Friday, June 28, 2013

ஸ்ருதி படத்துக்கு

ஸ்ருதி நடித்துள்ள படத்துக்கு பிராமணர்கள் சங்கம் எதிர்ப்புத் தெரிவித்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ரவி தேஜா, ஸ்ருதிஹாசன், அஞ்சலி நடித்துள்ள தெலுங்கு படம் பலுபு. சமீபத்தில் இப்படத்தின் டிரைலர் வெளியிடப்பட்டது. அதற்கு பிராமணர் சங்கத்தினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இதுபற்றி ஏ. பி. பிராமண சேவா அமைப்பின் இளைஞர் பிரிவு தலைவர் துரோனம் ராஜு ரவிகுமார் கூறும் போது கடந்த ஆண்டு எங்கள் சமூகத்தை சார்ந்தவர்களுக்கு எதிராக ஒரு படம் திரைக்கு வந்தது. அதை எதிர்த்து போராட்டம் நடத்தினோம். அந்த வழக்கு நீதிமன்றில் நிலுவையில் உள்ளது.
இந்நிலையில் சமீபத்தில் வெளியான பலுபு பட டீரைலரை பார்த்து அதிர்ச்சி அடைந்தோம். கடந்த ஆண்டு நாங்கள் நடத்திய நியாயமான போராட்டத்தை கிண்டல் செய்யும் விதமாக வசனங்கள் வைத்திருக்கின்றனர். இதற்கு சென்சார் குழுவினர் எந்தவித எதிர்ப்பும் தெரிவிக்காமல் சான்றிதழ் அளித்துள்ளனர்.
எங்கள் சமூகத்துக்கு எதிராக உள்ள வசனத்தை நீக்க வேண்டும் என்று சென்சார் குழு, பிலிம்ஸ்சேம்பர் மற்றும் ஆந்திர அரசுக்கு மனு அளித்திருக்கிறோம் என்றார். இதற்கு பZல் அளித்த பட இயக்குனர் மலினேனி கோபிசந்த் கூறும் போது, எந்த சமூகத்துக்கும் எதிராக படம் எடுக்கவில்லை. தற்போது ஏற்பட்டுள்ள பிரச்சினையை சுமுகமாக பேசி தீர்ப்போம். படத்தை சங்கத்தினருக்கு திரையிட்டு காட்ட உள்ளோம் என்றார்.

விஜய் ஜோடியானது பெருமை





விஜய் - அமலாபால் ஜோடியாக நடித்துள்ள படம் ‘தலைவா’. ஏ. எல். விஜய் இயக்கியுள்ளார். ஜீ. வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார். சந்திர பிரகாஷ் ஜெயின் தயாரித்துள்ளார். இப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா நுங்கம் பாக்கத்தில் நடந்தது.
விழாவில் விஜய் பேசும் போது :-
‘தலைவா’ படம் பார்த்தேன். ரொம்ப பிடித்து இருந்தது. எல்லோருக்கும் பிடிக்கும். டைரக்டர் ஏ. எல். விஜய் ஒளிப்பதிவாளர் நீரவ்ஷா, அமலாபால், சத்யராஜ், சந்தானம், மனோபாலா, பொன்வண்ணன் என திறமையானவர்களால் இப்படம் உருவாகியுள்ளது. படத்துக்கு பெரிய வெற்றி கிடைக்க வாழ்த்துகிறேன் என்றார்.
விழாவில் அமலா பால் பேசியதாவது :-
‘தலைவா’ படத்தில் விஜய் ஜோடியாக நடித்தது பெருமையாகவும் சந்தோசமாகவும் உள்ளது. திறமையானவர்களால் இந்தப் படம் எடுக்கப்பட்டு உள்ளது. இதில் நடித்தது நல்ல அனுபவமாக இருந்தது. ஏற்கனவே ஏ. எ. விஜய் இயக்கிய தெய்வத்திருமகள் படத்தில் நடித்தேன். இப்போது அவர் இயக்கத்தில் விஜய் ஜோடியாக நடிக்கவும் வாய்ப்பு கிடைத்துள்ளது. ஒவ்வொரு நடிகைக்கும் விஜய் ஜோடியாக நடிக்க வேண்டும் என்பது கனவாக இருக்கிறது. எனக்கு அக்கனவு நிறைவேறியுள்ளது. இது எனக்கு முக்கிய படம். விஜய் இனிமையானவர் ‘என்னம்மா’ என்று அழைத்து அன்பாக பழகினார்.
இவ்வாறு அவர் பேசினார்.
நடிகர் சத்யராஜ் பேசும் போது :-
இப்படத்தின் மூலம் விஜய் தலைவனாகி விட்டார். இனி அவரது ரசிகர்கள் தளபதிகள் என்றார். தயாரிப்பாளர்கள் எஸ். ஏ. சந்திரசேகரன், ஏ. எல். அழகப்பன், நடிகை சரண்யா, இசையமைப்பாளர் ஜி. வி. பிரகாஷ், நடிகர் ஒய். ஜி. மகேந்திரன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்

சிக்கலில் இருந்து மீண்டு விட்டேன்

நடிகை அஞ்சலி சித்தி கொடுமைப்படுத்துவதாக வீட்டை விட்டு வெளியேறினார். சில நாட்கள் தலைமறைவாக இருந்துவிட்டு ஐதராபாத் பொலிசில் ஆஜரானார். தற்போது தெலுங்கு படங்களில் பிசியாக நடிக்கிறார். தமிழ்ப் படங்களில் நடிக்க மாட்டேன் என்று கூறிவிட்டார். இதனால் அவர் ஏற்கனவே நடித்த ஊர் சுற்றி புராணம் படம் பாதியில் நிற்கிறது. அஞ்சலி மீது நீதிமன்றில் வழக்குகளும் தொடரப்பட்டு உள்ளன.
இந்த நிலையில் அஞ்சலி ஐதராபாத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது :-
என் வாழ்க்கையில் எதிர்பாராதவை நிறைய நடந்து விட்டன. பிரச்சினைகள் சூழ்ந்து இருந்தது. எனவே தான் வேறு வழி இல்லாமல் சில முடிவுகளை எடுத்தேன். இப்போது சிக்கல்களில் இருந்து மீண்டு சந்தோஷமாக இருக்கிறேன். இப்போது பழையபடி படப்பிடிப்புகளில் பங்கேற்று வருகிறேன். இதனால் எனக்குள் மாற்றம் ஏற்பட்டு இருக்கிறது. புதிய அனுபவங்களை உணர்கிறேன். பலமானவளாகவும் என்னை கருதுகிறேன். ஒவ்வொரு முடிவுகளையும் சுயமாக சிந்தித்து எடுக்கிறேன்.
எனது வாழ்க்கை என் கைக்குள் வந்து விட்டது. மற்றவர்களுக்கு கீழ்படிந்து வாழ்வதும் இழிவாக நடத்தப்படுவதும் எனக்கு பிடிக்கவில்லை. நான் சர்ச்சையில் சிக்கி இருந்த போது நிறைய பேர் ஆறுதலாக இருந்தார்கள். நடிகர்கள், தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள் போன்றோர் நம்பிக்கையூட்டினார்கள். இப்போது எதற்கும் நான் கவலைப்படவில்லை. முழுக் கவனமும் சினிமாவில் தான். நல்ல கேரக்டர்களில் நடித்து பெயர் வாங்க வேண்டும் என்று உழைக்கிறேன்.

சீனியர் நடிகர்களுடன் ஜோடி சேர மறுக்கும்

தற்போது தென்னிந்திய சினிமாவில் உச்ச நடிகையாகியிருப்பவர் காஜல் அகர்வால். அதிலும் தமிழில் ஹன்சிகா அதிகப்படியான படங்களில் நடித்த போதும், விஜய், கார்த்தி என பிரபல்யமான ஹீரோக்களின் படங்களில் மட்டுமே நடித்து வரும் காஜலே தற்போது முதல்தர நடிகையாக கருதப்படுகிறார். அதோடு, என்னதான் பெரிய பட்ஜெட் படங்கள் தன்னைத் தேடி வந்தாலும் அதில் பணியாற்றும் ஹீரோக்கள் விசயத்தில் கவனமாக இருக்கிறார் காஜல்.
குறிப்பாக அதிக வயது கொண்ட ஹீரோக்களின் படங்களை அவர் ஏற்றுக்கொள்வதே இல்லையாம். தெலுங்கில்கூட நாகர்ஜூனாவுடன் நடிக்க வந்த ஒரு படத்தை நாசுக்காக தவிர்த்து விட்டாராம். கூலியை கடுமையாக உயர்த்தின போதும் அம்மணி மசியவில்லையாம். அதன்பிறகுதான் அந்த வேடத்துக்கு ஸ்ரேயாவை கமிட் பண்ணியிருக்கிறார்கள்.
இப்படியொரு மனநிலையில் இருப்பதால்தான் தமிழில் கமலுடன் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்த போதும் கூடு கால்சீட் பிரச்சினையை காரணம் காட்டி அவர் தவிர்த்திருப்பதாக கூறப்படுகிறது. என்றாலும், இதை வெளிப்படையாக சொல்ல விரும்பாத காஜல், சமீபத்தில் அளித்த ஒரு பேட்டியில் எப்போதும் நான் யூத் ஹீரோக்களுடனேயே நடிக்க விரும்புகிறேன். அப்போதுதான் நானும் என்னை யூத்தாக பீல் பண்ணிக்கொள்ள முடியும் என்று தெரிவித்த காஜல் அகர்வால் கடந்த சில தினங்களுக்கு முன்புதான்தனது 28 வது பிறந்த நாளை கொண்டாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tuesday, June 25, 2013

பல சாதனைகள் படைத்த ‘வசந்த மாளிகை’

காதலை காதலிப்பவர்கள் கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம்

1972 ஆம் ஆண்டு வெளிவந்த சூப்பர் ஹிட் படமான ‘வசந்த மாளிகை’ தற்போது ‘டிஜிட்டல் ரெஸ்டடேரேன்’ செய்யப்பட்டு ‘சினிமாஸ்கோப்’ முறையில் மாற்றப்பட்டுள்ளது.
இப்படத்தைப் பற்றிய சில சிறப்புத் தகவல்கள் பிரேம் நகரம் என்ற பெயரில் 1971 ஆம் ஆண்டு தெலுங்கில் வெளியான படத்தின் ரீமேக்தான் ‘வசந்த மாளிகை’.
தெலுங்கில் அக்கினேனி நாகேஸ்வரர ராவ், வாணி ஸ்ரீ முதன்மை கதாபாத்திரங்களில் நடித்திருந்தார்கள்.
பின்னர் இந்த படம் ஹிந்தியிலும் தயாரிக்கப்பட்டு ராஜேஷ் கண்ணா, ஹேமமாலினி நடிக்க பிரேம் நகர் என்ற பெயரில் 1974 ஆம் ஆண்டு வெளியாகி வெற்றி பெற்றது.
மூன்று மொழிகளிலும் படத்தை இயக்கியவர் கே. எஸ். பிரகாஷ்ராவ்.
கொடூரி கெளசல்யா தேவி எழுதிய ‘பிரேம் நகர்’ என்ற நாவலை மையமாக வைத்துதான் இந்த படத்தையே உருவாக்கினார்கள்.
தமிழ், தெலுங்குப் படங்களுக்கு இசையமைத்தவர் கே. வி. மகாதேவன். ஹிந்திப் படத்திற்கு இசையமைத்தவர் எஸ். டி. பாமன்.
மூன்று மொழிகளிலுமே இந்த படத்தின் பாடால்கள் சூப்பர் ஹிட்டாக அமைந்தன.
தமிழில் அனைத்துப் பாடல்களையும் எழுதியவர் கண்ணதாசன் எல்லா பாடல்களுமே சூப்பர் ஹிட்டாக அமைந்து இன்று வரை ரசிக்கப்படுகின்றன.
படத்தின் கதையும் கவிஞரின் வாழ்க்கையில் நடந்த சம்பவமும் ஒன்றாக இருந்ததாம். அதனால் கவிஞர் இப்படத்திற்கு மிகவும் சிறப்பாக பாடல்களை எழுதி தந்தார் என்று அப்போது சினிமா வட்டாரத்திதில் பேசிக் கொண்டார்களாம்.
‘ஏன் ? ஏன் ? ஏன் ? ஒரு கிண்ணத்தை ஏந்துகிறேன்’, ‘குடிமகனே பெருங்குடி மகனே நான் கொடுக்கட்டுமா’, ‘கலைமகள் கைப் பொருளே உன்னை கவனிக்க ஆளில்லையோ’, ‘மயக்கமென்ன இந்த மெளனமென்ன’, ‘குடிப்பதற்கு ஒரு மனமிருந்தால் அவளை மறந்து விடலாம்’, ‘யாருக்காக இது யாருக்காக’ என அனைத்துப் பாடல்களுமே கேள்வியின் வடிவம் அதிகம் இருக்கும்.
இப்படத்தை தமிழில் தயாரிக்க முடிவு செய்தவுடன் ஹீரோவாக சிவாஜிகணேசன் மட்டுமே நடிக்கப் பொருத்தமானவர் என தயாரிப்பாளர்கள் முடிவு செய்தார்கள்.
ஹீரோயினாக நடிக்க பலரின் பெயர்கள் பரிசீலிக்கப்பட்டு கடைசியில் தெலுங்கில் நடித்த வாணிஸ்ரீயின் அழகான தோற்றம் தமிழிலும் நடிக்க வைத்து விட்டது.
சிவாஜிகணேசன், வாணிஸ்ரீ, நாகேஷ், மேஜர் சுந்தர்ராஜன், பண்டாரிபாய், பாலாஜி, சுகுமாரி, ரங்காராவ், வி. கே. ராமசாமி, புஷ்பலதா, ராமதாஸ், சி கே. சரஸ்வத, சி. ஐ. டீ. சகுந்தலா, ரமா பிரபா, செந்தாமரை என படத்தில் ஏகப்பட்ட நட்சத்திரங்கள் நடித்திருந்தார்கள்.
படத்தின் வசனம் மிகவும் பாராட்டப்பட்ட ஒன்று அதை எழுதியர் பாலமுருகன்.
இப்படத்தில் முதலில் கிளைமாக்கில் சிவாஜிகணேசன் இறந்து விடுவதாக காட்சியமைத்திருந்தார்கள். தியேட்டரில் மக்கள் அதை விரும்பவில்லை என்று அறிந்ததும், பின்னர் சிவாஜியும் வாணிஸ்ரீயும் ஒன்று சேர்வது போல காட்சியை மாற்றி தியேட்டர்களுக்கு பிரின்ட் போட்டு அனுப்பி வைத்தார்கள். படத்திற்கு கூட்டம் அலை மோதியது.
இலங்கையில் அதிக ஊர்களில் 50 நாட்களுக்கு மேல் ஓடிய முதல் படம் ‘வசந்த மாளிகை’ 12 ஊர்களில் 14 அரங்குகளில் ஓடியது.
இலங்கையில் இரண்டு அரங்குகளில் வெள்ளி விழா கொண்டாடும் வித்ததில் ஓடிய முதல் படமும் ‘வசந்த மாளிகை’ தான்.
கொழும்பு கெப்பிட்டல் திரையரங்கில் 287 நாட்களும், யாழ்ப்பாணம் வெலிங்டன் திரையரங்கில் 208 நாட்களும் ஓடியது.
தமிழ் நாட்டில் மதுரை நியூ சினிமா திரையரங்கில் 200 நாட்களும், சென்னை சாந்தி திரையரங்கில் 175 நாட்களும், கிரெளன், புவனேஸ்வரி திரையரங்குகளிலும், திருச்சி ராஜா திரையரங்கிலும் 140 நாட்களுக்கும் ஓடியது.
மேலும், தஞ்சை, கோவை, சேலம், வேலூர், ஈரோடு, கடந்தை, மாயவரம் ஆகிய ஊர்களிலும் 100 நாட்களுக்கும் மேலும், மற்ற பல ஊர்களில் 50 நாட்களுக்கும் மேல் ஓடியது. இது அந்த காலத்தில் மாபெரும் சாதனை.
இப்படத்தின் 100வது நாள் விழா ஒரே நாளில் திருச்சி, தஞ்சாவூர், கும்பகோணம், மாயவரம் ஆகிய நான்கு ஊர்களில் 1973 ஆம் ஆண்டு ஜனவரி 7 ஆம் திகதி சிறப்பாக கொண்டாடப்பட்டது.
காலை 10 மணிக்கு திருச்சியிலும், பகல் 3 மணிக்கு தஞ்சாவூரிலும், மாலை 7 மணிக்கு கும்பகோணத்திலும், இரவு 10 மணிக்கு மாயவரத்திலும் சிறப்பான முறையில் கொண்டாடப்பட்டது.
கடந்த பல ஆண்டுகளில் ஏராளமான காதல் திரைப்படங்கள் வந்திருந்தாலும் கடந்த 40 ஆண்டுகளாக அடிக்கடி திரைப்பிடப்படுவதும் வசூலில் மாபெரும் சாதனை படைப்பதுமாக இருந்து வருவது இந்த ஒரு படம் மட்டுமே.
ஒரே வருடத்தில் இரண்டு வெள்ளி விழாப் படங்களை 1959, 1961 ஆம் ஆண்டுகளுக்குப் பிறகு 1972 ஆம் ஆண்டு நடிகர் திலகம் சிவாஜிகணேசனுக்கு மூன்றாவது முறையாக 2 வெள்ளி விழாப் படங்களை தந்தது.
‘வசந்த மாளிகை’ படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்த போது சிவாஜி கணேசனின் தாயார் ராஜாமணி அம்மாள் திடீரென்று காலமாகிப் போனார். இறுதிச் சடங்குகள் முடிந்த ஐந்தாம் நாள் வீட்டிலிருந்த சிவாஜி, தயாரிப்பாளரைத் தொடர்பு கொண்டு, வீட்டிலிருந்தால் அம்மாவின் ஞாபகம் அடிக்கடி வந்து நெஞ்சில் துக்கத்தை உண்டாக்குகிறது. எனவே படப்பிடிப்புக்கு ஏற்பாடு செய்யுங்கள் மனம் அமைதியாவது இருக்கும் என்று கூறியிருக்கிறார்.
தயாரிப்பாளரும் சரி என்று சொல்லி படப்பிடிப்பை ஊட்டியில் துவக்கியிருக்கிறார். நடிகர் திலகம் அப்போது நடித்த காட்சி எது தெரியுமா ? ‘மயக்கம் என்ன இந்த மெளனமென்ன’ என்ற காதல் ரசம் சொட்டும் பாடல் காட்சி கவலையின் ரேகையே முகத்தில் தெரியாத அளவு மிகவும் இயல்பான ஒரு காதலனைப் போல் அக்காட்சியில் நடித்திருப்பார் அதுதான் சிவாஜி தொழில் வேறு, குடும்பம் வேறு என்று கடைசி வரை உறுதியாக இருந்தவர்.
இப்படத்திற்காக ‘அடியம்மா ராசாத்தி’ என்று தொடங்கும் ஒரு டூயட் பாடல் பாடமாக்கப்பட்டது. அது ரெக்கார்டு பிளேயார்களிலும் இடம்பெற்று வானொலிகளிலும் வெகுகாலம் ஒலிபரப்பாகி வந்தது ஆனால் திரைப்படத்தில் ஏனோ இடம் பெறவில்லை. முதன் முதலாக வண்ணத்தில் ‘ஸ்லோமோஷன்’ முறையில் சில காட்சிகள் எடுக்கப்பட்ட தமிழ்ப் படம் ‘வசந்த மாளிகை’. இப்படி பல சிறப்புக்களையும் சாதனைகளையும் புரிந்தது வந்த மாளிகை. காதலை காதலிப்பவர்கள் கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம்.

