Tuesday, March 26, 2013

பத்திரிகையாளராக அஞ்சலி

அங்காடித் தெரு அஞ்சலிக்கு, தமிழிலும், தெலுங்கிலும் மார்க்கெட் ரொம்பவும் ஸ்டெடியாகவே இருக்கிறது.
புதிது, புதிதாக எத்தனை நடிகைகள் வந்தாலும், ‘கனமான வேடமா கூப்பிடு அஞ்சலியை என, தயாரிப்பாளர்கள் கூறும் அளவுக்கு, அஞ்சலிக்கென செல்வாக்கு இருக்கத்தான் செய்கிறது. இடையிடையே கிளாமர் நகைச்சுவை படங்களிலும் நடித்து வருகிறார்.
தற்போது வெளியாகியுள்ள ‘வத்திக்குச்சி’ படத்தில் நடுத்தர குடும்ப பெண்ணாக நடித்துள்ள அஞ்சலிக்கு, ஆர்யாவுடன் அடுத்து நடிக்கும் ‘சேட்டை’ படத்தில் பத்திரிகையாளர் வேடமாம். சக்தி என்ற பவர்புல்லான கேரக்டரில், அந்த படத்தில் நடித்து வருகிறார்.
இந்தப்படத்தில், தன் நடிப்பு இயல்பாக இருக்க வேண்டும் என்பதற்காக மீடியா துறையில் உள்ளவர்களின் நடவடிக்கைகள் எப்படி இருக்கும் என்பதை கவனிக்க துவங்கியுள்ளாராம். அஞ்சலி குறிப்

ஹொலிவுட் இயக்குனர் படத்தில் அனுஷ்கா

ஜுராசிக் பார்க், சின்ட்லர்ஸ் லிஸ்ட் உள்ளிட்ட பிரமாண்ட படங்களை இயக்கி ஹொலிவுட்டை வியக்க வைத்தவர் ஸ்டீபன் ஸ்பீல்பெர்க் இவர், அடுத்ததாக, இந்தியா பாக். பிரச்சினையை மையமாக வைத்து ஒரு படத்தை இயக்கப் போகிறார். இதற்காக லொகேஷன் பார்ப்பதற்காகவும் மற்ற பணிகளுக்காகவும் சமீபத்தில் இந்தியா வந்திருந்தார். இதை மையமாக வைத்து பொலிவுட்டில் பல தகவல்கள் உலா வருகின்றன.
தன் புதிய படத்துக்கு நடிகர்களை தேர்வு செய்யவதற்காக தான் ஸ்பீல்பெர்க் இந்தியா வந்ததாகவும், அதில் பொலிவுட்டின் சில முன்னணி நட்சத்திரங்கள் நடிக்கவுள்ள தாகவும், செய்திகள் வெளியாகியுள்ளன. அதிலும், ‘பாட்டியாலா ஹவுஸ், ஜாப் டக் ஹை ஜான் உள்ளிட்ட படங்களில் நடித்து பொலிவுட் ரசிகர்களின் பேராதரவை பெற்றுள்ள, அனுஷ்கா சர்மாவை, தன் படத்தில் ஹீரோயினாக ஸ்பீல்பெர்க் புக் செய்து விட்டதாகவும் கூறப்படுகிறது. அனுஷ்காவிடம் இது குறித்து கேட்டால், வாய் திறக்க மறுக்கிறார் மெளனம் சம்மதத்துக்கு அறிகுறியா....?

சமகாலத்தில் இரு மொழிகளில் தயாரிக்கப்பட்ட படம்

அனுராகம் 1978ல் வெளியான ஈழத்துத் தமிழ்த் திரைப்படம். சமகாலத்தில் தமிழ், சிங்களம் ஆகியஇரண்டு மொழிகளிலும் ஒரே கதையைப் படமாக்கும் வரிசையில் இது முதல் முயற்சியாகும். இத்திரைப்படத்தை தயாரித்து இயக்கிய யசபாலித்த நாணயக்கார என்பவரே இதே போல் இரண்டு மொழிகளிலும் படமாக்கிய “நாடு போற்ற வாழ்க” திரைப்படத்தையும் இயக்கியவர்.
என். சிவராம், எஸ். விஸ்வநாதராஜா, சந்திரகலா, எஸ். என். தனரட்னம் முதலியோர் நடித்த இத்திரைப்படத்தின் கதை, வசனத்தை எழுதியதோடு உதவி இயக்குனராகவும் பி. எஸ். நாகலிங்கம் பணியாற்றினார். இந்த படத்தில் இடம்பெற்ற பாடல்களை ஈழத்து ரத்தினம் எழுத அவற்றை முத்தழகு, கலாவதி இருவரும் பாடினார்கள். சரத் தசநாயக்க இசையமைத்தார்.
இதே கதையை சமகாலத்தில் ‘கீதிகா’ என்ற பெயரில் சிங்களப் படமாக தயாரித்தார்கள். தமிழ்ப் படத்தில் சிவராம் – சந்திரகலா நடித்த பிரதான பாத்திரங்களில் சிங்களப் படத்தில் விஜய குமாரணதுங்கவும் மாலினி பொன்சேகாவும் நடித்தார்கள்.
இயக்குனர் யசபாலித்த நாணயக்கார, இடதுசாரி அரசியல்வாதியான வாசுதேவ நாணயக்காரவின் உடன் பிறந்த சகோதரர் ஆவார். ஈழத்து ரத்தினம் இயற்றிய பாடல் – முத்தழகு பாடியது – ‘எண்ணங்களாலே இறைவன் தானே, பொன் வண்ணத்தாலே வரைந்துவிட்டானே’ என்று ஆரம்பிக்கும் பாடல் பலரைக் கவர்ந்தது.
இந்தப் படத்தில் என். சிவராம், சந்திரகலா, அனோஜா, எஸ். என். தனரட்னம், எஸ். விஸ்வநாதராஜா, டொன் பொஸ்கோ, செல்வம் பெர்னாண்டோ ஆகியோர் நடித்தார்கள்.

கடன் தொல்லையால் வீடு கை நழுவும்போது எழுதிய பாடல்

கவிஞர் கண்ணதாசன்
ஒரு சமயம் பீம்சிங் இயக்கத்தில் கவிஞர் கண்ணதாசன் பாவமன்னிப்பு படத்திற்காக பாடல் எழுத அமர்ந்திருந்தார். அவருக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது.
அவர் அந்த தொலைபேசி அழைப்பில் பேசி விட்டு அமர்ந்தார். எம். எஸ். வி. நம் கவிஞரின் முகத்தை பார்த்தவுடன் ஏதோ ஒன்று நடந்து இருக்கிறது என்பதை உணர்ந்தார். பாடலுக்கான சூழ்நிலையை இயக்குநர் சொல்லிக்கொண்டு இருந்தார். கவிஞரின் முகம் வாடி இருந்ததை உணர்ந்த எம். எஸ். டி. என்ன கவிஞரே ஏதாவது பிரச்சினையா என்று கேட்டார். அதற்கு நம் கவிஞர் சிரித்துக்கொண்டே ஒன்றும் இல்லை என்று பதில் அளித்தார்.
கதையையும் சூழ்நிலையையும் கேட்டவுடன் பாடலை எழுதி முடித்து பணத்தை பெற்றுக்கொண்டு அவசரமாக கிளம்பினார். எம். எஸ். வி. தன்னுடைய காரில் அவரை இறக்கிவிட்டு மறுபடியும் கேட்டார் என்ன ஏதாவது பிரச்சினையா என்று. அப்போது நடந்தவற்றையெல்லாம் எம். எஸ். வி. யிடம் சொன்னார் நம் கவிஞர்.
அவருக்கு வந்த தொலைபேசி அழைப்பில் கடன் தொல்லையால் அவருடைய வீட்டை ஏலத்தில் விட நோட்டீஸ் வந்திருப்பதாகவும் வீட்டு பொருட்களை எடுத்துக்கொண்டு போகுமாறு சொல்லியிருக்கிறார்கள். இந்த சூழ்நிலையில் எப்படி ஒருவரால் சிந்திக்க முடியும் ஆனால் கவிஞரோ வழக்கம் போல தன் நிலையை இந்தப் பாடலில் எழுதியிருப்பார்.
சிலர் சிரிப்பார் சிலர் அழுவார்
நான் சிரித்துக்கொண்டே அழுகின்றேன்
சிலர் அழுவார் சிலர் சிரிப்பார்
நான் அழுதுகொண்டே சிரிக்கின்றேன்
காலம் ஒருநாள் மாறும்
நம் கவலைகள் யாவும் தீரும்
வருவதை எண்ணி சிரிக்கின்றேன்
வந்ததை எண்ணி அழுகின்றேன்
படம்- பாவ மன்னிப்பு
இந்தப் பாடல் வரிகளில் மிக சிறப்பானது ‘வந்ததை எண்ணி அழுகின்றேன்’ என்பது அவருக்கு வந்த பிரச்சினையும் வருவதை எண்ணி சிரிக்கின்றேன்’ என்பது இந்தப் பாடல் எழுதியதால் வரக்கூடிய பணத்தையும் நினைத்து எழுதிய வரிகள். இந்தப் பாடலால் வந்த பணத்தை வைத்து அந்த வீட்டு பிரச்சினையில் இருந்து வெளிவந்தார். இவ்வாறு ஒவ்வொரு பாடலிலும் தன் வாழ்க்கையை எழுதியவர் கவிஞர் கண்ணதாசன்.

திருமணத்திற்கு முதல் நாளே திருமண போட்டோ கொடுத்த ரஜனி

ரஜனிகாந்த் திருமணத்துக்கு முதல் நாளே திருமண போட்டோவை கொடுத்தார். திருமணத்துக்கு ஒரு நாள் முன்பு பத்திரிகையாளர்களை தன் வீட்டுக்கே அழைத்தார். ‘நாளைக்கு காலைல திருப்பதியில் எனக்கும் லதாவுக்கும் திருமணம். இது காதல் திருமணம். ஆனால் யாரும் வர வேண்டாம்....’ என்று கூறிவிட்டு, தானும் லதாவும் திருமணக் கோலத்தில் இருக்கும் படத்தைக் கொடுத்தார்.
ஆடம்பர திருமணம் வேண்டாம்.... தனது பிறந்த நாளைக் கூட பெரிதாகக் கொண்டாட விரும்பாதவர் ரஜினி. லதாவை காதலித்து, கைப்பிடிக்க முடிவு செய்தபோது, அந்தத் திருமணம் மிக எளிமையாக, பெரிய கூட்டம் ஏதுமில்லாமல் நடக்க வேண்டும் என்றே விரும்பினார்.
எனவே திருப்பதியில் திருமணத்தை வைத்திருந்தார். கணவருக்காக எதையும் செய்யும் லதா.... கணவர் ரஜினி உடல்நலம் குன்றியிருந்தபோது, லதா ரஜினி செய்தவை அவரது மன உறுதி மற்றும் நெருக்கடியை சமாளிக்கும் திறமையைக் காட்டியது. கணவர் உடல் நலம் தேறி வந்ததும் திருப்பதிக்குப் போய் முடி காணிக்கை செலுத்தியது நினைவிருக்கலாம்.

