Wednesday, March 26, 2014

பாலு சிபாரிசு செய்யாதது ஏன்?

பாலுவின் சகோதரி எஸ்.பி. சைலஜா ஒரு நல்ல பாடகி. 10 வயதுச் சிறுமியாக இருந்தபோது ஒரு குழந்தை  நட்சத்திரத்திற்காகப் பின்னணி பாடியிருகிறார். அதன் பிறகு, தெலுங்கில் பாட ஆரம்பித்து, தமிழில் நுழைந்து, ஒரு நல்ல பாடகி என்று பெயர் எடுத்தவர் சைலஜா. பாலு பல படங்களில் பாடிக்கொண்டிருக்கும்போது சுலபமாக சைலஜாவிற்கு சிபாரிசு செய்து படத்திற்கு இரண்டு பாடல்கள் வாங்கியிருக்க முடியும்.
ஆனால் பாலுவிற்கு அப்படிச் செய்ய மனம் இடம் தரவில்லை. அதற்கு இரண்டு காரணங்கள் உண்டு. ஒன்று தான் தங்கைக்காக சிபாரிசு செய்வதால் இன்னொரு பாடகிக்கு கிடைக்கக் கூடிய வாய்ப்பு பறிபோய்விடும் என்பது இரண்டாவது காரணம், தான் சிபாரிசு செய்தால் அது இசையமைப்பாளரை இக்கட்டான நிலைக்குத் தள்ளும் என்பது.
இதனாலேயே சிபாரிசு செய்யாமல் இருந்தார். பாலுவே இசையமைத்த படங்களில் கூட சைலஜாவிற்குப் பாடல்கள் தருவதற்கு யோசிப்பார் பாலு. தயாரிப்பாளர் முன் வந்து சொன்னால் தான் தங்கைக்குப் பாட்டு கொடுப்பார்.
இதைக்கூட பாலு, சைலஜா தன்னுடைய தங்கையாக இல்லாமல் இருந்திருந்தால் இன்னும் அதிகமான பாடல்கள் பாடியிருக்கக்கூடிய திறமையான பாடகி என்று கூறுகிறார். பாடும் விதத்தில் குடும்பத்தில் ஏற்பட்ட சிறு பிரச்சினை சைலஜாவிற்கு தான் சந்தர்ப்பம் வாங்கிக்கொடுக்காதது தான் என்கிறார் எஸ்.பி.பி.
தினசரி ஒரு புரளி, கிசுகிசு என இயங்கும் சினிமா உலகில் பாலு பல ஆண்டுகள் எந்தவிதச் சிக்கலிலும் சிக்காமல் தவிர்த்து வந்தார். ஆனால் விதி வலியது ஆயிற்றே. பாலுவும் ஒரு சிக்கலில் மாட்டினார்.

எம். ஜி ஆருக்கு மீண்டும் சினிமாவில் வாய்ப்பு

தன் மகன்களுக்கு எப்படியாவது படத்தில் நடிக்க சீக்கிரமாக வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்று நினைத்து அம்மன் கோயிலுக்கு மகன்களுக்கு தெரியாமல் சென்று பூஜை செய்து வந்தார் எம். ஜி. ஆரின் அம்மா.
இப்படி இருக்கிற காலகட்டத்தில் இருவருக்கும் சில படங்களில் நடிக்க சிறு சிறு வேடங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. தன்னுடைய விடா முயற்சியால் இம் மாதிரி வாய்ப்புக்கள் கிடைப்பதில் குறைவு ஒன்றும் இல்லை ஆனாலும் அவர் மனதிற்குள் நாம் எப்போது கதாநாயகனாக நடிக்க போகிறோம் என்ற ஏக்கம் இருந்துகொண்டு இருந்தது.
இப்படியொரு காலகட்டத்தில் ஒரு சிலருடைய முக்கிய சிபாரிசின்படி டைரக்டர் ஏ. எஸ். ஏ. சாமி பட தயாரிப்பாளர் சோமசுந்தரம் இவர்கள் இருவரும் இணைந்து ராஜகுமாரி என்ற பெயரில் ஒரு படத்தை தயாரிக்க எல்லா ஏற்பாடுகளையும் முடித்துக் கொண்டு கதாநாயகன் தேர்வு நடத்தப்பட்டது. அப்பொழுது எம். ஜி. ஆரும் இந்த தேர்வில் கலந்துகொண்டார்.
தேர்வை டைரக்டர் ஏ. எஸ். ஏ. சாமி மிகக் கவனமாக தெளிவாக நடத்தினார். இதில் எம். ஜி. ஆர். ஆள் வாட்டசாட்டம், அழகு, நிறம் மற்றும் பயிற்சிகள் இவைகள் எல்லாமே சரியாக இருந்தன.
உடனே எம். ஜி. ஆரிடம் ஏதும் சொல்லாமல் ‘உன் வீட்டு விலாசத்தை கொடுத்து செல் நாங்கள் உன் வீட்டிற்கு தகவல் அனுப்புகிறோம்’ என்று சொல்லி எம். ஜி. ஆரை அனுப்பி வைத்தார்கள். எம். ஜி. ஆர் மன திருப்தி இல்லாமல் வீட்டிற்குச் சென்றவர் அம்மாவிடமும், அண்ணனிடமும் தான் கதாநாயகனாக நடிக்க தேர்வு ஒரு கம்பனியில் நடந்தது என்ற விவரத்தை சொன்னார்.
இதைக் கேட்ட அம்மாவும் அண்ணனும் மகிழ்ச்சி அடைந்து ‘மகனே நீ கவலைப்படாதே இந்த தேர்வில் நீதான் வெற்றி அடைவாய்’ என்று அம்மா சொன்னார்.
மறுநாள் தொடர்ந்து வேலை தேடும் படலம் தொடர்ந்தது. ஒரு வார காலத்தில் மேற்படி டைரக்டர் ஏ. எஸ். ஏ. சாமி எம். ஜி. ஆரை அழைத்து வரும்படி ஒரு ஆளை வீட்டிற்கு அனுப்பி வைத்தார். ஆனால் எம். ஜி. ஆர். வீட்டில் அவர் வேறு ஒரு படப்பிடிப்புக்கு சென்று உள்ளார் அம்மா அந்த ஆளிடம் ‘மகன் வந்தால் அனுப்பி வைக்கிறேன்’ என்றார்.
எம். ஜி. ஆர் இரவு வீட்டிற்கு வந்தார். மகன் எப்போது வருவான் என்று காத்துக்கொண்டு இருந்த தாய் ‘ஏண்டா மகனே இவ்வளவு நேரம்’ உடனே மகன் சொல்கிறார் ‘நான் ஊர் சுற்றி கொண்டா வருகிறேன். எனக்குக் கிடைத்த ஒரு சின்ன வாய்ப்பு நடித்து முடித்தவுடன் நேராக வீட்டிற்கு வருகிறேன்’ என்று சொல்லி பாத்ரூமூக்கு சென்று குளித்து விட்டு வந்தவுடன் சாப்பாடு தயார். மகன் சாப்பாடு சாப்பிடும் போது டைரக்டர் ஏ. எஸ். ஏ. சாமி ஆள் ஆனுப்பி வைத்த விவரத்தைச் சொன்னார். அப்படியாமா மறுநாள் காலையில் கம்பனிக்கு சென்றார். டைரக்டர் சாமி இவரை பார்த்தவுடன் ‘நேத்திக்கே வரசொன்னேன் ஏன் வரவில்லை’ என்று கேட்டார்.
உடனே எம். ஜி. ஆர். ‘அய்யா நான் வேறு ஒரு படத்தில் சூட்டிங்க் முடித்து வீட்டிற்கு போக இரவு 9 மணியாகியது. அதனால் தான் நான் இப்போது வந்தேன்’ என்றவுடன் டைரக்டர் ‘சரி பராவாயில்லை. உன்னை எங்கள் படத்தில் கதாநாயகனாக நடிக்க ஒப்பந்தம் செய்ய போகிறோம். நாளைக்கு நல்ல நாள் உனது அண்ணன் சக்கரபாணியையும் அழைத்துக் கொண்டு வந்து ஒப்பந்த தாளில் கையெழுத்து போடனும்’ என்று சொல்லி அனுப்புகிறார்.
