Friday, January 25, 2019

சிங்களத் திரையுலக வளர்ச்சியில் மஸ்தான்

சிங்களத் திரையுலக  வளர்ச்சிக்குப் பல்வேறு சமூகத்தைச் சார்ந்தவர்களும் பங்களிப்பு நல்கியதை வரலாறு கூறுகிறது! அவ்வாறு அக்கால சிங்கள சினிமாவில் முத்திரை பதித்த ஒருவர்தான் எம்.மஸ்தான். இந்தியாவில் சென்னையில் பிறந்த அவரை நாவலப்பிட்டியில் கடை வைத்திருந்த அவரது
தந்தை இளவயதிலேயே இலங்கைக்குக் கூட்டிவந்ததோடு இங்கேயே படிக்க வைத்திருக்கிறார். மீண்டும் அவர் சென்னை சென்று தமிழ்த் திரையுலகில் சாதனை படைத்த "வேலைக்காரி" "மர்மயோகி" போன்ற பலபடங்களில் கெமராமேனாகப் பணியாற்றியிருக்கிறார்!

சிங்களத் திரைப்படங்கள் இந்தியாவில் தயாராகிவந்த யுகத்தில் 1947ல் தயாரிக்கப்பட்ட இரண்டாவது சிங்களப் படமான "அசோக மாலா" என்ற படத்தில் கெமராமேனாகப் பணிபுரிந்தவர் மஸ்தான்!

தொடர்ந்து 1953ல் திரையிடப்பட்ட 'சுஜாதா ' படத்திலும் கெமராவை இயக்கியவரும் அவரே! இயக்குநராக அவர் முதலில் இயக்கிய
சிங்களத் திரைப்படம் 1957ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 14ஆம் திகதி திரையிடப்பட்ட " சுகுமலீ". இலங்கையில் சிங்களத் திரையுலக முன்னோடிகளில் ஒருவரான கே.குணரத்னத்தினால்
ஹெந்தலையில் 'விஜய ஸ்டூடியோ ' நிர்மாணிக்கப்பட்டதும் இலங்கைக்கு வரவழைக்கப்பட்ட அவர் 1963ல் 'அதட்ட வெடிய ஹெடஹொந்தாய்' மற்றும் 'உடரட்ட மெனிகே' 1964ல் 'தீவரயோ' 1965ல் 'அல்லப்பு கெதர' 1968ல் 'அட்டவன புதுமய' 1970ல் 'ஆத்மபூஜா' ஆகிய வெற்றிப்படங்களை இயக்கி வெளியிட்டார்!
இலங்கையின் சிங்களத் திரையுலகின் முன்னணிக் கதாநாயகனாகத் திகழ்ந்த
காமினி பொன்சேகாவைச் சிகரம் தொட வைத்த சிறந்த படங்களில் ஒன்றாக மஸ்தானின் 'தீவரயோ' அமைந்தது. அதேபோல் 'அபூர்வ சகோதரர்கள்' எனும் ஒட்டிப்பிறந்த இரட்டையரின் கதையை  இயக்கிக் கொண்டிருந்த வேளையில் 1968ல் குடிவரவுக் குடியகல்வுச் சட்டவிதிகளுக்கமைய மஸ்தான் இந்தியா செல்ல நேரிட்டதால் அப்படத்தை அதில் இரட்டை வேடத்தில் தோன்றிய காமினி பொன்சேக்காவே இயக்கி முடித்து 1970ல் திரையிட்டார்!
1983ல் நிகழ்ந்த இன வன்முறைகளின்போது ஸ்டுடியோக்களுக்கெல்லாம் தீ வைக்கப்பட்டபோது மஸ்தான் இயக்கிய அருமையான படங்கள் உட்பட அனேகம் தீக்கிரையானது சிங்களத் திரையுலகுக்கு ஈடு செய்ய முடியாத இழப்பு.

மஸ்தான் 1996ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 17ஆம் திகதி இந்தியாவில் காலமானார் என அறிய முடிகிறது.