கிழக்கு வாசல் படப்பிடிப்பின்போது அடுத்தடுத்து விபத்துக்கள்

கிழக்கு வாசல் படப்பிடிப்பின் போது அடுத்தடுத்து விபத்துக்கள் ஏற்பட்டன. மண்டை உடைந்து 1 1/2 மாதம் நினைவு இழந்து ‘கோமா’வில் இருந்த டைரக்டர் ஆர். வி. உதயகுமார் அதிசயமாக உயிர் பிழைத்தார்.
இதுபற்றி உதயகுமார் கூறியதாவது:-
‘கிழக்கு வாசல்’ படப்பிடிப்பையும் “உறுதி மொழி’ படப்பிடிப்பையும் ஒரே நேரத்தில் இரவும் பகலுமாக நடத்தினேன். அப்போது பேக்கடிக்கு எங்களுடன் சிவாஜி சார் குடும்பத்துடன் வந்து தங்கினார். எங்கள் அனைவருக்கும் அவரது கையாலேயே அயிரைமீன் குழம்பு சமையல் செய்து பரிமாறினார். அதை இன்றைக்கும் மறக்கமுடியாது.
கிழக்கு வாசல் படப்பிடிப்பு முழுவதுமே தொடர்ந்து விபத்துக்கள் நடந்தன. ஒருநாள் படப்பிடிப்பு நடந்து கொண்டு இருந்த போது, திடீர் என்று செட் தீப்பிடித்து எரிந்தது. அதை அணைத்து விட்டு சூட்டிங்கை நடத்தினோம்.
படத்திற்கு கதை வசனம் எழுதிய மதுவுக்கு, தீவிபத்தைப் பார்த்ததும் வலிப்பு வந்துவிட்டது. உடனே அவரை ஆஸ்பத்திரியில் கொண்டு சேர்த்துவிட்டு நடிகை சுலக்சனாவை வைத்து படப்பிடிப்பை நடத்தினோம். அவர் நடிக்கத் தொடங்கியதும், அவரது மூக்கில் இருந்து ரத்தம் வடிந்தது. உண்மையாகவே ரத்தம் வருகிறது என்பது தெரியாமல், ‘இந்த சீனில இரத்தம் கிடையாதே’ என்றேன்! பின்னர் அவரையும் ஆஸ்பத்திரியில் கொண்டு சேர்த்தோம்.
‘கிழக்கு வாசல்’ படத்தின் கிளைமாக்ஸ் காட்சியை மட்டும் எடுக்க வேண்டி இருந்தது. நான் ஆனைமலையில் இருந்து பொள்ளாச்சிக்கு சென்று கொண்டு இருந்தேன். அந்தச் சமயம் என் கல்லூரி நன்பர்களைச் சந்திக்க நேர்ந்தது. அவர்களை என்னை தங்களது காரில் ஏற்றிக் கொண்டனர்.
நாங்கள் சென்று கொண்டு இருந்த போது கார் விபத்து ஏற்பட்டு கார் 13 முறை உருண்டது. எனது உதவியாளர் மணிகண்டன் உதவி டைரக்டர் தரணி ஆகியோர் என்னை ஆஸ்பத்திரிக்கு எடுத்துச் சென்றனர். எனது மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது. நான் நினைவு இழந்தேன்.
நான் உயிர் பிழைப்பேனா என்பதே சந்தேகமாகிவிட்டது. சுற்றிலும் என்ன நடக்கிறது என்றே தெரியாமல் 1 1/2 மாதம் ‘கோமா’வில் கிடந்தேன். இந்த சமயத்தில்தான் இந்த உலகம் எப்படிப்பட்டது என்பதை அறிந்து கொண்டேன். டைரக்ட் செய்வதற்காக எனக்கு அட்வான்ஸ் கொடுத்திருந்த சில பட அதிபர்கள், ஆஸ்பத்திரிக்கு வந்து அட்வான்ஸ் பணத்தைத் திருப்பி வாங்கிச் சென்றார்கள். நான் பிழைக்கமாட்டேன் என்று அவர்கள் நினைத்துவிட்டனர்.
டாக்டர்களின் தீவிர சிகிச்சையாலும், என் மனைவியின் மாங்கல்ய பலத்தாலும் அதிசயமாக உயிர் பிழைத்தேன். கொஞ்சம் குணம் அடைந்ததும், ‘கிழக்கு வாசல்’ படத்தின் கிளைமாக்ஸ் காட்சியை எடுத்து படத்தை முடிக்க ஏற்பாடு செய்தேன். சிலர் உங்களுக்கு இன்னும் பூரண குணம் ஆகவில்லை. ஏன் ரிஸ்க் எடுக்கிaர்கள்? வேறு யாரையாவது வைத்து கிளைமாக்ஸ் காட்சியை எடுத்து விடலாம்’ என்று யோசனை கூறினார்கள்.
‘உயிரே போனாலும் சரி நான்தான் கிளைமாக்ஸ் காட்சியை எடுப்பேன்’ என்று கூறிவிட்டு காதிலும் மூக்கிலும் பஞ்சை வைத்துக்கொண்டு உச்சகட்டக் காட்சியைப் படமாக்கினேன்.
இதுபற்றிக் கேள்விப்பட்டு ரஜினிகாந்த் ஆச்சரியப்பட்டார்.
‘கிழக்கு வாசல்’ படம் வெற்றிகரமாக ஓடி 175வது நாள் விழாவைக் கொண்டாடியது. அதில் ரஜினிகாந்த் கலந்து கொண்டார். அவர் பேசுகையில் ‘உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த போதிலும், படத்தின் கிளைமாக்ஸ் காட்சியை எடுத்திருக்கிறார் உதயகுமார். இது மாதிரி ஆட்கள் இருப்பதால்தான் சினிமாத் தொழில் இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கிறது என்றார்.
பிறகு ‘தயவு செய்து உங்கள் படத்தில் எனக்கு ஒரு வாய்ப்புக் கொடுங்கள்’ என்றார். நான் திகைத்துப் போய்விட்டேன். ‘நீங்கள் சான்ஸ் கேட்கும் நிலையில் இருக்கிறேன்’ என்று கூறி, என் கடிகாரத்தைக் கழற்றி ரஜினியின் கையில் கட்டிவிட்டேன்.
நான் அவர் மீது கொண்டிருந்த பாசம், அவர் என மீது கொண்ட அன்பு ஆகியவை காரணமாகத்தான், பிற்காலத்தில் எஜமான் படத்தில் நாங்கள் இருவரும் சேர்ந்து பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது.

பத்மபூஷன் விருதை ஜானகி புறக்கணித்தது தவறு

ஜேசுதாஸ்
கடந்த சில மாதங்களுக்கு முன்பு மத்திய அரசு பின்னணி பாடகி எஸ். ஜானகிக்கு பத்மபூஷன் விருது அறிவித்தது. ‘உரிய காலத்தில் தனக்கு அங்கீகாரம் வழங்கப்படவில்லை. இது காலம் தாழ்த்திய விருது’ என்று அதனை வாங்க மறுத்துவிட்டார். இதுகுறித்து தற்போது பின்னணி பாடகர் ஜேசுதாஸ் கருத்து கூறியிருக்கிறார்.
அவர் கூறியிருப்பதாவது :-
ஜனாகி அம்மா மேல் எனக்கு பெரிய மரியாதை உண்டு. சின்ன சின்ன ஆட்களுக்கு முன்னாடியே கொடுத்துட்டு நமக்கு தாமதமா தர்றாங்களே என்கிற அவுங்க கோபத்துல நியாயம் இருக்கு. ஆனால் அதைவெளிக்காட்டிக்காம விருதை வாங்கியிருக்கணும். ஏன்னா பெரிய ராஜ்யத்திலேருந்து கிடைக்கும் கெளரவமான விருது.
நான் 7 முறை தேசிய விருதுகள் வாங்கியிருக்கிறேன். எனக்கு அதோட விதிமுறைகள் தெரியும் விருதுக்கு தேர்வான பிறகு உங்களுக்கு இதை வாங்கிக்க சம்மதமான்னு கேட்பாங்க அப்படி ஜனாகி அம்மாவிட்டேயும் நிச்சயம் கேட்டிருப்பாங்க அப்பவே மறுத்திருக்கலாம். நாம் பாட வரும்போது அவார்ட் கொடுப்பானங்கன்னு பாட வரலை தட்சிணாமூர்த்தி சாமிக்கு 94 வயசாகுது. இசையில் பெரிய ஜாம்பவான். மேதை அவருக்கு ஒரு அவார்ட்கூட கொடுக்கல அதற்காக அவரது திறமையை யாராவது குறைச்சி மதிப்பிட முடியுமா.
இவ்வாற ஜேசுதாஸ் கூறியுள்ளார்.

