Wednesday, August 28, 2013

ஜெமினி, சாவித்திரி சரசத்திற்கு உதவியவர் பாலாஜி

பாலாஜியின் அப்பா கிருஷ்ணமாச்சாரி ஐயங்கார் கிரிஷ்ணமாச்சாரியின் இரண்டாவது தாரம் மலையாள பெண். இந்த இரண்டாவது தாரத்தின் மகன் தான் பாலாஜி. இப்படி அபிமான தாரத்தின் மகனாக பிறந்ததால் அனுபவிக்க நேர்ந்த துயரங்களை பாலாஜி திரும்பி பார்த்தபோது;
ஜெமினி கணேசனின் உற்ற நண்பர், நாகேஷ் திரையுலகில் நுழைய காரணமானவர் பாலாஜி. இவருடைய நாடகத்தில் நடித்த ரெஜினா பின் நாகேஷ் மனைவியானார். ‘படித்தால் மட்டும் போதுமா’வில் சிவாஜிக்கு அண்ணனாக ‘பலே பாண்டியா’வில் கூட சிவாஜியுடன் நடித்திருந்தாலும் ஜெமினி கணேசனின் சிபாரிசில் தான் சிவாஜியை இவர் தயாரிப்பில் நடிக்க வைக்க நெருங்க முடிந்தது. நடிகராக திரையில் கதாநாயகனாக, இரண்டாவது கதாநாயகனாக, கொமெடியனாக, வில்லனாக நடித்தவர்.
இவருடைய ஆங்கில உச்சரிப்பு நேர்த்தியாக இருக்கும். நரசுஸ் ஸ்டுடியோவில் தயாரிப்பு நிர்வாகியாய் வேலை பார்த்துக்கொண்டே ‘பிரேமபாசம்’ படத்தில் ஜெமினிக்கு தம்பியாய் நடிக்கும் போது ஜெமினி கணேசனின் மூன்றாவது திருமணத்திற்கு உதவியவர், ஜெமினி - சாவித்திரி சரசத்திற்கு காவல் நின்றவர் பாலாஜி.
ஒப்பனை அறையில் சாவித்திரிக்கு மொக்கை போடும் போது ஜெமினி ‘டே பாலாஜி சாவித்திரி அப்பா வாரானா பார்ரா. வந்தா உடனே சிக்னல் கொடு’ வேலாயுதம் தன் இரண்டாவது மனைவியாக நடிகை கே. ஆர். விஜயாவை திருமணம் செய்யவும் துணை நின்றவர் தான் பாலாஜி. பி. பி. ஸ்ரீனிவாசனின் பல ஹிட் பாடல்கள் இவருக்கு கிடைத்தது.
‘ஆண்டடொன்று போனால் வயதொன்று போகும்’
‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்!
நெருப்பாய் எரிகிறது’
‘பண்ணோடு பிறந்தது கானம் குல பெண்ணோடு
பிறந்தது நாணம்’
‘நல்லவன் எனக்கு நானே நல்லவன்’
‘பூவொன்று கண்டேன் முகம் காணவில்லை’
‘ஆதி மனிதன் காதலுக்குப் பின் அடுத்த காதல் இதுதான்!’
‘உள்ளமெலாம் மிளகாயோ ஒவ்வொரு பேச்சுரைக்காயோ
வெள்ளரிக்காய் பிளந்தது போல்
வெண்ணிலவே நீ சிரிக்காயோ’
‘இரவு முடிந்து விடும், முடிந்தால் பொழுது புலர்ந்து விடும்’
ஜெயலலிதா (போராட்டமான தன் அரசியல் சூழலிலும் பாலாஜியின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய போது கண்ணீர் விட்டார். அந்த கண்ணீர் உண்மையிலே சுத்தமானது. அவர் சொன்னது கூட மிகை இல்லை. அவருடைய அண்ணனை இழந்துவிட்டார். பாலாஜி பற்றி மறுபக்கமாக சில விஷயங்கள் உண்டு. யாருக்கு தான் அப்படி ஒரு மறு பக்கம்.

வஹிதா ரஹ்மான்

காலம் மாறிப் போச்சு 1956ல் வந்த படம் ஜெமினி கணேசன், அஞ்சலி தேவி, எஸ் வி. சுப்பையா நடித்த படம். இந்தப் படத்தில் ‘ஏரு பூட்டிப் போவாயே அண்ணே சின்னண்ணே’ என்ற பாடலுக்கு ஆடியிருப்பவர் வஹிதா ரஹ்மான். அதே வருடம் எம். ஜீ. ஆர், பானுமதி, பி. எஸ். வீரப்பா நடித்த ‘அலிபாபாவும் நாற்பது திருடர்களும்’ படத்திலும் வஹிதா ரஷமான் ஒரு பாடல் காட்சியில் ஆடியிருக்கிறார்.
வஹிதா ரஹ்மான் செங்கல்பட்டுக்காரர். உருது பேசுகிற முஸ்லிம் தமிழ்பெண். வாழ்க்கை எவ்வளவு வேகமானது. ஹைதராபாத்தில் இருந்த வஹிதா ரஹமான் அடுத்த வருடமே அதில் உலக திரைக்காவியம் ‘பியாசா’வில் காவிய நாயகியாகிவிட்டார். வாழ்க்கை தான் எவ்வளவு பெரிய மாற்றங்களை சிலர் வாழ்வில் ஏற்படுத்தி விடுகிறது.
‘பாசமலர்’ படம் இந்தியில் ‘ராக்கி’ என்ற பெயரில் எடுக்கப்பட்டது. அதில் சிவாஜி பாத்திரத்தில் அசோக்குமார், சாவித்திரி நடித்த ரோலில் வஹிதா ரஹ்மான் நடித்தார். ஆர். கே. நாராயணனின் நாவலான ஹிhலீ guiனீலீ யை தழுவி இந்தியில் எடுக்கப்பட்ட படத்தில் நாயகி ரோஸியாக வஹிதா நடித்தார். எங்க வீட்டுப் பிள்ளை இந்தியில் ராம் அவுர் சியாம் என எடுக்கப்பட்டது. இதில் திலீப்குமாருடன் வஹிதா ரஹ்மான் நடித்தார்.

