Wednesday, June 20, 2012

நாடகத்தில் வசூல் இன்றி பசியுடன் திரும்புகையில் வந்த பாடல்

மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரத்தின் எண்ண வண்ணம்தான். ‘சின்னக்குட்டி நாத்தனா, சில்லறையை மாத்துனார்’ பாடல் இடம்பெற்ற திரைப்படம். ஆரவல்லி (1957), அட்டகாசமான பாடலுக்கு துள்ளலிசையை அமைத்தவர் ஜி. ராமநாதன், குரல் வழியே குதூகலப்படுத்தியர். திருச்சி லோகநாதன், தயாரிப்பு டி. ஆர். சுந்தரம். மிகவும் எளிமையான வரிகளும், சிறப்பான இசையும், இப்பாடலை அக்காலத்தில் பட்டி தொட்டியெங்கும் பரப்பியது என்றால் அது மிகையில்லை.

இதில் கதாநாயகியாக நடித்தவர், ஜி. வரலட்சுமி அவருடைய தங்கையாக மைனாவதி நடித்தார். (இவர் நடிகை பண்டரிபாயின் தங்கை), பெண்களின் ராஜாங்கம் தான் எப்படி இருக்கும். ஒரு நாட்டை பெண்களே ஆண்டு வந்தால் எப்படி இருக்கும் என்பது தான் கதை, ஆண்கள் எல்லோரும் இப்படத்தில் வீட்டிலிருந்தபடி சமைப்பார்கள். பெண்கள் காவல் காக்க வீரர்களாகச் செல்வார்கள்.

இப்பாடல் உருவான விதம் ஒரு சோகம் கலந்த சுவாரசியமாகும்.... இதோ ஒரு சமயம் பொதுவுடமை இயக்கத்திற்காக நாடகம் நடத்த சென்றிருந்த பட்டுக்கோட்டையார்.

நாடகத்திற்கு சரியான வசூல் இல்லாமல் தங்கள் குழுவினருடன் பசி பட்டினியுமாக சென்னை திரும்ப பஸ்ஸில் ஏறினார். பஸ்ஸில் அமர்ந்திருந்த தங்கள் குழுவினர் அனைவரும் சோர்ந்த முகத்துடன் காணப்பட்டார்கள், அவர்கள் சோகத்தை மாற்றி அவர்களுக்கு குதூகலத்தை தர பட்டுக்கோட்டையார் அங்கேயே ஒரு பாடல் எழுதி, அதனை சத்தமாக பாட ஆரம்பித்தார். அந்தப் பாடலை கேட்டதும் நாடக குழுவினருக்கு பசி பறந்துவிட்டது. அனைவரும் குதூகலமாக கைகளை தட்டி பாட ஆரம்பித்தார்கள்.

‘சின்னக்குட்டி நாத்தனா
சில்லறைய மாத்துனா
குன்னக்குடி போற வண்டியில்
குடும்பம் பூரா ஏத்துனா!’

இந்தப் பாடலை கேட்டு மகிழ்ந்து அவரது குழுவினர், ‘அண்ணே பாட்டு ரொம்ப அருமையா இருக்கு. இந்தப் பாட்ட அப்படியே ஒரு படத்துக்கு குடுங்கண்ணே’ என்று கேட்டுக் கொண்டார்கள். அதன்படியே அந்தப் பாடலை மாடர்ன்ஸ் தியேட்டர் தயாரித்த ‘ஆரவல்லி’ படத்திற்கு தந்துவிட்டார் பட்டுக்கோட்டையார்.

எம்.ஜp.ஆரும் சிவாஜpயும் இரு துருவங்களா? இல்லை நெருங்கிய நண்பர்களா?

