Thursday, October 11, 2012

தனக்குத்தானே இரங்கற்பா எழுதிகொண்ட கவிஞர்

காட்டுக்கு ராஜா, சிங்கம், கவிதைக்கு ராஜா, கண்ணதாசன் பெருந்தலைவர் காமராஜரின் வாக்கு இது. ‘நான் நிரந்தரமானவன், அழிவதில்லை. எந்த நிலையிலும் எனக்கு மரணமில்லை’ என்று கண்ணதாசனே அறிவித்தார். கவிரசத்தின் சில துளிகள்.... கண்ணதாசன் என்றால் கண்ணனுக்கு தாசன் என்று அர்த்தம் அல்ல.
‘அழகான கண்களைப் பற்றி வர்ணிப்பதிலும், வர்ணிக்கப்பட்டதைப் படிப்பதிலும் ஆசை அதிகம். அதனால் இந்தப் பெயரை வைத்துக்கொண்டேன்’ என்பது அவரே அளித்த விளக்கம். பெற்றோர் வைத்த பெயர் முத்தையா. சிறு வயதில் இன்னொரு குடும்பத்துக்கு 7,000 ரூபாய்க்குத் தத்துக் கொடுக்கப்பட்டவர் கண்ணதாசன்.
அந்த வீட்டில் அவர் பெயர், நாராயணன். ‘கலங்காதிரு மனமே, உன் கனவெல்லாம் நனவாகும் ஒரு தினமே’ என்று ‘கன்னியின் காதலி’ யில் எழுதியது முதல் பாட்டு. ‘மூன்றாம் பிறை’யில் வந்த, ‘கண்ணே கலைமானே’ கவிஞரின் கடைசிப் பாட்டு. எப்போதும் மஞ்சள் பட்டுச் சட்டை, வேட்டி அணிந்திருப்பார்.
திடீரென்று கழுத்து, கைகளில் நகைகள் மின்னும். திடீரென்று காணாமல் போய்விடும். ‘பள்ளிக்கூடத்துக்குப் போயிருக்கு’ என்று அவை அடகு வைக்கப்பட்டு இருப்பதைச் சொல்வார். மயிலாப்பூர் உட்லண்ட்ஸ் ஹோட்டல், அபிராமபுரம் கவிதா ஹோட்டல் இரண்டும் தான் கவிஞருக்குப் பிடித்த இடங்கள்.
பெரும்பாலான பாடல்கள் பிறந்தது இங்குதான். வெளியூர் என்றால் பெங்களூர் உட்லண்ட்ஸ். வேட்டியின் ஓரத்தைப் பிடித்துக்கொண்டு அறைக்குள் நடந்தபடி பாடல்களின் வரிகளைச் சொல்வார். நடந்துகொண்டே இருந்தால்தான் சிந்தனை துளிர்க்கும். கவிதை வரிகள் சொல்லும்போது செருப்பு அணிய மாட்டார்.
கொஞ்சம் மது அருந்திவிட்டால், என் சிந்தனை சுறுசுறுப்படைவது வழக்கம். அதைப்போல் இன்ப விளையாட்டில் எனக்கு ஆசை உண்டென்றாலும். சிந்திக்கிற நேரத்தில் ரதியே வந்தாலும் திரும்பிப் பார்க்க மாட்டேன் என்பது கவிஞரின் வாக்குமூலம். ‘முத்தான முத்தல்லவோ’ பாட்டைத்தான் மிகக் குறைவான நேரத்துக்குள் (10 நிமிடங்கள்) எழுதி முடித்தார்.
அதிக நாட்களுக்கு அவரால் முடிக்க முடியாமல் இழுத்தது ‘நெஞ்சம் மறப்பதில்லை.... அது நினைவை இழப்பதில்லை!’ கண்ணதாசன் அடிக்கடி கேட்கும் பாடல், ‘திருப்பாற்கடலில் பள்ளிகொண்டாயே ஸ்ரீமன் நாராயணா’ தனக்குப் பிடித்த பாடல்களாக ‘என்னடா பொல்லாத வாழ்க்கை’, ‘சம்சாரம் என்பது வீணை’ ஆகிய இரண்டையும் சொல்லியிருக்கிறார். கண்ணதாசனுக்குப் பிடித்த இலக்கியம் கம்பராமாயணம். ‘நான் பாடல் இயற்றும் சக்தியைப் பெற்றதே அதில் இருந்துதான்’ என்பார். காமராசர் வாழ்க்கை வரலாற்றைத் திரைப்படமாக எடுக்க விரும்பினார். சில காட்சிகளையும் எடுத்தார்.
