Thursday, April 25, 2013

சூர்யாவுக்கு பிடித்த .................

* இதுவரை ஜோடியாக நடித்த கதாநாயகி களில் தனக்கு மிக பொருத்தமானவர் யார்? என்ற கேள்விக்கு சூர்யா பதில் அளித்தார்.
சூர்யா நடிக்க, ஹரி டைரக்டு செய்யும் ‘சிங்கம்-2’ படத்தின் படப்பிடிப்பு முடிவடை யும் நிலையில் இருக்கிறது. இறுதிக்கட்ட படப்பிடிப்பு இப்போது தூத்துக்குடியில் நடைபெறுகிறது. அங்கிருந்தபடி சூர்யா தொலைபேசி மூலம் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது,
“தூத்துக்குடி மக்கள் பாசம் மிகுந்தவர்களாக இருக்கிறார்கள். இதுபோல் என் மீது அதிக அன்பு காட்டியவர்களை வேறு எங்கும் பார்த்ததில்லை. ரொம்ப மரியாதை கொடுக்கிறார்கள். இவர்களுக்கு நாம் திருப்பிக் கொடுக்கப்போவது என்ன? என்று யோசிக்கிறேன். நல்ல படம் கொடுப்பதுதான் இப்போதைக்கு நம்மால் செய்யக் கூடியது என்று கருதுகிறேன்.
அடுத்து கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கும் புதிய படத்தில் நடிக்கிறேன். இந்தப் படத்தை அவருடைய சொந்த பட நிறுவனமான போட்டோன் கதாஸ் தயாரிக்கிறது. ஜுன் மாதம் படப்பிடிப்பு தொடங்கும். அதையடுத்து, லிங்குசாமி இயக்கும் படத்தில் நடிக்க இருக்கிறேன். அவருடைய திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்டு மாதம் தொடங்கும் இரண்டு படங்களுக்கும் கதாநாயகிகள் முடிவாகவில்லை.

ரசிகர்களுக்கு போட்டி

“சிங்கம்” படத்தை வெற்றி படமாக்கிய ரசிகர்களுக்கு ஒரு போட்டி வைக்கலாம் என்று முடிவு செய்து இருக்கிறோம். இந்த போட்டி பற்றிய விவரங்கள் இன்னும் ஒரு வாரத்தில் அறிவிக்கப்படும். அதில் பங்கேற்று வெற்றி பெறுபவர்கள் ஒரு நாள் முழு வதும் என்னுடன் படப்பிடிப்பில் இருக்கலாம். இதற்காக ஒரு ‘வெப்சைட்’ தொடங்கப்படுகிறது இவ்வாறு சூர்யா கூறினார்.

* நீங்களும், உங்கள் தம்பி கார்த்தியும் இணைந்து நடிப்பது எப்போது அந்த படத்தை ஞானவேல் ராஜாவின் ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்குமா?

அப்படி ஒரு கதை, டைரக்டர் வருவதைப் பொறுத்து அது அமையும் இரண்டு பேரும் சீக்கிரமே சேர்ந்து நடிக்க வேண்டும் என்று நாங்கள் அவசரப்படவில்லை. அப்படி ஒரு படம் அமைந்து, அதை ஞானவேல்ராஜா தயாரித்தால் சிறப்பாகவே இருக்கும். * இதுவரை உங்களுக்கு ஜோடியாக நடித்த கதாநா யகிகளில் மிக பொருத்தமானவர் என்று யாரை சொல்வீர்கள்?
எல்லா கதாநாயகிகளுமே கடினமாக உழைக்கிறார்கள். முதல் படத்தை காட்டிலும் அடுத்த படத்தில் திறமையை கூடுதலாக வெளிப்படுத்த வேண்டும் என்று பாடுபடுகிறார்கள். “சிங்கம்-2” படத்தில் அனுஷ்கா, ஹன்சிகா இரண்டு பேருமே இருக்கிறார்கள். இரண்டு பேருக்குமே இது மறக்க முடியாத படமாக இருக்கும்.

* இன்னும் 20 வருடங்களுக்குப் பின் சூர்யா நடிகராகவே இருப்பாரா, டைரக்டர் என்ற அடுத்த கட்டத்துக்கு உயர்வாரா?

எதிர்காலத்தை சொல்ல முடியாது. இன்னும் திட்டமிடவில்லை. நல்ல படமாக நடிக்க வேண்டும் என்பது தான் ஒரே குறிக்கோள். எதிர்காலத்தில் நான் நடிக்க முடியாத படங்களில், இளைஞர்களுக்கு வாய்ப்பு கொடுக்கிற மாதிரி நல்ல தயாரிப்பாளராக இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன். ஒரு காலகட்டத்துக்குப் பின் குடும்பத்துக்கு அதிக நேரம் ஒதுக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். வாழ்க்கையை இன்னும் அழகாக சந்தோஷமாக அமைத்துக்கொள்ள வேண்டும். ‘அகரம்’- மூலம் இன்னும் அதிக சேவைகள் செய்ய வேண்டும். இவ்வாறு சூர்யா பதில் அளித்தார்.

சென்டிமென்ட்

தமன்னா சரியான சென்டிமென்ட் பழம். ஷ¤ட்டிங்கிற்கு காரில் செல்லும்போது, ரோட்டில் எந்த கோயில் தெரிந்தாலும், உடனே திரும்பி சாமி கும்பிடுவார். தன் தலையில் குட்டிக்கொள்வார். கண்களை இறுக மூடிக்கொண்டு, மனதிற்குள் ஏதாவது வேண்டுவார். அந்த வேண்டுதலை பலித்தால், ஷ¥ட்டிங் இல்லாத நாளில் கோயிலுக்கு வருவார். காணிக்கை செலுத்தி தன் கடமையை நிறைவேற்றுவார். மேலும் ஹ¥ட்டிங் நடக்கும் பகுதியிலுள்ள பிரபல கோயில்களுக்கு ரகசியமாக சென்று வருவார்.
‘சின்ன வயசுலயே நான் சரியான பக்திப் பழம். சென்டிமென்ட், ராசி, சகுனம் பார்ப்பேன். இதுக்கு முன்னாடி நான் நடிச்ச பல படங்கள் ஓடலை. என்னை ராசியில்லாத நடிகைன்னு சொன்னாங்க. நியூமராலஜியில் அதிக நம்பிக்கை உண்டு. ஆங்கிலத்தில் என் பெயருக்கு முடிவில் ஒரு எச் சேர்த்தேன். ஒரே எழுத்து ஓஹோன்னு வாழ்க்கை. யெஸ், இப்ப நான் நடிக்கிற எல்லா படமும் ஹிட்.... என்று குதூகலிக்கிறார்.

ஜனனி அய்யருக்கும் அதர்வாவுக்கும்....... அது!

நடிகை ஜனனி அய்யருக்கும் நடிகர் அதர்வாவுக்கும் காதல் மலர்ந்துள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.
ஜனனி அய்யர் ‘அவன் இவன்’ ‘பாகன்’ படங்களில் நடித்தவர். அதர்வா பழைய ‘நடிகர் முரளி’யின் மகன் ஆவார். பாணா காத்தாடி, முப்பொழுதும் உன் கற்பனைகள், பரதேசி படங்களில் நடித்துள்ளார்.
ஜனனி அய்யரும் அதர்வாவும் இணைந்து ஒரு படத்திலும் நடிக்கவில்லை.
ஆனாலும் இருவருக்கும் பொதுவான நண்பர் ஒருவர் மூலம் அறிமுகமானார்கள். நட்பாக பழகினார்கள். தற்போது அது காதலாக மலர்ந்துள்ளது. ‘முப்பொழுதும் உன் கற்பனைகள் படப்பிடிப்பிலேயே இருவரும் அடிக்கடி சந்தித்து காதல் வளர்த்தார்களாம். ஆனாலும் அவர்கள் தொடர்பு பற்றிய விஷயங்கள் வெளியாகவில்லை. ரகசியமாகவே வைத்து இருந்தனர். இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்து இருப்பதாகவும் கூறப்படுகிறது.
ஜனனி அய்யரிடம் இது குறித்து கேட்ட போது மறுத்தார். அதர்வா என் நண்பர். பொது நிகழ்ச்சிகளில் சில மணி நேரம் தான் சந்தித்து இருக்கிறோம். எங்களுக்கு திருமணம் நடக்கப்போவதாக கூறப்படுவதில் உண்மை இல்லை என்றார்.

பார்வதி ஓமணக்குட்டன்

இரண்டு ஆண்டு இடைவேளைக்குப் பிறகு வடிவேலு நடிக்கும் புதிய படம் தெனாலிராமன். இப்படத்தை போட்டா போட்டி டைரக்டர் யுவராஜ் இயக்குகிறார். ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட் சார்பில் கல்பாத்தி அகோரம் இப்படத்தை தயாரிக்கிறார்.
இம்சை அரசன் 23 ம் புலிகேசி போன்று இப்படத்திலும் இரண்டு வேடங்களில் நடிக்கிறார் வடிவேலு. அதனால், தனது உடம்பிலும், முகத்திலும் எந்த முதிர்ச்சியும் தென்படக்கூடாது என்பதற்காக இப்போது டயட்ஸை கடைபிடித்து உடம்பையும் பராமரித்து வருகிறார்.
இந்த படத்தில் வடிவேலுக்கு ஜோடியாக ஒரு பிரபல நடிகையைத் தான் நடிக்க வைப்பது என்பதில் உறுதியாக இருந்தார் இயக்குனர் யுவராஜ். அப்படி அவர் பல நடிகைகளிடம் பேச்சுவார்த்தை நடத்தியதில் இப்போது அஜீத்துடன் பில்லா -2 படத்தில் நடித்த பார்வதி ஓமணக்குட்டன் வடிவேலுக்கு ஜோடியாக நடிக்க, ஒப்புதல் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. இருந்தும் இன்னும் அதிகாரபூர்வமாக சொல்லவில்லை. அதேசமயம் இன்னொரு ஹீரோயினி தேடும் படலமும் தொடங்கியுள்ளது.

ஒல்லிக்குச்சியாக காஜல்

ஒல்லிக்குச்சியாக இருப்பதன் ரகசியம் என்ன? சொல்கிறார் காஜல் அகர்வால்
தெற்கத்திய நடிகைகள் குஷ்பூ போன்ற குண்டான நடிகைகளைத் தான் ரசிகர்கள் ரசிப்பார்கள் என்பதை அறிந்து ஓரளவு குண்டாகவே உடம்பை பராமரித்து வருகின்றனர். ஆனால், துப்பாக்கி புகழ் காஜல் அகர்வாலோ, தமிழில் முக்கிய நடிகையான பிறகும் ஒல்லிக்குச்சி உடம்பை அப்படியே பாதுகாத்து வருகிறார். ஒரு ரெண்டு கிலோ எடை அதிகரித்து விட்டாலும் அய்யய்யோ வெயிட் போட்டுடுச்சே என்று பதறிப்போகிறார். சதை போடும் உணவுகளை எடுக்கத் தொடங்கி விடுகிறார்.
அவரிடத்தில் இந்த அளவுக்கு ஒல்லிக்குச்சியாக உடம்பை பாதுகாக்க வேண்ய அவசியம் தான் என்ன? என்று கேட்டால், எனது முகச்சாயலுக்கு ஒல்லியான தேகம்தான் எடுப்பாக இருக்கும் என்பது ஒரு காரணம். மேலும் இப்பேதைய சில ஹீரோக்கள் பார்ப்பதற்கு வாட்டசாட்டமாக இருந்தால் கூட பாடல் காட்சிகளில் நடிகைகளை தூக்க முடியாமல் தடுமாறிப் போகிறார்கள்.
அதனால் அந்த மாதிரி நடிகர்களுடன் நடிக்கிறபோது, அவர்களுக்கு என்னால் எந்தவித சிரமமும் ஏற்படக்கூடாது என்பதால் இந்த மாதிரி வெயிட்டை குறைத்து வைத்திருக்கிறேன். இப்படி நான் உடம்பை ஒரே சீராக வைத்திருப்பதால் எல்லா ஹீரோக்களும் தூக்கிப் பந்தாடக்கூடிய நடிகையாக திகழ முடியும் என்பதினாலேயே எடை விசயத்தில் கவனமாக இருந்து வருகிறேன் என்கிறார் காஜல் அகர்வால்.