Sunday, March 24, 2013

சித்தார்த் சமந்தா தரிசனத்தால் பரபரப்பு

தமிழில் நான் ஈ படத்தில் நடித்தவர் சமந்தா. அதேபோல் 'போய்ஸ்' படம்மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர் சித்தார்த். இருவரும் கடந்த சனிக்கிழமை பகல் 11 மணியளவில் ஸ்ரீ காள்ஹஸ்தி சிவன் கோவிலுக்கு தங்களின் பெற்றோருடன் ஜோடியாக வந்து சாமி தரிசனம் செய்தனர்.
அவர்களுக்கு, கோவில் அதிகாரிகள் சிறப்பு தரிசன ஏற்பாடுகளைச் செய்தனர். இருவரும் ராகு- கேது பூஜையில் ஜோடியாக அமர்ந்து பூஜை செய்தனர். அவர்களுக்கு கோவில் நிர்வாகம் சார்பில் லட்டு, பிரசாதம், சுவாமி படம் ஆகியவை வழங்கப்பட்டன. பொன்னாடை போர்த்தி இருவரும் கெளரவிக்கப்பட்டனர்.
அதைத் தொடர்ந்து அவர்கள் சாமி தரிசனம் செய்துவிட்டு வெளியே வந்தனர். அந்த நேரத்தில் நடிகர் சித்தார்த்தின் தந்தை சூர்யபிரகாசுக்கு திடீரென உடல் நல குறைவு ஏற்பட்டு கோவில் வளாகத்திலேயே மயக்கம் அடைந்தார்.
உடனே அங்கிருந்த அர்ச்சகர்கள் அவரை மீட்டு, முதலுதவி செய்தனர். பின்னர் கோவில் அம்புலன்ஸ் மூலம் மேல் சிகிச்சைக்காக திருப்பதி தனியார் மருத்துவமனைக்கு சூரியபிரகாஷ் அனுப்பி வைக்கப்பட்டார்.
கோவிலில் இருந்து வெளியே வந்த நடிகர் சித்தார்த் நடிகை சமந்தாவை புகைப்பட கலைஞர்கள், நிருபர்கள் பேட்டி எடுக்க முயன்றனர். ஆனால் அவர்களை நடிகர் சித்தார்த் கடுமையாக சாடினார்.
ரசிகர்கள் மத்தியில் பரபரப்பு காதல் சம்பந்தமாக சமீபத்தில் ஊடகம் ஒன்றில் பேட்டி அளித்த நடிகை சமந்தா 'நான் ஒரு இளம் நடிகரை காதலிக்கிறேன். ஆனால் அவரின் பெயரைச் சொல்ல மாட்டேன் என்று கூறியிருந்தார். அந்தப் போட்டியில் அவரின் காதல் விஷயம் வெளியே பரவத் தொடங்கியது.
இதுபற்றி ரசிகர்கள் மத்தியிலும், சினிமா வட்டாரங்களிலும் பரபரப்பாகப் பேசப்பட்டது. இந்த நிலையில் நடிகை சமந்தாவும், நடிகர் சித்தார்த்தும் ஒரே நேரத்தில் பெற்றோருடன் ஜோடியாக வந்து ஸ்ரீ காளஹஸ்தி சிவன் கோவிலில் சாமி தரிசனம் செய்தது. ரசிகர்கள் மத்தியிலும், சினிமா வட்டாரங்களிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சேலையில் ஆபாசம் பிரியாமணி ஆவேசம்;;

சண்டி படத்தில் திருமண காட்சிக்காக சேலைதான் உடுத்தி நடிக்கிறேன். இதுதான் ஆபாசமா? என்று பொங்கி எழுந்துள்ளார் பிரியாமணி. ஆந்திராவில் உள்ள மல்காஜ்கிரி நீதிமன்றத்தில் நடிகைகள் அனுஷ்¡, பிரியாமணி இருவர் மீதும் வழக்கு தொடர்ந்துள்ள சமூக ஆர்வலர் சுபுத்தா, 'ஆந்திராவில் சமீபத்தில் வெளியான தெலுங்குப் படங்களில் அனுஷ்காவும், பிரியாமணியும் படு கவர்ச்சியான உடைகள், முக்கால்வாசி நிர்வாணம் என்று ஆபாச ரேஞ்சில் நடித்துள்ளனர்.
நடிப்பு என்ற பெயரில் இவர்களின் இப்படிப்பட்ட அதிரடிக் கவர்ச்சி ஆபாசமாக இருப்பதால் இதைப் பார்க்கும் இளைஞர்களை சமூகத்தில் தவறான திசைக்குத் திருப்பும் பெண்களை தவறான கண்ணோட்டத்தில் பார்க்க வைக்கும்' என்று குற்றம் சாட்டியிருந்தார். இந்த விவகாரம் மீடியாக்களில் வெளியாகிவிடவே, பிரியாமணியை சந்தித்த செய்தியாளர்கள் பலர், 'நீங்க லேட்டஸ்ட்டாக நடிக்கும் படத்தின் ஸ்டில்ஸ்கள் எங்கே கிடைக்கும்?' என்று விசாரித்திருக்கிறார்கள் உடனே பொங்கிய பிரியாமணி 'சண்டி' படத்தில் நான் ஆபாச உடை அணிந்து நடிப்பதாக புகார் கொடுத்தவருக்கு எப்படி தெரியும்? இன்னும் இதன் ஷ¥ட்டிங்கே தொடங்கவில்லை.
இந்த பட ஷ¥ட்டிங்கின் போது ரிலாக்ஸ்ட்டாக நான் இருந்தபோது யாரோ எடுத்த படங்கள் வெளியே உலாவின அதை பார்த்துவிட்டு இந்த புகார் கூறப்பட்டுள்ளது. ஆச்சரியமாக இருக்கிறது. படத்தில் ஆபாச உடை அணிந்திருக்கிறேன் என்று கூறுபவர் அதற்கான ஆதாரம் எதையாவது காட்ட முடியுமா? படத்தில் இடம்பெறும் காட்சியில்தான் ஆபாசமாக இருக்கக்கூடாது திருமண காட்சியில் ஒருவேளை நான் நீச்சல் உடை அணிந்திருந்தால் ஆபாசம்தான். ஆனா இப்படத்தில் திருமண காட்சிக்காக சேலைதான் உடுத்தி நடிக்கிறேன்.
இது ஆபாசமா? தெலுங்கில் நிறைய படங்களில் நடித்துவிட்டேன். ஆனால் யாரும் இதுவரை நான் ஆபாச உடை அணிந்தேன் என்று புகார் கூறியதில்லை. உடை அணிவதற்கான எந்த விதிமுறையையும் நான் மீறியதில்லை. சில விளம்பர படங்கள் உண்மையிலேயே ஆபாசமாக இருக்கிறது. அதுபோன்ற காட்சிகள் மீது ஆட்சேபம் தெரிவித்தால் நியாயமிருக்கும்' என்று பொரிந்து தள்ளிவிட்டார். யார் சொல்வதில் உண்மை இருக்கிறது என்று படம் வரட்டும் பார்க்கலாம்.

9 தாராவுக்கு 5

அழகு தேவதை நயன்தாராவிற்கு இப்பொழுது நியூமராலஜியில் அதிக நம்பிக்கை வந்துள்ளதாம். பெயரில் 9 இருந்தாலும் அவரது அதிர்ஷ்ட என் 5 ஆம். முன்பு சிம்புவுடனும் பிரபுதேவாவுடனும் பரபரப்பாக செய்திகளில் வலம் வந்தநயன்தாரா பின்பு இருவராலுமே அதிக மனக்கஷ்டத்திற்கு உள்ளானது அனைவரும் அறிந்ததே.
வாழ்க்கையில் துன்பம் வரும் வேளையில் மனிதர்களுக்கு ஜோசியம் மீது அதீத நம்பிக்கை வருவது சகஜமே. நயன்தாராவும் அதற்கு விதி விலக்கல்ல. தற்போது நியூமராலஜியில் அதிக நம்பிக்கை பிறந்துள்ளதாம் நயன்தாராவுக்கு. அவரது அதிர்ஷ்ட எண் 5 ஆம் இதையடுத்து தனது வண்டியின் பதிவு எண்களாக 5ன் கூட்டுத்தொகை வருமாறு பார்த்துக்கொள்கிறாராம்.
பொதுவாக நியூமராலஜியில் 5 ஆம் எண் என்பது பெற்றியின் எண்ணாக சொல்லப்ப்டடாலும் கொந்தளிப்பையும் ஏற்ற இறக்கத்தையும் தரும் குணமும் அந்த எண்ணிற்கு உண்டாம். நயன்தாராவுக்கு என்ன கொந்தளிப்பு ஏற்படப் போகிறதோ.