பாடும் நிலா பாலு

நிலாவைப் பிடிக்காதவர் இந்த நிலத்தில் எவரும் இல்லை. அதேபோல் பாலுவின் பாடலைப் பிடிக்காதவர்களும் இந்த லோகத்தில் இருக்க முடியாது. மொழி, இனம், மதம், பேதம் எல்லாவற்றையும் கடந்து பாலுவின் கானம் ரசிக்கப்படுகிறது.
பாலு ஒரு தேசிய ஒற்றுமையின் சின்னம். ஏறத்தாழ எல்லா மொழிகளிலும் பாடிய பெருமை பாலுவுக்கு உண்டு. இந்த நிலையை அடைய அவர் எவ்வளவு உழைத்திருக்க வேண்டும்? எவ்வளவு தோல்விகளைச் சந்தித்திருக்க வேண்டும்? இதெல்லாம் நாம் கேட்கும் எஸ். பி. பி. என்ற குரலின் வெற்றிக்குப் பின்னால் இருக்கும் ரீங்காரங்கள்.
ஏழு ஸ்வரங்களில் எவ்வளவு பாடல்களை வேண்டுமானாலும் ஒலிக்க வைக்க முடியும். ஆனால் ஏழு ஜென்மங்கள் எடுத்தாலும் பாலுவின் குரல் இனிமைக்கு ஈடாக ஒரு குரல் இருக்குமா என்று ரசிகர்கள் வியக்கும் வண்ணம், திக்கெட்டும் பாலுவின் குரல் ஒலித்துக் கொண்டிருக்கிறது.
எஸ். பி. பி. என்ற பெயரை உங்களுக்கு அறிமுகம் செய்து வைக்கத் தேவையில்லை. ஆனால் எஸ். பி. பி. என்கிற மனிதரின் வாழ்க்கைப் போராட்டங்கள் உங்களுக்குத் தெரியாது. இதுவரை பாலுவின் குரல் மட்டுமே உங்கள் காதில் ஒலித்து வந்தது. இதோ பாலுவின் மனக்குரல் ஒலிக்கத் தொடங்குகிறது. எங்கே ஆரம்பிக்கலாம்?
முதலில் பாலு எப்படி பாட வந்தார்? முதலில் இரண்டு நிகழ்ச்சிகளைக் கேட்டுவிட்டு பாலுவின் பால்ய பருவத்திற்குச் செல்வோமா?
மெல்லிசைப் பாடல் போட்டி ஒன்றில் பாட எஸ். பி. பி. அறியாமலே, அவருடைய நண்பர் ஒருவர் விளையாட்டாகப் பெயர் கொடுக்க எஸ். பி. பி. அந்தப் போட்டியில் கலந்து கொண்டு சிறப்பாகப் பாடினார். ஆனால் பரிசு கிடைக்கவில்லை. எனினும் ஒரு சுவையான அறிமுகம் கிடைத்தது. கோதண்டபாணி என்ற ஓர் இசையமைப்பாளர் அந்தப் போட்டியின் போது இருந்தார்.
இளைஞர் எஸ். பி. பி.யிடம் ‘உனக்கு நல்ல குரல்வளம் இருக்கிறது. உன்னை சினிமாவில் பாட சேர்த்து விடுகிறேன்’ என்று உற்சாகமூட்டி, பாலுவைப் பல சினிமா இசையமைப்பாளர்களிடம் அழைத்துச் சென்றார். எப்படி முதல் பாட்டுப் போட்டியில் எஸ். பி. பி.க்கு பரிசு கிடைக்கவில்லையோ, அதே போல் முதல் சினிமா முயற்சியும் பெரிய வெற்றியைக் கொடுக்கவில்லை. எஸ். பி. பி யும் சரி, அவரை அழைத்துச் சென்ற கோதண்டபாணியும் சரி, மனம் தளரவில்லை.
அவர்களின் முயற்சி வெற்றியடைய பல நாட்கள் ஆயின. ஆனால் பல நாட்கள் காத்திருந்து, பலமான அஸ்திவாரத்தோடு எழுப்பப்பட்ட இசை மாளிகைதான் எஸ். பி. பி. யின் பாடல்கள். தனக்கு முதன் முதலில் வாய்ப்பிற்காக அழைத்துச் சென்ற இசையமைப்பாளரை இன்றளவும் எஸ். பி. பி. மறக்கவில்லை. பாட ஆரம்பித்த 20 ஆண்டுகளுக்குப் பிறகு உருவாக்கிய ரிக்கார்டிங் தியேட்டருக்கு ‘கோதண்டபாணி ஓடியோ ரிக்கார்டிங் தியேட்டர்’ என்று குருவின் பெயரையே சூட்டி தன் நன்றிக் கடனைச் செலுத்தினார். எஸ். பி. பி. யின் குரல் மட்டும் வித்தியாசமானதன்று.
அவரின் மனமும் மற்ற கலைஞர்களிடமிருந்து மாறுபட்டது என்பதை உணர வைக்கும் சம்பவம் தான் இது.
முதல் போட்டியில் பரிசு கிடைக்காதது பெரிய தோல்வி என்றால், அதைவிடச் சுவையான நிகழ்ச்சியையும் பாலு சந்தித்திருக்கிறார். ஒரு தெலுங்கு சங்கத்தில் தொடர்ந்து இரண்டு ஆண்டுகளாக பரிசு வாங்கிக் கொண்டிருந்தார் எஸ். பி. பி.. மூன்றாவது ஆண்டும் வெற்றி பெற்றால், பாலுவிற்கு ஒரு பெரிய வெள்ளிக் கோப்பை ஒன்று பரிசாகக் கிடைக்கும். இந்நிலையில் மூன்றாவது ஆண்டுப் போட்டியில் சங்கத்தின் பொறுப்பாளர்களில் சிலர் எஸ். பி. பி. ஐ இரண்டாவது பரிசுக்குத் தள்ளி விட்டார்கள்.
நீதிபதிகளின் முடிவை பாலு மனமார ஏற்றார். போட்டியின் பரிசளிப்பு விழாவிற்கு ஒரு பிரபலமான பின்னணிப் பாடகி தலைமை தாங்கினார். பாடல் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களைப் பாட மேடைக்கு அழைக்க, முதல் பரிசு பெற்ற இளைஞர் போட்டியில் பாடிய அதே பாடலைப் பாடிச் செல்ல, இரண்டாவது பரிசு பெற்ற எஸ். பி. பி. தன் பாடலைப் பாடி முடித்தார்.
பரிசளிக்க வந்த பாடகியின் முகத்தில் ஏகக் கோபம். அவரே மைக் முன்னால் வந்து ‘இன்று இரண்டாவது பரிசு வாங்கியிருக்கும் இளைஞன், முதல் பரிசு வாங்கியிருக்கும் இளைஞனை விட மிக நன்றாகப் பாடியுள்ளான். ஆகையால் போட்டியின் முடிவுகளை ஏற்க என் மனம் சம்மதிக்கவில்லை’ என்று கூறி எஸ். பி. பி. க்கு முதல் பரிசையும் அந்த வெள்ளிக் கோப்பையையும் வாங்கித் தந்தார்.
திரையுலகத்தின் ஒரு பிரபலமான பாடகியால், சினிமாவுக்கு வருவதற்கு முன்பே அங்கீகாரம் பெற்றவர் எஸ். பி. பி.. பிற்காலத்தில் அன்று பரிசளித்த பாடகியுடனேயே பல பாடல்களைப் பாடியிருக்கின்றார் எஸ். பி. பி.. இன்றும் அந்தப் பாடகியின் மீது மட்டற்ற மரியாதை வைத்திருக்கிறார். சண்டை போட்டு எஸ். பி. பி.க்கு பரிசு வாங்கிக் கொடுத்த அந்தப் பாடகி யார் தெரியுமா?
பாலுவின் திறைமைக்காகப் போராடி முதல் பரிசை வாங்கித் தந்த அந்தப் பிரபலமான திரைப்படப் பின்னணிப் பாடகி திருமதி எஸ். ஜானகி தான். அன்றிலிருந்து இன்றுவரை சகோதரி திருமதி எஸ். ஜானகியை பெரிதும் மதித்து வருகிறார் பாலு.
உழைப்பு உயர்வைக் கொடுக்கும். நல்ல நேரம் இருந்தால் உழைப்புக்கேற்ற பலனாக பெயரும் புகழும் பணமும் கிடைக்கும். உண்மையான திறமையிருந்தால்தான் உயர்ந்த நிலையைத் தக்க வைத்துக்கொள்ள முடியும். இது எல்லாமே பாலுவின் வாழ்க்கையில் நடந்திருக்கிறது.
தமிழில் பாட வருவதற்குள் சில தெலுங்குப் படங்களுக்காகப் பாடியிருக்கிறார். தமிழில் முதலில் பாடிய பாடல் ‘இயற்கையென்னும் இளைய கன்னி’ என்ற டூயட். இது ‘சாந்தி நிலையம்’ படத்திற்காக மெல்லிசை மன்னர் எம். எஸ். விஸ்வநாதன் இசையமைப்பில் பாடியது.
ஆனால் பாலுவை தமிழ்ப் பட உலக ரசிகர்களிடையே பிரபலமாக்கிய பாட்டு ஒன்று உண்டு. அந்தப் பாடல் அந்தக் காலம் முதல் இந்தக் காலம் வரை எல்லாரையும் கவர்ந்த பாடல். ஒரே பாடலால் தமிழகம் முழுவதும் தெரிந்த பின்னணி பாடகர் எஸ். பி. பி. ஒருவராகத்தான் இருக்க முடியும். அவருக்கு புகழை வாங்கித் தந்த பாடல் ‘ஆயிரம் நிலவே வா’ என்று ‘அடிமைப் பெண்’ணில் ஒலித்த பாடல்தான்.
‘ஆயிரம் நிலவே வா’ பாடலை எஸ். பி. பி. பாடக் காரணமாயிருந்தவர் மக்கள் திலகம் தான். பாலு அந்தப் பாடலைப் பாட வேண்டிய நாளில், நல்ல ஜுரத்தில் படுத்திருந்தார் என்பதை முன்பே சொல்லியிருந்தார். பாலு இல்லாமல் கார் திரும்பி வந்ததும், விஷயத்தைப் புரிந்துகொண்ட மக்கள் திலகம், ரிக்கார்டிங்கைக் கான்சல் செய்துவிட்டார். இந்த விவரம் பாலுவிற்குத் தெரியாது. தனக்கு பதிலாக வேறு யாரோ ஒருவர் அந்தப் பாட்டைப் பாடியிருப்பார் என்று தான் நினைத்திருந்தார்.
இரண்டு மாதத்திற்குப் பிறகு, மீண்டும் எம். ஜி. ஆர். பிக்சர்ஸ் கார் பாலுவை அழைக்க வந்தபோது, பாலுவிற்கு அதை நம்பவே முடியவில்லை. தன்னைப் போல பிரபலமாகாத ஒரு பாடகனுக்காக எம். ஜி. ஆர். பிக்சர்ஸ் போன்ற ஒரு ஸ்தாபனம் இரண்டு மாதங்கள் காத்திருப்பார்கள் என்பதை பாலுவால் நம்ப முடியவில்லை.
பாடலைப் பாடிய பிறகு மக்கள் திலகத்தைச் சந்தித்து நன்றி சொன்னார். அப்பொழுது மக்கள் திலகம் பாலுவிடம் ‘தம்பி என் படத்திலே பாட்டுப் பாடப் போaங்கன்னு நீங்க எல்லார்கிட்டேயும் சொல்லியிருப்பீங்க, உங்க நண்பர்கள் இந்தப் படத்தில் உங்க பாடலை ஆவலோடு எதிர்பார்த்திருப்பாங்க, உங்களுக்கு பதிலாக வேறு ஒருவரைப் பாடவைத்து உங்களையும், உங்கள் நண்பர்களையும் ஏமாற்ற நான் விரும்பல. அதனால்தான் உங்களுக்காக இந்தப் பாட்டு காத்திருந்தது’ என்று கூறி வழியனுப்பினார்.

