Wednesday, January 29, 2014

திரைப்படப் பாடல்களில் உழைப்பாளிகள்


 

உயரே பறக்கும் காற்றாடி
உதவும் ஏழை நூல்போலே
பட்டம்போல் அவர் பளபளப்பார்
நூல்போலே இவர் இளைத்திருப்பார்

மழையைப் பாடாத கவிஞர் உண்டோ? இங்கே ஒரு திரைப்பாடல் மழை கொட்டுவதைப் புதுவிதமான உவமையோடு சொல்வதைக் கண்டு வியப்பேற்படுகிறது. அது இதுதான்.
முட்டாப்பயலே மூளையிருக்கா
என்று ஏழைமேலே துட்டுபடைச்ச
சீமான் அள்ளி கொட்டுற வார்த்தைபோலே - மழை
கொட்டு கொட்டுன்னு கொட்டுது பாரு அங்கே...

தன்னிடம் வேலை செய்கிற தொழிலாளியை முதலாளி திட்டுவது போல மழை கொட்டுகிறது என்று பாட, தமிழறிவோடு இந்தக் கவிஞனுக்குச் சமூக உணர்வும் வேண்டுமல்லவா?
காதலியின் முகம் குறித்து எத்தனையோ விதமாக விதந்தோதியிருக்கிறார்கள் கவிஞர்கள். நிலவு, மலர், பளிங்குக் கல் என்று தோன்றிய வற்றையெல்லாம் காதலியின் முகத்தோடு பொருத்திப் பார்க்க இந்தக் கவிஞர்களுக்குச் சலிக்க வேயில்லைதான். ஆனால், கோபமாக இருக்கிற காதலியின் முகத்தை இப்படிச் சொல்கிறது இதோ பாடலின் பிந்தைய வரிகள்.
பழுக்கப் பழுக்க உலையில் காய்ச்சும்
இரும்பைப்போலவே - முகம்
சிவக்குது இப்போ - அது
சிரிப்பதும் எப்போ?

இப்படிச் சொல்கிற காதலனின் குரல் உலைக் களத்தில் பழுத்த அனுபவக் குராகவும் தெரிகிறது.
இருப்பவன் - இல்லாதவன் எனும் அவலம் தீர இப்படித் தீர்வு தருகிறது இந்தப் பாடல்.
உயர்ந்தவர் தாழ்ந்திடத் தேவையில்லை
உள்ளதை இழந்திடச் சொல்லவில்லை
உழைப்பவர் உயர்ந்தால் போதுமய்யா...

அதாவது, பள்ளத்தை மண்ணிட்டு நிரப்பிச் சமப்படுத்த இன்னொரு மேட்டைக் கரைக்கத் தேவையில்லையாம். இது எப்படியிருக்கு?
இப்படியொரு தீர்வைச் சொன்ன தமிழ்த் திரை இசைப் பாடல்தான் இப்படியும் இன்னொரு இடத்தில் புலம்புகிறது ஆனால் அது வெறும் புலம்பல் இல்லை. இந்த ஏற்றத் தாழ்வுகளுக்குச் சரியான காரணத்தைக் கண்டு பிடித்தும் சொல்கிற காரியார்த்தப் புலம்பல். அது இதோ....
வானம் பொழியுது பூமி வெளையுது தம்பிப் பயலே - நாம
வாடிவதங்கி வளப்படுத்தினோம் வயல - ஆனா
தானியமெல்லாம் வலுத்தவனுடைய கையிலே இது
தகாதுயின்னு எடுத்துச் சொல்லியும் புரியல...

வயலை வளப்படுத்துகிற உழைப்பாளி வாடி வதங்கிப் போய்த்தான் கிடக்கிறான். உழைப்பால் விளைந்த தானியச் செல்வம் வலுத்தவன் கைக்குப் போய்விட்டது தான் அதற்குக் காரணம் இப்படி உழைப்பிருக்கிற இடத்தில் வறுமையும். உழைக்காத இடத்தில் வளமையும் என்று முரண்பட்டிருக்கிற சமூகத்திற்கு அது தகாது என்று எத்தனை முறை எடுத்துச் சொன்னோம், அது மண்டையில் ஏறவில் லையே!
அழுபவர் சிரிப்பதும் சிரிப்பவர் அழுவதும்
விதி வழி வந்ததில்லை
ஒருவருக்கென்றே உள்ளதையெல்லாம்
இறைவனும் தந்ததில்லை (வாலி, படம் சந்திரோதயம்)

என்று இறைவனைத் துணைக்கு வைத்துக் கொண்டே அதே சமயம் எதுவும் விதிப்படித்தான் நடக்கும் என்ற சித்தாந்தத்தை மறுக்கிறது இன்னொரு பாடல்.
இந்த இடத்தில் இந்தியாவின் மிகச்சிறந்த மார்க்கசிய அறிஞரும் தொழிலாளி வர்க்கத்தின் உன்னதமான தலைவருமான தோழர் இ.எம்.எஸ். அவர்கள் தமது மார்க்கிசயமும் இலக்கியமும் என்ற நூலில் குறிப்பிட்டி ருப்பதை நினைவு கூர்வது சாலப் பொருத்தமானது. அவர் சொல்கிறார்.
“சுரண்டுவோரின் பிரச்சாரகராக மாறும் படிக்கு தத்துவார்த்தரீதியில் பயிற்றுவிக்கப் பட்டிருக்கும் இந்தத் திறமையான கலைஞர்களும் எழுத்தாளர்களும் கூட தம்மையறியாமலேயே சுரண்டப்படுகிறவர்களின் தத்துவத்துக்கு உருவம் தருகிறவர்களாக மாறிவிடுகிறார்கள். அழகியல் படைப் பிலுள்ள முரண்பாடு இப்படித்தான் தன்னை வெளிப்படுத்திக் கொள்கிறது”
 