இதைக் கேட்டவுடன் எம். ஜி. ஆர். வேறு எங்கையும் செல்லாமல் நேராக வீட்டிற்கு வந்தார். இதற்கு இடையில் தன் இளைய மகனுக்கு அந்த கம்பனியில் கதாநாயகனாக நடிக்க வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்று சொல்லி அம்மன் கோயிலுக்கு சென்று அர்ச்சனை செய்து பிரசாதம் வாங்கி தன் இளைய மகனுக்காக காத்துக் கொண்டு இருந்தார். இளைய மகன் எம். ஜி. ஆர். சந்தோஷத்தோடு வீட்டிற்கு வந்தார்.
இடை இடையே சிறு தோல்விகள் சந்தித்த எம். ஜி. ஆர். இதை ஒரு பெரிய விஷயமாக எடுத்துக் கொள்ளாமல் ஒப்பந்த பத்திரத்தில் கையெழுத்து போட மறுநாள் அன்று வெள்ளிக்கிழமை காலையில் எழுந்து மகன் இருவரும் கம்பனிக்கு புறப்படும் போது அம்மனுடைய குங்குமம் நெற்றியில் இட்டு ஆசீர்வாதம் செய்து அனுப்பி வைத்தார். குங்குமம் பொட்டோட சென்ற இருவரையும் டைரக்டர் கம்பனி முதலாளி பார்த்து ‘வாங்க வாங்க நாங்கள் உங்களுக்காக காத்துக்கொண்டு இருக்கிறோம்’ என்று சொல்கிறார்கள்.
அன்று காலை நல்ல நேரம் 9 - 10.30 நேரம் என்றும் இந்த நேரத்தில் தான் எடுக்கப் போகும் படத்தின் பெயர் ‘ராஜகுமாரி’ இந்தப் படத்தின் தொடக்க விழா பூஜை நடைபெறுகிறது. இதில் நடிக்கும் கதாநாயகன், கதாநாயகி சக நடிகர்களும், சக தொழிலாளர்களும் அங்கு கூடி இருக்கிறார்கள். இந்த பூஜையில் விசேஷமாக வினாயகர் படம், சரஸ்வதி லட்சுமி படம், ஒரு அம்மன் படம், ராஜராஜேஸ்வரி படம் வைக்கப்பட்டு இருந்ததை எம். ஜி. ஆர். மிக கவனமாக கவனித்தார்.
பூஜை முடிந்தவுடன் கதாநாயகன் எம். ஜி. ஆரிடம் ஒப்பந்த கடிதத்தில் கையெழுத்து இடும்படி சொன்னார்கள். உடனே அண்ணன் சக்கரபாணி அந்த ஒப்பந்தத்தைப் படித்து காண்பிக்க சொன்னார். அதில் இந்தப் படம் சூட்டிங் முடியும் வரையில் நான் வேறு எந்த படத்திற்கும் நடிக்க ஒப்பந்தம் செய்துகொள்ள மாட்டேன் நீங்கள் சூட்டிங்குக்கு அழைக்கும் போது எல்லாம் வரவேண்டும். உங்களுக்கு சம்பளம் பிறகு நிர்ணயிக்கப்படும்.
இப்பொழுது முன் தொகையாக ரூ. 1001/- தருகிறோம். இது தான் ஒப்பந்தப்பத்திரம். அண்ணனும் தம்பியும் ஒருவருக்கு ஒருவர் முகத்தை பார்த்துக் கொள்கிறார்கள். உடனே அண்ணன் தம்பிக்கு முகத்தினால் கையெழுத்துபோட சைகை காண்பிக்கிறார். தம்பி கையெழுத்து போட்டார். அண்ணனும் சாட்சி கையெழுத்து போட்டார். உடனே முதலாளியும், டைரக்டர் சாமியும், ரூ. 1001/- முன்தொகையாக கொடுத்தார்கள். எம். ஜி. ஆர். அதை பெற்றுக்கொண்டார். பிறகு சூட்டிங் திகதிகளை நாளைக்கு சொல்கிறோம்.
அடுத்து ரூபாய் 1001/- பெற்றுக்கொண்டு நேராக வீட்டிற்கு சென்று அம்மாவை பார்த்து காலில் விழுந்து வணங்கி அம்மாவிடம் காசை கொடுத்தார். நடிப்பில் நடிக்க முன்தொகையாக ரூபாய் 1001/- கிடைத்ததை நினைத்து அந்த அம்மனை நினைத்து ஆனந்த கண்ணீர் வடித்தார் அன்னை. அடுத்து மறுநாள் ஒப்பந்தப்படி கம்பனிக்கு சென்றார்.
அங்கு டைரக்டர் சாமியும் கம்பனி முதலாளியும் எம். ஜி. ஆரிடம் தான் இந்தப் படத்தில் நடிக்க போகும் கதாபாத்திரத்தையும் தன்னுடன் நடிக்கும் கதாநாயகி மாலதி என்ற ஒரு பெண் நடிக்க இருக்கிறார் அவள் தான் ராஜகுமாரி இத்துடன் டி. எஸ். பாலையா, எம். என். நம்பியார் என்று விவரத்தை சொல்லுகிறார்கள்.
கதாநாயகி மாலதி தெலுங்கு தேசத்தை சேர்ந்தவர் (தாய்மொழி) டி. எஸ். பாலையா, எம். என். நம்பியார், நாராயணபிள்ளை போன்றவர்கள் எல்லாம் எம். ஜி. ஆரை விட நடிப்பில் அனுபவத்தில் மூத்தவர்கள் இந்த விவரங்களை தெரிந்து கொண்ட எம். ஜி. ஆர். தன்னுடைய வயசுக்கு மீறிய திறமைகளை காட்டி திறமைகளுடன் நடிக்க வேண்டிய சூழ்நிலை உண்டாகிவிட்டது. 1946 ல் சூட்டிங் ஆரம்பிக்கப்பட்டது. 1936 சதிலீலாவதி முதல் படம். 10 ஆண்டுகள் கழித்து இவருக்கு கதாநாயகன் வேடம் கிடைத்தது.
இதற்கு இடையில் சிறு சிறு வேடங்களில் 14 படங்களில் நடித்து உள்ளார். சிறு வயதில் நாடகத்தில் நடித்து கைதட்டலும் பாராட்டுகளையும் பெற்று பிறகு 14 சினிமா படங்களில் நடித்த அனுபவங்களை வைத்து கொண்ட இவருக்கு கொடுத்த கதாபாத்திரங்களில் சிரமம் இல்லாமல் தங்கு தடை இல்லாமல் நடிக்க முடிந்தது. இந்தப் படத்தில் இவர் ஒரு நாட்டின் ராஜகுமாரன். கதாநாயகியும் ஒரு நாட்டின் இளவரசி. இந்த இளவரசியை வில்லன்கள் ஒரு சமயத்தில் கடத்தி செல்கிறார்கள்.
இதை எதிர்பாராமல் பார்த்த ராஜகுமாரன் எம். ஜி. ஆர். விலன்களுடன் குதிரையில் போராடும்போது டி. எஸ். பாலையாவுக்கும் எம். ஜி. ஆருக்கும் கத்தி சண்டை ஏற்படுகிறது. இந்த கத்தி சண்டையின் படப்பிடிப்பின் போது டைரக்டர் இந்த காட்சியை மிக தெளிவாக படப்பிடிப்பை படம் எடுக்கிறார். இதில் இயற்கையானவை எம். ஜி. ஆர். அவர்களிடம் வாள் வீச்சு திறமை இயற்கையாகவே உள்ளது.
மிக வேமாகவும் உள்ளது என்பதை கவனித்த டைரக்டர் மிக மகிழ்ச்சி அடைந்தார். இந்த சண்டை காட்சி மிக அருமையாக அமைந்து உள்ளது என்பதை பட தயாரிப்பாளர்கள் எல்லோரும் பாராட்டினார்கள். படம் 1947 வெளியிடப்பட்டது. இந்தப் படம் வெளிவந்த பிறகு அடுத்து அடுத்து பல படங்களில் இவர் கதாநாயகனாக நடிக்க ஒப்பந்தங்கள் ஏற்பட்டன. இவர் எத்தனை படங்களில் எப்படி எப்படியெல்லாம் நடித்து பாராட்டுகளை பெற்றார் என்பது எல்லோருக்கும் தெரிந்த விஷயம்.

