Monday, June 30, 2014

நகைச்சுவையிலும் குணச்சித்திரத்திலும் சாதனை படைத்த நாகேஷ்

நாகேஷ் (செப்டம்பர் 27, 1933 - ஜனவரி 31, 2009) தமிழ்த் திரைப்பட நகைச்சுவை நடிகர். நகைச்சுவையிலும் குணச்சித்திர நடிப்பிலும் பல சாதனைகள் படைத்தவர். 1000 திரைப்படங்களுக்கும் மேல் நடித்த பெருமைக்குரியவர்.
வாழ்க்கைச் சுருக்கம்
நாகேஷ்வரன் என்ற இயற் பெயரைக் கொண்ட நாகேஷ் கன்னடப் பிராமணக் குடும்பத்தில் பிறந்தவர். தமிழ்நாடு, தாராபுரம் பகுதியில் கன்னட மாத்வர்கள் வாழும் கொழிஞ்சிவாடி என்ற ஊரில் பிறந்தார். தந்தை பெயர் கிருஷ்ணாராவ். தாயார் ருக்மணி அம்மாள். தந்தை கர்நாடகாவில் அரிசிக்கரே என்ற ஊரில் தொடருந்து நிலைய அதிபராகத் தொழில் பார்த்தவர். நாகேஷின் முழுப் பெயர் நாகேசுவரன். நாகேஷ் வீட்டில் குண்டப்பா என்றும் நண்பர்களால் குண்டுராவ் என்றும் அழைக்கப்பட்டார்.
தாராபுரத்தில் தனது எஸ். எஸ். எல். சி. படிப்பை முடித்துக் கொண்டு கோவை பி. எஸ். ஜி. கலைக்கல்லூரியில் சேர்ந்து படித்தார். கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்துக் கொண்டிருந்த போது அம்மை நோய் வந்து முகத்தில் தழும்புகள் உண்டாயின.
நாகேஷ் கல்லூரிப் படிப்பு முடிந்ததும் ரயில்வேயில் பணிபுரிந்தார். சிறுவயதில் இருந்தே நடிப்பின் மீது பற்றுக் கொண்ட நாகேஷ் அமெச்சூர் நாடகங்களில் நடித்து வந்தார். மணியன் எழுதிய ‘டாக்டர் நிர்மலா’ நடகத்தில் ‘தை தண்டபாணி’ என்ற பாத்திரத்தில் ‘தை, தை’ என்று நோயாளியாய் மேடையில் குதித்ததால் ‘தை நாகேஷ் என்றும் பின்னர் ஆங்கிலத்தில் ஹிhai என்பதை ‘தாய்’ என்று மாற்றி படித்ததால் இவர் ‘தாய் நாகேஷ் என அழைக்கப்பட்டார்.
1959 ஆம் ஆண்டில் திரைப்படத் துறையில் புகுந்தார். தாமரைக்குளம் என்ற திரைப்படத்தில் முதன் முதலாக நடித்தார். அதன்பின்னர் சில படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்துக் கொண்டிருந்தார். ஸ்ரீதரின் காதலிக்க நேரமில்லை திரைப்படத்தில் முக்கிய நகைச் சுவைப் பாத்திரத் தில் தோன்றினார். இது மிகப்பெரிய வெற்றிப் படமாக அமைந்தது. அவருக்குப் பல படங்களில் ஜோடியாக நடித்தவர் மனோரமா ஆவார்.
கே. பாலசந்தர் கதை, வசனம் எழுதிய சர்வர்சுந்தரம் திரைப்படத்தில் மிகச் சிறப்பாக நடித்து குணச்சித்திர நடிப்பிலும் நாகேஷ் சிறந்து விளங்கினார்.
திருவிளையாடல் படத்தில் தருமி என்ற கதாபாத்திரம், தில்லானா மோகனாம்பாள் படத்தில் வைத்தி என்ற பாத்திரம் பலராலும் பாராட்டப்பட்டது. சிவாஜி கணேசன், எம். ஜி. ஆர். போன்றோருடன் பல படங்களில் நகைச்சுவை கதாபாத்திரத்தில் இவர் நடித்துள்ளார்.
நீர்க்குமிழி என்ற படத்தில் நாகேஷை கதாநாயகனாக நடிக்க வைத்தார் இயக்குனர் கே. பாலச்சந்தர்.
அந்தப் படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றதுடன் சிறந்த நடிப்புத் திறமை கொண்டவர் நாகேஷ் என்பதை ரசிகர்களுக்கு உணர்த்தியது. தேன்கிண்ணம்.
நவக்கிரகம், எதிர் நீச்சல், நீர்க்குமிழி, யாருக்காக அழுதான், அனுபவி ராஜா அனுபவி போன்ற படங்களில் கதாநாயகனாக நடித்திருக்கிறார்.
கமலஹாசன் தயாரித்த அபூர்வ சகோதரர்கள் படத்தில் கொடும் வில்லனாகவும் அவர் தோன்றினார். அதற்குப் பின் பல கமலஹாசன் படங்களில் நாகேஷ் நடித்தார்.
மைக்கேல் மதன காமராஜன், மகளிர் மட்டும், அவ்வை சண்முகி, பஞ்சதந்திரம் போன்றவை சில படங்கள். நாகேஷ் நடித்த கடைசிப் படம் தசாவதாரம் ஆகும். இதுவும் கமலஹாசன் படமாகும்.

தாய்க்குக் கோயில் கட்டியவர்

இராமாபுரம் தோட்டத்தில் தன் தாய்க்கு கோயில் கட்டினார் மக்கள் திலகம். வெளியே போகும் போது தினம்தோறும் தன் தாயை வணங்கிவிட்டுத்தான் செல்வார்.
இதேபோல் ராயப்பேட்டையில் தன் தாய் வீட்டிலும் ஒரு பெரிய தாயின் படம். “சத்யா ஸ்டூடியோவிலும் அவருடைய அலுவலகத்திலும் தாயின் படம். மாம்பலம் அலுவலகத்திலும் தாயின் படம். தாயே தெய்வம் என்று தினந்தோறும் பூஜித்து வந்தார் மக்கள் திலகம். மக்கள் சேவையே என் சேவை, நான் முதல் மந்திரியாக இருந்தாலும் மக்கள் சேவகன். மக்கள் வாழ்வே என் வாழ்வு. இது எம்.ஜி.ஆர். முதல் அமைச்சராக ஆன பின் அவர் சொன்ன வார்த்தைகளும் எண்ணமும் இதுதான்.
தன் தாய் இறந்த பின் தன் அண்ணன் சக்கரபாணியை தாயாக நினைத்து எந்த விஷயமாக இருந்தாலும் கலந்து பேசாமல் செய்ய மாட்டார். இதில் அவர்கள் இருவரும் அண்ணன் தம்பியும் சொந்தத்தில் ஆரம்பித்த நாடக கம்பெனிக்கும் சினிமா கம்பெளிக்கும், முழு பொறுப்பையும் தன் அண்ணனிடமே கொடுத்து இருந்தார்.
அவருக்கு துணையாக இருந்து எல்லா பொறுப்புகளையும் கணக்கு வழக்குகளையும் கவனிக்கும்படி ஆர். எம். வீரப்பனை நியமித்தார். தான் முதல் அமைச்சராக ஆன பின்னும் கூட தன் அண்ணனுக்கு கொடுக்க வேண்டிய மரியாதையை கொடுத்துக்கொண்டே இருந்தார்.
இதேபோல் சக்கரபாணியும் தன் உடன் பிறந்த தம்பி மனம் நோகாமல் நடந்துகொள்வார். தம்பி தன்னிடம் பேசும்போதெல்லாம் மிக கவனமாக தம்பிக்கு ஏற்றமாதிரி பதில்களை சொல்வார். சக்கரபாணி தன்னுடன் பிறந்த மூத்தவர்கள் சகோதரிகளையும், சகோதரனையும் தன் தந்தையுடைய புகழ்களையும் தன் தாய் அவர்களுக்கு பிறகு தன்னையும் தன் உடன் பிறந்த தம்பியையும், வளர்க்க எவ்வளவு சிரமப்பட்டார் என்பதை நினைக்காத நேரமும் இல்லை. இதைப்பற்றி தனக்கு வேண்டிய முக்கியஸ்தர்களிடம் பேசாமல் இருப்பதும் இல்லை.
தன்னையும் மனைவி மக்களையும் எந்தக் குறைகளும் இல்லாமல் எனது தம்பி ராமச்சந்திரன் பார்த்துக்கொள்கிறான் என்ற பெருமையை வெளியே பேசாமலும் இருப்பதும் இல்லை. தன் தம்பி ராமச்சந்திரன் சிறுபிள்ளையாக இருக்கும் போது ரொம்பவும் சுறுசுறுப்பாகவும் சன்டித்தனமாகவும் இருப்பான்.
அவன் செய்யும் குறும்புகளை அம்மா ஒருவரால்தான் அவனை அடக்க முடியும். அப்படிப்பட்ட என் தம்பியுடன் நாடகம், சினிமா, அரசியல், இப்படி அவனுடன் நான் சேர்ந்து வாழ்ந்த காலங்களை நினைத்து ஆச்சரியப் படுவேன். அவன் பிரபலமாக வாழ்கின்ற இந்த காலத்தில் பெரிய சாது போலவும், ஞானிகள் போலவும், பெரும் அரசியல் தலைவர் போலவும் அவன் பேசுவதும் அவன் நடந்துகொள்ளும் விதமும் ஒரு பெரிய உயர்ந்த மாமனிதனாக ஆகிவிட்டான் என்பதை நினைத்து பூரிப்பு அடைந்தேன்.

