Wednesday, November 28, 2012

தமிழ்ப்பட வாய்ப்புகளை புறக்கணிக்கும

தமிழ் பட கதைகள் என்னை கவராததால் ஏற்கவில்லை என்றார் பிரியாமணி. இது பற்றி அவர் கூறியதாவது:- டோலிவுட்டில் அங்குலிகா என்ற படத்தில் நடிக்கிறேன். இதுவொரு பொது கருத்துள்ள கதை. இதற்கு முன் இப்படியொரு கதாபாத்திரம் செய்யவில்லை. இப்படத்தின் கதை இரண்டு காலகட்டங்களில் நடக்கிறது. ஒரு பகுதியில் இளவரசியாக நடிக்கிறேன். இது வழக்கமான இளவரசி கதாபாத்திரம் இல்லை. முந்தைய பிறவியின் கதாபாத்திரம். கடந்த கால வாழ்க்கையை குறிக்கும் இந்த கதையில் ஆத்மாவை சந்திக்கிறேன்.
அதன் பிறகு நடப்பதுதான் கதை. அடுத்தமாதம் முதல்வாரம் ஷ¥ட்டிங். இதுதவிர இன்னொரு தெலுங்கு படத்தில் சமுத்ரா இயக்கத்தில் நடிக்கிறேன். இது ஹீரோயினை மையமாக வைத்த கதை. வித்தியாசமான அணுகு முறையுடன் இதன் கரு அமைக்கப்பட்டுள்ளது. இதில் எனக்கு ஜோடி கிடையாது. ஆனாலும் முன்னணி நடிகர் ஒருவரை நடிக்க வைக்க தயாரிப்பாளர்கள் பேசி வருகின்றனர். தமிழில் எனக்கு வாய்ப்புகள் வருகிறது. ஆனால் எதுவும் என்னை கவரவில்லை. அதனால் எந்த படத்தையும் ஏற்கவில்லை இவ்வாறு பிரியாமணி கூறினார்.

நிர்வாணமாக நடித்தேனா?

முழுப்பொய்  ஆன்ட்ரியா
ஜீவா நடிக்கும் என்றென்றும் புன்னகை படத்தில் நிர்வாண போஸ் கொடுத்து நடித்ததாக வெளியான தகவல்கள் முழுப் பொய் என்று கூறியுள்ளார் நடிகை ஆன்ட்ரியா.
சர்ச்சைகளின் நாயகியாகத் திகழும் ஆன்ட்ரியா பற்றி இப்போது புதிதாகக் கிளம்பியுள்ள தகவல், அவர்நிர்வாண கோலத்தில் நடித்தார் என்பதுதான்.
ஓவியக் கல்லூரி மாணவர் படம் வரைவதற்காக இது போன்று போஸ் கொடுத்து அவர்நடித்துள்ளதாகவும் கூறப்பட்டது.
இது குறித்து ஆன்ட்ரியாவிடம் கேட்ட போது நிர்வாண போஸ் என்பதெல்லாம் பொய்யான செய்திகள்.
என் நடிப்புத் திறமையை வெளிப்படுத்துகிற வகையில் ஒரு காட்சியில் நடித்து இருக்கிறேன். அந்தக் காட்சி நிச்சயம் எனக்கு பெயர் பெற்றுத் தரும். ஆனால் அந்தக் காட்சி குறித்து இப்போதே சொல்ல முடியாது என்றார்.

கன்னடத்தில் ஸ்ரேயா பிஸி

தமிழ், தெலுங்கு படங்கள் கைகொடுக்காததால் கன்னட திரையுலகிற்கு சென்று விட்டார் நடிகை ஸ்ரேயா. ரஜினியுடன் சிவாஜி படத்தில் நடித்த பிறகு முன்னணி நாயகியாக வலம் வந்தவர் நடிகை ஸ்ரேயா, கமல், அஜீத் தவிர அத்தனை முன்னணி நடிகர்களுடனும் ஜோடி சேர்ந்து நடித்த ஸ்ரேயா, தமிழில் வாய்ப்புகள் குறைந்ததால் இந்திப்பட உலகிற்கு சென்றார். அங்கு ஓரிரு படங்கள் நடித்த ஸ்ரேயாவுக்கு திடீரென ஆங்கிலப் பட வாய்ப்பு கிடைத்தது. மீரா நாயரின் இரு படங்களில் அடுத்தடுத்து நடித்தார் ஸ்ரேயா. ஆங்கிலப் படங்களில் நடித்ததால் ஹாலிவுட்டுக்குப் போய்விட்டோம் என்று நினைத்துக் கொண்டிருந்த ஸ்ரேயாவுக்கு அந்த வாய்ப்புதான் ஆபத்தாக அமைந்துள்ளது.
தற்போது அவரை தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகம் கண்டுகொள்ளாமல் விட்டு விட்டது. தனக்குத் தெரிந்த பிரபலங்கள் மூலம் தூது விட்டும் வாய்ப்புகள் எதுவும் கிடைத்ததாக தெரியவில்லை. இதனால் கன்னட திரையுலகில் தஞ்சம் புகுந்து விட்டார் ஸ்ரேயா. கன்னடத்தில் தயாராகி, தமிழ், தெலுங்கில் டப்பாகவிருக்கும் சந்திரா படத்தில் அவர்தான் கதாநாயகி. சரித்திரப் படம்தான் என்றாலும், திகட்டத் திகட்ட கவர்ச்சி காட்டியிருக்கிறாராம் ஸ்ரேயா. இந்த அஸ்திரம் மீண்டும் தனக்கு தமிழில் வாய்ப்பு தரும் இல்லாவிட்டால் கன்னடத்திலாவது ஒரு இடத்தைப் பிடித்துத் தரும் என்ற நம்பிக்கையில் இருக்கிறாராம் ஸ்ரேயா.

பிரசவ நிகழ்வுகளை படமாக்கிய விவகாரம்

கேரள மாநிலத்தில், மாடலிங் துறையில் பிரபலமானவர் நடிகை ஸ்வேதா மேனன் (வயது 38) இவர் மலையாள திரைப் படங்கள் பலவற்றில் நடித்துள்ளார். இவருக்கும் மும்பையைச் சேர்ந்த ஸ்ரீவத்சனுக்கும் கடந்த ஆண்டு திருமணம் நடந்தது. கர்ப்பமடைந்த ஸ்வேதாவுக்கு கடந்த செப்டம்பர் 29ம் திகதி மும்பை நானாவதி மருத்துவமனையில் பெண் குழந்தை பிறந்தது. அவர் மருத்துவமனையில் சேர்ந்தது முதல் பிரசவித்தது வரையிலான நிகழ்வுகள் மலையாள திரைப்பட இயக்குனர், பிளஸ்சி என்பவரால், களிமண்ணு என்ற படத்திற்காக படமாக்கப்பட்டன. இந்தப் படத்தில் நடிகை ஸ்வேதாமேனனும் நடிக்கிறார். பிரசவ காட்சிகள் திரைப்படமாக்கப்பட்ட விவகாரம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் பெண்ணின் பிரசவத்தை திரைப்படமாக்கிய செயல் மனித சமுதாயத்திற்கு தேவையற்றது. பெண்மையை அவமானப்படுத்தும் செயல், எனவே நடிகை ஸ்வேதா மேனன் மற்றும் இயக்குனர் பிளஸ்சி உள்பட 5 பேர்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக்கோரி எர்ணாகுளத்தை சேர்ந்த பவுலோஸ் என்பவர் அங்குள்ள முதன்மை குற்றவியல் நீதிமன்றில் வழக்குத் தொடர்ந்துள்ளார்.

 அஞ்சலி போடும் புதுக் கணக்கு!

குடும்பக் குத்து விளக்கு அஞ்சலி கவர்ச்சி குத்து நடிகையான பிறகு கதை என்பதை மறந்து காசில்தான் முழுக் கவனத்தையும் பதித்திருக்கிறார். கேட்கிற காசை கொடுத்துவிட்டால் போதும் அது புதுமுக நடிகரின் படமாக இருந்தாலும் அம்மணி கண்டுகொள்வதில்லை. வரிந்து கட்டிக்கொண்டு களத்தில் இறங்கி விடுகிறார். அதனால் இப்போது அஞ்சலி வேண்டும் என்று நினைப்பவர்கள் கதையைகூட ரெடி பண்ணாமல் கரன்சி கட்டுகளை ரெடி பண்ணிவிட்டுத்தான் அவரைசந்திக்கிறார்கள்.

அந்த வகையில், முன்னணி டைரக்டர், முன்னணி ஹீரோக்களின் படம் என்றால் சம்பள விசயத்தில் கறாலாக பேசாத அஞ்சலி, வளர்ந்துவரும் ஹீரோக்களின் படங்கள் என்றால் கண்ணை மூடிக்கொண்டு சம்பளம் பேசுகிறாராம். மாட்டுத்தரகு செய்வது போல் டவலை கைமேல் போட்டு மூடிக்கொண்டு அவர் விரல் வித்தை காட்டுவதைப் பார்த்து ஆடிப்போகிறார்கள் படாதிபதிகள். என்றாலும் அஞ்சலிக்கென்று தற்போது ஒரு மார்க்கெட் இருப்பதால், சரியில்லாத படத்தையும் தனது கவர்ச்சியால் தூக்கி நிறுத்தி விடுவார் என்று அவரை முற்றுகையிடுகிறார்கள் படாதிபதிகள். இதனால் அருகில் தாய்குலத்தையும் உட்கார வைத்துக்கொண்டு சரியாக கல்லாக்கட்டி வருகிறார் அஞ்சலி.


நடிப்பு படிப்பு முடிய சில நாட்கள் இருக்கையில் பாலசந்தரைப் பார்க்க போகிறோம் என்று அறிந்தபோது ரஜனிக்கு ஏற்பட்ட உணர்வு

சென்னை நடிப்பு பயிற்சி கல்லூரியில், ரஜினியின் படிப்பு முடிவடைவதற்கு சில நாட்கள் இருந்த வேளையில், அங்கு டைரக்டர் கே. பாலசந்தர் வந்து, மாணவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளிக்கப் போகிறார் என்று அறிவித்தார்கள்.
அதைக் கேட்டதும் ரஜினிக்கு உற்சாகம் தாங்கவில்லை. பாலசந்தரின் ‘மேஜர் சந்திரகாந்த்’ படத்தை பார்த்தது முதல், அவருடைய பரம ரசிகராகியிருந்தார். பாலசந்தர் படங்களை ஒன்று விடாமல் பார்க்கலானார்.
பாலசந்தரைப் பார்க்கப் போகிறோம் என்று அறிந்த போது தனக்கு ஏற்பட்ட உணர்ச்சி பற்றி ரஜினி கூறுகிறார்.
¡லசந்தரின் அரங்கேற்றத்தை பார்த்த போது, சிரித்திருக்கிறேன்; அழுதிருக்கிறேன்; உணர்ச்சி வசப்பட்டிருக்கிறேன்; பிரமித்துப் போயிருக்கிறேன்.
பிறகு ‘அவள் ஒரு தொடர்கதை’ படத்தை தொடர்ந்து 4 தடவை பார்த்தேன்.. அவர் போட்டோவை பத்திரிகையிலே பார்த்திருந்தேன். அவரைப்பற்றி நிறைய கேள்விப்பட்டிருந்தேன். அவரைப் பார்க்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்தேன்.
அப்போதுதான், பிலிம் இன்ஸ்டிட்டியூட்டுக்கு வரப்போகிறார் என்ற தகவல் வந்தது. எனக்கு மகிழ்ச்சி தாங்கவில்லை. அவரைச் சந்திக்கும் நாளுக்காக ஆவலுடன் காத்திருந்தேன்.
ந்த நாளும் வந்தது. பிரின்சிபல் ராஜாராம்தாஸ் வேகமாக வந்து, ‘பாலசந்தர் சார் இருபது நிமிடம் உங்களுக்காக ஒதுக்கியிருக்கிறார். இங்கே இருபது நிமிடம்தான் இருப்பார். ஆகவே, நிறைய கேள்விகளைக் கேட்காதீர்கள். நல்ல கேள்விகளை மட்டும் கேளுங்கள்’ என்று கூறினார்.
எல்லோரும் ஆவலாக காத்திருந்தோம். இரண்டு பேர் வேகமாக வந்தார்கள். எங்கள் பிரின்சிபல்தான் பாஸ்ட் (வேகம்) என்றால், அதைவிட ‘பாஸ்ட்’ பாலசந்தர் சார்! எனக்கு வேகம்தான் பிடிக்கும் சினிமாவிலும் சரி, வாழ்க்கையிலும் சரி! எங்க அப்பா கொடுத்த பயிற்சி அப்படி!
பாலசந்தர் சார், பார்க்க சின்னப்பையன் மாதிரி இருந்தார். நான் அவரைப் பார்த்து அசந்து போய்விட்டேன். என் கண்கள் மட்டும் அவரையே பார்த்துக் கொண்டிருந்தன. மனம் அவர் படங்களை நினைத்துக் கொண்டிருந்தது.
என் பெயரைக் கேட்டார் அது எனக்குக் கேட்கவில்லை. ஏனென்றால் என் மனம் அங்கே இல்லையே! பிறகு சட்டென்று உணர்வு வந்தது. சிலிர்த்து எழுந்து
‘சிவாஜிராவ்’ என்றேன்.
அவர் மெல்ல சிரித்துக் கொண்டார்.
எல்லோரும் கேள்விகள் கேட்டார்கள். நானும், ஏதாவது கேட்க வேண்டும் என்பதற்காக ஆங்கிலத்தில் என் ஸ்டைலில் வேகமாக ஒரு கேள்வி கேட்டேன். ‘ஒரு நடிகனிடம் அவன் நடிப்பைத் தவிர வேறு எதை நீங்கள் எதிர்பார்க்கிaர்கள்?’ என்பதுதான் நான் கேட்ட கேள்விக்கு தமிழ் அர்த்தம்.
நான் வேகமாகக் கேட்டதால், அவருக்கு புரியவில்லை.
‘சாரி புரியவில்லை’ என்றார்.
நான் நிறுத்தி- நிதானமாக மீண்டும் அந்தக் கேள்வியைக் கேட்டேன்.
பாலசந்தர் சிரித்துக் கொண்டே, ‘நடிகன் வெளியே நடிக்கக்கூடாது’ என்றார். இந்தப் பதிலைக் கூறிவிட்டு, மீண்டும் என பெயரைக் கேட்டார் ‘சிவாஜிராவ்’ என்று கூறினேன்.
20 நிமிடங்கள் முடிந்தன. பாலசந்தர் புறப்பட்டார். அவர் என்னை நோக்கி கையை நீட்டினார். நானும் கை நீட்டினேன். அவர் கையில் என் கை! அவர் கையில்தான் என்ன பிடிப்பு! அருகிலிருந்த பார்க்கும் போது எவ்வளவு அழகாக இருக்கிறார்!
எங்கள் ஆசிரியர் கோபாலி அப்போது வந்தார். என்னை அவருக்கு ரொம்ப பிடிக்கும். ‘சார் உங்க படம் என்றால் இவனுக்கு உயிர். அவள் ஒரு தொடர் கதையை 6 தடவை பார்த்திருக்கிறான்!’ என்று அவர் பாலசந்தரிடம் கூறினார்.
பாலசந்தர் சிரித்தபடி, ‘உனக்கு தமிழ் தெரியுமா?’என்று கேட்டார்.
‘கொஞ்சம் கொஞ்சம் தெரியும்’ என்று தமிழில் சொன்னேன்.
‘உனக்குத் தமிழ் தெரியாது என்பது உன் பேச்சில் இருந்தே தெரிகிறது’ என்று பாலசந்தர் சார் சொன்னார்.
பிறகு, ‘நான் வருகிறேன்’ என்று விடைபெற்றுக் கொண்டார். கோபாலியுடன் பேசிக்கொண்டே காருக்குச் சென்றார். ‘எம்.எஸ்.எல். 363’ எண் காரில் ஏறி புறப்பட்டுச் சென்றார்.
அவர் போனதும் கோபாலி என்னிடம் வந்தார். ‘பாலசந்தர் சார் உன்னை பார்க்க விரும்புகிறார்’ என்றார்.
எனக்கு மகிழ்ச்சி தாங்கவில்லை. பாலசந்தர் சார் எதற்காக என்னை பார்க்க விரும்புகிறார்? பட சான்ஸ் தேடி வருகிறதோ என்று மனம் குறுகுறுத்தது.
பாலசந்தர் சாரின் அழைப்பு வரும் என்று ஆவலோடு நாட்களை எண்ணிக் கொண்டிருந்தேன். 15 நாட்களுக்கு மேல் ஆகிவிட்டது. அழைப்பு ஏதும் வரவில்லை.
முன்பு இருந்த உற்சாகம் இப்போது இல்லை. எல்லோரும் சொல்கிற மாதிரி, ஒரு பேச்சுக்காக அப்படி சொல்லியிருப்பார் என்று நினைத்தேன். அந்த விடயத்தை அத்துடன் மறக்க முயன்றேன்.
இவ்வாறு ரஜினி குறிப்பிட்டுள்ளார்.
இந்த சமயத்தில் பெங்களூரில் இருந்து ரஜினிக்கு ஒரு கடிதம் வந்தது. உடனே புறப்பட்டு வா! என்று அதில் அவர் அண்ணன் எழுதியிருந்தார்.
என்றைக்கும் இவ்வளவு அவசரமாக ரஜினியை அவர் அழைத்தது இல்லை. ஆகவே, என்னவோ, ஏதோ என்று எண்ணியபடி, பிருந்தாவன் எக்ஸ்பிரசில் பெங்களூரூக்குப் புறப்பட்டார்.

