Tuesday, July 24, 2012

தமிழ் நாட்டு மர்லின் மன்றோ’
 
ஹீமிழ்ப்பட உலகில் எத்தனையோ கவர்ச்சிக்கன்னிகள் இருந்திருக்கிறார்கள். ஆனால் அவர்களில் ரசிகர்களின் மனதில் தனி இடம் பிடித்து, கனவுக்கன்னியாகத் திகழ்ந்தவர், ‘சில்க்’ சுமிதா, அவருடைய தொடக்க காலம் சோதனை மிக்கதாக இருந்தது போலவே, இறுதிக்காலமும் சோகமானதாக அமைந்தது.
சில்க் சுமிதாவை ரசிகர்கள் ‘தமிழ் நாட்டு மர்லின் மன்றோ’ என்று அழைப்பது உண்டு. கிட்டத்திட்ட இரு நடிகைகளின் வாழ்க்கையும் ஒரே மாதிரிதான் அமைந்தது. சில்க் சுமிதாவின் சொந்த ஊர் ஆந்திராவில் ராஜமகேந்திரபுரம் அருகே உள்ள பேவாலி என்ற கிராமம். தாயார் பெயர் நரசம்மா. குடும்பம் ஏழ்மையில் தவித்தது. அதன் காரணமாக நான்காம் வகுப்பு வரைதான் சுமிதா படித்தார்.
‘சினிமாவில் சேர்ந்தால் நிறைய பணம் வரும். கஷ்டம் தீரும்’ என்று நினைத்த சுமிதா, 12 வது வயதில் வீட்டை விட்டு சென்னைக்கு ஓடி வந்தார். சென்னையில் உள்ள ஸ்டூடியோக்களில், வேலை கேட்டு அலைந்தார். பல சோதனைகளை அனுபவித்தார்.
டைரக்டர் கே. விஜயன் தயாரித்த ‘வண்டிச்சக்கரம்’ என்ற படத்தில் சாராயம் விற்கும் ‘சில்க்’ என்ற பெண்ணாக நடித்தார். அந்தப் படத்தில் அவர் நடிப்பு ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தது. அது முதல் ‘சில்க்’சுமிதா ஆனார்.
பாரதிராஜா தயாரித்த ‘அலைகள் ஓய்வதில்லை’ படத்தில், குணச்சித்திர வேடத்தில் நடித்து புகழ் பெற்றார்.  ‘சகலகலா வல்லவன்’ படத்தில் கமலஹாசனுடன் கவர்ச்சி நடனம் ஆடினார். ‘நேற்று ராத்திரி..... யம்மா’ என்ற பாடலுக்கு அவர் போட்ட ஆட்டம், ரசிகர்களைத் தாளம் போட வைத்தது.
பாலுமகேந்திராவின் ‘மூன்றாம் பிறை’ படத்தில், ‘உருகுதே....’ என்ற பாடலுக்கு சுமிதா நடனம், ரசிகர்களை உருக வைத்தது. அந்தக் காலகட்டத்தில், சுமிதாவின் கவர்ச்சி நடனம் இருந்தால் ஓடாத படமும் ஓடும் என்ற நிலை ஏற்பட்டது. அதனால் ஓய்ச்சல் ஒழிவு இன்றி ஏராளமான படங்களில் நடித்தார்.
அவர் பெயரை வைத்தே ‘சில்க் ..... சில்க்.... சில்க்’ என்ற படம் வெளிவந்தது.
குறுகிய காலத்தில் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி ஆகிய 4 மொழிகளில், 300 க்கும் மேற்பட்ட படங்களில் சுமிதா நடித்து முடித்தார். லட்சக்கணக்கான ரசிகர்களை ஏங்க வைத்த சுமிதா, திருமணம் செய்து கொள்ளவில்லை. ஆயினும் விழாக்களிலும் நிகழ்ச்சிகளிலும் அவர் ஒரு தாடிக்காரருடன் காணப்பட்டார்.
அவர் பெயர் ராதாகிருஷ்ணமூர்த்தி, 33 வயது சில்க் சுமிதாவும், 48 வயது ராதாகிருஷ்ணமூர்த்தியும், ஒரே வீட்டில் வசித்து வந்தனர். ராதாகிருஷ்ணமூர்த்தி ‘எம்.பி.பி.எஸ்’ படித்த டாக்டர்.
இருவரைப் பற்றியும், பத்திரிகைகளில் கிசுகிசுக்கள் வெளிவந்தபோது அது பற்றி சுமிதா கவலைப்படவில்லை. ‘நாங்கள் கணவன் மனைவியாகத்தான் வாழ்ந்து வருகிறோம்’ என்று சுமிதா பகிரங்கமாக அறிவித்தார்.
டொக்டர் ஏற்கனவே திருமணம் ஆனவர். ஒரு மகன், மகள் உண்டு. மகளின் குழந்தை பெயர் உத்ரா, 3 வயது, அந்தக் குழந்தை மீது ‘சில்க்’ சுமிதாவுக்கு கெள்ளைப் பிரியம். படப்பிடிப்பு இல்லாதபோது, அந்தக் குழந்தையுடன்தான் இருப்பார். தூங்கும் போது கூட, அந்தக் குழந்தையை தன் அருகே படுக்க வைத்துத் தூங்குவது வழக்கம்.
22.09.1996 இரவு 11 மணிக்கு சுமிதா வழக்கம் போல அந்தக் குழந்தையுடன் தனது படுக்கை அறைக்குச் சென்றார். குழந்தையை பக்கத்தில் படுக்க வைத்து தூங்கினார். அந்த படுக்கை அறைக்கு முன்புறம் ஒரு வழியும், பின்புறம் ஒரு வழியும் இருக்கிறது. இரண்டு பக்க அறைக்கதவையும் உள்பக்கம் தாழ்பாள் போட்டு இருந்தார்.
மறுநாள் காலை 8 மணி அளவில் சில்க் சுமிதாவுடன் படுத்திருந்த குழந்தை உத்ரா வீறிட்டு அழும் சத்தம் கேட்டது. குழந்தை அழும் சத்தம் தொடர்ந்து கேட்கவே, பக்கத்து அறையில் படுத்து இருந்த ராதாகிருஷ்ணமூர்த்தி எழுந்து வந்தார்.
கீழ் அறையில் படுத்து இருந்த ராதாகிருஷ்ணமூர்த்தியின் மகன் ராமுவும் எழுந்து வந்தார். இருவரும் சில்க் சுமிதாவின் அறைக்கதவை ‘பட பட’வென தட்டினார்கள். ஆனால் நீண்ட நேரம் ஆகியும் கதவு திறக்கப்படவில்லை. குழந்தையின் அழுகை சத்தமும் தொடர்ந்து கேட்டுக் கொண்டே இருந்தது.
இதனால் இருவரும் சந்தேகம் அடைந்து வீட்டின் பின்பக்கமாக ஓடினார்கள். பிறகு ஏணி மூலம் பின்பக்கமாக ஏறி சில்க் சுமிதாவின் படுக்கை அறை ஜன்னல் வழியாக எட்டிப்பார்த்தனர். அங்கே அவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. படுக்கை அறையில் உள்ள மின்சார விசிறியில் சில்க் சுமிதா தூக்கில் தொங்கிக்கொண்டு இருந்தார்.



வடிவான இதழ் மீது சுவை என்ன தந்தார்?

நான் மலரோடு தனியாக ஏன் இங்கு நின்றேன்? - என்
மகராணி உனைக் காண ஓடோடி வந்தேன்
நான் மலரோடு தனியாக ஏன் இங்கு நின்றேன்? - என்
மகராணி உனைக் காண ஓடோடி வந்தேன்

நீ இல்லாமல் யாரோடு உறவாட வந்தேன்?
உன் இளமைக்குத் துணையாக தனியாக வந்தேன்

நான் மலரோடு தனியாக ஏன் இங்கு நின்றேன்? - என்
மகராணி உனைக் காண ஓடோடி வந்தேன்

நீ வருகின்ற வழிமீது யார் உன்னைக் கண்டார்?
உன் வளை கொஞ்சும் கைமீது பரிசென்ன தந்தார்?
உன் மலர்க்கூந்தல் அலைபாய அவர் என்ன சொன்னார்?
உன் வடிவான இதழ்மீது சுவை என்ன தந்தார்?
உன் மலர்க்கூந்தல் அலைபாய அவர் என்ன சொன்னார்?
உன் வடிவான இதழ்மீது சுவை என்ன தந்தார்?
நீ இல்லாமல் யாரோடு உறவாட வந்தேன்?
உன் இளமைக்குத் துணையாக தனியாக வந்தேன்

நான் மலரோடு தனியாக ஏன் இங்கு நின்றேன்? - என்
மகராணி உனைக் காண ஓடோடி வந்தேன்

பொன்வண்டொன்று மலரென்று முகத்தோடு மோத
நான் வளைகொண்ட கையாலே மெதுவாக மூட
பொன்வண்டொன்று மலரென்று முகத்தோடு மோத
நான் வளைகொண்ட கையாலே மெதுவாக மூட
என் கருங்கூந்தல் கலைந்தோடி மேகங்களாக
நான் பயந்தோடி வந்தேன் உன்னிடம் உண்மை கூற
என் கருங்கூந்தல் கலைந்தோடி மேகங்களாக
நான் பயந்தோடி வந்தேன் உன்னிடம் உண்மை கூற

நீ இல்லாமல் யாரோடு உறவாட வந்தேன்?
உன் இளமைக்குத் துணையாக தனியாக வந்தேன்

நான் மலரோடு தனியாக ஏன் இங்கு நின்றேன்? - என்
மகராணி உனைக் காண ஓடோடி வந்தேன்



படம் : இரு வல்லவர்கள்
பாடியவர் : டி. எம். செளந்தரராஜன், பி. சுசீலா
இயற்றியவர் : கவிஞர் கண்ணதாசன்
ஆண்டு : 1966