திரையுலகில் 70 ஆண்டுகளாக பங்களிப்பு செய்த மாமனிதர்

லீhன் வளர வளர அவர்மீது ஒரு பற்று வளர்ந்தது. கலைஞர் யார்? எப்படி இருப்பார்? என்ற எண்ணம் எனக்குள் ஓடியது “ஆறு மாதக் கடுங்காவல்” என்று ஒரு புத்தகம் அப்போது வந்தது. அதில் மீசை முளைக்காத கலைஞரின் சின்ன வயதுப்படம் பிரசுரமாகியிருந்தது.
நான் ஆசையாக அவருக்கு மீசை வரைந்து பார்த்தேன். அந்தப் படம் இன்றும் என்னிடம் பத்திரமாக இருக்கிறது. அண்ணா மறைந்த போது அவர் இரங்கல் கவிதை ஆற்றினார்.
அப்போது நான் பள்ளி மாணவன் எங்களூர்த் திடலில் அங்கிருந்த பஞ்சாயத்து வானொலியின் கீழே ஊரே கூடியிருந்தது. கலைஞரின் கவிதையை அழுதுகொண்டே கேட்டோம். அந்தக் கவிதையின் தாக்கம் கலைஞரை என் இதயத்தின் மையத்தில் கொண்டு வந்து இருத்தியது.
அவரை நான் முதன் முதலாகப் பார்த்தது பச்சையப்பன் கல்லூரியில். நான் படிக்க வந்தபோதுதான் 71ல் நான் பி. யூ. சி. படித்தபோது அவர் முதலமைச்சர்.
அப்போது பச்சையப்பன் கல்லூரியில் புலவர்கள் மாநாடு நடந்தது. அன்று ஞாயிற்றுக்கிழமை எந்த மாணவரும் வரவில்லை. புலவர்களும் அறிஞர்களும் வந்திருந்தார்கள். நான் ஒருவன் மட்டுமே மாணவன் கூட்டமற்ற கூட்டம் அது. அங்கே கலைஞர் கம்பீரமாக நடந்து வந்தார். நான் அவரைத் திரும்பிப் பார்க்கிறேன். அதுதான் அவர்மீது நான் பதித்த முதல் பார்வை. மேடையில் அமர்ந்தார்.
சொற்பொழிவு செய்தார். அந்த விழாவில் புலவர்களுக்கு ஒரு பை வழங்கப்பட்டது. பையில் ஏதாவது இருக்கிறதா என்றால் இல்லை என்றார்கள்.
கலைஞர் சொன்னார். புலவர்கள் வெறும் பையோடும் வெறும் கையோடும் போகக்கூடாது. அவர்களுக்கு நிதி வழங்குகிறேன் என்று ஒவ்வொரு பையிலும் 100 ரூபாய் இட்டு வழங்கச் செய்தார். கலைஞர் புறப்பட்டார் அப்போது அவர் பின்னாலேயே சென்று கார் கதவை அடைத்தேன். காவலர்கள் நின்றார்கள் தள்ளி நின்றுகொண்டேன். நான் வணங்கினேன். அவர் புன்னகைத்தார்.
நான் யார் என்று அப்போது அவருக்குத் தெரியாது. அவரின் அன்றைய புன்னகை இன்னும் என் இதயத்தின் அலுமாரியில் பத்திரமாகப் பாதுகாக்கப்படுகிறது.
கலைஞர் உங்கள் மீது வைத்திருக்கிற அக்கறை பற்றியும் நீங்கள் அவர்மீது வைத்திருக்கும் அக்கறை பற்றியும் சொல்லுங்கள்?
இது மிகவும் உணர்ச்சிகரமான உணர்வை ஏற்படுத்தும் கேள்வி. அவர் என்மீது வைத்திருக்கிற அக்கறையைப் பார்த்து திகைத்து நெகிழ்கிறேன். அவர் மீது நான் வைத்திருக்கும் அக்கறை இயல்பானது.
ஒருமுறை நான் அவரிடம் சொல்லிவிட்டு இந்தோனேஷியா, மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளுக்குப் பயணம் போனேன்.
இந்தோனேஷியாவில் விமான நிலையத்திற்கு நாங்கள் வந்தோம். அங்கே நானும் நண்பர் சிங்கப்பூர் முஸ்தபாவும் இந்தோனேஷியாவின் ‘கருடா’ விமானத்தில் பயணம் செய்யப் பயணச்சீட்டு பெற்றுக் கொண்டோம். ஜகார்த்தாவில் இருந்து சிங்கப்பூருக்குப் பயணம் முஸ்தபாவின் உதவியாளர் மாலிக் சொன்னார்.
ஏன் இந்த விமானத்தில் போகிaர்கள். இது பழைய விமானம். அதிலும் இது ஒன்றரை மணிநேரம் கழித்துத்தான் புறப்படும். அதற்கு முன்னாள் சிங்கப்பூர் விமானமான “சில்க் ஏர்” இன்னும் 20 நிமிடத்தில் புறப்பட்டப் போகிறது. அது புத்தம் புது விமானம் என்றார். பயணச்சீட்டை மாற்றுவதற்கு எனக்கு வாய்ப்பிருக்கிறது. எனவே சீட்டை ரத்துச் செய்துவிட்டு அந்த விமானத்துக்கு ஏற்பாடு செய்யப்படுமா என்றார்.
ஏற்பாடு செய்யுங்களேன் என்றார் என் நண்பர் முஸ்தபா. நான் சொன்னேன். “போர்டிங் பாஸ்” வாங்கியாகிவிட்டது. ஒரு மணி நேரம் தாமதித்துப் போனால் தப்பில்லை.
அதுவரை பேசிக் கொண்டிருப்போம் என்றேன். உதவியாளர் மாலிக் எங்களை முன்னால் சென்று வரவேற்க அந்த விமானத்தில் புறப்பட்டுப் போய்விட்டார். நாங்கள் ஒரு மணி நேரம் கழித்து இந்தோனேஷிய விமானத்தில் புறப்பட்டோம். போய் இறங்கினோம்.
மாலிக் எங்களை வரவேற்க வந்திருக்கவில்லை. எங்காவது தேநீர் விடுதியில் இருப்பாரோ என்று தேடினோம். கிடைக்கவில்லை. சற்று நேரத்தில் சிங்கப்பூர் விமானம் தொடர்பு எல்லையில் இல்லை என்று எங்களுக்கு ஒரு தகவல் வந்தது. ஒருவேளை அது மலேசியா சென்றுவிட்டு இங்கு வருமோ என்ற ஐயத்தில் நாங்களிருந்தோம். சற்று நேரத்தில் விமானம் காணக்கிடைக்கவில்லை.
என்ற தகவல் வந்தது. அஞ்சினோம். கொஞ்ச நேரத்தில் விமானம் எங்கோ விழுந்துவிட்டது. என்று சொன்னார்கள். அடுத்த நாற்பது நிமிடத்தில் கடலில் விமானத்தின் உதிரி பாகங்களும் பொருட்களும் பிணங்களும் பணங்களும் மிதக்கின்றன என்ற கொடுந்தகவல் வந்தது. அந்த விமானத்தில் பயணித்த ஒருவர்கூட உயிரோடு இல்லை.
அந்தப் புதுவிமானம் எப்படி விபத்தைச் சந்தித்தது என்று நாங்கள் கலக்கத்தோடு விசாரித்தோம். அந்த விமானிக்குக் கடன் தொல்லை இருந்திருக்கிறது. தற்கொலை செய்ய முடிவெடுத்திருக்கிறார். தன் தற்கொலையோடு விமானத்தையும் சாகடித்திருக்கிறார்.
இதைக் கேட்டு எங்கள் நெஞ்சு வெடித்து விட்டது. செய்தி உலகமெல்லாம் பரவுகிறது. அது தமிழ்நாட்டுக்கும் வருகிறது. அந்தச் செய்தி வந்த பதினைந்து இருபது நிமிடங்களுக்குள் என் நண்பர்களுக்கெல்லாம் கலைஞரின் செய்தி பறக்கிறது. வைரமுத்து எங்கே என்று விசாரிக்கிறார்கள்.
நான் இந்தோனேஷியாவில் இருந்து புறப்படும்போது சிங்கப்பூர் கிளம்புகிறேன் என்று கலைஞரிடம் சொல்லிவிட்டுப் புறப்பட்டேன். சிங்கப்பூர் விமானம் கடலில் விழுந்தது. அதில் ஒரு இந்தியரும் பலி என்று தகவல் வந்ததால் கலைஞர் பதறிவிட்டார். என் நண்பர்களையெல்லாம் தொடர்புகொண்டு வைரமுத்து எங்கே என்கிறார்.
இதையறிந்த ஒருவர் என்னை நோக்கி ஓடி வருகிறார். செக்யூரிட்டிகளை எல்லாம் தாண்டிக்கொண்டு ஓடிவருகிறார். வந்து கலைஞர் உங்களைத் தேடுகிறார். தேடிக்கொண்டிருக்கிறார் என்றார். உடனே அங்கிருந்து கலைஞரைத் தொடர்பு கொண்டு, ஐயா நான் நலமாக இருக்கிறேன் என்றேன். இப்பத்தான் எனக்கு நிம்மதி என்றார்.
(தொடரும்)

மேஜர் சுந்தர்ராஜன்

மேஜர் சுந்தர்ராஜன் என்று பரவலாக அறியப்பட்ட சுந்தர்ராஜன் (மார்ச் 1, 1935 - பெப்ரவரி 28, 2003) வயது - 69, 1965 முதல் 2003 வரை தமிழ்த் திரைப்படங்களில் நடித்து வந்த ஓர் திரைப்பட நடிகர்.
மேஜர் சந்திரகாந்த் என்ற மேடை நாடகத்திலும் பின்னர் அதே பெயரிலான திரைப்படத்திலும் அவர் சிறப்பாக முன்னணி வேடத்தில் நடித்ததை ஓட்டி அவர் மேஜர் சுந்தர்ராஜன் என்று அழைக்கப்படலானார். திரைப்படங்களில் இவரது குரல் வளமைக்காகவும் உச்சரிப்பு தெளிவிற்காகவும் சிறப்பானவராகக் கருதப்பட்டார்.
வாழ்க்கை வரலாறு
தேனி மாவட்டம் பெரிய குளம் நகரைச் சேர்ந்த சுந்தர்ராஜன் இளமையில் தொலைபேசித்துறையில் முழு நேரமாகப் பணி புரிந்து கொண்டே ஓய்வு நேரங்களில் மேடை நாடகங்களில் நடித்து வந்தார்.
1962ஆம் ஆண்டு இயக்குனர் சோமிவின் பட்டினத்தார் என்ற திரைப்படத்தில் அறிமுகமானார். மேஜர் சந்திரகாந்த் திரைப்படத்தில் பார்வையற்ற படைத்தலைவர் வேடமேற்று சிறப்பாக நடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். இவர் 900க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் பல்வேறு வகையான வேடங்களேற்று நடித்துள்ளார்.
இதில் கெளரவம், எதிர்நீச்சல், பாமா விஜயம், அபூர்வ ராகங்கள் , தெய்மகன் மற்றும் தெய்வச்செயல் போன்ற திரைப்படங்கள் குறிப்பிடத்தக்கவையாக அமைந்தன.
கூடவே மேடை நாடகங்களிலும் தொலைக்காட்சித் தொடர்களிலும் நடித்து வந்தார். இவர் சில மலையாள, தெலுங்குத் திரைப்படங்களிலும் நடித்துள்ளார். இவரது மகன் கெளதம் தொலைக்காட்சித் தொடர்களில் நடித்து வருகிறார்.