தாயின் தாலாட்டை விட தந்தை எழுதிய ஆரிராரோ வரி தந்தது சுகமான உறக்கம்

கவிஞர் கண்ணதாசனின் மகள் விசாலி
ஒரு பாட்டுக்கான சூழலை (கண்ணதாசனிடம்) அப்பாவிடம் விவரித்திருக்கிறார் டைரக்டர் (கண்ணதாசனிடம்) நாயகி ஸ்ரீதேவி குழந்தைத் தனத்துடன் இருப்பது மாதிரி கதை என்று நாயகியின் சில காட்சிகளை சொல்லியிருக்கிறார்.
அதில் கமலின் காதை பிடித்து திருகும் ஸ்ரீதேவியின் காட்சியை சொன்னபோது, ‘அட, என் மகள் சாலா மாதிரியே இருக்குதே இந்த கேரக்டர், சாலா இப்படித்தான் என்காதை பிடிச்சு திருகிக்கிட்டு இருக்கும்’ என்று சொன்ன அப்பா, கடகடவென அந்தப் பாட்டை எழுதிக் கொடுத்திருக்கிறார்.
அந்தப் பாடலை எழுதுவதற்கு முன்பு அதாவது அமெரிக்காவிற்கு சிகிச்சைக்காக கிளம்பும் சமயத்தில் என்னைப் பற்றி அம்மாகிட்ட ‘நான் திரும்பி வரமாட்டேன். நீ சாலாவ பத்திரமா பாத்துக்க’ன்னு சொல்லியிருக்காங்க அப்பா. அப்படிச் சொல்லிவிட்டு கிளம்பி போகும்போதுதான் அந்த குழந்தைத்தனமான நாயகி சூழலை சொல்ல பாட்டு எழுதியிருக்கிறார்.
அந்தப் பாடலுக்கு யார் எப்படி வேண்டுமானாலும் அர்த்தம் எடுத்துக் கொள்ளட்டும். ஆனால், அது எனக்காக என் அப்பா எழுதிய பாட்டு ‘நானே அந்தப் பாட்டை சூழ்நிலைக்கு தக்க மாற்றி நினைத்துக் கொள்வேன்.
‘அந்திப் பகல் உனை நான் பார்க்கிறேன் ஆண்டவனை இதைத்தான் கேட்கிறேன்’ என்று அந்திம காலத்தில் சிகிச்சைக்காக கிளம்பும் இந்த பகலில் உன்னை கடைசியாக பார்க்கிறேன். திரும்பி வருவேன் என்று நம்பிக்கையில்லை. ஆண்டவனே இனி நீ பார்த்துக் கொள், என்று எழுதியிருப்பதாக நினைத்துக் கொள்கிறேன்.
நினைவு தெரிந்த நாள் முதல் எனக்கும் தூக்கம் வராத பொழுதுகளில் அப்பாவின் இந்த பாட்டுதான் எனக்கு தலாட்டு. சின்ன வயதில் நான் தூக்கம் வராமல் அழுது கொண்டிருந்தால் ‘இரு அப்பாவ தாலாட்டு பாடச் சொல்லுகிறேன்’ என்று சொல்லிவிட்டு அந்த பாடலை காற்றில் மிதக்க விடுவாங்க அம்மா. இரவும் பகலும் உன்னை பார்த்துக்கிட்டு இருக்காங்க என்று அம்மா சொல்லுவாங்க.
அம்மா பாடும் தாலாட்டை விட அந்தப் பாடலில் வரும் ஆரிராரோ ஓ ராரிராரோ வரிகள்தான் என்னை சுகமாய் தூங்க வைக்கும் என்று சொல்லிவிட்டு இந்தப் பாட்டு எனக்காக எழுதுன பாட்டுதான் இல்ல எனக்காக எழுதுன பாட்டுன்னு சகோதரரிடம் சண்டையிட்ட அனுபவத்தையும் அந்த சகோதரரும் இப்போது இல்லை என்று சொன்ன போது விசாலியின் வார்த்தைகளில் கனத்த சுமை இருந்தது.
அப்பாவோட பதினான்கு பிள்ளைகளில் (ஒன்பது ஆண்மக்கள் - ஐந்து பெண்மக்கள்) கலைவாணன் அண்ணாதான் என் கூட ஒட்டினான். மற்ற யாரும் என் கூட ஒட்டல்ல.
அவனும் நானும் ஒரு நாள் பேசிக் கொண்டிருந்த போது கண்ணே கலைமானே பாட்டில் கலை என்று வருகிறது. அதனால் இது அப்பா எனக்காக எழுதிய பாட்டு என்றான். நான் மறுத்து எனக்காக எழுதிய பாட்டு என்று வாதிட்டேன். அவன் கடைசி வரை ஒப்புக் கொள்ளவேயில்லை.
இந்த பாட்டு யாருக்காக எழுதினேன்னு அப்பாகிட்ட கேட்க அப்பாகிட்டேயே போயிட்டான். அவன் சாகக் கூடிய வயதில்ல. எமனுக்கு இது தெரியல, ரத்த உறவுன்னு இருந்த ஒண்ணும்போச்சு.
கலை அண்ணா இருந்திருந்தா சினிமாவில் பெரும் இயக்குநரா வந்திருப்பான் என்ற சுமை மிகுந்த வார்த்தையை விசாலி வெளிப்படுத்திக் கொண்டிருந்த போது அவரது எட்டு வயது மகன் விஷ்வா குடுகுடுன்னு ஓடி வந்து காதில் சிசுகிசுத்து ஏதோ கேட்க, ஆமாம் தாத்தாதான் என்று சிரித்தார்.

ஜமுனாராணிக்கு மானப்பிரச்சினையான பாடல்

கவர்ச்சிப் பாடல்களில் கலக்கிய ஜமுனாராணிக்கு மகாதேவி படத்தில் காமுகர் நெஞ்சில் நீதியில்லை அவருக்கு தாய் என்றும் தாரம் என்றும் பேதமில்லை என்ற உருக்கமான பாடலை ஜமுனாராணி நன்றாகப் பாடுவார் என கவியரசு கூறினார்.
மெல்லிசை மன்னர் எம்.எஸ். விஸ்வநாதனுக்கு சந்தேகம் ஏற்பட்டது. உருக்கமான பாடலை ஜமுனாராணியால் பாட முடியாது. கவர்ச்சிப் பாடல்களுக்குத்தான் அவரின் குரல் பொருந்தும் என எம்.எஸ்.வி. அடித்துக் கூறினார்.
மகா தேவி படத்தின் கதாநாயகன் எம்.ஜி.ஆர், நாயகி சாவித்திரி, சாவித்திரிக்கான அப்பாடல் மிகவும் உருக்கமாக எழுதப்பட்டது. அனைவரும் ஒப்புக்கொண்டாலும் கதாநாயகன் எம்.ஜி.ஆரும் ஒப்புதலளிக்க வேண்டும்.
\இவை எல்லாவற்றையும் மனதில் கொண்டே ஜமுனாராணி வேண்டாம் என்றார் எம்.எஸ். விஸ்வநாதன். ஆனால் கவியரசு விடாப்பிடியாக இருந்தார். இந்தக் குரல் சரிவரவில்லை என்றால் கால் iட் செலவை நான் தருகிறேன் என்றார். அந்தப் பாடலைப் பாட ஜமுனாராணிக்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டது.
ஒலிப்பதிவு ஒத்திகையின் போது மெல்லிசை மன்னர் வெளியேறிவிட்டார். அவருடைய இணை பிரியா நண்பர் ராமமூர்த்தி பாடலைப் பற்றி ஜமுனாராணிக்கு விளக்கம் கொடுத்தார்., இந்தப் பாட்டை உணர்ச்சிபூர்வமாக உருக்கமாகப் பாடினால் தான் உனக்கு வேறு பாடல்களும் கிடைக்கும். இல்லையென்றால் உன்னை செக்ஸ் பாடகியாகத்தான் வைத்திருப்பார்கள்.
இது என்னுடைய மானப்பிரச்சினை. நன்றாகப் பாடு என கவியரசர் ஆலோசனை கூறினார். ஜமுனாராணி பாடிய பாடலைக் கேட்ட எம்.எஸ். விஸ்வநாதன் திகைத்து விட்டார். பாடல் மனதைப் பிசைந்தது. உன்னை தப்பா நினைச்சிட்டோம்மா நன்றாக பாடியிருக்கிறாய். ஆனா வார்த்தை இன்னும் சுத்தமாக இருக்க வேண்டும் எனக் கூறினார் எம்.எஸ். விஸ்வநாதன்.

பேட்டி காண வந்த கல்லூரி மாணவி மீது காதல் கொண்டவர் ரஜினி


ரஜினிகாந்த்தின் மனைவி லதா, கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த போது (1980) ரஜனியைப் பேட்டி காண வந்தார். அவரிடம் மனதைப் பரிகொடுத்த ரஜினி ‘உன்னைப் போல் பெண் கிடைத்தால் திருமணம் செய்து கொள்வேன்’ என்றார்.
ரஜினி, புகழின் சிகரத்தை நோக்கிப் பயணம் செய்து கொண்டிருந்த நேரம். அவருக்குப் பெண் ரசிகைகள் ஏராளம். அவருடைய ஸ்டைலில் மனதைப் பறிகொடுத்த பெண்கள்- குறிப்பாக கல்லூரி மாணவிகள் அவருக்கு காதல் கடிதங்கள் எழுதுவார்கள்.
தினம் தினம் இப்படி நூற்றுக்கணக்கான கடிதங்கள் வந்து குவியும். ரஜினியுடன் நடித்த நடிகைகள் சிலரும், ரஜினியை மணக்க விரும்பினர். ஆனால் ரஜினியின் மனதில் காதல் மலரவில்லை. அவர் மனதை எந்தப் பெண்ணும் கவரவில்லை.
ரஜினி 30வது வயதில் அடியெடுத்து வைத்த போது, மன்மதனின் மலர்க்கணை அவர் மீது பாய்ந்தது. 1980ம்ஆண்டு மத்தியில் கே. பாலச்சந்தர் இயக்கத்தில் கலாகேந்திரா நிறுவனத்தின் தில்லு முல்லு படம் உருவாகிக் கொண்டிருந்தது.
இந்தப்படத்தின் படிப்பிடிப்பு நடிகை செளகார் ஜானகியின் வீட்டில் நடந்து கொண்டிருந்த போது எத்திராஜ் கல்லூரி மாணவிகள் சிலர் அங்கு வந்தனர். அவர்களில் லதாவும் ஒருவர். கல்லூரியின் சிறப்பிதழுக்கு பேட்டி காண வந்திருப்பதாக ரஜினியிடம் கூறினார். பேட்டிக்கு ரஜினி சம்மதித்தார்.
லதா தமிழிலும், ஆங்கிலத்திலும் சரமாரியாகக் கேள்விகள் கேட்டார். அவற்றுக்கெல்லாம் சளைக்காமல் தன் பாணியில் பதில் சொன்னார் ரஜினி. லதாவின் அழகும், புத்திசாலித்தனமும் ரஜினியைக் கவர்ந்தன. அந்த நிமிடமே ரஜினியின் இதயத்தில் லதா குடியேறிவிட்டார்.
உங்கள் திருமணம் எப்போது? என்று லதா கேட்க குடும்பப்பாங்கான பெண் கிடைக்கும்போது என் திருமணம் நடைபெறும் என்று ரஜினி பதில் அளித்தார். விளக்கமாகச் சொல்லுங்கள் என்று லதா கேட்க, ‘உங்களை மாதிரி பெண் கிடைத்தால் நான் திருமணம் செய்து கொள்வேன்’ என்று ரஜினி பதிலளித்தார்.
அதாவது தன் காதலை மறைமுகமாக வெளிப்படுத்தினார். நடிகர் வை. ஜி. மகேந்திரனின் மனைவியின் தங்கைதான் லதா. மகேந்திரனும் ரஜினியும் நண்பர்கள். எனவே லதாவைப் பார்த்ததற்கு மறுநாள் மகேந்திரனிடம் நான் லதாவை மணந்துகொள்ள விரும்புகிறேன்’ என்று ரஜினி கூறினார்.
ரஜினி யாரைக் குறிப்பிடுகிறார் என்பது மகேந்திரனுக்கு சட்டென்று புரியவில்லை. எம். ஜி. ஆருடன் படங்களில் நடித்துவரும் லதாவைக் குறிப்பிடுகிறாரோ என்று நினைத்தார். என்னப்பா லதா உனக்கு சீனியர் நடிகை. எம். ஜி. ஆரோடு எல்லாம் நடித்தவர். அவரையா நீ காதலிக்கிறாய்? என்று கேட்டார்.
நான் கூறுவது நடிகை லதாவை அல்ல. உன் மைத்துனி லதாவைத்தான் கூறுகிறேன் என்றார் ரஜினி. ஒரு நிமிடம் திகைத்து நின்ற மகேந்திரன், சரி இது பற்றி என் குடும்பத்தாருடன் பேசுகிறேன் நல்லது நடக்கும் என்றார்.
லதாவை ரஜனி மணக்க விரும்புவதை தன் மனைவியிடமும், குடும்பத்து பெரியவர்களிடமும் மகேந்திரன் தெரிவித்தார். எல்லோருக்கும் மிகுந்த மகிழ்ச்சி லதாவும் சம்மதம் தெரிவித்தார். ஆனாலும் இதை ரகசியமாக வைத்திருந்தார்கள்.
இந்த நிலையில், ரஜினிகாந்துக்கு விரைவில் திருமணம் நடைபெற இருக்கிறது என்ற செய்தியை ‘தினத்தந்தி’ வெளியிட்டது. மணமகள் லதா என்பதையும் செய்தியில் குறிப்பிட்டு இருந்தது.
இச்செய்தி தமிழ்நாடு முழுவதும் பெரும் பரபரப்பை உண்டாக்கியது. ‘இது உண்மையா?’ என்று கேட்டு ரஜினிக்கு ஏராளமான போன்கள் வந்தன. கடிதங்கள் குவிந்தன. திரை உலகில் இதுபற்றித்தான் பேச்சு. ரஜினி எதுவும் பேசாமல் மெளனம் காத்தார்.

