Thursday, September 19, 2013

வண்டு வந்து தேன் குடித்தால் மலருக்கு தண்டனை

காசு கொடுத்தால் மாலை போடும்
கோயில் யானைகளுடன் விலை மகளிரை ஒப்பிடும்
விரிந்த உள்ளம் கவிஞர் கண்ணதாசனுக்கே வரும்.
சூழ்நிலைக் கைதிகளாய் வாழ்விழந்த
அந்தப் பெண்களை கவிஞர் புரிதலுடன்
அணுகியிருக்கிறார். பரிவுடன் நடத்தியிருக்கிறார்.
அவரது தனிக்கவிதை ஒன்று திரைப்பாடலாகவும்
உலா வந்தது.
“கற்பாம் மானமாம் கண்ணகியாம் சீதையாம்
கடைத்தெருவில் நிற்குதடா ஐயோ பாவம்!
காசிருந்தால் வாங்கலாம் ஐயோ பாவம்!”
இந்தப் பாடலில் விலை மகளிரின்
வழக்கறிஞராகவே மாறியிருப்பார் கவிஞர்.
“வண்டு வந்து தேன்குடித்தால் மலருக்குத்தான் தண்டனை வழுக்கிவிழும் பெண்களுக்கோ சட்டத்திலும் வஞ்சனை” என்பது திரைப்பாடல் வடிவம்.
இதன் மூலமாகிய தன் தனிக்கவிதையில், “பணமிருப்போர் தவறு செய்தால் பாதுகாக்கும் சட்டமே - நீ
வலையை வீசிப் பிடிப்பதெல்லாம் ஏழைகளை
மட்டுமே” என்பார் கவிஞர்.
“அந்த ஊரில் ஒரு வேசி இருந்தாள்” என்று ஒருவர் கதை எழுதியிருந்தாராம். ஜெயகாந்தன் அதைப் படித்துவிட்டு, “என்னடா எழுதியிருக்கிறான்? அந்த ஊரில் ஒரு பெண் இருந்தாள். அங்கிருந்த ஆண்களெல்லாம் சேர்ந்து அவளை வேசியாக்கினார்கள் என்றல்லவா எழுதியிருக்க வேண்டும்” என்றாராம்.
கவிஞர், பெண்ணை ஆண்கள் எப்படியெல்லாம் வேசியாக்கினார்கள் என்று பட்டியலிடுவார்.
“குணமிருந்தும் தவறு செய்வாள் குழந்தைக்காக
ஒருத்தி - இந்தக்
கொடுமை செய்ய உடன்படுவாள் குடும்பம் காக்க
ஒருத்தி
படித்திருந்தும் வேலையின்றிப் பள்ளிகொள்வாள்
ஒருத்தி - திரைப்
படத்தொழிலில் ஆசைவைத்து பலியானாள்
ஒருத்தி” என்பார்.
“கண்ணீரில் மிதக்குதடா கற்பு எனும் ஓடம் இது
கம்பனுக்கும் வள்ளுவருக்கும் கடவுளுக்கும்
பாடம்” என்று முடிக்கும் போது கவிஞரின் கனிவு
புலப்படும்.
தப்புத்தாளங்கள் படத்தில்
“நினைவெங்கும் மாங்கல்யம் தாய்மை
நிதந்தோறும் விளையாட்டு பொம்மை
பொருளாதாரம் செய்த விந்தை - இவள்
பொருள்தாரம் ஆகிவிட்ட
சந்தை” என்றெழுதியிருப்பார் கவிஞர்.
விளிம்பு நிலை மனிதர்கள் மீது அவருக்கிருந்த அன்பும் அனுதாபமும் இந்தப் படப்பாடல்களில் வெளிப்படும். எதிர்மறை வாழ்வை ஏற்றுக்கொண்டவன் குரல் இந்தப் படத்தின் பாடல்களில் ஓங்கிக் கேட்கும்.
“படிக்க ஆசவச்சேன் முடியலே
உழைச்சு பாத்துபுட்டேன் விடியலே
பொழைக்க வேறுவழி தெரியலே
நடந்தேன் நான்நெனச்ச வழியிலே...
இதுக்குக் காரணந்தான் யாரு...?
படைச்ச சாமியப்போய் கேளு
இதுக்குப்போய் அலட்டிக்கலாமா...
என்ற பாடலும் தப்புத்தாளங்கள் - வழி தவறிய பாதங்கள் என்ற பாடலும் விளிம்பு நிலை மனிதர்களின் வாழ்க்கைச் சித்திரங்கள். அந்த நாட்களில், ஜனதா கட்சியில் தலைப்பாகையும் தாடியுமாய் ராஜ்நாராயணன் என்ற மனிதர், தான்தான் அடுத்த பிரதமர் என்று ஆர்ப்பாட்டம் செய்து கொண்டிருப்பார். அதில் கவிஞர் கண்ணதாசனுக்கிருந்த எரிச்சல், இந்தப் பாடலில் வெளிப்பட்டிருக்கும்.
பாராளும் வேஷங்கள் பரதேசிக் கோலங்கள் விதி-வழி-தினமோடும் ஓடங்கள்.

கலை அன்னம் போலவள் தோற்றம் இடையில் இடையோ கிடையாது

ஒரு பெண்ணைப் பார்த்து
நிலவைப் பார்த்தேன்
நிலவில் குளிரில்லை
அவள் கண்ணைப் பார்த்து
மலரைப் பார்த்தேன்
மலரில் ஒளியில்லை
ஒரு பெண்ணைப் பார்த்து
நிலவைப் பார்த்தேன்
நிலவில் குளிரில்லை
அவள் கண்ணைப் பார்த்து
மலரைப் பார்த்தேன்
மலரில் ஒளியில்லை
அவளில்லாமல் நானில்லை
நானில்லாமல் அவளில்லை
அவளில்லாமல் நாளில்லை
நானில்லாமல் அவளில்லை
ல ல லல்ல லா ல ல லல்ல
ல ல ல லல்ல ல ல ல ல
கொடி மின்னல் போலொரு பார்வை
மானோ மீனோ என்றிருந்தே
குயிலோசை போலொரு வார்த்தை
குழாலோ யாழோ என்றிருந்தேன்
கொடி மின்னல் போலொரு பார்வை
மானோ மீனோ என்றிருந்தேன்
குயிலோசை போலொரு வார்த்தை
குழாலோ யாழோ என்றிருந்தேன்
நெஞ்சோடு நெஞ்சை சேர்த்தாள்
தீயோடு பஞ்சை சேர்த்தாள்
நெஞ்சோடு நெஞ்சை சேர்த்தாள்
தீயோடு பஞ்சை சேர்த்தாள்
இன்று காதல் ஏக்கம் தந்தாள் சென்றாள்
நாளை என் செய்வாளோ
ஒரு பெண்ணைப் பார்த்து
நிலவைப் பார்த்தேன்
நிலவில் குளிரில்லை
அவள் கண்ணைப் பார்த்து
மலரைப் பார்த்தேன்
மலரில் ஒளியில்லை
அவளில்லாமல் நானில்லை
நானில்லாமல்
அவனில்லை
ல ல லல்ல லா ல ல லல்ல
கலை அன்னம் போலவள் தோற்றம்
இடையில் இடையோ கிடையாது
சிலை வண்ணம் போலவள் தேகம்
இதழிலில் மதுவோ குறையாது
கலை அன்னம் போலவள் தோற்றம்
இடையில் இடையோ கிடையாது
சிலை வண்ணம் போலவள் தேகம்
இதழில் மதுவோ குறையாது
என்னோடு தன்னை சேர்த்தாள்
தன்னோடு என்னை சேர்த்தாள்
என்னோடு தன்னை சேர்த்தாள்
தன்னோடு என்னை சேர்த்தாள்
இன்று காதல் ஏக்கம் தந்தாள் சென்றாள்
நாளை என் செய்வாளோ?
ஒரு பெண்ணைப் பார்த்து
நிலவைப் பார்த்தேன்
நிலவில் குளிரில்லை
அவள் கண்ணைப் பார்த்து
மலரைப் பார்த்தேன்
மலரில் ஒளியில்லை
அவளில்லாமல் நானில்லை
நானில்லாமல் அவளில்லை
ல ல லல்ல லா ல ல லல்ல
ல ல ல லல்ல ல ல ல ல