ஆனால். முற்றுப் பெறவில்லை. ஆரம்ப காலத்தில் வேலை எதுவும் கிடைக்காததால், சந்திரமோகன் என்று பெயர் மாற்றிக்கொண்டு சினிமாவில் நடிக்க வாய்ப்பு கேட்டிருக்கிறார். பிற்காலத்தில் ‘பராசக்தி’ ‘ரத்தத்திலகம்’, ‘கறுப்புப்பணம்’, ‘சூரியகாந்தி’, உள்ளிட்ட படங்களில் நடித்தும் இருக்கிறார். முதல் மனைவி பெயர் பொன்னம்மா. அடுத்த ஆண்டே பார்வதி என்பவரை இரண்டாம் திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்குத் தலா ஏழு குழந்தைகள்.
50 வது வயதில் வள்ளியம்மையைத் திருமணம் செய்தார். இவர்களுக்குப் பிறந்தவர் தான் விசாலி. மொத்தம் 15 பிள்ளைகள்! படுக்கை அறையில் வைத்திருந்த ஒரே படம் கிருஷ்ணர். வெளிநாடு போவதாக இருந்தால், சாண்டோ சின்னப்பா தேவர் வீட்டுக்குப் போய். அவர் பூஜை அறையில் இருக்கும் முருகனை வணங்கிவிட்டுத் தான் செல்வார்.
‘கண்ணதாசன் இறந்துவிட்டார்’ என்று இவரே பலருக்கும் போன் போட்டு வதந்தியைக் கிளப்பி, வீடு தேடிப் பலரும் அழுது கூடிவிட, பிறகு இவரே முன்னால் தோன்றிச் சிரித்த சம்பவம் நடந்திருக்கிறது. உங்கள் புத்தகங்கள் அனைத்தையும் படிக்கும் ஒருவனுக்கு உங்களது புத்திமதி என்ன? என்று கேட்டபோது, அவர் சொன்ன பதில்... ‘புத்தகங்களைப் பின்பற்றுங்கள்.
அதன் ஆசிரியரைப் பின்பற்றாதீர்கள்!’ தன்னுடைய பல வீனங்களை வெளிப்படையாக ஒப்புக்கொண்டு சுயவரலாறு எழுதியவர். ‘வனவாசம், மனவாசம் இரண்டும் ஒருவன் எப்படி வாழக்கூடாது என்பதற்கான உதாரணங்கள்’ என்றார். காமராசர், அண்ணா, எம். ஜி. ஆர். கருணாநிதி ஆகிய நான்கு பேரையும் அதிகமாகப் பாராட்டியவரும், திட்டியவரும் இவரே! ஈ. வெ. கி. சம்பத், ஜெயகாந்தன், சோ, பழ. நெடுமாறன் ஆகிய நான்கு பேரும் அரசியல் ரீதியாக நெருக்கமான நண்பர்கள் ‘கவிஞரின் தோரணையைவிட அரசனின் தோரணைதான் கவிஞரிடம் இருக்கும்’ என்பார் ஜெயகாந்தன்.
திருமகள், திரையலி, மேதாவி, சண்டமாருதம் ஆகியவை இவர் வேலை பார்த்த பத்திரிகைகள், தென்றல், தென்றல் திரை, முல்லை, கடிதம், கண்ணதாசன் ஆகியவை இவரே நடத்தியவை. திருக்கோஷ்டியூர் தொகுதியில் முதல் தடவை நின்றார், தோற்றார். அதன் பிறகு தேர்தலில் நிற்கவே இல்லை. ‘இது எனக்கு சரிவராது’ என்றார். ‘குடிப்பதும், தவறுக்கென்றே தங்களை ஒப்புக்கொடுத்துவிட்ட பெண்களுடன் ஈடுபடுவதும், ஒரு தனி மனிதன் தன் உடல் நிலைக்கும் வசதிக்கும் ஏற்ப செய்யும் தவறுகளே தவிர, அதனால் சமுதாயத்தின் எந்த அங்கமும் பாதிக்கப்படுவதில்லை’ என்று தனது தவறுகளுக்கு வெளிப் படையான விளக்கம் அளித்து உள்ளார்.
பிர்லாவைப் போலச் சம்பாதித்து ஊதாரியைப் போலச் செலவழித்து, பல நேரங்களில் பிச்சைக்காரனைப்போல் ஏங்கி நிற்கும் வாழ்க்கை தான் என்னுடையது என்பது அவர் அளித்த வாக்கு மூலம்.
