Wednesday, March 25, 2015

பாரதிராஜவின் பாராட்டு பெற்ற இலங்கை இயக்குனர் றசீம்

இலங்கையில் தமிழ்த் திரைப்படம் தயாரிப்பது என்பது மிகவும் கடினமான ஒரு காலத்திலே அதில் துணிந்து காலடி எடுத்து வைத்தவர் சம்மாந்துறையைச் சேர்ந்த ஏ.ஆர்.எம்.றசீம். தமிழ் திரைப்படங்கள் தயாரித்தால் தமிழக திரைப்படங்களோடு போட்டி போடக்கூடியளவில் தரமானதாக தயாரிக்க வேண்டும், திரையிட தியேட்டர்கள் தேட வேண்டும். இவற்றுக்கெல்லாம் இந்த நிலை இருக்கையில் இவர் இதுவரை மூன்று திரைப்படங்களை தயாரித்துவிட்டார்.
ஆரம்பகாலத்தில் வியாபாரத்துறையில் ஈடுபட்டு இருந்த இவர் 1989ஆம் ஆண்டு ரத்தபாசம் என்ற வீடியோ படத்தை தயாரித்துள்ளார். தமிழர்களும் முஸ்லிம்களும் செறிந்து வாழும் கிழக்கு மண்ணில் தமிழ், முஸ்லிம் நட்பும் உறவும் நட்புறவாகும் வண்ணம் இத்திரைப்படத்தை தயாரித்துள்ளார். சுமார் 5 இலட்சம் ரூபா செலவில் இரண்டரை மணித்தியாலங்கள் கொண்ட இந்த திரைப்படத்தை தயாரித்து ஒரு வீட்டில் எடிட்டிங் செய்து கொண்டிருந்தபோது அங்கு ஏற்பட்ட தமிழ், முஸ்லிம் கலவரத்தில் அந்த வீட்டோடு சேர்ந்து அந்த சினிமா படச்சுருளும் எரிந்து சாம்பராகியது.
அதன்பின் National Inteligent Bureau வான தேசிய புலனாய்வுத்துறையில் இணைந்து அங்கு சில காலம் சேவையாற்றிவிட்டு தனிப்பட்ட காரணத்துக்காக அந்த அரசதுறை வேலையை விட்டு விலகி மீண்டும் வியாபாரத்துறையில் ஈடுபட்டார். அப்போது ஒரே நாளில் என்ற திரைப்படத்தை தயாரிக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு தமிழகத்திற்கு சென்றார். கெமராவை கையாள்வது எப்படி? திரைப்படம் தயாரிப்பது எப்படி போன்ற நுணுக்கங்களை அங்கு மென்மேலும் கற்று தேர்ந்தார். பழனி பேரசு பரத், காதலர் கதை ஆகிய திரைப்படங்களை தயாரிக்கும் போது உதவியாளராக இருந்து அவற்றை கற்றுத் தேர்ந்தார். அதனைவிட சன் டிவியிலும் சேர்ந்து பயிற்சி பெற்றார்.
‘ஒரே நாளில்’ என்ற திரைப்படத்தை தயாரிக்க எவ்வளவு செலவானது?
ஒரு கோடி ரூபா
இந்த திரைப்படத்தை தயாரிக்க எவ்வளவு காலம் எடுத்தது?
மூன்று வருடங்கள்
இந்தப் படம் திரையிடப்பட்டது தொடர்பாக நீங்கள் என்ன கூற விரும்புகிaர்கள்?
இலங்கையின் யுத்தத்திற்குப் பின் திரையிடப்பட்ட பிரமாண்டமான திரைப்படம் இது.
இந்த திரைப்படம் எப்போது திரையிடப்பட்டது?
2012 செப்டெம்பர் 31ஆம் திகதி
இந்த திரைப்படத்தால் எதிர்பார்த்த வசூல் கிடைத்ததா?
இல்லை அதற்கு பல காரணங்களைக் கூறலாம்.
இந்தத் திரைப்படம் இலங்கை திரைப்படம் என்று முத்திரை குத்தி திரையிடப்பட்டதும் கட்அவுட்டில் கூட இலங்கை திரைப்படம் என்று குறிப்பிடப்பட்டிருந்ததும் இதற்கு ஒரு காரணம் என்று கூறலாம். அத்துடன் இந்த திரைப்படம் திரையிடப்பட்ட தினத்தன்றே வெடி, வாகை சூடவா, முரண் ஆகிய படங்கள் திரையிடப்பட்டதும் அதற்கு அடுத்தவாரம் வேலூர் மாவட்டம் போன்று வேறு சில புதிய படங்கள் திரையிடப்பட்டதும் ஒரே நாளில் திரைப்படம் எதிர்பார்த்த வசூலை எட்டாத நிலைக்கு இன்னுமொரு காரணமாகும்.
தென்னிந்திய திரைப்படங்களை பார்த்து பழக்கப்பட்ட ரசிகர்கள் இலங்கைத் திரைப்படம் என்றால் தேயிலை தோட்டம், குடிசை, பனைமரம் இவை தான் இருக்கும் என்று நினைத்து விட்டார்கள்.
இந்த திரைப்படத்தை இந்தியாவில் திரையிட முயற்சி செய்யவில்லையா?
இந்தியாவில் திரையிடுவதற்கு பெரும் முயற்சி செய்தேன். நடிகர் விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகரன், நாசர் சார் என பலர் இதற்கு உதவி செய்ய முன் வந்தார்கள். ஆனால் படத்தை பதிவு செய்யவில்லை. படக் கம்பெனி பதிவு செய்யப்படவில்லை என ஏகப்பட்ட பிரச்சினைகள் எழுந்ததால் தமிழக தியேட்டர்களில் இந்த திரைப்படத்தை திரையிட முடியவில்லை. ஆனால் டிவிடியில் வெளியிட்டு வசூல் செய்யப்பட்டது.
இந்த திரைப்படத்திற்கு பின் என்ன படத்தை எடுத்தீர்கள்?