தமிழகத்தையே உருக வைத்த

அண்ணன் தங்கை உறவை சித்தரித்த சிறந்த படம் பாசமலர்

1961 இல் வெளியான படங்களில் ‘பாசமலர்’, சிவாஜி, ஜெமினி, சாவித்திரி ஆகியோரின் வெற்றி மகுடத்தில் ஒரு வைரக்கல்.
அண்ணன், தங்கை பாசத்தை மையமாக வைத்து எடுத்த படங்களில் இப்படம் 25 வாரங்கள் ஓடி, காவிய அந்தஸ்து பெற்ற படமாகும்.
1961 ஆம் ஆண்டு வெளி வந்து தமிழகத்தையே உருக வைத்த அண்ணன் தங்கை உறவைச் சித்திரிக்கும் ஒரு நல்ல படமாக மிளிர்ந்தது பாசமலர்.
இப்படத்தின் கதை கே.பி. கொட்டாரக்கரா என்ற மலையாள எழுத்தாளருடையது. வசனம் எழுதியவர் ஆரூர்தாஸ். எம்.ஜி.ஆர். படங்களுக்கு வசனம் எழுதிக் கொண்டிருந்த இவரை, சிவாஜிக்கு அறிமுகம் செய்து வைத்தவர் ஜெமினி கணேசன். பாசமலர் வெற்றியைத் தொடர்ந்து சிவாஜியின் படங்களுக்கும் வரிசையாக வசனம் எழுதினார் ஆரூர்தாஸ்.
இப்படத்தை இயக்கியவர் பீம்சிங். அவருடைய ‘பா’ வரிசைப் படங்களில் மிகப்பெரிய வெற்றிப்படம் இது. இப்படம் தெலுங்கில் ‘டப்’ செய்யப்பட்டது. பிறகு இந்தி, சிங்களம் ஆகிய மொழிகளில் தயாரிக்கப்பட்டது.
இப்படத்திற்கு பிறகு சிவாஜியும், சாவித்திரியும் காதலர்களாகவோ, கணவன் மனைவியாகவோ எப்படத்திலும் நடிக்கவில்லை.
1961 - 1992 வரை தமிழகத்தில் உள்ள குடும்பங்களில் முதல் குழந்தை ஆணாகப் பிறந்து, இரண்டாவது குழந்தை பெண்ணாகப் பிறந்தால், அக்குழந்தைக்கு பாசமலர் படத்தில் சாவித்ரி நடித்த கதாபாத்திரமான ‘ராதா’ என்ற பெயரைத்தான் வைத்தார்களாம்.
நடிகை சாவித்திரி பற்றிய தகவல்கள்
இப்படத்தில் நடித்த நடிகை சாவித்திரி ஆந்திராவின் குண்டுர் மாவட்டத்தில் உள்ள சிறாயூரில் பிறந்தவர். நாடகத் துறையில் அறிமுகமாகி அங்கிருந்து சினிமாவிற்கு வந்தவர். எட்டாம் வகுப்புவரை படித்திருக்கிறார்.
எல்.வி. பிரசாத்தின் சம்சாரம் என்ற படத்தில் அறிமுகமானார். தமிழ், தெலுங்கு, ஹிந்தி என்று முந்நூற்று பதினெட்டு படங்களில் நடித்திருக்கிறார்.
தமிழில் குழந்தை உள்ளம், பிராப்தம் ஆகிய இரண்டு படங்களை இயக்கியிருக்கிறார். தெலுங்கிலும் நான்கு படங்களை இயக்கியிருக்கிறார்.
மகாகவி பாரதியின் மீது மரியாதை கொண்டு எட்டயபுரத்தில் குடிநீர்க் கிணறு ஒன்றை உருவாக்கி கொடுத்தவர் சாவித்திரி.

காலத்தால் அழியாத காவிய பாடல்

இரண்டு கணேசன்களும் (சிவாஜி, ஜெமினி) சாவித்திரியும் இணைந்து நடித்த மகத்தான படமான ‘பாசமலர்’ 1961 இல் வெளிவந்தது. ராஜாமணி பிக்சர்ஸ் பெயரில் எம்.ஆர். சந்தானமும், கே. மோகனும் தயாரித்த படம் இது. அண்ணன் தங்கை பாசத்தை மையமாகக் கொண்ட கதையை ஏ. பீம்சிங் இயக்கியுள்ளார். அண்ணனும், தங்கையுமாக சிவாஜியும், சாவித்திரியும் வாழ்ந்து காட்டினர். இப்படத்தில் இடம்பெற்ற பாடல்கள் அனைத்துமே அட்டகாசமான பாடல்களாகும்.
ஆயினும் மலர்ந்தும் மலராது பாதி மலர் போல..... என்ற பாடல் அன்று முதல் இன்று வரை மட்டுமல்ல, என்றென்றும் காலத்தால் அழியாக காவியப் பாடலாக ஒலித்துக் கொண்டிருக்கும்.
கவியரசரின் காவிய வரிகளுக்கு, மெல்லிசை மன்னர்கள் மெல்லிசையமைக்க டி.எம். எஸ்ஸ¤ம், பி. சுசீலாவும் உருகிப் பாடியிருப்பார்கள்.... கேட்பவர்களை உருகவைத்து விடுவார்கள்...!
இப்பாடலைக் கேட்காத செவிகளும் செவிகளல்ல என்றுதான் நான் சொல்ல வேண்டும்.
சிவாஜியும் சாவித்திரியும் வெவ்வேறு வீடுகளில் தங்கள் குழந்தைகளைத் தாலாட்டும் பாடலான, “மலர்ந்தும் மலராத பாதி மலர் போல” வளரும் விழி வண்ணமே.
வந்து விடிந்தும் விடியாத காலைப்பொழுதாக விளைந்த கலையன்னமே நதியில் விளையாடிக் கொடியில் தலைசீவி நடந்த இளம் தென்றலே வளர்ப் பொதிகை மலை தோன்றி மதுரை நகர் கண்டு பொலிந்த தமிழ் மன்றமே” என்ற கவிஞர் கண்ணதாசனின் கற்பனை வளத்திற்குச் சிகரமாய் அமைந்த பாடல். இந்த வரிகளுக்கு நிகரான வேறு வரிகளைக் காணவே முடியாது.
பாடலின் முடிவில் ம்ம்ம்ம்ம்ம்ம்ம்..... என டி.எம். எஸ்ஸின் ஹம்மிங்கும், அவருக்கிணையாக பி. சுசீலாவின் ஆரிராராரிரோ ஹம்மிங்கும் தேனினும் இனியவை....
இப்பாடலைப் பற்றி சொல்லிக் கொண்டே போகலாம்...
இப்பாடலுக்கு சோகமும் அன்பும் பாசமும் இழைந்த ஒரு தாலாட்டு இசையினை மெல்லிசை மன்னர்கள் பாடல் முழுதும் இழையோட விட்டிருப்பார்கள்...!

பழம்பெரும் இசையமைப்பாளர் டி.கே.ராமமூர்த்தி

பழம்பெரும் இசையமைப்பாளர் டி.கே. ராமமூர்த்தி 1922ம் ஆண்டு திருச்சியில் பிறந்தார். ராமமூர்த்தி இசை குடும்பத்தில் இருந்து வந்தவர். இவரது அப்பா கிருஷ்ணசுவாமியும், தாத்தா மலைக்கோட்டை கோவிந்தசாமியும் பிரபல வயலின் கலைஞர்கள், தனது அப்பா மற்றும் தாத்தாவை போலவே ராமமூர்த்தியும் வயலின் கலைஞராக தனது இசையுலக பயணத்தைத் தொடங்கினார். சிறுவயதிலேயே பல்வேறு மேடை கச்சேரிகளில் வயலின் கச்சேரிகள் நடத்தியுள்ளார்.
பிரபல இசையமைப்பாளர் எஸ்.பி. வெங்கட்ராமன்தான் ராமமூர்த்தியை சினிமாவிற்கு கொண்டு வந்தார். பின்னர் சி.ஆர். சுப்புராமன் ஆகியோருடன் பணியாற்றியவர் பிறகு விஸ்வநாதனுடன் இணைந்து பணியாற்றத் தொடங்கினார்.
இவர்கள் இருவரும் இணைந்து பணியாற்றிய பெரும்பாலான படங்கள் சூப்பர்-டூப்பர் ஹிட்டாகின. மெல்லிசை மன்னர்கள் என பெயர் பெற்ற விஸ்வநாதனும், ராமமூர்த்தியும் இணைந்து 700 க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்துள்ளனர். 1964 ம் ஆண்டு, எம்.ஜி.ஆரின், ஆயிரத்தில் ஒருவன் படத்திற்கு பிறகு இருவரும் பிரிந்தனர். விஸ்வநாதன் தனியாகவும், ராமமூர்த்தி தனியாகவும் இசையமைக்கத் தொடங்கினர்.
ராமமூர்த்தி தனியாக கிட்டதட்ட 19 படங்களுக்கு இசையமைத்துள்ளார். இவர் தனியாக இசையமைத்த சாது மிரண்டால், தேன் மழை, மறக்க முடியுமா, நான், தங்கச் சுரங்கம், காதல் ஜோதி, ஆலயம், சோப்பு சீப்பு கண்ணாடி, சங்கமம் ஆகிய படங்கள் மிகப் பிரபலமாகின. மிகச் சிறந்த வயலின் இசைக்கலைஞரான இவரது பங்களிப்பில் உருவான எங்கே நிம்மதி என்ற பாடல் நீடித்த புகழைப்பெற்ற பாடலாகும். பின்னர் 29 ஆண்டுகளுக்கு பின்னர் 1995ம் ஆண்டு எங்கிருந்தோ வந்தான் படத்தில் மீண்டும் விஸ்வநாதனும், ராமமூர்த்தியும் இணைந்து பணியாற்றினார்கள். சினிமாவில் வாய்ப்பு குறைந்த போதும், தொடர்ந்து மேடை கச்சேரிகளில் பங்கேற்று வந்தார் ராமமூர்த்தி சமீபத்தில் கூட சில நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். கலை உலக சேவைக்காக தமிழக அரசின் கலைமாமணி விருது உட்பட 40 க்கும் மேற்பட்ட பல்வேறு விருதுகளை பெற்றுள்ளார் ராமமூர்த்தி. மறைந்த ராமமூர்த்திக்கு 4 ஆண்கள் மற்றும் 7 பெண்கள் உட்பட 11 வாரிசுகள் உள்ளனர்.

