்தில் சில தினங்களுக்கு முன் படம் பிடிக்கப்பட்டுள்ளது. இதில் நாகர்ஜூனாவிற்கு ஜோடி அனுஷ்கா ஐட்டத்திற்கு ஷார்மி படம் செம ஹாட்டாக இருக்கும் என்று பேசுகின்றனர் டோலிவுட்டில்.

இன்ப அதிர்ச்சி அளித்த பிபாஷா.

33 வயது கவர்ச்சிப் புயல்

சமீபத்தில் வெளியான ராஸ் 3 படத்தில் இம்ரான் ஹஸ்மியுடன் 20 நிமிடம் முத்தக்காட்சியில் நடித்து சாதனைப் படைத்தார் பிபாஷா. திரைப்படங்களில் இதுவரை எடுக்கப்பட்ட முத்தக்காட்சிகளிலேயே இதுதான் மிக நீளமானது. இந்த காட்சியில் இம்ரானுடன் பேசிக் கொண்டே முத்தமிட வேண்டும் என்பதால் மிகவும் சிரமப்பட்டாராம் பிபாஷா.
இந்த காட்சி குறித்து ஆங்கில பத்திரிகை ஒன்றுக்கு பேட்டி அளித்த அவர், முத்தக்காட்சியில் நடிப்பதை விட படுக்கை அறை காட்சிகளில் நடிப்பது எவ்வளவோ மேல் என்று கூறி கேட்பவர்களுக்கு இன்ப அதிர்ச்சி அளித்துள்ளார். படுக்கை அறை காட்சியில் நடிக்க ஆசைப்படும் ஒரே கதாநாயகி நானாகத்தான் இருப்பேன்.
ஏனெனில் முத்தக்காட்சியை விட அது வசதியானது என்று ஸ்டேட்மென்ட் இந்த 33 வயது கவர்ச்சிப்
புயல் விட்டுள்ளார். அடுத்த படத்தில் பிபாஷாவை புக் செய்யும் இயக்குநர்கள் இதை மனதில் கொள்வது நல்லது.
தன் முன்னாள் காதலர் ஜோன் ஏப்ரஹாம் உடன் முத்தக் காட்சியில் நடிப்பது மட்டுமே வசதியாக இருக்கிறது என்று கடந்த சில தினங்களுக்கு முன் ஏக்கப் பெருமூச்சுடன் பிபாஷா பேட்டி கொடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


நிதி நெருக்கடியில் காவேரி

நடிகை காவேரியை அவ்வளவு சீக்கிரம் யாரும் மறந்து விட முடியாது. காசி படத்தில் பார்வையற்ற விக்ரமிற்கு எல்லாமுமாக இருந்து தேற்றுபவர். இந்த காவேரிதான்.
கேரளத்தை பூர்வீகமாக கொண்ட காவேரி தமிழில் கண்ணுக்குள் நிலவு படத்தில் மூலம் அறிமுகமானார். அதற்கு பிறகு அப்பு, நினைக்காத நாளில்லை, சமுத்திரம், புன்னகை பூவே, கண்ணாடி பூக்கள், உட்பட பல படங்களில் நடித்தார். குடும்ப பாங்கான கேரக்டர்களுக்கு புகழ்பெற்ற காவேரி தெலுங்கில் கொஞ்சம் கிளாமராக நடித்து அங்கே கல்யாணி என்ற பெயரில் புகழ் பெற்றார்..
கே. பாக்யராஜ் இயக்கிய மெளன கீதங்கள் படம் நினைவிருக்கிறதா அதில் பாக்கியராஜின் சுட்டி மகனாக நடித்து டாடி டாடி ஓ மை டாடி பாட்டு பாடியவர் சூரிய கிரன். அவர் இப்போது தெலுங்கில் பிரபல இயங்குனர். இவரைத்தான் காவேரி காதலித்து திருமணம் செய்து கொண்டார். நன்றாக போய்க்கொண்டிருந்த இவர்கள் வாழ்க்கையில் சொந்தப் பட தயாரிப்பு ஆசை வந்தது..
செப்டெம்பர் 6 என்ற படத்தை காவேரி தயாரிக்க சூரிய கிரன் இயக்கினார். இதே படத்தை அத்யாயம் 6 என்ற பெயரில் தமிழிலும் ஒரே நேரத்தில் தயாரித்தார்கள். 6 விதமான காதல்களை சொல்லும் 6 தனிதனி கதைகள் கொண்ட படம் 6 கதையிலும் 6 விதமான வண்ணங்களை பயன்படுத்தினார். அதாவது ஒரு கதை பச்சை நிறம் என்றால் ஹீரோ, ஹிரோயின் அணிகிற ஆடை, வீட்டு ஸ்கிரீனு இப்படி எல்லாமே அதிகபட்சம் பச்சையாக இருக்கும்.
இதை வித்தியாசமாக செய்தார் சூரிய கிரன். இதில் சோனியா சூரிய என்ற நடிகை டாப்லசாக வேறு நடித்திருந்தார்.
இப்படி பல்வேறு கொமர்ஷியல் அம்சங்கள் இருந்தபோதும் படம் தெலுங்கில் பெரும் தோல்வியை தழுவியது. மீடியாக்கள் படத்தை கிழித்து தொங்க விட்டது. ஒரு பெண் தயாரிப்பாளர். அதுவும் நடிகை இப்படி ஆபாச படம் எடுக்கலாமா என்று போட்டுத் தாக்கினார்கள். படத்துக்கான பட்ஜெட் இரு மொழியிலும் சேர்த்து சுமார் 6 கோடி ரூபாய். தெலுங்கில் ஏற்பட்ட தோல்வியை தொடர்ந்து தமிழில் அதை வெளியிடும் திட்டத்தை கைவிட்டார் காவேரி.
6 கோடி ரூபாய் என்பது காவேரி போன்ற நடுத்தர நடிகைகளுக்கு பெரும் தொகை, இப்போது அதை மீட்டெடுக்க காவேரி தொலைக்காட்சி தொடர், சினிமா என்று கிடைக்கிற வாய்ப்பையெல்லாம் பயன்படுத்தி நடித்துக் கொண்டிருக்கிறார். ராம நாராயணன் இயக்கி சுட்டி பிசாசு என்ற படத்தில் ஒரு சிறிய கேரக்டரில்கூட நடித்தார். சூரிய கிரனும் படங்களை இயக்கிக் கொண்டிருக்கிறார்.