காதலிக்க நேரமில்லை' யில் வாய்ப்பு கிடைத்தது சுவாரஸ்யமான கதை

துள்ளுவதோ இளமை ராஜஸ்ரீ

துள்ளுவதோ இளமை... ராஜஸ்ரீ இப்போது...! நேத்துதான் என் முதல் பட ஹீரோ ரவி (ரவிச்சந்திரன்)யை ஹாஸ்பிடல்ல பார்த்தேன். கோமாவில் இருக்காரு... மனசுக்கு ரெம்ப கஷ்டமா இருந்தது.
‘காதலிக்க நேரமில்லை’ படத்தில் எல்லாரும் இளமையான யூனிட்டா ஜாலியா வோர்க் பண்ணினது பசுமையா நினைவிருக்கு.... ஸ்ரீதர் சார், முத்துராமன், நாகேஷ்னு ஒவ்வொருத்தரா போய்க்கிட்டே இருக்காங்க...’ கண்கள் கலங்குவதற்கு முன்சுதாகரித்துக் கொண்டு “அதுக்கு என்ன பண்ண முடியும்?.....” என்கிறார் ராஜஸ்ரீ. ரவிச்சந்திரன் மரணத்திற்கு ஒரு நாள் முன்பு எடுத்த பேட்டி இது.
“குயிடிருந்த கோயில்” படத்தில் “துள்ளுவதோ இளமை.....” என்று எம்.ஜி.ஆருடன் இணைந்து வித்தியாசமான உடையில் உற்சாகமான ஆட்டம் போட்டு நம்மை ரசிக்க வைத்தவர் ராஜ ஸ்ரீ. அவரை தி. நகர் இல்லத்தில் சந்தித்தோம். கலை உலக அனுபவங்களைச் சுவாரஸ்யமாகச் சொல்ல ஆரம்பித்தார்.
“நான் பிறந்தது ஆந்திராவில் உள்ள ஏலூர் என்கிற கிராமத்தில். அங்கு என்னுடைய அப்பா ஸ்டேஷன் மாஸ்டராக இருந்தார். என் கூட பிறந்தது ஒரே ஒரு அக்கா மட்டும் தான். அப்பவே அவங்களுக்கு திருமணமாகி பிள்ளைகள் இருந்தாங்க. எனக்கு பத்து வயதிருக்கும் பொழுது சென்னைக்கு வந்தோம். அப்போ தி. நகர்ல நாங்க இருந்த தெருவுல தான் நடிகை ஜமுனா, கிருஷ்ணகுமாரி, ஹீரோ செல்லம் என தெலுங்கு ஆர்ட்டிஸ்ட்கள் வீடும் இருந்தது. அவங்க வீட்டுக்கு நாங்க விளையாடப் போவோம்.
ஜமுனா வீட்டுக்கு ஏவி.எம். ஸ்டுடியோவில் டான்ஸ் மாஸ்டரா இருந்த தண்டாயுதபாணி பிள்ளை டான்ஸ் சொல்லிக் கொடுக்க வருவாரு. டான்ஸ் மாஸ்டரும் எங்ககிட்ட நல்ல பிரண்ட் ஆகிட்டாரு. அந்த நேரத்துல ஆந்திராவில் இருந்து எங்க வீட்டுக்கு நிறைய விருந்தாளிகள் வந்திருந்தாங்க. அவங்க ஷ¥ட்டிங் பார்க்கணும்ன்னு ஆசையா கேட்டாங்க. அதுவரை ஷ¥ட்டிங்கன்னா என்ன, சினிமான்னா என்னன்னு எதுவும் எங்களுக்குத் தெரியாது.
டான்ஸ் மாஸ்டர்கிட்ட போய் ஷ¥ட்டிங் பார்க்கணும்ன்னு கேட்டேன். மாஸ்டர் ஒரு லெட்டர் எழுதிக் கொடுத்து, “இதை எடுத்துகிட்டு நாளைக்கு ஏவி.எம்க்கு ஸ்டுடியோவுக்கு வாங்க. உள்ளே விடுவாங்க....”ன்னு சொன்னார்.
அவர் சொன்ன மாதிரியே நாங்களும் போய் ஒவ்வொரு ப்ளோரா பார்த்துகிட்டு இருந்தோம். அப்போ ஏவி.எம். ஸ்டூடியோ பரபர்ப்பா இருக்கும். தமிழ் ஷ¥ட்டிங் மட்டுமில்லாம ஹிந்தி, கன்னடம், சிங்களப் படங்கள் கூட எடுப்பாங்க. அப்படியே ஷ¥ட்டிங்கை வேடிக்கை பார்த்துகிட்டே வரும் பொழுது அங்க ரிகர்சல் ஹோல் இருந்தது.
அதில பெரிய நடராஜர் சிலைக்குப் பக்கத்துல தண்டாயுதபாணி மாஸ்டர் ஜமுனாவுக்கு டான்ஸ் ரிகர்சல் பண்ணிக்கிட்டு இருந்தாரு. அந்த இடத்தில் என் வயசு உள்ள பிள்ளைங்க நிறைய பேர் டான்ஸ் ஆடிக்கிட்டு இருந்தாங்க. அங்க ஏவி.எம். செட்டியாரும் இருந்தாரு.
அவர் என்னைப் பார்த்ததும் இந்தப் பொண்ணு ரொம்ப நல்லா இருக்கு. ஜமுனாவோட சின்ன வயசு கேரக்டருக்கு இந்தப் பொண்ணு பொருத்தமா இருக்கும்ன்னு சொன்னார். மாஸ்ட்ர் “அவங்க வீட்டில் நடிக்க எல்லாம் ஒத்துக்க மாட்டாங்க...”ன்னு சொன்னார். செட்டியார் “பேசிட்டுச் சொல்லுங்க....”ன்னு சொல்லிட்டுப் போயிட்டார்.
அம்மாகிட்ட வந்து பேசினாங்க. “சினிமாவில எல்லாம் நடிச்சா எங்க கேஸ்ட்ல கல்யாணம் பண்ணிக்கமாட்டாங்கா. அதனால வேண்டாம்....”ன்னு சொன்னாங்க. ஆனா செட்டியாரும், மாஸ்டரும் விடல.
“சின்ன பொண்ணு தானே இதுல என்ன இருக்கு”ன்னு அம்மாகிட்ட பேசிப் பேசி சம்மதம் வாங்கிட்டார். அதன் பிறகு அந்தப் படத்தில் ஜமுனாவின் சின்ன வயசு கேரக்டரில் நடித்தேன். ஒரே பாட்டுல சின்ன வயசுல இருந்து பெரிய வயசுக்கு மாறுவது மாத்திரி சீன். அந்தப் படம் பேரு ‘நாக தேவதை’ அது தான் நான் நடிச்ச முதல் படம்.
அதன் பிறகு ஏவி.எம்ல என்னை நிரந்தர நடிகையாக ஒப்பந்தம் பண்ணிட்டாங்க. மாதம் இவ்வளவுன்னு சம்பளம் கொடுத்தாங்க. பள்ளிக்கூடம் இல்லாத நேர்த்தில் கார் அனுப்புவாங்க. டான்ஸ், பாட்டு, தமிழ், இந்தி என்று மற்ற மொழிகளையும் கற்றுக் கொடுத்தாங்க. அப்போ சச்சுவும் அங்க நிரந்தர நடிகையாக இருந்தாங்க. சச்சுவோட அவங்க பாட்டி வருவாங்க. என்னோட எங்க அக்கா வருவாங்க. அக்காவுக்கும் எனக்கும் ரொம்ப வயசு வித்தியாசம். அதனால எல்லாரும் அவரை என் அம்மான்னுதான் நினைப்பாங்க.
இந்த நேரத்தில சித்தூர் நாகய்யா “பக்த ராமதாஸ்”ன்னு தெலுங்குல ஒரு படம் எடுத்தாரு. அந்தப் படத்துல கண்ணாம்மா அவங்களுக்கு ஜூனியரா நடிக்கணும்ன்னு கேட்டாரு. அந்த நேரத்துல நான் ஏவி.எம். மோட நிரந்தர நடிகையாக மூன்று வருடம் ஒப்பந்தம் போட்டிருந்தோம். வேறு படங்களில் நடிக்க போகக் கூடாதுங்கிறது விதி.
நல்ல சான்ஸ் மிஸ்பண்ண வேணாம்னு வீட்டில முடிவு பண்ணினாங்க. எனக்குக் கல்யாணம் செய்யப்போறதா சொல்லி, ஏவி.எம்.ல. இருந்து வெளியே வந்து, அந்தப் படத்துல நடிச்சேன்.
அந்தக் காலத்துல ஒரு படம் எடுக்குறதுக்குக் குறைஞ்சது நாலு, அஞ்சு வருஷமாவது ஆகிவிடும். அந்த இடைவெளியில் நாங்க ஓரளவு வளர்ந்திடுவோம். அதனால் ஒரு சீன்ல பார்த்தா சின்னதா இருப்போம். ஒரு சீன்ல பார்த்தா பெரிய பொண்ணா இருப்போம். இப்படியே இரண்டு மூன்று படங்களில் நடிப்பதற்குள்ள நானும் ஓரளவு வளர்ந்துட்டேன்.
இது சோத¨யான கட்டம். அந்த வயசுல சைல்டு ஆர்ட்டிஸ்ட்டாகவும் நடிக்க முடியாது. ஹீரோயினாவும் நடிக்க முடியாது. ஏன்னா அப்போ எல்லாம் 20 - 21 வயதுக்கு மேல இருந்தாதான் ஹீரோயின் சான்ஸ் கொடுப்பாங்க. சாவித்திரி, தேவிகா, கிருஷ்ணகுமாரி எல்லாருமே அப்படித்தான் இருப்பாங்க. அதற்கு கம்மியான டீன் ஏஜ் வயசுல இருந்தா பேபி ஃபேஸ் இருக்குன்னு சொல்லி செகண்ட் ஹீரோயின், ஹீரோவோட தங்கை இந்த மாதிரியான சான்ஸ் கொடுப்பாங்க.
தெலுங்குல அந்த மாதிரி கேரக்கடரில் நடிக்கறதுக்கு நிறைய வாய்ப்பு வந்து அங்கு பிஸியாகிட்டேன். அதனால தமிழில் வந்த சில நல்ல பட வாய்ப்புகளையும் இழந்துவிட்டேன். உதாரணத்துக்குச் சொல்லணும்ன்னா பத்மினி, எம்.ஆர். ராதா நடிச்ச ‘சித்தி’ படத்தில் முத்துராமனுக்கு ஜோடியாக நடிச்ச விஜய நிர்மலா பாத்திரத்தில் நான்தான் நடிச்சிருக்கணும்.
அதன் பிறகு தமிழில் ஹீரோயினா அறிமுகமானது “காதலிக்க நேரமில்லை” படத்தில்தான். அந்தப் படத்தில் எனக்கு வாய்ப்பு கிடைச்சது சுவாரஸ்யமான கதை.
ஒரு நாள் வீட்டுக்கு ஒரு போன் வந்தது. போனில் பேசியவர் “நான் டைரக்டர் ஸ்ரீதர் பேசுறேன். நாளைக்கு ஷ¥ட்டிங் இருக்கு. கார் அனுப்புறேன் கிளம்பி வந்துடுங்க”ன்னு சொல்லிட்டு போன் வெச்சிட்டார்.
எங்களுக்கு டவுட்.... நாளைக்கு ஷ¥ட்டிங் வெச்சுட்டு இன்னைக்கா சொல்வாங்க. யாரோ சும்மா கிண்டல் செய்றாங்கன்னு நினைச்சோம். எங்க வீட்ல இருந்து சித்ராலாயாவுக்கு போன் பண்ணி கேட்டாங்க. அவங்களும் நாங்கதான் போன் பண்ணினோம். நாளைக்கு ஷ¥ட்டிங் இருக்கு வந்துடுங்கன்னு மறுபடியும் சொன்னாங்க. அப்பவும் எங்களுக்குக் குழப்பமாவே இருந்தது. ஏன்னா டிரஸ்க்கு அளவும் எடுக்கல, ஒண்ணுமில்லன்னு. சரி பெரிய டைரக்டர் சொல்றாரு, போய் பார்ப்போமேன்னு மறுநாள் போனேன்.
ஷ¥ட்டிங் சென்னையிலதான் நடந்தது. செட் போட்டிருந்தாங்க. சோங் ஷ¥ட் பண்றதா சொல்லி ஒரு நைட்டி கொண்டு வந்து கொடுத்து இதுதான் கொஸ்ட்யூம்னு சொன்னாங்க. ஹேர் ஸ்டைல் இல்ல, டான்ஸ் மூவ்மண்ட்ஸ் இல்ல. வெறும் எக்ஸ்பிரஷ்ன்தான். அதையும் டைரக்டரே இப்படி செய்மா, அப்படி செய்மான்னு சொல்லி கொடுத்துட்டாரு. அப்பத்தான் எங்களுக்குப் புரிஞ்சது நைட்டிங்கிறதுனால தான் டிரஸ் எல்லாம் அளவு எடுக்கலன்னு.
முதல் நாள், முதல் காட்சி “அனுபவம் புதுமை....” பாடல். அப்போ அந்தப் பாட்டுல ஆண் குரல் வரும் பொழுது யார் ஹீரோவா நடிக்கறாங்கன்னு தெரிஞ்சுக்க ஆர்வமா இருந்தது. ஹீரோ யாருன்னு சொல்லல. இருந்தாலும் என்னோட போர்ஷன்ஸ் எல்லாம் நல்லபடியா முடிச்சு கொடுத்திட்டேன். அப்புறம்தான் ஹீரோவா ஒரு புதுப் பையன் நடிக்கிறாருன்னு சொன்னாங்க.
ஆனா ரவிசந்திரனுக்கு என்னன்னா நான்தான் அவருடைய முதல் ஹீரோயின். மலேசியாவில் இருந்து அப்பத்தான் நடிக்க வர்றாரு. அதன் பிறகுதான் காஞ்சனா, முத்தராமன், நாகேஷ், சச்சு எல்லாரும் வந்தாங்க. ரொம்ப எனர்ஜியான யங் டீம்மோடு வோர்க் பண்ணினோம். சென்னையில ஊட்டியில, பொள்ளாச்சி ஆழியார் டேம்ல எல்லாம் எடுத்தாங்க. படம் நல்லபடியா முடிஞ்சது. படம் பெரிய அளவில் வெற்றிப் பெற்று எனக்குப் புகழைத் தேடித்தந்தது.
படம் சூப்பர் ஹிட்டா போனதால அதை அப்படியே தெலுங்குல எடுத்தாங்க. அதில் நானும், காஞ்சனாவும் தமிழ்ல நாங்க நடிச்ச கேரக்டர்ல நடிச்சோம். அதே படம் இந்தியில் “பியார் கியே ஜான்”னு எடுத்தாங்க. அப்ப என் கேரக்டரை நானே இந்தியில நடிச்சேன். மூணு லாங்வேஜ்லையுமே படம் நல்ல ஹிட். ஆனா தெலுங்குல மட்டும் பிளாக் அண்ட் வொயிட்ல எடுத்தாங்க.
“பாமா விஜயம்”, “பூவா தலையா”, “அனுபவி ராஜா அனுபவி”, சிவாஜியோட “நீலவானம்” எஸ்.எஸ். ஆருடன் “பூம்புகார்”, ஜெயசங்கருடன் “செல்வமகள்”னு நிறைய தமிழ்ப் படத்தில நடிச்சேன்.