கண்ணதாசனும் விஸ்வநாதனும் ஒரே நாளில் பிறந்தவர்கள்

ஜூன் 24 கவியரசர் கண்ணதாசன் பிறந்த நாள். ஏன் மெல்லிசை மன்னருக்கும் நேற்றுதான் பிறந்த நாள். இருவருமே மறக்க முடியாத பல பாடல்களுக்குச் சொந்தக்காரர்கள். ஒருவர் படைத்தார். ஒருவர் இசைத்தார். கவியரசர் 1927 ஆம் ஆண்டும், மெல்லிசை மன்னர் 1928 ஆம் ஆண்டும் பிறந்தவர்கள். மனதில் நின்ற பாடல்களைச் சொல்லும் போது இருவரையுமே நினைத்துக் கொள்ளுங்கள்.
கண்ணதாசன் மயங்க வைத்த கலங்க வைத்த வரிகளுக்குச் சொந்தக்காரர். வனவாசம் மனவாசம் சேரமான் காதலி (சாஹித்ய அகாடமி பரிசு பெற்றது) அர்த்தமுள்ள இந்து மதம், இயேசு காவியம் போன்ற புத்தகங்களை வெளியிட்டார்.
கறுப்புப் பணம், சிவகங்கைச் சீமை போன்ற படங்கள் எடுத்த தயாரிப்பாளர் கறுப்புப் பணம் படத்தில் கதாநாயகனாகவே சூரியகாந்தி, இரத்தத் திலகம், ஆபூர்வ ராகங்கள் போன்ற படங்களில் ஓரிரு காட்சிகளில் நடித்தவர்.
காவியத் தாயின் இளைய மகன் ‘பாமர ஜாதியில் தனி மனிதன் படைப்பதனால் என் பேர் இறைவன்’ அவர் பார்த்ததெல்லாம் அழகின் சிரிப்பு மானிட இனத்தை ஆட்டி வைப்பேன் அவர் மாண்டு விட்டால் அதைப் பாடி வைப்பேன்
நான் நிரந்தரமானவன் அழிவதில்லை எந்த நிலையிலும் எனக்கு மரணமில்லை.
அவர் மறைந்த பிறகு வந்த பாடல் ஒன்று கண்ணதாசனே கண்ணதாசனே வந்து விடு என் காதல் கவிதைக்கு வரிகளைக் கொஞ்சம் தந்து விடு என்ன ஏக்கம்...?
பக்தி வேண்டுமா? கிருஷ்ணகானம் ஆயர்பாடி மாளிகையிலா, புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களா எது வேண்டும்? இல்லை கேட்டதும் கொடுப்பவனே கிருஷ்ணா கிருஷ்ணாவா, அல்லது கங்கையிலே ஓடமில்லையோ பாடலா, கண்ணன் வருவான் பாடலா அல்லது ராமன் என்பது பொன்னி நதி பாடலா.....
நாத்திகம்...? உண்டு ‘தெய்வம் என்றால் அது தெய்வம் வெறும் சிலை என்றால் அது சிலைதான்... உண்டு என்றால் உண்டு இல்லை என்றால் அது இல்லை. காதல் கணக்கிலடங்காதது எவ்வளவு ஒரு பதிவில் சொல்ல முடியும்
அவன் காலையில் மலரும் தாமரைப்பூ அந்திக் கருக்கினில் மலரும் மல்லிகைப் பூ இரவில் மலரும் அல்லிப் பூ அவள் என்றும் மணக்கும் முல்லைப் பூ.
ஒரு மே மாதத்தில் கெடு வைத்து முடிய வேண்டும் என்று சொல்லப் பட்ட பாடலுக்கு மே மே என்று முடியும் வண்ணமே பாடல் எழுதினார் கவிஞர். (இந்தப் பாடலின் இசைக்கு மெல்லிசை மன்னரை நினைத்துக் கொள்ளுங்கள்)
அன்பு நடமாடும் கலைக் கூடமே ஆசை மழை மேகமே கண்ணில் விளையாடும் எழில் வண்ணமே கன்னித் தமிழ் மன்றமே’ இதுபோல இன்னொரு பாடல் லா, லா, என்று முடியும் படி... ‘வான் நிலா நிலா அல்ல உன் வாலிபம் நிலா... தேன் நிலா அல்ல என் தேவியின் நிலா...’
‘கம்பனைக் கூப்பிடுங்கள் சீதையைக் காண்பான்... கவி காளிதாசன் அவள் சகுந்தலை என்பான்...’ முதல் காதல் தோற்றுப் போனதனால் சிறந்த கவிதைகள் படைத்தாராம். எல்லோருக்கும் முடிகிறதா என்ன காதலில் தோற்றுப் போவது இல்லை கவிதை எழுதுவது காலங்களில் அவள் வசந்தம் கலைகளிலே அவள் ஓவியம் மாதங்களில் அவள் மார்கழி மலர்களிலே அவள் மல்லிகை.... கண் போல் வளர்ப்பதில் அன்னை அவள் கவிஞனாக்கினாள் என்னை...’
அவரது ஒவ்வொரு பாடலுக்கும் அவர் வாழ்வில் ஒரு பின்னணி உண்டு என்பார்கள். எந்த அளவு உண்மையோ நமக்கு நல்ல பல பாடல்கள் கிடைத்தன.
மனைவி பற்றி
‘ஆழம் விழுதுகள் போல் உறவு ஆயிரம் வந்ததுண்டு. என் வேரென நீயிருந்தாய்... அதில் நான் வீழ்ந்து விடாதிருந்தேன்....’
கணவன் பற்றி மனைவி...?
‘சொல்லென்றும் மொழியென்றும் பொருள் என்றும் இல்லை... சொல்லாத சொல்லுக்கு விலையேதும் இல்லை (ஆ... ஹா...) ஒன்றோடு ஒன்றாக உயிர் சேர்ந்த பின்னே உலகங்கள் நமையின்றி வேறேதும் இல்லை... நான் பேச நினைப்பதெல்லாம் நீ பேச வேண்டும்....’ ‘பறந்து செல்லும் பறவையைக் கேட்டேன்... பாடித் திரியும் காற்றையும் கேட்டேன்... அலையும் நெஞ்சை அவனிடம் சொன்னேன். அழைத்து வந்தார் என்னிடம் உன்னை... இந்த மனமும், இந்த உறவும் என்றும் வேண்டும் என்னுயிரே...’
‘பிரிந்தவர் மீண்டும் சேர்ந்திடும் போது அழுதால் கொஞ்சம் நிம்மதி... பேசசமறந்து சிலையாய் நின்றால் அதுதான் தெய்வத்தின் சன்னதி... அதுதான் காதல் சன்னதி... காதல் சிறகைக் காற்றினில் விரித்து வான வீதியில் பறக்கவா...’
காதல் தோல்வி
நினைக்கத் தெரிந்த மனமே உனக்கு மறக்கத் தெரியாதா... பழகத் தெரிந்த உயிரே உனக்கு விலகத் தெரியாதா? காதல் தோல்விக்கு காதலியைக் கூடக் காரணமாக்க மனம் வராத காதலன். ‘மயங்கவைத்த கன்னியர்க்கு மணமுடிக்க நேரமில்லை. இருவர் மீதும் குற்றமில்லை.
இறைவன் செய்த குற்றமடி... ஒரு மனதை உறங்க வைத்தான் ஒரு மனதைத் தவிக்க வைத்தான். துவக்கி வைத்த கடவுளுக்கு முடித்து வைக்க நேரமில்லை. உனக்கெனவா நான் பிறந்தேன் எனக்கெனவா நீ பிறந்தாய்... கணக்கினிலே தவறு செய்து கடவுள் செய்த குற்றமடி....’

அற்புத நடிகர் எஸ். வி. ரங்கராவ்

நாம் 60 வயது கதாநாயகர்கள் 18 வயது கதாநாயகிக்கு ஜோடியாக நடிப்பதைப் பார்த்து ரசிக்கும் நம்ப ரசிக பெருமக்களுக்கு நான் சொல்லும் இந்த செய்தி கொஞ்சம் புதுசு. 1950 களில் தொடங்கி 60, 70 களில் கண்ணியமான அப்பா பாத்திரத்தில் நடித்த எஸ். வி. ரங்கராவ் தன் வாழ்நாளில் முதுமையே பார்த்ததில்லை. ஆம் அவர் மறைந்த போது அவருக்கு வயது 56 தான். எம். ஜி. ஆரை விட வயதில் இளையவர் ஆனால் அவருக்கு தந்தையாக பல படங்களில் நடித்தவர்.
அந்த காலக்கட்டத்தில் அப்பா வேடங்களில் நடித்த நாகையா, போன்றவர்கள் அழுது நம்மையும் அழ வைத்த போது தன்னுடைய கம்பீரமான நடிப்பாலும் ஆஜானுபாகுவான சரீரத்தாலும் நம் தமிழ் ரசிகர்களை தம்பால் இழுத்தவர். இந்த மாதிரி தந்தையோ மாமனாரோ நமக்கு அவரைப்போல இருக்க மாட்டாரோ என ஏங்க வைத்தவர்.
தெலுங்கு தேசத்தில் பிறந்தாலும் தமிழை டப்பிங் இல்லாமல் சுத்தமாக உச்சரித்ததாலும் எதார்த்தமான நடிப்பாலும் தமிழ் திரையுலகத்தில் ஒரு தனி இடம் பிடித்தவர். தெலுங்கு படங்களை இயக்கி விருது பெற்றவர் அந்த காலத்தில் பட்டதாரிகள் நடிக்க வருவது குறைவு ரங்கராவ் ஒரு பட்டதாரி.
ஒரு நடுத்தர வயதினரை மாயாபஜாரில் யார் யார் நடித்தார்கள் என்று கேட்டு பாருங்கள் யாரும் அதில் நடித்த ஜெமினி சாவித்தியை சொல்ல மாட்டார்கள். டக்கென்று ரங்கராவ் என்று தான் சொல்வார்கள்.
சில படங்களில் அவருடைய கதாப்பாத்திரம் அதில் நடித்த கதாநாயகரையும் மிஞ்சி விடும். மாமனார் மருமகள் பாசப்பிணைப்பை உணர்த்திய நானும் ஒரு பெண் அதில் ஒன்று அன்னை திரைப்படத்தில் மனைவியை புரிந்துகொண்ட கணவன் பாத்திரமாகட்டும், வளர்ப்பு தந்தை மகனிடம் கொட்டும் பாசத்தை உணர்த்திய படிக்காத மேதையாகட்டும் ரங்கராவை தவிர யாரும் அவ்வளவு அற்புதமாக நடித்திருக்க முடியாது.
கண்கண்ட தெய்வம் மற்றும் அன்புச் சகோதரர்கள் படங்களில் தோன்றிய அண்ணனை நாம் மறக்கமுடியுமா? இப்படி எத்தனையோ திரைப்படங்கள்.
உண்மையை சொல்லுங்கள், இரண்யகசிபு என்றால் யார் ஞாபகம் உங்களுக்கு வருகிறது அந்த ஆஜானுபாகுவான ராஜாவுக்கு பொருத்தமானவர் யார். ஆங்கில புலமை மிகுந்த அவர் நிறைய ஷேக்ஸ்பியர் நாடகத்தில் நடித்துள்ளார்.
கைகொடுத்த தெய்வத்தில் சாவித்திரிக்கு தந்தையாக நடித்து நம் கண்களை குளமாக்கியவர் சர்வர் சுந்தரத்தில் சிறிய வேடத்தில் தோன்றினாலும் தன் நகைச்சுவை நடிப்பால் நம்மை குலுங்க குலுங்க சிரிக்க வைத்தார்.

