Wednesday, August 29, 2012

இப்போதைக்கு கல்யாணம் இல்லை

மொடலிங் துறையில் இருந்து மிஸ் சென்னை பட்டம்பெற்ற பிறகு டைரக்டர் ப்ரியதர்ஷன்மூலமாக தமழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் நடிகை த்ரிஷா. கமல், விக்ரம், அஜித், விஜய், சூர்யா, சிம்பு என்று கிட்டத்தட்ட அத்தனை பெரிய நட்சத்திரங்களோடும் ஜோடி சேர்ந்து நடித்துவிட்டார்.
தமிழ் மட்டுமல்லாது தெலுங்கிலும் நாகர்ஜூனா, வெங்கடேஷ், மகேஷ்பாபு, ஜூனியர் என். டி. ஆர். என்று அங்கும் முன்னணி நட்சத்திரங்கள் பலருடன் ஜோடி சேர்ந்து நடித்து நம்பர் - 1 நடிகையாக வலம் வந்தார். அதன் பிறகு புதுமுகங்களின் வரவால் த்ரிஷாவுக்கு கொஞ்சம் சினிமாவில் சறுக்கல் இருந்தாலும், வருஷத்துக்கு மூன்று - நான்கு படங்கள் கொடுத்து கொண்டுதான் இருக்கிறார்.
பொதுவாக த்ரிஷா என்றாலே அவரைப்பற்றி ஏதாவது ஒரு செய்தி பரபரப்பாக இருக்கும். சமீபகாலமாக அவரைப் பற்றிய பரபரப்பான செய்தி அவரது திருமணத்தை பற்றி தான். தெலுங்கில் மிகப் பெரிய தயாரிப்பாளரான சுரேஷ் காருவின் மகனும், நடிகருமான ராணா டகுபதிக்கும், த்ரிஷாவுக்கும் காதல் என்றும், இருவரும் விரைவில் திருமணம் செய்ய இருப்பதாகவும் செய்திகள் வந்த வண்ணம் இருக்கிறது.
இதுபற்றி த்ரிஷாவிடம் நாம் நேரடியாக கேட்டபோது, அவர் கூறியதாவது, என் கல்யாணம் பற்றிய செய்திகள் எனக்கு ஆச்சரியம் அளிக்கும் வகையில் வருகிறது. இப்போதைக்கு நான் படங்களில் தான் பிஸியாக இருக்கிறேன். ராணாவுக்கும் எனக்கும் நல்ல நட்பு இருக்கு.
ஆனால் அது கல்யாணம் வரைக்கும் போகுமா..? என்பது எனக்கு தெரியல, பழகி பார்க்கணும், சினிமாவுக்கு வந்து 10 வருடம் ஆகிறது. பல மொழிகளிலும் நடிச்சாச்சு. நிறைய கொமர்ஷியல் படங்களிலும் நடிச்சாச்சு. இப்பதான் த்ரிஷா எந்த ரோல் கொடுத்தாலும் நடிப்பாங்க என்று நம்புறாங்க.
இதனால் எனக்கு நல்ல நல்ல ரோல் கிடைக்குது. ரொம்பவே என்ஜோய் பண்ணி படங்களில் நடிக்கிறேன்.
எதையும் மூடி மறைத்து பேசுறவ நான் கிடையாது. அது என்னோடு பழகியவர்களுக்கு நன்றாகத் தெரியும். அப்படி இருக்க என் கல்யாண விஷயத்தை நான் ஏன் மறைக்க போறேன். இப்போது விஷால் கூட சமர், ஜீவாவுடன் என்றென்றும் புன்னகை, ஜெயம் ரவியுடன் பூலோகம் போன்ற படங்களில் நடித்து வருகிறேன்.
இதுதவிர இன்னும் இரண்டு படங்களில் நடிக்க பேசிக்கிட்டு இருக்கேன். எனக்கு ராணா புதிய நபர் கிடையாது. ஏற்கனவே அவரது அப்பா சுரேஷ் சாரின் தயாரிப்பில் வெங்கடேஷ் கூட நமோ வெங்கடேசா, ஆடலாரி, பொடிகார்ட் போன்ற படங்களில் நடிச்சுருக்கேன். அவர் தயாரிப்பில் நான் நடித்த அத்தனை படங்களும் சூப்பர் ஹிட். ராமநாயுவிடுவின் பேரன் தான் ராணா. நடிகர் வெங்கடேஷ் ராணாவுக்கு சித்தப்பா முறை. அவங்க குடும்பம் எல்லோருடனும் நான் நன்றாக பழகி இருக்கேன்.
ராணா எனக்கு நல்ல நண்பர். அவருடன் கொஞ்சம் பழகி பார்க்கணும் கல்யாணம் என்பது காலம் முழுக்க வாழ்க்கை நடத்தும் விஷயம். அது விளையாட்டு கிடையாது. ஒன்று மட்டும் உறுதியாக சொல்கிறேன். என்னுடைய கல்யாணம் இப்போதைக்கு இல்ல. என்ன நம்புங்க ப்Zஸ் என்றார்.
த்ரிஷா பேசி முடித்ததும், அவரது திருமணம் பற்றி அப்படியே அம்மா உமா கிருஷ்ணனிடம் கேட்டோம். அவர் சொன்னபோது, சமீபத்தில் ஒரு ஆங்கில பத்திரிகைக்கு த்ரிஷாவும், ராணாவும் சேர்ந்து ஒரு போடோ ஷ¥ட் கொடுத்தாங்க. அந்தப் படங்களை பார்த்ததும் இருவருக்கும் விரைவில் கல்யாணம் என்று செய்தி வந்துவிட்டது. திருமண விஷயத்தில் த்ரிஷாவுக்கு முழு சுதந்திரம் கொடுத்துள்ளோம். அவ தப்பா எந்தமுடிவும் எடுக்கமாட்டாள்.
எது செய்தாலும் அது சரியா இருக்கும். எங்களுக்கு ஜாதி, மதம் எல்லாம் முக்கியம் கிடையாது. த்ரிஷா யாரை பிடிக்கிறது என்று சொல்கிறாளோ அவரை அவளுக்கு கல்யாணம் பண்ணி வைப்போம். நிச்சயம் அவள், வாழ்க்கை விஷயத்தில் அவசரப்படாமல் சரியான முடிவு எடுப்பார் என்று நம்புகிறேன்.
கேமரா முன்னாடி நிற்பது த்ரிஷாவுக்கு ரொம்ப பிடிக்கும். அவளா விரும்பி படத்தில் நடிக்கிறாள். இப்போது த்ரிஷா நடித்து வரும் படங்களின் ஷ¥ட்டிங் பாதிக்கக்கூடாது என்று நினைக்கிறோம். கையில் இருக்கும் படங்களை முடிக்கட்டும் அவளுக்கு யார்னு அவளே முடிவு பண்ணட்டும். நானே முதல்ல மீடியாவுக்கு கூப்பிட்டு சொல்கிறேன்.
அதுவரை கொஞ்சம் அவரப்பட்டு எதையும் எழுதாதிங்க என்று ரொம்பவே கெஞ்சி கேட்டுக் கொண்டார் த்ரிஷா அம்மா. கல்யாண விஷயத்தில் ஆரம்பத்தில் நடிகர் - நடிகைகள் உண்மையை மறைப்பதும், பின்னர் இறுதியாக கல்யாண பத்திரிகையோடு பத்திரிகையாளர்களை சந்திப்பதும் சகஜம் தான். ஆனால் த்ரிஷா விஷயத்தில் எப்படியோ? பொறுத்திருந்து பார்ப்போம்.


ஸ்ருதிஹாசனின் சம்பளம் ரூ. 1 கோடி

கமல் ஹாசனின் மகள் நடிகை ஸ்ருதி ஹாசனின் சம்பளம் ரூ. 1 கோடியாக உயர்ந்துள்ளது. 7 ஆம் அறிவு, 3 ஆகிய படங்களில் நடித்திருப்பவர் நடிகை ஸ்ருதிஹாசன்.
இந்தியில் அறிமுகமான லக் படம் ஓடாததால் அங்கு மார்க்கெட் இல்லை. தற்போது பிரபுதேவா இயக்கும் புதிய இந்தி படத்துக்கு கதாநாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளார். பிரபுதேவா இந்தியில் பிரபல இயக்குனராக இருப்பதால் அவர் படத்தில் நடிப்பதன் மூலம் இந்தியில் தனது மார்க்கெட் உயரும் என்ற எதிர்பார்ப்பில் உள்ளார்.
இதுவரை ரூ. 40 இலட்சம், ரூ. 60 இலட்சம் என்றுதான் சம்பளம் வாங்கினார். ஆனால் தற்போது பலுபு என்ற தெலுங்கு படத்தில் நடிக்க ஸ்ருதிக்கு ரூ. 1 கோடி சம்பளம் பேசி ஒப்பந்தம் செய்துள்ளனர். இதில் ரவிதேஜா ஜோடியாக நடிக்கிறார். கதாநாயகிகளுக்கு ரூ. 1 கோடிதான் அதிகபட்ச சம்பளமாக நிர்ணயிக்கப்படுகிறது.
அதை ஸ்ருதி எட்டிப்பிடித்துள்ளதால் ஏற்கனவே ரூ. 1 கோடி சம்பளம் வாங்கும் நடிகைகள் வியப்பாகியுள்ளனர். நிறைய படங்களில் நடித்த பிறகே இந்த சம்பள நிலையை தொட முடியும். ஆனால் ஸ்ருதி குறைவான படங்களிலேயே நடித்துள்ளார். சில படங்களே ஹிட்டாகி உள்ளன. இது அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.

அழுது கொண்டே அனுஷ்கா ஓட்டம்

அலெக்ஸ் பாண்டியன் படப்பிடிப்பின் போது நாயகி அனுஷ்கா அழுது கொண்டே அங்கிருந்து வெளியேறியுள்ளார்.
அலெக்ஸ் பாண்டியன் படத்தில் கார்த்திக்கு ஜோடியாக அனுஷ்கா நடித்து வருகிறார். படப்பிடிப்புக்கு வரும் அவர் தனக்கு மேக்கப் போட கூடவே ஒரு பெண்ணை அழைத்து வந்துள்ளார்.
இதைப் பார்த்த மேக்கப் யூனியன் ஆட்கள் கடுப்பாகிவிட்டார்களாம். நாங்கள் இருக்கையில் அனுஷ்கா எப்படி தனியாக ஒரு பெண்ணை அதுவும் எங்கள் சங்கத்தில் உறுப்பினராகாதவரை அழைத்து வந்து மேக்கப் போட வைக்கலாம் என்று கொதித்துவிட்டார்கள் என்று கூறப்படுகிறது.
இதையடுத்து மேக்கப் யூனியனைச் சேர்ந்த சுமார் 30 பேர் அலெக்ஸ் பாண்டியன் ஷ¥ட்டிங் ஸ்பாட்டுக்கு வந்து அனுஷ்காவுக்கு மேக்கப் போடும் பெண்ணை வெளியேறச் சொன்னார்களாம். மேலும் அவர்கள் அனுஷ்காவை திட்டித் தீர்த்ததாகவும் அங்கிருந்தவர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் மனமுடைந்த அனுஷ்கா அழுதுகொண்டே அங்கிருந்து ஓடிவிட்டார்.
நிலைமை மோசமடைவதை உணர்ந்த கார்த்தி தலையிட்டு மேக்கப் யூனியன் உறுப்பினர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். அனுஷ்காவுக்கு மேக்கப் போட்ட பெண்ணை வெளியேற்றிய பிறகே ஷ¥ட்டிங் மீண்டும் துவங்கியுள்ளது.

மீனாள் புதிய அவதாரம்

பாரதிராஜாவின் அன்னக்கொடியும் கொடி வீரனும் படத்தில் நார்த்தங்கா என்ற கெரக்டரில் வித்தியாசமான பாத்திரத்தில் நடித்து வருகிறாராம் மீனாள். இந்த கேரக்டர் தனக்குப் பெரும் பெயரை வாங்கித் தரும் என்றும் மனசெல்லாம் உற்சாகம் பொங்க சந்தோஷமாக கூறுகிறார் மீனாள்.
தவமாய் தவமிருந்துதான் மீனாளின் முதல் படம். சேரனால் அறிமுகப்படுத்தப்பட்ட மீனாள், முதல் படத்திலேயே நல்ல பெயரை வாங்கினார். ஆடுகளம் படத்திலும் இவருக்கு அழுத்தமான பாத்திரம் கிடைத்தது.
இந்த நிலையில் தற்போது பாரதிராஜாவின் பார்வையில் சிக்கி வெயிட்டான ரோலை வாங்கி விட்டார். அன்னக்கொடியும், கொடிவீரனும் படத்தில் இவருக்கு முக்கியமான பாத்திரத்தை அளித்துள்ளாராம் பாரதிராஜா.
இதுகுறித்து மீனாள் கூறுகையில், தனது அன்னக்கொடியும் படத்தில் நார்த்தங்கா என்ற கெரக்டரில் என்னயோ அல்லது தவமாய் தவமிருந்து படத்தில் நடித்தவரையோ போட வேண்டும் என்று நினைத்துள்ளார் பாரதிராஜா. இதையடுத்து என்னை வரவழைத்துப் பேசினார். அப்போது தவமாய் தவமிருந்து படத்தில் நடித்தது நான்தான் என்று அவரிடம் கூறியபோது அவரால் நம்பவே முடியவில்லை. அப்படியே அசந்து போய்விட்டார்.
இந்த நேரத்தில் நான் சேரன் சேருக்கும், ஆடுகளம் படத்தில் எனக்கு வாய்ப்பளித்த வெற்றிமாறனுக்கும் நன்றி சொல்ல வேண்டும். இந்த இரண்டு படங்களும்தான் பாரதிராஜாவிடம் என்னை கொண்டு போய் சேர்க்க உதவியுள்ளன என்றார் நெஞ்செல்லாம் சந்தோஷம் பொங்க.
அன்னக்கொடி படத்தில் நடித்து வரும் மீனாள் ஒவ்வொரு காட்சியையும் நடித்து முடிக்கும்போது பாரதிராஜா பிரமாதம் என்று கூறி பாராட்டித் தள்ளுகிறாராம். இத்தனை நாள் எங்கம்மா இருந்தே என்றும் பாராட்டுகிறாராம்.
தற்போது தங்கர் பச்சானின் அம்மாவின் கைபேசி படத்திலும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார் மீனாள். தங்கரின் மனைவி வேடத்தில் வருகிறாராம். ஏற்கனவே பள்ளிக்கூடம் படத்திலும் தங்கருக்கு ஜோடி போட்டவர் மீனாள் என்பது நினைவிருக்கலாம். அதேபோல கலியுகம், மச்சான் ஆகிய படங்களையும் எதிர்பார்த்துள்ளார் மீனாள்.
விவேக்குடன் கவர்ச்சி கலந்த கொமெடி கேரக்டர்களில் நிறைய நடித்துள்ள மீனாள் இப்போது முக்கிய வேடங்களில் நடிக்கப் புகுந்திருப்பது அவருக்கு நிச்சயம் ஒரு புதிய அவதாரமாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.