Tuesday, June 17, 2014

எம்.ஜி.ஆரும் வி.என்.ஜானகியும்

  மதியம் எல்லோரும் ஒன்றாக அமர்ந்து சாப்பிட்டார்கள். கல்யாணத்திற்கு பின் வி.என். ஜானகி இனிமேல் சினிமாவில் நடிப்பதில்லை. நான் உங்கள் மனைவி, வீட்டோட இருந்து விடுகின்றேன் என்று எம்.ஜி. ஆரிடம் சபதம் எடுத்துக் கொண்ட வி.என். ஜானகி கடைசிவரை அப்படியே வாழ்ந்தார். மக்கள் திலகம் எம்.ஜி. ஆருடன் வாழ்ந்த காலங்கள் 40 ஆண்டுகள் 1957 முதல் 1987 வரை (1958ல் சத்தியதாய் இறந்துவிட்டார்.
எம்.ஜி.ஆரும் வி.என்.ஜானகியும் தினமும் தாய் வீட்டிற்கு வந்து சதானந்தவதியின் உடல் நலத்தைப் பார்த்து செல்வார்கள். இந்த கால கட்டத்தில் “எம்.ஜி.ஆர்.பிக்சர்ஸ்” என்ற பெயரில் எம்.ஜி.ஆர் சொந்தமாக நாடோடி மன்னன்” என்ற பெயர் வைத்து பிரமாண்டமான முறையில் ஒரு படத்தை தயாரித்தார்.
அந்த படத்தை அவரே டைரக்கட் செய்தார். படம் சூட்டிங் முடிந்து வெளியிடப்பட்டது அந்தப் படம் பெரிய வெற்றியை கொடுத்தது. இதற்கு முன் “எம்.ஜி.ஆர். நாடக மன்றம்” என்ற பெயரில் சில நாடகங்கள் சொந்தமாக நடாத்தினார். எம்.ஜி. ஆருடைய இலட்சியமும் சத்தியதாயுடைய தெய்வ வேண்டுதலும் வீண் போகாமல் கொஞ்சம் நிறைவேறியது.
தன்னுடைய கடும் உழைப்பும் தன் அண்ணனுடைய உழைப்பும் தாயுடைய சிக்கன செலவும், அதாவது சிக்கனம் முக்கியம். சேமிப்பு அவசியம் என்ற சொல்படி எல்லாமே வெற்றிகரமாக நடந்தது.
சொந்தத்தில் வீடு சொந்தத்தில் கார், சொந்தத்தில் நாடக கம்பனி, சொந்தத்தில் ஸ்டூடியோ, சொந்தத்தில் சினிமா படம் தயாரிப்பு, சொந்தத்தில் கல்யாண மண்டபம், சொந்தத்தில் ஒருசிறிய மார்க்கட், சொந்தத்தில் பாடசாலை, சென்னை நகருக்கு வெளியே ஒரு தோட்டத்தில் ஒரு சிறிய பங்களா, ஆடு மாடு, கோழி, குருவிகள், பழமரங்கள், பண்ணையில் வேலை செய்ய பல வேலை ஆட்கள் உணவு உண்ணும் நேரத்தில் தன்னை காண வீட்டுக்கு வந்து இருப்பவர்களுக்கு எல்லாம் உணவு வழங்கக்கூடிய விதத்தில் தனக்கு வேண்டிய அளவிற்கு சம்பாத்தியம்.
எம்.ஜி.ஆர் எப்படி வாழனும் என்று நினைத்தாரோ அதே போல் வாழ்ந்தார் நினைத்ததை முடித்தவர். மக்கள் திலகம் தன் தாயுடைய கனவுகளை எல்லாம் நிறைவேற்றிய மகன் எம்.ஜி.ஆர் மக்கள் திலகத்திற்கு தாய்க்கு பின் தாரம் சொல் என்ற எம். ஜி.ஆருக்கு மிக பொருத்தமாய் அமைந்தது. நோயால் அவதிபட்டுக்கொண்டிருந்த சதானந்தவதி 1962ல் இறந்து போனார்.
பின் இரண்டு மாதம் கழித்து சென்னை நகருக்கு வெளியே இராமபுரம் என்ற இடத்தில் ஒரு தோட்டத்தில் புதிதாக கட்டியிருந்த வீட்டிற்கு தன்னுடைய மூன்றாவது மனைவி வி.என்.ஜானகியுடன் சென்று வாழ்ந்தார்.

திரையுலகில் 70 ஆண்டுகளாக பங்களிப்பு செய்த மாமனிதர்

rஜிதை எடுத்துச் சொல்லும் திறன் வேண்டும். அந்தத் திறன் கலைஞருக்கு இருந்தது. அதை எடுத்துச் சொல்ல ஒரு தளம் வேண்டும். அந்தத் தளமும் இயக்கம் என்ற பீடமாகக் கலைஞருக்கு அமைந்தது. இது எல்லோருக்கும் வாய்க்கா. பிறகு, திரையுலகில் அவர் எழுதிய வசனங்களை அசை பிரித்தால் புதுக்கவிதை என்று சொல்லத் தோன்றுகிறது.
அவருடைய பழைய பராசக்தியையும் பழைய மனோகராவையும் திரும்பிப் பார்த்தால் அங்கே புதுக்கவிதை வீச்சுக்களை நம்மால் காணமுடிகிறது. கலைஞருடைய வசனங்களில் ஊளைச்சதையற்ற வார்த்தைகளை நான் பார்த்தேன். அலங்காரங்கள்கூட அர்த்தத்தோடு இருக்க வேண்டும்.
அடைமொழியை அதிகமாகப் பயன்படுத்தக்கூடாது என்று கவிஞர் சுரதா சொல்லுவார். தாமரை என்று சொல். செந்தாமரை என்று சொல்லுகிறபோது சிவப்பு என்று அடையை அனாவசியமாகப் பயன்படுத்தாதே என்று அவர் சொல்லுவார். அடைமொழியைக்கூட அளந்து, அர்த்தத்தோடு பயன்படுத்திய ஆற்றல் கலைஞரிடம் உண்டு. என்றைக்கோ அவர் எழுதிய உரைநடைகள் இன்றைக்கும் எடுத்தாளப்படுவது ஆச்சரியமில்லையா?
தமிழ் இலக்கியத்தில் வெண்பாக்களும் விருத்தங்களும் பழமொழிகளும் மேற்கோள் காட்டப்படுவது இயல்பு.
எந்த ஒரு மேற்கோள் வடிவமானாலும் அது செய்யுள் என்ற பாத்திரத்திற்குள் செப்பமாக உட்கார்ந்திருக்க வேண்டும்.
செய்யுள் என்ற பீடத்தில் இருக்கிற அல்லது யாப்பு என்ற கட்டமைப்பில் இருக்கிற சொற்களை மட்டும்தான் தமிழன் மேற்கோள் காட்டுவான். முதன்முதலில் உரைநடை மேற்கோள் காட்டப்பட்டது என்றால் அது கலைஞருடைய உரைநடைதான்.
“ஓடினாள் ஓடினாள் வாழ்க்கையின் ஓரத்திற்கே ஓடினாள்” என்று கலைஞர் பராசக்தியில் எழுதினார். பிரிட்டிஷ் ராஜகுடும்பத்தின் உயரமான பெண்ணும் உயரமான பெண்களில் துயரமான பெண்ணுமான டயானா இறந்த போது, ஒரு பத்திரிகை அந்தச் செய்திக்குத் தலைப்பிட்டது “ஓடினாள் ஓடினாள் வாழ்க்கையின் ஓரத்திற்கே ஓடினாள்” என்று.
எழுதப்பட்டு 50 ஆண்டுகளுக்குப் பின்னும் ஒரு உலக நிகழ்வுக்குத் தலைப்பாக அமையக்கூடிய எழுத்து கலைஞரின் எழுத்து. அது ஆச்சரியமில்லையா? இன்னும் சொல்லலாம். அவர் ஆற்றல் ஒரு பேட்டிக்குள் முடிக்கிற பொருளல்ல, ஒரு கிளிஞ்சல் கொண்டு கடலை இறைத்துவிட முடியாது.
ஒரு திரைப்படப் பாடலாசிரியராக இருந்து, கலைஞரின் திரைப்பாடல்களை எப்படிப் பார்க்கிaர்கள்?
கலைஞர், திரைப்படப் பாடல்களை அளந்து எழுதியிருக்கிறார். அதிலும் அழகாக எழுதியிருக்கிறார். எண்ணிக்கையில் குறைவாக எழுதியிருக்கிறார். ஆனால் எண்ணங்களில் வலிமையாக எழுதியிருக்கிறார்.
“பூமாலை நீயே” பாடலில் நீதிக் கட்சித் தலைவர் பன்னீர்செல்வத்தைக் கொண்டு வந்து, திராவிட இயக்க முத்திரையைப் பதித்திருக்கிறார். வசனங்களில் தனது சமகாலத் தோழர்களின் பெயர்களைப் பதிவு செய்து பாசத்தைக் காட்டியிருக்கிறார்.
சேரன் செங்குட்டுவன் வசனத்தில், “அரங்கின் அண்ணலே உன்னை இழந்தார்கள். ஆசைத்தம்பி இளங்கோ உன்னை இகழ்ந்தார்கள். நெடுஞ்செழியப் பாண்டியரே உன்னை இகழ்ந்தார்கள், என்றெல்லாம் தன் சமகாலத் தோழர்களை இலக்கியத்திற்குள் கொண்டுவரும் பெருந்தன்மை அவருக்கு இருந்தது.
அதே பாணியைத்தான் நான் முன்னர் தொட்டுக்காட்டிய “பூமாலை நீயே” பாட்டில் கையாண்டார். அவருடைய பாடலில் எனக்கு மிகவும் பிடித்தது “வாழ்க்கை எனும் ஓடம்” ஆகும். அது பாட்டல்ல. பாடம். ஒருமுறை சில அரச அதிகாரிகள் என்னிடம் வந்தார்கள்.
எய்ட்ஸ் தடுப்பு குறித்து சில வரிகள் எழுதித்தர முடியுமா என்று என்னிடம் கேட்டார்கள்.
நான் சொன்னேன்... கலைஞரை முதலமைச்சராக வைத்துக் கொண்டு என்னிடம் வந்து இதற்கு வரிகள் கேட்கிaர்களே அவர் எழுதிய வரிகளே பொருத்தமாக இருக்குமே. வருமுன் காப்பவன்தான் அறிவாளி அது வந்த பின்னே தவிப்பவன்தான் ஏமாளி என்ற கலைஞரின் வரிகளை எழுதிக் கொள்ளுங்கள் என்றேன். சிரித்துக் கொண்டே எழுதி வாங்கிக் கொண்டு போனார்கள். இப்படி எல்லாத் துறைகளுக்கும் இவரது பாட்டு பயன்பட்டுக் கொண்டிருக்கிறது.
காஞ்சித் தலைவனில் ஒரு பாட்டு எழுதியிருப்பார். “மகிமைகொண்ட மன்னரின் மீது எதிரிகளின் கால்கள்
மலர் பறிப்ப தில்லையடா வீரர்களின் கைகள்
இவையெல்லாம் தமிழனுக்கு உணர்ச்சி கொடுத்த உயிர்ப்பான வரிகள். குறைவாக எழுதினாலும் நிறைவான கருத்துக்களோடு திகழுகின்றன கலைஞருடைய பாடல்கள்.
கலைஞரை எப்போது எந்த வயதில் எவ்விதமாக அறிந்தீர்கள்? அவரை எப்போது முதன் முதலாகச் சந்தித்தீர்கள்?
கலைஞரை நான் உணர்ந்து கொண்டது சின்ன வயதில். எனக்கு அப்போது பன்னிரண்டு பதின்மூன்று வயதிருக்கும். என் சித்தப்பா பாண்டித்தேவர், பெரியகுளத்தில் இருந்து வாங்கி வந்த பராசக்தி வசனப் புத்தகம் அந்த வயதில் என் மடியில் விழுகிறது. பராசக்தி வெளிவந்து ஓராண்டுக்குப் பிறகு தான் நான் பிறக்கிறேன். கலைஞர் கல்லக்குடி போராட்டத்தில் பங்கேற்றுத் தண்டவாளத்தில் தலைவைத்துப் படுத்த போது நான் இரண்டு நாள் குழந்தை. நான் பிறந்து பத்துப் பன்னிரண்டு ஆண்டுகள்.
தமிழ்ச் சமூகத்தில் “பராசக்தி” ஊடறுத்துப் பயணம் செய்துகொண்டிருந்தது. ஐம்பது அறுபதுகளில் பிறந்த படிக்கத்தெரிந்த கலைஞர்கள் அனைவரும் கலைஞரின் “பராசக்தி”, “மனோகரா”வில் மனம் பறிக்கொடுக்காமல் இருந்திருக்க முடியாது. அன்றைக்கிருந்த தலைமுறைக்கு ஒரு தமிழ் ஊட்டம் கிடைத்தது என்று சொன்னால் அது கலைஞரின் வசனங்களால்தான்.
கலைஞரின் விரலும் சிவாஜியின் குரலும் இந்த இரண்டும் இல்லையென்றால் தமிழனுக்கு காதுகளின் வழியாகத் தமிழ் பாய்ந்திருக்காது. “இன்பத்தேன் வந்து பாயுது காதினிலே” என்ற பாரதியின் பாடலுக்கு கலைஞரும் சிவாஜியும் தான் உரையெழுதியவர்கள்.
கலைஞரின் தமிழை சிவாஜியின் குரலில் கேட்ட தமிழ்நாடு சிலிர்த்தது. அப்படி அறிந்தபோது யார் கலைஞர் என்ற சின்ன வயதுக் கேள்வி எனக்குள் வளர்ந்தது.