தான் வழக்கமாகப் படுத்துறங்கும் கருங்காலி மரத்தில் செய்யப்பட்ட கட்டிலுடன் தன்னை எரிக்க வேண்டும் என்பது கண்ணாதாசனின் கடைசி விருப்பம்! அச்சம் என்பது மடமையடா, ‘சரவணப் பொய்கையில் நீராடி’ மலர்ந்தும் மலராத... போனால் போகட்டும் போடா...’ கொடி அசைந்ததும் ‘உன்னைச் சொல்லிக் குற்றமில்லை’ கடவுள் மனிதனாகப் பிறக்க வேண்டும்’ எங்கிருந்தாலும் வாழ்க’ அதோ அந்தப் பறவைபோல வாழ வேண்டும்’ சட்டி சுட்டதடா கை விட்டதடா..’ ஆகிய 10 பாடல்களும் தமிழ் வாழும் காலம் முழுதும் இருக்கும் காவியங்கள் இறப்புக்கு 11 ஆண்டுகளுக்கு முன்பே தனக்குத் தானே இரங்கற்பா எழுதி வைத்துக்கொண்டார்.


எம்.ஜிஆரையும் சிவாஜியையும் வைத்து படம் எடுத்தவர் எனது கணவர்

எம். ஜி. ஆருடன் கத்தி சண்டை போட்ட பி. எஸ். சரோஜா
என் கணவர் இயக்கிய படங்களில் ‘வாழ பிறந்தவள்’, ‘பெரிய இடத்துப் பெண்’, ‘பணக்காரக் குடும்பம்’, ‘குலேபகாவலி’, ‘பாசம்’, ‘காத்தவராயன்’, ‘கூண்டுக்கிளி’, ‘தங்கச் சுரங்கம்’, ‘நான்’, ‘மூன்றெழுத்து’, ‘புதுமைப் பித்தன்’, ‘சொர்க்கம்’, ‘பறக்கும் பாவை’, ‘நாடோடி’, ‘என்னைப்போல் ஒருவன்’ இதெல்லாம் எனக்கு ரொம்ப ரொம்ப பிடித்த படங்கள் எந்த ஒரு படமானாலும் கதைகளிலும், காட்சிகள் அமைப்பிலும் வித்தியாசமாக ஏதாவது செய்யணும்னு என்னுடைய கணவர் நினைப்பார்.
‘அன்று வந்ததும் அதே நிலா’ அப்படிங்கிற பாடல் காட்சிக்கு எம். ஜி. ஆர். பேண்ட், கோட், ஸ¥ட் போட்டு, வெஸ்டர்டன் டான்ஸ் ஆட வைக்க முயற்சித்தபோது எம். ஜி. ஆர். இதையெல்லாம் என்னோட ரசிகர்கள் ஏத்துக்க மாட்டாங்கன்னு பிடிவாதம் பிடித்தார். அதற்கு என் கணவர், விடாப்பிடியாக எம். ஜி. ஆரைத் தன்னுடைய கற்பனைப்படியே உடைகள் அணிவித்து, நடனம் ஆட வைத்து படம் பிடித்தார்.
பாட்டும், அந்தக் காட்சியும் ரசிகர்கள் மத்தியில் மிகப் பெரும் வரவேற்பைப் பெற்றன. அதற்குப் பிறகு எல்லா இயக்குநர்களும் தங்கள் படங்களில் எம். ஜி. ஆரை வைத்து ஒரு வெஸ்டர்ன் நடனப் பாடல் அமையும்படி பார்த்துக்கொள்வார்கள். ‘நீங்க ஆரம்பிச்சு வைச்சிங்க எல்லா இயக்குநர்களும் அதையே பிடிச்சுக்கிட்டாங்க....’ன்னு எம். ஜி. ஆர். என்னிடமும் என் கணவரிடமும் சொல்லி மகிழ்ந்தார்.
அப்போதும் சரி, இப்போதும் சரி என் கணவரை நான்தான் இயக்குநராக்கினேன் என்ற பெருமையும் சந்தோஷமும் என் மனதிற்குள் நிறைந்திருக்கிறது.
எங்களுடைய தயாரிப்பில் வரவு செலவு கணக்கு பணப்பட்டுவாடா இதையெல்லாம் நான்தான் கவனித்துக் கொண்டேன். உழைத்தவர்களின் வியர்வை நிலத்திலே விழுவதற்குள் அவர்களுக்குப் பணத்தைக் கொடுத்துவிடுவேன்.
எங்களுடைய நிறுவனத்தின் படங்களில் நடித்த எம். ஜி. ஆர்., சிவாஜி, &ஜயலலிதா, சரோஜா தேவி, ராமச்சந்திரன் இப்படி எல்லோருக்கும் அவர்களுடைய வீட்டிற்கே போய் பணத்தை முன்கூட்டியே கொடுத்துவிட்டு வருவேன். அவர்கள் எல்லோரும், இதைப் பார்த்து ஆச்சர்யமும், சந்தோஷமும் அடைவார்கள்.
தோட்டக் கலையில் எனக்கு ரொம்ப ஆர்வம் உண்டு. தாம்பரத்தில் 18 ஏக்கரில் பழங்கள், காய்கறிகள், மலர்கள் என்று எல்லா வகையானவற்றையும் பயிரிட்டு தனி கவனம் செலுத்துவேன்.
அடையாரில் இருந்தபோதும், தி. நகரில் வசித்த போதும் வீட்டிலேயே காய்கறி, பழங்கள் பயிரிட்டு வீட்டுக்குத் தேவையானவைகளைப் பயன்படுத்தி வந்தேன். 1957 களில் மலர் கண்காட்சி போட்டிகளில் கலந்துகொண்டு விருது வென்றிருக்கிறேன்.
என்னுடைய தோட்டக்கலை பராமரிப்பில், நிர்வாகத் திறமை, நடிப்புத் திறமை, கதைகளைக் கேட்டு தேர்வு செய்து நடிப்பது போன்றவற்றையெல்லாம் என்னுடைய கணவரின் சகோதரி டி. ஆர். ராஜகுமாரி உடனுக்குடன் கூப்பிட்டு பாராட்டி மகிழ்வார்.
அருணகிரிநாதர் படத்தில் டி. எம். எஸ்.ஸின் அக்காவாக நடித்த காட்சிகளில் ‘தம்பி திருந்துவதற்காக ஒரு காட்சியில் நான் பேசி, நடித்ததைப் பார்த்து படப்பிடிப்பில் இருந்தவர்கள் எல்லோரும் அழுதே விட்டார்கள். படத்தைப் பார்த்துவிட்டு டி. ஆர். ராஜகுமாரியும் அழுது, புலம்பி என் நடிப்பை வெகுவாகப் பாராட்டினார். இதை என் வாழ்னாளில் என்றுமே மறக்க முடியாதது.
‘புதுமைப்பித்தன்’ படத்தில் என்னோடு எம். ஜி. ஆர். கத்தி சண்டை போடும்படியா காட்சி ஒன்றை என் கணவர் ஏற்பாடு செய்துவிட்டார். முதலில் எம். ஜி. ஆர். தயங்கினார். ‘ஒரு பெண்ணோடு கத்தி சண்டை போட வேண்டாம்...’ என்று கூறி, மறுத்தார். இது காட்சிக்குத் தேவை, நீங்கள் கொஞ்சம் வித்தியாசமாக இதில் இடது கையால் கத்தியைப் பிடித்து அவரோடு சண்டை போடுங்கள் பிரமாதமாக இருக்கும். உங்கள் ஸ்டைலில் இருந்து இது வித்தியாசப்படும் என்று சண்டைக் காட்சிக்கு விளக்கம் கூறி என்னுடைய கணவர், எம். ஜி. ஆரை சம்மதிக்க வைத்தார்.
நானும் சண்டைப் பயிற்சி மாஸ்டரிடம் நன்றாக பயிற்சி எடுத்துக்கொண்டு அந்தக் காட்சியில் நடித்தேன். உண்மையிலேயே அந்தக் காட்சி எனக்கும் எம். ஜி. ஆருக்கும் நல்ல பெயரை தேடித்தந்தது. ‘கூண்டுக்கிளி’ படத்தில் எம். ஜி. ஆர்., சிவாஜி இருவரையும் வைத்து நாங்கள் படம் எடுக்கும்போது அதில் எல்லோரும் உற்சாகமாக நடித்தார்கள்.
வித்தியாசத்தை விரும்பும் என் கணவர் சிவாஜியை எம். ஜி. ஆருக்கு வில்லனாக நடிக்க வைத்தார். என் கணவரிடம் அவர்கள் அண்ணன் தம்பி போலத்தான் பழகி வந்தார்கள். எதைச் சொன்னாலும் அதைச் செய்து கொடுத்தார்கள். இந்தப் படத்தில் இரு திலகங்களையும் சேர்த்து, நடிக்க வைத்த பெருமை என்னுடைய கணவரையே சாரும். சினிமா வரலாற்றில் எங்கள் தயாரிப்பில் ‘கூண்டுக்கிளி’ நிலையானதொரு இடத்தைப் பிடித்திருப்பதில் எனக்கு மகிழ்ச்சிதான்!
எங்களுக்கு கலாராணி, கணேஷ், சாந்தின்னு மூன்று செல்வங்கள். பேரன், பேத்திகள் ஆறு பேர். 1997 ல் என் கணவர் இயற்கை எய்தினார். அதற்கு முன்பே நான் சினிமாவில் நடிப்பதை நிறுத்திவிட்டேன்.
முக்கியமான திரைப்பட விழாக்கள், பொது நிகழ்ச்சிகளில் யாராவது கலந்துகொள்ளும்படி வற்புறுத்தி அழைத்தால் மட்டுமே சென்று வருகிறேன். எனக்கு தெய்வ பக்தி உண்டு. அடிக்கடி உள்ளூர், வெளியூர்களில் உள்ள முக்கிய கோயில்களுக்குச் சென்று கடவுளை தரிசனம் செய்து வருகிறேன்’ என்று இனிக்க இனிக்க கூறினார்.


அழகுக்கு கவனிப்பு வெற்றிக்கு விசாரிப்பு
 

அழகு இருந்தால் கவனிப்பார்கள்... வெற்றி தந்தால் விசாரிப்பார்கள்... என்றார் நடிகை பிரணிதா. உங்கள் பெயருக்கு என்ன அர்த்தம் என்றால்? “சகலகலா வல்லி”யென சட்டென ஆரம்பிக்கிறார் பிரணிதா சகலகலா வல்லி என்றால் எல்லாமும் தெரியுமா? என்ன தெரியாது என்று கேளுங்கள்? கேள்விகளால் நிரம்பி தொடர்கிறது பிரணிதாவின் பேட்டி.
பிரணிதா சினிமா எண்ட்ரி எப்படி நிகழ்ந்தது?
பள்ளி படிக்கும் வயதில் இருந்தே நடிப்பு டான்ஸ், விளையாட்டு என நான் ஆல் ரவுண்டர். வீட்டில் அம்மா, அப்பா டாக்டர்ஸ். அப்பா, அம்மா இரண்டு பேரும் செய்கிற வேலையை நாமும் ஏன் செய்யணும்ன்னு பி. காம் சேர்ந்துவிட்டேன்.
அது நல்ல கொலேஜ். நடிப்பு, டான்ஸ்ன்னு என் ஆர்வத்துக்கு அப்படியே தீனி போட்டது. இப்போதும் அந்த கொலேஜில்தான் படிக்கிறேன். எந்த கொலேஜ் எந்த இயர் என கேட்டு விடாதீர்கள். அப்புறம் என் வயதை கண்டு பிடித்து விடுவீர்கள்.
நான் நடிகையாக ஆனது கனவுமல்ல இலட்சியமுமல்ல. அது அதுவாகவே நடந்தது. சின்ன வயதில் இருந்தே நடிப்பதில் ஆர்வம். ஆனால் சினிமாவை நான் எதிர்பார்க்கவில்லை. திடீரென கொலேஜுக்கு வந்த ஒருவர் “நீ சினிமாவுக்கு வர்aயா?”ன்னு கேட்டு விட்டு போய் விட்டார்.
அப்போதே ஆர்வம் தொற்றிக் கொண்டது. நண்பர்களும் “உனக்கு நடிப்புதான் நல்லா வருதே, சினிமாவுக்கு போ என ஆசீர்வாதம் பண்ணினார்கள். வீட்டிலோ எதிர்ப்பு நான் பிடிவாதமாக இருந்தேன்.
அவர்களுக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை.
சரியென என் இஷ்டத்துக்கு விட்டு விட்டார்கள்? முதல் படம் கன்னடத்தில் என் தாய் மொழி கன்னடம் என்பதால் என் சினிமா எண்ட்ரியில் எந்த சிரமமும் இல்லை. அதன் பின் தெலுங்குப் படங்கள். தமிழ் சினிமா பிடிக்கும் என்பதால் எப்போது தமிழில் நடிப்போம் என காத்திருந்தேன். அதன் பின்தான் ‘உதயன்’ படம் மூலம் தமிழுக்கு வந்தேன்.
தமிழ் சினிமா பிடித்திருக்கிறதா?
ரொம்பவே பிடித்திருக்கிறது. கன்னடம், தெலுங்கு இந்த இரண்டு சினிமாக்களை விட தமிழ் சினிமாவில்தான் திருப்தி. தமிழ் சினிமா மேல் எல்லா ஹீரோயின்களுக்கும் ஒரு எதிர்பார்ப்புதான். இந்திய அளவில் எந்த ஹீரோயினாக இருந்தாலும் ‘தமிழ் சினிமாவுக்கு நடிக்க வர்aங்களா?”ன்னு கேட்டுப் பாருங்கள் எந்தத் தயக்கமும் இல்லாமல் வந்து விடுவார்கள்.
அந்த அளவுக்கு தமிழ் சினிமா ரீச் ஆகியிருக்கிறது. தமிழ் சினிமாவில் எத்தனை பெரிய லெஜண்டஸ் இருக்கிறார்கள். மியூசிக் டைரக்ஷன், சினிமாட்டோகிராபி, ஆக்டிங்ன்னு எல்லாவற்றிலும் சாதனையாளர்கள் இருக்கிறார்கள். மணிரத்னம் படங்களுக்கு எங்களூரில் ஒரு கூட்டமே இருக்கிறது.
ரஹ்மான் இசைக்கு உலகமே காத்தியிருக்கிறது. நானும் ‘மைனா’ பார்த்துவிட்டு இரண்டு நாள் தூங்கவில்லை தெரியுமா? விண்ணைத் தாண்டிவருவாயா சூப்பர் படம்.
நிறைய ஹீரோயின்களுக்கு முதல் படம் ‘கிளிக்’ ஆகும். உங்களுக்கு அப்படியில்லை. வருத்தம்தானே?
நிறையவே வருத்தம் ஆனால் ‘உதயன்’ படத்தில் நடிப்புக்கு ஸ்கோப் இல்லை. எனக்கு இரண்டு பாட்டு, நான்கு காட்சிகள்தான் இருந்தன. அதனால் அப்போது பெரிதாக வருத்தம் இல்லை. சில ஹீரோயின்கள் முதல் படத்திலேயே கிளிக் ஆகி பரபரப்பாகும் போது, நாமும் அது மாதிரி ஒரு படத்தை தேர்வு செய்திருக்கலாம் என தோன்றும்.
அப்படி அசர வைத்தவர் அமலாபோல் ‘மைனா’ படம் அவருக்கு நல்ல ரீச் தந்தது. எப்படி இது முடிந்தது என விசாரித்தால் ‘மைனா’ அவருக்கு முதல் படம் இல்லை.
தமிழில் இதற்கு முன் இரண்டு படங்கள் நடித்திருக்கிறார். இரண்டுமே ப்ளாப்” என்றார்கள். அழகு இருந்தால் கவனிப்பார்கள். வெற்றி தந்தால்தான் விசாரிப்பார்கள். இது அப்போது நான் கற்றுக்கொண்ட விஷயம். அதனால்தான் வெற்றிக்கு காத்திருந்தேன்.
இப்போது “சகுனி” கிடைத்திருக்கிறது. இது நல்ல வாய்ப்பு. சரியாக பயன்படுத்தி இருக்கிறேன். இனி ரசிகர்கள்தான் தீர்ப்பு சொல்ல வேண்டும். எதிர்பார்த்தது கிடைக்காத போது வருத்தம்தான். ஆனால் நிச்சயம் ஒரு நாள் கிடைக்கும். நம்பிக்கைத்தானே வாழ்க்கை.
பிரணிதா-சில செய்திகள் சொல்லுங்கள்?
நான் ரொம்ப கூல். எனக்கு கோபம் வராது. ஆடம்பரமான நகைகள் போட்டுக் கொள்ள பிடிக்காது. ஜீன்ஸ் - டி சாட்தான் என் ஃபேவரைட். இப்போது தாவணி புடவையில் சூப்பராஇருப்பதாக சொல்லுகிறார்கள். அப்புறம் மியூசிக் பைத்தியம் கேக் செய்வதில் எக்ஸ்பாட். கேரளாவுக்கு போவதென்றால் அவ்வளவு பிடிக்கும்.
“சகுனி” படத்தின் மூலம் உங்களின் இரண்டாவது இன்னிங்ஸ் தொடங்கிவிட்டது. அப்படித்தானே?
இன்னும் நான் என் முதல் இன்னிங்ஸயே தமிழ் சினிமாவில் முடிக்கவில்லை. அதற்குள் எப்படி இரண்டாவது இன்னிங்ஸ்க்கு போக முடியும்? சினிமா பிடித்து வந்தவள் நான். நல்ல நல்ல சினிமாக்கள் தந்து ரசிகர்களின் மனசுக்கு நெருக்கமாக இருக்க வேண்டும். எல்லோருடனும் நடிக்க வேண்டும்.
கொமர்ஷியல், அக்ஷன் இன்னும் என்ன என்ன வெரைட்டி சினிமாவில் இருக்கோ அதையெல்லாம் செய்து பார்க்க வேண்டும்.
அதற்குத்தான் சினிமாவுக்கு வந்திருக்கிறேன். மறுபடியும் எனக்கு நல்ல சினிமா, நல்ல ரோல் கிடைக்கவில்லையென்றாலும், தமிழ் சினிமாவில் நல்ல வாய்ப்புகளை பெற போராடிக்கொண்டே இருப்பேன்.
விட்டால் ரஜினியுடனும் நடிப்பேன் என சொல்வீர்கள் போல?