எனது தாயார் சினிமாவில் கோரஸ் பாடித்தான் என்னை வளர்த்தார்

கூட்டத்தோடு கூட்டமாக ‘கோரஸ்’ பாடத் தொடங்கிய எல். ஆர். ஈஸ்வரி வெகு விரைவிலேயே சிறந்த பின்னணி பாடகியாக உயர்ந்தார். எல். ஆர். ஈஸ்வரியின் குரலில் ஒருவித வசிய சக்தி இருக்கும். பாடும் முறையில் ‘கிக்’ இருக்கும். எனவே இலட்சக்கணக்கான ரசிகர்களை அவர் பெற்றார்.
‘இது எனக்கு இறைவன் கொடுத்த வரம்’ என்று கூறிய ஈஸ்வரி, தொடர்ந்து சொன்னார்.
“ஏழ்மையில் பிறந்த நான், இந்த அளவு உயர்ந்திருக்கிறேன் என்றால், அதற்காக நான் பட்ட கஷ்டங்கள் ஏராளம். எனக்குப் பெற்றோர்கள் வைத்த பெயர் டி. எல். ராஜேஸ்வரி. பரமக்குடிதான் எங்களுடைய பூர்வீகம். ஆனால், நான் பிறந்து வளர்ந்ததெல்லாம் சென்னை புதுப்பேட்டைதான்.
எழும்பூரில் உள்ள அரசு மகப்பேறு மருத்துவமனையில்தான் நான் பிறந்தேன். எனது தந்தை பெயர் அந்தோணி தேவராஜ். தாயார் ரெஜினா மேரி நிர்மலா. எனக்கு அமல்ராஜ் என்ற தம்பியும், எல். ஆர். அஞ்சலி என்ற தங்கையும் உண்டு.
எனது தந்தை இளம் வயதிலேயே (36 வயது) இறந்து விட்டார். அப்போது எனக்கு வயது 6. வறுமையின் பிடியில் சிக்கித் தவித்த எங்களது குடும்பத்தை எனது தாயார் சினிமாவில் கோரஸ் பாடி, அதில் கிடைத்த மிக சொற்ப வருமானத்தைக் கொண்டு காப்பாற்றி வந்தார்.
எப்படியோ கஷ்டப்பட்டு என் தாயார் என்னைப் பள்ளி இறுதி வகுப்பு வரை படிக்க வைத்தார். அதற்கு மேல் கல்லூரிக்கு என்னை அனுப்பி படிக்க வைக்க முடியாத சூழ்நிலை எனது தாயாருக்கு. ஆகவே, எனது தாயாருக்கு உதவி செய்ய நான் உழைக்க வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாக்கப்பட்டேன்.
அப்போது எனக்கு வயது 16. என் தாயார் சினிமாவில் கோரஸ் பாடச் செல்லும் போது, அவருடன் செல்வேன். அவர்கள் பாடுவதைக் கேட்டு அதே மாதிரி நானும் பாடுவேன்.
ஒருநாள் ஏ. பி. நாகராஜன் தயாரித்த ‘வடிவுக்கு வளைகாப்பு’ என்ற படத்திற்கு கோரஸ் பாட எனது தாயார் சென்றபோது, நானும் அவருடன் சென்றேன். பாடலின் இடையே ‘ஹம்மிங்’ கொடுக்க வேண்டிய பெண் அன்று வராததால், தற்செயலாக நான் அந்தப் பாட்டுக்கு ‘ஹம்மிங்’ கொடுத்தேன். இதுதான் நான் முதன் முதலில் சினிமாவிற்கு கொடுத்த குரல்.
இதைக்கேட்ட அங்கிருந்த ஏ. பி. நாகராஜனும், இசையமைப்பாளர் கே. வி. மகாதேவனும் ‘உனக்கு நல்ல குரல் வளம் இருக்கிறது. நீ எதிர்காலத்தில் பெரிய பாடகியாக வருவாய், பார் என்று மிகவும் பாராட்டினார்கள்.
இதைக்கேட்டவுடன் அந்த நிமிடமே எங்களது குடும்ப கஷ்டமெல்லாம் பறந்துவிட்டதுபோல் உணர்ந்தேன்.
இது எனக்கு வாழ்க்கையில் பெரிய நம்பிக்கையைக் கொடுத்தது. வடிவுக்கு வளைகாப்பு’ படத்தை அடுத்து ஏ. பி. நாகராஜனும், வி. கே. ராமசாமியும் சேர்ந்து ‘லட்சுமி பிக்சர்ஸ்’ என்ற படக் கம்பெனியைத் தொடங்கி, ‘நல்ல இடத்து சம்பந்தம்’ என்ற படத்தைத் தயாரித்தனர். அதில் கே. வி. மகாதேவன் இசை அமைப்பில் எனக்கு பாட வாய்ப்புக் கிடைத்தது.
‘புதுப்பெண்ணே புதுப்பெண்ணே நிமிர்ந்து பாரு;
உன் பிறந்த இடத்தை மறந்து விடாதே நினைத்துப்பாரு’
‘பொண்ணு மாப்பிள்ளை ஒன்னா போகுது ஜிகு ஜிகு வண்டியிலே’
‘இவரேதான் அவரு வரேதான் இவரு’
‘துக்கத்திலும் சிரிக்கணும்; துணிவுடனே இருக்கணும்’
என்ற 4 பாடல்கள் பாடும் வாய்ப்பை எனக்கு ஏ. பி. நாகராஜன் வழங்கினார்.
எனது பெயர் டி. எஸ். ராஜேஸ்வரி என்று இருந்ததை சுருக்கமாக ‘எல் ஆர். ஈஸ்வரி’ என்று மாற்றி வைத்தவரும் ஏ. பி. நாகராஜன்தான்.
அப்போதெல்லாம் ஒரு பாடல் பாடினால் 100 ரூபாய் சம்பளம் கிடைக்கும். அக்காலத்தில் இது பெரிய தொகை. வறுமையில் வாடிக் கொண்டிருந்த என் குடும்பத்தை, வசதியாக வாழ வைக்க முடியும் என்ற நம்பிக்கை ஏற்பட்டது’ என்றார் எல். ஆர். ஈஸ்வரி.

தற்கொலைக்கு முன் சில்க் சுமிதா எழுதி வைத்திருந்த கடிதம்

த ற்கொலை செய்து கொள்வதற்கு முன், சில்க் சுமிதா ஒரு கடிதம் எழுதி வைத்திருந்தார். ‘எனக்கு வாழ்க்கை தருவதாகக் கூறியவர் ஏமாற்றிவிட்டதால், இந்த முடிவுக்கு வந்தேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.
படுக்கை அறையில் தூக்கில் சுமிதா பிணமாகத் தொங்குவதைப் பார்த்த ராதாகிருஷ்ணமூர்த்தி, பக்கத்து வீட்டில் வசிக்கும் தனது மகளின் கணவரான கிருஷ்ணமூர்த்திக்கு தகவல் கொடுக்கவே அவரும் விரைந்து வந்தார்.
ராதாகிருஷ்ணமூர்த்தி, அவரது மகன் ராமு, மருமகன் கிருஷ்ணமூர்த்தி ஆகிய மூவரும் சேர்ந்து கடற்பாரையால் பின்பக்க அறைக்கதவை உடைத்து திறந்தனர்.
அங்கு மின் விசிறியில் நைலான் சேலையால் தூக்குப்போட்டு சில்க் சுமிதா தொங்கியபடி இருந்ததைப் பார்த்ததும் மூவரும் உறைந்து போனார்கள். ‘உயிர் இருக்குமோ’ என கருதிய அவர்கள் , சில்க் சுமிதாவின் உடலை கீழே இறக்கினார்கள்.
ராதாகிருஷ்ணமூர்த்தி டொக்டர் என்பதால் சில்க் சுமிதாவின் கையைப் பிடித்து ‘நாடி’ பார்த்தார். சில்க் சுமிதா உடலில் உயிர் இருப்பதற்கான எந்த அறிகுறியும் அவருக்குத் தெரியவில்லை. உடல் குளிர்ந்து இருந்தது.
உடனே சில்க் சுமிதாவை ஆஸ்பத்திரிக்கு கொண்டு போக முடிவு செய்தனர். வடபழனியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு ராதாகிருஷ்ணமூர்த்தி டெலிபோன் செய்து அம்புலன்ஸ் அனுப்பும்படி கூறினார். ஆஸ்பத்திரியில் இருந்து அம்புலன்ஸ் வந்தது. சில்க் சுமிதாவை ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார்கள்.
ஆஸ்பத்திரியில் சில்க் சுமிதாவை டொக்டர்கள் பரிசோதித்து விட்டு, அவர் இறந்த வெகு, நேரம் ஆகிவிட்டது என தெரிவித்தார்கள். இதைத்தொடர்ந்து சில்க் சுமிதாவின் உடல், பரிசோதனைக்காக அனுப்பப்பட்டது.
சில்க் சுமிதா கறுப்பு நிறத்திலான பனியனும், கால்சட்டையும் அணிந்து இருந்தார். நைலான் சேலையில் தூக்குப் போட்டுக்கொண்டதால் கழுத்தில் சேலை இறுகியதற்கான தழும்பு காணப்பட்டது. வாயில் ‘பல்’ கடித்து இறுக்கிய நிலையில் இருந்தது. கண்கள் திறந்தபடி இருந்தன. சில்க் சுமிதா மரணம் பற்றி தகவல் கிடைத்ததும் கிண்டி பொலிஸார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் ஆஸ்பத்திரி பிண அறையில் வைக்கப்பட்டிருந்த சில்க் சுமிதாவின் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
சில்க் சுமிதா தூக்கில் தொங்கிய அறை மிகவும் சிறியது. அதில் மெத்தையுடன் கூடிய ஒரே ஒரு படுக்கை மட்டுமே இருந்தது. படுக்கைக்கு நேர் மேலே மின்சார விசிறி, அந்த மின்சார விசிறியில்தான் சுமிதா தூக்குப்போட்டு தொங்கியபடி கிடந்தார்.
படுக்கை மீது ஒரு நாற்காலி வைத்து அதன் மீது ஏறி நின்று மின்சார விசிறியில் நைலான் சேலையை கட்டி இருக்கிறார். பிறகு, சேலையின் மறுமுனையில் சுருக்கு போட்டு, அதை தனது கழுத்தில் மாட்டிக்கொண்டு நாற்காலியை காலால் தட்டி விட்டு தொங்கி இருக்கலாம் என்று கருதப்பட்டது. சில்க் சுமிதாவின் தற்கொலை திரை உலகில் பெரும் பரபரப்பை உண்டாக்கியது. இது கொலையாக இருக்கலாமோ என்று பொலிஸார் முதலில் சந்தேகப்பட்டனர். ஆனால் ‘சில்க் சுமிதா எழுதி வைத்திருந்த ஒரு கடிதம், அவர் தற்கொலை செய்து கொண்டதை உறுதிப்படுத்தியது.
22-9-1996 திகதியிட்ட அக்கடிதம், அரைகுறை தெலுங்கில் எழுதப்பட்டிருந்தது. வாக்கியங்கள் முழுமை இல்லாமல் இருந்தன.
அந்தக் கடிதம் வருமாறு:-
‘அபாக்கியவதி, கடவுளே, நான் ஏழு வருஷமா என் வயிற்றுக்காக த்தானே கஷ்டப்பட்டு இருக்கேன். எனக்கு என்று யாருமே இல்லை. நான் நம்பினவங்க எல்லாம் என்னை மோசம் பண்ணிட்டாங்க. பாபு (ராதாகிஷருஷ்ண மூர்த்தி) தவிர என் மேலே வேறு யாருக்கும் அன்பு கிடையாது. என் பின்னால் இருந்தவங்க எல்லாம் செட்டில் ஆயிட்டாங்க. பாபு தவிர மற்ற எல்லோரும் என் உழைப்பை சாப்பிட்டவங்கதான். என் சொத்தை அனுபவிச்சவங்கதான் என் அழிவுக்கும் வழிவகுத்தாங்க யாருக்குமே என்னிடம் பாசம் இல்லை.
வாழ்க்கையில் எனக்கும் நிறைய ஏக்கம்- எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் என்னைச் சுற்றி இருக்கிறவங்க.
எனக்கு மன நிம்மதி இல்லாமல் நான் செத்துப்போகிற அளவுக்கு பண்ணிட்டாங்க. நான் எவ்வளவோ சாதிச்சாலும், எனக்கு மன நிம்மதி இல்லாமல் செய்துட்டாங்க. எல்லோருக்குமே நான் நல்லது பண்ணி இருக்கிறேன். ஆனால் என் வாழ்க்கையை இந்த மாதிரி பண்ணிட்டாங்களே, என்ன நியாயம்?
எனக்கு இருக்கிற கொஞ்ச சொத்தையும் பாபு குடும்பத்துக்கும், என் குடும்பத்துக்கும் சரி சமமா பங்கு வச்சு கொடுத்திடுங்க. என்னுடைய ஆசையை எல்லாம் ஒருத்தர் மீது வைத்திருந்தேன். அவர் என்னை மோசம் செய்துவிட்டார்.
கடவுள் என்று ஒருவர் இருந்தால் அவரைப் பார்த்துக்கொள்வார். கடவுள் என்னை எதுக்காக படைத்தார்?
என்னால் நிறைய அனுபவித்தவர்கள், நான் எவ்வளவுதான் நல்லது செய்தாலும், எனக்கு அவர்கள் கெடுதல்தான் செய்தார்கள். கடவுள் அவர்களைப் பார்த்துக் கொள்வார். என்னுடைய உழைப்பை சாப்பிடாதவங்க கிடையாது. ஆனால் யாருக்கும் என் மீது விசுவாசம் கிடையாது. (பாபு தவிர) 5 வருடத்துக்கு முன்பு ஒருத்தன் எனக்கு வாழ்க்கை தருகிறேன் என்று சொன்னான். இப்போது கொடுக்க மாட்டேன் என்று கூறிவிட்டான். வாழ்க்கையில் நான் எவ்வளவோ பொறுத்துக்கிட்டேன்.
ஆனால் இப்போது என்னால் முடியவில்லை. இதை எழுதுவதற்கு நான் மிகவும் சிரமப்பட்டேன். அது எனக்குத் தெரியும். ஆசை ஆசையாக நகைகள் வாங்கினேன். அது யாருக்கோ’
இவ்வாறு கடிதத்தில் கூறப்பட்டுள்ளது. சில்க் சுமிதாவின் உடல் ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.
பின்னர் அவரது உடல் அம்புலன்ஸ் வண்டி மூலம் சாலிகிராமத்தில் உள்ள அவரதுவீட்டுக்குக் கொண்டு செல்லப்பட்டது.





Thursday, August 23, 2012

தான் தயாரித்த படத்தில் 

மூன்று வேடங்களில் நடித்த நடிகை 

வெண்ணிற ஆடை நிர்மலா

வெண்ணிற ஆடை மூலம் தமிழ்த்திரை உலகில் அறிமுகமான நிர்மலா எம். ஜி. ஆர்., சிவாஜி கணேசனுடன் இணைந்து நடித்து புகழ் பெற்றார்.
உண்மையில், ‘வெண்ணிற ஆடை’யில் நடித்தபின் மேற்கொண்டு நடிக்க நிர்மலா விரும்பவில்லை. இதற்கு இரண்டு காரணங்கள். முதல் காரணம், தனியாக 10ம் வகுப்பு பரீட்சை எழுதி பாஸ் செய்து விட்டு, கல்லூரியில் சேர்ந்து படிக்க வேண்டும் என்று விரும்பினார். இரண்டாவது காரணம், ‘வெண்ணிற ஆடை’யில் தன்னுடைய நடிப்பு நிர்மலாவுக்கு திருப்தி அளிக்கவில்லை. எனவே, நடிப்புக்கு முழுக்குப் போட்டிவிட்டு பட உலகையே விட்டு ஒதுங்கிவிட எண்ணினார்.
இந்த சமயத்தில் பிரபல மலையாள டைரக்டர் குஞ்சாகோ, தான் எடுக்கும் ‘காட்டு துளசி’ என்ற படத்தில் நிர்மலாவை நடிக்க வைக்க விரும்பினார்.
ஆனால் நிர்மலா நடிக்க மறுத்தார். ‘என் முதல் படத்திலேயே என் நடிப்பு எனக்குத் திருப்தி அளிக்கவில்லை. எனவே எனக்கு நடிக்க விரும்பம் இல்லை’ என்று கூறினார்.
ஆனால் குஞ்சாகோ விடுவதாக இல்லை. ‘உங்களிடம் மறைந்திருக்கும் நடிப்புத் திறமையை வெளியே கொண்டுவர என்னால் முடியும். ‘காட்டுத்துளசி’ உங்களுக்கு ஏற்ற அருமையான கதை இதில் நடித்தால் உங்களுக்கு பெரும் புகழ் கிடைப்பது உறுதி’ என்று கூறினார்.
அவருடைய வற்புறுத்தல் காரணமாக, காட்டுத்துளசியில் நிர்மலா நடித்தார் அந்தப் படம் மிகப்பெரிய வெற்றிபெற்றது. மலையாளப் படவுலகில் நிர்மலா பெரும் புகழ் பெற்றார். நிறைய படவாய்ப்புகள் தேடி வந்தன. இதனால் மேற்கொண்டடு படிக்கும் எண்ணத்தைக் கைவிட்டு மலையாளப் படங்களில் நடிக்கலானார்.
இதன்பின் 1968ம் ஆண்டு சிவாஜி கணேசன் கதாநாயகனாக நடித்த ‘லட்சுமி கல்யாணம்’ படத்தில் நடிக்க நிர்மலாவுக்கு அழைப்பு வந்தது. அந்த அழைப்பை ஏற்று நிர்மலா நடித்தார்.
எம். ஜி. ஆர். நடித்த ரகசிய பொலிஸ் 115 என்ற படத்தில், எம். ஜி. ஆரைக் காதலிக்கும் இளம் பெண்ணாக நிர்மலா நடித்தார். எம். ஜி. ஆருடன் சேர்ந்து ‘கண்ணில் தெரிகன்ற வானம் கையில் வராதோ’ என்று டூயட் பாடும் காட்சி சிறப்பாக அமைந்தது.
தொடர்ந்து ‘பூவா தலையா’, மன்னிப்பு, வைராக்கியம், வீட்டுக்கு வீடு, அன்புக்கு ஒரு அண்ணன், சுடரும் சூறாவளியும், நீதிதேவன், தங்கச்சுரங்கம், எங்க மாமா, தங்கைக்காக, அன்பு சகோதரர்கள் வெகுளிப்பெண், இன்று போல் என்றும் வாழ்க, இதயக்கனி உட்பட பல படங்களில் நடித்தார்.
1972ல் இந்தியில் ‘தோரகா’ என்ற படம் வெளிவந்தது. துணிச்சலான கதை அமைப்பைக் கொண்ட ‘புதிய அலை’ படம். இந்தியா முழுவதும் பெரும் வெற்றி பெற்ற இந்தப்படத்தை, ‘அவள்’ என்ற பெயரில் தமிழில் தயாரித்தனர். கதாநாயகியாக நிர்மலாவும், கதாநாயகனாக சசிகுமாரும், வில்லனா ஸ்ரீகாந்தும் நடித்தனர்.
இந்தப் படத்தில் நிர்மலா பணக்கார வீட்டுப்பெண். அவரை சசிகுமார் காதலித்து மணப்பார். சசிகுமாரின் நண்பரான ஸ்ரீகாந்த், நிர்மலா மீது மோகம் கொள்வார். ஒரு விருந்தில், எல்லோரும் குடித்துவிட்டு மயங்கிக் கிடப்பார்கள். அந்த சூழ்நிலையைப் பயன்படுத்திக் கொண்டு, நிர்மலாவை ஸ்ரீகாந்த் கெடுத்துவிடுவார். விடிந்த பிறகுதான் நிர்மலாவுக்கு உண்மை தெரியும்.
இந்தப்படம் பரபரப்பாக ஓடியது. எனினும் இத்தகைய கதையை படமாக்கலாமா என்ற பட்டி மன்றமே நடந்தது. ‘படம் ஆபாசம்’ என்று சிலர் கூறினார்கள். ‘குடிப்பழக்கத்தின் தீமையை இப்படம் சிறப்பாக எடுத்துக் காட்டுகிறது’ என்று வேறு சிலர் வாதம் செய்தனர்.
1974ம் ஆண்டு ‘அவளுக்கு நிகர் அவளே’ என்ற படத்தை சொந்தமாகத் தயாரித்தார் நிர்மலா. இதில் மூன்று வேடங்களில் நடத்தார். இப்படதின் கதாநாயகன் ரவிச்சந்திரன். வசனம் எழுதி, டைரக்ட் செய்தவர் மதுரை திருமாறன்.
200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த நிர்மலா, ஏராளமான நாட்டிய நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளார். தமிழக அரசின் ‘கலைமாமணி’ விருதும், ‘நாட்டியத்திலகம்’ என்ற பட்டமும் பெற்றவர் ‘ஆடி வரும் தேனே’ ‘கற்பகம்’ ‘கல்கி’ ஆகிய தொலைக்காட்சி தொடர்களிலும் நிர்மலா நடித்துள்ளார்.
தன்னுடைய கலை உலக அனுபவங்கள் பற்றி நிர்மலா கூறியதாவது:-
‘எப்படி நடிக்க வேண்டும் என்பதை சிவாஜி சேரிடம் கற்றுக்கொண்டேன். பிறருக்கு உதவ வேண்டும் என்ற எம். ஜி. ஆரின் குணம் என்னை வெகுவாகக் கவர்ந்தது. முடிந்தவரை உதவ வேண்டும் என்ற எண்ணத்தை என்னிடம் உருவாக்கியது. சினிமாவில் நடிப்பதை விட தொலைக்காட்சி சீரியல்களில் நடிப்பதற்கு அதிக நேரம் செலவிட வேண்டியுள்ளது. எனவே, தொலைக்காட்சித் தொடர்கள் எனக்கு ஒத்துவரவில்லை. தொடர்ந்து சீரியல்களில் நடிக்க நான் ஆர்வம் காட்டவில்லை.
இவ்வாறு நிர்மலா கூறினார்.