குழந்தை நட்சத்திரங்களின் துறுதுறுப்பு

குழந்தை நட்சத்திரங்களில் துறுதுறுப்பு நல்ல எக்ஸ்ப்ரஸ்ன், ரசிகர்களை ஈர்த்த நடிப்பு என்று கலக்கியவர் டெய்சி ராணி. யார் பையன் (1957) படத்தில் டெய்சி ராணி சீறு பையனாக டைட்டில் ரோலர் இந்தி குழந்தை நட்சத்திரம்.
களத்தூர் கண்ணம்மா (1960) படத்தில் அறிமுகமான குழந்தை நட்சத்திரம் கமல்ஹாசன் பார்த்தால் பசி தீரும் (1962) படத்தில் இரட்டை வேடம் பாதகாணிக்கை (1962) வானம்பாடி (1963) ஆனந்த ஜோதி (1963) படங்களில் நடித்த பின் தமிழ் படங்களில் நடிக்கவில்லை. ஏனோ வாய்ப்பு தான் இல்லையோ அல்லது வேறு காரணமோ டி. கே. எஸ். நாடகக் குழுவில் பயிற்சி.
களத்தூர் கண்ணம்மா படத்தில் கமலுடன் நடித்த தசரதன் நானும் ஒரு பெண் படத்தில் எம். ஆர். ராதாவின் மகனாக நடித்திருப்பார் மேஜர் சந்திரகாந்த் படத்தில் நாகேஷ¤டன் கல்யாண சாப்பாடு போட்டவா தம்பி கூடவா பாடலில் நடித்தவர் நினைவில் நின்றவள். வா ராஜா வா என்று நினைவில் நிற்கும்படி நடித்தவர் தான் தசரதன்.
என்னோடு களத்தூர் கண்ணம்மாவில் நடித்த தசரதன் இன்று நான் காரில் போகும்போது ரோட்டில் நடந்து போகிறார் என்று பல வருடங்களுக்கு முன் கமல் ஹாசன் வருத்தப்பட்டார்.
காதர் பாசமலரின் துவங்கி மதராஸ் டூ பாண்டிச்சேரியில் பக்கோடா காதர் ஆக பிரபலமானாவர்.
தசரதனும் பக்கோடா காதரும் கணக்கே இல்லாமல் பல படங்களில் குழந்தை நட்சத்திரங்களாக தலை காட்டினார்கள். இருவருமே இறந்து விட்டார்கள்.
கமல்ஹாசனின் குழந்தை நட்சத்திர வாழ்வு முடிவுக்கு வந்த பின் கர்ணன் (1964) படத்தில் மாஸ்டர் ஸ்ரீதர் என்ற பையன் தலை காட்டினான் கமலுக்கும் ஸ்ரீதருக்கும் வயதில் பெரிய வித்தியாசமெல்லாம் கிடையாது.
ஒருவேளை கமல் தொடர்ந்து சினிமாவில் நடித்திருந்தால் இந்த ஸ்ரீதர் செய்த ரோல்கள் தான் செய்திருக்க முடியும். கந்தன் கருணை (1967) யில் பாலமுருகனாக நடித்த மாஸ்டர் ஸ்ரீதர் பின் சத்தியம் தவறாதே (1968), தெய்வீக உறவு (1968) என்ற படங்களில் நாடக வசனம் பேசி பக்கா நாடக நடிக சிறுவனாக வளர்ந்து நம்ம குழந்தைகள் (170) படத்தில் நாடக பாணியிலிருந்து மீள முடியாத வளர்ந்து விட்ட வயதுக்கு வந்துவிட்ட பையனாக இருந்தான்.
சிவாஜியின் இடத்தைப் பிடிக்கலாமா? எம். ஜி. ஆர். இடத்தைப் பிடிக்கலாமா? என்ற கனவுடன் மாஸ்டர் ஸ்ரீதர் வாலிபனாக சினிமாப் பத்திரிகையில் பேட்டி கொடுத்துக்கொண்டு
குட்டி பத்மினி பாசமலர் (1961) படத்தில் குழந்தை சாவித்திரியாகத் தலைகாட்டி, நெஞ்சில் ஓர் ஆலயம் (1962) படத்தில் பிரபலம் கமலின் குழந்தை நட்சத்திர வாழ்வு முடிவுக்கு வந்த பின் குட்டி பத்மினி பிஸி நவராத்திரி (1964) க்கு பின் குழந்தையும் தெய்வமும் (1965) குழந்தையும் தெய்வமும் தான் குட்டி பத்மினிக்கு இன்று வரை சிறந்த படம் குட்டி பத்மினியும் எதிர்கால கதாநாயகி நான் தான் என்ற பெருமிதத்தில் தான் இருந்தார். சிவாஜி அங்கிளுடன் ஜோடியாக நடிப்பேன் எம். ஜி. ஆர். ஆங்கிளுடன் ஜோடியாக நடிப்பேன் என்று தான் பேட்டிகளில் சொல்லிக்கொண்டிருந்தார்.
நம் நாடு (1969) படத்தில் பார்க்கும் போதே இந்த முகம், மூக்கு அவ்வளவு சரியில்லை என்பது தெரிந்துவிட்டது. அந்தப் படத்தில் குட்டி பத்மினிக்கு தம்பியாக நடிகை ஸ்ரீதேவி துணைவன் (1969) படத்தில் தேவர் அறிமுகப்படுத்திய குழந்தை நட்சத்திரம் ஆதி பராசக்தி (1971) தெய்வக் குழந்தைகள் (1973) என்று ஸ்ரீதேவி குழந்தை நட்சத்திரமாக நடித்த முக்கிய படங்கள் கற்பகம் (1963) படத்தில் பேபி ஷகிலா குழந்தை நடத்சத்திரம் (‘அத்தை மடி மெத்தையடி’ ஆடி விளையாடலாமா பேபி ஷகிலாவின் பிற படங்கள் எங்க வீட்டுப் பிள்ளை, இரு வல்லவர்கள், எங்க பாப்பா ரோஜா ரமணி சிறுவனாக பக்த பிரகலாதா (1967) ல் இருமலர்கள் (1967) என் தம்பி (1968), சாந்தி நிலையம் (1969), போன்ற படங்களில் நடித்த குழந்தை நட்சத்திரம் மணிரத்தினத்தின் அஞ்சலி (1990) யில் ரோஜா ரமணியின் மகன் தருண் தான் ரேவதி ரகுவரனுக்கு மகன்.
பேபி ராணி நடித்த படங்கள்
பேசும் தெய்வம் (1967), குழந்தைகக்காக (1968), கண்ணே பாப்¡ (1969) ஆகியவை கமல் குழந்தை நட்சத்திரமாக இல்லாத தமிழ்த் திரையில் ஆக்கிரமித்த மற்றொரு நடிகர் மாஸ்டர் பிரபாகர் பாமா விஜயம் (1967), இரு கோடுகள் (1969) என்று தொடர்ந்த மாஸ்டர் பிரபாகர் கதாநாயகனாக வா ராஜா வா (1969) வில் முக்கியத்துவம்.
அனாதை ஆனந்தனில் டைட்டில் ரோல் செய்த (1970) மாஸ்டர் சேகர் குடியிருந்த கோவில் (1968) படத்தில் இரட்டை சின்ன எம். ஜி. ஆர். அகத்தியர் (1972) மணிப்பயல் (1973) சொல்லத்தான் நினைக்கிறேன் (1973) வரை பையனாக நடித்தவர் தான் மாஷ்டர் சேகர் இன்று இவர் உயிருடன் இல்லை.
ராமு (1966) படத்தில் அறிமுகமாகி பெற்றால் தான் பிள்ளையா (1967), சபாஷ் தம்பி (1967) ஆகிய படங்களில் நடித்த மாஸ்டர் ராஜ்குமார்.
குழந்தை நட்சத்திரங்கள் சினிமாவில் “ணிiniaturலீ தினீults” என்ற மிகையில் தான் நின்றனர். கொழுந்தங்க வசனமெல்லாம் டயலாக்கா பெரிய மனுஷ தோரணையில் தான்.
குழந்தை நட்சத்திரங்கள் அனைவருமே எதிர் காலத்தில் திரையில் கதாநாயகன் கதாநாயகிகளாக வலம் வருவோம் என்று நம்பியவர்கள் தான்.
கமல் ஹாசன் பதின்வயதில் டான்ஸ் அஸிஸ்டண்ட் ஆக இருந்தார். மாணவன் (1970) படத்தில் நீண்ட இடைவெளிக்குப் பின் குட்டி பத்மினியுடன் ஒரு பாடல் காட்சியில் ஆடிப்பாடினார் ‘விசிலடிச்சான் குஞ்சிகளா குஞ்சிகளா வெம்பிப் பழுத்தப் பிஞ்சுகளாக பிஞ்சுகளா இந்தப் பாடலில் கமலுக்கு ஒரு குளோசப் ஷாட் கூட கிடையாது.
தொடர்ந்து கமல் டான்ஸ் அஸிஸ்டண்ட் ஆகத்தான் கொஞ்சகாலம் அன்னை வேளாங்கண்ணி (1971) யில் அஸிஸ்டண்ட் டைரக்டர் அகில் ஸ்ரீவித்யாவுடன் நடித்த காட்சி படத்தில் இடம்பெறவில்லை. ஜெமினி கணேசன் டைரக்டர் ஸ்ரீதரிடம் கூட்டிக்கொண்டு போனார் கமலைப் பார்த்துவிட்டு ஃபோட்டோஜினிக் ஃபேஸ் கிடையாது என்று அபிப்பிராயப்பட்ட டைரக்டர் ஸ்ரீதர் அஸிஸ்டன்ட் டைரக்டராகச் சேர்த்துக்கொள்ள முடியும் என்று சொன்னாராம்.
குறத்தி மகன் (1972) படத்தில் நிறைய காட்சிகளில் நடிக்க வாய்ப்பே இல்லாமல் முக்கிய ரோல் செய்த செயற்கையான நாடக பாணி நடிகர் மாஸ்டர் ஸ்ரீதரைப் பார்த்து ‘ராஜா வாழ்க’ என்று கோஷம் போட்டுக்கொண்டு நடிக்க வேண்டியதாகிப் போனது.
ஆர். சி. சக்தியிடம் கமல் ‘படத்தில் என்னை கே. எஸ். ஜி. ஒரு ஓரமாக நிறுத்திட்டாருண்ணே’ என்று தேம்பினார்.. அடுத்து அரங்கேற்றம் (1973) படத்தில் நிறைய காட்சிகளில் நடிக்க வேண்டியிருந்தது. முன்னூறு ரூபாய் தான் கொடுத்தார்களாம் பாலச்சந்தரிடம் முறையிட்டபோது அவர் பின்னால் நல்ல சம்பளம் கிடைக்கும் கவலைப்படாதே
சொல்லத்தான் நினைக்கிறேன் (1973) படத்தில் வில்லன் ரோல் அந்தப் படத்தில் ரசிகர்கள் கவனம் பெற்று விட்டார்.
‘அடே டேய களத்தூர் கண்ணம்மாவில் நடிச்ச பயடா
அவள் ஒரு தொடர்கதை (1974) அபூர்வ ராகங்கள் (1975) மன்மதலீலை (1976) அதன் பின் நடந்ததெல்லாம் சரத்திரம்.
1976 ல் நடிகை ஸ்ரீதேவி கமலுடன் மூன்று முடிச்சு படத்தில் நடித்தார். அபூர்வ ராகங்களில் கருதி பேதமாக தலை காட்டிய ரஜினி காந்த் மூன்று முடிச்சில் தேள் கொடுக்கும் போல் வித்தியாசமான வில்லனாக கவனம் பெற்றுவிட்டார்.
குழந்தை நட்சத்திரங்களில் கமல் ஹாசனும் ஸ்ரீதேவியும் மட்டுமே அகில இந்திய அளவில் நட்சத்திரமாக பிரகாசித்து சாதித்துவிட்டார்கள்.

