Tuesday, December 15, 2015

மனோரமா- இது வெறும் பெயரல்ல. அவர் எங்களின் அம்மா

மனோரமா- இது வெறும் பெயரல்ல. அவர் எங்களின் அம்மா. அன்பான ஆச்சி.
’"தந்துவிட்டேன் என்னை' படம் மூலம்தான் அவர் எனக்கு அறிமுகம். அதன்பின் சில படங்களில் இணைந்து நடித்தேன். மலையாளப் படங்கள் உணர்ச்சிகளை முன்னிறுத்துபவை; தமிழ்ப் படங்கள் வார்த்தைகளை முன்னிறுத்தி வசன உச்சரிப்புக்கு முக்கியத்துவம் கொடுப்பவை. வசன உச்சரிப்பில் ஒரு ஜனரஞ்சகத்தை தந்து வெற்றிபெற்றவர் மனோரமா. அதுமட்டுமல்லாமல்; தன்னுடன் நடிப்பவர்களுக்கும் வசன உச்சரிப்பை கற்றுத்தர அக்கறை காட்டுபவர்.

திரைக் கோட்பாட்டு வரையறைக்குள் சிக்காத ஒரு திராவிட முகச்சாயல் அவருக்கு உண்டு. அவரின் வசன உச்சரிப்பும், அதை சிதைக்காத உடல்மொழியும், யதார்த்தத்தை மீறாத ஒழுங்கும்தான் அவரது பலம். இதுதான், காலம் கடந்தும் திரையுலகில் தனி ஆளுமையாக அவரை நிற்கவைத்தது.

அந்தந்த காலத்துக்கு ஏற்ப தன்னை அவர் புதுப்பித்துக்கொண்டார். முதலில் நகைச்சுவை நடிகையாக வலம்வந்தவர், பிறகு அம்மா வேடங்களில் கம்பீரமாக நின்றார். அவரின் குரலும், பாடும் விதமும் தனித்தன்மை வாய்ந்தது. அவரின் குரலில் மண்ணின் மணம் வீசும். அது ஒரு வசீகர காந்தக் குரல். இவையெல்லாம்தான் அவரை, மிகப்பெரிய இன்னிங்ஸ் ஆடவைத்தது.

கமல் சார் மூலம்தான் மனோரமா எனக்குள் முழுதாக நிரம்பினார். "நாகேஷ், மனோரமாதான் எனக்குப் பிடித்த நடிகர்கள்' என்று கமல் எப்போதும்  சொல்லிக்கொண்டே இருப்பார். ‘"ஒவ்வொரு முறையும் நடிப்பதற்குமுன் மனோரமா ஒத்திகை பார்ப்பார். அவ்வளவு தொழில் பக்தி அவருக்கு'’ என்று சிலாகிப்பார்.

மேடை நாடகம் என்றால் ரீ-டேக் எடுக்கமுடியாது. அதனால் ஒத்திகை பார்க்கலாம். ஆனால் சினிமாவுக்கு எதற்கு ஒத்திகை? என்று நினைத்துப் பார்ப்பேன். ஆனால் அது அவரது சின்சியாரிட்டியின் அடையாளம்.

அவர் கலைக்காகவே வாழ்ந்தவர். சிரிப்புக் காட்சிகளில் மட்டுமல்ல் அழ வைக்கும் காட்சிகளிலும் மிகையில்லா உணர்ச்சிகளைக் காட்டி, நம்மைக் காட்சியோடு கரைத்துவிடுவார். இது அவருக்குக் கைவந்த கலை.

படப்பிடிப்பு நாட்களில் மனோரமா அம்மாவுடன் இருப்பதே எங்களுக் கெல்லாம் ஒரு ஆராதனை அனுபவம்தான். அவர்களுடன் இருக்கும்போது நிறைய கதை கேட்போம். அவர் தனது பொக்கிஷமான தருணங்களை எங்களோடு பகிரும்போது எங்களுக்குள் வண்ண வண்ண மலர்கள் மலர்வதுபோன்ற மகிழ்ச்சி ஏற்படும்.

ஒரு முறை, ‘"எப்படிம்மா தி.நகருக்குக் குடிவந்தீங்க?' என்று தற்செயலாகக் கேட்டேன். ‘"அண்ணன் சிவாஜிதான் என்னோட வீட்டு பக்கத்துலேயே வந்துடும்மா... நாங்க உனக்கு ஒத்தாசையா இருக்கோம்ன்னு சொன்னாரு. அவர் பாசத்தை மீறமுடியுமா'ன்னு’ சொன்னாங்க. சிவாஜி மனோரமாமீது வைத்த பாசத்தைக்கேட்டு நெகிழ்ந்துபோய்விட்டேன். மனோரமாவின் உடன்பிறவா அண்ணனாகவே இருந்தவர் சிவாஜி.

"வாழ்க்கையில் பொருளாதாரமும் முக்கியம். வருமானத்தை நல்ல வழியில் முதலீடு செய்மா'ன்னு அண்ணன் சொன்னாரு. அதுக்கப் புறம்தான் எனக்குப் பொறுப்பு கூடுதலாச்சு'’ என்று சிவாஜி சார்மீது தனக்கிருக்கும் அளவில்லாத அன்பை அவ்வப் போது எங்களிடம் பகிர்வார் மனோரமா.

"தாமிரபரணி' படத்தில் நடித்துக்கொண்டிருந்தபோது, மனோரமா அம்மாவோடு சேர்ந்து ஒரு கோவிலுக்குப் போனேன். அப்போது திடீரென, "ரோகிணி, ரயில் டிக்கெட்டை எங்கயோ விட்டுட்டேன்' என்று சொன்னார். எனக்கு கொஞ்சம் படபடப்பாக ஆனது... ஆனால் அம்மாவோ, "பரவால்லை; சமாளிச்சுக்கலாம். ட்ரைன்ல ஏறு'’ என்றார். ஏறிவிட்டோம். டி.டி.ஆர் வந்தார். அவருக்கு அம்மா யார் என்று தெரிந்தாலும், தன் கடமையைச் செய்யவேண்டுமே என்றார். அந்த நேரத்தில் ரகுவரன் தற்செயலா போன் செய்தார். அவரிடம் இதைச் சொன்னேன். பிறகு அவர் டி.டி.ஆரிடம் பேச, அவர் குறைந்த அளவு மட்டும் பைன் போட்டார். ஆனால் மனோரமாவோ, "அரசாங்கத்துக்கு உண்மையா இருக்க ணும்ப்பா' என்றபடியே முழு அபராதத்தையும் கட்டினார். அப்படிப்பட்ட மனம்கொண்டவர் அவர்.

 இயக்குனர் ஸ்ரீதர் சாரின் மனைவியும் மனோரமா அம்மாவும் மிக நெருங்கிய தோழிகள். ஒருமுறை ஸ்ரீதர் சார் உடல்நிலை சரியில்லாதபோது, அவரைப் போய்ப் பார்க்கலாம் என்று மனோரமா அம்மாவிடம் நான் சொன்னேன். "அவங்க அனுமதி கொடுத்தா போய்ப் பார்க்கலாம்' என்று அம்மா சொன்னார். அதேபோல அனுமதிபெற்று ஈ.சி.ஆர். வீட்டில் அவரைச் சந்தித்தோம். யாரை சந்திக்கப் போனாலும், அவரே கடைக்குச் சென்று பொக்கே வாங்கி, அதில் தன் கைப்படவே வாழ்த்தை எழுதித்தருவது அம்மாவின் வழக்கம். ஸ்ரீதர் சாருக்கும் இப்படி தன் கைப்பட வாழ்த்தை எழுதினார். அது ஸ்ரீதர் சாரை நெகிழவைத்தது.

மனோரமா அம்மா, உடல்நிலை சரியில்லாமல் இருந்ததைப் பார்த்தபோது மனதுக்கு பாரமாக இருந்தது. உடல் தளர்ந்தபோதும் அவர் காட்டிய அன்பு குறையவே இல்லை. அப்போது அவர் என்னிடம், "உலகத்திலேயே மிகப்பெரிய ஏழ்மை எது தெரியுமா? நமக்குப் பிடித்த விஷயத்தைச் செய்யமுடியாமல் வீட்டில் உட்கார்ந்து இருப்பதுதான்'’ என்றார். உடல்நிலை சரியில்லாத போதும்  நடக்கமுடியவில்லையே, முன்புபோல் நடிக்க முடியவில்லையே என்றுதான் வருத்தப்பட்டார்.

அந்த அளவுக்கு கலைத் தாகம் கொண்டவர் அம்மா. கலைஞரின் புறநானூற்று வசனத்தைப் பேசுவது அவருக்கு ரொம்பவும் பிடிக்கும்.  அடிக்கடி எங்களிடம் கம்பீரமாகப் பேசிக் காட்டுவார். அப்போது அவரிடம் ஒருவித பெருமிதம் மிளிரும்.

’"கஷ்டங்கள் இல்லாத வாழ்க்கையே இல்லை. ஆனால் அதைப் போட்டுக் குழப்பிக்கொள்ளக் கூடாது. சோர்ந்து படுத்துவிடாமல் நம்மை நாம் புதுப்பித்துக்கொண்டே இருக்கவேண்டும். உன்னிடம் கலை இருக்கு. அதை நம்பிப் போ. அது உன்னைக் கைவிடாது'“ என்பார் என்னிடம். அவர் ஒரு தன்னம்பிக்கைக் கவிதை.

ஒட்டுமொத்த பெண்களுக்கும் வழிகாட்டக் கூடியதாக, தன்னம்பிக்கை தரக்கூடியதாக அவரது வாழ்க்கைப் பயணம் அமைந்திருக்கிறது.

மொத்தத்தில், மனோரமா மறக்கமுடியாத அம்மா.

Wednesday, June 17, 2015

அழகான ஒரு ஆரணங்கு அருகில் இருந்தால் “புரியாத ஆனந்தம் புதிதாக ஆரம்பம்” என்று சொல்லவா வேண்டும்.