கீறல்கள்
இது எத்தனையாம் ஆண்டு எடுக்கப்பட்டது?
2012 ஏப்ரல் மாதம்
“கீறல்கள்” திரைப்படத்தின் தொடக்க விழா பற்றி என்ன கூறலாம்?
இந்த படத்தின் தொடக்க விழா தமிழகத்தின் தேனீ மாவட்டத்தில் நடைபெற்றது. அன்னக்கொடி... என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்த தளத்தில் “கீறல்கள்” திரைப்படத்தின் ஆரம்பவிழா நடைபெற்றது. இயக்குனர் பாரதிராஜா, நடிகை கார்த்திகா, மனோஜ் உட்பட மேலும் பல நடிக, நடிகைகள் கலந்து கொண்டனர். இதில் கலந்து கொள்வதற்கு இலங்கையிலிருந்து 50 பேர் சென்றிருந்தோம்.
எங்கள் 50 பேருக்கும் ‘வந்தவர்கள் அனைவரும் இலங்கை மக்கள்’ என்று அன்புள்ளத்தோடு வரவேற்று மதியபோசன விருந்துபசாரம் அளித்து கெளரவித்தவர் இயக்குனர் பாரதிராஜா. இவ்வாறான உள்ளம் யாருக்கு வரும்? இப்படி யார் செய்வார்கள்? எங்களது விழாவில் கலந்து கொள்ள வருவதே பெரிய விசயம். அப்படி இருக்கையில் எங்களுக்கு விருந்தளித்து கெளரவித்து எம் நெஞ்சங்களை நெகிழ வைத்தது. இதனை என்னென்றும் மறக்க முடியாது.
இந்த படத்தின் பாட்டுக்குரிய காட்சியொன்று கொடைக்கானலில் படமாக்கப்பட்டது. இதில் கலந்து கொள்வதற்காக இலங்கையிலிருந்து 45 பேர் சென்று இருந்தோம். நாம் கொடைக்கானலில் படப்பிடிப்பில் ஈடுபட்டிருப்பது தெரிந்து இயக்குனர் பாரதிராஜா, சென்னையிலிருந்து திருச்சிக்கு விமானத்தில் வந்து அங்கிருந்து கொடைக்கானலுக்கு காரில் வந்து எங்களை உற்சாகப்படுத்தினார்.
கீறல்கள் படத்தின் இசைவெளியீட்டு விழா ஜில்லா படத்தின் படப்பிடிப்பு தளத்தில் நடைபெற்றது. நடிகர்கள் விஜய், மோகன்லால் ஆகியோருடன் சுப்பர் குட் பிலிம் அதிபதி ஜில்லா தயாரிப்பாளர் ஆர்.பி.செளத்ரி ஜித்தன் ரமேஸ் ஆகியோர் இதில் கலந்து கொண்டனர். கீறல்கள் படத்தின் டப்பின் வேலைகள் அனைத்தும் தமிழக கலைஞர்களைக் கொண்டு செய்யப்பட்டுள்ளது. எனவே தமிழக திரைப்படத்துக்கு நிகராக இந்த திரைப்படம் தயாரிக்கப்பட்டுள்ளது.
கீறல்கள் படத்தின் கதாநாயகன் தமிழகத்திலிருந்து இலங்கைக்கு தனது அத்தை வீட்டுக்கு வருகிறான். வந்த இடத்தில் அவனுக்கு லொட்டரியில் 8 கோடி ரூபா விழுகிறது. இந்த பரிசுக்குரிய லொட்டரி டிக்கெட் தொலைந்துபோகவே அதை கண்டுபிடிக்க போய் பல போராட்டங்களை சந்திக்கின்றான்.
நீங்கள் அடுத்ததாக மூன்றாவதாக தயாரிக்கப்போகும் திரைப்படத்தின் பெயர் என்ன?
நேற்று இரவு 10.45க்கு
இந்த திரைப்படத்தில் நடிக்கப்போகும் நடிக நடிகைகள் பற்றி கூறலாமா?
இதில் 25% இந்திய கலைஞர்களும் 75% இலங்கை கலைஞர்களும் நடிக்கவுள்ளனர். இலங்கை கலைஞர்கள் அனைவரும் புதுமுகங்களாகத்தான் இருப்பார்கள்.
புதுமுகங்களுக்கு வாய்ப்பளிக்கப் படும் எனவே அப்படி நடிக்க விரும்புகிறவர்கள் இருந்தால் என்னுடன் தொடர்பு கொள்ளலாம்.
நேற்று இரவு 10.45க்கு படத்தின் படப்பிடிப்பு எப்பொழுது ஆரம்பிக்கப்படும்?
பிரமாண்டமான இந்த படத்தின் ஆரம்பவிழா வெகுவிரைவில் நடைபெறும். நடிகரும் இயக்குனருமான சேரன் இதனை ஆரம்பித்து வைப்பார். இவரோடு தமிழகத்தைச் சேர்ந்த எட்டு நடிக, நடிகைகள் இதில் கலந்து கொள்ளவுள்ளார்கள். இதன்படப்பிடிப்பு தமிழகத்திலும் இலங்கையிலும் நடைபெறும். ரசிகர்களுக்கும் இந்த படப்பிடிப்பை கண்டுகளிக்க வாய்ப்பேற்படுத்தி கொடுக்கப்படும்.
இந்த திரைப்படத்தோடு படத் தயாரிப்பை நிறுத்தி விடுவீர்களா?
இல்லை! வருடத்திற்கு மூன்று திரைப்படங்கள் வீதம் தயாரிக்க திட்டமிட்டுள்ளேன். கெமரா யுனிட், எடிட்டிங், டப்பிங் என்று அனைத்தும் செய்யக்கூடிய வசதிகள் எம்மிடம் உள்ளன. C2H என்ற திட்டத்தின் மூலம் படங்களை திரையிடக்கூடிய வாய்ப்பும் உள்ளது.கடந்த மார்ச் 5ஆம் திகதி நடிகரும் இயக்குனருமாகிய சேரன் ஆரம்பித்து வைத்த C2H என்ற திட்டத்தைப் பற்றி கூறுங்களேன்.