Tuesday, July 10, 2012


 

வாணிஸ்ரீ, எஸ்.எஸ். சந்திரன், சுருளிராஜன் அறிமுகமான படம்


ஜீலைஞானத்தை சிட்டாடல் அதிபர் ஜோசப் தளியத் வரவேற்று உபசரித்தார். ‘நீங்கள் நன்றாக கதை சொல்வீர்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறேன் எனக்கு சொல்ல முடியுமா?’ என்று கேட்டார். கலைஞானம், தன் இதயச் சுரங்கத்தில் வைத்திருந்த கதைகளில் இரண்டு கதைகளை காட்சி வாரியாக விரிவாகச் சொன்னார். கதை சொல்லி முடிக்க இரண்டு மணி நேரம் ஆயிற்று.
கதையைக் கேட்ட ஜோசப் தளியத், கலைஞானத்தைக் கட்டித் தழுவிக் கொண்டார். ‘இரண்டு கதைகளையும் நானே வாங்கிக் கொள்கிறேன்’ என்று கூறிவிட்டு, ஐந்து நூறு ரூபாய் நோட்டுக்களை அட்வான்சாகக் கொடுத்தார்.
அதுவரை ஒரு நூறு ரூபாய் நோட்டைக் கூட கையில் வாங்கியிராத கலைஞானம், ஐந்து நூறு ரூபாய்களைப் பெற்றதும் மகிழ்ச்சியில் திக்குமுக்காடிப் போனார்.
கலைஞானத்தின் இரண்டு கதைகளில் ஒன்றான ‘காதல் படுத்தும்பாடு’ கதையை முதலில் படம் எடுக்க ஜோசப் தளியத் முடிவு செய்தார். அடுத்த மாதமே படப்பிடிப்பு தொடங்கியது. இது இரு மொழிப் படம். ஒரே நேரத்தில் தமிழிலும், தெலுங்கிலும் படமாகியது. தமிழில் கதாநாயகியாக வாணிஸ்ரீ அறிமுகமானார். சுருளிராஜன், எஸ். எஸ். சந்திரன், எடிட்டர் வெள்ளைச்சாமி ஆகியோருக்கும் இதுதான் முதல் படம்.
படத்தின் ஹீரோ ஜெய்சங்கர்.
இந்தப்படத்தில் வாணிஸ்ரீ கதாநாயகியாக நடித்ததே எதிர்பாராமல் நடந்த நிகழ்ச்சியாகும்.
முதலில் இப்படத்தில் கதாநாயகியாக நடித்தவர் ராஜஸ்ரீ (காதலிக்க நேரமில்லை படத்தில் நடித்தவர்). சில ஆயிரம் அடிகள் அவரை வைத்துப் படமாக்கினார்கள். அதன்பின் அவர் ஒரு இந்திப் படத்தில் நடிக்கப் போய்விட்டார்.
அதுவரை படமாக்கப்பட்டிருந்த காட்சிகளை நீக்கிவிட்டு புதிய கதாநாயகியைப் போட்டு படத்தை எடுக்க ஜோசப் தளியத் தீர்மானித்தார். இந்தப் படத்தின் தெலுங்குப் பதிப்பில் கதாநாயகியாக கிருஷ்ணகுமாரி நடித்து வந்தார்.
அவருக்குத் தோழியாக வாணிஸ்ரீ நடித்தார். அவர் தோற்றத்தையும், நடிப்பையும் பார்த்த கலைஞானம், ‘எதிர்காலத்தில் இந்தப் பெண் பெரிய நடிகையாக வருவார்’ என்று கணித்தார். எனவே, ‘ராஜஸ்ரீக்கு பதிலாக வாணிஸ்ரீயை கதாநாயகியாக போடலாமே’ என்று ஜோசப் தளியத்திடம் யோசனை தெரிவித்தார்.
அதை தளியத் ஏற்றுக்கொண்டார். வாணிஸ்ரீ கதாநாயகியாக நடித்தார்.
‘காதல் படுத்தும் பாடு’ 1966 அக்டோபர் 7ல் வெளிவந்து வெற்றிபெற்றது. அதில் பங்கு கொண்டிருந்த அனைவருக்கும் பெயரும், புகழும் கிடைத்தன. குறிப்பாக கலைஞானம் சிறந்த கதாசிரியராகப் போற்றப் பாட்டார். பல பட அதிபர்கள் அவரை அணுகி கதை கேட்டார்கள்.


இளையராஜாவை அறிமுகம் செய்தவர் பஞ்சு அருணாசலம்


கவிஞர் கண்ணதாசனின் அண்ணன் மகன் பாடல் ஆசிரியர், கதை - வசனகர்த்தா, டைரக்டர், தயாரிப்பாளர் என்ற பல முகம் கொண்ட பஞ்சு அருணாசலம், ‘அன்னக்கிளி’ மூலம் இளையராஜாவை பட உலகுக்கு அறிமுகம் செய்தார். காரைக்குடியை அடுத்தசிறுகூடல்பட்டி கிராமம்தான் இவரது சொந்த ஊர்.
கவிஞர் கண்ணதாசனின் சொந்த அண்ணன் மகன்தான் பஞ்சு அருணாசலம். பஞ்சு அருணாசலத்தின் தந்தைதான் மூத்தவர். அடுத்தவர் ஏ. எல் சீனிவாசன். அவருக்கு அடுத்தவர் கண்ணதாசன். பஞ்சு அருணாசலம் சிறுவனாக இருக்கும்போதே கண்ணதாசன் பாட்டு எழுத சினிமாவுக்கு வந்துவிட்டார்.இன்னொரு சித்தப்பா ஏ. எல். சீனிவாசனோ பட அதிபராக இருந்தார்.
அதோடு சென்னையில் பிரபலமான பரணி ஸ்டூடியோவை (நடிகை பானுமதியின் சொந்த ஸ்டூடியோ) குத்தகைக்கு எடுத்து நிர்வாகம் செய்து வந்தார். ஏ. எல். சீனிவாசன் அளவுக்கு கண்ணதாசன் பிரபலமாகாத நேரம் அது.
பள்ளிக்கூடத்தில் தனிமை விரும்பியாக இருந்த பஞ்சு அருணாசலத்துக்கு சினிமாவில் முதலில் பிடித்தது பாடல்கள்தான். அத்துடன் கதைகள் படிப்பதிலும் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தார். பள்ளி முடிந்ததும் நேராக இவர் செல்வது நூல் நிலையத்துக்கு. அங்கே சரத் சந்திரர். காண்டேகர், புதுமைப்பித்தன் போன்ற பிரபல எழுத்தாளர்களின் புத்தகங்களை விரும்பிப் படிப்பார்.
‘பியூசி வரை படித்து முடித்து, மேற்கொண்டு படிக்க வசதியில்லாமல், நின்று போன படிப்போடும் மனசு நிறைய கதை எழுதும் ஆசையோடும், வீட்டில் யாரிடமும் சொல்லாமல் சென்னைக்கு பயணப்பட்டார் பஞ்சு அருணாசலம். சென்னையில் நேராக சித்தப்பா ஏ. எல். சீனிவாசன் வீட்டுக்குச் சென்று அவரை சந்தித்தார்.
இவரை மேற்கொண்டு படிக்கும்படிசொன்னார் ஏ. எல். எஸ். இவரோ ஏதாவது பத்திரிகை ஆபிசில் சேர்ந்து கதை எழுத விரும்பினார். ‘நீயெல்லாம் என்னடா கதை எழுதப் போகிறாய்!’ என்று சிரித்தார் ஏ. எல். எஸ். ‘நான் நன்றாகக் கதை எழுதுவேன் சித்தப்பா’ என்று கூறினார் பஞ்சு அருணாசலம்.
‘சரி சரி, நூறு பேர் வேலை செய்கிற நம் ஸ்டூடியோவில் நீயும் வேலை பார்’ என்றார். ஏ. எல். எஸ். மறுநாளே, ஏ. எல். எஸ். குத்தகைக்கு எடுத்திருந்த பரணி ஸ்டூடியோவில் வேலையில் சேர்ந்தார். பஞ்சு அருணாசலம், அவரது, திரை உலக வாழ்க்கைக்கு அஸ்திவாரம் போடப்பட்டது. அங்கேதான். ஸ்டூடியோவில் படப்பிடிப்பு நடத்த வருகிறவர்களிடம், வாடகை பற்றி பேசி முடிவு எடுக்கும் வேலை, அவருடையது. வேலை முடிந்ததும், வீட்டுக்குப் போவதில்லை. ஸ்டூடியோவில் நடக்கும் படப்பிடிப்பை வேடிக்கை பார்ப்பார்.
‘பாடல் எப்படி பதிவாகிறது’ என்பதை கூர்ந்து கவனிப்பார். சினிமா என்ற கனவுத் தொழிற்சாலை, அவருக்குப் பிடிபட ஆரம்பித்தது. 2 மணி நேரம் திரையில் ஓடும் ஒரு படத்தைத் தயாரிக்க ஒரு வருடம் கூட ஆகும் என்கிற உண்மை அவரை பிரமிப்பில் ஆழ்த்தியது. டைரக்டர் ஏ. பீம்சிங் புகழ் ஏணியில் ஏறத் தொடங்கியிருந்த காலக் கட்டம் அது.
ஏ. எல். எஸ். தயாரித்த ‘செந்தாமரை’ என்ற படத்தை அவர் டைரக்ட் செய்து கொண்டிருந்தார். சிவாஜியுடன் லலிதா - பத்மினி நடித்த படம். பீம்சிங்கிடம் உதவி டைரக்டராக சேர விரும்பிய பஞ்சு அருணாசலம், தன் விருப்பத்தை அவரிடம் தெரிவித்தார். ‘செந்தாமரை படம் முடியட்டும், அதன் பிறகு கட்டாயம் சேர்த்துக்கொள்கிறேன்’ என்றார் பீம்சிங்.