Tuesday, March 12, 2013

ஜமுனாராணியால் இப்படியும் பாட முடியுமா? என்று கேட்க வைத்த பாடல்

1952 ஆம் ஆண்டு முதல் 1954 ஆம் ஆண்டுவரை மார்டன் தியேட்டர்களில் மாதச் சம்பளத்துக்கு பாடுவதற்கு ஜமுனாராணி ஒப்பந்தம் செய்யப்பட்டார். மார்டன் தியேட்டர்களில் இருந்து அவர் வெளியேறியதும் அவருக்கு வாய்ப்புக் கொடுத்தவர் கவியரசு கண்ணதாசன், பி. சுசீலா, ஜிக்கி, பி. லீலா ஆகியோருடன் ஜமுனா ராணியின் குரலும் ஒலிக்க கவியரசு முக்கிய காரணியாக விளங்கினார்.
1954 ஆம் ஆண்டு வெளியான குலேபகாவலி படத்தின் ஆசையும் நேசமும் என்ற பாடல் ஜமுனா ராணியால் இப்படியும் பாட முடியுமா எனக் கேட்க வைத்தது. போதையில் தள்ளாடியபடி விக்கலுடன் ஹம்மிங்கும் சேர்ந்த பாடல் அது.
அந்தப் பாடலையார் பாடுவது என்ற விவாதம் நடைபெற்ற போது பட்டென ஜமுனாராணியை சிபார்சு செய்தார் கவியரசு.
அன்பு எங்கே என்ற படத்தில் ஜமுனாராணி பாடிய மேலே பறக்கும் ராக்கெட்டு, மின்னல் பூச்சி ஜாக்கெட்டு ஆளை பயக்கும் பேஸ்கட்டு அதுதான் இப்போ மார்க்கட்டு என்ற ஆங்கிலமும் தமிழும் கலந்த வரிகள் முடிந்ததும் மாமா என ஜமுனாராணியின் குரல் அந்தக் காலத்தில் அனைவரையும் மயங்க வைத்தது.

அன்பின் ஆழத்தையும் காதலின் புனிதத்துவத்தையும் எடுத்துக் காட்டும் பாடல்

1961 ஆம் ஆண்டு இயக்குநர் பீம்சிங்க் இயக்கத்தில் பாலும் பழமும் என்ற திரைக்காவியம் வெளியாகி பெரு வெற்றி பெற்றது. இதில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் கதாநாயகனாகவும், கன்னடத்து பைங்கிளி, கொஞ்சு கிளி சரோஜாதேவி கதாநாயகியாக நடித்துள்ளனர். மேலும் இத்திரைப்படத்தில் நடிகவேள் எம். ஆர். ராதா, டி. எஸ். பாலையா, எஸ். வி. சுப்பையா, செளகார் ஜானகி, மனோரமா மற்றும் பலர் நடித்து மெருகூட்டியிருப்பர்.
இத்திரைப்படத்தில் வரும் அனைத்துப் பாடல்களையும் எத்தனை முறை கேட்டாலும் ஏதோ புதியதாக கேட்டது. போலவே ஒரு உணர்வு நமக்கு ஏற்படும். இத்திரைப்படத்தில் மிகவும் கவர்ந்த பாடர் என்றால், அது பாலும் பழமும் என்று தொடங்கும் பாடலே!
இப்பாடல் நட பைரவி என்ற ராகத்தில் அமைந்துள்ளது. இது இருபதாவது மேளகர்த்தா ராகமாகும். இது பெண் பால் ராகம் என்றும் தமிழிசையில் ‘ஓரி’ ராகம் என்றும் அழைக்கப்பட்டு வருகிறது. இது ஹிந்துஸ்தானி இசையில் மரபில் ‘ஆசாவரி’ என்றழைக்கப்படும். இது மாலையில் பாடப்படும் பாடவேண்டிய ராகமாகும்.
கவியரசர் கண்ணதாசனின் அற்புத வரிகளால் உயிரூட்டப்பட்டு, காவியப்பாடகர் டி.எம். செளந்தர்ராஜனால் உணர்வூட்டப்பட்டு, நடிகர் திலகம் சிவாஜி கணேசன் செரிவூட்டப்பட்ட பாடல் இது. தனது மனைவி, நோய் வருவதற்கு முன்பு எப்படி இருந்தாள் என்பதையும், தீரா நோய்வாய்ப்பட்டபோது அவளது உடலும் உள்ளமும் எப்படி சோர்ந்து, போனது என்பதை ஒப்பிட்டு வாசமுள்ள வரிகளை பயன்படுத்தி வாசமிழந்த அம்மலரை தேற்றி அவளது மனதில் நம்பிக்கை விதைகளை விதைத்து வடித்ததை கேட்கும்போது பார்க்கும்போது உணரும்போது, நமது கண்களில் நீரை வரவழைக்கிறது.
கணவன் தனது மனைவியின் மீது கொண்டுள்ள அன்பின் ஆழத்தையும் காதலின் புனிதத்துவத்தையும் எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது இந்தப் பாடல்.
(பாலும் பழமும் கைகளில் ஏந்தி)
இரவில் தனது பசி அறிந்து ஒரு கையில் பாலும், மறுகையில் பழங்களையும் தனது மனைவி எடுத்து- அதை
(பவள வாயில் புன்னகை சிந்தி)
புன்னகை பூத்த மலராக பூத்து குலுங்கியவாறே
(கோல மயில் போல் நீ வருவாயே)
கார்மேகம் கண்டுவிட்ட அழகிய தோகை மயிலென
வந்தாயே என்றும்
(கொஞ்சம் கிளியே அமைதிகொள்வாயே)
கொஞ்சும் கிளிபோல பேசுபவளே மன அமைதி கொள்
என்றும்
(பிஞ்சு முகத்தின் ஒளியிழந்தாயே)
மழலையின் முகப் பொலிவை தனது மனைவி
இழந்துவிட்டாளே!
(பேசிப் பழகும் மொழி மறந்தாயே)
ஒரு வார்த்தைக்கூட பேச சக்தி அற்றும் செவி
அடைத்தும் கிடக்கிறாயே
(அஞ்சி நடக்கும் நடை மெலிந்தாயே)
நடக்கக்கூட முடியாமல் மெல்ல நடப்பதாகவும்
(அன்னக் கொடியே அமைதி கொள்வாயே)
அன்னக் கொடியிடை பெண்ணே மன அமைதிகொள்
(உண்ணும் அழகைப் பார்த்திருப்பாயே)
நீ பறிமாறிய உணவை, நான் உணவருந்தும்போது அந்த
அவள் அழகை ரசித்ததாகவும்,
(உறங்க வைத்தே விழித்திருப்பாயே)
நான் உறங்கும் வரையில் விழித்திருப்பாயே!
(கண்ணை இமைபோல் காத்திருப்பாயே)
கண்களை காக்கும் இமைகள் போல என்னை காத்தாயே!
(காதற் கொடியே கண் மலர்வாயே)
காதல்பெண்ணே கண்திறந்து பார்ப்பாயே
(ஈன்ற தாயை நான் கண்டதில்லை)
தாயைக்கூட பார்க்காத எனக்கு மனைவியான உன்
வடிவில் தாயையும் கண்டுவிட்டேன்.
(எனது தெய்வம் வேறெங்கும் இல்லை)
தெய்வம் என்று தனியாக ஒன்று இல்லை அந்த
தெய்வமே எனது தாய் நீதானம்மா
(உயிரைக் கொடுத்தும் உனை நான் காப்பேன்)
தாயாகவும், தெய்வமாக இருக்கும் உன்னை எனது
உயிரைக் கொடுத்து காத்திடுவேன்.
(உதய நிலவே கண் மலர்வாயே)
உதிக்கும் (குளிர்ச்சியான) நிலவே கண் திறப்பாயே
பாலும் பழமும் கைகளில் ஏந்தி
பவழ வாயில் புன்னகை சிந்தி
கோல மயில் போல் நீ வருவாயே
கொஞ்சம் கிளியே அமைதி கொள்வாயே
என்று நெஞ்சுருக பாடி, ஒரு கணவன் தனது மனைவியின்பால் தான் கொண்டுள்ள காதலின் ஆழத்தை அழகாகவும் அற்புதமாகவும் சித்தரிக்கப்பட்டிருக்கும் இந்தப் பாடல் ஓர் அற்புதமாக சித்தரிக்கப்பட்டிருக்கும் இந்தப் பாடல் ஓர் அற்புத பாடல் ஆகும்.

ரஜினி மீது எம். ஜி ஆருக்கு ஆத்திரம் ஏற்படக் காரணம் என்ன?