Tuesday, September 11, 2012


 

மூவேந்தர்களுடன் நடித்த ~அமுதை பொழியும்' ஜமுனா இந்திரா காந்தியின் அழைப்பில் எம்.பி. ஆனவர்

எம்.ஜி.ஆர்., சிவாஜி, ஜெமினி திரையுலக மூவேந்தர்களுடன் நடித்த ஜமுனா தேர்தலில் போட்டியிட்டு ‘எம்.பி.’ ஆனார்.
தென்னாட்டின் சூப்பர் ஸ்டார்களுடன் இணைந்து நடித்த ஜமுனா, தேர்தலில் இ. காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு பாராளுமன்ற உறுப்பினர் ஆனவர். ஜமுனா, ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவர்.
தந்தை பெயர் சீனிவாசராவ், தாயார் கெளசல்யாதேவி. ஜமுனா படிப்பில் படுசுட்டி. அதனால் அவரை டொக்டருக்குப் படிக்க வைக்க பெற்றோர் விரும்பினர்.
சிறு வயதிலேயே ஜமுனா மிகவும் அழகாக இருப்பார். அவர் ஆடுவதையும், பாடுவதையும் கண்ட உறவினர்களும், நண்பர்களும், இந்தப் பெண்ணை சினிமாவில் சேர்த்து விட்டால், வெகு சீக்கிரத்தில் பெரிய நடிகையாகிவிடுவாள் என்றனர்.
ஜமுனாவின் தந்தைக்கு டொக்டர் ராஜாராவ் என்ற சினிமா டைரக்டர் நெருங்கிய நண்பர். அவர் முயற்சியால் தெலுங்குப் படத்தில் அறிமுகமாகும் வாய்ப்பு ஜமுனாவுக்குக் கிடைத்தது.
1954ல் பிரபல பட அதிபர் எச். எம். ரெட்டி அவருடைய ‘ரோகிணி பிக்சர்ஸ்’ பெனரில், தமிழ், தெலுங்கு, மராத்தி ஆகிய மூன்று மொழிகளில் ஒரு படத்தைத் தயாரித்தார். தமிழ்ப்படத்தின் பெயர் ‘பணம் படுத்தும் பாடு’.
இதில் என். டி. ராமராவும், செளகார் ஜானகியும் ஜோடியாக நடித்தனர். ஜமுனா இரண்டாவது கதாநாயகியாக நடித்தார். அவருக்கு ஜோடி கே. ஏ. தங்கவேலு. இது நகைச்சுவைப் படம். சுமாராக ஓடியது. 1955ல் விஜயா - வாகினி ஸ்டூடியோ, ‘மிஸ்ஸியம்மா’ வைத் தயாரித்தது. மாபெரும் வெற்றிப்படமான இதில் ஜெமினிகணேசனும், சாவித்திரியும் இணைந்து நடித்தனர். படத்தின் டைரக்டர் எல். வி. பிரசாத்.
இந்தப் படத்தின் இரண்டாவது கதாநாயகியாக ஜமுனா நடித்தார். குழந்தை முகமும், குழந்தைத்தனமும் கொண்ட கெரக்டர் அந்த கதாபாத்திரத்தில் ஜமுனா பிரமாதமாக நடித்தார். ‘தமிழுக்கு ஒரு நல்ல நடிகை கிடைத்தார்’ என்று பத்திரிகைகள் எழுதின.
‘மிஸ்ஸியம்மா’வைத் தொடர்ந்து, தமிழ்நாட்டின் முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக ஜமுனா நடித்தார். 1957ல் சிவாஜிகணேசனுடன் ‘தங்கமலை ரகசிய’த்தில் நடித்தார். இந்த வெற்றிப் படத்தில், சுசீலா குரலில் ஜமுனா பாடுவது போல அமைந்த ‘அமுதைப் பொழியும் நிலவே’ என்ற பாடல் ரசிகர்களின் செவிகளில் அமுதைப் பொழிந்தது.
தொடர்ந்து ‘நிச்சயதாம்பூலம்’, ‘மருதநாட்டுவீரன்’ முதலிய படங்களில் சிவாஜியுடன் நடித்தார். பேரறிஞர் அண்ணா எழுதிய ‘தாய் மகளுக்குக் கட்டிய தாலி’ என்ற கதையை, ஒளிப்பதிவாளர் ஆர் ஆர். சந்திரன் 1959ல் அதே பெயரில் படமாகத் தயாரித்தார். இதில் எம்.ஜி.ஆரும், ஜமுனாவும் ஜோடியாக நடித்தனர். ஜமுனாவுக்கு தாயாராக நடித்தவர் கண்ணாம்பா.
ஜமுனாவின் சிறந்த நடிப்பை எடுத்துக் காட்டிய படம் ‘குழந்தையும் தெய்வமும்’. ஏ.வி.எம். தயாரிப்பான இந்தப் படத்தில் ஜமுனாவுக்கு ஜோடியாக ஜெய்சங்கர் நடித்தார். இதில் ஜமுனாவுக்கு இரட்டைக் குழந்தைகள். அந்தக் குழந்தைகளாக இரட்டை வேடத்தில் சிறப்பாக நடித்தார். குட்டி பத்மினி அப்போது அவர் குழந்தை நட்சத்திரம்.
பிற்காலத்தில், இளைய தலைமுறை நடிகர்களுக்கு அக்காவாகவும், அம்மாவாகவும் ஜமுனா நடித்தார். ‘தூங்காதே தம்பி தூங்காதே படத்தில் கமல்ஹாசனுக்கு அம்மாவாக நடித்தார்.
தமிழில் ஜமுனா அதிக படங்களில் நடிக்கவில்லையென்றாலும், தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் மொத்தம் 200 படங்களுக்கு மேல் நடித்துள்ளார்.
தெலுங்குப் பட உலகின் சூப்பர் ஸ்டார்களாகத் திகழ்ந்த என். டி. ராமராவ், ஏ. நாகேஸ்வரராவ் ஆகியோருடன் பல படங்களில் இணைந்து நடித்துள்ளார். 1983ல் ஜமுனாவை அரசியலுக்கு வருமாறு இந்திரா காந்தி அழைத்தார். அதைத் தொடர்ந்து இ. காங்கிரஸில் ஜமுனா சேர்ந்தார்.
ராஜமகேந்திரபுரம் தொகுதியில், பாராளுமன்ற த்துக்கு போட்டியிட்டு வெற்றி பெற்றார். பின்னர் இ. காங்கிரசை விட்டு விலகி, பாரதீய ஜனதாவில் சேர்ந்தார். ஜமுனாவுக்கு 1965ல் திருமணம் நடந்தது. கணவர் பெயர் ரமணராவ் இவர் கல்லூரி பேராசிரியராகப் பணியாற்றினார்.
இந்த தம்பதிகளுக்கு ஒரு மகன், ஒரு மகள். மகன் வம்சி கிருஷ்ணா, அமெரிக்காவில் கம்ப்யூட்டர் துறை பேராசிரியராகப் பணியாற்றுகிறார் மகள் சரவந்தியும் பட்டதாரி ஆவார்.