பேபி மீனாவுக்கு ஒரு பேபி




தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் மீனா. நடிகர் விஜயகுமார் சொந்தமாக தயாரித்த ‘நெஞ்சங்கள்’ படத்தில் சிவாஜிகணேசன் – மஞ்சுளா தம்பதியின் மகளாக நடித்திருந்த மீனா பல தெலுங்கு, மலையாளப் படங்களிலும் குழந்தை நட்சத்திரமாக நடித்திருக்கிறார். நடிகை மீனா குட்டிப் பெண்ணாக நடித்த “அன்­புள்ள ரஜி­னிகாந்த்” படத்தினை கே.நட்ராஜ் இயக்கியிருந்தார்.
ரஜனிகாந்த் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். இப்படம் பெரும் வரவேற்பைப் பெற்றதுடன் இவருக்கும் பெரும் புகழைப் பெற்றுக்கொடுத்தது. ‘எங்கேயோ கேட்ட குரல்’, ‘தீர்ப்புகள் திருத்தப்படலாம்’, ’பார்வையின் மறுபக்கம்’, ‘தண்டிக்கப்பட்ட நியாயங்கள்’, ‘சுமங்கலி’, ‘திருப்பம்’, ‘பன்னீர் நதிகள்’ , ‘உயிரே உனக்காக’ , ‘லட்சுமி வந்தாச்சு’ , ‘கெட்டி மேளம்’ போன்ற படங்களில் இவர் குழந்தை நட்சத்திரமாக நடித்தார்.
அதன் பின்னர் பல முன்னணி நடிகர்களுடன் கதாநாயகியாக ஜோடி சேர்ந்து பிரபலமானார். ராஜ்கிரணின் என் ராசாவின் மனசிலே படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர். முதல் படத்திலேயே பரவலாக கவனிக்கபட்ட அவர் அடுத்ததாக ரஜினியின் எஜமான் படத்தில் நடித்து பெரும் புகழ் பெற்றார். எஜமான் வெளியான வருடமான 1993-இல் மீனாவிற்கு வயது 17 தான். அப்போழுது அவருடைய உடல் பூரிப்பை கண்ட பத்திரிகைகள் அவர் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோனுக்கு ஸ்டீராய்டு மருந்து எடுத்துக் கொண்டார் என பரபரப்பாக எழுதின. அப்போதேல்லாம் பதின்மவயதுக்காரர்களின் கனவுக்கன்னி மீனா. அந்த தெத்துப் பல் அவருக்கு மிகப்பெரிய பிளஸ். முத்து, வீரா, அவ்வை சண்முகி போன்ற படங்களின் மூலம் தமிழ் மக்களைக் கவர்ந்தவர் மீனா.
இவருடைய நடிப்புக்கென்று தனி ரசிகர்கள் கூட்டமே உண்டு. திருமணத்திற்குப் பிறகு இவர் நடிப்புக்கு முழுக்கு போட்டிருந்தார். நீண்ட இடைவெளிக்குப் பின் மலையாளத்தில் நடித்தார். கடந்த வருடம் வெளியாகி வசூல் சாதனை படைத்த திரைப்படம் ‘த்ரிஷ்யம்’. இதில் மோகன்லாலுக்கு மனைவியாக மீனா நடித்திருந்தார். அப்படம் 150 நாட்களைக் கடந்து வெற்றிகரமாக ஓடியது.
விமர்சகர்களின் பாராட்டையும் பெற்றார். ‘த்ரிஷ்யம்’ படத்தின் தெலுங்கு ரீமேக்கிலும் மீனாவே அந்த கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருந்தார். நாயகனாக வெங்கடேஷ் நடித்திருக்க, நடிகை ஸ்ரீப்ரியா இயக்கியிருந்தார்.
தெலுங்கு த்ரிஷ்யமும் ஹிட் ஆனது. இந்த திரைப்படத்தை பார்த்த நடிகர் ரஜினி, மலையாளம் மற்றும் தெலுங்கு த்ரிஷ்யம் படங்களில் நடித்த மீனாவையும், தெலுங்கில் இயக்கிய ஸ்ரீப்ரியாவையும், லிங்கா படப்பிடிப்பு நடக்கும் இடத்திற்கு நேரில் அழைத்து பாராட்டினார்.
90-களிலிருந்து 2009 வரை முன்னணி நடிகையாக வலம் வந்தவர். தன் அழகாலும் குடும்பபாங்கான முகத்தோற்றதாலும் சிறந்த நடிப்பாலும் தமிழ் மக்கள் மனத்தில் தனி இடம்பிடித்தவர்.
பெங்களூரில் வசிக்கும் மென்பொருள் பொறியியலாளர் வித்யாசாகரைத் திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு நைனிகா என்ற ஒரு மகள். இவரது தாயார் ராஜ் மல்லிகாவும், சித்தி ராஜ்கோகிலாவும் நடிகைகளாக ஜொலித்தவர்கள். இவரது தந்தை துரைராஜ். துரைராஜ் பாடசாலை ஆசிரியராக பணியாற்றியவர்! இவர் தனது 67-ஆவது வயதில் 20.6.2014-இல் காலமாகிவிட்டார்.
1976-ஆம் ஆண்டில் பிறந்த மீனாவுக்கு தற்போது வயது 42. விஜய்யின் ‘தெறி’ படத்தில் அவருக்கு மகளாக மீனாவின் மகள் நைனிகா நடித்திருந்தார். இது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது.
மீனா கலைமாமணி விருது, கிருஷ்ண தேவராயர் விருது, உகாதி புரஸ்கார் விருது, சிறந்த தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னட நடிகைக்கான விருது , நந்தி விருது உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றுள்ளார்.