குடும்பத்தினரின் வேண்டுகோளுக்கிணங்க உறவுப் பெண்ணை மணந்தவர் சத்யராஜ்

படப்பிடிப்பு இல்லாத நாட்களில் நானும் மனைவியுமாக ஐஸ்கிரீம் கடை நடத்தினோம்
சினிமாவில் நிலையான ஒரு இடத்தைப் பிடித்த பின் திருமணம் செய்துகொள்வது என்ற எண்ணத்தில் இருந்த சத்யராஜ் மனதை குடும்பத்துப் பெரியவர்கள் மாற்றினார்கள். அதனால், தனது 25 ஆவது வயதில் உறவுப் பெண் மகேஸ்வரியை திருமணம் செய்துகொண்டார். திருமணம் நடந்த சூழ்நிலை குறித்து, சத்யராஜ் கூறியதாவது:-
எனக்கு திருமணம் செய்ய வேண்டும் என்று வீட்டில் முடிவெடுத்ததுமே விஷயம் என் காதுக்கும் வந்தது.
இப்போது தானே நடிகனாக தெரிய ஆரம்பித்திருக்கிறேன். இன்னும் கொஞ்சம் வளர்ந்து நடிகனாக நிலைத்து நின்று விடலாம் என்ற நம்பிக்கை வந்த பிறகு திருமணம் செய்துகொள்ளலாம் என்று நான் எண்ணியிருந்தேன்.
‘உனக்கு பணம் தானே பிரச்சினை குடும்ப வாழ்வுக்குத் தேவையான பொருளாதார நிலையையும் பெண் வீட்டார் பார்த்துக்கொள்வார்கள். கல்யாணத்துக்கு நீ சரி என்று சொன்னால் போதும்’ என்று உறவினர்கள் கூறினார்கள். என் அம்மாவும் இதையே சொல்லி வற்புறுத்தினார்.
இதற்கிடையே ‘கண்ணன் ஒரு கைக்குழந்தை’ படப்பிடிப்பின்போது என் திருமணம் தொடர்பாக பேச்சு வந்தது. அப்போது படப்பிடிப்பில் இருந்த நடிகர் சுருளிராஜன் என்னிடம், ‘25 வயது என்பது திருமணத்துக்கு சரியான வயது. அப்போது தான் 50 வயதில் தாங்கிப் பிடிக்க 25 வயதில் பிள்ளைகள் வந்துவிடுவார்கள். வேலையிலோ, தொழிலிலோ பொறுப்பு நிலைக்கு அவர்கள் வந்துவிடுவதால்.
50 வயதாகும்போது ரிலாக்ஸ் நிலையை அடைந்து விடலாம். இப்போது செய்துகொள்ளும் திருமணத்தால் உங்கள் சினிமா வாய்ப்பு எதுவும் பாதிக்கப்போவதில்லை. எனவே, திருமணத்தை தள்ளிப்போட்டு விடாதீர்கள் என்றார். அவர் சொன்னது நியாயமாகப்பட்டது. திருமணத்துக்கு சம்மதித்தேன்.
இப்போது எனக்கு 54 வயதாகிறது. சமீபத்தில் ஒரு தியேட்டருக்கு படம் பார்க்க நானும், மகன் சிபியும் போனோம். சிபி காரை ஓட்ட, நான் பின்சீட்டில் உட்கார்ந்து இருந்தேன். சுருளிராஜன் சொன்ன வாழ்க்கைத் தத்துவம் எந்த அளவுக்கு சரியானது என்பதை உணர்ந்தேன்.
திருமணம் கோவையில் தான் நடந்தது.
அப்போது வளரும் நிலையில் இருந்த நடிகன்தானே அந்த நேரத்திலும் நடிகர் சிவகுமார். டைரக்டர் எஸ். பி. முத்துராமன், கெமராமேன் பாபு ஆகியோர் வந்திருந்து வாழ்த்தினார்கள்.
திருமணத்துக்குப் பின். மாதம் மூவாயிரம் ரூபாய் வாடகையில் வீடு எடுத்துக் கொடுத் தார்கள். மாமனார் வீட்டில் இருந்து கார், பைக் ஆகியவையும் வந்தன. என்றாலும் நானாக சம்பாதிக்க வேண்டும். முன்னேற வேண்டும் என்ற ஆசையில், நடிப்பு தவிர வேறு ஏதேனும் தொழிலையும் தொடங்கலாமே என்று விரும்பினேன்.
நானும் மனைவி மகேஸ் வரியும் ஒரு நாள் பைக்கிலில் பீச்சுக்கு போய்விட்டு மைலாப்பூர் வழியாக திரும்பிக் கொண்டிருந்தோம். ஏ.வி. எம் ராஜேஸ்வரி கல்யாண மண்டபம் அருகில் இருந்த ஒரு ஐஸ் கிரீ:ம் கடையில் பைக் கை நிறுத்தி இருவருமே ஐஸ்கிரீம் சாப்பிட் டோம். எங்களை மாதிரியே மற்றவர்களும் ஆர்வமாக ஐஸ்கிரீம் சாப்பிட்டார்கள்.
நான் அந்த ஐஸ்கிரீம் கடை உரிமையாளரிடம், இதில் உங்களுக்கு எவ்வளவு இலாபம் கிடை க்கும்? என்று கேட்டேன். அவரும் உற்சாகமாக ஆயி ரம் ரூபாய்க்கு விற்பனையானால் 250 ரூபாய் இலாபம் கிடைக்கும். அதாவது 25 சதவீதம் இலா பம் நிச்சயம். எனக்கு தினமும் 3 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையாகும். 750 ரூபாய் வரை இலாபம் கிடைக்கும் என்றார். அதோடு ‘தாசபிரகாஷ் ஹோட்டலில் இருந்து கேட்கிற அத்தனைவித ஐஸ்கிரீம் வகைகளையும் அனுப்பி விடுவார்கள். அதனால் இதை தயாரிப்பது தொடர்பான பிரச்சினையும் இல்லை என்றும் சொன்னார்.
எனக்குள் அப்போதே ‘ஐஸ்கிரீம் குளிர்’ தாக்கத் தொடங்கிற்று. வீட்டுக்கு வந்ததும் இது தொடர்பாக மனைவியிடம் விவாதிக்கத் தொடங்கினேன். நடிப்பும் தடைப்படாமல் கடையையும் நடத்துவது என்ற முடிவு செய்தோம். படப்பிடிப்பு இல்லாத நாட்களில் நானும் மற்ற நேரத்தில் மனைவியுமாக ஐஸ்கிரீம் கடை தொடங்கி நடத்துவது முடிவாயிற்று.
இதற்காக கடை தேடியபோது சென்னை ஜெமினி மேம்பாலம் அருகே உள்ள போர்சன் கொம்ப்ளக்சில் ஒரு கடை கிடைத்தது. தாசப்பிரகாஷில் இருந்து ஐஸ்கிரீம் தருவித்தோம். வியாபாரம் பெரிய அளவில் இருக்கும் என்ற நம்பிக்கைக்கு பெரிய அடி ஆரம்பத்திலேயே விழுந்தது. தினமும் 70 ரூபாய் 80 ரூபாய்க்கு மேல் விற்பனை அதிகரிக்கவில்லை. ஞாயிற்றுக்கிழமை மட்டும் 150 ரூபாய்க்கு விற்பனையானது. இது முதலுக்கே மோசம் வைக்கிற தொழிலாக அமைந்துவிட்டதால் தொடர்ந்து கடை நடத்தும் ஆசையை விட்டோம். கடையையும் வாடகைக்கு விட்டு விட்டோம்.
திருப்பூர் மணியிடம் மக்கள் தொடர்பாளராக இருந்தவர் இராமநாதன். இவர் பின்னாளில் தயாரிப்பாளராகி என்னை கதாநாயகனாக ‘நடிகன்’, ‘வாத்தியார் வீட்டுப் பிள்ளை’ போன்ற படங்களில் நடிக்க வைத்தவர். இராமநாதன் எனக்கு நண்பரானபோது அவருடன் ஒருநாள் ஒரு ஹோட்டலுக்கு சாப்பிடப்போயிருந்தேன். அப்போது அந்த ஹோட்டல் உரிமையாளர் முதலில் செய்தது பழைய இரும்பு வியாபாரம் என்றும், அதில் ஏற்பட்ட இலாபத்தில் தான் இப்படி ஒரு பெரிய ஹோட்டலை தொடங்கியிருக்கிறார் என்றும் தெரிந்துகொண்டேன்.
பழைய இரும்பு வியாபாரத்தில் அவ்வளவு இலாபம் கிடைக்குமா, ஆசை யாரை விட்டது, மாமனார் பணத்தில் ஒரு இலட்சம் முதலாக போட்டு பழைய இரும்பு கடை போட்டாயிற்று வட்டிக்கும் கொஞ்சம் பணம் வாங்கி போட்டோம். இதில் கிடைத்த அனுபவம் 1 இலட்சத்து 35 ஆயிரம் ரூபாய் நஷ்டம் நமக்கு அனுபவம் இல்லாத தொழிலில் ஆர்வக்கோளாறு காரணமாக தலையை நுழைத்தால் என்னாகும் என்பதற்கு ஐஸ்கிரீம் வியாபாரமும், பழைய இரும்பு வியாபாரமும் எடுத்துக்காட்டாக அமைந்தன.
இத்தோடு நின்றிருக்க வேண்டாமா? இல்லையே! பள்ளியில் என்னுடன் படித்த குப்புசாமி என்ற நண்பர் என்னிடம் உயர் ரக விதைகளை வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்தால் அதிக இலாபம் நிச்சயம்’ என்றார்.
அவர் அப்படிச் சொன்ன பின் அவரை விட்டு விட முடியுமா, அவருடன் கூட்டாக சேர்ந்து அந்த பிசினசையும் செய்தேன். அதில் கரைந்தது 30 ஆயிரம் ரூபாய்.
உயர் ரக சோள விதைகளை பிளாஸ்டிக் பையில் பக்குவமாக கட்டி வைத்து ஏற்றுமதி செய்தோம். , இதிலும் என் அனுபவமின்மைதான். நஷ்டத்துக்கு வழிவகுத்ததாக எண்ணினேன். கஷ்டப்பட்டு பிறகு திருந்தும் அனுபவம் என்பது எத்தனை வலி நிறைந்தது என் வரையில் அந்த வலியையும் அனுபவித்தேன்.
இப்படி ‘வியாபார’ நிலை தொடர்ந்தபோது நடிப்பிலும் சின்னச்சின்ன கெரக்டர்கள் வரவே செய்தன. எல்லாமே இரண்டு மூன்று நாள் வேலையாக இருக்கும். இப்படி ரஜினி சாருடன் ‘பாயும் புலி’, ‘மூன்று முகம்’ போன்ற படங்களில் நடித்தேன்.
நடிகர் சிவகுமார் கதாநாயகனாக நடித்த ‘சாமந்திப்பூ’ என்ற படத்தில் நானும் விஜயகாந்தும் சின்ன கெரக்டர்களில் நடித்தோம். இந்தக் கட்டத்தில் வியாபார ஆசை முழுமையாகப் போய்விட்டது. இதற்கிடையே மகள் திவ்யா, மகன் சிபி பிறந்தாள். என்னுடைய பொறுப்பு இன்னும் கூடியது. நடிப்பில் வரும் சின்ன வாய்ப்புக்களை மட்டும் நம்பிக்கொண்டிருப்பத இனியும் சரியாகுமா என்ற கேள்வி எனக்குள் எழுந்தது.