இலங்கையின் முதல் தமிழ் திரைப்படத்தில் நடித்த நாயகிக்கு குரல் கொடுத்தவர்

தமிழ்நாடு தூத்துக்குடி மாவட்டம் மணப்பாடு என்ற கிராமத்தில் ஜோன் பெர்னாண்டோ ராணி பெர்னாண்டோ ஆகியோருக்கு மூத்தவராகப் பிறந்தார்.இவருக்கு எட்டு சகோதர சகோதரிகள்.
ஒரு வயதாக இருக்கும் போதே குடும்பத்துடன் இலங்கைக்கு இடம்பெயர்ந்து வந்துவிட்டார். கொழும்பு கொட்டாஞ்சேனை கதிரேசன் வீதியில் வளர்ந்த செல்வம் கொட்டாஞ்சேனை நல்லாயன் பாடசாலையில் கல்வி கற்றார்.
இவரது கணவர் காலஞ்சென்ற ராஜேந்திரன் பெர்னாண்டோ. பிரதீப்குமார் என்ற மகன் உள்ளார். இலங்கை வானொலியில் முதன் முதலில் சிறுவர் மலர் நிகழ்ச்சியில் பங்குபற்றினார். பின்னர்
சி. சண்முகம் லடீஸ் வீரமணி ஜே.பி. ரொபர்ட் உள்ளிட்ட பலரின் நாடகங்களில் நடித்தார். இவர் நடித்த நாடகங்களில் சுமதி, புரோக்கர் கந்தையா போன்றவை அதிக தடவை மேடையேறியவை. இது தவிர தொலைக்காட்சி நாடகங்களிலும் நடித்திருக்கிறார்.
இலங்கையில் தயாரான முதல் தமிழ் திரைப்படமான தோட்டக்காரி திரைப்படத்தில் கதாநாயகிக்காக குரல் கொடுத்தார். இவர் நடித்த முதல் படம் புதிய காற்று. இது தவிர தென்றலும் புயலும் படத்தில் நடித்தமைக்காக ஜனாதிபதி விருது கிடைத்தது.
இவர் நடித்த திரைப்படங்கள்
புதிய காற்று (1975)
கோமாளிகள் (1976)
தென்றலும் புயலும் (1978)
ஏமாளிகள் (1978)
அனுராகம் (1978)

1978ல் சிறந்த தமிழ்த்திரைப்பட விருதைப்பெற்ற ‘வாடைக்காற்று’

வாடைக்காற்று 1978 ஆம் ஆண்டில் வெளிவந்த ஈழத்துத் தமிழ்த் திரைப்படம். செங்கை ஆழியானின் வாடைக்காற்று என்ற புகழ்பெற்ற புதினம், அதே பெயரில் திரைப்படமாக்கப்பட்டது.
கமலாலயம் மூவிஸ் தயாரித்த இந்தத் திரைப்படம் மன்னார் பகுதியில் உள்ள பேசாலையிலும், வட்டுக்கோட்டை, கந்தரோடை, கல்லுண்டாய், வல்லிபுரம் ஆகிய பகுதிகளிலும் படமாக்கப்பட்டது. மீனவ சமூகத்தின் வாழ்வினைக் கூறும் இத்திரைப்படம் 1978 ஆம் ஆண்டின் சிறந்த தமிழ்த் திரைப்படம் என்ற விருதினைப் பெற்றது.
இத்திரைப்படத்தில் ஏ. ஈ. மனோகரன், கே. எஸ். பாலச்சந்திரன் கலாநிதிக்கே. இந்திரகுமார், எஸ். ஜேசுரட்ணம், ஆனந்தராணி பாலேந்திரா, (இராசரத்தினம்) சந்திரகலா, கே. ஏ. ஜவாஹர் முதலானோர் நடித்திருத்தனர். பல சிங்களத் திரைப்படங்களை இயக்கிய பிரேம்நாத் மொறாயஸ் இந்தத் திரைப்படத்தை இயக்கினார். கே. எஸ். பாலச்சந்திரன் உதவி இயக்குனராக பணியாற்றினார்.
ஈழத்து இரத்தினம், சில்லையூர் செல்வராசன் ஆகியோர் இயற்றிய பாடல்களை ஜோசப் ராசேந்திரன், வி முத்தழகு, சுஜாதா அத்தநாயக்க ஆகியோர் பாடினார்கள். நடன அமைப்பை வேல் ஆனந்தனும் சண்டைப்பயிற்சியை நேருவும் கவனித்துக்கொண்டார்கள்.

தாழையாம் பூ முடிச்சு தடம் பாத்து நடை நடந்து...

தன்னதானதானதன்னா தந்தனன்ன தானானா
தந்தானனே தானே தந்தினன்னா ஓ.... ஓ.... தந்தானெனோ
தாழையாம் பூ முடிச்சு தடம் பாத்து நடை நடந்து
வாழை இலை போல வந்த பொன்னம்மா
பொன்னம்மா என்
வாசலுக்கு வாங்கி வந்தது என்னம்மா - என்னம்மா
தாழையாம் பூ முடிச்சு தடம் பாத்து நடை நடந்து
வாழை இலை போல வந்த பொன்னம்மா - என்
வாசலுக்கு வாங்கி வந்தது என்னம்மா
பாளை போல் குணமிருக்கு பக்குவமா குணமிருக்கு – குணமிருக்கு
ஆளழகும் சேர்ந்திருக்கு கன்னையா - கன்னையா - இந்த
ஏழைகளுக்கென்ன வேணும் சொல்லையா
பாளை போல் குணமிருக்கு பக்குவமா குணமிருக்கு
ஆளழகும் சேர்ந்திருக்கு கன்னையா இந்த
ஏழைகளுக்கென்ன வேணும் சொல்லையா
தந்தான தந்தனத் தன்னே ததனன்ன தானானா தானானே
தாயாரின் சீதனமும் ஓ..... தம்பிமார் பெரும் பொருளும் ஓ....
தாயாரின் சீதனமும் தம்பிமார் பெரும் பொருளும்
மாமியார் வீடு வந்தால் போதுமா - அது
மானாபி மானங்களைக் காக்குமா
மானாபி மானங்களைக் காக்குமா
தாழையாம் பூ முடிச்சு தடம் பாத்து நடை நடந்து
வாழை இலை போல வந்த பொன்னம்மா - என்
வாசலுக்கு வாங்கி வந்தது என்னம்மா
தானதான தானதன்னா தானேனனோ
மானமே ஆடைகளாம் மரியாதை பொன்நகையாம்
மானமே ஆடைகளாம் மரியாதை பொன்நகையாம்
நாணமாம் துணை இருந்தால் போதுமே எங்கள்
நாட்டு மக்கள் குலப் பெருமை தோன்றுமே
நாட்டு மக்கள் குலப் பெருமை தோன்றுமே
பாளை போல் சிரிப்பிருக்கு பக்குவமா குணமிருக்கு
ஆளழகும் சேர்ந்திருக்கு கன்னையா இந்த
ஏழைகளுக்கென்ன வேண்டும் சொல்லையா
அங்கம் குறைந்தவனை அங்கம் குறைந்தவனை
அங்கம் குறைந்தவனை அழகில்லா ஆண்மகனை
மங்கையர்கள் நினைப்பதுண்டோ சொல்லம்மா வீட்டில்
மணம் பேசி முடிப்பதுண்டோ சொல்லம்மா
மண் பார்த்து விளைவதில்லை மரம் பார்த்து படர்வதில்லை
மண் பார்த்து விளைவதில்லை மரம் பார்த்து படர்வதில்லை
கன்னியரும் பூங்கொடியும் கன்னையா அவர்
கண்ணிலே களங்கமுண்டோ சொல்லையா
கண்ணிலே களங்கமுண்டோ சொல்லையா
பாளை போல் சிரிப்பிருக்கு பக்குவமா குணமிருக்கு
ஆளழகும் சேர்ந்திருக்கு கன்னையா இந்த
ஏழைகளுக்கென்ன வேண்டும் சொல்லையா
தாழையாம் பூ முடிச்சு தடம் பாத்து நடை நடந்து
வாழை இலை போல வந்த பொன்னம்மா - என்
வாசலுக்கு வாங்கி வந்தது என்னம்மாரப்படம் :



Friday, November 23, 2012

குழந்தை நட்சத்திரங்களில் புகழ்பெற்றவர் டெய்சி இராணி

குழந்தை நட்சத்திரங்களில் அகில இந்தியப் புகழ் பெற்று விளங்கியவர், டெய்சி இராணி. இப்போது 3 குழந்தைகளின் தாயாராக மும்பையில் வசிக்கிறார். அகில உலகப் புகழ் பெற்ற குழந்தை நட்சத்திரத்தின் பெயர் ஷெர்லி டெம்பிள். ஆங்கிலத்தில் பேசும் படங்கள் வரத் தொடங்கிய போது படங்களில் அற்புதமாக நடித்து ‘ஒஸ்கார்’ பரிசு பெற்றவர்.
தமிழ் நாட்டில் 1937 இல் வெளிவந்த ‘தியாகபூமி’ படத்தில் நடித்த பேபி சரோஜா (டைரக்டர் கே. சுப்பிரமணியத்தின் உறவினர்) மிகப் பிரபலமான குழந்தை நட்சத்திரமாகத் திகழ்ந்தார். அந்தக் காலகட்டத்தில் பிறந்த பெண் குழந்தைகளுக்கெல்லாம் ‘சரோஜா’ என்று பெயர் சூட்டப்பட்டது.
1958 இல் ‘களத்தூர் கண்ணம்மா’ படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான கமலஹாசன், பெரும் பரபரப்பை உண்டாக்கினார். இளைஞனாக ஆன பிறகு நடிப்பில் புதிய பரிணாமம் கண்டு இன்று ‘உலக நாயகன்’ என்ற பட்டத்துடன் உலகப் புகழ் பெற்ற நடிகராக விளங்குகிறார்.
குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாக மீனா, ஸ்ரீதேவி ஆகியோரும் பின்னர் பிரபல நடிகைகளாக உயர்ந்தார்கள். கமலஹாசன் திரை உலகுக்கு அறிமுகமாவதற்கு சுமார் 4 ஆண்டுகளுக்கு முன் அகில இந்திய புகழ் பெற்ற குழந்தை நட்சத்திரமாக திகழ்ந்தவர், டெய்சி இராணி.
1954 இல் அசோக்குமார் - மீனா குமாரி நடித்த ‘பந்திஷ்’ என்ற இந்திப் படத்தில் டெய்சி இராணி அறிமுகமானார். அப்போது அவருக்கு வயது 4. அனாதைக் குழந்தையான டெய்சி, அசோக்குமாரை தன் தந்தை என்று நினைத்துக் கொண்டு ‘அப்பா - அப்பா!’ என்று சுற்றி வருவதும், கடைசியில் அசோக்குமார் தன் அப்பா அல்ல என்று தெரிந்ததும் மனம் ஒடிந்து போவதும், பார்ப்போர் உள்ளத்தை நெகிழச் செய்தன.
இந்தப் படம், சில ஆண்டுகளுக்குப் பின்னர் ‘யார் பையன்’ என்ற பெயரில் தமிழில் தயாரிக்கப்பட்டது. திரைக்கதை வசனத்தை ஸ்ரீதர் எழுதினார். ஜெமினிக்கணேசன் - சாவித்திரியுடன் டெய்சியையும் நடிக்க வைத்தனர்.
டெய்சிக்கு அப்படத்தில் ‘பூரி’ என்று பெயர். ஜெமினிகணேசனும், சாவித்திரியும் காதலர்கள். டெய்சி இராணி, ஜெமினிகணேசனை ‘அப்பா’ என்று அழைத்து அவரை பிரிய மறுப்பதால் ஜெமினி மீது சாவித்திரி சந்தேகப்படுவார்.
கடைசியில் உண்மை வெளிப்படும். டெய்சி இராணி வேறொரு காதல் ஜோடிக்கு பிறந்தவர் பெற்றோரை பிரிந்து, தாத்தாவிடம் வளர்வார். தாத்தா, ஜெமினிக்கணேசனை காட்டி ‘அதுதான் உன் அப்பா’ என்று கூறிவிடுவார்.
அதனால் ஜெமினியை ஓட்டிக்கொண்டு சுற்றிச் சுற்றி வருவார். அவர் அப்பா இல்லை என்று அறிந்ததும், அழுது கொண்டே வீட்டை விட்டு ஓடுவார். ஜெமினியும் சாவித்தியும் ஓடிச்சென்று டெய்சியை தங்கள் குழந்தையாக ஏற்றுக்கொள்வார்கள். டெய்சியின் இயல்பான நடிப்பு தமிழ் ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்தது.
திலீப்குமார், வைஜயந்திமாலா, டெய்சி இராணி நடித்த ‘நயாதவுர்’ என்ற படம். ‘பாட்டாளியின் சப்தம்’ என்ற பெயரில் தமிழில் ‘டப்’ செய்யப்பட்டு வெளிவந்தது. அந்தப் படமும், தமிழ் நாட்டில் வெற்றிகரமாக ஓடியது.
அசோக்குமார், மீனாகுமாரி, சுனில்தத் நடித்த ‘ஏக்-ஹி-ரஸ்தா’ என்ற இந்திப்படம், புரட்சிக்கரமான கதை அமைப்பைக் கொண்டதாகும். அந்தப் படத்தில் டெய்சியின் நடிப்பு கொடிகட்டிப் பறந்தது. டெய்சி முக்கிய வேடத்தில் நடித்த ‘ஜெய்லர்’ என்ற இந்திப்படம் ‘கைதி கண்ணாயிரம்’ என்ற பெயரில் தமிழில் தயாரிக்கப்பட்டது. தமிழ்ப் படத்தில் டெய்சி நடிக்கவில்லை.
டெய்சி இராணியின் தங்கை ஹனி இராணியும் குழந்தை நட்சத்திரமாக சில படங்களில் நடித்தார். டெய்சி சுமார் 125 படங்களில் நடித்தார். அதன்பின் 1971 இல் அவருக்குத் திருமணம் நடந்தது. கே.கே. சுக்லா என்ற கதை வசன ஆசிரியரை மணந்தார்.
இந்தத் தம்பதிகளுக்கு 3 குழந்தைகள். திருமணம் நடந்து சுமார் 20 ஆண்டுகளுக்குப் பின் சுக்லா இறந்து போனார்.
அதன்பின் சில தொலைக்காட்சி தொடர்களில் டெய்சி நடித்தார். நடிப்புப்பள்ளி ஒன்றையும் நடத்தினார். 56 வயதான டெய்சி இராணி இப்போது தொலைக்காட்சி தொடர்களையும் விளம்பரப் படங்களையும் தயாரித்து வருகிறார். குழந்தைகளுக்கு ஓவியங்கள் வரைய கற்றுத் தருகிறார்.