Wednesday, June 19, 2013

மஞ்சுளாவை திடீர் திருமணம் செய்து கொண்டவர் விஜயகுமார்

நடிகர் விஜயகுமார் புகழின் உச்சியில் இருந்த போது நடிகை மஞ்சுளாவை திடீர் திருமணம் செய்து கொண்டார். விஜயகுமார், அப்போது மிகவும் ‘பிசி’யான நட்சத்திரம். இரவும் பகலுமாக படங்களில் நடித்துக் கொண்டிருந்தார். சில நாட்கள் வீட்டுக்கே போக முடியாத அளவுக்கு ஸ்டூடியோவிலேயே குட்டித் தூக்கம் போட்டுவிட்டு அடுத்த படப்பிடிப்புக்குப் போய்விடுவார்.
சொந்த ஊரில் இருந்து மனைவி முத்துக்கண்ணுவை அழைத்து வந்து விட்டார். 1970ல் மகள் கவிதா, 1973ல் அடுத்த மகள் அனிதா, 1976ல் மகன் அருண்குமார் என மூன்று வாரிசுகள்.
1976ல் ஏ. பீம்சிங் டைரக்ஷனில் “உன்னிடம் மயங்குகிறேன்” படத்தில் நடித்த போதுதான் நடிகை மஞ்சுளாவையும் திருமணம் செய்து கொண்டார். அந்தப் படத்தில் நடிகை மஞ்சுளா விஜயகுமாரின் ஜோடியாக நடித்தார். படப்பிடிப்பு இடைவேளையில் அவர்கள் பொதுவான விஷயங்கள் பேசிக் கொண்டிருந்த போதுதான் எதிர்பாராமல் நிகழ்ந்தது அந்தக் கல்யாணத் திருப்பம்.
அதுபற்றி விஜயகுமார் கூறுகிறார்.
தயாரிப்பாளர் ராஜ்கண்ணுவின் சகோதரர்தான் “உன்னிடம் மயங்குகிறேன்” படத்தின் தயாரிப்பாளர் இவர் ஏற்கனவே “ஆசை 60 நாள்” படத்தை தயாரித்தவர். “உன்னிடம் மயங்குகிறேன்” படத்தின் கதாநாயகியாக மஞ்சுளாவை புக் செய்திருந்தார். நான் கதாநாயகனாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தேன்.
மஞ்சுளா அப்போது தெலுங்கிலும் பிரபலமாக இருந்தார். தெலுக்கின் முன்னணி நடிகர்கள் நாகேஸ்வரராவ், என். டி. ராமராவ், சோபன்பாபு என மாற்றி மாற்றி நடித்துக் கொண்டிருந்தார். தமிழில் இந்தப் படத்தில் நடித்த போது ‘லஞ்ச் பிரேக்’கில் சின்னச் சின்ன இடைவேளைகளில் ஏதாவது பேசிக்கொண்டிருப்போம். பேச்சு பொதுவாக இருக்கும். பல நேரங்களில் சுவாரஷ்யமாக எங்கள் உரையாடல் போய்க்கொண்டிருக்கும்.
இப்படித்தான் ஒருநாள் பேசிக் கொண்டிருக்கும் போது திடீரென மஞ்சுளாவிடம், ‘மஞ்சு உங்களை நான் திருமணம் செய்து கொள்ள விரும்புகிறேன் நீங்க என்ன சொல்கிaர்கள்” என்று கேட்டு விட்டேன்.
எதிர்பாராத அந்தக் கேள்வியில், மஞ்சுளாவும் திடுக்கிட்டுப் போனது அவரது முகபாவத்தில் தெரிந்தது. பொதுவாகவே உள்மனதின் ஆழத்தில் நம்மையும் அறியாமல் சில விஷயங்கள் புதையுண்டு போயிருக்கும். மஞ்சுளாவிடம் பேசிப்பழக ஆரம்பித்த இந்த சில நாட்களில் அவரைப் பற்றி எண்ணங்கள் காதலாக மாறியிருந்தன.
அதுதான் சட்டென வார்த்தைகளில் வெளிப்பட்டுவிட்டது.
என் கேள்விக்கு பதிலை மஞ்சுளாவின் அதிர்ச்சி முகமே எனக்கு சொல்லிவிட்டது. அவர் பதிலாகக் கூட எதுவும் சொல்லவில்லை.
மறுநாள் எனக்கு மதியம் 2 மணிக்குத்தான் படப்பிடிப்பு செட்டுக்கு வந்த போது அங்கே மஞ்சுளா ஒரு காட்சியில் நடித்துக் கொண்டிருந்தார். காட்சியை முடித்து விட்டு வந்தவரிடம் “நேற்று நான் சொன்னதை யோசித்தீர்களா? பதில் ஒன்றும் சொல்ல வில்லையே” என்றேன் மறுபடியும். இப்போது மஞ்சுளாவின் முகம் எனக்கு பதில் சொல்லத் தயங்கும் தர்மசங்கடமான நிலையை உணர்த்தியது. மெதுவாக என்னைப் பார்த்தவர், “யோசித்துச் சொல்கிறேன்.” என்றார். பிறகு அவரே, “இந்த விஷயத்தில் நானாக எந்த முடிவும் எடுக்க முடியாது. அப்பா- அம்மாவிடமும் கலந்து பேச வேண்டும்” என்றார்.
அடுத்தடுத்து வந்த இரண்டொரு நாட்களில் மஞ்சுளாவின் பெற்றோரை சந்தித்தேன். அவர்களோ, “எங்கள் பெண் விருப்பம் எதுவோ, அதுவே எங்கள் விருப்பமும். உங்கள் விருப்பம் பற்றி மஞ்சுளா எங்களிடம் சொன்னாள். மனதில் உள்ளதை வெளிப்படையாகப் பேசியது எங்களுக்கும் பிடித்திருக்கிறது. எனவே திருமண விஷயத்தில் எங்களுக்கும் சம்மதமே” என்றனர்.
திருமணத்தை எளிமையாக நடத்தினோம். திருமணத்துக்குப்பிறகு படங்களில் நடிப்பதைப் படிப்படியாகக் குறைத்துக் கொண்டார் மஞ்சுளா. இவ்வாறு விஜயகுமார் கூறினார்.
படங்களில் நடிப்பது தொடர்ந்தாலும், ஒரே மாதிரியான கதைகள் விஜயகுமாரை சற்று யோசிக்கவைத்தது. அதனால் வித்தியாசமான கதைகளைத் தேட ஆரம்பித்தார். இந்த சமயத்தில் வில்லனாக நடிக்கவும் அழைப்புக்கள் வந்தன. கதாநாயகனாக ரஜினி நடிப்பில் முன்னணியில் இருந்த நேரத்தில் அவரது படங்களில் கூட வில்லனாக நடித்தார் விஜயகுமார். தயாரிப்பாளரும் நடிகருமான கே. பாலாஜியின் “சவால்” “தியாகி” போன்ற படங்களிலும் வில்லனாக நடிப்பதைத் தொடர்ந்தார்.
இப்படி வில்லன் நடிப்பில் பிஸியாக இருந்த நேரத்தில் மதுரையில் நடந்த ஒரு விழாவுக்கு விஜயகுமார் போனார். அப்போது சில ரசிகர்கள் அவரிடம் “ஹீரோவாக நடித்து எங்களை சந்தோஷப்படுத்திய நீங்கள், இப்போது வில்லனாக நடிப்பது எங்களுக்கு வேதனை தருகிறது” என்று சொல்ல ரசிகர்களின் ஒட்டுமொத்த உணர்வாக அதை எடுத்துக் கொண்டு நடிப்பதையே நிறுத்தி விட்டார் விஜயகுமார்.
மூன்றாண்டுகள் இந்த நிலை நீடித்தது. மறுபடியும் விஜயகுமார் நடிக்க ஆரம்பித்தது குணசித்திர வேடங்களில். அதற்கான வாய்ப்பு ‘ஜீவி’ பட நிறுவனம் மூலம் வந்தது.

9 வயதில் இருந்தே சாருக்கான் ரசிகை

நான் 9 வயதில் இருந்தே சாருக்கானின் ரசிகையாக இருந்து வருகிறேன்' என்று நடிகை தீபிகா படுகோனே கூறினார்.
சாருக்கான் கதாநாயகனாக நடிக்கும் இந்தி படம், 'சென்னை எக்ஸ்பிரஸ்' இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக தீபிகா படுகோனே நடிக்கிறார். இவருடைய தந்தையாக ஒரு முக்கிய வேடத்தில் சத்யராஜ் நடிக்கிறார்.
சாருக்கான் தனது தந்தையின் அஸ்தியை கரைப்பதற்காக ராமேஸ்வரம் வருவது போலவும், அங்கு தீபிகா படுகோனேயை சந்தித்து காதல் வசப்படுவது போலவும் கதை.
'சென்னை எக்ஸ்பிரஸ்' படம், தமிழில் மொழிமாற்றம் செய்து வெளியிடப்படுகிறது.
இந்த படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா மும்பையில் நடந்தது. விழாவில் சாருக்கான், தீபிகா படுகோனே ஆகிய இருவரும் கலந்துகொண்டார்கள்.
விழாவில், தீபிகா படுகோனே பேசியதாவது :-
'நான் 9 வயதில் இருந்தே சாருக்கானின் ரசிகையாக இருந்து வருகிறேன். 'ஓம் சாந்தி ஓம்' படத்தில் அவர் என்னை கதாநாயகியாக அறிமுகம் செய்தார். அதுவே இன்ப அதிர்ச்சியாக இருந்தது. இப்போது, 'சென்னை எக்ஸ்பிரஸ்' படத்தில் மீண்டும் அவருடன் ஜோடி சேர்ந்து இருக்கிறேன். எனது கனவு நாயகனுடன் 2 படங்களில் ஜோடி சேர்ந்து நடித்தது என் அதிர்ஷ்டம்' இவ்வாறு தீபிகா படுகோனே கூறினார்.
சாருக்கான் பேசும்போது, 'சத்யராஜ் மிகப்பெரிய நடிகர். அவர் ஒரு பெரிய தலை என்னைப் போன்ற நடிகர்களுக்கு அவர்தான் தலைவர்' என்றார்.

அம்மாவாக ஆசை

சமந்தாவும் சித்தார்த்தும் காதல் வயப்பட்டுள்ளனர். இருவரும் திருமணம் செய்துகொள்ள முடிவெடுத்துள்ளதாகவும் தகவல் பரவி உள்ளது. சமீபத்தில் இருவரும் கோவில்களுக்கு பெற்றோருடன் சென்று சாமி கும்பிட்டனர். அதன் பிறகுதான் இவர்கள் காதல் விவகாரம் வெட்ட வெளிச்சமானது.
பட விழாக்களில் ஜோடியாக பங்கேற்கின்றனர். நெருக்கமாக போட்டோவுக்கும் போஸ் கொடுக்கிறார்கள். சமந்தாவுக்கு தற்போது தெலுங்கில் 5 படங்கள் கைவசம் உள்ளன. தமிழிலும் ஒரு படத்தில் நடிக்கிறார். இந்த படங்கள் முடிந்த பிறகு திருமணம் நடக்கும் என தெரிகிறது. திருமணத்துக்கு பிறகு சினிமாவுக்கு முழுக்கு போட திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் தாய் ஆக ஆசை வந்துள்ளதாகவும் சமந்தா கூறியுள்ளார். இது குறித்து சமந்தா டுவிட்டரில் 'படப்பிடிப்பில் ஒரு குழந்தையை பார்த்தேன். அதை தூக்கி கொஞ்சினேன். பிஞ்சு விரலால் அக்குழந்தை என்னை கெட்டியாக பிடித்துக் கொண்டது. அக்குழந்தையை விட்டு என்னால் விலக முடியவில்லை. எனக்கு வயது ஆகிவிட்டது தெரிகிறது. எனக்கும் தாய் ஆக வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டு உள்ளது' என்று குறிப்பிட்டு உள்ளார்.

நான் சொப்ட்வேர் என்ஜினியர்





ஆடுகளம் படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் டாப்ஸி தற்போது அஜித்துடன் வலை படத்தில் நடிக்கிறார்.
டாப்ஸி அளித்த பேட்டி வருமாறு:-
நான் சொப்ட்வேர் என்ஜினியர் ஆனால் வேலைக்கு போக விருப்பமில்லை நடிக்க வாய்ப்பு வந்ததால் நடிகையாகி விட்டேன். கஷ்டப்பட்டு நடித்து முன்னுக்கு வருவதில் எனக்கு நம்பிக்கை கிடையாது முயற்சியை விட அதிர்ஷ்டம்தான் முக்கியம்.
தமிழ், தெலுங்கு, இந்தியில் எனக்கு திறமையான இயக்குனர்கள் கிடைத்தனர். அதனால் ஈசியாக வளர முடிந்தது. இந்தி சினிமாவிலும் நடித்துள்ளேன். இதனால் இந்தியில் மட்டுமே நடிக்க விரும்பவில்லை. எனக்கு தமிழ், தெலுங்கு உள்ளிட்ட தென் இந்திய திரையுலகில் வலுவான இடம் உள்ளது. எனவே தென் இந்திய மொழி படங்களிலேயே தொடர்ந்து நடிப்பேன்.
எல்லா வயது நடிகர்களிடமும் நட்பு உள்ளது. அஜித் முதல் ஆர்யா வரை யாருடனும் என்னை இணைத்து பேசவில்லை. குடும்பத்தினர் என்னை நம்புகிறார்கள். தமிழ், தெலுங்கு, இந்தியில் வித்தியாசமான கேரக்டர்களில் நடிக்க வாய்ப்புகள் அமைந்தன. இதனால் நடிப்பு திறமையை காட்ட முடிந்தது. ஒவ்வொரு கேரக்டரிலும் என் திறமையை நிரூபித்து உள்ளேன் இது சந்தோஷத்தை கொடுக்கிறது. கவர்ச்சி பதுமையாக என்னை நினைப்பது பற்றியெல்லாம் கவலை இல்லை.
அஜித், ஆர்யாவுடன் விஷ்ணுவர்த்தன் இயக்கும் படத்தில் நடித்து வருகிறேன். நயன்தாராவும் இப்படத்தில் இருக்கிறார். அஜித் படம் என்பதால் இதில் நடிக்க ஒப்புக்கொண்டேன் இதில் பத்திரிகையாளராக வருகிறேன். தென் இந்திய மொழி படங்களில் நடிகர்களை கொண்டாடுகிறார்கள். இந்தியில் அப்படி இல்லை நடிகைகளுக்கும் சமமான மரியாதை தருகிறார்கள்.
இங்கிருந்து இந்திக்கு போய் நடிகைகள் ஜெயிக்கின்றனர். ஆனால் இந்தியில் இருந்து வந்து நடிகர்களால் இங்கு நிலைக்க முடியாது மும்பையில் சொந்தமாக வீடு வாங்க ஆசை உள்ளது. இவ்வாறு டாப்ஸி கூறினார்.