இதில் C2H என்பது சினிமா டூ ஹோம் என்பதாகும். திரைப்படமொன்று தயாரித்து திரைக்கு வருகின்ற நாளிலேயே அந்த திரைப்படத்தின் திருட்டு சீடி வெளிவந்து விடுகிறது. இதனால் திரைப்படத் தயாரிப்பாளர்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்படுகிறது. இதனை தடுக்கும் முகமாகத்தான் சேரன் சார் திரைப்படத்தின் டிவிடிக்களை வீடுகளுக்கு சென்று விநியோகிக்கும் திட்டத்தை ஆரம்பித்துள்ளார். இதன் ஆரம்பவிழா சென்னை நேரு உள்ளக அரங்கில் நடைபெற்றது. சுமார் 75,000 பேரளவில் இதில் கலந்து கொண்டார்கள். இங்கு சேரனின் ஜே.கே எனும் நண்பனின் வாழ்க்கை என்ற திரைப்படத்தின் 30 லட்சம் டிவிடிக்கள் விற்பனையாகின.
இந்த விழாவில் சேரன் சார் என்னை மேடைக்கு அழைத்து என் குருநாதர் தான் உனக்கு பொன்னாடை போர்த்தி கெளரவிக்க வேண்டும் என்று கூறி இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமாரைக் கொண்டு பொன்னாடை போர்த்திக் கெளரவித்தார். அதன்பின் சேரன் சார் என்னை மேடையை விட்டு இறக்கவிடாமல் மேடையிலேயே அமர வைத்தார். சுமார் 4 மணித்தியாலங்கள் நடைபெற்ற இந்நிகழ்வில் 20 நிமிடங்கள் எனக்காக ஒதுக்கியிருந்தார்.
இதனை www.c2hnetwork.com என்ற இணையத்தளத்தில் Contact us க்கு சென்று Recorded Event 5th March 2015ஐ கிளிக் செய்து பார்க்கலாம்.இதில் தயாரிப்பாளர் கலைப்புலி தாணு நடிகர் சங்கத் தலைவர் சரத்குமார் ஆகியோரும் மேடையில் இருந்து கெளரவித்தனர்.தமிழகத்தில் சேரனால் ஆரம்பிக்கப்பட்ட C2H இன் இலங்கை விநியோகஸ்தராக நீங்கள் தெரிவு செய்யப்பட்டிருக்கிaர்கள் இலங்கை விநியோகஸ்தராகக் கூடிய வாய்ப்பு உங்களுக்கு எப்படி கிடைத்தது?
ஒருநாள் பாரதிராஜா சார் போன் பண்ணி “சேரன் வெயிட்டிங் போ யூ. நீ நாளைக்கு புறப்பட்டு வா” என்று கூறினார். நான் உடனடியாக விமான டிக்கெட் எடுப்பதெல்லாம் கஷ்டம் என்று கூறி வசதி கிடைத்தவுடன் சென்றேன். முதலில் பாரதிராஜா சார்கிட்டதான் சென்றேன். அவர் உடனடியாக சேரன் சார்கிட்ட அனுப்பிவிட சேரன் சார் விடயத்தை கூறி என்னை இலங்கை விநியோகத்தரை நியமித்தார். C2H மூலம் விநியோகிக்கப்படுகின்ற டிவிடி ஒன்று என்ன விலைக்கு விற்பனை செய்வீர்கள்? இந்தியாவில் 50 ரூபாவுக்கு விற்கப்படுகிறது. இலங்கையில் 100 ரூபாவுக்கு வழங்குவோம். விஜய் போன்ற பெரிய நடிகர்கள் நடித்த படங்கள் 150 ரூபா முதல் 200 ரூபா வரை விலைபோக வாய்ப்புண்டு.

Tuesday, March 24, 2015

பால் விநியோகிக்கும் சிறுவனாக வேலை செய்ய ஆரம்பித்தவர் என்.டி.ராமராவ்

சமூகத்தில் ஏழ்மை நிலைக்கான காரணத்தை அறிந்து அவர்களுக்கு அடிப்படைத் தேவைகள் வழங்கப்பட வேண்டும் என்று கூறியவர் என். டி. ராமாராவ்
ரு நடிகராக பல விருதுகளை அள்ளிச் சென்றுள்ளார். தெலுங்கில், சிறந்த நடிகருக்கான ‘ஃபிலிம் ஃபேர் விருதை’ பத்து முறையும், அவரது படமான ‘வரகட்னத்திற்காக’ ‘தேசிய விருதை’ 1968லும் பெற்றுள்ளார். இதைத் தவிர, இந்திய அரசிடமிருந்து மிக உயரிய விருதான ‘பத்மஸ்ரீ விருதும்’, ஆந்திர பல்கலைக்கழகத்திலிருந்து ‘கெளரவ டாக்டர் பட்டமும்’ பெற்றார்.
தென்னிந்திய திரையுலக வாழ்க்கையின் பிற்பகுதியில், இவர் கதை வசனம் எழுதுவதிலும், இயக்குவதிலும் ஆர்வம் காட்டினார். திரை வசனம் எழுத, முறையான பயிற்சிப் பெறாத போதிலும், என். டி. ராமா ராவ் எழுதிய பல உரைகள் மிகவும் பிரபலமானது. அவரது சொந்த படங்களான ‘சீதாராம கல்யாணம்’ மற்றும் ‘தான வீர சூர்ண கர்ணன்’ போன்ற திரைப்படங்களை அவரே இயக்கினார்.