1969ல் தினகரன் நாடக விழாவில் நடித்தவர் கே. ஏ. ஜவாஹர்

கொழும்பில் வாழ்ந்த சிறந்த மேடை, திரைப்பட நடிகர் நீண்ட காலம் கலைத்துறையில் பணியாற்றிய இவருக்கு கிழக்கு பல்கலைக்கழகம் விருது வழங்கி கெளரவித்தது குறிப்பிடற்குரியது.
முதலாவது மேடை நாடகம்- 1964ல் புரட்சிமணி இயக்கிய ‘ஒருத்தி சொன்னாள்’ தொடர்ந்து பல மேடை நாடகங்களில் நடித்துள்ளார். 1969ல் தினகரன் நாடகவிழாவில் ‘வாடகைக்கு அறை’ ‘மனித தர்மம்’ ஆகிய நாடகங்களில் நடித்து சிறந்த துணைநடிகருக்கான விருதினைப் பெற்றார். 1974ல் தேசிய நாடகவிழாவில் சுஹேர் ஹமீட்டின் இயக்கத்தில் பிள்ளை பெற்ற ராசா ஒரு நாயை வளர்த்தார் என்ற நாடகத்தில் நடித்து சிறந்த நடிகர் விருதினைப் பெற்றவர்.
இலங்கை வானொலி முஸ்லிம் சேவையில் ஒலிபரப்பான நாடகங்களில் நடித்தவர்.
‘அபூநானா’ என்ற பாத்திரத்தில் இவர் நடித்த ஐந்து நகைச்சுவை நாடகங்கள் ஒலி நாடாக்களாக வெளிவந்துள்ளன. இவரது முதலாவது திரைப்படம் வி. பி. கணேசன் தயாரித்த ‘புதிய காற்று’ என்ற திரைப்படமாகும்.
தொடர்ந்து ‘வாடைக்காற்று’ திரைப்படத்தில் முக்கிய பாத்திரமொன்றில் நடித்து பாராட்டுப் பெற்றவர். ‘கோமாளிகள்’, ‘நான் உங்கள் தோழன்’, ‘ஏமாளிகள்’ ‘தென்றலும் புயலும்’, ‘தெய்வம் தந்த வீடு’, ‘ஷர்மிளாவின் இதய ராகம்’ போன்ற பல படங்களில் நடித்தவர்.

கண்டக்டராக வேலை பார்த்த ரஜனி இரண்டு ஆண்டு விடுமுறையில் படித்தார்

சினிமா உலகைச் சேர்ந்த நடிகர் - நடிகைகள், டைரக்டர்கள், தொழில் நுட்பக் கலைஞர்கள் அடிக்கடி பிலிம் இன்ஸ்டிடியூட்டுக்கு வந்து உரைநிகழ்த்துவார்கள். பயிற்சி பெறுகிறவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளிப்பார்கள். சந்தேகங்களைத் தீர்த்து வைப்பார்கள். பயிற்சி பெறுகிறவர்களை திரைப்படக் கல்லூரி நிர்வாகிகள் சினிமா ஸ்டூடியோக்களுக்கு அழைத்துச் சென்று அங்கு நடைபெறும் படப்பிடிப்புகளை பார்க்கச் செய்வார்கள்.
காலம் வெகு வேகமாக ஓடியது. பயிற்சி முடிய இன்னும் 3 மாதங்களே பாக்கி. அந்தக் காலகட்டம் பற்றி ரஜினி நினைவு கூருகிறார்.
‘நாங்கள் 36 பேரும் பிலிம் சேம்பர் அலுவலகம், சபையர், புளு டைமண்ட் தியேட்டர்கள், அமெரிக்க தூதரகம், சோவியத் கல்சுரல் சென்டர், டிரைவ்இன் ஓட்டல் இப்படி சுற்றிச் சுற்றி வந்தாலும் எங்களுக்கு ஒரு தனி உலகம் இருந்தது. அதுதான் கனவு உலகம்! சுவாரஸ்யமான வாழ்க்கை வித்தியாசமான வாழ்க்கை. பொறுப்பு இருந்தும் பொறுப்பில்லாத மாதிரியான போலி வாழ்க்கை, கனவு வாழ்க்கை. ஓ அந்தக் கனவில்தான் எத்தனை சுகம்!
காலை 10 மணிக்குக் கூருகிறோம், ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டு, ‘ஹலோ ஹாய்’ என்கிறோம். நகரில் ஓடும் சினிமாப் படங்களை எல்லாம் பார்க்கிறோம். வீட்டில் இருந்துவரும் பணத்தை ஜாலியாக செலவு செய்கிறோம்.
காலம் போவது தெரியவில்லை. இதோ, படிப்பு முடியப் போகிறது!
வெகு தூரத்தில் ஒரு சொர்க்கம் தெரிகிறது. அந்த சொர்க்கம் ஏது? அதுதான் சினிமா உலகம். அங்கே புகுந்துவிட வேண்டும். இன்னும் மூன்றே மாதம் படிப்பு முடிந்து விடும் அதன் பிறகு என்ன செய்வது? எப்படி சினிமா உலகில் சான்ஸ் பிடிப்பது? எல்லோருடைய முகத்திலும் எதிர்காலம் பற்றிய கவலை தெரிகிறது.
வீட்டில் சொன்னதைக் கேட்காமல் இன்ஸ்டிடியூட்டில் சேர்ந்தோம். பயிற்சி பெற்றோம். ஆனால் வேலைக்கு என்ன உத்திரவாதம்? மனம் குழம்புகிறது. இப்படியெல்லாம் ரஜினி எண்ணினாலும், அவருடைய உள்மனதில் தன்னம்பிக்கை சுடர்விட்டுப் பிரகாசித்துக் கொண்டிருந்தது. ‘வாழ்க்கையில் வெற்றி பெறுவோம்’ என்று அவருடைய இதயம் இடைவிடாமல் கூறிக்கொண்டிருந்தது.

எம். ஜி. ஆரின் பூர்வீகம்

அந்த சமயம் அவர்கள் இருவரும் அம்மா சத்திய தாயிடம் அண்டி பிழைக்க வந்த இடத்தை விட்டு விட்டு தங்களுடைய சொந்த இடத்திற்கே செல்வது மிகச் சிறந்தது ஆகும். அப்போது சத்திய தாய் சொல்லுகிறார், எனக்கு சொந்த இடம் என்பது கேரளா வடவனூர்தான், அந்த ஊர் வேண்டாம் என்று தான் சபதத்தோடு இங்கு வந்தோம்.
இப்போ அவர் இல்லாமல் வடவனூருக்கு எப்படி செல்வேன்? என்ற கேள்வி அவருக்கு எழுந்தது. தான் அந்த சமயத்தில் கும்ப கோணத்தில் இருக்கும் மதுரை பாய்ஸ் நாடக கம்பெனியில் வேலை செய்யும் நாராயணன் என்பவரின் ஞாபகம் வந்தது. இவர் சத்தியபாமாவுக்கு நெருங்கிய உறவினர். நாராயணனுக்கு சத்திய பாமா தன் குடும்ப நிலைமைகளை பற்றி விரிவாக கடிதம் போடுகிறார்.
அதன்படி அவருடைய அழைப்பின் படி நீங்கள் குழந்தைகளை அழைத்துக் கொண்டு கும்பகோணம் வந்து விடுங்கள் என்று சொல்லுகிறார், அதன்படி வேலுபிள்ளை, ராமுபிள்ளை உதவியுடன் சத்தியபாமா குழந்தைகளை அழைத்துக் கொண்டு கும்பகோணம் வந்து சேருகிறார்கள்.
சத்தியபாமா நாராயணனுடைய உதவியுடன் கும்பகோணத்தில் ஒரு சிறிய வீடு வாடகைக்கு பிடித்து வாழ்ந்து கொண்டு இருக்கும் நாட்களில் தன்னுடைய இரண்டு மகன்களையும் எப்படியாவது ஓரளவுக்கு படிக்க வைக்க வேண்டும் என்று நாராயணனிடம் சத்தியபாமா சொல்கின்றார். அதன்படி, இந்த இரண்டு பையன்களையும் கும்பகோணத்தில் உள்ள யானை அடி இடத்தில் உள்ள அரசாங்க பள்ளிக் கூடத்தில் சேர்த்து விட்டார்கள்.
மேலும் பையன்கள் படிப்பதற்கு சிலேட்டு புத்தகங்களையும் வாங்கி கொடுத்து விட்டு பிறகு இந்த பையன்களின் பள்ளி படிப்புக்கு ஆன செலவுகளுக்கும், சாப்பாட்டிற்கும் என்ன செய்வது என்ற பிரச்சினை உண்டாகிறது. இந்த நேரத்தில் சத்தியபாமா மிக மன தைரியத்தோடு நான் எங்கேயாவது வேலை செய்து என் பிள்ளைகளை காப்பாற்றுவேன் என்று நாராயணனிடம் செல்கிறார்.
அடுத்து சத்தியபாமா குடி இருக்கும் பகுதியில் அக்கம், பக்கத்தில் உள்ளவர்கள் இந்த அம்மாவினுடைய நிலைமைகளை பார்த்து இந்த அழகான பையன்களுடைய நிலைமைகளை அறிந்தும் சிலர் வேலைக்கு செல்ல உதவி செய்கிறார்கள். இந்த நிலையில் எம்.ஜி.ஆருக்கும் சக்கரபாணிக்கும் 3 வயதுதான் வித்தியாசம். சக்கரபாணி, தம்பியை ராமச்சந்திரா என்று அழைப்பார்.
பள்ளிக்கூடம் முடிந்து அவர்கள் வீட்டில் இருக்கும் நேரத்தில் இவர்களுடைய தந்தை பற்றி போதனை சொல்லுவார்கள். சத்தியம், தர்மம், நேர்மை, நீதி, பக்தி எல்லாம் நிறைந்தவர் உங்கள் தந்தை, நன்றாக படித்தவர், நீதிபதியாகவும் பேராசிரியராகவும் பணிபுரிந்து பலரிடம் மதிப்பும், மரியாதையும் பெற்றவர்.
அவர் போல் நீங்களும் நன்கு படித்து வாழ்ந்து காட்ட வேண்டும் இதைக் கேட்ட இருவரும் தன் தாயிடம் உறுதி மொழி எடுத்து கொள்கிறார்கள். தந்தை சொல்லுக்கு மந்திரம் இல்லை என்பார்கள். ஆனால் இவர்களுக்கு தந்தைக்கு பதிலாக தாய் சொல்கிறார் மந்திரத்தை. அந்த மந்திரத்தை மனதில் பதிவு செய்து கொண்டவர்தான் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். தன் தாயினுடைய உழைப்பால் மூன்று வேளையும் சாப்பிட்டு கொண்டு பள்ளிக்கூடம் சென்று வருகிறோம் என்ற எண்ணம் எம்.ஜி.ஆரு மனதுக்குள் நாளுக்கு நாள் வளரத் தொடங்கியது.




ஷெரில் பிரின்டோவை காதலிக்க போட்டி

ஷெரில் பிரின்டோவை காதலிக்க கருணாஸ், விவேக் போட்டியிடுவதுபோல் மச்சான் படத்துக்காக படமாக்கப்பட்டது என்றார் இயக்குனர் ஷக்தி சிதம்பரம். இது பற்றி அவர் கூறியதாவது; கருணாஸ், விவேக் இணைந்து நடிக்கும் படம் மச்சான். இருவரும் அவர்வர் பாணியில் கொமெடியில் கலக்குபவர்கள். இது இரட்டை காமெடி விருந்தாக இருக்கும். நண்பர்களுக்குள் மச்சான் என்ற அழைத்துக் கொள்வது சகஜம். அதுபோல் நெருங்கிய நண்பர்களாக ஆல் இன் ஆல் அழகுராஜா கேரக்டரில் கருணாஸ், அனிமல் ராஜா கேரக்டரில் விவேக் நடிக்கின்றனர். இவர் சினிமா ஷ¤ட்டிங்கிற்கு நாய்களை வாடகைக்கு விடும் வேடம் ஏற்றிருக்கிறார்.
நண்பர்களான கருணாஸ், விவேக் இருவரும் ஷெரில் பிரின்டோவை காதலிக்கின்றனர். அவரை கவர்வதற்காக பலவகையில் முயல்கின்றனர். என்னாச்சு ஏதாச்சு ஏதேதோ ஆயாச்சி என்ற டூயட் பாடலில் கருணாஸ், ஷெரில் பிரின்டோ ஆடிப்பாட விவேக்கும் கற்பனையில் மின்சார கனவு பிரபுதேவாவாகவும், ஷெரில் பிரின்டோவை காஜலாகவும் நினைத்து ஆடும் காட்சிகள் நகைச்சுவையாக படமாக்கப்பட்டுள்ளது. டி.பி.கஜேந்திரன், மயில்சாமி, வெ.ஆ. மூர்த்தி, பாண்டு, கோவைசரளா, வையாபுரி உள்ளிட்டோர் நடிக்கின்றனர். ஆஞ்சநேயலு ஒளிப்பதிவு, ஸ்ரீகாந்த் தேவா இசை, பாலமுருகன் தயாரிப்பு, இவ்வாறு இயக்குனர் ஷக்தி சிதம்பரம் கூறினார்.