ஹன்சிகாவால் சமந்தா கலக்கம்

தமிழ் சினிமா ரசிகர்கள் மட்டுமல் லாமல், ஹீரோக்களா லும் விரும்பப்படும் நடிகை என்ற பெருமை, ஹன்சிகாவுக்கு உண்டு. ஹீரோயின் என்ற பந்தா இல்லாமல், படப் பிடிப்புக்கு, வந்தோம், போனோம் என்று இல்லாமல், முழு ஈடுபாட்டுடனும், திறமையுடனும் நடிப்பதால், இயக்குனர்களாலும், விரும்பப்படும் நடிகையாகி இருக்கிறார், ஹன்சிகா. தனக்கு கிடைத்துள்ள, இந்த பெருமை குறித்து, அவர் அளித்துள்ள ஒரு பேட்டியில்,"எந்த காட்சியாக இருந்தாலும், எனக்கு திருப்தி ஏற்படும் வரை, நடிப்பேன்.
அதற்காக, ஓவர் அக்டிங் செய்ய மாட்டேன். தற்போது வெளியாகி யுள்ள ஒரு படத்தில், சித்தார்த்து டன் ஜோடி சேர்ந்திரு க்கிறேன். சித்தார்த், எனக்கு ரொம்பவும் மெட்ச்சான ஜோடி. படத்தில், எங்களுக்கு இடையேயான கெமிஸ்ட்ரி நன்றாக வந்திருக்கிறது என, கூறியுள்ளார். சித்தார்த்தும், சமந்தாவும், ஏற்கனவே, காதல் வானில் சிறகடித்து பறப்பதாக தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், ஹன்சிகாவின் இந்த அறிவிப்பு, சமந்தாவுக்கு கலக்கத்தை ஏற்படுத்தியிருக்கும்.

காதலிக்காக வேடம் மாறும் ஹீரோ

இயக்குனர் ஆர். ஜெயகாந்தன் கூறியது:- காதலை மையமாக வைத்து உருவாகும் படம் விருதாளம் பட்டு. உயிருக்கு உயிராக காதலிக்கும் ஜோடியை பிரித்து அப் பெண்ணை மணக்க திட்டமிடுகிறான் தாய் மாமன்.
காதலனை கடத்திச் சென்று அடித்து உதைத்து இறந்துவிட்டான் என நினைத்து ரயில் தண்டவாளத்தில் வீசுகிறான். உயிருக்காக போராடிய காதலனை திருநங்கைகள் காப்பாற்றி தங்களைப் போலவே வேடம் அணியச் செய்து காதலியுடன் எப்படி சேர்த்து வைக்கிறார்கள் என்பதே கதை. ‘வசூல்’, ‘வேடப்பன்’, ‘காதல் பயணம்’ போன்ற படங்களில் நடித்த ஹேமந்த் குமார் ஹீரோ.
சானியா ஸ்ரீவஸ்தவா ஹீரோயின். இசை ராம்ஜி. ஒளிப்பதிவு எஸ். வெங்கட். தயாரிப்பு எம். கனகராஜ், கே. எம். வெங்கடாஜலபதி, நடன கலைஞராக பணியாற்றிய நான், இசை அமைப்பாளர் சவுந்தர்யன், உதவி இயக்குனர் செந்தமிழன் ஆகியோரிடம் உதவியாளராகவும் பணியாற்றி உள்ளேன்.

Wednesday, June 12, 2013

மாதவனும் மலர்விழியும்

கிரிஜா புரொட்க்ஷன் சார்பில் எஸ். சரவணன் தயாரிக்கும் படம், ‘மாதவனும் மலர் விழியும்’. அஸ்வின், சிஜா ரோஸ், நீரஜா நடித்துள்ளனர். மாசில் இயக்கி உள்ளார்.
வசந்தமணி இசை அமைந்துள்ளார். இதன் பாடலை தயாரிப்பாளர் கெயார் வெளியிட வி.சி. குகநாதன் பெற்றார். படம் பற்றி இயக்குனர் மாசில் கூறியதாவது:
நாட்டியத்தை மையமாக கொண்ட படம். காதலுக்காக நடனம் கற்கும் ஹீரோ.
மாணவன் காதலுக்காக உயிரைத் தியாகம் செய்யும் மாஸ்டர். இவர்களை அழிக்க வரும் வில்லன்.
இந்த நான்கு பேருக்கும் இடையில் நடக்கும் பிரச்சினைகளும், போராட்டங்களும்தான் கதை.
வெளியில் பிரகாசமாக தெரியும் நாட்டிய கலைஞர்களின் வாழ்க்கை சோகமானது என்பதை சொல்கிறோம். சிஜா ரோஸ் ஆடும் நடனம் பேசப்படுவதாக இருக்கும். ஜான்பாபு நடனம் அமைந்துள்ளார்.

மீண்டும் இணையும் சந்தானம் விசாகா

கண்ணா லட்டு தின்ன ஆசையா’ படத்துக்குப் பிறகு சந்தானம், சேது, விசாகா இணைந்து நடிக்கும் படம், ‘வாலிப ராஜா’ மற்றும் சித்ரா லட்சுமணன். ஜே.பி. தேவதர்ஷினி உட்பட பலர் நடிக்கின்றனர்.
இன்னொரு ஹீரோயினும் நடிக்க இருக்கிறார். ஹெச் முரளி வழங்க வொங்ஸ் விஷன் 1 என்ற நிறுவனம் தயாரிக்கிறது. கே.வி.
ஆனந்திடம் அசோசியேட் இயக்குனராக பணிபுரிந்த சாய் கோகுல் ராம்நாத் இயக்குகிறார். கதை, திரைக்கதை சாய் கோகுல் ராம்நாத், கணேஷ் ராஜ், வசனம் செந்தில்குமார். இசை ரதன். ஒளிப்பதிவு லோக்நாத்.
இவர் மலையாளத்தில் ஹிட்டான ‘உஸ்தாத் ஓட்டல்” படத்துக்கு ஒளிப்பதிவு செய்தவர். படத்தின் டைட்டில் கெரக்டரில் சந்தானம் மனநல மருத்துவராக வருகிறார். காதல் கொமெடியுடன் கூடிய படம்.
எதிர்வரும் 19ம் திகதியில் இருந்து படப்பிடிப்பு தொடங்கி தொடர்ந்து நடக்கிறது” என்று படக்குழுவினர் தெரிவித்தனர்

ஆமா... பீடி பிடிச்சேன்! அதுல என்ன தப்பு?

தமிழில் ‘கொக்கி’, ‘திருவண்ணாமலை’, ‘தலையெழுத்து’ படங்களில் நடித்த பூஜாகாந்தி, தொடர்ந்து இங்கு சரியான வாய்ப்பு கிடைக்காமல் கன்னடத்துக்கு சென்றார். இப்போது அங்கு டொப் ஹீரோயின்களில் ஒருவராக இருக்கிறார்.
தனது 50 வது படத்தை நெருங்கும் அவர் கர்நாடக மீடியாக்களுக்கு செய்திச் சுரங்கம். திடீர் அரசியல் பிரவேசம் அதிரடி பிரசாரம், பாலியல் தொழிலாளிகளுக்கான போராட்டம், திடீரென்று திருமண நிச்சயதார்த்தம், பிறகு அதுவும் முறிந்து போனது என கன்னட தேசத்தின் கொன்ட்ரவர்ஸி ஆர்ட்டிஸ்.
சமீபத்தில் ‘தண்டுபாளையா’ கன்னடப் படத்தில் (தமிழில் ‘கரிமேடு’) டொப்லெஸ் காட்சியில் நடித்து சினிமாவிலும் பட்டையைக் கிளப்பினார். மிக நீண்ட இடைவெளிக்குப் பிறகு சென்னை வந்திருந்த பூஜாகாந்தியிடம் பேசினோம்.... “பெங்காலியில் நான் ஒரு சின்ன படத்துல நடிச்சிருந்ததை பார்த்து என்னைத் தேடி கண்டு பிடிச்சு, ‘கொக்கி’யில் அறிமுகப்படுத்தினார் டைரக்டர் பிரபு சொலமன்.
என்கிட்ட என்ன திறமை இல்லைன்னு, அதுக்குப் பிறகு தமிழ் சினிமா என்னை கைவிட்டதுன்னு தெரியலை. ‘திருவண்ணாமலை’ என்ற கொமர்ஷியல் படத்துலயும் சக்சஸ் பண்ணி காண்பிச்சேன் அதுக்கு பிறகும் வாய்ப்பு வரலை. அதுக்காக சோர்ந்து போயிட முடியுமா என்ன? உடனே கன்னடத்துல முயற்சி பண்ணினேன். ‘முங்காருமலே’ படம் பெரிய ஹிட்டாச்சு. இப்ப 40 படத்தை தாண்டிட்டேன். தெலுங்கு, மலையாளம், இந்தியிலயும் நடிச்சிட்டேன்.
ரிலீசான ‘தண்டுபாளையா’ படம், என்னோட இன்னொரு பரிமாணத்தை காட்டியது. நான் வெறும் கிளாமர் நடிகை இல்லை. படத்துல ஏத்துக்கிட்ட கெரக்டருக்காக உயிரையும் கொடுப்பேன்னு அதுல நிரூபிச்சேன். கன்னட பீல்டில், நான் சரியான துணிச்சல்காரின்னு எனக்கு ஒரு இமேஜ் இருக்கு. அதனால்தான் இயக்குநர் சீனிவாசராஜு, ‘தண்டு பாளையா’ கதையை என்கிட்ட தைரியமா சொன்னார். வேறொரு நடிகைகிட்ட இந்த கதையை சொல்றதுக்கு ரொம்ப தைரியம் வேணும்.
படத்துல, சீனுக்கு சீன் பீடி குடிக்கணும். புருஷனுக்கு எதிர்லயே இன்னொருத்தன் கூட அப்படி இப்படின்னு இருக்கணும். சாராயம் குடிக்கணும். சாராயத்தை பத்து பேர் என் மேல் ஊத்தும் போது, சந்தோஷமா போஸ் கொடுக்கணும். மனசுல பயமே இல்லாம ஒருத்தன் கழுத்தை அறுக்கணும். நடிப்புன்னு இருந்தாலும், இந்த கெரக்டரில் நடிக்கிறதுக்கு என்னை விட்டா யார் இருக்காங்க, சொல்லுங்க? அந்தப் படம் தமிழில் ‘கரிமேடு’ பெயரில் வந்திருக்கு.
இனிமேலாவது என்னோட திறமையை புரிஞ்சிகிட்டு தமிழ் படத்தில் வாய்ப்பு தருவாங்கன்னு நினைக்கிறேன் என்கிறார் நம்பிக்கையுடன் பூஜா காந்தி. திடீர்னு அரசியல் பிரவேசம்? திடீர்னு எல்லாம் கிடையாது.
நான் ரொம்ப நாள் யோசிச்சு எடுத்த முடிவு அது. பாலியல் தொழிலாளிகள், எய்ட்ஸ் நோயாளிகளின் மறு வாழ்வுக்காக என்னால் முடிஞ்ச சில காரியங்களை செய்றேன். இந்த பணியை அதிகப்படுத்தவும், மக்களுக்கு சேவை செய்யவும் அரசியல் ரொம்ப முக்கியம்னு நினைச்சேன். அதனால் சேர்ந்தேன்.
‘தண்டுபாளையா’ லேடி தாதா கெரக்டர், உங்க அரசியல் இமேஜை பாதிக்காதா? சினிமா வேற நிஜம் வேறன்னு ரசிகர்களுக்கு நல்லாவே தெரியும். அதனால் நிஜத்தில் நான் எப்படிப்பட்டவள்ளு ரொம்ப நல்லாவே தெரிஞ்சு வெச்சிருப்பாங்க.
முதல் தேர்தலில் ஜெயிக்கலையே? தேர்தல் என்பது அரசியலில் ஒரு பகுதிதான். அதுவே முடிவு அல்ல. வெற்றி, தோல்வி பற்றி எல்லாம் நான் யோசிக்க மாட்டேன். என்னால் முடிந்த அளவுக்கு மக்களுக்கு சேவை செய்யணும். அதுதான் முக்கியம்.

ஐந்து பல்லவிகளில் முழு பாட்டு

நண்பர்கள் கவனத்திற்கு’, ‘பசங்கன்னா அப்படித்தான்’ போன்ற படங்களில் நடித்த மனிஷா ஜித் அடுத்து நடிக்கும் படம் ‘திறப்பு விழா’.
புதுமுகம் ஜெயானந்த் ஹீரோ. இப்படம் பற்றி இயக்குனர் கே.ஜி. வீரமணி கூறியதாவது, வாலிபன் ஒருவனை மனதார காதலிக்கிறார் மனிஷா.
அவனோ காதலைவிட தனது இலட்சியம்தான். முக்கியம் என்று ஒதுங்கி செல்கிறான். இதை கேட்டு ஷொக் ஆகிறார் மனிஷா, அதிர்ச்சி தரும் அளவுக்கு அந்த வாலிபன் கொண்டிருக்கும் இலட்சியம் என்ன என்பதை படம் விளக்குகிறது.
இப்படத்துக்காக 5 பல்லவிகளை மட்டும் வைத்து முழு பாடல் ஒன்று படமாக்கப்பட்டது. இதை ச. ஞானக்கரவேல் எழுதி உள்ளார். நா. முத்துக்குமார் எழுதிய ‘தட தட தடன்னு ரயில்’, பழனி பாரதி எழுதிய ‘இந்தா இந்தா வாங்கிக்க’ நந்தலாலா எழுதிய ‘பருத்தி பூக்கும்’ போன்ற பாடல்கள் விருத்தாசலம், நெய்வேலி போன்ற இடங்களில் படமாக்கப்பட்டது.
ஆர்.பி. செல்வம் ஒளிப்பதிவு, வசந்தா ரமேஷ் இசை, ஜெரினா பேகம் தயாரிப்பு கதை, வசனம் நிலம்.