மலர்ந்தும் மலராத பாதி மலர் போல


மலர்ந்தும் மலராத பாதி மலர் போல
மலரும் விழிவண்ணமே - வந்து
விடிந்தும் விடியாத காலைப் பொழுதாக
விடிந்த கலையன்னமே
நதியில் விளையாடி கொடியில் தலைசீவி
நடந்த இளம் தென்றலே- வளர்
பொதிகை மலை தோன்றி மதுரை நகர் கண்டு
பொலிந்த தமிழ் மன்றமே (மலர்ந்தும்)

யானைப் படை கொண்டு சேனை பல வென்று
வாழப் பிறந்தாயடா புவியாளப் பிறந்தாயடா
அத்தை மகளை மணங்கொண்டு இளமை வழி கண்டு
வாழப் பிறந்தாயடா வாழப் பிறந்தாயடா
அத்தை மகளை மணங்கொண்டு இளமை வழி கண்டு
அத்தை மகளை மணங்கொண்டு இளமை வழி கண்டு
வாழப் பிறந்தாயடா

தங்கக் கடியாரம் வைர மணியாரம்
தந்து மணம் பேசுவார் பொருள் தந்து மணம் பேசுவார்
மாமன் தங்கை மகளான மங்கை உனக்காக
உலகை விலை பேசுவார் உலகை விலைபேசுவார்
மாமன் தங்கை மகளான மங்கை உனக்காக
மாமன் தங்கை மகளான மங்கை உனக்காக
உலகை விலை பேசுவார்

சிறகில் எனை மூடி அருமை மகள் போல
வளர்த்த கதை சொல்லவா
கனவில் நினையாத காலம் இடை வந்து
பிரித்த கதை சொல்லவா
பிரித்த கதை சொல்லவா

கண்ணில் மணி போல மணியில் நிழல் போல
கலந்து பிறந்தோமடா- இந்த
மண்ணும் கடல் வானும் மறைந்து முடிந்தாலும்
மறக்க முடியாதடா உறவைப் பிரிக்க முடியாதடா

ம்ம்ம்ம் ம்ம் ஹம்ம்ம்
அன்பே ஆரிராராரோ ஆரிராராரோ ஆரிராராரோ
அன்பே ஆரிராராரோ ஆரிராராரோ ஆரிராராரோ

பாடியவர்கள்: டி. எம். செளந்தரராஜன், பி. சுசீலா
இயற்றியவர்: கண்ணதாசன்
படம்: பாசமலர்
இசை: விஸ்வநாதன், ராமமூர்த்தி

Wednesday, April 17, 2013

தமிழில் ரீ என்ட்ரி சதா

தமிழில் மீண்டும் வாய்ப்பு கிடைத்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது என்றார் சதா ‘ஜெயம்’ படத்தில் கிராமத்து பெண்ணாக அறிமுகமாகி ரசிகர்களை கவர்ந்தவர் சதா. அடுத்து நடித்த ‘வர்ணஜாலம்’, ‘அந்நியன்’ உள்ளிட்ட படங்களில் கிளாமர் இமேஜிக்கு மாறினார். இது அவருக்கு கைகொடுக்கவில்லை. 2011 ஆம் ஆண்டு ‘புலிவேசம்’ படத்தில் நடித்தார். அதன் பிறகு மீண்டும் தமிழில் வாய்ப்பு என்பது அவருக்கு எட்டாக்கனியாகவே இருந்தது. இந்நிலையில் சுந்தர் சி இயக்கும் ‘மதகஜ ராஜா’ படத்தில் குத்துபாட்டுக்கு ஆட அழைப்பு வந்தது. இதை பயன்படுத்தி மீண்டும் கோலிவுட்டில் ஒரு ரவுண்ட் வரலாம் என்ற எண்ணத்தில் உடனடியாக ஒப்புக் கொண்டிருக்கிறார்.
இதுபற்றி சதா கூறும் போது “ஒரு பாடலுக்கு ஆட வேண்டும் என்று சுந்தர் சி கேட்டதும் ஓகே சொல்லிவிட்டேன். பாடலை பார்த்த பிறகு சுந்தர் சி மீண்டும் என்னை அழைத்து கவுரவ வேடத்திலும் நடிக்க வேண்டும் என்றார். அதை ஏற்று நடித்தேன். நீண்ட இடைவெளிக்கு பிறகு தமிழில் நடிப்பது சந்தோஷம். தமிழில் சரியான வாய்ப்பு கிடைக்காததால் தெலுங்கு, கன்னட படங்களில் நடித்தேன். அவை வெற்றி பெறாததால் பொருத்தமான வேடங்கள் அமையவில்லை. இப்போது 3 தமிழ் படங்களில் நடிக்க வாய்ப்பு வந்திருக்கிறது. இதில் 2 படங்களில் நடிக்க உள்ளேன்” என்றார்.

நெருக்கமாக நடிக்க தயக்கம் இல்லை

பிரியா ஆனந்த்
‘முத்தம் கொடுத்து நடிக்க எனக்கொன்றும் தயக்கம் கிடையாது’ என்றார் பிரியா ஆனந்த். ‘இங்லிஷ் விங்லிஷ்’, ‘நூற்றெண்பது’ உள்ளிட்ட படங்களில் நடித்திருப்பவர் பிரியா ஆனந்த். அவர் கூறியது, அமெரிக்காவில் பெற்றோருடன் இருந்த போதே நிறைய சினிமா பார்ப்பேன். சினிமாவில் ஏதாவது ஒரு துறையில் சேர வேண்டும் என்ற எண்ணத்துடன் சென்னை வந்தேன். ஷங்கா இயக்கிய படங்களை பார்ப்பேன். ஒவ்வொரு படத்திலும் ஒரே மெசேஜ் சொல்வார். அவரிடம் உதவி இயக்குனராக சேர விரும்பினேன். இந்நிலையில் மொடலிங் செய்யும் வாய்ப்பு வந்தது. அதைத் தொடர்ந்து நடிக்கவும் வாய்ப்பு வந்தது. அதில் கவனம் செலுத்த ஆரம்பித்தேன்.
ஒருமுறை ஷங்கரை பார்த்த போது என் விருப்பத்தை கூறினேன். அவர் பலமாக சிரித்தார். தற்போது நடிகையாக எனது திரையுலக வாழ்க்கையை தொடர்கிறேன். சினிமாவில் எனக்கு பின்புலம் யாரும் கிடையாது. என்னுடைய திறமையை மட்டுமே நம்புகிறேன். நெருக்கமான காட்சிகளில் நடிப்பது பற்றி கேட்கிறார்கள்.
ஏற்கனவே ‘நூற்றெண்பது’, ‘கோ அன்ட்டே கோட்டி’ படங்களில் ஹீரோவுக்கு உதட்டோடு உதடு முத்தம் கொடுத்து நடித்திருக்கிறேன். நெருக்கமான காட்சிகளிலும் நடித்திருக்கிறேன். ஆனால் இந்த காட்சிகளில் ஆபாசமாக நடித்ததாக யாரும் என் மீதும் குற்றம் சொல்லவில்லை. காட்சிக்கு தேவையென்றால் முத்தம் கொடுத்தும், நெருக்கமாகவும் நடிக்க தயங்கமாட்டேன்’ என்றார்.

தமிழ்ப் படம் இனிப்பு தமிழ் மாப்பிள்ளை கசப்பு

லட்சுமி மேனன் தமிழ் சினிமா இயக்குநர்களின் முதல் தேர்வாக உள்ள நடிகைகளில் இருவரும் ஒருவர் சுந்தர பாண்டியன், கும்கி என அடுத்தடுத்து இரண்டு சூப்பர் ஹிட் படங்களின் நாயகி என்பதால் அதிர்ஷ்ட நாயகி என்ற அந்தஸ்தையும் பெற்றுவிட்டார். அழகு, திறமை, நல்ல தமிழ் உச்சரிப்பு என அனைத்துத் தகுதிகளும் நிறைந்த லட்சுமி மேனன், சித்திரை திருநாளுக்காக சிறப்புப் பேட்டி சுந்தரபாண்டியன், கும்கி என இரண்டு பெரிய வெற்றிப் படங்களில் இந்த வெற்றியை எப்படி உணர்கிaர்களா? இது நான் நடிக்க முடிஞ்சதுன்னு நினைக்கிறன். இத்தனைக்கும் நான் கதை கேட்கல, ஹீரோ யாருன்னு பார்க்கவ, மைனா படம் பண்ண பிரபு சொலமன் படம்னு மட்டும்தான் தெரியும். அப்போ நான் ரொம்ப சந்தோஷப்பட்டேன். நல்ல இயக்குநர்கிட்ட போயிருக்கேன்னு சந்தோஷமா நடிச்சேன். அது பெரிய வெற்றியைப் பெற்றது. அடுத்து சுந்தர பாண்டியனும் அப்படித்தான். அந்தப் படத்துக்கும் நான் கதை கேட்கல. சசிகுமார் படம் நடிச்சேன். அதுவும் நல்லா வந்துருச்சி.
தமிழ் உச்சரிப்பு இத்தனை சுத்தமா உங்களுக்கு வருதே... எப்படி?
எல்லாரு§மெ என்கிட்ட கேக்குற கேள்வி இது. அது எப்படின்னெல்லாம் தெரியல... தமிழ் எனக்கு நல்லா பேச வரும். இத்தனைக்கும் நான் தமிழ் கத்துக்கல. ஆனா தமிழ் எனக்கு ரொம்பப் பிடிக்கும். சின்ன வயசிலிருந்தே நான் தமிழ்ப் படங்கள்தான் விரும்பிப் பார்ப்பேன். மலையாளப் படம் பத்தி ஏதாவது கேட்டாக் கூட எனக்குத் தெரியாது. ஆனா தமிழில் எந்தப் படம் பத்திக் கேட்டாலும் சொல்வேன். என்னென்ன படம் இப்போது ஷ¥ட்டிங் போகுதுன்னு கூட சொல்வேன்.
நீங்க குடும்பப் பாங்கான நடிகையா இருக்க விரும்புகிaர்களா? அல்லது கிளாமரா இருக்க ஆசையா? அப்படி எதுக்கு முத்திரை குத்திக்கணும்... எனக்கு எல்லா மாதிரி கேரக்டர்களையும் பண்ண ஆசை விதவிதமான கேரக்டர்களையும் செசு பார்க்க ஆசைப்பட்றேன். கதைக்கு என்ன தேவையோ அதை செய்ய தயாரா இருக்கேன். ஒரே மாதிரி பண்ணிட்டிருந்தா எனக்கும் போரடிக்கும், பார்க்கிறவர்களுக்கும் போரடிக்கும். கெளதம் கார்த்திக்கோட சிப்பாய்னு ஒரு படம் பண்றேன். அதில என் கேரக்டர் ரொம்ப வித்தியாசமா இருக்கும். விமல் கூட மஞ்சப்பை படம் பண்றேன். அதில் எனக்கு நகரத்துப் பெண் வேடம்.
தமிழில்தான் முதலில் அறிமுகமா அல்லது மலையாளத்தில் நடிச்சிருக்கீங்களா? மலையாளத்துல இரண்டு படங்கள் பண்ணிட்டுதான் இங்க வந்தேன். வினயன் சார்தான் என்னை முதல்ல அறிமுகப்படுத்தினார். ரகுவரனோட ஸ்வந்தம் ரஸியா அடுத்து ஐடியல் கப்பிள்னு ஒரு படம் பண்றேன். இரண்டுமே சரியா போகல. அதென்னமோ மலையாளம் எனக்கு ராசியாக இலலை.
மலையாளத்தில் நடிப்பீர்களா? என்று நிறையப்பேர் கேட்டிருக்காங்க ஆனால் நான் தமிழுக்குத்தான் முதலிடம் தருவேன்.
தமிழ் சினிமா பிடிக்கும் சொல்aங்க. தமிழ் பையனை கல்யாணம் பண்ணிப்பீங்களா?
நிச்சயம் முடியாது ஒரு மலையாளியைத்தான் நான் திருமணம் செஞ்சுக்குவேன்.