அரசியல் வாழ்க்கை
1980 களில் என். டி. ராமா ராவ் திரையுலக வாழ்க்கையில் இருந்து ஓய்வு பெற்று, தீவிரமாக அரசியலில் ஈடுபட்டார். திரைப்படத் துறையில் ஒரு அங்கமாக இருந்தபோதும் கூட, அவர் ஆந்திர பிரதேச கிராம பகுதிகளில் திரையரங்குகள் அமைக்க, அரசாங்கத்தை சம்மதிக்க வைக்க கடும் முயற்சி எடுத்தார்.
திரைப்படங்களுக்கு சரியான உற்பத்தி மற்றும் விநியோகத்திற்காக பணம் வழங்கும் நிர்வாக அமைப்பின் ஆதரவாளர்களுள் ஒருவராக இருந்தார் அவர். எனவே அரசியலில் ஈடுபடும் நோக்கம் எப்போதும் என். டி. ராமா ராவிற்குள் ஒளிந்திருந்தது என்று சொன்னால் அது மிகையாகாது. 1982ல், தெலுங்கு தேசக் கட்சியை உருவாக்கிய என். டி. ராமா ராவ் தொடர்ந்து மூன்று முறை ஆந்திர மாநிலத்தின் முதலமைச்சராக 1983- 1994ஆம் ஆண்டுகளுக்கிடையே தேர்வு செய்யப்பட்டார்.
இதற்கிடையில் 1983ல் தெலுங்கு தேச சட்டமன்ற கட்சித் தலைவரானார். சாதாரண மக்களிடையே, அரசியல்வாதிகள் நேரடி தொடர்புகளை உருவாக்கிக் கொள்ள வேண்டும் என்று நம்பிய என். டி. ராமா ராவ் அவரது கட்சியான ‘தெலுங்கு தேச கட்சியை ஊக்குவிக்கும் விதமாக ஆந்திரா மாநிலம் முழுவதும் விரிவான பயணங்கள் மேற்கொண்டார். ‘சைதன்யா ரதம்’ என்று பெயரிடப்பட்ட ஒரு தனிப்பட்ட வேனில் அவர் பயணம் மேற்கொண்டார்.
சமூகத்தில் ஏழ்மை நிலைக்கான காரணத்தையும், அவர்களுக்கு அடிப்படைத் தேவைகள் வழங்கப்பட வேண்டும் என்றும் என். டி. ராமா ராவ் அவர்கள் வாதாடினார். ஆந்திர மாநிலத்தில் பெண்கள் உரிமைகளுக்காகப் போராடிய ஒரு வெற்றி வீரர் ஆவார். 1986ல் இயற்றப்பட்ட ‘பெண்கள் மூதாதையர் சொத்து மரபுரிமை அனுமதிக்கப் படவேண்டும்’ என்ற மசோதாவை முன்மொழிந்தார்.
என். டி. ராமா ராவ் அவர்கள், பிரபலமான அரசியல்வாதியாக இருந்ததால், அவரது தெலுங்கு தேசக் கட்சி அப்போதைய ஆட்சியிலிருந்த இந்திய காங்கிரஸ் கட்சிக்கு ஒரு அச்சுறுத்தலை விடுத்தது.
தேர்தலில் என். டி. ராமாராவ், வெற்றிப் பெற்றாலும், இந்த அச்சுறுத்தலின் காரணமாக, 1984ல், ஆந்திர பிரதேச முதலமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். என். டி. ராமாராவ் காலத்தில், தெலுங்கு தேசக் கட்சி நாட்டின் மிகவும் வலிமையான மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட அரசியல் கட்சிகளுள் ஒன்றாக பேசப்பட்டது.
தெலுங்கு தேசக் கட்சியின் நடவடிக்கைகளும், அனைத்து வேலைகளும் முறையாக கணனி மயமாக்கப்பட்டதன் காரணமே, அதன் நிறுவனராக என். டி. ராமாராவ் இறந்த பின்பும் கூட, கட்சி இன்றைக்கும் நிலைக்க பொறுப்பு காரணிகள். 1994ல் என். டி. ராமா ராவ் அவர்கள், ஏகோபித்த முறையில் ஆந்திர மாநில முதலமைச்சராகத் தேர்ந்தெடுக்கப்பட்டாலும், அவரது மோசமான உடல் நிலையின் காரணமாக, அவரால் தேர்தலில் போட்டியிட முடியவில்லை. என். டி. ராமா ராவ். 1989 ஆம் ஆண்டு பக்கவாதத்தால்’ பாதிக்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து அவரது உடல் நிலை மிகவும் மோசமடைந்தது.
விருதுகள் மற்றும் அங்கீகாரம்
என். டி. ராமா ராவ் தெலுங்கு சினிமாவிலா சிறந்த நடிகருக்கான பத்து ஃபிலிம்பேர் விருதுகளை 1954 முதல் 1958 வரையும், பின்னர் 1961, 1962, 1966, 1968 மற்றும் 1972 ஆண்டுகளுக்கும் பெற்றார்.
1968ல், வெளியான அவரது படமான, ‘வரகட்னம்’ சிறந்த தெலுங்குத் திரைப்படத்திற்கான ‘தேசிய திரைப்பட விருதினை’ பெற்றது. மேலும் தெலுங்கு சினிமா உலகில் என். டி. ராமாராவ் அவர்களது பங்களிப்பைப் போற்றும் விதமாக 1968 ஆம் ஆண்டு இந்திய அரசு அவருக்கு ‘பத்ம ஸ்ரீ விருதை’ வழங்கி கெளரவப்படுத்தியது. 1978ல், ஆந்திர பல்கலைக்கழகம் அவருக்கு கவுரவ ‘டாக்டர் பட்டம்’ வழங்கிப் பாராட்டியது.
இறப்பு
என். டி. ராமா ராவ் அவர்கள், தனது 72 வயதில், ஜனவரி 18, 1996 அன்று இறந்தார். அவர் இறந்த நேரத்தில், ஆந்திர பிரதேசத்திலுள்ள ஹைதெராபாத்தில் ஒரு குடியிருப்பாளராக அவர் இருந்தார். டோலிவுட்டில் மட்டுமல்லாமல், ஆந்திர பிரதேச அரசியலிலும் இன்றும் கூட அவர் இல்லாக்குறை உணர்வு இருந்து வருகிறது.