சர்ச்சையில் சோனா

தேவையில்லாத சர்ச்சையில் சிக்க வைத்து என் வாழ்வை சிக்கலாக்கி விட்டார்கள் என்று சோனா கூறினார். அவர் மேலும் கூறியதாவது, பத்திரிகை ஒன்றில் என்னை பேட்டி ஒன்று எடுத்தார்கள். அவர்கள் ஜாலியாக கேட்ட கேள்விக்கு பதில் சொன்னேன். ஆனால் நான் சொல்லாததையும் எழுதி என்னை சிக்கலில் மாட்டிவிட்டார்கள்.
ஆண்களுக்கு எதிராக நான் தவறான கருத்தை சொன்னதாக எழுதிவிட்டார்கள். சில அமைப்புகள் எனக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தின. இதனால் எனது கடையை திறக்க முடியவில்லை. வியாபாரம் முடங்கி பல லட்சம் நஷ்டம் ஏற்பட்டு விட்டது. நான் புதிதாக வாடகைக்கு குடிபோக இருந்த வீட்டுக்காரர், அட்வான்சை திருப்பித் தந்து, வீடு தர மறுத்துவிட்டார்.
சில இடங்களில் எனது கடையின் கிளையை திறக்க ஏற்பாடு செய்திருந்தேன். அவை அனைத்தும் முடங்கிவிட்டது. எல்லாவற்றையும் விட, கடந்த சில நாட்களாக மனவேதனையில் தவிக்கிறேன். தேவையில்லாத சர்ச்சையில் என்னை சிக்க வைத்து, என் வாழ்வையே சிக்கலாக்கி விட்டார்கள். சொந்தமாக படம் தயாரித்து பல கோடியை இழந்து இப்போது தான் மீண்டும் நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறேன். எனது வளர்ச்சியை தடுக்கவும், என்னை அழிக்கவும் யாரோ திட்டமிட்டு சதி செய்கிறார்கள் என்று கருதுகிறேன்.
நான் எதையும் வெளிப்படையாக பேசுகிறவள். எனக்கு நண்பர்கள் அதிகம், எதிரிகளும் இருக்கிறார்கள் என்பதை இப்போது தான் உணர்கிறேன். அவதூறாக எழுதிய சம்பந்தப்பட்ட பத்திரிகை மீது வழக்கு தொடர்ந்திருக்கிறேன்.

கார்த்திகாவுக்கு திட்டு

கோ படத்திற்கு பிறகு அன்னக்கொடியும் கொடி வீரனும் என்ற படத்தில் மட்டுமே நடித்துள்ளார் கார்த்திகா. இதற்கிடையே அவரை தேடி சட்டம் ஒரு இருட்டறை மதகஜராஜா உட்பட சில படங்கள் வந்தன. ஆனால் மொத்த கதைகளையும் கேட்டு விட்டு, சில முன்னணி ஹிரோக்கள் சீன பை சீன கதையில் திருத்தம் சொல்வது போல், கார்த்திகாவும் தனது கெரக்டரில் திரத்தம் செய்தார். இதனால் கடுப்பான டைரக்டர்கள் அவரை கழட்டிவிட்டு விட்டு அவர் இடத்துக்கு மாற்று நடிகைகளை புச் பண்ணினர்.
இந்த செய்தி கோடம்பாக்கத்தில் காட்டுத் தீயாய் பரவியதைத் தொடர்ந்து, இப்போது எந்த பிரபல இயக்குனர்களும் கார்த்திகாவை அணுகவில்லை. அறிமுக இயக்குனர் ஒருவர் இயக்கும் டீல் என்ற படத்தில் மட்டுமே நடிக்கிறார்.
அதையடுத்து எந்தப்படத்திற்கான அறிகுறியும் இல்லை. இதனால் நடித்த ஒரு படம்தான். வெளியாகியிருக்கு. அதுக்குள்ள என்னை ரொம்பப் பெரிய நடிகையா நானே பீல் பண்ணிக்கிட்டு ஓவரா பேசிட்டேனோ? என்று இப்போது கண்ணாடி முன் நின்று கொண்டு தன்னைத்தானே திட்டித் தீர்த்திக் கொண்டிருக்கிறார். கார்க்திக்கா, அதோடு, அன்னக்கொடியும் கொடி வீரனும் படத்தின் ரீலிசுக்குப்பிறகு சில ரைக்டர்களை சந்தித்து அடக்க ஒடுக்கமாக சான்ஸ் கேட்கவும் முடிவு செய்திருக்கிறாராம்.

வித்யாபாலனை விமர்சிக்கும் காஜல் அகர்வால்

தமிழ், தெலுங்கில் முக்கிய நடிகையாக திகழும் காஜல் அகர்வால் தனது மனதளவில் ஒரு கொள்கையை கடைபிடித்து வருகிறார். அதாவது, எத்தனை பெரிய ஹீரோவின் படமென்றாலும், படுகவர்ச்சியாக நடிப்பதில்லை என்பதுதான் அது நல்ல சினிமா என்பது குடும்பத்தினர் அனைவரும் ஒன்றாக அமர்ந்து கண்டுகளிக்கக் கூடியதாக இருக்க வேண்டும். எனது படங்கள் அனைத்தும் அப்படிப்பட்டதாக இருக்க வேண்டும் என்றுதான் நான் ஆசைப்படுகிறேன் என்று சொல்லும் காஜல், வித்யாபாலன் நடித்த தி தாட்டி பிக்சர்ஸ் படத்தின் ரீமேக்கில் நடிக்க தனக்கு வாய்ப்பு வந்தபோது ஆபாச காட்சிகளில் நடிக்க வேண்டியதிருக்கும என்பதற்காகவே அந்தப் படத்தை தவிர்ந்து விட்டேன் என்கிறார்.
மேலும் எனக்கு அப்படத்தில் நடித்த வித்யாபாலன் மீது நிறைய மரியாதை இருந்தது. ஆனால் ஒரு பெரிய, நடிகையான அவர் போய் இந்த மாதிரியான கதைகளில் நடிப்பதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை அதனால் தி தர்ட்டி பிக்சர்ஸ் படத்தில் நடித்ததில் இருந்து எனக்கு அவர் மீதிருந்த தனிப்பட்ட மரியாதை என்பது படிப்படியாக குறைந்து வருகிறது என்கிறார் காஜல்.

மீண்டும் வசுந்தரா தாஸ்

வசுந்தரா தாஸை நினைவிருக்கிறதா? ஒரு பாடகியாக அறிமுகமாகி, தொடர்ந்து கமலின் ஹேராமில் நாயகியானவர்.
அஜித்துக்கு ஜோடியாக பின்னர் சிட்டிசனில் நடித்தார். குஷ்பு ரேஞ்சுக்கு தமிழில் ஒரு ரவுண்ட் வருவார் என எதிர்பார்க்கப்பட்டார். வாய்ப்புகளும் குவிந்தன. அவரே வழக்கம் போல, இந்தியில் நடிக்க ஆர்வத்துடன் கிளம்பினார். மான்சூன் வெட்டிங்கில் நடித்தார். ஆனால் திடீரென காணாமல் போனார். பெங்களூரை விட்டு மும்பைக்கே நிரந்தரமாகக் குடியேறிய வசுந்தரா. ஒரு மியூசிக்கில் பேண்டில் பாடிக்கொண்டிருந்தார்.
குரல் பாதிக்கப்பட்டதால் பாடுவதும் நின்றுபோனது இப்போது நான்கைந்தாண்டுகள் கழித்து பின் நதிகள் நனைவதில்லை என்ற படம் மூலம் மீண்டும் பாடகியாகியுள்ளார்.
இந்தப் படத்துக்கு இசை செளந்தர்யன் கதை, வசனம் எழுதி நாஞ்சில் பி. சி. அன்பழகன் இயக்குகிறார்.





Thursday, November 15, 2012

நிலவு தேன் இறைக்கும் நேரத்திலே -புது உறவு பூத்து நிற்கும் நாணத்திலே!

தண்மையான அதாவது குளுமையானஇரவு நேரத்திலே, இனிமையான நேரத்திலே, நிலவு தேன் இறைக்கும் நேரத்திலே, அவளின் ‘தேனிலவு’ நேரத்தில் (அவள் முதலாம் இரவில் புது உறவை சந்திக்கச் செல்லும் நாள்)
தாழை மரம் என்றால் தாழ் விட்டிருக்கும் மரம். ஒரு பெண் குலம் வழங்க அந்த தாழை மரம் நீர் (பனி பொழிகிறது) தெளித்து (பன்னீர் தெளித்து) அவளை மணவறைக்குள் வரவேற்கிறது. அவள் குலம் தழைத்து வளர வாழ்த்துகிறது.
இப்படிப் பட்ட சூழ்நிலையில் அந்த கன்னிப் பெண்... செல்கிறாள். எப்படிச் செல்கிறாள்? நடை பயின்று செல்கிறாள். நடந்து செல்லவில்லை.... நடைபயின்று என்றால்... குழந்தை எப்படி மெதுவாய், தட்டுத் தடுமாறி, யோசித்து, தயங்கி, அடிமேல் அடி வைத்து நடக்குமோ அதற்குப் பெயர் ‘நடை பயில்’ தல். அப்படி நடை பயின்றபடி செல்கிறாள். சென்றவள் கணவனை/காதலனைக் கண்டு நாணி நிற்கிறாள்.
புதுமணப் பெண்ணிற்கு மனநிலை எப்படி அச்சமும், கலக்கமும், மகிழ்ச்சியும், மயக்கமும் கலந்து இருக்குமோ, அப்படியெல்லாம் அவள் மனமும் ஒவ்வொரு உணர்ச்சியில் தடுமாறுகிறது.
நெஞ்சமதில் அலை எழும்ப, நெஞ்சத்தில் அலை எழும்ப, எப்படிப்பட்ட அலை என்பது அவரவர் மனநிலையைப் பொறுத்தது. அது பய அலையாக மயக்க அலையாக தயக்க அலையாக என பலவகைப் படலாம்.
நெஞ்சத்தில் ஏதேதோ எண்ண அலைகள் எழும்ப தஞ்சம் புகுந்த அந்த மலர் (மங்கை) அடி கலங்க மெதுவாய், நடுங்க வருகிறாள். அல்லது தஞ்ச மலரடி அதாவது தஞ்சம் புகுந்த அவளின் மலரடி (மலர் போன்ற பாதம்) கலங்க நடந்து வருகிறாள். (எப்படியும் அவள் அவனிடம் தஞ்சம் புகுந்து விட்டாளாம்)
பயந்து தயங்கி இடை துவண்டு (பயத்தால் இடை துவண்டு) வருகிறாள். இடையை இப்படியும் அப்படியாக ஆட்டி வருகிறாள் என்பது இன்னொரு பொருள். வந்தவள் தன் பயத்தைப் போக்கிக்கொள்ள அவள் காதலனின் அன்பை, காதலை நினைந்து தன்னை சற்றே அமைதிப் படுத்தி நின்றாள்.
மனம் என்னவோ விண்ணளந்து, பறந்து மகிழ்ந்து, சிறகடித்து, கற்பனையில் மிதக்க,
அவள் கண்கள் மட்டும் மண்ணை நோக்கி தாழ்த்திருக்கிறது. அவள் மண்ணளந்து நடக்கிறாள். மண்ணளக்க வேகமாக நடந்தால் முடியாது. அடிமேல் அடிவைத்து மெதுவாக நடந்தால் தான் மண்ணை அளக்க முடியும். அப்படி அவள் அடிமேல் அடிவைத்து, நடந்து (அடி என்பது அளவுகோல்+பாதம் என்று இரு பொருள் கொள்ளலாம்) நடுங்கியபடி, பயந்து, தயங்கி வருகிறாள்.
அவள் பொன்னை ஒத்த மேனி, பொன்னை சரியாக அளவாக அளந்து செதுக்கிய மேனி மெல்ல நடுங்கியபடி வருகிறாள். வந்த அவள், அவளை (அவள்= பூவை) பூவையை அளந்த அவனின் முகத்தைக் கண்டு நின்றாள்.
பூ போன்ற அவளை அளந்த அவன் என்றும் பொருள் கொள்ளலாம். இங்கு அளப்பது என்பது எடைபோடுவது, அவளை அவள் மனக்கலக்கத்தை, பயத்தை, ஆசையை, அன்பை, அழகை எடைபோடும் அவனின் முகம் கண்டு நின்றாள்.
ஒருவழியாக பலவிதமான எண்ண அலைகள் மோத அறைக்குள் நுழைந்து அவனையும் கண்டுவிட்டாள்... இனி, அந்த அறைக்குள் அவளை பொட்டும் பூவும் அலங்காரங்களும் வரவேற்கின்றன.
பொட்டும் பூவுமாக அவள் மெல்ல வருகிறாள் என்று வரும். அல்லது ‘பூவிருக்க’ என்றால் கொலுவிருக்க, வீற்றிருக்க என்று இன்னொரு பொருளும் உண்டு. எனின், அவன் பூவிருக்கிறான் (வீற்றிருக்கிறான்).
பூவைக்காக காத்திருக்கிறான் என்றும் வரும். எங்கும் அலங்காரங்கள் தொங்க, பூத்தமலர்களின் மணம் அறையெங்கும் பரவியிருக்கிறது. பூத்த அவனின் அல்லது அவளின் மணமும் சேர்கிறது. இனி பயமும் அச்சமும் விலக, மயக்கம் மேலோங்குகிறதாம். அதனால் அவள் ஒருவழியாக கட்டிலுக்கு அருகில் சென்றுவிடுகிறாள். அவனின் இரு கண்விழியில் காதல் எனும்
கவிதை கண்டு நின்றாள்.
அவனின் இரு கண்விழியையே கவிதையாய்
கண்டு நின்றாள்.
அவன் இரு கண்விழியில் தன் நிழல்
இங்கு தன்னைக் கவிதையாய் வரித்துக் கொள்கிறாள்
கண்டு நின்றாள்.
என்று அவரவர் கற்பனைக்கேற்ப எப்படி
வேண்டுமென்றாலும் பொருள் கொண்டு மகிழலாம்.


தண்ணிலவு தேன் இறைக்க...

தண்ணிலவு தேன் இறைக்க
தாழைமரம் நீர் தெளிக்க
கன்னி மகள் நடை பயின்று சென்றாள்
இளம் காதலனைக் கண்டு நாணி நின்றாள்
நாணி நின்றாள்
நெஞ்சமதில் அலை எழும்ப
தஞ்சமலர் அடி கலங்க
அஞ்சி அஞ்சி இடை துவள வந்தாள் அங்கு
அன்பருள்ளம் தனை நினைந்து நின்றாள்
நினைந்து நின்றாள்.
விண்ணளந்த மனமிருக்க
மண்ணளந்த அடியெடுக்க
பொன்னளந்த உடல் நடுங்க வந்தாள் ஒரு
பூவளந்த முகத்தைக் கண்டு நின்றாள்
கண்டு நின்றாள்
பொட்டிருக்க பூவிருக்க
பூத்தமலர் மணமிருக்க
கட்டிலுக்கு மிக நெருங்கி வந்தாள் இரு
கண்விழியில் கவிதை கண்டு நின்றாள்.

நான் உங்கள் தோழன்

இலங்கையில் அதிகமான தமிழ்த் திரைப்படங்களை தயாரித்தவர் வி.பி. கணேசன்
நான் உங்கள் தோழன் 1978 ஆம் ஆண்டு வெளிவந்த ஈழத்து தமிழ்த் திரைப்படம் 1978 ஆம் ஆண்டில் மொத்தம் 6 ஈழத்துத் தமிழ்த் திரைப்படங்கள் வெளியிடப்பட்டமை இலங்கை தமிழ் திரைப்பட வரலாற்றில் ஒரு சாதனை ஆகும். அவற்றுள் முதலாவது திரைப்படந்தான் நான் உங்கள் தோழன். தொழிற்சங்கத் தலைவர்களில் ஒருவரான வி.பி. கணேசன் தனது முதலாவது படமான புதிய காற்றுக்கு கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து எடுத்த திரைப்படம்.
அவரே இந்த முறையும் பிரதான பாத்திரத்தில் நடித்தார். சுபாஷினி, கே.ஏ. ஜவாஹர், எஸ். ராம்தாஸ், எம்.எம்.ஏ. லத்தீப், ருக்மணி தேவி போன்ற பலரை தன்னுடன் நடிக்கவைத்தார்.
எஸ்.வி. சந்திரன் இத்திரைப்படத்தை இயக்கினார். அவரே படத்தொகுப்பாளரும் கூட எம்.கே. ரொக்சாமி இசையமைக்க, சாந்தி, முருகவேள், சாது ஆகியோர் இயற்றிய பாடல்களை வி. முத்தழகு, கலாவதி, கே.எஸ். பாலச்சந்திரன் (மெல்லிசைப்பாடகர்) (சுண்டிக்குளி பாலச்சந்திரன்) மொஹிதீன் பெக். கனகாம்பாள் என்பவர்கள் பாடினார்கள்.
கொழும்பு, மலையகம் என்பவற்றோடு யாழ்ப்பாணத்து நகர வீதிகளிலும், மட்டக்களப்பு மாமாங்கத் திருவிழாவிலும் கூட படப்பிடிப்பு நடத்தினார்கள்.
வி.பி. கணேசன் ஒருவரே இலங்கையில் அதிகம் (மூன்று) தமிழ்த் திரைப்படங்களை தயாரித்தவர். அவர் மூன்றிலும் வெவ்வேறு இயக்குனர்கள், இசையமைப்பாளர்கள், கதாநாயகிகள், துணைக் கதாநாயகர்கள் என்று சந்தர்ப்பம் கொடுத்தார்.
அக்கால இந்தியப் படங்களில் சில வேளைகளில் அரசியல் தலைவர்களின் மகாநாடுகள், இறுதி ஊர்வலங்கள் என்பனவற்றை இணைத்துக் கொள்வதைப் போல இத்திரைப்படத்தில் எஸ்.ஜே.வி. செல்வநாயகத்தின் இறுதி ஊர்வலம் இணைக்கப்பட்டது.

கண்டக்டராக வேலை பார்த்த ரஜனி இரண்டு ஆண்டு விடுமுறையில் படித்தார்

பெங்களூரில் பஸ் கண்டக்டராக வேலை பார்த்த ரஜினிகாந்த், நீண்ட விடுமுறையில் சென்னைக்கு வந்து திரைப்படக் கல்லூரியில் சேர்ந்து 2 ஆண்டுகள் நடிப்புப் பயிற்சி பெற்றார்.
நடிப்பு, டைரக்ஷன், ஒளிப்பதிவு, எடிட்டிங், திரைக்கதை, வசனம் எழுதுதல் ஆகியவற்றில் பயிற்சி அளிப்பதற்காக முதன் முதலாக புனேயில் திரைப்படக் கல்லூரியை மத்திய அரசு தொடங்கியது.
அதேபோல் சென்னையில் ‘பிலிம் இன்ஸ்டிடியூட்’ 1973 ல் தொடங்கப்பட்டது. இதற்கு தலைவராக பி. நாகிரெட்டியும், நிர்வாகி (கரஸ்பான்டெண்ட்) ஆக டி. வி. எஸ். ராஜாவும் இருந்தனர். ராஜராம்தாஸ் முதல்வராக இருந்தார்.
இந்த பிலிம் ‘இன்ஸ்டிடியூட்’ விளம்பரம் ஒருநாள் பத்திரிகைகளில் வெளியாயிற்று. நடிப்பு, டைரக்க்ஷன், எடிட்டிங், ஒளிப்பதிவு முதலியவற்றில் பயிற்சி பெற விண்ணப்பம் அனுப்பலாம் என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த விளம்பரத்தை ரஜினி பார்த்தார். ‘நடிப்பு பயிற்சி பெற்றால், சினிமாவில் சுலபமாக நுழைந்து விடலாம்’ என்று நினைத்தார். விண்ணப்பம் அனுப்பினார். சில நாட்களில் நேர்காணலுக்கு வருமாறு கடிதம் வந்தது.
நண்பர்களிடம் விடைபெற்றுக் கொண்டு, சென்னைக்கு ரயில் ஏறினார். குறிப்பிட்ட நேரத்தில் நேர்காணலுக்கு பிலிம் ‘இன்ஸ்டிடியூட்’டுக்குச் சென்றார். அங்கு சினிமா பற்றி பல கேள்விகள் கேட்டனர். கேள்விகளுக்கு தன்னம்பிக்கையுடனும் புத்திசாலித்தனத்துடனும் பதில் கூறினார்.
கேள்விகளை அவர் எதிர்கொண்ட முறை, ஸ்டைலாக பதில் சொன்ன விதம், தேர்வு செய்யும் அதிகாரிகளைக் கவர்ந்தன. நடிப்பு பயிற்சி பெற ரஜினியை அவர்கள் தேர்வு செய்தனர்.
ரஜினிக்கு மகிழ்ச்சி தாங்கவில்லை. பெங்களூருக்கு திரும்பிச் சென்றார். தந்தையிடமும், அண்ணன்களிடமும் விஷயத்தைச் சொன்னார். ரஜினி நடிப்புப் பயிற்சி பெறுவதில், தந்தைக்கு விருப்பம் இல்லை. அண்ணன்கள் அரைகுறை மனதுடன் சம்மதித்தார்கள். ‘கண்டர்டர் வேலையை விட்டு விடாதே! நீண்ட விடுமுறை எடுத்துக்கொண்டு, நடிப்புப் பயிற்சிக்கு போ!’ என்றார்கள்.
ரஜினியின் நண்பர்கள் மத்தியில் உற்சாகம் கரைபுரண்டு ஓடியது. ‘எதிர்காலத்தில் பெரிய நடிகனாக வருவாய்!’ என்று வாழ்த்தினார்கள். ரயில் நிலையத்துக்குப் பெரும் திரளாக வந்து வழியனுப்பினார்கள்.
பிலிம் இன்ஸ்டிடியூட்டில் நடிப்புப் பயிற்சி பெறுவதற்காக ரஜினி உட்பட மொத்தம் 36 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டிருந்தனர்.
சினிமாவில் எப்படி நடிக்க வேண்டும். எப்படி வசனம் பேசவேண்டும் என்றெல்லாம் அங்கு பயிற்சி அளித்தார்கள்.
உலகப் புகழ் பெற்ற திரைப்படங்களை எல்லாம் அங்கு போட்டுக்காட்டுவார்கள். சார்ல்ஸ் லாப்டன், கிளார்க் கேபிள், மார்லன் பிராண்டோ, கிரிகிரிபெக் முதலான நடிகர்கள் நடித்த படங்களை எல்லாம் ரஜினி பார்த்தார். நடிப்பின் பல்வேறு பரிமாணங்களை அறிந்து கொண்டார்.

40 வயதுக்கு மேற்பட்டோர் மீது மோகம்

சம வயதுடையவர்களுடன் நடிக்காமல் 40 வயதான ஹீரோக்களுடன் நடிப்பது ஏன் என்றதற்கு பதில் அளித்தார் அசின். கோலிவுட் படங்களிலிருந்து பொலிவுட்டுக்கு தாவினார் 27 வயதாகும் அசின். அங்கு 40 வயதை கடந்த ஆமிர்கான், சல்மான், அக்ஷய்குமார் போன்ற ஹீரோக்களுடன் நடித்து வருகிறார். சம வயதுள்ள ஷாஹித் கபூருடன் இந்தியில் ரீமேக் ஆகும் ‘வேட்டை’ படத்தில் நடிக்க வந்த வாய்ப்பை ஏற்கவில்லை.
இதுபற்றி அசினிடம் கேட்டபோது அவர் கூறியதாவது: 40 வயதை தாண்டிய நடிகர்கள் என்பதைவிட இந்தியில் சுப்பர் ஸ்டார்களாக விளங்கும் நடிகர்களுடன் எனது பொலிவுட் பட வாழ்க்கையை தொடங்கினேன் என்பதுதான் சரி.
அதுதான் எனது வெற்றிக்கு காரணமாக இருந்தது.
அதேநேரம் சம வயதுள்ள நடிகர்களுடன் நடிக்க விரும்புகிறேன். ஆனால் இவர்களுடன் ஷ¥ட்டிங் தளத்தில் பழகும் தன்மை இதுவரை நான் பழகிய தன்மையிலிருந்து மாறுபட்டிருக்கும்.
தென்னிந்திய படங்களிலிருந்து வந்த ஹீரோயின்கள் பொலிவுட்டில் பெரிய அளவில் வெற்றி பெறாதது பற்றி கேட்கிறார்கள். ஸ்ரீதேவிக்கு பிறகு தென்னிந்திய நடிகைகள் யாராலும் பொலிவுட்டில் வெற்றி பெற முடியவில்லை.
இங்குள்ள கலாசாரத்தை புரிந்தவர்களால் மட்டுமே வெற்றிபெற முடியும். அதை என்னால் செய்ய முடிந்ததுதான் வெற்றிக்கு காரணம். என்னைப் பொறுத்தவரை சில கட்டுப்பாடுகள் வைத்திருக்கிறேன். யாருடனும் டேட்டிங் செய்வதில்லை என்பது அதில் முக்கியமானது. இவ்வாறு அசின் கூறினார்.

யாமி

,யக்குனர் கெளதம் மேனன் தயாரிக்கும் படம் தமிழ். செல்வனும் தனியார் அஞ்சலும் பிரேம்சாய் இயக்குகிறார்.
ஜெய் ஹீரோ அவருக்கு ஜோடியாக நடிக்க இந்தி நடிகை யாமி கெளதம் ஒப்பந்தம் செய்யப்பட இருந்தார்.
ஆனால் அப்போது இந்தியில் பிசியாய் இருந்த யாமியால் இந்தப் படத்துக்கு திகதி கொடுக்க முடியவில்லை அதன்பிறகு அனன்யா நடிப்பதாக இருந்தது. ஆனால் படம், தமிழ், தெலுங்கு மொழியில் தயாராவதால் அனன்யா அதற்கு பொருத்தமாக இருக்க மாட்டார் என்று கெளதம் மேனன் கூறியதாக தெரிகிறது.
இதைத் தொடர்ந்து அஞ்சலி, சமந்தாவிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த நிலையில் யாமியே வலிய வந்து படத்தில் நடிக்க திகதி தருகிறேன் என்று ஒப்புக் கொண்டிருக்கிறார். இதனால் இம்மாத இறுதியில் படப்பிடிப்பை தொடங்குகின்றனர். அரவான் படத்துக்கு பிறகு பாடகர் கார்த்திக் இசை அமைக்கிறார்.
ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவு செய்கிறார். சந்தானம், வி.டி.வி. கணேஷ் ஆகியோரும் நடிக்கிறாரர்கள், காதல், நகைச்சுவை கலந்த படம் என்கிறார்கள்.



அழகை பேண ஆயுர்வேத சிகிச்சை

சினிமா களத்தில் இரண்டாவது இன்னிங்சில் இறங்கியிருக்கும் நயன்தாராவுக்கு இன்னும் அதே மெளசு இருக்கத்தான் செய்கிறது. மற்ற முன்னணி நடிகைகளிடம் இல்லாத அப்படி என்னதான் அதிசயம் நயன்தாராவிடம் இருக்கிறதோ தெரியவில்லை.
ஒரு படத்திலாவது அவருடன் நெருக்கமாக நடித்துவிட வேண்டும் என்று பல நடிகர்கள் துடித்துக் கொண்டிருக்கிறார்கள். அதனால் மெளசை அப்படியே காப்பாற்ற வேண்டும் என்று நினைக்கும் நயன்தாரா, மாதம் ஒரு முறை கேரளத்துக்கு சென்று உடம்பு இளமையாகவும், தோல் மினுமினுப்பாகவும் இருப்பதற்காக சில ஆயுர்வேத சிகிச்சை முறைகளை எடுத்து வருகிறாராம்.
பிரபுதேவாவைவிட்டு பிரிந்தபோது அழுது வடிந்த முகத்துடனும், சோர்வடைந்த உடல் கட்டுடனும் இருந்த நயன், இப்போது முகப்பொலிவுடனும், செழிப்பான தேகத்துடனும் பளபளவென்று இருக்கிறார் என்றால் அதற்கு இந்த சிகிச்சைதான் காரணமாம்.
ஆனால் இந்த அழகை தக்க வைத்துக்கொள்ள வேண்டுமென்றால், அந்த சிகிச்சைக்காக ஒவ்வொரு முறையும் நான்கு நாட்கள் வீதம் செலவிட வேண்டுமாம். அதனால் தான் நடிக்கும் எந்தப் படமாக இருந்தாலும், மாதம் ஒரு 4 நாட்கள் தனக்கு கட்டாய லீவு வேண்டும் என்பதை முன்கூட்டியே சொல்லிவிடுகிறார் நயன்.

ரிச்சாவுக்கு மிரட்டல்

மணம் புரிந்து கொள்ள
திருமணம் செய்துகொள்ள வற்புறுத்தி ரிச்சாவை அவரது காதலரும் நடிகரும் மிரட்டுவதாக கோடம்பாக்கத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ‘ஒஸ்தி, மயக்கம் என்ன படங்களில் நடித்தவர் ரிச்சா. கார்த்தி நடிக்கும் ‘பிரியாணி’ படத்தில் கெரக்டர் பிடிக்கவில்லையென்று சமீபத்தில் வெளியேறினார்.
இந்நிலையில் தன்னை மணந்து கொள்ளும்படி ரிச்சாவை அவரது போய் பிரெண்டும் போட்டோகிராபருமான சுந்தர் ராம் மிரட்டுவதாக தகவல் வெளியாகி உள்ளது. ‘மயக்கம் என்ன’ படத்தில் ரிச்சா நடித்தார். அதே படத்தில் தனுஷின் நண்பராகவும், ரிச்சாவின் காதலனாகவும் சுந்தர் ராம் நடித்திருந்தார்.
இவர்களுக்குள் மலர்ந்த நட்பு காதலாக மாறியதாக கூறப்படுகிறது. அதன் அடையாளமாக 7 இலட்சம் ரூபாய் மதிப்புள்ள கெமரா ஒன்றை சுந்தர் ராமுக்கு ரிச்சா பரிசளித்தாராம். சமீபகாலமாக ரிச்சா படங்களில் கவனம்
செலுத்த ஆரம்பித்திருக்கிறார். வெங்கட் பிரபுவின் ‘பிரியாணி’ படத்தில் கெரக்டர் பிடிக்கவில்லை என்று வெளியேறிய ரிச்சா தெலுங்கில் அல்லு அர்ஜுன் படத்திலும் நடிக்க மறுத்ததாக கூறப்படுகிறது. ஆனால் வேறு இரண்டு தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார். திருமணத்துக்கு சம்மதிக்காவிட்டால் தற்கொலை செய்துகொள்வேன் என்று சுந்தர் மிரட்டினாராம்.
மேலும் கைகளில் அறுத்துக்கொண்டு பிளாக் மெயில் செய்ததுடன் அன்பாக ரிச்சா வாங்கி கொடுத்த கெமராவையும் அவர் உடைத்ததாக கூறப்படுகிறது. இதனால் கோலிவுட் டோலிவுட்டில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதுபற்றி ரிச்சாவின் மெனேஜர் கல்யாண் கூறும் போது ‘ரிச்சாவின் இமேஜை கெடுக்க சிலர் இதுபோன்ற வநத்தியை கிளப்பிவிட்டிருக்கிறார்கள். ரிச்சாவும், சுந்தர் ராமும் சில காலமாக தொடர்பில் இல்லாமல் இருக்கிறார்கள்.
அப்படி இருக்கும்போது கல்யாணம் செய்துகொள்ள அவர் எப்படி மிரட்டுவார்? அவர்கள் இருவரும் நல்ல நண்பர்கள். இதுதவிர வேறு எந்த உறவும் இல்லை என்றார். சுந்தர் ராம் கூறும் போது ‘இது எல்லாம் வநத்தி. நாங்கள் இருவரும் எப்போதோ பிரிந்துவிட்டோம் என்றார்.

வடிவேலுக்கு ஆப்பு

கடந்த தேர்தலுக்குப்பிறகு சினிமா வாய்ப்புகளே இல்லாமல் வீடே கதியென்று கிடக்கிறார் வடிவேலு. மீண்டும் வடிவேலுவுக்கு சான்ஸ் கொடுத்தால் தங்களுக்கு எதேனும் பிரச்சினைகள் வருமோ என்று இயக்குனர்களும் தயங்கி வருகிறார்கள். ஆனால் இந்த நிலையிலும், சிம்புதேவன் இயக்கும் இம்சை அரசன் இரண்டாம் பாகம் உட்பட சில படங்களில் தான் கதாநாயகனாக மீண்டும் பிரவேசிக்கப்போவதாக அவ்வப்போது செய்திகள் வெளியிட்டு தன்னை சினிமா உலகத்தினருக்கும், ரசிகர்களுக்கும் நினைவுபடுத்தி வருகிறார் வடிவேலு.
இந்த நிலையில் தேமுதிகவில் இருந்து விலகி அ.தி.மு.க.வில் இணைந்துள்ள மைக்கேல் ராயப்பன் தயாரிக்கும் பட்டத்து யானை படத்தின் மூலம் ரீ.என்ட்ரி ஆக முயற்சி எடுத்திருக்கிறார் வடிவேலு. ஆனால் கடைசி நேரத்தில் அப்படத்தில் நாயகனாக நடிக்கும் விஷால், தனது நண்பரான சந்தானத்தை உள்ளே இழுத்து விட்டாராம்.
வடிவேலு அப்படத்தில் நடிக்க முயற்சி எடுக்கிறார் என்பதை சிலர் சொன்ன போதும், வடிவேலுவுக்காக எனக்கு வந்த வாய்ப்பை விட நான் தயாராக இல்லை. அப்படி நான் விட்டால் எனது நண்பர் விஷால் என்னை கோபித்துக்கொள்வார். விஷாலா? வடிவேலா? என்று பார்த்தால் எனக்கு விஷால்தான் முக்கியம் என்று நெத்தியடியாக சொல்லிவிட்டாராம் சந்தானம்.

ஒரு முத்தத்துக்கு ரூ.5 இலட்சம்

சேட்டை என்று தலைப்பு வைத்ததால்தானோ என்னவோ அந்தப் படத்தில் நடிக்கும் அஞ்சலி ஹன்சிகா இருவரும் ஆரம்பத்திலிருந்தே ஏதாவது சேட்டைத் தனம் செய்து கொண்டேயிருக்கிறார்களாம். ஆரம்பத்தில் டெல்லி பெல்லி படத்தில் இருந்தது. போல் வல்கரான வசனங்களை நான் பேச மாட்டேன் என்று அடம்பிடித்தார் ஹன்சிகா. இதனால் சில வார்த்தைகளை அவருக்காக திருத்தம் செய்தனர்.
அதையடுத்து முத்தக் காட்சியில் நடிக்கவே முடியாது என்று கடும் சேட்டை செய்திருக்கிறார் அஞ்சலி. அதிலும் அவரது தாய்குலம் புகுந்து என் மகளாவது? முத்தம் கொடுப்பதாவது? இப்படியொரு படமே எங்களுக்குத் தேவையில்லை என்று சொல்லி ஸ்பாட்டில் இருந்தே அஞ்சலியை இழுத்துச் சென்று விட்டாராம். இந்தப் பிரச்சினை காரணமாக சில நாட்கள்
படப்பிடிப்பே தடைப்பட்டிருக்கிறது. என்றாலும் அப்படியொரு காட்சி படத்திற்கு அவசியம் தேவை என்று ஒரு வழியாக அஞ்சலியிடம் விளக்கி, அவரது தாய்க்குலத்தையும் சம்மதிக்க வைத்து ஆர்யா அஞ்சலியின் உதட்டு முத்தக்காட்சியை படமாக்கியிருக்கிறார்கள்.
ஆனால் இந்த ஒரு காட்சியை வைத்தே எக்ஸ்ட்ராவாக 5 லட்சத்தை கறந்து விட்டாராம் தாய்குலம். செய்தியறிந்து அடி ஆத்தி, அப்படின்னா அஞ்சலியோடு ஒரு இச்சியோட ரேட்டு 5 லட்சமா? ரொம்ப ஜாஸ்தியா இருக்குதே அம்மணி என்று அடுத்தடுத்து அஞ்சலியை புக்பண்ணவிருக்கும் படாதிபதிகள் கரண்ட் கம்பத்தில் கை வைத்தது போல் ஷொக்கில் நிற்கின்றனர்.






Wednesday, November 7, 2012

சுப்பர் சிங்கர் ஆஜித்

ஆஜித்தின் சொந்த ஊர் திருச்சி. ஆஜித்தை வளர்த்ததும் அவனுக்கு குருவாக இருந்ததும் அவனோட பெரியம்மா சமீதாதான். ஆஜித்தோட அம்மா, அப்பா சபானா- நிஷழருக்கு கல்யாணமாகி 10 வருடம் கழிந்து பிறந்த குழந்தை இவன். 6 மாசக் குழந்தையா இருக்கிறப்பவே டி.வியில் சினிமா பாட்டு கேட்டா அதை மழலை பாஷையில் குதப்புவானாம்.
இது கடவுள் வரம்னு அவங்க குடும்பம் உற்சாகப்படுத்தியிருக்கு, கே. கே. நகரில் 4000 குழந்தைகள் படிக்கிற ஆல்ஃபா பள்ளிக்கூடத்தில்தான் ஆஜித்தும் படித்தான். அவங்க பெரியம்மா அங்கேதான் ஆசிரியராக இருந்தார்.
அதனால் அவர்தான் அவனோட இசை ஆர்வத்தை கண்டுபிடித்து வளர்த்தவர். யு. கே. ஜி படிக்கும் போதே வந்தே மாதரம் பாட்டை பாடி, குட்டி ஏ. ஆர். ரகுமான்னு பெயர் எடுத்தவன். அப்ப அதைக் கிண்டல் கூட பண்ணினாங்க. ஆனா இப்ப 11 வயசிலே அதே ஏ. ஆர். ரகுமான் கையால பரிசு வாங்கி சாதித்திருக்கார் என்றார் அவரது அம்மா

பிரகதிக்கு சினிமா வாய்ப்பு

விஜய் தொலைகாட்சியில் ஒளிபரப்பான சுப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் இறுதிப்போட்டிவரை சென்று இரண்டாவது இடம் பிடித்த பிரகதிக்கு பாலாவின் பரதேசி படத்தில் பாட்டுப் பாட வாய்ப்பு கிடைத்துள்ளது.
அதர்வா, தன்ஷிகா, வேதிகா நடிக்கும் பரதேசி படத்திற்காக ஜி.வி. பிரகாஷ் இசை அமைத்து வருகிறார். இப்படத்தில் வரும் கடைசி பாடலை வித்தியாசமாகவும் புதிய குரலிலும் இசையமைக்க வேண்டும் என்று விரும்பிய ஜி.வி. பிரகாஷ் சுப்பர் சிங்கர் ஜூனியரில் வித்தியாசமான குரலில் பாடி அனைவரையும் கவர்ந்த பிரகதியை தேர்ந்தெடுத்திருக்கிறார். விரைவில் இப்படத்தின் இசை வெளியிடப்பட உள்ளது.
சுப்பர் சிங்கர் ஜூனியரில் இறுதிப்போட்டியில் பாடுவதற்காக நடுவர்கள் மூலம் நேரடியாக தேர்வு செய்யப்பட்டவர் பிரகதி. அமெரிக்காவில் வசித்துவரும் பிரகதி சுப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காகவே சென்னைக்கு வந்து தங்கியிருந்தார். இப்போது இவருக்கு ஜி.வி. பிரகாஷ் இசையில் பாட வாய்ப்பு


சர்ச்சை

அதேநேரத்தில் இந்த சுப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மறுபக்கத்தையும் சமூக ஆர்வலர்கள் சுட்டிக்காட்டத் தவறவில்லை. முதல் பரிசு என்பது திறமையின் அடிப்படையிலா ஓட்டுகளின் அடிப்படையிலா என்ற குழப்பம் உள்ளது என்பதைக் குறிப்பிடும் அவர்கள் “முதல் சுற்றில் கிளாசிக்கல் பாட்டு பாடவேண்டும் என்று நிபந்தனை விதித்தவர்கள், அருமையாக கிளாசிக்கல் பாடிய பிரகதியை விட்டு விட்டு கிளாசிக்கல் வரைமுறைக்குள்ளேயே வராத “வந்தே மாதரம்” பாடலைப் பாடிய ஆஜீத்துக்கு பரிசு கொடுத்தது எப்படி? இந்தப் போட்டியில் கலந்து கிட்ட சின்னப்புள்ளைகளை தொலைக்காட்சி நிறுவனத்தோடு ஒப்பந்தம் செய்ய வைத்த தங்களோட டி.ஆர்.பி. ரேட்டிங்கை அதிகப்படுத்திக்கிறது சட்டப்படி சரியானதுதானா?” என்று கேள்வி எழுப்புவதுடன் இந்தப் போட்டி நடத்தும் விதம், தேர்வு முறை, பரிசுத் தொகை அனைத்தையும் விமர்சனத்திற்குட்படுத்துகிறார்கள். 11 வயது பையனுக்கு 60 இலட்சம் ரூபா மதிப்புள்ள வீடு பரிசாக வழங்கப்படும் போது அதன் மதிப்பு அந்தப் பையனுக்குத் தெரியாது.
அது அவனது பெற்றோருக்குத்தான் பயன்படும். பெற்றோரின் வானளாவிய ஆசைகளுக்குப் பிள்ளைகளைப் பயன்படுத்தும் போக்கையே இத்தகையப் போட்டிகள் வளர்க்கின்றன என்றும் “சமுதாயத்தால் இது மற்ற பிள்ளைகளின் மீதும் மன அழுத்தத்தை உண்டாக்கும்” என்றும் குறிப்பிடுகின்றனர்.
குழந்தைகள் நல குழுமத்தின் முன்னாள் தலைவர் டொக்டர் மனோ ரமா இதுபற்றி கூறும் போது,
“ரியாலிட்டி ஷோக்கள் மூலமாக குழந்தைகளின் திறமையை வெளிக்கொண்டு வருவது பாராட்டுக்குரியதுதான். அதை ஒளி பரப்பும் முறைகள் சரியான வகையில் இல்லை. போட்டியில் தோற்றுப் போகும் குழந்தைகளின் அழுகையை க்ளோசப்பில் காட்டுவது, அப்போது அவர்களின் பெற்றோர் படும் பதற்றத்தை ஸ்லோ மோஷனில் காட்டுவது, இதில் ஜெயித்தால் மட்டுமே வாழ்க்கை என்பதுபோல பிள்ளைகளை தீவிரப்படுத்துவது இவையெல்லாம் தவிர்க்கப்பட வேண்டும்.
அதுபோல பரிசுத் தொகையும் அவர்களுக்கான புலமைப்பரிசிலாகவோ, சுற்றுலாகவோ இசை சம்பந்தப்பட்டதாகவோ இருந்தால் வளர்ச்சிக்கு உதவும்” என்கிறார் தெளிவாக. இளம் வயதிலேயே திறமையால் அசத்திய சாதனைத் திலகங்களை சரியான வழியில் அழைத்துச் செல்ல வேண்டிய கடமை பெற்றோருக்கும் ஊடகங்களுக்கும் இருக்கிறது.
சக மனிதர்களான நமக்கும்தான்.

மதுஷாலினி தமிழ்ப் படங்களுக்கு முழுக்கு போட முடிவு

தமிழ் படங்களுக்கு முழுக்குப்போட்டு விட்டு பொலிவுட் படத்தில் கவனம் செலுத்த முடிவு செய்துள்ளார் மது ஷாலினி. ‘அவன் இவன் படத்தில் நடித்தவர் மதுஷாலினி.
இப்படத்துக்கு பிறகு ராம் கோபால் வர்மா இயக்கத்தில் டிபார்ட்மென்ட் இந்தி படத்தில் நடித்தார். தொடர்ந்து அவரது இயக்கத்தில் ‘பூத் ரிட்டர்ன்ஸ்’ படத்தில் நடித்தார். படம் வெளியாகி வெற்றிபெற்றதையடுத்த தொடர்ந்து திகில் படங்களில் நடிக்க வாய்ப்பு வருகிறதாம். இதுபற்றி மதுஷாலினி கூறியதாவது: பூத் ரிட்டர்ன்ஸ் படத்தில் நடித்த பிறகு தொடர்ந்து திகில் படங்களில் நடிக்கவே வாய்ப்பு வருகிறது.
பொலிவுட்டில் புதிய படக்குழுவினர் தொடங்கும் மற்றொரு திகில் படத்தில் நடிக்கிறேன். அதேபோல் தெலுங்கு படமொன்றிலும் நடிக்கிறேன். அதுவும் திகில் படம்தான். பூத் ரிட்டர்ன்ஸ் பட ஷ¥ட்டிங்கில் திகில் காட்சிகளில் நடித்த போது எனக்கு எந்த பயமும் ஏற்படவில்லை. இயக்குனர், பட குழுவினர் என்னை சுற்றியே இருந்ததால் பயம் தெரியவில்லை.
இதே படத்தை தியேட்டரில் பார்த்த போது நடுங்கிவிட்டேன். திகில் காட்சிகளில் எப்படி நடித்தேன் என்பதை என்னாலேயே நம்ப முடியவில்லை. தமிழில் பல படங்களில் நடிக்க வாய்ப்பு வந்தது. ஆனால் எந்த கதையும் மனதை கவரவில்லை. இதையடுத்து மும்பையில் குடியேற முடிவு செய்திருக்கிறேன். அங்கேயே தங்கியிருந்து இந்தி படங்களில் கவனம் செலுத்த உள்ளேன். மும்பை எனக்கு நல்ல வரவேற்பு தந்திருக்கிறது. அதை அனுபவிக்கிறேன். இவ்வாறு மதுஷாலினி கூறினார்.


 

எம். ஜி. ஆரின் தகப்பனார் வழி பூர்வீகம்

மக்கள் திலகத்துடைய தந்தை கோபாலன். அவர்களுடைய தந்தை, பாட்டனார் உடைய பாரம்பரியம் கோவை மாவட்டத்தில் காங்கேயம் என்ற ஊருக்கு அடுத்து உள்ள புத்துயிர் என்று கிராமம், அதில் ஒரு சிறிய ஜமீன் போல் ஒரு மிராசுதாரர் ஆகவும் வாழ்ந்து உள்ளார்கள். இவர்கள் வாழும் காலத்தில் கோவை மாவட்டத்திற்கு பெயர் “கொங்கு நாடு” என்று சொல்லப்பட்டதாம். அவர்களுடைய ஜாதி கொங்கு வெள்ளாளர் என்ற சொல்லப்படுகிறது.
இந்த கொங்கு நாட்டில் இருந்து அந்தக் காலத்தில் கோபாலன், அவருடைய தாய் தந்தை, கேரளா பாலக்காடு வடவனூருக்கு வந்து குடியேறிவிட்டதாக தெரிகிறது.
எப்படி இருந்தாலும் கோபாலனுடைய பாரம்பரியம் தமிழ்நாடு கோவை மாவட்டம் என்பது ஆய்வில் தெரிகிறது. மக்கள் திலகம் எம்.ஜி.ஆருடைய பாரம்பரியம் தமிழ்நாடு தான் என்பது திட்டவட்டமாக தெரிகிறது. இப்போது நமக்கு எம்.ஜீ.ஆருடைய வாழ்க்கை வரலாறு தான் முக்கியம். பூர்வீகம் தமிழ்நாடு.
இவர் பிறந்தது இலங்கை கண்டி. இவர் படித்தது வளர்ந்தது பிறகு வேலைக்கு சென்றது செந்தமிழ்நாடு கும்பகோணம் இவருடைய அம்மா, அப்பா, அண்ணன்கள், அக்காக்கள் கேரளா நாட்டைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் நமக்கு எம்.ஜி.ஆர். தான் கணக்கு. இவருடைய வரலாறு எப்படி என்பதைத்தான் நாம் அறிய விரும்புகிறோம். மக்கள் திலகம் எம்.ஜி.ஆர், தான் ஒரு தமிழன் என்பதை பல முறை சொல்லி இருக்கிறார்.
இது மக்கள் திலகத்துடைய தாத்தா, பாட்டி அவர்களுடைய வரலாறு ஆகும். அந்த வரலாறுக்கு உட்பட்ட மக்கள் திகலம் எம்.ஜி.ஆரின் தந்தை கோபாலன். அவர்கள் கேரளாவிற்கு எந்த சூழ்நிலையில் எந்த வருடத்தில் வந்தார்கள் என்பது ஒரு பக்கம். கோவையிலிருந்து சுமார் 30, 40 மைல் தொலைவில் உள்ள பாலக்காடு என்ற பெரும் நகரத்திற்கு அடுத்து உள்ள 20 மைலில் உள்ள வடவனூர் என்ற ஊரில் மருதூர் என்ற இடத்தில் வசித்து வந்த கோபாலன் திருமணம் செய்து கொண்ட பெண்ணின் பெயர் சத்தியபாமா, அவருடைய ஊர் குழல் அந்தம். வடவனூருக்கு அடுத்து உள்ள குழல் அந்தம். கோபாலன் அவர்கள் பட்டப் படிப்பு வரை படித்து உள்ளவர். எந்த விடயத்திலும் கோபப்படமாட்டார்.
மனிதாபிமானத்தோடு நடந்து கொள்பவர். இவர்கள் வடவனூரில் வாழ்ந்து கொண்டிருந்த காலத்தில் நான்கு குழந்தைகள் பிறந்தன இதில் இரண்டு பெண் குழந்தைகள், இரண்டு ஆண் குழந்தைகள் பிறந்து உள்ளன.
இதில் நான்காவது குழந்தைதான் சக்கரபாணி. இந்த குழந்தைகளுடன் கோபாலன் சத்தியபாமா அவர்கள் வடவனூரில் வாழ்ந்து இந்த காலத்தில் கோபாலன் அவர்களுடைய நெருங்கிய உறவினர்களுக்கும் இவர்களுக்கும் சொத்து விடயத்தில் தகராறுகள் ஏற்பட்டன.
அது ரொம்ப பெரிய விடயமாக பெரிய அளவில் உண்டாகும் சமயத்தில் கோபாலன் அவர்கள் தர்ம நியாயம் அற்றவர்களுடன் நாம் சேர்ந்து வாழ்வதா என்ற எண்ணத்தோடு இலங்கையில் கண்டியில் உள்ள தன் நண்பர்களுக்கு தன்னுடைய குடும்ப சூழ்நிலையை எழுதுகிறார். அவர்களும் அதை படித்து புரிந்து கொண்டு உங்களுக்கு அங்கு வாழ பிடிக்கவில்லை என்றால் நீங்கள் இங்கு எப்போது வருகிaர்கள் (கண்டி) புறப்பட்டு வரவும்.
வரும் போது தெரியப்படுத்திவிட்டு வரவும் என்று கடிதம் எழுதினார்கள். அந்த கடிதம் கிடைத்த உடனே கோபாலன் மிக ரகசியமாக இந்த விடயத்தை வைத்துக் கொண்டு இலங்கை புறப்படும் ஏற்பாடுகளை செய்கிறார்.
கோபாலன் அவர்கள் பாலகாட்டில் ஒரு சில வருடங்கள் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் மாவட்ட முனிசிப்பல் நீதிமன்றத்தில் துணை நீதிபதியாக பணியாற்றி வரும் காலத்தில் வடவனூரை சேர்ந்த ஒரு வழக்கில் தனக்கு சாதகமான தீர்ப்பு அளிக்க வேண்டும் என்று உறவினர்கள் வற்புறுத்தினார்கள்.
அதை ஏற்றுக் கொள்ளாத துணை நீதிபதி உங்கள் பக்கத்தில் கொஞ்சம் கூட நியாயம் இல்லை. எனவே உங்களுக்கு நான் உதவ முடியாது என்று சொன்னதில் ஏற்பட்ட எதிர்ப்பு அந்த ஊரில் கோபானுக்கு உண்டு.
அதன் படி 1913ல் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் நான்கு குழந்தைகளையும், தன் மனைவியையும் அழைத்துக் கொண்டு இலங்கை வருகிறார். இலங்கை கண்டிக்கு வந்தவுடன் ராமுபிள்ளை வேலுபிள்ளை இருவரும் கோபாலன் குடும்பத்தினருக்கு எல்லா வசதிகளையும் செய்து கொடுக்கிறார்கள். பிறகு இலங்கையில் கண்டியில் இவர்கள் தங்குகிறார்கள்.
இந்த காலகட்டத்தில் கண்டியில் பிறக்கிறார் எம்.ஜி.ஆர். 1917ல் செவ்வாய் கிழமை காலை 11.36 க்கு பிறக்கிறார். 5 வது குழந்தையாக தாய், தந்தையர் எல்லோரும் சேர்ந்து ராமச்சந்திரா என்று பெயர் வைக்கிறார்கள். அவரை அழைக்கும் போது நான்கு அண்ணன்கள் அக்காமார்கள் ராமச்சந்திரா என்று அழைத்து கொஞ்சி விளையாடும் போதும் அதை பார்த்து கோபால் சத்தியபாமா ரசிப்பார்கள்.
நான்காவது குழந்தையான சக்கரபாணிக்கும் எம்.ஜி.ஆருக்கும் 4 வயது வித்தியாசம் என்று சொல்லப்படுகிறது. எம்.ஜி.ஆருக்கு 3 வயது ஆகும் போது அவர் ஓர் அளவுக்கு ஓடி, ஆடி விளையாடுவதும் அப்பா கோபாலன் வீட்டிற்கு வந்தவுடனே அவரை கட்டிப் பிடித்து கொஞ்சுவாராம்.
இந்த காலகட்டத்தில் கோபாலனுக்கு ஒரு கல்லூரியில் பேராசிரியராக வேலை கிடைத்தது. அதில் இருந்து சில வருடங்கள் கழித்தவர் கண்டி மாவட்ட நீதி மன்றத்தில் நீதிபதியாக பணியாற்றி வந்தார். இந்த நான்கு குழந்தைகளுடன் நல்ல வசதியோடு வாழ்ந்து கொண்டு இருக்கும் காலத்தில் கோபாலனுக்கு உடல் நலம் பாதிக்கப்படுகிறது.
கோபாலன் மாரடைப்பால் 1920 ம் ஆண்டு இறந்து விடுகிறார். பிறகு சத்திய தாய் தன் கணவர் இறந்த துயரத்திலே மூழ்கி விடுகிறார். ராமுபிள்ளை, வேலுபிள்ளை ஆறுதல் சொல்லி செல்கிறார்கள்.
அதன் பிறகு தன் கணவரை இழந்த சத்தியபாமா தன் கணவர் வேலை பார்த்த காலத்தில் வாங்கப் பட்ட சொந்த வீடு, சேர்த்து வைத்துக் இருந்த பணம், நகைகள் இவைகளை எல்லாம் செலவுக்கு வைத்து கொண்டு கண்டியிலே வாழ்கிறார். இந்த காலகட்டத்தில் திடீர் என்று விஷகாய்ச்சல் ஏற்பட்டு தன் இரண்டு பெண் குழந்தைகளும், ஒரு ஆண் குழந்தையும் இறந்து விடுகிறார்கள்.
ஏற்கனவே தன் கணவரை பறிகொடுத்து விட்டு துக்கத்தில் இருக்கும் சத்தியபாமாவுக்கு மேலும் ஒன்றுக்கு பின் ஒன்றாக மூன்று குழந்தைகளும் இறந்ததை நினைத்து அழுது புலம்பும் சமயத்தில் எம்.ஜி.ஆர். தன் தாயின் கழுத்தை கட்டிப் பிடித்து அம்மா அழாதே! அம்மா என்று சொல்லுவாராம்.
ஐந்தாவது குழந்தையாக நீ பிறந்த பிறகு தாண்டா பெற்ற அப்பாவையும், உன் கூட பிறந்த 3 பேரும் செத்து போனார்களடா, என்று எம்.ஜி.ஆரை 8pநிt பிடித்து அழுவாராம். அவருடைய சேட்டைகள், விளையாட்டுகள் எந்த கவலையும் தெரியாமல் ஓடி, ஆடி மழலை பேச்சு பேசும் போது எல்லாம் அந்த தாய் பழைய நினைவுகள் எல்லாம் மறந்து சக்கரபாணியையும், ராமச்சந்திரனையும் காப்பாற்ற வேண்டும் என்ற பெரிய சபதத்தோடு மீண்டும் வேலுபிள்ளை, ராமுபிள்ளைகளின் உதவியை நாடுகிறார்கள்.
அந்த சமயம் அவர்கள் இருவரும் அம்மா சத்திய தாயிடம் அண்டி பிழைக்க வந்த இடத்தை விட்டு விட்டு தங்களுடைய சொந்த இடத்திற்கே செல்வது மிகச் சிறந்தது ஆகும். அப்போது சத்திய தாய் சொல்லுகிறார், எனக்கு சொந்த இடம் என்பது கேரளா வடவனூர்தான், அந்த ஊர் வேண்டாம் என்று தான் சபதத்தோடு இங்கு வந்தோம்.
இப்போ அவர் இல்லாமல் வடவனூருக்கு எப்படி செல்வேன்? என்ற கேள்வி அவருக்கு எழுந்தது. தான் அந்த சமயத்தில் கும்ப கோணத்தில் இருக்கும் மதுரை பாய்ஸ் நாடக கம்பெனியில் வேலை செய்யும் நாராயணன் என்பவரின் ஞாபகம் வந்தது. இவர் சத்தியபாமாவுக்கு நெருங்கிய உறவினர். நாராயணனுக்கு சத்திய பாமா தன் குடும்ப நிலைமைகளை பற்றி விரிவாக கடிதம் போடுகிறார்.
அதன்படி அவருடைய அழைப்பின் படி நீங்கள் குழந்தைகளை அழைத்துக் கொண்டு கும்பகோணம் வந்து விடுங்கள் என்று சொல்லுகிறார், அதன்படி வேலுபிள்ளை, ராமுபிள்ளை உதவியுடன் சத்தியபாமா குழந்தைகளை அழைத்துக் கொண்டு கும்பகோணம் வந்து சேருகிறார்கள்.
சத்தியபாமா நாராயணனுடைய உதவியுடன் கும்பகோணத்தில் ஒரு சிறிய வீடு வாடகைக்கு பிடித்து வாழ்ந்து கொண்டு இருக்கும் நாட்களில் தன்னுடைய இரண்டு மகன்களையும் எப்படியாவது ஓரளவுக்கு படிக்க வைக்க வேண்டும் என்று நாராயணனிடம் சத்தியபாமா சொல்கின்றார். அதன்படி, இந்த இரண்டு பையன்களையும் கும்பகோணத்தில் உள்ள யானை அடி இடத்தில் உள்ள அரசாங்க பள்ளிக் கூடத்தில் சேர்த்து விட்டார்கள்.
மேலும் பையன்கள் படிப்பதற்கு சிலேட்டு புத்தகங்களையும் வாங்கி கொடுத்து விட்டு பிறகு இந்த பையன்களின் பள்ளி படிப்புக்கு ஆன செலவுகளுக்கும், சாப்பாட்டிற்கும் என்ன செய்வது என்ற பிரச்சினை உண்டாகிறது.
இந்த நேரத்தில் சத்தியபாமா மிக மன தைரியத்தோடு நான் எங்கேயாவது வேலை செய்து என் பிள்ளைகளை காப்பாற்றுவேன் என்று நாராயணனிடம் செல்கிறார். அடுத்து சத்தியபாமா குடி இருக்கும் பகுதியில் அக்கம், பக்கத்தில் உள்ளவர்கள் இந்த அம்மாவினுடைய நிலைமைகளை பார்த்து இந்த அழகான பையன்களுடைய நிலைமைகளை அறிந்தும் சிலர் வேலைக்கு செல்ல உதவி செய்கிறார்கள்.
இந்த நிலையில் எம்.ஜி.ஆருக்கும் சக்கரபாணிக்கும் 3 வயதுதான் வித்தியாசம். சக்கரபாணி, தம்பியை ராமச்சந்திரா என்று அழைப்பார். பள்ளிக்கூடம் முடிந்து அவர்கள் வீட்டில் இருக்கும் நேரத்தில் இவர்களுடைய தந்தை பற்றி போதனை சொல்லுவார்கள். சத்தியம், தர்மம், நேர்மை, நீதி, பக்தி எல்லாம் நிறைந்தவர் உங்கள் தந்தை, நன்றாக படித்தவர், நீதிபதியாகவும் பேராசிரியராகவும் பணிபுரிந்து பலரிடம் மதிப்பும், மரியாதையும் பெற்றவர்.
அவர் போல் நீங்களும் நன்கு படித்து வாழ்ந்து காட்ட வேண்டும் இதைக் கேட்ட இருவரும் தன் தாயிடம் உறுதி மொழி எடுத்து கொள்கிறார்கள். தந்தை சொல்லுக்கு மந்திரம் இல்லை என்பார்கள். ஆனால் இவர்களுக்கு தந்தைக்கு பதிலாக தாய் சொல்கிறார் மந்திரத்தை. அந்த மந்திரத்தை மனதில் பதிவு செய்து கொண்டவர்தான் மக்கள் திலகம் எம்.ஜி.அர். தன் தாயினுடைய உழைப்பால் மூன்று வேளையும் சாப்பிட்டு கொண்டு பள்ளிக்கூடம் சென்று வருகிறோம் என்ற எண்ணம் எம்.ஜி.ஆரு மனதுக்குள் நாளுக்கு நாள் வளரத் தொடங்கியது.


 

கண்டக்டர் வேலை கிடைத்ததும் ரஜனிக்கு கலெக்டரானது போல் மகிழ்ச்சி

பஸ் கண்டக்டராக வேலை பார்த்துக் கொண்டிருந்த ரஜினிகாந்த். நாடகங்களில் நடித்துப் புகழ் பெற்றார். அதைத் தொடர்ந்து சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆசை எற்பட்டது. ரஜினிகாந்த் சினிமா பார்க்கப் போனால் ‘கியூ’வில் நிற்பதில்லை. ஒரு ‘ஜம்ப்’ செய்தால் போதும் டிக்கெட் கொடுக்கப்படும் இடத்திற்குப் போய்விடுவார்.
காசு கொடுத்து டிக்கெட் வாங்கிக் கொண்டு போய் படம் பார்ப்பார். ரஜினி இப்படி ‘ஜம்ப்’ செய்து தாவும் போது கியுவில் நிற்பவர்கள் எதிர்ப்புக் காட்டாமல், ‘கப்சிப்’ என்ற இருப்பார்கள். எதிர்ப்புத் தெரிவித்தால் என்ன நடக்கும் என்பது அவர்களுக்குத் தெரியும். அந்த வட்டாரத்தில் ரஜினி அவ்வளவு பிரபலம்.
ஒரு சமயம் ‘நாடோடி மன்னன்’ படம் பார்க்க ரஜினியின் நண்பர்கள் கிளம்பினார்கள். ரஜினியின் கையில் பணம் இல்லை. என்ன செய்யலாம் என்று யோசித்தார். அடுத்த சில நிமிடங்களில், வீட்டில் இருந்த ஒரு வெள்ளி டம்ளர், மார்வாடி கடைக்கு இடம் பெயர்ந்தது.
ரஜினிக்கு ஐந்து ரூபாய் கிடைத்தது. நண்பர்களுடன் போய், நாடோடி மன்னன் படம் பார்த்தார். இந்த சமயத்தில், குடும்ப நண்பர் ஒருவர் மூலமாக கர்நாடக போக்குவரத்து நிறுவனத்தில், பஸ் கண்டக்டர் வேலை கிடைத்தது.
ரஜினிக்கு ஏக சந்தோஷம். கலெக்டர் வேலை கிடைத்தது போல் மகிழ்ந்து போனார். மகாராணி பெண்கள் கல்லூரி உள்ள சிவாஜி நகர்- சாம்ராஜ் பேட்டை ரூட்டில், 134ம் நம்பர் பஸ்சில்தான் கண்டக்டராக வேலை பார்த்தார் ரஜினி.
பஸ்சில் அவரை பார்ப்பவர்கள் கண்டக்டர் என்றே நம்பமாட்டார்கள். அந்த அளவுக்கு ‘டிப்டாப்’ ஆக உடை அணிவார். பயணிகளுக்கு ‘டிக்கட்’ கிழித்துக் கொடுப்பதும், ரைட் ரைட் என்று கூறுவதும் தனி ஸ்டைலாக இருக்கும்.
கல்லூரி மாணவிகளும், இளம் பெண்களும், ஆள் கறுப்பு என்றாலும், அந்த கண்டக்டர் படு ஸ்டைலுடி என்று தங்களுக்குள் கிசுகிசுத்துக் கொள்வார்கள். ஒருநாள் , வேலை முடிந்து ரஜினிகாந்த் வீட்டுக்கு நடந்து போய்க்கொண்டிருந்தார். ஒரு தெருவில் போகும் போது ‘ஐயோ என்னைக் கொன்னுடாதே! விட்டு விடு’ என்று ஒரு பெண் அலறும் சத்தம் கேட்டது.
யாரோ ஒருவன் ஒரு பெண்ணைக் கெடுக்க முயற்சிக்கின்றான் என்று நினைத்தார் ரஜினி. குரல் வந்த திசையை நோக்கித் திரும்பினார். ஒரு பெரிய சுவருக்கு மறுபக்கத்தில் இருந்து அக்குரல் கேட்டது. ‘ஜம்ப்’ செய்து மறுபக்கம் குதித்தார். அங்கே ஒரு ரவுடியின் கையில் சிக்கி இளம் பெண் ஒருத்தி துடித்துக் கொண்டிருந்தாள்.
ரவுடியின் கையில் கத்தி பளபளத்தது. ‘டேய் ராஸ்கல்’ என்ற பாய்ந்தார் ரஜினி. கையில் இருந்த கத்தியை கீழே போட்டு விட்டுத் திரும்பிப் பார்த்தான் ரவுடி. ‘இது என்ன புதுக் குழப்பம்’ என்று கேட்டபடி ஒருவர் ரஜினியிடம் வந்தார். அவர் கையில் ஒரு நோட்டுப் புத்தகம் இருந்தது. அது நாடக வசனப் புத்தகம் என்பதும், அங்கு நடந்து கொண்டிருந்தது நாடக ஒத்திகை என்பதும் ரஜினிக்கு உடனே புரிந்து விட்டது. விழுந்து விழுந்து சிரித்தார்.
இந்த நிகழ்ச்சியினால் எனக்கு நாடகத்தின் மீது ஈர்ப்பு ஏற்பட்டது. நாடகங்கள் போடத் தூண்டியது என்று கூறுகிறார் ரஜினி. இதன்பின் ஒரு நாடகக் குழுவை ரஜினி அமைத்தார். ‘ஜூவாலை” என்ற நாடகத்தை அரங்கேற்றினார். அந்த நாடகம் மராட்டிய மாவீரர் சத்ரபதி சிவாஜியைப் பற்றியது. சிவாஜி வேடத்தில் ரஜினி நடித்தார்.
சிவாஜி கணேசன் பாணியைப் பின்பற்றி நடித்தார். கையில் தீப்பந்தத்தை பிடித்துக்கொண்டு வீராவேசமாக சிவாஜி பேசுவது போல் ஒரு கட்டம். சிவாஜிகணேசன் பாணியிலேயே சிம்ம கர்ஜனை செய்தார். ரஜனி கூடியிருந்தவர்கள் கைதட்டி ஆரவாரம் செய்தார்கள்.
உற்சாகம் அடைந்த ரஜினி, தீப்பந்தத்தை மேலும் தூக்கிப் பிடித்தபடி, வீரவசனத்தைத் தொடர்ந்து, பேசினார். நாடகத் திரையில் தீப்பந்தம் பட்டு, தீ பிடித்துக்கொண்டது. கூடியிருந்தவர்கள் ‘தீ... தீ....’ என்று கத்திக்கொண்டே சிதறி ஓடினார்கள். அப்போதுதான் வீர வசனத்தை நிறுத்தினார் ரஜினி.
ஒருநாள் இப்படி தீ விபத்து ஏற்பட்டாலும், தொடர்ந்து நாடகங்கள் நடத்தி வந்தார். ரஜினி. ‘குருசேத்திரம்’ என்ற நாடகத்தில், துரியோதனன் வேடத்தில் நடித்தார். அவர் நடிப்புக்கு ஏக வ¨வேற்பு நாடகம். முடிந்ததும், முன்னிலை வகித்த கர்நாடக போக்குவரத்து அதிகாரி, மேடைக்கு வந்தார்.
“நம்முடைய சிவாஜிராவ் (ரஜினி) பிரமாதமாக நடித்தார். விரைவில் அவர் சினிமாவில் நடித்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. அந்த அளவுக்கு அவர் நடிப்பு பிரமாதம்’ என்று புகழ்ந்தார்.
இதைக் கேட்டு பூரித்துப் போனார் ரஜினி. தொடர்ந்து நாடகங்கள் நடத்தினார். அவர் நடிப்பை சக ஊழியர்கள் புகழ்ந்தனர். ஆனால், ரஜினியின் அப்பாவுக்கு மட்டும் மகன் நாடகத்தில் நடிப்பது கொஞ்சமும் பிடிக்கவில்லை. ‘மாலை நேர கல்லூரியில் சேர்ந்து படி. பொலிசில் சேர்ந்து பெரிய அதிகாரியாகலாம்’ என்று கூறிக்கொண்டிருந்தார். ஆனால், ரஜினிக்கு சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டு, நாளுக்கு நாள் வளர்ந்தது. சிலர் அவருடைய கறுப்பு நிறத்தை கேலியாகக் குறிப்பிடுவார்கள் ஆனால், ரஜினி அதையெல்லாம் பொருட்படுத்துவது இல்லை.
சினிமாவில் சேர்ந்தே தீரவேண்டும். நடிகனாக வேண்டும் என்று உறுதி எடுத்துக்கொண்டார். இதுபற்றி தன்னுடைய நெருங்கிய நண்பரான புட்ராஜிடம் தெரிவித்தார். ‘சினிமாவில் நடித்தால் நீ நிச்சயம் பெரிய நடிகனாக வருவாய். உன் ஸ்டைல் உனக்கு ரொம்ப உதவும்’ என்றார் புட்ராஜ். ‘கண்டக்டர் வேலைக்கு எப்போது முழுக்குப் போடுவது எப்போது சினிமாவில் சேருவது’ என்று சதா யோசித்தபடி இருந்தார் ரஜினி. அதற்கான வாய்ப்பு எதிர்பாராமல் வந்தது.


 

பாலு மகேந்திரா தேர்ந்தெடுத்த கதை வாடைக் காற்று

வாடைக்காற்று நாவலின் கதைக்களம் நெடுந்தீவாக இருந்த போதிலும், அதே இயற்கைச்சூழலில் பனங்காணிகள், மட்டக்குதிரை  (Ponies) கரை வலை என்பனவுள்ள பேசாலைக் கிராமத்தில் தான் பெரும் பகுதி படமாக்கப்பட்டது.
இலங்கைத் தமிழ்த் திரைப்படமொன்றின் பாடல்கள் இசைத் தட்டாக முதலிலேயே வெளிவந்தது என்ற பெருமையைப் பெற்றது வாடைக்காற்று பாடல்கள்தான்.
வாடைக்காற்று வீசுகின்ற காலத்திலே என்ற பாடலைப் பாடிய ஜோசப் ராசேந்திரன், இலங்கை வானொலியின் ஒரு அறிவிப்பாளர் இந்தப் பாடல் வானொலி மூலம் இலங்கை, இந்திய ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றது.
விருத்தாசலம் (கே. எஸ். பாலச்சந்திரன்) பாத்திரத்தில் நடிப்பதற்கு பிரபல சிங்கள நடிகர் காமினி பொன்சேகாவைத் தான் முதலில் அணுகினார்கள்.
பிரபலமான கலைஞர்கள் பலர் ஒன்றிணைந்து நடித்த இந்தத் திரைப்படத்தில் பின்னணிக் குரல் கொடுத்தவர்களும் சளைத்தவர்களல்ல. ‘தணியாத தாகம்’ வானொலி நாடகத்தில் ‘யோக்ம்’ பாத்திரத்தில் நடித்த விஜயாள் பீற்றர்,
(அப்புக்குட்டி ரி. ராஜகோபால், அருட்பிதா கரவையூர் செல்வம் ஆகியோரே அவர்கள் வீரகேசரி பிரசுரங்களை செங்கை ஆழியானின் வாடைக்காற்று, அ. பாலமனோகரனின் நிலக்கிளி எனும் இரண்டு நாவல்களிடையே ஒன்றைத் தெரிவு செய்து தரும்படி இயக்குனர் பாலுமகேந்திராவிடம், அவரது நெருங்கிய நண்பரான தயாரிப்பாளர் சிவதாஸன் கேட்டபொழுது நிலக்கிளி நாவலில் வரும் ‘பதஞ்சலி’ பாத்திரத்தில் நடிக்க தென்னிந்தியாவிலும் நடிகைகள் இல்லை. ‘வாடைக்காற்றை’ இலங்கைச் சூழலுக்கேற்ப இலகுவாக படமாக்கலாம் என்றார் பாலு மகேந்திரா.


 

குண்டுராவ்

அபூர்வ ராகங்கள் படத்தில் குடிகாரனாக நடித்த நாகேஷ் தன்னுடைய நிழலை பார்த்து பேசி “சியர்ஸ்” சொல்லி சுவற்றில் கோப்பையை எறிவார். இடைவேளையின் போது ரசிகர்களும் சுவாரஸ்யமாக அவரைப் போலவே சுவரில் கோப்பையை எறிந்து அவரைப் போல் நடந்து கொண்டனர்.
“தமிழ் சினிமாவில் பத்தாண்டுகளுக்குப் பிறகு செய்ய வேண்டியவற்றை இப்போதே செய்பவர் கமல்” என்று அவர் பற்றி நாகேஷ் பெருமையாக கூறினார். நடிகர் கமல் தனது படங்களில் நாகேஷை தவறாமல் இடம்பெற செய்வார். “அபூர்வ சகோதரர்கள்” ‘மைக்கேல் மதன் காமராஜன்’, ‘மகளிர் மட்டும்’ ஆகிய படங்களில் துவங்கி ‘தசாவதாரம்’ வரை கமலின் பெரும்பாலான படங்களில் இவர் இடம்பெற்றார்.
மகளிர் மட்டும் படத்தில் ‘பிணமாக வாழ்ந்த’ நாகேஷ் நடிப்பு ரசிகர்களின் அமோக வரவேற்பைப் பெற்றது. கலாட்டா கல்யாணம், சுமதி என் சுந்தரி, அன்பே வா உள்ளிட்ட படங்களில் அவரது நகைச்சுவை எல்லாரையும் கவர்ந்தது. நவக்கிரகம், யாருக்காக அழுதான், சர்வர் சுந்தரம், நீக்குமிழி, எதிர் நீச்சல் ஆகிய படங்களில் கதாநாயகனாகவும் நடித்துள்ளார்.
ஒருமுறை ரசிகர் ஒருவர் நாகேஷிடம் “உங்களுக்கு ஹீரோ மாதிரி பெர்சனாலிட்டி எல்லாம் இல்லை. ஆனா நடிப்பு டான்ஸ் எல்லாவற்றிலும் பிரமாதப்படுத்துaங்களே.... எப்படி உங்களால் இப்படி நடிக்க முடியுது?” என்றார்.
சிரித்தபடியே நாகேஷ், “உங்கள் வீட்டில ஆட்டுக்கல் இருக்குமில்லையா.... அதுல இட்லி தோசைக்கு மாவு அரைச்சு பார்த்திருக்கீங்களா? ஆறு மாசம், ஒரு வருஷத்துக்கு ஒரு தடவை அந்த ஆட்டுக்கல்லை கொத்து வைப்பாங்க. எதுக்கு தெரியுமா? ஆட்டுக்கல்லை பொளிஞ்சா.... மாவு நன்றாக அரைபடும். இட்லி நன்றாக வரும். ருசி உசத்தியா இருக்கும்.
என் முகமும் ஆட்டுக்கல்ப் போல்தான். ஆண்டவன் “அம்மை” என்கிற உளியை வெச்சு முகம் முழுக்க நல்லா பொளிஞ்சுட்டாரு. அதனால் தான் நடிப்புங்கிற இட்லி வருது” என்றார். இந்த பதில் ரசிகரை நெகிழ வைத்தது.
சிரித்து வாழ வேண்டும் என்ற வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தில் நாகேஷ் இதைத் தெரிவித்திருந்தார். ஐம்பது ஆண்டுக்கும் மேற்பட்ட தமிழ் சினிமா வாழ்க்கையில் மனோரமாவும், நாகேஷ¤ம் ஏராளமான படங்களில் இணைந்து நடித்திருக்கின்றனர். நாகேஷின் மனைவி ரெஜினாவுடன், மனோரமாவுக்கு மிகுந்த நட்பு உண்டு. திரையில் சாதித்த அவர் விருதுகளில் நம்பிக்கை இல்லாதவர். அவர் இல்லத்தில் எந்த ஒரு விருதும் அலங்காரப் பொருளாக இடம்பெற்றது இல்லை.