சம்பளம் வாங்காமல் நடித்த நயன்

விரைவில் வெளியாகவுள்ள ஒரு தமிழ் படத்தில், ஒரே ஒரு பாடலுக்கு மட்டும், நடனமாடியுள்ளார் நயன்தாரா. இதில் விசேஷம் என்னவென்றால், இந்த நடனத்துக்காக, சம்பளம் வாங்காமல் நடித்து கொடுத்தாராம், அவர் ஓரிரு படங்களில் மட்டுமே நடித்துள்ள நடிகைகள் கூட, ஒரு நாள் கால்iட்டுக்கு, இலட்சம் கணக்கில், சம்பளம் கேட்கும் இந்த காலத்தில், மார்க்கெட்டில் உச்சத்தில் இருக்கும் நயன்தாரா, சம்பளம் வாங்காமல், ஒரு பாடலுக்கு நடித்து கொடுத்தது, கோலிவூட்டில் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. படத்தின் தயாரிப்பாளருடன் உள்ள, நட்பு காரணமாகவே, நயன்தாரா, இந்த விஷயத்தில், தாராளமாக நடந்து கொண்டதாக கோடம்பாக்கம் வட்டாரங்கள் கூறுகின்றன. இந்த படத்தில், நயன்தாராவின் நடனம், பெரிதும் பேசப்படும் அளவுக்கு உள்ளதாம்.

Tuesday, April 16, 2013

சந்திரமுகியில் சிம்ரனுக்கு பதில் ஜோதிகா நடித்தது ஏன்

ரஜpனியின் ~லக.. லக..' மகத்துவம்

‘சந்திரமுகி’யில் சிம்ரன் நடிப்பதாக இருந்த சந்திரமுகி வேடத்தில் ஜோதிகா நடித்தார். இதற்கான காரணத்தை ‘சந்திரமுகி’ அனுபவங்கள் பற்றி டைரக்டர் பி. வாசு தெரிவிக்கும்போது குறிப்பிட்டிருந்தார். அதில்...
‘சந்திரமுகி’யில் ரஜினி சார் நடிக்கிறார் என்றதும், அடுத்து 2 விஷயங்கள் முக்கியமாகப்பட்டது. ஒன்று: கதாநாயகி, அடுத்தது இசை.
கன்னடத்தில் செளந்தர்யா நடித்திருந்தார். 100 சதவீதம் சந்திரமுகியாகவே மாறிப்போனார். செளந்தர்யா மட்டும் உயிரோடு இருந்திருந்தால் ‘சந்திரமுகி’ கேரக்டருக்கு வேறு ஒரு நடிகையை யோசித்திருக்கவே மாட்டோம். துரதிர்ஷ்டவசமாக அவர் விமான விபத்தில் இறந்து விட்டார்.
சந்திரமுகியாக யாரைப் போடலாம் என்று யோசித்தேன். அப்போது என் மனதுக்குள் சந்திரமுகியாக வந்து போனவர் நடிகை சிம்ரன்.
சிம்ரன் சிறந்த நடனக்கலைஞர். அவர் நாயகி என்று முடிவானதும் இசைக்கு என் மனதில் வந்து போனவர் வித்யாசாகர். வித்தியாசமான இசையை கதைக்கு தேவையான விதத்தில் தருபவர் என்பதால் என் விருப்பத்தில் அவர் இருந்தார். தெலுங்கில் வரும் ‘ராரா’ பாட்டு ரொம்பப் பிரபலம். அதுபற்றி வித்யாசாகரிடம் பேசியபோது, ‘அதே டியூன் வேண்டாம். நான் ஒரு டியூன் போடுகிறேன். பிடித்திருந்தால் வைத்துக்கொள்ளுங்கள்’ என்றார். அப்படி அவர் புதிதாக டியூன் போட்டு ஹிட்டானதுதான் சந்திரமுகியில் வரும் ‘ராரா’ பாட்டு.
‘சந்திரமுகி’ கேரக்டரில் நடிக்க சிம்ரன் ஆர்வத்துடன் ஒப்புக்கொண்டார். திருமணமாகி அவர் கருவுற்றிருந்த நேரம் அது. படத்தில் ‘ராரா’ பாட்டில் சந்திரமுகி குதித்துக் குதித்து சுழன்றாடியபடி நடனமாட வேண்டும். அப்படி சிம்ரன் ஆடும்போது நிச்சயம் கருவில் வளரும் குழந்தையின் உயிருக்கு ஆபத்தாக முடியும் வாய்ப்பு அதிகம்.
இதை சிம்ரனிடம் சொல்லி ‘சந்திரமுகி வாய்ப்பா? குழந்தையா?’ என்ற முடிவை அவரிடமே விட்டோம். சிம்ரனின் தாய்மையுணர்வு வென்றது. அதனால் அவர் விலகிக்கொள்ள ‘சந்திரமுகி’யாக என் மனதில் அடுத்த கணமே வந்து போனவர்தான் ஜோதிகா.
இயல்பில் நடனக் கலைஞராக இல்லாவிட்டாலும், ஜோதிகா தனது ஆர்வத்தில் அந்த சந்திரமுகி கேரக்டரோடு கலந்து போனார் என்பதே உண்மை.
ரஜினி சாரை பற்றி சொல்ல வேண்டுமானால், தனது கேரக்டர் என்னவென்று உறுதியானதுமே, அந்த கேரக்டரை தனது மனதுக்குள் ‘டிசைன்’ பண்ணத் தொடங்கிவிடுவார். சரவணன் கேரக்டர், வேட்டையன் கேரக்டர் இந்த இரண்டும் எப்படி எப்படி இருக்க வேண்டும் என்பது பற்றி என்னிடம் விவாதித்துக் கொள்வார்.
இந்தப் படத்தில் ரஜினி சாருக்கே உரிய பஞ்ச் டயலாக்குகள் கிடையாது என்பதை முதலிலேயே முடிவு செய்து கொண்டோம். இருந்தாலும் படத்தில் என்னென்ன செய்யலாம் என்பதை அவர் மனதுக்குள் ‘டிசைன்’ செய்து விட்டார்.
ஒருநாள் என்னை அழைத்த ரஜினி. ‘படத்தில் வேட்டையன் வரும் போது ஏதாவது புதுமையாக இருந்தால் நல்லது’ என்றார். அதோடு நில்லாமல், ‘இப்போ நான் ஒரு சீன் பண்ணிக் காட்டுகிறேன். எப்படியிருக்கிறது என்று சொல்லுங்கள்’ என்றவர், ஒரு பத்து அடி தூரம் நடந்து போனார்.
அடுத்த கணம் அதேவேகத்தில் திரும்பினார். என்னை நெருங்கியதும் முகத்தில் ஆக்ரோஷமான பாவனையுடன் ‘லகலகலகலக’ என்று செய்து காட்டினார்.
நான் என்னையும் அறியாமல் ‘சூப்பர்’ என்றேன். என்றாலும் அவருக்கு சந்தேகம் ‘அதெப்படி உடனே ‘சூப்பர்’னு சொல்லிட்டீங்க...?’ என்று கேட்டார்.
பதிலுக்கு நான் அவரிடம் ‘ஒரு தடவை சொன்னா நூறு தடவை சொன்னது மாதிரி’ என்று நீங்கள் முன்பு கூறிய வசனம் ரசிகர்களிடம் எப்படி ‘ரீச்’ ஆனதோ அதுமாதிரி இந்த ‘லகலகலகலக’வும் பிரபலம் ஆகும். முதலில் நான் ஒரு ரசிகனா உங்களைப் பார்க்கிறேன். பார்த்ததும் பிடித்துப் போய்விட்டது. இதையே வேட்டையனுக்கான கெட்டப்பில் நீங்கள் செய்யும் போது இன்னும் பிரமாதமாய் இருக்கும்’ என்றேன்.
இந்தப் படம் தமிழில் ரிலீஸான 14.04.2005 அன்றே தெலுங்கிலும் ‘டப்’ செய்து வெளியிடப்பட்டது. 280 நாட்கள் ஓடி பெரிய ‘ஹிட்’.
அந்த ஆண்டு தெலுங்கில் நேரடிப் படமாக வந்த தெலுங்கு ஹீரோக்கள் நடித்த படங்களைவிட இந்தப்படம் அதிகம் வசூல் செய்தது.
இந்தப் படத்தின் பெயரை சொல்லத் தெரியாத சிறுவர்கள் கூட தங்கள் பெற்றோர்களிடம் ‘லகலகலகலக படத்துக்குப் போவோம்’ என்று நச்சரிப்பு செய்து தங்கள் பெற்றோரை தியேட்டருக்கு அழைத்துப் போனதாக அறிந்த போது, ரஜினி சாரின் ‘லகலக’ மகத்துவம் தெரிந்தது.
வேட்டையன் கேரக்டருக்குள் ரஜினி சார் எப்படி ஒன்றிப்போனார் என்பது இன்னும் ஆச்சரியம். ‘லகலக’ சொல்லிவிட்டாரே தவிர, வேட்டையன் கெட்டப்பில் எப்படியிருப்பார் என்பது முடிவாகவில்லை. அதற்கும் அவரே விடையாக வந்தார். குஷால்தாஸ் கார்டனில் படப்பிடிப்பு நடந்த போது வேட்டையன் கேரக்டரை ‘ஸ்டில்’ எடுக்கலாமே என்று பேசினோம்.
‘வாசு சார்! ஒரு மணி நேரத்தில் வருகிறேன்! என்று சொல்லிவிட்டு கேரவனுக்கு போனவர், அடுத்த ஒரு மணி நேரத்தில் படத்தில் நீங்கள் பார்த்த அந்த வேட்டையன் ‘கெட்டப்’பில் வெளிப்பட்டார். முதலில் அவரை யாரென்றே யூனிட்டில் உள்ளவர்களுக்கு அடையாளம் தெரியவில்லை. வெறித்தனமான பார்வையில் கம்பீரம் கலந்த வேட்டையனாக ரஜினி சாரை பார்த்த போது, என் மனதில் இருந்த வேட்டையன் என் எதிரே நிற்பதாகவே உணர்ந்தேன்.
கிளைமார்க்ஸ் காட்சியை மட்டும் தொடர்ந்து 6 இரவுகள் எடுத்தோம். எந்தவித தயக்கமும் இன்றி இரவு 9 திணிக்கு தொடங்கும் படப்பிடிப்பில் விடியக் காலை 4 மணி வரை நடித்துக் கொடுத்துவிட்டுப் போனார் ரஜினி.
மொத்தப் படத்தையும் 80 நாட்களில் எடுத்து முடித்தேன். படத்தில் நடிகர் நடிகைகள் தவிர கதவு படி, வீடு மூன்றையும் கேரக்டராக்கியதையும் ரஜினி சார் பாராட்டினார்.
இந்த படத்துக்கான காட்சிகள் சென்னை குஷால்தாஸ் கார்டனில் படமாக்கப்பட்டது போல தெரியும். உண்மையில் வீட்டின் படிகள் மைசூரிலும், கதவுகள் பெங்களூரிலும், வேட்டையன் அறை ஐதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியிலும், ‘சந்திரமுகி’ ஜன்னல் வழியாக பார்க்கிற காட்சி பெங்களூரில் இந்திரா கார்டனிலும் படமாக்கப்பட்டது. இந்தக் கதையின் ஒவ்வொரு காட்சியுமே ‘ஆப்த மித்ரா’ மூலம் எனக்குள் பதிவாகியிருந்ததால், குழப்பம் எதுவும் இன்றி இந்த மாதிரியான காட்சிகளை கையாள முடிந்தது.
படத்தின் நூறாவது நாளில் இருந்து 200வது நாள், 300வது நாள் என தொடர்ந்து ரஜினி சார் என்னிடம் போனில் வாழ்த்து தெரிவித்து விடுவார். படம் 700வது நாள் வந்த போது என்னிடம் பேசி வாழ்த்தியவர், ‘நான் இப்போது ராகவேந்திரா கோவிலில் இருந்து உங்களை வாழ்த்திக் கொண்டிருக்கிறேன்’ என்றார். கோவிலுக்கு வந்த இடத்திலும் மறக்காமல் வாழ்த்துகிற அந்த பண்பு என்னை ரொம்ப நேரம் பரவசத்தில் வைத்திருந்தது.
படம் ‘பிரிவியூ’ வின்போது ரஜினி சார் மனைவி லதாவுடன் வந்திருந்தார். படம் முடிந்து போகும் போது ‘வரேன்’ என்று மட்டும் சொல்லி கை கொடுத்துவிட்டுப் போய்விட்டார். மறுநாள் என்னை வீட்டுக்கு அழைத்தவர், நான் போனதும் உற்சாகமாய் வரவேற்றார். அப்போது அவர் என்னிடம், ‘எனது ஒவ்வொரு படத்தையும் என்னுடன் இருந்து லதா (மனைவி) பார்ப்பார்.
படம் அவருக்கு பிடித்திருந்தால் படம் முடியும் போது எனது வலது கை மணிக்கட்டை அழுத்தமாக ஒரு பிடி பிடிப்பார். அப்போதே அவருக்கு படம் பிடித்து விட்டதை உணர்ந்து கொள்வேன். படம் ரொம்ப பிடித்திருந்தால் இந்த ‘பிடி’ அழுத்தமாக இருக்கும். நேற்று ‘சந்திரமுகி’ பார்த்து முடித்த பிறகு அவரிடம் ஒரு சின்ன ‘ரியாக்ஷன்’ கூட இல்லை. வீட்டுக்கு வந்த பிறகுதான் அதற்கான காரணத்தை கேட்டேன்.
அதற்கு லதா என்ன சொன்னார் தெரியுமா? ‘படம் முடிந்த போது ஏற்பட்ட பிரமிப்பில் இருந்து நான் விடுபடவே ரொம்ப நேரம் ஆயிற்று. பிறகு எப்போது உங்கள் கையை அழுத்தி படம் பற்றிய ரிசல்ட்டை சொல்றது? இப்ப சொல்றேன்.
இதுமாதிரி படம் இதுவரைக்கும் நீங்க பண்ணலை. அந்த அளவுக்கு அற்புதமான படம். அதைக் கேட்ட பிறகுதான் எனக்கு உயிரே வந்தது. உடனே உங்களை பாராட்ட வேண்டும் என்றே நேரில் வரச்சொன்னேன்’ என்றார் ரஜினி. எம்.கே. தியாகராஜ பாகவதரின் 3 தீபாவளி கண்ட ‘ஹரிதாஸ்’ பட சாதனை¨யை சந்திரமுகி முறியடிக்கும் என்கிறார்கள். லதா, ரஜினிகாந்தின் பிரமிப்பை படம் பார்த்த ஒவ்வொரு ரசிகர்களும் அடைந்ததால்தான் இந்த சாதனையை ‘சந்திரமுகி’ படைக்கிறது என பி. வாசு கூறினார்.