 

பகுத்தறிவு பாடல்கள் பாடுவதில் திறமை பெற்ற பட்டுக்கோட்டையார்

பாட்டுக் கட்டிப் பாடுவதே அவரது பணி
சிந்தனையைத் தூண்டும் தத்துவப் பாடல்கள் எழுதி, திரை உலகில் கொடி கட்டிப் பறந்தவர் பட்டுக் கோட்டை கல்யாண சுந்தரம்.
தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை வட்டத்தில் உள்ள செங்கல்பத்தான்காடு என்னும் கிராமத்தில் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் 13.04.1930ல் பிறந்தார்.
தந்தை பெயர் அருணாசலக் கவிராயர். தாயார் விசாலாட்சி. இந்த தம்பதிகளுக்கு 6 குழந்தைகள். இவர்களில் 4வதாகப் பிறந்தவர் கல்யாண சுந்தரம்.
மூத்தவர் கணபதி சுந்தரம். உள்ளூர் திண்ணைப் பள்ளிக்கூடத்தில் அண்ணன் கணபதி சுந்தரத்துடன் கல்யாண சுந்தரம் அரிச்சுவடி பயின்றார். அதோடு பள்ளிப்படிப்பு முடிந்தது. 2 ஆம் வகுப்புக்கு பிறகு பள்ளிக்கு போகவில்லை. அண்ணனிடமே சில ஆண்டுகள் அடிப்படைக் கல்வியையும், நாட்டு நடப்புகளையும் கற்றார்.
தந்தை அருணாசல கவிராயர் கவிதை எழுதும் ஆற்றல் உடையவர். தந்தையைப் போலவே கணபதிசுந்தரமும் கவிதை பாடுவதில் வல்லவர். சிறந்த ஓவியராகவும் விளங்கினார். அத்தகைய அண்ணனின் அரவணைப்பில் வளர்ந்த கல்யாண சுந்தரம் தினமும் கவிதை புனையும் ஆற்றல் இயல்பாகவே அமைந்துவிட்டது.
இளம் வயதிலேயே, பாடல்களைப் பாடுவதில் கல்யாணசுந்தரம் ஆர்வமாக இருந்தார். நாடகம் பார்ப்பது, சினிமா பார்ப்பது, பிறகு பார்த்துவிட்டு வந்தவற்றில் கேட்ட பாடல்களை வரி பிசகாமல் பாடிக்கொண்டிருப்பது கல்யாண சுந்தரத்தின் விருப்பமான பொழுது போக்காக இருந்தது. பொது நிகழ்ச்சிகளுக்கும் சென்று வந்தார்.
பெரியாரின் பகுத்தறிவு கொள்கைகளும் கம்யூனிசக் கொள்கைகளும் அவரை வெகுவாகக் கவர்ந்தன. இதனைத் தொடர்ந்து இளம் வயதிலேயே மேடைப் பாடகரானார். கம்யூனிஸ்டு கட்சி கூட்டங்களிலும், பிற நிகழ்ச்சிகளிலும் பாட்டுக்கட்டிப் பாடுவது அவரது பணிகள்.
நல்லதைச் சொன்னா நாத்திகனா?’ இதுதான் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரத்தின் முதல் பாடலாகும். இதை எழுதி அண்ணன் கணபதி சுந்தரத்திடம் காட்டி அவரது பாராட்டை பெற்றார். பகுத்தறிவு பாடல்களை பாடுவதில் திறமை பெற்றிருந்த பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் அதிராம்பட்டணத்தில் தி. மு. க. மேடையில் ஏறி பாடி இருக்கிறார்.
சினிமா சிந்தனை மேலோங்க கல்யாணசுந்தரம் கிளம்பி சென்னைக்கு வந்தார். அக்காலத்தில் பட்டுக்கோட்டையைச் சேர்ந்த டி. எஸ். துரைராஜ் சேலம் மாடர்ன் தியேட்டர் படங்களில் நடித்துக் கொண்டிருந்தார். ‘நாங்கள் எல்லாம் நாடகத்தில் நடித்துவிட்டுத்தான் சினிமாவுக்கு வந்தோம். நீயும் முதலில் நாடகம் நடித்துவிட்டுப் பின்பு சினிமாவுக்கு வருவதுதான் சிறந்தது’ என்று டி. எஸ். துரைராஜ் ஆலோசனை கூறியதோடு சிபாரிசு கடிதம் கொடுத்து சக்தி நாடக சபாவுக்கு அனுப்பி வைத்தார்.
முதலில் நாடகத்தில் நடிக்க அவருக்கு வாய்ப்பு தரவில்லை. நாடக சபாவுக்கான ஆயத்த வேலைகளையே செய்துவந்தார். பின்னர் அவரது குட்டிக் கதைகளையும், பாடல் திறமையையும் அறிந்ததால், நடிக்க வாய்ப்பு கொடுத்தனர். ‘என் தங்கை’, ‘கவியின் கனவு’ ஆகிய நாடகங்களில் நடித்தார்.
‘கவியின் கனவு’ நாடகத்தில் முக்கியமான ராஜகுரு வேடமேற்கு நடித்து வந்த எம். என். நம்பியார் சபாவில் இருந்து விலகி விட்டதால், அந்த கதாபாத்திரத்தில் நடிக்கும் வாய்ப்பு கல்யாணசுந்தரத்துக்கு கிடைத்தது. அந்த கதாபாத்திரம் அவருக்கு புகழைத் தேடிக்கொடுத்தது. அப்போது ‘ஏ. கே. சுந்தரம்’ என்றே அழைக்கப்பட்டார்.
1954 ஆம் ஆண்டில் டி. கே. பாலசந்திரன் தயாரித்த ‘கண்ணின் மணிகள்’ என்ற நாடகத்தில் கல்யாணசுந்தரம் பொலிஸ்காரர் வேடமேற்று நடித்தார். அந்த நாடகத்தில் அவர் எழுதிய, ‘தேனாறு பாயுது.
செங்கதிரும் சாயுது - ஆனால் மக்கள் வயிறு காயுது’ என்ற பாடல் பிரபலமானது. இந்த பாட்டுத்தான் பின்னர் சில புதிய கருத்துக்களோடு ‘ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு’ சினிமாப் படத்திலும் இடம்பெற்றது.
பிறகு புதுச்சேரி சென்று தனது மானசீக குருவான பாரதிதாசனை சந்தித்தார். ஏற்கனவே அறிமுகம் ஆகி இருந்த கல்யாண சுந்தரத்தை அவர் தன்னுடன் தங்கி இருந்து ‘குயில்’ ஏட்டை வெளியிடும் பணியில் ஈடுபடுமாறு கூறினார். அதன்படியே பாரதிதாசனின் விருப்பத்தை நிறைவேற்றினார்.
அந்த சமயத்தில் பாரதிதாசன் எழுதும் கவிதைகள் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தின் சமூகப் பார்வையை கூர்மைப்படுத்தியது எனலாம். பாரதிதாசனிடம் மாணவராக இருந்து கவிதை இலக்கணங்களை கற்றுக்கொண்டார். பல நல்ல கவிதைகளை எழுதி பாராட்டும் பெற்றார். மாடர்ன் தியேட்டர்ஸ் நிறுவனத்திற்கு வசனம், பாடல் எழுதும் பணியில் பாரதிதாசன் ஈடுபட்டிருந்தார். கல்யாண சுந்தரத்தையும் பாட்டு எழுதுவதற்காக அங்கு அழைத்துச் சென்றார்.
அந்த சந்தர்ப்பத்தில் மாடர்ன் தியேட்டர்சாருடன், பாரதிதாசனுக்கு கருத்து வேறுபாடு ஏற்பட்டு திரும்பினார். உடனே அவரோடு கல்யாணசுந்தரமும் புறப்பட்டார். ஆனால் பாரதிதாசன், கல்யாணசுந்தரத்தை தட்டிக்கொடுத்து ‘நீ முன்னேற வேண்டியவன் பொறுத்துக்கொண்டு இங்கேயே இரு’ என்று சொல்லிவிட்டு போனார். குருவின் கட்டளையை ஏற்று கல்யாணசுந்தரம் சேலத்திலேயே தங்கி இருந்து, மாடர்ன் தியேட்டர்ஸ் சினிமா படங்களுக்கு பாடல் எழுதினார்.
இப்படி பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தின் கவிதை வளர்ச்சிக்கும், திரைப்பட உலக பிரவேசத்துக்கும் துணையாக பாரதிதாசன் விளங்கியதால் தன்னுடைய கவிதை, கடிதம் எதுவாக இருந்தாலும் முதலில் ‘பாரதிதாசன் துணை’ என்று எழுதும் வழக்கத்தை கையாண்டார். சில பாடல் எழுதும் போது ‘வாழ்க பாரதிதாசன்’ என்றும் எழுதி இருக்கிறார். 1950 ஆம் ஆண்டுவாக்கில் சினிமாவுக்கு பாட்டெழுதுவதில் கண்ணதாசன், மருதகாசி, உடுமலை நாராயணகவி போன்றோர் பிரபலமாக இருந்தார்கள்.
அந்த காலகட்டத்திலேயே கல்யாண சுந்தரமும் நுழைந்தார். 1954ல் கல்யாணசுந்தரம் ‘படித்த பெண்’ என்றனது. இதனால் அவர் பாடல் எழுதி முதலில் வெளிவந்த படம் ‘மகேஸ்வரி’ என்பதாகும். இந்தப் படம் 13.11.1955ல் வெளிவந்தது. அதற்கு அடுத்து 20.04.1956ல் ‘படித்த பெண்’ வெளிவந்தது. மகேஸ்வரி படத்தில் கல்யாண சுந்தரம் எழுதிய பாடல்:
‘அறம்காத்த தேவியே, குலம் காத்த தேவியே! நல் அறிவின் உருவமான சோதியே கண் பார்த்து அருள்வாயே அன்னையே! அன்னையே! என்பதாகும். 1956 ஆம் ஆண்டில் வெளிவந்த ‘பாசவலை’, ‘ரங்கோன் ராதா’, ‘மர்மவீரன்’ போன்ற படங்களுக்கு பாடல் எழுதினார். பின்னர் 1957, 58 ஆம் ஆண்டுகளில் எம். ஜி. ஆர்., சிவாஜிகணேசன் நடித்த படங்களிலும் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தின் பாடல்கள் இடம்பெறத் தொடங்கின. சுமார் 6 ஆண்டு காலத்தில் 57 சினிமாப் படங்களுக்கு 186 பாடல்களை எழுதினார் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம்.


 

~கள்ளப்பருந்து' க்கு நடந்தது என்ன?

பொன்முடி பிக்சர்ஸ் என்ற நிறுவனம் தயாரித்துள்ள படம் ‘கள்ளப் பருந்து’. இதயன் என்பவர் இயக்கி உள்ளார். அம்சவேல், மஞ்சுதீத், சோனு என்ற புதுமுகங்கள் நடித்துள்ளனர். படத்துக்கு விநியோகஸ்தர்கள் சங்கத் தலைவர் கலைப்புலி சேகரன் இசை அமைத்து இருப்பதாகவும், முக்கிய வேடத்தில் அவர் நடித்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
சென்னையில் உள்ள தணிக்கை குழு படத்தைப் பார்த்துவிட்டு இது படு ஆபாசமாக இருக்கிறது. இதை திரையிடவே அனுமதிக்கமுடியாது என்று சொல்லி சான்றிதழ் தர மறுத்துவிட்டது. மறு ஆய்வுக் குழுவிடம் மனுபோட்டார் தயாரிப்பாளர். மறு ஆய்வு குழுவும் பார்த்துவிட்டு அலறி அடித்து இது சமூகத்துக்கு ஆகாத படம் குப்பை என்று சொல்லிவிட்டது. உடனே தயாரிப்பாளர் டில்லியில் உள்ள டிரிபியூனலுக்கு போனார்.
அவர்கள் படத்தை பார்த்துவிட்டு ஒரு சில காட்சிகளை மட்டும் நீக்கிவிட்டு ஏ சான்றிதழ் கொடுத்து படத்தை திரையிட அனுமதி வழங்கிவிட்டனர். அதோடு மட்டுமல்ல இது சமூகத்துக்கு தேவையான கருத்தைக் கொண்டது என்ற சான்றும் வழங்கிவிட்டதாம்.
இது இங்குள்ள தணிக்கை குழுவுக்கும், மறு ஆய்வு குழுவுக்கும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து தணிக்கை குழு வட்டாரத்தில் விசாரித்த போது கிடைத்த தகவல் இது. ‘ஒரு பணக்காரருக்கு மூன்று பெண் குழந்தைகள் அவர்களை கடுமையான கட்டுப்பாடுகளுடன் வளர்க்கிறார்.
வெளியே விட்டால் கெட்டுப் போய்விடுவார்கள் என்று வீட்டுக்குள்ளேயே பூட்டி வைத்து வளர்க்கிறார். மனைவியையும் வீட்டை விட்டு வெளியே அனுப்புவதில்லை. அந்த வீட்டுக்கு புதிதாக ஒரு டிரைவர் வேலைக்கு வருகிறார். அவர் வீட்டின் நிலையை புரிந்து கொண்டு ஒவ்வொரு பெண்ணாக மயக்கி தன் ஆசைக்கு இணங்க வைக்கிறார்.
கடைசியில் பணக்காரரின் மனைவியையும் தன் ஆசைக்கு இணங்க வைக்கிறாராம். இதை ஒரு நாள் கண்டுபிடிக்கும் பணக்காரர் அனைவரையும் கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்து கொள்கிறார். இதுதான் படத்தோட கதை. இந்தக் கதைக்குள் எத்தனை ஆபாச சீன் இருக்கும் என்று நீங்களே கற்பனை செய்து கொள்ளுங்கள். இதை எப்படி அனுமதிக்க முடியும். ஆனால் தாங்கள் அனுமதிக்காத படத்தை டில்லிக்குச் சென்று அனுமதி வாங்கி வந்துவிடுகிறார்கள். டில்லியில் என்ன நடக்கிறது என்றே எங்களுக்குத் தெரியவில்லை’ என்றார் ஒரு தணிக்கை குழு உறுப்பினர்.

 

 

அமலாவாக மாறிய    அனகா

தமிழ் சினிமா ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒரு கதாநாயகியை கனவுக் கன்னியாய் அடையாளம் காட்டும். அந்த வரிசையில், குறுகிய காலத்தில், குறிப்பிட்ட படங்களில் மட்டுமே நடித்து, இளசுகளின் இதயத்தில் இடம்பிடித்தவர் அமலா போல். தமிழ் சினிமாவின் ‘கேரள இறக்குமதியில், இவரும் சோடை போகவில்லை. 1991 அக்., 26ல், கொச்சியில் பிறந்தார். ஆசை யாரை விட்டது; அனகாவை, அமலாவாக மாற்றியது சினிமா. 2009 ல் ‘நீலதம்ரா’ மலையாளப் படத்தில் திரைக்கு வந்தார் அமலா.
ழகானவர்களை விட்டு வைக்குமா தமிழ் சினிமா? 2010ல், வீரசேகரன் படத்தில் தமிழில் அறிமுகமானார். அடுத்து, சர்ச்சை இயக்குனர் சாமியின் ‘சிந்து சமவெளி’யில் நடித்து, சர்ச்சையில் சிக்கினார். இனி அமலா அவுட்.... என கொலிவுட் எதிரொலித்த போது, அதே ஆண்டில் பறந்து வந்த ‘மைனா’ அமலா பாலை ‘அலேக்காய்’ தூக்கிச் சென்றது. அடுத்து, அதிவேகமாய் துவங்கியது அமலாவின் இன்னிங்ஸ்.
‘தெய்வத் திருமகள்’, ‘வேட்டை’, ‘காதலில் சொதப்புவது எப்படி’, ‘முப்பொழுதும் உன் கற்பனைகள்’ என இளைஞர்களை கிறங்கடிக்கும் பல அவதாரங்களை எடுத்தார். ‘உன் பூப்போட்ட பாவாடை போதும் எனக்கு; அதில் வெள்ளி விழா படம் காட்ட ஆசை எனக்கு, என அனைவரையும் உளற வைத்த அமலாவின் அசத்தல் முடிந்தபாடில்லை. ‘ஆகாஷிண்டே நிறம் என்ற மலையாளப் படத்தில் பிஸியாய் இருப்பதால் தமிழ் இயக்குனர்கள்
தவிக்கிறார்கள். பேச நேரம் இல்லாமல் தவிக்கும் அமலாவை, ‘பேஸ்புக் மூலம் தொடர்புகொண்ட போது, ‘மொத்தம் 13 படம் நடிச்சிருக்கேன். அதில் எட்டு, தமிழ் படம். என்னை தாங்கிப் பிடித்த தமிழ் சினிமாவை மறக்க முடியாது. தமிழில் கிடைத்த வரவேற்பு, தெலுங்கில் பெஜவாடா, லவ் பெய்லியர் வாய்பைத் தந்தது. ‘ஆகாஷிண்டே நிறம் முடிந்ததும், அங்கே (தமிழ்) தான் வருவேன் என அழகாய் ‘டைப் செய்திருந்தார். ‘அடடா... கண்ணுக்கு குளிர்ச்சி தர எப்போது வருவார் அமலா என காத்திருக்கும் ரசிகர்களுக்கு, நம் வழியாக அமலா போல் அனுப்பிய மெஜேச் ஆறுதல் தரட்டும்!