 

குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் அம்பிகா

தமிழ், மலையாளம் உட்பட 150 படங்களில் நடித்த அம்பிகா, மலையாளப் படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் ஆனவர். அம்பிகாவின் சொந்த ஊர் கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகில் உள்ள கல்லரா.
தந்தை குஞ்சன் நாயர், தாயார் சரசம்மா. குஞ்சன் நாயர் மின்சாரத்துறையில் பணிபுரிந்தார். சரசம்மா காங்கிரஸ் கட்சியில் பிரபலமானவராக இருந்தார். அம்பிகாதான் வீட்டில் மூத்த பெண்.
அவருடன் பிறந்தவர்கள்: மல்லிகா, சந்திரிகா (நடிகை ராதா) அர்ஜுன் (புதுநெல்லு புதுநாத்து படத்தின் கதாநாயகன் ராமார்ஜுன்), சுரேஷ் (பரதேசி தெலுங்கு படத்தின் கதாநாயகன்). அம்பிகாவுக்கு சிறு வயதிலேயே சினிமா மீது மோகம் ஏற்பட்டது.
கவும் நினைவாற்றல் கொண்டதால் ரேடியோவில் ஒரு முறை பாட்டைக்கேட்டால் உடனடியாக அதை அப்படியே திரும்ப பாடும் ஆற்றலுடன் விளங்கினார். தினமும் காலையில் 7.45 மணியளவில் இருந்து 8 மணிக்குள் ரேடியோவில் லலிதசங்கீதம் என்ற நிகழ்ச்சி ஒலிபரப்பாகும்.
அதில் பிரபல இசையமைப்பாளர் எம்.ஜி. ராதாகிருஷ்ணன் என்பவர் பாடல்களை பாடும் விதம் பற்றி விளக்குவார். அவர் சொல்வதை அப்படியே ஒரு நோட்டில் எழுதத் தொடங்கி விடுவார், அம்பிகா.
பள்ளிக்கு செல்லும் போதும் அதையே தான் நினைத்துக்கொண்டு செல்வார். இது பற்றி அம்பிகா கூறியதாவது:
‘ரேடியோவில் கற்றுக்கொண்ட பாடல்களை, பள்ளியில் நடத்தப்படும் விழாக்களில் கலந்து கொண்டு ராகத்துடன் பாடுவேன். எனக்கு அப்போது முதல் பரிசு அல்லது இரண்டாவது பரிசு கிடைக்கும். நான் பாட்டுப்போட்டியில் கலந்து கொள்ளும் போது எனக்கு போட்டியாக உத்தமன் என்ற மாணவனும் பாட்டுப்போட்டிக்கு வருவான். அவன் பாடல்களை பெண் குரலில் பாடி பரிசை தட்டிச்சென்று விடுவான்.
அதனால் சில நேரங்களில் நான் முதல் பரிசை இழந்ததும் உண்டு. அதனால் அவன் மீது எனக்கு எரிச்சலும் அதிகமாக உண்டு. நான் பாடிய அதே பாடலை மற்றொரு பள்ளியில் படித்த என் சகோதரி ராதாவும் பாடி பரிசுகளை வாங்கி வருவாள்.
அப்போது நான் மிமிக்ரி, கவிதை போட்டி, நடிப்பு, நடனப்போட்டி, நாடகம் ஆகிய அனைத்திலும் பங்கேற்பேன். விளையாட்டில் எனக்கு ஈடுபாடு கிடையாது. ஆனால் விளையாட்டில் ராதாவுக்கு அதிக ஈடுபாடு உண்டு. நான் சராசரி மாணவிதான், எங்கள் வீட்டில் வாரம் ஒரு நாள் சனிக்கிழமை பொழுது போக்கு நிகழ்ச்சி நடக்கும். அப்போது அனைவரும் குடும்பத்தோடு ஒன்றாக இருந்து அவரவர் திறமையை காண்பிப்போம்.
நான் நடனம் ஆடுவேன், மேலும் நடித்துக்காட்டுவேன். என் தங்கை மல்லிகாவுக்கு எதுவும் தெரியாது என்று கூறிவிடுவாள். ராதா நடனம் ஆடுவாள். எங்களை பெற்றோர் ஊக்கப்படுத்துவார்கள். இவ்வாறு அம்பிகா கூறினார்.
