Thursday, August 30, 2018

திரையுலகிலும் தந்தை கருணாநிதியின் வழியில் கலக்கிய தனயன் ஸடாலின்

தி.மு.க தலைவரான ஸ்டாலின், தந்தை கருணாநிதியின் அரசியலுக்கு முந்தைய தாய்வீடான சினிமா, தொலைக்காட்சியிலும் நடிப்பில் கலக்கியிருக்கிறார் என்பது இங்கு எத்தனைப் பேருக்குத் தெரியும்?
ஸ்டாலின் தன்னுடைய இளம்வயதில் இரண்டு படங்கள், இரண்டு டிவி தொடர்களின் நடித்திருக்கிறார். அவரது நடிப்பில் தூர்தர்ஷன் சேனலில் ஒளிப்பரப்பானகுறிஞ்சி மலர்தொடருக்கு அப்போது ஏகப்பட்ட வரவேற்பு. சொல்லப்போனால், தி.மு.க-வின் மூத்த தொண்டர்களுக்கு ஸ்டாலின் முதன்முதலில் நடிகராகத்தான் அறிமுகமானார்.
ஒரே ரத்தம்:
நடிகராக சினிமாவில் மு.க.ஸ்டாலின் முதன்முதலில் காலடி எடுத்து வைத்த திரைப்படம் 1988-ல் வெளியான ஒரே ரத்தம்’. ஒரே ரத்தம் திரைப்படத்தில் ஸ்டாலினின் கதாப்பாத்திரப் பெயர் நந்தக்குமார்’. கிஷ்மு, கார்த்திக், ராதாரவி, பாண்டியராஜ், மனோரமா, சீதா, மாதுரி என்று எக்கசக்க நட்சத்திரப்பட்டாளமே நடித்திருந்த இத்திரைப்படத்துக்கு கதை, வசனம் மு.கருணாநிதி. வார இதழ் ஒன்றில் தொடராக வெளிவந்த நெடுங்கதையின் திரைவடிவம்தான் ஒரே ரத்தம்’. கட்டவிழ்ந்து கிடந்த சாதி, மத வேறுபாடுகளுக்கு எதிராக சமுதாயப் புரட்சி பேசுகின்ற கதாப்பாத்திரத்தில் தந்தையின் வழியை அன்றே பின்பற்றி இருப்பார் மு.க.ஸ்டாலின். ஒடுக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவாகப் போராடுகின்ற, நகரம் சென்று கல்விகற்ற புரட்சியாளன் கதாபாத்திரம் ஸ்டாலினுக்கு. எனினும், படத்தில் அவர் உயிர்விடுகிற காட்சிகளில் கண்ணீர் விட்டுக் கதறிய தொண்டர்கள் ஏராளம்.
மக்கள் ஆணையிட்டால்:
விஜயகாந்த், ரேகா நடிப்பில் அதே ஆண்டில் வெளியான மற்றொரு திரைப்படம் மக்கள் ஆணையிட்டால். இதுவும் கருணாநிதியின் கற்பனையில் உருவான புரட்சிகரமான கதைதான். இப்படத்தின் ஆற அமர கொஞ்சம் யோசிச்சு பாருங்கபாடல் இன்றும் தி.மு.க-வின் தேர்தல் பிரசார பாடல்களின் டாப் 10 லிஸ்ட்டில் இடம்பிடித்திருக்கிறது. ஒல்லியான தோற்றத்துடன், முன்பக்க நெற்றியில் கற்றைமுடி புரள, வெள்ளை ஆடையில் ஸ்டாலின் பாடல் பாடும் காட்சியை ரசிக்காத தி.மு.க விசுவாசிகள் யாருமே இருக்க முடியாது.
குறிஞ்சி மலர்:
எழுத்தாளர் நா.பார்த்தசாரதியின் எழுத்தில் வெளிவந்த குறிஞ்சி மலர்என்னும் புத்தகத்தின் கதைதான் தூர்தர்ஷனில் ஒளிப்பரப்பான குறிஞ்சி மலர் சீரியல். அரவிந்தன், பூரணி என்னும் இருவரின் வாழ்வியலைச் சுற்றி இயக்கும் வாழ்க்கைப் போராட்டம்தான் இந்த தொடர். குறிஞ்சி மலரில் நடித்தபோது மு.க.ஸ்டாலினின் வயது 37. 13 பாகங்களாக ஒளிபரப்பான இந்த தொடரில் மு.க.ஸ்டாலின் கதாப்பாத்திரம் பெயர் அரவிந்தன். குறிஞ்சி மலரின் தாக்கத்தால், தி.மு.க தொண்டர்கள் அக்காலகட்டத்தில் பிறந்த குழந்தைகளுக்கு அரவிந்தன் என்று பெயர் வைத்தனர். பூரணியின் அரசியல் வாழ்வுக்காகவும், ஏழை மக்களுக்காகவும் தன் இன்னுயிரையே தியாகம் செய்யும் கதாபாத்திரம்தான் ஸ்டாலின் நடித்த அரவிந்தன்கேரக்டர்.
மு.க.ஸ்டாலினின் திரைப்பயணம் இத்துடன் முடிந்துவிடவில்லை. கடந்த தேர்தல் பிரசார காலத்தில் மக்கள் பிரச்னைகளை முன்வைத்து தி.மு.க சார்பில் வெளியானமுடியட்டும் விடியட்டும்குறும்படத்திலும் அவர்தான் ஹீரோ. ஸ்டாலின் 1988-க்குப் பிறகு நடிப்புலகை விட்டுவிட்டு, அரசியலில் வெற்றிகரமாக களம் கண்டுகொண்டிருந்தாலும், அதற்கு மாற்றாக அவரது மகன் உதயநிதி, தந்தை விட்ட நடிப்புக் களத்தைக் கெட்டியாகப் பிடித்துக்கொண்டிருக்கிறார்.