Wednesday, June 10, 2015

நடிகை பிரியங்கா விவாகரத்து கேட்டு குடும்ப நீதிமன்றத்தில் வழக்கு


வெயில் என்ற தமிழ் படத்தின் மூலம் திரை உலகுக்கு அறிமுகமானவர் நடிகை பிரியங்கா. தொடர்ந்து ஏராளமான தமிழ், மலையாளம் படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்தவர். மலையாளத்தில் இவர் நடித்த “விலாபங்கள்க்கு அப்புறம்” என்ற படம் இவருக்கு 2008-ம் ஆண்டிற்கான கேரள அரசின் சிறந்த நடிகைக்கான விருதை தேடித்தந்தது.

2012-ம் ஆண்டு மே23-ந் திகதி தமிழ் பட இயக்குனர் லோரன்சுடன் திருமணம் நடைபெற்றது. இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.

இவர்களது திருமணம் ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவிலில் மிக எளிமையாக நடந்தது. இவர்களுக்கு முகுந்த் ராம் என்ற 3 வயது மகன் உள்ளார். நடிகை பிரியங்காவுக்கு நல்ல கதாபாத்திரங்கள் கிடைத்தால் தொடர்ந்து நடிக்க வேண்டும் என்று ஆசை இருந்தது. ஆனால் அதற்கு அவரது கணவர் லோரன்ஸ் எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இதனால் கணவன்- மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. உறவினர்கள், நண்பர்கள் இருவரையும் சேர்த்து வைக்க நடத்திய முயற்சிகள் தோல்வியில் முடிந்தது. கருத்து வேறுபாடு காரணமாக பிரியங்கா தற்போது கணவரை பிரிந்து, மகனுடன் சொந்த ஊரான வாமனாபுரத்தில் குடும்ப வீட்டில் பெற்றோருடன் வசித்து வருகிறார்.

இந்த நிலையில் விவாகரத்து கேட்டு நடிகை பிரியங்கா, திருவனந்தபுரத்தில் உள்ள குடும்ப நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். தனது இன்டர்நெட்டை தவறாக பயன்படுத்தியது தொடர்பாக கணவர் லோரன்ஸ் மீது ஐ.டி சட்டத்தின் படியும் நடிகை பிரியங்கா தனது சொந்த ஊரான வாமனாபுரம் எல்லைக்குட்பட்ட நெடுமங்காடு நீதிமன்றத்திலும் வழக்கு தொடர்ந்துள்ளார்.

ஃபேஸ்புக்கில் ஆபாச கொமெண்ட்: தக்க பதிலடி கொடுத்த கண்ணா லட்டு திங்க ஆசையா விஷாகா சிங்!


நடிகை விஷாகா சிங் அவருடைய ஃபேஸ்புக் பக்கத்தில் டிஷேர்ட் அணிந்த புகைப்படம் ஒன்றை வெளியிட்டார். அதில் நுஎநசலடிழனல ளை ளழஅநடிழனல’ள கழசநபைநெச  என்கிற வாசகம் எழுதப்பட்டிருந்தது. இதைப் பார்த்த ஒருவர் மிக மோசமான முறையில் அவருடைய ஃபேஸ்புக் பக்கத்தில் கொமெண்ட அடித்தார். வழக்கமாக இதுபோன்ற ஆபாசமான கொமெண்ட்களை நடிகைகள் கண்டுகொள்ளாமல் விட்டுவிடுவார்கள். அல்லது நீக்கிவிடுவார்கள். ஆனால் விஷாகா சிங் ஆபாசமாக கொமெண்ட செய்த நபரை ஒரு பிடி பிடித்தார்.

நான் பெண் என்று எனக்குத் தெரியும். ஒரு பொது அறிவு தெரியுமா, உன்னுடைய அம்மா, சகோதரி, மனைவி, பாட்டி, மகள், தோழிகளுக்கு இருப்பதுபோலத்தான் எனக்கும் உள்ளது. இது ஒவ்வொரு பெண்ணுக்கும் இருப்பதுதான். உன்னுடைய அம்மா, சகோதரி, மனைவி, பாட்டி, அத்தை, தோழிகளுக்கும் இது பொருந்தும். அவர்களிடம் போய் இப்படி  அசிங்கமாக கொமெண்ட் அடிக்க முடியுமா? உனக்காக நான் வருத்தப்படுகிறேன். தைரியம் இருந்தால் என் முன்னால் வந்து சொல். இல்லையென்றால் என்னுடைய பக்கத்தை விட்டு வெளியே செல் என்று பதிலடி கொடுத்தார்.

பிறகு அந்தப் புகைப்படத்தையும் அதனால் உருவான கொமெண்டகள் அத்தனையும் நீக்கிவிட்டார். தேவையில்லாத எதிர்வினையை உருவாக்கும் என்பதால் அந்த போஸ்ட்டை நீக்கிவிட்டேன் என்று பின்னர் விளக்கம் கொடுத்தார்.  இவர் கண்ணா லட்டு திங்க ஆசையா என்கிற தமிழ்ப் படத்தில் கதாநாயகியாக நடித்தவர்.

சமூக வலைதளங்களால் சாதி–மத கலவரம் ஏற்படும் அபாயம் நடிகர் விவேக் கருத்து



சமூக வலைத்தளங்கள் பற்றி நகைச்சுவை நடிகர் விவேக் தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:–

‘‘ஒரு பைத்தியக்காரன் கையில் துப்பாக்கி இருப்பதும்இ சமூக அக்கறை இல்லாதவர்களின் கையில் இணையதள அமைப்புகள் (பேஸ் புக்இ டுவிட்டர்இ வாட்ஸ் அப்) இருப்பதும் ஒன்று தான்.

இதுவெல்லாம் சமுதாயத்தில் பல சாதி–மத கலவரங்கள் ஏற்படுவதற்கு கூட வழிவகை செய்துவிடுமோ என்று அச்சம் இருக்கிறது.

எத்தனையே உபயோகமான விஷயங்கள் பரிமாறப்பட்டாலும் சில தவறான தகவல்களும் மக்களை சென்றடைகின்றன. இப்படியே போய் கொண்டிருந்தால்இ இதில் அரசு தலையிட்டு வாட்ஸ் அப்பை மூடக்கூடிய நிலைமை ஏற்படலாம்’’.

இவ்வாறு நடிகர் விவேக் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறி இருக்கிறார்.

Tuesday, June 9, 2015



ஒன்று இரண்டானால் முடி பிடி தான்
“இனிமே இப்படித்தான்” வந்தால் தெரியும் இந்த பிடி எதற்கென்று?


அழகான ஆரணங்குகள் அருகில் இருந்தால் ஆட்டம் பாட்டம் எல்லாம் தானாக அடைக்கலமாகிவிடும்.
இது இனிமே இப்படித்தான். எது என்பதை படம் வந்தவுடன் அறிந்து கொள்ளுங்கள்.

ஆர்த்தி அகர்வாலின் உயிருக்கு எமனாக அமைந்த அழகு!



நடிகைகளின் வாழ்க்கை வெளியிலிருந்து பார்ப்பவர்களுக்கு ஆசிர்வதிக்கப்பட்டது போலத் தோன்றலாம். ஆனால் எல்லாத் தொழில்களிலும் இருப்பதைப் போல போட்டி, பிரச்சினைகள், முன்னேற உழைக்க வேண்டிய தூரம் இவர்களுக்கும் பொருந்தும். சினிமா துறையில் அழகும் இளமையும் சேர்ந்திருப்பவர்களுக்கே முன்னுரிமை. இதைத் தாண்டி ஒரு நடிகையின் திறமையை அங்கீகரிக்கும் சூழலும் மிகவும் முக்கியம். இப்படிப் பலவிதமான சவால்களை எதிர்கொண்டு தான் நடிகைகள் திரையில் தோன்றுகிறார்கள். சமீபத்தில் இறந்த தெலுங்கு நடிகை ஆர்த்தி அகர்வாலின் மரணம் திரையுலகுக்கு மட்டுமல்லாமல் அனைவருக்கும் அதிர்ச்சியான தகவல். காரணம், அவரது மரணத்துக்கான காரணம். எது அவருக்கு சினிமா வாய்ப்பையும் பிறகு பேரும் புகழையும் தந்ததோ அதுவே அவருடைய உயிருக்கும் எமனாக அமைந்துவிட்டது. 31 வயதில் ஒரு நடிகை நோய்வாய்ப்பட்டு இறப்பது என்பது நிச்சயம் விவாதிக்கவேண்டிய விஷயம்.

குஜராத்தி குடும்பத்தைச் சேர்ந்த ஆர்த்தி அகர்வால், அமெரிக்காவில் உள்ள நியூஜெர்சி நகரில்  பிறந்தவர். ஹிந்தி நடிகர் சுனில் ஷெட்டி ஒரு நிகழ்ச்சிக்காக அமெரிக்காவின் பிலடெல்பியா நகருக்குச் சென்றிருந்தபோது ஆர்த்தியை சந்திக்க நேர்ந்தது. அழகும் இளமையும் கொண்ட ஆர்த்தியைப் பார்த்தவுடன் இவர் திரைத்துறையில் இருக்கவேண்டியவர் என எண்ணினார் சுனில் ஷெட்டி. தன்னுடன்  நடனம் ஆடும்படி ஆர்த்தியை அழைக்க, அவரும் ஓகே சொல்லி மேடையில் தயக்கமில்லாமல் ஆடினார். ஓடியன்ஸின் வரவேற்பும் அமோகமாக இருக்க, கூடவே சினிமா வாய்ப்பும் அவர் முன் வந்து நின்றது. டீன் ஏஜ் வயது ஆர்த்திக்கும் சினிமாவில் நடிப்பது ஒரு விருப்பமாகவே இருந்ததால் தன் குடும்பத்தினரிடம் விவாதித்தார்.