சிறுமியாக இருக்கும் போது அம்பிகா தாயாரை வற்புறுத்தி சினிமாப் படப்பிடிப்பை பார்க்க அழைத்து செல்வார். ஆலப்புழையில் நடந்த ஒரு படசூட்டிங்கை பார்க்க சென்றனர். படத்தில் கமலஹாசன், சோமன் ஆகியோர் நடித்துக்கொண்டு இருந்தனர். அம்பிகாவை பார்த்த கமலஹாசன், ‘நீ என்னுடன் நடிக்கிறாயா?’ என்று சிரித்துகொண்டே கேட்டார். ‘நடிக்கிறேன்’ என்றார், அம்பிகா. ‘நீ ஸ்ரீ வித்தியா மாதிரி இருக்கிறாய். சினிமாவில் நடிக்கலாம். எதிர்காலத்தில் பெரிய நடிகையாக வரலாம்’ என்று கமல் கூறினார்.
அதைக்கேட்டு அம்பிகா மிக்க மகிழ்ச்சி அடைந்தார். இந்தக் காலகட்டத்தில் மலையாளப்பட உலகில் iலா மிகப்புகழ் பெற்ற நடிகையாக விளங்கினார். அவரைப்போல் பெரிய நடிகையாக வரவேண்டும் என்று அம்பிகா கனவு கண்டார். இந்த சந்தர்ப்பத்தில் நீலா புரொடக்சன்ஸ் பட நிறுவனம் ‘சோட்டாணிக்கரா’ என்ற படத்தை எடுத்தனர்.
அந்தப் படத்தின் படப்பிடிப்பை காண தாயாருடன் அம்பிகா சென்றார். அங்கு பட அதிபர் சுப்பிரமணியனும், டைரக்டரும் இருந்தார்கள். ‘என் மகள் படத்தில் நடிக்க ஆசைப்படுகிறாள். வாய்ப்பு கொடுப்பீர்களா?’ என்று கேட்டார்.
மேக்கப் போட்டு, ‘டெஸ்ட்’ எடுத்துப் பார்த்தார்கள். அம்பிகாவின் அழகும். நடிப்பும் அவர்களுக்குப் பிடித்திருந்ததால், அந்தப் படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார்.
தொடர்ந்து சில படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்தார். மங்கைப் பருவம் எய்திய பிறகு, நடிப்பதை நிறுத்தினார். ஒருநாள் வீட்டுக்கு அருகே உள்ள தியேட்டரில் அம்பிகா சினிமா பார்த்துக்கொண்டிருந்தார். அப்போது படத்தில் நடிப்பதற்கு அழைப்பு வீடு தேடி வந்தது. தியேட்டருக்கு ஆள் அனுப்பி, அம்பிகாவை அழைத்து வரச்சொன்னார், சரசம்மா.
சற்று நேரத்தில் அம்பிகா வந்தார். எம். முகுந்தன் என்ற பிரபல எழுத்தாளர் எழுதிய ‘சீதா’ என்ற நாவல், திரைப்படமாகத் தயாரிக்கப்பட இருப்பதாகவும் அதில் அம்பிகா நடிக்க வேண்டும் என்றும் வீடு தேடி வந்த படக் கம்பெனியினர் கேட்டுக்கொண்டனர். அம்பிகாவும், அவர் தாயாரும் சம்மதம் தெரிவித்தனர். ஒப்பந்தம் கையெழுத்து ஆயிற்று. கேரள பட உலகில் ஏற்கனவே ஒரு அம்பிகா (பத்மினியின் உறவினர்) இருந்தார்.
எனவே அம்பிகாவின் பெயரை மாற்ற வேண்டும் என்று சிலர் கூறினார்கள். சீதா பிருந்தா, பிரியா, சந்தியா என்ற பெயர்கள் ஆலோசிக்கப்பட்டன.
ஆனால் பெயர் மாற்றத்துக்கு அம்பிகாவின் பெற்றோர் சம்மதிக்கவில்லை. எனவே, அம்பிகா என்ற பெயரிலேயே நடித்தார். அப்படம் வெற்றி பெறவே, தொடர்ந்து மலையாள படங்களில் நடித்தார். படங்களில் நடித்துக்கொண்டே, ‘பி.ஏ’ வரலாறு படித்தார்.