திரைப்பட வரலாற்றில் சாதனையாக தடம் பதித்த "தங்கப் பதக்கம்"


‘இரண்டில் ஒன்று’ என்ற நாடகத்தை

கொண்டு தயாரிக்கப்பட்டது



காவல் துறை அதிகாரியின் கடமை உணர்வை மையப்படுத்தி மகேந்திரன் கதை ஒன்றை எழுதினார். மகனுக்கும் தந்தைக்கும் இடையே நடக்கும் பாசப் போராட்டத்தைக் கருவாகக் கொண்ட அந்தக் கதையை நாடகமாக அரங்கேற்றினார் செந்தாமரை.
‘இரண்டில் ஒன்று’ என்ற தலைப்பில் அரங்கேறிய நாடகம் மக்களிடம் வரவேற்பைப் பெற்றது. சபாக்களில் இந்த நாடகத்துக்கு ‘முதல் மரியாதை’ கிடைத்தது. ஒரு முறை சென்னை அண்ணாமலை அரங்கில் நாடகத்தைப் பார்த்த சிவாஜி, நாடகக் கதையில் தன்னைத் தொலைத்தார். தனக்கு ஏற்ற கதாபாத்திரம் இருப்பதை உணர்ந்த சிவாஜி, தனது நாடக மன்றத்தின் மூலம் ‘இரண்டில் ஒன்று’ நாடகத்தை அரங்கேற்ற விரும்பினார்.
தனது விருப்பத்தை செந்தாமரையிடம் தெரிவித்த சிவாஜி, கதையின் உரிமத்தை சிவாஜி நாடக மன்றதுக்கு வாங்கிக்கொண்டார். கதையில் சில மாற்றங்களைச் செய்து, தனக்கு ஏற்றவாறு கதாபாத்திரத்தை உருவாக்கி ‘தங்கப் பதக்கம்’ என்ற பெயரில் சிவாஜி அரங்கேற்றினார். காவல் துறை அதிகாரியாகத் தோன்றிய சிவாஜி கதாபாத்திரத்துக்குக் காவல் துறை அதிகாரி அருளனின் நடை, உடை, பாவணைகளைத் தனது ஒப்பனையில் காட்டினார்.
சிவாஜியின் கம்பீரமான நடிப்பில் நாடகம் பெரும் வரவேற்பைப் பெற்றிட சென்னையில் பிரபலமாக இருந்த அத்தனை சபாக்களும் தங்கள் அரங்கில் ‘தங்கப் பதக்கம்’ நாடகத்தை அரங்கேற்ற போட்டா போட்டி போட்டன. பிரபல அரசியல் தலைவர்கள், காவல் துறை அதிகாரிகள், நீதிபதிகள், திரையுலகக் கலைஞர்கள் ஆகியோர் சிவாஜி காட்டிய கம்பீரத்தில் மிரண்டுபோனார்கள்.
சிவாஜியின் நடிப்பில் மைல்கல்லாய் ஆவணம் கண்ட ‘தங்கப் பதக்கம்’ நாடகத்தைப் படமாகத் தயாரிக்க சிவாஜி புரொடக்‌ஷன்ஸ் முடிவு செய்தது. ‘வியட்நாம் வீடு’, ‘புதிய பறவை’க்குப் பின் சிவாஜி கலைக்கூடம் ‘தங்கப் பதக்கம்’ நாடகத்தைப் படமாக்க கையில் எடுத்தது. படத்தை பி. மாதவன் இயக்கினார். 01-06-1974 அன்று படம் வெளியானது. படம் பெரும் வெற்றி பெற்றது. ‘தங்கப் பதக்க’த்தின் வெற்றி விழாக்கள் பல்வேறு ஊர்களில் நடைபெற்றன.
‘பராசக்தி’, ‘மனோகரா’, ‘கட்டபொம்மன்’, ‘வியட்நாம் வீடு’ போன்ற நாடகங்கள் சிவாஜியின் நடிப்பில் திரைப்படங்களாக வெளிவந்தபோது திரைப்பட வரலாற்றில் சாதனைகளாகத் தடம் பதித்தன. அந்த வரிசையில் ‘தங்கப் பதக்க’மும் இடம் பிடித்தது.
காவல் துறைக்கு அங்கீகாரம் கொடுத்த படமாக ‘தங்கப் பதக்கம்’ திகழ்ந்ததால் துறை சார்பில் நடைபெற்ற காவல் துறை விழாக்களில் ‘தங்கப் பதக்கம்’ அதிக அளவில் திரையிடப்பட்டது.

அவர் இல்லை என்றால் நான் ஏது?



நடிகை லதா எம்.ஜி.ஆருடன் பல படங்களில் நடித்திருந்தாலும் சிவாஜியுடன் "சிவகாமியின் செல்வன்'' என்ற படத்தில் மட்டுமே நடித்தார்.

இதுபற்றி லதா கூறியதாவது:-

"15 வயதில் நடிக்க வந்து விட்டாலும் என் ஒவ்வொரு பிறந்த நாளன்றும் எம்.ஜி.ஆர். எனக்கு போன் செய்து வாழ்த்துவதுண்டு. என் 18-வது பிறந்த நாளன்றும் காலையிலேயே போனில் வாழ்த்தினார். "மதியம் ஆபீசுக்கு வரமுடியுமா?'' என்று கேட்டார்.