மெளனராகம்' கிருத்திகாவின் பாடல்களை பாடிய வர்ஷாவுக்கு சினிமாவில் வாய்ப்பு




விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும்
`மெளனராகம்' தொலைக்காட்சி தொடாின் கதையே ஒரு சிறுமி தனது பாடல் திறமையால் இந்த உலகுக்குத் தன்னை அடையாளப்படுத்த விரும்புவதே. அதில் கிருத்திகா எனும் சிறுமி மிக அழகாக நடித்துவருகிறார். அவர் பாடுவது போன்ற காட்சிகளைப் பார்க்கும்போது சொந்தக் குரலில் அவரே பாடுகிறாரோ என நினைக்கவைக்கும். ஆனால் அவருக்குப் பின்னணி பாடியிருப்பவர் எட்டாம் வகுப்புப் படிக்கும் வர்ஷா.



மெளனராகம்' பாடலை வர்ஷா பாடிய காட்சி யூ- டியூப்பில் நான்கரை இலட்சம் பார்வையாளர்களைக் கடந்துவிட்டது. இவர் பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் பெற்று மகிழ்ச்சியில் திளைத்து வருகிறார். சமூக வலைத்தளங்களில் பலராலும் ஷேர் செய்யப்பட்டுக் கொண்டாடப்படுகிறார் வர்ஷா. சமீபத்தில் திரைப்படம் ஒன்றில் பாடல் ஒன்றும் பாடியிருக்கிறார். சின்ன வயதில் இவ்வளவு ஆச்சர்யங்களைத் தரும் வர்ஷாவிடம் `எப்போதிருந்து சங்கீதம் கத்துக்கறீங்க?" எனப் பேச்சைத் தொடங்கியதும்.
சின்னச் சிரிப்புடன், ``நான் முறைப்படி சங்கீதம் கத்துக்கலை. அப்பா ரஞ்சித் வாசுதேவ், சித்தார், மிருதங்கம், தபேலா, கீபோர்ட், டோலக் எனப் பல இசைக்கருவிகளை வாசிப்பார். பாடல்கள் பாடியிருக்கார். படங்களுக்கு இசை அமைத்திருக்கார். அண்மையில் `செம்மறி ஆடு' படத்தில் அவர் இசையமைப்பில் நான் ஒரு பாட்டு பாடியிருக்கிறேன். அம்மா பாட்டு ஆசிாியர். இவங்கக்கிட்ட கத்துக்கிட்டதோடு சரி. லெவன்த் படிக்கும் அண்ணன் டிரெம்ஸ் கத்துக்கிட்டிருக்கான். அவனோடு நிறைய சண்டை, கொஞ்சம் சமாதானம்னு இருப்பேன். எனக்கு ரெண்டு ஆசை. ஒண்ணு, சிங்கர் ஆகணும். இன்னொண்ணு டொக்டர் ஆகணும். அப்பா நான் விரும்பும்போது, பாட்டு பிராக்டீஸ் பண்ணவும், பாடம் படிக்கவும் விடுவாங்க. ஆனா அம்மாதான் கொஞ்சம் ஸ்ட்ரிக்.மலையாளத்தில் `வானம்பாடி' என்ற சீரியலுக்கு மியூசிக் ஜெயசந்திரன் அங்கிள்தான். அவர் அப்பாவுக்கு குளோஸ் ஃப்ரெண்ட். அவருக்கு என் குரல் ரொம்ப ரொம்பப் பிடிக்கும். அதனால் என்னை அந்த தொலைக்காட்சி தொடரில் பாட வைச்சார். அவர்தான் `மெளனராகம்' தொடரின் மியூசிக் டைரக்டர். அதனால் நான் பாடறதுக்கு சான்ஸ் கிடைச்சது. பழநிபாரதி அங்கிளின் வரிகள் எல்லாம் சூப்பரா இருந்துச்சு. நீங்க சொல்ற மாதிரி, சீரியலில் நடிக்கும் கிருத்திகாவே அந்தப் பாட்டைப் பாடுற மாதிரி இருக்குனு நிறைய பேர் சொல்றாங்க. அந்தளவுக்கு என் குரல் அவங்களுக்குப் பொருத்தமா இருக்குதுன்னா எனக்கும் ரொம்ப சந்தோஷம். பலரும் அப்பாவுக்கு போன் பண்ணி என்னைப் பாராட்டறாங்க. ஒருநாள் பெரியப்பாகிட்டேயிருந்து போன் வந்துச்சு. (அவரும் மியூசிக் டைரக்டர்தான்) நான் பாடினதை எஸ்.பி.பி அங்கிள் யூ-டியூப்பில் பார்த்தாராம். உடனே போன் பண்ணி, `வர்ஷா ரொம்ப நல்லா பாடியிருக்கா, நல்ல எதிர்காலம் இருக்கு. என் ஆசிர்வாதங்களைச் சொல்லு'னு சொன்னாராம். இதைக் கேட்டதும் எனக்குக் காத்துல பறக்கிற மாதிரி இருந்துச்சு. " எனச் சொல்லும் வர்ஷாவின் குரலில் அவ்வளவு சந்தோஷம்.