எம். ஜி. ஆரும், சிவாஜி கணேசனும், இரு துருவங்களைப் போன்றவர்கள் என்றும் அவர்களுடைய ரசிகர்கள் எண்ணினார்கள். ஆனா, இருவரும் நெருங்கிய நண்பர்களாக இருந்தனர். ‘நாங்கள் விரோதிகள் அல்ல, நண்பர்கள்‘ என்று இருவரும் வெவ்வேறு நிகழ்ச்சிகளில் பேசியிருக்கிறார்கள்.
சிவாஜி கணேசன் வாழ்க்கை வரலாறு ‘எனது சுயசரிதை’ என்ற பெயரில் புத்தகமொன்று வெளியிடப்பட்டுள்ளது.
சென்னை தொலைக்காட்சியில் பல ஆண்டுகள் தயாரிப்பாளராகப் பணிபுரிந்து பின்னர் உலகக் குழந்தைகள் நல நிறுவனத்தில் தகவல் தொடர்பு அதிகாரியாகப் பணியாற்றி ஓய்வு பெற்ற டொக்டர் டி. எஸ். நாராயணசாமி, பல ஆண்டுகள் பழகிய சிவாஜியிடம் கேள்விகள் கேட்டு, அதற்கு பதில்களைப் பெற்று இந்நூலை உருவாக்கியுள்ளார். கேள்வி பதில் ரூபத்தில் இந்த நூல் அமைந்துள்ளது.
சிவாஜியின் மகன்களான ராம்குமார், பிரபு, சிவாஜியின் தம்பி மகன் கிரிசண்முகம் ஆகியோரைக் கொண்ட ‘சிவாஜி பிரபு சரிட்டிஸ் டிரஸ்ட்’ இந்த நூலை வெளியிட்டுள்ளது. இதன் மூலம் கிடைக்கும் வருமானம் கல்விப் பணிக்கு செலவிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
எம். ஜி. ஆருடன் இருந்த நட்பு பற்றி சிவாஜிகணேசன் தன் சுய சரிதையில் மனம் விட்டுக் கூறியுள்ளார். அவர் கூறியிருப்பதாவது :-
சின்னப் பிள்ளையிலிருந்தே எம். ஜி. ஆரும் நானும் நெருங்கிய நண்பர்கள். என் வீட்டிற்கு அவர் வருவதும், அவர் வீட்டிற்கு நான் செல்வதும் என் தாயார் கையால் அவர் சாப்பிடுவதும், அவர் தாயார் கையால் நான் சாப்பிடுவதும் சகஜம். ஒரு கதை மாதிரி எங்கள் நட்பின் வரலாற்றைச் சொல்கிறேன்.
இரண்டாம் உலகப் போர் முடிந்த சமயம், 1943 – 44 ல் நான் சென்ட்ரல் ஸ்டேஷன் பக்கத்திலுள்ள ஒற்றைவாடை தியேட்டர் அருகில்தான் குடியிருந்தேன்.
‘லட்சுமிகாந்தன்’ நாடகமெல்லாம் நடத்தினோமே அந்த நேரத்தில், எனது வீட்டுக்குப் பக்கத்தில்தான் எம். ஜி. ஆர் அவரது தாயார், சகோதரர் எம். ஜி. சக்ரபாணி ஆகியோர் குடியிருந்தனர். அப்போதுதான் எம். ஜி. ஆர். சினிமாவில் நடிக்க ஆரம்பித்தார்கள்.
நானும் என்னுடைய நண்பர் காகா ராதாகிருஷ்ணனும் அவர் வீட்டுக்கு அடிக்கடி செல்வோம். அனேகமாக சாப்பாட்டு நேரத்தில் அங்கேயே இருப்போம். எம். ஜி. ஆர். ‘பசிக்கிறது’ என்றாலும், ‘இருப்பா கணேசன் வரட்டும்’ என்பார்கள். அவருடைய அம்மா அந்த அளவுக்கு அவர்களுக்கு என்மேல் பாசம்.
எம். ஜி. ஆர். இரவு நேரத்தில் என்னையும், ராதாகிருஷ்ணனையும் டவுனுக்குப் பக்கத்திலுள்ள தியேட்டருக்கு சினிமா பார்க்கக் கூட்டிச் செல்வார். திரும்பி வரும்போது, சப்பாத்தி, பால் போன்றவைகளைச் சாப்பிடுவோம். எல்லோருக்கும் அவர்தான் செலவு செய்வார். அதுபோல நீண்ட நாட்கள் இருந்தோம். பிறகு நான் காஞ்சிபுரம் சென்று அண்ணாவுடன் சேர்ந்துவிட்டேன்.