நடிகர் சுனில் ஷெட்டி ஆர்த்தியின் தந்தையிடம் ஹிந்திப் படங்களில் நடிக்க ஆர்த்திக்கு அனுமதி தரும்படி கேட்டுக் கொண்டார். சம்மதம் கிடைக்கவே, பல கனவுகளுடன் திரையுலகில் நுழைந்தார் 16 வயது ஆர்த்தி. 2000-ம் ஆண்டில் ‘பாகல்பன்’ என்ற ஹிந்திப் படத்தில் நடித்தார். அந்தப் படம் சுமாராகத்தான் ஓடியது. ஆனால் அதுவே ஆர்த்திக்கு ஒரு நல்ல  விசிட்டிங் கார்டாக அமைந்ததால் தெற்குப் பக்கம் வாய்ப்புகளைத் தேட ஆரம்பித்தார். தெலுங்குப் பட உலகம் ரத்தினக் கம்பளம் போட்டு ஆர்த்தி அகர்வாலை சுவீகரித்துக் கொண்டது. டோலிவுட்டில் வெங்கடேஷ் ஜோடியாக நுவ்வு நாக்கு நச்சவ் என்ற படத்தில் நடித்து அது சூப்பர் ஹிட்டாகிவிட, தெலுங்குத் திரையுலகில் பரபரப்பான நடிகையானார் ஆர்த்தி. சிரஞ்சீவி, வெங்கடேஷ், நாகார்ஜுனா, பிரபாஸ், ஜுனியர் என்.டி.ஆர். போன்ற முன்னனி நடிகர்களுடன் ஜோடியாக நடிக்க, வெற்றிப் படங்களின் எண்ணிக்கை அதிகமாகின.

தெலுங்குத் திரை ரசிகர்களால் கொண்டாடப்பட்டார். தமிழிலும் நடிகர்  ஸ்ரீPகாந்துக்கு ஜோடியாக பம்பரக் கண்ணாலே (2005) என்ற படத்தில் நடித்தார். அந்தப் படம் வெற்றிகரமாக அமையவில்லை. ஆனால் டோலிவுட்டில் குறுகிய காலத்தில் முன்னணி கதாநாயகியாக ஆனார் ஆர்த்தி.

இதற்கிடையில், தெலுங்கு நடிகரான தருணை தீவிரமாக காதலித்தார். தருண் தமிழில் புன்னகை தேசம், எனக்கு 20 உனக்கு 18 ஆகிய படங்களில் நடித்தவர். தருண், ஆர்த்தி இருவரும் முதலில் காதலை மறுத்தாலும் பிறகு விரைவில் திருமணம் செய்யப்போவதாக வெளிப்படையாக அறிவித்தார்கள். அதனால் ஆர்த்திக்கு பட வாய்ப்புக்கள் குறைய ஆரம்பித்தன. அதைப்பற்றி அப்போது அவர் கவலைப்படவில்லை. ஆனால் சில மாதங்களிலேயே தருணுக்கு அவருக்கும் பிரசசி;னை ஏற்பட்டு இருவரும் பிரிந்துபோனார்கள். தருணுக்கு, திவ்யா ரெட்டி என்ற பெண்ணுடன் திருமணம் நிச்சயமான தகவல் அறிந்து ஆர்த்தி விஷம் குடித்து தற்கொலைக்கு முயற்சித்தார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைக்குப் பின் குணமடைந்தார். அதன்பின் அவர் திரை வாழ்க்கை கிட்டத்தட்ட முடிந்துவிட்ட நிலைக்கு வந்துவிட்டது.

வேறு வழியின்றி, திரையுலகத்தை விட்டு விலகி மீண்டும் அமெரிக்காவுக்கே சென்றார். அங்கு அவரது தூரத்து உறவினர் உஜ்வாலைச் சந்தித்தார். ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த உஜ்வால் குமார் அமெரிக்காவின் பிரபல வங்கி ஒன்றில் வேலை பார்த்துக்கொண்டிருந்தார். 2007-ல் உஜ்வால் குமார் - ஆர்த்தி அகர்வால் திருமணம் உறவினர்கள், நண்பர்கள் சூழ  ஹைதராபாத் ஆர்ய சமாஜ் ஆசிரமத்தில் நடந்தது. ஆனால் தனது திருமணத்தை ரகசியாகவே நடத்தினார் ஆர்த்தி. தெலுங்குத் திரையுலகில் யாருக்கும் அழைப்பில்லை. திருமணம் நடந்த விஷயமே செய்தித்தாள் பார்த்துதான் தெரிந்துகொண்டனர். திருமணத்துக்குப் பின் நடிப்புக்கு குட் பை சொல்லிவிட்டு கணவருடன் அமெரிக்காவில் குடியேறினார்.

அழகு, பணம், திறமை எல்லாம் இருந்தும் சிலருக்கு நிம்மதி மட்டும் இருக்காது. அதுவும் நடிகையின் வாழ்க்கை, புகழ் எனும் போதையில் சூழ்ந்தது. பரபரப்பான வாழ்க்கை முறை, ஷ_ட்டிங், ரசிகர்கள் மற்றும் மீடியாக்களின் பாராட்டு என்று லைம்லைட்டில் இருந்துவிட்டு சும்மா இருக்க நேர்ந்தால் அது பெரும் அவஸ்தையாக இருக்கும். ஆடிய காலும் பாடிய வாயும் ஓயாது என்று ஒரு சொல்வது உண்டு. திருமண உறவில் விரிசல் ஏற்பட்டதால் கணவரைப் பிரிந்தார் ஆர்த்தி. அடுத்து? சினிமா வாய்ப்புகளைத் தேடி ஹைதராபாத்துக்குத் திரும்பினார்.

முதல்முறை ஹைதராபாத்துக்கு வந்தபோது கிடைத்த வரவேற்புக்கும் இப்போது அதேபோல அமெரிக்காவிலிருந்து வந்திறங்கியபோது நடந்துகொண்ட விதத்துக்கும் பெரும் வித்தியாசம் தென்பட்டது. இந்தமுறை யாரும் அவரைச் சீந்தவில்லை. காரணம் ஏற்கனவே பூசிய உடம்பாக இருக்கும் ஆர்த்திக்கு சில வருடங்களில் உடல் எடை அதிகரித்துவிட்டதுடன் வயதும் கூடிவிட்டதால் ஹீரோயினாக யாரும் அவரைக் கருதவில்லை.

ஆர்த்தி முயற்சி செய்து பார்த்தார். தன்னுடைய உடல் எடையைக் குறைக்க டயட்டிங் போன்ற விஷயங்களில் தீவிரமானார். மீண்டும் திரையில் தோன்ற என்னவெல்லாம் செய்ய முடியுமோ எல்லாம் செய்து பார்த்தார். ஆனால் அவரால் பழைய அழகை மீட்டுக்கொண்டு வரமுடியவில்லை. என்ன முயன்றும் பலன் பெரிதாக இல்லை. உடல் எடையைக் குறைத்தால் நடிக்க வாய்ப்பு தருவதாக சில திரைத்துறை நண்பர்கள் கூறவே அதை நம்பி மேலும் பலவிதமான முயற்சிகள் செய்து பார்க்கத் தொடங்கினார்.

ஒரு பெரிய திட்டத்துடன் அமெரிக்கா சென்றார். அங்கு அட்லாண்டிக் நகரில் உள்ள ஒரு மருத்துவமனையில் லிப்போசக்‌ஷன் எனும் எடைக் குறைப்பு அறுவைச் சிகிச்சையை மேற்கொண்டார். அவர் கால்களில், இடுப்புப் பகுதிகளில் கைகளில் உள்ள தேவையற்ற கொழுப்பை உறிஞ்சி எடுக்கும்படியான லிப்போசக்‌ஷன் எனும் கொழுப்பு நீக்கும் அறுவைச் சிகிச்சை வெற்றிகரமாக நடந்துமுடிந்தது. ஆனால் அதன் பின் சில மாதங்களில் மீண்டும் உடல் எடை அதிகரிக்கவே மீண்டும் அதே அறுவைச் சிகிச்சைக்குத் தன் உடலை உட்படுத்தினார். கடைசியாக நான்காவது முறை செய்ததன் காரணமாகவே, கடந்த சில நாள்களாக மூச்சுத்திணறலால் அடிக்கடி அவதிப்பட்டார். இந்தப் பிரச்சினைக்குச் சிகிச்சை பெறுவதற்காக அதே மருத்துவமனையில் மீண்டும் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சையில் இருந்தபோது அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. லிப்போசக்‌ஷன் அறுவைச் சிகிச்சையின் மோசமான பக்க விளைவுககளால் தான் ஆர்த்தி இறந்திருக்கக் கூடும் என்று காரணம் சொல்லப்படுகிறது. ஏனெனில் லிப்போசக்‌ஷன் செய்யும் போது கொழுப்பு குமிழ் போன்று ஏற்பட்டு இதயத்தில் சென்று அடைத்துவிட, சிகிச்சை பலன் அளிக்காமல் இறந்துபோக நேர்ந்துள்ளது.

ஆர்த்தியின் திடீர் மரணத்துக்கான காரணங்களை ஆராயும் பத்திரிகைகளும் தொலைக்காட்சிகளும் லிப்போசக்‌ஷன் பற்றிய கேள்விகளையும் விவாதங்களையும் எழுப்பியுள்ளன.  இது பற்றிய விவாதத்தில் ப்ளாஸ்டிக் சேர்ஜன் ஸ்ரீPநிவாஸ் ஸ்வரூப் என்பவரிடம் பல கேள்விகளைக் கேட்டனர். ஒன்றரை மணி நேரம் நடைபெற்ற அந்த நிகழ்ச்சியில் மருத்துவரும் நிகழ்ச்சித் தொகுப்பாளரும் ஆர்த்தியின் உடல் எடை குறித்து பகிடி செய்தனர். உடல் மெலிந்திருந்தால் தான் அழகு என்ற இலக்கணத்தை இவர்களுக்கு யார் சொன்னது? பட அதிபர்களும் மீடியாவும் ஆர்த்தியின் உருவத்தைப் பற்றிய கிண்டலை செய்யாமல் இருந்திருந்தால் அவர் இன்று உயிருடன் இருந்திருப்பதற்கான வாய்ப்புக்கள் அதிகம். ஒல்லி இடுப்பு தான் அழகென்று நம்பும் பெண்கள் இதுபோன்ற விஷயங்களில் இருந்து பாடம் கற்றுக் கொள்ள வேண்டும்.