Thursday, June 12, 2014

ஜானகியை மணக்க மனைவியிடம் சம்மதம் கேட்டவர்

. என். ஜானகியின் சொந்த ஊர் கேரளா பாலக்காட்டுக்கு அடுத்து உள்ள வைக்கம் என்ற ஊர். இவர் பிரபல கர்நாடகப் பாடல் ஆசிரியர் பாபநாசம் என்பருடைய தம்பி’ ராஜகோபால் ஐயருடைய மகள் தான் வி. என். ஜானகி. வைக்கத்தில் பிறந்தவராக இருந்தாலும் படித்தது, நடனம் கற்றுக்கொண்டது எல்லாம் சென்னைதான்.
இவருடன் பிறந்தது ஒரு ஆண். அவர் பெயர் நாராயணன். இவர்கள் சென்னை மைலாப்பூர் சேவகப் பெருமாள் கோயிலுக்கு அருகில் வசித்தார்கள். இவர்கள் பிராமின். வி. என். ஜானகி பிரபல டைரக்டர் கே. சுப்பிரமணி, நடிகை எஸ். பி. சுப்புலட்சுமி நடத்தி வந்த நாடகக் குழுவில் நடித்து வந்தார். பிறகு டைரக்டர் கே. சுப்பிரமணி வழியாக சினிமாவில் நடிக்க வாய்ப்புக் கிடைத்தது. இவர் நடித்த முதல் படம் “ஆயிரம் தலை வாங்கிய அபூர்வ சிந்தாமணி” இந்தப் படத்தில் கதாநாயகியாக ரொம்பப் பிரமாதமாக நடித்துள்ளார்.
அந்தப் படத்தில் இவர் ஆயிரம் தலைகளை வெட்டி குவிக்கும் காட்சி மயிர் சிலிர்க்க வைக்கும். அந்தப் படம் எம். ஜி. ஆருடன் கதாநாயகியாக நடிக்க சில படங்களில் நடிக்க வாய்ப்புக் கிடைத்தது. முதல் படம் மோகினி 1948ல் வெளிவந்தது. அதை அடுத்து மதுர நாட்டு இளவரசி, நாம் போன்ற படங்கள் இவர்கள் நடித்த படங்கள்.
இந்தக் கால கட்டத்தில் இல்லற வாழ்க்கையே நமக்கு இனிமேல் இல்லை, தான் உண்டு தன் தொழில் உண்டு உழைப்பே உயர்வு என்ற ஏணியில் ஏறிக் கொண்டு இருக்கும் போது ஒரு பெரிய சறுக்கல் அதாவது எம். ஜி. ஆருக்கு மூன்றாவது கல்யாணம் நடக்க இயற்கை அழைத்தது. மக்கள் திலகம் எம். ஜி. ஆருடன் மூன்று படங்களில் ஜானகி நடித்துள்ளார்.
இதற்கு இடையில் எம். ஜி. ஆர். மீது அன்பு கொண்டார். (காதல்) இதை அறிந்த எம். ஜி. ஆர். அன்புக்கு அடிமையானார். ஆனால் காதல் என்பது சினிமாவில் மட்டும் (நடிப்பில்)தான். என்னுடைய சொந்த வாழக்கையில் இல்லை.
என் தாய் உடனே எனக்கு கேரளாவில் பெண் பார்த்துத் திருமணம் செய்து வைத்தார்கள். நான் அந்தப் பெண்ணுடன் ஒரு வருடம் தான் வாழ்ந்தேன். பிறகு ஒரு வருடம் கழித்து எனக்கு கட்டாயமாக இரண்டாவது கல்யாணம் நடந்தது. அந்தப் பெண்ணோடு ஒரு வருடம்தான் நல்ல சந்தோஷமாக வாழ முடிந்தது.
பிறகு அந்தப் பெண்ணுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. அது சரியாகாமல் தொடர்ந்து உடல் நலக் குறைவாகவே இருக்குது.
இந்த மாதிரியான சூழ்நிலையில் உள்ள என்னிடம் என்னை நீங்கள் விரும்புவது எப்படி சரியாகும். தயவு செய்து இது வேண்டாம். நாம் இருவரும் நண்பர்களாக இருப்போம். தொடர்ந்து படங்களில் நடிப்போம் என்று எம். ஜி. ஆர். மிக விளக்கமாகச் சொன்னார். இவ்வாறு தன்னுடைய குடும்ப நிலைகளை விபரமாகச் சொன்னார்.
வி. என். ஜானகி பெண் என்றால் பேயின் மனம் இறங்கும் என்பது போல் எல்லாவற்றையும் யோசித்த எம். ஜி. ஆர். இந்த விஷயத்தில் மிகக் கவனமாக செயல்பட்டார்.
ஒரு பக்கம் தன் தாய். மறுபக்கம் தன் மனைவி, மேலும் மனைவி உயிருடன் இருக்கும் போதே வேறு ஒரு பெண்ணை காதலிப்பதோ, கல்யாணம் செய்து கொள்வதோ சட்டப்படி குற்றம் என்பதை எம். ஜி. ஆர். நன்கு அறிவார்.
அவர் நாடகம், சினிமா, குடும்ப வாழ்க்கையில் மிகவும் அனுபவம் பெற்றவர். எதையும் யோசிக்காமல் செய்யமாட்டார். அப்படிப்பட்ட இவருக்கு வி. என். ஜானகி விஷயத்தில் சிக்கல் ஏற்பட்டுவிட்டது. வி. என். ஜானகியிடமும், சதானந்தாவதியிடமும் பேசுவது நாட்சிகாரக் காலில் விழுவதை விட சண்டைக்காரன் காலிலேயே விழுந்து விடுவோமெ என்று மிகவும் மனதை தைரியப்படுத்திக் கொண்டு ஒரு நாள் படிப்பிடிப்பு முடிந்து வீட்டுக்கு வந்தவுடன் முதலில் தன் மனைவியைப் பார்த்து விட்டுத்தான் மற்ற வேலைகளைச் செய்வது வழக்கமாக நடக்கிற விஷயம்.
இப்போது தன் மனைவியிடமே நேரடியாக இதைப் பற்றிப் பேசிவிடலாம் என்ன எண்ணத்துடன் தன் மனைவியிம் வி. என். ஜானகியைப் பற்றி முழுவிபரத்தையும் சுருக்கமாகச் சொல்லிவிட்டு பிறகு காதல் கல்யாணம் விஷயத்தையும் கடகடவென்று சொல்லிவிட்டு தன் மனைவியின் கையைப் பிடித்துக் கொண்டார். இந்த விஷயத்தில் மனைவியின் சம்மதம் இருந்தால் போதும். பிறகு மற்றவர்களுடைய சம்மதத்தைப் பெற்று விடலாம். தன் கணவர் தன்னிடம் பேசியதைக் கேட்டுக் கொண்டிருந்த சதானந்தவதியின் கண்களில் கண்ணீர் வடிந்தது.
இதைப்பார்த்த எம். ஜி. ஆர். உடனே கண்ணீரைத் துடைத்து விட்டுக் கொண்டே தன் மனைவியிடம் உனக்கு இது பிடிக்காவிட்டால் விட்டிவிடு அழாதே. உன்னுடைய சம்மதம் இல்லாமல் இனி மேல் அந்தப் பெண்ணிடம் பேசக் கூட மாட்டேன். கவலைப்படாதே எந்த விஷயத்தை அம்மாவிடம் கூட நான் சொல்லவில்லை. நீ நல்லா யோசித்து உன் முடிவை மெதுவாகச் சொல். அவசரம் இல்லை என்று சொல்லிவிட்டு அவருடைய அறைக்குள் போய்விட்டார்.
இவர் சென்ற பிறகு தன்னுடைய கணவருடைய நிலைமையைப் பற்றியும் அவருடைய வேண்டுகோளைப் பற்றியும் நினைத்து இந்த விஷயத்தை அடுத்த நாள் தன் மாமியாரிடமும் எம். ஜி. சியிடமும் பேசினார்.
இந்தச் செய்தியைக் கேட்ட இந்த இருவரும் அதிர்ச்சி அடைந்து போனார்கள். பிறகு சதானந்தவதி சத்தியதாயிடமும் எம். ஜி சியிடமும் தன் கணவர் விருப்பப்படி அந்தப் பெண்ணைத் திருமணம் செய்து கொள்ளட்டும். எனக்கு என் கணவருடைய மன நலம்தான் முக்கியம். அவருடைய மனம் நோகக்கூடாது.
என்னுடைய உடல் இனிமேல் நலம் பெற்று நான் எழுந்து மீண்டும் என்னடைய பொறுப்புக்களை, சேவைகளை அவருக்கு செய்ய முடியும் என்ற நம்பிக்கை இல்லை. எனவே தயவு செய்து அவரிடம் எந்தவித மறுப்பும் சொல்லாமல் கேள்விகள் கேட்காமல் நீங்களே உங்களுடைய சம்மதத்தைச் சொல்லுங்கள். அவர் மனம் புண்படாமல் நல்ல சந்தோஷமாக இருப்பதுதான் நமக்கு முக்கியம் என்று சொல்லிக் கொண்டு சத்தியதாயுடைய கையைப் பிடித்துக் கண்ணீர் விட்டார்.
இந்து ஆசாரப்படி கணவன் தன் மனைவியிடம் நான் இரண்டாவது கல்யாணம் செய்து கொண்டு போகிறேன் என்று சம்மதம் கேட்பதும் இல்லை. மனைவி கணவருக்கு சரி செய்து கொள்ளுங்கள் என்று சொல்வதுமில்லை. எந்த சூழ்நிலையிலும் தன் கணவர் எவ்வளவு மோசமானவராக இருந்தாலும் வைப்பாட்டியோ இரண்டாவது பெண்டாட்டி வைத்துக் கொள்ளவோ நல்ல மனதுடன் சம்மதிக்க மாட்டார்கள்.
ஆனால் சதானந்தவதி தன் கணவர் தன்னிடம் நான் திருமணம் செய்து கொள்ள அனுமதி கேட்பதை நினைத்து பூரிப்பு அடைந்து போனார். தன் மனைவி ஒரு படுக்கை நோயாளி என்று நினைக்காமல் பாசத்தோடும் பற்றோடும் கேட்டாரே இவர் வேறு திருமணம் செய்து கொண்ட பின் நம் மீது வைத்துள்ள அன்பும் பாசமும் பற்றும் போய்விடுமோ என்று நினைத்து எதுவானாலும் சரி அவர் நல்லா இருந்தால் போதும், நாம் சாகும் வரை அவருடைய முகத்தைப் பார்க்கும் பாக்கியம் கிடைத்தால் போதும்.
இந்த விஷயத்தில் சத்தியதாயும் எம். ஜி. சியும் எந்தவித மறுப்பும் சொல்லவில்லை. அப்படி இப்படின்னு எப்படியோ 1957ல் எம். ஜி. ஆரும் வி. என் ஜானகியும் பதிவுத் திருமணம் செய்து கொண்டார்கள். பின் ராயப்பேட்டையிலேயே ஒரு தனி வீடு பார்த்து குடித்தனம் போனார்கள். திருமணம் செய்து கொண்ட உடனே வி. என். ஜானகியை சதானந்தவதிக்கு அறிமுகப்படுத்தினார். உடனே வி. என். ஜானகி சதானந்தவதியுடைய காலைத் தொட்டு வணங்கி விட்டு அக்கா நான் உங்களுடைய உடன் பிறவாத் தங்கை என்னை உங்கள் தங்கை போல நினைத்துக் கொள்ளுங்கள். இப்போ என் உடன்பிறந்த தம்பியைத் தவிர வேறு யாரும் இல்லை. இதைக் கேட்ட சதானந்தவதி வி. என். ஜானகியுடைய கையைப் பிடித்துக் கொண்டு “நான் இருக்கிறேன் கவலைபடாதே” என்றார்.

தனது அரசை விமர்சித்துப் படம் எடுத்த பாலச்சந்தரை வாழ்த்தி நெகிழ வைத்தவர்

ஹீண்ணீர் பஞ்சத்தை மையமாக வைத்து பாலசந்தர் உருவாக்கிய “தண்ணீர் தண்ணீர்” படத்துக்கு மத்திய அரசின் பரிசு கிடைத்தது. ஆனால் மாநில அரசின் பரிசு கிடைக்கவில்லை.
கமலஹாசனையும் ஸ்ரீதேவியையும் வைத்து “வறுமையின் நிறம் சிவப்பு” என்ற படத்தை 1980ல் பாலசந்தர் உருவாக்கினார். கருத்தாழம் மிக்க படம்.
பொதுவாக. பாடல் காட்சிகளை சிறப்பாகவும் புதுமையாகவும் படமாக்க வேண்டும் என்பதில் பாலசந்தர் அதிகம் சிரமம் எடுத்துக் கொள்வார். உதாரணமாக, அவள் ஒரு தொடர் கதையில் “கடவுள் அமைத்து வைத்த மேடை” என்ற பாடல் காட்சி புதுமையானது.
பாடலில் சிங்கம் கர்ஜிப்பது. யானை பிளிறியது போன்ற சத்தங்கள் வரும். எஸ் பி. பாலசுப்பிரமணியம் பாட. கமல்ஹாசன் பிரமாதமாக நடித்திருப்பார். பாடல். இசை, நடிப்பு, டைரக்ஷன் எல்லாம் சிறப்பாக அமைந்த காட்சி அது.
“அவர்கள்” படத்தில்பேசும் பொம்மையுடன் கமல்ஹாசன் பாடும் பாடலும் இவ்வாறே பெரும் பாராட்டுதலைப் பெற்றது.
“வறுமையின் நிறம் சிவப்பு” படத்தில் மறக்க முடியாத ஒரு பாடல் காட்சி.
பாடலுக்கான மெட்டை (எஸ். ஜானகியின் குரலில்) இசை அமைப்பாளர் போல் ஒவ்வொரு வரியாக ஸ்ரீதேவி பாடிக்காட்ட சிப்பி இருக்குது முத்து இருக்குது என்ற பாடல் வரிகளை சொல்லிக் கொண்டே வருவார் கமல்ஹாசன்.
இசை, நடிப்பு, டைரக்ஷன் மூன்றும் திரிவேணி சங்கமம் போல் அமைந்த அற்புதக் காட்சி அது.
இதையடுத்து பாலசந்தர் எடுத்த படம் “தண்ணீர் தண்ணீர்” அப்போது (1981) தமிழ்நாட்டில் தண்ணீர் பஞ்சம் அதிகமாக இருந்தது. அதை மையமாக வைத்து கோமல்சுவாமி நாதன் கதை வசனம் எழுதி, நாடகமாக நடத்தியதுதான் “தண்ணீர் தண்ணீர்” இதற்கு திரைக்கதை எழுதி டைரக்ட் செய்தார் பாலசந்தர்.
படத்தின் கதாநாயகி சரிதா. பெரும்பாலும் புதுமுகங்கள் நடித்தனர்.
அப்போது தமிழ்நாட்டின் முதல் அமைச்சராக எம். ஜி. ஆர். இருந்தார்.
தண்ணீர் பிரச்சினை என்பதால், படத்தில் இடம் பெற்றுள்ள சில காட்சிகளும் வசனங்களும் அரசாங்கத்தை தாக்குவது போல் இருப்பதாக அதிகாரிகளும், அரசியல்வாதிகளும் கருதினார்கள்.
இதுபற்றி பாலசந்தர் கூறியிருப்பதாவது- படம் வெற்றிகரமாக ஓடியாது.
படத்தில் அரசை தாறுமாறாகத் தாக்கி இருப்பதாக எம். ஜி ஆருக்கு தகவல் போயிற்று.
“இந்தப் படத்துக்கு சென்சாரில் எப்படி அனுமதி கொடுத்தார்கள் என்று எம். ஜி. ஆர். கூறியதாக எனக்குத் தெரியவந்தது.
‘படத்தின் முடிவில் எல்லோரும் துப்பாக்கி எடுத்துக் கொண்டு வன்முறைப் பக்கம் திரும்புவதாகக் காட்டப்பட்டி ருக்கிறது’ என்று குற்றம் சாட்டினார்கள்.
ஒரு புரட்சிக்காரன் எப்படி உருவாக்கப்படுகின்றான் என்பதைக் காட்டுவதற்காக எடுக்கப்பட்ட காட்சி அது. எல்லோரும் தீவிரவாதியாக மாறவேண்டும் என்று சொன்ன காட்சி அல்ல. அரசு பற்றிய விமர்சனங்களும் நாசூக்காக இருக்கும்.
படத்தைப் பற்றி வாதப்பிரதிவாதங்கள் நடந்தன. “துப்பாக்கித் தூக்கச் சொல்கிறார் பாலச்சந்தர்” என்று முணு முணுக்கப்பட்டதாலும், தணிக்கைக் குழுவுக்கு அரசு சென்றதாலும் அந்தக் கடைசி காட்சியில் சில மாறுதல்கள் செய்தேன்.
அந்த ஆண்டு விருதுக்காக. மத்திய மாநில அரசுகளுக்கு “தண்ணீர் தண்ணீர்” அனுப்பப்பட்டது.
மாநில அரசின் விருது கிடைக்கவில்லை. ஆனால் சிறந்த மாநில மொழிப்படம் என்றும் தேசிய அளவிலான சிறந்த திரைக்கதை என்றும் இரண்டு பரிசுகளை மத்திய அரசு வழங்கியது.
“தண்ணீர் தண்ணீர்” படத்துக்கு சிறந்த படத்துக்கான விருதும். சிறந்த நடிகைக்கான விருதும் (சரிதாவுக்கு) வழங்க மாநில தேர்வுக்குழு முடிவு செய்திருப்பதாக, ஆரம்பத்தில் எனக்கு நம்பகரமான தகவல்கள் கிடைத்தன. ஆனால் அதிகாரபூர்வமான அறிவிப்பு வெளியான போது எந்தப் பரிசும் கிடைக்கவில்லை.
ஆனால் ‘வறுமையின் நிறம் சிவப்பு’ படத்துக்கு மாநில அரசின் விருது கிடைத்தது.
பரிசளிப்பு விழா எம். ஜி. ஆர். தலைமையில் நடந்தது.
விருது வழங்கும் விழாவில் எம். ஜி.ஆர். முன்னிலையில் நான் பேசியது இன்றும் நினைவில் இருக்கிறது. “என் மீது அரசுக்கு கோபம் இருக்கலாம். தண்ணீர் தண்ணீர் படத்தால் ஏற்பட்ட அந்தக் கோபத்தின் காரணமாக இந்தப் படத்துக்கும் விருது தரப்படமாட்டாது என்று எண்ணினேன். அதற்கு மாறாக. எம். ஜி. ஆர். கைளயால் இப்போது விருது வாங்கி இருக்கிறேன். இது எனக்கு மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது’ என்று குறிப்பிட்டேன்.
எம். ஜி.ஆர். பேசும் போது என் பேச்சுக்கு பதிலளித்தார். “அந்தந்த நேரத்தில் எது நல்ல படம் என்று எண்ணுகின்றோமோ, அதைத்தான் தேர்வு செய்வோமே தவிர, ஏதோ ஒரு காரணத்துக்காக பழி வாங்கும் எண்ணமோ திறமையானவர்களை ஒதுக்கி வைத்து விடும் எண்ணமோ கிடையாது’ என்று குறிப்பிட்டார்.
எம். ஜி. ஆரின் தெய்வத்தாய் படத்துக்கு வசனம் எழுதியதன் மூலம்தான் திரை உலகுக்கு வந்தேன். ‘எம். ஜி. ஆர். படத்துக்கு பாலசந்தர் வசனம் எமுதுகிறார் என்ற மதிப்பும், மரியாதையும் திரை உலகில் எனக்கு ஏற்பட காரணமாக இருந்தவர் அவர். தனது அரசாங்கத்தை விமர்சித்து படம் வந்தாலும், அதைப் பொருட்படுத்தாமல் என்னை வாழ்த்தியது கண்டு நெகிழ்ந்து போனேன்.
இவ்வாறு பாலசந்தர் குறிப்பிட்டுள்ளார்.

Monday, June 2, 2014

எம்.ஜி.ஆரின் இரண்டாவது மனைவியும் இறந்துவிட்டார்

அதை அறியாமல் நீங்கள் அவனுக்கு உங்கள் இஷ்டப்படி திருமணம் செய்து வைத்துவிட்டீர்கள் அது உங்கள் தவறு இப்போ இரண்டாவது திருமணம் செய்து வைத்த அந்தப் பெண்ணும் இறந்து விடுவாள்.
எனவே இனிமேலாவது அம்மா அவனுடைய சொந்த வாழ்க்கையில் நீங்கள் தலையிடாதீர்கள் எந்த விஷயத்தையும் உங்கள் மகன் இஷ்டத்திற்கு விட்டு விடுங்கள் எல்லாம் நல்லதாகவே நடக்கும் இதைகேட்ட சத்தியதாய்க்கு தான் மிக பெரிய தவறு செய்துவிட்டோம் என்று நினைத்து மிகவும் வேதனைப்பட்டார்.
இந்த விஷயத்தை யாரிடமும் சொல்லாமல் தன் மனதிற்குள்ளே வைத்து கொண்டார் பிறகு உடல் நலம் இல்லாமல் படுக்கையில் கிடக்கும் சதானந்தவதிக்கு தினமும் வீட்டிற்கு வந்து நோயை பார்த்து கவனித்துச் செல்லும்படி ஒரு நல்ல டொக்டரை வைத்தார். பி. ஆர். சுப்பிரமணி இவர் நிரந்தரமாக எம். ஜி. ஆர். குடும்ப டாக்டராகிவிட்டார். 1950 முதல் 1975 வரை அவர் நடித்த படங்கள் வெற்றி படங்களாக அமைந்தன. எம். ஜி. ஆர். என்ற பெயருடன் புரட்சி நடிகர், மக்கள் திலகம் என்ற பெயர்களும் மக்களால் சூட்டப்பட்டது.
இவருடைய மூத்த நடிகர்கள் ஆசான்கள், பாராட்டும் அளவுக்கு முன்னேற்றம் அடைந்து வந்தார். இதற்கு இடையில் தற்போது குடி இருக்கும் வீட்டை நமக்கு சொந்தமாக வாங்கனும் இதைபற்றி வீட்டுக்காரரிடம் பேசுங்கள் என்று எம். ஜி. சி.யிடமும் தன் தாயாரிடமும் சொன்னார். அதன்படி அவர்களும் அமைப்பற்றி மிகவும் முயற்சி எடுத்து மிக குறைந்த விலைக்கு பேசி முடித்தார்கள்.
இந்த விஷயத்தை தன் அண்ணனிடம் சொல்லி, மகனே நீ போய் வீட்டு ஒன்றைப் பார்த்து பேசினால் இந்த வீடு நமக்கு சொந்தமாகி விடும் அதன்படி எம். ஜி. ஆர். ஒரு நாள் சூட்டிங் இல்லாத நாள் அன்று வீட்டுக்காரர் வீட்டிற்கு சென்றார். எம். ஜி. ஆர். ஒரு நாள் சூட்டிங் இல்லாத நாள் அன்று வீட்டுக்காரரும் இருந்தார் அன்று ஞாயிற்றுக்கிழமை அவரிடம் நான் தான் எம். ஜி. ஆர். தங்களிடம் ஒரு 5 நிமிடம் பேசனும் அடியேனுக்கு அனுமதி கிடைக்குமா என்றார்.
உடனே அவர் வாங்க, வாங்க 5 நிமிடம் என்ன 10 நிமிடமே பேசலாமே என்ன விஷயம் சொல்லுங்க எம். ஜி. ஆர். ஐயா நான் பேசப்போவதை கேட்டு கோபப்படக்கூடாது (தவறாக நினைத்து) நாங்கள் குடி இருக்கும் தங்களுடைய வீட்டை விற்க போவதாக கேள்விபட்டோம். அப்படி அந்த வீட்டை விற்பதாக இருந்தால் அதை எங்களுக்கே விலைக்கு கொடுத்து உதவுங்கள் என்று மிக பணிவோடு கேட்டார்.
வீட்டுக்காரர் சற்று யோசனை செய்து விட்டு அதை நான் இப்போதைக்கு விற்பதாக இல்லை என்று அவர் சொன்னதும் உடனே எம். ஜி. ஆர். ரொம்ப நல்லது. வணக்கம் போய் வருகிறேன் என்று சொல்லிவிட்டு வீட்டிற்கு வந்ததும் அம்மாவும், அண்ணனும் மிக ஆவலோடு விவரத்தை கேட்டார்கள். எம். ஜி. ஆர். விவரத்தை சொன்னார். கடவுள் செயல் நமக்கு இந்த வீடு கிடைக்கனும் என்றால் கண்டிப்பாக கிடைக்கும் அது போல் அந்த வீடு இவங்களுக்கே கிடைத்தது குறைந்த விலைக்கு,
நிறைந்த மனதோடு ஆகும். அந்த வீட்டுக்காரர் அட்வகேட் ஐயர் பெயர் ராமன் நல்ல குணமுள்ளவர் இந்த வீடு தான் எம். ஜி. ஆருடைய கடும் உழைப்பால் பெரும் முயற்சியால் முதல் முதலாக சொந்தமாக வாங்கப்பட்ட சொத்து.

இந்தியில் நெஞ்சில் ஓர் ஆலயம்: குட்டி பத்மினிக்கு வாய்ப்பு கிடைத்தது எப்படி?


நெஞ்சில் ஓர் ஆலயம் இந்தியில் தயாரிக்கப்பட்டபோது, தமிழில் குட்டி பத்மினி நடித்த வேடத்தில் இந்தி குழந்தை நட்சத்திரம் நடிப்பதாக இருந்தது. ஆனால் முடிவில் குட்டி பத்மினிக்கே அந்த வாய்ப்பு கிடைத்தது.
ஸ்ரீதர் இயக்கிய ‘நெஞ்சில் ஓர் ஆலயம்’ படம் வெளிவந்து மகத்தான வெற்றி பெற்றது. காதலின் இலக்கணத்தை மூன்றே மூன்று கெரக்டர்கள் மூலம் நெஞ்சைத் தொடும் விதத்தில் சொன்ன ஸ்ரீதர், இந்திய அளவில் பேசப்படும் இயக்குனர் ஆகிவிட்டார்.
இந்தப் படத்தின் வெற்றி, அதை இந்திக்கும் கொண்டு சென்றது. இந்தியில் அப்போது பிரபலமாக இருந்த ராஜேந்திரகுமார், மீனாகுமாரி நடித்தார்கள். ஸ்ரீதரே இயக்கினார். படத்துக்கு ‘தில் ஏக் மந்திர்’ என்று பெயர் வைத்தார் ஸ்ரீதர்.
தமிழில் செய்த அதே கெரக்டரை இந்தியிலும் குட்டி பத்மினியே செய்தார். ஆனால் இந்த கெரக்டரில் நடிக்க அவர் ஒரு போராட்டத்தை சந்திக்க வேண்டியிருந்தது. அதுபற்றி குட்டி பத்மினி கூறுகிறார்.
ராஜேந்திரகுமார் இந்தியில் பிரபல நடிகர். தமிழ்ப் படத்தை பார்த்ததும் ஆர்வமாக நடிக்க ஒப்புக்கொண்டவர். நான் நடித்த குழந்தை கெரக்டரில் அப்போது இந்தியில் பிரபலமாக இருந்த ‘பரீதா’ என்ற குழந்தை நட்சத்திரம் நடிக்கவேண்டும் என்று கூறிவிட்டார்.
ஸ்ரீதர் சாருக்கோ என்னைத்தான் அந்த கெரக்டரில் போடவேண்டும் என்று ஆசை. ஆனால், படத்தின் ஹீரோ விருப்பம் வேறு மாதிரி இருக்கிறதே. நாம் பணம் போடுகிறோம்.
ஆனால் நம் இஷ்டப்படி நடிகர்களை தேர்வு செய்ய முடியவில்லையே’ என்று அம்மாவிடம் வருத்தப்பட்டவர் உங்கள் பெண்ணையும் செட்டுக்கு அழைத்து வந்து விடுங்கள். ஆனதை பார்க்கலாம் என்று சொல்லிவிட்டார்.
இந்திப் படத்தின் படப்பிடிப்பும் சென்னையில் தான் நடந்தது. செட்டுக்கு வந்ததும் நடிகை மீனாகுமாரியிடம் ஒட்டிக்கொண்டேன். அந்த என்ட்டிக்கு குழந்தை கிடையாது. அதனால் என் மீது அதிக பாசம் காட்டினார்கள். படப்பிடிப்பு இடைவேளையில் என்னைக் கொஞ்சிக் கொண்டிருப்பார்கள்.
அதே நேரத்தில் தமிழில் நான் நடித்த கேரக்டரில் அந்தப் பெண் பரீதாவே இந்தியில் நடித்துக்கொண்டிருந்தார். ஸ்ரீதர் சாராலும் எதுவும் செய்யாத நிலை.
ஆனால் இந்த நிலைக்கும் ஒரு முடிவு வந்தது. நடிகர் மகமூத் (தமிழில் நாகேஷ் செய்த வேடம்) அந்தப் பெண்ணுடன் நடித்துக்கொண்டிருந்த ஒரு கட்டத்தில் காட்சி சரியாக அமையவில்லை. பரீதா 15 டேக் வரை போய்விட்டார். அப்போது டைரக்டர் ஸ்ரீதரை நோக்கிப்போன மீனாகுமாரி, என்னை சுட்டிக்காட்டி, ‘தமிழில் இந்தப் பொண்ணுதானே செய்தது. இதை ஒரு தரம் ட்ரை பண்ணிப் பாருங்களேன் என்றார்.
இப்படியொரு வாய்ப்பைத்தானே ஸ்ரீதர் சேர் எதிர்பார்த்தார். இப்போது அந்த சீனில் நான் நடித்துக்காட்ட வேண்டும். காட்சி ஓகே என்றால் தொடர்ந்து நானே நடிக்கலாம். ஸ்ரீதர் சாரிடம் உதவி இயக்குனர்களாக இருந்த டைரக்டர் மாதவன், டைரக்டர் சி.வி. ராஜேந்திரன் இருவரும், ‘ஒரே டேக்ல ஓ. கே. பண்ணிடு தமிழ்நாட்டு மானத்தை காப்பாற்று’ என்றார்கள். நான் அந்தக் காட்சியை ஒரே டேக்கில் சரியாகச் செய்தேன். இப்படியாக நான்தான் நடிக்க வேண்டும் என்று ஸ்ரீதர் சார் ஆசைப்பட்டது நிறைவேறிவிட்டது.
இந்தப் படத்துக்காக ‘பிலிமாலயாவின் சிறந்த குழந்தை நட்சத்திர விருது எனக்கு கிடைத்தது.
அப்போதெல்லாம் குழந்தை நட்சத்திரங்களுக்கென்று படத்தில் ஒரு பாட்டு நிச்சயம். நாங்கள் பாடாவிட்டாலும் எங்களை மையமாக வைத்தாவது பாட்டு இருக்கும். ‘நெஞ்சில் ஓர் ஆலயம்’ படத்தில் தேவிகா என்னை தூக்கி வைத்துக்கொண்டு ‘முத்தான முத்தல்லவோ...’ என்று பாடுவார். ‘குழந்தையும் தெய்வமும்’ படத்தில் எனக்கு 2 பாட்டுகள்.
‘கோழி ஒரு கூட்டிலே சேவல் ஒரு கூட்டிலே’, ‘குழந்தையும் தெய்வமும் குணத்தால் ஒன்று’ என்று 2 பாட்டுகளுமே மிகப் பிரபலம். நவராத்திரி படத்தில் சாவித்திரி என்னை வைத்துக்கொண்டு ‘சொல்லவா, கதை சொல்லவா’ என்று பாடுவார்.
நான் நடித்த முதல் கன்னடப்படம், முதல் மலையாளப்படம் இரண்டையுமே தயாரித்தவர் டைரக்டர் பி. ஆர். பந்துலுதான். இந்த வகையில் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி என 5 மொழிகளிலும் நடிக்கும் ‘பேபி நட்சத்திரம்’ என்ற பெயர் எனக்கு வந்து சேர்ந்தது. 5 மொழிகளிலும் நடிக்க வேண்டி வந்தால் மொழிப் பிரச்சினை அதாவது உச்சரிப்புப் பிரச்சினை ஏற்படவே செய்யும்.
அதைத் தவிர்க்க, அம்மா எனக்கு ஒவ்வொரு மொழியிலும் ‘டிஷன்’ வைத்தார்கள். அந்தந்த மொழியின் உச்சரிப்பு முறைகளை அர்த்தத்துடன் புரிந்து நடிக்க இது உதவியாக இருந்தது.
‘நவராத்திரி’ படத்தில் நடிக்கும்போது நான் ரொம்ப சின்னக்குழந்தை. இதனால் ‘லஞ்ச்’ சமயத்தில் சாவித்திரியம்மாவே எனக்கு வெள்ளிக் கிண்ணத்தில் சாதம் ஊட்டி விடுவாங்கள்.
அப்போதெல்லாம் பிரபல நடிகைகளுக்குள் நடிப்பில் மட்டுமே போட்டி இருந்தது. நடிப்பு நேரம் தவிர மற்ற நேரங்களில் நல்ல தோழிகளாக இருப்பார்கள். ஒரு சமயம், வாகினி ஸ்டூடியோவில் நடந்த படப்பிடிப்பில் இருந்தேன்.
அங்கே நடந்த படப்பிடிப்புகளில் பத்மினி, சாவித்திரி, விஜயகுமாரி, ராஜசுலோசனா ஆகியோர் தனித்தனி செட்களில் இருந்தார்கள். ‘லஞ்ச்’ சமயத்தில் எல்லோருமே சாவித்திரியின் ரூமுக்கு வந்துவிடுவார்கள். ஒன்றாகவே சாப்பிடுவார்கள். இன்றைய முன்னணி நட்சத்திரங்களிடம் இந்த அன்யோன்யம் இருக்கிறதா என்று தெரியவில்லை.
அது மாதிரி பத்மினி கேரளா போனால் சக நடிகைகளுக்கு புடவை எடுத்துக்கொடுப்பார். சாவித்திரி மும்பை போனால் விதவிதமான கொஸ்ட்லி ஹேண்ட்பேக் வாங்கி வந்து பரிசளிப்பார்.
சிறுவயதிலேயே ‘பேபி’ பத்மினி என்ற பெயரில் நடிக்க வந்து விட்டதால், என் படிப்பு பாதிக்கப்பட்டு விடக்கூடாதே என்ற கவலை அம்மாவுக்கு இருந்தது. அதனால் என்னை தி. நகரில் உள்ள வித்யோதயா பள்ளியில் சேர்த்தார்கள்.
அங்கே, போதிய நாட்கள் நான் ஆஜராகவில்லை என்பதற்காக, திருப்பி அனுப்பி விட்டார்கள். அடுத்து ஹோலி ஏஞ்சல்ஸ் கொன்வென்ட் அங்கும் இதுதான் நடந்தது. இதனால் அம்மா ஒரு காரியம் செய்தார். காலையில் 7 மணிக்கு தானே ஷ¤ட்டிங் அதிகாலை 4 மணிக்கே என்னை எழுப்பி விடுவார்.
6 மணிக்கு இந்தி பிரசார சபாவில் நடந்த இந்தி வகுப்புக்கு அழைத்துப்போவார். ,இந்தியில் வலுவாக வளரத் தொடங்கியதற்கு, இந்த அதிகாலைப் பயிற்சி உதவிக்கரமாக இருந்தது. பின்னாலில் இந்தியில் ‘பி. ஏ’ தேறினேன்.
இவ்வாறு குட்டி பத்மினி கூறினார்.