எம். ஜி. ஆர். மிக துணிச்சலும் கோபமும் உடையவர். அதிக அனுபவப்பட்டவர் எம். ஜி. ஆர். சினிமாக்கள் குறைந்து தமிழக அரசியலில் புரட்சி ஏற்படுத்திக் கொண்டிருந்த காலத்தில் தமிழ் சினிமாவில் ரஜினி புரட்சியை ஏற்படுத்திக்கொண்டிருந்தார்.
தனி ஸ்டைல், வேகம், சிறுவர்களையும், இளைஞர்களையும் கிறுக்கு பிடிக்க வைத்துக் கொண்டிருந்தது. எம். ஜி. ஆர். அசைக்க முடியாத ஒரு இடத்தில் இருக்கும் போது இளைஞர்களுக்கு பிடித்தவராக ரஜினி மாறிப் போனார். தலைமுறை இடைவெளி போல் அந்த மாற்றம் நடந்தது.
பெரியவர்கள், பெண்கள் எம். ஜி. ஆரையும் இளைஞர்கள் ரஜினியையும் நேசித்தனர். இளம் பெண்கள் அப்போது கமலை நேசித்தனர்.
அவர்களது ஆதர்ஷ நாயகனாக கமலே இருந்தார். காரணம் அவரது அழகு, சிவப்பு நிறம், சிரிப்பு, நடனம், ரஜினி கறுப்பு என்பதால் தனுஷை சொன்னது போல் இவரெல்லாம் ஹீரோவா என்ற விமர்சனத்தில் தான் ரஜினி நடித்துக்கொண்டிருந்தார்.
பில்லா படத்திற்குப் பிறகுதான் ரஜினியின் சினிமா தலையெழுத்தே மாறியது. பாலாஜியின் கணிப்பு தவறவே இல்லை. அப்போது ஆக்ஷனில் பிரபலமாக இருந்த ஜெய்சங்கர் ஏற்றிருக்க வேண்டிய வேடம் அது.
இது ஒரு ஆண்டி ஹீரோ அப்ஜெக்ட் என்பதால் புது முகமாக இருக்க வேண்டும் என நினைத்தார்களோ அல்லது புது முகமாக இருந்தால் சம்பளம் குறைவாகக் கொடுக்கலாம் என நினைத்தாரோ அல்லது ரஜினிதான் இதுக்கு பவர் என நினைத்தாரோ பாலாஜி தெரியாது படம் தீயாய் ஓடியது.
பைரவி படத்தின் போது ரஜினிக்கு முதன் முதலில் சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்தைக் கொடுத்து விளம்பரப்படுத்தியவர் கலைப்புலி தானு. ஆனால் இதற்குப் பின்னர் தான் பில்லா வெளிவந்தது. சூப்பர் ஸ்டார் பட்டம் பில்லாவுக்குத்தான் பொருந்தும்.
மஞ்சள் பத்திரிகைகள் என சொல்லப்படும் வகையில் அப்போது பிரபலமாக இருந்த பத்திரிகைகள் ரஜினியையும் எம். ஜி. ஆரையும் வைத்து பல கதைகள் கட்டி விட்டிருக்கின்றன.
அதில் ஒன்றுதான் ரஜினிக்கும் எம்.ஜீ. ஆருடன் நடித்துக் கொண்டிருந்த லதாவுக்கும் இருக்கும் பழக்கம் இதைப் பற்றி அப்போது கிசு கிசு செய்திகள் வாய்வழி பரபரப்பு செய்தியாக பரப்பப்பட்டது. லதா எம். ஜி. ஆர் கிசு கிசு பிரபலமாக இருந்த நேரத்தில் ரஜினிக்கும் லதாவுக்கும் பழக்கம் என செய்தி காட்டுத்தீயாய் பரவியது.
உண்மையில் தன்னிடம் பேட்டி எடுக்க வந்த கல்லூரி மாணவி லதாவைத்தான் ரஜினி விரும்பிக்கொண்டிருந்தார். ஆனால் செய்தி நடிகை லதாவை ரனினி விரட்டி விரட்டி தொந்தரவு செய்வதாக சொல்லப்பட்டது.
இதனால் எம். ஜி. ஆர் ரஜினி மீது மிக ஆத்திரமாக இருப்பதாகவும், ரஜினிக்கு எம். ஜி. ஆரால் ஆபத்து நேரலாம் எனவும் கோடம்பாக்கம் பயந்தது. ஆனால் இதை ஓபனாக பேசமுடியாதே. இதை அவரிடம் விளக்கவும் முடியாது. எம். ஜி. ஆரும் கேட்கமாட்டார். முதலில் உதை அப்புறம் தான் பேச்சு இது எம். ஜி. ஆர். பாணி.
இன்னொரு பக்கம் லதா மேட்டரை கிசுகிசுவாக எழுதிய நிருபர் ஸ்கூட்டரில் போய்க் கொண்டிருப்பதை காரில் சென்று கொண்டிருந்த ரஜினி பார்த்து விட்டார். உடனே கெட்ட வார்த்தையில் திட்டியபடியே காரில் துரத்த ஆரம்பித்து விட்டார். ஸ்கூட்டர் மீது மிகுந்த வேகத்தோடு கார் மோதும் நிலை ரஜினி மிகக் கோபத்தோடு இருக்கிறார்.
அவ்வளவுதான் ரஜினி காரை தன் மேல் ஏற்றாமல் விடமாட்டார் என நிருபர் குலை நடுங்கிப் போனார். 20 நிமிடம் அந்த சேஸிங் தொடர்ந்தது. எப்படியோ அன்று உயிர் தப்பினார் அந்த நிருபர். ரஜினி கையால் பல நிருபர்களுக்கு அடி விழுந்திருக்கிறது.
எம். ஜி. ஆருடனான மோதலை முடிவுக்கு கொண்டு வரவே லதாவை அவசரமாக ரஜினி திருமணம் செய்து கொண்டார் எனவும் சொல்வார்கள்.
பத்து நிருபர்களை அவசரமாக அழைத்தார் ரஜினி. சுற்றிலும் கண்ணாடி பதிக்கப்பட்ட அறையில் மது பாட்டில்கள் சூழ கையில் மது கிண்ணத்துடன் அமர்ந்திருந்தார் ரஜினி. உட்காருங்க சாப்பிடுகிaர்களா? எனக் கேட்டாராம். பரவாயில்லை என்ன விசயம் சொல்லுங்க என்றனர் நிருபர்கள். சிலருக்கு ரஜினி மீது கோபம். நாளைக்கு எனக்கும் லதாவுக்கும் கல்யாணம். கல்யாணம் முடிஞ்சதும் ஃபோட்டோ தரென். நீங்க யாரும் வரவேண்டாம். ஃபோட்டோ நியூஸ் உங்க ஆஃபிசுக்கு அனுப்பிடுறே என்றாராம்.
அப்படி மீறி வந்தா என்றாராம் ஒரு நிருபர் துடுக்காக.
உதைப்பேன் என்றாராம் ரஜினி. சிறிதும் தாமதிக்காமல் அதிர்ந்தார்கள் நிருபர்கள். ரஜினி தனது திருமண பத்திரிகையை எடுத்துக் கொண்டு முதல்வர் அலுவலகம் சென்று காத்திருந்த போது எம். ஜி. ஆர் அவரை சந்திக்க மறுத்துவிட்டார். அதன்பிறகு இருவரும் ஒரு சினிமா விருது நிகழ்ச்சியில் சந்தித்ததோடு சரி. அதிலும் ஒரு வார்த்தை பேசவில்லை.