சின்னப் பொண்ணு சமாச்சாரம்

இடையில் உங்களுக்கு ஒரு ஆக்சிடென்ட் நடந்ததா கேள்விப்பட்டோம்.... அதுலேருந்து மீண்டு, நீங்க மறுபடி பாட ஆரம்பிச்சது கடவுள் செயல்னு நீங்க கூட ஒரு மேடையில் சொல்லியிருக்கீங்க..... என்னாச்சு ‘2008 ஆம் வருஷம்.... நான் பாடியிருந்த ‘நாக்க மூக்க....’ பாட்டு எக்குத்தப்பா பிரபலமாயிருந்த நேரம்.... நாட்டுப்புறக் கலைஞர்களுக்கான நல வாரிய கூட்டத்துல கலந்துக்கிட்டு, சென்னையிலேயிருந்து கும்பகோணத்துக்குத் திரும்பிக்கிட்டிருந்தோம்.
கணவரோட தம்பிதான் வண்டியை ஓட்டுச்சு. கோவிலாச்சேரில எதிர்ல வந்த கவர்மென்ட்டு பஸ் மோதிடுச்சு. கணவரோட தம்பி ஸ்பாட்லயே இறந்துடுச்சு. என் வீட்டுக்காரருக்கு எந்த அடியும் இல்லை. எனக்கு மண்டை, நெத்தியில பயங்கரமான அடி.... மயக்கமாயிட்டேன்.
கண் விழிச்சுப் பார்த்த பிறகுதான் நடந்த எல்லாம் தெரியும். அத்தனை சோகத்துலேயும் என கவலையெல்லாம் ‘என்னால மறுபடி பழையபடி பாட முடியுமாங்கிறதா இருந்தது. ‘இவங்களை சங்கீதம் இருக்கிற மாதிரியான சூழல்லயே வச்சிருங்கன்னு டாக்டருங்க சொன்னாங்க.
நிறைய பாட்டு கேட்டேன்.... கச்சேரிகளுக்குப் போனேன்.... என் நம்பிக்கை வீணாகலை. பூரணமா குணமாகி, மறுபடி பாட ஆரம்பிச்சேன். புருஷனைப் பறிகொடுத்துட்டு நின்ன என் கணவரோட தம்பி மனைவிக்கு மறுமணம் செய்து வச்சிட்டேன்.
உங்க கணவர், குழந்தைங்க பத்தி சொல்லுங்களேன்.
“கணவர் குமார்... ஆட்டக்கலைஞர். அவர் என்னைக் காதலிச்சதே, என் இசைக்காகத்தான். என்னோட இந்த வளர்ச்சிக்குப் பின்னணியில் நிற்கிறவர் அவர்தான்.
19 வயசுலயே எனக்குக் கல்யாணமாயிடுச்சு. மகள் மோகனா, பி.எஸ்.சி. கம்ப்யூட்டர் சயின்ஸ் படிக்கிறா. மகன் அறிவழகன், பிளஸ் ஒன் படிக்கிறான். பொண்ணு அப்படியே அச்சு அசலா என் குரல்லயே பாடுவா.
கர்நாடக சங்கீதம் கத்துக்கொடுக்கணும்னு ஆசைப்பட்டேன். என் கணவருக்கு விருப்பமில்லை. நமக்குத் தெரியாததை ஏன் அவங்களுக்கு சொல்லித் தரணும்னு கிராமிய இசையைப் படிக்க ஊக்கப்படுத்திட்டிருக்கார்....
சல்மா: யாரோட மியூசிக்ல பாடணும்னு உங்களுக்கு ஆசை?
‘கடவுள் புண்ணியத்துல எல்லா ஜாம்பவான்கள் இசையிலேயும் பாட வாய்ப்புகள் வந்திட்டிருக்கு. வித்யாசாகர் சார் அறிமுகப்படுத்தி வச்சார். அடுத்து ‘மயிலு படத்துல இசைஞானி இசையில பாடற மிகப்பெரிய அதிர்ஷ்டம் கிடைச்சது.
பாட்டைக் கேட்டுட்டு ‘சூப்பர்.... தேங்க் யூன்னு அவர் பாராட்டினது ஆஸ்கார் அவார்டு வாங்கினதுக்கு சமம். அடுத்து ‘ராவணன்’ படத்துல ஏ.ஆர்.ரஹ்மான் சார் மியூசிக்ல பாடிட்டேன்.
யார் கூட சேர்ந்து பாடணும்னு ஆசை?
“எஸ்.பி.பி. சார் கூடவும், யேசுதாஸ் சார் கூடவும் பாடணுங்கிறதுதான் ரொம்ப நாள் கனவு!

உன் கண்ணுக்குளே கன்ன வெச்சு என்ன சுடாத

உன் கண்ணுக்குளே கன்ன வெச்சு என்ன சுடாத
உன் காக்கி சட்ட கொளரதான் தூக்கி விடாத
அடி ஒன்னாம் கிளாஸ் போன்னபோல ரொம்ப பண்ணாத
உன்னைத்தானே தேடி வந்தேன் தள்ளி ஓடாத
ஹே பட்டாம்பூச்சி கிட்ட வந்து வட்டமிட்ட
பாத்து ரசி கட்டம்கட்ட ஆசபடதே
ஹே டெட்டொல் ஊத்தி சுத்தம் செஞ்சே


தேவி ஸ்ரீ பிரசாத்
வெண்ணிலவ நின்னுகிட்டு
என்ன எங்கே ஏதோ செய்யாத
ஹே ஆயிரம் ஆசிய வெச்சிருந்தும் என்ன வாட்டுன
உன் கண்ணுக்குளே கண்ணுக்குளே
கண்ணுக்குளே கன்ன வெச்சு என்ன சுடாத
உன் காக்கி சட்ட கொளரதான் தூக்கி விடாதே
நீ வேகத்துல சிரிச்சாலே Western Music


விவேகா
வெறும் காலில் நடந்தாலே Luck போஒமிக்கு
நீ தூரத்தில் இருந்தாலே காய்ச்சல் மேனிக்கு
அழகே நீ வந்தாலே Energy Tonic

நா பரப்பான கம்புடேற மாரிபோனேனே
உன் கை பட்ட Immediatea Restart ஆவேனே
ஹே Strawberry Babya Robery பண்ண பாக்குற
உன் கண்ணுக்குளே... கண்ணுக்குளே...
உன் கண்ணுக்குளே... கண்ணுக்குளே...
கண்ணுக்குளே கன்ன வெச்சு என்ன சுடாத
ஜாவட் அலி,
ஹே எக்கச்சக அழகோட திரியும் சல்வாரே
உனக்காக வரலாண்டி மூன்றாம் World Ware
உன்னுடைய நடிப்புக்கு தரலாம் Oscare
நீ வைக்கும் இசில் நா மறந்தேன் என் பெற
நீ மூக்கு மேல் கோவப்பட்ட கன்னம் சிவக்கும்
அதில் வானவில்லின் எல்லாம் வரும் வண்ணம் இருக்கும்
பாக்குற பார்வையில் பத்து கிலோ என்ன கூடுற

பிரியா ஹிமாஸ்,
உன் கண்ணுக்குளே கன்ன வெச்சு என்ன சுடாத
உன் காக்கி சட்ட கொளரதான் தூக்கி விடாத
அடி ஒன்னாம் கிளாஸ் போன்னபோல ரொம்ப பண்ணாத
உன்னைத்தானே தேடி வந்தேன் தள்ளி ஓடாத
படம்: சிங்கம் 2
இசை: தேவி ஸ்ரீ பிரசாத்
இயற்றியவர்: விவேகா
பாடியவர்கள்: ஜாவட் அலி, பிரியா ஹிமாஸ், சீமன்

Tuesday, June 11, 2013

இது இறவா குரல்...

சாகாவரம் படைத்த பல்லாயிரம் பாடல்களை தமிழர்களுக்குக் கொடுத்து விட்டு கண்ணை மூடி நம்மையெல்லாம் பிரிந்து சென்று விட்டார் டி. எம். எஸ். அந்த சிம்மக் குரலோனின் பாடல்கள் இன்று உலகெங்கும் உள்ள தமிழர்களை கண்ணீர் வெள்ளத்தில் மூழ்க வைத்துள்ளது.
இது தாண்டா குரல்... இப்படித்தாண்டா பாடனும்... இவன் தாண்டா பாடகன் என்று சொல்லிச் சொல்லிப் பெருமைப்படும் ஒரு அபூர்வக் கலைஞன் டி. எம். எஸ். என்று அனைவராலும் செல்லமாக அழைக்கப்படும் டி.எம். செளந்தரராஜன், பிறப்பால் செளராஷ்டிரர் என்றாலும் கூட ஒட்டுமொத்த தமிழர்களின் உள்ளத்தில் தனி இடம் பிடித்த உண்மையான தமிழன் டி. எம். செளந்தரராஜன், தமிழுக்கும், தமிழ் மொழிக்கும், தமிழ் இசைக்கும் தமிழர்களுக்கும் பெருமை சேர்த்த குரல் டி. எம். எஸ். ஸின் கம்பீரக் குரல்.
பக்தியில் பரவசம்: பக்திப் பாடல்கள் என்றாலும் சரி, சினிமாப் பாடல்கள் என்றாலும் சரி, அந்தந்தப் பாடல்களின் பாவத்தை அப்படியே பிழிந்து தருவதில் டி. எம். எஸ்ஸ¤க்கு நிகர் அவரேதான்.
முருகன் பாடல்களை இவரைப் போல் யாருமே பாடியதில்லை என்று சொல்லும் அளவுக்கு ஒவ்வொரு வீட்டிலும் டி. எம். எஸ். ஸின் முருகன் பாடல்கள் இன்று வரை ஒலித்துக் கொண்டுள்ளன. ஒவ்வொன்றும் பக்தி ரசம்... பக்திப் பரவசம்..
பாச மலர் படத்தில் சிவாஜி கணேசன், சாவித்திரிக்கு நிகராக ஒவ்வொரு ரசிகரையும் அழ வைத்தவர் டி. எம். எஸ். மலர்ந்தும் மலராத... பாடலை இப்போது கேட்டாலும் அழுது விடுகிறோம்.
அப்படி ஒரு அருமையான பாடல் அது. அதைவிட டி. எம். எஸ். அதை ரசித்து, நெகிழ்ந்து, உருகிப் போய்ப் பாடிய பாடல்.. சிவாஜி பாடுகிறாரா, இல்லை டி. எம். எஸ். பாடுகிறாரா என்றே தெரியாத அளவுக்கு கரைந்து போன ஒரு கந்தர்வக் குரல் அது... இந்தப் பாடல் இருக்கும் வரை உங்களை நினைத்து அழுது கொண்டே இருப்பார்கள் தமிழர்கள்....
ஐவ்வாது மேடையிட்டு... சர்க்கரையில் பந்தலிட்டு கேட்க கேட்க போதையூட்டும் பாட்டு இது. அதிலும் டி. எம். எஸ். இந்தப் பாடலுக்கு காட்டிய குரல் பாவமும், வார்த்தைகளை உச்சரித்த விதமும், நிச்சயம் எந்த ஒரு பாடகருக்கும் வராத அசாத்திய திறமை என்பதில் சந்தேகம் இல்லை. இப்படி ஒரு பாடலை இப்போது பாட எந்தப் பாடகனுமே இல்லை என்று அடித்துக் கூறலாம்.
அப்படி ஒரு அசாதாரணமான, அலாதியான பாடல் இது. அமைதியான நதியினிலே ஓடம்.... அப்படியே கண்ணை மூடிக்கொண்டு ராத்திரி நேரத்தில் இந்தப் பாட்டைக் கேட்டுப் பாருங்கள்... எவ்வளவு மன பாரம் இருந்தாலும், மன வேதனை இருந்தாலும், சோகம் இருந்தாலும் அப்படியே பஞ்சு போல பறந்தோடி விடும்... என்ன ஒரு அழகான பாடல். கடவுள் மனிதனாக பிறக்க வேண்டும்.... அவன் காதலித்து வேதனையில் வாடவேண்டும்... இந்தப் பாடலில் ஒரு காதல் தோல்வியின் விரக்தியை அப்படிக் கொடுத்திருப்பார் டி. எம். எஸ். எழுதிய கண்ணதாசனைப் பாராட்டுவதா.... இல்லை குரலில் அத்தனை பாவத்தைக் காட்டி பாடலுக்கு உயிர் கொடுத்த டி. எம். எஸ். ஸின் குரலைப் பாராட்டுவதா...
தமிழர்கள் கொடுத்து வைத்தவர்கள்.
அழகான காதல் பாடல்... கேட்க கேட்க மனசெல்லாம் லேசாகி காற்றில் பறக்கத் தூண்டும்... அப்படி ஒருகாதல் குரல் இதைப் பாடிய டி. எம். எஸ்ஸ¤க்கும், பி. சுசீலாவுக்கும். இன்று வரை நாடி நரம்புப் புடைக்கும், காதல் உணர்வுகளைத் தூண்டும் கலாபப் பாடல்... எழுத எழுத அழுகை வருகிறது. டி. எம். எஸ்.... தமிழ் உலகம் உங்களை நிச்சயம் மறக்க முடியாது.

கடமையின் எல்லை

கடமையின் எல்லை 1966 ஆம் ஆண்டில் திரையிடப்பட்ட ஒரு ஈழத்துத் திரைப்படம் ஆகும். யாழ்ப்பாண ஆசிரியர் பயிற்சி கல்லூரி ஆங்கில விரிவுரையாளரான எம். வேதநாயகத்தினால் தயாரிக்கப்பட்டது. இது ஷேக்ஸ்பியரின் ஹாம்லெட் என்ற ஆங்கில நாடகத்தைத் தழுவி தயாரிக்கப்பட்ட சரித்திரப்படம் ஆகும்.
இத்திரைப்படத்தில் தேவன் அழகக்கோன், எம். உதயகுமார், ஏ. ரகுநாதன், ஜி. நிர்மலா, பொனி ரொபோட்ஸ் முதலானோர் நடித்தார்கள். தயாரிப்பாளர் எம். வேதநாயகம் இத்திரைப்படத்தை இயக்கியதோடு இசையமைப்பையும் பொறுப்பேற்றுக் கொண்டார்.
வித்வான் ஆனந்தராயர், பஸ்தியாம்பிள்ளை, எம். விக்டர் ஆகியோர் திரைக்கதை, வசனம், பாடல்களை எழுதினார்கள். வி. முத்தையா, கமலலோஜனி, அம்பிகா தாமோதரம், புவனேஸ்வரி ஆகியோர் பின்னணி பாடினார்கள். யாழ்ப்பாணம் டச்சுக் கோட்டையைச் சுற்றிய பகுதிகளில் குதிரையோட்டம் முதலான காட்சிகளை எடுத்திருந்தார்கள்.
தயாரிப்பாளர் - இயக்குனரான எம். வேதநாயகம் இத்திரைப்படம் வெளியிடப்படுவதற்கு முன்னரே காலமாகி விட்டார். இத்திரைப்படத்தில் கதாநாயகன் கமலநாதனாக நடித்தவர் இலங்கையில் கராத்தே கலையை பிரபலமடையச் செய்தவரான கிறாண்ட் மாஸ்டர் பொனி ரொபேர்ட்ஸ். மட்டக்களப்பு மாவட்டத்தில் கல்முனையைச் சேர்ந்தவராவார்.
இணை ஒளிப்பதிவாளராக பங்காற்றிய கலைஞர் ஏ. ரி. அரசு (திருநாவுக்கரசு) நடிகர், நிழல் படப்பிடிப்பாளர் என்பதோடு சிறந்த ஒப்பனைக் கலைஞருமாவார்.