பாடும் நிலா பாலுவின் படு சுட்டித்தனம்

சாதாரணமாக யாரிடமும் கடன் வாங்காத பாலுவின் தந்தை, பாலுவிற்காக கொஞ்சம் பணத்தைக் கடன் வாங்கி வந்தார். பாலுவும் நண்பர்களோடு ஜாலியாக பம்பாய்க்கு சென்று வந்தார். இன்னும் தான் முதன் முதலாகப் பார்த்த வட இந்திய நகரம் பம்பாய்தான்.
கிராமத்திலிருந்து பம்பாய் பட்டணத்துக்குச் சென்று மிகப் பெரிய கட்டடங்களைப் பார்த்து பிரமித்துப் போய் நின்றிருக்கிறார் பாலு. ரெக்கார்டிங்கின் போது பம்பாயில் ஓடிய ஓர் ஆங்கில சண்டைப் படம் பார்த்த நினைவு இருந்தது.
அந்தப் படத்தில் சண்டை போட்டு விழும் நபர்களின் ரத்தம் ஏன் சிவப்பாக தெரியவில்லை என்று பாலுவிற்கு பெரியதாகக் கவலை. பாலு இரவெல்லாம் தூங்காமல் யோசித்துப் பார்த்தும் விடை தெரியவில்லை. கூட வந்த நண்பர்களிடம் கேட்க, அவர்களுக்கும் பதில் சொல்லத் தெரியவில்லை. பாலு தன் சந்தேகத்தை ராதாபதி ஆசிரியரிடம் கேட்க, அவர் கறுப்பு வெள்ளை படத்தில் எப்படி கலர் தெரியும் என்று பதில் கேள்வி கேட்டார்.
அப்போதுதான் தான் பார்த்த படம் கறுப்பு வெள்ளைப் படம் என்பதும் அதில் கலர் தெரியாது என்பதும் பாலுவிற்கு புரிந்தது. பாலு பம்பாய்க்குச் செல்லும் போது கைச்செலவுக்காக பத்து ரூபாய் பணம் கொடுத்து அனுப்பினார். பாலுவின் தந்தை. தான் ஊருக்குச் செல்வதற்காக தன் தந்தை பட்ட கஷ்டங்கள் பாலுவின் மனத்தை உறுத்தின. அவர் கொடுத்தனுப்பியதில் தனக்கு எதுவும் வாங்கிக் கொள்ளாமல் தன் சகோதரிகளுக்கு இரண்டு கவுன் வாங்கிக் கொண்டு போனார் பாலு. பாலுவின் இந்தச் செய்கை அவருக்கு வீட்டில் உள்ளவர்களிடம் நல்ல பெயரை வாங்கித் தந்தது.
காளஹஸ்தியில் இருக்கும் போதுதான் கிரிக்கெட் மீது ஆர்வம் பிறந்த பாலுவிற்கு. பாலுவின் வீட்டிற்கு அருகில் இருந்த மலையின் அடுத்த பக்கத்தில் பெரிய வற்றிய ஏரி ஒன்று இருந்தது. தினமும் கிரிக்கெட் விளையாட நண்பர்களுடன் மலையின் மீது ஏறி அந்தப் பக்கம் போய்விடுவார் பாலு. மலை ஏறி இறங்காமல் அந்த மைதானத்துக்குப் போக சுற்றிக்கொண்டுதான் போக வேண்டும். ஆகையால் தான் இந்த குறுக்கு பாதையிலுள்ள மலையில் தர்ப்பைச் செடி புதராக வளர்ந்து இருக்கும்.
மாலையில் கிரிக்கெட் விளையாடி விட்டு நண்பர்களுடன் மலையில் ஏறி வந்து கொண்டிருந்த போது யாரோ ஒரு கிராமத்து வாசி, மலையில் இருந்த சிக்கி முக்கிக் கற்களை வைத்துக்கொண்டு பீடி பற்ற வைத்துக்கொண்டு போனதை பார்த்தார்கள். பாலுவின் கூட வந்த நண்பன் ஒருவன் பாலுவிடம் “உன்னால் கற்களை வைத்துக்கொண்டு நெருப்பு வரவழைக்க முடியுமா?” என்று கேட்க பாலுவும் சவாலை ஏற்றார்.
தர்ப்பை புதரிலிருந்து தர்ப்பைகளைப் பிடுங்கி ஒரு கட்டாகக் கட்டி கற்களைத் தட்டி நெருப்புப் பொறிகளை உண்டாக்கி தர்ப்பைகளைப் பற்ற வைத்தார். நன்கு காய்ந்த தர்ப்பை பற்றிக் கொண்டது.

காவியமாகிய ஓவியம்

இந்தித் திரை உலகின் பிரபல டைரக்டர் மற்றும் தயாரிப்பாளர் கமால் அம்ரோகி. இவர் பிரான்ஸ் நாட்டிற்கு சென்றிருந்தார். ஒருநாள் பாரீஸ் மாநகர தெருக்களில் சுற்றிக்கொண்டிருந்தார்.
அங்கே ஒரு கலைக்கூடம் அவர் கண்களில் பட்டது. உள்ளே சென்று பார்வையிட்டார். பல்வேறு நாட்டு கலாசாரம். வரலாற்றை விளக்கும் படங்கள் அங்கே வைக்கப்பட்டிருந்தன. அதில் ஒரு ஓவியம் அப்படி அவரை ஈர்த்தது. அருகே சென்று பார்த்தார் அது புகழ் பெற்ற பேரரசி ரசியா சுல்தானா ஓவியம். அதன் கீழ் என்றும் அழியாத காவியம் என்று எழுதப்பட்டிருந்தது.
தத்ரூபமான அந்தப் படத்தை கமால் கண்ணிமைக்காமல் பார்த்தார். ஓவிய ரசியா சுல்தானாவின் தோற்றத்தில் இந்திய நடிகை ஒருவர் தென்படுவதை அவர் உணர்ந்திருக்கிறார்.
மீண்டும் அவர் ரசியா சுல்தானாவின் நீண்ட மூக்கு, அகன்ற விழிகள், பரந்த நெற்றியை பார்த்த போது, அவை அனைத்தும் அவர் நடிகை ஹேமமாலினியிடம் கண்டவை. அப்போதே அவர் ஹேமமாலினியை வைத்து ரசியா சுல்தானா படம் தயாரிக்க வேண்டும் என்று முடிவு செய்துவிட்டார். தயாரித்தார். வெளியிட்டார். அந்த படம் பெரும் வசூலைக் குவித்தது.
ரசியா சுல்தானா சினிமா உருவான விதத்தை அவர் தனது டைரியில் எழுதிவைத்திருக்கிறார். அதில் உள்ள சுவாரஸ்யமான விஷயங்களைத்தான் இங்கே தருகிறோம்.
கமால் நடிகை மீனாகுமாரியின் கணவர். முதலில் திருமணம் செய்து கொண்டு பிரிந்த இவர்கள் மீண்டும் திருமணம் செய்து கொண்டார்கள். கமால் 73 வது வயதில் இறந்தார். மீனாகுமாரியின் கல்லறை அருகிலே தன்னை புதைக்கும்படி கூறினார். அவ்வாறே புதைக்கப்பட்டார்.
இவர் ஹேமமாலினியை புகழின் உச்சிக்கு கொண்டு சென்ற இயக்குனர். அதனால் அவரது மரியாதைக்குரியவராக திகழ்கிறார். சத்யம் சிவம் சுந்தரத்தின் மூலம் ஜீனத் அமனை ராஜ்கபூர் புகழ் ஏணியில் ஏற்றியதுபோல் ஹேமமாலினிக்கு கமால் அமைந்தார்.
ரசியா சுல்தானா படத்தில் ஹேமமாலினிக்கு தேவையான உடைகளை கமால் பல்வேறு பகுதிகளுக்கு நேரில் சென்று வாங்கியிருக்கிறார். முஸ்லிம் அரசிகள் எவ்வாறான உடைகளை அணிந்திருக்கிறார்கள் என்பதை பல்வேறு அருங்காட்சியகத்திற்கு சென்று பார்வையிட்டிருக்கிறார். அதில் ஐதராபாத்தில் உள்ள ஜலர்ஜங் மியூசியமும் ஒன்று. அங்கு முஸ்லிம் அரசிகள் அணிந்த உடைகள், ஆபரணங்கள், அணிகலன்கள் எல்லாம் பார்வைக்கு வைக்கப்பட்டிருக்கின்றன.
அவைகளைப் பார்த்து, அடிப்படையாகக் கொண்டு ரசியா சுல்தானா படத்திற்கு பெரும் பணச் செலவில் ஆடைகளை உருவாக்கியிருக்கிறார்கள். அதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால், அவ்வளவு பொருட் செலவில் உருவாக்கிய ஆடைகளை மீண்டும் மக்கள் பயன்படுத்த முடியவில்லையே என்ற ஆதங்கத்தையும் தன் டைரியில் குறிப்பிட்டிருக்கிறார். அந்த படத்தில் பயன்படுத்திய இறகு பேனாவை, ஹேமமாலினி வெகுகாலம் பயன்படுத்தி வந்தார். தன்னிடம் ஆட்டோகிராப் கேட்ட ரசிகர்களுக்கு அதை பயன்படுத்தி கையெழுத்திட்டார். அதை கமால் பெருமைக்குரிய விஷயமாக கருதியிருக்கிறார்.
ரசியா சுல்தானா படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தபோது அதே கம்பீரத்தோடு ஹேமா நடிக்க காத்திருக்க அருகில் செல்லும் கமால் ‘பேகம் சரியா நீங்கள் உத்தரவு கொடுத்தால் நாம் படப்பிடிப்பை தொடங்கலாம்’ என்று மெல்லிய குரலில் சொல்வாராம். அப்போது உடன் இருப்பவர்கள் எல்லாம் சிரித்துவிடுவார்களாம்.
பின்பு அனைவருமே ஹேமாவை, ரசியா என்று அழைத்திருக்கிறார்கள். முதல் காட்சியில் ஒரு பிரமாண்டமான மாளிகையில் உயர்ந்த சிம்மாசனத்தில் ராணி வேடத்தில் ஹேமாவை உட்காரவைத்திருக்கிறார். உட்கார்ந்ததும் ஹேமாவின் கண்கள் கலங்கிவிட்டனவாம். ‘இயக்குனர் என்னை இன்னொரு உலகத்திற்கே அழைத்துச் சென்றுவிட்டார்” என்று மெய்சிலிர்க்க கூறியிருக்கிறார். அதுவரை அவர் உணர்ந்திராத பரவச அனுபவமாக அது இருந்திருக்கிறது.
படத்திற்காக ரசியாவின் வாழ்க்கை வரலாற்றை பலமுறை கமால் படித்திருக்கிறார். அவருடைய நடை, உடை, பழக்க வழக்கம், உணவு விஷயம் போன்ற அனைத்தையும் கரைத்துக் குடித்து படமாக்கியுள்ளார். அதனால் அந்த கதாபாத்திரத்தை ஏற்று நடித்த ஹேமா, நான் அந்த படத்திற்காக ரசியா சுல்தானாவாகவே வாழ்ந்தேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.
அவருக்கான உடைகளை ஷமீம் வாகாயி என்ற கொஸ்ட்யூம் டிசைனர் உருவாக்கியிருக்கிறார். அவர் தன் திறமை முழுவதையும்ஆடை வடிவமைப்பில் காட்டியுள்ளார். அவர் டிசைன் செய்யும் உடைகள் ஒவ்வொன்றையும் ஹேமாவிடம் கொண்டு செல்லும் கமால், ‘இது உங்களுக்கு பிடித்திருக்கிறதா ரசியா?’ என்று கேட்பாராம். ‘இதை நீ அடுத்த ஷொட்டில் அணியப்போகிறாய். இது உனக்கு அற்புதமாக இருக்கும்” என்று புகழ்ந்து ஆர்வத்தோடு தொடர்ந்து நடிக்க வைத்திருக்கிறார்.
‘ரசியாவாக நடித்த நான், படப்பிடிப்பு முடிந்து வெகு நேரம் ஆன பின்பே இயல்புக்கு வருவேன். பெரும்பாலும் அப்போது ரசியாவாகவே வாழ்ந்தேன். நான் குதிரையில் வேகமாக செல்லும் போது என் கிரீடம் வெயில் பட்டு தகதக்கும். வெற்றியில் படர்ந்த வியர்வை கன்னங்களில் வழியும். அதில் ஒவ்வொரு காட்சியும் மிக யதார்த்தமாக இருந்தது.
நான் எப்போதுமே சிம்பிளாகத்தான் உடை அணிவேன். பெரும்பாலும் நகைகள் அணியமாட்டேன். எனக்கு கம்பீரமான உடை, ஆபரணம் என்று டைரக்டர் அள்ளிப்போட்டு அலங்காரம் செய்தார். கலர்கலராக உடைகளில் தோன்றினேன்.
என்னோடு நடித்த பர்வின்பாபி வழக்கமாக ஆடம்பர ஆடை, அணிகலன் அணியக்கூடியவர். அவரே என்னைப் பார்த்து தன்னைவிட ஆடம்பரமாக அழகாக நான் இருப்பதாக குறிப்பிட்டார். அந்த உடைகளை நான் அணிவதற்கு ரொம்ப நேரமாகும். வியர்த்துப்போகும்” என்கிறார்.
உண்மையில் ரசியா சுல்தானா படத்தில் பலரது உழைப்பு இருந்தாலும் அந்த படம் முழுக்க முழுக்க ஹேமாவை நம்பியே எடுக்கப்பட்டிருக்கிறது. ‘ஹேமா இது உன்னுடைய படம். உன்னுடைய தோற்றம் மட்டுமல்ல, மொழி உச்சரிப்பும் அதற்கு ஏற்றபடி இருக்க வேண்டும்’ என்று கமால், ஹேமாவிற்கு உருது மொழி உச்சரிப்பை கற்றுக்கொடுத்திருக்கிறார்.
அப்போது ஹேமாவிடம், ‘நீங்கள் ரசியாவாக வாழ ஆசையா? ஹேமமாலினியாக வாழ ஆசையா?” என்று கேட்டிருக்கிறார்கள்.
“நான் ஹேமமாலினியாக இருந்து கொண்டே ரசியாவாக நடிக்க விரும்புகிறேன். அதுதான் எனக்கு மகிழ்ச்சி.