இளம் வயதில் இருந்தே இசையில் ஈடுபாடு மிகுந்த பி.பி. ஸ்ரீநிவாஸ்

ஆந்திர மாநிலம் காக்கி நாடாவை பூர்வீகமாகக் கொண்ட பி.பி. ஸ்ரீநிவாஸ் இளம் வயதில் இருந்தே இசையில் ஈடுபாடு மிகுந்தவராக இருந்தார். சிறந்த குரல் வளம் கொண்ட அவரை, குடும்ப நண்பரான ஈமனி சங்கர சாஸ்திரி என்ற வீணைக் கலைஞர் சென்னைக்கு அழைத்து வந்தார். 1952 ஆம் ஆண்டு வெளிவந்த “மிஸ்டர் சம்பத்” என்ற படத்தில் இரண்டு மூன்று வரிகள் கொண்ட பாடல்களை முதன் முதலாகப் பாடினார்..
பின்னர் தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் தயாரான ‘ஜாதகம்’ என்ற படத்தில் பாடிய “சிந்தனை ஏன் செல்வமே.....” என்ற பாடல் அவருக்கு பரவலான பாராட்டுக்களைப் பெற்றுத்தந்தது. பின்னர் “விடுதலை” படத்தில் இடம்பெற்ற “ உன்னாலே நான் என்னாலே....”, ‘பிரேம பாசம்’ படத்துக்காக “அவனல்லால் புவியின் மீது....”, ‘அடுத்த வீட்டுப் பெண்’ படத்தில் இடம்பெற்ற “கண்ணாலே பேசி பேசி கொல்லாதே.....” ஆகிய பாடல்களை சினிமா துறையில் பி.பி. ஸ்ரீநிவாஸ¤க்கு தனித்துவமான இடத்தை உருவாக்கித்தந்தன. “காலங்களில் அவள் வசந்தம்....”, “பால்வண்ணம் பருவம் கண்டு.....”, “என்னருகே நீ இருந்தால்.....”, “பொன் ஒன்று கண்டேன்.....”, “மயக்கமா கலக்கமா.....”, “நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்.....” ஆகிய பாடல்கள் பி.பி. ஸ்ரீநிவாஸ¤க்கு பெரும் புகழைத் தேடித் தந்தன.
தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி, வங்காளி, மராத்தி, கொங்கணி உள்ளிட்ட 12 மொழிகளில் ஆயிரக்கணக்கான பாடல்களைப் பாடியுள்ளார். எம்.ஜி.ஆர்., சிவாஜி கணசேன், ஜெமினி கணேசன், என்.டி.ஆர். நாகேஸ்வரராவ், காந்தாராவ் உள்ளிட்ட நட்சத்திர நடிகர்களுக்கு பின்னணி குரல் பாடியுள்ளார். குறிப்பாக ஜெமினி கணேசனுக்கு பெரும்பான்மையான பாடல்களைப் பாடியுள்ளார். சிறந்த பாடகராக விளங்கிய பி.பி.எஸ். கவிதைகள் எழுதுவதிலும் தேர்ந்தவராக இருந்தார்.
2010 இல் செல்வராகவன் இயக்கத்தில் வெளிவந்த “ஆயிரத்தில் ஒருவன்” படத்தில் பாடிய “பெம்மானே.....” பாடலும் தமிழ் ரசிகர்களைப் பெரிதும் கவர்ந்தது. தமிழக அரசின் கலைமாமணி விருதைப் பெற்ற பி.பி.எஸ். தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றத்தின் தலைவராகவும் பதவி வகித்துள்ளார்.
ஸ்ரீ வெங்கடேஸ்வர சுப்ரபாதம், சாரதா புஜங்க ஸ்தோத்திரம், புரந்தரதாசர் கீர்த்தனை உள்ளிட்ட அவருடைய ஆன்மிக பாடல்கள் உலக அளவில் புகழ்பெற்றவை.
ஆயிரக்கணக்கான பாடல்களை 12 இந்திய மொழிகளில் பாடி இசை ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். அவர் பாடிய பாடல்கள் அனைத்துமே காலத்தால் அழியா வரம் பெற்றவை. மென்மையான குரல் கொண்டு இனிமையைக் கூட்டி பாடும் புதிய பாணியை திரை உலகுக்கு கொண்டு வந்தவர். வாலிக்கு வாழ்வு தந்த பி.பி.எஸ்.
நான் சிரமப்பட்ட நாட்களில் எனக்கு உதவியவர் சிறந்த பின்னணிப் பாடகரும், பன்மொழி வித்தகருமான பி.பி.ஸ்ரீநிவாஸ் என்று நானும்.... இந்த நூற்றாண்டும்.... என்னும் புத்தகத்தில் கவிஞர் வாலி குறிப்பிட்டுள்ளார்.
இதோ அவரது வரிகளில்.... “சிரமப்பட்ட நாட்களில் எனக்கு உதவியவர் பி.பி.ஸ்ரீனிவாஸ்.
கஷ்டப்பட்ட காலத்தில் அவர் காசு கொடுத்து என் இரைப்பையை நிரப்பியிருக்கிறார். நான் வறுமைக் கடலில் மூழ்கிய போதெல்லாம் என் முடியைப் பிடித்துத் தூக்கிக் கரையில் போட்டுக் காப்பாற்றியவர்.
இனியும் காலம் தள்ள முடியாது என்று நினைத்த போது மதராஸ¤க்கு ஒரு பெரிய வணக்கத்தைப் போட்டுவிட்டு, மதுரைக்குப் போய்விடலாம் என்று முடிவு கட்டினேன்.
தந்தை மறைந்து போனார், தாயோ பம்பாயில் நோய்ப்படுக்கையில் இருக்கிறாள். எனக்காக நானே அழுதுகொள்ள வேண்டுமே தவிர, ஈரம் துடைப்பார் எவருமேயில்லை. இந்த இலட்சணத்தில், சினிமாவை விடாமல் பிடித்துக் கொண்டு தொங்குவது புத்திசாலித்தனமல்ல என்று புரிந்து கொண்டேன். மறுநாள் மதுரைக்கு புறப்பட இருந்தேன். அப்போது பி.பி.ஸ்ரீனிவாஸ் என் அறைக்கதவைத் தட்டினார்.
அவரிடம் ஒரு பாட்டு பாடுங்கள் என்றேன். அவர் சிறிது சிந்தித்துவிட்டு வெளியாக இருக்கும் “சுமைதாங்கி” என்னும் படத்தில் கண்ணதாசன் எழுதிய, விஸ்வநாதன் ராமமூர்த்தி இசையமைத்திருந்த மயக்கமா? கலக்கமா? பாடலை முழுமையாகப் பாடிக்காட்டினார். பாட்டு வரிகள் என் செவியில் பாயப்பாய, மதுரைக்குப் பயணமாவதை ரத்துச் செய்து சென்னையிலேயே தங்கிவிடுவது என்று முடிவு செய்தேன். ஆம்! ஒரு சினிமாப் பாட்டு என் திசையை மாற்றியது. என் எதிர்காலத்தை நிர்ணயித்தது. நான் தொடர்ந்து போராடுவதற்கான தெம்பையும் தெளிவையும் என்னுள் தோற்றுவித்தது.