அண்ணாவின் ‘சிவாஜி கண்ட இந்து ராஜ்யம்’ என்ற நாடகத்தில் முதலில் எம். ஜி. ஆர். நடிப்பதாக இருந்தது. அவர் என்ன காரணத்தினாலோ நடிக்கவில்லை. அண்ணா என்னைத் தேர்ந்தெடுத்தார். நான் நடித்தேன். மறுபடியும் எங்களுக்குள் பிரிவு ஏற்பட்டது. சில வருடங்கள் கழித்து நான் சினிமாவில் சேரும்போது, எம். ஜி. ஆரைச் சந்தித்தேன்.
ஒரே காலகட்டத்தில் இருவரும் திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருந்தோம். அதேசமயத்தில் இருவரும் அரசியலிலும் ஈடுபட்டிருந்தோம். ஒரே உறையில் இரண்டு கத்திகள் இருக்க முடியுமா? நாங்கள் இருவரும் ஒரே இடத்தில் இருந்தால், இருவருக்கும் ஒரே ரசிகர்கள்தான் இருப்பார்கள். நாங்கள் இருவரும் தனித்தனியே செயல்பட்டதால் அவருக்கு வேறு ரசிகர்கள், எனக்கு வேறு ரசிகர்கள் இருந்தார்கள்.
என்னை அவர் விமர்சிப்பார். அவரை நான் விமர்சிப்பேன். அது அரசியல் பற்றித்தான் பெர்சனலாக ஒன்றுமில்லை. பலர் இதை வைத்துக்கொண்டு நாங்கள் இருவரும் விரோதிகள் என்று பேசிக்கொண்டார்கள். அதைப் பற்றி நாங்கள் இருவருமே கவலைப்படவில்லை.
பல வருடங்கள் சென்ற பின் அவர் முதல் மந்திரியானார். அவர் பதவியிலிருந்த போது, பல முறை நான் சந்தித்திருக்கிறேன். அவரும் பல சம்பவங்களுக்கும், நிகழ்ச்சிகளுக்கும் வந்திருக்கிறார். அவர் கையால் விருதுகள் வாங்கியிருக்கிறேன். எனக்கும் அவருக்கும் உள்ள நட்பு என்றும் மாறவில்லை.
எனக்கு சென்னையில் ஒரு தோட்டம் இருக்கிறது. அதுவும் எம். ஜி. ஆரின் தோட்டத்திற்கு பக்கத்திலேயே இருக்கிறது. என் தாயார் மறைந்த பிறகு அவர்கள் நினைவாக என் தோட்டத்தில் என் தாயாரின் உருவச்சிலையைத் திறப்பதற்கு வரவேண்டுமென்று எம். ஜி. ஆருக்குச் சொல்லியனுப்பினேன். உடனே ஒத்துக்கொண்டு, தன் மனைவியுடன் வந்து எனது தாயார் சிலையைத் திறந்து வைத்தார்.
தனது தாயைப்போல் கருதிய என் அம்மாவின் உருவச் சிலையைத் திறந்துவைத்ததில் அவர் மகிழ்ச்சியடைந்தார்.
இதேபோல் மற்றொரு சம்பவம் நிகழ்ந்தது. தஞ்சாவூரில் எனக்கு சாந்தி கமலா என்றொரு தியேட்டர் இருந்தது. இப்போது இல்லை. அந்த தியேட்டர் திறப்பு விழாவின் போதும் ‘நானே வந்து திறக்கிறேன்’ என்று சொல்லியனுப்பினார். தஞ்சாவூர் வந்து அந்தத் தியேட்டரைத் திறந்தார். எனக்கும் அவருக்கும் நட்பும், உறவும் இல்லையென்றால், இவையெல்லாம் நடந்திருக்குமா?
அதுமட்டுமில்லை ஒரு சமயம் அவருக்கு உடல் நிலை சரியில்லாமல் போன பிறகு, நான் இந்திரா காந்தியுடன் போய், எம். ஜி ஆரைப் பார்த்துவிட்டு வந்தேன். அதன் பிறகு எம். ஜி. ஆர் டில்லியில் இருந்து எனக்கு ஒரு கடிதம் எழுதியிருந்தார். ‘நான் அமெரிக்கா செல்கிறேன். அங்கு வந்து என்னைப் பாரு’ என்றார்.