Friday, September 7, 2012


 

டிமிக்கு ¦கொடுக்கும் பிந்து மாதவி

பெங்களூரில் நடந்த சட்டம் ஒரு இருட்டறை படத்தின் ஷ¥ட்டிங்குக்கு வராமல் டிமிக்கி அடித்து விட்டாராம் நடிகை பிந்து மாதவி. இதனால் படக் குழுவினர் அப்செட் ஆகி விட்டனராம்.
கழுகு படத்தின் மூலம் தமிழுக்கு வந்தவர் பிந்து மாதவி. அப்படியே சிலுக்கு போலவே இருக்கிறார் என்று திரையுலகினரால் பாராட்டப்பட்டதால் பிந்து மாதவிக்கு தன் மீதே காதல் வந்துவிட்டதாம். அந்தப் பெருமிதத்துடன் தற்போது நடித்து வரும் பிந்து, சட்டம் ஒரு இருட்டறை ரீ மேக்கிலும் நாயகியாக நடித்து வருகிறார்.
இப்படத்தின் ஷ¥ட்டிங் சமீபத்தில் பெங்களூரில் நடத்த திட்டமிட்டு படக்குழுவினர் போய் விட்டனர். ஆனால் பிந்து மாதவியைக் காணோம் அன்று முழுவதும் அவர் படப்பிடிப்புக்கே வரவில்லையாம். இதனால் ஷ¥ட்டிங் கென்சலாகி விட்டதாம்.
என்ன, ஏது என்று விசாரித்தபோது அவருக்கு ஏதோ காயம் ஏற்பட்டு விட்டதாக தகவல் கிடைத்துள்ளது. இருப்பினும் தன்னைத் தேடி புதிதாக வந்த மூன்று படங்கள் தொடர்பான ஆழமான டிஸ்கஷனில் அவர் இருந்ததால்தான் சட்டம் ஒரு இருட்டறை ஷ¥ட்டிங்குக்கு வர முடியாமல் போனதாக இன்னொரு தகவலும் கிடைத்ததால் படக் குழுவினர் கடும் அப்செட்டானார்கள்.



 

ரஜனி கமலுடன் மீண்டும் நடிப்பேன்

ஸ்ரீதேவி
நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோருடன் மீண்டும் நடிப்பேன் என்று நடிகை ஸ்ரீதேவி கூறியுள்ளார். 14 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் நடிக்க வந்திருக்கும் ஸ்ரீதேவி, தற்போது தமிழ் – இந்திய ஆகிய 2 மொழிகளில் உருவாகும் இங்கிலீஷ் – விங்கிலீஷ் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் ட்ரைலர் வெளியீட்டு விழா, சென்னையில் நடந்தது. அதில் கலந்துகொண்ட ஸ்ரீதேவி நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.
அப்போது இத்தனை காலம் நடிக்காமல் இருந்ததற்குக் காரணம் என் மகள்கள் இருவரும் சின்ன குழந்தைகளாக இருந்தார்கள்.
அவர்களை வளர்க்கும் பொறுப்பு எனக்கு இருந்தது. இப்போது அவர்கள் பெரியவர்கள் ஆகிவிட்டார்கள். அதனால் மீண்டும் நடிக்க ஆரம்பித்து இருக்கிறேன் என்றார். ரஜினிகாந்த் - கமல்ஹாசன் ஆகிய இருவருடனும் மீண்டும் ஜோடி சேர்ந்து நடிப்பீர்களா? என்ற கேள்விக்கு பதில் அளித்த ஸ்ரீதேவி, நிச்சயமாக நடிப்பேன். இரண்டு பேரையும் சமீபத்தில் கூட சந்தித்துப் பேசிக் கொண்டிருந்தேன். ஆனால் நியாயமாக இதை அவர்களிடம்தான் கேட்க வேண்டும். பொருத்தமான சூழல் அமைய வேண்டும் என்றார்.