Wednesday, September 11, 2013

ஊட்டியில் படப்பிடிப்பின் போது ரகசிய திருமணம் செய்து கொண்டவர் கார்த்திக்

ஊட்டியில் “சோலைக்குயில்” படப்பிடிப்பு நடந்த போது நடிகை ராகினியை ரகசியமாகத் திருமணம் செய்து கொண்டார், கார்த்திக். அவர்களை கேயார் தன் வீட்டுக்கு அழைத்து நிஜமாகவே திருமணம் செய்து வைத்தார்.
இதுபற்றி கேயார் கூறியதாவது:
“கார்த்திக் நல்ல நடிகர். அவரது இயல்பான நடிப்பு பற்றி யாருக்கும் மறு கருத்து இருக்காது. அவர் மட்டும் பிரச்சினைகளுக்கு இடம் தராமல் பார்த்துக் கொண்டிருந்தால், இன்றிருக்கும் சில நடிகர்களுக்கு வாய்ப்பு இல்லாமல் போயிருக்கும்!
1989 இல் “சோலைக்குயில்” படத்தில் நடித்துக் கொண்டிருந்தார். படம் முடிவடையும் நிலையில் இருந்தது. படத்தின் இயக்குனர் திரைப்படக் கல்லூரி மாணவர் ராஜன். தமிழ் மணி தயாரிப்பாளர். முதல் பிரதி அடிப்படையில் நான் நிதி உதவி அளித்திருந்தேன்.
படப்பிடிப்பு ஊட்டியில் நடக்கும் போது கதாநாயகன் கார்த்திக்கும், கதாநாயகி ராகினியும் காதலித்தனர். ரகசியமாக திருமணமும் செய்து கொண்டனர். ஆனால் அதை பகிரங்கமாக அறிவிக்காமல் இருந்தனர். படம் முடிந்ததும், இருவரும் கன்னிமரா ஹோட்டலில் தங்கியிருப்பதாக எனக்கு தெரிய வந்தது.
இருவரையும் என் வீட்டிற்கு அழைத்தேன். கார்த்திக் அப்போது சபரிமலைக்கு மாலை போட்டிருந்தார். அதனால் என் பட்டு வேட்டியைக் கொடுத்து அவரை கட்டிக்கொள்ளச் சொன்னேன். சினிமா மேக்கப் மேன், ஹேர் டிரஸ்ஸரை அழைத்து இருவரையும் புதுப்பெண் மாப்பிள்ளையாக மாற்றியாகிவிட்டது. அப்போது நான் சொன்னேன்; “இது சினிமாவில் வரும் கல்யாணம் மாதிரி ஆகிவிடக்கூடாது.
ஒழுங்காக இந்தப் பெண்ணை வாழ வைக்க வேண்டும்” என்றேன். கார்த்திக் சத்தியமும் செய்தார். அதன் பிறகுதான் பத்திரிகைகளை அழைத்து இதுபற்றி சொன்னேன். தாமதமாக அறிவிக்கக் காரணம், படம் பாதிப்படையக் கூடாது என்பதுதான்” என்று விளக்கமும் கூறினேன்.
“சோலைக்குயில்” படத்துடன் கடைசியில் கார்த்திக் திருமணம் வரவேற்புக் காட்சிகள் இணைத்துக் காட்டப்பட்டன. ஒரு சமயம் அவர் என்னிடம் அவசரமாக ஓடிவந்தார். தலை போகிற அவசரம் என்று ஒரு தொகையை கேட்டார். உண்மையாகவே அவருக்கு ஒரு பிரச்சினை அவருக்கு உதவினேன்.
இவ்வளவு தூரம் என்னுடன் பழகியவர் கார்த்திக். மலையாளத்தில் வெளிவந்த “சல்லாபம்” படத்தை “தொட்டால் பூ மலரும்” என்ற பெயரில் படமாக்க முடிவு செய்தேன். படப்பிடிப்பு பொள்ளாச்சியில் நடைபெறுவதாக இருந்தது. கார்த்திக்குடன் முரளியும் இப்படத்தில் உண்டு.
நானும், படப்பிடிப்புக் குழுவினர் சுமார் 20 பேரும் பொள்ளாச்சி சென்றோம். 2001 ஆகஸ்ட் 6 ஆம் திகதி படப்பிடிப்பு தொடங்குவதாக இருந்து அன்று காலை 7.30 முதல் 9 மணி வரை ராகுகாலம் என்றார்கள். ஆனால் காலை 8.35 மணிக்கு ‘குரு ஓரை’ வருவதாகச் சொன்னார்கள்.
எனவே, ராகுகாலம் பற்றி கவலைப்படாமல், காலை 8.35 மணிக்கு ஒரு விநாயகர் கோவில் முன் படப்பிடிப்பு நடத்த ஆயத்தமாக இருந்தோம். ஆனால் கார்த்திக் வரவில்லை. மறுநாளும் வரவில்லை. மாலையில் வந்தார். எதுவும் எடுக்க முடியவில்லை.
மூன்றாவது நாளும் வரவில்லை. இப்படி நடிகர்கள் வராமல் போனால் வேறு நடிகரைப் போட்டு படத்தை எடுத்து முடிக்கும் சம்பவங்கள் ஏற்கனவே நிறைய நடந்திருக்கின்றன. மாடர்ன் தியேட்டர்ஸ் அதிபரான டி.ஆர். சுந்தரம் கண்டிப்புக்கு போனவர். அவர் “சதி சுலோசனா” என்ற படத்தை அந்தக் காலத்து சூப்பர் ஸ்டார் பி.யு. சின்னப்பாவை கதாநாயகனாகப் போட்டு எடுப்பதாக இருந்தார்.
குறிப்பிட்ட நேரத்தில் சின்னப்பா வரவில்லை. இவ்வளவுக்கும், நடிப்பதற்கான வாய்ப்பு வராததால் சாமியாராகப் போய்விட நினைத்த சின்னப்பாவை, சேலத்திற்கு அழைத்துப்போய், “உத்தமபுத்திரன்” படத்தில் இரட்டை வேடம் கொடுத்து அவரை சூப்பர் ஸ்டார் ஆக்கியவர் டி.ஆர். சுந்தரம்தான். அவர் படத்துக்கே குறித்த நேரத்தில் சின்னப்பா வரவில்லை.
இதனால் கோபம் அடைந்த டி.ஆர். சுந்தரம் என்ன செய்தார் தெரியுமா? மேக்கப் அறைக்குச் சென்றார். அவரே கதாநாயகன் இந்திரஜித்தாக மாறினார்! அதாவது, இந்திரஜித்துக்கு உரிய ‘மேகஅப்’பை போட்டுக்கொண்டு படப்பிடிப்பு தளத்துக்கு வந்தார்.
அவரும், கதாநாயகி கே.எல்.வி. வசந்தாவும் அன்றைய காட்சியை நடித்து முடிந்தனர். படம் தடங்கல் இன்றி வளர்ந்து, குறிப்பிட்ட திகதியில் ரிலீஸ் ஆகியது. கார்த்திக் வராததால் நான் வேறு நடிகரை வைத்து படத்தை எடுத்திருக்கலாம். அதை நான் விரும்பவில்லை.
டி.ஆர். சுந்தரம்போல் நானே கதாநாயகனாக நடிக்கவும் நினைக்கவில்லை! படத்தையே கைவிட தீர்மானித்தேன். பொள்ளாச்சிக்கு வந்திருந்த கலைஞர்களையும், படப்பிடிப்பு குழுவினரையும் திருப்பி அனுப்பி விட்டேன். “ராகு காலத்தில் படத்தைத் தொடங்கினீர்கள். அதுதான் நின்றுவிட்டது” என்று சிலர் கூறினார்கள்.
“நடிகர் நடிக்க வராமல் இருந்ததற்கு, காலத்தின் மீது ஏன் பழி போடுகிaர்கள்?” என்றேன். இந்தப் படத்தை ஆரம்பித்து கைவிட்டதால் எனக்கு 70 இலட்சம் ரூபாய் நஷ்டம். இதுபற்றி நான் கவலைப்படவில்லை. காரணம், இந்தப் படத்தை முக்கால்வாசி எடுத்து அதன் பின் நின்று போயிருந்தால் கோடிக்கணக்கில் அல்லவா நஷ்டம் ஏற்பட்டு இருக்கும்! இந்த சமயத்தில் ஒன்றை குறிப்பிட வேண்டும்.
இந்த “தொட்டால் பூ மலரும்” படத்தில் கதாநாயகனாக நடிப்பதற்கு முதன் முதலாக பேசப்பட்டவர் சேரன். டைரக்டராக புகழ் பெற்ற அவரை, கதாநாயகனாக்கி ஒரு படம் எடுக்க விரும்பினேன். அதற்காக அவருக்கு மலையாளத்தில் வந்த “சல்லாபம்” படத்தைப் போட்டுக்காட்டினேன்.
பிலிம் சேம்பர் தியேட்டரில் படம் பார்த்தார். அவருக்கும் நாயகனாகும் ஆசை இருந்தது. ‘சல்லாபம்’ படம் நகைச்சுவையாகவும் இருக்கும். மனசைத் தொடும் படியாகவும் இருக்கும். ஒரு கிராமத்துக்கு ஒரு பாடகன் வருவான். நன்றாகப் பாடுவான்.
ஆனால் அவன் ஒரு தச்சுவேலை செய்யும் (கார்பெண்டர்) குடும்பத்தைச் சேர்ந்தவன். இது நாயகிக்குத் தெரிந்து விடும். அவனைக் கேலி செய்வாள் ஒரு கட்டத்தில் நிஜமாகவே அவனுக்குள் சங்கீத் ஞானம் இருப்பது தெரியும். அவனது -(:r திறமையை கண்டு அதிசயிப்பாள். அதுவே காதலாக மாறும். இப்படிப்போகும் கதை. இது சேரனுக்கும் பிடித்தது. ஆனால் யாரோ என்னிடம், “சேரனுக்குப் பதில் கார்த்திக்கைப் போடலாம்” என்று சொன்னதும் என் மனம் மாறிவிட்டது.
கார்த்திக்கைப் போடத் தீர்மானித்தேன். ஆரம்பத்தில் எண்ணியபடி சேரனை நடிக்க வைத்திருந்தால் “தொட்டால் பூ மலரும்” படமும் வந்திருக்கும், சேரனை நடிகராக அறிமுகப்படுத்திய பெருமையும் எனக்குக் கிடைத்திருக்கும்” இவ்வாறு கேயார் கூறினார்.