Wednesday, August 14, 2013

கந்தன் கருணை' யில் முருகனாக நடிப்பது யார்

சிவகுமாருடன் விஜயகுமார் போட்டி
புராணப் படங்களை இயக்குவதில் பெரும் புகழ்பெற்ற ஏ. பி. நாகராஜனின் ‘கந்தன் கருணை’ படத்தில் முருகனாக நடிக்கும் வாய்ப்பு விஜயகுமாருக்கு வந்து கைநழுவிப் போனது. போட்டியில் சிவகுமார் வெற்றி பெற்றார்.
டைரக்டர் ஏ. பி. நாகராஜன் டைரக்க்ஷனில் ஏ. எல். சீனிவாசன் தயாரித்த ‘கந்தன் கருணை’ படத்தில், வீரபாகுவாக சிவாஜி நடித்தார். முருகன் வேடத்தில் நடிக்க ஒரு புதுமுக இளைஞர் தேவைப்பட்டார். இந்த வேடத்துக்கு நடிகர் சிவகுமாரும், விஜயகுமாரும் முயற்சி மேற்கொண்டார்கள்.
அந்த அனுபவம் குறித்து விஜயகுமார் கூறியதாவது :-
‘புராணப் படங்கள் என்றால் அது ஏ. பி. நாகராஜன் படம் என்றிருந்த நேரம் அது. என்னுடன் நாடகத்தில் நடித்த ஈ. ஆர். சகாதேவன், டைரக்டர் ஏ. பி. நாகராஜனின் நண்பர். கந்தன் கருணை படத்தில் முருகனாக நடிக்க ஒரு புதுமுகம் தேடுகிறார்கள் என்பதை தெரிந்து கொண்டு, எனக்காக சிபாரிசு செய்யும்படி ஈ. ஆர். சகாதேவனிடம் கேட்டுக் கொண்டேன், அவரும் எனக்காக ஏ. பி. நாகராஜனிடம் பேசினார். ‘மேக்கப் டெஸ்ட் எடுப்போம். சாரதா ஸ்டூடியோவுக்கு நாளை மாலை வரச் சொல்லுங்க’ என்று ஏ. பி. நாகராஜன் சொல்லிவிட்டார்.
நான் சாரதா ஸ்டூடியோவுக்கு போனபோது, முருகன் வேடத்தில் நடிக்க ‘மேக்கப் டெஸ்ட்’டுக்கென இன்னொரு இளைஞரும் வந்திருந்தார். அவர் பெயர் சிவகுமார் என்றும் சிவாஜி சார் சிபாரிசில் அவர் வந்திருக்கிறார் என்றும் தெரிந்து கொண்டேன்.
சிவகுமாருக்கு முதலில் மேக்கப் போட்டார்கள். சிவாஜி சாரின் ஆஸ்தான மேக்கப் மேன் ரெங்கசாமிதான் சிவகுமாருக்கு ‘முருகன்’ மேக்கப் போட்டார். அருகே நடிகர் அசோகன் இருந்தார். மேக்கப் போடுவது பற்றி, அக்கறையுடன் யோசனை சொல்லிக் கொண்டிருந்தார். ஒரு வழியாக சிவகுமாருக்கு மேக்கப் டெஸ்ட் முடிந்து, நான் அழைக்கப்பட்டேன்.
என் மார்பில் நிறைய முடி இருந்தது. கையில் ஒரு பிளேடை கொடுத்து, எல்லா முடியையும் மழிக்கச் சொன்னார்கள்! சில இடங்களில் பிளேடு பட்டு ரத்தம் வழியத் தொடங்கியது. எல்லாம் முடிந்து ரத்தம் கழுவி மேக்கப்புக்கு உட்கார்ந்தேன். மேக்கப் மேன் ரெங்கசாமி, எனக்கு அவசரம் அவசரமாக மேக்கப் போட்டு முடித்தார். ‘போகலாம்’ என்றார்.
அப்போது ஈ. ஆர். சகாதேவன் அங்கு வந்தார். ‘மேக்கப்’பில் என்னைப் பார்த்தவர் முகத்தில் கோபத்தின் அறிகுறி தெரிந்தது. ‘யார் மேக்கப் போட்டது?’ என்று கேட்டார். நான் சொன்னதும் மேக்கப் மேனிடம் ‘என்ன இப்படி மேக்கப் போட்டு இருக்கிaங்க?’ என்று கேட்டார். அவரோ, ‘டைம் ஆகி போச்சுங்க’ என்று சொல்லிவிட்டு புறப்பட்டு விட்டார். என்னையும் சிவகுமாரையும் கம்பெனி காரில் மேக்கப் கோலத்தில் அழைத்துச் சென்றார்கள்.
அதுவரை நானும், சிவகுமாரும் பேசிக் கொள்ளவில்லை. ஆனால், காரில் போகும்போது சிவகுமார் என்னிடம் ‘நீங்க கேரளாவா?’ என்று கேட்டார். அவர் என்னை கேரளா என்று கேட்டதில், கொஞ்சம் அதிர்ச்சியாகி விட்டேன். ‘நான் தமிழ்நாடுதான். தமிழன், சொந்த ஊர் தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை’ என்று தமிழனாக என்னை வெளிப்படுத்திய அதே வேகத்தில், ‘நீங்க எந்த ஊருங்க?’ என்று அவரிடம் கேட்டேன்.
‘நான் ஓவியக் கலையில் தேறி, ஓவியராக இருக்கிறேன். சொந்த ஊர் கோவை. அப்பா இல்லை, அம்மா மட்டும் இருக்கிறாங்க. சென்னையில் இப்ப இருக்கிறது ஒரு வாடகை வீட்டில்தான்’ என்றார். பதிலுக்கு நான், புரசைவாக்கத்தில் உள்ள எஸ். எஸ். மேன்ஷனில் இருப்பதாக சொன்னேன்.
கம்பெனி வந்ததும் நாங்கள் காரில் இருந்து இறங்கினோம். மேக்கப் டெஸ்ட்டுக்காக நான் சைக்கிளில் வந்த மாதிரி சிவகுமாரும் சைக்கிளில் வந்திருந்தார். அன்றைக்கு தொடங்கிய அறிமுகம், அடுத்தடுத்த சந்திப்பில் எங்களை நண்பர்களாக்கியது. மேக்கப் டெஸ்ட் முடிவு அறிவிக்கப்படும் முன்பே, ‘முருகன் வேடம் இவருக்கே கிடைக்கட்டும்’ என்று நான் நினைக்கிற அளவுக்கு சிவகுமார் தனது அன்பான நட்பில் என்னைக் கவர்ந்து விட்டிருந்தார்.
அது 1966 ஆம் ஆண்டு, சிங்கப்பூரில் இருந்த உறவினர் பிரம்மநாதன் அங்கு நடக்கும் ஒரு விழாவுக்காக அறிஞர் அண்ணாவை அழைத்துச் செல்ல ‘திகதி’ கேட்டு வந்திருந்தார். அப்போது பக்தவச்சலம் முதல் அமைச்சராக இருந்தார். அண்ணா அரசியலில் வளர்ந்து வந்த நேரம். தி. மு. க. அலுவலகம் அப்போது ராஜாஜி ஹாலில் இருந்தது. நாவலர் நெடுஞ்செழியன் மூலமாக அண்ணாவை சந்திக்க என் உறவினர் புறப்பட்டார். அப்போது என்னையும் உடன் அழைத்துச் சென்றார்.