உடனே நான் என் மனைவியை அழைத்துக்கொண்டு, நேராக நியூஜெர்சி சென்று இறங்கினேன். அங்கிருந்து பால்டிமோர் புறப்பட்டோம். என்னை வரவேற்க எம். ஜி. ஆர். பால்டிமோர் எர்ப்போர்ட்டில் ஐம்பது பேரை நிறுத்தியிருந்தார். அதில் தான் பழனி பெரியசாமி, டொக்டர் பி. ராமமூர்த்தி ஆகியோர் இருந்தார்கள். என்னை அழைத்துக்கொண்டு சென்றார்கள். நேராக பால்டிமோர் மருத்துவமனைக்குச் சென்றோம். தொப்பி, கண்ணாடி இல்லாமல் ஒரு போர்வை மட்டும் போர்த்திக் கொண்டு படுத்திருந்தார். எம். ஜி. ஆர்.
உள்ளே சென்றவுடன், அப்படியே படுக்கையில் இருந்து எழுந்து, கையை நீட்டினார். இராமாயணத்தில் ராமன் பரதனைச் சந்தித்தது போன்ற சம்பவம் இது. அவர் ராமச்சந்திரன். நான் பரதன். அவர் கையை நீட்டி வரவேற்றார்.
ஓடிச்சென்று இருவரும் கட்டிப்பிடித்துக் கொண்டு அழுதோம். அந்த நேரத்தில் அவரது மனைவி ஜானகி அம்மாவுக்கு ‘பைபாஸ் சேர்ஜரி’ செய்திருந்தார்கள். இருவரும் ஒரே ரூமில்தான் இருந்தார்கள்.
அவர்கள் கமலாவை கட்டிப்பிடித்துக் கொண்டு அழ, நான் எம். ஜி. ஆரை கட்டிப்பிடித்துக்கொண்டு அழ, கடைசியில் ஜானகி அம்மா கண்களைத் துடைத்துக்கொண்டு, ‘என்ன சின்னப் பிள்ளைபோல் அழுதுகொண்டு இருக்கிaர்கள். இருப்பது கொஞ்ச நேரம் தான், சிவாஜி ஊருக்குச் செல்ல வேண்டுமல்லவா? கொஞ்ச நேரம் பேசிக்கொணடிருங்கள்’ என்று எம். ஜி. ஆரிடம் கூறினார்கள்.
அதன்பின் நிறைய பேசிக் கொண்டிருந்தோம். நாட்டையும், நாட்டு மக்கள் நலத்தைப் பற்றியும் பேசினோம். ‘அண்ணே தயவு செய்து என்னிடம் மட்டும் ஒரு உண்மையைச் சொல்லுங்கள். உங்களுக்கு உடல் நிலை எப்படி இருக்கிறது? டொக்டர்கள் என்ன சொல்கிறார்கள்?’ என்று கேட்டேன். அவர் உதட்டைப் பிதுக்கி, தலையாட்டினார்.
உடல் நிலை சரியாகாதென்று முதலிலேயே அவருக்குத் தெரிந்துவிட்டது போலும் உடனே நான் ‘ஓ....’ என்று அழுத்து கொண்டு வெளியே ஓடிவந்துவிட்டேன். வெளியே வந்தவுடன், ராமமூர்த்தி போன்றவர்களையெல்லாம் என்னைப் பிடித்துக் கொண்டார்கள்.
கமலாவும் அறையை விட்டு வெளியே வருவதற்கு எழுந்த பொழுது எம். ஜி. ஆர். கமலாவின் கையைப் பிடித்து பக்கத்தில் உட்கார வைத்தார். தட்டுத் தடுமாறி ஏதோ ஒரு விஷயத்தை சொல்வதற்கு முயற்சி செய்தார்.
அவரால் சரளமாக பேசமுடியவில்லை. இருந்தாலும் சில சைகைகள் காட்டி ஒரு சில வார்த்தைகளால், சொல்ல விரும்பியதை அவரால் சொல்ல முடிந்தது.
‘இந்தப் பையன் என்னைப் போலவே முன்கோபக்காரன். கோபித்துக் கொள்ளும்படி விடாதே! அவன் கண்டதைச் சாப்பிடுவான். முதலில் அதிகமாக உப்புக் கொடுக்காதே சொல்லப்போனால் அவனைப் போல ஆப்பமும், கருவாட்டுக் குழம்பும் எனக்கும் அதிகப் பிரியம். அதை அடிக்கடி கொடுக்காதே. அதை நிறையச் சாப்பிட்டுத்தான் இந்த நிலைமை எனக்கு’ என்று கமலாவிடம் சொல்லியிருக்கிறார். ‘கணேசனுக்குப் பிறந்த நாள் வரும்போது, வாழ்த்துச் செய்தி அனுப்புகிறேன்’ என்றும் கூறியிருக்கிறார்.