விஜயின் படங்களில் ரஜினி

இளைய தளபதி விஜயின் படங்களில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை நினைவூட்டும் ஏதாவது ஒன்று கண்டிப்பாக இருக்கும். விஜய் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் தீவிர ரசிகன்.
அவரது படங்களில் பெரும்பாலானவற்றில் ரஜினியை நினைவூட்டும்படி ஏதாவது ஒன்று இருக்கும். ரஜினி மாதிரி உடை அணிந்து வருவார். அல்லது அவரைப் போன்று ஏதாவது செய்வார்.
இல்லை என்றால் பாட்டில் ரஜினி பெயர் வரும். விஜய் ரஜினி பாணியில் கொமெடி செய்வதாகக் கூட பலர் கூறுகின்றனர். இப்படி ரஜினியை நினைவூட்டும் விஜய் படங்களில் சிலவற்றைப் பார்ப்போம்.
பிரியமுடன்
கெளசல்யாவுடன் விஜய் ஜோடி சேர்ந்த படம் பிரியமுடன். இந்த படத்தில் வரும் ஒரு பாட்டில் இவன் பார்த்தா சின்ன ரஜினிதான் என்ற வரி வரும்.
புதிய கீதை
அண்ணாமலை தம்பி இங்கு ஆட வந்தேன்டா என்று பாட்டிலேயே சூப்பர் ஸ்டாரை நினைவுபடுத்துவார்.
திருமலை
திருமலை படத்தில் சிங்குச்சா சிங்குச்சா என்று டிரஸ் போட்டு வரும் விஜயைப் பார்த்து ஜோதிகாவின் தோழி இது என்ன எங்கோ போஸ்டரில் பார்த்த மாதிரி இருக்கே என்பார். அதற்கு விஜய் நீங்க தலைவர் ரசிகையா இது தர்மதுரை ரஜினி கெட்டப் என்பார்.
மதுர
மதுர படத்தில் மப்பில் இருக்கும் விஜய் உழுந்து வடையைப் பார்த்து இது என்ன சிடி இவ்வளவு சிறியதா இருக்கு என்பார். அதற்கு ஒருவர் இது வடையப்பா என்பார். உடனே விஜய் என்ன படையப்பா சிடியா என்பார்.
திருப்பாச்சி
திருப்பாச்சி படத்தில் விஜய் வரும் முதல் காட்சியிலேயே அவர் அண்ணாமலை ரஜினி போன்ற கெட்டப்பில் வெள்ளை ஜிப்பா அணிந்து நெற்றி நிறைய பட்டை போட்டு வருவார்.
பெட்ரூமில் ரஜினிகாந்த் போட்டோ
விஜய் ரஜினிகாந்துடன் சேர்ந்து எடுத்துக் கொண்ட போட்டோவை தனது படுக்கையறையில் வைத்திருப்பதாக முன்பு ஒரு முறை தெரிவித்திருந்தார். ரஜினிக்கு தமிழகத்தில் இருக்கும் பல தீவிர ரசிகர்களில் விஜயும் ஒருவர் என்பதற்கு இதைவிட வேறு என்ன எடுத்துக்காட்டு வேண்டும்.

Wednesday, April 10, 2013

2ஆவது இன்னிங்ஸில் நயன்

ரண்டாவது இன்னிங்ஸில் ஆடிக்கொண்டிருக்கும் நயன்தாராவுக்கு தற்போது தமிழில்தான் பெரிய படங்கள் உள்ளன என்றால் மலையாளத்தில் மம்முட்டியுடனும், தெலுங்கில் நாகார்ஜூனாவுடனும் தலா ஒரு படத்தில் தற்போது நடித்துக்கொண்டிருக்கிறார். இந்தப் படங்களில் எல்லாம் அவருக்கும் கதையில் முக்கிய பங்கு உள்ளதாம். முன்பெல்லாம் நயன்தாரா என்றாலே கவர்ச்சிக் கண்ணோட்டத்தில் மட்டுமே பார்த்து வந்த சினிமா உலகம், இப்போது அவரை பர்போமென்ஸ் ஆர்ட்டிஸ்டாக பார்க்கத் தொடங்கியிருக்கிறது.
இதற்கு காரணம். நயன்தாரா நடித்த ஸ்ரீராமராஜ்ஜியம் என்ற படம் கொடுத்த பெயர்தான். அதனால் அதை தக்க வைத்துக்கொள்ளும் வகையில் தரமான கேரக்டர்களாக பார்த்து செலக்ட் பண்ணி வருகிறார் நயன். மேலும், காஜல் அகர்வால், அனுஷ்கா, தமன்னா போன்ற நடிகைகள் போன்று இப்போதும் நயன்தாராவுக்கு பீல்டில் மவுசு இருக்கிறது. அதனால் அவரது படக்கூலியும் ஒரு கோடிக்கு மேல் எகிறி நிற்கிறது.
மலையாளத்தில் இது சாத்தியமில்லை என்றாலும், அவருக்கு தமிழ், தெலுங்கில் இருக்கிற மார்க்கெட்டை புரிந்துகொண்டு அங்கு தரும் சம்பளத்தில் அதிகப்படியாகவே கொடுத்திருக்கிறார்களாம். அதனால் தனக்கு தமிழைப் போலவே மற்ற மொழிகளிலும் இருக்கிற வரவேற்பை பார்த்த நயன்தாரா, முன்னணி நடிகர், இயக்குனர்களின் படங்களுக்கு கூடுதல் முக்கியத்துவம் கொடுத்து மார்க்கெட்டை மேலும் உயர்த்தும் முயற்சியில் கவனம் செலுத்தத் தொடங்கியிருக்கிறார்.

தொடர்ந்து நடிப்பதே சாதனைதான் லட்சுமி ராய்


சினிமாவில் பல ஆண்டுகள் தொடர்ந்து நடிப்பதே சாதனைதான் என்று நடிகை லட்சுமி ராய் தெரிவித்துள்ளார். ‘கற்க கசடற’ திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர் லட்சுமி ராய். இவர் அடுத்தடுத்து படங்களில் நடித்து வந்தாலும் குறிப்பிடும்படி வெற்றி எதுவும் பெற முடியவில்லை. அண்மையில் இவரது நடிப்பில் இரண்டு படங்கள் வெளியாயின. இவை இரண்டுமே எதிர்பார்த்த வெற்றி படங்களாக அமையவில்லை. இதனால் லட்சுமி ராய்க்கு வாய்ப்பு அளிப்பதாக வாக்களித்த தயாரிப்பாளர் ஒருவர் கடைசி நேரத்தில் கைவிரித்து விட்டாராம். இதை கேட்டு அவர் அதிர்ச்சி அடைந்திருக்கிறார்.
இது குறித்து லட்சுமி ராய் கூறியதாவது :-
சினிமாவின் முன்னணி நடிகைகள் பட்டியலில் இடம்பெறாத போதும் தொடர்ந்து பல ஆண்டுகளாக நடிக்கிறேன். என்னை பொறுத்த வரை இதுவே பெரிய சாதனை எந்தப் படமாக இருந்தாலும் என வேலையை நிறைவாகவே செய்கிறேன். அதில் சில படங்கள் வெற்றிபெறும், சில படங்கள் தோல்வியடையும் அதற்கு எந்த வகையிலும் நான் காரணமாக முடியாது என இவ்வாறு தெரிவித்தார் லட்சுமி ராய்.

பாடகராக தம்பி ராமையா

பீ,யக்குனர், கொமெடி நடிகர், குணச்சித்திர நடிகர் என் பன்முக திறமை கொண்ட நடிகர் தம்பி ராமையா ‘உ’ படத்திற்காக ஒரு பாடலை பாடி பாடகராகவும் தன்னை நிரூபித்திருக்கிறார். தேசிய விருது பெற்ற நடிகர் தம்பி ராமையா உ படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். நாலு வால் சிஷ்யர்களுடன் அவர் அடிக்கின்ற கொமெடி தான் ‘உ’ படம். படப்பிடிப்பு முழுவதும் முடிந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் நடந்து வருகின்றன. இப்படத்தில் ஒரு சப்ரைஸாக தம்பி ராமையா ஒரு பாடலை பாடியிருக்கிறார். அறிமுக இசையமைப்பாளர் அபிஜித் இராமசாமி இசையில், முருகன் மந்திரம் எழுதியுள்ள ‘ஒரு படி மேல’ என்று தொடங்கும் தத்துவக் குத்துப் பாடலை பாடி அசத்தியுள்ளார். அதோடு ஒரு அசத்தலான ஆட்டமும் போட்டிருக்கிறார்.
இது குறித்து தம்பி ராமையா கூறியுள்ளதாவது, இந்த யூத் டீம் கூட ஓர்க் பண்றது உற்சாகமான அனுபவம். கிட்டத்தட்ட இந்த டீம்ல எல்லாருக்குமே 24 வயசுக்கும் குறைவு. அதோட இந்த டீம் கிட்ட ஈகோ அப்டிங்கிறது சுத்தமா இல்ல. நான் அதைப் பார்த்து ரொம்ப ஆச்சரியப்பட்டேன். இந்த ஒரு படி மேல பாட்டை நான் ரசிச்சி பாடி இருக்கேன். என் பாட்டுக்கு நானே பாடகராகவும் டான்சராகவும் இருப்பது இதுதான் முதல் முறை. தம்பி அபிஜித்தோட அற்புதமான ட்யூன். தம்பி முருகன் மந்திரம் ஆழமான வரிகள் எழுதி இருக்கிறார். கண்டிப்பா இந்தப் பாட்டு மெலடியாவும் அதே சமயம் கமர்சியலாவும் பெரிய ஹிட் ஆகும்னு நம்புறேன். இந்த யூத் பெரிசா வருவாங்க. அவங்களுக்கு என்னோட அட்வான்ஸ் வாழ்த்துக்கள் என்றார்.