 

 

எனது இடம் அப்படியே இருக்கு

மீண்டும் பாக்கியராஜ்
பல வெள்ளி விழாப் படங்களை கொடுத்த ‘திரைக்கதை திலகம்’ பாக்கியராஜ், சிறிது இடைவெளிக்கு பின், மீண்டும் களம் இறங்குகிறார். இதற்காக, அருமையான கதைக் களத்தை உருவாக்கியுள்ளார்.
சினிமா நவீனமயமாகி விட்ட இந்த காலத்தில், உங்களோட பழைய பாணி எடுபடுமா? என்ற கேள்விக்கு, அவர் அளித்த பதில், ஏன் எடுபடாது. தற்போது தொழில் நுட்பத்தில் முன்னேற்றம் ஏற்பட்டிருக்கலாம்.
ஆனால், திரையுலகத்தையே திருப்பிப் போடுற மாதிரியோ, அசத்துற மாதிரியோ, யாரும் பெரிதாக, படம் எடுக்கவில்லை. தொழில்நுட்பம் வளர்ந்த அளவுக்கு, கதை சொல்லும் திறமை வளரவில்லை. இப்போதைய சினிமா, செக்குமாடு போல தான். ஒரே மாதிரியா சுத்தி வருது. தமிழ் சினிமால என் இடம் அப்படியே தான் இருக்குது. நிச்சயம் மறுபடியும் ஜெயிப்பேன். இவ்வாறு பாக்கியராஜ் கூறினார்.


ரகளபுரத்தில் கருணாஸ்  ஹீரோவாக  அங்கனா

திண்டுக்கல் சாரதி, அம்பாசமுத்திரம் அம்பானி ஆகிய படங்களைத் தொடர்ந்து நடிகர் கருணாஸ் ஹீரோவாக நடிக்கும் 3வது படம் ரகளபுரம். இப்படத்தில் கருணாஸ் ஜோடியாக அங்கனா நடிக்கிறார். கோவை சரளா ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இவர்கள் தவிர பரத் ரெட்டி, எம். எஸ். பாஸ்கர், பவன், மயில்வாமி, சிங்கம்புலி, ஓ. ஏ. கே. சுந்தர், சஞ்சனாசிங், ரகசியா ஆகியோரும் நடிக்கிறார்கள்.
பயந்த சுபாவம் உள்ள ஒரு பொலிஸ்காரரை பற்றிய படம் இது. அவர் தப்பாக எடுக்கும் முடிவுகள் எல்லாம் அவருக்கு சாதகமாக முடிகின்றன. அதனால் ஏற்படும் பிரச்சினைகள் தான் இப்படத்தின் கதை. சுந்தர் சி, சுராஜ், ஷக்தி சிதம்பரம் ஆகிய டைரக்டர்களிடம் உதவி டைரக்டராக இருந்த மனோ இப்படத்தை கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார். ஸ்ரீகாந்த் தேவா இசையமைக்கிறார். வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்கிறார். ஹீரோவாக நடிப்பதுடன் தன்னுடைய கென் ஸ்டூடியோ சார்பில் கருணாஸே இப்படத்தை தயாரிக்கிறார். இப்படத்தின் சூட்டிங் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

Thursday, August 16, 2012

 


 

இரு குழந்தைகளை தத்தெடுத்த ஹன்சிகா

நடிகை ஹன்சிகா மோத்வானி தனது பிறந்த நாளில் இரு குழந்தைகளை தத்தெடுத்து பிறந்த நாளை அர்த்தமுள்ளதாகக் கொண்டாடியிருக்கிறார்.
சமீபத்தில் தனது பிறந்த நாளை கொண்டாடினார் நடிகை ஹன்சிகா. பொதுவாக நடிகர், நடிகைகள் பிறந்த நாளன்று பார்ட்டி, ஆட்டம் பாட்டம் என தூள் கிளப்புவார்கள். ஆனால் ஹன்சிகா ரொம்பவே வித்தியாசமானவர். கடந்த முறை தனது பிறந்த நாளன்று இரு ஏழைக் குழந்தைகளைத் தத்தெடுத்தார்.
இந்த பிறந்த நாளிலும் ஏதாவது நல்ல விஷயத்தைச் செய்ய வேண்டும் என்ற ஆர்வத்தில் குடிசைப் பகுதியைச் சேர்ந்த மேலும் இரு குழந்தைகளைத் தத்தெடுத்துள்ளார். இவர்களின் படிப்பு உள்ளிட்ட செலவுகளை ஹன்சிகா தான் செய்யப் போகிறாராம். மாலையில் தனது தத்துக் குழந்தைகளுடன் கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாடி மகிழ்ந்தார்.

அக்ஷயா

ரகசிய திருமணம்
கலாபக் காதலன் படத்தில் அறிமுகமானவர் அக்ஷயா. அதன் பிறகு உளியின் ஓசை, காந்தி கணக்கு உள்ளிட்ட படங்களில் நடித்தார். தற்போது தசையினை தீச்சுடினும் உட்பட சில படங்களில் நடித்து வருகிறார். இதற்கிடையே தனது நண்பர்கள் சிலருடன் இணைந்து ஆங்கில ஆல்பம் ஒன்றை தயாரித்து வருகிறார்.
அக்ஷயா ஆந்திரத்தைச் சேர்ந்தவர். சில தெலுங்கு படங்களிலும் நடித்து வருகிறார். தற்போது ஆங்கில தொழிலதிபர் ஒருவரை தீவிரமாக காதலித்து வருவதாகவும், அவரையே ரகசிய திருமணம் செய்து கொண்டு ஐதராபாத்தில் செட்டிலாகிவிட்டதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து அக்ஷயாவிடம் கேட்டால், நான் ஒருவரை காதலிப்பது உண்மை. ஆனால் திருமணம் செய்யவில்லை. எனது திருமணம் வெளிப்படையாக நடக்கும் என்கிறார்.
புதுமுக இயக்குனர் எஸ். நாகராஜன் இயக்கும் படம் இது சாருவோட டேட்டிங். இதில் கேரளாவைச் சேர்ந்த மாடலிங் கிரிஷ் ஹீரோவாக அறிமுகமாகிறார். ஹீரோயினாக குஜராத் படங்களில் நடித்து வரும் ஸ்வப்னா அறிமுகமாகிறார். இயக்குனர் ஜி. எம். குமார் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். தற்போது சென்னையில் அதிகரித்து வரும் டேட்டிங் கலாசாரத்தை பற்றிய கதை. டைட்டல் பார்க்கிலிருந்து பாண்டிச்சேரிக்கு டேட்டிங் கிளம்பும் ஒரு பெண்ணும், ஆணும் கிழக்கு கடற்கரை சாலையில் அனுபவிக்கும் கொடூர சம்பவங்கள்தான் கதையாம்.
“இந்தப் படத்துக்காக பல இடங்களில் ஹீரோயின் தேடியபோதும் கிடைக்காத நிலையில், தற்செயலாக இணையதளத்தின் மூலம் கிடைத்தவர்தான் இந்த ஸ்வப்னா. அவர் நடித்த படங்களின் டி.வி.டி.யை அனுப்பி வைத்தார். பிடித்திருக்கவே அவரை ஹீரோயின் ஆக்கிவிட்டோம்” என்று ஹீரோயின் கிடைத்த தகவலைச் சொல்கிறார் இயக்குனர் நாகராஜன். டேட்டிங் என்பதற்கு சரியா தமிழ் வார்த்தை கிடைக்காததால் ஆங்கிலத்தை சேர்த்துள்ளோம் என்றார்.


 

290 Àபடங்களுக்கு மேல் நடித்த ~வசந்த மாளிகை' வாணிஸ்ரீ

இன்றைய திரைப்பட ரசிகர்களாலும் ‘காதல் காவியம்’ என்று போற்றப்படுகிற ‘வசந்தமாளி கை’யில் சிவாஜியுடன் நடித்தவர் வாணிஸ்ரீ. இவர் ‘உயர்ந்த மனிதன்’ ‘சிவகாமியின் செல்வன்’ ‘வாணி ராணி’ ‘கண்ணன் என் காதலன்’ உட்பட பல வெற்றிப்படங்களில் நடித்துள்ளார். வாணிஸ்ரீயின் சொந்த ஊர் ஆந்திரா மாநிலம் நெல்லூர். அவரது இயற்பெயர் ரத்தினகுமாரி.
நெல்லூரில் இருந்து சென்னைக்கு வந்து குடியேறியது வாணிஸ்ரீ குடும்பம். அப்போது மயிலை ஆந்திரசபையில் படித்து வந்தார். பள்ளியில் படித்துக் கொண்டிருந்த போது நடனம் கற்றுக்கொள்ள ஆசைப்பட்டார். அந்த ஆசையைப் பெற்றோரிடம் வாணிஸ்ரீ தெரிவித்தார். எனவே, ஒரு நடன, ஆசிரியரை ஏற்பாடு செய்தார்கள்.
நடனம் கற்று முடித்ததும் நடிக்க வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டது.
அதன் விளைவாக நாடக மேடைகளில் நடிக்கத் தொடங்கினார். நாடகத்தில் நடித்துக் கொண்டிருந்த போது பீஷ்மர் என்ற தெலுங்குப் படத்தில் சிறு வேடத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்தது. அதன்பிறகு சொல்லிக்கொள்ளும்படி பட வாய்ப்புக்கள் கிடைக்கவில்லை. அதனால் மீண்டும் நாடகத்தில் நடக்கத் தொடங்கினார்.
‘சில்லரகொட்டு சின்னம்மா’ என்ற நாடகத்தில் கதாநாயகியாகத் தோன்றிய இவரது நடிப்பு, பலரையும் கவர்ந்தது. அதன்பின்னர் முதன்முதலாக ‘வீரசங்கல்ப’ என்ற கன்னடப் படத்தில் கதாநாயகியாக நடித்தார். அதன்பிறகு தொடர்ந்து தெலுங்கில் சிறிய சிறிய வேடங்களில் நடித்து வந்தார்.
இந்த சமயத்தில் ‘காதல் படுத்தும்பாடு’ என்ற தமிழ்ப் படத்தில் கதாநாயகியாக நடிக்க வாய்ப்புக் கிடைத்தது. இந்தப் படத்தில் ஜெய்சங்கருக்கு ஜோடியாக நடித்தார். அந்தப் படம் வெளிவந்த பிறகு தமிழ்ப்படத்தில் நடிக்க வாய்ப்புகள் தேடி வரத் தொடங்கின.
1968ம் ஆண்டு வெளியான ‘உயர்ந்த மனிதன்’ படத்தில் சிவாஜியுடன் வாணிஸ்ரீ ஜோடி சேர்ந்தார். ஏ. வி. எம். தயாரிப்பில் வெளிவந்த ‘உயர்ந்த மனிதன்’ வெற்றிப்படமானது.
சிவாஜியுடன் நடத்தது பற்றி வாணிஸ்ரீ கூறியதாவது:-
‘நெல்லூரில் நான் வசித்த போது, சிவாஜி நடித்த ‘மனோகரா’ தெலுங்கில் ‘டப்’ செய்யப்பட்டு வெளிவந்தது. அந்தப் படத்தில் தான் முதல் முதலாக சிவாஜியைப் பார்த்தேன். பின்னர், சிவாஜியுடன் நடிக்க ஆரம்பித்த பிறகு கூட, அவரிடம் பேச எனக்கு வாய்ப்புக் கிடைக்கவில்லை. ஏ. வி. எம்.மின் உயர்ந்த மனிதன் படத்தின் வெளிப்புறப் படப்பிடிப்பு கொடைக்கானலில் நடைபெற இருந்தது. அதில் நடிக்க நானும் சென்றேன்.
இதில் சிவாஜி எனக்கு ஹீரோ என்றதும், இரவு முழுக்க தூக்கமே வரவில்லை. மறுநாள் காலையில் சிவாஜியுடன் நடிக்க வேண்டும். முன்பின் அறிமுகம் கூட நமக்கு இல்லையே, எப்படி சமாளிக்கப் போகிறோம் என்று கலக்கமாக இருந்தது.
நெல்லூரில் திரையில் பார்த்தவரை நேரில் பார்த்தேன். அதுவும் அவரது கதாநாயகியாக.
சிவாஜி என்னைப் பார்த்தவுடன் ‘உன் போட்டோக்களை பத்திரிகைகளில் பார்த்து இருக்கிறேன். நல்லா நடிப்பியா, தமிழ் நன்றாக பேசவருமா? என்று கேட்டார். நான் சிரித்தபடி தலை அசைத்தேன்.
‘வெள்ளிக் கிண்ணம்தான் என்ற பாட்டுக்குத்தான் முதன் முதலாக சிவாஜியுடன் நடித்தேன்.
இவ்வாறு வாணிஸ்ரீ கூறினார்.
‘உயர்ந்த மனிதன்’ படத்திற்கு பிறகு சிவாஜிக்கு ஜோடியாக அதிக படங்களில் நடிக்க வாணி ஸ்ரீக்கு வாய்ப்புக்கள் கிடைத்தன. அப்படி நடித்த படங்களில் ‘சிவாகாமியின் செல்வன்’ ‘வசந்த மாளிகை’ ஆகிய படங்களில் வாணிஸ்ரீ நடிப்பின் சிகரத்தைத் தொட்டார் என்று கூறலாம். இந்தியில் வெளியாகி சக்கை போடுபோட்ட ‘ஆராதனா’ படம் சிவகாமியின் செல்வன் என்ற பெயரில் தமிழில் தயாராகியது. சூப்பர் ஸ்டார் ராஜேஷ்கண்ணா நடித்த இரட்டை வேடத்தில் சிவாஜி நடித்தார். சார்மிளா டாகூர் நடித்த வேடத்தில் வாணிஸ்ரீ நடித்தார்.
முன் பகுதியில் இளமையான கதாநாயகியாகி,
பின் பகுதியில் வயோதிபத் தோற்றம். மாறுபட்ட இரு வேடங்களில் அற்புதமாக நடித்தார் வாணிஸ்ரீ. அதேபோலத்தான் தமிழ்த் திரைப்பட ரசிகர்களால் காதல் காவியம் என்று போற்றப்படும் ‘வசந்தமாளிகை’ திரைப்படத்தில் வாணிஸ்ரீ நடிப்பில் அசத்தி இருந்தார். எந்த நேரமும் போதையில் தள்ளாடும் சிவாஜியைத் திருத்தி காதலிக்கும் விமானப் பணிப்பெண் கதாபாத்திரத்தில் வாணிஸ்ரீ நடித்தார். அனைத்து பாடல்களும் அருமையாக அமைந்த வசந்த மாளிகை சிவாஜி, வாணிஸ்ரீ நடிப்பால் என்றென்றும் வாழும் காவியமாக இருந்து வருகிறது.
தொடர்ந்து டீச்சர் அம்மா, கன்னிப் பெண், தாமரை நெஞ்சம், வெள்ளிவிழா, இருளும் ஒளியும், வாணிராணி போன்ற பல வெற்றிப்படங்களில் நடித்தார். இந்தியில் ஹேமாமாலினி நடித்த ‘சீத்தா அவுர் கீதா’ என்ற படம்தான் தமிழில் வாணி ராணி என்ற பெயரில் தயாராகியது. இரட்டை வேடத்தில் வெகுசிறப்பாக நடித்தார் வாணிஸ்ரீ.
எம். ஜி. ஆருடன் கண்ணன் என் காதலன், தலைவன், ஊருக்கு உழைப்பவன் போன்ற படங்களில் வாணிஸ்ரீ நடித்துள்ளார்.
எம். ஜி. ஆருடன் நடித்தது பற்றி வாணிஸ்ரீ கூறியதாவது:-
‘எம். ஜி. ஆருடன் நடிப்பதற்கு முன்பே பலமுறை அவருடன் பேசி இருக்கிறேன். அவரது படிப்பிடிப்பையும் பார்த்து இருக்கிறேன். கண்ணன் என் காதலன்’ படத்தில் எம். ஜி. ஆருடன் நடிக்க வாய்ப்புக் கிடைத்தது. முதல்நாள் படப்பிடிப்புக்கு சென்றேன் ‘கண்களிரண்டும் ஒளி விளக்காக’ என்ற பாடலுக்கு ஒத்திகை நடந்தது.
அப்போது என காதருகே ‘ஒன்றும் பயப்பட வேண்டாம்’ தைரியமாக நீ ஆடலாம்’ என்று எம். ஜி. ஆர். கூறினார். எனக்கு வியர்த்துப் போய்விட்டது. எப்படியோ என்னைச் சமாளித்துக் கொண்டு, ‘நன்றி’ என்று நடித்தேன். காலை ஏழு மணிக்கு தொடங்கிய படப்பிடிப்பு இரவு 12 மணிவரை நடந்தது. எம். ஜி. ஆருடன் நான்தோன்றிய முதல் காட்சியே ஒ. கே. ஆனது. எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.
இவ்வாறு வாணிஸ்ரீ கூறினார்.
தமிழ், தெலுங்கு என பல்வேறு மொழிகளில் 290 படங்களுக்கு மேல் வாணிஸ்ரீ நடித்து உள்ளார்.