அண்ணாவை சந்தித்து விட்டு ஆயிரம் விளக்கு வழியாக வந்தபோது நாவலர் எங்களை கலைஞரிடம் அழைத்துப் போனார். அப்போது முரசொலி அலுவலகம் ஆயிரம் விளக்கில் இருந்தது. நள்ளிரவை நெருங்கி விட்ட 11.30 மணிக்கு கலைஞர் எழுதிக் கொண்டிருப்பதை பார்த்தேன். என் உறவினரை நாவலர் அறிமுகப்படுத்தியதும், கலைஞரின் பார்வை இப்போது என் மீது இருந்தது. என் உறவினர் அவரிடம் ‘பையனுக்கு நடிப்பு ஆர்வம். இப்பக்கூட ஏ. பி. நாகராஜன் எடுக்கப்போகிற கந்தன் கருணை படத்தில் முருகன் வேஷத்துக்கு ‘மேக்கப்’ டெஸ்ட் எடுத்திருக்கிறாங்க’ என்று சொல்லிவிட்டார்.
கலைஞர் கொஞ்சமும் தாமதிக்காமல் உடனே ஒரு காரியம் செய்தார். போனில் ஏ. பி. ?!8வி!ஜன் வீட்டுக்கு பேசினார். ‘ஏ. பி. என், நான் மு. க. பேசுகிறேன். பட்டுக்கோட்டை சிவகுமார் (அப்பேது என் பெயரும் சிவகுமார்தான்) நம்ம பையன். பார்த்து பண்ணுங்க’ என்றார். ஏ. பி. நாகராஜன் சொன்ன பதிலில் திருப்தியடைந்தவர், ‘நிச்சயம் கிடைக்கும்’ என்று சொன்னார். சந்தோஷமாய் அவரிடம் விடைபெற்றோம். ஆனால் முருகன் வேடம் கிடைத்தது சிவகுமாருக்குத் தான்.
இதில் கூட பெயர்க்குழப்பம் தான் பிரதானம். சினிமாவுக்காக நான் என் பெயரை ‘சிவகுமார்’ என்று மாற்றிக் கொண்டிருந்தேன். என்னுடன் மேக்கப் டெஸ்ட் போட்டுக் கொண்டவரும் சிவகுமார்தான். இரண்டு சிவகுமாரில் யாருக்கு வாய்ப்பு கிடைத்தாலும் அது ‘சிவகுமாருக்கு’ கிடைத்த வாய்பே! இந்த வகையில் சிவகுமாருக்கு வாய்ப்பு கொடுக்கச் சொல்லி கலைஞர் போன் செய்தபடி, எங்கள் இருவரில் ஒரு சிவகுமாருக்கு வாய்ப்பு கிடைத்ததாகவும் எடுத்துக் கொள்ளலாம். மேக்கப் டெஸ்ட் முடிவு எனக்கு தெரியவந்த போதும் அதை சாதாரணமாக எடுத்துக்கொள்ள இதுவும் ஒரு காரணம்’
இவ்வாறு விஜயகுமார் கூறினார். முருகன் வேடம் கிடைக்காததால், விஜயகுமார் ஊருக்குத் திரும்பினார். விவசாயம் அல்லது அப்பாவின் ரைஸ்மில் ஏதாவது ஒன்றை பார்த்துக் கொள்ளலாம் என்று முடிவு செய்தார். அப்பாவும் ‘நடிக்க ஆசைப்பட்டே! ஒண்ணு ரெண்டு படத்தில் நடிச்சும் பார்த்திட்டே சினிமாவை மறந்துட்டு, ஊரோடு இருந்துவிடு’ என்றார்.
ஊருக்கு வந்து அப்படியும் இப்படியுமாக 6 வருடம் ஓடிவிட்டது. இதற்கிடையே 1969 ஆம் ஆண்டில் முத்துக்கண்ணுவுடன் திருமணமும் நடந்து முடிந்து விட்டது. சென்னையில் சினிமா வாய்ப்புக்காக முயன்ற நாட்களில் விஜயகுமாருக்கு மு. க. முத்து நண்பராகியிருந்தார். விஜயகுமார் சினிமாவே வேண்டாம் என்று ஊருக்கு வந்திருந்த நேரத்தில் மு. க. முத்து நடித்த ‘பிள்ளையோ பிள்ளை’ படம் ரிலீசாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருந்தது.
இந்தப் படத்தை பார்த்ததும், தனது நண்பர்களில் ஒருவர் நடிகராகிவிட்ட சந்தோஷம் விஜயகுமாருக்கு! அதோடு, ‘நாமும் சென்னைக்குப் போய், இன்னும் ஒரு தரம் முயன்று பார்த்தால் என்ன?’ என்ற எண்ணமும் எழுந்தது. ‘திருமணமாகிவிட்டதே. இனி ஊரில் இருந்தால்தானே சரியாக இருக்கும்’ என்று மனதின் குறுக்கே ஓடிய கேள்வியை புறந்தள்ளினார். அப்பாவை சந்தித்தவர், ‘இன்னும் ஒரேயொரு தடவை மட்டும் சென்னைக்கு போய் நடிக்க முயற்சி செய்து பார்க்கட்டுமா?’ என்று கேட்டார்.
அதுபற்றி விஜயகுமார் கூறுகிறார்,
‘மகன் இனி ஊரோடு செட்டிலாகி விடுவான். தொழிலில் நமக்கு உறுதுணையாக இருப்பான் என்று அப்பா நம்பினார். என் சினிமா ஆசை என்னை விட்டுப் போய்விட்டதை அறிந்த பிறகே திருமணமும் செய்து வைத்தார். இப்போது என் நண்பர் மு. க. முத்து நடிக்க வந்ததும் எனக்குள் இருந்த சினிமா ஆர்வம் பொங்கியெழுந்து விட்டதை புரிந்து கொண்டார். ‘ஒரு வருஷம் மட்டும் கடைசியாக முயற்சி செய்து பார்க்கிறேன். 365 நாள் வரையிலும் வாய்ப்பு கிடைக்காமல் போனால், மறுநாள் ஊரில் இருப்பேன். அதன் பிறகு ‘சினிமா’ என்கிற வார்த்தையை கூட உங்களிடம் பேசமாட்டேன்’ என்றேன்.
அப்பா என்னை கூர்மையாக பார்த்தார். நேராக வீட்டுக்குள் போனவர் 20 ஆயிரம் ரூபாய் பணத்தை எடுத்து வந்து என்னிடம் கொடுத்தார். ‘நீ சென்னையில் இருக்கிற நாட்களில் பணப் பிரச்சினை ஏற்பட்டு விடக் கூடாது, அதற்காக இதை வைத்துக்கொள். சினிமாவுக்கு கடுமையாக முயற்சி பண்ணு, ஆனால் சொன்னபடி ஒரே வருஷம்தான். சினிமாவில் உன் முயற்சி வெற்றி பெற்றால் உன்னை விடவும் நான் அதிகம் சந்தோஷப்படுவேன்’ என்றபடி என்னை வழியனுப்பி வைத்தார்.’ இவ்வாறு கூறினார் விஜயகுமார்