ஆர்த்தி, கடைசியாக ரணம் 2 என்ற தெலுங்குப் படத்தில் மீண்டும் நடித்தார். அவர் இறப்பதற்கு முந்தைய நாள், அதாவது ஜூன் 5-ம் திகதி அந்தப் படம் வெளியானது. தன் அடுத்தப் பட விஷயமாக ஹைதரபாத் வரவிருந்த ஆர்த்தி, அழகு சிகிச்சை தொடர்பாக பல கேள்விகளை எழுப்பியபடி நிரந்தரமாக கண் மூடிவிட்டார்.

Monday, April 20, 2015

ஜயலலிதாவும் கமலும் இணைந்து நடித்த ஒரே படம்


எஸ்.பி.முத்துராமன் இயக்கத்தில் 1974ல் உருவான 'அன்புத் தங்கை'' படத்தில் முத்துராமன், nஜயலலிதா நடித்தனர். இதில் மேடை நாடகம் நடப்பது போன்ற ஒரு காட்சியில் nஜயலலிதாவுடன் புத்த பிக்கு வேடத்தில் கமல்ஹாசன் நடித்தது சிறப்பு. nஜயலலிதா, கமல்ஹாசன் சேர்ந்து நடித்த ஒரே படம் இதுதான்.
தென்னிந்திய மொழிகளில் மட்டுமின்றி இந்தி, பெங்காலியிலும் ரீமேக் ஆக காரணமாக இருந்த சு+ப்பர் ஹிட் படம் 'அவள் ஒரு தொடர்கதை''. கே.பாலசந்தருக்கு சிறப்பான பெயரை பெற்றுத் தந்த இப்படத்தில் nஜய்கணேஷ், விஜயகுமார், கமல்ஹாசன் நடித்திருந்தனர். நடிகை சுஜhதா அறிமுகமானது இப்படத்தில்தான் என்பது சிறப்பு.
nஜமினி கணேசன் தயாரித்த 'நான் அவன் இல்லை'' படத்தை கே.பாலசந்தர் இயக்கினார். பணத்துக்காக 5 பெண்களை ஏமாற்றும் மன்மதனின் கதை. படம் ஓடவில்லை.
ஆனால் இதே படம் ஜPவன் நடிப்பில் சில ஆண்டுகளுக்கு முன்பு ரீமேக் ஆகி ஹிட்டானது குறிப்பிடத்தக்கது. உலக சினிமா எடுக்கிறோம் எனக் கூறிக் கொண்டு திரையுலகில் பலர் பு+ச்சாண்டி காட்டிக் கொண்டிருக்கிறார்கள். தமிழ் சினிமாவில் 1970களின் கடைசியில் உலக தரமான படங்களை தந்து அந்த வேலையை சத்தம் இல்லாமல் செய்து காட்டியவர் மகேந்திரன்.
அவரை தமிழ் சினிமாவுக்கு கொண்டு வந்த படம் 'தங்கப் பதக்கம்''. மேடை நாடகத்துக்காக இந்த கதையை அவர் தயார் செய்தார். மேடையில் வெற்றி பெற்ற இக்கதையை படமாக தயாரிக்க சிவாஜp முடிவு செய்தார். மேடையில் வில்லன் நடிகர் செந்தாமரை ஏற்ற வேடத்தில்தான் சிவாஜp நடித்திருந்தார். படத்துக்கு கதை, திரைக்கதையுடன் வசனங்களை மகேந்திரன் எழுத, மாதவன் இயக்கினார். வெள்ளி விழா கண்ட படம் இது.
'அன்றே சிந்திய ரத்தம்'' படத்தில் எம்ஜpஆரும் ஸ்ரீதரும் இணைய இருந்தனர். சில காரணங்களால் '_ட்டிங் தொடங்கி, படம் நின்றுபோனது. அவர்கள் இணைய மாட்டார்களா என்ற ரசிகர்களின் ஏக்கத்தை போக்கியது 'உரிமைக் குரல்''. எம்ஜpஆருக்கு மாபெரும் வெற்றியை தந்த இப்படத்தில் லதா, புஷ்பலதா, சச்சு, நம்பியார், நாகேஷ் நடித்தனர். நடிகர் அசோகன் தயாரிப்பில் எம்ஜpஆர், மஞ்சுளா நடித்த படம் 'நேற்று இன்று நாளை''. நீண்ட நாள் தயாரிப்பில் இருந்த இந்த படத்தை ப.நீலகண்டன் இயக்கினார். இந்தியில் ஹேமமாலினி இரட்டை வேடங்களில் நடித்த படம் 'சீதா அவுர் கீதா''. 'எங்க வீட்டுப் பிள்ளை'' பாணி கதைதான்.
அதே படத்தை தமிழ், தெலுங்கில் நாகிரெட்டி தயாரித்தார். தமிழில் 'வாணி ராணி'' என்றும் தெலுங்கில் 'கங்கா மங்கா' என்றும் தயாரானது. தர்மேந்திரா வேடத்தில் தமிழில் சிவாஜp நடித்தார். வாணிஸ்ரீP இரட்டை வேடங்களில் நடித்தார். சி.வி.ராNஜந்திரன் இயக்கத்தில் 100 நாள் கொண்டாடிய படம் இது.
1941ல் டிகேஎஸ் சகோதரர்கள் நடத்திய நாடகம் 'குமாஸ்தாவின் பெண்''. அதையே டிகேஎஸ் சகோதரர்கள் பின்பு படமாகவும் தயாரித்து, நடித்தனர். ஒரிஜpனல் நாடகத்தில் இயக்குநர் ஏ.பி.நாகராஜன் நடித்திருந்தார். எனவே அதே படத்தை 'குமாஸ்தாவின் மகள'' என்ற பெயரில் எடுக்க ஏ.பி.என். முடிவு செய்தார். அவரே இயக்கிய இப்படத்தில் சிவகுமார், கமல்ஹாசன் நடித்தனர்.
கன்னட நடிகை ஆர்த்தி நாயகியாக அறிமுகமானார். nஜயலலிதாவின் 100வது படம் 'திருமாங்கல்யம்''. கெமராமேன் வின்சென்ட் இயக்கி இப்படத்தில் முத்துராமன், லட்சுமி, பண்டரிபாய், ஸ்ரீதேவி, சச்சு, சுகுமாரி நடித்தனர்.
மேஜர் சுந்தர்ராஜனின் மேடை நாடகம் 'டைகர் சாத்தாச்சாரி'', அதே பெயரில் படமானது. வி.டி.அரசு தயாரித்து இயக்கினார். சிவகுமார், சசிகுமார், பி.ஆர்.வரலட்சுமி, சுகுமாரி ஆகியோர் நடித்திருந்த இப்படத்தில் மேஜர் சுந்தர்ராஜனே கதாநாயகன். கவிஞர் வாலியின் மேடை நாடகமான 'கலியுக கண்ணன்'', படமானது.
கிருஷ்ணன், பஞ்சு இயக்கிய இந்தப் படத்தில் nஜய்சங்கருடன் nஜயசித்ரா நடித்திருந்தார். அசோகனும் வாசுவும் கதாநாயகனாக நடித்த படம் 'வைரம்''.
இந்தியில் வெளியான 'விக்டோரியா 203'' படத்தின் ரீமேக் ஆன இப்படத்தை ராமண்ணா இயக்கியிருந்தார். nஜய்சங்கர், nஜயலலிதா ஜோடியுடன் சச்சு, கே.எஸ்.nஜயலட்சுமி, மனோகர் ஆகியோரும் நடித்திருந்தனர்.
தெலுங்கில் லட்சுமி நடிப்பில் இதே படம் வெளியானது. இந்தி சு+ப்பர் ஸ்டாராக அமிதாப் பச்சன் உயர காரணமாக அமைந்த படம் 'ஜன்ஜPர''. இந்த படத்தின் ரீமேக்கில் அமிதாப் வேடத்தில் புரட்சித் தலைவர் நடித்தார். எஸ்.எஸ்.வாசனின் மகன் எஸ்.எஸ்.பாலன் இயக்கினார். லதா கதாநாயகி.

எப்போதுமே அடிபட்டவனுக்குத்தானே அதிகம் வலிக்கும் குடும்ப வாழ்க்கையில் பாலசந்தர் சந்தித்த துயர சம்பவங்கள்