 

‘விஸ்வநாதன் வேலை வேணும்’ பாடல் பிறந்த விதம்

காதலிக்க நேரமில்லை பாடல் கம்போஸிங்குக்காக சித்ராலயா அலுவலகத்தில் எம்.எஸ்.வி. தன்னுடைய ஆர்மோனியத்துடன் அமர்ந்திருந்தார். (அப்போதெல்லாம் புரொடக்ஷன் அலுவலகத்தில் வைத்து ட்யூன் போட்டு பின்னர் ரிக்கொர்டிங் தியேட்டரில் பதிவு செய்வது வழக்கம்) கவிஞர் கண்ணதாசனும் வந்துவிட்டார்.
எம்.எஸ்.வி.க்கு இசையை விட்டால் வேறு எதுவும் தெரியாது. யார் எந்த நாட்டில் ஜனாதிபதி என்பதெல்லாம் கூட தெரியாது. அப்போது செய்தித்தாளில் ஐசனோவர் பற்றி யாரோ படிக்க, இவர் உடனே “ஐசனோவர் யாரண்ணோ” என்று கேட்டார். அப்போது கண்ணதாசன் “அடே மண்டு அவர் அமெரிக்க ஜனாதிபதியாக இருந்தவர்” என்றார்.
அப்போது அங்கு வந்த ஸ்ரீதர், “அடே, ரெண்டு பேரும் வந்துட்டீங்களா? சரி சிட்டுவேஷன் என்னன்னா, தன்னை வேலையிலிருந்து நீக்கிய எஸ்டேட் ஓனரை எதிர்த்து ரவிச்சந்திரன் போராட்டம் நடத்துகிறார். இந்த சிட்டுவேஷனுக்கு பாட்டுப்போடுங்க” என்று சொல்லி விட்டு உள்ளறயில் சி.வி. ராஜேந்திரனோடும், கோபுவோடும் கதை டிஸ்கஷன்னுக்குப் போய்விட்டார்.
சற்று முன்னர் யாரோ சொன்ன ஐசனோவர் என்ற பெயரை மட்டும் நினைவில் வைத்திருந்த எம்.எஸ்.வி. ‘ஐசனோவர்.... ஆவலோவா....’ என்று வாய்க்கு வந்தபடி சத்தம் போட்டுக்கொண்டிருந்தார். உள்ளறையிலிருந்து எட்டிப்பார்த்த ஸ்ரீதர் “அண்ணே இப்போ நீங்க கத்தினீங்களே அதுதான் ட்யூன்” என்றார். இவருக்கோ ஆச்சரியம் இதில் என்ன ட்யூனைக் கண்டுவிட்டார் ஸ்ரீதர் என்று கவிஞர் கண்ணதாசன் பாடலை சொல்லாமல், வெட்டிப் பேச்சில் நேரம் கழித்துக்கொண்டிருந்தார். அப்போது எம்.எஸ்.வி. “அண்ணே சீக்கிரம் பாட்டைச் சொல்லுங்கண்ணே இதை முடிச்சிட்டு ஆலங்குடி சோமு கூட வேறு இடத்தில் பாடல் பதிவு இருக்கு எனக்கு” என்றார்.
அதற்கு கண்ணதாசன் “இதோ பாருடா விசு. ஒரு வாரமா பெங்களூர்ல தங்கி கையில இருந்த காசையெல்லாம் செலவழிச்சிட்டேன். இப்போ செலவுக்கே காசில்லை.
இன்னைக்கு ஸ்ரீதருக்கு ரெண்டு மூணு பாட்டு எழுதினேன்னா அவர் ஒரு தொகை கொடுப்பாரு. இந்த நேரத்தில என்னை விட்டுட்டு அங்கே இங்கேன்னு போகாதேடா, எனக்கு வேலை கொடுடா விஸ்வநாதா....! என்றார்.
எலிக்காது படைத்த ஸ்ரீதருக்கு இதுவும் கேட்டுவிட்டது. மீண்டும் தலையை நீட்டி “கவிஞரே, இப்போ கடைசியா சொன்னீங்களே அதுதான் பல்லவி” என்றார். இப்போது இவருக்கும் அதிர்ச்சி. விஸ்வநாதன் கேட்டார் “ஏண்ணே, இன்னைக்கு ஸ்ரீதருக்கு என்ன ஆச்சு....? நான் வாய்க்கு வந்தபடி கத்தியதை ‘அதுதான் டயூன்’னு சொல்றார். வேலை கொடுடா விஸ்வநாதான்னு நீங்க சொன்னதை ‘அதுதான் பல்லவி’ என்றார். என்னண்ணே இதெல்லாம்?’ என்று கேட்டதும் கண்ணதாசன் சொன்னார்.
“இதோ பார் விசு, நம்ம ரெண்டு பேருக்கும் ஸ்ரீதர் இன்னைக்கு ஒரு டெஸ்ட் வச்சிருக்கார். அதை சாதிச்சுக் காட்டி பேர் வாங்கணும். நீ கத்தியதுதான் ட்யூன், நான் சொன்னதுதான் பல்லவி, ஆரம்பி’ என்றார்.
சரியென்று இறங்கினார்கள். “ஐனோவர்.... ஆவலோவா.... என்று கத்தியதற்கு ஏற்ப “வேலை கொடு விஸ்வநாதா” என்று ஆரம்பித்தார்கள். அப்போது எம்.எஸ்.வி. ‘அண்ணே எஸ்டேட் ஓனர்’ பாலையா வயசானவர் தவிர முதலாளி, ரவிச்சந்திரனோ சின்ன வயசுக்காரர், அவரிடம் வேலை பார்க்கும் குமாஸ்தா, தவிர இப்படத்தில் புதுமுகம். வேலை கொடுன்னு கேட்பது மரியாதைக்குறைவா தெரியுதே’ என்று அபிப்பிராயம் சொல்ல, உடனே கண்ணதாசன், “சரி, அப்படீன்னா இப்படி செய்வோம், வேலை கொடு விஸ்வநாதா” என்பதற்கு பதிலாக “விஸ்வநாதன் வேலை வேணும்” என்று துவங்குவோம் என்று சொல்லி மளமளவென மற்ற வரிகளைச் சொல்ல ஆரம்பித்தார்.

 

காளி என் ரத்தினம் சி.டி.ராஜகாந்தம்

தமிழ்த் திரை உலகில் என். எஸ். கிருஷ்ணன் - டி. ஏ. மதுரம் ஜோடி கொடிகட்டிப் பறந்த காலக்கட்டத்தில், அவர்களுக்கு அடுத்து புகழ்பெற்று விளங்கிய ஜோடி காளி என். ரத்தினம் - சி. டி.ராஜாகந்தம்.
காளி என் ரத்தினத்தின் சொந்த ஊர் கும்பகோணம் அருகே உள்ள மலையப்ப நல்லூர் கிராமம். தந்தை நாராயணன் விவசாயி, தாயார் தங்கத்தம்மா, ரத்தினம் 5 ஆம் வகுப்பு படித்த போது அவரது குடும்பம் மிகவும் ஏழ்மைநிலைக்கு தள்ளப்பட்டது. இதனால் படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு கும்பகோணத்தில் ஒரு பட்டு ஜவுளிக் கடையில் கணக்கு எழுதும் சிறுவனாக வேலைக்கு சேர்ந்தார்.
அதன்பின்னர் தப்பா வெங்கடாசலபதி பாகவதரின் தஞ்சை பாலமோகன் அபிநயசித்தி விலாச சபாவில் சேர்ந்தார். அப்பொழுது 12 வயதான ரத்தினத்திற்கு முதலில் பெண் வேடங்கள் வழங்கப்பட்டன. அவரது வேடங்கள் மக்கள் மத்தியில் ரசிக்கப்பட்டதால் பிறகு முக்கிய வேடங்களில் நடிக்க வாய்ப்புகிடைத்தது.
சில ஆண்டுகளில் அந்த கம்பனியின் பெயர் ‘மதுரை ஒரிஜினல் போய்ஸ் கம்பனி’ என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது. பின்னர் பல ஊர்களுக்கு சென்று நாடகங்களை நடத்தினர். அப்பொழுது ‘ராஜ்பார்ட்’ வேடங்களில் ரத்தினம் நடிக்கத் தொடங்கினார்.
அதன் பின்னர் ரத்தினத்திற்கு தொண்டையில் பிரச்சினை ஏற்பட்டது. அதன் காரணமாக நகைச்சுவை வேடங்களில் நடிக்கத் தொடங்கினார். அவரது கொமெடி வேடம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. கோவலன் நாடகத்தில், காளி வேடம் போட்டு நடித்தார். காளி வேடத்தில் நடிப்பதில் ரத்தினத்திற்கு நிகர்யாரும் இல்லை என்று பலரும் போற்றியதால், ‘காளி என். ரத்தினமானார்.
ஒரிஜினல் போய்ஸ் கம்பனி நடத்திய நாடகங்களில் ‘பரிபக்தி’ நாடகம் மிகவும் புகழ்பெற்றது. இந்த நாடகம் சினிமா படமாகத் தயாரிக்கப்பட்டு 1936ல் வெளிவந்து வெற்றிபெற்றது. இதில், ‘துப்பறியும் சந்தான் கிருஷ்ணன்’ என்ற வேடத்தில் காளி என். ரத்தினம் நடித்தார்.
(என். எஸ். கிருஷ்ணனும், காளி என். ரத்தினமும் சம காலத்தவர்கள். என். எஸ். கிருஷ்ணன் நடித்த முதல் படம். ‘மேனகா’. இது 1935ல் வெளிவந்தது. 1936 ல் வெளிவந்த ‘வசந்தசேனா’ படத்தில் டி. என். மதுரம் ஜோடி சேர்ந்தார்.)
சந்திரகாந்தா 1936 ல் துப்பறியும் கதைகள் எழுதுவதில் புகழ்பெற்றிருந்த ஜே. ஆர். ரங்கராஜு எழுதிய ‘சந்திரகாந்தா’ என்ற படத்தை ஜுபிடர் பிக்சர்சார் படமாகத் தயாரித்தனர். இதில் போலி மடாதிபதியாக (பிரதான பாத்திரத்தில்) காளி என். ரத்தினம் நடித்தார்.
படம் வெற்றி பெற்றது. காளி என். ரத்தினம் பெரும் புகழ் பெற்றார். இந்தப் படத்தில் பி. யு. சின்னப்பா சுண்டூர் இளவரசன் என்ற சிறிய வேடத்தில் நடித்தது குறிப்பிடத்தக்கது. இதனால் காளி என். ரத்தினத்தை நஷனல் மூவிடோன் ஒரு ஆண்டுக்கு ஒப்பந்தம் செய்தனர்.
ராஜமோகன், பஞ்சாப்கேசரி ஆகிய படங்களில் நடித்தார். பின்னர் மாத்ருபூமி, பாண்டுரங்கா, ரம்பையின் காதல் போன்ற படங்களில் நகைச்சுவை காட்சிகளில் நடித்து புகழ்பெற்றார்.
மொடர்ன் தியேட்டர்சார் 1940 ல் ‘உத்தம புத்திரன்’ படத்தைத் தயாரித்தனர். இதில் பி. யு. சின்னப்பா இரட்டை வேடங்களில் நடித்துப் புகழ் பெற்றார். இந்தப் படத்தில்தான், காளி என். ரத்தினத்துடன் சி. டி. ராஜகாந்தம் முதன் முதலாக ஜோடி சேர்ந்து நடித்தார்.
அதன்பின் மொடர்ன் தியேட்டர்சாரின் பெரும்பாலான படங்களில் இந்த ஜோடி நகைச்சுவை விருந்தளித்தது ‘ஆயிரம் தலைவாங்கிய அபூர்வ சிந்தாமணி’, ‘போஜன்’, ‘பர்மா ராணி’ முதலான படங்களில் இவர்கள் நகைச்சுவை பிரமாதமாக அமைந்தது.
ஏவ். மெய்யப்ப செட்டியார் தயாரித்த ‘சபாபதி’ படத்தில், காளி என். ரத்தினம் அசட்டு வேலைக்காரனாக பிரமாதமாக நடித்து பெரும் புகழ் பெற்றார்.
சி. டி. ராஜகாந்தத்தின் சொந்த ஊர் கோவை. பெற்றோர் திரவியம் ஆசாரியார் - மருதாயி. 1917 ஜனவரி 5 ஆம் திகதி பிறந்தார். ராஜகாந்தத்தின் 20 வது வயதில் திருமணம் நடந்தது. கணவர் பெயர் அப்புக்குட்டி.
ராஜகாந்தம் தன் வீட்டின் ஒரு பகுதியை வாடகைக்கு விட்டார். அங்கு நடிகை எஸ்..ஆர். ஜானகி குடிவந்தார். ராஜகாந்தத்தின் துடிப்பான பேச்சைக் கண்ட அவர், ‘இந்தப் பெண் நாடகத்தில் நடித்தால், பெரிய நடிகையாகி விடுவாள்’ என்று நினைத்தார்.
ராஜகாந்தத்தின் தாயாரிடம் பேசி, அனுமதி பெற்றார். அதன்பின் ராஜகாந்தம் நாடகங்களில் நடிக்க ஆரம்பித்தார்.
நாடகங்களில் நடித்து வந்த ராஜகாந்தம், 1939ல் மொடர்ன் தியேட்டர்சாரும் சேலம் ஸ்ரீகிருஷ்ணா பிலிம்சாரும் இணைந்து தயாரித்த ‘மாணிக்க வாசகர்’ படத்தில் முதன் முதலாக நடித்தார். அதன்பின் மொடர்ன் தியேட்டர்சார் தயாரித்த ‘சத்தியவாணி’ படத்தில் நகைச்சுவை வேடத்தில் சிறப்பாக நடித்தார். அதைப் பார்த்துவிட்டுத்தான், காளி என். ரத்தினம் தனது படங்களில் ராஜகாந்தத்தை ஜோடியாக நடிக்க வைத்தார்.
எம். ஜி. ஆர். திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு தேடி முயற்சி செய்து கொண்டிருந்த காலத்தில், அவருக்கு உதவியவர் காளி என். ரத்தினம். அதன் காரணமாக, காளி என். ரத்தினத்திடமும், சி. டி. ராஜகாந்தத்திடமும் மிகுந்த அன்பும், மதிப்பும் வைத்திருந்தார். எம். ஜி. ஆர்.
காளி என். ரத்தினம் புகழோடு இருந்தபோதே காலமாகி விட்டார். அதன்பின் சி. டி. ராஜகாந்தம் தனியாகவும் சில படங்களில் நடித்தார். வில்லி வேடங்களிலும் அவர் திறமையாக நடித்தார்.
என். எஸ். கிருஷ்ணன் - டி. ஏ. மதுரம் ஜோடியைப் போல, காளி என். ரத்தினமும் ராஜகாந்தமும் சொந்தக் குரலில் பாடியது குறிப்பிடத்தக்கது.

 

 

போதையில் மிதந்த மேதையின் பாடல்கள்

கவிஞர் கண்ணதாசம் பற்றி அவரது புலமை பற்றி அவரது தத்துவம் பற்றி சொல்வதென்றால் விடிய விடிய யுகம்யுகமாக பேசலாம். அத்தனை பெருமை வாய்ந்தது. அவரது கவித்துவம்.அவர் வசன கர்த்தாவாக, கதாசிரியராக, படத் தயாரிப்பாளராக, நடிகராக சினிமா உலகிலே பல பரிமாணங்களில் சஞ்சரித்த போதிலும் பாடலாசிரியர் என்ற பாத்திரம் தான் மக்கள் உள்ளங்களில் அவரை நிரந்தரமாக்கியது.
கன்னியின் காதலி படத்தில் ‘கலங்காதிரு மனமே’ என்று தொடங்கிய அவரது சினிமா வரிகள் மூன்றாம் பிறை படத்தில் கண்ணே கலைமானே’ என்ற வரிகளோடு அமரத்துவம் பெற்றன. அதற்கிடையில் எத்தனை தத்துவங்களை எத்தனை ரசனைகளைப் பிழிந்துமானிடக் குருதியில் கலக்கச் செய்துள்ளார் என்பதை சிந்திக்கவே காலம் போதாது.
அவர் இயற்றிய பாடல்களில் மிகவும் குறுகிய நேரத்தில் அதாவது பத்தேபத்து நிமிடங்களுக்குள் எழுதி முடித்த பாடல் ‘முத்தான முத்தல்லவோ’ என்ற பாடலாகும்.
நீண்ட காலம் அதாவது பல நாள் சிந்தனையை செலவிட வேண்டி ஏற்பட்ட பாடல் ‘நெஞ்சம் மறக்கவில்லை அது நினைவை இழக்கவில்லை’ என்ற பாடலாம்.
கவிஞர் பாடல் வரிகளைக் கூறும் போது வேட்டியின் ஒரு நுனியைக் கையில் ஏந்தியவாறு அறைக்குள் நடந்த வண்ணமே சொல்லுவாராம். பாடல் வரிகளைக் கூறும் போது அவர் செருப்பு அணிய மாட்டாராம். மதம், தத்துவம், காதல், காமம், அரசியல், சோதிடம் போன்ற துறைகளில் பெருமளவு நூல்களை எழுதியுள்ள இவரிடம், ஒருமுறை நீங்கள் எழுதிய நூல்களைப் படிக்கும் வாசகர்களுக்கு நீங்கள் கூறும் அறிவுரை என்ன? என்று கேட்கப்பட்ட போது அவர் ‘நூலைப் பின்பற்றுங்கள் ஆனால் நூலாசிரியரைப் பின் பற்றாதீர்கள்’ என்று பதில் சொன்னாராம்.
தென் இந்தியாவின் சிறுகூடல்பட்டி ஊரிலே பிறந்த இவர் அமெரிக்க நாட்டின் சிக்காக்கோ நகருக்கு வைத்திய சிகிச்சை பெறச் சென்றிருந்த போது அங்கு வைத்தே உயிர் நீத்தார்.
அவர் சிகிச்சைபெறச் சென்றிருந்த சமயத்தில் அங்கு வாழும் இந்தியக் குழந்தைகளைச் சந்தித்த போது அவருக்கு பெரும் ஆதங்கம் ஏற்பட்டதாம். அதற்குக் காரணம் தமிழ்க் குழந்தைகள் தமிழ் மொழியில் பேசாமையாம் இதைக் கண்டு வேதனையில் எழுதிய கவிதை வரிகளே அவரது வாழ்க்கையில் எழுதிய இறுதி நான்கு வரிகள்.
மனதனில் ஒன்றுபட்டு சேர்ந்திடுவீர் - இங்கு
மழலைகள் தமிழ் பேசச் செய்திடுவீர்
தமக்கெனக் கொண்டு வந்ததேதுமில்லை -பெற்ற
தமிழையும் விட்டு விட்டால் வாழ்க்கையில்லை
என்பது தான் அந்த வரிகள் தமிழ் மீது கவிஞர் கொண்டிருந்த பற்றுக்கு இதுவும் ஒரு சான்று. தொட்டில் முதல் சுடுகாடு வரையிலான தத்துவங்களைப் பொதித்த - வாழ்க்கையின் வளைவுகளை நெளிவுகளை கழிவுகளை வார்த்தைகளில் வடித்த காலத்தால் அழியாக கவிஞரை இனி என்று காண்போம்.