போனேன். என்னைப் பார்த்ததும், "உங்கம்மாவுக்கு நான் பண்ணின வாக்குறுதியை நிறைவேற்றி விட்டேன். இப்ப நான் ஒண்ணு கேக்கறேன். செய்வியா?'' என்று கேட்டார்.

அவர் கேட்ட கேள்வி எனக்குப் புரியவில்லை. அவரே விளக்கினார். "லதா! உனக்கு 18 வயது பிறந்து விட்டது. இப்போது நீ மேஜராகி விட்டாய். உங்கம்மா உன் நடிப்பு தொடர்பாக முன்பு போட்டுக் கொடுத்திருந்த கொண்டிராக்ட் இனி செல்லுபடியாகாது. இப்போது நான் போட்டிருக்கும் புதிய கொண்டிராக்டில் கையெழுத்து போடுவாயா?'' என்று விளக்கி என் பதிலை எதிர்பார்த்தார்.

நான் எதுவும் பேசாமல் அவரிடம் இருந்த கொண்டிராக்ட் பேப்பரை வாங்கி கையெழுத்துப் போட்டுக் கொடுத்தேன்.

என்ன ஏதென்று கூட கேட்காமல் நான் கையெழுத்துப் போட்டுக் கொடுத்தது, அவருக்கு மிக ஆச்சரியமாக இருந்திருக்கும். ஆனாலும் பட உலகத்தில் அவர் என்னை அவரது படங்களில் ஜோடியாக நடிக்க வைத்திராவிட்டால் நான் ஏது?

ஆனால் புது ஒப்பந்தத்தில் கையெழுத்துப் போட்டுக் கொடுத்ததால், மற்ற நடிகர்கள் படங்களில் நடிக்க கேட்டு வந்த வாய்ப்புகளை நான் ஏற்க முடியாமல் போயிற்று. சிவாஜி படத்தில் கூட "டாக்டர் சிவா'', "அவன்தான் மனிதன்'' என்று என்னைத் தேடி வந்த 2 படங்களில் நடிக்க முடியாமல் போயிற்று.

ஆனாலும், எம்.ஜி.ஆர். என்னிடம், மற்றவர்கள் படங்களில் நடிக்கக் கூடாது என்று ஒருபோதும் சொன்னதில்லை. "என்னிடம் ஒரு வார்த்தை கேட்டுக்கொண்டு நடி. அப்படிச் செய்தால் படப்பிடிப்பு திகதிகள் இடிக்காமல் இருக்கும்'' என்றுதான் சொல்லியிருந்தார்.

சிவாஜியுடன் ஒரு படத்திலாவது நடித்து விடவேண்டும் என்ற ஆசை எனக்கு இருந்தது. அப்போதுதான் சிவாஜி நடிக்கும் "சிவகாமியின் செல்வன்'' படம் தயாராக இருந்த நேரம். படத்துக்கு 2 கதாநாயகிகள். ஒரு கதாநாயகி வாணிஸ்ரீ. இன்னொரு கதாநாயகியின் கெரக்டர் படத்தின் பிற்பகுதியில்தான் வரும் என்றார்கள். அதாவது பெரிய சிவாஜியின் மனைவி வாணிஸ்ரீ. அவரின் வாரிசாக உருவாகும் சிவாஜிக்கு யாரைப் போடலாம் என்று பரிசீலித்துக் கொண்டிருந்தார்கள்.

7ஆவதில் காயத்ரி



சீனு ராமசாமி இயக்கத்தில் தென்மேற்குப் பருவக் காற்று, இடம் பொருள் ஏவல், தர்மதுரை ஆகிய படங்களில் நடித்தவர் விஜய் சேதுபதி. சில பிரச்சினைகளால் இடம் பொருள் ஏவல் படம் திரைக்கு வருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் மீண்டும் விஜய் சேதுபதியுடன் சீனு ராமசாமி இணையும் மாமனிதன் படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கியது. இதில் விஜய் சேதுபதி ஜோடியாக காயத்ரி நடிக்கிறார்.

இதற்குமுன் விஜய் சேதுபதியுடன் நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், ரம்மி, புரியாத புதிர், ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன், சீதக்காதி, சுப்பர் டீலக்ஸ் ஆகிய படங்களில் நடித்துள்ளார். தற்போது 7வது முறையாக மாமனிதன் படத்தில் இணைந்துள்ளார். யுவன்சங்கர் ராஜா தயாரிக்கிறார். இளையராஜா இசை அமைக்கிறார்.

1968இல் ஜீவனாம்சம் மூலம் திரையுலகிற்கு வந்தவா் லட்சுமி



நடிகை லட்சுமி பிறந்த நாள் டிசம்பர் 13.