நானும் கமலாவும் வெளியில் வந்து நண்பர் ஒருவர் வீட்டில் சாப்பிட்டுவிட்டு, விமானம் ஏறி இந்தியா வந்துவிட்டோம். அவர் கூறியபடியே பிறந்த நாள் வாழ்த்து அனுப்பினார்.
எம். ஜி. ஆரும் ஓரளவு உடம்பு சரியாகி இந்தியா வந்துவிட்டார். இதன்பின் ஒரு சம்பவம் நடந்தது. அப்போது ஆர். வெங்கட்ராமன் இந்திய ஜனாதிபதியாக இருந்தார். ஆர். வி. யுடன் டில்லியில் பல நாட்கள் இருந்திருக்கிறேன். சென்னையில் ஒரு விழாவுக்காக ஜனாதிபதி வந்திருந்தார். அப்போதைய நம்முடைய முதல் அமைச்சர் எம். ஜி. ஆரும் அழைக்கப்பட்டிருந்தார்கள். நானும் சென்றிருந்தேன்.
கவர்னர் பக்கத்தில் எம். ஜி. ஆர். உட்கார்ந்திருந்தார். அப்போது எம். ஜி. ஆர். உன்னைக் கூப்பிட்டு ‘இங்கே வா! பக்கத்தில் உட்கார் என்றார். நான் தயங்கினேன். உடனே என் கையைப் பிடித்து தன் அருகில் உட்கார வைத்துக் கொண்டார்.
‘ஜனாதிபதி இன்னும் பத்து நாட்களில் ஒரு மருத்துவமனையைத் திறக்க இங்கு வரப்போகிறார். அவர் வந்து சென்றவுடன், நீ வா உன்னிடம் ஒரு பெரிய பொறுப்பை ஒப்படைக்க வேண்டும்’ என்று மெதுவாக சைகைகள் காட்டி விளக்கிச் சொன்னார். வீட்டிற்கு சென்றதும் என் மனைவியிடம் அண்ணன் எம். ஜி. ஆர். இப்படி கூறினாரென்று சொன்னேன்.
‘இருவருமே சேர்ந்து அவரைப் பார்க்க போகலாம்’ என்று நினைத்துக் கொண்டிருந்தோம். ஆனால் அந்த மருத்துவமனை திறப்பு விழாவிற்கு ஜனாதிபதி வருவதற்கு முன்பாகவே அண்ணன் எம்.ஜி. ஆர். அமரராகிவிட்டார். என்னிடம் பேசிய நாலைந்து நாட்களில் அவர் மறைந்து விட்டார். அதன்பின் என்ன செய்ய முடியும்? எல்லாம் இறைவன் செயல். அவர் ஆத்மா சாந்தியடையப் பிரார்த்தித்தோம்.
குடும்ப துக்கம் விசாரிக்க வேண்டுமல்லவா? அதற்காக இரண்டு நாட்கள் கழித்து அவரது தோட்டத்திற்குச் சென்றேன். ஜானகி அம்மாளைப் பார்த்து துக்கம் விசாரித்தேன். அவர்கள் ‘என் தம்பி கணேசன் வீட்டிற்கு வரப் போகிறான். அவனிடம் ஒரு முக்கியமான விஷயம் பேசப் போகிறேன். அவனுக்குப் பிடித்த ஆப்பம், கருவாட்டுக் குழம்பு செய்து வை’ என்று உங்கள் அண்ணன் கூறினாரே. ஆனால் உங்களிடம் பேசாமலே சென்றுவிட்டாரே!’ என்று வருத்தத்தோடு கூறி அழுதார்கள் என்ன செய்வது? எம். ஜி. ஆர். வாழ்வாங்கு வாழ்ந்து கடவுளாகி விட்டார்.
அவரைப்பற்றி சொல்வதில் எனக்குப் பெருமை உண்டு. ஏனென்றால், அவர் என்னை உண்மையாக நேசித்தார். நானும் அவரை நேசித்தேன். அவரது வாழ்க்கை வரலாற்றில் சில கட்டங்களில் நானும் ஒரு முக்கிய பாத்திரமாக இருந்தேன். எம். ஜி. ஆர். அவர்கள் அன்றும் இன்றும் என்றும் என்னுடைய மனதில் ஒரு நல்ல நண்பராக நிறைந்திருக்கிறார்.’
இவ்வாறு சிவாஜி குறிப்பிட்டுள்ளார்.