12 வயதில் நாயகியாக நடித்தவர் சந்திரகலா


உலகம் சுற்றும் வாலிபன் படத்தில் எம். ஜி. ஆருடன் இணைந்து நடித்த சந்திரகலா, பல்வேறு மொழிகளிலும் 125 படங்களில் நடித்தவர். சந்திரகலாவின் சொந்த ஊர் ஆந்திராவில் உள்ள விசாகப்பட்டினம். தந்தை இயக்குனர் எம். எஸ். நாயக். சந்திரகலா பிறந்த இரண்டு ஆண்டுகளில் அவரது குடும்பம் சென்னைக்கு வந்தது. சென்னை மாம்பலம் வித்யோதயா பள்ளியில் பள்ளிப் படிப்பை சந்திரகலா தொடங்கினார்.
சந்திரகலாவுக்கு 7வது வயதிலேயே திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. தந்தை எம். எஸ். நாயக் சொந்தமாக தயாரித்த ‘ராம் ஆஞ்சனேயர் யுத்தம்’ என்ற படத்தில் நடித்தார். அதனைத் தொடர்ந்து 12வது வயதில் ‘சதிசுகன்யா’ என்ற தெலுங்கு படத்தில் கதாநாயகியாக நடித்தார்.
அதே படம் இந்தியில் ‘ஷோலே அவுர் ஷப்னம்’ என்ற பெயரில் வெளிவந்தது. அந்தப் படத்தில் தர்மேந்திராவுடன் சந்திரகலா நடித்தார். இந்தப் படத்தை தயாரித்தவர் சந்திரகலாவின் தந்தை எம். எஸ். நாயக்தான்.
தமிழில் வெற்றிபெற்ற ஏ. வி. எம். மின் ‘குலதெய்வம்’ படம், கன்னடத்தில் ‘ஜேனுகூடு’ என்ற பெயரில் ஓய். ஆர். சாமி இயக்கத்தில் வெளிவந்தது. அதில் சந்திரகலா நடித்தார். இந்தியில் வெளியான ‘பாபி’ படத்தை கன்னடத்தில் தயாரித்தனர். அந்தப் படத்தில் துணை நடிகையாக சந்திரகலா நடித்தார். அப்பொழுது அவர் எஸ். எஸ். எல். சி. படித்து வந்தார்.
தமிழில் எம். ஜி. ஆர். - ஈ. வி. சரோஜா நடித்த ‘என் தங்கை’ படத்தை சந்திரகலாவின் தந்தை கன்னடத்தில் தயாரித்தார். தமிழில் ஈ. வி. சரோஜா நடித்த வேடத்தில் சந்திரகலா நடித்தார். கன்னடத்தில் என்தங்கை வெற்றிவாகை சூடியது. அதனால் தெலுங்கில் அந்தப் படத்தை எடுத்தனர். அதிலும், அதே வேடத்தில் சந்திரகலா நடித்தார். இதன் மூலம் கன்னடம், தெலுங்கு படங்களில் அவருக்கு சிறப்பான வரவேற்பு கிடைத்தது
இந்தியில் வெற்றிபெற்ற ‘ஆஞ்சல்’ என்ற படத்தை தெலுங்கில் தயாரித்தனர். அதில் சந்திரகலா நடித்தார். படத்தை நடிகை சாவித்திரி டைரக்ட் செய்தார். சந்திரகலாவின் நடிப்பால் கவரப்பட்ட சாவித்திரி, தனது சொந்த தயாரிப்பான ‘பிராப்தம்’ படத்தில் அவரை நடிக்க வைத்தார்.
‘பிராப்தம்’ படத்தைத் தொடர்ந்து தமிழில் பல படங்களில் நடிக்க சந்திரகலாவுக்கு வாய்ப்புகள் வந்தன. எம். ஜி. ஆரின் சொந்த தயாரிப்பான ‘உலகம் சுற்றும் வாலிபன்’ படத்தில் 3 கதாநாயகிகளில் ஒருவராக நடித்தார்.
பாடல் காட்சிகளிலும், நடனக் காட்சிகளிலும் எம். ஜி. ஆருடன் நடித்து பாராட்டுப் பெற்றார். தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் 125க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர் சந்திரகலா.



நியாயம் என்று தோன்றியதை எந்த சூழலிலும் செய்யத் துணிந்தவர்


மயிலாடுதுறை தில்லையடி வள்ளியம்மையை காண வந்த காந்தியடிகள் பொதுக் கூட்டத்தில் பேசுகிறார். எங்கும் மக்கள் வெள்ளம். அந்நிய துணிகளை விலக்க வேண்டும் என்று தனது பேச்சில் வலியுறுத்துகிறார் காந்தி. கேட்டுக்கொண்டிருக்கும் ஜனம் உணர்ச்சிவசப்படுகிறது.
ஆனால், ஒரேயொருவர் மட்டும் அங்கேயே, அப்போதே தான் போட்டிருந்த அந்நிய துணிகளை கழற்றி எறிகிறார். நல்லவேளை, உள்ளாடை உள்ளூர் தயாரிப்பு, இல்லையென்றாலும் அவர் கவலைப்பட்டிருக்கமாட்டார். சுற்றி நின்றிருந்தவர்கள் நிலைதான் தர்ம சங்கடமாகியிருக்கும்.
நியாயம் என்று தோன்றியதை எந்த சூழலிலும் செய்யத் துணிந்தவர் நடிகவேள் எம். ஆர். ராதா. மேலே உள்ளது சின்ன உதாரணம். ராதாவை எப்படி வகைப்படுத்தலாம்? நாடக நடிகர்... சினிமா நடிகர்.... மெக்கானிக்... எலெக்ட்ரீஷியன்... கலகக்காரர்.....
நாடக நடிகர் என்றால் ராதா மகிழ்ச்சியடைவார். நடிப்புன்னா ரீ-டேக் இல்லாமல் மூணு மணி நேரம் நாடகத்தில் நடிக்கிறதுதான் என்பது ராதாவின் வாதம். சினிமா? அது ரிட்டையர்ட்மெண்ட். மெக்கானிக்கும், எலெக்ட்ரீஷியனும் வாழ்க்கை ப்ளோவில் அவர் கற்றுக்கொண்டவை. கல்யாணத்திற்கும் இது உதவியது.
அந்தக் காலத்தில் நாடக நடிகர்களுக்கு யார் பெண் தருவது. மெக்கானிக் என்று தனது பார்ட் டைம் வேலையை சொல்லி முதல் மனைவி சரசுவதியை திருமணம் செய்தார் ராதா. சிறிது காலத்துக்குப் பின் சரசுவதியின் தங்கை தனலட்சுமியையும் மணந்து கொண்டார்.
இறுதி மூச்சுவரை ராதா பின்பற்றியது பெரியார். இந்தியாவின் சிறந்த தலைவர் யார் என்று கேட்டால் பெரியார் என்றே சொல்வார் ராதா. அதே நேரம் தி. க. உட்பட எதிலும் உறுப்பினர் அல்ல ராதா. இறுதி வரை சுதந்திர பறவையாக வாழ்ந்தவர் அவர்.
ராதாகிருஷ்ணன் என்ற இயற்பெயர் கொண்ட எம். ஆர். ராதா பிறந்தது சென்னையிலுள்ள சூளை. வருடம் 1907. தந்தை ராஜகோபால் நாயுடு முதலாம் உலகப் போரில் ரஷ்ய எல்லை பஸ்ஸோவியாவில் மரணமடைகிறார். தாய் ராசம்மமாள். உடன் பிறந்தவர்கள் அண்ணன் ஜானகிராமன், தம்பி பாப்பா.
ராதா கலகக்காரரா என்றால் இல்லை.
வாழ்வதற்காக கூழை கும்பிடு, குறுக்கு வழி என்றிருப்பவர்கள் மத்தியில், தன்மானத்தை இழக்காத ராதாவின் சுயமரியாதை வாழ்க்கை மற்றவர்களுக்கு கலகமாக தோன்றியதில் வியப்பில்லை.



Wednesday, July 4, 2012


 


குழந்தையைக் கவனித்துக் கொண்டே சினிமாவில் நடிக்கும் லாரா தத்தா!


தமிழ் இந்தி, தெலுங்கு என ஒரே நேரத்தில் மூன்று மொழிகளில் தயாராகும் டேவிட் திரைப்படத்தில் நடிக்க லாராதத்தா ஒப்பந்தமாகியுள்ளார். 13 ஆண்டுகளுக்குப் பின்னர் அவர் நடிக்கும் படம் என்பதால் குழந்தையை கவனித்துக் கொண்டே ஓய்வு நேரத்தில் நடித்துக் கொடுக்கிறேன் என்று கூறியுள்ளார்.
தமிழ், இந்தி, தெலுங்கு என 3 மொழிகளில் உருவாகும் ‘டேவிட்’ என்ற படத்தை பிஜாய் நம்பியார் இயக்குகிறார். விக்ரம், ஜீவா இணைந்து நடிக்கின்றனர். இப்படத்தில் முக்கிய வேடமொன்றில் நடிக்க லாரா தத்தாவிடம் கால்iட் கேட்டார் இயக்குநர்.
கடந்த ஜனவரி மாதம்தான் லாரா தத்தாவுக்கு குழந்தை பிறந்தது. குழந்தையை கவனித்துக் கொள்ளும் வேலை அதிகமாக இருப்பதால் பட வாய்ப்பை ஏற்கத் தயங்கினார். ‘குழந்தையை கவனித்த நேரம் போக மீது நேரத்தில் கால்iட் தருகிறேன். இதை ஏற்றுக் கொண்டால் நடிக்க தயார்’ என்று லாரா கூறினார். அதை இயக்குநர் ஏற்றுக் கொண்டார்.
பொலிவுட் ஹீரோயின் லாரா தத்தா ‘அரசாட்சி’ என்ற படத்தில் தமிழில் நடித்தார். 13 வருடத்துக்கு பிறகு மீண்டும் தமிழ் படத்தில் நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இது பற்றி கருத்து தெரிவித்துள்ள இயக்குநர் பிஜாய் நம்பியார், இது லாராவுக்கு சிறப்பான வேடமாக அமையும் சமீபத்தில் அவரை சந்தித்து இது குறித்து பேசினேன். குறிப்பிட்ட கதாபாத்திரத்தில் நீங்கள் நடித்தால்தான் பொருத்தமாக இருக்கும் என்றேன். அப்போது குழந்தையை கவனித்துக் கொள்ளும் வேலை இருப்பதால் நடிக்கத் தயங்கினார். பின்னர் அவர் ஓய்வு நேரத்தில் நடித்துக் கொடுக்க தயார் என்றார் அதை ஏற்றுக் கொண்டேன்.
நாசர், ரோகிணி ஹட்டாங்காடி, தபு, இஷா ஷர்வானி உள்ளிட்டோரும் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர் என்றார் இயக்குநர்.

ஓவியாவுக்கு அதுக்கு நேரமில்லையாம்


தன்னை பற்றி வரும் காதல் கிசுகிசுக்களை நம்ப வேண்டாம் என்றும், தான் யாரையும் காதலிக்கவில்லை என்றும் நடிகை ஓவியா கூறியுள்ளார். ‘களவானி’ படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை ஓவியா. தொடர்ந்து ‘மன்மதன்’, ‘அம்பு’, ‘முத்துக்கு முத்தாக’, ‘மெரினா’, ‘கலகலப்பு’ போன்ற படங்களில் நடித்துள்ளார். இது தவிர தமிழில் ‘சில்லுன்னு ஒரு சந்திப்பு’ உள்ளிட்ட படங்களிலும் தமிழ் தவிர வேறு மொழியிலும் பிஸியாக நடித்து வருகிறார்.
கேரளாவைச் சேர்ந்தவரான இவருக்கும் அங்குள்ள தொழில் அதிபர் ஒருவருக்கும் காதல் என்றும் அவரை ஓவியா திருமணம் செய்ய இருப்பதாகவும் கிசுகிசுக்கள் பரவின. ஆனால் இதனை ஓவியா முழுமையாக மறுத்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியுள்ளதாவது, சினிமாவில் இப்போது தான் படிப்படியாக முன்னேறி ஒரு நல்ல நிலைக்கு வந்து கொண்டு இருக்கிறேன். அதற்குள் நான் காதல் வயப்பட்டுள்ளேன் என்றெல்லாம் செய்திகள் வருகின்றன.
நான் யாரையும் காதலிக்கவில்லை. அதற்கான நேரமும் என்னிடம் இல்லை. அவ்வளவு பிஸியாக சினிமாவில் நடித்து கொண்டு இருக்கிறேன். இப்போதைக்கு எனது சிந்தனையெல்லாம் சினிமா பற்றியது தான். திருமணத்தை பற்றி யோசித்து கூட பார்த்ததில்லை என்று கூறியுள்ளார்.