லட்சுமி தமிழ்த் திரைப்பட நடிகையும் தொலைக்காட்சித் தொகுப்பாளரும் ஆவார். இயக்குநர் மல்லியம் ராஜகோபாலால் தமிழ் திரையுலகிற்கு அறிமுகம் செய்யப்பட்டவர்.அவரது முதல் படம் ஜீவனாம்சம் 1968ஆம் ஆண்டு வெளிவந்தது. லட்சுமியின் தந்தை யரகுடிபாடி வரத ராவ் மற்றும் தாய் குமாரி ருக்மணி இருவருமே திரைத்துறையில் பணியாற்றியவர்கள். தந்தை வரத ராவ் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த நெல்லூர் நகரைச் சேர்ந்தவர். நடிப்பதோடு சமூகப்பிரச்சினைகளை அலசும் திரைப்படங்களை தயாரிக்கவும் செய்தார். லட்சுமியின் தாய் ருக்மணியும் சிறந்த தமிழ் நடிகையாக விளங்கினார். எனவே திரைப்படங்களில் நடிப்பது அவருக்கு இயல்பாகவே அமைந்தது.

1970-ம் ஆண்டுகளில் நான்கு தென்னிந்திய மொழிப்படங்களிலும் வெற்றிக்கொடி நாட்டினார். அவரது மலையாளப்படம் சட்டக்காரி (1974) அவருக்கு புகழ் தேடித் தந்தது. இத்திரைப்படம் 1975-ம் ஆண்டு ஜூலி என இந்தியிலும் மிஸ் ஜூலி பிரேம கதா என தெலுங்கிலும் எடுக்கப்பட்டன. இந்திப்பட நடிப்பிற்காக பிலிம்ஃபேர் விருதும் வங்காள திரையிதழாளர்கள் விருதும் கிடைத்தது.

1977-ம் ஆண்டில் வெளிவந்த சில நேரங்களில் சில மனிதர்கள் என்ற எழுத்தாளர் ஜெயகாந்தனின் புதினத்தை ஒட்டி எடுக்கப்பட்ட தமிழ் திரைப்படத்திற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருது வாங்கினார். 1980-களில் முதன்மை பாத்திரங்களில் நடிப்பது குறைந்தபோது துணைநடிகையாக பல படங்களில் நடித்துள்ளார். ஜீன்ஸ் படத்தில் பாட்டியாக நடித்து கவனத்தைக் கவர்ந்தார். 400 படங்களுக்கும் மேலாக நடித்துள்ளார்.

தனது பதினேழாம் வயதில் பெற்றோர் ஏற்பாடு செய்த பாஸ்கர் என்பவரை மணம் புரிந்து 1971-ம் ஆண்டு ஐஸ்வர்யா என பெண் குழந்தையை பெற்றெடுத்தார். இதன் பின்னர் பாஸ்கருடன் மணமுறிவு ஏற்பட்டு தனது மகளை தன்னுடன் வளர்க்கும் உரிமை பெற்றார். என் உயிர் கண்ணம்மா எனும் திரைப்படத்தில் நடிக்கையில் நடிகரும் பட இயக்குநருமாகிய சிவச்சந்திரன் உடன் காதல் ஏற்பட்டு திருமணம் செய்து கொண்டார்.

நடிகை சௌகார் ஜானகி



தமிழ்த் திரையுலகின் முக்கிய கதாநாயகிகளுள் ஒருவராகத் திகழ்ந்தவர். குமுதம், பாலும் பழமும்,
பார்த்தால் பசிதீரும் போன்ற படங்களில் நடித்து புகழ்பெற்றவர். புதிய பறவை படம் திரைப்பட உலகில் அவருக்கென ஒரு தனியிடத்தை ஏற்படுத்தியது.

ஜானகி நடுத்தரமான தெலுங்கு பேசும் குடும்பத்தில் 1931 டிசம்பர் 12 இல் பிறந்தார். தனது 16 வது வயதில் சென்னை வானொலியில் பாடியும் உள்ளார். அப்போது சினியா தயாரிப்பாளர் பி.என்.ரெட்டி, ‘குணசுந்தரி கதா’ என்ற தெலுங்கு படத்தில் நடிக்க அழைத்தும் திருமணம் செய்ய விருப்பதால் மறுத்து விட்டார். பின்னர் சங்கரமராஞ்சி சீனிவாச ராவ் என்பவரை 1947இல் திருமணம் செய்து கொண்டு மேகாலயாவில் தலைநகர் ஷில்லாங்கில் குடி புகுந்தார். இவருக்கு கிருஷ்ணகுமாரி என்ற தங்கையும் ராமு என்ற தம்பியும் உள்ளனர். கிருஷ்ண குமாரி தெலுங்கு சினிமாவில் பிரபலமான நடிகையாக விளங்கியவர்.