பாடும் நிலா பாலு

ஒருசமயம் திருப்பதியில் படிக்கும் போது ஒரு பள்ளி நாடகத்தில் பெண் வேடம் ஏற்று நாயகியாக அற்புதமாக நடித்துப் பரிசும் வாங்கினார். அந்த நாடகம் மிகவும் சிறப்பாக இருந்தது. அதை வானொலியில் பதிவு செய்யலாம் என்று நடித்த நண்பர்களுடனும் ஆசிரியருடனும் சென்னைக்கு வந்தார் பாலு.
சென்னை மாநகர விஜயம் என்பது ஒருபெரிய கனவாக இருந்த காலம் அது. நகரத்தை வேடிக்கை பார்த்துக் கொண்டே ஆல் இந்தியா ரேடியோவிற்கு வந்து சேர்ந்த நாடகக் குழு ஆல் இந்தியா ரேடியோவிற்குள் நுழைவது அதுதான் முதல் தடவை. குளிரூட்டப்பட்ட அந்தக் கட்டடம் ஏதோ தேவலோகத்தில் நுழைந்த உணர்வையே பாலுவிற்குக் கொடுத்தது.
காலை முழுவதும் ஒத்திகை. ரேடியோவிற்கு சரியில்லாத வார்த்தைகள் மாற்றப்பட்டு ஒத்திகை மீண்டும் மீண்டும் நடந்தது. சோர்வுற்றுப் போன நடிகர்களுக்கு ஆல் இந்தியா ரேடியோ அலுவலக சிற்றுண்டிச் சாலையில் உணவு வழங்கப்பட்டது. நாடகத்தைப் பதிவு செய்யும் அதிகாரி வரும் வரை ஜாலியாக இருந்தது. பிரச்சினை அதிகாரி ரூபத்தில் உள்ளே நுழைந்தது. அங்கே அந்த அதிகாரி வந்ததும் நாடகத்தை ஒரு முறை ஒத்திகை பார்த்தார்கள்.
நாடகம் அவருக்கு மிகவும் பிடித்துப் போய்விட்டது. அவருக்கு நாடகத்தில் பிடிக்காத அம்சம் ஒன்று இருந்தது அதுதான் பாலு. பாலு, பள்ளியில் நடித்த அதே பெண் வேடத்தில்தான் நடித்தார். அங்குதான் பிரச்சினை உருவாயிற்று.
ரேடியோ நிலைய விதிகள் பிரகாரம் ஆண் ஓர் பெண் வேடத்தைத் தாங்கி நடிக்க இயலாது. அந்த அதிகாரி நாடகத்தை பதிவு செய்ய வேண்டுமானால் பாலு நடிக்கக் கூடாது என்று கூற, நாடகம் போட வந்த குழுவிற்கும் அந்த அதிகாரிக்கும் இடையே வாக்குவாதம் ஆரம்பித்தது. ஆல் இந்தியா ரேடியோவின் இயக்குநர் அங்கு வந்து சேர்ந்தார். ஆல் இந்தியா ரேடியோவில் நடித்த நாடகத்தைப் பற்றி எஸ். பி. பி. கூறுகிறார்.
‘ரேடியோ ஸ்டேஷன் இயக்குநர் கேட்பதற்காக எங்கள் நாடகத்தை ஒருமுறை நடித்துக் காட்டினோம். நாடகத்தை ரிக்கார்டிங்கில் அமர்ந்து கவனமாகக் கேட்டார். அவருக்கு என்னுடைய பெண் குரல் மிகவும் நன்றாக இருப்பதாகத் தோன்றியது. எனக்காக முதன் முதலாக ஆல் இந்தியா ரேடியோவின் விதிகள் மாற்றப்பட்டு அதில் நாடகம் ஒலிப்பதிவாயிற்று’ இதை பாலு தனக்குக் கிடைத்த மிகப் பெரிய வெற்றிகளில் ஆல் இந்தியா ரேடியோ நாடக வெற்றியும் ஒன்றே என்று கருதுகிறார்.
நெல்லூரியில் வாழ்ந்து கொண்டிருந்த போது ஏ. ஐ. ஆர். லைட்மியூஸிக் போட்டியில் கலந்துகொள்ள, நண்பர்களின் வற்புறுத்தலால் பெயரைக் கொடுத்தார் பாலு. அவரைப் பாட விஜயவாடா வானொலி நிலையத்தினர் அழைத்தார்கள். அதுவரை மற்றவர்கள் பாடிய சினிமாப் பாடல்களை மட்டுமே பாடி வந்த பாலு புதிதாக தானே ஒரு பாடல் எழுதி அந்தப் பாடலுக்கு டியூன் போட்டு இசையமைத்து பாடிக் கொடுத்துவிட்டு வந்தார்.
ஆல் இந்தியா வானொலி நிலையங்கள் நடத்திய அந்தப் போட்டியில் இரண்டாவதாக வந்தார். ஆல் இந்தியா ரேடியோ பரிசு வாங்க டில்லிக்கு போகலாம் என்று ஆசைப்பட்ட போதுதான், இந்திய சீன யுத்தம் தொடங்கியது. நாடெங்கும், எமர்ஜென்ஸி கொண்டு வரப்பட்டது.
ஆதனால், அந்தப் பரிசை ஆல் இந்தியா ரேடியோ இயக்குநரிடமிருந்து பாலு பெற்றார்.
டில்லியை பார்க்க முடியாது போனதால் கொஞ்சம் வருத்தம். பிற்காலத்தில் பலமுறை டில்லி சென்று பல தேசிய விருதுகளும் பெற்றிருக்கிறார் பாலு. ஒருவேளை பிற்காலத்தில் டில்லி சென்று தேசிய விருதுகளை வாங்கப் போகிறார் என்பதால்தான் அந்த முறை டில்லிக்குப் போக முடியாமல் போயிற்றோ என்னவோ?
நகரி சென்னைக்கும், திருப்பதிக்கும் இடையில் உள்ள ஒரு பெரிய கிராமம். பள்ளி நாட்களில் அங்குதான் வசித்து வந்தார். பாலுவின் குடும்பத்தினர் நகரியில் இருந்தபோதுதான் பாலுவிற்கு ஒரு தங்கை பிறந்தார். ராதாபதி என்ற டீச்சர் ஒருவரிடம் பாலு டியூசன் படித்து வந்தார்.
பாலு ஃபோர்த் பாரம் படிக்கும்போது அந்த டீச்சர் ராதாபதி, நகரியிலிருந்து மாற்றலாகி காளஹஸ்திக்குச் சென்றுவிட்டார். பாலுவிற்கு அவருடைய பிரிவு மிகவும் வருத்தத்தைத் தந்தது. பாலுவின் தந்தை, பாலுவிற்காக தன் குடியிருப்பை நகரியிலிருந்து காளஹஸ்திக்கு மாற்றிக் கொண்டார்.
பாலுவின் டியூஷன் ராதாபதி வாத்தியாரிடமே தொடர்ந்து எஸ். எஸ். எல். சி. வரை பாலு காளஹஸ்தியில் படித்தார். திருப்பதியிலிருந்து 30 மைல் தொலைவில் உள்ள காளஹஸ்தி மூன்று பக்கமும் மலைகளால் சூழப்பட்ட ஊர். ஒரு மலையில் அம்மன் கோயிலும் மற்றொரு மலையில் சுப்பிரமணிய கோயிலும், ஊர் நடுவே சிவன் கோயிலும் உண்டு. பாலு சிறுவயதிலே மிகவும் ஒல்லியாகவும் குள்ளமாகவும் இருந்தார்.
பள்ளிப் படிப்பில் முதலாவது வருவதாலும், தன்னுடைய சங்கீத திறமையாலும் பாலு அப்போதே மாணவர்கள் மத்தியில் மிகவும் பாப்புலர். எப்போது நேரம் கிடைத்தாலும் சரி, உடனே கூச்சமில்லாமல் பாடக் கூடிய வழக்கத்தைக் கொண்டவர் பாலு. பள்ளியில் நடக்கும் பாட்டு, பேச்சுப் போட்டிகள் பாலு இல்லாமல் நடக்காது.
பாலுவின் தந்தை ஒரு கதாகாலட்சேப கலைஞர் என்று கூறியிருந்தோம். அல்லவா? காளஹஸ்திக்கு சுற்றி உள்ள ஊர்களில் கதாகாலட்சேபம் செய்யும் போதெல்லாம் அவருக்கு பின்னணியாக கடம் வாசிப்பது பாலுவின் வழக்கம். இப்படியே நடக்கக் கூடிய காரியங்களைச் செய்து வந்த போதிலும், சிறு வயதினருக்கேயுரிய விஷமங்கள் பாலுவிடம் நிறைய இருந்தன. முக்கியமானது பிடிவாதக் குணம். பாலு படித்து வந்த பள்ளியின் மாணவர்கள் பம்பாய்க்கு பிக்னிக் போக இருந்தார்கள்.
பாலு தானும் கலந்துகொள்வதாக பெயரைக்கொடுத்துவிட்டார். பம்பாய் சென்று வர அப்போது எவ்வளவு பணம் தெரியுமா? முப்பது ரூபாய் அப்போதிருந்த நிலைமையில் முப்பது ரூபாய் என்பது நினைத்துப் பார்க்க முடியாத ஒன்று. பாலுவின் தாயார் பாலுவைக் கடிந்து கொண்டார்கள். பாலு பம்பாய்க்கு போக பிடிவாதமாக இருந்தார். பாலு சாப்பிட மறுத்தார். பாலுவின் தந்தைக்கோ தன் மகனின் ஆசையை நிறைவேற்ற ஆசை.