சிவாஜிக்கு எஸ்.பி. பாடிய முதல் பாட்டு

சுமதி என் சுந்தரி படத்தில் வரும் “பொட்டு வைத்த முகமோ” என்ற பாடல் சிவாஜிகணேசனுக்கு எஸ்.பி.பாலசுப்பிரமணியம் பாடிய முதல் பாடல்.
“ஆயிரம் நிலவே வா”, “இயற்கை என்னும் இளைய கன்னி” ஆகிய பாடல்கள் மூலம் புகழ் பெற்ற பாலசுப்பிரமணியத்துக்கு ஏராளமான படங்களில் பாட வாய்ப்பு வந்தது.
அந்தக் கால கட்டத்தில் எம்.ஜி.ஆருக்கும் சிவாஜி கணேசனுக்கும் டி.எம்.செளந்தரராஜன்தான் பாடிக் கொண்டிருந்தார்.
ரவிச்சந்திரன், ஜெய்சங்கர். முத்துராமன் ஆகியோர் முன்னேறிக் கொண்டிருந்தனர் அவர்களுக்கெல்லாம் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் பாடலானார்.
சிவாஜிகணேசன் நடித்த “சுமதி என் சுந்தரி” என்ற படத்தில் சிவாஜிக்கு குரல் கொடுக்கும் வாய்ப்பு பாலுவுக்கு கிடைத்தது. “பொட்டு வைத்த முகமோ” என்ற அந்தப் பாடலை, முதலில் வேறு ஒருவர் பாடுவதாக இருந்தது. பின்னர் பாலுவை எம்.எஸ்.விஸ்வநாதன் தேர்ந்தெடுத்தார்.
“சிவாஜிக்கு முதன் முதலாகப் பாடப்போகிறோம். நன்றாக அமையவேண்டுமே” என்ற பயத்தோடு, பாடல் பதிவுக்குச் சென்றார் பாலு. அங்கே சிவாஜிகணேசன் வந்திருந்தார்.
பொதுவாக பாடல் பதிவுக்கு சிவாஜி வருவதில்லை. சிவாஜிக்காக டி.எம்.செளந்தரராஜன் எத்தனையோ பாடல்கள் பாடியிருக்கிறார். அப்போதெல்லாம் வராத சிவாஜி இப்போது ஏன் வந்திருக்கிறார் என்று பாலு உட்பட அனைவரும் வியப்படைந்தனர். பாலுவை ஒரு தணி அறைக்கு அழைத்துச் சென்றார் சிவாஜி.
“பாலு எனக்குப் பாடப்போவதை நினைத்து உன் ஸ்டைலை மாற்றிப் பாட முயற்சி செய்யாதே! உன் பாணியில் பாடு நான் உன் பாட்டைக் கேட்க வேண்டும் என்பதற்காக இங்கே வரவில்லை. எனக்காக நீ உன் பாணியை மாற்றிப்பாட வேண்டும் என்று யாராவது சொல்லி உன்னைக் குழப்பி விடுவார்கள் என்று நினைத்தேன். அதனால்தான் இங்கே வந்தேன். நீ உன் பாணியில் பாடு அதற்கேற்றபடி நான் நடித்து விடுகிறேன்” என்று கூறினார்.
சிவாஜி இப்படி கூறியது, பாலுவுக்கு தைரியத்தைக் கொடுத்தது. பாட்டை நன்றாகப் பாடமுடியும் என்ற நம்பிக்கை வந்தது.
சிவாஜியும் பாலுவும் வெளியே வந்தனர். எம்.எஸ்.விஸ்வ நாதனிடம் ஏதோ கூறிவிட்டு, சிவாஜி அங்கே இருந்து புறப்பட்டுச் சென்றார்.
பின்னர் பாடல் பதிவு நடந்தது. எஸ்.பி.பாலசுப்பிர மணியமும். பி.சுசீலாவும் அந்தப்பாட்டை பாடி முடித்தனர். பாடல் நன்றாக வந்திருப்பதாக எம்.எஸ்.வி. கூறினார்.
சி.வி.ராஜேந்திரன் டைரக்ஷனில் உருவான “சுமதி என் சுந்தரி” யின் படப்பிடிப்பு முடிவடைந்ததும் தொழில் நுட்பக் கலைஞர்களுக்குப் படம் போட்டுக் காட்டப்பட்டது. பாலசுப்பிரமணியம். தன் குடும்பத்துடன் சென்றிருந்தார்.
“பொட்டு வைத்த முகமோ” பாடல் காட்சியில் பாலுவின் பாட்டுக்கு ஏற்ப சிவாஜி தன் பாணியை மாற்றி நடித்திருந்தார்.
சிவாஜியின் ஆற்றலைக் கண்டு பிரமித்துப்போனார் பாலு.
படம் முடிந்ததும் எல்லோரும் பாலுவை சூழ்ந்து கொண்டனர். “பொட்டு வைத்த முகமோ பாடல் பிரமாதம்” என்று பாராட்டினர்.
1971 ஏப்ரல் 14 ம் திகதி தமிழ்ப்புத்தாண்டு அன்று வெளிவந்து “சுமதி என் சுந்தரி” வெற்றிப்படமாக அமைந்தது.
தெலுங்கில் என்.டி.ராமராவ், ஏ.நாகேஸ்வரராவ் ஆகிய இருவரும் கொடிகட்டிப் பறந்த காலகட்டம் அது. அவர்களுக்கு கண்டசாலாதான் பின்னணியில் பாடி வந்தார். தெலுங்கில் பின்னணி பாடகர்களில் “முடிசூடா மன்னன்” அவர்தான்.
வயதானதால் பாடுவதை குறைக்கலானார் கண்டசாலா. அப்போது பாலசுப்பிரமணியத்துக்கு வாய்ப்புகள் வரலாயின. அதிலும் ஒரு இடையூறு.
ராமகிருஷ்ணன் என்ற இளம் பாடகர் ஏறக்குறைய கண்டசாலாவைப் போன்ற குரல் கொண்டவர். அவர் என்.டி.ராமராவுக்கு குரல் கொடுக்கலானார். கண்டசாலாவின் குரலை மறக்க முடியாது ஆந்திர ரசிகர்கள் ராமகிருஷ்ணன் குரலில் ஆறுதல் அடைந்தனர். தெலுங்கு காமெடி நடிகர்களுக்கு பாலு பாட நேரிட்டது.
இந்த சமயத்தில் ஒரு எதிர்பாராத திருப்பம் ஏற்பட்டது. நடிகர் கிருஷ்ணா நடித்த படங்கள் பெரும் வெற்றி பெற்றதால் அவர் சூப்பர் ஸ்டாராக உயர்ந்தார். அவருக்கு பாலசுப்பிரமணியத்தின் குரல் வெகுவாகப் பொருந்தியது. “இனி என் படங்களுக்கு நீங்களே தொடர்ந்து பாடுங்கள் மற்ற பிரபல நடிகர்களுக்கும் நீங்கள் பாடலாம்.
ஆனால் காமெடி நடிகர்களுக்குப் பாடாதீர்கள்” என்று பாலுவிடம் கூறினார் கிருஷ்ணா.
அதைத்தொடர்ந்து கிருஷ்ணாவுக்கும், மற்ற பிரபல நடிகர்களுக்கும் பாலு பாடினார். தெலுங்கு பின்னணி பாடகர்களில் முதல் இடத்தை விரைவிலேயே பெற்றார்.
தமிழ், தெலுங்கு, கன்னடம் என்று தென்னிந்திய மொழிகளில் தினமும் இரவு, பகலாக பாடினார் பாலசுப்பிரமணியம். அவர் புகழ் நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே போயிற்று.