புதுமுகங்களுக்கான தேர்வில் விஜயகுமார்

டைரக்டர் ஸ்ரீதர் படத்தில் நடிக்க விரும்பிய விஜயகுமார் அவர் நடத்திய புதுமுகங்களுக்கான தேர்வில் கலந்து கொண்டார். சிவாஜியும், பத்மினியும் நடித்த ‘ஸ்ரீவள்ளி’ படத்தில் பாலமுருகனாக நடித்தாலும் அதற்குப் பிறகு புதிய படங்கள் எதுவும் விஜயகுமாருக்குக் கிடைக்கவில்லை.
இதனால் நாடகங்களில் நடித்தபடி, சினிமா வாய்ப்பை எதிர்நோக்கிக் காத்திருந்தார். நாலைந்து வருடம் இதே நிலை நீடித்தது. ஆனாலும் சோர்ந்து விடாமல் எஸ். வி. எஸ். நாடகக் குழுவில் சேர்ந்து நடித்துக் கொண்டிருந்தார்.
இந்தசமயத்தில் டைரக்டர் ஸ்ரீதரின் “நெஞ்சில் ஓர் ஆலயம்” படம் வந்தது. காதலை புதிய கோணத்தில் அணுகிய காட்சிகள் ஸ்ரீதருக்கு பெரும் புகழைத் தந்ததோடு, படத்தையும் வெற்றிப் பட்டியலில் சேர்த்தது. இந்தப் படம் வெளிவந்த நேரத்தில் வையாபுரி ஜோதிடர் மூலம் விஜயகுமாருக்கு நடிகர் முத்துராமன் அறிமுகமானார்.
முத்துராமன் படங்களில் நடித்து வந்ததோடு நாடகங்களிலும் நடித்தார். அப்போது ‘வடிவேல் வாத்தியார்’ தேரோட்டி மகன் நாடகங்கள் ரசிகர்களை பெரும் அளவில் ஈர்த்தன. முத்துராமன் படங்களில் வளரத் தொடங்கிய நேரமாதலால், அப்போது அவர் நடித்து வந்த இந்த நாடகங்களில் தொடர்ந்து நடிக்க நேரம் கிடைக்காத நிலை அதனால், தான் நடித்து வந்த கேரக்டரில் விஜயகுமாரை நடிக்க வைக்க முத்துராமனே சிபாரிசு செய்தார்.
இதைத் தொடர்ந்து “சுயம்வரம்” என்ற புதிய நாடகத்திலும் விஜயகுமாருக்கு முக்கிய வேடம் கிடைத்தது. இதில் ‘இரவும் பகலும்’ பட நாயகி வசந்தா, காந்திமதி ஆகியோரும் நடித்தார்கள். இரவில் நாடகத்தில் நடிப்பது, காலையில் பட வாயப்புக்கான முயற்சி என்று விஜயகுமார் தீவிரப்பட்டது இந்த சமயத்தில்தான்.
இந்த நேரத்தில்தான் டைரக்டர் ஸ்ரீதர் புதுமுகங்களை அறிமுகப்படுத்துவதில் அதிக அக்கறை காட்டி வந்தார். இதே மாதிரியான எண்ணம் மற்ற டைரக்டர்களுக்கும் இருந்தது. இதனால் டைரக்டர் ஸ்ரீதர், டைரக்டர்கள் ராமண்ணா, பீம்சிங், கே. எஸ். கோபாலகிருஷ்ணன், பி மாதவன் ஆகியோர் ஒன்று சேர்ந்து ‘மூவி மேக்கர்ஸ் கவுன்சில்’ என்ற அமைப்பை உருவாக்கினர்.
இந்த அமைப்பு மூலம் புதுமுகங்களைத் தேர்தெடுத்து படம் தயாரிப்பது அவர்கள் எண்ணம் இதற்காக புதுமுகத் தேர்வும் நடத்தினார்கள். அதில் விஜயகுமாரும் கலந்து கொண்டார். அதுபற்றி அவர் கூறுகிறார்.
டைரக்டர் ஸ்ரீதர் புதுமையை விரும்பினார் துணிச்சலாக தனது படங்களில் புதுமுகங்களை நடிக்க வைத்தார். படத்தையும் வெற்றிப் படமாக்கினார்.
புதுமுகங்களை தேர்ந்தெடுக்க ஸ்ரீதரும் மற்ற டைரக்டர்களும் இணைந்து “மூவி மேக்கர்” கவுன்சில்’ தொடங்கினர். இதுபற்றி பட உலகில் பரபரப்பாக பேசப்பட்டது. ஐந்தாறு வருடங்களாக புதியவர்கள் சினிமாவுக்குள் வர முடியாமல் இருந்த நிலை. இனி மாறும் என நம்பிக்கையும் ஏற்பட்டது.
புதுமுகம் தேர்வு சென்னையில் உள்ள நார்த்போக் ரோட்டில் உள்ள ஒரு மண்டபத்தில் நடந்தது. கட்டுக்கடங்காத கூட்டம். பார்க்கிற முகங்களில் எல்லாம் ‘கதாநாயக’ களை. இந்த அமைப்பில் டைரக்டர் ராமண்ணாவும் இருந்ததால், நிச்சயம் நாம் தேர்வு செய்யப்பட்டு விடுவோம் என்று நம்பினேன்.
இந்த இடத்தில் டைரக்டர் ராமண்ணா பற்றி சொல்லியே ஆகவேண்டும் ‘ஸ்ரீவள்ளி’ படத்திற்குப் பிறகு, நேரம் வரட்டும் நானே கதாநாயகனாக அறிமுகப்படுத்துகிறேன்.” என்று சொல்லியிருந்தார். அதனால் நாடகங்களில் நடித்தாலும் அவ்வப்போது வந்து அவரிடம் ஆஜர் கொடுத்து விடுவேன்.
இந்த மாதிரியான ஒரு வேளையில் அவர் “சொர்க்கத்தில் திருமணம்” என்ற படத்தை இயக்கினார். படத்தின் ஹீரோயின் லதா. என்னை ஹீரோவாக போட ராமண்ணா முடிவு செய்திருந்தார். ஆனாலும் ரவிச்சந்திரனே ஹீரோவாக நடித்தார். இதனால் நான் மனதளவில் உடைந்து போய்விடக் கூடாது என்பதற்காக படத்தில் லதாவை ஒருதலையாக விரும்பும் ஒரு கேரக்டரில் என்னை நடிக்க வைத்தார்.
இப்படி நம் மேலும் அக்கறைப்பட ஒரு டைரக்டர் இருக்கிறார் என்பது இயல்பாகவே ஒரு தைரியத்தை என் மனதிற்குள் ஏற்றி வைத்திருந்தது. தேர்வுக் குழுவில் டைரக்டர் ராமண்ணாவும்இடம் பெற்றிருந்ததால் நிச்சயம் தேர்வாவோம் என்ற நம்பிக்கையும் வலுப்பெற்றது.
என்முறை வந்தபோது, ஏதாவது ஒரு காட்சியை நடித்துக் காட்டச் சொன்னார்கள். நான் அப்போது நடித்துக்கொண்டிருந்த “வடிவேலு வாத்தியார்” நாடகத்தில் நான் நடித்த ஒரு காட்சியை நடித்துக் காட்டினேன்.
ஆயிரக்கணக்கானோர் தேர்வுக்கு வந்த இடத்தில் தேர்வானவர்கள் ஐந்தே ஐந்து பேர்தான் அந்த ஐந்து பேரில் நானும் ஒருவன் ஆம்பூர் பாபு, ‘அலைகள்’ செல்வகுமார் ஆகியோரும் இந்த ஐவர் குழுவில் இடம் பிடித்திருந்தனர்.
ஆனாலும் 2 பேர் மட்டும்தான் அப்போது தேவை என்பதற்காக டைரக்டர்கள் குழு மீண்டும் பரிசீலனை செய்தது. முடிவில் அலைகள் செல்வகுமார், ஆம்பூர் பாபு ஆகியோரை எடுத்துக் கொண்டு மற்ற 3 பேரிடமும் ‘முகவரியைக் கொடுத்து விட்டுப் போகங்கள் பிறகு தகவல் தெரிவிக்கிறோம்” என்றார்கள்.
எனக்குக் கோபம் வந்துவிட்டது. என் மீது அக்கறையுள்ளவர் என்பதால் டைரக்டர் ராமண்ணாவை சந்தித்து என் ஆதங்கத்தை வெளிப்படுத்தினேன்.”என்ன சார் நீங்கள் இருந்தும் எனக்கு இப்படி ஆகிவிட்டதே” என்றேன் வேதனையுடன். நான் இப்படிக் கூறியதும் ராமண்ணாவிடம் இருந்து சிரிப்புதான் பதிலாக வந்தன. “என் வேதனைபுரியாமல் சிரிக்கிaர்களே அண்ணா” என்றேன்.
பதிலுக்கு அவரோ, “இவங்க படம் எதுவும் எடுக்க மாட்டாங்க. நீ ஏன் கவலைப்படுகிறாய்? உனக்கு நான் இருக்கிறேன்” என்றார்.
மூவி மேக்கர்ஸ் கவுசில் பற்றி அவர் சொன்னது உண்மையாயிற்று கடைசி வரை அவர்கள் படமே எடுக்கவில்லை.
இவ்வாறு நடிகர் விஜயகுமார் கூறினார்.

பஸ்ஸில் எஸ். எஸ். ஆருக்கும் சேர்த்து டிக்கெட் எடுத்தவர் எம். ஜி. ஆர்.


பஸ்ஸில் எனக்கும் சேர்த்து டிக்கெட் எடுத்தவர் எம்.ஜி.ஆர் என்று படபடவென்று பழைய நினைவுகளைக் கொட்டினார் ‘லட்சிய நடிகர்’ எஸ். எஸ். ஆர். “எம். ஜி. ஆர். ஆரம்ப காலத்தில் எப்படியிருப்பார் தெரியுமா? தோளைத் தொடும் அளவிற்கு பாகவதர் முடி, கழுத்தில் ருட்ராட்சம், நெற்றியில் விபூதிப்பட்டை, இடுப்பில் காவி கதர் வேட்டி, கதர்ச்சட்டை என்று அந்த கெட் - அப்பே பிரமாதமா இருக்கும்.
அப்போது ‘அசோக்குமார்’ உட்பட சில படங்களில் தியாகராஜ் பாகவதரோடு சின்னச் சின்ன வேடங்களில் நடித்துக் கொண்டி ருந்தார். நான் ‘டி. கே. எஸ். சகோதரர் கள் நாடக சபாவில்’ என். எஸ். கே, எஸ். வி. சுப்பையா, எம். என். ராஜம் போன்றவர்களுடன் நடித்துக் கொண்டிருந்த நேரம். ஒரு நாள் கோவையிலுள்ள சென்ட்ரல் ஸ்டுடியோவிற்கு, நண்பர்களைப் பார்க்க அருகிலுள்ள பஸ் ஸ்டாப்பிலிருந்து ஏறுகிறேன்.
அதே பஸ்ஸில் எம். ஜி. ஆரும் ஏறுகிறார். அவர், கலைஞர், நம்பியார் போன்றோர் அப்போது சென்ட்ரல் ஸ்டுடியோவில் மாச சம்பளத்திற்குப் பணியாற்றுகிறார்கள். எம். ஜி. ஆரைப் பார்த்து விட்டு ‘வணக்கம்’ சொல்கிறேன். அப்போது தான் முதன் முறையாக நாங்கள் பேசுகிறோம். ‘வாங்க தம்பி’ என்று வாஞ்சையாக அழைத்து, எனக்கும் சேர்த்து டிக்கெட் எடுத்தார். ‘பெரிய ஆளா வருவீங்க.....’ என்று வாழ்த்தினார்.

மலர்களைப் போல் தங்கை உறங்குகிறாள்

மலர்களைப் போல் தங்கை உறங்குகிறாள் - அண்ணன்
வாழ வைப்பாள் என்று அமைதி கொண்டாள்
மலர்களைப் போல் தங்கை உறங்குகிறாள் - அண்ணன்
வாழ வைப்பான் என்று அமைதி கொண்டாள்
கலைந்திடும் கனவுகள் அவள் படைத்தாள் - அண்ணன்
கற்பனைத் தேரினில் பறந்து சென்றாள்
கலைந்திடும் கனவுகள் அவள் படைத்தாள் - அண்ணன்
கற்பனைக் தேரினில் பறந்து சென்றான்
மாமணி மாளிகை மாதர்கள் புன்னகை
மங்கல மேடையின் பொன் வண்ணம் கண்டான்
மாமணி மாளிகை மாதர்கள் புன்னகை
மங்கல மேடையின் பொன் வண்ணம் கண்டான்
மாவிலைத் தோரணம் ஆடிடக் கண்டான்
மாவிலை தோரணம் ஆடிடக் கண்டான்
மணமகன் வந்து நின்று மாலை சூடக்கண்டான்
கலைந்திடும் கனவுகள் அவள் படைத்தாள் - அண்ணன்
கற்பனைக் தேரினில் பறந்து சென்றான்
ஆசையின் பாதையில் ஓடிய பெண்மயில்
அன்புடன் காலங்களில் பணிந்திடக் கண்டான்
வாழிய கண்மணி வாழிய என்றான்
வான்மழை போல் கண்கள் நீரில் ஆடக்கண்டான்
கலைந்திடும் கனவுகள் அவள் படைத்தாள் - அண்ணன்
கற்பனைத் தேரினில் பறந்து சென்றான்
பூமணம் கொண்டவள் பால்மணம் கண்டாள்
பொங்கிடும் தாய்மையில் சேயுடன் நின்றாள்
பூமணம் கொண்டவள் பால்மணம் கண்டாள்
பொங்கிடும் தாய்மையில் சேயுடன் நின்றாள்
மாமனைப் பாரடி கண்மணி என்றாள்
மருமகள் கண்கள் தன்னில் மாமன் தெய்வம் கண்டாள்
மலர்களைப் போல தங்கை உறங்குகிறாள் - அண்ணன்
வாழ வைப்பான் என்று அமைதி கொண்டாள்
கலைந்திடும் கனவுகள் அவள் படைத்தாள் - அண்ணன்
கற்பனைத் தேரினில் பறந்து சென்றான்