தொட்டிலிலே பேரன்மார் தூங்குகிற வயதினிலும் கட்டிலிலே நீ கொடுத்த கதையே நினைக்குதடி!

கவிஞர் கண்ணதாசனின் கவி வரி
“சரஸ்வதியின் கையிலுள்ள வீணைபோல் இருக்கிaர்க ளே! உங்களை கவனிக்க யாருமில்லையா?” என்று கவிஞர் கண்ணதாசனிடம் கேட்டவள், அவரிடம் கொஞ்ச நேர உறவுக்காக வந்த பெண்ணொருத்தி. அந்தச் சொல்லே, வசந்தமாளிகை திரைப்படத்தில் “கலைமகள் கைப்பொருளே! உன்னை கவனிக்க ஆளி ல்லையோ! விலையில்லா மாளிகையில் உன்னை மீட்டவும் விரலில்லையோ” என்ற பல்லவியாய்ப் பூத்தது.
கவிஞர் அத்தகைய பெண்களை அன்புடனும் புரிதலுடனுமே அணுகி வந்திருக்கிறார் என்பது அவரு டைய படைப்புகள் வழியாகவும் பாடல்கள் வழியாகவும் நமக்குப் புலப்படுகின்றன.
அவர் பால் இதய அன்பு வைத்து, இன்பம் கொடுத்த பெண்ணொருத்தி இளைய வயதிலேயே இறந்தது குறித்து அவர் எழுதிய இரங்கற்பா ஒன்று ஒப்பற்ற உணர்ச்சிப்படைப்பாய் ஒளிர்கிறது.
நேருவுக்கும், டி.என். ராஜரத்தினம் பிள்ளைக்கும், பெரியாருக்கும், காமராஜருக்கும், அண்ணாவுக்கும், கலைவாணருக்கும் ஆகச் சிறந்த இரங்கற்பாக்களை ஆக்கி, தனக்குத்தானே இருந்து பாடிய இரங்கற் பாவையும் எழுதிக்கொண்ட கவிஞர், பெயர் தெரியாத அந்தப் பெண்ணுக்காகவும் அந்தரங்க சுத்தியுடன் அழுது எழுதிய அஞ்சலிக் கவிதையின் தலைப்பு, “நான் மட்டும் அறிந்த கதை”
“தை மாத மேகமெனத் தள்ளாடும் பூங்கொடியே கையோடு நீயிணைந்தால் கற்பனைகள் ஊறுமடி!
பொங்கு தடந்தோளில் புல்லரித்து வீழ்ந்து விட்டால் தங்குதடை இல்லாமல் தமிழ்ப்பாடல் தோன்றுமடி!
வாழைத் தொடையிரண்டில் வசமிழந்த
வேளையிலே
ஏழைபோல் தோன்றிடுவேன் என்னதான்
விந்தையடி!
செவ்வாயில் ஒரு நிமிடம் ஜீவனுறப்
பாய்ந்துவிட்டால்
தெவ்வாதி தேவருக்கும் தேராத இன்பமடி!
தொட்டிலிலே பேரன்மார் தூங்குகிற வயதினிலும் கட்டிலிலே நீகொடுத்த கதையே நினைக்குதடி!
ஊர்பேர் அறியாமல் உயிர் துறந்த பைங்கிளியே ஊமை மனது மட்டும் உனைத்தேடி வாடுதடி” என்றெல் லாம் எழுதி விட்டு.
“அன்பே உன் ஆன்மா அமைதியுற வேண்டுமென்று என் பாடல் ஒன்று எழுதி முடிந்ததடி” என்று கண்ணீர் அஞ்சலி செலுத்தினார் கவிஞர்.
உரை நடையில் அத்தகைய பெண்களைப் பற்றிச் சொல்கையில், “பொருளாதாரத்தின் பொதுக் குழந்தை கள்” என்றெழுதுவார். தமிழில் பரத்தை என்கிற பிரிவு சங்க இலக்கியம் தொட்டுப் பேசப்பட்டிருக்கிறது. சரியான பொருளில் பார்த்தால், பரத்தையரும் கணிகையரும் வேறு வேறு தகுதிகள் கொண்டவர்கள். பரத்தையரில் ஆடல், பாடல் போன்ற கலைகளில் தேர்ந்தவர்களே கணிகையர்கள் என்றழைக்கப்பட்டனர்.
ஆனால் பரத்தையருக்கான பொதுச் சொல்லாக கணிகை என்ற பெயர் வழங்கலாயிற்று. கண்ணதாசன், மாதவி பற்றிய கவிதையொன்றில் உன்னைக் கணிகை யென் றால் உலகே கணிகைமயம்” என்பார். தகுதி யாலும் குண இயல்புகளாலும், மதிக்கத்தக்க இடத்தை மாதவி பெற்றாள். சிலப்பதிகாரத்தில் மாதவி பற்றிய ஒரு வரி பெரிதும் யோசிக்க வைத்தது. “சிறப்பிற் குன்றா செய்கையிற் பொருந்திய பிறப்பிற் குன்றாப் பெருந்தோள் மடந்தை” என்பார் இளங்கோவடிகள்.
பெண்ணுக்கு மெல்லிய தோள்கள்தானே அழகு! “பெருந்தோள் மடந்தை” என்கிறாரே இளங்கோ! அறிஞர் அ.ச.ஞானசம்பந்தனிடம் கேட்ட போது “சேக்கிழார், திருஞான சம்பந்தரை சிறிய பெருந் தகை என்றது போல்தான் இதுவும்” என்றார் அவர். தோள் வலிமை காக்கும் தொழிலின் அடையாளம்.
தன் நடனத் திறனால் பரிசும் பொன்னும் பெற்று குடும்பத்தைக் காக்கிறாள் மாதவி என்பது கூட அதற் குக் காரணமாயிருக்கலாம்.
நீதி நூல் என்ற அளவில் பரத்தைமையைக் கண்டிக் கத் தலைப்பட்ட வள்ளுவர், சற்று கடுமையாகப் பாடிவிடுகிறார். பொருட்பெண்டிர் பொய்மை முயக்கம் இருட்டறையில் ஏதில் பிணந்தழி இயற்று” என்கிறார். பணத்துக்காகப் பொய்யாகத் தழுவும் பெண்களுடன் உறவு கொள்வது,
இருட்டறையில் அனாதைப் பிணத்துடன் உறவு கொள்வதைப் போன்றது என்று கடுமையாக சாடுகிறார் திருவள்ளுவர். அறிவுலகின் நெடும் பரப்பில் வள்ளுவர் எடுத்து வைத்த இந்த வாதத்தை, கவிஞர் கண்ணதாசன் தான் எதிர்கொள்கிறார்.
அந்தப் பெண்களின் உணர்வுகளுக்கு முதலிடம் தந்து மாற்றுக் கேள்வி எழுப்புகிறார். “தொட்டவுடன் ஒட்டிக்கொள்ள சட்டிப் பானையா?
வந்த தோளுக்கெல்லாம் மாலைபோடக்
காயில் யானையா?” என்கிறார்.

Tuesday, September 3, 2013

பாமரனுக்கும் புரியும் எளிய தமிழ் வார்த்தைகளுடன் அமைந்த சொல்லாட்சி

ரசனையும், ரசிகனும், காலமும், காதலும், கருத்தும், கருவும் நேர வெள்ளத்தில் சில மாற்றங்கள் பெறுகின்றன. வெள்ளத்தில் நீர் பெருகி ஓடினாலும், அதில் நிற்கும் திட மரங்கள் பல உண்டு. அப்படி பட்ட தமிழ் இசை வெள்ளத்தில், அஸ்திவார தூண்களின் பாடல்களில் ஒன்று இன்றைக்கு.
இசை மும்மூர்த்திகள் என்றே இவர்களை சொல்லலாம்: வாலி + டீ. எம். எஸ். + விஸ்வநாதன் ராமமூர்த்தி. இவர்கள் காலத்தில் காலன் வசம் சென்றனர். என்று சொல்வதை விட கற்பக காலத்துள் கலந்தனர் என்றே கூறலாம்.
என்ன தான் மூன்று தெய்வங்கள் இருந்தாலும், தமிழின் தனிக்கடவுள் முருகன். தமிழகத்தின் தனிப் பெரும் அபிமான தலைவர் எம். ஜி. ஆர். இந்த நால்வர் கூட்டணி, நாலா திசையும் பரவி (தமிழ்) நாட்டில் வெற்றி வாகை சூடியது. ஒவ்வொருவராலும் மற்றவர் அடைந்த பயன், நாம் அடையும் மகிழ்ச்சியைப் போன்றது.
படகோட்டி (1964) திரைப்படம். மாணிக்கம் (எம். ஜி. ஆர்.) மற்றும் முத்தழகி (சரோஜா தேவி) வெற்றி ஜோடி நம்பியார் தான் ஜமீன் வில்லன். நாகேஷ், மனோரம்மா சிரிப்பு வெடிகள் என பட்டையை கிளப்பிய வசூல், பட்டி தொட்டி எங்கும் சென்று அடைந்த பாடல்கள் படப்பிடிப்புகள் மிகவும் அழகான கடற்கரைகளில் எடுக்கப்பட்டது.
இசை நால்வர்
எட்டு பாடல்களையும் வாலி வடித்தார். குறிப்பாக இந்த பாடல் ‘தொட்டால் பூ மலரும்’, ஏதோ ஒரு சந்த கவி வடிவத்தின் சாயலில் உள்ளது என்பது என் சந்தேகம். பாமரனுக்கும் புரியும் எளிய தமிழ் வார்த்தைகள். சொல்லாட்சி தான் சிறப்பாக அமைந்துள்ளது. எதுகை மோனை எல்லாம் நச்சென்று உள்ளன. அதுவும் நான்கு நான்கு வரிகளில் வாலியின் ‘சொல் விளையாடல்கள்’ மிளிரும் பாடல் இது. அவர் பேச்சிலும் இது வெளிப்படும்.
இசைக் கோர்வையை மெல்லிசை மன்னர்கள் சேர்த்தனர். பாடல் வரிகளை நம் மனதில் பதிக்கும் வண்ணம் அமைந்த இசை முழு பாடலின் தாளமும், ஒரு கைத்தட்டலில் செல்லும். இப்படி எல்லாம் மெல்ல மெல்ல இசையை அனுபவிக்க தந்ததால் தானோ: மெல்லிசை மன்னர்கள் இந்த படத்தில் வாலி போல, எம். ஜி. ஆர். போல, டி. எம். எஸ்.- சும் ஒரு கதாநாயகன் தான்.
படத்தில் உள்ள ஆறு (ஆண் குரல்) பாடல்களும் அவர் வசம் புரட்சி தலைவருக்கு கச்சிதமாக பொருந்தும் குரல் இரண்டு (பெண் குரல்) பாடல்களையும் பாடியவர் பி. சுசீலா. இரண்டே பாடகர்கள் முழு ஆல்பம் அத்தனையும் முத்துக்கள் இன்றைய காலகட்டத்தில் இருக்கும் நாம் வியக்க வேண்டிய விடயம் தான்.
பாடலின் சிறப் இன்னும் உண்டு. காட்சியமைப்பு நீண்ட நெடும் கடற்கரை தென்னைத் தோப்பு. எதிர் எதிர் திசைகளில் மூச்சிரைக்க ஓடி வரும் காதலர்கள், சந்தித்து பாடும் பாடல் முக உணர்ச்சிகள் காட்டுவதில் கண் அசைவுகளில் சரோஜா தேவி ஆஹா தான்! கை தட்டு வரும் பொழுது எல்லாம், கன்னத்தில் தட்டுவது, என் கண் கவரும் வகையிலான பாடல் இந்தியில் வரும் கோரஸ் மற்றும் நடனம் சபாஷ்.