டை ரக்டர் கே.பாலசந்தர் வாழ்க்கையில் சில சோக சம்பவங்கள் நடந்தன. அதன் விளைவாக அவர் படங்களில் சமூக சீர்திருத்தக் கருத்துக்களைப் புகுத்தினார்.
பொதுவாக பாலசந்தரின் படங்களில் பெண் கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும். பெண்களின் பிரச்சினைகள் அலசப்படும். பெண் உரிமை வலியுறுத்தப்படும். சமூக சீர்திருத்த கருத்துக்கள் எடுத்துக் கூறப்படும்.
இதற்குக் காரணம் என்ன என்பது குறித்து பாலசந்தர் எழுதியிருப்பதாவது:-
எங்கள் குடும்பம் பெரிய குடும்பம்தான். அண்ணன் பாலசுப்பிரமணியன் மூத்தவர். அவருக்குப்பின் சேதுலட்சுமி, மங்களம், சரசுவதி என்ற மூன்று மூத்த சகோதரிகள். ஐந்தாவதாக நான். எனக்கு அடுத்து ஒரு தங்கை nஜயலட்சுமி.
நான் சின்னஞ்சிறுவனாக இருந்தபோதே எனது மூத்த சகோதரிகளான சேதுலட்சுமி, மங்களம், சரசுவதி ஆகியோருக்கு திருமணமாகிவிட்டது.
அதுவும் நான் பிறப்பதற்கு முன்பே மங்களம் அக்காவுக்குத் திருமணம் முடிந்து விட்டது. அப்போது அக்காவுக்கு வயது 8.
நான் பிறப்பதற்கு முன்பே திருமணமான மங்களம் அக்கா, அடுத்த ஆண்டே கணவனை இழந்து விட்டாள். 8 வயதில் திருமணம்; 9 வயதில் விதவை. பெயரோ மங்களம். என்ன வினோதம்?
சின்னஞ்சிறு வயதில் என் சகோதரிக்கு ஏற்பட்ட அந்த இழப்பு நெடுநாளாக என் நெஞ்சை கனக்க வைத்தது என்று பாலசந்தர் கூறியுள்ளார்.
இதெல்லாம் புரிய எனக்கு 13 ஆண்டுகளாயின. அவ்வளவு இடைவெளிக்குப் பிறகுதான் அதன் தாக்கம் முழுமையாக எனக்குத் தெரிந்தது.
என்னுடைய இளைய சகோதரி nஜயா, மும்பையில் தனது கணவர் சங்கருடன் வாழ்ந்து வந்தாள். அவளது கணவர் எல்.ஐ.சி.யில் மிகப்பெரிய பொறுப்பில் இருந்து வந்தார்.
அப்போது எனக்கு 27 வயது இருக்கும். என் தங்கைக்கு 25 வயது இருக்கும். அவளுக்கு இரண்டு பெண் குழந்தைகள்.
என் கணவருக்கு உடல் நலம் இல்லை. ஆஸ்பத்திரியில் சேர்த்திருப்பதால் உதவிக்கு நீ இங்கு வந்து சில நாட்கள் தங்கவும் என்று தங்கையிடம் இருந்து கடிதம் வந்தது. நானும் என் மனைவியும் புறப்பட்டுச் சென்றோம். மும்பை ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்ட என் மைத்துனருக்கு என்ன நோய் என்பதை என் தங்கையிடம் சொல்லவே இல்லை. நான் டொக்டரைப் போய்ப் பார்த்தேன்.
அவர் உங்கள் மைத்துனருக்கு கேன்சர். அவர் அதிக நாள் உயிரோடு இருக்கமாட்டார். இதை உங்கள் தங்கையிடம் சொல்லவில்லை. வேறு யாரிடமாவது சொல்ல வேண்டும் என்பதால் உங்களிடம் மட்டும் சொல்லி இருக்கிறேன். நீங்கள் அவரை இங்கிருந்து அழைத்துச்சென்று விடுங்கள். அவருக்கு என்ன மருந்து தந்தாலும் பயன் இல்லை. வீண் செலவு செய்யவேண்டாம் என்றார்.
டொக்டர் சொன்னதைக் கேட்டு எனக்கு தலை சுற்றியது. என்ன செய்வது என்று தெரியவில்லை. மனைவியிடம் சொல்லலாமா அல்லது தங்கையிடம் சொல்லி விடலாமா என்று தவித்தேன். ஏனென்றால் அப்போது எனக்கும் இள வயதுதானே.
வீடு திரும்பும்போது, வழியில் ரயில் நிலையத்தில் உட்கார்ந்து அழுதேன்.
பிறகு என் தங்கையை சந்தித்தபோது, டொக்டர் என்ன சொன்னார்... இன்னும் ஒரு வாரத்தில் வீட்டுக்கு அனுப்பி விடலாம் என்று என்னிடம் கூறினாரே...! என்றாள்.
என்ன சொல்வது என்று தெரியாமல் தவித்தேன்.
அவர்தான் ஒரு வாரத்தில் வந்து விடுவாரே! நீ நாலைந்து நாள் லீவு போட்டு விட்டு இங்கேயே இரு என்றாள்.
டொக்டர் சொன்னதை தங்கையிடம் சொல்லி, அவள் கணவரை ஆஸ்பத்திரியில் இருந்து அழைத்து வந்து விடலாம் என்று நான் எண்ணிக்கொண்டிருந்தபோது, அந்த சில மணி நேரங்களில் ஆஸ்பத்திரியில் எனது தங்கையின் கணவர் இறந்து போனார். எனக்கு இது பேரிடிபோல் இருந்தது. இதற்குமுன் எத்தனையோ துயர நிகழ்ச்சிகள் என் வாழ்க்கையில் நடந்திருந்தாலும் இதுதான் பேரிடியாக வந்து இறங்கியது.
இளம் வயதிலேயே விதவையான எனது தங்கையின் நிலையைக்கண்டு இடிந்து போய்விட்டேன்.
அங்கேயே காரியங்கள் எல்லாம் முடிந்தன. சில நாள் கழித்து மூட்டை முடிச்சுகளுடன் சென்னைக்குப் புறப்பட்டோம். நான்கு வயது, இரண்டு வயது என்று இரு பெண் குழந்தைகளோடு எனது வீட்டுக்கு வந்தாள் என் தங்கை.
என் மனைவிக்கு பெரும் பொறுப்பாகி விட்டது. பள்ளிக்குச் செல்லும் இரண்டு குழந்தைகளையும் பராமரிப்பது எப்படி என்று முதலில் சங்கடம் ஏற்பட்டாலும், பின்னர் எனது சகோதரியை அவளது சகோதரியாகவும், அவள் குழந்தைகளை தன் குழந்தைகளாகவும் ஏற்றுக்கொண்டாள்.
ஒவ்வொரு மனிதனுக்கும் பின்னே இனம் புரியாத சோகம் உள்ளது. அந்த சோகத்தின் தாக்கம் அவ்வப்போது வெளிப்படும்போதும் அது புதிய சிந்தனைகளை -சீர்திருத்தக் கருத்துக்களை அள்ளி வழங்குகிறது. எப்போதுமே அடிபட்டவனுக்குத்தானே அதிகம் வலிக்கும்.
எனது படங்களில் வந்த சீர்திருத்தக் கருத்துக்களுக்குப் பின்னணி என்ன என்பது இப்போது புரிகிறதா?
இவ்வாறு பாலசந்தர் எழுதியுள்ளார்.

Wednesday, April 15, 2015

இரட்டை வேடங்கள் ஒரே காட்சியில் தோன்றுவதை படம்பிடிக்கும் விதம்

அபிமானத்துக்குரிய தங்கள் கதாநாயகன் இரட்டை வேடங்களில் நடித்தால் அதைக் கொண்டாடத் தவறியதில்லை ரசிகர்கள். அன்று எம்.ஜp.ஆரும் சிவாஜpயும் இரட்டை வேடங்களில் நடித்தபோது இன்றைய அதிநவீனக் கொம்போசிட்டிங் (உழஅpழளவைiபெ) தொழில்நுட்பம் இல்லை.
அன்று இரட்டை வேடங்கள் ஒரே காட்சியில் தோன்றுவதைப் படம்பிடிக்க நடிகரோடு தொழில்நுட்பக் குழுவும் கடும் உழைப்பைத் தர வேண்டியிருந்து. உதாரணத்துக்கு 'நாடோடி மன்னன'' படத்தை எடுத்துக் கொள்வோம். எம்.ஜp.ஆர் ராஜh மார்த்தாண்டனாக ஒரு வேடத்திலும், அவரது ஆட்சியை எதிர்த்து மக்களாட்சி வேண்டும் எனப் போராடும் புரட்சியாளன் வீராங்கன் என்ற மற்றொரு வேடத்திலும் நடித்திருந்தார்.
இரண்டு கதாபாத்திரங்களும் சந்தித்துக்கொள்ளாதவரை பிரச்சினை இல்லை. ஆனால் இரண்டு கதாபாத்திரங்களும் சில காட்சிகளில் ஒன்றாகத் தோன்றியே ஆக வேண்டும் அல்லவா? இந்தப் படத்தை இயக்கி நடித்த எம். ஜp.ஆர்.
முதலில் மார்த்தாண்டன் தொடர்புடைய காட்சிகளையெல்லாம் படம்பிடித்துக் கொண்டார். பிறகு வீராங்கன் சம்பந்தப்பட்ட காட்சிகளைப் படம்பிடித்தார். இருவரும் தோன்றிய காட்சிகளை எப்படிப் படம்பிடித்திருப்பார்? அதற்கு அப்போது பயன்படுத்திய தந்திரம்தான் 'பிளாக் மாஸ்க்''.
நாடோடி மன்னனில் மார்த்தாண்டன், வீரங்கனுடன் கைகுலுக்கும் காட்சியை எடுத்துக்கொள்ளுங்கள்.
செட்டில் எந்த இடத்தில் இரண்டு வேடக் கதாபாத்திரங்களும் நிற்கவேண்டும், அந்த n'hட்டின் வடிவமைப்பு (ளாழவ உழஅpழளவைழைn) என்ன, அப்போது செட்டின் ஒளியமைப்பு என்ன என்பதையெல்லாம் ஒளிப்பதிவாளர் முடிவு செய்துவிடுவார்.
முதலில் மார்த்தாண்டன் வலப்புறம் நின்று கைகளை நீட்டி, எம்.ஜp.ஆருக்கான ஒரு ^ப் வே' நடிகரின் கைகளைக் குலுக்குவார். இப்போது கெமராவின் கண்கள் என்று வருணிக்கப்படும் அதன் லென்ஸ் வழியே இந்தக் காட்சி பதிவாக வேண்டும். வீராங்கன் நிற்கப்போகும் இடப்பக்கம் கெமராவில் பதிவாகாமல் இருக்க வேண்டும். இதனால் கெமராவின் பார்வையை அதன் இடப்பக்கம் முழுவதையும் கருப்பு வண்ணக் காகிதத்தால் பாதி மறைத்துவிடுவார்கள்.
இப்போது மார்த்தாண்டன் நடிக்கும் n'hட்டைப் படம்பிடித்து விடுவார்கள். n'hட் பதிவாகி முடிந்ததும் கெமராவில் மறைக்கப்பட்ட பகுதியானது பிலிமில் எதுவும் பதிவாகாமல் அப்படியே நெகட்டிவாக இருக்கும். இப்படி எடுக்கப்பட்ட முதல் n'hட்டில் எத்தனை பிரேம்கள் படம் பிடிக்கப்பட்டிருக்கிறதோ அத்தனை பிரேம்களை பிலிம்ரோலில் ரிவர்ஸ் செய்து சரியான முதல் பிரேமில் 'க்யு+' செய்து வைப்பார்கள். இம்முறை மார்த்தாண்டன் நின்றிருந்த இடத்தை கெமரா பதிவு செய்யாமல் இருக்க கெமராவின் மற்றொரு பாதி கறுப்புக் காகிதத்தால் மறைக்கப்பட்டுவிடும்.
வீராங்கன் நிற்க வேண்டிய இடப்புறத்தில் மேக்அப்பை மாற்றிக்கொண்டு எம்.ஜp. ஆர். வீராங்கன் தோற்றத்தில் நிற்பார். ^ப் நடிகர் கைகுலுக்கியபோது ஒளிப்பதிவாளர் குறித்துக் கொண்ட அதே இடத்தில் நின்று வீராங்கனாக நடிப்பார்.
இப்போது ஒரே பிலிமில் ஒரே நடிகரால் நடிக்கப்பட்ட இரண்டு வேடக் காட்சி தயார்.
இந்தக் கடின முறையை நவீன கொம்போசிட்டிங் முறை சுலபமாக்கிவிட்டது.
உடலோடு ஒட்டிப்பிறந்த இரட்டைக் கதாபாத்திரங்களில் மாற்றன் படத்தில் சு+ர்யா நடித்திருந்தார். அவர் அந்தப் படத்தில் ஏற்றிருந்த அகிலன், விமலன் ஆகிய கதாபாத்திரங்களின் குணாதிசயம் வெளிப்படும்படி, உடல்மொழி, வசன உச்சரிப்பு இரண்டிலும் வேறுபாடு காட்டி இரண்டு கதாபாத்திரங்களையும் சிறப்பாக நடித்திருந்தார் என்று விமர்சகர்கள் பாராட்டினார்கள். உண்மையில் நவீன கொம்போசிட்டிங் முறை தரும் வசதியால் சு+ர்யா இதைச் சுலபமாகச் செய்துவிட்டார் என்று சொல்ல வேண்டும்.
முதலில் ஒரு கதாபாத்திரத்தை அதற்குரிய அத்தனை காட்சிகளிலும் நடித்து முடித்துவிட்டார் சு+ர்யா. பிறகு மற்றொரு வேடத்திற்கு சு+ர்யா நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட்டன. என்றாலும் இந்த இரட்டையர் வேடங்கள் இடம்பெறும் எல்லா காட்சிகளும் 'கிரீன் மேட்'' பின்னணியில் பச்சை வண்ணத் துணியை செட்டின் பின்புலத்தில் கட்டி படம் பிடிக்கப்பட்டன.
எதற்காக இந்தப் பச்சை வண்ணத் திரையின் பின்னணியில் இவர்கள் தோன்றும் காட்சிகள் படம்பிடிக்கப்பட்டன?
வேறுபட்ட இரண்டு கதாபாத்திரங்களை அல்லது காட்சிகளை வெட்டி ஒட்டவே இந்த பச்சை வண்ணப் பின்னணி பயன்படுகிறது.