திரையுலக வாழ்க்கை

தெலுங்கில் முதல் படம்:சௌகார்; தயாரிப்பு:விஜயா புரடக்சன்ஸ். என். டி. ராமராவுடன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார்.
கதாநாயகியாக ஏ. நாகேஸ்வர ராவ், என். டி. ராமராவ், ஜக்கையா, சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன் இவர்களுடன் நடித்துள்ளார்.
இவர், தெலுங்கு நடிகை கிருஷ்ணகுமாரியின் அக்கா ஆவார்.

சிவாஜி பற்றி குமாரி சச்சு

என் உடன் பிறந்த சகோதரர்களைக்கூட நான் பெயர் சொல்லித்தான் அழைப்பேன். ஆனால் சிவாஜியை ‘அண்ணா’ என்றுதான் சொல்வேன். ‘எதிர்பாராதது’ என்ற படத்தில்தான் முதன்முதலில் சிவாஜியுடன் நடித்தேன். என்னுடைய காட்சி முடிந்துவிட்டாலும் படப்பிடிப்புத் தளத்தைவிட்டு மேக்-அப் ரூமுக்குச் சென்று ஓய்வு எடுக்கச் செல்ல சிவாஜி அனுமதிக்க மாட்டார். அங்கேயே உட்காரச் சொல்லி மற்றவர்கள் நடிப்பதைப் பார்க்கச் சொல்வார். வசனம் எப்படிப் பேச வேண்டும் என்று கற்றுக்கொடுப்பார். அன்று அவர் எங்களுக்குக் கற்றுக்கொடுத்ததால்தான் இன்று இங்கே நிற்கிறோம். அவரோடு சேர்ந்து நடித்தது நான் செய்த புண்ணியம். அந்தக் காலம்தான் சினிமாவின் பொற்காலம். அந்தக் காலம் இனித் திரும்ப வராது.

Monday, January 7, 2019

"ஆட்டுவித்தால் ஆரொருவர் ஆடா தாரே..."

அடக்குவித்தால் ஆரொருவர் அடங்கா தாரே' என்ற
திருநாவுக்கரசரின் பாடலோடு உதித்தது.