Wednesday, August 8, 2012

விஜய், பிரபுதேவா,அசின் விருந்து

விஜய் ‘துப்பாக்கி’ படவேலைகளுக்காக மும்பை சென்று இருந்தார். அப்போது பிரபுதேவா வீடு அருகில் இருக்கும் தகவல் தெரிய வந்தது. உடனடியாக அவரது வீட்டுக்குச் சென்றார்.
விஜய் வந்த விவரம் அறிந்ததும் அசினும் அங்கு சென்றார். மூவரும் விருந்து சாப்பிட்டபடி நீண்ட நேரம் பேசிக் கொண்டு இருந்தனர்.ஏற்கனவே பிரபுதேவா இயக்கிய ‘போக்கிரி’ படத்தில் விஜய், அசின் ஜோடியாக நடித்தனர். அப்படம் வெற்றிகரமாக ஓடியது. எனவே மீண்டும் மூவரும் ஒரு படத்தில் இணைந்து பணியாற்றுவது பற்றி பேசியதாக கூறப்படுகிறது.
பிரபுதேவா இந்தியில் தற்போது முன்னணி இயக்குநராக உள்ளார். அசினும் இந்தியில் நடிக்கிறார். தமிழ் ரசிகர்களுக்காக மீண்டும் ஒரு படத்தை இயக்கி அதில் விஜய், அசினை ஜோடியாக நடிக்க வைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சிவாஜpயின் பேரன் விக்ரம் பிரபு நடிக்கும் யானைகளின் ~கும்கி'

மைனா படத்தை தொடர்ந்து டைரக்டர் பிரபுசாலமன் இயக்கும் படம் ‘கும்கி’ காட்டு யானைகளை மையப்படுத்தி, யானைகள் ஏன் காடுகளை விட்டு கீழே இறங்கி கிராமங்களுக்கு வருகின்றன. அதற்கு தீர்வு என்ன என்பதுடன் ஒரு அழகான காதல் கதையையும் சொல்ல வருகிறது இந்த கும்கி.
இப்படத்தில் நாயகனாக நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பேரனும், நடிகர் பிரபுவின் மகனுமான விக்ரம் பிரபு இப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகிறார். இவருக்கும் ஜோடியாக கேரளாவைச் சேர்ந்த லட்சுமி மேனன் என்பவர் நடிக்கிறார். ‘மைனா’ படத்திற்காக தேசிய விருது வாங்கிய தம்பி ராமையா இந்தப் படத்திலும் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடிக்கிறார்.
இமான் இசையமைக்க, சுகுமார் ஒளிப்பதிவு செய்ய, கதை, திரைக்கதை எழுதி இயக்குகிறார் பிரபு சொலமன், யு. டி. வி. யும், லிங்குசாமியின் திருப்பதி பேனர்ஸ் இணைந்து கும்கி படத்தை தயாரிக்கின்றனர்.
கும்கி படத்தை பற்றி டைரக்டர் பிரபு சொலமன் கூறும் போது, காட்டுக்குள் இருந்து ஊர் பக்கம் வருகிற யானைகளை விரட்டி அடிக்க மனிதனால் பழக்கப்பட்ட யானைக்கு கும்கி என்று பெயர். அந்த யானைகளின் வாழ்வியல் பின்னணியில் ஒரு காதல் கதையை சொல்லியிருக்கிறேன். இது ஒரு பிரமாண்டமான காதல் படமாக இருக்கும்.
வனத்தையும், மனதையும் ஒருசேர தூண்டில் போட்டு தூக்கும் யானைகள் பொதுவாக 11 அடி உயரம் இருக்கும். தந்தம் ஐந்தரை அடி இருக்கும். அதற்கு பக்கத்தில் நின்றால், ஒருவர் கம்பீரமாக தெரிய வேண்டும்.அப்படி தெரிகிறார் விக்ரம். அவர்தான் யானையை குளிப்பாட்டுகிறார். அது தின்பதற்கு மட்டை போடுகிறார். செல்லம் கொஞ்சுகிறார்.
அவரை, யானை தும்பிக்கையில் தூக்கிக்கொண்டு போகிறது. படப்பிடிப்பு முடிந்தால், அந்த யானையை அன்பாக அதட்டி லொறியில் ஏற்றி அனுப்பி வைக்கிற வரை எல்லாமே விக்ரம் கட்டுப்பாட்டில்தான் இருக்கிறது என்றார்.

சுட்டி பையனும் நான்கு திருடர்களும்

சிரிப்பு பொலிஸ் மாதிரி, சிரிப்பு திருடர்கள் 4 பேர்களையும், ஒரு சிறுவனையும் வைத்து, வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் நகைச்சுவை படம் தயாராகிறது. இந்தப் படத்துக்கு சுட்டிப் பையனும் நான்கு திருடர்களும் என்று பெயர் சூட்டப்படடு இருக்கிறது.
இதில் விஜய் டி. பி. புகழ் ஸ்ரீகாந்த் சுட்டிப் பையனாகவும், மகாநதி சங்கர், ரோபோ சங்கர், சுருளி மனோகர், கிங்காங் ஆகிய 4 பேரும் சிரிப்பு திருடர்களாகவும் நடிக்கிறார்கள். இவர்களின் தலைவனாக ஜாஸ்பர் நடிக்கிறார்.
மற்றும் பயில்வான் ரங்கநாதன், லொள்ளு சபா உதய், கலக்கப்போவது யாரு புகழ் அர்ஜூன், சாய்பிரகாஷ், சாய்பிரியா, லதாராவ், மனோரஞ்சிதம், பாக்கியாஞ்சலி ஆகியோரும் நடிக்கிறார்கள். கதை, திரைக்கதை, வசனம் எழுதி சிவாஜி இயக்குகிநார். ஆர். வாணிஸ்ரீ, ஆர். சிவம், ஆர் செல்வன் ஆகிய மூவரும் தயாரிக்கிறார்கள்..


குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் நடிகை ஜெயஸ்ரீயின் மகள் ஜெயசித்ரா

சீஞ்சலிதேவியின் மகளாக குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமான ஜெயசித்ரா, பின்னர் கதாநாயகியாக உயர்ந்து 200 படங்களுக்கு மேல் நடித்தார்.
ஜெயசித்ராவின் சொந்த ஊர் ஆந்திர மாநிலம் காக்கிநாடா. ஆனால் ஜெயசித்ரா பிறந்து வளர்ந்தது எல்லாமே சென்னைதான். தந்தை மகேந்திரா, இவர் கால்நடை டொக்டராகவும், வக்கீலாகவும் இருந்தார். தாயார் ஜெயஸ்ரீ. ஜெயசித்ராவுக்கு பெற்றோர் வைத்த பெயர் லட்சுமி கிருஷ்ணவேணி ரோகினி பார்வதி தேவி என்பதாகும்.
ஜெயசித்ராவின் தாயாரும் நடிகைதான். அந்த காலகட்டத்தில் ஜெயஸ்ரீ பிரபல நடிகையாக விளங்கினார். அவர் 1954 ஆம் ஆண்டு ‘ரோஜலு மாராயி’ (தெலுங்கு ‘காலம் மாறிப்போச்சு’) படத்தில் அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து அன்னதாத்தா, டைகர்ராமுலு உள்ளிட்ட பல தெலுங்கு படங்களில் நடித்தார்.
1955 ஆம் ஆண்டு ‘மகாவீரபீமன்’ என்ற தமிழ்ப் படத்தில் அறிமுகமானார். அந்தப் படத்தில் திரெளபதியாக நடித்து ரசிகர்களை கவர்ந்தார். அதன் பின்னர் ‘தெய்வபலம்’, ‘சிவகாமி’ உட்பட பல படங்களில் நடித்து உள்ளார். மொத்தம் 40 படங்கள் வரை நடித்து இருக்கிறார்.
திருமணமாகி, குழந்தை பிறந்த பிறகு ஜெயஸ்ரீ திரைப்படத்தில் நடிப்பதை நிறுத்திக்கொண்டார். பின்னர் தனது குழந்தையான ஜெயசித்ராவை நன்றாக வளர்க்கவேண்டும். நிறையப்படிக்க வைக்க வேண்டும் என்பதில் ஆர்வமாக இருந்தார்.
இந்த நிலையில் 5 வயது குழந்தையாக இருந்த போது ‘பகதபோதனா’ என்ற தெலுங்கு படத்தில் நடிகை அஞ்சலி தேவிக்கு மகளாக ஜெயசித்ரா நடித்தார்.
ஜெயசித்ரா படிக்கும் போதே நாட்டியமும் கற்று வந்தார். பரதநாட்டியத்தை முழுமையாக கற்றுக்கொண்டபின், ஜெயசித்ராவின் 11 வது வயதில் நாட்டிய அரங்கேற்றம் சென்னை வாணிகமகாலில் நடந்தது. நடன் அரங்கேற்றத்துக்கு சிவாஜிகணேசன் தலைமை தாங்கினார்.
முழுக்க முழுக்க படிப்பிலேயே ஆர்வம் காட்டி வந்த ஜெயசித்ராவிற்கு நடிகையாகும் வாய்ப்பு தேடி வந்தது. ஆனால் அவரோ சினிமாவில் நடிக்க சிறிதும் ஆர்வம் இல்லாமல் இருந்தார்.
இந்த நிலையில் 7ம் வகுப்பு படித்துக்கொண்டு இருந்த ஜெயசித்ராவை விட்டலாச்சாரியா தனது படத்தில் நடிக்கவைக்க நினைத்தார். ஒரு தெலுங்கு படத்திற்கு நாகேஸ்வரராவ் ஜோடியாக நடிக்க வைக்க ‘கெமரா டெஸ்ட்’ எடுத்தனர். ஆனால் உருவத்தில் குமரிப் பெண்ணாக இருந்தாலும் குரல் இன்னும் குழந்தைக் குரலாக இருக்கிறது என்றும் கூறி ‘நீ இப்போது நாகேஸ்வரராவ் ஜோடியாக நடிக்க முடியாது. பிறகு வாய்ப்புத் தருகிறேன்’ என்று கூறிவிட்டார் விட்டலாச்சாரியார்.
திரைத்துறைக்கு வந்தது பற்றி ஜெயசித்ரா கூறியதாவது:
‘நான் சென்னை வித்யோதயா பள்ளியில் 11ம் வகுப்பு வரை படித்து உள்ளேன். எனது தாயார் என்னை படிக்கவைக்க வேண்டும் என்றுதான் ஆசைப்பட்டார். நான் வழுவூர்ராமையா பிள்ளை மகன் சாம்ராஜிடம் பரதநாட்டியமும், சின்ன சத்தியம் மாஸ்டர், எம்.எஸ். சைவா ஆகியோரிடம் குச்சுப்புடி நடனமும் கற்றேன்.
இந்த நிலையில்தான் விட்டலாச்சாரியாவின் பீதலபாட்லு என்ற தெலுங்கு படத்தில் நடிக்க வாய்ப்பு வந்தது. ஆனால் எனக்கு அப்போது நடிக்க ஆர்வம் இல்லை. அந்த சமயத்தில் 7ம் வகுப்பு படித்துக்கொண்டு இருந்தேன். படத்தில் நடிப்பதற்காக கெமரா டெஸ்ட் எடுத்தனர். நான் பேசும்போது தொண்டை கீச், கீச் என்றதால் ‘இன்னும் குழந்தைத்தனம் போகவில்லை. பிறகு வாய்ப்பு தருகிறேன்’ என்றார் விட்டலாச்சாரியார்.
அதன் பின்னர் டைரக்டர் கே.எஸ். கோபாலகிருஷ்ணன், நான் பள்ளியில் படித்துக்கொண்டு இருந்த போது அழைத்துச் சென்று இரண்டு வசனங்களை பேசச் சொன்னார். நானும் பேசினேன். நான் பேசியதை கேட்டு சந்தோஷப்பட்ட டைரக்டர், ‘தமிழ் நாட்டிற்கு ஒரு சிறந்த கதாநாயகி கிடைத்துவிட்டார்’ என்று படப்பிடிப்பில் இருந்த அனைவரையும் அழைத்து மகிழ்ச்சி பொங்க கூறினார்.’
இவ்வாறு ஜெயசித்ரா கூறினார்.
குறத்தி மகனில் நடிக்க ஒப்பந்தம் செய்த போதுதான், ‘ஜெயசித்ரா’ என்ற பெயரை கோபாலகிருஷ்ணன் சூட்டினார். இந்தப் படத்தில் குறவர் இனத்தைச் சேர்ந்த இளைஞனை பணக்காரரின் மகளான ஜெயசித்ரா விரும்புவார். இந்தக் காதலை தந்தை ஏற்காததால், ஜெயசித்ரா குறத்தி வேடம் போட்டுக்கொண்டு காதலனுடன் சென்றுவிடுவார். இப்படத்தில் ஜெயசித்ரா துருதுருவென்று நடித்து ரசிகர்களிடம் ‘சபாஷ்’ பெற்றார்.


பலியான ~வாங்கோண்ணா' புகழ் ராணி சந்திரா

பத்ரகாளி என்ற படத்தின் கதாநாயகியாக நடித்தவர் ராணி சந்திரா. இவர் கேரள மாநிலம் ஆலப்புழையைச் சேர்ந்தவர். தந்தை பெயர் சந்திரன். தாயார் காந்திமதி. 1965 ஆம் ஆண்டில் கேரள அழகு ராணியாக (‘மிஸ் கேரளா’) ராணி சந்திரா தேர்ந்தெடுக்கப்பட்டார்.
தைத்தொடர்ந்து, மலையாளப் படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. ‘அஞ்சு சுந்தரிகள்’, ‘சொப்னாடம்’ உட்பட சுமார் 60 மலையாளப்படங்களில் நடித்தார். சிறந்த நடிகைக்கான கேரள அரசின் விருதையும் பெற்றார். தமிழ்ப்பட உலகில் புகழ் பெற வேண்டும் என்பது ராணி சந்திராவின் ஆசை. ‘பொற்சிலை’, ‘தேன் சிந்துதே வானம்’ ஆகிய தமிழ்ப் படங்களில் நடித்தார். சிறு வேடங்கள். படங்களும் பெரிதாக ஓடவில்லை.
எனவே, தமிழ்ப்பட உலகில் ராணி சந்திராவுக்கு சரியான அறிமுகம் கிடைக்கவில்லை. 1976 இல் ‘பத்ரகாளி’ என்ற படத்தை சொந்தமாகத் தயாரிக்க, டைரக்டர் திருலோகசந்தர் ஏற்பாடு செய்தார்.
எழுத்தாளர் மகரிஷி எழுதிய கதை. வசனத்தை ஆரூர்தாஸ் எழுதினார். பிராமண குடும்பத்தில் நடப்பது போன்ற கதை. கதாநாயகனாக நடிக்க சிவகுமார் ஒப்பந்தமானார். கதாநாயகியாக நடிக்க ஒரு புதுமுகத்தைத் தேடினார்கள். கடைசியில் ராணி சந்திராவுக்கு அந்த வாய்ப்பு கிடைத்தது.
திறமையும், அழகும் கொண்ட ராணி சந்திராவை ‘காயத்ரி’ என்ற புதிய பெயரில் அறிமுகப்படுத்த திருலோகசந்தர் முடிவு செய்தார். படப்பிடிப்பு வேகமாக நடந்தது. படம் கிட்டத்தட்ட முடிந்துவிட்டது. இன்னும் ஒரு சில காட்சிகளே பாக்கி. இந்த சமயத்தில் விதி விளையாடியது. டுபாயில் கலை நிகழ்ச்சிகள் நடத்துவதற்காக அந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் டுபாய் நாட்டுக்கு ராணி சந்திரா (வயது 22) சென்றார்.
அவருடன் தாயார் காந்திமதி, தங்கைகள் அம்புலி (வயது 19), சீதா (18), நிம்மி (13) ஆகியோரும் சென்றார்கள். கலை நிகழ்ச்சிகளை வெற்றிகரமாக முடித்துவிட்டு, விமானத்தில் ராணி சந்திரா திரும்பினார். விமானம் பம்பாய்க்கு வந்து சேர்ந்தது. அந்த விமானத்தில் பழுது ஏற்பட்டு இருந்ததால் வேறு விமானத்தில் இவர்கள் சென்னைக்கு அனுப்பப்பட்டனர்.
11.10.1976 நள்ளிரவு 1.40 மணிக்கு (அதாவது 12ம் திகதி அதிகாலை) விமானம் புறப்பட்டது. புறப்பட்ட சில நொடிகளிலேயே விமானம் தீப்பிடித்து விமான நிலையத்திலேயே நொறுங்கி விழுந்தது. விமானத்தில் மொத்தம் 95 பேர் இருந்தார்கள். அனைவரும் கருகி மாண்டனர். ராணி சந்திராவுடன் அவர் தாயாரும், 3 தங்கைகளும் இறந்துபோனார்கள்.
ராணி சந்திராவின் கலைக்குழுவில் இடம்பெற்றிருந்த ஜெயலட்சுமி (பாடகி), சி.கே. கிருஷ்ணகுட்டி (மத்தளம்), எம்.கோதண்டராம் (மிருதங்கம்), பி.எஸ். மாணிக்கம் (ஆர்மோனியம்) ஆகியோரும்பலியானார்கள்.
இதே விமானத்தில் பயணம் செய்த தமிழக சட்டசபை முன்னாள் உறுப்பினரும், காமராஜர் தலைமையிலான பழைய காங்கிரஸ் கட்சித் தலைவருமான பொன்னப்ப நாடாரும் (வயது 53) பலியானார்.
இவர், 1971 தேர்தலில் கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு தொகுதியில் இருந்து தமிழக சட்டசபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர். ராணி சந்திராவின் உடலும், அவருடைய தாயார், 3 தங்கைகள் உடல்களும் சென்னைக்கு விமானத்தில் கொண்டுவரப்பட்டன. உடல்களைப் பார்த்து ராணி சந்திராவின் தந்தை சந்திரன், சகோதரர் ஜாஜி, மூத்த சகோதரி ஆயிஷா மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர்.
திரை உலகினர் திரளாக வந்திருந்து இறுதி அஞ்சலி செலுத்தினர். உடல்கள் நுங்கம்பாக்கம் மயானத்தில் தகனம் செய்யப்பட்டன.
இதற்கிடையே ‘பத்ரகாளி’ படத்தை முடிப்பது எப்படி என்று டைரக்டர் திருலோகசந்தர் தீவிரமாக ஆலோசித்தார். கதையை மாற்ற முடியாது. ராணி சந்திரா சம்பந்தப்பட்ட ‘கிளைமாக்ஸ்’ காட்சியை படமாக்கியே தீர வேண்டும். இந்த இக்கட்டான நிலையில் ராணி சந்திரா மாதிரி தோற்றமுள்ள துணை நடிகை யாராவது கிடைப்பாளா என்று அலசிப் பார்த்தார்.
இறுதியில், ஏறக்குறைய ராணி சந்திரா போலவே தோற்றம் உள்ள புஷ்பா என்ற நடிகை கிடைத்தார். அவரை வைத்து இறுதிக் காட்சிகளைப் படமாக்கினார் திருலோகசந்தர். டைரக்டர், ஒளிப்பதிவாளர் ஆகியோரின் திறமையால் அக்காட்சிகளில் ராணி சந்திராவுக்கு பதிலாக வேறொரு நடிகை நடித்திருக்கிறார் என்று யாரும் கண்டுபிடிக்க முடியவில்லை.
படம் 10.12.1976 அன்று ரிலீஸ் ஆயிற்று. பொதுவாக, படம் வெளியாவதற்கு முன் அதன் முக்கிய நட்சத்திரம் இறந்து போனால் அந்தப் படம் சரியாக ஓடாது. இதற்கு முன் உதராணங்கள் பல உண்டு.
ஆனால் ‘பத்ரகாளி’ படம் பிரமாதமாக ஓடியது. அதில் அசல் பிராமணப் பெண்ணாகவே மாறி, ‘வாங்கோண்ணா....’ என்று சிவகுமாருடன் ஆடிப்பாடிய ராணி சந்திராவைப் பார்த்தவர்கள், ‘இவ்வளவு அழகான திறமையான நடிகைக்கா இத்தகைய சோக முடிவு’ என்று கண்கலங்கினர்.