கன்னடக் கனவுலகின் கலைக்க முடியாத சித்திரமாகத் திகழ்ந்தவர் 'மினுகு தாரா'' கல்பனா

கேரளம் இன்று தமிழ் சினிமாவுக்குக் கதாநாயகிகளை வாரி வழங்கி வருவதுபோன்று அன்று கர்நாடகம் கருணை காட்டியது. கன்னடத்துப் பைங்கிளி என்று தமிழர்களும் பாசத்தைக் கொட்டினார்கள்.
சரோஜhதேவியைப் போல இவரும் இங்கேயே தங்கிவிட மாட்டாரா எனத் தமிழ் ரசிகர்கள் ஏங்கினார்களா என்று தெரியவில்லை. ஆனால் தன் தாய்மொழித் திரைக்குத் தன்னைப்போல் ஒரு தனிப்பெரும் நாயகி தேவை என்று கன்னடம் திரும்பினார். இந்தியத் திரையில் யாருமே நிகழ்த்த முடியாத சாதனையை நிகழ்த்திக் காட்டினார்.
20 வயதில் கதாநாயகியாக அறிமுகமாகி 36 வயதில் தற்கொலை செய்து கொண்டது வரை 16 ஆண்டுகள் கதாநாயகியாக மட்டுமே அரிதாரம் பு+சியிருக்கிறார். கறுப்பு வெள்ளையில் பயணத்தைத் தொடங்கி வண்ணப்படங்களில் வண்ணக் கோலங்கள் வரைந்து மறைந்த அந்தக் கன்னடத்துக் கண்ணீர்க் கவிதை வேறு யாருமல்ல.. 'மினுகு தாரா'' (மின்னும் தாரகை) என்று கர்நாடக மக்களால் வாஞ்சையுடன் அழைக்கப்பட்ட கல்பனாதான்.
பீம்சிங் தயாரிப்பில் இரட்டை இயக்குநர்கள் திருமலை மகாலிங்கம் எழுதி இயக்கிய தமிழின் முதல் ரோடு மூவியான 'மெட்ராஸ் ^ பாண்டிச்சேரி'(1966) படத்தில் கதாநாயகியாக நடித்தவர்தான் கல்பனா. சினிமாவில் கதாநாயகியாக வேண்டும் என்ற கனவுடன் வீட்டை விட்டு ஓடிவரும் ஓர் இளம்பெண் கதாபாத்திரத்தை இந்தப் படத்தில் ஏற்று நடித்தார்.
ஆனால் அதற்கு முன்பே 1963-ல் பி.ஆர். பந்துலு கன்னடத்தில் இயக்கிய 'சாகு மகளு' படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். மூன்றே ஆண்டுகளில் கன்னட சினிமாவில் முன்னணிக் கதாநாயகியாக உயர்ந்தார். மெட்ராஸ் ^ பாண்டிச்சேரியைத் தொடர்ந்து ஒரு சில தமிழ்ப் படங்களில் நடித்தாலும் கன்னடப் படவுலகம் தனது தவப் புதல்வியாகக் கல்பனாவைத் தத்தெடுத்துக்கொண்டது. அதற்குக் காரணமாக அமைந்தது புட்டண்ணா கனகல் கல்பனா கூட்டணி.
கன்னட சினிமாவை வெகுஜன சினிமாத் தளத்தில் மட்டுமல்ல, இந்திய அரங்கிலும் உலக அரங்கிலும் கம்பீரமாக இடம்பெறச் செய்த படைப்பாளிகளில் முக்கியமானவர் புட்டண்ணா கனகல். அவரது இயக்கத்தில் 1967-ம் ஆண்டு வெளியானது 'பெல்லி மூடா'' என்ற திரைப்படம். கல்யாண்குமார் நாயகனாக நடித்திருந்தாலும் கல்பனா ஏற்று நடித்திருந்த 'சந்திரா' கதாபாத்திரமே கதையின் மையம்.
எஸ்டேட் தொழிலாளர்களின் வாழ்க்கையைப் பேசிய இந்தப் படத்தில்தான் புட்டண்ணா கனகல் இயக்கத்தில் முதன்முதலாகக் கல்பனா நடித்தார். இந்தப் படம் புட்டண்ணா கனகலுக்கு முதல் வெற்றியையும் கல்பனாவுக்கு மாநில அரசின் சிறந்த நடிகைக்கான முதல் விருதையும் கொண்டு சேர்த்தது.
இந்தப் படத்தின் டைட்டில் பாடலில் இடம்பெற்ற வார்த்தைகளைக் கொண்டே பின்னர் 'மின்னும் தாரகை''யாக இவர் ரசிகர்களால் கிரீடம் சு+ட்டப்பட்டார். புகழின் உச்சியில் பெங்க@ரில் கட்டிய தனது வீட்டுக்கும் இந்தப் படத்தின் பெயரையே வைத்தார் கல்பனா.
இதன் பிறகு பெண் கதாபாத்திரங்களை உயர்த்திப் பிடித்த புட்டண்ணா கனகலின் உயர்தரமான படங்களின் ஆஸ்தான நாயகியானர் கல்பனா. 'nஜஜ் ஜp பு+Nஜ' (சலங்கை பு+iஜ) படத்தில் தேவதாசிக் குடும்பத்திலிருந்து மீண்டெழுந்து படித்துப் பட்டம் பெற்று முறையான திருமண வாழ்வு வாழ நினைக்கும் பெண்ணாக நடித்தார்.
காதலனால் கைவிடப்பட்டு மீண்டும் தேவதாசி வாழ்வில் தள்ளப்படும் இந்தக் கதாபாத்திரம், வைர மோதிரத்தை விழுங்கித் தற்கொலை செய்துகொள்வதுபோலப் படத்தை முடித்திருந்தார் புட்டண்ணா கனகல். கல்பனாவின் நிஜவாழ்வும் மணவாழ்வில் ஏற்பட்ட விரிசலால் தற்கொலையில் முடிந்துபோனது பெரும் சோகம்.
புட்டண்ணா கனகலின் தலைசிறந்த படங்களில் முதன்மைக் கதாபாத்திரமாக வாழ்ந்து புகழை அள்ளிய கல்பனா, அவருடன் இணைத்துக் கிசுகிசுக்கப்பட்டார். இதனால் தனது கதாநாயகியைப் பிரிய வேண்டிய நிர்ப்பந்தம் கனகலுக்கு ஏற்பட்டது. அவரது படங்களில் கல்பனாவின் இடத்தை பாரதி, ஆர்த்தி ஆகியோர் எடுத்துக் கொண்டாலும் கல்பனாவே கன்னடக் கனவுலகின் கலைக்க முடியாத சித்திரமாகத் தொடர்ந்தார்.
துயரம் கவ்விய கதாபாத்திரங்களில் அதிகம் நடித்திருந்தாலும் அழகும் இளமையும் காதலும் மிளிர்ந்த கதாபாத்திரங்களிலும் வசீகரிக்கத் தவறவில்லை. கன்னடச் சினிமாவில் 60களில் தொடங்கி எழுபதுகளின் இறுதிவரை இவர் இணைந்து நடிக்காத நடிகர்களோ இயக்குநர்களோ இல்லை என்ற நிலை உருவானது.
திரைப்படங்களில் நவீன டிசைன்களில் இவர் அணிந்த 'pபான் புடவைகள், பெரிய கை மற்றும் சிறு கைகளில் விதவிதமான ப்ரில்கள் வைத்த ரவிக்கைகள், பெரிய காது வளையங்கள் போன்றவை தென்னிந்திய சினிமா முழுவதும் /பே'னாகப் பரவி நின்றன.
திரை நடிப்பில் முத்திரை பதித்த அதேநேரம் ஆரம்பம் முதலே நாடகங்களிலும் நடிக்கத் தவறவில்லை கல்பனா. வட கர்நாடகத்தின் மாபெரும் நாடக மேதையாகக் கொண்டாடப்படும் குடுசேரி பசவராஜ் நாடகக் குழுவில் முக்கிய நடிகையாகப் பிரகாசித்து வந்த கல்பனா, அவரை மணந்துகொண்டு குடும்ப வாழ்வில் கனவுகளுடன் காலடி வைத்தார். ஆனால் எந்தப் புள்ளியில் அந்த வாழ்க்கை கசந்ததோ தெரியவில்லை! தனது 36 வயதில் தற்கொலை செய்து கொண்டார்.
நடிகைகளின் வாழ்க்கைக் கதைகளை படமாக்குவதில் அவ்வப்போது ஆர்வம் காட்டும் இந்திய சினிமாவில் கல்பனாவின் வாழ்க்கையை மட்டும் விட்டு வைப்பார்களா என்ன? இம்முறை மற்றொரு முன்னணி நடிகையே கல்பனாவின் கதாபாத்திரத்தை ஏற்று அந்தப் படத்தைத் தயாரிக்கவும் செய்தார். அவர் பு+ஜh காந்தி. பிரபுசாலமன் இயக்கிய 'கொக்கி' படத்தின் மூலம் கவர்ந்தாரே அவரேதான்.
அந்த பு+ஜhவா இவர் என்று எண்ண வைத்தார் அவரது அடுத்த படத்தில். கர்நாடகத்தையே கதிகலங்க வைத்த 'தண்டுபாளையாம்' கொலை, கொள்ளை கும்பலின் நிஜக்கதை படமானபோது அதில் சுருட்டுக் குடித்தபடி, பன்றியின் கால்களைக் கட்டி தோளில் போட்டுத் தூக்கிச் செல்லும் கிரிமினல் பெண் கதாபாத்திரத்தில் அதிர வைத்தார்.
தமிழிலும் வெளியான அந்தப் படத்தின் அதிரடி அழகியான பு+ஜh காந்திதான் கல்பனா கதாபாத்திரத்திலும் நடித்து கர்நாடகத்தை மாநிலத்தைத் தற்போது கலங்கடித்திருக்கிறார்.
'அபிநேத்ரி'' என்ற தலைப்புடன் கடந்த 2013 ஜ_லையில் பு+ஜh படத்தைத் தொடங்கியபோதே வரிசையாய் படத்தை எதிர்த்து வழக்குகள் தொடுக்கப்பட்டன. புட்டண்ணா கனகல், கல்பனா ஆகிய இருதரப்பு உறவுகளும் வழக்குகளைத் தொடுக்க எல்லாவற்றையும் உடைத்துக் கொண்டு வந்துவிட்டது அபிநேத்ரி. கல்பனா கதாபாத்திரத்துக்கு பு+ஜh காந்தியின் குரல் எடுபடவில்லை என்று விமர்சனங்கள் வந்தாலும், கணிசமான வெற்றியை அள்ளிவிட்டது. மினுகு தாராவின் நினைவுகளைக் கன்னட ரசிகர்களின் இதயத்தில் மீட்டிச் சென்றுவிட்டது அபிநேத்ரி 2015.