சிவகுமாரின் முதல் படம் ‘காக்கும் கரங்கள்’

‘காதலிக்க நேரமில்லை’ படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைக்காததால் சோர்வோடு இருந்த சிவகுமாருக்கு, அவருடைய மாமன் ரத்தினம் ஒரு மகிழ்ச்சி செய்தியை சொன்னார்.
‘எஸ். எஸ். ராஜேந்திரன், விஜயகுமாரி ஆகியோரை நடிக்க வைத்து, ‘சித்ரா பெளர்ணமி’ என்ற படத்தை தயாரிக்க இருக்கிறேன். இதை கிருஷ்ணன் - பஞ்சு டைரக்ட் செய்கிறார்கள். இதில் விஜயகுமாரின் தம்பி வேடத்தில் நீ நடிக்க வேண்டும் என்றார். மகிழ்ச்சியுடன் ஒப்புக்கொண்டார் சிவகுமார். ஆனால் ‘சித்ரா பெளர்ணமி’ எதிர்பார்த்த வேகத்தில் வளரவில்லை.
இந்த சமயத்தில் ‘காக்கும் கரங்கள்’ என்ற படத்தை திருலோகசந்தர் டைரக்க்ஷனில் தயாரிக்க ஏ. வி. எம். நிறுவனம் முடிவு செய்தது. எஸ். எஸ். ராஜேந்திரனும், விஜயகுமாரியும் ஜோடியாக நடித்த இப்படத்திற்கு ஒரு புதுமுக நடிகர் தேவைப்படவே, ‘சித்ரா பெளர்ணமி’யில் நடிக்க வந்த சிவகுமாரை கிருஷ்ணன் - பஞ்சு சிபாரிசு செய்தனர்.
டைரக்டர் ஏ. சி. திருலோகசந்தரும், ஏ. வி. எம். சரவணன் சகோதரர்களும், சிவகுமாரை வரச்சொல்லி பார்த்தனர். அவர்களுக்கு பிடித்து விட்டது. காக்கும் கரங்களில் இரண்டாவது கதாநாயகனாக நடிக்க சிவகுமார் ஒப்பந்தமானார்.
இந்தப் படத்துக்கு ஆரூர்தாஸ் வசனம் எழுத, கே. வி. மகாதேவன் இசை அமைத்தார்.
சிவகுமாரின் இயற் பெயர் பழனிச்சாமி.
அதை ‘சிவகுமார்’ என்று திருலோகசந்தரும், ஏ. வி. எம். சரவணன் சகோதரர்களும் மாற்றி வைத்தனர்.
‘காக்கும் கரங்கள்’ 1965 ஜூன் 19 ஆம் திகதி ரிலீஸ் ஆயிற்று.
படம் வெளியாவதற்கு முந்தின நாள், சிவகுமாருக்கு ஒரு அதிர்ச்சியான தகவல். சிவகுமாருக்கு ஜோடியாக நடித்த பெண் அவரைவிட மூத்தவர் போல தோன்றியதால் 500 அடி நீளம் கொண்ட காதல் காட்சியை வெட்டி விட்டார்கள் என்பதே அந்த தகவல். இதனால் சோகம் அடைந்த சிவகுமாரை சரவணன் தேற்றினார். ‘கவலைப்படாதீர்கள், மிக நல்ல வடம் ஏற்று நீங்கள் நடிக்கும் காலம் விரைவில் வரும்’ என்று கூறினார்.
(சிவகுமார் முதன் முதலாக ஒப்பந்தமான ‘சித்ரா பெளர்ணமி’ பிறகு வளரவே இல்லை. சில ஆண்டுகளுக்குப் பின் இதே பெயரைக் கொண்ட வேறொரு படத்தில் சிவாஜிகணேசன் நடித்தார்.)
‘காக்கும் கரங்கள்’ வெளியாகி ஒரு வாரத்தில், ஜெமினி நிறுவனத்தில் இருந்து சிவகுமாருக்கு ஒரு தந்தி வந்தது. ஜெமினி தயாரிக்கும் ‘மோட்டார் சுந்தரம் பிள்ளை’ படத்தில் சிவாஜிகணேசனின் மூத்த மருமகனாக (காஞ்சனாவுக்கு ஜோடியாக) நடிக்கும் வாய்ப்பு சிவகுமாருக்கு அளிக்கப்படுவதாக அந்த தந்தியில் குறிப்பிடப்பட்டிருந்தது.
ஜெமினி படத்தில் நடிக்கும் வாய்ப்பு தன்னைத் தேடி வந்தது கண்டு மிகவும் மகிழ்ந்தார் சிவகுமார்.
முதல் நாள் படப்பிடிப்பின் போது ஒரு வேடிக்கை நடந்தது. கதைப்படி, கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும் காஞ்சனாவை சிவகுமார் திருமணம் செய்து கொள்கிறார். கல்லூரிப் படிப்பு முடியும் வரை காஞ்சனாவை சந்திக்கக் கூடாது என்று சிவகுமாருக்கு அவர் தந்தை தடை போட்டார். தந்தைக்குத் தெரியாமல் மனைவியை வந்து சந்திப்பார் சிவகுமார்.
சிவாஜியும், சிவகுமாரும் சாப்பிடும் காட்சி படமாக்கப்பட்டது. செளகார் ஜானகி உணவு பரிமாறிக் கொண்டே ‘என்னங்க மாப்பிள்ளையை இன்னிக்கு தங்கிட்டு நாளைக்குப் போகச் சொல்லுங்க’ என்பார். உடனே சிவாஜி, ‘எனக்கும் ஆசைதான்! ஆனால் மாப்பிள்ளை அவர் அப்பாவுக்குத் தரியாமல் திருட்டுத்தனமாக வந்திருக்காரே! என்ன மாப்பிள்ளை?’ என்று கேட்க, சிவகுமார் சிரித்து மழுப்புவார்.
இதுதான் அன்று எடுக்கப்படும் காட்சி. ‘நான் என்ன செய்ய வேண்டும்’ என்று, டைரக்டர் எஸ். எஸ். வாசனிடம் கேட்டார் சிவகுமார். ‘உங்களுக்கு இன்று வசனம் ஏதும் இல்லை. நீங்க சும்மா சாப்பிட்டுக் கொண்டு இருங்க, போதும்’ என்றார் டைரக்டர்.
ருமுறை ஒத்திகை பார்க்கப்பட்டது. ‘டேக்!’ என்று குரல் எழுப்பியபடி, சிவகுமாரின் இலையைப் பார்த்தார் வாசன். அதில் அப்பளத்தைக் காணோம்!
‘எங்கே அப்பளம்?’ என்று கேட்டபடி தேடினார் சிவகுமாரின் இலை அருகே வந்து குனிந்து பார்த்தார். அப்பளத் துண்டுகள் பொடி பொடியாகக் கிடப்பதைப் பார்த்தார். அவருக்கு விஷயம் புரிந்துவிட்டது.
‘என்ன! அப்பளத்தை சாப்பிட்டேளா?’ என்று கேட்டுவிட்டு, ஹ... ஹ... ஹா என்று சிரித்தார். பிறகு, ‘ஒத்திகையின் போதெல்லாம் சாப்பிட வேண்டியதில்லை. சாப்பிடுவது மாதிரி நடித்தால் போதும்!’ என்றார்.
சிவாஜி, சிவகுமாரை நோக்கினார். அவர் பார்வையில் தீப்பொறி பறந்தது.
அந்தப் படப்பிடிப்பு நிகழ்ச்சியை இப்போது நினைவு கூர்ந்த சிவகுமார், ‘சிவாஜி பார்த்த பார்வையில் நான் பொசுங்கிப் போய்விட்டேன். சாப்பிடாமல், சாப்பிடுகிற மாதிரி நடிப்பது எப்படி என்று அப்போது எனக்குத் தெரியலில்லை. அந்த அளவுக்கு கற்றுக்குட்டி!’ என்றார்.
‘மோட்டார் சுந்தரம் பிள்ளை’யில் நடித்த சிவகுமாருக்கு 1,500 ரூபாய் சம்பளம் கிடைத்தது. பணத்தை அனுப்பியதுடன், ‘படத்தை நல்லபடியாக முடிக்க நீங்கள் கொடுத்த ஒத்துழைப்புக்கு நன்றி’ என்று கடிதமும் எழுதியிருந்தது, ஜெமினி நிறுவனம்.

உலக சினிமா

* இயக்குனர் கே. சங்கர் 1940 ல் கோயம்புத்தூரில் ரூம் போயாக வேலை செய்து வந்திருக்கிறர். பின் உதவி இயக்குனராகவும், எடிட்டராகவும் பணியாற்றினார். ஏ. வி. எம். நிறுவனத்தின் படத்தை இயக்கி, இயக்குனராக அறிமுகமானார். கடந்த 50 வருடங்களாக இயக்குனராக இருந்து வந்தவர் கே. சங்கர்.
* ‘சோஷியல் ஈவில்’ (1929) என்ற திரைப்படம் செக்ஸ் பற்றி எடுக்கப்பட்ட முதல் செக்ஸ் படமாகும்.
* உலகப் புகழ்பெற்ற நாவலாசிரியர் ‘கே. ஏ. அப்பாஸ்’ தயாரித்த ‘ஆஸ்மான் மஹால்’ (1965) என்ற திரைப்படம்தான் முதன் முதலில் செட்டிங்க் இல்லாமல் முழுவதும் வெளிப்புற காட்சிகளைக் கொண்டு எடுக்கப்பட்ட படமாகும். ‘பிருதிவிராஜ் கபூர்’ இப்படத்தில் பிரதான வேடத்தில் நடித்திருந்தார்.
* ‘நூர்ஜஹான்’ (1931) என்ற திரைப்படம்தான் இந்தியாவில் தயாரிக்கப் பட்ட முதல் இந்திய - ஆங்கிலப் படமாகும். படத்தை இயக்கியவர் ‘எஸ்ராமிர்’ என்பவர்.
* ராஜ்கபூர், ராஜ்ஸ்ரீ நடித்த பச்சிஸின் ‘அரவுண்ட் தி வேர்ல்டு’ என்ற திரைப்படம்தான் முதல் 70 எம். எம். சினிமாவாக ப்ளே-அப் செய்யப் பட்டு திரையிடப்பட்டது. இது டெக்னிக் கலரிலும், ஸ்டீரியோ ஃபோனிக் சவுண்டிலும் உருவானது. ஜி. பி. சிப்பி தயாரித்த ‘ஷோலே’ (1975)

Wednesday, March 19, 2014

~~கர்ணனில்'' குந்திதேவியாக நடித்து மக்கள் மனதை நெகிழ வைத்தவர் வேலைக்காரி புகழ் எம்.வி.ராஜம்மா

றிஞர் அண்ணா கதை, வசனம் எழுதிய “வேலைக்காரி’’ படத்தில் வேலைக்காரியாக நடித்துப் புகழ் பெற்றவர் எம். வி. ராஜம்மா. சிட்டாடல் “ஞானசவுந்தரி”யில் புகழின் சிகரத்தை அடைந்தவர்.

பிற்காலத்தில் எம்.ஜி.ஆர், சிவாஜி கணேசன் ஆகியோருக்கு அம்மாவாக நடித்தார். எம். வி. ராஜம்மாவின் சொந்த ஊர் சேலம் அருகில் உள்ள அகண்டபள்ளி ஆகும். தாய்மொழி கன்னடம், இனிய குரல் வளம் படைத்த ராஜம்மா, சின்ன வயதிலேயே நன்றாகப்பாடுவார்.
நடிக்க வருவதற்கு முன்பே ராஜம்மாவுக்குத் திருமணம் ஆகிவிட்டது. கணவரின் நண்பரான ‘டிக்கி’ மாதவராவ் என்பவர், ஒரு நாள் நண்பரைப் பார்க்க வந்தபோது, எம். வி. ராஜம்மா ஆர்மோனியத்தை வாசித்தபடி பாடிக் கொண்டிருந்தார்.
அதைக் கேட்டு அசந்துபோன டிக்கி மாதவராவ், “இவ்வளவு இனிமையாக பாடுகிறாரே! ஏன் சினிமாவில் நடிக்கக் கூடாது” என்று கேட்டார் ராஜம்மாவின் கணவர். இதற்கு சம்மதம் தெரிவித்தார்.
டிக்கி மாதவராவ் எடுத்துக் கொண்ட முயற்சியால், ‘சம்சார நவுகர்’, ‘வாழ்க்கைப் படகு’ என்ற கன்னடப் படத்தில் ஒரு சிறு வேடத்தில் நடிக்க ராஜம்மாவுக்கு வாய்ப்பு கிடைத்தது. ராஜம்மாவின் தோற்றம், நடிப்புத் திறமை, இனிய குரல் ஆகியவற்றைக் கண்ட படஅதிபர்கள், கதாநாயகி வேடத்தையே ராஜம்மாவுக்கு கொடுத்தார்கள்.
‘சம்சார நவுகர்’ மாபெரும் வெற்றிப்படமாக அமைந்தது. ராஜம்மா பெரும் புகழ்பெற்றார். நிறைய கன்னடப் படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. 1940 இல் மார்டன் தியேட்டர் சேர், “உத்தம புத்திரன்” படத்தைத் தயாரித்தார்கள்.
தமிழின் முதல் இரட்டை வேடப்படமான “உத்தம புத்திர”னில் பி. யு. சின்னப்பா கதாநாயகனாக நடித்தார். கதாநாயகியாக, சின்னாப்பாவுக்கு ஈடுகொடுத்து நடித்தார் எம். வி. ராஜம்மா. “உத்தம புத்திரன்” பெரிய வெற்றி பெற்றது. எம். வி. ராஜம்மா, தமிழ்ப்பட உலகிலும் புகழ்பெற்றார்.
1941ல் டி. கே. எஸ். சகோதரர்கள் தங்களுடை வெற்றி நாடகமான “குமஸ்தாவின் பெண்”ணை திரைப்படமாகத் தயாரித்தனர். டி. கே. சண்முகம், டி. கே. பகவதி, கே. ஆர். ராமசாமி ஆகியோர் நடித்த இந்தப் படத்தின் கதாநாயகியாக எம். வி. ராஜம்மா நடித்தார்.
1948 இல் சிட்டாடல் தயாரித்த ‘ஞானசவுந்தரி’யில் கதாநாயகியாக ராஜம்மா நடித்தார். அவருக்கு ஜோடியாக டி. ஆர். மகாலிங்கம் நடித்தார். ‘ஞானசவுந்தரி’ மகத்தான வெற்றிப் படமாக அமைந்தது. அந்த வெற்றியில் பெரும் பங்கு ராஜம்மாவுக்கு உண்டு.
அவருடைய தோற்றம், நடிப்பு வசனம் பேசிய விதம் எல்லாமே அற்புதமாக அமைந்திருந்தன. ஞானசவுந்தரியாகவே வாழ்ந்து காட்டினார் என்று சொல்லலாம். பேரறிஞர் அண்ணா கதை, வசனம் எழுதிய ‘வேலைக்காரி’ 1949 இல் ஜுபிடர் தயாரிப்பில் வெளிவந்தது. டைரஷன் ஏ. எஸ். ஏ. சாமி. இப்படத்தில் கே. ஆர். ராமசாமி, வி. என். ஜானகி ஒரு ஜோடியாகவும், எம். வி. ராஜம்மா, எம். என். நம்பியார், ஒரு ஜோடியாகவும் நடித்தனர். எம். வி. ராஜம்மாவுக்கு புகழ் தேடிதந்த படங்களில் ‘வேலைக்காரி’யும் ஒன்று.
1950 ஆம் ஆண்டில் “பாரிஜாதம்”, “லைலா மஜ்னு” ஆகிய படங்களில் நடித்தார். இரண்டிலும் மகாலிங்கம் தான் கதாநாயகன். இதே காலகட்டத்தில், பானுமதி, நாகேஸ்வரராவ் நடித்த இன்னொரு ‘லைலா மஜ்னு’வும் வெளிவந்தது.
பானுமதியின் ‘லைலாமஜ்னு’ பெரிய வெற்றி பெற, மகாலிங்கம், ராஜம்மா நடித்த ‘லைலா மஜ்னு’ தோல்வி அடைந்தது. தொடர்ந்து பல படங்களில் ராஜம்மா கதாநாயகியாக நடித்தார். அவற்றில் கெமரா மேதை கே. ராமநாத் இயக்கத்தில் நாராயணன் கம்பனி தயாரித்த ‘தாய் உள்ளம்’ மிகச் சிறந்த படம்.
இதில் ராஜம்மாவுடன் கதாநாயகனாக நடித்தவர் ஆர். எஸ். மனோகர், வில்லனாக ஜெமினி கணேசன் நடித்தார். எம்.ஜி.ஆரும், சிவாஜி கணேசனும் சூப்பர் ஸ்டார்களாக உருவான போது எம். வி. ராஜம்மா அவர்களுக்கு அம்மாவாக நடித்தார்.
‘குடும்ப தலைவன்’, ‘தேடி வந்த மாப்பிள்ளை’ ஆகிய படங்களில் எம்.ஜி.ஆருக்கு அம்மாவாகவும், ‘தங்கமலை ரகசியம்’, ‘பாவமன்னிப்பு’, ‘ஆலயமணி’, ‘அன்னை இல்லம்’, ‘முரடன்முத்து’ ஆகிய படங்களில் சிவாஜிக்கு தாயாகவும் நடித்தார்.
குறிப்பாக, ‘கர்ணன்’ படத்தில் கர்ணனின் தாய் குந்தி தேவியாக நடித்து, ரசிகர்களின் நெஞ்சத்தை நெகிழ வைத்தார். ‘ராதா ரமணா’ உட்பட சில கன்னடப் படங்களை சொந்தமாகத் தயாரித்தார். ‘ஸ்கூல் மாஸ்டர்’ படத்தில் சிறப்பாக நடித்ததற்காக தேசிய விருது பெற்றார். தமிழுக்குக் கிடைத்த சிறந்த நடிகைகளில் ஒருவர் எம். வி. ராஜம்மா.

பம்பாய் சென்ற M G R

அம்மாவும் சற்றும் யோசிக்காமல் மகனே நான் பணத்துக்கு ஏற்பாடு செய்கிறேன். நீ புறப்படுவதற்கு தயாராகு என்று சொல்லிவிட்டு அடுத்த நிமிடம் சக்கரபாணியை அழைத்து மகனே நீ சென்று கேசவனிடம் ராமச்சந்திரனை எப்போது அனுப்ப வேண்டும் என்று கேட்டறிந்து வா என்று சொல்லி அனுப்பிவிட்ட பிறகு சத்தியதாய் தன்னிடம் எவ்வளவு பணம் இருக்கின்றது என்று பார்த்து அதற்கான ஏற்பாடுகளை செய்தார்.

கேசவனை சந்திக்க போன சக்கரவாணி, நாளை காலையில் ராமசந்திரனை பெட்டியோடு என் வீட்டிற்கு அனுப்பி வைக்கவும் என்று சக்கரபாணியிடம் கேசவன் சொன்னார். அதன்படி மறுநாள் காலையில் சக்கரபாணி தம்பியை அழைத்துக் கொண்டு கேசவன் வீட்டிற்குச் சென்றார்.
சென்ற உடன் நமக்கு மதியம் தான் பம்பாய்க்கு ரயில் அதனால் நீங்கள் இங்கேயே இருங்கள் என்று சொன்னார். அதன்படி அவர்களும் அங்கு தங்கி இருந்து மதியம் ரயிலுக்கு சென்று பம்பாய் ரயிலில் தம்பியை வழி அனுப்பிவிட்டு சக்கரபாணி வீட்டிற்கு வந்து, தம்பியை பாம்பாய்க்கு வழி அனுப்பிவிட்டு வருகிறேன் என்று அம்மாவிடம் சொல்லிவிட்டுச் சென்றார்.
அன்று முழுவதும் அம்மா சற்று மனவருத்தத்துடன் இருப்பதைக் கண்டு ‘அம்மா என்ன ஒரு மாதிரியாக இருக்கிறாய் தம்பி நடித்த முதல் படம் ஜெ ஜெ என்று ஓடி கொண்டு இருக்கிறது 2வது படத்தில் நடிக்க தம்பி வட இந்தியாவுக்கு செல்கிறான். அதை நினைத்து நீங்க ஏன் வருத்தப்பட்டு கொண்டு இருக்கிaர்கள்’ என்று கேட்டார்.
அடுத்த நாள் சக்கரபாணி தனக்கு சினிமா தொழிலை தேடி கம்பனிகளுக்கு சென்றார். அந்த நேரத்தில் ‘சதிலீலாவதி’ டைரக்டர் எல்லீஸ் டங்கனை பார்த்தார். டங்கன் யோகித்தார். அப்போது ஐயா நான் ராமசந்திரன் அண்ணன் ணிy naசீலீ is சக்கரபாணி என்று சரளமாக அடுத்து பேச வேண்டிய வார்த்தைகளை ஆங்கிலத்தில் சரளமாக பேசினார்.
அவரும் சக்கரபாணியை அடிக்கடி நீ என்னை வந்து பார்த்து செல் என்றார். சக்கரபாணி வெள்ளைக்காரர் சினிமா பட டைரக்டர் ஒருவரிடம் ‘இவரால் எப்பிடி சரளமாக ஆங்கிலத்தில் பேச முடிந்தது? தன் தகப்பனார் கோபாலன் நன்றாக ஆங்கிலம் படித்தவர். பெரும்பாலும் இவர் கண்டியில் ஆங்கிலத்தில்தான் பேசுவார்.
(ஆங்கில ஆட்சிக் காலம்) சில சமயங்களில் கோபாலன் தன் மூத்த குழந்தைகளுக்கு ஆங்கிலப் பாடங்களை சொல்லி கொடுப்பார். அப்போது சக்கரபாணி சிறு குழந்தையாக இருந்தாலும் அவருக்கு வயது 4 அவரும் மற்ற குழந்தை அண்ணன், அக்காவுடன் அமர்ந்து ஆங்கில உச்சரிப்புகளை கவனிப்பார். அதோடு மட்டுமல்லாமல் தன்னுடன் சகோதர சகோதரிகளிடம் அவர்கள் ஆங்கிலத்தில் தான் பேசுபவர்கள்.
அப்போது எனக்கு ஆங்கிலம் சொல்லி கொடுங்கல் என்று கேட்பாராம் இப்படி சக்கரபாணி ஆங்கிலத்தின் மேல் ஆர்வம் கொண்டவராக இருந்தார். அதுதான் இப்போது பயன் அளித்தது. பாம்பேக்கு வந்து பட முதலாளியை சந்தித்து எம். ஜி. ஆருக்கு ஏதாவது ஒரு நல்ல சான்ஸ் கொடுங்கள் என்று சொன்னார்.
பட முதாளியும், டைரக்டரும் எம். ஜி. ஆரை ஏற இறங்க பார்த்தார்கள். அந்த சமயம் எம். ஜி. ஆர். ஜிப்பா, பைஜாமா அணிந்து இந்தி நடிகர் போல் நல்ல வாட்ட சாட்டமாக நிற்பதைக் கண்டு எம். ஜி. ஆரிடம் உனக்கு என்ன என்ன தொழில் தெரியும் என்று கேட்டார். உடனே எம். ஜி. ஆர். கடகட என தனக்கு தெரிந்த நடிப்புகளையெல்லாம் வரிசையாக சொன்னார்.
இதைக் கேட்ட அந்த இருவரும் எம். ஜி. ஆருக்கு அருகாமையில் நின்று கொண்டு இருந்த கேசவனை பார்த்தார்கள். இதை புரிந்துகொண்ட கேசவன் பார்க்கும் பார்வைக்கு அர்த்தம் புரிந்து கொண்டு பையன் ஏற்கனவே நாடக கம்பனியில் எல்லா நடிப்பிலும் தேர்ச்சி பெற்றவன் என்று சொன்னார். ஓ. அப்படியா சரி, பையன் ஒரு லொட்ஜியில் தங்க வையுங்கள்.
சாப்பாடு, லொட்ஜ் வாடகை எல்லாம் கம்பனி கொடுத்துவிடும். பிறகு இந்தப் படத்தில் பையனுக்கு என்ன வேசம் கொடுக்கலாம் என்பதை பார்த்து முடிவு எடுக்கலாம். இந்த நேரத்தில் எம். ஜீ. ஆருக்கு வயது 20 ஆகிறது. நேரத்துக்கு நன்றாக சாப்பிட்டுவிட்டு லொட்ஜில் தங்கி இருந்தார். அதிகாலையில் எழுந்து எப்போதும் செய்வது போல் உடற்பயிற்சிகளை செய்வதில் தவறுவதில்லை.
(யோகாசனம்) படப்பிடிப்பு ஆரம்பமாகி நடந்து கொண்டு இருந்தது. இடையில் எம். ஜி. ஆர். டைரக்டர், பட முதலாளி, கேசவன் இவர்களை சந்திப்பதிலும் தவறுவதில்லை. எம். ஜி. ஆர். இந்தப் படத்தில் சி. ஐ. டி. ஒபீசராக வேடம் கொடுக்கலாம் என்று முடிவு செய்தார்கள். பிறகு அந்த வேடம் வேறு ஒருவருக்கு கொடுக்கப்பட்டுவிட்டது. பிறகு எம். ஜி. ஆருக்கு ஜமீன்தார் வேடம் கொடுக்க முடிவானது.
பிறகு அதுவும் அந்த வேடத்திற்கு டீ. எஸ். பாலையாதான் மிக பொருத்தமானவர் என்று ஜெமீன்தார் வேடத்தை டீ. எஸ். பாலையாவுக்கு கொடுத்துவிட்டார்கள். எம். ஜி. ஆருக்கு இந்தப் படத்தில் சரியான கதாபாத்திரம் கொடுக்க முடியவில்லை.
ஆதலால் கம்பனி முதலாளி மிக சிரமப்பட்டு எம். ஜி. ஆரிடம் ரூ. 500/- கொடுத்து ஆறுதல் கூறி அடுத்த படத்தில் கண்டிப்பாக உனக்கு நல்ல கதாபாத்திரம் தருகிறேன் என்று சொல்லி எம். ஜி. ஆரை கேசவனிடம் சென்னைக்கு அனுப்பிவிட்டு வா என்று சொல்லி அனுப்பி வைத்தார் பட முதலாளி.
அதன்படி கேசவன் எம். ஜி. ஆருக்கு சமாதானம் சொல்லி சென்னைக்கு ரயில் மூலமாக அனுப்பி வைத்தார். பாம்பாயிலிருந்து புறப்பட்ட எம். ஜி. ஆர். சென்னை ரயிலில் இறங்கி காலை வீட்டிற்கு வரும் வழியில் அம்மாவையும், அண்ணனையும் எதிர்பாராமல் பார்க்கிறார். எம். ஜி. ஆரை பார்த்தவுடன் அம்மாவுக்கும், அண்ணனுக்கும் அதிர்ச்சி ஆகிறது.
அம்மா மகனை என்ன திடீர் என்று வந்து விட்டாய், அம்மா எங்க நீங்க போயிட்டு வருகிaர்கள் என்று அம்மாவிடம் எம். ஜி. ஆர் கேட்டார். அம்மா உடனே நானும் அண்ணனும் கோயிலுக்கு சென்று அம்மனுக்கு சிறப்பு பூஜை செய்து விட்டு வந்து கொண்டு இருக்கிறோம். நான் வேலை கிடைக்காமல் ஊர் ஊராக அலைந்து கொண்டு இருக்கிறேன்.
அந்த சமயத்தில் நீங்கள் தேவையில்லாமல் அனாவசிய செலவுகள் செய்து கொண்டு இருக்கிaர்கள். சிறப்பு பூஜை என்றும் தெய்வம் என்று அனாவசிய செலவு செய்தால் அந்த கல்லா எனக்கு வேலை வாங்கி தரப்போகிறது. கோபமாக ரோட்டில் நடந்து கொண்டே அம்மாவிடம் சற்று கோபமாக பேசினார்.
அம்மா மகனே வீட்டில் சென்று பேசி கொள்ளலாம் 1}Z மூவரும் வீட்டிற்கு வந்தார்கள். முதலில் நீ குளித்து விட்டு வா, மெதுவாக உட்கார்ந்து பேசலாம் என்று அன்போடு சொன்னார்.
அவரும் அதன்படி குளித்துவிட்டு சாப்பிட்டுவிட்டு அம்மாவிடமும் அண்ணனிடமும் தானாகவே பாம்பாயில் நடந்த சம்பவங்களை சொன்னார். அதன் பிறகு உள்ளே என்று பெட்டியை திறந்து அவர்கள் கொடுத்த ரூபாயில் 500/- வழியில் சாப்பிட்ட செலவு போக மீதியை அம்மாவிடம் கொடுத்தார். அடுத்த நாள் மீண்டும் சென்னையில் உள்ள சினிமா கம்பனிகளுக்கு ஸ்டுடியோக்களுக்கு வேலை தேடி நடந்தார்.

உலக சினிமா

* இந்திப் பட உலகில் தென்னக நடிகர்கள் நீண்ட காலம் நிலைத்திருப்பதில்லை. இருப்பினும் அவற்றையெல்லாம் முறியடித்து விட்டு 1955 முதல் 1965 வரையில் தென்னக நடிகர் ஒருவர் இந்திப்பட உலகில் முன்னணி கதாநாயகனாகத் திகழ்ந்தார். வாள் வீச்சு, நடனம், நடிப்பு என்ற அனைத்திலும் முத்திரை பதித்த ‘ரஞ்சன்’ தான் அந்த நடிகர்.

* வெளிநாட்டுத் தயாரிப்பு படத்தில் நடித்த முதல் தமிழ் நடிகை
என்ற பெயர் பெற்றவர் நடிகை பத்மினி. இந்திய - ரஷ்ய
கூட்டுத் தயாரிப்பான ‘பரதேசி’ (இந்தி) என்ற படம்தான் அது.
* ஜெய்சங்கர் நடித்த ‘காலம் வெல்லும்’ என்ற தமிழ்ப் படம்தான் தமிழில் வெளியான முதல் ‘கெளபோய் படம்’ என்று சொல்லப்படுவதுண்டு. ஆனால் அதற்கு முன்பே ‘முல்லை வனம்’ (1955) என்ற படம்தான் முதல் தமிழ் கெளபோய் படமாகும். இதில் ஸ்ரீராம், வீரப்பா, குமாரி ருக்மணி ஆகியோர் நடித்திருக்கின்றனர்.
* இயக்குநர் ஏ. பி. நாகராஜன் ஆரம்ப காலகட்டங்களில் நடிகராகத்தான் இருந்தார். ‘பெண்ணரசி’ (1955) என்ற படத்திலும், ‘நால்வர்’ என்ற படத்திலும் ஹீரோவாகவும், ‘நம் குழந்தை’ என்ற படத்தில் வில்லனாகவும் நடித்திருக்கிறார். ‘நால்வர்’ படத்தில் சிறப்பாக நடித்ததால், இவர் ‘நால்வர் நாகராஜன்’ என்று அழைக்கப்பட்டார்.

பனியில்லாத மார்கழியா படையில்லாத மன்னவரா?

இவ்வாரப் பாடல்

பனியில்லாத மார்கழியா படையில்லாத மன்னவரா?
பனியில்லாத மார்கழியா படையில்லாத மன்னவரா?
இனிப்பில்லாத முக்கனியா இசையில்லாத முத்தமிழா?
பனியில்லாத மார்கழியா படையில்லாத மன்னவரா?
அழகில்லாத ஓவியமா ஆசையில்லாத பெண்மனமா?
அழகில்லாத ஓவியமா ஆசையில்லாத பெண்மனமா?
மழையில்லாத மாநிலமா மலரில்லாத பூங்கொடியா?
மலரில்லாத பூங்கொடியா?
பனியில்லாத மார்கழியா படையில்லாத மன்னவரா?
இனிப்பில்லாத முக்கனியா இசையில்லாத முத்தமிழா?
பனியில்லாத மார்கழியா படையில்லாத மன்னவரா?
தலைவனில்லாத காவியமா தலைவி இல்லாத காரியமா?
கலையில்லாதநாடகமா காதலில்லாத வாலிபமா?
காதலில்லாத வாலிபமா?
னியில்லாத மார்கழியா படையில்லாதமன்னவரா?
நிலையில்லாமல் ஓடுவதும் நினைவில்லாமல் பாடுவதும்
பகைவர் போலே பேசுவதும் பருவம் செய்யும்
கதையல்லவா?
பருவம் செய்யும் கதையல்லவா?
பனியில்லாத மார்கழியா படையில்லாத மன்னவரா?
பனியில்லாத மார்கழியா படையில்லாத மன்னவரா?
இனிப்பில்லாத முக்கனியா இசையில்லாத முத்தமிழா?
பனியில்லாத மார்கழியா படையில்லாத மன்னவரா?

Friday, March 7, 2014

எம். ஜி. ஆர் முதன்முதலில் பேசிய வசனம் அய்யயோ பாம்பு காப்பாற்றுங்கள்


யிற்சிகளை தனக்கு சொல்லித் தரும் வாத்தியார்களிடம் எம். ஜி. ஆர். மிகவும் பயபக்தியாக இருப்பார், இவைகளில் எம். ஜி. ஆர்.க்கு நடனம் கற்று கொள்வதில் சற்று கடினமாக இருந்தது. அந்த காலத்தில் நாடகங்களில் ஆண்கள் தான் பெண் வேடம் போட வேண்டும்.
ஆகவே நாடகத்தில் நடிக்க வசனம் பேச பாட தெரியனும். எம். ஜி. ஆர்.க்கு பாட்டும் நடனமும் சரியாக வரவில்லை நடன ஆசிரியர் ஸ்ரீராமுலு என்பவர் மிக கோபக்காரர். இவரிடம் நடனம் கற்றுக் கொள்ளும்போது அடியும் வாங்குவாராம் எப்படியோ மிக சிரமப்பட்டு நடனத்தை கற்றுக்கொண்டார்.
இந்த நடன கலை பிற்காலத்தில் சினிமாவுக்கு ரொம்ப உதவியாக இருந்தது. எம். ஜி. ஆருக்கு சிறு சிறு வேடங்கள்தான் கம்பனியில் கிடைத்தது. இந்த கம்பனியில் ஏற்கனவே எல்லா வேடங்களுக்கும் ஆண்கள் உள்ளனர். கதாநாயகன், கதாநாயகியாக நடிக்கும் நடிகர்களுக்கு சாப்பாடு தங்கும் இடம், உடை, சம்பளம், இவைகள் அதிகமாக இருக்கும். இப்படி முக்கிய வேடங்களில் நடிப்பவர்கள் மற்ற சக நடிகர்களுடன் அதிகமாக பேசமாட்டார்கள்.
இப்படிப்பட்ட பெரிய நடிகர்களுடன் நல்லா பேசவேண்டும் என்ற ஆசை எம். ஜி. ஆருக்கு உண்டு. என்ன செய்வது எம். ஜி. ஆர். சின்ன பையன் கம்பனிக்கு புதுசு ஆயினும் அந்த ஆசையை அவர் விடவில்லை. அதோடுதான் நாமும் இவர்களைப் போல் நடித்து பெரிய அளவில் புகழ் பெற வேண்டும். அப்போதுதான் நாம் அம்மாவுக்கு அதிகமமாக பணம் அனுப்ப முடியும் என்ற எண்ணமும் ஏற்பட்டது.
அவர் நடித்த முதல் நாடகம் ‘மகாபாரதம்’ முதல் நாடக மேடையில் நடிக்க வாய்ப்பு கிடைத்த ஆண்டு 1924. எம். ஜி. ஆருக்கு முதல் வசனம் அய்யயோ பாம்பு காப்பாற்றுங்கள் என்று பலமுறை அலறி அடித்துக்கொண்டு ஓடும்போது அர்சுனன் மீது மோதி தவறுதலாக கீழே விழுந்து விட்டார். ஆனால் அது பொது மக்களிடம் இருந்து பெரிய அளவில் கை தட்டல் கிடைத்தது.
எம். ஜி. ஆருக்கு எதிர்பாராமல் இப்படியொரு கைதட்டல் கிடைத்தது. அவருக்கும் ஒன்றும் புரியவில்லைர. ஆனால் மற்ற நடிகர்களுக்கு இந்த சின்ன பையன் ராமச்சந்திரனுக்கு முதல் நாடகம் முதல் நாளிலேயே இப்படி ஒரு கை தட்டலா என்று ஒரே ஆச்சரியம் ஏற்பட்டது. இப்படியாக பல நாடகங்களில் பல சிரமமான காட்சிகளில் நடித்து வந்தார். எம். ஜி. ஆருக்கு சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டது.
இந்த கம்பனியில் பி. யூ. சின்னப்பா, காளி. என். ரத்தினம் இவர்களுடன் மிக சிரமப்பட்டு எம். ஜி. ஆர். தொடர்பு வைத்துக் கொண்டார். அவர்களும் எம். ஜி. ஆர். மீது அன்பாக இருந்தார்கள். நாடகமும் பல ஊர்களுக்கு சென்று கொண்டு இருந்தது. கோயம்பத்தூரில் நாடகம் அமைக்கப்பட்டு நடந்து கொண்டு இருக்கும் சமயத்தில் ஒரு நாள் எம். ஜி. ஆர்., பி. யூ. சின்னப்பாவிடம் தன் விருப்பதை சொன்னார். சின்னப்பாவும் எம். ஜி. ஆருக்கு இன்னும் கொஞ்ச நாட்கள் ஆகட்டும் பிறகு சினிமாவில் நடிக்கலாம் என்று சொல்லி நாடகத்திலேயே நடித்து நல்ல தேர்ச்சி பெறு என்று சொல்லிவிட்டார்.
ஒருநாள் தசவதாரம் நாடகம் இதில் பி. யூ. சின்னப்பாவுக்கு தொண்டை சரியில்லை. உடல்நிலை சரியில்லை. அவருக்கு பதிலாக எம். ஜி. ஆரை அந்த வேடத்தில் போட்டு பரதனாக நடிக்க சொன்னார் முதலாளி. எம். ஜி. ஆருக்கு மிக பெரிய சங்கடமாக ஆகிவிட்டது. காரணம் அது பெரிய சீன் எப்படியோ தைரியத்துடன் மேக்கப் முடித்து எம். ஜி. ஆர். மேடைக்கு வந்தார். அன்று இந்த நாடகத்தை பார்க்க கிட்டப்பா வந்து முன் வரிசையில் அமர்ந்து இருந்தார்.
இதை எம். ஜி. ஆர். பார்த்துவிட்டார் எம். ஜி. ஆருக்கு ஒரே சந்தோஷம் ஒரு பிரபல நடிகர் நம்ப நாடகத்தை பார்க்க வந்து இருக்கிறார், அதுவும் நாம் இந்த சின்னப்பாவுக்கு பதிலாக இந்த பையன் நடிக்கிறானே என்று ஆச்சரியப்பட்டார். அன்று எம். ஜி. ஆர். முடிந்தவரை சிரமப்பட்டு நல்லாவே நடித்து விட்டார்.
எம். ஜி. ஆர். நடித்த சீன் இடைவேளையோடு முடிந்துவிட்டது. கம்பனியில் மற்ற நடிகர்களும், முதலாளியும் ஆளு புதுசு பி. யூ. சின்னப்பாவை போல் எதுவும் குறையும் இல்லாமல் வசனம் பேசி நடித்து விட்டான் என்று சந்தோஷப்பட்டார்கள். நாடக இடைவேளையில் கிட்டப்பா மேடை கொட்டடைக்குள் வந்து காளி. என். ரத்தினத்தை அழைத்து எங்கே பி. யூ. சின்னப்பா என்று கேட்டார். அவருக்கு தொண்டை கட்டி போச்சு அதனாலே அவர் வரவில்லை என்று சொன்னார்கள்.
அடுத்து கிட்டப்பா உள்ள வந்ததை அறிந்த எம். ஜி. ஆர். மிகவும் பதட்டம் அடைந்துவிட்டார். தன்னை பற்றி எதுவும் குறைசொல்ல வந்து இருப்பாரோ என்று நினைத்து கிட்டப்பா காளியிடம் பி. யூ. சின்னாவுக்கு பதிலாக நடித்த பையன் யார், பெயர் என்ன என்று கேட்டார், காளி இவன் பெயர் ராமசந்திரன் நல்ல பையன், நல்ல குணம் உள்ளவன், அறிவாளி கொடுத்த வேலையை சரியாக செய்வான் என்றார் காளி. உடனே கிட்டப்பா எம். ஜி. ஆரை பார்த்து கிட்ட வரும்படி அழைத்தார். எம். ஜி. ஆர். தயங்கினார். உடனே காளி அடவாப்பா அண்ணன் கூப்பிடுராங்க வந்து அண்ணன் கிட்ட ஆசிர்வாதம் பெற்றுக்கொள் என்று சொன்னதும் எம். ஜி. ஆர். ஆனந்த கண்ணீருடன் கிட்டப்பாவின் காலை தொட்டு வணங்கினார்.
கிட்டப்பாவும் எம். ஜி. ஆரை கட்டித் தழுவி முதுகில் தட்டிக் கொடுத்தார். வளரும் பயிர் முளையிலேயே தெரியும் நீ நல்லா முன்னுக்கு வருவாய் என்று வாழ்த்தி சென்றார். இப்படியாக ஊர் ஊராக சென்று நாடகங்களை நடத்தி வந்த அந்த கம்பனிக்கு வெளிநாடுகளுக்கு செல்ல வாய்ப்பு கிடைத்தது. இதில் சிங்கப்பூர், மலேசியா, ரங்கூன், பர்மா போன்ற ஊர்களுக்கு சென்று நாடக கம்பனி நல்ல பெயரை எடுத்தது. முதலில் பர்மா தமிழர்கள் சார்பில் நாடக கம்பனி அழைக்கப்பட்டது.
அதல் பெரிய நடிகர்களோடு எம். ஜி. ஆருக்கும், சக்கரபாணிக்கும் பர்மாவுக்கு செல்வதற்கு வாய்ப்பு கிடைத்தது. ஒருநாள் நாடக கம்பனி சென்னைக்கு வந்து கப்பல் வழியாக பர்மாவுக்கு புறப்பட்டார்கள். கப்பலில் எம். ஜி. ஆருக்கு தாயாரை விட்டு விட்டு வெளிநாடு செல்கின்றோமே இனி எப்போ தமிழ்நாட்டிற்கு திரும்புவோம் எப்போ நம் தாயை பார்ப்போம் என்ற பெரும் கவலை, அண்ணனிடம் இதை சொல்லி அழ ஆரம்பித்துவிட்டார். அண்ணனும் மற்ற நடிகர்களும் எம். ஜி. ஆரை சமாதானப்படு த்தினார்கள்.
கப்பலில் 3வது நாள் எம். ஜி. ஆருக்கு குமட்டல், வாந்தி ஏற்பட்டது மிகவும் சிரமப்பட்டார். இது முதலாளிக்கும் மற்ற பெரிய நிர்வாகிகளுக்கும் தெரிந்தது. கம்பனியில் நிர்வாக பொறுப்பில் உள்ள கந்தசாமியின் மகன் எம். கே. ராதாவும் நிர்வாகிகளும் எம். ஜி. ஆருக்கு மாத்திரை மருந்துகளை கொடுத்து சமாதானப்படுத்தினார்கள்.
முதன் முதல் கப்பலில் பயணம் செய்பவர்களுக்கு இப்படிதான் சில கோளாறுகள் வரும் என்று சொல்லி சென்றார்கள். கப்பல் பர்மா ரங்கோன் சென்று அடைய 7 நாட்கள் ஆச்சு, பர்மா ரங்கோன் சென்று அடைந்ததும் இவர்களை வரவேற்று அழைத்துச் சென்று ஒரு பெரிய பாடசா¨யில் தங்க வைத்து எல்லா வசதிகளையும் செய்து கொடுத்தார் தமிழ் சங்கத் தலைவர். ரங்கோன் பர்மா தமிழர்களின் வரவேற்பும், உபசரிப்பும் எம். ஜி. ஆரை கவர்ந்தது.
இவர் இதை எல்லாம் பார்த்து மிக சந்தோஷமும் ஆனந்தமும் அடைந்தார். பர்மா ரங்கோனில் 15 நாட்கள் மிக சிறப்பாக நாடகம் நடந்தது. 15 நாட்கள் இதில் எம். ஜி. ஆர். நடிக்கும் கதாபாத்திரங்களுக்கு மிகவும் வரவேற்பும் கை தட்டலும் கிடைத்தது. மதிப்பும் மரியாதையும் கிடைத்தது. சில சமயங்களில் ஆங்கிலம் பேச வேண்டிய சூழ்நிலை ஏற்படும் போது சக்கரபாணி சொல்லி பேச சொல்லுவார்கள்.
அவர் ஏற்கனவே ஆங்கிலம் நன்கு கற்றுக்கொண்டவர். இந்த விசயத்தில் சக்கரபாணிக்கு கம்பனியில் நல்ல மதிப்பும் இருந்தது. 15 நாள் கழித்து சென்னைக்கு திரும்புகின்ற நேரத்தில் எல்லோருக்கும் வெளிநாடு நாடகங்களை மிக சிறப்பாக முடித்து வெற்றி நடைபோட்டு கொண்டு தாய்நாட்டிற்கு போகிறோமே என்ற மகிழ்ச்சியோடு கப்பலில் வாந்தி, மயக்கம், கவலை இன்றி சந்தோஷமாக சென்னை வந்து சேர்ந்தார்கள்.
சென்னையிலிருந்து தாயை சந்திக்க கும்பகோணம் சென்று தாயை சந்தித்து பர்மா ரங்கோனில் தனக்குக் கிடைத்த மரியாதையை பர்மா தமிழர்களின் வாழ்த்துக்கள், ரங்கோனில் கிடைத்த அதிக சம்பளம் இவை அனைத்தும் சொல்லி இருவருடைய சம்பளத்தையும் அம்மாவிடம் கொடுத்து அம்மாவின் காலில் வீழ்ந்து ஆசீர்வாதம் பெற்றார்கள்.
வெளிநாடு சென்று வந்த மகன்களை கண்ட அந்த தாய் அளவற்ற அளவிற்கு ஆனந்தம் அடைந்தார். அப்போது எம். ஜி. ஆருக்கு 14 வயது ஆகிவிட்டது பிறகு தொடர்ந்து போய்ஸ் கம்பனியிலே இருக்க வேண்டியதாகியது.
எம். ஜி. ஆரும் பி. யூ. சின்னப்பாவும், காளியும் மிக மிக உதவியாக நாடகக் கம்பனியில் இருந்தார்கள். அண்ணன், தம்பி இருவருக்கும் சினிமாவில் நடிக்க ஆசை ஏற்பட்டது. எப்படியும் இந்த கம்பனியில் இருந்து வெளியே போக வேண்டும். அப்போதுதான் நாம் முன்னுக்கு வரமுடியும் என்ற முடிவுக்கு வந்த எம். ஜி. ஆரும் சக்கரபாணியும் இந்த ய§¡சனையை பி. யூ. சின்னப்பாவிடம் சொன்னார்கள்.
பி. யூ. சி. கம்பனியை விட்டு ஒரு நாள் யாரிடமும் சொல்லாமல் சக்கரபாணிக்கு மட்டும் எல்லா விபரங்களையும் சொல்லிவிட்டு பெட்டி, சில உடைகளை மட்டும் விட்டுவிட்டு பணம் நகைகள் மற்றும் சில பொருள்களோடு வெளியேறி விட்டார்.

இலங்கை, கனடா திரைப்படங்களில் நடித்த பாலச்சந்திரன்

யாழ்ப்பாண மாவட்டம், கரவெட்டியில் பிறந்த பாலச்சந்திரன் இலங்கை வானொலி நடிகர்களில் ஒருவர். இலங்கை உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தில் வரி உத்தியோகத்தராக பணிபுரிந்தவர். ஏறக்குறைய 20 ஆண்டுகளாக இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன தேசிய சேவையிலும், வர்த்தக சேவையிலும் ஒலிபரப்பான ஏராளமான வானொலி நாடகங்களில் நடித்ததோடு, தணியாக தாகம் என்ற பலரும் அறிந்த வானொலி தொடர் நாடகத்தில் சோமு என்ற பாத்திரத்தில் நடித்தவர்.

இலங்கை ரூபவாகினி தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நாடகங்களான நிஜயங்களின் தரிசனம், உதயத்தில் அஸ்தமனம், திருப்பங்கள் போன்றவற்றில் நடித்ததோடு காதம்பரி நிகழ்ச்சியில் பல குறு நாடகங்களை எழுதி நடித்திருக்கிறார்.
1965 இல் நெல்லை க. பேரன் எழுதி, நெல்லியடி ஐக்கிய கலாசாலையில் மேடையேறிய ‘புரோக்கர் பொன்னம்பலம்’ என்ற நகைச்சுவை நாடகத்தில் நடிக்கத் தொடங்கி 1990 இல் கொழும்பில் வெள்ளி விழா கொண்டாடியவர்.
இதிகாசம், சமூக, நவீன, நகைச்சுவை, பாநாடகம் என அனைத்து வகையான மேடை நாடகங்களிலும் நடித்தவர்.
இலங்கையில் வாடைக்காற்று, அவள் ஒரு ஜீவநதி, நாடு போற்ற வாழ்க, ஷர்மிளாவின் இதய ராகம், கிlலீnனீings (ஆங்கிலம்) அஞ்சானா (சிங்களம்) ஆகிய திரைப்படங்களிலும், கனடாவில் உயிரே உயிரே, தமிழிச்சி, கனவுகள், மென்மையான வைரங்கள், சகா, என் கண் முன்னாலே, 1999 ஆகிய திரைப்படங்களிலும் நடித்தவர்.
இலங்கை வானொலிக்காக ஏராளமான நகைச்சுவை நாடகங்களையும், தனி நாடகங்களையும் தொடர் நாடகங்களையும் எழுதியவர். தொடர் நாடகங்களில் கிராமத்துக் கனவுகள் இவரது பிறந்த இடமான கரவெட்டியை பின்னணியாக கொண்டிருப்பதும், வாத்தியார் வீட்டில் இவர் வாழ்ந்த இடமான இணுவிலை பின்னணியாகக் கொண்டிருப்பதும் தனிச்சிறப்பாகும்.
கனடாவில் சி. எம். ஆர். வானொலியில் ‘மனமே மனமே’ என்ற தொடர் நாடகத்தை எழுதி, இயக்கி தயாரித்து வழங்கியிருக்கிறார். இலங்கையில் வாடைக்காற்று கிlலீnனீings (ஆங்கிலம்) ஆகிய திரைப்படங்களின் உதவி இயக்குனராகவும் கனடாவில் எங்கோ தொலைவில், மென்மையான வைரங்கள் ஆகிய திரைப்படங்களின் இயக்குனராகவும் செயற்பட்டார்.

அம்மு பாடிய ~அம்மா என்றால் அன்பு' ஜெயலலிதாவை பாட வைத்;த எம். ஜி. ஆர்.

 

வாலி எழுதிய ‘அம்மா என்றால் அன்பு’ என்ற பாடலை, அடிமைப் பெண் படத்தில் ஜெயலலிதா பாடினார். இதுபற்றி வாலி கூறியிருப்பதாவது :-
‘அடிமைப் பெண்’ படத்துக்காக ‘அம்மா என்றால் அன்பு’ என்னும் பாடல் எழுதியிருந்தேன்.
‘வாலி! இந்தப் பாட்டை அம்முவை (ஜெயலலிதா) பாட வைக்கலாம் என்றிருக்கிறேன்’ என்றார் எம். ஜி. ஆர்.
‘ரொம்ப சந்தோஷம்’ என்று நான் சொல்லிவிட்டு, மேற்கொண்டு ஒரு விஷயத்தை எம். ஜி. ஆரிடம் விளக்கினேன்.
‘அண்ணே! பிற்காலத்தில் இவங்களை நீங்க படத்திலே பாட வைப்பீங்கன்னுதான், ஏற்கனவே நான் தீர்க்கதரிசனமாக சொல்லி வைத்திருக்கிறேனே.... கவிஞன் வாக்கு பொய்க்காது’ என்றேன்.
‘எப்படி? எப்படி?’ என்று எம். ஜி. ஆர். ஆர்வமாகக் கேட்டார்.
‘அரச கட்டளை’ திரைப்படத்தில் செல்வி ஜெயலலிதா அவர்களுக்காக நான் எழுதியிருந்த பாடலை அவருக்கு நினைவூட்டினேன்.
அந்தப் பாடலின் வரிகள் இவைதான்:
‘என்னைப் பாட வைத்தவன் ஒருவன்; என் பாட்டுக்கு அவன்தான் தலைவன்!’
- இதை நான் சொன்னதும் எம். ஜி. ஆர். மகிழ்ந்து சிரித்து, ‘வாழ்க! வாழ்க! உங்கள் வாக்கு எப்போதும் இப்படி பலிக்கட்டும்’ என்றார்.
‘அம்மா என்றால் அன்பு’ என்ற பாட்டை கே. வி. மகாதேவன் இசை அமைப்பில் ஜெயலலிதா பாட, ‘அடிமைப்பெண்’ படத்தில் அப்பாடல் இடம்பெற்று பெரும் புகழ் பெற்றது.’
இவ்வாறு வாலி கூறினார்.
ஆரம்ப காலத்தில் வாலிக்கு மதுப் பழக்கம் இருந்தது. அதை விட்டுவிடும்படி எம். ஜி. ஆர். சிலமுறை கூறியும், அந்த பழக்கம் தொடர்ந்தது. 1978 ல் ஒருநாள் எம். ஜி. ஆரும், வாலியும் ஒரே விமானத்தில் பயணம் செய்தனர். விமானப் பணிப்பெண் ஒரு தட்டில் சொக்லேட் கொண்டு வந்தார். அதில் ஒரு சொக்லெட்டை எடுத்து, வாலியிடம் கொடுத்தார், எம். ஜி. ஆர்.
‘என்னண்ணே விசேஷம்? எதுக்கு சொக்லேட்?’ என்று கேட்டார், வாலி.
‘நேற்றுதான் ஒரு சந்தோஷ சமாசாரம் கேள்விப்பட்டேன். அந்த சந்தோஷத்தை உங்களோடு பகிர்ந்து கொள்ளத்தான் உங்களுக்கு இனிப்பு கொடுத்தேன்’ என்று கூறினார் எம். ஜி. ஆர்.
‘என்ன சந்தோஷ சமாசாரம்?’ என்று வாலி கேட்டார்.
‘நீங்க மது அருந்துவதை விட்டுட்டீங்கன்னு நேற்றுதான் கேள்விப்பட்டேன். ஏழெட்டு மாதமா அந்தப் பீடையைக் கையால் தொடறதில்லையாமே நீங்க? இது எனக்கு சந்தோஷ சமாசாரம்தானே!’ என்று கூறிய எம். ஜி. ஆர்., ‘உங்க உடம்பு உங்களுக்குத் தேவை இல்லாமல் இருக்கலாம். ஆனால் தமிழுக்குத் தேவை’ என்றார். கண் கலங்கி விட்டார் வாலி. எம். ஜி. ஆர். முதல் அமைச்சராக இருந்தபோது, அவருடன் வாலி, மதுரை முத்து ஆகியோர் உரையாடிக் கொண்டிருந்தனர். அப்போது, ‘கவிஞர்கள் வாக்கு பலிக்குமா?’ என்ற கேள்வி எழுந்தது.
கவிஞர்களின் வாக்கு பலிக்கும் என்பதற்கு, பல உதாரணங்களை கூறினார் எம். ஜி. ஆர்.
அப்போது எம். ஜி. ஆரிடம் மதுரை முத்து கூறினார்.
‘உங்களுக்காக வாலி எழுதின பாடல் அத்தனையும் பலிச்சிருக்கு.
‘நினைத்தேன் வந்தாய், நூறு வயது!’ என்று எழுதினாரு. குண்டடிபட்டுப் படுத்திருந்த நீங்க நல்லபடியாகப் பொழச்சு வந்தீங்க. ‘நான் ஆணையிட்டால், அது நடந்து விட்டால்...’ என்று ‘எங்க வீட்டு பிள்ளை’யிலே வாலி எழுதினாரு. நீங்க இப்போது ஆணையிடுகிற இடத்திலே இருக்கீங்க.
‘அன்னமிட்ட கை’ என்று உங்கள் கையைப் புகழ்ந்து எழுதினாரு. சத்துணவு திட்டத்தில் இப்போது நீங்கள் குழந்தைகளுக்கு அன்னமிடுகிaர்கள்.’
- இவ்வாறு முத்து கூறியபோது, வாலி குறுக்கிட்டார்.
‘அண்ணே! நான் சொன்னதெல்லாம் பலிச்சுதுன்னா அந்தப் பெருமை எல்லாம் நம் அண்ணனை (எம். ஜி. ஆர்.) தான் சாரும். ஏனென்றால், அவர் பாடியதால்தான், அந்தப் பாட்டுக்கெல்லாம் அவ்வளவு சக்தி வந்து பலிச்சிது’ என்றார்.
அப்போது, முத்துவைப் பார்த்து எம். ஜி. ஆர்., ‘என்னைப் பற்றி வாலி எழுதிய எல்லாப் பாட்டும் பலிச்சுது. ஆனால் ஒரு பாட்டுதான் பலிக்கவில்லை’ என்றார்.
எந்தப் பாட்டை எம். ஜி. ஆர். குறிப்பிடுகிறார் என்று, வாலிக்குப் புரியவில்லை.
பிறகு எம். ஜி. ஆரே சொன்னார்:
‘எனக்கொரு மகன் பிறப்பான்! அவன் என்னைப் போலவே இருப்பான். தனக்கொரு பாதை வகுக்காமல் என் தலைவன் வழியிலே நடப்பான்’ என்று பாட்டு எழுதினீர்களே! அந்தப் பாட்டைத்தான் சொல்கிறேன்’ என்றார் எம். ஜி. ஆர்.
வாலியின் முகம் வருத்தத்தால் வாடியது. எனினும், தன்னை ஒருவாறு தேற்றிக்கொண்டு, ‘அண்ணே! நாட்டில் உள்ள சின்னஞ்சிறார்கள் அனைவருமே, உங்களுடைய செல்வங் களாக இருக்கிறார்கள். அப்படி இருப்ப தால், உங்களுக்கு தனியாக ஒரு வாரிசு அமைவதை இறை வனே விரும்ப வில்லை. அதனால்தான் இந்தப் பாட்டு பலிக்காமல் விட்டது’ என்று கூறினார். மதுரை முத்துவும், வாலி சொன்னதை ஆமோதித்தார்.
எம். ஜி. ஆர். புன்னகை புரிந்தார்.

உலக சினிமா


* உலகில் ஆண்டுதோறும் தயாரிக்கப்படும் சிறந்த திரைப்படங்களுக்குப் பல்வேறு நாடுகளில் பல பரிசுகள் வழங்கப்படுகின்றன.
உலகத்தில் தலைசிறந்த வீரராகக் கருதப்படும் 'ஆஸ்கார்' பரிசை அமெரிக்காவும், இத்தாலியில் 'வெனிஸ்' பரிசும், பிரான்ஸ் வழங்கும் 'கேர்ணஸ்' பரிசும், ஜெர்மனியில் அளிக்கப்படும் 'பெர்லின்' பரிசும் லண்டனில் வழங்கும் 'சார்லி சப்ளின்' பரிசும் திரைப்பட வளர்ச்சிக்கு உதவுகின்றன.
* ஆஸ்கார் விருதுக்கென வழங்கப்படும் ஒஸ்கார் சிலை 13 அங்குல உயரமுள்ள 10 கெரட் தங்கமுலாம் பூசப்பட்ட மனித உருவைக் கொண்ட சிலையாகும். இதனை உருவாக்கியவர் 'சிட்ரிக் கிப்பன்' என்ற ஆர்ட் டைரக்டர் இதை வழங்கும் அமெரிக்க நிறுவனத்தின் பெயர்:- திணீaனீலீசீy லிஜீ ணிotion ஜிritunலீs, திrts anனீ ஷிணீiலீnணீலீ
* 1931 ஆம் ஆண்டிலிருந்துதான் இந்நிறுவனம் 'ஒஸ்கார் அவார்டு' என்ற பெயரில் வழங்கி வருகிறது. அதற்குமுன் 'அகடமி அவார்டு' என்ற பெயரில் வழங்கி வந்தது.
* முதல் ஒஸ்கார் விருதைப் பெற்ற திரைப்படம் 'விங்ஸ்' சிறந்த நடிகர் 'எமில் ஜன்னிங்ஸ்'. ஹிhலீ தீay oஜீ திll பிlலீsh மற்றும் ஹிhலீ ழிast விoசீசீanனீ என்ற படங்களில் சிறப்பாக நடித்ததற்காக இவ்விருதைப் பெற்றார்.
* சிறந்த நடிகை ‘ஜேனட் ஹெய்னர்’ ஷிலீvrnth சிலீavலீn ஷிtrலீலீtதிngலீl மி ஷிunrisலீ ஆகிய படங்களில் நடித்ததற்காக அவருக்கு இவ்விருது கிடைத்தது.