சூதாட்டத்தில் அமலா பால்

அவுஸ்திரேலியாவில் நடிகர் சுரேஷ¤டன் இணைந்து சூதாடி வெற்றி பெற்றிருக்கிறார் நடிகை அமலாபால். விஜய் நடிக்கும் ‘தலைவா’ படத்தின் படப்பிடிப்பு இப்போது அவுஸ்திரேலியாவில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்பதற்காக அவுஸ்திரேலியா சென்றிருக்கிறார் நடிகை அமலாபால்.
படப்படிப்பு முடிந்ததும் அமலாபாலுக்கு ரொம்பவே போரடித்து விட்டதாம். இதனால் வெளியே சுற்றிப் பார்க்க கிளம்பிய அவர் அன்றைய பொழுதை கழிக்க சூதாட்ட விடுதிக்குள் புகுந்து ஒரு ஆட்டம் ஆடினாராம். முதலில் தோல்வியை சந்தித்த அமலாபால் பின்னர் சுரேஷ¤டன் இணைந்து ஆடியிருக்கிறார். அதில் அமலாபாலுக்கு வெற்றி கிடைத்திருக்கிறது.
இதனை பெருமையாக சொன்ன அமலா பால், சூதாட்டத்தில் தனக்கு மிகவும் ராசியான ஜோடி சுரேஷ்தான். நானும் அவரும் ஒரு ஆட்டத்தில் வென்றோம் என்று கூறியுள்ளார்.

Thursday, April 4, 2013

35 வயது

சினிமா நடிகைகளைப் பொறுத்தவரை தங்களது வயதை ரொம்ப சீக்ரெட்டாகவே வைத்திருப்பார்க்ள. குறிப்பாக 19 வயதிலிருந்து 20 வயதை தொடவே அவர்களைப் பொறுத்தவரை ஒரு ஐந்து ஆண்டுகளாவது பிடிக்கும். அந்த அளவுக்கு வயதை குறைத்தே சொல்லி வருவார்கள். ஆனால் பொலிவுட் நடிகை வித்யாபாலன் அப்படியல்ல. இப்போது நான் 35 வயதை கடந்து விட்டேன் என்று ஓப்பனாக கூறியுள்ளார். அதனால் இனிமேல் நான் காதல் செய்வது போன்று நடிக்க மாட்டேன். நான் அப்படி நடித்தால் இப்போதைய ரசிகர்களுக்கு போர் அடித்து விடும். அதனால் இனி அதையும் தாண்டி, அடுத்த கட்டத்துக்கு செல்லப்போகிறேன்.
அதாவது, சமீபத்தில் நான் நடித்து வெளியான தி டர்ட்டி பிக்சர்ஸ், கஹானி படங்களில் நடித்தது போன்று மாறுபட்ட கதைகளில் நடிக்கப்போகிறேன். அதுபோன்ற மெச்சூரிட்டியான கதைகளில் நடிப்பதுதான் எனது மெச்சூரிட்டிற்கு மேட்சாக இருக்கும். மேலும், மேற்கண்ட இரண்டு படங்களுமே என்னை இந்திய அளவில் பேச வைத்தன.
அதிலும் தி டர்ட்டி பிச்சர்ஸ் படம் தேசிய விருதும் பெற்றுத்தந்தது. அதனால் இப்போது பணம் சம்பாதிக்க வேண்டும் என்பதை விட விருதுகள் மீது தான் எனது ஆர்வம் அதிகமாகி உள்ளது என்கிறார் வித்யாபாலன்.

ஹீரோவை அடித்த ஹீரோயின்

மெரிட் மீடியா தயாரிக்கும் படம் இசக்கி இனிது இனிது. சரண்குமார், கன்னட நடிகை ஆஷிதா நடிக்கிறார்கள். ஸ்ரீகாந்த் தேவா இசை, சசிகுமார் ஒளிப்பதிவு செய்கிறார். படம் பற்றி இயக்குனர் எம். கணேசன் கூறியதாவது:- ஆசிரியையான ஹீரோயினை, ஹீரோவும், வில்லனும் இருவேறு காரணங்களுக்காக துரத்துவது கதை.
ஹீரோ, ஹீரோயினை டார்ச்சர் பண்ணிக் கொண்டே இருப்பார். பொறுக்க மாட்டாமல் அவரை செருப்பால் அடிப்பது போன்றும் அதை ஹீரோ தடுப்பது போலவும் காட்சியை படமாக்கினோம். ஹீரோயின் நிஜமாகவே அடித்துவிட்டார். பிறகு ஹீரோவிடம் மன்னிப்பு கேட்டுவிட்டு அன்று முழுவதும் அழுது கொண்டே இருந்தார். அது சின்ன தவறுதான் என்று எடுத்துச் சொல்லி மறுநாள் அந்த காட்சியை திரும்ப எடுத்தோம்.

அஞ்சல் துறையில் அமானுஷ்ய சக்தி

லதா சினி கிரியேஷன்ஸ் சார்பில் பருத்திப்பள்ளி பி. சின்னுச்சாமி தயாரிக்கும் படம், ‘அஞ்சல்துறை’, மோகன்.சி, சவுபர்னிகா, நாராயணன், குஷ்பு முகர்ஜி ஜோடியுடன் தமிழ்ச் செல்வன், செந்தில், வடிவுக்கரசி, நெல்லை சிவா நடிக்கின்றனர்.
ஒளிப்பதிவு, இத்தேஷ், கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள், எடிட்டிங், ஒளிப்பதிவு, இயக்கம் ஆகிய பொறுப்புக்களை ஏ.ஆர்.ரபி ஏற்றுள்ளார். அவர் கூறும்போது, ஹொஸ்டலில் தங்கிப் பிடிக்கும் மூவரில் இருவர், இரு பெண்களைக் காதலிக்கின்றனர். ஹெஸ்டலில் வலம் வரும் ஒரு அமானுஷ்ய சக்தி, அவர்கள் காதலை தடுக்கிறது. காதலர்கள் ஜெயித்தார்களா? அமானுஷ்ய சக்தி ஏன் அவர்களுக்கு தொல்லை கொடுக்கிறது என்பது கிளைமாக்ஸ் என்றார்

Tuesday, April 2, 2013

குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் அம்பிகா

நீ என்னுடன் நடிக்கிறாயா? அம்பிகாவிடம் கேட்டவர் கமல்
தமிழ், மலையாளம் உட்பட 150 படங்களில் நடித்த அம்பிகா, மலையாளப் படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் ஆனவர். அம்பிகாவின் சொந்த ஊர் கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகில் உள்ள கல்லரா.
தந்தை குஞ்சன் நாயர், தாயார் சரசம்மா. குஞ்சன் நாயர் மின்சாரத் துறையில் பணிபுரிந்தார். சரசம்மா காங்கிரஸ் கட்சியில் பிரபலமானவராக இருந்தார். அம்பிகாதான் வீட்டில் மூத்த பெண். அவருடன் பிறந்தவர்கள் மல்லிகா, சந்திரிகா (நடிகை ராதா), அர்ஜுன் (புதுநெல்லு புதுநாத்து படத்தின் கதாநாயகன் ராமார்ஜுன்), சுரேஷ் (பரதேசி தெலுங்கு படத்தின் கதாநாயகன்), அம்பிகாவுக்கு சிறுவயதிலேயே சினிமா மீது மோகம் ஏற்பட்டது.
மிகவும் நினைவாற்றல் கொண்டதால், ரேடியோவில் ஒரு முறை பாட்டை கேட்டால் உடனடியாக அதை அப்படியே திரும்பப்பாடும் ஆற்றலுடன் விளங்கினார். தினமும் காலையில் 7.45 மணியில் இருந்து 8 மணிக்குள் ரேடியோவில் லலிதசங்கீதம் என்ற நிகழ்ச்சி ஒலிபரப்பாகும்.
அதில் பிரபல இசையமைப்பாளர் எம். ஜி. ராதாகிருஷ்ணன் என்பவர் பாடல்களை பாடும் விதம் பற்றி விளக்குவார். அவர் சொல்வதை அப்படியே ஒரு நோட்டில் எழுதத் தொடங்கி விடுவார் அம்பிகா. பள்ளிக்கு செல்லும் போதும் அதையே தான் நினைத்துக் கொண்டு செல்வார். இது பற்றி அம்பிகா கூறியதாவது :-
ரேடியோவில் கற்றுக்கொண்ட பாடல்களை பள்ளியில் நடத்தப்படும் விழாக்களில் கலந்து கொண்டு ராகத்துடன் பாடுவேன் எனக்கு அப்போது முதல் பரிசு அல்லது இரண்டாவது பரிசு கிடைக்கும். நான் பாட்டுப் போட்டியில் கலந்துகொள்ளும் போது எனக்கு போட்டியாக உத்தமன் என்ற மாணவனும் பாட்டுப் போட்டிக்கு வருவான்.
அவன் பாடல்களை பெண் குரலில் பாடி பரிசை தட்டிச்சென்று விடுவான். அதனால் சில நேரங்களில் நான் முதல் பரிசை இழந்ததும் உண்டு. அதனால் அவன் மீது எனக்கு எரிச்சலும் அதிகமாக உண்டு. நான் பாடிய அதே பாடலை மற்றொரு பள்ளியில் படித்த என் சகோதரி ராதாவும் பாடி பரிசுகளை வாங்கி வருவாள்.
அப்போது நான் மிமிக்ரி, கவிதை போட்டி, நடிப்பு, நடனப் போட்டி, நாடகம் ஆகிய அனைத்திலும் பங்கேற்பேன். விளையாட்டில் எனக்கு ஈடுபாடு கிடையாது. ஆனால் விளையாட்டில் ராதாவுக்கு அதிக ஈடுபாடு உண்டு. நான் சராசரி மாணவிதான். எங்கள் வீட்டில் வாரம் ஒரு நாள் சனிக்கிழமை பொழுது போக்கு நிகழ்ச்சி நடக்கும் அப்போது அனைவரும் குடும்பத்தோடு ஒன்றாக இருந்து அவரவர் திறமையை காண்பிப்போம்.
நான் நடனம் ஆடுவேன். மேலும் நடித்துக் காட்டுவேன். என் தங்கை மல்லிகாவுக்கு எதுவும் தெரியாது என்று கூறிவிடுவாள், ராதா நடனம் ஆடுவாள். எங்களை பெற்றோர் ஊக்கப்படுத்துவார்கள். இவ்வாறு அம்பிகா கூறினார். சிறுமியாக இருக்கும் போது அம்பிகா தாயாரை வற்புறுத்தி சினிமாப் படப்பிடிப்பை பார்க்க அழைத்து செல்வார்.
ஆலப்புழையில் நடந்த ஒரு படசூட்டிங்கை பார்க்க சென்றனர். படத்தில் கமல்ஹாசன், சோமன் ஆகியோர் நடித்துக் கொண்டு இருந்தனர். அம்பிகாவை பார்த்த கமல்ஹாசன், ‘நீ என்னுடன் நடிக்கிறாயா?’ என்று சிரித்துக் கொண்டே கேட்டார். ‘நடிக்கிறேன்’ என்றார் அம்பிகா. ‘நீ ஸ்ரீவித்யா மாதிரி இருக்கிறாய் சினிமாவில் நடிக்கலாம். எதிர்காலத்தில் பெரிய நடிகையாக வரலாம்’ என்று கமல் கூறினார்.
அதைக்கேட்டு அம்பிகா மிக்க மகிழ்ச்சி அடைந்தார். இந்தக் காலக்கடத்தில் மலையாளப் பட உலகில் iலா மிகப் புகழ்பெற்ற நடிகையாக விளங்கினார். அவரைப் போல பெரிய நடிகையாக வரவேண்டும் என்று அம்பிகா கனவு கண்டார். இந்த சந்தர்ப்பத்தில் நீலா புரொடக்ஷன்ஸ் பட நிறுவனம் ‘சோட்டாணிக்காரா’ என்ற படத்தை எடுத்தனர். அந்தப் படத்தின் படப்பிடிப்பை காண தாயாருடன் அம்பிகா சென்றார். அங்கு பட அதிபர் சுப்பிரமணியனும், டைரக்டரும் இருந்தார்கள். ‘என் மகள் படத்தில் நடிக்க ஆசைப்படுகிறாள் வாய்ப்பு கொடுப்பீர்களா?’ என்று கேட்டார்.
மேக்கப் போட்டு, ‘டெஸ்ட்’ எடுத்துப் பார்த்தார்கள். அம்பிகாவின் அழகும், நடிப்பும் அவர்களுக்குப் பிடித்திருந்ததால் அந்தப் படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். தொடர்ந்து சில படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்தார். மங்கைப் பருவம் எய்திய பிறகு நடிப்பதை நிறுத்தினார். ஒருநாள் வீட்டுக்கு அருகே உள்ள தியேட்டரில் அம்பிகா சினிமா பார்த்துக்கொண்டிருந்தார். அப்போது படத்தில் நடிப்பதற்கு அழைப்பு வீடு தேடி வந்தது. தியேட்டருக்கு ஆள் அனுப்பி அம்பிகாவை அழைத்து வரச் சொன்னார் சரசம்மா.
சற்று நேரத்தில் அம்பிகா வந்தார். எம். முகுந்தன் என்ற பிரபல எழுத்தாளர் எழுதிய ‘சீதா’ என்ற நாவல் திரைப்படமாகத் தயாரிக்கப்பட இருப்பதாகவும் அதில் அம்பிகா நடிக்க வேண்டும் என்றும் வீடு தேடி வந்த படக் கம்பனியினர் கேட்டுக்கொண்டனர். அம்பிகாவும் அவர் தாயாரும் சம்மதம் தெரிவித்தனர். ஒப்பந்தம் கையெழுத்து ஆயிற்று கேரள பட உலகில் ஏற்கனவே ஒரு அம்பிகா (பத்மினியின் உறவினர்) இருந்தார்.
எனவே அம்பிகாவின் பெயரை மாற்ற வேண்டும் என்று சிலர் கூறினார்கள். சீதா, பிருந்தா, பிரியா, சந்தியா என்ற பெயர்கள் ஆலோசிக்கப்பட்டன. ஆனால் பெயர் மாற்றத்துக்கு அம்பிகாவின் பெற்றோர் சம்மதிக்கவில்லை. எனவே, அம்பிகா என்ற பெயரிலேயே நடித்தார். அப்படம் வெற்றி பெறவே தொடர்ந்து மலையாள படங்களில் நடித்தார். படங்களில் நடித்துக் கொண்டே பி.ஏ. வரலாறு படித்தார்.