Thursday, June 14, 2012

ஏ.எம்.ராஜhவை நீங்கா புகழ்பெறச் செய்தவை துயரத்தையும் தாபத்தையும் தேக்கிய பாடல்களே

ஏமல மன்மதராஜு ராஜாவின் சுருக்கமான பெயர் ஏ. எம். ராஜா (ஜுலை 1, 1929 - ஏப்ரல் 7, 1989 - தென்னிந்தியாவின் பிரபலமான திரைப்படப் பின்னணிப் பாடகர்களுள் ஒருவர். 1950 களில் இருந்து 1970கள் வரை தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாள மொழிகளில் பல பாடல்களைப் பாடியுள்ளார். அவர் பல படங்களுக்கு இசையமைத்தும் உள்ளார். இவரது மனைவி பிரபல பாடகி ஜிக்கி.
ராஜா ஆந்திராவின் சித்தூர் மாவட்டம் ராமச்சந்திரபுரத்தில் மன்மதராஜு, லட்சமம்மா ஆகியோருக்குப் பிறந்தார்.
மூன்று வயதில் தந்தையை இழந்த ராஜாவின் குடும்பம் ரேணுகாபுரத்துக்குச் சென்று குடியேறியது. அங்கேயே உயர்நிலைப் பள்ளிவரை படித்த ராஜா கல்லூரிப் படிப்புக்காக சென்னைக்கு வந்தார். 1951ல் பச்சையப்பா கல்லூரியில் பிஏ (இளங்கலை) முடித்தார்.
திரையிசைப் பாடகராக
இசையார்வம் கொண்ட ஏ. எம். ராஜா கர்னாடக இசையிலும் மேற்கத்திய இசையிலும் தேர்ந்த பயிற்சி பெற்றிருந்தார். கல்லூரியிலேயே புகழ்பெற்ற பாடகராக விளங்கி பல போட்டிகளில் வென்றார். அவரை அடையாளம் கண்ட எச். எம். வி. நிறுவனம் இரண்டு தெலுங்கு மெல்லிசைப் பாடல்களைப் பாடுவதற்காக தேர்வு செய்தது.
ராஜாவே எழுதி இசையமைத்த பாடல்கள் அவை. அவற்றின் கருவியிசைப் பகுதிகளை நடத்தி பதிவுசெய்ய இசையமைப்பாளர் கே. வி. மகாதேவன் அவருக்கு உதவினார்.
இப்பாடல்கள் அகில இந்திய வானொலியில் புகழ்பெற்றன. ஒருநாள் பின்னிரவில் அவற்றைக் கேட்க நேர்ந்த ஜெமினி எஸ். எஸ். வாசன் கவரப்பட்டு தன்னுடைய பல மொழிப் படமான சம்சாரம் திரைப்படத்தில் தலைப்புப் பாடலைப் பாடும்படி அழைத்தார். சம்சாரம் பெரும் வெற்றி பெற்று பின்பு இந்தியிலும் எடுக்கப்பட்டது. எல்லா மொழியிலும் அப்பாடலை அவரே பாடினார்.
1951 இல் கே. வி. மகாதேவன் ஏ. எம். ராஜாவை அவரது குமாரி என்ற படத்தில் அழியாத காதல் வாழ்வில்... என்ற பாடலை பாடும்படி அழைத்தார். அன்றுவரை கர்நாடக இசையின் பாணியில் பாடப்பட்ட திரைப்பாடல்களைக் கேட்டுப் பழகிய தென்னிந்திய இசை ரசிகர்களுக்கு ராஜா ஒரு புதிய சுவையை அளித்தார்.
வட இந்திய திரைப்பாடல்கள் மற்றும் கஸல் பாடல்களிலிருந்து அவரே தனக்கென உருவாக்கிக்கொண்ட பாணி அது. இந்தி பாடகர்களான மொகம்மத் ராபி மற்றும் தலத் மெக்மூத் ஆகியோர் பாடும் முறைமைகளின் பல சிறப்பம்சங்களை எடுத்துக்கொண்டு அவர்களை ஒற்றியெடுத்தாற்போலப் பாடாது தனக்கே உரித்தான பாணியை உருவாக்கியவர் ஏ. எம். ராஜா.
துயரத்தையும் தாபத்தையும் தேக்கிய பாடல்களே ஏ. எம். ராஜாவை தமிழில் நீங்காப் புகழ்பெறச் செய்தன. சிற்பி செதுக்காத பொற்சிலையே, தென்றல் உறங்கிய போதும் போன்றவை சில எடுத்துக்காட்டுகள். மேலை இசையின் சாயல் கொண்ட துள்ளலான ‘ஆடாத மனமும் ஆடுதே’, ‘பாட்டுப் பாடவா பார்த்துப் பேச வா’, ‘ஓகோ எந்தன் பேபி’ போன்ற பாடல்களிலும் கூட ஒரு இனிமையான மென்மையைச்
சேர்ப்பது அவரது குரல், ‘மைனர் லைஃப் ரொம்ப ஜாலி’ போன்ற பாடல்களையும் அவர் தன் பாணியில் பாடியுள்ளார். முறையான கர்நாடக இசைப் பயிற்சி உள்ளவரென்பதனால் ஏ. எம். ராஜா மரபான முறையில் கர்நாடக ராகங்களுக்குள் அமைக்கப்பட்ட பாடல்களைக் கூட எந்தவிதமான முயற்சியும் தெரியாமல் சுருதித் தெளிவுடன் இயல்பாக பாடியுள்ளார்.