உலக சினிமா

தணிக்கைக்குழுவை தவிக்க வைத்த படம்
மகாத்மா காந்தியைப் பற்றிய முதல் விவரணப்படம் 1921ஆம் ஆண்டு ஜூலை மாதம் வெளிவந்தது. அந்நியத் துணிகளை எரிக்கும் நிகழ்ச்சியோடு முடிவடையும் அப்படம் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது. தணிக்கைக்குழு படமாக்கப்பட்டுள்ள இரண்டுநாள் வாழ்க்கையில் எதை விடுவது எதை வெட்டுவது என்று புலப்படாமல் குழம்பிப் போனதாம்.
ஆண்களே இல்லாத படம்
கோவிந்த நிஹாலனியின் தயாரிப்பில் பல்லவிஜோசி, கிட்டு கித்வானி நடித்த ‘ருக்மாபாய் கி ஹாவேலி’ என்ற படத்தில் ஒரு ஆண் கதாபாத்திரம் கூட இடம்பெறவில்லை.
ஆயிரம் காதலர்களின் அன்பு மடல்கள் காதலியின் சவப்பெட்டியில்
மறைந்த பிரபல நடிகை ‘சாரா பென்ஹார்டுக்கு’ ஆயிரத்திற்கும் மேற்பட்ட காதலர்கள் அவர் இறந்த பிறகு ரோஸ் உட்டால் ஆன அவளது சவப்பெட்டியினுள் அத்தனை காதலர்களும் எழுதிய காதல் கடிதங்களையும் அவள் சடலத்தைச் சுற்றி வைத்து புதைத்தார்கள்.

பொன் ஒன்று கண்டேன் பெண் அங்கு இல்லை

பொன் ஒன்று கண்டேன் பெண் அங்கு இல்லை
என்னென்று நான் சொல்லலாகுமா
என்னென்று நான் சொல்ல வேண்டுமா
பூ ஒன்று கண்டேன் முகம் காணவில்லை
ஏன் என்று நான் சொல்லலாகுமா
ஏன் என்று நான் சொல்ல வேண்டுமா
நடமாடும் மேகம் நவநாகரீகம்
அலங்கார கிண்ணம் அலை போல மின்னும்
நடமாடும் செல்வம் பணிவான தெய்வம்
பழங்கால சின்னம் உயிராக மின்னும்
துள்ளி வரும் வெள்ளி நிலா
துள்ளி வரும் வெள்ளி நிலா
துவண்டு விழும் கொடியிடையாள்
துவண்டு விழும் கொடியிடையாள்
விண்ணோடு விளையாடும்
பெண் அந்த பெண்ணல்லவோ
சென்றேன் ம்..ம்... கண்டேன் ம்.. ம். வந்தேன்.
பெண் ஒன்று கண்டேன் பொன் அங்கு இல்லை
என்னென்று நான் சொல்லலாகுமா
என்னென்று நான் சொல்ல வேண்டுமா
நான் பார்த்த பெண்ணை நீ பார்க்க வில்லை
நீ பார்த்த பெண்ணை நான் பார்க்க வில்லை
நீ பார்த்த பெண்ணை நான் பார்க்க வில்லை
உன் பார்வை போலே என் பார்வை இல்லை.
நான் கண்ட காட்சி நீ காணவில்லை
நான் கண்ட காட்சி நீ காணவில்லை.
என் விழியில் நீ இருந்தாய்
என் விழியில் நீ இருந்தாய்
உன் வடிவில் நான் இருந்தேன்
உன் வடிவில் நான் இருந்தேன்
நீ இன்றி நானில்லை
நான் இன்றி நீயில்லையே
சென்றேன் ம்....ம்... கண்டேன் ம்...ம்.. வந்தேன்
பொன் ஒன்று கண்டேன்
பெண் அங்கு இல்லை
என்னென்று நான் சொல்லலாகுமா
என்னென்று நான் சொல்லவேண்டுமா
பூ ஒன்று கண்டேன்
முகம் காணவில்லை
ஏன் என்று நான் சொல்லலாகுமா
ஏன் என்று நான் சொல்லவேண்டுமா

எம். ஜி.ஆருக்கு சண்டைப் பயிற்சி

எம். ஜி. ஆர். அண்ணனைவிட எல்லா பயிற்சிகளையும் கற்று கொள்ளும்போது பாட்டுக்கு குரல் அமைப்பு சரியாக அமையவில்லை. சரி இப்போதைக்கு எம். ஜி. ஆருக்கு என்ன கற்றுகொள்ள வருகின்றதோ அதை கற்றுக்கொடுங்கள் என்று சொல்லுகிறார்கள்.
முதலாளி எம். ஜி. ஆருக்கு உடற் பயிற்சி செய்வதும், சண்டை பயிற்சி செய்வதும் மிக வேகமாகவும் கவனமாகவும் பிரம்பு அடி வாங்காமல் செய்வார். நடன பயிற்சியும் சற்று குறைவுதான் ஆயினும் அதைவிடாமல் செய்து கொண்டு வந்தார். எப்படியாவது நாம் சொந்த குரலில் பாடவேண்டும் என்று முயற்சி செய்து அதற்கு குரல் வளம் சரியாவரவில்லையே என்று வேதனைப்பட்டுக்கொண்டார்.
இந்த விஷயத்தில் அண்ணனிடம் எனக்கு பாடவரவில்லையே என்ன செய்யலாம் என்று கேட்டார். அதற்கு அண்ணன், தம்பி இதை தவிர மற்றதெல்லாம் உனக்கு சரியாக வருகிறது. அவற்றை விடாமல் ஒழுங்காக கற்றுகொள். இந்த மாதிரி சின்ன விஷயங்களை எல்லாம் நினைத்து வருத்தப்படக்கூடாது. எனக்கு எல்லா கலைகளும் சரியாக வரவில்லை.
அதைபற்றி நான் என்ன கவலைப்பட்டு கொண்டா இருக்கின்றேன். தொடர்ந்து வாரத்தில் இரண்டு மூன்று விதமான நாடகங்கள் நடந்துகொண்டு வரும், ஒருநாள் நல்லதங்காள் நாடகம் அன்று முதல் முதலாக நடைபெற இருக்கிறது. அந்த நாடகத்தில் நல்லதங்காளுக்கு 7 பிள்ளை அதில் கடைசி மகனாக எம்.ஜி. ஆருக்கு மட்டும் தான் நடிப்பும், வசனமும் உண்டு. இது தினமும் எம். ஜி. ஆருக்கு பயிற்சி அளித்து வந்தார்கள்.