Wednesday, March 25, 2015

பாரதிராஜவின் பாராட்டு பெற்ற இலங்கை இயக்குனர் றசீம்

இலங்கையில் தமிழ்த் திரைப்படம் தயாரிப்பது என்பது மிகவும் கடினமான ஒரு காலத்திலே அதில் துணிந்து காலடி எடுத்து வைத்தவர் சம்மாந்துறையைச் சேர்ந்த ஏ.ஆர்.எம்.றசீம். தமிழ் திரைப்படங்கள் தயாரித்தால் தமிழக திரைப்படங்களோடு போட்டி போடக்கூடியளவில் தரமானதாக தயாரிக்க வேண்டும், திரையிட தியேட்டர்கள் தேட வேண்டும். இவற்றுக்கெல்லாம் இந்த நிலை இருக்கையில் இவர் இதுவரை மூன்று திரைப்படங்களை தயாரித்துவிட்டார்.
ஆரம்பகாலத்தில் வியாபாரத்துறையில் ஈடுபட்டு இருந்த இவர் 1989ஆம் ஆண்டு ரத்தபாசம் என்ற வீடியோ படத்தை தயாரித்துள்ளார். தமிழர்களும் முஸ்லிம்களும் செறிந்து வாழும் கிழக்கு மண்ணில் தமிழ், முஸ்லிம் நட்பும் உறவும் நட்புறவாகும் வண்ணம் இத்திரைப்படத்தை தயாரித்துள்ளார். சுமார் 5 இலட்சம் ரூபா செலவில் இரண்டரை மணித்தியாலங்கள் கொண்ட இந்த திரைப்படத்தை தயாரித்து ஒரு வீட்டில் எடிட்டிங் செய்து கொண்டிருந்தபோது அங்கு ஏற்பட்ட தமிழ், முஸ்லிம் கலவரத்தில் அந்த வீட்டோடு சேர்ந்து அந்த சினிமா படச்சுருளும் எரிந்து சாம்பராகியது.
அதன்பின் National Inteligent Bureau வான தேசிய புலனாய்வுத்துறையில் இணைந்து அங்கு சில காலம் சேவையாற்றிவிட்டு தனிப்பட்ட காரணத்துக்காக அந்த அரசதுறை வேலையை விட்டு விலகி மீண்டும் வியாபாரத்துறையில் ஈடுபட்டார். அப்போது ஒரே நாளில் என்ற திரைப்படத்தை தயாரிக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு தமிழகத்திற்கு சென்றார். கெமராவை கையாள்வது எப்படி? திரைப்படம் தயாரிப்பது எப்படி போன்ற நுணுக்கங்களை அங்கு மென்மேலும் கற்று தேர்ந்தார். பழனி பேரசு பரத், காதலர் கதை ஆகிய திரைப்படங்களை தயாரிக்கும் போது உதவியாளராக இருந்து அவற்றை கற்றுத் தேர்ந்தார். அதனைவிட சன் டிவியிலும் சேர்ந்து பயிற்சி பெற்றார்.
‘ஒரே நாளில்’ என்ற திரைப்படத்தை தயாரிக்க எவ்வளவு செலவானது?
ஒரு கோடி ரூபா
இந்த திரைப்படத்தை தயாரிக்க எவ்வளவு காலம் எடுத்தது?
மூன்று வருடங்கள்
இந்தப் படம் திரையிடப்பட்டது தொடர்பாக நீங்கள் என்ன கூற விரும்புகிaர்கள்?
இலங்கையின் யுத்தத்திற்குப் பின் திரையிடப்பட்ட பிரமாண்டமான திரைப்படம் இது.
இந்த திரைப்படம் எப்போது திரையிடப்பட்டது?
2012 செப்டெம்பர் 31ஆம் திகதி
இந்த திரைப்படத்தால் எதிர்பார்த்த வசூல் கிடைத்ததா?
இல்லை அதற்கு பல காரணங்களைக் கூறலாம்.
இந்தத் திரைப்படம் இலங்கை திரைப்படம் என்று முத்திரை குத்தி திரையிடப்பட்டதும் கட்அவுட்டில் கூட இலங்கை திரைப்படம் என்று குறிப்பிடப்பட்டிருந்ததும் இதற்கு ஒரு காரணம் என்று கூறலாம். அத்துடன் இந்த திரைப்படம் திரையிடப்பட்ட தினத்தன்றே வெடி, வாகை சூடவா, முரண் ஆகிய படங்கள் திரையிடப்பட்டதும் அதற்கு அடுத்தவாரம் வேலூர் மாவட்டம் போன்று வேறு சில புதிய படங்கள் திரையிடப்பட்டதும் ஒரே நாளில் திரைப்படம் எதிர்பார்த்த வசூலை எட்டாத நிலைக்கு இன்னுமொரு காரணமாகும்.
தென்னிந்திய திரைப்படங்களை பார்த்து பழக்கப்பட்ட ரசிகர்கள் இலங்கைத் திரைப்படம் என்றால் தேயிலை தோட்டம், குடிசை, பனைமரம் இவை தான் இருக்கும் என்று நினைத்து விட்டார்கள்.
இந்த திரைப்படத்தை இந்தியாவில் திரையிட முயற்சி செய்யவில்லையா?
இந்தியாவில் திரையிடுவதற்கு பெரும் முயற்சி செய்தேன். நடிகர் விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகரன், நாசர் சார் என பலர் இதற்கு உதவி செய்ய முன் வந்தார்கள். ஆனால் படத்தை பதிவு செய்யவில்லை. படக் கம்பெனி பதிவு செய்யப்படவில்லை என ஏகப்பட்ட பிரச்சினைகள் எழுந்ததால் தமிழக தியேட்டர்களில் இந்த திரைப்படத்தை திரையிட முடியவில்லை. ஆனால் டிவிடியில் வெளியிட்டு வசூல் செய்யப்பட்டது.
இந்த திரைப்படத்திற்கு பின் என்ன படத்தை எடுத்தீர்கள்?
கீறல்கள்
இது எத்தனையாம் ஆண்டு எடுக்கப்பட்டது?
2012 ஏப்ரல் மாதம்
“கீறல்கள்” திரைப்படத்தின் தொடக்க விழா பற்றி என்ன கூறலாம்?
இந்த படத்தின் தொடக்க விழா தமிழகத்தின் தேனீ மாவட்டத்தில் நடைபெற்றது. அன்னக்கொடி... என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்த தளத்தில் “கீறல்கள்” திரைப்படத்தின் ஆரம்பவிழா நடைபெற்றது. இயக்குனர் பாரதிராஜா, நடிகை கார்த்திகா, மனோஜ் உட்பட மேலும் பல நடிக, நடிகைகள் கலந்து கொண்டனர். இதில் கலந்து கொள்வதற்கு இலங்கையிலிருந்து 50 பேர் சென்றிருந்தோம்.
எங்கள் 50 பேருக்கும் ‘வந்தவர்கள் அனைவரும் இலங்கை மக்கள்’ என்று அன்புள்ளத்தோடு வரவேற்று மதியபோசன விருந்துபசாரம் அளித்து கெளரவித்தவர் இயக்குனர் பாரதிராஜா. இவ்வாறான உள்ளம் யாருக்கு வரும்? இப்படி யார் செய்வார்கள்? எங்களது விழாவில் கலந்து கொள்ள வருவதே பெரிய விசயம். அப்படி இருக்கையில் எங்களுக்கு விருந்தளித்து கெளரவித்து எம் நெஞ்சங்களை நெகிழ வைத்தது. இதனை என்னென்றும் மறக்க முடியாது.