மீண்ட சொர்க்கம் படத்தில் வரும் ‘கலையே என் வாழ்க்கையின் வாகீச்வரி’ ராகத்தில் அமைந்த பாடல் தேன்நிலவு படத்தில் வரும் காலையும் நீயே ஹம்சத்வனி ராகத்தில் அமைந்தது.
அதே இயல்பு மாறா துல்லியத்துடன் வேகமான தாளம் கொண்ட வாடிக்கை மறந்ததும் ஏனோ, கண்மூடும் வேளையிலும் போன்ற பாடல்களையும் அவர் பாடியிருக்கிறார். மெல்லிய நடை கொண்ட நிலவும் மலரும் இதய வானின் உதய நிலவே கண்ணாலே நான் கண்ட கணமே போன்றவை அவரது குரலின் அழகை முழுக்க காட்டி நம் இழந்த வாழ்க்கையின் இனிய துயரங்களை தொட்டு மீட்டுபவை.
தன் உணர்ச்சிகளை மென்மையாக பாடல்களில் ஏற்றுவதன் மூலம் ஏ. எம். ராஜா மெட்டுக்கு அப்பால் சென்று பாடல்களுக்கு அளிக்கும் ஒரு தனித்துவம் உண்டு. மாசிலா உண்மைக்காதலே (அலிபாபாவும் 40 திருடர்களும்), கண்களின் வார்த்தைகள் புரியாதோ (களத்தூர் கண்ணம்மா) போன்ற பாடல்களை உதாரணமாகக் காட்டலாம்.
ஐம்பது அறுபதுகளில் புகழின் உச்சியில் இருந்த நாட்களில் ஏ. எம். ராஜா எம். ஜி. ஆர்., சிவாஜி கணேசன், என். டி. ராமராவ், ஏ. நாகேஸ்வரராவ், ஜெமினி கணேசன், சத்யன் பிரேம்நசீர் போன்ற பெரிய நட்சத்திரங்களுக்காக தொடர்ந்து பாடினார். பொதுவாக இளம் காதல் நாயகர்களான ஜெமினி கணேசன், பிரேம்நசீர் போன்றவர்களுக்கு அவரது குரல் பெரிதும் பொருந்தியது.
பி. பி. ஸ்ரீனிவாஸ் அறிமுகமாகி, ஜெமினி கணேசனுக்காகப் பாடத்துவங்கும் வரையிலும் ஜெமினியின் பாடற் குரலாகவே விளங்கியவர் ஏ. எம். ராஜா. ஜெமினி கணேசனுக்காக அவர் பாடிய படங்களில் கல்யாணப் பரிசு, மிஸ்ஸியம்மா, மனம் போல மாங்கல்யம், பூலோக ரம்பை, ஆடிப்பெருக்கு ஆகியவை இறவா வரம் பெற்றவை.
நடிகராக
ஏ. எம். ராஜா சில படங்களில் நடித்தும் இருக்கிறார். நாகேஸ்வர ராவ் நடித்து இரு மொழிகளில் பெருவெற்றி பெற்ற தேவதாஸ் படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் அவர் வந்தார். பின்னர் இசைக் கலைஞனைப் பற்றிய படமான ‘பக்க இந்தி அம்மாயி’ படத்தில் முதன்மை வேடத்தில் நடித்தார்.
அந்தப் படம் இந்தியில் பாடோசான் என்ற பேரில் மறுவாக்கம் செய்யப்பட்ட போது, அதில் கிஷோர் குமார் அந்த பாத்திரத்தில் பாடி நடித்தார். அந்தப் படம் சிலகாலம் கழித்து மீண்டும் ‘பக்க இந்தி அம்மாயி’ என்ற பேரிலேயே தெலுங்கில் எடுக்கப்பட்ட போது, ஏ. எம். ராஜா நடித்த பாத்திரத்தில் எஸ். பி. பாலசுப்பிரமணியம் நடித்தார்.
1955ல் மகேஸ்வரி என்ற படத்தின் அழகு நிலவின் பாவனையிலே என்ற பாடலின் ஒத்திகையின் போது ஏ. எம். ராஜா பாடகி ஜிக்கியிடம் தன் காதலை தெரிவித்தார். அது திருமணத்தில் முடிந்தது.
ஏ. எம். ராஜாவும் ஜிக்கியும்தான் பம்பாய்க்குச் சென்று இந்திப் படத்துக்காக பாடிய முதல் தென்னிந்தியப் பாடகர்கள். சங்கர் ஜெய்கிஷன் இசையில் ராஜ்கபூரின் ‘ன்’ படத்துக்காக இதேபடத்தின் தெலுங்கு, தமிழ் வடிவங்களுக்கான பாடல்களையும் அவர்கள் இருவரும்தான் பாடினர். பகுத் தின் ஹயே போன்ற படங்களுக்கும் அவர்கள் பாடினர். ராஜாவின் பாடும் முறையில் இருந்த ஒரு பொது இந்திய இயல்புக்கு இது சான்றாகும். கன்னடத்தில் அதி மதுர அனுராகா போன்ற புகழ்பெற்ற பாடல்களை ஏ. எம். ராஜா பாடினார். சிங்களப் படத்தில் கூட அவர் பாடியிருக்கிறார்.