அந்த ஒரு நாள்

 தமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதா நடிகர் திலகம் சிவாஜிகணேசனை 1967 ஆம் ஆண்டு நேர்காணல் செய்த போது
சின்ன வயசிலே நீங்க நாடக மேடையில் நடிக்க ஆரம்பிச்சீங்க இல்லையா? அப்போது ஏதாவது நினைச்சதுண்டா அதாவது எதிர்காலத்தைப் பற்றி இப்படி ஒரு நடிகரா வருவோம்னு நினைச்சதுண்டா?
சிவாஜி : இப்படி ஒரு நடிகனாகிவிடுவேன்னு கனவுகூட கண்டதில்லை. நடிக்க வேண்டும்கிற ஒரே ஆர்வம் தான் என்னை மேடைக்கு துரத்திச்சு தவிர வருங்காலத்தைப் பற்றியோ எதிர்காலத்தைப் பற்றியோ நினைக்க முடியாத நிலை அப்போது அடுத்த வேளை சோத்துக்கே என்ன செய்யறது? எங்கே போறது என்ற நிலையில் எதிர்காலத்தைப் பற்றி நான் நினைக்கலே அதுக்கு நேரமே கிடைக்கலேன்னு சொல்வேன்.
ஜெயலலிதா : நடிகர்கள் அரசியலில் பங்கெடுத்துக் கொள்ளவேணும்னு நீங்க நினைக்கிaங்களா? அப்படி நடந்தால் தங்களது தொழிலுக்கும் அரசியலுக்கும் சமமான வகையில் பணியாற்ற முடியும்னு நினைக்கிaங்களா?
சிவாஜி : அரசியல் வேறு, நடிப்பு வேறு நடிகனாக இருப்பவன் நடிப்புக்குத்தான் முதலிடம் தரவேணும். நான் ஒரு அரசியல் கட்சியில் இருப்பதால் நான் முழுக்க முழுக்க அரசியலிலேயே இருக்க வேண்டும்னு அந்த கட்சியும் விரும்பாது.
ஆனால் கட்சியில் இருப்பதாலே சில கடமைகள் அவனுக்கு உண்டு. சில கடமைகளை அவனிடமிருந்து எதிர்பார்க்கவும் கட்சிக்கு உரிமை உண்டு. உதாரணமாக எனக்கு இரண்டு மாசம் ஓய்வு கிடைக்குதுன்னு வச்சுக்குவோம். ஒரு மாசம் நான் ஓய்வு எடுத்துக்கலாம் ஒரு மாசம் கட்சிக்காக உழைக்கலாம். ஆனா கட்சி வற்புறுத்தாது எப்பவும் வரலாம், போகலாம், அதனால் கட்சி, நடிப்பு இரண்டுக்கும் முடிச்சுப் போடக்கூடாது அது வேறு இது வேறு.
ஜெயலலிதா : தமிழ் படங்கள் இப்போ முன்னேறியிருப்பதா நினைக்கிaங்களா? அல்லது தரம் குறைந்து விட்டதாக எண்ணுகிaர்களா?
சிவாஜி : எல்லாத் துறையிலும் நிச்சயமாக முன்னேற்றம் அடைஞ்சிருக்கு. அதேசமயம் சில படங்கள் மக்களது ரசனையை குறைச்சிடும் போலிருக்கு. இந்த மாதிரிப் படங்கள் நூற்றுக்கு இருபத்தஞ்சு இருக்கும். ஆக நாம் மேலே ஏறினாள், இந்தப் படங்கள் கொஞ்சம் நம்மை கீழே இழுத்து விட்டுடுது.
ஜெயலலிதா : மிகுந்த திறமைசாலிகளுக்கும் சிலசமயம் அவங்க மேற்கொண்டு இருக்கும் தொழிலேயே சவாலாக சில விசயங்கள் முளைச்சிடும் அதுபோல சிறந்த நடிகரான உங்களுக்கே, சவாலாக இருந்த வேஷம் எது?
சிவாஜி : நல்ல கேள்வி கப்பலோட்டிய தமிழனாக நடிச்சேனே. அதுதான் உண்மையிலேயே எனக்கு சவாலாக இருந்த வேடம். ஏன்னா கப்பலோட்டிய அந்த பெருமகனாரை நேரில் பார்த்த பலர் இன்னைக்கும் நம்மோடயே இருந்துக்கிட்டிருக்காங்க. கதைக்குள்ள வரும் பாத்திரங்களை ஏற்று நடிப்பது சுலபமான காரியம் ஆனால் நமது வாழ்க்கையில் சந்தித்த அதுவும் சமீப காலம் வரைக்கும் இருந்த ஒரு பெரிய மனிதரைப் போல நடிக்கிறோம் என்று சொல்றபோது அந்த நடிப்பை எல்லோரும் ஏத்துக்கணும்.
அதிலே மாறுபாடு எழக்கூடாது பெரியார் அவங்களைப் போல் நடிக்கிறோம் என்றால், பாக்கிறவங்க பெரியாரைப் பார்ப்பது போலவே இருந்ததுன்னு சொல்லணும் அப்போதுதான் நடிப்பு பூரணத்துவம் பெறும் அந்த மாதிரியான ஒண்ணுதான் இந்தக் கப்பலோட்டிய தமிழன் வேஷம். இதில் நான் நடிச்சதை பார்த்துட்டு அந்தப் பெரியவர் வ. உ. சி. யின் மகன் என் அப்பாவை நேரில் பார்த்தது போல இருந்தது என்று சொன்னார் ஒரு வெற்றியாகத்தான் நான் இதைக் கருதுகிறேன்.
