Thursday, October 13, 2016


மேடையில் ஆடிடும் மெல்லிய பூங்காற்று

ஷோபனா, மஞ்சு வாரியர் போன்றோர் நடிப்பை குறைத்துக்கொண்டு, மேடைகளில் பரத நாட்டியம் ஆடி வருகின்றனர். இப்போது அந்த வரிசையில் பத்மப்பிரியா சேர்ந்துள்ளார். தமிழில் ‘தவமாய் தவமிருந்து’, ‘மிருகம்’, ‘தங்க மீன்கள்’, ‘இரும்புக்கோட்டை முரட்டு சிங்கம்’ உட்பட நிறைய படங்களில் நடித்துள்ள அவர், ஏராளமான மலையாளப் படங்களிலும் நடித்து வந்தார்.
 இந்நிலையில், ஜாஸ்மின் ஷா என்பவரை திருமணம் செய்துவெளிநாட்டில் குடியேறினார். தற்போது மீண்டும் படங்களில் நடிக்கத் திட்டமிட்டுள்ள அவர், மேடைகளில் பரத நாட்டியம் ஆடவும் முடிவு செய்துள்ளார்.
இதுபற்றி அவர் கூறியதாவது: அமெரிக்காவில் பிராட்வே பகுதியில் நடக்கும் காட்சிகளைப் போல், நான் மேற்கொண்டுள்ள நடன நிகழ்ச்சிகள் வெவ்வேறு அம்சங்களைக் கொண்டதாக தயாரிக்கப்பட்டு இருக்கிறது.
வெவ்வேறு ரசனை கொண்டவர்கள் முன்னிலையில் நடனம் ஆடுவது மிக வித்தியாசமான அனுபவமாக இருக்கிறது. எனது நடனத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. நானும் இந்தப் பணியை நல்லவிதமாகத்தான் மேற்கொண்டு வருகிறேன். வழக்கமாக சிலர், முதன்முறையாக கேமரா முன் நிற்க பயப்படுவார்கள்.
எனக்கு அது பழகிவிட்டது. மேடையில் ஆடுவதை நான் அசிங்கமாக நினைக்கவில்லை. சிறுவயது முதலே நடனமாடி வருகிறேன். இதிலிருந்து நடிப்பும், படிப்பும் என்னை பின்னடையச் செய்திருந்தது. கடந்த ஆண்டு டெல்லி சென்றபோது, எனக்கு நடனம் கற்றுக் கொடுத்த ஆசிரியையை சந்தித்தேன். அவர் கொடுத்த ஊக்கத்தின் அடிப்படையில் மீண்டும் நடனம் ஆடுகிறேன். இது எனக்கு உற்சாகத்தைக் கொடுத்துள்ளது. நான் நடிக்கும் ‘தியான்’ மலையாளப் படத்தின் ஷூட்டிங் முடிந்து விட்டது. இவ்வாறு அவர் கூறினார்.