ரஜனியும், பிரபுவும் இணைந்து நடித்த ~தர்மத்தின் தலைவனில்' குஷ்பு அறிமுகம்

rhண்டோ சின்னப்ப தேவர் மறைவுக்குப் பின், அவருடைய ‘தேவர் பிலிம்ஸ்’, ‘தண்டாயுதபாணி பிலிம்ஸ்’ ஆகியவை பல சோதனைகளை சந்திக்க நேரிட்டது. தேவரின் நிறுவனத்தை மீண்டும் தூக்கி நிறுத்த வேண்டும் என்ற எண்ணத்துடன், அவர்களுக்காக ஒரு படம் பண்ணிக்கொடுக்க முடிவு எடுத்தார் ரஜனி. அதன்படி உருவான படம் தான் ‘தர்மத்தின் தலைவன்’.
படத்தை குறித்த காலத்தில் முடிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன், டைரக்ஷன் பொறுப்பை தன் ஆஸ்தான டைரக்டர் எஸ். பி. முத்துராமனிடம் ஒப்படைத்தார். படத்தை ‘தண்டா யுதபாணி பிலிம்ஸ்’ பேனரில் தேவரின் மகன் சி. தண்டாயுதபாணி தயாரித்தார்.
‘கஷ்மே வர்தே’ என்ற இந்திப் படத்தின் கதையை தழுவி திரைக்கதை - வசனம் எழுதினார் பஞ்சு அருணாசலம். இந்தப் படத்தில் ரஜினியும், பிரபுவும் இணைந்து நடித்தனர். ரஜினிக்கு ஜோடி சுஹாசினி, பிரபுவுக்கு ஜோடி குஷ்பு. இந்தப் படத்தின் மூலம்தான், தமிழ்ப்பட உலகில் குஷ்பு அடியெடுத்து வைத்தார்.
‘குஷ்புவை தேர்வு செய்தது எப்படி? என்று கேட்டதற்கு டைரக்டர் எஸ். பி. முத்துராமன் கூறியதாவது :-
‘பிரபுவுக்கு ஜோடியாக ஒரு புது முகத்தை அறிமுகம் செய்ய தீர்மானித்தோம். அந்த சமயத்தில், குஷ்பு தெலுங்குப் படத்தில் நடித்துக் கொண்டிருந்தார். அவரை வரவழைத்துப் பார்த்தோம். எங்கள் கதாபாத்திரத்துக்கு பொருத்தமாக இருப்பார் என்று தீர்மானித்து, பிரபுவுடன் இணைந்து நடிக்க ஒப்பந்தம் செய்தோம்.
அந்த சமயத்தில் குஷ்புவுக்கு தமிழ் ஒரு வார்த்தைகூட தெரியாது. ஆனால், தமிழ் கற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் நிறைய இருந்தது. ஏ. வி. எம். படங்களில் நடிக்க வருகிறவர்களுக்கு தமிழ் கற்றுக் கொடுக்கும் எஸ். எல். நாராயணனைக் கொண்டு, குஷ்புவுக்கு தமிழ் கற்றுக்கொடுக்க ஏற்பாடு செய்தோம். தமிழ் வார்த்தைகளை ஆங்கிலத்திலும், இந்தியிலும் எழுதி வைத்துக்கொண்டு பேசிப் பழகினார்.
இவ்வாறு முத்துராமன் கூறினார். இந்தப் படத்தில் ரஜினிக்கு, இரட்டை வேடம். ஒரு வேடத்தில் ஞாபக மறதி பேராசிரியராக நடித்தார். புதுமையான வேடம். ரசிகர்களை சிரிக்க வைத்த வேடம். இன்னொரு வேடத்தில், முரட்டு இளைஞனாக நடித்தார். இப்படத்துக்கு இளையராஜா இசை அமைத்திருந்தார். பாடல்கள் இனிமையாக இருந்தன. குறிப்பாக, ‘தென் மதுரை வைகை நதி’ என்ற பாடல் ரசிகர்களின் இதயத்தைக் கவர்ந்த பாடல்.
24.4.1988 ல் வெளிவந்த ‘தர்மத்தின் தலைவன்’ நூறு நாள் ஓடி வெற்றிபெற்றது. குறிப்பாக குஷ்புவுக்கு இப்படம் மிகுந்த பெயர் தேடித் தந்தது. படிப்படியாக முன்னேறி, வெகு விரைவில் தமிழ் நடிகைகளில் முதல் இடத்தைப் பிடித்தார். தன்னை அறிமுகப்படுத்தியவர் என்ற முறையில், முத்துராமன் மீது மிகுந்த மதிப்பும், மரியாதையும் வைத்திருக்கின்றார். சமீபத்தில் ஜெயா தொலைக்கட்சியில், ‘ஜக்பொட்’ நிகழ்ச்சியில் பேசும்போது ‘டைரக்டர் எஸ். பி. முத்துராமன் என் குரு’ என்று குறிப்பிட்டார்.
இதுபற்றி முத்துராமன் கூறுகையில்:
‘குஷ்பு ஆர்வத்தினாலும் விடா முயற்சியினாலும் வெகு சீக்கிரம் தமிழ் கற்றுக்கொண்டார். அது மட்டுமின்றி, தமிழரையே திருமணம் செய்து கொண்டு, தமிழ்ப் பெண்ணாகவே மாறிவிட்டார்.  அவருக்கு எனது வாழ்த்துக்கள்’ என்று குறிப்பிட்டார். டைரக்டர் பாரதிராஜாவுடன் மீண்டும் ரஜினி இணைந்த படம் ‘கொடி பறக்குது’ இதற்கு முன் பாரதிராஜாவின் முதல் படமான ‘16 வயதினிலே’யில் ரஜினி நடித்திருந்தார்.
ஏறத்தாழ 11 ஆண்டு இடைவெளிக்குப் பிறகு பாரதிராஜா படத்தில் ரஜினி நடித்தார். மனோஜ் கிரியேஷன்ஸ் பேனரில் தயாரான இப்படத்தின் கதை - வசனத்தை ஆர். செல்வராஜ் எழுதினார்.ரஜினிக்கு ஜோடியாக அமலா நடித்தார். இப்படத்தில் டைரக்டர் மணிவண்ணன் முதல் முதலாக வில்லனாக நடித்தார். 7.11.1988 ல் வெளியான இப்படம், எதிர்பார்த்த அளவில் ஓடாவிட்டாலும், 100 நாட்களை எட்டிப் பிடித்தது.

Tuesday, August 13, 2013

சென்னை எக்ஸ்பிரஸ்(இந்தி) - ஒரு பார்வை!




 அதில் ஷாருக்கான் என்ன செய்கிறார் என்பது புதுசு.

 அதற்காக இது சென்னை சம்பந்தப்பட்ட படம் என்றோ சென்னையில் நடக்கிற கதை என்றோ தவறாக நினைத்துவிட வேண்டாம்.


தமிழ் புரியாமல் மாட்டிக்கொண்டு சிரமப்படும் ஷாருக்கான், கலர் கலர் உடைகளோடு பளிச்சென வலம்வரும் தீபிகா படுகோனே, தென்னிந்தியாவின் டான்-னாக இருக்கும் சத்யராஜ் (பெரியதலை) என படம் முழுக்க கலர் ஃபுல் கலாட்டா தான். கில்லி, முத்து, அலெக்ஸ் பாண்டியன் சண்டைக்காட்சிகள், சில தெலுங்கு படங்கள் என அனைத்தையும் கலந்துகட்டிய சென்னை எக்ஸ்பிரஸ் படு வேகத்தில் பறக்கிறது. 

தன் தாத்தாவின் அஸ்தியை ராமேஸ்வரம் கடலில் கரைப்பதற்காக தென்னிந்தியாவை நோக்கி புறப்படுகிறார் ஷாருக்கான் (ராகுல்). எதிர்பாராத விதமாக சென்னை எக்ஸ்பிரசில் தீபிகா படுகோனேவை (மீனம்மா என்கிற மீனலோச்சனி அழகுசுந்தரம்) சந்திக்கிறார். அவர் கூட உருவத்தில் பெரியதாக இருக்கும் நான்கு அடியாட்களும் இருக்கிறார்கள்.

தன் அப்பா பார்த்த மாப்பிள்ளை பிடிக்கவில்லை என்பதால் ஊரைவிட்டு தப்பிவந்த என்னைக் கண்டுபிடித்து மீண்டும் தன் அப்பாவிடமே கொண்டுசெல்கிறார்கள் என்ற உண்மையை ஷாருக்கானிடம் சொல்லி தன்னைக் காபாற்ற சொல்கிறார் தீபிகா.

ஷாருக்கானும் ஏதேதோ ட்ரை பண்ண, எல்லாமே காமெடியாக முடிந்துவிடுகிறது. வில்லன்களிடம் தன் குறும்புத்தனமான சேஷ்டைகளை காட்டியதால் ஷாருக்கானும் பிடித்துவைக்கப்படுகிறார். ரயில் தீபிகாவின் சொந்த ஊருக்கு வந்து சேர்கிறது. அங்கு தான் சத்யராஜ் அசத்தல் எண்ட்ரி கொடுக்கிறார்.

வேறு வழியில்லாமல், ஷாருக்கானைக் காட்டி இது தான் என் காதலன் என்று அப்பாவிடம் பொய்சொல்லிவிடுகிறார் தீபிகா. தூக்குங்கடா என் மாப்பிள்ளைய என்று சத்யராஜ் சொன்னதும் ஷாருக்கானுக்கு ராஜ மரியாதை வழங்கப்படுகிறது.

அப்போது தான் ஒரு வில்லன் வருகிறார். அவர் தான் தீபிகாவுக்கு சத்யராஜ் பார்த்திருக்கும் மாப்பிள்ளை. ஒத்தைக்கு ஒத்தை சண்டைபோடுவோம் என்னை ஜெயிச்சிட்டு தீபிகாவை கல்யாணம் பண்ணிக்கோ என்று சவால் விடுகிறார். வில்லனின் கம்பீர உருவத்தைப்பார்த்து மிரண்டுபோகிறார் ஷாருக்கான். அங்கிருந்து தப்பிசெல்ல முயன்றும் மீண்டும் அதே ஊரில் வந்து அவர்களிடமே சிக்கிக்கொள்வது சரவெடி காமெடி.  

என்ன செய்வதென்று தெரியாமல் கில்லி விஜய் ஸ்டைலில் ஒரு கத்தியை தீபிகா கழுத்தில் வைத்து அவரை ஒரு ஜீப்பில் ஏற்றிக்கொண்டு வில்லன்களில் பிரம்மாண்ட சேசிங்குடன் அங்கிருந்து இருவரும் எஸ்கேப் ஆகிறார்கள். தன் தாத்தாவின் அஸ்தியை ராமேஸ்வரத்தில் கரைத்து, தன் பாட்டி தனக்கு கொடுத்த கடமையை நிறைவேற்றுகிறார் ஷாருக்.

இதற்கிடையில் ரொமாண்டிக் மெலடி, வேட்டிகட்டி ஒரு குத்துப்பாட்டு என கனவில் மட்டும் இருவரும் காதல் வளர்க்கிறார்கள். ஒரு கட்டத்தில் இருவருக்குமே காதல் வருகிறது. தீபிகாவுடன் தன் சொந்த ஊருக்குத் தப்பிக்க போகிறார் ஷாருக் என எதிர்பார்கிற நேரத்தில் சத்யராஜ் முன்னாடி வந்து நின்று, தான் தீபிகா மீது வைத்திருக்கும் காதலை சொல்லியது மட்டும் அல்லாது வில்லனை வீழ்த்தி தீபிகாவை எப்படி மணம் முடிக்கிறார் என்பதோடு முடிகிறது படம்.

ஷாருக்கான் தமிழ் தெரியாமல் திணருவதும், இரண்டு மூன்று வார்த்தைகளை தமிழில் பேசும் காலாட்டா காட்சிகளும் ரசிக்க வைக்கிறது. க்ளைமாக்ஸ் காட்சியில் ‘உயிரோட வந்த நீ உயிரோட போமாட்ட... வெட்டி பீஸ் பீஸ் ஆக்கி பார்சல் அனுப்பிடுவேன்’ என்று வில்லன் பேசிய வசனத்தை அவரிடமே ஷாருக் பேசிக்காட்டுவது தூள்.

மீனலோச்சனி அழகுசுந்தரம் என்ற பெயரில் அழகு என்ற வார்த்தையை உச்சரிக்க முடியாமல் ஒவ்வொரு முறையும் ‘அசுட... அசுட...’ என்று ஷாருக் பேசுவது கலகலப்பு. வழியைத் தொலைத்து திசைமாறி சென்றுவிடும் ஷாருக்கான் கேரளா பக்கம் போக, அங்கே ஒருவர் எந்தானு ஜோலி என்று கேட்க... ‘ஐ யம் நாட் ஏஞ்சலினா ஜோலி’ என்று ஷாருக் பதில் சொல்வது குபீர் சிரிப்பு.

ப்ரியாமணி ஒரு குத்துப்பாடுக்கு வருகிறார். கவர்ச்சி இல்லை என்றாலும் ஷாருக்கானுடன் திமிரிக்கொண்டு ஆடுகிறார். டில்லி கணேஷ், கிங் காங் என நம்ம ஊர் நடிகர்கள் சிலர் வந்துபோகிறார்கள்.

 படம் முடிந்த பிறகு கடைசியாக லுங்கி டான்ஸ் வருகிறது.

ஷாருக்கானை சத்யராஜ் முதன் முதலில் சந்திக்கும் போது ‘என்னமா கண்ணு’ என்று அவர் ஸ்டைலில் சொல்வதும், க்ளைமாக்சில் அதே ‘என்னமா கண்ணு’ வசனத்தை ஷாருக்கான் சத்யராஜிடம் சொல்வதும் ரசிக்க வைக்கிறது.


தீபிகாவின் நாக்கில் தமிழ் படாதபாடு படுகிறது. அவரே டப்பிங் பேசிருக்கிறார் (ஒய் திஸ் கொலவெறி).தமிழை கொஞ்சம் தெளிவாய் உச்சரித்திருந்தால், நச்சரிக்கும் தீபிகாவின் அழகை இன்னும் ஆழமாய் ரசித்திருக்கலாம்.

சென்னை எக்ஸ்பிரஸ் - நேரத்தைக் குறைத்திருந்தால் சென்னை எக்ஸ்பிரஸின் வேகம் இன்னும் அதிகரித்திருக்கும்... ஷாருக்கான் பேசும் தமிழை நிச்சயம் தமிழ் ரசிகர்கள் ரசிப்பார்கள் என்பதில் சந்தேகமில்லை.

Wednesday, August 7, 2013

எப்படி இருக்க வேண்டும் என்பதற்கும் எப்படி இருக்க கூடாது என்பதற்கும் சாட்சியான சாவித்திரி

ணிந்திராவின் விஜயவாடா நகரில் 1937 ல் பிறந்தார். பூரண சாஸ்த்ரி என்பவரிடம் நடனம் கற்று விஜயவாடாவில் நடன அரங்கேற்றம் செய்தார். ஓட்டோமொபைல் வியாபாரியான பெரியப்பா வளர்ப்பில் ஆந்திராவெங்கும் நடனம் ஆடினார்.
ஒன்பதாவது வரை படித்தார். 1950 ல் தெலுங்கு சம்சாரம் படத்தில் குழந்தை நட்சத்திரமாய் அறிமுகமாகி திரை உலகில் நுழைந்தவர் சாவித்திரி. பெரியப்பா கே. வி. செளத்ரியின் முயற்சியால் சினிமாவில் நுழைந்து பட உலகில் வலம் வந்தார். தொடர்ந்து தமிழ், தெலுங்கில் நிறைய படங்களில் நடித்தார்.
தேவதாஸ் என்ற ஒரு படமே சாவித்ரியை தென் இந்திய திரைப்படத்தில் மிகப்பெரிய நடிகையாக மாற்றிவிட்டது.
மிஸ்ஸியம்மா, அமரதீபம், என வெற்றிப் படங்களின் எண்ணிக்கை தொடர்ந்தது. 1953 ல் மனம் போல மாங்கல்யம் படத்தில் தான் ஜெமினி கணேசனை முதலில் சந்தித்தார். படப்பிடிப்பிலேயே காதல் தொடங்கியது.
மிஸ்ஸிய்யம்மா படத்தில் காதல் உறுதியானது. எனினும் இருவரும் சொல்லி கொள்ளவில்லை. காரணம் அப்போது ஜெமினி இருமுறை திருமணம் செய்து இருந்தார். அலமேலு என்ற பாஜியோடு நுங்கம்பாக்கத்தில் குடி இருந்தார். தன்னுடன் நடித்த நடிகை புஷ்பவல்லியையும் திருமணம் செய்து இருந்தார். நடிகை ரேகாவின் அம்மா புஷ்பவல்லி.
இருப்பினும் சாவித்திரி மேல் இருந்த காதலையும் ஜெமினியால் மறக்க முடியவில்லை. ஒருநாள் இரவு சாவித்திரியும் அவர் தோழி தாட்சாயணியும் ஜெமினியை தேடி அவர் வீட்டுக்கே சென்று விட்டார்கள். காரணம்.
ஜெமினியை சாவித்திரி விரும்புவதை தெரிந்து கொண்ட சாவித்ரியின் பெரியப்பா துப்பாக்கியோடு சாவித்திரியை மிரட்டி, ஜெமினியை சுட்டுவிடுவதாகவும் சொல்ல அங்கிருந்து கிளம்பி விட்டதாக சாவித்திரி சொன்னார். இரவு அங்கேயே தங்கிய சாவித்திரி பெரியப்பாவின் பிடியில் தான் படும் கஷ்டங்களை சொன்னார். சாவித்ரிக்கு ஆதரவாக ஜெமினி இருப்பதாக ஜெமினி ஆறுதல் சொன்னார்.
தொடர்ந்து அப்போது வெளிவந்து கொண்டிருந்த ஜெமினி - சாவித்திரி. படங்களினால் அப்போது ரசிகர்களே அவர்களின் திருமணத்தை விரும்பினர் சாவித்திரி வேறு யாரோடு நடித்தாலும் அது ஓடுமா என்ற நிலை. ஒரே நேரத்தில் அவர்களுக்கு 10 படங்கள் ஒப்பந்தம் ஆகி வேறு இருந்தது.
இந்நிலையில் தான் இந்த சம்பவம் ஒரு வழியாக திரை உலக பிரபலங்கள் உதவியோடு 1956 செப்டம்பரில் சாவித்திரி ஜெமினி திருமணம் நடைபெற்றது. அபிராமபுரத்தில் தனி வீடு வாழ்க்கை இனிமையாக மாறியது. தொடர்ந்து நடித்தார். பணம் கொட்டியது.
1958ல் கர்ப்பமானதால் படங்களில் நடிக்க முடியாமல் சில மாதங்கள் ஓய்வு எடுத்தார். நிறைய தெலுங்கு, தமிழ் தயாரிப்பாளர்கள் தவித்து போனார்கள். அப்போது அவர் நடிக்காமல் போன படங்கள் கல்யாண பரிசு, நல்ல தீர்ப்பு போன்றவையாகும். முதல் குழந்தை பெண் சாமுண்டீஸ்வரி பிறந்தார்.
பிறகும் நடிப்பு தொடர்ந்தது. 1959 ல் பாசமலர், பார்த்தால் பசி தீரும், பாவமன்னிப்பு என வெற்றி தொடர்ந்தது. 1960ல் சின்னாரி பாப்பலு என்ற தெலுங்கு குழந்தைகள் படத்தை சாவித்திரி இயக்கினார்.
படம் அமோக வெற்றி. தமிழில் அந்த படம் குழந்தை உள்ளம் என்ற பெயரில் கூட வந்தது. சுமாரான வெற்றி. 100 படங்கள் முடித்த சாவித்ரிக்கு 1965ல் சதீஷ் என்ற மகனும் பிறந்தார். நவராத்திரி, கை கொடுத்த தெய்வம் என குண்டு உருவத்திலும் இவர் வெற்றி தொடர்ந்தது. எம். ஜி யாரோடு பரிசு, வேட்டைக்காரன், மகாதேவி, என். டி. யாரோடு ஏகப்பட்ட படங்கள் நடித்தார்.
ஒரு முறை வட நாட்டுக்கு சென்று இருந்த போது அங்கு இருந்த பத்திரிகையாளர் ‘இவளோ குண்டாக இருக்கும் உங்களை எப்படி தென் இந்திய ரசிகர்கள் வெற்றி பெற செய்தார்கள் என்று கேட்க, உடனே சாவித்திரி ‘எங்கள் ஊரில் நடிப்பை கழுத்துக்கு மேலே தான் பார்ப்பார்கள்’ என்று கோவமாக தெரிவித்தார். இயல்பான அழகு, காண்பவரை தம் வசம் இழக்க செய்யும் அற்புத நடிப்பு.
குழந்தை உள்ளம், சட்டென்ற கோவம் என் சாவித்திரி திரை உலகின் உச்ச நட்சத்திரமாய் வாழ்ந்தார். கண்ணதாசனின் சொந்த படமான ரத்த திலகம் படத்தில் நடித்த போது கால்iட் விஷயத்தால் நிதானம் இழந்த கண்ணதாசன் மோசமாக சாவித்ரியை பேசி விட அதை கேட்டு விட்ட சாவித்திரி அந்த படத்திலே நடிக்க மாட்டேன் என்று வேட்டைக்காரன் படத்துக்கு அந்த திகதிகளை கொடுத்து விட்டார். பின்னர் மனமிரங்கி நடித்துக் கொடுத்தார். வருபவர்க்கெல்லாம் வாரி வழங்கும் குணம் கொண்ட அப்போதைய நடிகை சாவித்திரி, மற்றொருவர் அஞ்சலிதேவி.
1967 வரை வெற்றி தொடர புராண படங்களில் சக்தியாக, சரஸ்வதியாக வாழ்ந்தார். தனுஸ்கோடி புயலில் சிக்கி மறுஜென்மம் பெற்று வந்தார். 1970 வரை வாழ்க்கை நல்லபடியாகவே சென்றது. பிறகு மெல்ல புயல் வீச தொடங்கியது. அது தெரியாமல் இந்த மென்மலர் சிரித்துக்கொண்டே இருந்தது.