 

பேஸ் புக் காதல்

தமிழ்ப்படவுலகினருக்கு டைட்டிலுக்கு மட்டும் ஒருபோதும் பங்சமே வருவதில்லை. நல்ல நல்ல பெயரைத் தவிர வித்தியாசமான பெயரையும் போட்டுத் தாக்கி படம் பண்ணி விடுகிறார்கள்.
முன்பெல்லாம் இலக்கிய நயம் மிக்க பெயர்களில் படங்கள் வந்தன. பின்னர் சில வருடங்களுக்கு முன்பு வரை ஆங்கிலப் பெயர்களாக வைத்துத் தள்ளினர். அதை விட கொடுமையாக ஏய், போடா, வாடா, சண்டை என்று கொத்துப் புரோட்டா போட்டனர். அதற்கு கருணாநிதி ஆட்சிக்காலத்தில் முடிவு கட்டினர். இதையடுத்து தமிழ்ப் பெயர்களில் வர ஆரம்பித்தன.
இந்த நிலையில் பேஸ்புக் என்ற பெயரில் ஒரு புதுப் படத்திற்குப் பெயர் போட்டுள்ளனர். இந்தப் படத்தின் பெயர் ஆங்கிலத்தில் இருப்பதால் படத்திற்கு வரிச் சலுகை கிடைக்காது என்பது உறுதியாகத் தெரிகிறது. இருப்பினும் அது குறித்து தயாரிப்பாளர்களுக்கு கவலை இல்லை போல படத்திற்கான பன்ச் லைனாக காதல் என்ற பெயர் வைத்துள்ளனர்.
இந்தப் படத்தின் கதை என்று தனியாக எந்தச் செய்தியும் தரத் தேவையில்லை. காரணம், பேஸ்புக் மூலம் ஏற்படும் ஒருகாதலைத்தான் இப்படம் சொல்லப் போகிறதாம்.
படத்தில் காதலுடன், கவர்ச்சியும் கரைபுரண்டோடும் என்று படத்தின் நாயகியைப் பார்த்தாலே தெரிகிறது.


 

டூயட் பாட அனுமதி கேட்ட அனுஷ்கா

அலெக்ஸ் பாண்டியன் படத்தில் கார்த்தியுடன் டூயட் பாட இயக்குனர் செல்வராகவனிடம் அனுமதி கேட்டுள்ளார் நடிகை அனுஷ்கா.
நடிகை அனுஷ்கா செல்வராகவனின் இரண்டாம் உலகம் பட ஷ¥ட்டிங்கிற்காக ஜோர்ஜியா பறந்துவிட்டார். இதற்கிடையே அவர் கதாநாயகியாக நடிக்கும் அகெஸ் பாண்டியன் படத்தில் நாயகி இல்லாமல் கார்த்தியால் டூயட் பாட முடியவில்லை.
இதையடுத்து அலெக்ஸ் பாண்டியன் படக்குழுவினர் அனுஷ்காவுக்கு போன் மேல் போன் போட்டதுடன் ஏராளமான ஈமெயில் அனுப்பி உடனே சென்னை வாருங்கள், நீங்கள் நடிக்க வேண்டிய பாகங்கள் ஷ¥ட் செய்ய வேண்டியுள்ளது என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஓயாது போன் ஒலித்ததையடுத்து அனுஷ்கா செல்வராகவனிடம் சென்று விவரத்தைக் கூறி சென்னை செல்ல அனுமதி கேட்டுள்ளார். அவரும் அனுமதி அளிக்கவே அம்மணி சென்னைக்கு வந்தார். வந்த கையோடு கார்த்தியோடு டூயட் பாட சென்றுவிட்டார்.
அலெக்ஸ் பாண்டியன் தெலுங்கில் ‘பேட் பாய்’ என்ற பெயரில் ரிலீஸ் ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கது. கார்த்தி மற்றும் அனுஷ்காவுக்கு ஆந்திராவில் ரசிகர்கள் அதிகம் என்பதால் படம் அங்கும் நிச்சயம் ஹிட்டாகும் என்று நம்பப்படுகிறது