போதையில் மிதந்த மேதையின் உள்ளத்தில் உதித்த பாடல்கள்

இன்றும் எம் உதடுகள் முணுமுணுக்கும்\



இறைவனின் தன்மைகளையும், மானிட இயல்புகளையும் வார்த்தைகளால் வடித்த கவிஞர் தனது பாடல் வரிகளுக்கு கருக்களைத் தேடிக் கொண்ட விதங்கள் கூட அற்புதமானதே. உதாரணத்துக்காக, கவிஞரது முதல் மனைவி பொன்னழகி அம்மையாரின் இயல்புகளை சிந்தித்துக் கொண்டிருந்த கண்ணதாசனின் உள்ளத்தில் உதித்த எண்ணத்தின் அடிகள் தான்.
உண்ணும் அழகைப்
பார்த்திருப்பாயே
உறங்க வைத்தே
விழித்திருப்பாயே
கண்ணை இமை போல்
காத்திருப்பாயே
காதல் கொடியே கண் துயில்வாயே
என்ற அடிகள் இவை. பாலும் பழமும் படத்தில் அமரர் சிவாஜிகணேசனின் நடிப்பாற்றலால் பெருமைபெற்று இன்றும் இதழ்களில் நடமாடிக் கொண்டிருக்கின்றன.
இதேபோல் ஒரு சமயம் இவர் பகவத் கீதைபடித்ததுக் கொண்டிருந்த போது இதயத்தைக் கவர்ந்த ஒரு தத்துவம், காலங்களில் அவள் வசந்தம் கலைகளிலே அவள் ஓவியம் ஆனது.
இன்னுமொரு சமயம் எழும்பூர் நீதிமன்றத்தில் அமர்ந்திருந்த வேளை கண்ட காட்சி ‘சட்டி சுட்டதடா கைவிட்டதடா’ ஆனது. பாவமன்னிப்பு படத்தில் ஒருகாட்சி, கதாநாயகன் அனாதையாகி அழவும் முடியாமல் சிரிக்கவும் முடியாமல் மனம் குலைந்த நிலை இதற்கு ஏற்றாற் போல் பாடல் ஒன்றினை எழுத வேண்டும் சிந்தித்துக் கொண்டிருந்த போது ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. கவிஞரின் கம்பெனிக்கு கடன் வசூலிக்க ஆள் வந்திருக்கிறார் என்ற செய்தி அது கவிஞரோ இருதலைக் கொள்ளி எறும்பானார். உடனே எழுதுகோல் காகிதத்தில் தள்ளாடியது.
சிறிது நேரத்தில் சிந்தனை வரிகள் அங்கே கொட்டிக்கிடந்தன. ‘சிலர் சிரிப்பார் சிலர் அழுவார். நான் சிரித்துக்கொண்டே அழுகின்றேன்’ எத்தனை அருமையான தத்துவம்.
கவிஞர் கண்ணதாசன் சாதாரணமாக இருப்பதை விடவும் போதையில் இருக்கும் நேரம்தான் அதிகம். அந்தமேதை இவ்வளவு விரைவில் எம்மிடம் விடைபெறவும் இதுவே காரணமாகியது.
இந்திய சுதந்திர வெள்ளி விழா தொடர்பான கவிரயரங்கம் கவிஞரின் தலைமையில் இடம்பெற்றுக் கொண்டிருந்த வேளை அரங்கிலே பாடிய ஒரு கவிஞர் ‘தலைமையில் வீற்றிருக்கும் கவிஞர் குடிப்பதை இனி நிறுத்த வேண்டும்’ என்ற தோரணையில் வார்த்தைகளையும் சேர்த்துப் பாடினார். அதற்கு கவிதையிலேயே பதிலளித்த கவிஞர் கண்ணதாசன்,
நாளை முதல்
குடிக்க மாட்டேன்
சத்தியமடி தங்கம்
ராத்திரிக்கு தூங்க வேணும்
ஊத்திக்கிறேன் கொஞ்சம்’ என்றார்.
இதுவே ஒரு படத்தின் பாடலாகவும் பிற்காலத்தில் ஒலித்தது.
ஒரு சமயம் அறிஞர் அண்ணா தனது கழக நண்பரிடம் எங்கிருந்து வருகிaர்கள் என்று கேட்டார் அப்போது அவர் நான் கருவூரிலிருந்து வருகிறேன் என்றார். அதைக் கேட்ட அண்ணா எல்லோருமே கருவூரிலிருந்து சாவூருக்குப் போகிறவர்கள்தான் என்றார். அருகிலிருந்த கண்ணதாசன் இந்த வார்த்தைகளை மிகவும் ரசித்தார். இந்த ரசனையின் பிரதிபலிப்பான எழுந்தது காட்டு ரோஜா மூலம் உள்ளங்களைத் தொட்ட எந்த ஊர் என்றவனே என்ற பாடல்.
இப் பாடலிலே கருவூர் உடலூர், உறவூர், காளையூர், கன்னியூர், வேலூர், விழியூர், கையூர், காலூர், மேட்டூர், பள்ளத்தூர் என்று 18 ஊர்களைப் பற்றிப் பாடி மனித வாழ்க்கையின் தத்துவத்தை அப்பாடல் மூலம் ஊரவிட்டுள்ளார்.
கவிஞர் கண்ணதாசம் பற்றி அவரது புலமை பற்றி அவரது தத்துவம் பற்றி சொல்வதென்றால் விடிய விடிய யுகம்யுகமாக பேசலாம். அத்தனை பெருமை வாய்ந்தது. அவரது கவித்துவம்.அவர் வசன கர்த்தாவாக, கதாசிரியராக, படத் தயாரிப்பாளராக, நடிகராக சினிமா உலகிலே பல பரிமாணங்களில் சஞ்சரித்த போதிலும் பாடலாசிரியர் என்ற பாத்திரம் தான் மக்கள் உள்ளங்களில் அவரை நிரந்தரமாக்கியது
கன்னியின் காதலி படத்தில் ‘கலங்காதிரு மனமே’ என்று தொடங்கிய அவரது சினிமா வரிகள் மூன்றாம் பிறை படத்தில் கண்ணே கலைமானே’ என்ற வரிகளோடு அமரத்துவம் பெற்றன. அதற்கிடையில் எத்தனை தத்துவங்களை எத்தனை ரசனைகளைப் பிழிந்துமானிடக் குருதியில் கலக்கச் செய்துள்ளார் என்பதை சிந்திக்கவே காலம் போதாது.
அவர் இயற்றிய பாடல்களில் மிகவும் குறுகிய நேரத்தில் அதாவது பத்தேபத்து நிமிடங்களுக்குள் எழுதி முடித்த பாடல் ‘முத்தான முத்தல்லவோ’ என்ற பாடலாகும்.
நீண்ட காலம் அதாவது பல நாள் சிந்தனையை செலவிட வேண்டி ஏற்பட்ட பாடல் ‘நெஞ்சம் மறக்கவில்லை அது நினைவை இழக்கவில்லை’ என்ற பாடலாம்.
கவிஞர் பாடல் வரிகளைக் கூறும் போது வேட்டியின் ஒரு நுனியைக் கையில் ஏந்தியவாறு அறைக்குள் நடந்த வண்ணமே சொல்லுவாராம். பாடல் வரிகளைக் கூறும் போது அவர் செருப்பு அணிய மாட்டாராம். மதம், தத்துவம், காதல், காமம், அரசியல், சோதிடம் போன்ற துறைகளில் பெருமளவு நூல்களை எழுதியுள்ள இவரிடம், ஒருமுறை நீங்கள் எழுதிய நூல்களைப் படிக்கும் வாசகர்களுக்கு நீங்கள் கூறும் அறிவுரை என்ன? என்று கேட்கப்பட்ட போது அவர் ‘நூலைப் பின்பற்றுங்கள் ஆனால் நூலாசிரியரைப் பின் பற்றாதீர்கள்’ என்று பதில் சொன்னாராம்.
தென் இந்தியாவின் சிறுகூடல்பட்டி ஊரிலே பிறந்த இவர் அமெரிக்க நாட்டின் சிக்காக்கோ நகருக்கு வைத்திய சிகிச்சை பெறச் சென்றிருந்த போது அங்கு வைத்தே உயிர் நீத்தார்.
அவர் சிகிச்சைபெறச் சென்றிருந்த சமயத்தில் அங்கு வாழும் இந்தியக் குழந்தைகளைச் சந்தித்த போது அவருக்கு பெரும் ஆதங்கம் ஏற்பட்டதாம். அதற்குக் காரணம் தமிழ்க் குழந்தைகள் தமிழ் மொழியில் பேசாமையாம் இதைக் கண்டு வேதனையில் எழுதிய கவிதை வரிகளே அவரது வாழ்க்கையில் எழுதிய இறுதி நான்கு வரிகள்.
மனதனில் ஒன்றுபட்டு சேர்ந்திடுவீர் - இங்கு
மழலைகள் தமிழ் பேசச் செய்திடுவீர்
தமக்கெனக் கொண்டு வந்ததேதுமில்லை -பெற்ற
தமிழையும் விட்டு விட்டால் வாழ்க்கையில்லை
என்பது தான் அந்த வரிகள் தமிழ் மீது கவிஞர் கொண்டிருந்த பற்றுக்கு இதுவும் ஒரு சான்று.
தொட்டில் முதல் சுடுகாடு வரையிலான தத்துவங்களைப் பொதித்த - வாழ்க்கையின் வளைவுகளை நெளிவுகளை கழிவுகளை வார்த்தைகளில் வடித்த காலத்தால் அழியாக கவிஞரை இனி என்று காண்போம்.






Thursday, August 2, 2012

 

இன்றும் எம் உதடுகள் முணுமுணுக்கும்

போதையில் மிதந்த மேதையின் உள்ளத்தில் உதித்த பாடல்கள்

பூஜ்ஜியத்துக்குள் கவி ராஜ்யத்தை ஆண்டு இணையற்ற கவிஞர் என்ற தனித்துவ கொடியை ஏந்தி காலத்தால் அழியாத தத்துவ ஞானியாக வாழ்ந்து நினைவில் நீங்காது நிலைத்து நிற்கும் கவிஞர் கோ. கண்ணதாசனுக்கு நிகராக இனித்தான் எவரும் பிறக்க வேண்டும் என்பது அவர் பால் ஈர்க்கப்பட்டோரின் முடிவாகும்.
‘வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும் வாசல் தோறும் வேதனை இருக்கும்’ என்று தத்துவத்தை உணர்த்திய கவிஞர் ‘நான் பேச நினைப்பதெல்லாம் நீ பேச வேண்டும் நீ பேச நினைப்பதெல்லாம் நான் பேச வேண்டும்’ என்று காதலின் மகிமையையும் கவியிலே வடித்தார்.
பின்னர் ‘சட்டி சுட்டதடா கை விட்டதடா புத்தி கெட்டதடா நெஞ்சைத் தொட்டதடா என்று துக்கத்தையும் பாடலில் வரிந்த அதே கவிஞர் ‘வாழ நினைத்தால் வாழலாம் வழியா இல்லை பூமியில்’ என்று உள்ளங்களிலேயே நம்பிக்கையையும் ஊட்டி வாழ்க்கையின் மொத்தத்தையே வார்த்தையில் வரைந்தவர் தான் முத்தையாவாகப் பிறந்து கண்ணதாசனாகக் கண்மூடிய இந்தக் கவிஞர்.
இற்றைக்கு எண்பத்து மூன்று ஆண்டுகளுக்கு முன் சாத்தப்ப செட்டியாருக்கும் விசாலாட்சி அம்மையாருக்கும் எட்டாவது குழந்தையாகப் பிறந்ததாலோ என்னவோ எட்டாம் வகுப்போடு தன் பாடசாலைக் கல்விக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டிய நிலை இந்த முத்தையாவுக்கு ஏற்பட்டது.
ஆம் இதுதான் அவரது இயற்பெயர். ஆனால் கண்ணதாசனுக்கும் தமக்கு இடையிலே பல்வேறு வகைகளில் ஒற்றுமை இருப்பதாகக் கருதிய இவர் தன்பெயரைக் கண்ணதாசன் என மாற்றிக்கொண்டார்.
பள்ளிப்படிப்பை இடைநடுவில் நிறுத்திக் கொண்டாலும் கல்வி கேள்விகளில் ஞானம் மிக்கவராகி ஞாலம் புகழ் விளங்கினார். ‘திருமகள்’ எனும் பத்திரிகையில் அவரால் எழுதப்பட்ட முதல் கதையும் முதல் கவிதையும் வெளியானதை அடுத்து கவிமங்கையின் காலனானார்.
1949ல் ‘கன்னியின் காதலி’ என்ற படத்துக்குத் தனது கன்னிப் பாடலை எழுதியதன் மூலம் சினிமாப் பாடலாசிரியராக அறிமுகமானார். நவரசங்களையும் அதற்கு அப்பாலும் தொட்டுபாடல் எழுதி தனது காவியங்களால் மானிட உள்ளங்களில் மதிப்போடு கட்டுண்டார்.
அவரது வரிகள் இதயங்களை இதமாகக் கவர்ந்தன. கோவை செழியன் ‘கவிஞர்’ என்ற பட்டத்தை வழங்கி இவரைக் கெளரவித்தார். ஜமால் முஹம்மது கல்லூரியின் தமிழ்த்துறைத் தலைவர் நைனார் முஹம்மது ‘கவிசரசு’ என்ற பட்டத்தை வழங்கி மேலும் ஒருபடி உயர்த்திவிட்டார்.
தேசிய ஒற்றுமையை வளர்க்கும் பாடல்களை எழுதியமைக்காக 1970ல் இவர் தேசிய விருது வழங்கிக் கெளரவிக்கப்பட்டார். சிறந்த சினிமா கவிஞருக்கான விருது வழங்கி 1971ல்தமிழக அரசு இவரைக் கெளரவித்தது. 1978ல் தமிழக அரசு ஆஸ்தான கவிஞராக இவரை நியமித்து மதிப்பளித்தது. கவிஞர் கண்ணதாசன் தனது வாழ்நாளில் 4000 கவிதைகளையும் சுமார் 5000 சினிமா பாடல்களையும் எழுதியுள்ளார். 21 நாவல்கள் உட்பட 109 நூல்களை இவர் எழுதியுள்ளார். இவரால் எழுதப்பட்ட ‘சேரமான் காதலி’ எனும் நாவல் சாகித்திய எக்கடமி பரிசு பெற்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கதாகும்.
கவிஞர் கண்ணதாசனின் பாடல்கள் கவித்துவம் மட்டுமல்ல தெய்வீக மணம் கமழுவனவுமாகும். இறைவன் வாழும் இடங்கள் எவை என்பதையும் கூட மனக் கண்களால் கண்டு உணர்த்தியவர் அவர்.
பூஜ்யத்துக்குள்ளே ஒரு ராஜ்ஜியத்தை ஆண்டு கொண்டு புரியாமலே இருப்பான் ஒருவன், அவனைப் புரிந்து கொண்டால் அவன் தான் இறைவன் தென்னை இள நீருக்குள்ளே தேங்கி உள்ள ஓட்டுக்குள்ளே தேங்காயைப் போலிருப்பான் ஒருவன் அவனைத் தெரிந்துகொண்டால் அவன்தான் இறைவன் கோழிக்குள் முட்டை வைத்து முட்டைக்குள் கோழி வைத்து வாழைக்கும் கன்று வைத்தான் ஒருவன் அந்த ஏளையின் பேர் உலகில் இறைவன். உழைக்கும் கைகள் எங்கே உண்மை இறைவன் அங்கே கருணை பொங்கும் உள்ளம் அது.
கடவுள் வாழும் இல்லம் என்று இறை தத்துவங்களை எல்லாம் எளிய மொழியில் புரிய வைத்தவர் கவிஞர் கண்ணதாசன்.
அதே கவிஞர் தனது வரிகளில் இறைவன் தன் படைப்போடு புரியும் திருவிளையாடல்களைக் கண்டு வெதும்பி இப்படியும் சொல்கிறார்.