ஏன் நடிக்க கூடாதா? ரஜினி சேர் கூட நடித்தால் என்ன தவறு நிச்சயம் நான் நடித்து வெளிவரும் படம் ஒன்றை பார்த்துவிட்டு நிச்சயமாக எனக்கு ரஜினி வாழ்த்து சொல்லும் நாள் வரும். அப்போது நான் வெளிப்படையாக “ஒரு சான்ஸ் கொடுங்க சேர்” ன்னு சொல்லி விடுவேன்.
இப்போதும் எனக்கு ரஜினி சேர் படங்கள் என்றால் அவ்வளவு பிடிக்கும். என் அம்மாவுக்கும் அவர் படம்தான் பிடிக்கும். “நீ என்ன சினிமாவில் இருக்க ரஜினியுடன் ஒரு படத்திலாவது நடித்து விடு”ன்னு அம்மா அடிக்கடி சொல்லுவார். அம்மாவின் ஆசையை நிறைவேற்ற வேண்டும் இல்லையா?
எந்த மாதிரி படங்களில் நடிக்க ஆசை?
எனக்கு டான்ஸ் பிடிக்கும். அதிலும் பரதநாட்டியம் என்றால் உயிர். “சங்கராபரணம் படம் போல ஒரு படம் வந்தால் என் நடிப்பையும் டான்ஸ்யும் காட்டி விடுவேன். அப்படி ஒரு வாய்ப்பைத்தான் தமிழ் சினிமாவில் எதிர்பார்க்கிறேன். நிச்சயம் அது மாதிரி ஒரு வாய்ப்பு வரும். என் உடல்வாகு, நிறத்துக்கு கிராமத்துக் கதைகள் சரியாக வராது. மற்ற கதைகள் எல்லாமும் ஓகே தான்.
ஒரு படம் வெளிவந்தாலே ஆயிரம் கிசுகிசு வருகிற சினிமா இது.
உங்எளுக்கும் கிசுகிசு பிடிக்கும்தானே?
என்னடா இதுவரைக்கும் இது மாதிரி கேள்வி வரலையேன்னு பார்த்தேன். நான் ஒரு படம்தான் நடித்திருக்கிறேன். அதனால்தான் என்னைப் பற்றி பெரிதாக கிசுகிசு இல்லை.
கனனடத்திலும் தெலுங்கிலும் வந்து பிரணீதாவை பற்றி கேட்டு பாருங்கள் அவ்வளவு ஹோட் நியுஸ் கிடைக்கும். ஆனால் ஒரு செய்தியிலும் உண்மை இருக்காது.
கிசுகிசு எனக்கு பிடிக்கும். தமிழ் சினிமாவில் கிசுகிசுவை எதிர்பார்க்கிறேன். ப்Zஸ் பா. என்னைப் பற்றி கிசுகிசு எழுதுங்கப்பா. மெழுகு சிலை பிரணிதாவின் அழகு ரகசியம் என்னவோ? (தேங்க் காட்) நான் ப்யூர் வெஜிடேரியன் பொண்ணு.
 ஜிம் போய் உடம்பை வருத்திக்க மாட்டேன். டென்னிஸ் ஷட்டில் காக் என விளையாடிக் கொண்டே இருப்பேன். அதுதான் என்னை எப்போதும் புத்துணர்ச்சியாக வைத்திருக்கிறது.


சமந்தாவுக்கு சூனியமா?
 

சொந்தக் காசில் சூனியம் வைத்துக் கொள்வது என்று முதுமொழி உள்ளது. ஆனால் காசு பணத்தை செலவிட்டு தனக்கு வைக்கப்பட்ட சூனியத்தை எடுத்துள்ளாராம் சமந்தா.
“பாணா காத்தாடியில் அறிமுகம் ஆகி ‘நான் ஈ’ படவெற்றி மூலம் மணிரத்னம், ஷங்கர், கவுதம் மேனன் படங்களில் அடுத்தடுத்து ஒப்பந்தம் ஆனவர் சமந்தா ஆனால் திடீரென மணிரத்னம், ஷங்கர் படங்களிலிருந்து அவர் விலக வேண்டிய நிலைக்கு ஆளானார்.
அதற்குக் காரணம் சமந்தாவுக்கு வந்த தோல் நோய் அலர்ஜிதான். ஆனால் தோல் நோய் அலர்ஜிக்கு கூட யாரோ சக நடிகை வைத்த பில்லி சூனியம்தான் காரணம் என்று போட்டுக் கொடுத்திருக்கின்றனர் திரை உலக சகபாடிகள்.
அம்மணி ஆடிப்போய்விட்டாராம். மேலும் வினித் என்ற கேரள மந்திரவாதி பற்றிச் சொல்லி அவரிடம் போய் பில்லி, சூனியம் எடுக்கலாம் என்று சொல்லியிருக்கின்றனர். நலம் விரும்பிகள் இதை நம்பிய சமந்தாவும் சமர்த்தாக மந்திரவாதி வினித்தை சந்தித்து சிறப்பு பூஜை நடத்தியிருக்கிறாராம்.

10 ஹீரோக்களுடன் வித்யாபாலன்
 

10 ஹீரோக்களுடன் ஜோடி போட்டு நடிக்கப் போகிறார் வித்யாபாலன். ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு, இந்தியில் இந்தப் படத்தை சுடப் போகிறார். இயக்குநர் விட்சி வடிவுடையான்.
தம்பி வெட்டோத்தி சுந்தரம் படத்தை இயக்கியவர்தான் வடிவுடையான். இப்போது கரணை வைத்து ஒரு புதுப் படத்தை இயக்கப் போகிறார். படத்திற்கு சொக்கநாதன் என்ற பெயர்வைத்துள்ளார். இதை தமிழ், இந்தி, தெலுங்கில் எடுக்கிறாராம்.
இந்தப் படத்தில் பெரிய விசேஷம் என்னவென்றால் 10 ஹீரோக்கள் இருக்கிறார்களாம். அதேசமயம் ஹீரோயின் ஒரே ஒருவர்தான். அவர்தான் வித்யா பாலன்.
இது ஒரு அதிரடி சண்டைப் படம் ஹொலிவூட் பாணியில் படத்தை எடுக்கவிருக்கிறாராம். வடிவுடையான் இதற்காக விராபிக்ஸ் சாட்சிகளும் ஏகப்பட்டதைப் படத்தில் திணிக்கவுள்ளனர். இதை ஹாலிவூட்டில் வைத்தே சுடவும் உள்ளாராம் வடிவு.
முதலில் கரீனா கபூரைத்தான் இந்தப் படத்திற்காக பேசி வந்தார்களாம். இருப்பினும் தற்போது வித்யாவை புக் செய்துள்ளதாக செய்திகள் கூறுகின்றன.
 இந்தச் செய்தி உண்மையாக இருந்தால் வித்யா பாலன் நடிக்கும் முதல் படமாக இது அமையும் என்பது குறிப்பிடத்தக்கது. ‘டர்ட்டி’ வித்யாவை நல்ல ‘வடிவாக’ காட்டுங்க வடிவு....!


48 வருடங்களுக்குப் பின்னர் நீயும் பொம்மை நானும் பொம்மை

48 வருடங்களுக்கு முன்பு வெளியாகி பெரும் ஹிட்டடித்த நீயும் பொம்மை நானும் பொம்மை என்ற அட்டகாசமான பாடல் ரீமிக்ஸ் ஆகிறது. அந்தப் பாடலை பாடிய அதே கே. ஜே. ஜேசுதாஸ்தான் இப்பாடலையும் பாடியுள்ளாராம்.
மூடர் கூடம் என்ற படத்திற்காக இந்தப் பாடலை ஜேசுதாஸ் பாடியுள்ளார். அன்று பாடியதைப் போலவே இன்றும் இப்பாடலில் ஜீவனை வெளிப்படுத்தி அசத்தி விட்டாராம் ஜேசுதாஸ்.
1964ம் ஆண்டு வெளியான படம் பொம்மை அந்தப் படத்தில் இடம்பெற்ற பாடல்தான் இந்த நீயும் பொம்மை நானும் பொம்மை பாடல் அந்தக் காலத்தில் இந்த அசாதாரணமான பாடல் பெரும் ஹிட்டானது.
அமானுஷ்யப் பின்னணியில் அமைக்கப்பட்டிருந்த இந்தப் பாடல் ஜேசுதாஸ¤க்கும் பெரிய பெயரை வாங்கிக் கொடுத்தது மேலும் இன்னொரு விசேஷம் என்னவென்றால் இந்தப் பாடல்தான் தமிழ் திரையுலகில் ஜேசுதாஸ் பாடிய முதல் தமிழ்ப்பாடல் என்பதாகும். எனவே இந்தப் தமிழ்ப் பாடல் என்பதாகும்.
 எனவே இந்தப் பாடல் ஜேசுதாஸின் வாழ்க்கைப் பயணத்திலும் முக்கிய இடம்பிடித்த ஒன்று. இப்பாடலை மீண்டும் அதன் பொலிவு மாறாமல் மூடர் கூடம் படத்தில் வைத்துள்ளனர்.





No comments:

Post a Comment