Chennai Express



காலத்தை வென்ற பாடல்களை எழுதிய தஞ்சை ராமையாதாஸ்

சீப்பாவின் கதை - வசனம் இயக்கத்தில் “மச்சரேகை” நாடகம் 200 தடவை மேடையேறியிருப்பதை தெரிந்து கொண்ட டி.ஆர். மகாலிங்கம் அதை தனது கம்பெனிக்காக படமாக்கித்தர முடியுமா? என்று கேட்க, அப்பாவும் சந்தோஷமாய் சம்மதித்திருக்கிறார்.
இந்த வகையில் சினிமாவுக்காக அப்பா சென்னை வர காரணமாக இருந்தவர் டி.ஆர். மகாலிங்கம்தான். அப்பாவின் பாட்டெழுதும் திறமையை முதலில் கண்டு கொண்டது நாகிரெட்டியாரின் விஜயா - வாகினி நிறுவனமே. 1951 முதல் 1960 வரை அந்த நிறுவனம் தயாரித்த “பாதாள பைரவி”, “மிஸ்ஸியம்மா”, “மாயாபஜார்” போன்ற பல படங்களுக்கு வசனம், பாடல்கள் அப்பாதான். விஜயா - வாகினியின் ஆஸ்தான கவிஞர் என்ற தகுதியிலும் நிலைத்தார்.
அன்று இசை உலகில் கொடிகட்டிப் பறந்த இசை மேதைகள் சி.ஆர். சுப்பராமன், எஸ்.எம். சுப்பையா நாயுடு, ஜி. ராமநாதன், எஸ்.வி. வெங்கட்ராமன், கே.வி. மகாதேவன், விஸ்வநாதன் ராமமூர்த்தி, கண்டசாலா, எஸ். ராஜேஸ்வரராவ், ஆதிநாராயணராவ் ஆகியோரின் இசை அமைப்பில் அப்பா பாடல்கள் எழுதினார்.
ஒரு சமயம் டைரக்கடர் ஸ்ரீதர் “அமரதீபம்” படத்துக்கு பாட்டெழுதி வாங்க அப்பாவிடம் வந்திருக்கிறார். பாடலுக்கான சூழ்நிலையை ஸ்ரீதர் விவரித்ததும் அப்பா, “நம்பினா நம்புங்க! நம்பாகாட்டி போங்க” என்ற பல்லவியை சொன்னார். பதறிப்போன ஸ்ரீதர், “வாத்தியாராய்யா! இது எனது முதல் படம். அதோட படத்துக்கு நான் பதிவு பண்ணப்போற முதல் பாட்டும் இதுதான். இப்படி பாட்டு கிடைச்சா, படத்தை யாரும் வாங்காமல் போய்விடுவார்களே” என்று கலக்கமாய் கூறியவர், “வேற ஒரு பாட்டு ஜாலியாய் வர்ற மாதிரி எழுதிக்கொடுங்க” என்று கேட்டிருக்கிறார்.
அப்பாவும் உடனே தமாஷாக, “ஜாலிலோ ஜிம்கானா, டோலிலோ கும்கானா” என்று எழுதிக் &8!னிrதிருக்கிறார்.
“இதுக்கு என்ன அர்த்தம்?” என்று ஸ்ரீதர் முழிக்க, அப்பாவோ, “கதைப்படி இது குறவன் - குறத்தி பாடற பாட்டு. குறவர்கள் பாஷை எனக்கும் தெரியாது. உனக்கும் தெரியாது. போய் தைரியமாய் ரிக்கார்டிங் செய். படம் அமோகமாக வெற்றி பெறும்” என்று சொல்லி அனுப்பியிருக்கிறார். படம் வெற்றி பெற்றதோடு அப்பாவுக்கு “டப்பாங்குத்து பாடலாசிரியர்” என்ற பெயரும் வந்து சேர்ந்தது.
ஆனால் அப்பா அது பற்றியெல்லாம் கவலைப்படாமல் தனது பாணியில் பாடல்களை எழுதிக் கொண்டிருந்தார்.
கலைஞர் மு. கருணாநிதி அப்போது தங்கள் மேகலா பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வந்த “குறவஞ்சி” படத்துக்கு பாடல்கள் எழுத அப்பாவை அழைத்தார். அப்பா அப்போது மதுவுக்கு பழக்கப்பட்டுப் போயிருந்த நேரம். அதனால் அதை பாட்டிலேயே வரிகளாக்கி “எந்நாளும் ‘தண்ணி’யிலேயேதான் எங்க பொழப்பு இருக்குது ரா... ரா... ரா...” என்று எழுதினார்.
சினிமாவில் ‘கேட்டது கிடைக்கும்’ என்பது அப்பாவிடம்தான். இயக்குனர்கள் எந்த மாதிரி விரும்புகிறார்களோ! அந்த மாதிரி பாடல்களை கொடுப்பார். ஒருமுறை லட்சிய நடிகர் எஸ்.எஸ். ராஜேந்திரன் தனது “தங்கரத்தினம்” படத்துக்கு ஒரு பாட்டு கேட்டார். பல்லவியில் “உதசூரியன்” என்ற வரி வரும்படி கேட்டுக் கொண்டார். அப்பாவும் “எதையும் தாங்கும் மனசு, என்னை ஏமாத்தப் பாக்குவது வயது, என் இதயவானிலே உதயசூரியன் எழுந்ததுதான் புதுசு” என்று எழுதிக்கொடுத்தார்.
அப்பா பிசியான கவிஞராக இருந்த நேரத்தில் கவிஞர் கண்ணதாசனும் பாட்டெழுத வந்து விட்டார். அவர் அப்போது “மாலையிட்ட மங்கை” என்ற படத்தையும் தயாரித்தார். அந்தப் படத்திற்கு பாட்டு எழுத அப்பாவை கேட்டார். ஆனால் அப்பா இருந்த ‘பிஸி’யில் அவரால் பாட்டெழுதி கொடுக்க முடியாமல் போயிற்று. இதில் கண்ணதாசனுக்கு அப்பா மீது வருத்தம்.
அந்தக் காலத்தில் ‘கதை, வசனம், பாடல்கள் ஒருவரே’ என்ற நிலையை துவக்கி வைத்த முதல் கவிஞர் அப்பாதான். அதோடு நாடக உலகின் தந்தை என கொண்டாடப்படும் சங்கரதாஸ் சுவாமிகளை தமிழ் மண்ணுக்கு அறிமுகம் செய்து வைத்தவரும் அவர்தான் சங்கரதாஸ் சுவாமிகளின் நாடகக் குழுவில் ‘பபூன்’ வேடமிட்ட சங்கரய்யரை கடைசி வரை ஆதரித்தார்.
பின்னாளில் நாடகத் தந்தை சங்கரதாஸ் சுவாமிகளின் சமாதிக்கு சென்று குருபூஜை நடத்தி, தன்னை சங்கரதாஸ், சுவாமிகளின் ‘ஏகலைவன்’ என்றும் அழைத்துக் கொண்டார்.” இவ்வாறு கவிஞர் தஞ்சை ராமையா தாஸின் மகன் ரவீந்திரன் கூறினார்.