சாதனை காவியம் நாடோடி மன்னன்

1958 ல் 50 திரையரங்கில் 50 நாள் ஓடி அதிக வசூல் பெற்று (1கோடியே 10 இலட்சம்) சாதனை புரிந்த காவியம் (50 திரையரங்கு என்பது இரண்டாம் வெளியீட்டும் சேர்த்து)
முதன் முதலில் தலைநகர் சென்னையில் மூன்று அரங்கில் 100 காட்சி மேல் தொடர்ந்து ஹவுஸ்ஃபுல் ஆன காவியம்.
சேலம் சித்தேஸ்வரா அரங்கில் வெள்ளிவிழா கண்ட ஒரே படம் இது. புரட்சி நடிகர் கலையுலகில் நடிக்கும் வரை சேலம் நகரில் வெள்ளி விழா கண்ட ஒரே காவியமும் நாடோடி மன்னன் ஒன்றே.
"திருவண்ணமலையில் 100 நாள் கண்ட படமும்! (இரண்டாம் வெளியீட்டில் முதல் முதலில் 100 நாள் கண்ட முதல் காவியமும் இதுவே! அரங்கு கிருஷ்ணா 113 நாள்).
சென்னை கிருஷ்ணா அரங்கில் அதிக நாள் ஒடிய ஒரே காவியம் (3 காட்சியில்) 161 நாள்
இலங்கை மாநகரில் 6 அரங்குகளில் 100 நாள் கண்ட ஒரே காவியம் இது ஒன்றே!
"சிறந்த இயக்குநர் விருது "சினிமாகதிர்" புரட்சி நடிகருக்கு வழங்கியது.
"லண்டன்" தமிழ் சங்கத்தில் கலந்து கொண்ட முதல் தமிழ் காவியம்.
"சிறந்த இயக்குநர் விருது சிங்கப்பூர் பத்திரிகையும் மக்கள் திலகத்திற்கு வழங்கியது.
மும்பை, கல்கத்தா ஆகிய வட இந்தியாவிலும் முதன் முதலில் 50 நாட்களுக்கு மேல் ஓடி சாதனை படைத்த காவியம் நாடோடி மன்னன்.
1958ல் சிறந்த படமாக தேர்ந்து எடுக்கப்பட்ட காவியம்.
"லண்டன்" மாநகர் திரையங்கு ஒன்றில் சுமார் 8 வாரம் ஒடிய ஒரே தமிழ் காவியம் இது ஒன்றே!
ஆந்திர மாநிலமான "சித்தூரில்" 100 நாள் கண்ட ஒரே தமிழ் காவியம் இது ஒன்றே!
முதன் முதலில் ஒரு படத்தின் வெற்றி விழாவை பொது மக்கள் பார்வையில் (தமிழகம் முழுவதும்) கொண்டாடிய முதல் காவியம்! நாடோடி மன்னனே!
"இவர் காவியத்திற்காக புரட்சி நடிகருக்கு 110 "சவரன்" தங்க வாள் பேரறிஞர் அண்ணாவால் வழங்கப்பட்டது. பின் புரட்சி நடிகர் அந்த தங்க வாளை சாமுண்டீஸ்வரி கோயிலுக்கு இலவசமாக வழங்கினார்.
சீர்காழியில் "இன்பக்கனவு" நாடகத்தில் புரட்சி நடிகர் நடித்த போது, கால் உடைந்து பல மாதங்கள் ஓய்வு எடுக்க டொக்டர்கள் சொன்னதால் 31.12.1959 அன்று தான் புரட்சி நடிகர் நடித்த 'தாய் மகளுக்கு கட்டிய தாலி' படம் வெளிவந்தது. ஆகையால் 1959 ம் ஆண்டும் 'நாடோடி மன்னன்' தமிழகம் முழுவதும் வசூலை வாரி தந்தது.
ஒரு முன்னணி (கதாநாயகன்) நடிகராகயிருந்து முதன் முதலில் தயாரித்து இயக்கிய வெற்றி படமாக்க தந்தவர் புரட்சி நடிகரே.
நடிகை அபிநய சரஸ்வதி பி. சரோஜாதேவி அறிமுகமான முதல் படம். பி. சரோஜாதேவி பின் நாளில் 26 படங்களில் மக்கள் திலகத்துடன் கதாநாயகியாக நடித்தார்.
"பாதி கறுப்பு வெள்ளை, பாதி கலர் படமாக முதல் முதலில் வெளிவந்த படம்.
அதிக நேரம் (நான்கு மணி நேரம்) ஓடிய படம் இன்று வரை நாடோடி மன்னன் மட்டுமே.
"தமிழ் மொழியின் சிறப்பை உணர்த்தும் பாடல் டைட்டில் சாங்ஸ், (செந்தமிழே வணக்கம்) உழைப்பை உணர்த்தும் பாடல் (உழைப்பதிலா), சோம்பேறி தனத்தை சாடும் பாடல் (தூங்காதே தம்பி) ஆக மூன்று கருத்துக்கள் உணர்த்தும் பாடல்கள் அமைந்த ஒரே காவியம்.
அரண்மனை சிறைசாலையில் கீழ் தளத்திலிருந்து மேல் தளத்திற்கு ஒரு பெரிய குழாயின் மூலமாக இரு புரட்சிகாரர்கள் (புரட்சி நடிகரும்- பானுமதியும்) தொடர்பு கொள்வது எப்படி என்பது பற்றி புதுமையான முறையில் அன்றைக்கு கெமராவில் எடுத்துக் காட்டிய காவியம் நாடோடி.
மன்னன் "ஒரே நடிகர் இரு வேடங்களில் நடித்து படங்களில் இடம்பெறும் ஒரே காட்சியில் இருவரும் கை கொடுப்பது முகத்தை தொட்டு பேசுவதும் போன்ற புதுமையான காட்சிகள் இடம் பெற்ற முதல் தமிழ்க் காவியம்.
"10-க்கும் மேற்பட்ட பாடல்கள் (ஹிட் சாங்ஸ்) அனைத்தும் இன்றைக்கு ரகசிகர்கள் மத்தியில் ஒலித்து கொண்டிருக்கும் சாதனை காவியம் நாடோடி மன்னன்.
"கண்ணாடி மாளிகை சண்டை காட்சியில் கண்ணாடி முழுவதும் தூள் துள்ளாக உடைந்து சிதறுவது போல ஆங்கில படத்துக்கு இணையாக (அதிக செலவு) எடுத்த காவியம்.
"அரண்மனையில் மன்னர்கள் ரகசிய வழியில் (சுரங்க பாதை) செல்வது எப்படி என்பதை பிரமிக்க கூடிய அளவுக்கு காண்பித்த காவியம்.
"கதாநாயகி (பானுமதி) இறந்துவிட்டு செய்தி படத்தில் காண்பிக்கும் பாணி, ஒரு பணிப் பெண் பால் பாத்திரத்தை கொண்டு வரும் போது, கதாநாயகன் எதிரே ஓடி வந்ததால் அந்த பால் கீழே கொட்டிவிடுகிறது.
மேலே ஒரு வரைபடத்தில் அம்பு பட்டமான் இறந்து கிடப்பது போல காண்பிப்பார்கள். புதுமையான முறையில் காட்சியை உருவாக்கும் முறையில் முழு வெற்றியை தந்த காவியம் இன்றைக்கும் இந்த காட்சி திரையரங்கில் கைதட்டல் பெறும்.
தமிழகத்தில் வெளிவந்த ஒரு திரைப்படத்திற்கு சிங்கப்பூரில் வெளிவரும் 'இந்தியன் மூவி நீயூஸ்' என்ற இதழ் முதல் முதலில் நாடோடி மன்னனுக்கு சிறப்பு மலர் வெளியிட்டது.
தமிழகத்தில் நாடோடி மன்னன் காவியத்திற்கு 10 க்கும் மேற்பட்ட பத்திரிகைகள் சிறப்பு மலர் வெளியிட்டன.
தமிழகத்தில் வெளிவந்த அனைத்து பத்திரிகைளில் நாடோடி மன்னன் காவியத்திற்கு அதிக விமர்சனம் (பாராட்டு) கிடைத்தது.
4 மணி நேரம் ஓடுகின்ற திரைப்படத்தில் சிக்கலே இல்லாத கதை அமைப்பு கொண்டது.
ஒரு பாமரனுக்கும் புரிகின்ற அளவுக்கு எளிமையான முறையில் வலுவான கருத்துகளோடு அமைத்து திறமையாக இயற்றி வெற்றி வாகை சூடிய காவியம்.
"வசனத்தில் புதுமை புரட்சி கருத்துக்கள், சிறை அனுபவங்கள், ராஜ தந்திரங்கள், நகைச்சுவை, காதல், அன்பு, சகோதரி, சகோதரன் போன்ற பல விதமான பாத்திரங்களுக்கு சிறப்பாக வசனங்கள் அமைந்த காவியம் நாடோடி மன்னன்.
முதலில் "அரசியல் கட்சி கொடியை ஆரவாரத்துடன் பறக்க விட்டு வெளிவந்த காவியம் இது!