`சினிமாவில் பாடும் வாய்ப்புகள் வருகிறதாமே?' என்றதும், `நிறைய வருது. `டிராஃபிக் ராமசாமி' படத்தில் `போராளி அனந்தம்...' பாடலில் நானும் பாடியிருக்கேன். வித்யாசாகர் அங்கிள் மியூசிக்ல, பா.விஜய் ஹீரோவாக நடிக்கும் `ஆருத்ரா' படத்தில் `செல்லம்மா செல்லம்' என்ற பாடலை சமீபத்தில் பாடினேன். கார்த்திக் சாரும் நானும் சேர்ந்து பாடியிருக்கும் டூயட் பாடல். இதன் ஓடியோ ஃபங்ஷனில் `இந்தப் படத்துல பா.விஜய் பாடகராக அறிமுகமாகிறார். அவர் மட்டுமல்ல வர்ஷாவும்தான். வர்ஷாவோட குரல் அருமையாக இருக்கும். என்கிட்ட மூணு வருஷமா பாடிட்டிருக்கா. இப்போதுதான் தனியா பாடுகிறாள். ஹீரோயினுக்குச் சின்னப்பொண்ணோட குரல் பொருந்துமான்னு சந்தேகமாக இருந்துச்சு. பா.விஜயிடம் இதைச் சொல்லி வேறு யாரையாவது பாடவைக்கலாமான்னு சொன்னப்போ, `யார் பாடினாலும் வர்ஷா பாடினது மாதிரி வராது'னு மறுத்துட்டார். இந்த வாய்ப்பை எனக்குக் கொடுத்தற்கு வித்யாசாகர் அங்கிளுக்கு பா.விஜய் சாருக்கும் ரொம்ப ரொம்ப நன்றி" என்கிறார்.
ஆருத்ரா படப் பாடலின் சில வரிகளைப் பாடச் சொன்னதும் இனிய குரலில் நிறைவாக முடித்தார்.
செல்லம்மா செல்லம்....
என் பேச்சு வெல்லம்
தித்திக்குதா... தித்திக்குதா...
குட்டிம்மாகூட குயிலம்மா பாட
ஒத்துக்குதா... ஒத்துக்குதா.

கவிஞரின் வாக்குமூலம்


* சிறுவனாக இருக்கும்போது வீட்டில் கிடக்கும் வெற்றுத் தாள்களில்
‘கடைக்குப் போனேன்

காலணா கொடுத்தேன்

கருப்பட்டி வாங்கினேன்..’
என அன்றாட நிகழ்வுகளைக்கூட கவிதை வடிவில் எழுதிய பிறவிக் கவிஞன்.
`கலங்காதிரு மனமே உன் கனவெல்லாம் நனவாகும் ஒரு தினமே’ என்று `கன்னியின் காதலியில்’ எழுதியது முதல் பாட்டு.