ஜெயலலிதா : சில நாவல்கள் படிக்கிறோம், கதைகளை கேட்கிறோம். ஆஹா அந்த மாதிரி வேஷம் நமக்கு வரக்கூடாதா? கிடைக்காதா? என்று நினைக்கிறோம். அந்த மாதிரி நீங்க எதிர்பார்த்து நடிச்ச வேஷம் ஏதேனும் இருக்கா?
சிவாஜி : கட்டபொம்மன் வேஷம் அப்படிப்பட்டது. கட்டபொம்மன் கதையை தெருக்கூத்தா நான் பார்த்தேன். நான் வீட்டை விட்டு நாடகத்தில் போய்ச்சேர தூண்டுதலாக இருந்ததே இந்த கட்டபொம்மன் கதைதான்.
ஜெயலலிதா : இப்போ புதுசா ஒரு பிரச்சினை தலை தூக்கியிருக்கு முத்தக் காட்சிகளை அனுமதிப்பதா இல்லையான்னு? நீங்க என்ன சொல்aங்க?
சிவாஜி : சே. சே. வெட்கக்கேடு. முத்தம் கொடுக்கிறதை காட்டவே கூடாது. முத்தம் கொடுக்கிறது மதிரி நடிக்கணும் மூடிக்காட்டுவதுதான் கலை. பச்சையா உள்ளதை அப்படியே காட்டினா அது கலையாகாது. அதனால் முத்தம் கொடுப்பதையெல்லாம் திரையிலே காட்டக்கூடாது என்பதுதான் என்னுடைய தாழ்மையான வேண்டுகோள்.
ஜெயலலிதா : உங்களுக்கு எவ்வளவோ விசிறிகள் இருக்காங்க. நீங்க யாருக்காவது விசிறியாக இருந்ததுண்டா?
சிவாஜி : ஓ’ இப்பவும் நான் விசிறியாக இருக்கேன். பி. ஆர். பந்துலு மேடையில் நடிச்சு வந்த போது நான் அவருடைய விசிறிகளில் ஒருவன். ஹிந்தி நடிகை நாகீஸின் விசிறி நான். சார்லஸ் போயா ரசிகன் நான்.
ஜெயலலிதா : உங்களுக்கு லதாவின் பாட்டு என்றால் ரொம்பவும் பிடிக்கும் போலிருக்கே?
சிவாஜி : என் தங்கையாச்சே பிடிக்காம இருக்குமா. அது மட்டுமா? சமீபத்திலே நான் ஒரு நியூஸ் கேள்விப்பட்டேன். இண்டர்நேசனல் லெவல்லே உலகம் பூராவும் ஒலிபரப்பப்பட்டு பாடகர்களின் வரிசையில் லதாவின் பாட்டுக்கள் நாள் ஒன்றுக்கு இருபது மணிக்கும் மேலே ஒலிபரப்பாகுதுன்னு சொன்னாங்க. உலகிலேயே எந்தப் பாடகிக்கும் இல்லாத தனி கெளரவும் என் தங்கச்சிக்கு இருக்கு.
ஜெயலலிதா : நீங்க நாடகங்களிலே நடித்து வந்த காலத்தில் சினிமாவுக்கு அடிக்கடி போவதுண்டா?
சிவாஜி : அப்ப மட்டும் என்ன? இப்பவும்தான் மெட்ராஸ் சிட்டியிலே நான் பார்க்காத படமே நேத்து ராத்திரிகூட ஒரு குப்பை படத்துக்கு நான் போயிட்டு வந்தேன்..
ஜெயலலிதா : அந்த மாதிரியான நாளிலே நீங்கள் ரொம்ப விரும்பி பலமுறை பார்த்த படம் எது?
சிவாஜி : ருடால்ப் வாலண்டினோ நடித்த ‘தி iக்’ என்ற படம்.
ஜெயலலிதா : ஒவ்வொருவருடைய வாழ்க்கையிலும் சில சம்பவங்கள் மறக்க முடியாததாக அமைந்துவிடும். அந்த மாதிரி உங்க வாழ்க்கையிலே ஏதாவது நடந்திருக்கா?
சிவாஜி : எகிப்தின் தலைநகரான கெய்ரோவில் ஆசிய ஆபிரிக்க பட விழாவின் போது நடந்தது. அன்னைக்கு விழாவுக்கு வந்த படங்களின் ரிசல்ட் சொல்றாங்க. நான் பின்னாலே உட்கார்ந்திருந்தேன். அங்கிருந்தவங்க எல்லாம் என்னை ஏதோ டெக்னீசியனு நினைச்சிருந்தாங்க. அங்கே வந்திருந்தவர்களெல்லாம் பெரியவங்க உயரத்திலும் ஏழடி அங்கே பல பெரிய நாடுகளிலிருந்து பல கலைஞர்கள் கூடியிருந்தாங்க. நீதிபதிகள் எல்லோரும் வந்தாங்க.
கட்டபொம்மன் தான் சிறந்த படம். கட்டபொம்மனா நடிச்ச நான்தான் சிறந்த நடிகன்னு சொன்னாங்க. என் பேரைச் சொல்லி கூப்பிட்டாங்க நான் எழுந்து நின்னேன். வாழ்க்கையில் நான் எதற்கும் சாதாரணமாக மசிஞ்சு கொக்காதவன். நடுக்காட்டில் புலி துரத்தி வந்தபோதுகூட அசையாமல் இருந்தவன். ஆனால் அன்னிக்கு கெய்ரோவில் நடந்த அந்த சம்பவம் என்னை அசத்திவிட்டது. என் பக்கத்தில் உட்கார்ந்திருந்த பத்மினி என்னை தாங்கிப் பிடிச்சிட்டாங்க. இல்லாட்டி நான் நிச்சயம் விழுந்திருப்பேன். நான் என்னையே மறந்து உணர்ச்சிவசப்பட்டது அந்த ஒரு நாள்தான்.