Thursday, March 7, 2013

~ஹாத்தி மேரா சாத்தி'க்காக

(யானை என் தோழன்)
ராஜேஷ் கண்ணாவை அசைவ வார்த்தைகளால் திட்டியவர் தேவர்
சின்னப்பா தேவர் தயாரித்த இந்திப் படமான ‘ஹாத்தி மேரா சாத்தி’ (யானை என் தோழன்) 25 வாரங்கள் ஓடி வெள்ளி விழா கொண்டாடியது.
எம்.ஜி.ஆரை வைத்து பல வெற்றிப்படங்களையும் மற்ற நட்சத்திரங்களை வைத்து அருமையான பக்திப் படங்களையும் தயாரித்து வந்த சின்னப்பா தேவருக்கு, இந்திப்படம் எடுக்க வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டது.
‘எஸ்.எஸ். வாசன், ஏ.வி. மெய்யப்ப செட்டியார் போன்ற ஸ்டூடியோ அதிபர்களால்தான் இந்திப் படங்களை வெற்றிகரமாகத் தயாரிக்க முடியும். நமக்கு ஏன் விஷப்பரீட்சை?’ என்று அவர் தம்பியும், டைரக்டருமான எம்.ஏ. திருமுகம் கூறினார்.
‘இந்திப்படம் தயாரிக்க நினைப்பது, பணம் சம்பாதிப்பதற்காக அல்ல. அதை ஒரு கெளரவமாக நினைக்கிறேன். முருகன் இருக்கிறான். அவன் வெற்றி தேடித் தருவான்’ என்றார் தேவர். எந்தக் கதையை இந்தியில் தயாரிப்பது என்று ஆலோசனை நடந்தது.
1967ல், ‘தெய்வச் செயல்’ என்ற படத்தை தேவர் எடுத்தார். மேஜர் சுந்தரராஜன், முத்துராமன் ஆகியோர் நடித்த இந்தப் படம் சுமாராகத்தான் ஓடியது.
அந்த தெய்வச் செயல் கதையைத்தான் இந்தியில் தயாரிக்கப் போவதாக தேவர் கூறியதும், எல்லோரும் திகைத்தனர். ‘நாம் எத்தனையோ வெற்றிப் படங்களை எடுத்திருக்கிறோம். அதில் ஏதாவது ஒரு கதையை எடுக்கலாமே? போயும் போயும் சரியாக ஓடாத ஒரு படத்தின் கதையை எடுப்பதா?’ என்று டைரக்டர் திருமுகமும், வசனகர்த்தா ஆரூர்தாசும் கூறினர்.
‘நாம் இதுவரை எடுத்துள்ள படங்களில் மிக நல்ல கதை இதுதான்’ என்று தேவர் கூறிவிட்டார்!
இந்தக் காலகட்டத்தில் இந்திப் பட உலகின் சூப்பர் ஸ்டாராக ராஜேஷ்கண்ணா திகழ்ந்தார். அவரை ‘புக்’ செய்ய தேவர் மும்பை சென்றார்.
‘தேவர் நாணயமானவர். பணத்தை ஒரே நேரத்தில் மொத்தமாக கொடுப்பார். குறித்த திகதியில் படத்தை முடித்து ரிலீஸ் செய்து விடுவார்’ என்றெல்லாம் ராஜேஷ் கண்ணா உட்பட வட இந்திய கலைஞர்கள் எல்லாம் ஏற்கனவே அறிந்திருந்தனர்.
எனவே, தேவரை வரவேற்று உபசரித்தார் ராஜேஷ் கண்ணா.
‘செக்’கில் ஒரு பெருந்தொகையை எழுதி ராஜேஷ் கண்ணாவிடம் நீட்டினார், தேவர். அதைப் பார்த்ததும் ராஜேஷ் கண்ணாவுக்கு மயக்கமே வந்துவிடும் போலிருந்தது.
தேவர் ஆங்கிலம் கற்றவர் அல்ல என்றாலும், தான் நினைப்பதை புரிய வைக்கிற அளவுக்கு ஆங்கிலம் பேசிவிடுவார். ‘ராஜேஷ்! ஒன் பேமண்ட் ஒன் ஷெட்யூல்! யூ.கம்.ஐ. பினிஷ்!’ என்று ராஜேஷ் கண்ணாவிடம் கூறிவிட்டு சென்னை திரும்பினார்.
‘ஹாத்தி மேரா சாத்தி’, எம்.ஏ. திருமுகம் டைரக்ஷனில் வெற்றிகரமாக வளர்ந்தது.
மும்பை நட்சத்திரங்களில் பெரும்பாலானோர், காலை 10 மணிக்குத்தான் படுக்கையில் இருந்து எழுவார்கள். படப்பிடிப்புக்கு தாமதமாகத்தான் வருவார்கள்.
ஆனால், தேவர் நேரம் தவறாதவர். காலை 8 மணிக்கே படப்பிடிப்பை தொடங்கி விடுவார்கள்.
ராஜேஷ் கண்ணா தொடர்ந்து தாமதமாக வந்ததால், ஒரு நாள் தேவர் தமிழில் சில ‘அசைவ’ வார்த்தைகளால் ராஜேஷ் கண்ணாவைத் திட்டினார்.
ராஜேஷ் கண்ணாவுக்குத் தமிழ் தெரியாதென்றாலும், தேவர் தன்னைத் திட்டுகிறார் என்பதை புரிந்துகொண்டார். உடனே தேவரை மேக்-அப் அறைக்கு அழைத்துச் சென்றார். அவர் காலைத் தொட்டு கும்பிட்டார். பிறகு தன் செருப்பைக் கழற்றி அவர் கையில் கொடுத்து, ‘நான் தவறு செய்திருந்தால் என்னை இந்த செருப்பால் அடியுங்கள்.
ஆனால் பலர் முன்னால் திட்டி அவமானப்படுத்தாதீர்கள். ஏனென்றால், நான் இன்று வட இந்திய பட உலகில் கெளரவமான நிலையில் இருக்கிறேன்’ என்று கண்கலங்கக் கூறினார்.
தேவரும் கண்கலங்கிவிட்டார்! ‘மன்னிச்சுக்க முருகா. இனிமே உன்னைத் திட்டமாட்டேன்!’ என்றார். மறுநாள் முதல் ராஜேஷ் கண்ணா சரியான நேரத்துக்கு படப்பிடிப்புக்கு வந்தார். ‘ஹாத்தி மேரா சாத்தி’ படப்பிடிப்பு முடிந்து, 14-05-1971 அன்று ரிலீஸ் ஆகியது.
வடநாடு முழுவதும் எல்லாத் தியேட்டர்களிலும் ஹவுஸ்புல் காட்சிகளாக ஓடியது. ராஜேஷ் கண்ணா யானையுடன் பல சாகசங்கள் செய்ததை மக்கள் ரசித்தனர். எனவே எல்லா ஊர்களிலும் இப்படம் 25 வாரம் ஓடி, வெள்ளி விழா கொண்டாடியது. வசூலில் பெரும் புரட்சியே செய்தது.
இது பற்றி ஏவி. மெய்யப்ப செட்டியார் ஒரு கட்டுரையில், ‘நண்பர் தேவர் எடுத்த ஹாத்தி மேரா சாத்தி, பட உலக சரித்திரத்திலேயே வசூலில் புதிய ரெக்கார்டு ஏற்படுத்தி விட்டது. பெரிய வெற்றிப்படம் என்றால், கல்கத்தாவில் ரூ. 30, 40 இலட்சம் வரை வசூல் ஆவதுதான் வழக்கம்.
‘ஹாத்தி மேரா சாத்தி’க்கு ரூ. 70, 80 இலட்சம் வசூலாயிற்று என்று கேள்விப்படுகிறேன்...” என்று குறிப்பிட்டுள்ளார்.
இதன் பின், ‘வெள்ளிக்கிழமை விரதம்’ கதையை ‘சுப்தீன்’ என்ற பெயரில் இந்தியில் எடுத்தார். தேவர். ரிஷிகபூர் நடித்த இந்தப் படம் சுமாராக ஓடியது. பின்னர், ‘தாயைக்காத்த தனயன்’, ‘வேட்டைக்காரன்’ ஆகிய படங்களின் கதைகளை ஒன்றாகக் கலந்து, ‘மா’ என்ற பெயரில் இந்தியில் தயாரித்தார். தர்மேந்திரா நடித்த இந்தப் படம் நூறு நாள் ஓடியது.
இதன் பின் ‘ஹாத்தி மேரா சாத்தி’ படத்தை ‘நல்ல நேரம்’ என்ற பெயரில் தமிழில் தயாரித்தார். எம்.ஜி.ஆரும், கே.ஆர்.விஜயாவும் நடித்தனர். படம் மிகப் பெரிய வெற்றி பெற்றது.

மகாகவியின் மறக்க முடியாத பாடல்

சிந்து நதியின் மிசை நிலவினிலே – மகாகவியின் மறக்க முடியாத பாடல் சுந்தர தெலுங்கினில் பாட்டிசைத்து என்ற வரிகளுக்கேற்ப இரண்டு சரணங்களுக்கிடையே தெலுங்கு வரிகள் மனதை வருடும் மெட்டில் அமைக்கப்பட்ட விதத்திற்காகவே மெல்லிசை மன்னர்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.
ஆலப்புழையின் காயலில்  (Back Waters)  ஓடும் படகு பாட்டிற்கு மேலும் அழகை கொடுக்கும் அது மட்டுமா? மீசையும் தலைப்பாகை கட்டும் உள்ள முகம் மட்டுமே பெரும்பாலும் தெரியும். க்ளோஸ் அப் காட்சிகள் உள்ள இந்த பாடல் பாரதியை இன்றைக்கும் தமிழ் நாட்டிற்கு நினைவுபடுத்திக் கொண்டிருக்கும் ஒன்றல்லவா.
மேலும் கங்கை நதி தீரத்திலும் காவிரி நதி ஓரத்திலும் வாழும் விவசாயிகளை அவர்களின் பாரம்பரிய உடையோடு காண்பித்ததோடு மட்டுமல்லாமல் சுதந்திரம் எனது பிறப்புரிமை என்று வீர முழக்கமிட்ட சிங்க மராட்டிய திலகரை அந்த ஒரு கணத்தில் நடிகர் திலகம் நமக்கு அறிமுகப்படுத்தினாரே அது என்றும் மனதில் நிற்கும் காட்சியல்லவா யானை தந்தம் தரும் நம்பூதிரி மட்டும் என்ன குறைந்தவரா என்ன? எப்படிப் பார்த்தாலும் மறக்க முடியாத பாடல் மற்றும் காட்சி.

பட அதிபரை அசர வைத்த பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம்

புகழின் உச்சியில் இருந்த போது யாரும் எதிர்பாராத வகையில் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் தனது 29 வது வயதில் மரணம் அடைந்தார். அந்த காலத்தில் திரை உலகில் நுழைவது என்பது எளிதான காரியமில்லை. அதற்கு கல்யாண சுந்தரம் விதிவிலக்கல்ல. பல சோதனைகளை அனுபவித்து இருக்கிறார்.
சென்னைக்கு வந்து அவர் குடியேறியது ராயப்பேட்டை பொன்னுசாமி நாயக்கர் தெருவில் இருந்த 10ம் நம்பர் வீட்டில். அங்கு ஒரு அறையை 10 ரூபாய்க்கு வாடகைக்கு பிடித்தார். அது சிறிய அறை. அதில் அவரது நண்பர்களான ஓவியர் கே.என்.
ராமச்சந்திரனும், நடிகர் ஓ.ஏ.கே. தேவரும் தங்கி இருந்தனர். பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் ஆரம்ப காலத்தில் பணத்துக்கு கஷ்டப்பட்டாலும் துணிச்சல்காரராக இருந்து வந்திருக்கிறார்கள். சினிமா கம்பெனி ஒன்றுக்கு அவர் பாட்டெழுதி கொடுத்தார். அதற்குரிய பணம் வந்து சேரவில்லை. பணத்தை கேட்க பட அதிபரிடம் சென்றார். ‘பணம் இன்னிக்கு இல்லே! நாளைக்கு வேண்ணா வந்து பாருங்கோ’ என்று பதில் வந்தது.
ஆனால் கல்யாண சுந்தரமோ பணம் இல்லாமல் நகருவதில்லை என்ற எண்ணத்துடன் நின்று கொண்டிருந்தார். ‘நிக்கிறதா இருந்தா நின்னுண்டே இரும்’ என்று சொல்லிவிட்டு அந்த அதிபர் வீட்டிற்குள் சென்றுவிட்டார்.
உடனே கல்யாண சுந்தரம் தனது சட்டைப் பையில் இருந்த ஒரு தாளையும், பேனாவையும் எடுத்து ஏதோ சில வரிகள் எழுதி அதை மேசை மீது வைத்துவிட்டு வீட்டுக்கு கிளம்பி சென்றுவிட்டார். கொஞ்ச நேரத்தில் படக்கம்பெனியைச் சேர்ந்த ஆள் பணத்துடன் அலறியடித்துக் கொண்டு கல்யாணசுந்தரத்திடம் வந்து பணத்தை கொடுத்தார்.
கல்யாணசுந்தரம் அப்படி என்னதான் எழுதி வைத்தார்? இதோ இதுதான்: ‘தாயால் வளர்ந்தேன்; தமிழால் அறிவு பெற்றேன்; நாயே! நேற்றுன்னை நடுத்தெருவிலே சந்தித்தேன்; நீ யார் என்னை நில் என்று சொல்ல?’
இதைப் படித்துப் பார்த்த பட அதிபர் அசந்து போனார் பணம் வீடு தேடி பறந்து வந்தது.