Thursday, August 1, 2013

இந்தி பயிலும் தனுஷ்

Dhanush, studying Hindi
இந்தியில் தனுஷ் நடித்த, "ராஞ்சனா படம் இந்தியா மட்டுமின்றி, அமெரிக்காவிலும் சில திரையரங்குகளில் ரிலீசானது. ஒரேயொரு இந்தி படத்தில் நடித்ததின் மூலம், தனுஷின் வியாபார வட்டம் பரந்து, விரிந்து விட்டது.  அதே படம் தமிழில், "அம்பிகாபதி என்ற பெயரில், "டப் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது. ஒரு சில நாட்களிலேயே, பெரும்பாலான தியேட்டர்களில் அந்த படத்தை தூக்கி விட்டனர். அதேபோல், நேரடி தமிழ்ப்படமான, "மரியானும் தனுஷûக்கு பெரிய வெற்றியை கொடுக்கவில்லை. அதனால், தனக்கு வெற்றி வாய்ப்பை கொடுத்த, இந்தி சினிமாவின் மீது தனுஷûக்கு, கூடுதல் ஆர்வம் ஏற்பட்டுள்ளது. தற்போது, தீவிரமாக இந்தியும் பயின்று வருகிறாராம்.

நம்புங்க நானும் காமெடி பீஸ் தான்கலாய்க்கிறார் டாப்சி

Believe me i am jolly person says tapsee
 "முனி படத்தின் மூன்றாம் பாகமான, "கங்காவில், டாப்சி தான் ஹீரோயின். ஒரே நேரத்தில், தமிழ், தெலுங்கு என, இரு மொழிகளிலும், இந்த படம் தயாராவதால், உற்சாகமாக இருக்கிறார், டாப்சி. அவர் அளித்துள்ள ஒரு பேட்டியில்,"என்னை பார்ப்பவர்கள் அனைவருமே, நான் சீரியசான பொண்ணு என, நினைக்கின்றனர். ஆனால், அது தவறு. நான்,சரியான காமெடி பீஸ். படப்பிடிப்பு நடக்கும் இடங்களுக்கு வந்து பாருங்கள். என்னை சுற்றி, ஒரு கூட்டமே இருக்கும்.

எப்போதும், யாரையாவது கலாய்த்து கொண்டு, கமென்ட் அடித்தும், ஜோக் அடித்தும், என் அருகிலிருப்பவர்களைகல கலப்பாக வைத்திருப்பேன். எப்போதும், கலகலப்பாக இருப்பது தான் என் இயற்கையான குணம். எனவே, காமெடிக்கு முக்கியத் துவம் அளிக்கும் ஒரு கேரக்டரில் நடிக்க வேண்டும் என்ற ஆசை உள்ளது. ஆனால், அதுபோன்ற வாய்ப்புகள் கிடைக்கா தது வருத்தமாக இருக்கிறது என்கிறார், டாப்சி.  இந்த வெள்ளாவி ஹீரோயின், ஏற்கனவே, ஐதராபாத்தில் ஒரு வீடு வாங்கி  விட்டாராம். விரைவில், மும்பையிலும் வீடு வாங்கப் போகிறாராம்.

படித்த பெண்கள் அரசியலுக்கு வரவேண்டும் : ரோஜா பேட்டி!!

Educated women should comes to Politics says Roja
 இயக்குநர் ஆர்.கே.செல்வமணியின் ‘‘செம்பருத்தி’’ படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை ரோஜா. தொடர்ந்து ரஜினி, விஜயகாந்த், சரத்குமார், கார்த்திக், பிரபு உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் பலருடன் நடித்து தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர். தமிழ் மட்டுமின்றி, தெலுங்கிலும் முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார். 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள ரோஜா தற்போது சினிமா, அரசியல், டி.வி., நிகழ்ச்சிகள் என பிஸியாக வலம் வந்து கொண்டிருக்கிறார். அந்த பிஸி வேலையிலும் நமக்கு அளித்த பேட்டி இதோ...

* நீங்கள்,"செம்பருத்தியில் அறிமுகமானது லக்கா - கிக்கா?

லக்குன்னு நினைக்கிறேன். தெலுங்கு பெண்ணாக இருந்தாலும், தமிழ் திரைப்படங்களில், இந்த அளவுக்கு வெற்றி பெற்று, இன்னிக்கும் உங்க முன் நிற்கிறேன் என்றால், அதற்கு, என் கணவருக்கு தான் நன்றி கூற வேண்டும்..

* பெரிய நடிகையாகி, "ஹிட் படங்களை கொடுப்போம் என, நினைத்தீர்களா?

நிச்சயம் இல்லை. என் முதல் படம், "செம்பருத்தி நன்றாக ஓடியது. அடுத்ததாக, "சூரியன் சூப்பர் ஹிட். ரஜினியுடன் நடித்த "உழைப்பாளி உட்பட, நான் நடித்த பல படங்கள் வெற்றி பெற்று, என்னை முன்னணி நடிகையாக்கியது. இந்த பெயரையும், புகழையும், கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை.

* அரசியல் ஆர்வம் எப்படி வந்தது?

என் சகோதரர்கள் மற்றும் என் கணவர் மூலம் வந்த ஆர்வம் தான், என்னை அரசியலில், பெரிய இடத்துக்கு கொண்டு சென்றுள்ளது. என்னால் முடிந்த அளவுக்கு, மற்றவர்களுக்கு நல்ல காரியங்களை செய்யக் கூடிய வாய்ப்பை, அரசியல் எனக்கு ஏற்படுத்தி கொடுத்திருக்கிறது.

* அரசியல், சினிமா, "டிவி என, பயங்கர பிசியா இருக்கிறீர்களே?

நம்மால் செய்ய முடியாதது எதுவுமே இல்லை. நிறைய பேர் நம்மால முடியுமான்னு யோசித்தே, காலத்தை கடத்தி விடுவர். ஆனால், எதுவும் நம்மால முடியும். அரசியல், வீடு, "டிவி இது மட்டும் இல்லாமல்,  எவ்வளவு வேலை கொடுத்தாலும், சந்தோஷமாக திட்டமிட்டு செய்தால், எல்லாமே சாத்தியம் தான்.

* பெண்கள் எப்படி இருக்க வேண்டும்?

தைரியமாக இருக்க வேண்டும். படித்த பெண்கள், அரசியலுக்கு வர வேண்டும். பெண்கள் பிரச்னை பெண்களுக்கு தான் தெரியும். நல்லது செய்வதற்கு, அதிகமான வாய்ப்புகள் உள்ளன. நமக்கு என்ன என, ஒதுங்கி போக கூடாது. நிறைய விஷயங்களில் மாற்றம் ஏற்பட வேண்டுமானால், பெண்கள் கண்டிப்பாக அரசியலுக்கு வர வேண்டும். ப்ளீஸ் வாங்க.

* இப்போதும், படங்களில் நடிக்கிறீர்களா?

அம்மா ரோலில் நடிக்க கொஞ்சமும் விருப்பம் இல்லை. என் கேரக்டர் எனக்கு பிடித்தால், உடனே கால்ஷீட் கொடுப்பேன். இப்போது, "ஆப்பிள் பெண்ணே என்ற படத்தில் நடிக்கிறேன். ரொம்ப நல்ல கேரக்டர். எனக்கு மிகவும் பிடித்துள்ளது.

நஸ்ரியாவை துரத்தும் காதல் கிசுகிசு

Love gossips chasing Nasriya Nazim
 "காய்க்கிற மரம் தான் கல்லடி படும் என்பது போல், வளர்ந்து வரும் நடிகர் நடிகைகளைப் பற்றி தான், பரபரப்பு செய்திகள் வெளியாகும். அந்த வகையில், வேகமாக வளர்ந்து வரும் நடிகையான, "நேரம் பட நாயகி, நஸ்ரியாவைப் பற்றி தமிழ், மலையாளம் என, இரண்டு மொழிகளிலும் காதல் செய்திகள் பரவியுள்ளன. இந்த செய்திகளை, மீடியாக்களில் பார்த்து அதிர்ந்து போயிருக்கிறார் நடிகை.

குறிப்பாக, ஜெய்யுடன் நஸ்ரியாவுக்கு காதல் மலர்ந்திருப்பதாக பரவியிருக்கும் செய்திதான்,அவரை அதிர வைத்திருக்கிறது. காரணம்,மலையாளத்தை விட, தமிழில் தான் முன்னணி இடத்தை பிடித்துவிட வேண்டுமென்று, முழுவீச்சில்  இறங்கியுள்ளார் நஸ்ரியா.அதனால், இந்த காதல் கிசுகிசுக்கள், தன் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை போட்டு விடுமோ என்று அஞ்சும் நடிகை, சில மீடியா நண்பர்களை தொடர்பு கொண்டு, "ஜெய் மட்டு மின்றி, எந்த நடிகருடனும், எனக்கு காதல் இல்லை என்று தெளிவுபடுத்தி வருகிறார்