Monday, January 6, 2014

அண்ணன் என்னடா தம்பி என்னடா அவசரமான உலகத்திலே....

அண்ணன் மீது கோபம் கொண்ட எம். ஜி. ஆர்.
ஒரு ஞாயிற்றுக்கிழமை ஆற்றுக்கு குளிக்கச் சென்று இருக்கும் போது அண்ணன், தம்பி இருவருக்கும் வாய் தகராறு வந்துவிட்டது. காரணம் இவர்கள் கொண்டு போன ஆடைகளை துவைத்து காயப்போட்டுவிட்டு ஆற்றில் நீந்தி விளையாடிக் கொண்டு இருக்கும் போது மற்ற பையன்களோடு எம். ஜி ஆர். குளித்துவிட்டு கரை ஏறும் போது, அண்ணன் சக்கரபாணி கட்டி இருந்த கோமணம் இடுப்பில் இல்லை.
உடனே சக்கரபாணி தம்பியை பார்த்து ஏய் ராமசந்திரா என் கோமணம் தண்ணீரில் போயிடுச்சி என்று சொல்லி, ‘உன்னுடைய கோமணத்தை கொடுடா’ என்று தம்பியிடம் கேட்கிறார்.
அந்த நேரத்தில் கரையில் நின்று கொண்டு சிரித்து துள்ளிக் குதித்து ஆடி கொண்டு, நான் தரமாட்டேனே என்று சொல்லி சிரிக்கிறார் எம். ஜி. ஆர். அந்த நேரத்தில் அண்ணன் தம்பியிடம் கோமணத்தைக் கோடுக்க துவைத்துப் போட்ட டவுசரை போட்டுக்கிட்டு தன்னுடைய கோமணத்தை தண்ணீரில் பரிதாபமாக நின்று கொண்டு இருந்த அண்ணிடம் கொடுக்க வேறு வழி இல்லாமல் கோபத்தோடு கரைக்கு வந்து துவைத்து போட்டு இருக்கும் டவுசரை எடுத்து மாட்டிக்கொண்டு தம்பியிடம் பேசாமல் கோபமாக வீட்டிற்கு வந்தார் ஆர். சக்கரபாணி.
வீட்டுக்கு வந்தவுடன், தம்பியின் கோமணத்தை கேட்டு செஞ்சுகிறார். தம்பியோ தன் கோமணத்தை கொடுக்க மறுக்கிறார். கேட்டேன் தர மறுத்துவிட்டான். பிறகு நான் வாதாடிய பிறகு கரையில் காய்ந்து கொண்டிருந்த டவுசரை போட்டு கொண்ட பிறகு அந்த கோமணத்தை கேலி செய்து கொண்டு தண்ணீருக்குள் நிற்கும் என்னைப் பார்த்து தூக்கி போட்டான். நான் அந்த கோமணத்தை எடுத்துக் கட்டிக்கொண்டு கரை வந்தேன். இதை அம்மாவிடம் கோபமாக சொன்னார். இதைக் கேட்ட அம்மா எம். ஜி. ஆரை பார்த்து நீ ஏன்டா இப்படி செய்தாய் என்று கோப்பப்படுகிறார்.
அம்மா கோபமாக பேசி முடித்த உடனேயே எம். ஜி. ஆர். பதில் அளித்தார். அம்மா ஆற்றிலே நானும் அண்ணனும் மட்டும் குளிக்கவில்லை. எங்களைப் போல் எவ்வளவோ பையன்கள் குளிக்கின்றார்கள். அவ்வளவு பேரும் கோமணத்தை கட்டி கொண்டுதான் குளிக்கின்றார்கள். தன்னுடைய கோமணத்தை தண்ணீரிலேயே போயிடிச்சே என்று சொல்லி அடுத்தவங்க கோமணத்தை யாரும் கேட்பதில்லை.
அப்படி இருக்கையில் அண்ணன் தன் கோமணம் போவது கூட தெரியாமல் குளித்து இருக்கிறார். கரைக்கு வரும் நேரத்தில் தன்னிடம் கோமணம் இல்லையே என்று வெட்கப்பட்டு கொண்டு என் கோமணத்தை அவிழ்த்து கொடுக்கும்படி கேட்டார். நான் தண்ணீரிலிருந்து கரைக்கு ஏறும் நேரத்தில், ராமச்சந்திரா உன் கோமணத்தை அவிழ்த்து கொடுடா என்று சத்தம் போட்டு கேட்கிறார்.
நான் உடனே என் கோமணத்தை அவிழ்த்து கொடுத்த விட்டு உடலில் எதுவும் இல்லாமல் துணி காய்கின்ற இடத்திற்கு எப்படி போவேன்? அதனால் நான் காயும் என்னுடைய டவுசரை போட்டிகிட்டு கோமணத்தை தண்ணீரில் நிற்கும் அண்ணன் கிட்டே கொடுத்தேன். அதை கட்டிக்கொண்டு தான் அவர் கரைக்கு வந்தார்.
இது அவரோட தவறு. இந்த விஷயம் ஆற்றோடு முடிந்து விட்டுது. அம்மா இதை வந்து ஒரு பெரிய விஷயமாக எடுத்து கொண்டு உங்களிடம் குறை கூறுகிறாரே இது என்ன நியாயம் சற்று கோபத்தோடு அம்மாவை பார்த்து எம். ஜி. ஆர். இந்த நியாயத்தை கேட்கும் போது அந்தத் தாயினுடைய மன நிலை எப்படி இருந்து இருக்கும்.