வளைந்து கொடுப்பேன்

த்ரிஷா
வளைந்து கொடுப்பேன், ஆனால் உடைய மாட்டேன என்று நடிகை த்ரிஷா ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
தற்போதெல்லாம் நடிகர், நடிகைகள் தாங்கள் செய்வது, நினைப்பது என்று எல்லாவற்றையுமே ட்விட்டர், ஃபேஸ்புக்கில் போடுகின்றனர்.
இப்படி அவர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை படிக்க ரசிகர்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்நிலையில் த்ரிஷா போட்டுள்ள ஒரு ட்வீட் நன்றி மறந்த மக்கள் அதற்கான கர்மபலன்களை அனுபவிப்பார்கள்.
வளைந்து கொடுப்பேன், ஆனால் உடைய மாட்டேன். தற்போது நான் கற்றுக்கொண்டுள்ள பாடம் இதுதான் என்று தெரிவித்துள்ளார். இதைப் படிக்கையில் த்ரிஷாவுக்கு என்ன ஆனது.
ஏன் திடீர் என்று இப்படி ஒரு ட்வீட் என்று நினைக்கத் தோன்றுகிறது.

யார் நம்பர் 1

நயன், ஹன்சிகா
 
தமிழ் மற்றும் தெலுங்கு படங்கள்தான் இந்திய சினிமாவில் பெரும் பங்கு வகிக்கிறது. இந்த இரு மொழிகளிலும் முதலிடம் பிடிப்பவர் யாரோ.... அவர் பாலிவுட் நடிகர்களையும் மிஞ்சியவராகப் பார்க்கப்படுகிறார். பாலிவுட்டில் எவ்வளவு பெரிய நடிகையாக இருந்தாலும், தெலுங்கிலோ அல்லது தமிழிலோ நடிக்க ஆர்வம் காட்டுவதைப் பார்க்க முடிகிறது.
காரணம் தமிழ், தெலுங்கு சினிமாவின் வர்த்தக எல்லை அத்தனை தூரம் விரிவடைந்திருப்பதுதான், நடிகைகளைப் பொறுத்தவரை இந்த இரு மொழிகளுக்கும் பொதுவானவர்களாகவே உள்ளனர். நயன்தாரா, த்ரிஷா, அனுஷ்கா, அமலா பால், ஹன்சிகா என முன்னணி நாயகிகள் அனைவருமே இரு மொழிகளிலும் ஆதிக்கம் செலுத்துகின்றனர்.
அந்த வகையில் நயன்தாரா ஹன்சிகா இடையில் தான் நம்பர் ஒன் இடத்துக்கு பெரும் போட்டி நிலவுகிறது. இதுவரை நயன்தாராவே முதல் இடத்தில் இருக்கிறார். புதிதாக வந்துள்ள ஹன்சிகா வேகமாக நயன்தாரா இடத்துக்கு முன்னேறி வருகிறார்.
தமிழ், தெலுங்கில் மொத்தம் 6 படங்களில் நடிக்கிறார் நயன்தாரா. அனைத்துமே பெரிய பட்ஜெட் படங்கள். சம்பளம் கிட்டத்தட்ட 2 கோடி வரை போகிறது. ஹன்சிகா தமிழில் சேட்டை, வாலு, வேட்டை மன்னன், சிங்கம் 2, பிரியாணி, தீயா வேலை செய்யனும் குமாரு, வாலிபன் என ஏழு படங்களில் நடித்து வருகிறார். 2015 வரை அவரிடம் திகதிகள் இல்லை.
ஆனாலும் இன்னும் 5 புதிய படங்களுக்கு அட்வான்ஸ் கொடுத்துள்ளனர். சம்பளமும் கிட்டத்தட்ட நயன்தாரா வாங்குவதை நெருங்குகிறதாம். இதையெல்லாம் விட முக்கியம், நயன்தாராவின் முன்னாள் காதலன் சிம்புவுடன் மகா நெருக்கமாகிவிட்ட ஹன்ஸி, அவருடன் மட்டுமே 2 படங்களில் நடித்துக் கொண்டிருப்பதுதான்.

Wednesday, March 6, 2013

ஸ்ரேயா, ரிச்சா திருப்பதியில் தரிசனம்

நடிகைகள் ஸ்ரேயாவும், ரிச்சாவும் திருப்பதி கோவிலில் ஒரே நாளில் சாமி கும்பிட வந்ததால், உற்சாகமான ரசிகர்கள், அவர்களை முற்றுகையிட்டு தங்கள்’பக்தியை’ வெளிப்படுத்தினர்.
ஸ்ரேயா அதிகாலையில் நடக்கும் சுப்ரபாத சேவையில் பங்கேற்று சாமி தரிசனம் செய்தார். உண்டியலில் காணிக்கை செலுத்திவிட்டு வெளியில் வந்த அவரை ரசிகர்கள் மொய்த்தனர். அவரிடம் ஆட்டோகிராப் வாங்க முண்டியடித்தனர். ஆனால் ஸ்ரேயா யாருக்கும் ஆட்டோகிராப் போடவில்லை.
நான் இங்கு சாமி கும்பிட வந்துள்ளேன். நீங்களும் போய் சாமி கும்பிடுங்க என்று கடுப்பாகக் கூறிவிட்டு வேகமாக காருக்குள் சென்று விட்டார். பின்னர் ரசிகர்களுக்கு நிகராக முண்டியத்து வந்த நிருபர்களிடம் கூறுகையில், “திருப்பதி வெங்கடாஜலபதி” எனக்கு பிடித்தமான கடவுள். ஆண்டுக்கு நான்கு தடவை இந்த கோவிலுக்கு வந்து வழிபடுவதை வழக்கமாக வைத்திருக்கிறேன்.
இதுதவிர என் படங்கள் ரிலீசாகும் போதெல்லாம் திருப்பதிக்கு வருவேன். இந்த முறை தமிழ் கன்னட மொழிகளில் தயாரான சந்திரா படத்தில் நடித்துள்ளேன். இது விரைவில் ரிலீசாக இருக்கிறது. அதற்காகவே சாமி கும்பிட வந்தேன். இந்த இடத்தில் மன அமைதியை மட்டுமே எதிர்பார்க்கிறேன்” என்றார்.
அடுத்து ரிச்சா.... ஸ்ரேயா நகர்ந்த கையோடு ரிச்சா கங்கோபாத்யா வந்துவிட்டார். டபுள் தமாகா எனும் அளவுக்கு ஏக குஷியாகிவிட்டனர் ரசிகர்கள். ஆயிரத்துக்கும் அதிகமான ரசிகர்கள் அவரை முற்றுகையிட்டதால் அவரால் கோயில் படியிறங்கக் கூட முடியவில்லை.
பின்னர் பொலிஸ் துணையுடன் அவர் வேகமாக கோவிலுக்குள் சென்று விட்டார். கோயிலுக்குப் போனால் வெளியே வராமலா போய்விடுவார் என்று வெளியில் ஏராளமானோர் காத்திருந்தனர்.
சாமி தரிசனம் முடிந்து வெளியில் வந்த ரிச்சாவை அனைவரும் மொய்த்துக் கொண்டனர். ஒரு அடி கூட நகர விடவில்லை. மீண்டும் பொலிஸார் துணைக்கு வந்தனர். ரசிகர்களை தெலுங்கில் திட்டி அப்புறப்படுத்தினர்.

கல்யாணத்துக்காக பெண்களை வளர்ப்பதா?

ரீமா கல்லிங்கல் ஆவேசம்
 
‘கல்யாணம் பண்ணித்தர மட்டுமே பெண்ணை வளர்க்கக்கூடாது’ என்று ஆவேசப்பட்டார் ரீமா கல்லிங்கல். ‘யுவன் யுவதி’ படத்தில் நடித்தவர் ரீமா கல்லிங்கல். ‘டேம்’ படத்தில் நடித்து பரபரப்பை ஏற்படுத்தினார்.
சமீபத்தில் இவர் நடித்த ‘22 பிமேல் கேட்டயம்’, ‘நித்ரா’ ஆகிய 2 படங்களுக்காக கேரளா அரசின் சிறந்த நடிகை விருது பெற்றார். அவர் கூறியதாவது: ஹீரோயினுக்கு முக்கியத்துவம் தரும் வேடங்களாகவே 22 பிமேல் கோட்டயம், நித்ரா பட வாய்ப்புகள் அமைந்தது.
இதில் நடித்த போது என்னைவிட படத்திற்கும் அதில் நடித்தவர்களுக்கும் விருது கிடைக்கும் என்று எதிர்பார்த்தேன். எனக்கு விருது கிடைத்தது பெரிய கெளரவமாக கருதுகிறேன். தற்போது வரும் படங்கள் புதிய தலைமுறையினருக்கான படங்கள் என்கிறார்கள்.
நான் அப்படி கருதவில்லை. அவை எல்லாமே சமகாலத்துக்கான கதைகள்தான். பெண்கள் இன்றைக்கு விழிப்புணர்வு கொண்டிருக்கிறார்கள். ஆனால் பெண்ணை பெற்ற பெற்றோர் அந்த பெண்ணை திருமணம் செய்து கொடுத்தால்போதும் என்ற எண்ணத்துடன்தான் வளர்க்கிறார்கள்.
இது பெண்கள் விழித்துக்கொள்ள வேண்டிய தருணம். அவர்கள் வெறும் வீட்டு பறவைகளாக அடங்கிவிடாமல் அரசியல் மற்றும் பொது வாழ்வில் அக்கறை கொண்டு முன்னேற வேண்டும்.
அடுத்து ‘ஆகஸ்ட் கிளப்’ என்ற படத்தில் நடிக்கிறேன். இது மீண்டும் ஹீரோயினுக்கு முக்கியத்துவம் கொண்ட கதை. சாவித்திரி என்ற கதாபாத்திரத்தில் 2 குழந்தைக்கு அம்மாவாக நடிக்கிறேன். இதற்கு முன் இதுபோல் வேடம் ஏற்கவில்லை.

சொல்ல மாட்டேன்

பிரெண்ட்ஸ் பிக்சர்ஸ் தயாரிக்கும் படம் ‘சொல்ல மாட்டேன்’.
புதுமுகங்கள் சக்தி, ஜிஸ்மி, ஆதிரா, ஆதித்யா, ஜித்தன் நடிக்கின்றனர்.
ஒளிப்பதிவு, பாலு இசை, ராஜேஷ்மோகன் கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள் எழுதி இயக்கும் என். பி.
இஸ்மாயில் கூறும்போது, ‘தன்னை கொடூரமாக கொலை செய்தவர்களைப் பழிவாங்க, கல்லாக மாறிய ஒருவரைப் பற்றிய திகில் கதை கல் பேசும் கிராபிக்ஸ்.
காட்சிகள் 20 நிமிடங்கள் இடம்பெறுகிறது. 15 ஆம் திகதி ரிலீசாகிறது’ என்றார்.