வாழ்ந்துகெட்ட மனிதன், வாழ்ந்துகெட்ட குடும்பம், வாழ்ந்து கெட்ட சமூகம் என்று தனிமனிதனில் தொடங்கி ஒரு சமூகம் வரை நன்றாக இருந்து, பின் என்ன காரணத்தினாலோ நொடிந்து போய்விடும். அதன் பின்னணியில் சாட்டையோடு ஒரு கை இருக்கும் அல்லது ஆசை எனும் தொட்டில் இருக்கும்.
ஒருவரை ஒருவர் சார்ந்து இருக்கவேண்டிய இடங்களில், ஒருவர் ஆட்டுவிக்கிறார், ஒருவர் ஆடுகிறார். ஆடுவதோ ஆட்டுவிப்பதோ முக்கியமின்றி, ஆட்டுவிப்பதற்கான காரணமே முக்கியமாகிறது. சாட்டை இருக்கிறது என்பதற்காக ஆட்டுவிப்பவர்களே பெருகிவிட்டனர் இன்று.
பெரும்பாலும் எளியோரை வலியோர் ஆட்டுவித்தலே அதிகம். எனில் வலியோரை ஆட்டுவிக்க ஒருவரும் இல்லையா? இருக்கிறான் அவன் பேர் இறைவன் என்கிறார் கண்ணதாசன்.
``என் கையில் என்ன இருக்கு. அவன் சுற்றிவிடுறான். நான் ஆடிக்கொண்டிருக்கிறேன்'' என்று பலரும் கடவுளைக் கைகாட்டி விடுவார்கள். கண்ணதாசனின் தத்துவார்த்தப் பாடல்கள் பலவற்றிலும் அவர் கடவுளைக் கேள்வி கேட்கிறார். கடவுளிடம் இருந்து பதில் பெறுகிறார். எல்லாம் உன்னால்தான் என்று கடவுளிடம் கோபித்தும் கொள்கிறார்.
விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் பம்பரம் என்றால் ஆடத்தானே வேண்டும். அதிலும் தானாக ஆடமுடியாது. ஆட்டுவித்தலுக்கேற்ப ஆடவேண்டும். அதுதான் விதி. சாட்டை சுழற்றிவிட்டால் ஆடவேண்டிய பம்பரம்தான் நாம் அனைவரும். சாட்டை சுழற்றும் கைகள் எவருடையவை என்பதைப் பொறுத்து ஆடல் சுகமாகவோ சுமையாகவோ இருக்கிறது.
ஆசையெனும் தொட்டிலில் ஆடாதோர் யார் என்கிறார் கண்ணதாசன். ஆசை என்பது எப்போதும் முன்னும் பின்னுமாக ஆடிக்கொண்டேயிருக்கும். ஆடிக்கொண்டிருப்பதால் அதனைத் தொட்டில் என்கிறார். உண்மையில் ஆசைதான் நம்மை இயக்குகிறது. ஆசைப்பட்டபடி வாழத் துடித்துதான் அதில் சிக்கிக்கொள்கிறோம். ஆகவேதான் ஆசையே அத்தனைக்கும் காரணம், ஆசையை அறுத்துவிடு என்றார் புத்தர்.
`ஆட்டுவித்தால் ஆரொருவர் ஆடா தாரே
அடக்குவித்தால் ஆரொருவர் அடங்கா தாரே'
என்று திருநாவுக்கரசரின் பாடல் ஒன்றுண்டு.
அதனை முதலடியாகக்கொண்டு தன் அனுபவப்பின்னலால் கவியரசர் வார்த்த பாடல் இது.
தன்னிடம் இருப்பதையெல்லாம் கொடுத்துவிட்டு நடுத்தெருவுக்கு வந்துவிட்ட நாயகனாய் சிவாஜிகணேசன் நடித்திருப்பார். டி.எம்.எஸ்ன் குரல் நம் ஆன்மாவைத் திறப்பதாய் அமைந்திருக்கும்.
பகைவர்களை நானும் வெல்வேன் அறிவினாலே
ஆனால் நண்பனிடம் தோற்றுவிட்டேன் பாசத்தாலே
நாம் விரும்பித் தோற்கும் இடங்களை நாமே நன்கறிவோம். குடும்பம், உறவு, காதல், நட்பு என்று வேறு வழியில்லாமல், பாசத்தின் பொருட்டு கிடைத்த தோல்வியை சுகமாக எடுத்துக்கொள்வோம். அவன் ஏமாற்றிவிட்டான் என்றுகூட சொல்லாமல்... நண்பன்தானே என்று அந்த வலியைக் கடந்து சென்றிருப்போம். அந்த வலிக்கு ஒத்தடம் தருவதாக அமைந்த வரிகள் என்று இதனைச் சொல்லலாம்.
பாஞ்சாலி மானம் காக்க கடைசிப் புகலிடமாய் கண்ணனை நினைத்து சேலை கேட்கிறாள். என்னுடைய உறவினர்களையே எதிர்த்துப் போரிட்டு நான் எதைப் பெறப்போகிறேன். இந்தப்போர் அவசியம்தானா? எனக்கு விளங்கவில்லை. எனக்குப் புரியவில்லை கண்ணா என்று பார்த்தன் என்னும் அர்ஜுனன் கீதை கேட்கிறான்.
எல்லாவற்றையும் இழந்த ஒருவன் மீண்டும் இறைவனிடம் என்ன கேட்பான்? இழந்தவற்றையெல்லாம் கொடு என்றுதானே? ஆனால் இன்னும் இன்னும் நன்மை செய்து துன்பத்தை வாங்கிக்கொள்ளும் உள்ளத்தைக் கொடு என்று கண்ணனிடம் கேட்கிறார் கவியரசர். இப்படிக்கூட கேட்கமுடியுமா என்று நாம் யோசிக்கும் வேளையில் அதற்கான விடையை அடுத்த சரணத்தில் அவரே அளிக்கிறார்.
கடலளவு கிடைத்தாலும் மயங்க மாட்டேன்
அது கையளவே ஆனாலும் கலங்க மாட்டேன்
உள்ளத்திலே உள்ளதுதான் உலகம் கண்ணா
இதை உணர்ந்து கொண்டேன் துன்பமெல்லாம் விலகும் கண்ணா.
உள்ளத்தில் உள்ள ஒளியே உலகம். அதுவே கடவுள். அதுவே எல்லாமும். அதனை உணர்ந்துகொண்ட நொடியில் துன்பங்கள் அனைத்தும் தானாய் விலகும்... என்று பாடலின் முடிவில் நம் துன்பங்களையும் துடைத்தெறிகின்றன கவியரசரின் கரங்கள்.

Music Director Ramaya Muthuswamy



January 5th marks the 93rd birth anniversary of renowned the Great Legendary Music Director Ramaya Muthuswamy Master! father to ApSaRaS Leader' Music Director M.Mohanraaj.
Muthuswamy Master was born in the town of Nagerkovil abutting Kerala, South India, on 05-January, 1926.

He served as Leader of the Tamil Orchestra at Radio Ceylon through its conversion to CBC/SLBC for a period of 24-years upto his retirement on 05-January, 1981 at age 55.

Several South Indian playbacksingers-A.M.Rajah,Jikki,K.Ranisang under Muthuswamy Master's baton. Local artistes included the famed Dharmadasa Walpola & Lata Walpola; Mohideen Baig; RukmaniDevi; GSB Rani; Sujatha Perera-Attanayake; Milton Perera; Harun Lanthra; Naradha Dissasekera; Angeline Gunatilleka; HR Jothipala; and others.

Notable were WD Amaradeva (violin); Premasiri Khemdasa (flute); Sarath Dassanayake (sitar); Victor Ratnayake (violin); and Dharmadasa Walpola (flute), all reading their respective instruments under maestro Muthuswamy Master's direction.