இந்த படத்தின் பாட்டுக்குரிய காட்சியொன்று கொடைக்கானலில் படமாக்கப்பட்டது. இதில் கலந்து கொள்வதற்காக இலங்கையிலிருந்து 45 பேர் சென்று இருந்தோம். நாம் கொடைக்கானலில் படப்பிடிப்பில் ஈடுபட்டிருப்பது தெரிந்து இயக்குனர் பாரதிராஜா, சென்னையிலிருந்து திருச்சிக்கு விமானத்தில் வந்து அங்கிருந்து கொடைக்கானலுக்கு காரில் வந்து எங்களை உற்சாகப்படுத்தினார்.
கீறல்கள் படத்தின் இசைவெளியீட்டு விழா ஜில்லா படத்தின் படப்பிடிப்பு தளத்தில் நடைபெற்றது. நடிகர்கள் விஜய், மோகன்லால் ஆகியோருடன் சுப்பர் குட் பிலிம் அதிபதி ஜில்லா தயாரிப்பாளர் ஆர்.பி.செளத்ரி ஜித்தன் ரமேஸ் ஆகியோர் இதில் கலந்து கொண்டனர். கீறல்கள் படத்தின் டப்பின் வேலைகள் அனைத்தும் தமிழக கலைஞர்களைக் கொண்டு செய்யப்பட்டுள்ளது. எனவே தமிழக திரைப்படத்துக்கு நிகராக இந்த திரைப்படம் தயாரிக்கப்பட்டுள்ளது.
கீறல்கள் படத்தின் கதாநாயகன் தமிழகத்திலிருந்து இலங்கைக்கு தனது அத்தை வீட்டுக்கு வருகிறான். வந்த இடத்தில் அவனுக்கு லொட்டரியில் 8 கோடி ரூபா விழுகிறது. இந்த பரிசுக்குரிய லொட்டரி டிக்கெட் தொலைந்துபோகவே அதை கண்டுபிடிக்க போய் பல போராட்டங்களை சந்திக்கின்றான்.
நீங்கள் அடுத்ததாக மூன்றாவதாக தயாரிக்கப்போகும் திரைப்படத்தின் பெயர் என்ன?
நேற்று இரவு 10.45க்கு
இந்த திரைப்படத்தில் நடிக்கப்போகும் நடிக நடிகைகள் பற்றி கூறலாமா?
இதில் 25% இந்திய கலைஞர்களும் 75% இலங்கை கலைஞர்களும் நடிக்கவுள்ளனர். இலங்கை கலைஞர்கள் அனைவரும் புதுமுகங்களாகத்தான் இருப்பார்கள்.
புதுமுகங்களுக்கு வாய்ப்பளிக்கப் படும் எனவே அப்படி நடிக்க விரும்புகிறவர்கள் இருந்தால் என்னுடன் தொடர்பு கொள்ளலாம்.
நேற்று இரவு 10.45க்கு படத்தின் படப்பிடிப்பு எப்பொழுது ஆரம்பிக்கப்படும்?
பிரமாண்டமான இந்த படத்தின் ஆரம்பவிழா வெகுவிரைவில் நடைபெறும். நடிகரும் இயக்குனருமான சேரன் இதனை ஆரம்பித்து வைப்பார். இவரோடு தமிழகத்தைச் சேர்ந்த எட்டு நடிக, நடிகைகள் இதில் கலந்து கொள்ளவுள்ளார்கள். இதன்படப்பிடிப்பு தமிழகத்திலும் இலங்கையிலும் நடைபெறும். ரசிகர்களுக்கும் இந்த படப்பிடிப்பை கண்டுகளிக்க வாய்ப்பேற்படுத்தி கொடுக்கப்படும்.
இந்த திரைப்படத்தோடு படத் தயாரிப்பை நிறுத்தி விடுவீர்களா?
இல்லை! வருடத்திற்கு மூன்று திரைப்படங்கள் வீதம் தயாரிக்க திட்டமிட்டுள்ளேன். கெமரா யுனிட், எடிட்டிங், டப்பிங் என்று அனைத்தும் செய்யக்கூடிய வசதிகள் எம்மிடம் உள்ளன. C2H என்ற திட்டத்தின் மூலம் படங்களை திரையிடக்கூடிய வாய்ப்பும் உள்ளது.கடந்த மார்ச் 5ஆம் திகதி நடிகரும் இயக்குனருமாகிய சேரன் ஆரம்பித்து வைத்த C2H என்ற திட்டத்தைப் பற்றி கூறுங்களேன்.
இதில் C2H என்பது சினிமா டூ ஹோம் என்பதாகும். திரைப்படமொன்று தயாரித்து திரைக்கு வருகின்ற நாளிலேயே அந்த திரைப்படத்தின் திருட்டு சீடி வெளிவந்து விடுகிறது. இதனால் திரைப்படத் தயாரிப்பாளர்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்படுகிறது. இதனை தடுக்கும் முகமாகத்தான் சேரன் சார் திரைப்படத்தின் டிவிடிக்களை வீடுகளுக்கு சென்று விநியோகிக்கும் திட்டத்தை ஆரம்பித்துள்ளார். இதன் ஆரம்பவிழா சென்னை நேரு உள்ளக அரங்கில் நடைபெற்றது. சுமார் 75,000 பேரளவில் இதில் கலந்து கொண்டார்கள். இங்கு சேரனின் ஜே.கே எனும் நண்பனின் வாழ்க்கை என்ற திரைப்படத்தின் 30 லட்சம் டிவிடிக்கள் விற்பனையாகின.
இந்த விழாவில் சேரன் சார் என்னை மேடைக்கு அழைத்து என் குருநாதர் தான் உனக்கு பொன்னாடை போர்த்தி கெளரவிக்க வேண்டும் என்று கூறி இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமாரைக் கொண்டு பொன்னாடை போர்த்திக் கெளரவித்தார். அதன்பின் சேரன் சார் என்னை மேடையை விட்டு இறக்கவிடாமல் மேடையிலேயே அமர வைத்தார். சுமார் 4 மணித்தியாலங்கள் நடைபெற்ற இந்நிகழ்வில் 20 நிமிடங்கள் எனக்காக ஒதுக்கியிருந்தார்.
இதனை www.c2hnetwork.com என்ற இணையத்தளத்தில் Contact us க்கு சென்று Recorded Event 5th March 2015ஐ கிளிக் செய்து பார்க்கலாம்.இதில் தயாரிப்பாளர் கலைப்புலி தாணு நடிகர் சங்கத் தலைவர் சரத்குமார் ஆகியோரும் மேடையில் இருந்து கெளரவித்தனர்.தமிழகத்தில் சேரனால் ஆரம்பிக்கப்பட்ட C2H இன் இலங்கை விநியோகஸ்தராக நீங்கள் தெரிவு செய்யப்பட்டிருக்கிaர்கள் இலங்கை விநியோகஸ்தராகக் கூடிய வாய்ப்பு உங்களுக்கு எப்படி கிடைத்தது?
ஒருநாள் பாரதிராஜா சார் போன் பண்ணி “சேரன் வெயிட்டிங் போ யூ. நீ நாளைக்கு புறப்பட்டு வா” என்று கூறினார். நான் உடனடியாக விமான டிக்கெட் எடுப்பதெல்லாம் கஷ்டம் என்று கூறி வசதி கிடைத்தவுடன் சென்றேன். முதலில் பாரதிராஜா சார்கிட்டதான் சென்றேன். அவர் உடனடியாக சேரன் சார்கிட்ட அனுப்பிவிட சேரன் சார் விடயத்தை கூறி என்னை இலங்கை விநியோகத்தரை நியமித்தார். C2H மூலம் விநியோகிக்கப்படுகின்ற டிவிடி ஒன்று என்ன விலைக்கு விற்பனை செய்வீர்கள்? இந்தியாவில் 50 ரூபாவுக்கு விற்கப்படுகிறது. இலங்கையில் 100 ரூபாவுக்கு வழங்குவோம். விஜய் போன்ற பெரிய நடிகர்கள் நடித்த படங்கள் 150 ரூபா முதல் 200 ரூபா வரை விலைபோக வாய்ப்புண்டு.