ஹெலன்குமாரி நடித்த ஏமாளிகள்


ஏமாளிகள் –1978ல் திரையிடப்பட்ட ஈழத்து தமிழ்த் திரைப்படமாகும். கோமாளிகள் பெற்ற வரவேற்பைத் தொடர்ந்து எஸ். ராம்தாஸ் கதை, வசனம் எழுதி வெளியிட்ட இரண்டாவது படம்.
என். சிவராம், ஹெலன்குமாரி, எஸ். ராம்தாஸ், ரி. ராஜகோபால், எஸ். செல்வசேகரன், ராஜலட்சுமி முதலியோர் நடித்த இத்திரைப்படத்தை ‘கோமாளிகளை’ இயக்கிய எஸ். இராமநாதனே இயக்கினார். கண்ணன், நேசம் இசையில் ஈழத்து ரத்தினமும், பெளசுல் அமீரும் இயற்றிய பாடல்களை ஜோசப் ராசேந்திரன், கலாவதி, ஸ்ரனி சிவானந்தன் ஆகியோர் பாடினார்கள்.
எஸ். ராம்தாஸ் எழுதி தனது நாடகக் குழுவான ‘கொமடியன்ஸ்’ மூலமாக பலமுறை மேடையேற்றிய ‘காதல் ஜாக்கிரதை’ என்ற மேடை நாடகத்தின் திரை வடிவம் தான் ஏமாளிகள்’.
ஜோசப் ராசேந்திரன் - கலாவதி பாடிய ‘வான் நிலவு தோரணம்’ என்ற பாடல் பிரபலம் பெற்றது.

எதையும் மனதில் வைத்து பழிவாங்க வேண்டும் என்று நினைக்காத காலந்தீண்டா கவிஞர் கண்ணதாசன்

கெளரவம் படத்தின் தயாரிப்பாளர் 1973ம் ஆண்டு படத்தின் பாடல்களை எழுதுவதற்காக கண்ணதாசனுக்கு முற் பணம் கொடுத்து புக் செய்திருந்தார். ஆனால் கவிஞரோ தன் வேலைகளை எல்லாம் மறந்து மலேசியாவில் வாழ்க்கையை ரசித்துக் கொண்டு இருந்தார்.
இது போன்று தன் வேலையை மறந்து சரியான நேரத்தில் பாடல்களை தராமல் தாமதப்படுத்துவார் என்பது கண்ணதாசனின் மீதான பரவலான கருத்து.
அந்த சமயத்தில் அவருடைய உதவியாளர் படத்தின் தயாரிப்பாளரைச்சந்தித்து அவர் எப்போதும் இப்படித்தான் தாமதப்படுத்துவார் என்று கவிஞரின் குறைகளைக் கூறி தனக்கு அந்த வாய்ப்பைத் தருமாறு கேட்டார். (அவர் இப்போது பெரிய தயாரிப்பாளர்) ஆனால் தயாரிப்பாளரோ கண்ணதாசனே பாடல்களை எழுதட்டும் என்று காத்திருந்தார்.
கவிஞர் மலேசியாவிலிருந்து வந்தவுடன் இந்த செய்தியைக் கேள்விப்பட்டு மிகவும் மனவருத்தம் அடைந்தார். தான் தூக்கி வளர்த்து ஆளாக்கிய ஒருவர் தன்னை கவிழ்க்கப் பார்ப்பதை எண்ணி மனவேதனை அடைந்தார். அடுத்த நாள் இயக்குநர் பாடலின் சூழ்நிலையை விளக்கினார். தான் எடுத்து வளர்த்த தன் வளர்ப்பு மகன் தன்னை எதிர்த்து நிற்கிறான் என்றார் இயக்குநர்.
வழக்கம் போல தன் வாழ்க்கையின் வலியை அந்தப் படத்தின் பாடலில் எழுதியிருப்பார். படத்தின் சூழ்நிலையை மறந்து இந்த சூழ்நிலையை மனதில் நினைத்தால் ஏதோ தனது உதவியாளர் செய்த துரோகத்திற்காக எழுதியது போலவே முழுப் பாடலும் இருக்கும். காலத்தால் அழியாத இந்த இரண்டு பாடல்களும் என்றும் மறக்க முடியாதவை.
படம்: கெளரவம்
நீயும் நானுமா கண்ணா நீயும் நானுமா?
காலம் மாறினால் கெளரவம் மாறுமா?
அறிவை கொடுத்ததோ துரோணரின் கெளரவம்
அவர்மேல் தொடுத்ததோ அர்ச்சுனன் கெளரவம்
நடந்து அந்தநாள் முடிந்ததா பாரதம்
நாளைய பாரதம் யாரதன் காரணம்
வளர்த்த என் கண்ணனோ தந்தையின் நெஞ்சிலே
மாறும் அவதாரமோ இதுதான் உலகிலே
ஆனால் இவ்வளவு நடந்தாலும் எல்லாவற்றையும் மறந்து மன்னித்து அந்த உதவியாளரை மீண்டும் சேர்த்துக் கொண்டார்.
பாலூட்டி வளர்த்த கிளி பழங்கொடுத்துப் பார்த்த கிளி
நான் வளர்த்த பச்சைக்கிளி நாளை வரும் கச்சேரிக்கு
சட்டமும் நான் உரைத்தேன் தைரியமும் நான் கொடுத்தேன்
பட்டம் மட்டும் வாங்கி வந்து பாய்ந்து செல்ல பார்க்கிறது
செல்லம்மா எந்தன் செல்லம்மா
நீதிக்கே துணிந்து நின்றேன் நினைத்ததெல்லாம் ஜெயித்து வந்தேன்
வேதனைக்கு ஒரு மகனை வீட்டிலே வளர்த்து வந்தேன்
ஆண்டவன் சோதனையோ யார் கொடுத்த போதனையோ
தீயிலே இறங்கிவிட்டான் திரும்பி வந்து கால் பணிவான்
கண்ணதாசன் எதையும் மனதில் வைத்து பழிவாங்க வேண்டும் என்று எவரையும் நினைத்ததில்லை தான் நினைத்ததை பாட்டில் அழகாக வெளிப்படுத்தும் அற்புத ஆற்றல் பெற்ற காலந் தீண்டா கவிஞர் நம் கண்ணதாசன்.

ஹோலி பண்டிகை அன்று பிறந்தவர் ரஜினிகாந்த்

வட இந்தியர்கள் ஹோலி பண்டிகை கொண்டாடும் தினத்தன்று தான் ரஜினிகாந்த் பிறந்தார் என்பது தெரியுமா? வட இந்தியர்கள் வண்ண மயமாக கொண்டாடும் ஹோலி பண்டிகை தினத்தன்று தான் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பிறந்தார் என்று தெரியுமா? ரஜினி பிறந்த நாள் டிசம்பர் 12 நீங்கள் என்னவென்றால் மார்ச் மாதத்தில் சொல்கிaர்களே என்று நினைக்க வேaண்டாம். பொறுமையாகப் படித்துப் பாருங்கள்.
ரஜினிகாந்தின் இயற்பெயர் சிவாஜி ராவ் கெய்க்வாட் என்று அனைவருக்கும் தெரியும். சிவாஜி ராவ் ரஜினிகாந்தான தினத்தை தான் அவரது பிறந்த நாள் என்று நாங்கள் சொல்கிறோம். கடந்த 27 ஆம் திகதி ஹோலி பண்டிகை கொண்டாடப்பட்டது. அப்படி என்றால் அன்று ரஜினிகாந்த் பிறந்த நாள் தானே.
கடந்த 1975 ம் ஆண்டு ஹோலி பண்டிகை அன்று இயக்குனர் கே. பாலச்சந்தர் சிவாஜி ராவ் கெய்க்வாட் என்னும் இளைஞனை அழைத்து சந்திரகாந்த், ஸ்ரீகாந்த், ரஜினிகாந்த் இந்த பெயரில் ஒன்றை தேர்வு செய்யும் என்றார். இறுதியில் அவரே சிவாஜிக்கு ரஜினிகாந்த் என்ற பெயரை தேர்வு செய்து கொடுத்தார். இப்போது புரிகிறதா ஹோலி ஏன் ரஜினி பிறந்த நாள் என்று.
ரஜினிகாந்த் ஒவ்வொரு ஹோலி பண்டிகை அன்றும் தன்னை ரஜினியாக்கிய பாலச்சந்தரை சந்திப்பதை வழக்கமாக வைத்துள்ளார். அவர் இத்தனை ஆண்டுகளில் ஒரே ஒரு தடவை தான் ஹோலி அன்று பாலச்சந்தரை சந்திக்கவில்லை.