திருமணத்தில் பிரிந்த உறவுகளை பாலுவிடம் சரணடைய வைத்த சரண்

ஒரு வாரம் உடல் நலம் சரியில்லாமல் இருந்த இராதாகிருஷ்ணன் திடீரென்று அமரராகிவிட்டார். இராதாகிருஷ்ணன் இறந்தார் என்ற செய்தியை பாலுவால் நம்பவே முடியவில்லை.
தனக்காக உழைத்த இராதாகிருஷ்ணன் இல்லாமல் ‘கோதண்டபாணி ரிகார்டிங் தியேட்டர் திறப்பு விழா நடந்தது. அந்த தியேட்டரின் மாடியில் இராதாகிருஷ்ணன் நினைவாக ஒரு டப்பிங் தியேட்டர் கட்டி அதற்கு இராதாகிருஷ்ணன் பெயரை சூட்டினார். இப்படி பாலுவின் வாழ்க்கையில் மறக்க முடியாத ஒரு நபரானார் இராதாகிருஷ்ணன்.
பாலுவிற்காக உழைத்த நண்பர்கள் சிலர் இருந்த போதிலும், வாழ்க்கையில் நண்பர்களுக்காக உதவி செய்யப்போய் அவர் மாட்டிக்கொண்ட சம்பவமும் உண்டு ஒரு சமயம், பாலுவின் நண்பர்கள் சிலர் வந்து பாலுவிடம் ஒரு படம் தயாரிக்க விருப்பம் தெரிவித்தார்கள். அவர்கள் கையில் கொஞ்சம் பணம் கொண்டு வந்திருந்தார்கள்.
அவர்களின் விருப்பத்தைத் தட்ட முடியாமல், பாலுவை பூர்ணசந்திரராவ் என்ற விநியோகஸ்தரிடம் அழைத்துச் சென்று அவர்களுக்காக தான் உத்தரவாதம் தருவதாகக் கூறினார்.
அதற்கு பூர்ணசந்தர ராவ், பாலுவிடம், ‘இவ்வளவு பிஸியாக இருக்கும் பாலுவால் ஒரு படத்தின் தயாரிப்பு நிர்வாகத்தையும் கவனித்துக்கொள்வது கடினமாக இருக்கும்’ என்று உபதேசம் செய்தார். இருந்த போதிலும் பாலுவிற்கு தன் நண்பர்களுக்கு உதவ வேண்டும் என்ற ஆசையில் உத்தரவாதத்தில் கையெழுத்துப் போட்டார். படம் வளர்ந்தது.
ஆனால் பூர்ண சந்திர ராவ் கூறிய மாதிரியே அந்தப் படம் சரியாகப் போகவில்லை. உடனே அதில் ஏற்பட்ட நஷ்டத்தை ஈடுகட்ட அடுத்த படத்தை ஆரம்பித்தார்கள். தெலுங்குப் பட உலகின் அன்றைய சூப்பர் ஸ்டார் கிருஷ்ணர் நடிக்க கெப்டன் கிருஷ்ணா என்ற பெயரில் படம் தயாரானது. ஆனால் அந்தப் படம் கூட எதிர்பார்த்த அளவில் ஓடவில்லை. அந்தக் காலத்திலேயே நட்பிற்காக, தான்போட்ட கையெழுத்துக்காக பாலுகொடுத்த நஷ்டஈடு 7 லட்சம் ரூபாய் அந்த ஏழு லட்சம் ரூபாய் கடனை அடைக்க பாலு மூன்று வருடத்திற்கு மேல் உழைக்க வேண்டியிருந்தது.
இதில் சோகமான விஷயம் என்னவென்றால் பாலுவின் அடுத்த தங்கையான கிரிஜாவின் கல்யாணத்தில், ஜானவாசத்தில் கலந்துகொள்ள முடியாமல் வாங்கிய கடனை அடைக்க பத்திரத்தில் கையெழுத்துப் போட்டுக் கொண்டிருந்தார் பாலு. இன்றளவும் அவரது தங்கை பாலுவிடம் இதைச் சொல்லிக்கொண்டேயிருக்கிறார். ஆனால் பாலு இதை எப்படி எடுத்துக்கொண்டார் தெரியுமா?