 

 


நல்ல வாய்ப்புகளை நழுவ விடும் நடிகை

கொலிவுட்டில் ஒரு பெரிய நடிகையாக சமந்தா வலம் வருவார் என்று எதிர்பார்த்தால், இப்போது அது நடக்காது போல தெரிகிறது. தேடி வரும் நல்ல வாய்ப்புகளையெல்லாம் தக்க வைத்துக் கொள்ள முடியாத நடிகையாகி விட்டார்.
சமீபத்தில் மணிரத்தினத்தின் கடல் படத்திலிருந்து விலகிய சமந்தா, இப்போது ஷங்கர் இயக்கத்தில், விக்ரம் நடிப்பில் உருவாக உள்ள ஐ படத்திலிருந்தும் விலகப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது.
சமந்தாவுக்கு சருமத்தில் சில பிரச்சினைகள் இருப்பதாகவும், அதற்காக அவர் சிகிச்சை மேற்கொள்ள இருப்பதாகவும், சிகிச்சைக்கு பின்னர் 3 மாத காலத்திற்கு சூரிய வெளிச்சத்திலோ, படப்பிடிப்புக்கு பயன்படுத்தப்படும் பெரிய விளக்குகள் அருகிலோ நிற்க கூடாது என்று டொக்டர்கள் தெரிவித்து இருப்பதாலேயே ஐ படத்தில் இருந்து விலகியதாக கூறப்படுகிறது.
இதனிடையே சமந்தாவுக்கு பதில் மதராசப்பட்டினம் புகழ் எமி ஜாக்சனை நடிக்க வைக்க ஷங்கர் ஆலோசித்து வருவதாகவும், மேலும் எமியுடன் இன்னொரு நடிகையாக பிரபல பொலிவுட் நடிகை ஒருவரையும் நடிக்க வைக்க தீவிர முயற்சி மேற்கொண்டு வருவதராகவும் கூறப்படுகிறது.

 

 

 


600 பேரில் தெரிவான அதிதி


கொஞ்சம் காபி, கொஞ்சம் காதல் திரைப்படத்தின் கதாநாயகியாக நடித்து வரும் அதிதி டில்லி மொடல் அழகியாம். இந்த திரைப்படத்திற்காக 600 பேரை நடிக்க வைத்து அதில் சிறப்பாக நடித்த அதிதியை தேர்வு செய்திருக்கிறாராம் இயக்குநர் வெங்கி.
‘கொஞ்சம் காபி கொஞ்சம் காதல்’ படம் ஐன்ஸ்டீன் தத்துவத்தை மையமாக வைத்து உருவாகிறது. இது பற்றி இயக்குநர் வெங்கி கூறியதாவது, ‘பம்பாய்’ படத்தில் அரவிந் சாமியின் மகன்களாக வரும் இரண்டு சிறுவர்களில் ஒருவரான ஹிருதய் ராஜ் இப்படத்தில் ஹீரோவாக நடிக்கிறார். டில்லி மொடல் அழகி அதிதி செங்கப்பா ஹீரோயின் இப்படத்துக்காக 600 பேரை ஒடிசன் செய்ததில் தேர்வானவர்தான் அதிதி.
அறிவியல் அறிஞர் ஐன்ஸ்டீன் பல்வேறு தத்துவங்களையும் கூறியிருக்கிறார். வாழ்க்கையில் எதெல்லாம் நடக்கிறதோ அவை முன்கூட்டியே நிச்சயிக்கப்பட்டது என்று குறிப்பிட்டிருக்கிறார். இந்த கருத்து குறித்து பல்வேறு சர்ச்சைகள் இன்னும் நிலவுகிறது.
இந்த கருத்தை மையமாக வைத்துத்தான் கொஞ்சம் காபி கொஞ்சம் காதல் படத்தின் ஸ்கிரிப்ட் உருவாக்கி இருக்கிறேன். இதில் காதலையும் சேர்த்திருக்கிறேன். வழக்கமாக தமிழில் முக்கோண காதல் கதை, ஆக்ஷ்ன் கதை என்றுதான் படங்கள் வருகிறது. அது போல் இல்லாமல் இது வித்தியாசமான அனுபவம் தரும் படமாக இருக்கும். இதில் வரும் சம்பவங்கள் நிஜவாழ்க்கையிலிருந்து எடுக்கப்பட்டது என்றார் வெங்கி.

திருமணமாகி குழந்தை பெற்ற பின் சினிமாவில் அறிமுகமாகி ஏராளமான படங்களில் நாயகியாக நடித்தவர்

பதினைந்து ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வாய்ப்பு

பழம்பெரும் நடிகை செளகார் ஜானகி 15 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் சினிமாவில் நடிக்கிறார். நாடக துறையில் ஈடுபட்டு வந்த செளகார் ஜனாகி, 1949ம் ஆண்டு தெலுங்கு படம் மூலம் திரையுலகில் நுழைந்தார். அதையடடுத்து தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி ஆகிய மொழிகளில் அனைத்து முன்னணி நடிகர்களுடனும் 385 படங்களில் நடித்துள்ளார்.
திருமணமான நடிகைகளுக்கு சினிமா வாய்ப்புக்கள் கிடைக்காது. அப்படியே கிடைத்தாலும் கதாநாயகி வாய்ப்பு கிடைக்காது என்ற சூழ்நிலையில் திருமணமாகி குழந்தை பெற்ற பிறகே சினிமாவில் அறிமுகமாகி ஏராளமான படங்களில் கதாநாயகியாக நடித்த பெருமைக்குரியவர் செளகார் ஜானகி.
இந்நிலையில் ராஜ்மோகன் இயக்கத்தில் கிருஷ்ணா நடிக்கும் வானவராயன் வல்லவராயன் என்ற படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார் செளகார். மீண்டும் நடிக்க வருவது குறித்து அவர் கூறியதாவது; 15 வருடங்களுக்கு பிறகு நடிப்பது அதுவும் தமிழ்ப் படத்தில் நடிப்பது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.
இந்த இடைப்பட்ட காலத்தில் நான் நடிக்க மாட்டேன் என்று கூறியதில்லை, என்னை யாரும் நடிக்க அழைக்கவில்லை. அது குறித்து நான் வருத்தப் படவும் இல்லை. இயக்குனர் ராஜ்மோகன் கூறிய கதையில் என் கதாபாத்திரத்துக்கு அதிக முக்கியத்துவம் இருந்தது. இதில் அலிபாபா, கற்றது களவு, கழுகு படங்களில் நடித்த கிருஷ்ணா கதாநாயகனாக நடிக்கிறார்.
மீண்டும் நடிக்க வர காரணமாக இருந்த இயக்குனர் ராஜ்மோகன், திரைப்பட பத்திரிகை தொடர்பாளர் மெளனம் ரவி, தயாரிப்பாளர் ராஜபாண்டியன் ஆகியோருக்கு நன்றி. இதற்கு முன் நான் கடைசியாக நடித்த படம் தொடரும்.
அஜித், தேவயானி நடித்த படம் தொடரும். என்ற டைட்டிலில் நடித்து விட்டு நடிப்பை தொடர முடியாமல் போய் விட்டது. என்னுடைய 62 ஆண்டு கால சினிமா அனுபவத்தில் எத்தனையோ கலைஞர்களுடன் பழகியிருக்கிறேன். ஒவ்வொருவரும் ஒரு வகையில் திறமையானவர்கள். இப்போது ரஜினிக்கு இருக்கும் மக்கள் செல்வாக்கு பிரமிக்கவைக்கிறது.
கமல்ஹாசனின் திறமை வியக்க வைக்கிறது. ஹேராம் படத்தில் என்னை நடிக்க அழைத்திருந்தார் கமல், பார்த்தால் பசி தீரும் படத்தில் குழந்தையாக நடித்த கமல் என்னை வைத்து இயக்கும் அளவுக்கு வளர்ந்ததை நினைத்து மிகவும் பெருமையாக இருந்தது. அந்தப் படத்தில் ஒரே ஒரு காட்சியில் மட்டுமே நடித்தேன்.
அதற்குள் எனக்கு இதய அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய சூழ்நிலை. மேற்கொண்டு நடிக்க முடியாமல் போய் விட்டது. ஆனாலும் எனக்கு பேசிய தொகையை மொத்தமாக ஒரே செக்கில் கமல் அனுப்பி வைத்தார். அந்த நேரத்தில் அந்த தொகைதான் என்னுடைய மருத்துவ சிகிச்சைக்கு உதவியது. அதை எப்போதும் மறக்க மாட்டேன்.
வானவராயன் வல்லவராயன் படத்தின் மூலம் என்னுடைய இரண்டாவது இன்னிங்சை தொடங்கி உள்ளேன். கோபி செட்டிபாளையத்தில் படப்பிடிப்பில் கலந்து கொள்கிறேன். இப்போது எனக்கு வயது 81. ஆனாலும் மனதளவில் இன்னும் இளமையாக உணருவதால் ஆரோக்கியத் துடன் இருக்கிறேன். தொடர்ந்து படங்களில் நடிப்பேன் என்றார் செளகார் ஜானகி.

 

 

 


முதன் முதலில் கெமரா மூலம் கதை சொல்லும் உத்தியை கையாண்டவர் ஸ்ரீதர்


டில்லியில் பட விழா ஒன்றில் கலந்து கொண்ட சரோஜாதேவிக்கு, பிரதமர் நேரு பரிசு வழங்கினார். அப்போது, “நீ பிரகாசமான நட்சத்திரம், மேலும் புகழ் பெற வாழ்த்துக்கள்” என்று கூறினார்.
தமிழ்ப்பட உலகில் மாபெரும் மாற்றத்துக்கு வழிவகுத்த ஸ்ரீதரின் “கல்யாணப் பரிசு” படத்தில் அற்புதமாக நடித்து, நட்சத்திர அந்தஸ்து பெற்றவர் சரோஜாதேவி,
அதுவரை கதை - வசன ஆசிரியராக மட்டுமே இருந்த ஸ்ரீதர், இப்படத்தின் மூலம் டைரக்டரானார். கெமரா மூலம் கதை சொல்லும் உத்தியைக் கையாண்டு வெற்றி பெற்றார்.
பின்னணி பாடகர் ஏ.எம். ராஜா இப்படத்தில் தான் இசை அமைப்பாளராக அறிமுகம் ஆனார். பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரத்தின் எல்லாப் பாடல்களும் அருமையாக அமைந்தன. கே.ஏ. தங்கவேலு - எம். சரோஜா கொமெடி மிகப்பிரமாதமாக இருந்தது. இவற்றுடன் ஸ்ரீதர் படைத்த பாஸ்கர். வசந்தி என்ற கதாபாத்திரங்களுக்கு ஜெமினி கணேசனும், சரோஜாதேவியும் உயிர் கொடுத்தனர்.
9-4-1959ல் வெளிவந்த “கல்யாணப் பரிசு” தமிழ்ப்பட வரலாற்றில் ஒரு மைல் கல்லாக அமைந்தது. சரோஜாதேவி நடித்த மிகச் சிறந்த படங்களில் ஒன்று “கல்யாணப் பரிசு”, தான் வெறும் அழகுப் பதுமை அல்ல, மிகச்சிறந்த நடிகை என்பதை, இப்படத்தின் மூலம் அவர் நிரூபித்தார்.

வாடிக்கை மறந்தது ஏனோ

பாடல் காட்சிக்காகவே சைக்கிள் ஓட்ட கற்றுக் கொண்டவர்


“கல்யாண பரிசு” படத்தில் நடித்த அனுபவம் பற்றி சரோஜாதேவி கூறியிருப்பதாவது “கல்யாணப்பரிசு” படத்தில் நானும் ஜெமினியும் நடித்த “வாடிக்கை மறந்ததும் ஏனோ” என்ற பாடல் காட்சியில் நான் சைக்கிள் ஓட்ட வேண்டும். அதுவரை எனக்கு சைக்கிள் ஓட்டிய அனுபவம் இல்லை! இந்தப் பாடல் காட்சிக்காகவே, சைக்கிள் ஓட்ட கற்றுக் கொண்டேன்.
நான் கல்லூரிக்கு புறப்படும் போது, “அம்மா போயிட்டு வர்றேன்” என்று, மாடியில் இருக்கும் ஜெமினி கணேசனுக்கு கேட்கும் விதத்தில் இரண்டு முறை உரத்த குரலில் கூறிவிட்டுப் புறப்படுவேன்.
இந்தக் காட்சிக்கு கல்லூரி மாணவ- மாணவிகளிடையே பெரிய வரவேற்பு! கல்யாணப் பரிசு, புதுமையான- அருமையான படம் அதனால் பெரிய வெற்றி பெற்றது’. இவ்வாறு சரோஜாதேவி குறிப்பிட்டுள்ளார்.
கல்யாணப்பரிசு மூலம் பெரும் புகழ் பெற்ற சரோஜா தேவியை, ஏராளமான பட அதிபர்கள் ஏக காலத்தில் அணுகி, தங்கள் படத்தில் நடிக்க அழைத்தனர். எம்-ஜி.ஆர், சிவாஜிகணேசன், ஜெமினி கணேசன் ஆகியோருடன் ஒரே சமயத்தில் நடிக்கக் கூடிய வாய்ப்புகள் கிடைத்தன. தங்கள் படத்தில் சரோஜாதேவி நடித்தே தீர வேண்டும் என்று விரும்பிய சில பட அதிபர்கள், ஹீரோக்களுக்கு கொடுக்கும் சம்பளத்தைவிட அதிக சம்பளத்தை சரோஜாதேவிக்குக் கொடுக்க முன்வந்தனர்.
ஒரு காலகட்டத்தில், அன்றைய சூப்பர் ஸ்டார்களைவிட அதிக சம்பளம் பெற்ற ஒரே நடிகையாக சரோஜாதேவி விளங்கினார். இந்த சமயத்தில், ஜெமினியின் “இரும்புத்திரை” படத்தில் நடிக்க, சரோஜாதேவிக்கு அழைப்பு வந்தது. இதுபற்றி சரோஜாதேவி கூறியிருப்பதாவது, “ஜெமினி அதிபர் எஸ்.எஸ். வாசன் என் தாயாரை சந்தித்து தான் எடுக்கப் போகும் இரும்புத்திரை என்ற படத்தில் வைஜயந்திமாலாவுக்கு தங்கையாக நடிக்க என்னை ஒப்பந்தம் செய்ய வந்து இருப்பதாகக் கூறினார்.
அந்தப் படம் தமிழிலும், இந்தியிலும் தயாராக இருந்தது தமிழில் நடிகர் திலகம் சிவாஜி கணேசனும், இந்தியில் திலீப் குமாரும் ஹீரோ நடிகைகளில் மாற்றம் இல்லை. வைஜயந்தி மாலா, அவருடைய தாயார் வசுந்தராதேவி, நான் ஆகியோர் இரண்டு மொழிகளிலும் நடிக்க இருப்பதாக வாசன் கூறினார்.
ஜெமினி நிறுவனம் பெரிய நிறுவனம், வாசன் போன்றவர்கள் தங்கள் படத்தில் நடிக்க அழைப்பதே பெரிய விடயம். என்றாலும் எனக்குக் கொடுக்கப்பட்ட வேடம் (வைஜயந்தி மாலாவின் தங்கை) சிறிதாக இருந்தால், என்னை நடிக்க வைக்க என் தாயார் விரும்பவில்லை. இப்போதெல்லாம் ஒரு நடிகை ஒரு குறிப்பிட்ட வேடத்தில் நடிக்க மறுத்துவிட்டால், உடனே வேறு நடிகையை போட்டுவிடுவார்கள். ஆனால், இரும்புத்திரையில் நான்தான் அந்த வேடத்தில் நடிக்க வேண்டும்” என்பதில் வாசன் உறுதியாக இருந்தார்.
அந்தப் பாத்திரத்தின் சிறப்பை எடுத்துக் கூறினார். எனக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும் என்று சொன்னார். இதன் இந்திப் பதிப்பில் திலீப்குமார் நடிக்கிறார். அவருடன் நடிக்கும் வாய்ப்பு கிடைப்பதால், நீங்கள் அகில இந்திய புகழ் பெறுவீர்கள்” என்று எடுத்துக் கூறினார். இதனால், நான் நடிக்கச் சம்மதித்தேன். அவர் சொன்னபடியே, இரும்புத் திரையின் இந்திப் பதிப்பான “பைகாம்” படத்தின் மூலம் அகில இந்தியப் புகழ் பெற்றேன்” இவ்வாறு சரோஜாதேவி கூறியுள்ளார்.



 

தமிழ்த் திரையுலகில் மறக்க முடியாத குணசித்திர நடிகர் எஸ். வி. சுப்பையா









தமிழ்த்திரை உலகின் சிறந்த குணச்சித்திர நடிகர்களில் ஒருவரான எஸ். வி. சுப்பையா, சிவாஜிகணேசன் நடித்த ‘கப்பலோட்டிய தமிழன்’ படத்தில் பாரதியாராக மிகச் சிறப்பாக நடித்தார்.
எஸ்.வி. சுப்பையாவின் சொந்த ஊர் நெல்லை மாவட்டம் செங்கோட்டை ஆகும். கலை துறையில் ஆர்வம் கொண்ட எஸ். வி. சுப்பையா முதலில் டி. கே. எஸ். நாடகசபா, பிறகு சக்தி நாடகசபா ஆகியவற்றில் சேர்ந்து நாடகங்களில் நடித்தார்.
இதன் பலனாக சினிமா சான்ஸ் பெற்றார். 1952ல் சினிமாவில் சிறு சிறு வேடம் ஏற்று நடிக்கத் தொடங்கினார். எஸ். பாலசந்தர் பானுமதி நடித்த ‘ராணி’ படத்திலும் டி. ஆர். மகாலிங்கம் நடித்த ‘வேலைக்காரன்’ படத்திலும் குறிப்பிடத்தக்க வேடத்தில் நடித்தார்.
தெலுங்கில் மிக வெற்றிகரமாக ஓடிய ‘ரோஜலு மாராயி’ என்ற படம். ‘காலம் மாறிப்போச்சு’ என்ற பெயரில் தமிழில் தயாரிக்கப்பட்டது. ஜெமினிகணேசன்- அஞ்சலி தேவி ஜோடியாக நடித்த இப்படத்தில் முக்கியமான குணச்சித்திர வேடத்தில் எஸ். வி. சுப்பையா நடித்தார். சுப்பையா வாழ்க்கையில் திருப்புமுனை ஏற்படுத்திய படம்.
இதுதான் அவருடைய நடிப்பு மிகச் சிறப்பாக அமைந்திருந்தது. தொடர்ந்து குணச்சித்திர வேடங்களில் நடித்தார்.
அவர் நடித்த படங்கள் சுமா¡ர் 100 சிவாஜிகணேசன், ஜெமினிகணேசன், எஸ். எஸ். ராஜேந்திரன் ஆகியோருடன் பல படங்களில் நடித்திருக்கிறார். குறிப்பாக, சிவாஜிகணேசனுடன் எஸ். வி. சுப்பையா அதிக படங்களில் நடித்தார். ‘கப்பலோட்டிய தமிழன்’, ‘பாவமன்னிப்பு’, ‘இரும்புத்திரை’ போன்றவை பிரபலமான படங்கள் குறிப்பாக ‘கப்பலோட்டி தமிழன்’ படத்தில் சிவாஜிகணேசன் வ. உ. சிதம்பரனாராக நடிக்க எஸ். வி. சுப்பையா மகாகவி பாரதியாராக நடித்தார், நடித்தார் என்பதைவிட, பாரதியாரையே நம் கண்முன்கொண்டு வந்து நிறுத்தினார் என்று கூறுவதே பொருந்தும். ஜெமினிகணேசனுடன் செளபாக்கியவதி, ‘மணாளனே மங்கையின் பாக்கியம்’ ‘வஞ்சிக் கோட்டை வாலிபன்’ ஆகிய படங்களிலும், ‘கூடி வாழ்ந்தால் கோடி நன்மை’ என்ற படத்தில் எஸ். எஸ். ராஜேந்திரனுடனும் நடித்தார்.
பழம் பெரும் நடிகர்கள் கே. ஆர். ராமசாமி, எம். கே. ராதா ஆகியோருடனும் சேர்ந்து நடித்திருக்கிறார். 1955ல் வெளிவந்த ‘வள்ளியின் செல்வன்’ என்ற படத்தில் எஸ். வி. சுப்பையா முக்கிய ரோலில் நடித்தார். அவருடன் சகஸ்ரநாமம் டி. எஸ். துரைராஜ், ஜெமினிகணேசன் ஆகியோர் நடித்தனர்.
எம். ஜி. ஆர். நடித்த இதயக்கனி படத்திலும், ‘நீங்க நல்லா இருக்கணும் நாடு முன்னேற’ என்ற சூப்பர் ஹிட் பாடல் காட்சியில் தோன்றினார். எஸ். வி. சுப்பையா சொந்தமாகத் தயாரித்த படம் ‘காவல் தெய்வம்’, எஸ். வி. சுப்பையா, செளகார் ஜானகி, சிவகுமார். லட்சுமி ஆகியோர் நடித்த இப்படத்தில், சாமுண்டி கிராமணி என்ற கதாபாத்திரத்தில் கெளரவ வேடத்தில் சிவாஜி கணேசன் நடித்தார். இதன் கதை வசனத்தை ஜெயகாந்தன் எழுதினார்.
வெற்றிகரமாக ஓடிய படம் இது. தமிழ்த் திரை உலகில் மறக்க இயலாத சிறந்த குணச்சித்திர நடிகராக விளங்கிய எஸ். வி. சுப்பையா 29.1.1980 அன்று மரணம் அடைந்தார். காலமானபோது அவருக்கு வயது 57. எஸ். வி. சுப்பையாவின் மனைவி பெயர் கோமதி அம்மாள். இவர்களுக்கு 5 மகள்கள், ஒரு மகன்.









 

 

ஸ்ரீவித்யாவை காதலித்த கமலஹாசன் திருமணம் முடிப்பதாகவும் கூறினாராம்



தமிழில் கமலஹாசனும், ஸ்ரீவித்யாவும் இணைந்து நடித்த முதல் திரைப்படம் 1973ல் வெளிவந்த ‘சொல்லத்தான் நினைக்கிறேன்’ இயக்குநர் சிகரம் கே. பாலசந்தர் இயக்கிய இத்திரைப்படத்தில் கமல் கிட்டத்தட்ட ஒரு வில்லன் போலத்தான் வருவார். ஆனாலும் இருவருக்குள்ளும் இதற்கு முன்பேயே அறிமுகங்கள் உண்டு.
அதன் பின் 1975ல் ‘அபூர்வ ராகங்கள்’ இப்படத்தில் ‘பைரவி’ என்கிற பாடகியாக நடித்திருந்த தனக்கும், தன் காதலருக்கும் இடையேயான காதல் இந்தப் படத்தில்தான் உறுதியானதாக ஸ்ரீவித்யாவே சொல்லியிருந்தார். “அதிசய ராகம்’ பாடல் காட்சியில் கமல் காட்டியிருக்கும் உணர்ச்சிப் பிரவாகத்தை இன்றைக்குப் பார்த்தாலும் அப்படித்தான் நினைக்கத் தோன்றுகிறது.
ஆனால் அது நிறைவேறாமல் போனதற்கான காரணம் இதே ஆண்டில் வெளிவந்த இன்னொரு திரைப்படமான ‘மேல் நாட்டு மருமகள்’ தான். இது ஸ்ரீவித்யாவுக்கு அப்போதே தெரியாமல் போனது அவருடைய துரதிருஷ்டம்தான்.
‘மேல் நாட்டு மருமகள்’ படத்தில் நடித்த வாணிகணபதிக்கும், கமலுக்குமான நட்பு ஸ்ரீவித்தியாவுக்குத் தெரியாமல் போயிருக்கலாம். அதனால் இன்னொருபுறம் கிடைத்த சந்தர்ப்பங்களிலெல்லாம் ஸ்ரீவித்யா தனது காதலை வளர்த்துக்கொண்டு வந்திருக்கிறார்.
1976ல் ‘saசீassiya’என்கிற மலையாளப் படத்தில் இருவரும் இணைந்து நடித்தார்கள். இதே ஆண்டில் கமல் புகழ் பெற்றத் திரைப்படமான ‘உணர்ச்சிகள்’ படத்திலும் ஸ்ரீவித்யாவுடன் இணைந்தார். 1977ல் ‘அன்னை வேளாங்கண்ணி’ திரைப்படத்தின் மலையாளப் பதிப்பில் ஸ்ரீவித்யாவுடன் நடித்திருக்கிறார்.
கமல், “படப்பிடிப்பு நடக்கும் நாட்களில் நாங்கள் சந்திக்கும், பேச சந்தர்ப்பம் கிடைக்கும் நாட்களிலெல்லாம் என்னை உருகி, உருகி காதலிப்பதாகச் சொன்ன அவர், “உன்னைத்தான் திருமணம் செய்து கொள்ளப்போகிறேன்” என்று வாக்குறுதியும் அளித்துவிட்டுப் போன மறுநாளே அவரது திருமணச் செய்தியை காலை நாளிதழில் பார்த்து அதிர்ச்சியாகிப் போனேன் என்று தனது வாழ்க்கை வரலாற்றில் குறிப்பிடுகிறார் ஸ்ரீவித்யா.
1978ல் கமல்-வாணி கணபதி காதல் திருமணம் நடந்தது. இதன் பின்னர் கமலும், ஸ்ரீவித்யாவும் கிட்டத்தட்ட 8 ஆண்டு காலம் இணைந்து நடிக்கவில்லை. 1986ல் வெளிவந்த ‘புன்னகை மன்னன்’ தான் இருவரையும் மீண்டும் இணைத்து வைத்த திரைப்படம்.
1989ல் ‘அபூர்வ சகோதரர்கள்’, ‘இந்திரன் சந்திரன்’, 1995ல் ‘நம்மவர்’ 1998ல் ‘காதலா, காதலா’ என்று அவருக்கும், கமலுக்குமான இரண்டாவது சினிமா வாழ்க்கையை இப்படி முடித்துக்கொண்டார் ஸ்ரீவித்யா.
இத்திரைப்படம் சொல்வதைப் போல் அம்மாவின் வற்புறுத்தலால் ஸ்ரீவித்யா திரையுலகத்திற்குள் வரவில்லை. ஸ்ரீவித்யாவின் சினிமா பிரவேசத்தை கடுமையாக எதிர்த்தார் அவருடைய தாயார் எம். எல். வசந்தகுமாரி.
அதேபோல் பத்திரிகைகளுக்கு பேட்டியும் அளித்திருந்தார். தனது அம்மா மற்றும் குடும்பத்தினருக்குப் பிடிக்காமல்தான் மலையாள சினிமா தயாரிப்பாளர் ஜோர்ஜை திருமணம் செய்துகொண்டார் ஸ்ரீவித்யா. அப்போது அவருக்கு புத்தி சொன்ன சக நடிகைகளை பகைத்துக் கொள்ளவும் அவர் தயங்கவில்லை.
1997ல் கணவர் ஜோர்ஜுடனான விவாகரத்து வழக்கு நீதிமன்றத்துக்கு வந்த பொழுது முதல் முறையாக ‘பத்திரிகையில் தனது வாழ்க்கையின் துயரங்களை பதிவு செய்ய முன் வந்தார். ஆனால் தன்னுடைய துயரங்களை வெளியிட அப்போதே அவர் மறுத்துவிட்டார்.
ஸ்ரீவித்யா உயிரிழப்பதற்கு முன் நோய்வாய்ப்பட்டு கேரளா மருத்துவமனையில் இருந்தபோது கமலஹாசன் அவரை சென்று பார்த்தார். அதன் பின்புதான் ஸ்ரீவித்யா உயிரிழந்தார்.


அனைவரும் விரும்பும்  அன்பே வா' சரோஜாதேவியின் ஆடை


ஏவி.எம். தயாரித்த ‘அன்பே வா’ படத்தில் எம்.ஜி.ஆரும், சரோஜாதேவியும் இணைந்து நடித்தனர். அந்தப் படத்தில், வித்தியாசமான உடையில் சரோஜா தேவி தோன்றுவார். அந்த உடையை தேர்வு செய்தவர் ஏவி. மெய்யப்ப செட்டியார்தான். ‘அன்பே வா’ படம் தயாராகி வந்தபோது, ஒரு நாள் ஏவி.எம். பெங்களூருக்குச் சென்றிருந்தார்.
அங்கு ‘வக்த்’ என்ற இந்திப்படம் ஓடிக்கொண்டு இருந்தது. அந்தப் படத்தை மெய்யப்ப செட்டியார் பார்த்தார். படத்தில் கதாநாயகி அணிந்து இருந்த சுடிதார் போன்ற உடை அவருக்கு மிகவும் பிடித்து விட்டது. அந்த உடை, நிச்சயம் தனது ‘அன்பே வா’ படத்தில் இடம் பெறவேண்டும் என்று முடிவு செய்துவிட்டார். சென்னைக்குத் திரும்பியதும் முதல் வேலையாக ‘அன்பே வா’ படத்தின் தையல் கலை நிபுணரை விமானத்தில் பெங்களூருக்கு அனுப்பி வைத்தார்.
தான் பார்த்த இந்திப்படத்தை பார்க்கும்படியும், அந்தப் படத்தில் கதாநாயகி அணிந்து இருக்கும் அதே மாதிரி உடையை சரோஜாதேவிக்கு தைத்துக் கொடுக்க வேண்டும் என்றும் சொன்னார்.
அதன்படி, அந்த உடையை தையல் கலைஞர் தைத்துக் கொடுக்க, அதை அணிந்து சரோஜாதேவி நடித்தார். அந்த உடை புதுமையாக இருந்தது. குறிப்பாக, பெண்களை அந்த உடை வெகுவாகக் கவர்ந்தது. பலர் அதே மாதிரி உடை அணிய ஆரம்பித்தனர். அதுவே அனைவரும் விரும்பும் பெஷன் ஆகிவிட்டது.





 

தங்கைக்காக தன் வாழ்நாளை அர்ப்பணித்தவர் பண்டரிபாய்




திரும்பிப்பார் படத்தில் சிவாஜியும், பண்டரிபாயும் போட்டி போட்டு நடித்தனர். கதைப்படி, சிவாஜி கணேசன் பெண் பித்தன். கண்ணில் படுகிற பெண்களையெல்லாம் காதலிப்பார், கற்பை சூறையாடுவார். அவர் ஒரு பெண்ணை கெடுக்கப் போகும் போது, பண்டரிபாய் வழி மறித்து நிற்பார்.
“பரந்தாமா” உனக்கு இப்போதும் ஒரு பெண்தானே வேண்டும். இதோ, நான் இருக்கிறேன், என்னை எடுத்துக் கொள்!” என்பார். சிவாஜி கதறுவார். பிறகு அவர் திருந்திவிட்டதை அறியாத பண்டரிபாய், தன் கையினாலேயே சுட்டுக் கொன்றுவிடுவார்.
சிவாஜியும், பண்டரிபாயும் வாழ்ந்து காட்டிய படம் “திரும்பிப்பார்” சிவாஜியின் பிற்காலப் படங்களில் அவருக்கு அம்மாவாகவும் பண்டரிபாய் நடித்துள்ளார். 1960 வரை முக்கிய கதாபாத்திரங்களை ஏற்று வந்த பண்டரிபாய் பிற்காலத்தில் தாய் வேடத்திலும் சிறந்த குணச்சித்திர வேடங்களிலும் முத்திரை

பதித்தார். தொடக்க காலத்தில் அதாவது 1951ல் எம்.ஜி.ஆர். நடித்த “மர்ம யோகி” படத்தில் சிறு வேடத்தில் பண்டரிபாய் நடித்தார். பிற்காலத்தில் “எங்க வீட்டு பிள்ளை”, “குடியிருந்த கோவில்”, “அடிமைப்பெண்”, “தெய்வத்தாய்” ஆகியவை உட்பட ஏராளமான படங்களில் நடித்தார். ரஜினிகாந்துடன் பண்டரிபாய் நடித்ததில் “மன்னன்” படம் குறிப்பிடத்தக்கது.
பண்டரிபாய்க்கு இருந்த மற்றொரு திறமை தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் உட்பட 7 மொழிப் படங்களில் நடித்ததாகும். மொத்தத்தில் சுமார் 1,500 படங்கள் வெளிவந்துள்ளன. கடைசியாக அவர் நடித்த படம் “ஜெய்ஹிந்த்” “அனுராதா” என்ற கன்னட படத்தை சொந்தமாக தயாரித்தார். இந்தப் படத்துக்காக அவருக்கு ஜனாதிபதி விருது கிடைத்தது. தமிழில் “அவளும் பெண்தானே” என்ற படத்தை சொந்தமாகத் தயாரித்தார். இந்தப் படத்தின் மூலம் நடிகை சுமித்ரா, டைரக்டர் துரை ஆகியோர் அறிமுகமானார்கள்.
பண்டரிபாய் 1965ம் ஆண்டு தமிழக அரசின் “கலைமாமணி” விருது பெற்றார். பண்டரிபாயின் தங்கை மைனாவதி “குலதெய்வம்”, “கண்கள்”, “பொன்வயல்” உட்பட பல தமிழ்ப் படங்களில் நடித்து இருக்கிறார். பண்டரிபாயின் பிற்கால வாழ்க்கை மிகவும் சோகம் நிறைந்ததாகவே அமைந்துவிட்டது.அவர் பயணம் செய்த கார் மீது வேலூர் அருகே ஒரு லொறி மோதியதில், ஒரு கையை இழக்க நேர்ந்தது. அன்று முதலே அவருடைய உடல் நிலை பாதிக்கப்பட்டது.
நீரிழிவு நோயாலும் அவதிப்பட்டார். சிறுநீரகம் பாதிக்கப்பட்டது. மூச்சு கூட விட முடியாமல் சிரமப்பட்ட அவரை வடபழனியில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பண்டரிபாயின் உடல்நிலை மோசமாக இருப்பதை அறிந்த முதல் அமைச்சர் ஜெயலலிதா நேரில் போய் அவரை பார்த்தார். பண்டரிபாயின் மருத்துவ செலவுக்கு உதவி செய்தார்.
அதைத் தொடர்ந்து அவர் “அப்பலோ” ஆஸ்பத்திரிக்கு மாற்றப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தார்கள். உடல் நிலை கொங்சம் தேறிவந்தது. இருப்பினும் அது அதிக நாள் நீடிக்கவில்லை. 29-01-2003 அன்று அதிகாலை பண்டரிபாய் மரணம் அடைந்தார். அப்போது அவருக்கு வயது 74, முதல்- அமைச்சர் ஜெயலலிதா சார்பில் அமைச்சர் கே.கே. பாலசுப்ரமணியம் சென்று பண்டரிபாய் உடலுக்கு இறுதி மரியாதை செலுத்தினார். தி.மு.க.தலைவர் கருணாநிதி பண்டரிபாய் மகன் குருபிரசாத்துக்கு இரங்கல் செய்தி அனுப்பினார்.
பண்டரிபாயின் உடல் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு ஏ.வி.எம். ஸ்டூடியோ பின்புறம் உள்ள மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. தங்கைகளுக்காகவும், குடும்பத்துக்காகவும் தன் வாழ்நாளை அர்ப்பணித்தவர் பண்டரிபாய். தங்கைகளுக்கு திருமணம் செய்து வைத்துவிட்டு, அவர் திருமணம் செய்து கொள்ளாமல் இருந்தார். பல ஆண்டுகளுக்குப் பின் திருமணம் செய்து கொண்டார். கணவர் பெயர் ராமாராவ். இவர்களுக்குக் குழந்தைகள் இல்லை.

சொந்த வாழ்க்கை பற்றி சொல்ல மறுப்பு


என் சொந்த வாழ்க்கை பற்றி எதுவும் கேட்காதீர்கள் என்று ஆவேசப்பட்டார் அனன்யா. அவர் மேலும் கூறியதாவது, என் திருமணம் பற்றி கேட்காதீர்கள். ரசிகர்களுக்கு என் சொந்த வாழ்க்கையைப் பற்றி சொல்ல வேண்டியது இல்லை. நான் நடிக்கும் படங்கள் பற்றி தெரிவிக்க வேண்டியது கடமை.
திருமணம் எப்போது நடந்தாலும், பகிரங்கமாக நடக்கும். நானே மீடியாவிடம் சொல்வேன். தமிழில் நடிக்கவில்லை. கன்னடத்தில் நடித்த ‘கோகுல கிருஷ்ணா’ ரீலீசுக்கு தயார். மலையாளத்தில் பல படங்களில் நடிக்கிறேன்.
‘ரத்த ரக்ஷக்’ படத்தில், முதல் முறையாக அக்கா, தங்கை என இரட்டை வேடத்தில் நடிக்கிறேன். ஒரு வேடம், பேய், தினமும் இரவு ஒரு மணிக்கு மேல் ஷ¥ட்டிங் நடக்கும். இரண்டு மணி நேரத்துக்கு மேல் எனக்கு மேக்கப் போடுவார்கள். சைக்கோ த்ரில்லரான இப்படம், கண்டிப்பாக விருது பெற்றுத் தரும். இதில் 4 கிளைமாக்ஸ் காட்சிகள் இடம்பெறுகின்றன.







 

அரவாணிக்கு அமோக வரவேற்பு வில்லன் வேடத்தில் விவேக்


நகைச்சுவை நடிகர் விவேக் சென்னையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அவற்றுக்கு விவேக் அளித்த பதில்களும் வருமாறு:-
நகைச்சுவை நடிகராக பிரபலமான நீங்கள் ‘வழிப் போக்கன்’ படத்தில் வில்லன் வேடத்தில் நடிப்பது ஏன்?
அது ஒரு ‘சைக்கோ த்ரில்லர்’ கதாபாத்திரம். தேன்நிலவுக்காக வந்த தம்பதிகள் அந்த வில்லனிடம் மாட்டிக்கொள்கிறார்கள். இந்த படத்தின் கதாநாயகனாக மிதுன் நடிக்கிறார். ‘சைக்கோ’வாக நான் நடிக்கிறேன். நான் ஏன் ‘சைக்கோ’வாக மாறினேன்? என்பதற்கு ஒரு முன் கதை இருக்கிறது. அதற்காகவே இந்த வில்லன் வேடத்தை ஒப்புக்கொண்டேன். என்னாலும் வில்லன் வேடம் பண்ண முடியும் என்று நிரூபித்து இருக்கிறேன்.
தமிழில் ‘வழி போக்கன்’ என்ற பெயரிலும், கன்னடத்தில் ‘மாரீச்சன்’ என்ற பெயரிலும் 2 மொழிகளில் படம் தயாராகிறது. முதன் முதலாக நான் கன்னடம் பேசி நடித்து இருக்கிறேன்.
முரட்டுக்காளை படத்தில் அரவாணியாக நடித்து இருக்கிaர்கள். அதற்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு எப்படி இருக்கிறது?
பாராட்டுக்கள் வந்து குவிந்த வண்ணம் உள்ளன. இப்படி பாராட்டுக்களை கேட்கும்போது தொடர்ந்து இதுபோல் மாறுபட்ட வேடங்களில் நடிக்க வேண்டும் என்ற உற்சாகம் வந்திருக்கிறது. ஷக்தி சிதம்பரம் இயக்கும் ‘மச்சான்’ படத்தில் ‘அனிமல் அரசு’ என்ற கதாபாத்திரத்திலும், வி. சேகர் டைரக்ட் செய்ய அவருடைய மகன் காரல்மாக்ஸ் கதாநாயக னாக அறிமுகமாகும் படத்தில் நடிகர் விவேக் ஆகவும் வருகிறேன்.
டைரக்ட் செய்யப்போவதாக ஒரு பேச்சு அடிபடுகிறதே?
பசுமை கலாம் திட்டத்தின் கீழ் மரம் நட்ட அனுபவத்தை வைத்து ஒரு கதை எழுதியிருக்கிறேன். நல்ல தயாரிப்பாளர் கிடைத்தால் அந்த கதையை டைரக்ட் செய்யலாம் என்று இருக்கிறேன்.’ இவ்வாறு விவேக் கூறினார்.


ரம்யாவுக்கு சினிமா வாய்ப்பு




சினிமாவில் நடிக்க நிறைய அழைப்பு வருகிறது. ஆனால் எனக்கு அதில் ஆர்வம் இல்லை என்று சின்னத்திரை தொகுப்பாளர் ரம்யா கூறியுள்ளார்.
விஜய் டி.வி.யில் பிரபல தொகுப்பாளராக இருப்பவர் ரம்யா. இவர் தொகுத்து வழங்கும் உங்களில் யார் அடுத்த பிரபுதேவா சீசன் 2, நம்ம வீட்டு கல்யாணம் உள்ளிட்ட பல நிகழ்ச்சிகள், ரசிகர்களை ரொம்பவே கவர்ந்துள்ளன. ஏராளமான ரசிகர்கள் ரம்யாவின் தொகுப்பை புகழ்ந்து தள்ளி கடிதம் எழுதி வருகிறார்கள்.
இது குறித்து ரம்யா அளித்துள்ள பேட்டியில், வைஷ்ணவா கல்லூரியில் விஷ¥வல் கொமியூனிகேசன் முடித்த பிறகு மொடலிங் செய்து வந்தேன். அப்போதுதான் கொம்பயரிங்கில் ஆர்வம் வந்தது.
கொம்பயரிங் ஒன்றும் சுலபமான வேலை அல்ல. எவ்வளவு பெரிய ஆட்கள் வந்தாலும் எங்களைத்தான் எல்லோரும் கவனிப்பார்கள்.
கொம்பயரிங் செய்யும் போது தமிழில் பேசுவதையே விரும்புகிறேன். சினிமாவில் நடிப்பதற்கு தினமும் அழைப்புக்கள் வந்த வண்ணம் உள்ளன.
ஆனால் அதில் எனக்கு ஆர்வம் சுத்தமாக இல்லை. சினிமாதான் வாழ்க்கையென்று கிளம்பியிருந்தால், இதுவரை நிறைய படங்களில் என்னையும் சராசரி நடிகையாக இந்த உலகம் பார்த்திருக்கும் என்று கூறியுள்ளார்.

ரூ. 196 கோடி சம்பளம் வாங்கும் நடிகை


ஹொலிவுட் ஹீரோக்கள் அதிகபட்சமாக 40 முதல் 50 கோடி ரூபா வரை சம்பளம் பெற்று வருகையில் ஹொலிவுட்டில் ஒரு நடிகை ஒரு படத்திற்கு 196 கோடி சம்பளம் வாங்குகிறார்.
பிரபல போர்பஸ் பத்திரிகை மே 2011 முதல் மே 2012 ஆம் ஆண்டு முடிய ஹொலிவுட்டில் அதிக சம்பளம் வாங்கும் நடிகைகள் பட்டியலை வெளியிட்டுள்ளது.
இதில் 22 வயதாகும் ஹொலிவுட்டின் கிறிஸ்டன் ஸ்டீவெர்ட் ஒரு படத்திற்கு 34.5 மில்லியன் டொலர் (இந்திய ரூபாயில் சுமார் 196 கோடி ரூபா) பெறுகிறார்.
இவருக்கு அடுத்தபடியாக கெமரூன் டய்ஸ் 34 மில்லியன் டொலரும், சாண்டரா புல்லாக் 25 மில்லியன் டொலரும் பெறுகின்றனர். ஹொலிவுட்டில் அதிக சம்பளம் வாங்கும் டொப் 10

நடிகைகள் பட்டியல்

01. கிறிஸ்டீன் ஸ்டீவெர்ட்
(34.5 மில்லியன் டொலர்)
02. கெமரூன் டய்ஸ்
(34 மில்லியன் டொலர்)
03. சாண்ட்ரா புல்லாக்
(25 மில்லியன் டொலர்)
04. ஏஞ்சலா ஜூலி
(20 மில்லியன் டொலர்)
05. சார்லிஸ் தெரான்
(18 மில்லியன் டொலர்)
06. ஜூலியா ராபர்ட்ஸ்
(16 மில்லியன் டொலர்)
07. சாரா ஜெஸிகா பார்கர்
(15 மில்லியன் டொலர்)





திருமணமாகி குழந்தை பெற்ற பின் சினிமாவில் அறிமுகமாகி ஏராளமான படங்களில் நாயகியாக நடித்தவர்

பதினைந்து ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வாய்ப்பு

பழம்பெரும் நடிகை செளகார் ஜானகி 15 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் சினிமாவில் நடிக்கிறார். நாடக துறையில் ஈடுபட்டு வந்த செளகார் ஜனாகி, 1949ம் ஆண்டு தெலுங்கு படம் மூலம் திரையுலகில் நுழைந்தார். அதையடடுத்து தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி ஆகிய மொழிகளில் அனைத்து முன்னணி நடிகர்களுடனும் 385 படங்களில் நடித்துள்ளார்.
திருமணமான நடிகைகளுக்கு சினிமா வாய்ப்புக்கள் கிடைக்காது. அப்படியே கிடைத்தாலும் கதாநாயகி வாய்ப்பு கிடைக்காது என்ற சூழ்நிலையில் திருமணமாகி குழந்தை பெற்ற பிறகே சினிமாவில் அறிமுகமாகி ஏராளமான படங்களில் கதாநாயகியாக நடித்த பெருமைக்குரியவர் செளகார் ஜானகி.
இந்நிலையில் ராஜ்மோகன் இயக்கத்தில் கிருஷ்ணா நடிக்கும் வானவராயன் வல்லவராயன் என்ற படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார் செளகார். மீண்டும் நடிக்க வருவது குறித்து அவர் கூறியதாவது; 15 வருடங்களுக்கு பிறகு நடிப்பது அதுவும் தமிழ்ப் படத்தில் நடிப்பது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.
இந்த இடைப்பட்ட காலத்தில் நான் நடிக்க மாட்டேன் என்று கூறியதில்லை, என்னை யாரும் நடிக்க அழைக்கவில்லை. அது குறித்து நான் வருத்தப் படவும் இல்லை. இயக்குனர் ராஜ்மோகன் கூறிய கதையில் என் கதாபாத்திரத்துக்கு அதிக முக்கியத்துவம் இருந்தது. இதில் அலிபாபா, கற்றது களவு, கழுகு படங்களில் நடித்த கிருஷ்ணா கதாநாயகனாக நடிக்கிறார்.
மீண்டும் நடிக்க வர காரணமாக இருந்த இயக்குனர் ராஜ்மோகன், திரைப்பட பத்திரிகை தொடர்பாளர் மெளனம் ரவி, தயாரிப்பாளர் ராஜபாண்டியன் ஆகியோருக்கு நன்றி. இதற்கு முன் நான் கடைசியாக நடித்த படம் தொடரும்.
அஜித், தேவயானி நடித்த படம் தொடரும். என்ற டைட்டிலில் நடித்து விட்டு நடிப்பை தொடர முடியாமல் போய் விட்டது. என்னுடைய 62 ஆண்டு கால சினிமா அனுபவத்தில் எத்தனையோ கலைஞர்களுடன் பழகியிருக்கிறேன். ஒவ்வொருவரும் ஒரு வகையில் திறமையானவர்கள். இப்போது ரஜினிக்கு இருக்கும் மக்கள் செல்வாக்கு பிரமிக்கவைக்கிறது.
கமல்ஹாசனின் திறமை வியக்க வைக்கிறது. ஹேராம் படத்தில் என்னை நடிக்க அழைத்திருந்தார் கமல், பார்த்தால் பசி தீரும் படத்தில் குழந்தையாக நடித்த கமல் என்னை வைத்து இயக்கும் அளவுக்கு வளர்ந்ததை நினைத்து மிகவும் பெருமையாக இருந்தது. அந்தப் படத்தில் ஒரே ஒரு காட்சியில் மட்டுமே நடித்தேன்.
அதற்குள் எனக்கு இதய அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய சூழ்நிலை. மேற்கொண்டு நடிக்க முடியாமல் போய் விட்டது. ஆனாலும் எனக்கு பேசிய தொகையை மொத்தமாக ஒரே செக்கில் கமல் அனுப்பி வைத்தார். அந்த நேரத்தில் அந்த தொகைதான் என்னுடைய மருத்துவ சிகிச்சைக்கு உதவியது. அதை எப்போதும் மறக்க மாட்டேன்.
வானவராயன் வல்லவராயன் படத்தின் மூலம் என்னுடைய இரண்டாவது இன்னிங்சை தொடங்கி உள்ளேன். கோபி செட்டிபாளையத்தில் படப்பிடிப்பில் கலந்து கொள்கிறேன். இப்போது எனக்கு வயது 81. ஆனாலும் மனதளவில் இன்னும் இளமையாக உணருவதால் ஆரோக்கியத் துடன் இருக்கிறேன். தொடர்ந்து படங்களில் நடிப்பேன் என்றார் செளகார் ஜானகி.