Wednesday, June 5, 2013

தமிழ் தெரியாததால் வந்த வினை

முனியாண்டி விலங்கியல் மூன்றாம் ஆண்டு படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை பூர்ணா. நடிகர் விஜய்யால் சின்ன அசின் என்று அழைக்கப்பட்டவர் தொடர்ந்து கந்தக்கோட்டை, துரோகி, ஆடு புலி உள்ளிட்ட படங்களில் நடித்தவர். தற்போது கரு பழனியப்பனின் ஜன்னல் ஓரம் உள்ளிட்ட அரை டஜன் படங்களில் நடித்து வருகிறார். அவர் அளித்த சிறப்பு பேட்டி இதோ...
* அப்பப்ப வர்றிங்க போறிங்க திரையுலகில் நிலையான இடத்தை பிடிக்க முடியாதது ஏன்?
நான் சினிமாவுக்கு வந்து ஏழு ஆண்டுகள் ஆகிவிட்டன. ஒரு சில படங்களில் நடித்ததுடன் நடிப்புக்கு முழுக்கு போட்டு விட்டு டான்ஸ் பக்கம் போய் விடலாம் என நினைத்தேன் சினிமா என்னை, ஈர்த்துவிட்டது இப்போது தமிழில் பிசியாகி விட்டேன் நிலையான நடிகைகளின் வரிசையில் நானும் இடம்பிடிப்பேன் என்ற நம்பிக்கை உள்ளது.
* பெரிய ஹீரோக்களுடன் நடிக்காதது ஏன்?
எனக்கே ஒன்றும் புரியவில்லை. ரொம்ப வருத்தமாக இருக்கிறது. எந்த ஆதரவும் இல்லாமல்
சினிமாவுக்கு வந்தேன். முடிந்தவரை நல்ல படங்களில் நடிக்க வேண்டும் அதற்கு இன்னும் நிறைய நேரம் இருக்கிறது. முன்னணி ஹீரோக்களுடன் நடிப்பதில் அவசரம் காட்டவில்லை.
* தமிழில் முதலில் நடித்த அனுபவம் குறித்து?
முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு படத்தில் தான் முதலில் தமிழில் அறிமுகமானேன். மொழி புரியாததால், நடிக்க ரொம்பவே சிரமப்பட்டேன். சில காட்சிகள், ஏழு டேக் வரை போயின. இதை நினைத்து அழுதிருக்கிறேன். ஆனால், இயக்குனர் திருமுருகன் தான், எனக்கு ஆறுதல் கூறி நடிக்க வைத்தார்.
* நடித்ததில் பிடித்தது?
முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு படத்தை, அடிக்கடி போட்டுப் பார்ப்பேன். எனக்கு, ரொம்ப பிடித்த படம் அது. எந்தெந்த காட்சிகளில் நன்றாக நடிக்கவில்லை என்பதை பார்த்து வைத்திருக்கிறேன். இனி, படங்களில் நடிக்கும்போது அந்த குறை வராமல் பார்த்துக்கொள்வேன்.
* எப்படிப்பட்ட கெரக்டர்களில் நடிக்க விரும்புகிaர்கள்?
சின்ன வயதிலிருந்து டான்ஸ் கற்றிருக்கிறேன். நடனத்துக்கு முக்கியத்துவம் உள்ள கெரக்டர்களில் நடிக்க வேண்டும் என்பது என் ஆசை. ஹீரோயின்களை பொறுத்தவரை ஐந்து அல்லது ஆறு ஆண்டுகள் தான், பீல்டில் நிக்க முடியும். ஆனால் ரேவதி, ஷோபனா, சுகாசினி போன்றவர்கள், பல ஆண்டுகளுக்கு பேசப்பட்டனர். அதற்கு அவர்கள் நடித்த கெரக்டர்கள் தான் காரணம். அதேபோன்ற கெரக்டர்களில் நடிக்க விரும்புகிறேன்.
* சினிமாவுக்கு வராமல் இருந்திருந்தா...?
நிஜமா சொல்றேன் டான்ஸ் டீச்சர் ஆகியிருப்பேன். என் கனவே அதுதான் என்றாவது ஒருநாள் நிச்சயம் நான் டான்ஸ் டீச்சர் ஆவேன்.
* ரசிகர்களுக்கு சொல்ல விரும்புவது?
தமிழ் சினிமா எனக்கு தூரத்தில் இருக்கிற மாதிரி தோணுது. இப்ப ஷ¥ட்டிங் எல்லாம் ஐதரபாத்தில் தான். சென்னை மக்கள் இங்குள்ள சாப்பாடு எல்லாத்தையும் ரொம்ப மிஸ் பண்றேன். கூடிய சீக்கிரமே சென்னைக்கு ஷிப்ட் ஆயிடுவேன். என் படங்களுக்கு ரசிகர்களாகிய உங்களது சப்போர்ட் ரொம்ப வேண்டும் மைனஸா இருந்தால் மன்னிச்சிடுங்க சீக்கிரம் ப்ளஸ் ஆக்கிடுறேன். நிறைய செலஞ்சிங் ரோல் பண்ணனும் நல்ல கதையில் நடிக்கணும் எல்லாத்துக்கும் மேல உங்க அன்பு வேண்டும்.

இளம் ஹீரோக்களை மயக்கும் மாது

சூதுகவ்வும் படத்தில் விஜயசேதுபதியின் கற்பனை காதலியாக வந்து சென்றவர் சஞ்சிதா ஷெட்டி. அவர் கண்ணுக்கு மட்டுமே தெரியுமாறு நடித்த அவர், தொடை தெரியும் அரை டவுசர் கொஸ்டியூம் அணிந்தவர், சில காட்சிகளில் சற்று தூக்கலான கிளாமரையும் வெளிப்படுத்தியிருந்தார். அதனால்தான், அவரை அப்படத்தின் ஹீரோயினியாக பப்ளிசிட்டிகளில் கொண்டு வந்தனர்.
அதோடு, படமும் ஓடி விட்டதால், இப்போது கோடம்பாக்கத்தி மினிமம் பட்ஜெட் ஹீரோக்களின் கவனத்துக்கு வந்துவிட்டார் சஞ்சீதா, அதிலும், கதைக்கு கிளாமர் அவசியம் என்று சொல்லிவிட்டால், எள் என்றால் எண்ணெய்யாக நிற்கவும் தயாராயிருகிறாராம் அவர்.
அதனால் பீட்சா படத்தின் இரண்டாம் பாகமாக வில்லா -2 படத்திற்கு கமிட்டாகியிருக்கும் சஞ்சிதா கொமர்சியல் இயக்குநர்களின் கண்கண்ட கதாநாயகியாகி விட்டார். அதனால் தற்போது 3 படங்களுக்கு கதை கேட்டிருக்கும் சஞ்சிதாஷெட்டியின் சம்பளமும் உயரத் தொடங்கியுள்ளது. அதனால் இதுவரை மங்களூரில் இருந்து கொண்டு கொலிவுட்டுக்கு விசிட் அடித்துக் கொண்டிருந்த சஞ்சிதா, இப்போது சென்னையிலேயே முகாமிட்டு படவேட்டை நடத்தி வருகிறார்.



சின்னப் பொண்ணு

* ‘மயிலு’ படத்துல நடிச்சிருக்கீங்க போல....
“முதல்ல அந்தப் படத்துல பாடறதுக்குத்தான் கூப்பிட்டாங்க. பாட்டுக்கு இடையில் சில வசனங்கள் வரும். அதை உச்சரிக்கிறதைக் கேட்டுட்டு அந்த கேரக்டர்ல நீங்களே நடிச்சா நல்லாருக்கும்னு சொல்லிட்டாங்க. ஹீரோயினுக்கு அம்மாவா, படம் முழுக்க வருவேன்.
ப்ரியா: கர்நாடக சங்கீதக் கலைஞர்களுக்கு டிசம்பர் சீசன் மாதிரி, நாட்டுப்புற இசைக்கலைஞர்களுக்கு ஏதாவது சீசன் உண்டா?
“தை பிறந்தால் வழி பிறக்கும்னு எங்களுக்காகவே சொன்னாங்களோ என்னவோ.... தை மாசம் பிறந்துட்டாலே, அடுத்த 6 மாசத்துக்கு திருவிழா, கல்யாணம், கச்சேரின்னு சாப்பாடு, தூக்கம் இல்லாத அளவுக்கு ஓடிக்கிட்டே இருப்போம்!
* இரட்டை அர்த்தம் தொனிக்கிற நாட்டுப்புறப் பாடல்களைப் பாடறப்ப, ஒரு பெண்ணா எப்படி ஃபீல் பண்ணுவீங்க?
“பொதுவா நாட்டுப்புறப் பாடல்கள்ல அப்படி எந்தவிதமான ரெட்டை அர்த்தமும் கிடையாது. கிண்டலும் கேலியும் இருக்குமே தவிர, ஆபாசம் இருக்காது. சினிமாவுல வர்ற கிராமியப் பாடல்கள்ல சில நேரம் ரெட்டை அர்த்தம் கலந்து இருக்கும். வருத்தமாத்தான் இருக்கும். ஆனாலும், ஜனங்க ரசிக்கிறாங்களே.... அப்புறம் நாங்க எப்படிப் பாடமாட்டேன்னு மறுக்க முடியும்?
* மெலடி பாடணும்னு ஆசைப்பட்டதுண்டா?
“ஆசை இருக்கும்மா..... ஆனா, என்னோடது ஓப்பன் வாய்ஸ். மெலடிக்கு பொருந்துமான்னு தெரியலை. ‘சித்ராம்மாவுக்கு ஒரு ‘கோலவிழியம்மா....’ கொடுத்து, அவங்களால் அந்த ஸ்டைலும் பாட முடியும்னு காட்டின மாதிரி, உங்களுக்கு ஒரு மெலடி கொடுத்து, உங்களால் அதுவும் பாட முடியும்னு காட்டறேன் பாருங்க’ன்னு தேவா சார் சொல்லிட்டே இருப்பார். அப்படியொரு வாய்ப்பு வந்தா, பார்ப்போம்.

Tuesday, June 4, 2013

நடிகை மணிமாலாவை காதலித்து மணம் முடித்தவர் வெ.ஆ.மூர்த்தி

பல படங்களில் கதாநாயகியாக நடித்த மணிமாலாவை வெண்ணிற ஆடை மூர்த்தி காதலித்து மணந்தார். கொமெடியில் தன்னை வளர்த்துக்கொண்டிருந்த மூர்த்தி 1965 ஆம் ஆண்டில் நடிகை மணிமாலாவை ஒரு படப்பிடிப்பில் சந்தித்தார். நடிகர் - நடிகை என்ற முறையில் ‘ஹலோ’ சொல்லிக் கொண்டார்கள். அடுத்தடுத்த சந்திப்புகள் யதார்த்தமாய் அமைய நட்பு ஆனது. 5 ஆண்டுகள் தொடர்ந்த இந்த நட்பு திருமணத்தில் முடிந்தது. 1970 ஆம் ஆண்டில் மணிமாலாவை கரம் பற்றினார் மூர்த்தி.

இதுபற்றி வெண்ணிற ஆடை முர்த்தி இப்படிச் சொன்னார்.
‘பலரையும் பார்க்கிறோம். பேசுகிறோம், சிலர்தான் மனதில் நிற்கிறார்கள்.
மணிமாலா அப்போது சினிமாவில் ஹீரோயினாக நடித்துக் கொண்டிருந்தார். இருந்தும் எந்தவித பந்தாவும் இன்றி இருந்தார். அவரிடம் பழக ஆரம்பித்த பின்பு ஒருநாள் ‘இப்படி அம்பும் பண்பும் அமையப் பெற்ற பெண் வாழ்க்கைத் துணையானால் எதிர்காலம் சிறப்பாக இருக்குமே’ என்று தோன்றியது. ஆனாலும் உடனே அதை வெளிப்படுத்தவில்லை. எங்களுக்குள் எந்தவித ‘ஈகோ’வும் இருந்ததில்லை. அதனால் ‘நாம் வாழ்வில் இணைந்தால் நன்றாக இருக்கும்’ என்று நான்தான் என் எண்ணத்தை வெளிப்படுத்தினேன்.
மணிமாலா தரப்பிலும், என் மாதிரியான எண்ண ஓட்டம் இருந்ததால், பழக ஆரம்பித்த 5வது வருடத்தில் எங்கள் திருமணம் இரு குடும்பத்தின் பரிபூரண சம்மதத்துடன் நடந்தது.
திருமணத்துக்கு முன்னதாக எங்கள் நட்பை காதல் வரை வலுப்படுத்த ஒரு சம்பவம் நடந்தது. மதுரையில் நட்சத்திர கிரிக்கெட் நடத்தினார்கள், நடிகர்கள் ஜெமினி கணேஷ், ஸ்ரீராம் வந்தார்கள் நடிகைகளில் மணிமாலா வந்திருந்தார். நானும் கிரிக்கெட் குழுவில் இடம்பெற்றிருந்தேன். அந்த நட்சத்திர டூரில் நாங்கள் மனம் விட்டுப் பேசுவோம்.
நாங்கள் சரளமாக ஆங்கிலத்தில் பேசுவதால் மற்றவர்கள் எங்கள் உரையாடலில் கலந்து கொள்ள மாட்டார்கள். இப்படியாக வளர்ந்த நட்பும் அன்பும் காதலாகி எங்களை நட்சத்திர தம்பதிகளாகவும் ஆக்கியது.
திருமணத்துக்குப் பிறகு மணிமாலா படங்களில் நடிக்காமல் குடும்பத்தை மட்டுமே நிர்வகித்து வந்தார். எங்களுக்கு ‘மனோ’ என்று ஒரே மகன் என்ஜினீயரிங் முடித்த மனோ இப்போது திருமணமாகி குடும்பத்துடன் அமெரிக்காவில் உள்ள சான்பிரான்ஸிஸ்கோவில் பணியில் இருக்கிறான். மனோ மூலம் எங்களுக்கு ஒரு பேரக் குழந்தையும் உண்டு.
மனோவின் மனைவி சபிதா, கம்ப்பியூட்டர் என்ஜினியர். அதோடு பரத நாட்டியமும் தெரிந்தவள். நடனப்பள்ளி நடத்திக்கொண்டு வேலையையும் தொடர்கிறார்.
மகன் மனோவைப் பொறுத்தமட்டில் எனது நல்ல நண்பன். அப்பா - மகன் மாதிரி இல்லாமல் நண்பர்களாக அத்தனை விஷயங்களையும் பரிமாறிக்கொள்வோம். நான் கிழித்த கோட்டை இப்பவும் கூட மனோ தாண்டமாட்டான். பள்ளியிலும், கல்லூரியிலும் படிக்கிறபோது கூட ஒரு சின்ன தப்புகூட அவனைப் பற்றி வந்தது கிடையாது. அதனால் அவனை நான் கண்டிக்கிறதுக்கான வாய்ப்பு கடைசி வரைக்கும் வந்தது கிடையாது. கேட்க ஆச்சரியமாக இருக்கும். கோபத்துக்காக அவன் மேல் என் விரல்கூட பட்டது இல்லை. படிக்கிற சமயங்களில் வீட்டுக்கு வர தாமதமானால்கூட உடனே போன் பண்ணி ‘இப்ப இந்த இடத்துல இருக்கிறேன். இவ்வளவு நேரத்தில் வந்துடுவேன்’ என்று சொல்லிவிடுவான். இதனால் அவன் பத்தின ஒரு சின்ன டென்ஷன்கூட எனக்கும், மணிமாலாவுக்கும் ஒருபோதும் இருந்ததில்லை.
மனோ அமெரிக்காவில் செட்டிலாகி விட்டதால், வருடத்தில் 3 மாதம் அவனோட தங்கி விட்டு வருவோம். சமீபத்தில் இப்படி போயிருந்தப்ப என்னிடம், ‘அப்பா அடுத்த ஜென்மத்திலும் நான் உனக்கே பையனா பொறக்கணும்ப்பா’. என்றான் எனக்கு மனசு நெகிழ்ந்து விட்டது ‘அடுத்த ஜென்மம்னு மட்டுமில்லப்பா எல்லா ஜென்மத்திலும் நாங்களே உனக்கு பெற்றோரா அமையணும்’ என்றேன். நான் இப்படிச் சொன்னபோது அவனும் கண் கலங்கிவிட்டான்.
திருமணத்துக்குப் பிறகு நடிக்காமல் இருந்த மணிமாலாவை டைரக்டர் கே. பாலசந்தர் ‘சிந்து பைரவி’ படத்தில் நடிக்க அழைத்தார். அந்த அழைப்பை தட்ட முடியாமல் மணிமாலா நடிச்சாங்க. படத்தில் சுஹாசினிக்கு அம்மாவா வாற கேரக்டர். அதுல நடிச்சதுக்கு அப்புறமா பாலச்சந்தரின் ‘சஹானா’ சீரியலிலும் நடிச்சாங்க இப்ப நடிச்சது போதும் என்கிற மன நிறைவோட என்னோட கலைப்பணிக்கு உதவியா இருக்கிறாங்க’
இவ்வாறு வெண்ணிற ஆடை மூர்த்தி கூறினார்.
மற்ற நகைச்சுவை நடிகர்களை விடவும் மூர்த்திக்கு ஒரு நடிப்புச் சிறப்பு உண்டு. தமிழ் சினிமாவில் காமெடியில் ஒவ்வொரு காலகட்டத்திலும் கோலோச்சிக் கொண்டிருந்த நாகேஷ், தேங்காய் சீனிவாசன், சோ, சுருளிராஜன், ஓய். ஜி. மகேந்திரன், எஸ். எஸ். சந்திரன், கவுண்டமணி, செந்தில், வடிவேலு, விவேக் என அத்தனை பேருடனும் வெண்ணிற ஆடை மூர்த்தி காமெடி நடிப்பைத் தொடர்ந்து வந்திருக்கிறார்.
வைஜயந்தி மாலா நடித்த ‘வாழ்க்கை’யில் அவருக்கு ஜோடியாக நடித்த பிரபல நடிகர் டி. ஆர். ராமச்சந்திரனுடன் சேர்ந்து ‘எல்லைக்கோடு’ படத்தில் காமெடி செய்திருக்கிறார்.
நடிகவேள் எம். ஆர். ராதா வில்லன், குணச்சித்திர நடிகர், காமெடியன் என மூன்று
ஜி>டைரக்டர் ஸ்ரீதர் டைரக்டராக இருந்த காலகட்டத்தில் ‘சித்ராலயா’ என்ற சினிமா பத்திரிகையையும் நடத்தி வந்தார். மூர்த்தியிடம் நகைச்சுவை ஆற்றலுடன் இணைந்திருந்த எழுத்தாற்றலையும் ஸ்ரீதர் தெரிந்து கொண்டார்.
இதனால் சித்ராலயா பத்திரிகையின் உதவி ஆசிரியராகவும் பணியாற்றியபடி நடிப்பை தொடர்ந்தார் மூர்த்தி. 3 வருடத்திற்கு பிறகு அந்தப் பத்திரிகை நிறுத்தப்பட்டு விட்டது. இதைத் தொடர்ந்து சினிமாவில் முழு நேர நடிகரானார் மூர்த்தி.
வெண்ணிற ஆடை மூர்த்தியின் காமெடி வசனங்களில் இரட்டை அர்த்தம் தொனிக்கிறது என்று திரையுலகில் ஒரு கருத்து நிலவியது. அதுபற்றி அவர் கூறியதாவது :-
‘தமிழ் செழிப்பான மொழி ஒரு வார்த்தையில் ஏழெட்டு அர்த்தம்கூட வரும் ஏற்றி இறக்கிச் சொல்லும்போது ஒரு அர்த்தம் வந்தால், நிறுத்தி நிதானமாகச் சொல்லும்போது இன்னொரு அர்த்தம் வரும். ஒரு வீட்டுபுரோக்கரிடம் ஒருத்தர் வாடகைக்கு வீடு கேட்கிறார்.
‘எப்படி பார்க்கிறது? பட்செட் சொல்லுங்க’ என்கிறார், புரோக்கர் ‘சின்ன வீடா’ இருந்தாக்கூட பரவாயில்லை என்கிறார், வீடு கேட்டவர் அவர் ‘சின்னவீடு’ என்பதை தனதுபட்ஜெட் அடிப்படையில் சொன்னார் இதுவே ‘சின்ன வீடு’ என்று வேறு அர்த்தமும் கொண்டு வருகிறதில்லையா?
அதுமாதிரிதான் என் ஜோக்கிலும் நானாக எதையாவது பேசப்போக அதுவாக வேறொரு அர்த்தமும் வந்து உட்கார்ந்து கொள்கிறது. ஜன்னல் வழியாக வானத்தை எட்டிப் பார்த்தால் அதில் அழகான நிலவையும் நட்சத்திரங்களையும் காணமுடியும். கீழே எட்டிப்பார்த்தால் ரோட்டில் போகிற பன்றிகள், பூச்சிகள் கூட கண்ணில் பட்டுத் தொலைக்கும் நாம் பார்க்கும் பார்வையில்தான் வித்தியாசம் எல்லாமே’
இவ்வாறு கூறினார் வெண்ணிற ஆடை மூர்த்தி.