 
எலந்த பழம் பாடல் காட்சியில் நடித்த விஜய நிர்மலா

உலகில் அதிக படங்களை இயக்கிய பெருமைக்குரிய பெண்

படத்தைப் பார்த்தவர்கள், ‘எலந்தப் பழம்’ பாடலை மறந்திருக்க மாட்டார்கள். அந்தப் பாடல் காட்சியில் நடித்த விஜய நிர்மலா, பிற்காலத்தில் ஆந்திரப் பட உலகின் மிகப் புகழ் பெற்ற நடிகையாக உயர்ந்ததுடன், 42 படங்களை இயக்கினார்.
உலகத்திலேயே அதிக படங்களை டைரக்ட் செய்த பெண் இயக்குனர் இவர்தான்! விஜய நிர்மலாவின் தாய் மொழி தெலுங்கு. என்றாலும், அவர் பிறந்தது, வளர்ந்தது எல்லாம் சென்னையில்தான். பிறந்த ஆண்டு 1943.
விஜய நிர்மலா 7 வயது சிறுமியாக இருக்கும்போது, விஜயா புரொடக்ஷன்ஸ் தயாரித்த ஒரு படத்தில், குழந்தை நட்சத்திரமாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. தொடர்ந்து சில படங்களில், குழந்தை நட்சத்திரமாக நடித்தார்.
விஜய நிர்மலாவுக்கு 15 வயதாகிய போது, அவருடைய புகைப்பட ஆல்பத்தை குடும்ப நண்பர் ஒருவர் பார்த்தார். ‘இவ்வளவு களையான முகம் கொண்ட விஜய நிர்மலா, சினிமா படங்களில் கதாநாயகியாக நடிக்கலாம். அதற்கு நானே முயற்சி செய்கிறேன்’ என்று கூறிவிட்டு ஆல்பத்தை வாங்கிக் சென்றார்.
அப்போது ‘பார்கவி நிலையம்’ என்ற மலையாளப் படம் தயாராகிக் கொண்டிருந்தது. அந்த பட அதிபரிடம் விஜய நிர்மலாவின் பட ஆல்பம் போயிற்று. அவர் அதைப் பார்த்துவிட்டு, படத்தின் டைரக்டரும், ஒளிப்பதிவாளருமான வின்சென்ட்டிடம் கொடுத்தார்.
‘இந்தப் பெண்ணுக்கு நல்ல முகவெட்டு இருக்கிறது. கேமராவுக்கு ஏற்ற முகம், நம் படத்திலேயே கதாநாயகியாக நடிக்க வைக்கலாம்’ என்று வின்சென்ட் கூற, ‘பார்கவி நிலைய’த்தின் கதாநாயகியானார் நிர்மலா.
ஏற்கனவே தெலுங்கில் வெளியான ‘சவுகார்’ என்ற படத்தை ‘எங்க வீட்டு பெண்’ என்ற பெயரில் தமிழில் தயாரிக்க விஜயா புரொடக்ஷன்சார் ஏற்பாடு செய்து வந்தனர். கதாநாயகியாக யாரைப் போடலாம் என்று ஆலோசித்து வந்த அவர்களுக்கு, விஜய நிர்மலா பற்றித் தெரிந்தது. அந்தப் படத்தின் கதாநாயகியாக நடிக்க விஜய நிர்மலா ஒப்பந்தம் ஆனார்.
இவ்வாறு, ‘எங்க வீட்டுப் பெண்’ படத்தின் மூலமாக, தமிழ்ப்பட உலகுக்கு விஜய நிர்மலா அறிமுகமானார். கே. எஸ். கோபாலகிருஷ்ணன் இயக்கத்தில் தயாரான ‘பணமா பாசமா’ படத்தில், விஜய நிர்மலா நடித்தார். படம், சூப்பர் ஹிட்டாக அமைந்தது. ‘எலந்த பழம்’ பாடல் பட்டி தொட்டி எங்கும் எதிரொலிக்க விஜய நிர்மலா அந்த ஒரே பாடல் காட்சி மூலம் பெரும் புகழ் பெற்றார்.
‘என் அண்ணன்’ படத்தில் எம். ஜி. ஆரிருக்கு, தங்கையாக நடித்தார். பிறகு, ‘சோப்பு சீப்பு கண்ணாடி’ படத்தில் நாகேசுக்கு ஜோடியாக நடித்து, நகைச்சுவை நடிப்பும் தனக்கு நன்றாக வரும் என்பதை நிரூபித்தார்.
தமிழ்ப் படங்களில் நடித்து வந்தபோதே, தெலுங்குப் படங்களிலும் அவர் நடித்த படங்கள் அமோக வெற்றி பெற்றன. எனவே, தெலுங்குப் படங்களில் அதிகம் நடிக்கலானார்.
பல படங்களில், பிரபல நடிகர் கிருஷ்ணாவுடன் இணைந்து நடித்தார். இருவருக்கும் காதல் ஏற்பட்டு திருமணம் செய்து கொண்டனர். விஜய நிர்மலா - கிருஷ்ணா ஜோடி சுமார் 50 படங்களில் இணைந்து நடித்தது குறிப்பிடத்தக்கது.
இந்தக் காலகட்டத்தில், டைரக்ஷனிலும் விஜய நிர்மலா ஈடுபட்டார். அவர் டைரக்ட் செய்த படங்கள் பெரும் வெற்றி பெறவே, டைரக்ஷனில் தீவிரவமாக இறங்கினார். மொத்தம் 42 படங்களை ரைடரக்ட் செய்தார். இது, உலக சாதனை.
தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் மொத்தம் 275 படங்களில் நடித்துள்ளார். ஆந்திராவில், படத் தயாரிப்பு சம்பந்தப்பட்ட பல்வேறு அமைப்புகளில் இடம் பெற்றவர், விஜய நிர்மலா.

என் தமிழ் சுசிலாவை உறுத்தாதிருக்க பல்லவியை ஒற்று எழுத்து வராமல் எழுதினேன்

கவிஞர் வைரமுத்து
நிகழ்ச்சியொன்றில் பி. சுசிலா வைப்பற்றி வைரமுத்து குறிப்பிட்டது எவரின் குரலை நேசித்தேனோ அந்தக் குரலுக்குரியவர் பாட வருகிறார் என்றால் எனக்கு எப்படி இருந்திருக்கும்? ‘பஞ்சமி’ என்றொரு படம். இசை இளையராஜா, பாட்டு நான்!
அனிச்ச பூக்களும் அன்னத்தின் உட்சிறகுகளும் கூட ஒரு பெண்ணின் மெல்லிய பாதத்தை முள்ளாக உறுத்துமென்று சொன்னால் சுசிலா அம்மையாருக்கு என் தமிழ் உறுத்தக் கூடாது என்பதற்காக பல்லவியை ஒற்று எழுத்து வராமல் எழுதினேன்.
“உதய கானமே, நல்ல மேகமே மொழியின் கதவு திறந்தது விழியில் விடியல், புலர்ந்தது அமுதம் பொழிந்து விளைந்த தமிழில் புலமை பிறந்தது” என்று அந்த பல்லவி அமைந்தது. இதில் எந்த இடத்திலும் க்,ச்,த்,ட்,ன் வராது. சுசிலா அவர்களின் தொண்டையை காயப்படுத்தக்கூடாது என்பதற்காக அப்படி எழுதினேன். இதை அன்றே சுசிலா அம்மையாரிடம் சொல்லி நான் உங்கள் ரசிகன் என்றேன், சிரித்தார். நான் சங்கீத வித்துவான் இல்லை இருந்திருந்தால் அந்த சிரிப்பையே ஸ்வரம் பிரித்திருப்பேன்’” என்றார் வைரமுத்து.

ஜெமினி, கமல் நடித்த ~குறத்தி மகன்' உருவான விதம்

கலைஞானம் எழுதிய கதை ‘குறத்தி மகன்’ அது உருவான விதமே ஒரு கதை. கலைஞானம் கூறுகிறார் :-‘ஒரு நாள் மாலை மைலாப்பூரில் நடந்து சென்று கொண்டிருந்தபோது பிளாட்பாரத்தில் நரிக்குறவர் கூட்டத்தை கண்டேன்.
நான்கு நரிக்குறவப் பெண்கள் சேலையை வட்டமாக பிடித்து நிற்க, நடுவில் படுத்திருந்த பெண், குழந்தை பெற்றாள். தொப்புள் கொடியைத் துண்டித்து, குழந்தையையும், தாயையும் தூக்கிக் கொண்டு அருகில் இருந்த ஒரு வீட்டிற்குள் நுழைந்தார்கள். அவர்களுடன் நானும் சேர்ந்து கொண்டேன்.
வீட்டுக்காரர் திட்டினார். சாமி! மழை நின்னதும் போயிடுறோம் சாமி! என்று குறத்திகள் கெஞ்சினார்கள். நானும் வீட்டுக்காரரை சமாதானப்படுத்தினேன். மழை நின்றதும் எல்லோரும் விவேகானந்தா கல்லூரி பக்கம் சென்றார்கள்.
இன்னொரு நாள் ஒருபுறம் எச்சில் இலைகளுக்கு நாய்கள் சண்டை போட்டுக் கொண்டிருக்க, மறுபுறம் இன்னொரு குப்பைத் தொட்டியில் போடப்பட்ட எச்சில் இலைகளில் ஒட்டிக்கொண்டிருந்த சோறு, காய்கறிகளை, நரிக்குறவர்கள் டால்டா டின்னில் எடுத்துக் போட்டுக்கொண்டிருந்தார்கள்.
எச்சில் சோற்றுக்காக நாய்கள் போராடுகின்றன. அதே எச்சில் சோற்றுக்காக நரிக்குறவர்களும் போராடுகிறார்கள். இவர்களுக்கு விமோசனமே கிடையாதா என்று சிந்தித்தேன்.
மறுநாள் காலை அவர்கள் இருக்கும் இடம் தேடிச் சென்று எல்லோருக்கும் பத்து பைசா, இருபது பைசா கொடுத்தேன். அனைவரும் அன்புடன் வணங்கினார்கள். நான் அவர்கள் மத்தியில் அமர்ந்தேன். அவர்களுடைய வாழ்க்கை பற்றிய முழு விவரங்களையும் கேட்டறிந்தேன்.
ஒரு வார காலம் மீண்டும் மீண்டும் அவர்களைச் சந்தித்துப் பேசினேன். அதன் மூலமாக உருவான கதைதான் ‘குறத்தி மகன்’ அதை எப்படி படமாக்கலாம் என்று யோசித்துக் கொண்டிருந்த போது, எதிர்பாராத நிகழ்ச்சி நடந்தது.
டைரக்டர் கே. எஸ். கோபாலகிருஷ்ணன், நடிகர் நம்பிராஜனை என்னிடம் அனுப்பினார். என்னை கே. எஸ். ஜீ. பார்க்க விரும்புவதாக, நம்பிராஜன் சொன்னார் அதன்படி நான் சென்று கோபாலகிருஷ்ணனை சந்தித்தேன். ‘ஏதோ, நரிக்குறவர்கள் பற்றி கதை எழுதியிருக்கிaர்களாமே அது என்ன கதை?’ என்று கேட்டார்.
கதையின் மையத்தைச் சொன்னதுமே, ‘இது போதும் மீதி கதையை நாளை கேட்கிறேன். இந்தக் கதையை 7 ஆயிரம் ரூபாய்க்கு நான் வாங்கிக் கொண்டு நானே தயாரிக்கிறேன். பிற மொழி உரிமை பற்றி அப்புறம் பேசிக்கொள்ளலாம். இப்போதே அட்வான்ஸ் வாங்கிக் கொள்ளுங்கள்’ என்று கூறி அட்வான்ஸ் தொகையைக் கொடுத்தார் கோபாலகிருஷ்ணன்.
இவ்வாறு கலைஞானம் கூறினார்.
குறத்தி மகனில் ஜெமினிகணேசன், கே. ஆர். விஜயா, கமலஹாசன், ஜெயசித்ரா ஆகியோர் நடித்தனர். கே. எஸ். கோபாலகிருஷ்ணன் வசனம் எழுதி, டைரக்ட் செய்தார். 1972 ஏப்ரல் 29ல் வெளிவந்த ‘குறத்தி மகன்’ வெற்றிப்படமாக அமைந்தது