அழகைப் படைத்தவன் இறைவன் என்றால்
அவன் அழிவை ஏன் படைத்தான்.
மொழி¨ய் படைத்தவன் இறைவனென்றால்
அவன் ஊமையை ஏன் படைத்தான்.
விழியைப் படைத்தவன் இறைவனென்றால்
அவன் குருடரை ஏன் படைத்தான்.

ஒளியைப் படைத்தவன் இறைவனென்றால் அவன் இருளை ஏன் படைத்தான் என்றெல்லாம் கேள்வி அலைகளால் உள்ளங்களை சிந்திக்கத் தூண்டுகிறார் அவர்.


 

எம்.ஜP.ஆரின் மூன்றாவது மனைவி ஜhனகியின் கல்யாண கதை



tp.என். ஜானகியின் சொந்த ஊர் கேரளா பாலக்காட்டுக்கு அடுத்து உள்ள வைக்கம் என்ற ஊர். பிரபல கர்நாடக பாடல் ஆசிரியர் பாபநாசம் அவருடைய தம்பி ராஜகோபால் ஐயருடைய மகள்தான் வி.என். ஜானகி. வைக்கத்தில் பிறந்தவராக இருந்தாலும் படித்தது, நடனம் கற்றுக்கொண்டது எல்லாம் சென்னைதான்.
இவருடன் பிறந்தது ஒரு ஆண். அவர் பெயர் நாராயணன். இவர்கள் சென்னை மைலாப்பூர் கேசவப் பெருமாள் கோயிலுக்கு அருகில் வசித்தார்கள்.
இவர்கள் பக்கா பிராமின் வி. என். ஜானகி பிரபல டைரக்டர் கே. சுப்பிரமணி, நடிகை எஸ்.டி. சுப்புலட்சுமி நடத்தி வந்த நாடக குழுவில் நடித்து வந்தார். பிறகு டைரக்டர் சுப்பிரமணி வழியாக சினிமாவில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.
இவர் நடித்த முதல் படம் ‘ஆயிரம் தலை வாங்கிய அபூர்வ சிந்தாமணி’ இந்த படத்தில் கதாநாயகியாக ரொம்ப பிரமாதமாக நடித்துள்ளார். அந்தப் படத்தில் இவர் ஆயிரம் தலைகளை வெட்டி குவிக்கும் காட்சி மயிர் சிலிர்க்க வைக்கும் அந்தப் படம். எம்.ஜி. ஆருடன் கதாநாயகியாக நடிக்க மேலும் சில படங்களில் நடிக்க வாய்ப்புக் கிடைத்தது.
முதல் படம் மோகினி 1948 இல் வெளிவந்தது. அதை அடுத்து மருத நாட்டு இளவரசி நாம் போன்ற படங்கள் இவர்கள் நடித்த படங்கள். இந்த கால கட்டத்தில் இல்லற வாழ்க்கையே நமக்கு இனிமேல் இல்லை, தான் உண்டு தன் தொழில் உண்டு உழைப்பே உயர்வு என்ற ஏணியில் ஏறிக்கொண்டு இருக்கும் போது ஒரு பெரிய சறுக்கல் ஏற்பட்டது.
அதாவது எம்.ஜி. ஆருக்கு மூன்றாவது கல்யாணம் நடக்கக் கூடிய வாய்ப்பு ஏற்பட்டது. மக்கள் திலகம் எம்.ஜி. ஆருடன் மூன்று படங்களில் ஜானகி நடித்து உள்ளார்.
இதற்கு இடையில் எம்.ஜி. மீது அன்பு கொண்டார். இதை அறிந்த எம்.ஜி.ஆர். அன்புக்கு அடிமையானார். ஆனால் காதல் என்பது சினிமாவில் மட்டும் (நடிப்பில்) என்னுடைய சொந்த வாழ்க்கையில் இல்லை.
என் தாய் உடனே எனக்கு கேரளாவில் பெண் பார்த்து திருமணம் செய்து வைத்தார்கள். நான் அந்தப் பெண்ணுடன் ஒரு வருடம் தான் வாழ்ந்தேன். பிறகு ஒரு வருடம் கழித்து எனக்கு கட்டாயமாக இரண்டாவது கல்யாணம் நடந்தது. அந்தப் பெண்ணோடு நான் ஒரு வருடம் தான் நல்ல சந்தோஷமாக வாழ முடிந்தது.
பிறகு அந்தப் பெண்ணுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. அது சரி ஆகாமல் தொடர்ந்து உடல் நலக்குறைவாகவே இருக்குது. இந்த மாதிரியான சூழ்நிலையில் உள்ள என்னிடம் என்னை நீங்கள் விரும்புவது எப்படி சரியாகும். தயவுசெய்து இது வேண்டாம் நாம் இருவரும் நண்பர்களாக இருப்போம்.
தொடர்ந்து படங்களில் நடிப்போம் என்று எம்.ஜி.ஆர். மிக விளக்கமாக தன்னுடைய குடும்ப நிலைகளை விபரமாக சொன்னார். பெண் என்றால் பேயின் மனம் இரங்கும் என்பது போல் எல்லாவற்றையும் யோசித்த எம்.ஜி.ஆர். இந்த விஷயத்தில் மிக கவனமாக செயல்பட்டார். ஒரு பக்கம் தன் தாய், மறுபக்கம் தன் மனைவி, மேலும் மனைவி உயிருடன் இருக்கும் போதே வேறு ஒரு பெண்ணை காதலிப்பதோ, கல்யாணம் செய்து கொள்வதோ சட்டப்படி குற்றம் என்பதை எம்.ஜி.ஆர். நன்கு அறிவார். அவர் நாடகம், சினிமா, குடும்ப வாழ்க்கையில் மிகவும் அனுபவம் பெற்றவர்.
எதையும் யோசிக்காமல் செய்யமாட்டார். அப்படிப்பட்ட இவருக்கு வி.என். ஜானகி விஷயத்தில் சிக்கல் ஏற்பட்டு விட்டது. வி.என். ஜானகி அம்மாவிடமும், சதானந்தவதியிடமும் பேசுவது, சாட்சிகாரன் காலில் விழுவதை விட சண்டைக்காரன் காலிலேயே விழுந்து விடுவோமே என்று மிகவும் மனதை தைரியப்படுத்தி கொண்டு ஒரு நாள் படப்பிடிப்பு முடிந்து வீட்டுக்கு வந்தவுடன் முதலில் தன் மனைவியை பார்த்து விட்டுத்தான் மற்ற வேலைகளை செய்வது வழக்கமாக நடக்கிற விஷயம்.
இப்போ தன் மனைவியிடமே நேரடியாக இதைப்பற்றி பேசி விடலாம் என்ற என்னத்துடன் தன் மனைவியிடம் வி.என். ஜானகியைப் பற்றி முழு விவரத்தையும் சுருக்கமாக சொல்லிவிட்டு பிறகு காதல் கல்யாண விஷயத்தையும் கடகடவென்று சொல்லிவிட்டு தன் மனைவியின் கையைப் பிடித்து கொண்டார். இந்த விஷயத்தில் மனைவியின் சம்மதம் இருந்தால் போதும். பிறகு மற்றவர்களுடைய சம்மதத்தை பெற்று விடலாம். தன் கணவர் தன்னிடம் பேசியதை கேட்டுக்கொண்டு இருந்த சதானந்தவதியின் கண்களில் கண்ணீர் வடிந்தது.
இதைப் பார்த்த எம்.ஜி.ஆர். உடனே கண்ணீரை துடைத்துவிட்டு கொண்டே தன் மனைவியிடம் உணக்கு இது பிடிக்காவிட்டால் விட்டு விடு அழாதே உன்னுடைய சம்மதம் இல்லாமல் இனி மேல் அந்த பெண்ணிடம் பேசக்கூட மாட்டேன். கவலைப்படாதே இந்த விஷயத்தை அம்மாவிடம் கூட நான் சொல்லவில்லை நீ நல்லா யோசித்து உன் முடிவை மெதுவாக சொல். அவசரம் இல்லை என்று சொல்லிவிட்டு அவருடைய அறைக்குள் போய்விட்டார்.
இவர் சென்ற பிறகு தன்னுடைய கணவருடைய நிலைமையைப் பற்றியும் அவருடைய வேண்டுகோளைப் பற்றியும் நினைத்து இந்த விஷயத்தை அடுத்த நாள் தன் மாமியார் இடமும் எம்.ஜி.யிடமும் இந்த விஷயத்தைப் பற்றி பேசினார். இந்த செய்தியைக் கேட்ட இருவரும் அதிர்ச்சி அடைந்து போனார்கள்.
பிறகு சதானந்தவதி சத்தியதாயிடமும் எம்.ஜி. யிடமும் தன் கணவர் விருப்பப்படி அந்தப் பெண்ணை திருமணம் செய்து கொள்ளட்டும். எனக்கு என் கணவருடைய மன நலம் தான் முக்கியம் அவருடைய மனம் நோகக் கூடாது. என்னுடைய உடல் இனிமேல் நலம் பெற்று நான் எழுந்து மீண்டும் என்னுடைய பொறுப்புகளை சேவைகளை அவருக்கு செய்ய முடியும் என்ற நம்பிக்கை இல்லை.
எனவே தயவு செய்து அவரிடம் எந்தவித மறுப்பும் சொல்லாமல் கேள்விகள் கேட்காமல் நீங்களே உங்களுடைய சம்மதத்தை சொல்லுங்கள். அவர் மனம் புண்படாமல் நல்ல சந்தோஷமாக இருப்பது தான் நமக்கு முக்கியம் என்று சொல்லிக்கொண்டு சத்தியதாயுடைய கையைப் பிடித்து கண்ணீர் விட்டார்.
இந்து அகாரதிப்படி கணவன்தான் மனைவியிடம் நான் இரண்டாவது கல்யாணம் செய்து கொள்ளப்போகிறேன் என்ற சம்மதம் கேட்டதும் இல்லை. மனைவி கணவருக்கு சரி செய்து கொள்ளுங்கள் என்ற சொன்னதில்லை. எந்த சூழ்நிலையிலும் தன் கணவர் எவ்வளவு மோசமானவராக இருந்தாலும் வைப்பாட்டியோ இரண்டாவது பெண்டாட்டியோ வைத்து கொள்ள நல்ல மனத்துடன் சம்மதிக்க மாட்டார்கள்.
ஆனால் சதானந்தவதி தன் கணவர் தன்னிடம் நான் திருமணம் செய்துகொள்ள அனுமதி கேட்டதை நினைத்து பூரிப்பு அடைந்து போனார். தன் மனைவி ஒரு படுக்கை நோயாளி என்று நினைக்காமல் பாசத்தோடும் பற்றோடும் கேட்டாரே இவர் வேறு திருமணம் செய்து கொண்ட பிறகு நம் மீது வைத்துள்ள அன்பும், பாசமும், பற்றும் போய்விடுமோ என்று நினைத்து எதுவானாலும் சரி அவர் நல்லா இருந்தால் போதும்.
நாம் சாகும் வரை அவருடைய முகத்தை பார்க்கும் பாக்கியம் கிடைத்தால் போதும். இந்த விஷயத்தில் சத்தியத்தாயும் எம்.ஜி.சியும் எந்தவித மறுப்பும் சொல்லவில்லை. அப்படி இப்படினு எப்படியோ 1957 இல் என்.ஜி.ஆரும் வி.என். ஜனாகியும்
ம் அமைத்தார். திருமணம் செய்து கொண்ட உடனே வி.என். ஜானகியை சதானந்தவதிக்கு அறிமுகப்படுத்தினார். உடனே வி.என். ஜானகி, சதானந்தவதியுடைய காலை தொட்டு வணங்கிவிட்டு அக்கா நான் உங்களுடைய உடன் பிறவா தங்கை என்னை உங்கள் தங்கை போல் நினைத்துக் கொள்ளுங்கள். எனக்கு இப்போ என் உடன் பிறந்த தம்பியைத் தவிர வேறு யாரும் இல்லை. இதை கேட்ட சதானந்தவதி, வி.என். ஜானகியுடைய கையைப் பிடித்துக் கொண்டு நான் இருக்கிறேன் கவலைப்படாதே என்றார்.



 

அப்படி போடு அருவாள இது ஒலக மகா நடிப்புடா



மகத்தா... அது யாருன்னே தெரியாதுங்க. மனோஜ் மட்டும்தான் என் பிரண்ட். அவர் குடும்பத்துல நானும் ஒருத்தி. நான் மோகன்பாபு மகள் மாதிரி என்று மீண்டும் சத்தியம் அடிக்காத குறையாக சொல்ல ஆரம்பித்துள்ளார் டாப்சி.
மகத், மனோஜ் இருவரும் டாப்சிக்காக போட்ட ஃபைட், சினிமா ஸ்ட்ன்டை விட பெரிதாகி, கோலிவுட் டோலிவுட் என எங்கும் சிரிப்பாய் சிரித்துவிட்டது. இந்த சண்டைக்கு பின்னணி டாப்சி யாருக்கு சொந்தம் என்ற சர்ச்சைதான் என்பதும் தெரிந்த விஷயமே.
இந்த நிலையில், சம்பந்தப்பட்ட டாப்சி, இதுவரை மகத் பற்றி எதுவும் சொல்லாமல் இருந்தார்.
இப்போது அந்தக் குறை எதற்கு என்ற நினைப்பில் இன்னொரு விளக்கம் அளித்துள்ளார்.
‘மகத் யாருன்னே எனக்குத் தெரியாது. சம்பந்தமே இல்லாம இப்படி என்னை ரெண்டு பேரோட சேர்த்துப் பேசுறது ரொம்ப வருத்தமா இருக்கு.
மகத் என்னை லவ் பண்ணதா சொன்னதுல உண்மை இல்லை. அவரை நான் ஒரு முறைகூட சந்திச்சதே இல்லை. யாருன்னே தெரியாத ஒருத்தர் எப்படி எனக்காக சண்டை போட்டார்னு சொல்aங்க? இன்னொன்னு அந்த சண்டை நடந்ததா சொல்ற நாள்ல நான் கர்னூல்ல இருந்தேன்’ என்கிறார் டாப்சி.
அப்படின்னா மகத்தும் டாப்சியும் வாரத்துக்கு இரு முறை எயார்போர்ட்டில் சந்தித்தது, காரில் ஒன்றாக சுற்றிய படம் வெளியானதெல்லாம் கிராபிக்ஸா இருக்குமோ?

உடலை ஸ்லிம்மாக்கும்



ஒரு சந்திப்பில் வெங்காயம், சூழ்நிலை, கனல் ஆகிய படங்களில் நடித்தவர் பவீனா. இவர் திடீரென்று நடிப்புக்கு மூன்று மாதங்கள் முழுக்குப் போடப் போவதாக சொல்கிறார்.
காரணம் கேட்டால், ‘என் உடம்பு பெருத்திருப்பதால், என்னை ‘மொடர்ன் கதாபாத்திரத்திற்கு ஒப்பந்தம் செய்ய டைரக்டர்கள் தயாங்குகின்றனர்.
அதனால் உடற்பயிற்சி, உணவு கட்டுப்பாடு மூலம், உடலை ஸ்லிம்மாக்கி வருகிறேன் இன்னும் மூன்று மாதங்களுக்கு பிறகே, புதிய படங்களில் ஒப்பந்தமாவேன்’ எனக் சொல்லும் பவீனா. தன் பெயரை, வினிதா என்று மாற்ற இருப்பதாகவும் கூறுகிறார்.

 

கார்த்தி ஜோடியாக


மங்காத்தா படத்தின் பிரமாண்ட வெற்றிக்குப் பிறகு டைரக்டர் வெங்கட்பிரபு இயக்கும் புதிய படமான பிரியாணியில் காக்டெயில் நாயகி டயானா பென்டி நடிக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
நடிகர் கார்த்தி நடிக்கும் இந்தப் படத்தில் அவருக்கு ஜோடியாக ஒஸ்தி நாயகி ரிச்சா நடிக்கிறார். சஸ்பென்ஸ் மற்றும் த்ரில்லர் கலந்த கலவையாக படம் உருவாக இருக்கிறது.
கதைப்படி படத்தில் இரண்டு நாயகிகள் என்பதால் ரிச்சாவைத் தொடர்ந்து மற்றொரு நாயகியாக சமந்தா அல்லது இலியானாவை நடிக்க வைக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. ஆனால் இந்த முயற்சி பலனளிக்கவில்லை.
இந்நிலையில் இரண்டாவது நாயகியாக காக்டெயில் நாயகி டயானா பென்டி நடிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கான முயற்சியில் தயாரிப்பு தரப்பு ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது.