Tuesday, April 24, 2012

 பத்து தடவைக்கு மேல் கேட்டு சிவாஜpயை நடிக்க தூண்டிய பாடல்




கண்ணா நீயும் நானுமா?

வியட்நாம் வீடு சுந்தரத்தின் ‘கெளரவம்’ படத்தில் மெல்லிசை மன்னரின் இசையில் ‘கண்ணா நீயும் நானுமா’ என்ற பாடலைப் பாட வந்த போது.
படத்தின் கதை, அந்தப் பாடலைப் பாடப் போகும் கதாபாத்திரத்தின் குண நலன்கள் மற்றும் மனோ பாவம், ஆகியவற்றைப் பற்றி நன்கு கேட்டுத் தெரிந்து கொண்டு அந்தக் கதாபாத்திரமாகவே தம்மையும் மாற்றிக் கொண்டு,
இன்னும் சொல்லப் போனால் கூடு விட்டுக் கூடு பாய்வது போல அந்தக் கதாபாத்திரத்தின் உடலில் புகுந்து கொண்டு உணர்வு பூர்வமாகப் பாடிக் கொடுத்தார் டி.எம்.எஸ்.
அந்தப் பாடல் காட்சியில் நடிப்பதற்காக படப் பிடிப்புத் தளத்துக்கு வந்த நடிகர் திலகம் சிவாஜி கணேசனிடம் பாடலைப் போட்டுக் காட்டினார்கள்.
‘இன்னும் ஒரு தடவை போடுங்கள் இன்னும் ஒரு தடவை’ என்று பல தடவை திரும்பத் திரும்ப அந்தப் பாடலை மிக உன்னிப்பாகக் கேட்டுக் கொண்டே இருந்தார் சிவாஜி.
இது அங்கிருந்த பலருக்கும் மிகுந்த ஆச்சரியத்தைக் கொடுத்தது!
காரணம், பொதுவாக சிவாஜி ஒரு பாடல் காட்சியில் நடிப்பதற்கு முன்பு ஒரு தடவை அல்லது மிஞ்சிப் போனால் இரண்டு தடவை தான் அந்தப் பாடலின் ஒலி நாடாவை ஒலிக்க விடச் சொல்லிக் கேட்பது வழக்கம்.
ஆனால் இந்தப் பாடலை அவர் பத்துத் தடவைக்கு மேலாக கண்களை முடிக் கொண்டே மறுபடியும் மறுபடியும் கேட்டுக் கொண்டே இருந்தார்.
இதை நீண்ட நேரமாகவே கவனித்துக் கொண்டிருந்த வியட்நாம் வீடு சுந்தரம், நடிகர் திலகத்தின் அருகே சென்று அவரிடம் மிகவும் பணிவான குரலில் தமது சந்தேகத்தை வெளிப்படுத்தினார்.
‘ஒரு தடவை, அல்லது இரு தடவை பாடலைக் கேட்டு விட்டு உடனே நடிக்க வந்து விடும் நீங்கள் இந்தக் குறிப்பிட்ட பாடலை மட்டும் பத்து தடவைக்கு மேல் திரும்பத் திரும்பக் கேட்பதன் ரகசியம் என்ன?
‘சுந்தரம்! டி. எம். எஸ். இந்தப் பாடலை, மிகுந்த உணர்ச்சிப் பிரவாகமாகப் பாடி இருக்கின்றார்.
பல்லவியில் ஒரு விதமான
பாவம் ஆக்ரோஷம் அடுத்த சரணத்தில் இன்னொரு
விதமான தொனி மற்ற சரணத்தில் இன்னொரு பரிமாணம் என குரலால் அற்புதமாக நடித்துக் கொடுத்திருக்கிறார் டி.எம்.எஸ்.
ஒரே வரியையே இரண்டு இடத்தில் ‘ரிபீட்’ பண்ணும் போது இரண்டு விதமான தொனிகளில் பாடுகிறார். உதாரணமாக ‘நீயும் நானுமா?’ என்ற வரியை ஒவ்வொரு முறை உச்சரிக்கும் போதும் ஒவ்வொரு பாவத்தில் அர்த்தத்தில் உச்சரிக்கிறார்.
இப்படியெல்லாம்... அற்புதமாக அவர் பாடிக் கொடுத்த பாட்டை கவனமாக நான் நடித்துக் கொடுக்கா விட்டால் இதைப் பாடிய டி.எம்.எஸ். என்னைப் பற்றி என்ன நினைப்பார்? என்றாராம் சிவாஜி. நடிகர் திலகத்தின் செய் தொழில் நேர்த்திக்கும், ஆத்மார்த்தமான தொழில் ஈடுபாட்டுக்கும், தன்னடக்கத்திற்கும், சக கலைஞர்களின் திறமைகளைப் பகிரங்கமாக மதிக்கும் பரந்த தன்மைக்கும் இது ஒரு சிலிர்க்க வைக்கும் எடுத்துக்காட்டு.

 

 

ஆணிவேர் இல்லாத மரமாக அல்லாடியவர் மனோரமா

அவரது கலையுலக பயணத்திற்கு அடித்தளமிட்டது ‘அந்தமான் காதலி’

x ரு வீட்டில் சுமார் இரண்டு மாதம் வேலை செய்திருப்பேன். ஒருநாள் என் அம்மா நான் வேலை செய்து கொண்டிருந்த வீட்டு வேலையை வேண்டாம் என்று கூறிவிட்டு என்னைத் தேடிக்கொண்டு வந்துவிட்டார்.
நானோ, எனக்கு மேல் உயரமான அண்டா குண்டா பாத்திரங்களை உருட்டித் தேய்த்துக் கழுவிக் கொண்டிருந்தேன். ஏராளமான பாத்திரங்களுக்கு மத்தியில் மிகவும் அவலமான நிலையில் பார்த்த அம்மா, கண்ணீர் விட்டுப் புலம்பத் தொடங்கியதுடன், என்னை வேலையில் சேர்த்துவிட்ட அம்மாவைக் கண்டுபிடித்து சண்டை போட்டு, உடனே என் பிள்ளையைக் கூட்டி வா என்று துரத்தியிருக்கிறார்.
அந்த அம்மாள் வந்து “உன்னோட பாட்டி செத்துப் போனதா தந்தி வந்திருக்குடி, உன் ஆத்தா அழுதுக்கிட்டு இருக்கு உன்னைக் கூட்டியாரச் சொன்னா வாடி” என்று சொல்லி கூட்டிப் போய் என் அம்மாவிடம் விட்டு விட்டார்.
இப்போது எனக்கும் வேலை இல்லை. என் அம்மாவுக்கும் வேலை இல்லை. மீண்டும் வந்தது சாப்பாட்டுக் கவலை.
அன்று நான் சாப்பாட்டிற்காக பட்ட கஷ்டங்களின் விளைவு இன்று நான் சாப்பிட்டு எழும்போது எனது தட்டில் அல்லது இலையில் ஒரு பருக்கையோ காய்கறிகளோ வீணாக இருக்காது. இந்தப் பழக்கத்திற்கு மற்றோர் நிகழ்ச்சியையும் காரணமாகக் கூறலாம்.
ஒருமுறை ஏ.வி.எம்.மின் ‘நானும் ஒரு பெண்’ படத்தின் வெற்றியையொட்டி ஏவி. மெய்யப்ப செட்டியார் எங்களுக்கெல்லாம் ஒரு விருந்து கொடுத்தார்.
சாப்பாட்டின் போது ஏ.வி.எம். செட்டியார் என் கண் பார்வை படும் இடத்தில் உட்கார்ந்து சாப்பிட்டார். தனக்கு வேண்டியதை தேவையான அளவு கேட்டுக் கேட்டு வாங்கிச் சாப்பிட்டார். அவர் சாப்பிட்டு முடிந்து எழுந்த போது அவர் சாப்பிட்ட இலை அப்போதுதான் புதிதாக போடப்பட்டது போல் இருந்ததே தவிர ஒருவர் சாப்பிட்ட இலை அது என்ற அடையாளமே தெரியவில்லை.
அந்த அளவிற்கு எந்தப் பொருளையும் வீணாக்காமல் விரயம் செய்யாமல் சாப்பிட்டிருந்தார்.
எவ்வளவு பெரிய கோடீஸ்வரர். அவர் நினைத்தால் நாளொன்றுக்கு ஒரு ஓட்டலையே விரயம் செய்யக்கூடிய சக்தி படைத்தவர். எவ்வளவு பக்குவமாகச் சாப்பிட்டிருக்கிறார். என்பதைக் கண்டபோது நான் அசந்துவிட்டேன்.
இந்த நிகழ்ச்சியும் எனக்கு ஒரு பாடமாக அமைந்தது. சாப்பாட்டில் என்னை மிக கச்சிதமாக ஒழுங்குபடுத்திக் கொள்ளச் செய்த நிகழ்ச்சி அது!
இது மட்டுமில்லை எந்த இடத்தில் எது கிடைக்கிறதோ அதைச் சாப்பிட்டு மனத்திருப்தி அடைந்துவிடும் பக்கவமும் எனக்குண்டு.
தாயும் மகளும் வேலையை விட்டு விட்டோம். இனி என்ன செய்வது?
மறுபடியும் அம்மா பலகாரக்கடையை ஆரம்பிக்கலாம் என்றால் மீண்டும் ரத்தப் போக்கு நோய் வந்துவிட்டால் என்ன செய்வது?
ஆணிவேர் இல்லாத மரமாக அல்லாடிக் கொண்டிருந்தோம். ஆனாலும் வழக்கம்போல் ஊரார் வீடுகளில் மங்கள நிகழ்ச்சிகளில் எனது இலவச பாட்டுக்கச்சேரி தொடர்ந்து நடந்து கொண்டிருந்தது. இந்தச் சந்தர்ப்பத்தில் எங்கள் ஊருக்கு அண்மையில் உள்ள கோட்டையூரில் ‘ஏகாதசி’ நாள் விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. அன்றை தினம் இரவு அந்த ஊரின் செட்டியார்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து ‘அந்தமான் காதலி’ என்ற நாடகத்தை நடத்தினார்கள்.
அந்த நாடகத்தில் பெண் வேடம் போட்டவருக்குப் பாட வராது. அதனால் அவருக்காகப் பாடவும் நாடகத்தில் இடையிடையே நடனமாடவும் ஒரு பெண்ணைத் தேடியிருக்கிறார்கள். அப்போது “யாரோ” என்னைப்பற்றி சொல்ல என்னை வந்து அழைத்து போனார்கள். என்னுடைய கலை உலகப் பயணம் இங்கே இருந்து தான் ஆரம்பமானது.
அந்த நாடகத்தில் எனது பாட்டையும் குரல் இனிமையையும் டான்சையும் பார்த்து எல்லோரும் வெகுவாகப் பாராட்டி னார்கள். இதில் பணியாற்றிய மறைந்த டைரக்டர் சுப்பராமனின் உதவியாளர் திருவேங்கடமும், ஆர்மோனியம் வாசித்த தியாகராசனும் என்னை ரொம்பவும் பாராட்டி ஆசி கூறியதுடன் எனது பெயரை மாற்றி மனோரமா என்று வைத்தார்கள். அவர்கள் பெயர் வைத்த நேரம் அந்தப் பெயரே நிலைத்தது.
என்னுடைய வாழ்க்கையில் மறக்க முடியாத மறக்கக் கூடாத பெயர்களில் ஒன்று பால்ராஜ். காரணம் இவர்தான் என்னை நடிகையாக அறிமுகம் செய்வித்தவர்.
நான் பாட்டுப்பாடிய கோட்டையூர் நாடகத்திற்கு எலக்ட்ரீஷியனாக இருந்தவர் பால்ராஜ். அவர் எனது பாட்டையும் ஆட்டத்தையும் மிகவும் ரசித்து புதுக்கோட்டையில் நடந்த ‘வீதியின் விசித்திரம்’ என்ற நாடகத்தில் இரண்டாவது கதாநாயகியாக நடிக்க ஏற்பாடு செய்துவிட்டு என்னிடம் வந்தார்.
முதலில் பயந்த என்னை தைரியம் சொல்லி பாடத்தைச் சொல்லிக் கொடுத்து சிறப்பாக நடிக்கவும் வைத்தார். வெறுமனே பாடியும் நடனமாடியும் வந்த நான் இதன் மூலம் நடிகையாக மாறினேன். அதன் மூலம் படிப்படியாக எங்கள் பசிக் கவலை தேய்ந்தது.
இதையடுத்து “யார் மகன்?” என்ற நாடகத்தில் கதாநாயகியாக நடித்தேன். இந்த நாடகத்தை எழுதித் தயாரித்து அரங்கேற்றியவர் எலக்ட்ரீஷியன் பால்ராஜ்.
இந்த நாடகம் சித்தன்னவாசல் என்ற ஊரில் நடந்தது. இந்த நாடகத்திற்கு பிரபல வீணை வித்வானும், முதன் முதலில் கதை, வாசனம், இசை, நடிப்பு, தயாரிப்பு, டைரக்ஷன் என்று பல துறைகளிலும் திரை உலகில் சாதனை புரிந்தவருமான எஸ். பாலசந்தர் தலைமை வகித்தார்.
நாடகத்தின் இடைவேளையில் அந்த நாடகத்தில் இரண்டாவது கதாநாயகியாக நடித்தவருக்கு வேண்டியவர்களால் இரண்டாவது கதாநாயகிக்கு ஒரு வெள்ளிக் குவளை பரிசளிக்கும்படி டைரக்டர் எஸ். பாலசந்தரிடம் தரப்பட்டது.
அதை வாங்கிக்கொண்டு நடாகத்திற்குத் தலைமை வகித்துப் பேசிய எஸ். பாலசந்தர், “இந்த நாடகத்தில் இரண்டாவது கதாநாயகியாக நடித்த பெண்மணிக்கு பரிசு கொடுக்குமாறு என்னிடம் ஒரு வெள்ளிக் குவளையைத் தந்திருக்கிறார்கள். ஆனால் முறையாக இந்தப் பரிசைத் தரவேண்டுமானால் சிறந்த முறையில் கதாநாயகியாக நடித்த மனோரமாவுக்குதான் தரவேண்டும். ஆனால் அவர்கள் கேட்டுக்கொண்டதற்காக இதை இரண்டாவது கதாநாயகிக்குத் தருகிறேன்” என்று கூறி அதை அந்தப் பெண்ணிடம் கொடுத்தார்.
அதன் பிறகு எனது நடிப்பைப் பாராட்டி தனியாக எனக்கும் பரிசு வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியை அப்போதே எஸ். பாலசந்தர் மறந்திருக்கலாம். ஆனால் என்னால் அதை எப்படி மறக்க முடியும்.
இதேபோல் ‘உதிரிப்பூக்கள்’ படத்தின் 200 வது நாள் விழா சென்னையில் நடைபெற்றது.
அந்தப் படத்தில் நடித்த என் மகன் பூபதிக்கு அதே டைரக்டர் எஸ். பாலசந்தர் பாராட்டி பரிசுகளை வழங்கினார்.
அந்தக் காட்சி, எனக்கு அவர் வழங்கிய பரிசோடு ஒப்பிட்டுப் பார்த்து பெருமகிழ்ச்சி கொள்ள வைத்தது.
‘உதிர்ப் பூக்கள்’ பட விழாவின் போது என் மகனுக்கு எஸ். பாலசந்தர் பரிசு வழங்கும் புகைப்படத்தை மிகப் பத்திரமாகப் பாதுகாத்து வைத்திருக்கிறேன்.

 

ஆணிவேர் இல்லாத மரமாக அல்லாடியவர் மனோரமா

அவரது கலையுலக பயணத்திற்கு அடித்தளமிட்டது ‘அந்தமான் காதலி’

x ரு வீட்டில் சுமார் இரண்டு மாதம் வேலை செய்திருப்பேன். ஒருநாள் என் அம்மா நான் வேலை செய்து கொண்டிருந்த வீட்டு வேலையை வேண்டாம் என்று கூறிவிட்டு என்னைத் தேடிக்கொண்டு வந்துவிட்டார்.
நானோ, எனக்கு மேல் உயரமான அண்டா குண்டா பாத்திரங்களை உருட்டித் தேய்த்துக் கழுவிக் கொண்டிருந்தேன். ஏராளமான பாத்திரங்களுக்கு மத்தியில் மிகவும் அவலமான நிலையில் பார்த்த அம்மா, கண்ணீர் விட்டுப் புலம்பத் தொடங்கியதுடன், என்னை வேலையில் சேர்த்துவிட்ட அம்மாவைக் கண்டுபிடித்து சண்டை போட்டு, உடனே என் பிள்ளையைக் கூட்டி வா என்று துரத்தியிருக்கிறார்.
அந்த அம்மாள் வந்து “உன்னோட பாட்டி செத்துப் போனதா தந்தி வந்திருக்குடி, உன் ஆத்தா அழுதுக்கிட்டு இருக்கு உன்னைக் கூட்டியாரச் சொன்னா வாடி” என்று சொல்லி கூட்டிப் போய் என் அம்மாவிடம் விட்டு விட்டார்.
இப்போது எனக்கும் வேலை இல்லை. என் அம்மாவுக்கும் வேலை இல்லை. மீண்டும் வந்தது சாப்பாட்டுக் கவலை.
அன்று நான் சாப்பாட்டிற்காக பட்ட கஷ்டங்களின் விளைவு இன்று நான் சாப்பிட்டு எழும்போது எனது தட்டில் அல்லது இலையில் ஒரு பருக்கையோ காய்கறிகளோ வீணாக இருக்காது. இந்தப் பழக்கத்திற்கு மற்றோர் நிகழ்ச்சியையும் காரணமாகக் கூறலாம்.
ஒருமுறை ஏ.வி.எம்.மின் ‘நானும் ஒரு பெண்’ படத்தின் வெற்றியையொட்டி ஏவி. மெய்யப்ப செட்டியார் எங்களுக்கெல்லாம் ஒரு விருந்து கொடுத்தார்.
சாப்பாட்டின் போது ஏ.வி.எம். செட்டியார் என் கண் பார்வை படும் இடத்தில் உட்கார்ந்து சாப்பிட்டார். தனக்கு வேண்டியதை தேவையான அளவு கேட்டுக் கேட்டு வாங்கிச் சாப்பிட்டார். அவர் சாப்பிட்டு முடிந்து எழுந்த போது அவர் சாப்பிட்ட இலை அப்போதுதான் புதிதாக போடப்பட்டது போல் இருந்ததே தவிர ஒருவர் சாப்பிட்ட இலை அது என்ற அடையாளமே தெரியவில்லை.
அந்த அளவிற்கு எந்தப் பொருளையும் வீணாக்காமல் விரயம் செய்யாமல் சாப்பிட்டிருந்தார்.
எவ்வளவு பெரிய கோடீஸ்வரர். அவர் நினைத்தால் நாளொன்றுக்கு ஒரு ஓட்டலையே விரயம் செய்யக்கூடிய சக்தி படைத்தவர். எவ்வளவு பக்குவமாகச் சாப்பிட்டிருக்கிறார். என்பதைக் கண்டபோது நான் அசந்துவிட்டேன்.
இந்த நிகழ்ச்சியும் எனக்கு ஒரு பாடமாக அமைந்தது. சாப்பாட்டில் என்னை மிக கச்சிதமாக ஒழுங்குபடுத்திக் கொள்ளச் செய்த நிகழ்ச்சி அது!
இது மட்டுமில்லை எந்த இடத்தில் எது கிடைக்கிறதோ அதைச் சாப்பிட்டு மனத்திருப்தி அடைந்துவிடும் பக்கவமும் எனக்குண்டு.
தாயும் மகளும் வேலையை விட்டு விட்டோம். இனி என்ன செய்வது?
மறுபடியும் அம்மா பலகாரக்கடையை ஆரம்பிக்கலாம் என்றால் மீண்டும் ரத்தப் போக்கு நோய் வந்துவிட்டால் என்ன செய்வது?
ஆணிவேர் இல்லாத மரமாக அல்லாடிக் கொண்டிருந்தோம். ஆனாலும் வழக்கம்போல் ஊரார் வீடுகளில் மங்கள நிகழ்ச்சிகளில் எனது இலவச பாட்டுக்கச்சேரி தொடர்ந்து நடந்து கொண்டிருந்தது. இந்தச் சந்தர்ப்பத்தில் எங்கள் ஊருக்கு அண்மையில் உள்ள கோட்டையூரில் ‘ஏகாதசி’ நாள் விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. அன்றை தினம் இரவு அந்த ஊரின் செட்டியார்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து ‘அந்தமான் காதலி’ என்ற நாடகத்தை நடத்தினார்கள்.
அந்த நாடகத்தில் பெண் வேடம் போட்டவருக்குப் பாட வராது. அதனால் அவருக்காகப் பாடவும் நாடகத்தில் இடையிடையே நடனமாடவும் ஒரு பெண்ணைத் தேடியிருக்கிறார்கள். அப்போது “யாரோ” என்னைப்பற்றி சொல்ல என்னை வந்து அழைத்து போனார்கள். என்னுடைய கலை உலகப் பயணம் இங்கே இருந்து தான் ஆரம்பமானது.
அந்த நாடகத்தில் எனது பாட்டையும் குரல் இனிமையையும் டான்சையும் பார்த்து எல்லோரும் வெகுவாகப் பாராட்டி னார்கள். இதில் பணியாற்றிய மறைந்த டைரக்டர் சுப்பராமனின் உதவியாளர் திருவேங்கடமும், ஆர்மோனியம் வாசித்த தியாகராசனும் என்னை ரொம்பவும் பாராட்டி ஆசி கூறியதுடன் எனது பெயரை மாற்றி மனோரமா என்று வைத்தார்கள். அவர்கள் பெயர் வைத்த நேரம் அந்தப் பெயரே நிலைத்தது.
என்னுடைய வாழ்க்கையில் மறக்க முடியாத மறக்கக் கூடாத பெயர்களில் ஒன்று பால்ராஜ். காரணம் இவர்தான் என்னை நடிகையாக அறிமுகம் செய்வித்தவர்.
நான் பாட்டுப்பாடிய கோட்டையூர் நாடகத்திற்கு எலக்ட்ரீஷியனாக இருந்தவர் பால்ராஜ். அவர் எனது பாட்டையும் ஆட்டத்தையும் மிகவும் ரசித்து புதுக்கோட்டையில் நடந்த ‘வீதியின் விசித்திரம்’ என்ற நாடகத்தில் இரண்டாவது கதாநாயகியாக நடிக்க ஏற்பாடு செய்துவிட்டு என்னிடம் வந்தார்.
முதலில் பயந்த என்னை தைரியம் சொல்லி பாடத்தைச் சொல்லிக் கொடுத்து சிறப்பாக நடிக்கவும் வைத்தார். வெறுமனே பாடியும் நடனமாடியும் வந்த நான் இதன் மூலம் நடிகையாக மாறினேன். அதன் மூலம் படிப்படியாக எங்கள் பசிக் கவலை தேய்ந்தது.
இதையடுத்து “யார் மகன்?” என்ற நாடகத்தில் கதாநாயகியாக நடித்தேன். இந்த நாடகத்தை எழுதித் தயாரித்து அரங்கேற்றியவர் எலக்ட்ரீஷியன் பால்ராஜ்.
இந்த நாடகம் சித்தன்னவாசல் என்ற ஊரில் நடந்தது. இந்த நாடகத்திற்கு பிரபல வீணை வித்வானும், முதன் முதலில் கதை, வாசனம், இசை, நடிப்பு, தயாரிப்பு, டைரக்ஷன் என்று பல துறைகளிலும் திரை உலகில் சாதனை புரிந்தவருமான எஸ். பாலசந்தர் தலைமை வகித்தார்.
நாடகத்தின் இடைவேளையில் அந்த நாடகத்தில் இரண்டாவது கதாநாயகியாக நடித்தவருக்கு வேண்டியவர்களால் இரண்டாவது கதாநாயகிக்கு ஒரு வெள்ளிக் குவளை பரிசளிக்கும்படி டைரக்டர் எஸ். பாலசந்தரிடம் தரப்பட்டது.
அதை வாங்கிக்கொண்டு நடாகத்திற்குத் தலைமை வகித்துப் பேசிய எஸ். பாலசந்தர், “இந்த நாடகத்தில் இரண்டாவது கதாநாயகியாக நடித்த பெண்மணிக்கு பரிசு கொடுக்குமாறு என்னிடம் ஒரு வெள்ளிக் குவளையைத் தந்திருக்கிறார்கள். ஆனால் முறையாக இந்தப் பரிசைத் தரவேண்டுமானால் சிறந்த முறையில் கதாநாயகியாக நடித்த மனோரமாவுக்குதான் தரவேண்டும். ஆனால் அவர்கள் கேட்டுக்கொண்டதற்காக இதை இரண்டாவது கதாநாயகிக்குத் தருகிறேன்” என்று கூறி அதை அந்தப் பெண்ணிடம் கொடுத்தார்.
அதன் பிறகு எனது நடிப்பைப் பாராட்டி தனியாக எனக்கும் பரிசு வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியை அப்போதே எஸ். பாலசந்தர் மறந்திருக்கலாம். ஆனால் என்னால் அதை எப்படி மறக்க முடியும்.
இதேபோல் ‘உதிரிப்பூக்கள்’ படத்தின் 200 வது நாள் விழா சென்னையில் நடைபெற்றது.
அந்தப் படத்தில் நடித்த என் மகன் பூபதிக்கு அதே டைரக்டர் எஸ். பாலசந்தர் பாராட்டி பரிசுகளை வழங்கினார்.
அந்தக் காட்சி, எனக்கு அவர் வழங்கிய பரிசோடு ஒப்பிட்டுப் பார்த்து பெருமகிழ்ச்சி கொள்ள வைத்தது.
‘உதிர்ப் பூக்கள்’ பட விழாவின் போது என் மகனுக்கு எஸ். பாலசந்தர் பரிசு வழங்கும் புகைப்படத்தை மிகப் பத்திரமாகப் பாதுகாத்து வைத்திருக்கிறேன்.

 

 

 

பத்து தடவைக்கு மேல் கேட்டு சிவாஜpயை நடிக்க தூண்டிய பாடல்




கண்ணா நீயும் நானுமா?

வியட்நாம் வீடு சுந்தரத்தின் ‘கெளரவம்’ படத்தில் மெல்லிசை மன்னரின் இசையில் ‘கண்ணா நீயும் நானுமா’ என்ற பாடலைப் பாட வந்த போது.
படத்தின் கதை, அந்தப் பாடலைப் பாடப் போகும் கதாபாத்திரத்தின் குண நலன்கள் மற்றும் மனோ பாவம், ஆகியவற்றைப் பற்றி நன்கு கேட்டுத் தெரிந்து கொண்டு அந்தக் கதாபாத்திரமாகவே தம்மையும் மாற்றிக் கொண்டு,
இன்னும் சொல்லப் போனால் கூடு விட்டுக் கூடு பாய்வது போல அந்தக் கதாபாத்திரத்தின் உடலில் புகுந்து கொண்டு உணர்வு பூர்வமாகப் பாடிக் கொடுத்தார் டி.எம்.எஸ்.
அந்தப் பாடல் காட்சியில் நடிப்பதற்காக படப் பிடிப்புத் தளத்துக்கு வந்த நடிகர் திலகம் சிவாஜி கணேசனிடம் பாடலைப் போட்டுக் காட்டினார்கள்.
‘இன்னும் ஒரு தடவை போடுங்கள் இன்னும் ஒரு தடவை’ என்று பல தடவை திரும்பத் திரும்ப அந்தப் பாடலை மிக உன்னிப்பாகக் கேட்டுக் கொண்டே இருந்தார் சிவாஜி.
இது அங்கிருந்த பலருக்கும் மிகுந்த ஆச்சரியத்தைக் கொடுத்தது!
காரணம், பொதுவாக சிவாஜி ஒரு பாடல் காட்சியில் நடிப்பதற்கு முன்பு ஒரு தடவை அல்லது மிஞ்சிப் போனால் இரண்டு தடவை தான் அந்தப் பாடலின் ஒலி நாடாவை ஒலிக்க விடச் சொல்லிக் கேட்பது வழக்கம்.
ஆனால் இந்தப் பாடலை அவர் பத்துத் தடவைக்கு மேலாக கண்களை முடிக் கொண்டே மறுபடியும் மறுபடியும் கேட்டுக் கொண்டே இருந்தார்.
இதை நீண்ட நேரமாகவே கவனித்துக் கொண்டிருந்த வியட்நாம் வீடு சுந்தரம், நடிகர் திலகத்தின் அருகே சென்று அவரிடம் மிகவும் பணிவான குரலில் தமது சந்தேகத்தை வெளிப்படுத்தினார்.
‘ஒரு தடவை, அல்லது இரு தடவை பாடலைக் கேட்டு விட்டு உடனே நடிக்க வந்து விடும் நீங்கள் இந்தக் குறிப்பிட்ட பாடலை மட்டும் பத்து தடவைக்கு மேல் திரும்பத் திரும்பக் கேட்பதன் ரகசியம் என்ன?
‘சுந்தரம்! டி. எம். எஸ். இந்தப் பாடலை, மிகுந்த உணர்ச்சிப் பிரவாகமாகப் பாடி இருக்கின்றார்.
பல்லவியில் ஒரு விதமான
பாவம் ஆக்ரோஷம் அடுத்த சரணத்தில் இன்னொரு
விதமான தொனி மற்ற சரணத்தில் இன்னொரு பரிமாணம் என குரலால் அற்புதமாக நடித்துக் கொடுத்திருக்கிறார் டி.எம்.எஸ்.
ஒரே வரியையே இரண்டு இடத்தில் ‘ரிபீட்’ பண்ணும் போது இரண்டு விதமான தொனிகளில் பாடுகிறார். உதாரணமாக ‘நீயும் நானுமா?’ என்ற வரியை ஒவ்வொரு முறை உச்சரிக்கும் போதும் ஒவ்வொரு பாவத்தில் அர்த்தத்தில் உச்சரிக்கிறார்.
இப்படியெல்லாம்... அற்புதமாக அவர் பாடிக் கொடுத்த பாட்டை கவனமாக நான் நடித்துக் கொடுக்கா விட்டால் இதைப் பாடிய டி.எம்.எஸ். என்னைப் பற்றி என்ன நினைப்பார்? என்றாராம் சிவாஜி. நடிகர் திலகத்தின் செய் தொழில் நேர்த்திக்கும், ஆத்மார்த்தமான தொழில் ஈடுபாட்டுக்கும், தன்னடக்கத்திற்கும், சக கலைஞர்களின் திறமைகளைப் பகிரங்கமாக மதிக்கும் பரந்த தன்மைக்கும் இது ஒரு சிலிர்க்க வைக்கும் எடுத்துக்காட்டு.

Tuesday, April 17, 2012

 

 

ஒரே நாளில் புகழின் சிகரத்தை அடைந்தவர் வைஜந்திமாலா


வசுந்தரா தேவியின் மகள்

ஏவி.எம். தயாரித்த ‘வாழ்க்கை’ படத்தின் மூலம், ஒரே நாளில் புகழின் சிகரத்தை அடைந்த வைஜயந்திமாலா, இந்திப்பட உலகிலும் வெற்றிக் கொ¡டி நாட்டி, முதல் இடத்தைப் பெற்றார். 1952 தீபாவளி தினத்தன்று வெளிவந்த ‘பராசக்தி!’, பெரும் பரபரப்பை உண்டாக்கியது. அதில் அறிமுகமான சிவாஜி கணேசன், ஒரே நாளில் நட்சத்திர அந்தஸ்தை பெற்றார்.
இதற்கு முன் 1949 ல் ஏவி.எம். தயாரித்த ‘வாழ்க்கை’ படமும், ரசிகர்களிடம் பெரிய வரவேற்பைப் பெற்றது. அதில் கதாநாயகியாக அறிமுகமான வைஜயந்திமாலா, ஒரே நாளில் நட்சத்திர அந்தஸ்தைப் பெற்றார். இதற்குக் காரணம், அந்தக் காலகட்டத்தில் திரைப்படக் கதாநாயகிகளில் பெரும்பாலானோர் முதிர்கன்னிகளாக இருந்தார்கள்.
ஒன்றிரண்டு குழந்தை பெற்றவர்கள்தான் கதாநாயகிகளாக வலம் வந்தார்கள்! டி. ஆர். மகாலிங்கம் போன்ற இளம் நடிகர்கள், தங்களைவிட மூன்று நான்கு வயது மூத்த நடிகைகளுடன் இணைந்து நடிக்க வேண்டியிருந்தது! அந்த நேரத்தில், இளமையும், அழகும், திறமையும், படிப்பும், கொண்ட 17 வயது வைஜயந்தி மாலாவின் திரை உலகப் பிரவேசம், ரசிகர்களைப் பரவசப்படுத்தியது. வைஜயந்திமாலாவின் வாழ்க்கை வரலாறு புத்தகங்கள் வெளிவந்தன.
எல்லா பத்திரிகைளும் வைஜயந்தியின் பேட்டியையும், புகைப்படங்களையும் போட்டி போட்டுக் கொண்டு பிரசுரித்தன. ‘வாழ்க்கை’ படம் “ஜீவிதம்” என்ற பெயரில் தெலுங்கிலும், ‘பஹார்’ என்ற பெயரில் இந்தியிலும் தயாரிக்கப்பட்டன.
அந்தப் படங்களிலும் வைஜயந்திமாலாதான். “பஹார்” படத்தின் மகத்தான வெற்றியினால் வைஜயந்திமாலா வடநாட்டிலும் புகழ் பெற்றார். அந்தக் காலகட்டத்தில், நர்கீஸ், மதுபாலா, நளினி ஜெய்வந்த், சுரையா போன்றவர்கள், இந்திப்பட உலகின் முன்னணி கதாநாயகிகளாக விளங்கினர்.
அவர்களும் முப்பது வயதை நெருங்கிக் கொண்டிருந்தார்கள். எனவே, வைஜயந்திமாலாவை வட இந்திய ரசிகர்களும் விரும்பி வரவேற்றனர். ஏராளமான இந்திப் படங்களில் நடிக்கும் வாய்ப்பு வைஜயந்தியைத் தேடிவந்தன. இதன் காரணமாக, தமிழ்ப்படங்களை விட இந்திப் படங்களில் அதிகமாக வைஜயந்திமாலா நடிக்க நேரிட்டது.
வெகு விரைவிலேயே, இந்திப்பட உலக கதாநாயகிகளில் முதல் இடத்தைப் பெற்றார். தமிழ்நாட்டில் இருந்து வடநாட்டுக்குச் சென்று, வெற்றிக் கொடி நாட்டிய முதல் நடிகை வைஜயந்தி மாலாதான்.
ஜெமினியின் ‘மங்கம்மா சபதம்’ படத்தில் நடித்துப் புகழ்பெற்ற வசுந்தராதேவியின் மகள்தான் வைஜயந்திமாலா. தந்தை பெயர் எம்.டி. ராமன் சிறு வயதிலேயே வைஜயந்திமாலா வழுவூர் ராமையாப்பிள்ளையிடம் நடனம் கற்றார்.
1946ல் நடன அரங்கேற்றம் நடந்தது. தாயார் வசுந்தராதேவியைப் போல, சொந்தக் குரலில் பாடக் கூடியவர் வைஜயந்தி, ‘வாழ்க்கை’ படம் வெளிவருவதற்கு முன்பே இவர் பாடிய பாடல்கள் இசைத் தட்டுகளாக வெளி வந்த ஏவி. மெய்யப்பன் செட்டியார்.
காரைக்குடியில் ‘நாம் இருவர்”, “வேதாள உலகம்” ஆகிய படங்களைத் தயாரித்த பின், தன் ஸடுடியோவை சென்னை கோடம்பாக்கத்துக்குக் கொண்டு வந்தார்.
சென்னைக்கு வந்த பிறகு, ஏவி.எம். புரொடக்ஷ்ன்ஸ் தயாரித்த முதல் படம் ‘வாழ்க்கை’ வைஜயந்திமாலாவின் நடனத்தைப் பார்த்துவிட்டு, அவரை கதாநாயகியாக அறிமுகம் செய்தார். ஏவி.எம். இந்தப் படத்துக்குப் பிறகு வைஜயந்திமாலா இந்திப் பட உலகிற்கு சென்றுவிட்ட போதிலும், இடையிடையே தமிழ்ப்படங்களிலும் நடித்தார். இதில் கதாநாயகன் ஜெமினி கணேசன் மற்றும் அஞ்சலி தேவி, எஸ். பாலச்சந்தர் ஆகியோரும் நடித்தனர்.
‘வாழ்க்கை’ படத்தைப் போல ‘பெண்’ பெரிய மெகாஹிட் படம் அல்லவென்றாலும், இனிய பாடல்களும், நடனங்களும் நிறைந்த படம் இந்தப் படத்தில் வைஜயந்திமாலா சிறப்பாகவே நடித்திருந்தார். இதே படத்தை ‘லட்கி’ என்ற பெயரில் இந்தியிலும் ஏவி.எம். தயாரித்து வெளியிட்டது. தமிழ்ப் படத்தைவிட இந்திப் படம் வெற்றிகரமாக ஓடியது.

 

நடிகர் திலகம் பற்றி கவியரசு வைரமுத்து




உங்கள் “பராசக்தி” வெளிவந்து ஓராண்டுக்குப் பிறகுதான் நான் பிறக்கிறேன். நீங்கள் விருட்சமாய் வளர வளர நான் விதையாய் முளைத்திருக்கிறேன். உங்கள் படங்களைப் பார்க்கப் போனபோது மட்டுந்தான் கால் சட்டைப் பைகளில் நிரப்பிக் கொண்டு போன கடலைகளைத் தின்னாமல் திருப்பிக் கொண்டு வந்திருக்கிறேன்.
‘மனோகரா’ பார்த்துவிட்டு அந்த உணர்ச்சியில் சிறிதும் சிந்தாமல் அப்படியே வீட்டுக்கு வந்து சங்கிலிக்குப் பதிலாக தாம்புக் கயிற்றால் என்னைப் பிணைத்து இருவரை இழுத்துப் பிடித்துக் கொள்ளச் செய்துவிட்டு புளிய மரத்தைப் புருஷோத்தமனாக்கி என்னை வசனம் பேச வைத்தவர் நீங்களல்லவா...?
‘வீரபாண்டிய கட்டபொம்மன்’ பார்த்துவிட்டு சோளத்தட்டையில் வாள் செய்து என்னைச் சுழற்ற வைத்தவர் நீங்களல்லவா?
உலக சினிமா வரலாற்றில் இந்திய சினிமாவிற்கு முக்கிய பங்கிருக்கிறது.
இந்திய சினிமா வரலாற்றில் தமிழ் சினிமாவிற்கு முக்கிய பங்கிருக்கிறது.
தமிழ் சினிமாவில் நடிகர் திலகத்திற்கு அதி முக்கிய பங்கிருக்கிறது.
நீங்கள் நடித்ததால் பல தமிழ்ப் படங்கள் உலகத் தரம்பெற்றன!

 

M. G. இராமச்சந்திரனிடம் இருந்த இரு குறைகள்


அன்றொரு நாள் ஒப்பனை அறையில் ஆரூர் தாஸ் தனித்திருந்த வேளையில் எம்.ஜி.ஆர். அவரிடம் கூறியது. “பசி பட்டினியின் எல்லையையே பார்த்தவன் நான். அன்றாட வாழ்க்கைப் பிரச்சினைகளின் சிகரத்தைத் தொட்டிருக்கேன்.
இப்போ புகழின் உச்சியிலே இருக்கேன். வசதிக்குப் பஞ்சம் இல்லே. தினமும் என் வீட்டுல மூணு வேளையும் குறைஞ்சது 50-60 இலைங்க விழுது ஆனாலும், ரெண்டே ரெண்டு குறைகளை மட்டும் என்னிக்குமே என்னால போக்கிக்கவே முடியாது. ஒண்ணு: குழந்தைங்க வாரிசு இல்லாத குறை! இன்னொண்ணு...’
நான் இடைமறித்து, “ஏன், பெருந்தலைவர் காமராஜருக்குக் கூடத்தான் குழந்தைங்க வாரிசு இல்லே. அதனால் என்ன குறைஞ்சி போயிட்டாரு என்றேன்.
அப்படி இல்லே காமராஜருக்குக் கல்யாணமே ஆகாத காரணத்தால் குழந்தைங்க இல்லாம போயிடுச்சி; ஆனா, எனக்கு ரெண்டு, மூணு கல்யாணம் ஆகியும் ஒரு குழந்தை கூட பிறக்கலியே!
எந்த ஒரு புண்ணியவதியாவது என் வாரிசை அவ வயித்திலே பத்து மாசம் சுமந்து பொத்து என் கையிலே குழந்தையா கொடுக்க மாட்டாளா?
அப்படிங்கற அந்த நிரந்தரமான ஏக்கம் என் நெஞ்சை விட்டு எப்பவுமே நீங்க மாட்டேங்குது.
பெரிய, பெரிய ஜோசியரை எல்லாம் ரகசியமா வீட்டுக்கு வரவழைச்சி என் ஜாதகத்தைக் காட்டிக் கலந்து ஆலோசனை பண்ணுவேன், ஜோதிடர் கலையில. நிபுணர்களான ரெண்டு, முணு பேரு மட்டும் ஒத்து ஒரே கருத்தைச் சொன்னாங்க.
இது பலதார ஜாதகம்! ஒங்க வாழ்க்கையிலே பல பெண்கள் குறுக்கிடுவாங்க. அவுங்களுக்கு வேண்டியதை எல்லாம் நீங்க குடுப்பீங்க; ஆனா, அவுங்க யாரும் ஒங்களுக்கு வேண்டிய ஒரு குழந்தையைக் குடுக்க மாட்டாங்க; குடுக்கவும் முடியாது. குறை அவுங்ககிட்டே இல்லே’ன்னு சொன்னாங்க.
சமீபத்தில் ஆயுள் இன்சூரன்சுக்காக முக்கியமான ஒரு பெரிய மருத்துவர்கிட்டே உடல் பரிசோதனை பண்ணிக்கிட்டேன். அவர் உங்க மாதிரி என் அன்புக்கும், நம்பிக்கைக்கு உரியவர். இனிமே எனக்கு குழந்தை உண்டாகிறதுக்கு வாய்ப்பே இல்லேன்னு உறுதியா சொல்லிட்டாரு.
அதைக் கேட்டு நான் அப்படியே உடைஞ்சி நொறுங்கிப் போயிட்டேன். அன்னிக்கு ராத்திரி பூரா நான் தூங்கவே இல்லே. அழுது அழுது தலையணையே நனைஞ்சிடுச்சி.
என் அண்ணனுக்கு அத்தனைக் குழந்தைகளைக் கொடுத்த கடவுளுக்கு, எனக்கு ஒரு குழந்தை. ஒரே ஒரு குழந்தையைக் கூட குடுக்க மனசு வரலே பாத்தீங்களா?
எத்தனையோ சகோதரிகள், தாய்மார்கள் அவங்க பெத்தக் குழந்தைகளை என் கையில் கொடுத்து என்னைப் பேர் வைக்கச் சொல்லும் போது, உள்ளுக்குள்ளே என் நெஞ்சு பதறும் ஆனாலும், அதை வெளியில் காட்டிக்காம, அந்தக் குழந்தைகளுக்கு அப்பப்போ எனக்குத் தோணுற பேரை வச்சி, அவுங்க ஆசையை நிறைவேத்துறேன். போகட்டும்... நான் கொடுத்து வைச்சது அவ்வளவுதான்!
என்னோட ரெண்டாவது குறை என்னன்னா ஏதோ ஒரு அடிப்படைக் கல்வி அறிவு என்கிட்டே இருக்கு. அதுவும் நானா, ஆர்வத்திலே கத்து வளர்த்துக்கிட்டது. அதைத் தவிர பெரிசா ஒண்ணும் படிக்கத் தெரிஞ்சுக்கலே. இளமையிலே பட்ட வறுமை காரணமாக அந்த வாய்ப்பு, வசதி இல்லாமப் போயிடுச்சி.
அண்ணாதுரை, கிருபானந்த வாரியார் இவுங்களோட சொற்பொழிவைக் கேட்கும் போது, என்னால அவுங்களை மாதிரி பேச முடியலியேன்னு நினைச்சி வருத்தப்படுவேன்.
ஆனாலும், எப்படியோ பேசிச் சமாளிச்சி, மத்தவங்களை சந்தோஷப்படுத்திடுவேன். ஆயிரந்தான் இருந்தாலும் குறை, குறைதானே! அதுவும் பூர்த்தி செய்ய முடியாத குறை, அடுத்த பிறவின்னு ஒண்ணு இருந்தா அதுலயாவது நான் பெரிய புள்ளைக் குட்டிக்காரனாகவும், சிறந்த கல்விமானாகவும் இருக்கணும்!
நடிப்பிற்கு அப்பாற்பட்டு அவரது கண்கள் நீர் நிலைகளானதை நேரில் நான் கண்டது அதுவே முதல் முறை. இவ்வாறு ஆருர்தாஸ் கூறினார்.

Tuesday, April 10, 2012

 

நீச்சல் வீரர்  திலீப்பின் ‘ஒத்தவீடு’



பிரபல நீச்சல் வீரர் திலீப்குமார் இவர் ஆழ்கடலில் 15 கி. மீற்றர், 20 கி. மீற்றர் என நெடுந் தொலைவில் நீச்சல் அடித்து பாராட்டுப் பெற்றவர். திலீப்குமார் ‘ஒத்த வீடு’ என்ற படம் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகியுள்ளார்.
நாயகியாக ஜானவி மற்றும் வடிவுக்கரசி, எம். எஸ். பாஸ்கர், திரவியபாண்டியன், நெல்லை சிவா, இமான், சண்முகம், வந்தனா, யோகி தேவராஜ் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். பாலு மலர்வண்ணன் இப்படத்தை இயக்குகிறார். கதாநாயகனாக நடிப்பது பற்றி திலீப்குமார் கூறியதாவது :-
சினிமாவுக்கு தேவையான நடிப்பு, நடனம், ஸ்டண்ட் போன்றவற்றை மூன்று ஆண்டுகள் கற்றுக் கொண்டு ‘ஒத்த வீடு’ படம் மூலம் நாயகனாகியுள்ளேன். இயக்குனர் பாலுமலர் வண்ணன் கதை சொன்னதும் பிடித்தது. சிறு பிரச்சினை வாழ்க்கையை எப்படியெல்லாம் பந்தாடுகிறது கனவுகளை சிதைக்கிறது என்று கருவில் அற்புதமான சென்டிமென்ட் கதையாக வந்துள்ளது.
கொமெடி, ஸ்டன்ட், காதல் எல்லாம் இருக்கும். கேரள அரசிடம் சிறந்த இசையமைப்பாளருக்கான விருது பெற்ற வீ. தஷி இசையில் ஆறு பாடல்கள் இடம்பெற்றுள்ளன.
வீரனார் பாடல் பட்டி தொட்டியெங்கும் பேசப்படும். வில்லிவலம் கிராமத்தில் விநாயகர் கோவிலில் கரகம் எடுத்து படமாக்கினோம் பெண்கள் மா விளக்கு எடுத்து ஊர்வலம் வந்தனர். வீரனார் ஆட்டத்தை பலரும் பாராட்டினர். ஒத்தவீடு ஓட்டு வீடு என்ற பாடலை நூறு துணை நடிகர்கள் வைத்து படமாக்கினோம் உலகமோ உள்ளங்கையிலே கண்ணோடு வந்தாய் போன்ற பாடல்களையும் பிரமாதமாக படமாக்கியுள்ளோம். படப்பிடிப்பு முடிந்து விரைவில் ரிலீசாக உள்ளது.

த்ரிஷாவுக்கு பதிலாக அனுஷ்கா


கிட்டத்தட்ட 3 வருடமாக டூத் பேஸ்ட் ஒன்றின் விளம்பர தூதராக இருந்து வந்த த்ரிஷாவை நீக்கிவிட்டு, அந்த இடத்தில் அனுஷ்காவை சேர்த்திருக்கிறது டூத் பேஸ்ட் நிறுவனம்.
தமிழ், தெலுங்கில் நம்பர் - 1 நடிகையாக இருந்தவர் நடிகை த்ரிஷா, இப்போது அனுஷ்கா, ஹன்சிகா, டாப்சி போன்ற நடிகைகளின் வரவால் அந்த இடத்தில் இருந்து பின்னோக்கிவிட்டார். இப்போது அனுஷ்கா இரண்டு மொழியிலும் நம்பர் 1 நடிகையாக வந்து கொண்டு இருக்கிறார்.
இந்நிலையில் நடிகைகள் அனுஷ்கா, த்ரிஷா இடையே விளம்பர படத்தில் நடிக்க கடும் போட்டி நிலவி வருகிறது. த்ரிஷா நம்பர் 1 நடிகையாக இருந்த வரைக்கும் பிரபல டூத் பேஸ்ட் விளம்பரத்தில் தூதராக கிட்டத்தட்ட 3 ஆண்டுகள் நீடித்து வந்தார். இந்நிலையில் அவர் நீக்கப்பட்டு, அந்த இடத்திற்கு அனுஷ்கா ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார்.
தமிழ், தெலுங்கில் நம்பர் 1 நடிகையாக அனுஷ்கா இருப்பதால், அவர் இந்த விளம்பரத்தில் நடித்தால் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் விளம்பரத்தை வெளியிடலாம் என்று அந்த விளம்பர நிறுவனம் கருதுகிறது.

சினேகாவின் இடத்திற்கு ஷிகா

தற்போது திரைக் கு
வந் திருக்கும் ‘விண் மீன்கள்’ படத்தின் கதாநாயகி ஷிகா முறைப்படி பரத நாட்டியம் கற்று அரங்கேற்றமும் நடத்தியவர். மனிதவள மேம்பாட்டில் முதுகலை பட்டமும் பெற்றிருக்கும் பெங்களூர் அழகியான ஷிகா தனது அனுபவங்களைப் பகிர்ந்து கொள்கிறார். திரைப்படத் துறையில் தங்களது அறிமுகம்...?
இயக்குனர் யோக் ராஜ் இயக்கத்தில் உருவான காலிபட்டா என்னும் கன்னட படத்தில் நான் கதாநாயகியாக அறிமுகமானேன். அந்தப் படம் மிகப் பெரிய வெற்றி பெற்றதுடன் அதில் வரும் ‘நதீம் தீம் தானா’ என்கிற பாடலும் மிகவும் பிரபலமடைந்தது. அதே பாடலில் நான் ஆடிய நடனம் ரசிகர்கள் மத்தியில் எனக்கு நல்ல பெயர் வாங்கித் தந்தது..... தொடர்ந்து வாரேவா, மயதானத் மலே, காகன சுக்கி ஆகிய கன்னடப் படங்களில் நடித்தேன்.
தமிழுக்கு எப்படி வந்தீர்கள்...?
இயக்குனர் மதுமிதாவின் கொலகொலயா முந்திரிக்காவில் படத்தில் நான் அறிமுகமானேன். அதன் பிறகு இன்று விண்மீன்களில் ஒரு அழுத்தமான கதாபாத்திரத்தில் தமிழ் ரசிகர்களை மீண்டும் சந்திப்பதில் மகிழ்ச்சி.
விண் மீன்களில் அம்மாவாக நடித்திருக்கிaர்களே...? ஆம், அந்தப் படத்தின் கதையை இயக்குனர் விக்னேஷ் மேனன் என்னிடம் சொல்லியபோது எனது கதாபாத்திரத்தின் முக்கியத்துவம் உணர்ந்து நான் நடிக்க ஒத்துக்கொண்டேன். நல்ல ஆரோக்கியமான குழந்தைகளையே குப்பைத் தொட்டியில் வீசிவிடும் சமூகத்தில் மாற்றுத் திறனாளி குழந்தைகளை அதன் பெற்றோர் எவ்வளவு சிரத்தை எடுத்துப் பராமரிக்கின்றனர்.
அப்படிப் பட்ட ஒரு அம்மாவாக நான் நடித்ததில் எனக்குப் பெருமையே.
தமிழுக்கு வருவதற்கு முன் தமிழ் தெரியுமா...?
இல்லை... சுத்தமாகத் தெரியாது... கொல... கொலயா முந்திரிக்காவில் ஒப்பந்தமானவுடனே நானாகவே தமிழ் கற்கத் தொடங்கினேன்... வசனங்களைப் புரிந்து சரியான முகபாவனைகள் வெளிப்படுத்தத் தேவையான அளவிற்குத் தமிழைக் கற்றுக்கொண்டேன்.... தமிழ் ஒரு அற்புதமான மொழி. இன்னும் கற்றுக் கொண்டி ருக்கிறேன்....
தற்பொழுது நடித்துக் கொண்டிருக்கும் படங்களைப் பற்றி...?
ஏ. எம். ஆர். இயக்கத்தில் தமிழ், கன்னடம் ஆகிய இரு மொழிகளிலும் தயாராகும் வனயுத்தம் படத்தில் சந்தனக் கடத்தல் மன்னன் வீரப்பனின் நண்பனான குருநாத்தின் காதலி சாந்தினியாக நடிக்கிறேன்.... அது ஒரு காட்டுவாசிப் பெண் வேடம்... முழுக்க முழுக்க காடுகளில் படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கிறது... மேக் அப் இன்றி காடு மலை என்று மிகவும் சிரத்தையெடுத்து நடிக்கிறேன்.
துப்பாக்கியையும் தூக்கிக் கொண்டே நடக்க வேண்டும்..... நிச்சயம் இந்தப் படம் எனக்கு மேலும் நல்ல பெயரை வாங்கித் தரும்... படம் பார்த்துக் கதை சொல் என்னும் படத்தில் கன்னியாகுமரிக்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு போட்டோ எடுத்துக் கொடுக்கும் போட்டோகிராப்பர் வேடம் ஏற்று நடிக்கிறேன்... முதல் கட்டப் படப்பிடிப்பு கன்னியாகுமரியில் நடந்தது.... எனக்கோ கெமராவைச் சரியாகப் பிடிக்கவே தெரியாது. அந்தப் படத்தின் கெமரா மேன்தான் எனக்குச் சொல்லிக் கொடுத்து நடிக்க வைத்தார். தருண் சத்ரியாவின் காதலியாக நடிக்கும் படம் பார்த்துக் கதை சொல் ஒரு எக்ஷன் படம்....
எந்தமாதிரி கதாபாத்திரங்களில் நடிக்க ஆசை?
எனது கதாபாத்திரத்திற்கும் முக்கியத்துவம் கொடுக்கும் எந்தவிதமான வேடங்களையும் ஏற்று நடிக்கத் தயாராக இருக்கிறேன்...
விண் மீன்களில் புடவை கட்டி வந்த நீங்கள் சினேகா போல இருப்பதாகச் சொல்கிறார்கள். அவருக்கு விரைவில் திருமணம் நடைபெறவுள்ள நிலையில் நீங்கள் அவரது இடத்தைப் பிடிப்பீர்களா...?
நான் அடிப்படையில் சுஹாசினி, ரேவதியின் மிகப்பெரிய ரசிகை. சினேகாவின் ஒரு சில படங்களைப் பார்த்திருக்கிறேன். என்னிடமும் பலர் சினேகாவைப் போல இருப்பதாகச் சொல்கிறார்கள். அதில் எனக்குப் பெருமை... எனக்கு மிகவும் மரியாதை கிடைக்காததைப் போல் உணர்கிறேன்... அதேசமயம் அவரது இடத்தைப் பிடிப்பேன் என்றெல்லாம் சொல்ல முடியாது.
தங்களது அழகின் ரகசியம்...?
சிந்தனையைத் தெளிவாக வைத்துக் கொள்வதற்கு நல்ல புத்தகங்கள் படிப்பேன். எல்லா நல்ல படங்களையும் விடாமல் பார்த்துவிடுவேன்... மற்றபடி எனது நடனப் பயிற்சியும், நீச்சல் பயிற்சியும் என்னை அழகான உடம்புக்குச் சொந்தக்காரியாக மாற்றியுள்ளது.

அவனுக்கென்ன தூங்கிவிட்டான் பெரிய இடத்துப் பெண்


நல்லி குப்புசாமி செட்டியார் எம்.எஸ்.வி.க்கு ஏதோ விருது கொடுக்கும் நிகழ்ச்சியில் ஒரு படம் பற்றி சொல்லி இருக்கிறார். இரவெல்லாம் ரெகார்டிங் முடித்துவிட்டு எம்.எஸ்.வி. களைத்துப் போய் தூங்கிவிட்டாராம்.
ஆனால் அவருக்கு காலை ஏழு மணிக்கு கண்ணதாசனோடு அடுத்த ரெகார்டிங் இருந்திருக்கிறது. எம்.எஸ்.வி. எழுந்து அவசர அவசரமாக ஸ்டுடியோவுக்கு போய்ச் சேரும் போது ஒன்பது மணி ஆகிவிட்டதாம்.
கண்ணதாசன் ஒரு பேப்பரில் இந்தப் பாட்டை எழுதி வைத்துவிட்டுப் போய்விட்டாரம். அவனுக்கென்ன தூங்கிவிட்டான் அகப்பட்டவன் நான் அல்லவா?

என்னை யாரென்று எண்ணி எண்ணி நீ பார்க்கிறாய்....  கடவுளைப் பற்றி எழுதிய பாடல்



காதலித்து மணந்த முதல் மனைவியை விபத்தில் பறிகொடுத்து விட்டு (சந்தர்ப்ப சூழ்நிலையால் அவள் இறந்து விட்டதாக நினைத்து) பற்றற்ற வாழ்க்கை வாழும் ஒரு புற்றுநோய் டொக்டர் தன்னை வளர்த்து ஆளாக்கியவர்களுக்கு செலுத்தும் நன்றிக்கடனாக (விருப்பமில்லாமல்) செய்துகொண்ட இரண்டாவது திருமணத்தில் மனம் ஈடுபடாத வாழ்க்கை, அவளோடு ஏற்பட்ட வாக்குவாதத்தால் விபத்து நேர்ந்து கண்களையும் இழந்து தவிக்க, சந்தர்ப்பவசமாக முதல் மனைவியே அவருக்கு நேர்ஸாக வர, இரண்டாவது மனைவியோடு தன் கணவர் விரும்பாத வாழ்க்கை வாழ்வது அறிந்து, அவரை அவள் பால் திருப்ப எடுக்கும் முயற்சியின் ஒரு கட்டமாக, உடல் நலமில்லாத அவரை வோக்கிங் அழைத்துப் போகும் போது, அவர் மனம் மாற்றம் ஏற்பட பாட, அதற்கு மறுப்பு தெரிவித்து கணவர் பாடும் பாடல்.
இதுதான் சிட்டுவேஷன். இதற்கு பாடல் எழுதுங்கள்’ – இயக்குநர் பீம்சிங் ஒரே மூச்சில் சொல்லி முடித்தார். பல்லவிக்காக மெல்லிசை மன்னரும் மூன்று ட்யூன்கள் போட்டு காண்பித்தார்.
அதில் ஒன்று பிடித்துப் போக, பல்லவிக்காக வரிகளை யோசித்துக் கொண்டிருந்த கண்ணதாசன், தன் உதவியாளர் பஞ்சு அருணாசலத்திடம் “டேய் பஞ்சு, காரில் என் ஃபைல் இருக்குல்ல? அதை எடுத்துவிட்டு வா” என்றார்.
பஞ்சுவும் ஃபைலுடன் வந்தார். அதைப் புரட்டி, ஒரு தாளை எடுத்த கவிஞர், “இந்த வரிகளைப் பாருங்கள், கண்ணனைப் பற்றி நான் எழுதிய பாடல். இதில் ‘அவன்’ என்பதை அவள் என்று மாற்றிப் பாருங்கள் விசு போட்ட சந்தத்துக்கும் நீங்க சொன்ன சிட்டுவேஷனுக்கும் பொருந்தும் என நினைக்கிறேன்” என்றார். பீம்சிங் பாடலை வாங்கிப் பார்த்தார். பாடல் இப்படி இருந்தது.
என்னை யாரென்று எண்ணி எண்ணி நீ பார்க்கிறாய்
இது யார் பாடும் பாடல் என்று நீ கேட்கிறாய்
நான் ‘அவன்’ பேரை தினம் பாடும் குயிலல்லவா
என் பாடல் ‘அவன்’ தந்த மொழியல்லவா
இதில் ‘அவன் என்று வந்த இடங்களை ‘அவள்’ என்று மாற்றி விஸ்வநாதன், தன் மெட்டோடு பாட, வாவ்!
கனகச்சிதமாக பொருந்தியது. எல்லோரும் ஆச்சரியத்தில் உறைந்து போனார்கள். மெல்லிசை மன்னர் துள்ளி குதித்தார். ‘எப்படி கவிஞரய்யா இது...?’ என்று.
சொற்களை மாற்றிய பின் பாடலின் தன்மை அப்படியே மாறிப்போனது. கடவுளைப் பற்றி கவிஞர் எழுதிய பாடல், இரண்டாவது மனைவியோடு சேர்ந்து வாழும்படி நேர்சாக வந்த முதல் மனைவி அட்வைஸ் செய்ய, அவர் அதை மறுப்பதாக அமைந்தது.
என்னை யாரென்றும் எண்ணி எண்ணி நீ பார்க்கிறாய்.
இது யார் பாடும் பாடல் என்று நீ கேட்கிறாய்
நான் ‘அவள்’ பேரை தினம் பாடும் குயிலல்லவா
என்பாடல் ‘அவள்’ தந்த மொழியல்லவா
படம் - பாலும் பழமும்

குரல் வளத்துக்கு குறியாகிய குண்டு எம்.ஜி. ஆரை, எம்.ஆர். ராதா சுடக் காரணம்


எம். ஆர் ராதாவால் சுடப்பட்ட எம்.ஜி.ஆர். யமனுடன் போராடி வெற்றி பெற்றார். எம்.ஜி.ஆரை எம்.ஆர்.ராதா துப்பாக்கியால் சுட்ட சம்பவம், சென்னை ராமாவரம் தோட்டத்தில் உள்ள எம்.ஜி.ஆர். வீட்டில் 1967 ஜனவரி 12ம் திகதி நடந்தது.
அன்று மாலை 5 மணிக்கு ராதாவரம் தோட்டத்தில் உள்ள எம்.ஜி.ஆர். வீட்டுக்கு எம்.ஆர்.ராதா சென்றார். ‘பெற்றால்தான் பிள்ளையா’ படத்தைத் தயாரித்த பட அதிபர் வாசுவும் உடன் சென்றார்.
பெற்றால்தான் பிள்ளையா’ படத்தை தயாரிப்பதற்கு எம்.ஆர்.ராதா ஒரு லட்சம் ரூபா பண உதவி செய்திருந்தார். படம் முடிந்ததும் அந்தப் பணத்தை வாங்கித் தருவதாக எம்.ஜி.ஆர். கூறியிருந்ததாகவும், அது சம்பந்தமாகப் பேசவே வாசுவுடன் எம்.ஆர்.ராதா அங்கு சென்றதாகவும் கூறப்பட்டது.
எம்.ஜி.ஆரை, ராதாவும், வாசுவும் சந்தித்தார்கள். அப்போது தகராறு ஏற்பட்டது. எம்.ஆர்.ராதா தன் மடியில் வைத்திருந்த கைத்துப்பாக்கியை எடுத்து, எம்.ஜி.ஆரை சுட்டார். எம்.ஜி.ஆர். குனிந்தார். குண்டு இடது புற காது அருகே கன்னத்தில் பாய்ந்தது. உடனே ராதா துப்பாக்கியைத் தன் தலையில் வைத்து விசையை அழுத்தினார். குண்டு அவர் நெற்றியில் பாய்ந்தது என்று பொலிஸார் தெரிவித்தனர். சுடப்பட்ட எம்.ஜி.ஆர். ராப்பேட்டை ஆஸ்பத்திரிக்குக் கொண்டு போகப்பட்டார். முதல் சிகிச்சைக்குப் பிறகு, சென்னை ஜெனரல் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.
எம்.ஆர்.ராதாவும் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அவர் நெற்றியில் பாய்ந்த குண்டு அகற்றப்பட்டது. ஆனால் எம்.ஜி.ஆர். கழுத்தில் பாய்ந்த குண்டு, மூன்று முக்கிய நரம்புகளுக்கு இடையே பதிந்திருந்தது. அதை அகற்றினால் நரம்புகளுக்குச் சேதம் ஏற்பட்டு உயிருக்கே ஆபத்து ஏற்படலாம் என்ற நிலை.
நெப்போலியன் உடலில் பாய்ந்த குண்டை வெளியே எடுக்க முடியாமல் அப்படியே வைத்துத் தையல் போட்டதாக வரலாறு உண்டு. நாளடைவில் அந்த உலோகம் கரைந்து, சதையோடு சேர்ந்துவிடும். எனவே மருத்துவர்கள் இந்த குண்டை அப்படியே விட்டு விட்டுத் தையல் போட்டனர்.
பொதுத் தேர்தல் அறிவிக்கப்பட்டு. பரங்கிமலைத் தொகுதியில் தி.மு.க. வேட்பாளராக எம்.ஜி.ஆர். போட்டியிட்ட நேரத்தில்தான் அவர் சுடப்பட்டார் தேர்தல் பிரசாரத்திற்குப் போகாமலேயே ஆஸ்பத்திரியில் படுத்தபடி அவர் வெற்றி பெற்றார். சிகிச்சைக்குப் பின், எம்.ஜி.ஆரும், எம்.ஆர்.ராதாவும் குணம் அடைந்தார்கள். எம்.ஜி.ஆரை சுட்டதாக ராதா மீது சைதாப்பேட்டை நீதிமன்றில் வழக்கு நடந்தது.
இந்த வழக்கில் 1967 மே மாதம் 22ம் திகதி எம்.ஜி.ஆர். நீதிமன்றத்துக்கு வந்து சாட்சியம் அளித்தார். வழக்கில் ராதாவுக்கு 7 ஆண்டு கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது. உச்ச நீதிமன்றத்தால் இது 5 ஆண்டு கடுங்காவல் தண்டனையாகக் குறைக்கப்பட்டது.
எம்.ஜி.ஆருக்கு அடிக்கடி தும்மல் வரும். ஒரு நாள் தும்மியபோது கழுத்தில் நரம்புகளுக்கு இடையே பதுங்கியிருந்த குண்டு மெல்ல நகர்ந்து, தொண்டைக்கு வந்துவிட்டது. தொண்டையின் மெல்லிய ஜவ்வுக்குள் குண்டு இருந்தது நன்றாகத் தெரிந்தது. உடனே எம்.ஜி.ஆர். ஆஸ்பத்திரிக்குக் கொண்டு போகப்பட்டார். சத்திரசிகிச்சை மூலம் குண்டு அகற்றப்பட்டது. குண்டு வெளியேறிய பின், எம்.ஜி.ஆரின் குரல் வளம் பாதிக்கப்பட்டது. மெல்லிய குரலில் பேசினார்.

3 வயதில் நடிக்க வந்தவர் ஸ்ரீவித்யா




ஸ்ரீ வித்யாவை நினைக்கும் போதே ‘அதிசய ராகம், அபூர்வ ராகம்’ என்ற பாடலும் அதில் அவரின் பேரெழிலும் நடிப்பாற்றலும் நம் கண்முன் தோன்றும். அந்தச் சிறப்புமிகு நடிகை இன்று இல்லை. புற்று நோய் முற்றியதால் அவர் அக். 19 அன்று மறைந்தார். மறையும் போது அவருக்கு வயது 53.
தன்னுடைய 13வது வயதில் ‘திருவருட்செல்வர்’ படத்தின் மூலம் தமிழ் திரையுலகுக்கு அறிமுகமானவர் ஸ்ரீவித்யா நடிகர் திலகம் சிவாஜி கணேசன், கமல், ரஜினி, விஜயகாந்த், சரத்குமார், பிரபு, விஜய், அஜித் உள்ளிட்ட பல நடிகர்களுடன் சுமார் 900க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.
‘சட்டம்பிக்காவல்’ என்ற படத்தின் மூலம் மலையாளத் திரையுலகுக்கு அறிமுகமான இவர், மலையாளத்தில் மட்டும் 200 படங்களில் நடித்துள்ளார். ‘இமயம்’, ‘அபூர்வ ராகங்கள்’, ‘புன்னகை மன்னன்’, ‘அபூர்வ சகோதரர்கள்’, ‘காதலுக்கு மரியாதை’, ‘தளபதி’, ‘நம்மவர்’ உள்ளிட்ட ஏராளமான வெற்றிப் படங்களில் நடித்துள்ளார்.
இவரின் தந்தை அகடம் கிருஷ்ணமூர்த்தி தாயார், புகழ்பெற்ற கர்நாடக இசைப் பாடகி எம்.எல். வசந்தகுமாரி, கணவர், மலையாளத் திரைப்படத் தயாரிப்பாளர் ஜோர்ஜ், ஸ்ரீவித்யா கருத்து வேறுபாடு காரணமாக கணவரைப் பிரிந்து தனியாக வாழ்ந்து வந்தார்.
இறப்பதற்கு சில ஆண்டுகளுக்கு முன்பு அவரைப் புற்று நோய் தாக்கியது. ஆயினும் அவர் இடையிடையே தொலைக்காட்சித் தொடர் ஒன்றில் நடித்துவந்தார்.
பிறகு அந்தத் தொடரிலிருந்து பாதியிலேயே விலகிக் கொண்டார் நடிகை ஸ்ரீவித்யா. உடல் நலக் குறைவு காரணமாக திருவனந்தபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவர் புற்று நோய்க்காக நீண்ட காலம் மருத்துவ சிகிச்சை (கீமோதெரபி) எடுத்துவந்தார். அக். 19 அன்று மாலை ஏற்பட்ட திடீர் மாரடைப்பால் சிகிச்சை பலனின்றி அவர் மரணமடைந்தார்.

சிரமப்பட்டு சினிமாவுக்கு வந்தவர் சினேகா




எ ந்த ஒரு சினிமா பின்னணியும் இல்லாமல் ரொம்ப சிரமப்பட்டு சினிமாவிற்கு வந்தவர் சினேகா என்று சினேகாவின் அம்மா பத்மாவதி முதன் முறையாக மனம் திறந்து பேட்டியளித்துள்ளார். கல்யாண பத்திரிகை கொடுக்க பட்டுப்புடவை எடுக்க நகை வாங்க என்று கல்யாண வேலைகளில் ரொம்பவே பிஸியாக இருக்கும் சினேகா அம்மா பத்மாவதி முதன்முறையாக சினேகாவை பற்றியும், அவரது கல்யாண ஏற்பாடுகள் குறித்தும் நம்மோடு பகிர்ந்து கொண்டுள்ளார்.
இதோ.... சினேகா சினிமாவிற்கு வந்து கிட்டத்தட்ட 12 வருஷம் ஆச்சு. விரும்புகிறேன் படம் மூலமாக தமிழ் சினிமாவிற்கு வந்த சினேகா, தொடர்ந்து நிற்க கூட நேரம் இல்லாமல் பல படங்களில் நடித்து வந்தார். வீட்டில் அவள் தான் கடைக்குட்டி ரொம்ப செல்லமா வளர்த்தோம். இன்னும் சொல்லப் போனால் சினிமாவில் அவர் படாத கஷ்டமே இல்லை.
அவ்வளவு பிரச்சினையையும் அவள் சந்தித்த போது, அவளை தூக்கி விட ஆள் இல்லை. சினேகா என்றதால் எல்லாவற்றையும் சமாளித்து எல்லாவற்றையும் கடந்து பல வெற்றிப் படங்களில் நடித்து மக்கள்கிட்ட நல்ல பெயர் எடுத்து ஒரு நிலையான இடத்தைப் பிடித்தார். ஆட்டோகிராப் படத்தில் ஒவ்வொரு பூக்களுமே என்ற பாட்டில் வர்ற கஷ்டம் மாதிரியே சினேகாவின் வாழ்க்கை இருந்தது. அவ்வளவு கஷ்டத்தையும் கடந்து அவளுக்கு ஒரு நல்ல இடத்தை கொடுத்திருக்கிறார் கடவுள்.
மே மாதம் சினேகா பிரசன்னா திருமணம் நடக்க இருக்கிறது. திருமணம் நெருங்க, நெருங்க எல்லோருக்கும் ஏற்படுகிற திருமண பதட்டம் எனக்கும் ஏற்பட்டு இருக்கு. வீட்டில் இருக்கும்போது சினேகா என் ரூம்க்கு வந்து ஒரு நாளைக்கு 4 முறையாவது ஐ லவ் யு மம்மி என்று சொல்லுவாள். சினேகாவிற்கு இப்ப வரைக்கும் நான் தான் சாப்பாடு தரணும். அவ்வளவு செல்லமா வளர்த்துவிட்டோம்.
சமீபத்தில் தாம்பூலம் மாற்ற பிரசன்னா வீட்டிற்கு சென்றோம். அங்கு பிரசன்னா அம்மா அப்பா சொல்ற விஷயத்தை அப்படியே சினேகா கேட்டார். மேலும் நீங்கள் எந்த விஷேசம் என்றாலும் சொல்லுங்க நானும் கலந்து கொள்கிறேன். விரதம் எல்லாம் இருப்பேன் என்று சினேகா சொன்னார்.
பிரசன்னா குடும்பத்தாரின் அனைத்து கண்டிஷன்களுக்கும் சினேகா ஒப்புக்கொண்டார். திருமணத்திற்கு பிறகு சினேகா பிரசன்னா இருவரையும் தனிக்குடித்தனம் வைக்க இரு வீட்டாரும் முடிவு செய்துள்ளோம். இதற்காக அடையாறில் ஒரு வீடு பார்த்துள்ளோம்.
சினேகாவுக்கு இதுவரைக்கும் சமைக்கத் தெரியாது. இப்பத்தான் என் கூட சமையல் அறையில் கொஞ்சம் கொஞ்சமாக கற்று கொண்டு வருகிறாள். கல்யாணத்திற்கு சென்னையில் பல கடைகளில் பட்டுபுடவை வாங்கிட்டோம்.
அப்புறம் ஐதரபாத், மும்பையில் கொஞ்சம் டிரஸ் வாங்கியிருக்கோம். மேலும் மெகந்தி விழாவுக்காக சினேகா விரும்பி ஒரு தங்க அணிகலன் கேட்டார். அதனால் அவருக்காக அதை ஸ்பெஷலாக வாங்கியிருக்கோம். இரண்டு பேரும் குடும்பமும் வேறு வேறு பிரிவினர் என்பதால் இரண்டு பேர் குடும்பம் சார்பிலும் திருமணம் நடத்த உள்ளோம்.
சினேகா 2 முதல்வரிடமும் விருது வாங்கியிருக்கிறார். இதுதவிர நந்தி, கலைமாமணி உள்ளிட்ட பல விருதுகளும் பெற்றுள்ளார். இப்போது சினேகா, ஹரிதாஸ் என்ற படத்தில் நடிக்கிறார். இதில் மனநிலை பாதிக்கப்பட்ட குழந்தைக்கு டீச்சராக நடிக்கிறார். இந்தப் படத்திற்கும் அவருக்கு விருது கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறோம். மேலும் சினேகாவை சினிமாவில் நடிக்காதே என்று பிரசன்னா எதுவும் சொல்லவில்லை.
அது அவருடைய விருப்பம் என்று கூறிவிட்டார்.
இதனால் சினிமாவில் தொடர்ந்து நடிப்பதா, வேண்டாமா என்பது குறித்து சினேகா இன்னும் முடிவு செய்யவில்லை.
எங்க வீட்டு கடைசி பெண்ணின் கல்யாணம் அதனால் அவளுடைய வாழ்க்கை நல்லபடியாக அமைய, சந்தோஷமாக இருக்க எல்லோரும் வேண்டுங்க என்று பணிவோடு கேட்டுக் கொண்டு தனது பேட்டியை முடித்தார் பத்மாவதி.

காதல் சரண்யா பெயர் மாற்றம்


நிர்வாணக் காட்சி செய்தியின் மூலம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் நடிகை காதல் சரண்யா தனது பெயரை சரண்யா நாக் என்று மாற்றியிருக்கிறார். மழைக் காலம் படத்தில் ஓவியக் கல்லூரி மாணவியாக நடித்திருக்கும் சரண்யா, ஒரு காட்சியில் நிர்வாணமாக நடித்துள்ளார்.
இந்த நிர்வாண காட்சியை அறிமுக டைரக்டர் தீபன் ஆபாசம் இல்லாமல் படமாக்கியிருப்பதால் படத்திற்கு யு சான்றிதழ் வழங்கப்பட்டிருக்கிறது.
விரைவில் ரிலீஸ் ஆகவிருக்கும் மழைக்காலம் படம் மூலம் தனது பெயரை சரண்யா மாற்றியிருக்கிறார். இதுபற்றி சரண்யா கூறுகையில், இது எனக்கு முக்கியமான படம். இந்தப் படத்தில் இருந்து ‘காதல் சரண்யா’ என்ற பெயரை, ‘சரண்யா நாக்’ என்று மாற்றிக் கொண்டேன் ‘நாக்’ என்பது என் குடும்ப பெயர் என்றார்.



வித்தியா பாலன் அளவுக்கு நான் தயாராகவில்லை

அசின்

lர்ட்டி பிக்சர்ஸ் படத்தில் நடித்த நடிகை வித்யா பாலன் அளவுக்கு நான் தயாராகவில்லை என்று நடிகை அசின் கூறியுள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நாயகியாக வலம் வந்து கொண்டிருந்த நடிகை அசின், இந்தி கஜினி மூலம் பொலிவுட் திரையுலகிற்கு சென்றார். அடுத்தடுத்த பட வாய்ப்புகள் கிடைத்தும் பெரிதாக அசினால் அங்கு பளிச்சிட முடியவில்லை.
தமிழ் சினிமாவில் நடிக்கும் எண்ணம் இல்லை என்று கூறி வந்த அசின், காவலன் படம் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு தரிசனம் கொடுத்தார். பின்னர் மீண்டும் பொலிவுட்டில் வாய்ப்பு வேட்டைகளில் பிஸியாகி விட்டார். தற்போது பொலிவுட்டில் அபிஷேக் பச்சன் மற்றும் அஜய்தேவ்கன்னுடன் நடித்து வரும் அசின் தமிழ் படங்களில் தலைகாட்டுவதே இல்லை.
இது குறித்து அவர் அளித்துள்ள பேட்டியில் பொலிவுட் படங்களிலேயே நான் கவனம் செலுத்திக் கொண்டிருப்பதாக வரும் தகவல்கள் உண்மையானது அல்ல. தென்னிந்திய அளவில் நான் ஒரு பிரபலமான நடிகை என்றாலும், பொலிவுட்டைப் பொறுத்த வரையில் நான் இன்னும் புதுமுக நடிகைதான். தென்னிந்திய படங்களில் நடிக்க மாட்டேன் என்று சொல்லவில்லை. நல்ல ஸ்கிரப்டை தேடிக்கொண்டிருக்கிறேன். நல்ல ஸ்கிரிப்ட் அமைந்தால் கண்டிப்பாக தமிழில் நடிப்பேன்.
சினிமாவில் யாரும் யாருக்கும் போட்டியாளர்கள் இல்லை. இங்கே அனைவரும் தங்களது திறமையான நடிப்பால் தங்களை அடையாளப்படுத்திக் கொள்வது மட்டுமின்றி நிலைநிறுத்திக் கொள்கிறார்கள் என்று கூறியுள்ளார்.
டர்ட்டி பிக்சர் படத்தில் வித்யா பாலன் நடித்தது போல் நீங்களும் நடிப்பீர்களா? என்ற கேள்விக்கு பதில் அளித்திருக்கும் அசின், டர்ட்டி பிக்சரில் வித்யா பாலன் நடித்ததைப்போல் என்னால் நடிக்க முடியாது. நான் இன்னும் அதுபோன்ற கேரக்டர்களில் நடிக்கும் அளவிற்கு தயாராகவில்லை என்று சொன்னார்.

கண்ணதாசனை குடிகாரன் என்று திட்டியதால் வந்த பாடல்

சொன்னது நீ தானா.... சொல் சொல்...








கவிஞர் கண்ணதாசனின் வருகைக்காக மொத்த ஆட்களும் காத்திருந்தார்கள். எம்.எஸ்.வி. கடிகாரத்தை அடிக்கடி பார்த்துக்கொண்டிருந்தார். இதைக் கவனித்த சித்ராலயா கோபு “என்னண்ணே ரொம்ப ரெஸ்ட்லெஸ் ஆக இருக்கீங்க” என்று கேட்டார். அதற்கு விஸ்வநாதன் “இந்தப் பாட்டை கம்போஸ் பண்ணிட்டு வேலுமணி சாரோட பணத்தோட்டம் பட ரீ ரிக்கார்டிங்குக்குப் போகணும்.
இந்த ஆளை (கண்ணதாசனை) இன்னும் காணோமே” என்று புலம்பிக்கொண்டிருக்க ஸ்ரீதரோ இந்தப் பாடலை நீங்க கம்போஸ் பண்ணிக் கொடுத்துட்டுத்தான் வேறு இடத்துக்குப் போகணும் என்று கண்டிப்பாக சொல்லி விட்டார். இடையிடையே சரவணா ஃபிலிம்ஸி லிருந்து ஃபோன் வந்த வண்ணம் இருந்தது.
ஒரு கட்டத்தில் பொறுமையி ழந்து விட்ட விஸ்வநாதன் “என் னய்யா இந்த குடிகாரரோடு இதே வேலையா போச்சு. சொன்ன நேரத்துக்கு வந்து தொலைய மாட்டேங்கிறார்” என்று கத்தி விட்டார் (சாதாரணமாக இப்படி மரியாதையி ல்லாமல் கண்ணதாசனைப் பற்றிப் பேசமாட்டார். ஆனால் வேறு கம்பெனியில் இருந்து அடிக்கடி வந்த போன் அவரை பொறுமையிழக்கச் செய்துவிட்டது).
கண்ணதாசனும் வந்தார். ஸ்ரீதரும் சிட்டு வேஷனைச் சொன்னார். ஆஸ்பத்திரியில் புற்று நோய் காரணமாக அனுமதிக்கப்பட்டிருக்கும் கணவன், தான் எப்படியும் இறந்துவிடுவோம் என்பதையும், அந்த ஆஸ்பத்திரி டாக்டர் தன் மனைவியின் முன்னாள் காதலன் என்பதையும் அறிந்து, தான் இறந்துவிட்டால் அந்த டொக்டரை தன் மனைவி மணந்து கொள்ள சம்மதிக்க வேண்டும் என்று கூற மனம் நொறுங்கிப் போகும் மனைவி தன் சோகத்தைப் பிழிந்து பாடுவதாக காட்சியை விளக்கினார்.
பி. சுசீலாவும் தயாராக இருக்கிறார். விஸ்வநாதனும் மெட்டுக்களைப் போட்டு காட்டுகிறார். அந்த மெட்டுக்களுக்கு கண்ணதாசனுக்கு வார்த்தைகள் வர மறுக்கின்றன. அவர் சொல்லிய சில வரிகளும் ஸ்ரீதருக்குப் பிடிக்கவில்லை.
இடையில் பாத்ரூம் போவதற்காக கண்ணதாசன் எழுந்து போகிறார். அவர் திரும்பி வரும்போது ஒருவர் கண்ணதாசனிடம் “நீங்க வர லேட்டாச்சுன்னு விஸ்வநாதன் சார் உங்களை குடிகாரர்னு திட்டிட்டாருங்க” என்று சொல்லி விட்டார். (அதாவது போட்டுக் கொடுத்துவிட்டார்).
கண்ணதாசன் கோபப்படவில்லை. மீண்டும் வந்து அமர்ந்தவர், எம்.எஸ்.வி.யுடன் “ஏண்டா விசு, என்னை நீ குடிகாரன்னு திட்டினியாமே! அப்படியா, ஆச்சிரியமா இருக்கே! நீ இப்படி யெல்லாம் சொல்லமாட்டியே! நீயா இப்படிச் சொன்னே! என்னால் நம்பவே முடியலை’ என்றவர் சட்டென்று ராகத்தோடு “சொன்னது நீதானா..... சொல்.... சொல்.... சொல்... என்னுயிரே” என்று பாடிக் காட்ட.....
ஸ்ரீதர் எப்படிப்பட்டவர்? ‘கப்’பென்று பிடித்துக் கொண்டார். “ஐயோ கவிஞரே, இதுதான்யா நான் கேட்டது. எப்படி திடீர்னு உங்களுக்கு வந்தது? விசு அண்ணே அவர் பாடிக்காட்டிய மெட்டையே வச்சுக்குவோம்.
அதையே தொடர்ந்து மெட்டுப் போடுங்க. கவிஞரே நீர் வரிகளைச் சொல்லுமய்யா” என்று கூற சற்று முன்னர் இருந்த இறுக்கமான சூழ்நிலை மறைந்து கண்ணதாசனும் விஸ்வநாதனும் மற்றும் குழுவினரும் உற்சாகமானார்கள்.
யூனிட்டே வாய் பிளந்தது. இன்னொரு வனை திருமணம் செய்யும்படி கூறும் கணவனுக்கு பதிலாக “சொன்னது நீதானா சொல் சொல் சொல் என்னுயிரே” என்ற வரிகள் எவ்வளவு கனகச்சிதமாக பொருந்துகி ன்றன என்று திகைப்பில் ஆழ்ந்தனர். அதே உற்சாகத்தோடு கண்ணதாசன் வரிகளை அள்ளி வீச, மெல்லிசை மன்னர் அவற்றுக்கு சந்தம் அமைத்துக்கொண்டே வந்தார்.

 

 

சினிமா உலகை உலுக்கிய சரோஜhதேவியின் திருமணம்



லீடிகை சரோஜாதேவி- ஸ்ரீ ஹர்ஷா திருமணம் பெங்களூரில் 1967 மார்ச் 1ம் திகதி நடைபெற்றது. சரோஜாதேவி, தமிழ்ப் பட உலகின் உச்ச நட்சத்திரமாக திகழ்ந்தபோதே, அவருக்குத் திருமணம் செய்து வைக்க தாயார் ருத்ரம்மா ஏற்பாடு செய்தார். இதுபற்றி சரோஜாதேவி ஒரு கட்டுரையில் கூறியிருப்பதாவது,
எனக்கு திருமணம் செய்யப்போவதாக எனது தாயார் அறிவித்ததும், அது சினிமா உலகில் பலருக்கு ஆச்சரியத்தை அளித்தது. பொதுவாக, சினிமா நடிகை என்றால் திருமணத்துக்குப் பின் நடிக்க முடியாது. அவளுக்கு படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைப்பது குதிரைக் கொம்புதான். எனவே தான் பலரும் ‘சரோஜாதேவி இப்போதே ஏன் திருமணம் செய்துகொள்ள வேண்டும்.
இன்னும் பல படங்களில் நடித்த பிறகு திருமணம் செய்து கொள்ளலாமே’ என்று கருத்து தெரிவித்து வந்தனர். ஆனால் எனது தாயார் ‘எந்த வயதில் எது நடக்க வேண்டுமோ அந்த வயதில் அது நடந்தே தீர வேண்டும்’ என்பதில் கண்டிப்பாக இருந்தார். அவருடைய இஷ்டப்படியே நானும் திருமணத்துக்கு சம்மதம் தெரிவித்துவிட்டேன்.
திருமணத்துக்கு முன்னால் எனது தோழி சுசீலா என்னிடம் சிறந்த மாப்பிளை கிடைக்க வேண்டும் என்றால், ஆஞ்சநேயருக்கு விரதம் இருக்கவேண்டும் என்று கூறினார். அந்த யோசனைப்படி நான் தினமும் ஈரத் துணியுடன் அந்த விரதத்தை இருந்து வந்தேன். அதன் பலனாகத்தான் எனக்கு சிறந்த கணவர் கிடைத்தார் என்று நினைக்கிறேன்.
எனக்கு என் தாயார் பல இடங்களில் மாப்பிள்ளை பார்த்தார். இறுதியில் ஜெர்மனியில் என்ஜீனியராக வேலை பார்த்து வந்த ஸ்ரீஹர்ஷாவை தேர்ந்தெடுத்தார். இதில் என் சொந்த விருப்பம் எதுவும் இல்லை. என் தாயார் தான் மாப்பிள்ளையை முடிவு செய்தார். இவ்வாறு சரோஜா தேவி கூறியுள்ளார்.
ரோஜாதேவியின் திருமணம் 1967 மார்ச் 1ம் திகதி பெங்களூரில் உள்ள உட்லண்ட்ஸ் ஹோட்டலில் நடந்தது. திருமணத்துக்கு முதல்நாள், பெங்களூர் மல்லீஸ்வரத்தில் உள்ள சரோஜாதேவி வீட்டில் நிச்சயதார்த்தம் நடந்தது. சரோஜாதேவின் வீடு முழுவதும் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தன.
காலை 10 மணி முதல் 11 மணி வரை ‘சுமங்கலி பூஜை’ நடந்தது. பெண் வீட்டையும், மாப்பிள்ளை வீட்டையும் சேர்ந்த 100 சுமங்கலிப் பெண்கள், மணமகள் சரோஜாதேவிக்கு வளையல்கள் அணிவித்தார்கள்.
மாலையில் நடந்த நிச்சயதார்த்தத்தின்போது, மாப்பிள்ளை வீட்டார் கொடுத்த பட்டுச் சேலையை சரோஜாதேவி அணிந்து வந்து, மாப்பிள்ளையின் தந்தைக்கும், தன் தந்தைக்கும் பாதபூஜை நடத்தினார். மறுநாள் காலை 11 மணிக்குத் திருமணம் நடைபெற்றது.
முதலில் ‘மாப்பிள்ளை அழைப்பு’ நடந்தது. மேள தாளம் முழங்க மாப்பிள்ளையை அழைத்து வந்து மணமேடையில் அமரச் செய்தார்கள். பின்னர் சரோஜாதேவி அழைத்து வரப்பட்டார். மாப்பிள்ளை அருகே அவர் அமர்ந்தார். புரோகிதர்கள் மந்திரம் சொல்ல, சரியாக 11 மணிக்கு சரோஜாதேவி கழுத்தில் ஸ்ரீஹர்ஷா தாலி கட்டினார்.
திருமணத்தைக் காண பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் கூடியிருந்தார்கள். திருமணத்தையொட்டி, எம். எஸ். சுப்புலட்சுமியின் பாட்டுக் கச்சேரி நடைபெற்றது. சரோஜாதேவிக்கு வாழ்த்துத் தெரிவித்தது, பகவத் கீதை புத்தகத்தையும், வாழ்த்துச் செய்தி யையும் ஜனாதிபதி ராதாகிருஷ்ணன் அனுப்பியிருந்தார். பகவத் கீதையில் கூறியுள்ளபடி, குடும்பம் நடத்துங்கள்.
உங்கள் இல்லறம் மகிழ்ச்சியுடன் நடக்க என் வாழ்த்துக்கள் திருமணம் முடிந்ததும், இருவரும் என்னை சந்தியுங்கள் என்று வாழ்த்துச் செய்தியில் ஜனாதிபதி ராதாகிருஷ்ணன் குறிப்பிட்டு இருந்தார்.
மார்ச் 5ம் திகதி சென்னையில் வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது. மைலாப்பூர் உட்லண்ஸ் ஹோட்டலில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு பட அதிபர்கள், நடிகர்- நடிகைகள் பெருந்திரளாக வந்து மணமக்களை வாழ்த்தினார்கள்
திருமணத்துக்குப் பின் சரோஜாதேவி சினிமாவில் நடிப்பதை, அவர் தாயார் விரும்பவில்லை. ஆனால், ஸ்ரீஹர்ஷாவை சந்தித்த திரை உலகத்தினர், ‘சரோஜாதேவி மிகச் சிறந்த நடிகை. தமிழ் நாட்டில் அவருக்கு பேரும், புகழும் நிறைய இருக்கிறது. அவரை நடிக்கக்கூடாது என்று தடை போட்டுவிடாதீர்கள் என்று கேட்டுக் கொண்டார்கள்.
பெண்கள் வீட்டில் சும்மா இருப்பது எனக்குப் பிடிக்காத விஷயம். பெண்கள், தங்களுக்கு உள்ள திறமையை வீணாக்கக்கூடாது. எனவே, சரோஜாதேவி தொடர்ந்து நடிப்பார் என்று ஸ்ரீ ஹர்ஷா கூறினார். இதன் காரணமாக சரோஜாதேவி நடிக்க அவர் தாயாரும் சம்மதம் தெரிவித்தார்.

 

‘3’ விமர்சனம் ஐஸ்வர்யா தப்பி விட்டார்




பெரும் எதிர்ப்பார்ப்பைக் கிளப்பிவிட்டு வரும் படங்கள் பொதுவாகவே படுத்துவிடுவது வழக்கம். காரணம், அந்த எதிர்ப்பார்ப்பின் சுமையைத் தாங்க முடியாது. பெரிய இயக்குநர்கள், நாயகர்கள் படங்களுக்கே அந்தக் கதி என்றால், முதல் பட இயக்குநர் ஐஸ்வர்யாவின் ‘3’ என்னவாகப் போகிறதோ... என்பது தான் 3 ரிலீசுக்கு முன்பு வரை இருந்த பேச்சு.
ஆனால் ஐஸ்வர்யா தப்பித்து விட்டார் என்று தான் சொல்ல வேண்டும். துள்ளுவதோ இளமை, மயக்கம் என்ன படங்களின் சாயல் லேசாகத் தெரிந்தாலும் (செல்வராகவன் உதவியாளர் அல்லவா.... இருக்கத்தானே செய்யும்), இடைவேளைக்குப் பிறகு கொஞ்சம் சோதித்தாலும் படத்தைப் பார்க்க முடிகிறது.
பெண் இயக்குநர்கள் வழக்கமாக செய்யும் தவறுகள் எதுவும் இல்லாமல், ஒரு பக்குவமான காட்சிப்படுத்தலை 3ல் பார்க்க முடிகிறது. அந்த வகையில் இயக்குநர் ஐஸ்வர்யாவுக்கு ஒரு பூச்செண்டு கொடுத்து வரவேற்கலாம்!
ஒரு இளைஞனின் மூன்று கட்ட வாழ்க்கை நிலைகளின் சம்பவங்களின் தொகுப்பு இந்தப் படம்.
ப்ளஸ்டூ படிக்கும் தனுஷ¤க்கும் ஸ்ருதிக்கும் காதல். (ரெண்டு பேருமே மாணவ வேடம் அத்தனை கச்சிதம்). ரொம்ப அழகான காதல். கல்லூரி படிப்பு முடிந்த பிறகு திருமணம் நடக்கிறது. திருமணத்துக்குப் பிறகுதான் தனுஷ¤க்கு சோதனை ஆரம்பமாகிறது. ஒரு ஆள் பல பரிமாணமெடுக்கும் மனநோய், இதனால் பல பிரச்சினைகள். அதிலிருந்து அவர் மீண்டாரா என்பது மீதிக்கதை.
எல்லோரும் ஏக்கத்துக்கும் ஏற்றிவிட்ட கொலவெறி பாடலைத் தாண்டி இந்தப் படம் மனதில் நிற்பதற்குக் காரணம், இளமை துள்ளும் அந்த முதல் பாதி.
ட்யூஷன் சென்டரில் ஸ்ருதியைக் கவர தனுஷ் செய்யும் முயற்சிகள் சிறப்புக்குறியன. தனுஷ் - ஸ்ருதி திருமணம் நடக்கும் இடம், அந்தத் திருமணத்தை எதிர்க்கும் ஸ்ருதி. பெற்றோரிடம் தனுஷ் பேசும் வசனங்கள், அதற்கு ஸ்ருதியின் அம்மா ரோகிணியின் அடுத்த ரியாக்ஷன் போன்றவை சற்றும் எதிர்பாராத திருப்பக் காட்சிகள்.
அதென்னமோ தொடர்ந்து தனுஷ¤க்கு சைக்கோ கேரக்டர்களாக அமைகின்றன. இது எதேச்சையானதா திட்டமிட்டதா தெரியவில்லை. ஆனால் இந்தப் படத்தில் நடிப்பில் தனுஷ் மிரட்டியிருக்கிறார்.
இதுவரை பார்க்காத வேறுமுகம் அது. அதிலும் மனைவிக்குத் தெரியாமல் தன் நோயை மறைக்க அவர் படும்பாடு... வாவ்! நடிப்பா இயக்கமா.... யார் பெஸ்ட் பார்ப்போம் என கணவனுக்கும் மனைவிக்கும் பெரிய போட்டியே நடந்திருக்கும் போல! ஏழாம் அறிவில் எல்கேஜி லெவலுக்கு இருந்த ஸ்ருதி ஹாஸன் நடிப்பு இந்தப் படத்தில் டிகிரி வாங்கிவிட்டது.
இந்தப் பொண்ணு இந்த அளவு நடிக்குமா என கேட்க வைக்கிறது. ஆனால் அவர் அழ ஆரம்பித்தால் நாம் தலை கவிழ வேண்டியுள்ளது. அதைக் கொஞ்சம் கவனியுங்கள்.
அம்மணி! இயக்குபவர் மனைவி என்பதையெல்லாம் கண்டுகொள்ளாமல் அநியாயத்துக்கு ஸ்ருதியுடன் நெருக்கம் காட்டியுள்ளார் தனுஷ். இதான் அந்த கெமிஸ்ட்ரியா! சந்தானத்துக்கு போட்டியாக வந்துவிடுவார் போலிருக்கிறது சிவகார்த்திகேயன். சுந்தர் ராமு, பிரபு, பானுப்பிரியா, ரோகினி என எல்லோருமே படத்துக்கு பலம் சேர்த்துள்ளனர்.
இடைவேளை வரை அழகாகப் பயணிக்கும் படம், தனுஷ் மனநோயாளியாக மாறியதும் பார்வையாளர்களைப் பொறுமையிழக்க வைக்கிறது. தனுஷின் இந்த மனநோய் அவருக்கு மட்டும் தெரிந்து, மற்ற யாருக்குமே தெரியாமல் போவது எப்படி என்று புரியவில்லை. (நண்பன் ஒருவனைத் தவிர)
அடுத்தடுத்த படங்களில் மனநோயாளியாகவே தனுஷைப் பார்க்க நமக்கே ஒரு மாதிரியாகத்தான் இருக்கிறது. அனிருத்தின் இசையில் எல்லாப் பாடல்களுமே கேட்கும்படி உள்ளது. உலகமகா கொலவெறிப்பாட்டை இப்படி சுமாராகத்தான் எடுத்திருப்பார்கள் என நினைத்தது சரியாகத்தான் இருக்கிறது. பாஸ்கர் கத்தரி இடைவேளைக்குப் பிறகு கோளாறாகிவிட்டது போலிருக்கிறது. ரஜினியின் பொண்ணு என்ற சிறப்புப் பட்டம் இனி ஐஸ்வர்யாவுக்கு தேவையில்லை. கம்பீரமாக நான் இயக்குநர் ஐஸ்வர்யா என்று சொல்லிக் கொள்ளலாம்.

 

தமிழ் படத்தில் அமிதாப்பச்சன்



பொலிவுட்டின் சூப்பர் ஸ்டாரான பிக் பி என்று அழைக்கப்படும் அமிதாப்பச்சன் தமிழ் படத்தில் நடிக்க இருக்கிறார். காமராஜ், முதல்வர் மகாத்மா போன்ற படங்களை இயக்கிய டைரக்டர் பாலகிருஷ்ணன் அடுத்து இந்தியா-பாகிஸ்தான் உறவை மையப்படுத்தி ஒரு படத்தை எடுக்க இருக்கிறார்.
இந்தப் படத்தில் தான் ஒரு முக்கிய ரோலில் அமிதாப் பச்சன் நடிக்க இருக்கிறாராம். இது குறித்து பாலகிருஷ்ணன் கூறியுள்ளதாவது, வியாபாரம் செய்வதற்காக இந்தியா வந்து கடைசியில் நம்மை அடிமைப்படுத்திய இங்கிலாந்துடன் இந்தியா இன்று நட்பு பாராட்டுகிறது. ஆனால் அதே நமது அண்டை நாடான பாகிஸ்தானுடன் பகையில் இருக்கிறது.
நான் இயக்கப் போகும் புதிய படம் இந்தியா - பாகிஸ்தான் உறவை பற்றியது. இப்படம் பாகிஸ்தானின் ஜின்னா முதல் இப்போது கசாப் வரை உள்ளிட்ட பல விஷயங்கள் பேசப்படும். இதில் முக்கிய ரோலில் அமிதாப்பச்சனை நடிக்க வைக்க முயற்சிகள் நடந்து வருகின்றன. இது தொடர்பாக அவரிடமும் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது என்று
கூறியுள்ளார்.

சில்க் ஸ்மிதா வேடத்தில் அனுஷ்கா


இந்தியில் சக்கைப் போடு போட்டு, தேசிய விருதையும் வாங்கிய டர்டி பிக்சர், விரைவில் தமிழில் தயாராகிறது. மறைந்த தமிழ் நடிகை சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு உருவான இந்தப் படத்தில், வித்யா பாலன் நாயகியாக அசத்தியிருந்தார்.
சிறந்த நடிகைக்கான தேசிய விருதும் அவருக்குக் கிடைத்தது. இப்படத்தை தமிழ், தெலுங்கில் டப்பிங் செய்து வெளியிட திட்டமிட்டிருந்தனர். இப்போது அந்த முடிவை மாற்றிக் கொண்டு, இரு மொழிகளிலும் ரீமேக் செய்ய முடிவு செய்துள்ளனர். தமிழில் சில்க் ஸ்மிதா வேடத்தில் அனுஷ்காவை நடிக்க வைக்க பேசி வருகிறார்களாம்.
சில்க் ஸ்மிதா வேடத்துக்கு அனுஷ்காதான் பொருத்தமாக இருப்பார் என்று அவரை தேர்வு செய்துள்ளனர். அனுஷ்காவுக்கும் இதில் நடிக்க விருப்பம் தானாம். சம்பளத் தொகை சரியாகிவிட்டால், தமிழ், தெலுங்கில் அவர்தான் நாயகி விரைவில் அதிகாரபூர்வ அறிவிப்பு வரவிருக்கிறது.


 

தங்கையை நடிக்க வைக்க லட்சுமிராய் முயற்சி


கற்க கசடற படம் மூலம் தமிழில் நாயகியானவர் லட்சுமிராய். ‘தாம் தூம்’ படத்தில் ஜெயம் ரவியுடன் நடித்தார். காஞ்சனா, மங்காத்தா படங்கள் அவரை பிரபலப்படுத்தின. தெலுங்கு, மலையாள படங்களிலும் நடித்து வருகிறார்.
லட்சுமிராய்க்கு ரேஷ்மா, அஸ்வினி என இரு சகோதரிகள் உள்ளனர். இதில் அஸ்வினியை நாயகியாக்க முயற்சித்து வருகிறார். அவரை எப்போதும் தன்னுடனேயே அழைத்து சென்று இயக்குனர்கள், தயாரிப்பாளர்களுக்கு அறிமுகம் செய்கிறார். கதையும் கேட்கிறார்.
விரைவில் அஸ்வினி நாயகியாக அறிமுகமாக உள்ளார். லட்சுமிராய் தற்போது இசை என்ற தமிழ்ப் படத்திலும் ஒரு மலையாள படத்திலும் கன்னடம், இந்தி, தெலுங்கில் தலா ஒரு படத்திலும் நடித்து வருகிறார். விரைவில் இவை ரிலீசாக உள்ளன.

 

பிரபுதேவாவுடனான காதல் முறிவுக்குரிய காரணம் என்ன?


தமிழில் கவர்ச்சியாக கலக்கிய நடிகை நயன்தாரா முதலில் சிம்புவுடன் இணைத்து பேசப்பட்டார். பின்னர் நடிகர் பிரபுதேவாவை தீவிரமாக காதலித்தார். இருவரும் திருமணம் செய்து கொள்ளும் திகதிகூட முடிவானது.
பிரபுதேவாவுடன் ஏற்பட்ட காதலால் தன்னை தேடிவந்த பட வாய்ப்புகளை நயன்தாரா உதறித் தள்ளினார். ஒரு ஆண்டாக படப்பிடிப்பு எதிலும் அவர் கலந்துகொள்ளவில்லை.
இந்நிலையில் பிரபுதேவா மனைவி, குழந்தைகளை பிரிய மனம் இல்லாமல் இருதலைக் கொள்ளியாக தவித்தார். அவரை விவாகரத்து செய்ய முடியாததால் நயன்தாரா முடிவில் மாற்றம் ஏற்பட்டது. திடீரென பிரபுதேவாவுடன் காதலையும், திருமண முடிவையும் கைவிட்டார்.
காதல் முறிவை அறிவித்த உடன், நயன்தாராவை தேடி மீண்டும் சினிமா வாய்ப்புகள் வரத் தொடங்கியுள்ளன. தற்போது நயன்தாரா கையில் 4 படங்கள் உள்ளன. ஒரு ஆண்டு இடைவெளிக்கு பிறகு, கிருஷ்ணாவின் கிருஷ்ணம் வந்தே ஜகத்குரு என்ற தெலுங்குப் படத்தில் அவர் நடித்து வருகிறார்.
ஐதராபாத் செட்டில் படப்பிடிப்பில் இருந்த நயன்தாராவை, சந்தித்து, பிரபு தேவாவுடன் காதல் முறிவு ஏற்பட்டதற்கு காரணம் என்ன? என்று கேட்டபோது அவர் அளித்த பதில் வருமாறு:-
காதலுக்காக எதையும் செய்ய நான் தயாராக இருக்கிறேன். பிரபுதேவாவுக்காக சிலவற்றை விட்டுக் கொடுத்தேன். ஆனால், திருமணம் வரை சென்ற எங்கள் காதல் முறிந்துவிட்டது. இது நடப்பது தான். இது என் விஷயத்தில் மட்டுமல்ல, எந்தவொரு காதலையோ அல்லது திருமணத்தையோ எடுத்துக்கொண்டால், அதில் முறிவு ஏற்படுவது என்பது நடக்கத்தான் செய்கிறது.
பொதுவாக காதல் வாழ்க்கையிலும், திருமண வாழ்க்கையிலும், முழுவதுமாக புரிந்துகொள்ளாமை என்பது இருக்கத்தான் செய்யும். இதனால் லேசான சச்சரவுகள் வருவதுண்டு. இது ஒரு எல்லையோடு நின்று விடவேண்டும். எல்லை மீறி போகும் போதுதான், காதல் முறிவு, திருமண முறிவு ஏற்படுகின்றன. என் விஷயத்திலும் அப்படித்தான் நடந்தது.
சில விஷயங்களை என்னால் சகித்துக் கொள்ள முடியவில்லை. பிரச்சினைகளை கையாள முடியவில்லை. அல்லது தெரியவில்லை. உலகில் நிலையானது என்று எதுவும் கிடையாது. மக்கள் மாறுகின்றனர். சூழ்நிலைகள் மாறுகின்றன. செயல்பாடுகள் மாறுகின்றன. அதுபோன்றதொரு மாற்றம், என்னை பிரியச் செய்தது.
எங்கள் காதல் முறிவுக்கு பல காரணங்கள் இருக்கலாம். இதற்கு மேல் இந்த விஷயத்துக்குள் ஆழமாக செல்ல நான் விரும்பவில்லை. முழுக்க முழுக்க இது எனது சொந்த விஷயம். எனது விவகாரத்தை உலகுக்கு வெளிச்சம் போட்டுக் காட்டவேண்டிய அவசியமும் கிடையாது.
என்னைப் பற்றி பத்திரிகைகள் ஏதேதோ எழுதின. வதந்திகளை பரப்பின. நான் எதற்கும் பதில் சொல்லாமல் அமைதியாக இருந்தேன். இப்போது நிலைமை மாறிவிட்டது. உறவு முறிந்துவிட்டது. எப்போது ஒரு உறவு சரியாக இல்லையோ, அப்போது எல்லாமே மாறி விடுவது இயற்கைதானே?
இதற்கு நூறு காரணங்கள் இருக்கலாம். அல்லது காரணங்களே இல்லாமலும் போகலாம். நான் பிரபுதேவாவுடன் பழகியபோது, 100 சதவீதம் உண்மையாக நடந்துகொண்டேன். ஆனால், இதற்கு மதிப்பில்லை எனும்போது, உறவை முறித்துக் கொள்வதை தவிர, வேறு வாய்ப்பு என்னவாக இருக்க முடியும்?
எங்களது இந்த காதல் பாதியில் முறிந்துபோகும் என்று நான் ஒருபோதும் நினைத்தது கிடையாது. ஆனால், வாழ்க்கையில் எது வேண்டுமானாலும் நடக்கலாம் என்பதை, என் விஷயம் உறுதிப்படுத்தியுள்ளது. காதல் வாழ்க்கையோ, திருமண வாழ்க்கையோ, இருவரிடமும் பரஸ்பரம் புரிந்துகொள்ளுதலும், விட்டுக் கொடுத்தலும் இருந்தால், அந்த வாழ்க்கை வெற்றிகரமாகவும் மகிழ்ச்சியாகவும் அமையும்.
இவ்வாறு அவர் கூறினார்.

 

அண்ணாத்துரையை தாக்கி கண்ணதாசன் எழுதிய பாடல்




1956ல் பதிபக் தியில் தொடங்கி 1970ல் நடிகர் திலகத்தை வைத்து கடைசியாக இயக்கிய பாதுகாப்பு வரையில் ‘ப’ மற்றும் ‘பா’ வரிசையில் மட்டுமே படங்களை இயக்கிய பீம்சிங் (விதிவிலக்கு ராஜாராணி, சாந்தி) அந்த வரிசையில் இயக்கிய அற்புதப் படைப்பால் படித்தான் மட்டும் போதுமா.
1962ல் வெளியான படித்தால் மட்டும் போதுமா படப்பிடிப்பு 1961 லேயே நடந்து வந்தது. அப்போதுதான் கவிஞர் கண்ணதாசன் தி. மு. க. வை விட்டு விலகி (ஏப்ரல் 11, 1961) ஈ. வெ. கி. சம்பத் தலைமையில் தமிழ் தேசியக் கட்சியைத் துவங்கி அதில் முக்கிய பொறுப்பிலிருந்தார். அப்போது அவர் எழுதிய பாடல்களிலும் கட்டுரைகளிலும் தி. மு. க. தலைவர் அண்ணாதுரையை கடுமையாக தாக்கி வந்தார்.
அந்த நேரம் பார்த்து இயக்குனர் பீம்சிங், படித்தால் மட்டும் போதுமாவுக்காக, தம்பியை ஏமாற்றிய அண்ணனைப் பற்றி பாடல் எழுத வேண்டும் என்று கேட்டபோது கவிஞருக்கு அண்ணாத்துரையை தாக்க அருமையான சந்தர்ப்பம் கிடைத்தது என்று மகிழ்ந்து உடனே விஸ்வநாதன், ராமமூர்த்தி குழுவினருடன் அமர்ந்து விட்டார்.
அவர் பாடல் வரிகளைச் சொல்லச்சொல்ல இவர்களுக்கு சிவாஜியை ஏமாற்றிய பாலாஜியைப் பற்றித்தான் சொல்கிறார் என்று நினைத்தார்கள். படம் வெளியான பின்புதான் கவிஞர் சொன்னார். அது அண்ணாத்துரையை தாக்கி நான் எழுதியது என்று. கவிஞரைப் பொறுத்த வரை அந்தந்த சூழ்நிலைக்கு தகுந்தவாறு தன்னுடைய சொந்த விஷயங்களுக்கு சினிமா பாடல்களை பயன்படுத்திக் கொள்வது வழக்கம்.

அண்ணன் காட்டிய வழியம்மா - இது
அன்பால் விளைந்த பழியம்மா
கண்ணை இமையே கெடுத்ததம்மா - என்
கையே என்னை அடித்ததம்மா.

9 வயதில் பட்ட துன்பத்தை வார்த்தைகளால் கூற முடியாது


மனோரமா மனம் திறந்து கூறுகிறார்

நான் பாடத் தெரிந்தவள் என்பதினால் எனக்குக் கிடைத்த ஒரு சலுகையும் உண்டு. பள்ளிக்கூடம் போய் வந்தபிறகு பலகாரம் விற்க எங்கள் ஊர் சினிமா டெண்ட் கொட்டகைக்குப் போவேன். அங்கே பலகாரம் விற்பதுடன் எந்தக் காட்சியிலும் எந்த நேரம் உள்ளே சென்று படம் பார்க்க எனக்கு இலவச அனுமதியும் உண்டு.
‘பாட்டுப் பாடுற பொண்ணு. படத்தைப் பார்த்தா பாடக் கத்துக்கும்’ என்று பிரியமாக விட்டுவிடுவார்கள். நானும் அவ்வப்போது உள்ளே போய் சிறிது நேரம் பாட்டுகள் வரும் காட்சிகளைப் பார்த்துவிட்டு வருவேன். அதோடு, அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் யாராவது படம் பார்க்க போனால், ‘பாப்பா வா’ என்று என்னையும் படம் பார்க்கக் கூட்டிப் போவார்கள்.
இப்படியே படம் பார்த்தும், கிராமபோன் ரெக்கார்டுகளைக் கேட்டுமே எனது இசைஞானம் வளர்ந்தது.
இந்த நிலையில்தான் என் அம்மாவுக்கு பயங்கரமான ரத்தப் போக்கு நோய் வந்தது. மனக்கவலை வறுமை - தினத்தோறும் நெருப்புடன் நடத்தும் கடுமையான உழைப்பு - இவை எல்லாமாகச் சேர்ந்து இந்த நோயைக் கொடுத்துவிட்டன.
உள்ளூரிலோ மருத்துவ வசதி இல்லை என்ன செய்வது?
இக்கட்டான இந்த நேரத்தில் தயாள மனம் கொணட ஒருவர் உதவிக்கு வந்தார் அவர் அம்மாவை இராமனாதபுரம் அரசு மருத்துவமனையில் கொண்டுபோய்ச் சேர்த்துவிட்டார். எனக்கு என் அம்மாதான் உலகம். என் அம்மாவுக்கு நான்தான் உலகம். உங்களுக்கு என்று வேறு யாரும் கிடையாது. அதனால் என் அம்மா சேர்ந்திருந்த அரசாங்க மருத்துவமனைக்குப் போய் அம்மாவுக்குத் துணையாக இருந்து வந்தேன்.
அந்தநேரம் எனது பள்ளிக்கூட ஆசிரியர்கள் எல்லாம் ரொம்பவும் வருத்தப்பட்டார்கள். ‘நல்லாப் படிக்கிற பொண்ணு. இப்படி வீணா படிப்புக் கெட்டுப் போகுதே’ என்று வருந்தி னார்கள். சில ஆசிரி யர்கள் என்னைத் தங்கள் சொந்தப் பொறுப்பில் வைத்துப் படிக்க வைப்பதாகக் கூறினார்கள்.
ஆனால், அந்தச் சின்னஞ்சிறு வயதில் அம்மாவைப் பிரிந்து எப்படி என்னால் தனியாக இருக்க முடியும். அம்மாவுக்கும் வேறு துணை யார் இருக்கிறார்கள்? அதனால் அம்மா கூடவே இராமனாதபுரம் போய்விட்டேன்.
அம்மாவின் கடுமையான ரத்தப் போக்கைக் கட்டுப்படுத்த சரியாக ஒரு வருடம் ஆகிவிட்டது.
இந்த ஒரு வருடமும் தினசரி என் அம்மாவின் சேலைகளை இரண்டு முறை துவைத்து, காய வைத்துக் கொடுப்பேன். இன்னும் சொல்லப்போனால் அந்தச் சேலைகள் கூட மருத்துவமனையில் தரப்பட்ட சேலைகள் தான். சொந்தமாக உள்ளது ஒரேயொரு சேலைதான்.
அப்போதும் என் அம்மா ரத்தம் தோய்ந்த சேலையோடேயே இருப்பார். அப்படி எந்த நேரமும் ரத்தப் போக்கு இருந்துகொண்டே இருக்கும்.
இந்த ஒரு வருடமும் நாங்கள் பட்ட துன்பத்திற்கு ஒரு எல்லை கட்டிச் சொல்லவே முடியாது.
என் அம்மாவுக்குத் தரப்படும் மருத்துவமனைச் சாப்பாடைத்தான் இருவரும் பங்கு போட்டுச் சாப்பிடுவோம். அவர்கள் தருவதே கொஞ்சம் இதில் இரண்டு பேருக்கு எப்படிப் போதும்? தினசரி அரைப்பட்டினி, கால் பட்டினிதான்.
பகலில் அம்மா கூட இருப்பேன். இரவில் ஆஸ்பத்திரியின் வராந்தாவில் படுத்துக்கொள்வேன்.
எப்போதாவது தெரிந்தவர்கள், அறிந்தவர்களிடம் ஏதாவது உதவி கேட்டுப் பெற்றுக்கொள்வேன்.
மொத்தமாக பிச்சை எடுக்கவில்லை, திருடவில்லை. மற்றப்படி எல்லா விதத் துன்பங்களையும் அனுபவித்து விட்டோம். அதுவும் அந்த ஒன்பது, பத்து வயதில் பட்ட துன்பம் இருக்கிறதே - அதை எந்த வார்த்தையால் விளக்கமுடியும்?
ஓராண்டுக்கால மருத்துவமனை வாழ்க்கையில் ஓரளவு அம்மாவின் உடம்பு தேறியது. நாங்கள் மீண்டும் பள்ளத்தூர் வந்தோம். முன்போல் வேலை பார்க்கும் சக்தி அம்மாவுக்கு இல்லை. இனி என்ன செய்வது அடுத்த நேரச் சாப்பாடிற்கு? வறுமை எங்கள் முன் பெரிதாக உருவெடுத்து நின்றது!
இன்றைய தினம் மனோரமா மிகவும் வசதியாக வாழ்வதாக பலர் நினைக்கலாம். ஆனால் இந்த வாழ்க்கையை வந்தடைய எவ்வளவு கொடிய வழிப்பயணம் செய்திருக்கிறோம் என்பதை இப்போது எண்ணிப் பார்க்கையில் உடம்பு நடுங்குகிறது.
பள்ளத்தூரில் வசதி படைத்த செட்டியார் குடும்பங்கள் நிறைய உண்டு வசதியற்ற குடியானவர்கள் இந்தச் செட்டியார் குடும்பங்களில் மாதச் சம்பளத்திற்கு பண்ணை வேலை அல்லது வேறு வேலைகளில் சேர்ந்தறுப்பார்கள்.
அதேபோல் வீட்டு வேலைகளுக்கு பெண் பிள்ளைகளைச் சேர்த்துக் கொள்வார்கள்.
எங்களின் நிர்க்கதியான நிலையைப் பார்த்த அக்கம்பக்கத்துக்காரர்கள் என் அம்மாவிடம் ‘உனக்கோ உடம்புக்கு முடியலை. பாப்பாவும் பட்டினி கிடந்து சாகிறதா! அதனால் யாராவது ஒரு செட்டியார் வீட்ல பிள்ளை பார்த்துக்க அனுப்பி வை. மாதத்துக்குச் சம்பளமும் கிடைக்கும் பிள்ளைக்கு வயிறார மூணு வேளையும் சோறும் கிடைக்கும் என்று சொல்லிக் கொண்டிருந்தார்கள்.
பசி – பட்டினியின் துன்புறுத்தலால் மற்றவர்களின் சொல்லுக்கு செவிசாய்த்துவிட்ட என் அம்மா ஒரு செட்டியார் வீட்டில் குழந்தை பார்த்துக்கொள்ள ஒரு அம்மா மூலம் அனுப்பி வைத்தார்.
அங்கே உள்ள ஒரு குழந்தையைப் பார்த்துக்கொள்வதும், அதற்குத் தேவையானதைச் செய்வதும்தான் எனக்கு வேலை.
நான் வேலைக்குப் போன முதல் நாள். கீழே விளையாடிக்கொண்டிருந்த குழந்தையைத் தூக்கி என் தோள்பட்டையில் சாய்த்து செல்லமாகத் தட்டிக் கொடுத்ததுதான் தாமதம். அந்தக் குழந்தை ‘சரக்’ என்று என் தோள்படையில் கடித்துவிட்டு, ‘வில்’ என்று கத்தியபடி ஏற்கனவே அங்கே வேலை செய்யும் ஆயாவிடம் ஓடிப்போய் ஒண்டிக்கொண்டுவிட்டது.
முன்பின் பழக்கம் இல்லாததால் அந்தக் குழந்தை என்னிடம் வர மறுத்தது.
என்னை வேலைக்குச் சேர்த்தது குழந்தையைப் பார்த்துக் கொள்வதற்காக ஆனால் குழந்தையோ என்னிடம் வர மறுத்து வேலைக்கார ஆயாவிடம் ஓடுகிறது.
பிள்ளையை வைத்துக்கொள்ள முடியவில்லை என்றால் வீட்டை விட்டுப் போகச்சொல்லி விடுவார்கள்.
பிறகு சாப்பிடச் சோறு கிடைக்காதே! இந்த எண்ணம் ஏற்பட்டதுமே எனக்கு அடி வயிறு ‘பகீர்’ என்றது. வறுமை எங்களை அந்த அளவிற்கு வாட்டி இருந்தது.
வேலைக்கு என்று வந்து ஒரு வேளைச் சோறுகூட ஒழுங்காகச் சாப்பிடாததற்குள் இந்த நிலைமையா
எனக்கு கண்கள் கலங்கிவிட்டன. அந்த நிலைமையிலும் எனக்கு சட்டென்று ஒரு யோசனை தோன்றியது நான் வேலைக்குச் சேர்ந்த செட்டியார் வீடு மிகப் பெரிய வீடு. ஒரு நாளைக்கு ஏராளமான விருந்தாளிகள் வந்து போகும் இடம். அதனால் அந்த வீட்டில் எப்போதும் பெரிய விருந்து போலவே சமையல் நடக்கும். வேலைப்பளு அதிகம்.
ஏற்கனவே உள்ள வேலைக்கார அம்மாவுக்கு 40 வயது இருக்கும். அந்த அம்மா, சமையல் பாத்திரங்கள் கழுவுவது தண்ணீர் இறைப்பது, வீட்டைக் கூட்டுவது, சமையலுக்கான மிளகாய் மற்றும் மசாலா சாமான்கள் அரைத்துக் கொடுப்பது மற்றும் சில்லறை வேலைகள் செய்வது வழக்கம்.
‘அடுத்து சாப்பாட்டிற்கு என்ன செய்வது?’ என்ற பய உணர்ச்சி ஏற்பட்டதுமே உடனே அந்த அம்மாவிடம், ‘ஆத்தா, உங்க வேலைங்களை எல்லாம் நான் பாத்துக்கறேன் நீங்க இந்தக் குழந்தையைப் பார்த்துக்குங்க இல்லாட்டி என்னெ போகப் சொல்லிடுவாக’ என்று கெஞ்சிக் கேட்டுக் கொண்டேன்.
அந்த அம்மாவும் அன்று முதல் பிள்ளை பார்த்துக் கொள்ளவும், நான் அவருடைய வேலைகளைப் பார்க்கவும் ஆரம்பித்தோம்.
அதுமுதல் எனக்கு ஓய்வு ஒளிவு இல்லாத வேலை தொடங்கியது. பசியின் கொடுமை எனது வயதுக்கு மீறிய வேலைச் சுமையை என் தலையில் ஏற்றியது.
இதே நேரத்தில் எனது தாயாரும் வேறு ஒரு செட்டியார் வீட்டில் வேலைக்குச் சேர்ந்தார்.
பொதுவாக செட்டியார் வீடுகளில் வேலை செய்யும் சின்னப் பெண்களை ‘குட்டி’ என்று கூப்பிடுவார்கள். நான் வேலைக்குச் சேர்ந்திருந்த செட்டியாரின் வீடு என்கூட ஒரே வகுப்பில் படித்த சக தோழி ஒருத்தியின் தாத்தா வீடு. அந்த வீட்டிலேயே அவளும் வளர்ந்தாள். படிப்பில் அவள் மிகச் சுமார் ரகம். சாதாரணமாக எந்தப் பாடமும் அவள் மண்டையில் ஏறமாட்டேன் என்று படிவாதம் பிடிக்கும். அதனால் அவள் எப்போதும் என்னைப் பார்த்துக் காப்பியடிப்பதை வாடிக்கையாக வைத்திருந்தாள். அதற்காகவே பள்ளி நேரம் முழுவதும் ‘பாப்பா - பாப்பா’ என்று என்னையே சுற்றிக்கொண்டிருப்பாள்.
அந்த வீட்டில் எல்லோரும் என்னை ‘குட்டி’ என்று கூப்பிடுவார்கள். அவர்களைப் போலவே என்கூடப் படித்த எப்போதும் ‘பாப்பா... பாப்பா’ என்று குழையவரும் சகதோழியும் ‘குட்டி’ போட்டுக் கூப்பிட்டாள்.
மற்றவர்கள் கூப்பிட்டதைப்பற்றி நான் எதுவும் அக்கறை கொள்ளவில்லை. ஆனால், என் கூடப் படித்தவள் - என்னைப் பார்த்து ஒவ்வொரு பாடத்தையும் காப்பியடித்தவள் - ‘பாப்பா - பாப்பா’ என்றவள் வழக்கத்தை மாற்றி ‘குட்டி’ என்று கூப்பிட்டதைத்தான் என்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.
அவள் கூப்பிட்டதைக் கேட்டதும் என் முகமெல்லாம் ஜிவ்வென்று சிவந்து வேர்த்துவிட்டது. உடம்பெல்லாம் கூனிக் கூசி - குறுகி - கண்கள் நீர்கொண்டு விட்டன. ஏனோ என்னால் அவள் அப்படிக் கூப்பிடுவதைத் தாங்கிக்கொள்ள முடியாமல் தத்தளித்தேன் என்றாலும், என்னால் என்ன செய்ய முடியும்?
இந்தக் காட்சிதான், இன்றுவரை என் வீட்டில் வேலை செய்யும் எந்தப் பணியாளரையும் மனம் கோணும்படியாகவோ, மரியாதைக் குறைவாகக் கூப்பிடவோ நடத்தவோ, இடம் வைக்காமல் செய்தது. வேறு யாரையும் என் வீட்டில் பணியாற்றுபவர்களை மரியாதைக் குறைவாக அழைப்பதையும் அனுமதிப்பதில்லை.
இந்த நிகழ்ச்சியைப் பார்த்துக் கொண்டிருந்த அந்த வீட்டின் தலைமைச் சமையல்காரர் அந்தச் செட்டியார் பெண்ணை தனியாகக் கூப்பிட்டு,
‘உன் கூடப் படித்துக் கொண்டிருந்த உன் வயதையொத்த பொண்ணுதானே பாப்பா. நீ அதை குட்டி என்று கூப்பிட்டால் அது மனம் வருத்தப்படாதா. இனி அப்படிக் கூப்பிடாதே’ என்று கண்டித்திருக்கிறார்.
அதன் பிறகு அவள் என்னை ‘குட்டி’ என்று கூப்பிடவில்லை. ஆனாலும் அந்த நிகழ்ச்சி மட்டும் என் இதயத்தில் ஆழமாகக் காயப்படுத்தி விட்டது!

கதாநாயகனாகவும் நடித்த அசோகன்


வில்லன், குணச்சித்திர வேடங்களில் நடித்து தமிழ்ப்பட உலகை கலக்கியவர் அசோகன். எம்.ஜி. ஆருடன் மட்டும் 88 படங்களில் சேர்ந்து நடித்தவர். அசோகன் திருச்சியைச் சேர்ந்தவர். திருச்சி ஜோசப் கல்லூரியில் படித்து “பி.ஏ” பட்டம் பெற்றார். கல்லூரி நாட்களிலேயே பேச்சுப் போட்டிகளில் கலந்து கொண்டு பரிசுகள் பெற்றார்.
பின்னர் சினிமாவில் நுழைந்த அவர் சில படங்களில் குணச்சித்திர வேடத்திலும், பெரும்பாலான படங்களில் வில்லன் வேடத்திலும் நடித்து புகழ் பெற்றார்.
ஒளவையார், மாய மனிதன், வீரத்திருமகன், உலகம் சுற்றும் வாலிபன், அன்பே வா, உயர்ந்த மனிதன், வல்லவனுக்கு வல்லவன், தாய்க்கு தலைமகன், தாய் சொல்லை தட்டாதே, குடும்பத் தலைவன், ரிக்ஷ¡க்காரன், நான், மூன்றெழுத்து, அடிமைப்பெண், அஞ்சாத நெஞ்சங்கள் உட்பட ஏராளமான படங்களில் நடித்தவர் அசோகன்.
அசோகன் அதிகமாக நடித்தது எம்.ஜி.ஆர். படங்களில்தான். 88 எம்.ஜி.ஆர். படங்களில் அவர் நடித்துள்ளார். ஏ.வி.எம். மற்றும் தேவர் பிலிம்சார் தயாரித்த பெரும்பாலான படங்களில் முக்கிய வேடம் ஏற்று நடித்துள்ளார். திரை உலகத்தினர் அனைவருடனும் இனிமையாக பழகக்கூடியவர். அவருக்கு ஏராளமான நண்பர்கள் இருந்தார்கள்.
1963 இல் வெளிவந்த “இது சத்தியம்” படத்தில் அசோகன் கதாநாயகனாக நடித்தார். இதில் அவருக்கு ஜோடி சந்திரகாந்தா. இது வெற்றிப்படம். முதலில் இந்தப்படத்தில் எம்.ஜி.ஆர். நடிப்பதாக இருந்தது. அதன் பிறகு அசோகன் நடித்தார். சரவணா பிக்சர்ஸ் ஜி.என். வேலுமணி இப்படத்தை தயாரித்தார். டைரக்ஷன் கே. சங்கர். வசனம் மா. லட்சுமணன், இசை விசுவநாதன் ராமமூர்த்தி.
இந்தப் படம் இந்தியில் “சேஷநா” என்ற பெயரில் தயாரிக்கப்பட்டது. அடுத்து 1964 இல் சின்னப்பதேவர் தயாரித்த ‘தெய்வத்திருமகள்’ என்ற படத்திலும் அசோகன் கதாநாயகனாக நடித்தார். சந்திரகாந்தாதான் இந்தப்படத்திலும் கதாநாயகி. அடுத்து 1965 ஆம் ஆண்டில் அசோகன் கதாநாயகனாக நடித்து 3 படங்கள் வெளிவந்தன.
அதில் ஒன்று சின்னப்பதேவர் தயாரித்த தண்டாயுதபாணி பிலிம்ஸ் “காட்டு ராணி” இதில் அசோகனுடன் கே.ஆர். விஜயா நடித்திருந்தார். கதை, வசனத்தை ஆரூர்தாஸ் எழுதினார். டைரக்டர் எம்.ஏ. திருமுகம். மற்றொரு படம் ஏ. காசிலிங்கம் தயாரித்து வெளிவந்த “கார்த்திகை தீபம்.” அசோகன், வசந்தா நடித்திருந்தனர்.
மாடர்ன் தியேட்டர்ஸ் ஆர். சுந்தரம் தயாரித்து இயக்கிய “வல்லவனுக்கு வல்லவன்” படத்தில் அசோகன் மணிமாலா இணைந்து நடித்தார்கள். இது வெற்றிப்படமாகும். அதன் பின்னர் வில்லன் வேடங்களிலேயே ஏராளமான படங்களில் நடிக்கலானார்.
அசோகன் தனது மூத்த மகன் பெயரில் “அமல்ராஜ் மூவிஸ்” என்ற படக்கம்பெனி தொடங்கினார். அதன் சார்பில் எம்.ஜி.ஆர். கதாநாயகனாக நடித்த “நேற்று இன்று நாளை” என்ற படத்தை தயாரித்து வெளியிட்டார். இரவும் பகலும் என்ற படத்திலும் “இறந்தவனை சுமந்தவனும் இறந்துட்டான். அதை இருப்பவனும் எண்ணிப்பார்க்க மறந்துட்டான்” என்ற பாடலை சொந்தக் குரலில் பாடி நடித்தார்.
அசோகனுக்கு 1982 ஆம் ஆண்டு ஜுலை மாத இறுதியில் திடீர் என்று மாரடைப்பு ஏற்பட்டது.
அவரை வட பழனியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். 3 மாதம் ஆஸ்பத்திரியிலேயே தங்கி சிகிச்சை பெற்றார். 19.11.1982 அன்று மீண்டும் மாரடைப்பு ஏற்பட்டது. அதில் இருந்து அவரை டொக்டர்களால் காப்பாற்ற முடியவில்லை. அன்று இரவு 9.35 மணி அளவில் அசோகன் உயிர் பிரிந்தது.
கிறிஸ்தவரான அசோகன் இந்து மதத்தைச் சேர்ந்த சரஸ்வதியை காதலித்து மணந்து கொண்டார். இந்தத் தம்பதிகளுக்கு அமல்ராஜ், வின்சென்ட் என்ற 2 மகன்கள்.
சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள கிறிஸ்தவ கல்லறைத் தோட்டத்தில் கிறிஸ்தவ முறைப்படி அசோகனின் உடல் அடக்கம் செய்யப்பட்டது. அசோகன் மரணம் அடைந்தபோது முதல் அமைச்சர் எம்.ஜி.ஆர். டில்லியில் இருந்தார். அவருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து எம்.ஜி.ஆர். வெளியிட்ட அனுதாபச் செய்தியில் கூறியிருந்ததாவது:
“நடிகர் அசோகனின் மறைவு செய்தி கேட்டு அதிர்ச்சி அடைந்தேன். அவர் என்னுடைய இனிய நண்பர். கலை உலகம் ஒரு நல்ல கலைஞரை இழந்துவிட்டது. அசோகனின் குடும்பத்தினருக்கு என் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு எம்.ஜி.ஆர். கூறி இருந்தார்.

நகைச்சுவையை பாடல்கள் மூலமும் தரலாம்



உணர்த்திய ஜோடி மதுரம் - கிருஷ்ணன்


டி.ஏ. மதுரம் (1918-1974) தமிழ்த் திரைப்பட நகைச்சுவை நடிகையும் பாடகியும் ஆவார்.
திருச்சியில் 1918 ஆம் ஆண்டு ஒரு கலைக் குடும்பத்தில் பிறந்தார். மதுரத்தின் கலை வாழ்க்கையும் வாய்ப்புகளும் அவரது கணவரும் திரைப்பட நடிகருமான கலைவாணர் என். எஸ். கிருஷ்ணனின் இணைவால் மலர்ச்சி பெற்றன.
ஆனால் கிருஷ்ணன் திரை அறிமுகம் பெற்ற 1935 லேயே தனிப்பட்ட முறையில் மதுரமும் திரைப் பிரவேசம் செய்து விட்டார். அப்போது அவர் பெயர் டி. ஏ. மதுரம் அல்ல, டி. ஆர். ஏ. மதுரம், ஆர். சென்ற பிறகுதான் அவரது திரைவாழ்க்கை திருப்பம் கண்டது.
திருப்பூர் டாக்கீஸ் லிமிடெட் புனேவில் எடுத்த படம் ‘வசந்த சேனாவில் (1936) கிருஷ்ணனுடன் முதன் முதலாக நடித்தார். அந்த நாள் முதல் அவரின் இணையாகவே நடித்துள்ளார். நகைச்சுவையை சினிமா காட்சிகளாக மட்டுமன்றி பாடல்களாகவும் அமைக்க முடியும் என தனது கணவருடன் நிரூபித்தவர். சொந்தக் குரலில் பல பாடல்களை பாடியுள்ளார்.

 

சென்னையில் முதன் முதலாக தன்பெயரில் திரையரங்கை கட்டிய முதல் நடிகை

ஜpப்சி - டிரம்ஸ் நடனங்களில் புகழ் பெற்றவர்

டி.ஆர். ராஜகுமாரி (மே 5,1922 - செப்டெம்பர் 20, 1999) தமிழ்த் திரையுலகின் முன்னணி நடிகையாக இருந்தவர். நடிப்பு நடனம், பாடல் அனைத்திலும் பெயர்பெற்றவர்.
ராஜாயி என்னும் இயற் பெயரைக் கொண்ட டி. ஆர். ராஜகுமாரி தஞ்சாவூரில் பிறந்தவர். தாயார் தஞ்சை குஜலாம்பாள் அன்று தஞ்சாவூரில் புகழ்பெற்ற இசை (சங்கீத) மேதை, பிறந்த சில நாட்களில் தகப்பனாரைப் பறிகொடுத்தவர். இவர் திருமணமே செய்து கொள்ளாமல் தன் சகோதரர் டி. ஆர். ராமண்ணா குடும்பத்துக்கு ஆதரவாக வாழ்ந்தார்.
1939 ஆம் ஆண்டு டெக்கான் சினிடோனின் குமார குலோத்துங்கன் படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். அதைத் தொடர்ந்து மந்தாரவதி, சூர்யபுத்ரி படங்களில் கதாநாயகியாக நடித்தார். இவையனைத்தையும் படுதோல்விப் படங்களாயிருந்தும் அதைத் தொடர்ந்து கே. சுப்பிரமணியத்தின் தயாரிப்பில் வெளிவந்த கச்ச தேவயானி படம் பெரு வெற்றி பெற்றது.
ராஜகுமாரி பல புகழ்பெற்ற நடிகர்களுடன் நடித்தவர். பி. யு. சின்னப்பாவுடன் மனோன்மணி படத்திலும், பாகவதருடன் சிவகவி, ஹரிதாஸ் படங்களிலும் நடித்தார். ஹரிதாஸ் 1945 தீபாவளியன்று வெளியாகி 1946 தீபாவளி முடிய தொடர்ந்து 110 வாரங்கள் ஒரே திரையரங்கில் ஓடி சாதனை படைத்தது. ஜெமினியின் சந்திரலேகா படம் இவருக்கு பேரும் புகழும் தேடிக்கொடுத்து.
இதில் எம். கே. ராதாவுக்கு ஜோடியாக நடித்தார். அதில் இவர் ஆடிய ‘ஜிப்சி’ நடனம் மற்றும் உச்ச கட்ட காட்சியில் ஆடிய ‘டிரம்ஸ்’ நடனம் இவருக்கு இந்திய அளவில் பாராட்டுக்களைக் குவித்தது. இந்தி சந்திரலேகாவிலும் நடித்தார்.
கலைஞர் மு. கருணாநிதியின் வசனத்தில் உருவான மனோகரா படத்தில் வசந்த சேனையாக இவர் தோன்றி நடித்திருந்தார். எம். கே. தியாகராஜா பாகவதர். பி. யு. சின்னப்பா, எம். கே. ராதா டி. ஆர். மகாலிங்கம், எம். ஜி.ஆர், சிவாஜி கணேசன் என அன்றைய முன்னணிக் கதாநாயகர்களுடன் நடித்துப் புகழ்பெற்றவர் ராஜகுமாரி சென்னையில் முதன் முதலாக தன்னுடைய பெயரிலேயே சொந்தமாக திரையரங்கினைக் கட்டிய முதல் நடிகை இவர்தான்.
எம். ஜி. ஆருடன் பணக்காரி (1953) இலும், சிவாஜியுடன் அன்பு படத்திலும் இணைந்து நடித்தார். தனது 37 ஆவது வயதிலும் 1959 இல் சிவாஜியுடன் இணைந்து தங்கப்பதுமையில் நடித்திருந்தார்.
இவர் 1963 இல் கடைசியாக இரண்டு படங்கள் நடித்தார். கவியரசர் கண்ணதாசன் தயாரித்த வானம்பாடி படத்தில் எஸ். எஸ். ராஜேந்திரனுக்கு அக்காவாகவும், டி. ஆர். ராமன்னா¡வின் இயக்கத்தில் வெளிவந்த பெரிய இடத்துப் பெண் படத்தில் எம்.ஜி.ஆருக்குச் சகோதரியாகவும் நடித்திந்தார் அதற்குப் பின் படங்களில் நடிக்கவில்லை.


கமலின் பின்னால் ஹாசன் எப்படி வந்தது




கமல் ஹாசன் - கமலின் பின்னால் தொக்கி நிற்கும் ஹாசன் எப்படி வந்தது தெரியுமா?
கமல்ஹாசன் - கமலின் பின்னால் தொக்கி நிற்கும் ஹாசன் என்ற இஸ்லாமிய பெயரால், வெளிநாட்டு விமான நிலையங்களில் பல முறை அவர் அதீத சோதனைக்கு உள்ளாக்கப் பட்டிருக்கிறார்.
அந்தப் பெயர் அவருக்கு எப்படி வந்தது தெரியுமா? சுதந்திர போராட்டத்தின் போது, ஆங்கிலேயர்களால் சிறையில் அடைக்கப்பட்டார் கமலின் தந்தை ஸ்ரீநிவாசன், சிறையில் இருந்த பிராமண எதிர்ப்பு தரப்பினரால் அவருக்கு அங்கு பாதுகாப்பற்ற நிலை ஏற்பட்டது.
அப்போது ஸ்ரீநிவாசனை பாதுகாத்தது சிறையில் அவருடன் அடைக்கப்பட்டிருந்த மற்றொரு விடுதலை போராட்ட வீரர் யாகோப் ஹாசன் அவரின் நினைவாகத்தான் மகன்கள் அனைவருக்கும், சந்திரஹாசன், சாருஹாசன்.
கமல்ஹாசன் என்று பெயர் வைத்துள்ளார் ஸ்ரீநிவாசன். ஆனால் ஹாசன் என்பது சமஸ்கிருதம் என்றும், அதற்கு ஹாஸ்யம் என்று அர்த்தம் என்றும் ஒரு தகவல் உலாவிக் கொண்டிருக்கிறது.