ஜெமினிகணேசன் உதவியால் எனக்கு வாய்ப்பு கிடைத்தது

கமல்ஹாசன் வெளியிட்ட தகவல்
ghலசந்தர் படங்களில் நடிக்க வாய்ப்புக் கிடைத்தது எப்படி என்பதை கமல்ஹாசன் விளக்கினார். ‘என்னுடைய திரை உலகத்தந்தை அவர்’ என்று நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.
ஏ. வி. எம். நிறுவனம் தயாரித்த ‘களத்தூர் கண்ணம்மா’ (1960) படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் கமல்ஹாசன். அதன்பின் சில படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்தார்.
அதன் பின்னர் நாலைந்து வருடம் குழந்தையாகவும் நடிக்க முடியவில்லை, வாலிபனாகவும் நடிக்க முடியவில்லை. எனவே நடனம் கற்றுக்கொண்டார். சில படங்களில் உதவி நடன இயக்குன ராகவும், உதவி டைரக்டராகவும் பணியாற்றினார். இந்த சமயத்தில்தான் அவர் பாலசந்தர் படத்தில் நடிக்கும் வாய்ப்பை பெற்றார்.
அதுபற்றி கமல்ஹாசன் கூறியிருப்பதாவது:-
“ஜெமினி கணேசன்தான் என்னை முதன் முதலாக பாலசந்தரிடம் அழைத்துச் சென்றார்.
அப்போது ‘அன்னை வேளாங்கண்ணி’ படத்தில் உதவி டைரக்டராக வேலை பார்த்துக் கொண்டிருந்தேன். என்னைப் பார்த்த ஜெமினி, ‘என்னடா இது இதெல்லாம் பண்ணிக்கிட்டு இருக்கே! நடிக்க வேண்டாமா?’ என்று கேட்டார்.
‘நீங்க வேற! யார் சேர் கூப்பிடறாங்க! என்றேன்.
உடனே அவர் என்னை பாலசந்தரிடம் கூட்டிப்போய் அறிமுகம் செய்து வைத்தார். ‘ரொம்ப சின்னப் பையனா இருக்கானே!’ என்றார் பாலசந்தர்.
உடனே ஜெமினி கணேசன், பாலசந்தர் போட்டிருந்த கண்ணாடியைக் கழற்றி எனக்குப் போட்டு விட்டு, இப்போது பாருங்க! பெரிய பையனா இல்லே?’ என்று கேட்டார்.
பாலசந்தர், ‘எனக்கு கண் தெரியவில்லையே! என்றார் ஒரே சிரிப்பு.
இது நடந்து கொஞ்ச நாளில் பாலசந்தருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டு, ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார் எனக்கு ஒரே வருத்தம்.
சில நாட்கள் கழித்து அவர் குணமானதும், என்னைப் பற்றி விசாரித்து இருக்கிறார். ‘அந்தப் பையனைப் பார்த்தது நினைவு இருக்கிறது. அழைத்தது வாருங்கள்’ என்று கூறி ஆள் அனுப்பினார். அவரை போய்ப் பார்த்தேன் அரங்கேற்றத்தில் நடிக்க வாய்ப்பு அளித்தார்.
கமல்ஹாசன் ஒரு நடிகர் என்பதை திரும்பித் திருப்பி ஆணி அடிச்ச மாதிரி சொல்லிக்கொண்டே இருந்தவர் பாலசந்தர் ஒருவர்தான்.
நான் அவருக்குத் தோல்விப் படங்களைக் கொடுத்திருக்கிறேன் என்றாலும், விடாமல் என்னை பயன்படுத்தியிருக்கிறார். அரங்கேற்றம். சொல்லத்தான் நினைக்கிறேன், நான் அவனில்லை அவள் ஒரு தொடர் கதை, அபூர்வ ராகங்கள், மன்மதலீலை, மூன்று முடிச்சு, நிழல் நிஜமாகிறது, தப்புத் தாளங்கள், நினைத்தாலே இனிக்கும், மரோசரித்ரா, வறுமையின் நிறம் சிவப்பு இப்படித் தொடர்ந்து அவர் படங்களில் நடித்தேன். அவர் எடுத்தல் ‘ஆய்னா’வில் (இந்தி அரங்கேற்றம்) கூட ஒரு சின்ன ரோலில் வருவேன் அவர் என்னை பயன்படுத்தினார்... உருவாக்கினார். பெருமைக்குரிய திரையுலகத் தந்தையாக அவர் எனக்குக் கிடைத்தார்.
அவர் என்னிடம் ரொம்பப் பிரியமாக இருப்பார். அதே சமயம், அவரிடம் அதிகமாகத் திட்டு வாங்கியவனும் நான்தான்.
எனக்கு வந்த கடிதங்களில் ‘பொக்கிஷம்’ என 2 கடிதங்களைப் பாதுகாத்து வருகிறேன். இரண்டையுமே எழுதியவர், மதிப்பிற்குரிய பாலச்சந்தர்தான். நூறு படங்களில் நான் நடித்து முடித்ததிற்கான விழாவுக்கு, உடல் நிலை சரி இல்லாத காரணத்தால் அவரால் வர இயலவில்லை. என்னை அவர் வீட்டுக்கு வரச்சொன்னார். வணங்கிய என்னை வாழ்த்தி, முன்பே அவர் எழுதி வைத்திருந்த ஒரு கடிதத்தை என்னிடம் கொடுத்து ‘இங்கேயே படி’ என்றார் அந்தக் கடிதம்;
எனது கமலுக்கு ஒரு மாபெரும் விழா எடுக்கும் பொழுது, அதில் நான் பங்கு கொள்ள முடியாமல் போனது துர்ப்பாக்கியம். நூறு உனக்கு பெரிதல்ல. இன்னும் ஆயிரம் நூறுகள் போடப்போகிறாய். இன்னும் எத்தனையோ சாதனைகள் செய்யப் போகிறாய். உனது சாதனைகள் அனைத்தும், எனக்கும் பெருமை தேடித்தரும் என்று எண்ணுகிறவன் நான்.
கமல் ஒரு தனி நபரல்ல. ஒரு பெரிய நிறுவனம்.
வாழ்க உனது நாமம். வாழ்க உனது பெருமை
வாழ்த்துக்களுடன்
அன்பன்,
கே. பாலச்சந்தர்
இக்கடிதத்தை கண்களில் நீர் துளிக்கப் படித்தேன். மற்றொரு கடிதம் ‘பதினாறு வயதினிலே’ படத்தைப் பார்த்துவிட்டு பாச மிகுதியால் ‘மை டியர் ராஸ்கல்’ என்று ஆரம்பித்து, பாலச்சந்தர் எழுதியது என நடிப்புத் திறமைக்குக் கிடைத்த மிகப்பெரிய பரிசு இதுதான் எனக் கருதுகிறேன்.
அவருடைய திரைப்படங்களில், டைட்டில் கார்டில் ‘திரைக்கதை, வசனம் டைரக்ஷன்: கே. பாலசந்தர் என்று போட்டிருக்கும். மூன்றிலும் அவர் சிறந்தவர்.
என்னுடைய கலை உலகத் தந்தை மூன்றிலுமே சிறந்தவர் என்று சொல்லக் கூடிய பெருமிதத்தை எனக்குத் தந்திருக்கிறார்.
இவ்வாறு கமல்ஹாசன் கூறியுள்ளார்.

உலக சினிமா

* 1936 ஆம் ஆண்டில் கே. சுப்பிர மணியம் இயக்கிய திரைப்படங் களில் ஒன்று ‘பக்தகு சேலா’. இத்திரைப்படத்தில் நடிகை ‘எஸ். டி. சுப்புலட்சுமி’யை ஆணாகவும் (கிருஷ் ணனாகவும்) பெண்ணாகவும் (குசேலரின் மனைவியாகவும்) நடிக்க வைத்து (இரு வேடங்களில்) புதுமைசெய்தார்.
* கே. சுப்பிரணியம் தான் முதன் முதலாக முற்றிலும் குழந்தைகளை வைத்து படம் எடுத்தார். பெயர் ‘பாலயோகினி’, ஆண்டு 1937.
* தமிழ்த்திரைப்படத்தில் நடித்த முதல் வட மாநில நடிகை ‘சாந்தா ஆப்தே’ இயக்கியவர் ஓய். வி. ராவ், படம் சாவித்திரி, ஆண்டு 1941.
* 1939 ஆம் ஆண்டு வெளியான ‘சிரிக்காதே’ என்ற படத்தில் ஐந்து கதைகள் இடம்பெற்றன.
* முதல் கலர் படம்:
20 ஆம் நூற்றாண்டின் துவக்கத்திலிருந்தே பல தயாரிப்பாளர்கள் கலரில் படமெடுக்க முயன்று பல சோதனைகள் செய்திருக்கிறார்கள். அதனால் இதுதான் முதன் முதல் கலரில் வந்த படமென்று எந்த ஒரு படத்தையும் குறிப்பிட்டுச் சொல்ல முடியாதென்று பிரிட்டிஷ் பிலிம் இன்ஸ்டிடியூட் சொல்லுகிறது. அப்பொழுது பிரபலமான ஒரு பெயர் ‘Melies’ என்பது. ஆனால் டெக்னிக்கலரில் 1935 ஆம் ஆண்டு வெளிவந்த ‘Becky Sharp’ ஷிharp’ என்னும் படம்தான் முதல் முழுநீள வண்ணப்படமாகும்.
* திரைப்பட வரலாற்றில் பெயருக்காக ‘பல லட்சங்கள்’ செலவழித்திருக்கிறார்கள் என்பது ஆச்சர்யமான விஷயம். ‘லெஸ் கேர்ல்ஸ்’ என்ற பெயர் ஒரு ஹாலிவுட் படாதி பதியை மிகவும் கவர்ந்துவிட்டது. ஆகவே, பெயருக்காகவே அந்த நாவலின் உரிமையை வாங்கினார். படத்திற்கு அந்தக் கதையை உபயோகிக்கவில்லை. படத்தின் பெயர் மட்டும் ‘லெஸ் கேர்ல்ஸ்’ என்று பெயர் வைத்தார்.
எனவே ‘லெஸ் கேர்ல்ஸ்’ என்ற இரண்டு வார்த்தைக்காக அவர் கொடுத்த தொகை எவ்வளவு தெரியுமா? 50 இலட்சம் ரூபாய்.
* சில்ட்ரன் கார்டனில் படிக்கும்போது அங்கு செல்லாமல் ஊர் சுற்றிய உலகப் புகழ் நடிகர் ‘மார்லன் பிராண்டோ’வை இவரது சகோதரி ஜோஸ்டான், நாயை பிணைப்பதுபோல் சங்கிலியால் பிணைத்து இழுத்துச் சென்றாராம்.
* இன்று ஆபாச திரைப்படங்களைக் காட்டியதற்காகக் கைது செய்யப்பட்டார்கள் என்று அடிக்கடி பத்திரிகைகளில் பார்க்கிறோம். இம்மாதிரி ஆபாசப் படங்களை ‘ப்ளூ பிலிம்’ என்று கூறுகிறார்கள் அல்லவா? இந்த ஆபாசத்திற்கும், நீல (ப்ளு) நிறத்திற்கும் என்ன தொடர்பு?
1800 ஆம் ஆண்டில் ஆங்கிலத்தில் ‘ப்ளூ’ என்ற வார்த்தை ஆபாசத்தைக் குறிக்கப் பயன்பட்டதாம். எனவே, பால் உறவுக்காட்சிகளை அப்பட்டமாய்க் காட்டும் ஆபாசப் படங்களை இன்று வரை ‘ப்ளூ பிலிம்’ என்றே குறிப்பிடுகிறார்கள்.

திரை இசைப் பாடல்களில் உழைப்பாளிகளின் குரல்

சுவைக்க சுவைக்க திகட்டாத அமுதகானங்கள்

அல்லற்பட்டு ஆற்றாது அழுத கண்ணீ ரன்றே செல்வத்தைத் தேய்க்கும் படை
-“ஏதும் செய்வதற்குத் திராணியற்ற ஏழைகளின் கண்ணீர் செல்வத்தைத் தேய்த்துவிடும் படை!” - என்று ஈராயிரமாண்டுகளுக்கு முன்னரே வள்ளுவப் பேராசான் சொல்லிச் சென்றுள்ளான். அதாவது, ஏழைகளின் சார்பாக நின்று பணக்காரர்களுக்கு எச்சரிக்கிறான் வள்ளுவன். அதாவது, உழைப்பவர்களுக்காகக் குரல் கொடுக்கிறான்.
அந்த நமது முப் பாட்டன். ஆனால், அந்த உழைப்பவர்களே தங்களுக்காகக் குரலெழுப்பியதற்கும் ஒரு மிக நீண்ட வரலாறு இருக்கவே செய்கிறது. இன்னும் சொல்லப் போனால் வரலாறு என்பதே உழைப்பவர்களுக்கும், அவர்களை ஒடுக்கி வந்த சுரண்டல்காரர்களுக்கு மிடையிலான முரண் போராட்டம்தானே? உழைப்பவர்களின் குரல் காலாகாலமாக ஒலித்தே வந்திருக்கிறது.
அதன் ஒரு நீட்சியாக தொடர்ச்சியாக நமது தமிழ் திரை இசைப் பாடல்களிலும் அது பன்முகத்தன்மையோடு பதிவாகியிருப்பதை எண்ணி வியக்காமல் இருக்க முடியாது அத்தகைய பாடல்களில் சிலவற்றைப் பற்றி நாம் இங்கே பேசுவோம்.
ஆண்டவன் உலகத்தின் முதலாளி
அவனுக்கு நானொரு தொழிலாளி
அன்னை உலகின் மடியின்மீது
அனைவரும் எனது கூட்டாளி... (பாடலாசிரியர் ஆலங்குடி சோமு, படம் - தொழிலாளி)
- இது ஒரு பாடல் இன்னொரு பாடலும் இதுபோல உண்டு. அது -
கடவுள் என்னும் முதலாளி
கண்டெடுத்த தொழிலாளி
விவசாயி... (பாடலாசிரியர் மருதகாசி, படம் - விவசாயி)
இவை இரண்டும் தொழிலாளியையும் விவசாயியையும் குறித்துப் பாடுகின்றன. ஆனால், இந்த உலகைப் படைத்தது கடவுள் என்ற மரபார்ந்த பழமைச் சிந்தனையை அடியொற்றி கடவுளை முதலாளியாக்கிவிட்டன இப்பாடல்கள். அப்படியென்றால் முதலாளி குறித்தே இங்கே சரியான பார்வை இல்லாமல் போகிறது. சுரண்டலால் உருவான உபரிச் செல்வமே மூலதனம் ஆகிறது என்னும் உண்மையை மறைக்கின்றன இப்பாடல்கள். அதே சமயம் தொழிலாளியையும், விவசாயியையும் போற்றவும் முயல்கின்றன. அந்தப் போற்றுதல்களும் கூட முதலாளியின் நலன்சார்ந்து அமைந்து விடுகின்றன. அவற்றைப் பார்ப்போம்.