In recognition of his contribution to SriLankan Cinema music, on a directive made by Prime Minister Sir John Kotelawala, consequent upon which Muthuswamy Master was awarded an honorary Ceylon citizenship on 12-April, 1956: a historic day on which Prime Minister SWRD Bandaranaike's first Cabinet was sworn in.

At the time of his demise in 1988 at age 62, Muthuswamy Master had reportedly composed music for almost 225-Tamil and Sinhala movies

இசையமைப்பாளர் ஆர். முத்துசாமி

ராமையா ஆசாரி முத்துசாமி என்ற இயற்பெயர் கொண்ட ஆர் முத்துசாமி தமிழ்நாட்டில், நாகர்கோவில் என்ற ஊரில் ராமையா பாகவதர் என்பவருக்குப் பிறந்தார். தந்தை ஒரு இசையமைப்பாளர்.

சிறு வயதிலேயே முத்துசாமி இசையில் ஆர்வம் கொண்டிருந்தார். தந்தை அவருக்கு குட்டி வயலின் ஒன்றை வாங்கிக் கொடுத்தார். 10 வயதாகும் போது வயலினில் ஓரளவு தேர்ச்சி பெற்றார். அதன் பின்னர் மேலும் பயிற்சி பெற்று சென்னையில் நடைபெற்ற இசை நிகழ்ச்சிகளில் வயலின் வாசிக்க சந்தர்ப்பங்கள் கிடைத்தன.
முதலாவது சிங்களத் திரைப்படம் கடவுனு பொறந்துவ’ 1947, சனவரி 21 ஆம் திகதி இலங்கையில் வெளியிடப்பட்டது. இதன் இசையமைப்பு சென்னையிலேயே இடம்பெற்றது.[] இப்படத்தின் இசையமைப்பாளர் ஆர். நாராயண ஐயர் முத்துசாமியை தனது உதவியாளராக ஆக்கிக்கொண்டார்..  தயாரிப்பாளரான எஸ். எம். நாயகம் இலங்கைக்கு வருமாறு அவரை அழைத்தார். அந்த அழைப்பை ஏற்று இலங்கைக்கு வந்த முத்துசாமி 1952 அக்டோபரில் இலங்கை வானொலியில் சேர்ந்து கொண்டார். அங்கு டி. எஸ். மணிபாகவதரின் இசைக்குழுவில் வயலின் இசைக்கலைஞராகப் பணியாற்றினார். எஸ். எம். நாயகம் கொழும்பின் புறநகரான கந்தானையில் 1953 இல் சுந்தர முருகன் நவகலா சவுன்ட் ஸ்டூடியோ (எஸ். பி. எம். ஸ்டூடியோ) என்ற பெயரில் திரைப்படக் கலையகம் ஒன்றை ஆரம்பித்து அதன் இசைப் பிரிவுக்கு முத்துசாமியைப் பொறுப்பாளரhக்கினார்.[
இதனையடுத்து 1953 இல் கே. குணரத்தினம் தயாரித்த பிரேம தரங்கயபடத்தின் மூலம் தனது 27வது வயதில் முத்துசாமி முதல் முதலாக இசையமைப்பாளரானார்.. அப்படத்தின் சிறப்பாக இசையமைத்ததற்காக தென்னிந்திய ஊடகவியலாளர்கள் சங்கம் அவருக்கு சிறந்த இசையமைப்பாளருக்கான விருதை வழங்கியது..
இதனையடுத்து புதும லேலி’ (1953) ‘அஹங்கார ஸ்திரீய’, ‘மாதலங்’, ‘ஹித்த ஹொத்த மினிஹெக்ஆகிய படங்களுக்கு இசையமைத்து சிங்கள மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றார்.
பிரபல இயக்குனர் லெஸ்டர் ஜேம்ஸ் பீரிசின் "சந்தேஷய" படத்தில் பிருதுகீசிகாரயாஎன்ற பாடல் மூலம் எச். ஆர். ஜோதிபால என்ற புதிய பாடகருக்கு முத்துசாமி வாய்ப்பளித்திருந்தார். தென்னிந்தியப் பாடகர்கள் பலர் முத்துசாமியின் இசையமைப்பில் பாடியுள்ளனர். சிங்களப் பாடகி நந்தாமாலினி தருவா காகெதஎன்ற படத்தில் இவர் இசையமைத்த பாடல் மூலம் அறிமுகமானார்.
1972 இல் இலங்கையில் வெளிவந்த குத்துவிளக்கு தமிழ்த் திரைப்படத்திற்கு இசையமைத்துப் பாடியிருக்கிறார். சிதக மஹிமஎன்ற படத்தில் சுஜாதா அத்தநாயக்கவுடன் இவர் பாடிய மதுரயாமேஎன்ற பாடல் மிகவும் புகழ்பெற்ற பாடலாகும். 1958இல் மீண்டும் இலங்கை வானொலியில் சேர்ந்து கொண்ட முத்துசாமி மாஸ்டர் 1981 வரை 24 வருடங்கள் அந்த நிறுவனத்தில் பணியாற்றினார்.