பாடும் நிலா பாலு

SPB எம்.ஜி. ஆரைப் பற்றிய பேச்சு வரும் போதெல்லாம், இந்த நிகழ்சியைச் சொல்லிச் சொல்லி மகிழ்வார். எம்.ஜி.ஆரின் பெயர் இன்னும் கொடி கட்டிப் பறப்பதற்குக் காரணம், பலரின் வாழ்வில் இப்படிப்பட்ட சமயங்களில் அவர் பழக முடிந்ததும் ஒரு காரணமாகும்.
பாட்டுப் பாடுவது பாலுவின் ரத்தத்திலே ஊறியது. சிறுவயதில் ஸ்கூலில் ப்ரேயர் பாடும்போது, பாலு உடன்பாடுவது வழக்கம். தனியாக வகுப்புகளில் பாலுவைப் பாடச் சொல்லிக் கேட்பதும் உண்டு. இவ்வளவு கம்பீரமாக இருக்கும் பாலுவின் குரல், மிகவும் மென்மையாயிருந்த காலம் அது பெண்ணின் சாயல் உள்ள குரலில் பாலுபாடுவது வழக்கம்.
அந்தக் காலத்தில் ஜி. சுசிலா,ஷி. ஜானகி பாடல்களை பாலு அப்படியே பாடி, எல்லாரையும் மகிழவைப்பார். அதுமட்டுமன்றி, படிப்பிலும் வெகுசுட்டி தன் பாட்டை மற்றவர்கள் ரசிக்கிறார்கள். அதைப் போல, தான் தன் குரலைக் கேட்க முடியவில்லையே என்ற ஏக்கம், பாலுவின் மனதில் நிறைய இருந்தது. இப்பொழுது போல டேப் ரிக்கார்டர்கள் அதிகப் பிரபலமாகாத காலம் அது.
பெரிய டேப்ரிக்கார்டர்கள் மட்டுமே உண்டு. அதுவும் மிகவும் கோஸ்டலியான டேப் ரிக்கார்டர்கள். சாதாரணமானவர்கள் வீட்டில் வைத்துக் கொள்ள முடியாத அளவிற்கு விலை உயர்ந்தவை.
பாலு படித்த பள்ளியில், ஒரு டேப்ரிக்கார்டர் வாங்கினார்கள். அந்தப் பள்ளியில் பிஸிக்ஸ் வாத்தியராக இருந்த மிஞிஷி என்பவர் பாலுவின் குரல் மீது மிகவும் பாசம் வைத்திருந்தார்.
ஒரு நாள் பாலுவை அழைத்து, பாலுவைப் பாடச் சொல்லி அதை டேப் செய்யப் போவதாகச் சொன்னவுடன், பாலுவின் மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை. பள்ளிக்கூடம் முடிந்தவுடன் பாலு பயபக்தியோடு டேப் ரிக்கார்டர் முன்பு அமர்ந்து 'அன்னலக்ஷமி' என்ற தெலுங்குப் படத்தில் பி. சுசிலா, பிரஹலாதன் கதாபாத்திரத்திற்குப் பாடிய பாடலைப் பாடினார்.
பாலு பாடியதைப் பதிவு செய்து மீண்டும் அவருக்குப் போட்டுக் காட்டினார். மிஞிஷி முதன் முதலாக தான் பாடிய பாடலைத் தன் குரலில் டேப்ரிக்கார்டரில் கேட்ட போது, பாலு அடைந்த மகிழ்ச்சிக்கு அளவேயில்லை இன்றளவும் அந்தப் பாட்டு பாலுவின் காதுகளில் ரீங்காரமிட்டுக் கொண்டிருக்கிறது. அதற்குப் பிறகு எவ்வளவோ முறை பாலு தான் பாடிய பாடலை, பல இடங்களில் கேட்டிருந்த போதும் இன்றளவும் பாலுவின் வாழ்க்கையில் மிக மகிழச்சியான நேரம், டேப்ரிக்கார்டரில் தன் குரலைக் கேட்டதுதான் என்று நினைவு கூர்கிறார்.
டேப்பில் பாடிய பாடலால் பாலு ஒரு சிக்கலில் சிக்கிக் கொண்டார். அந்தப் பாடலைப் போட்டுக் கேட்டுவிட்டு பள்ளிக்கு ஒரு பிரமுகர் விஜயத்தின் போது தனியாக 'மைக்' முன்னால் நின்று ப்ரேயர் பாடும் பொறுப்பை பாலுவிடம் ஒப்படைத்தார் பள்ளி ஆசிரியர். பள்ளியில் பாடப்படும் ப்ரேயர் மொத்தம் 25 ஸ்லோகங்கள் கொண்டது.
அதில் நான்கு அல்லது ஆறு ஸ்லோகங்களை மாற்றி மாற்றிப் பாடுவது வழக்கம். ஒவ்வொரு செட் ஸ்லோகமும், ஒவ்வொரு ராகத்தில் அமைந்தவை பாலுவிற்கு தன்னை பாடச் சொன்னதில் மிகவும் சந்தோஷம் இரண்டு நாட்கள் விடாமல் வீட்டில் பயிற்சி செய்துவிட்டுப் பள்ளிக்கு வந்தார். பள்ளியில் பிரமுகரை வரவேற்க ஏக ஏற்பாடுகளை மேடை ஏறிப் பாடப்போகும் பாலுவிற்கு தனி உபசாரம் பிரமுகரும் வந்தார்.
மேடையில் அவரும், பள்ளி ஹெட்மாஸ்டாரும் மேடைக்குச் சென்று அமர்ந்தனர். பாலுவுக்கு திடீரென்று ஒரு பயம் வந்தது. தன்னால் சரியாகப் பாட முடியுமோ என்ற அவநம்பிக்கை ஒரே ஒரு கணம்தான் இருந்தது மைக்கில் ப்ரேயர் பாடுபவர் ஷி.ஜி பாலசுப்பிரமணியன் என்று கூறப்பட்டது.
காதில் விழுந்தது இயந்திரத்தனமாக மேடை ஏறி மைக்முன்பு நின்றார் பாலு தான் பாடப் போகும் பாடல்களில் வரும் கடவுள்கள் அனைவரையும் தன் கண் முன்பு கொண்டு நிறுத்திப் பாட ஆரம்பித்தார்.
ப்ரேயர் என்பதால் எல்லோரும் நின்றுக் கொண்டிருந்தார்கள் கண்களை மூடியவாறு பாடிக் கொண்டிருந்த பாலுவிற்கு, தன் நண்பர்களும், ஆசிரியர்களும், விழாவிற்கு வருகை தந்த பிரமுகர்களும் நின்று கொண்டிருந்தது தெரியவில்லை. ஒவ்வொரு ஸ்லோகத்துக்கும் ராகம் பேட்டுப் பாடிக் கொண்டேயிருந்தார் பாலு. எல்லாரும் நின்று கொண்டிருந்தார்கள். நேரம் ஓடிக் கொண்டிருந்தது. விடாமல் பாலுவும் பாடிக் கொண்டிருந்தார்.
அந்த இறைவணக்க நிகழ்ச்சியையே 35 நிமிடம் அற்புதமாகப் பாடி ஸ்தம்பிக்க வைத்து விட்டார் ஷிஜிகி. ஆம், உலக சாதனைப் புத்தகங்களில் இடம்பெறும் அளவிற்கு 35 நிமிடங்கள் இறை வணக்கம் பாடிய ஒரே நபர் பாலுவாகத்தான் இருக்க முடியும். இறைவணக்கம் முடிந்ததும் ஒரு பெரிய கரகோஷம் தன் பாடலக்குத்தான் கிடைத்தது.
என்று நினைத்து பெருமிதத்தோடு, தன்னிருக்கைக்குத் திரும்பிய பாலுவிற்கு எல்லாரிடமிருந்தும் திட்டுக் கிடைக்க ஆரம்பித்து விடவே அப்பொழுதுதான், தான் செய்த தவறு புரிந்தது. இன்று யாராவது பாலுவை ஏதாவது ஒரு நிகழ்ச்சிக்கு இறைவணக்கம் பாடச் சொன்னால் அவர் எடுத்துக் கொள்ளும் மொத்த நேரம் ஒரு நிமிடத்திற்கும் குறைவாகவேயிருக்கும்.
இந்தக் கட்டுரை நூலுக்காக, பாலுவைச் சந்திக்கச் சென்று பேசும் போது, அவர் மனதில் தன்னுடைய இளம் பிராய நினைவுகள் அலைமோதின. பாலுவின் தந்தை ஒரு கதாகாலட்சேப விற்பன்னர் அவருடைய இசைஞானம் தான் பாலுவின் உடலில் ஓடிக் கொண்டிருக்கிறது. எந்தப் பாட்டைக் கேட்டாலும் உடனே பாடக் கூடிய ஓர் அரிய திறமை பாலுவிற்கு சிறுவயது முதல் இருந்து வருகிறது.
பாலுவின் வீட்டில் ரேடியோ இல்லை. ரேடியோ வைத்துக் கொள்ளும் அளவிற்கு வசதியும் இல்லை. பக்கத்து வீட்டு ரேடியோ பெட்டிகள் ஒலிபரப்பிடும் பாடல்கள்தான் பாலுவின் வேட்கைக்கு வடிகாலாக இருந்தது. 1961ம் ஆண்டு பாலுவின் மூத்த சகோதரர் திருமணத்திற்கு பிறகுதான் முதன்முதலில் ரேடியோ வாங்கியதாக பாலு நினைவு கூர்கிறார்.
சிறுவயதில் அவர் நினைவிற்குத் தெரிந்து பார்த்த முதல் படம் 'லைலாமஜ்னு' ஆனால் சினிமா பார்ப்பதைப் பற்றி பாலு மறக்காமல் இருக்க இன்னொரு சம்பவம் உண்டு நெல்லூரில் ஏ. நாகேஸ்வர ராவ் நடித்த "ஸ்வர்ண சுந்தரி' என்ற படத்திற்கு, பாலு சிறுவனாக இருந்த போது வீட்டோடு சென்ற போது அந்த படத்தில் ஏ. நாகேஸ்வரராவை வில்லன்கள் அடிக்கும், சீனைக் கண்டு மிரண்டும் போய் அழுதிருக்கிறார்.
அதுமட்டுமன்றி, அந்தத் தியேட்டர் ஏ. நாகேஸ்வரராவை அடிப்பதற்காகவே கட்டப்பட்ட தியேட்டராக நினைத்து அதற்குப் பிறகு பல ஆண்டுகள் அந்தத் தியேட்டருக்கு போவதற்கே தயங்கியிருக்கிறார் பாலு சிறுவனாக இருந்து பார்த்து, மகிழ்ந்த ஏ நாகேஸ்வரராவிற்கே பிற்காலத்தில் பல படங்களில் பாலு பாட நேர்ந்ததை, தன் வாழ்வில் மறக்க முடியாத கருதுகிறார். பாலு ஏ. நாகேஸ்வரராவிற்கு பல பிரபலமான பாடல்கள் பாடிய பின்னணியில் ஒரு சுவையான கதையிருக்கிறது.
சின்ன வயசிலிருந்தே பாலுவிற்கு கூச்ச சுபாவம் அதிகம் இருந்ததில்லை. எப்போதும், யார் பாடச் சொன்னாலும், தயங்காமல் பாடத் தொடங்குவது வழக்கம்.
இது சிறு வயது முதலே அவருக்கு நிறைய நண்பர்களைத் தேடித் தந்தது. அவர் பள்ளியில் நடக்கும் எல்லாப் பாடல் போட்டிகளிலும் கலந்து கொண்டு பரிசு பெறுவது என்பது சாதாரணமான ஒன்று பள்ளி நாடகங்களையும் விட்டு வைக்கவில்லை பாலு.