கால வரிசை
1923- என். டி. ராமாராவ் மே. 28, 1923 ஆம் ஆண்டு பிறந்தார்.
1942- பசவ தராகம் என்பவரைத் திருமணம் செய்தார்.
1947- என். டி. ராமாராவ் அவர்கள் பொலிவூட்டில் நுழைந்தார்.
1949- அவரது முதல் படமான ‘மன தேசம்’ வெளியானது.
1951- சாதனை முறியடிக்கும் வெற்றிப் படங்களில் நடித்தார்.
1958- தனது முதல் புராணக் கதாபாத்திரமான ‘இராவணன்’ வேடத்தில் நடித்தார்
1960- புராண பாத்திரங்களின் ஒரு சிறந்த நடிகராக தன்னை நிலைநாட்டினார்.
1968- பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது.

குறுகிய காலத்தில் புகழின் உச்சிக்கு சென்றவர்

வாழ்க்கையில் ஏமாற்றம்
சந்திரபாபுவுக்கு 1956-ல் திருமணம் நடந்தது. மதுரையைச் சேர்ந்த 'Pலா என்னும் ஆங்கிலோ-இந்திய பெண்ணை மணந்தார். ஆனால் இருவரும் சேர்ந்து வாழவில்லை. விவாகரத்து செய்து கொண்டனர். என் மணவாழ்க்கை மகிழ்ச்சிகரமாக அமையவில்லை. முதல் இரவிலேயே நாங்கள் பிரிந்து விட்டோம் என்று, பல கட்டுரைகளில் சந்திரபாபு குறிப்பிட்டு இருந்தார்.
தனியாகவே சந்திரபாபு வாழ்ந்தார். வேலைக்கார சிறுவன் மட்டுமே கூட இருந்தான்.
பாதியில் நின்ற படம்
எம்.ஜp.ஆரை கதாநாயகனாக வைத்து, மாடி வீட்டு ஏழை என்னும் படம் தயாரிக்கத் தொடங்கினார். ஆனால் அது பாதியில் நின்றுவிட்டது.
சந்திரபாபுவின் பிற்கால வாழ்க்கை சோகமயமானது. பட அதிபர்களுக்கு ஒத்துழைப்பு தருவதில்லை என்று பரவலாக புகார் கூறப்பட்டது. அதனால் ஒரு காலத்தில் சந்திரபாபுவின் கால்'Pட்டுக்காக தவம் கிடந்த பட அதிபர்கள், விலகி ஓடத் தொடங்கினார்கள்.
சந்திரபாபுவுக்கு மதுப்பழக்கம் உண்டு. சோகம் அதிகமாக மதுப்பழக்கமும் அதிகமாகியது.
தூக்கத்தில் மரணம்
சந்திரபாபு, சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள சித்தரஞ்சன் தெருவில் வசித்து வந்தார். அவர் உடல்நலம் இல்லாமல் இருந்தார். இரண்டு முறை ஆஸ்பத்திரியிலும் சிகிச்சை பெற்றுக்கொண்டார்.
7.3.1974 அன்று இரவு 3.30 மணிக்கு அவர் உடல்நிலை திடீரென்று மோசமாகியது. ரத்த வாந்தி எடுத்தார். அப்போது அவருடைய வேலைக்கார பையன் வந்து அவருக்கு உதவி செய்தான். அறையை சுத்தம் செய்துவிட்டு சந்திரபாபுவின் முகத்தையும் துடைத்துவிட்டான்.
~~நான் தூங்கப் போகிறேன். நீ கவலைப்படாமல் போய்ப்படு'' என்று அவனிடம் கூறிவிட்டு சந்திரபாபு படுத்துக்கொண்டார். 8-ந் திகதி அதிகாலை 5 மணி அளவில் அவர் மரணம் அடைந்தார். தூக்கத்திலேயே அவர் உயிர் பிரிந்தது.
சிவாஜpகணேசன் கதறல்
சந்திரபாபு மரணம் அடைந்த செய்தி நடிகர் சங்க தலைவர் சிவாஜpகணேசனுக்கு தெரிவிக்கப்பட்டது. சிவாஜpகணேசன் படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக மேக்கப் போட்டுக் கொண்டு இருந்தார். இந்த துயர செய்தியை கேட்டதும் மேக்கப்பை கலைத்துவிட்டு சந்திர பாபு வீட்டுக்கு விரைந்தார்.
சந்திரபாபு உடலைக் கண்டு கண்ணீர் விட்டு அழுதார்.
நடிகர் சங்கம்
சிவாஜpகணேசனின் ஏற்பாட்டின்படி, சந்திரபாபுவின் உடல் சென்னை தியாகராயநகர் அபிபுல்லா ரோட்டில் உள்ள நடிகர் சங்க கட்டிடத்திற்கு கொண்டு வரப்பட்டது. அங்கு சந்திரபாபுவின் உடல் பொது மக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டு இருந்தது.
சந்திரபாபு கிறிஸ்தவர் என்பதால், அவர் தலை அருகே சிலுவை அடையாளம் வைக்கப்பட்டு இருந்தது. அதன் இரு புறங்களிலும் மெழுகுவர்த்திகள் ஏற்றி வைக்கப்பட்டு இருந்தன.
நடிகர்- நடிகைகள் பெருந்திரளாக வந்து அஞ்சலி செலுத்தினர். பெற்றோர் சந்திரபாபுவின் தந்தையும் தாயும் வாலாஜhபாத்தில் குடியிருந்து வந்தனர். அவர்கள் இருவரும் சென்னைக்கு வந்து மகனின் உடலைப் பாத்து கண்ணீர்விட்டு அழுதனர்.
சந்திரபாபு மரணத்திற்கு அனுதாபம் தெரிவித்து அவர் தந்தைக்கு முதல்- அமைச்சர் கருணாநிதி அனுதாப செய்தி அனுப்பி வைத்தார். பெருந்தலைவர் காமராஜர் நேரில் வந்து சந்திரபாபு உடலுக்கு மரியாதை செலுத்தினார்.
~~சந்திரபாபு ஒரு சிறந்த கலைஞர். தேசிய தியாகப் பரம்பரையில் வந்தவர். அவருடைய மறைவு வருந்தத்தக்கதாகும். அவருடைய பெற்றோர்களுக்கும் உறவினர்களுக்கும் என் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கிறேன்!'' என்று காமராஜர் துயரத்துடன் கூறினார். சந்திரபாபுவின் உடல் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு மைலாப்பு+ர் கல்லறைத்தோட்டத்தில் அடக்கம் செய்யப்பட்டது.

Friday, March 6, 2015

கடல் அலையில் இழுத்துச் சென்ற கமலை கடலுக்குள் குதித்து காப்பாற்றியவர்

1978ம்;ஆண்டு ‘மனிதரில் இத்தனை நிறங்களா?’ என்ற திரைப்படம் திரையிடப்பட்டது. கமல், ஸ்ரீதேவி நடிப்பில், சினிமாத் தனங்கள் எதுவும் இல்லாமல், மிகவும் இயல்பா எடுக்கப்பட்டிருந்த கதை, படத்தில் இடம்பெற்ற அனைத்துக் கதாபாத்திரங்களும் எந்தவித ஜோடனையும் இல்லாமல், யதார்த்தமாக இருந்தன.
படத்தைப் பார்த்துக் கொண்டிருந்த போது ‘யார் இந்த ஆர்.சி. சக்தி?’ என்று பலரது மனங்களில் கேள்விகள் எழுந்தன. அதற்கு முன்பே கமல் ஹாசனை வைத்து ‘உணர்ச்சிகள்’ என்ற படத்தை அவர் இயக்கியிருக்கிறார் என்பதைப் பின்னர்தான் தெரிந்து கொண்டனர்.
ரஜினியைத் தூக்கி நிறுத்தியவர்
ரஜினிகாந்த் சற்று உடல் ரீதியாக பாதிப்புக்கு உள்ளாகிப் படவுலகமே அதுபற்றி பரபரப்பாகப் பேசிக் கொண்டிருந்த நேரத்தில் திரைக்கு வந்த படம் ‘தர்மயுத்தம்’ ஒப்பந்தம் செய்யப்பட்ட பல படங்களிலிருந்து ரஜினியைத் தூக்கிக் கொண்டிருந்த நேரத்தில், அவருக்குக் கை கொடுத்த படம் ‘தர்ம யுத்தம்’, ‘பின்னணி இசை அமைப்பதற்கு முன்பே வெளியீட்டுத் திகதியை அறிவித்து விளம்பரம் செய்துவிட்டார் தயாரிப்பாளர்.
அவசர அவசரமாகப் படத்தொகுப்புச் செய்து பின்னணி இசைக்குப் படத்தை அனுப்ப வேண்டிய நெருக்கடி நிலை. புரிந்து கொள்ள முடியாத அளவுக்குப் படத்தொகுப்பின் போது எதையெதையோ வெட்டினார்கள். எதையெதையோ ஒட்னார்கள். செய்வது சரிதானா என்பதை உணரும் நிலையில் கூட அவர்கள் இல்லை. ஆனால் ‘தர்மயுத்தம்’ வெற்றி பெற்றுவிட்டதும் ஆர்.சி. சக்தி அளவில்லா ஆனந்தம் அடைந்தார்.
1983ம் ஆர்.சி. சக்தி இயக்கிய படம் ‘உண்மைகள்’ யாரும் தொடுவதற்கே அஞ்சக்கூடிய கதை. கதாநாயகிக்கு முக்கியத்துவம் தந்து எடுக்கப்பட்டது. படம் முழுவதிலும் வாழ்ந்திருந்தார் சக்தி, அவரால் மிகவும் கூர்மையாக எழுதப்பட்டிருந்த உரையாடல்கள் இப்போதும் சிலரின் மனதில் வாழ்ந்து கொண்டிருக்கின்றன.
சமூகத்தின் போலித்தனங்கனையும், அவலங்களையும் மிகவும் கடுமையாகச் சாடியிருந்தார் சக்தி.
ஆர்.சி. சக்தி அதன்பின் ‘சிறை’ படத்தை தயாரித்தார். அனுராதா ரமணனின் கதை. ராஜேஷ், லட்சுமி நடித்தார்கள். வாகினி ஸ்டுடியோவில் படப்பிடிப்பு நடந்தது காக்கி காற்சட்டையும் காக்கிச் சட்டையும் அணிந்து ஒரு தொழிலாளியாகவே தன்னை நினைத்துக் கொண்டு, படத்தை இயக்கியவர் சக்தி.
மிகவும் ஈடுபாட்டுணர்வுடன் படத்தை இயக்குவார் சக்தி, லட்சுமி கண்ணீர் விட்டுக் கதறி அழுத காட்சியொன்று படமாக்கப்பட்ட போது, தன்னை மறந்து தேம்பித் தேம்பி அழுதுகொண்டிருந்தார் ஆர். சி. சக்தி அதுதான் அந்த உயர்ந்த கலைஞனின் தனித்துவக் குணம்!
விஜயகாந்த், சத்யராஜ் இணைந்து நடித்த ‘சந்தோஷக் கனவுகள்’ படம் தயாரிப்பில் இருந்த போது, அப்படத்தின் தயாரிப்பாளர் எஸ்.என்.எஸ். திருமால், சக்தி கேட்ட குறைந்தபட்ச தேவைகளைக் கூடச் செய்து கொடுக்கவில்லை. அந்தப் படத்தின் இயக்குநர் பொறுப்பிலிருந்து விலகிக் கொள்ளலாமா என்று கூடப் பல நேரங்களில் நினைத்திருக்கிறேன் என்று சொன்னவர் சக்தி.
1986ல் ரகுவரன் - அமலாவை வைத்து ‘கூட்டுப் புழுக்கள்’ என்றொரு அருமையான படத்தை இயக் கினார் சக்தி, நாவலாக வந்து புகழ்பெற்ற கதை. இன்றும் பலரின் மனதிலும் அப்படம் வாழ்ந்து கொண்டிருக்கிறது. வில்லன் நடிப்பிலும் தனித்துவம் காட்டிய ரகுவரனின் மென்மையான நடிப்புத் திறமையை வெளிக்காட்டிய படம்.
அந்தப் படத்தில் நடிக்கும் போது சக்தி ஒவ்வொரு காட்சியையும் படமாக்கும் விதத்தைப் பற்றிப் பெருமையாக ரகுவரன் கூறியிருக்கிறார்.
எழுத்தாளர் சவீதா எழுதிய ‘இவளா என் மனைவி!’ என்ற நாவலை விஜயகாந்த் கதாநாயகனாக, நடிக்க சக்தி இயக்குவதாக இருந்தது. அதற்கு இயக்குநராக சக்தியை ஒப்பந்தம் செய்யும்படி தயாரிப்பாளரிடம் சிலர் கூறினார்கள். அதற்காகப் பாடல்கள் கூடப் பதிவு செய்யப்பட்டன. ஆனால் சில காரணங்களால் படப்பிடிப்பு தொடர வில்லை.
எனினும், அதே கதையை ஆர்.சி. சக்தி தொலைக் காட்சித் தொடராக இயக்கினார், அவருக்கு நல்ல பெயர் கிடைத்தது. இரண்டு மணி நேர சினிமாவோ, 24 வாரத் தொடரோ எந்த ஊடகமும் சக்திக்கு வசப்பட்டிருந்தது.
1970ல் ‘அன்னை வோளாங்கண்ணி’ படப்பிடிப்பின் போது உதவி இயக்குநர்களாகத் தங்கப்பன் மாஸ்ட ரிடம் பணிபுரிந்த போது கடல் அலையால் இழுத்துச் செல்லப்பட்ட கமல்ஹா சனை, கட லுக்குள் குதித் து த்தன் முதுகில் ஏற்றிக் கொண்டு வந்து காப்பாற்றியவர் சக்தி.
ஆர்.சி. சக்தி தன் படைப்பா ளுமையாலும் அரிய குணங்களாலும் தமிழ்த் திரைப்பட வரலாற்றில் ஆழமாகத் தடம் பதித்த பெயர் எளிமையின் மொத்த உருவம் அவர்.

நடிகை பானுமதியின் பரிந்துரையில் ஒளிப்பதிவு துறையில் பரிணமித்தவர்

~tpன்சென்ட் மாஸ்டர்’ என்று தமிழ் சினிமா உலகினரால் அன்புடன் அழைக்கப்படும் ஒளிப்பதிவாளர் வின்சென்ட் காலமாகிவிட்டார். 1928ம் ஆண்டு கோழிக் கோட்டில் பிறந்த வின்சென்டின் தாய்மொழி கொங்கணி. தந்தையின் புகைப்பட ஸ்டுடியோவில் கிடைத்த அனுபவத்தால் புகைப்படக் கலையில் சிறுவயதிலேயே வின்சென்ட்டுக்கு ஆர்வம் ஏற்பட்டது.
1947ம் ஆண்டு சென்னைக்கு வந்த அவர் ஜெமினி ஸ்டுடியோவில் பணியில் சேர்ந்தார். புகழ்பெற்ற ஒளிப்பதிவாளர்கள் கே. ராம்நாத் மற்றும் கமால் கோஷிடம் அனுபவம் பெற்றார்.
அதற்கு முன்பு அவர் முதலில் ஒளிப்பதிவு செய்த படம் ‘ப்ரதுகு தெருவு’ என்ற தெலுங்குப் படம். இளைஞராக இருந்த வின்சென்ட்டை இப்படத்தின் ஒளிப்பதிவுக்காகப் பரிந்துரைத்தவர் பழம்பெரும் நடிகை பானுமதி.
தமிழில் ‘அமரதீபம்’ வாயிலாக வின்செட் தனது சகாப்தத்தைத் தொடங்கினார். அமரதீபம் படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவர் பிரபல இயக்குநர் மணி ரத்னத்தின் தந்தை ரத்னம், அமரதீபத்தின் கதை, வசனம் ஸ்ரீதர் அப்போதுதான் ஸ்ரீதர்-வின்சென்ட் என்ற காவியக் கூட்டணி தொடங்கியிருக்க வேண்டும்.
தமிழ் சினிமாவைக் காட்சி சார்ந்த ‘கலையாக மாற்றியதில் ஒளிப்பதிவாளர் ஏ.வின்சென்டுக்குப் பெரிய பங்குண்டு. கெமரா வின்சென்ட் என்று அக்காலத்திலேயே ஒளிப்பதிவாளரைச் சுட்டி வெகுஜனங்கள் பேசும் முதல் கெளரவம் இவருக்குத்தான் கிடைத்தது. இயக்குநர் ஸ்ரீதருடன் இவர் சேர்ந்து பணியாற்றிய படங்கள் தமிழ் சினிமா ரசிகர்களின் மனதில் நீங்காத இடம்பிடித்தவை.
ஸ்ரீதர் இயக்கிய ‘நெஞ்சில் ஓர் ஆலயம்’ அக்காலத்தில் தொழில்நுட்ப ரீதியில் சோதனை முயற்சியாகப் பேசப்பட்டது. அந்தப் படத்தை ஒளிப்பதிவு செய்து முடிக்க எடுத்துக் கொண்ட நாட்கள் 28. நான்கே பேர்தான் நடிகர்கள். ‘சொன்னது நீ தானா’ என்ற இறவாப் புகழ்பெற்ற அந்தப் பாடல் ஒரு சின்ன அறையில் எடுக்கப்பட்டது. வின்சென்ட்டின் வருகைக்கு முன்பு ஃப்ளாட் லைட்டிங் என்று சொல்லப்படும் முறையே ஒளியமைப்பில் இருந்தது.
கதை நடக்கும் பொழுதுகளுக்கேற்ப இயற்கையான ஒளி மற்றும் நிழல்களைக் கொண்டு வந்தவர் வின்சென்ட்தான். ஜூம் லென்ஸ் இல்லாத காலத்திலேயே ஜூம் ஷாட்கள் தரும் அனுபவத்தைத் தன் திரைப்படங்களில் உருவாக்கியவர். இது லண்டனைச் சேர்ந்த கொடக் நிறுவனத் தொழில்நுட்பக் கலைஞர்களையே திகைக்கச் செய்தது.
டி. பிரகாஷ் ராவ் இயக்கிய ‘உத்தம புத்திரன்’ படத்தின் படப்பிடிப்பு மைசூரில் உள்ள பிரிந்தாவனில் நடந்து கொண்டிருந்த போது ஜூம் ஷாட்டுக்கான தனது முதல் பரிசோதனையை வின்சென்ட் செய்தார். அதற்கு அங்கே சுற்றுலாவுக்கு வந்திருந்த பிரெஞ்சுப் பயணி ஒருவரின் கேமரா லென்சைக் கடன் வாங்கி அந்த ஜூம் ஷாட்டை எடுத்ததாக ஒரு நேர்காணலில் நினைவு கூர்ந்துள்ளார்.
“பில்லியர்ட் போலக்ஸ் 16 எம்.எம். காமிராவை என்னோடு அந்தப் படப்பிடிப்புக்குக் கொண்டு சென்றிருந்தேன். கடன்வாங்கிய லென்சால் ஜூம் விளைவைத் தரமுடியும். ஒரே ஷாட்டில் சிவாஜியையும் பத்மினியையும் படம்பிடித்தபடி கட் செய்யாமல் பத்மினியின் க்ளோசப்பையும் எடுக்க முடிந்தது.
இந்தப் பகுதியை மட்டும் 16 எம்.எம்.ல் படம்பிடித்ததால் அதை 35 எம்.எம்.க்கு ப்ளோ அப் செய்ய லண்டனுக்கு அனுப்பினோம். அவர்கள் அசந்துபோனார்கள்” என்கிறார். வின்சென்ட் இந்திய சினிமா ஒளிப்பதிவு துறையில் செய்த பங்களிப்பை பாலு மகேந்திரா முதல் பி.சி. ஸ்ரீராம் வரை பதிவு செய்துள்ளனர்.
மரபை உடைத்தவர்
வின்சென்ட் திரைப்பட இயக்குநராக, மலையாளத்தில் உருவான யதார்த்தத் திரைப்பட அலை உருவானதன் முன்னோடியாகவும் இருந்தவர். இவர் மலையாளத்தில் இயக்கிய முதல் திரைப்படமான ‘நீலக்குயில்’ படத்தில் ஒரு பரிசோதனையைச் செய்தார். வசனம் பேசப்படும்போது பேசும் நடிகர்களின் மேல்தான் கெமரா அதுவரை கவனம் குவித்து வந்தது.
நீலக்குயில் திரைப்படத்தில் வசனத்தைக் கேட்கும் கதாபாத்திரங்களின் முகங்கள் மற்றும் அவர்களது வெளிப்பாட்டைத் தனது கெமராவில் காட்டினார்.
இயற்கையான நிறங்களில் உள்ள செட்களை முதலில் வலியுறுத்தியர் வின்சென்ட்தான். கறுப்பு - வெள்ளைப் படமாக இருந்தாலும் இயற்கையான நிறங்களுடன் பின்னணி இருக்க வேண்டும் என்பார் வின்சென்ட். அவர் முதல் திரைப்படமாக இயக்கிய நீலக்குயில் பெரும் வெற்றிபெற்றதோடு சினிமா தொழில்நுட்பத்திலும் மிகப்பெரிய மாற்றத்துக்குக் காரணமானது. சாரதா நடித்து இவர் இயக்கிய ‘துலாபாரம்’ மிகப் பெரிய வெற்றியையும் தேசிய விருதுகளையும் பெற்றது.
பாதை அமைத்த பங்களிப்பு
ஹாலிவுட் ஒளிப்பதிவாளர் லியான் ஷாம்ராய் (ழிலீon ஷிhaசீroy) மீது பெரும் ஈடுபாடு கொண்டவர் வின்சென்ட். அவர் ஞாபகமாகத் தன் பேரனுக்கு ஷாம்ராய் என்று பெயர் வைத்திருந்தார். மெட்ராஸை மையமாகக் கொண்டு ஸ்டுடியோக்களில் வளர்ந்த தென்னிந்திய சினிமா மற்றும் அதன் தொழில்நுட்ப வரலாற்றில் முக்கியமான பெயர்களில் ஒன்று ஏ. வின்சென்ட். 45 ஆண்டுகள் ஐம்பதுக்கும் மேற்பட்ட படங்களுக்கு ஒளிப்பதிவு.
மலையாளம் மற்றும் தமிழில் இயக்கிய படங்கள் 30 இருக்கும். கையில்படும் ஒளிவை வைத்தே அதன் அளவை அறியும் அனுபவத்திறன் கொண்ட இவரிடம், நவீன ஒளிப்பதிவு தொழில்நுட்பம் பற்றி அவரிடம் ஒருமுறை கேட்கப்பட்டது. “நான் அனைத்து நவீன ஒளிப்பதிவுக் கருவிகளையும் பயன்படுத்தியிருக்கிறேன். நான் அவற்றைவிட முந்தி இருந்ததால், எந்தத் தொழில்நுட்பமும் எனது வேலையைப் பாதித்ததில்லை” என்று கூறியிருக்கிறார். ஒளிப்பதிவுத் துறையில் பாதை அமைத்துக் கொடுத்த இந்த மாபெரும் கலைஞன் ஒளியில் கலந்துவிட்டார்.