நடிக்கும் ஆசையில் (தஞ்சா) ஊரில் இருந்து ரயில் ஏறிய விஜயகுமார்!

சினிமாவில் நடித்தே தீருவது என்ற உறுதியுடன் இருந்ததால் விஜயகுமார் சினிமாவில் நடிப்பதற்கு தந்தை அனுமதி அளித்தார். நடிக்கும் ஆசையில் ஊரில் இருந்து ரயில் ஏறிய விஜயகுமார், சென்னை வந்து பெட்டிக்கடை வைத்திருக்கிற அண்ணனை சந்தித்தார். அண்ணனுக்கு இவரைப் பார்த்ததும் அதிர்ச்சி.

இதுபற்றி விஜயகுமார் கூறியதாவது :-
‘எந்தவித தகவலும் இல்லாமல் தன்னந்தனியாய் தஞ்சையில் இருந்து சென்னைக்கு வந்து அண்ணனை பார்த்ததும் அவருக்கு தூக்கிவாரிப் போட்டது ‘என்னப்பா திடீர்னு?’ என்று அதிர்ச்சி விலகாமல் கேட்டார்.
அண்ணன் கேட்ட தோரணையிலேயே எனது சென்னை விஜயம் அவருக்குப் பிடிக்கவில்லை என்பது புரிந்து போயிற்று. நடிக்கும் ஆர்வத்தில் சென்னைக்கு வந்ததாக கூறினால், மறுநிமிடமே ஊருக்கு அனுப்பி வைத்துவிடுவர் என்று தோன்றியது. இதனால் ஊரை சுற்றிப் பார்க்க வந்தேன் என்று பொய் சொல்லி சமாளித்து விட்டேன்.
ஆனாலும் அண்ணனிடம் நாலைந்து நாட்களுக்கு மேல் இருக்க முடியவில்லை. அண்ணன் கடையில் சுப்பாராவ் என்பவர் வேலை பார்த்தார். அந்த சின்னக் கடையில் ஒரே நேரத்தில் 2 பேருக்கு மேல் நிற்க முடியாது என்றாலும் தங்கும் ஆசையில் ‘பீடா’ தயாரிக்க கற்றுக்கொடுக்கும் படி கடைசியில் இருந்த சுப்பாராவிடம் கேட்டேன்.
அவர் கற்றுக் கொடுப்பதற்குள் அண்ணன் என்னைப் புரிந்து கொண்டு, புது டிரெஸ், ஷ¤ எல்லாம் வாங்கிக் கொடுத்து ஊருக்கு ரெயிலேற்றி விட்டுவிட்டார்.
ஒரு வாரம் கூட ஆகவில்லை போன வேகத்தில் திரும்பி வந்த என்னை அப்பா ஆச்சரியமாக பார்த்தார். அப்பா எனது சென்னைப் பயணம் உடனடியாக முடிந்து போனது பற்றி கேட்டபோது ‘மறுபடியும் சென்னைக்குப் போய் நடிக்கும் முயற்சியை தொடங்கப் போகிறேன்’ என்றேன்.
இப்போது அப்பா என்னிடம் ‘சென்னையில் உனக்குத் தெரிந்தது உன் அண்ணன் மட்டும்தானே இது மாதிரி ஏதாவது ஏடாகூடம் பண்ணி வைக்கக்கூடாது என்பதற்காகத்தானே உன்னை உடனடியாக ஊருக்கு அனுப்பி வைத்துவிட்டான்’ என்றார்.
இப்போது அப்பாவிடம் கொஞ்சம் தைரியமாக வாய் திறந்தேன் ‘சென்னையில் எனக்குத் தெரிந்த இன்னொருவர் இருக்கிறார் அவரது அறையில் தங்கிக்கொண்டு சினிமாவுக்கும் முயற்சிப்பேன்’ என்றேன்.
என் பிடிவாதமும், அதில் நிலைத்து நின்ற உறுதியும் அப்பாவுக்கு பிடித்திருக்க வேண்டும் என் விருப்பத்துக்கு பச்சைக் கொடி காட்டினார். ‘சரி சரி மாதம் உனக்கு நான் எவ்வளவு பணம் அனுப்பி வைக்க வேண்டும்?’ என்று கேட்டார்.
‘மாதம் மூன்னூறு ரூபாய் அனுப்பினால் போதும்’ என்றேன். மூன்னூறு ரூபாய் என்பது அப்போது கொஞ்சம் பெரிய தொகைதான் ஏனென்றால் தஞ்சையில் இருந்து சென்னை வர ரயில் கட்டணமே 7 ரூபாய்தான்!
நான் தெளிவாக சொல்லி விட்டபிறகு அப்பா எந்த குறுக்கீடும் செய்யவில்லை. ‘போய் முயற்சி பண்ணு உன் ஆசை அதுதான் என்றால், அதிலேயே தீவிரமாக முயற்சி செய்’ என்று என்னை சென்னைக்கு அனுப்பி வைத்தார், அப்பா’ இவ்வாறு விஜயகுமார் கூறினார்.
இப்படியாக இரண்டாவது முறையும் சென்னை வந்த விஜயகுமாருக்கு, சுப்பாராவ் தங்கியிருந்த மைலாப்பூரு அப்பு முதலி தெருவில் இருந்தது அறை அடைக்கலம் கொடுத்தது. தம்பி வந்தது அண்ணனுக்கும் தெரிந்து போயிற்று. இதற்குள் தம்பியின் நோக்கம் அப்பாவால் ‘தபால்’ மூலம் அண்ணனுக்கு விளக்கப்பட்டுவிட, அண்ணன் தரப்பிலும் எதிர்ப்பில்லை.
சுப்பாராவின் முயற்சியில் விஜயகுமாருக்கு முதலில் அமைந்தது நாடகத்தில் நடிக்கும் வாய்ப்புதான். அது பற்றி விஜயகுமார் விவரிக்கிறார்.
‘அப்போது ஆர். எஸ். மனோகர் நாடகம் பிரபலம். அவரிடம் நடித்துக் கொண்டிருந்த சரோஜா பிரிந்துபோய் ‘சரோஜ் நாடக தியேட்டர்’ ஆர்பித்தார். இந்த கம்பெனியின் மனேஜர் மகாதேவ அய்யரிடம் சுப்பாராவ் என்னை சிபார்சு செய்தார். என்னிடம் ஒன்றிரண்டு கேள்விகளை கேட்ட மகாதேவ் அய்யர் அப்போது தயாராக இருந்த ‘ராமபக்தி’ நாடகத்தில் எனக்கு நடிக்க வாய்ப்பு தந்தார்.
அதுவும் முதல் நாடகத்திலேயே எனக்கு இரட்டை வேடம் நாடகத்தின் தொடக்கத்தில் பிள்ளையார் வேடம், முடியும் போது மகாவிஷ்ணு வேடம். நாடக ஒத்திகைகள் மளமளவென நடந்தன. இதற்குள் சுப்பாராவுடன் நான் தங்கியிருந்த மேன்சனில் ஒன்றிரெண்டு பேர் நண்பர்கள் ஆனார்கள். நான் நடிக்கப் போகும் விஷயத்தை அவர்களிடம் சொல்லியிருந்தேன்.
நாடகத்தின் முதல் நாள் காட்சி தொடங்கிவிருக்கிறது. என்னைத் தவிர மற்ற எல்லாருக்கும் ‘மேக்கப் போட்டுக்கொண்டிருக்கிறார்கள் ஒரு கட்டம் வரை பொறுத்துப் பார்த்த நான், ‘எனக்கு மேக்கப் போடவில்லையே’ என்று கேட்டுவிட்டேன். கேட்டதுதான் தாமதம், விநாயகர் கவசத்தை என் தலையில் மாட்டி நாடக அரங்கில் உட்கார வைத்து விட்டார்கள். கையில் ஒரு எழுத்தாணியும் கொடுத்திருந்தார்கள்.
நாடக கட்சிக்கான திரை விலகியதும், விநாயகரான நான் எழுத்தாணியால் எழுதுகிற காட்சிதான் ரசிகர்களுக்கு தெரியும்.
நாடக இடைவேளை வந்தபோது மேன்ஷன் நண்பர்கள் என்னை வந்து பார்த்தார்கள். அவர்களிடம், >(ளிlழி கவசம் போட்டபடி விநாயகராக வந்தது நான்தான் என்று சொன்னதை அவர்கள் நம்பவில்லை அந்த நாடகத்தில் கடைசியில் நான் ஏற்றிருந்த ‘மகா விஷ்ணு’ வேடம் தான் அவர்களை நம்ப வைத்தது.’
இவ்வாறு கூறினார் விஜயகுமார்.
18 வயதில் நாடகம் மூலம் நடிகராக வெளிப்பட்ட நடிகர் விஜயகுமாருக்கு சினிமா வாய்ப்பு ஏற்படக் காரணமாக இருந்தவர் ஒரு ஜோதிடர். அதுபற்றி விஜயகுமார் கூறுகிறார்.
‘நான் நாடகங்களில் நடித்து வந்த நேரத்தில் கும்பகோணம் வையாபுரி ஜோசியர் எனக்கு அறிமுகமானார். இவர் டைரக்டர்கள் கே. எஸ். கோபலகிருஷ்ணன், மல்லியம் ராஜ்கோபால் போன்றவர்களுக்கு ஆஸ்தான ஜோதிடராக இருந்தார்.
இவரது நட்பு எனக்கு கிடைத்தபோது அவருடன் தொடர்பு வைத்திருந்த எல்லா சினிமா கம்பெனிகளுக்கும் என்னையும் அழைத்துப் போனார். அப்படி அழைத்துப்போன போது டைரக்டர் ராமண்ணா எனக்கு அறிமுகமானார் என் நடிப்பு ஆர்வம் ஜோதிடர் மூலமாக அவருக்கு சொல்லப்பட்டதும் அவர், ‘இப்போது சிவாஜி பத்மினி நடித்து படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கும் ‘ஸ்ரீவள்ளி’ படத்தில் சின்ன வயது முருகனாக நடிக்க ஒரு இளைஞர் தேவைதான்’ என்றவர் அந்த வாய்ப்பை எனக்கு வழங்கினார் இந்த வகையில் படத்தின் பெரிய முருகன் சிவாஜி சின்ன முருகன் நான். 1961 ல் வெளியான இந்தப் படம்தான் தமிழில் தயாரான முதல் கலர் படம்.
இந்தப் படம் வந்தபோது, ஒரே நாளில் எங்கள் சொந்த ஊரான ‘நாட்டுச்சாலை’ முழுக்க பிரபலமாகி விட்டேன் என்றார்.
விஜயகுமார் படத்தில் நடித்துவிட்ட போதிலும், தொடர்ந்து வாய்ப்புக்கள் வரவில்லை. அதற்குக் காரணம் அவரது 18 வயதுப் பருவம்தான் சிறுவனாகவும் இல்லாமல் இளைஞனாகவும் இல்லாத அந்த இரண்டும் கெட்டான் வயதில் இருந்து விஜயகுமாரிடம் ‘கொஞ்சம் பொறுமையாக இருங்கள் கதாநாயகன் வாய்ப்பை நானே தருகிறேன்’ என்று டைரக்டர் ராமண்ணா கூறினார். அதன்படி விஜயகுமார் பொறுமையுடன் காத்திருந்தார். ஒரு ஆண்டோ, இரண்டு ஆண்டோ அல்ல, ஐந்து ஆண்டுகள்!