மூன்றாம் பிறையில் வந்த,
`கண்ணே கலைமானே’
என்பது கவிஞரின் கடைசிப் பாட்டு.
எப்போதும் மஞ்சள் பட்டுச் சட்டை, வேட்டி அணிந்திருப்பார். திடீரென்று கழுத்து, கைகளில் நகைகள் மின்னும் திடீரென்று காணாமல் போய்விடும். `பள்ளிக்கூடத்துக்குப் போயிருக்கு’ என்று அவை அடகுவைக்கப்பட்டு இருப்பதைச் சொல்வார்.
`மயிலாப்பூர் உட்லண்ட்ஸ் ஹோட்டல், அபிராமபுரம் கவிதா ஹோட்டல் இரண்டும் தான் கவிஞருக்குப் பிடித்த இடங்கள். பெரும்பாலான பாடல்கள் பிறந்தது இங்குதான். வெளியூர் என்றால் பெங்களூர் உட்லண்ட்ஸ்.


வேட்டியின் ஓரத்தைப் பிடித்துக்கொண்டு அறைக்குள் நடந்தபடி பாடல்களின் வரிகளைச் சொல்வார். நடந்துகொண்டே இருந்தால்தான் சிந்தனை துளிர்க்கும். கவிதை வரிகள் சொல்லும்போது செருப்பு அணிய மாட்டார்!



`கொஞ்சம் மது அருந்திவிட்டால் என் சிந்தனைகள் சுறுசுறுப்படைவது வழக்கம். அதைப்போல் இன்ப விளையாட்டில் எனக்கு ஆசை உண்டென்றாலும் சிந்திக்கிற நேரத்தில் ரதியே வந்தாலும் திரும்பி பார்க்க மாட்டேன்’ என்பது கவிஞரின் வாக்குமூலம்…!!!

தேவிகாவைப் பற்றிய அரசல்புரசல்



நடிகர் திலகம் சிவாஜி- பத்மினி ஜோடி ரசிகர்களால் கொண்டாடப்பட்ட ஜோடி. அதேபோல சிவாஜி- தேவிகா ஜோடியும் ரசிகர்களால் விரும்பப்பட்டது.

‘வானவில்’ என்கிற நாடகத்தில் சிவாஜிக்கு ஜோடியாக நடித்தே தமிழ்த் திரையுலகில் கால் பதித்தார் தேவிகா. தேவிகாவின் முதல் சினிமா கதாநாயகனாக சிவாஜி அமைந்ததாலோ என்னவோ இந்த ஜோடி நடித்த படங்களில் அந்நியோன்யமான நிலை அற்புதமாக இருக்கும். அதனாலேயே இந்த ஜோடியைப் பற்றி அரசல்புரசலாக கிசுகிசுவும் கிளம்பியது. இது தேவிகாவின் தாயாரின் காதுகளுக்கும் எட்டியது. பிஸியான நடிகையாக இருந்த தேவிகா தினமும் தன் வீட்டிலிருந்து ஷூட்டிங்கிற்காக கிளம்பும்போதெல்லாம்,

“ஏதேதோ செய்தி வருதே... நிஜமா?” என கேட்பாராம் அவரின் தாயார்.

“அப்படியெல்லாம் இல்லையம்மா” என தேவிகா பதில் சொல்வது வழக்கமாம்.

ஆனால் கிசுகிசு அதிகரிக்க அதிகரிக்க தேவிகாவின் தயாரின் சந்தேகமும் அதிகரித்திருக்கிறது. ஒரு கட்டத்தில், “என்ன... சிவாஜிய கல்யாணம் பண்ணிக்கப்போறியா?” என கேள்விகளால் துளைத்தவர் உச்சகட்டமாக... “நீ வீட்டவிட்டு ஓடிப்போய் சிவாஜிய கல்யாணம் பண்ணிக்க திட்டம் போட்டிருக்கியாமே?” என்று கேட்கத் தொடங்கினார். இதனால் தேவிகாவுக்கும் அவரின் அம்மாவுக்கும் இடையே அடிக்கடி வாக்குவாதமும் நடந்திருக்கிறது. ஆனால்
தேவிகா மனதில் அப்படி எந்த எண்ணமும் இல்லை.

மதுரை ஸ்ரீமுருகன் டாக்கீஸ் குடும்பத்தைச் சேர்ந்த உதவி இயக்குநராக இருந்த தேவதாஸை திருமணம் செய்துகொண்டார் தேவிகா. சிவாஜியை “சார்” என்று அழைத்து கடைசிவரை தன் குரு ஸ்தானத்திலேயே வைத்திருந்தார்.