சரோஜாதேவியின் தயக்கத்தை போக்கிய சிவாஜியின் யுக்தி

எழுத்தாளர்கள் லட்சுமி (டாக்டர் திரிபுரசுந்தரி) எழுதிய நாவலை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட படம். ‘இருவர் உள்ளம்’ (1963) ‘மனோகராவுக்குப் பிறகு கருணாநிதி சிவாஜிகணேசன், டைரக்டர் எல். வி. பிரசாத் ஆகிய மூவரும் இப்படத்தில் ஒன்று சேர்ந்தனர்.
கலைஞர் கரணாநிதி எபதிய வசனங்களை, முதல் தடவையாக சரோஜாதேவி பேசி நடித்தார். ‘என்கு என்ன அழகில்லையா, படிப்பிள்ளையா, பணம் இல்லையா? என்னை ஏன் திருமணம் செய்ய சம்மதிக்க மறுக்கிறாய்?’ என்ற சிவாஜி கேட்கும் கேள்விக்கு ‘படிப்பில் நீமேதையாக இருக்கலாம். பணத்தில் நீ குபேரனாக இருக்கலாம்.
அழகில் நீ மன்மதனாக இருக்கலாம். ஆனால் என்னை மணக்கும் கண்ணிம் உன்னிடம் இல்லை என்று சரோஜாதேவி பதில் வசனம் பேசவேண்டும். ஆனால் ஒரே தடவையில் இந்த வசனத்தைப் பேச முடியவில்லை.
உடனே, அவர் தயக்கத்தைப் போக்க சிவாஜி ஒரு யுக்தி செய்தார். சுற்றிலும் கூடியிருந்தவர்களை விலகிப் போகச் சொன்னார்.
‘தைரியமாகப் பேசு’ என்று சரோஜாதேவியை உற்சாகப்படுத்தினார். அதன்பின், ஒரே ‘டேக்’கில் அந்தக் காட்சி ‘ஓகே’ ஆயிற்று.

ஒப்பாரி பாடலை காதலிக்கு பாடலாக்கிய கவிஞர் கண்ணதாசன்

மனோரமாவை அறிமுகம் செய்து வைத்தவரும் இவரே

1958ல் வந்த படம் மாலையிட்ட மங்கை அப்படத்தில் இடம்பெற்றதுதான் ‘செந்தமிழ் தேன் மொழியாள்’ பாடல்.
இப்படத்தின் நாயகர் டி. ஆர். மகாலிங்கம். அக்காலத்தில் கதாநாயகனாக நடிப்பவரே பாடலைப் பாடவும் வேண்டும். அதாவது பாடியபடியே நடிக்க வேண்டும்.
பாடுவதில் டி. ஆர். மகாலிங்கம் ஒரு தனி முத்திரை பதித்தவர். அக்காலத்தில் மிக ராகமாக இழுத்து இழுத்துத்தான் பாடுவார்கள். அதை தகர்ந்தெறிந்து எளிமையான சொற்களை வைத்து மிக இனிமையாகப் பாடி எல்லோர் மனதில் அப்போது சிம்மாசனமிட்டு அமர்ந்த பாடல்தான் இந்த ‘செந்தமிழ் தேன் மொழியாள் நிலாவெனச் சிரிக்கும் மலர்க்கொடியாள்’ பாடல்.
இப்படத்தை இயக்கியவர் ஜீ. ஆர். நாதன். இப்பாடலுக்கு இசைச்சக்கரவர்த்திகளான எம். எஸ். விஸ்வநாதன், பி. ராமமுர்த்தி ஆகிய இருவரும் இணைந்து இசையமைத்துக் கலக்கினர். இப்பாடல் அன்று மட்டுமல்ல இன்றும் ஏன் என்றென்றும் மிகச் சிறந்த பாடலாக ரசித்துக் கேட்கப்படுவது இதன் தனிச்சிறப்பாகும்.
இப்பாடலை எழுதியது யார் தெரியுமா? இப்படத்தின் கதை வசனம், பாடல், தயாரிப்பு எல்லாம் நமது கவியரசு கண்ணதாசன்தான். மற்றொரு தகவல் என்னவென்றால் ஆச்சி மனோரமா இப்படத்தில்தான் அறிமுகமானார். அவரும் கண்ணதாசனின் கண்டுபிடிப்புதான்.
என்ன ஆச்சர்யமாக இருக்கா...! உண்மைதான்.. எல்லோரும் நம்மை மெட்டுக்கே பாட்டு எழுத சொல்கிறார்களே, நாமே படம் எடுத்தால் நமக்கு பிடித்த பாடல்களை எழுதிக் கொடுத்து இசையமைக்க சொல்லலாமே என்பதற்காக கண்ணதாசன் தயாரித்த படம் இப்படம் என்றும் சொல்வார்கள்.
சில்லென்று பூத்த சிறு நெருஞ்சிக் காட்டினுள்ளே
நில்லென்று சொல்லி நிறுத்தி வைத்துப் போனீரே என்பது தமிழ் நாட்டில் கண்ணதாசனுக்கு முன்னே நீண்ட நெடுங்காலமாக வழங்கி வந்த ஒப்பாரிப் பாடலாகும். கவியரசு அதைத் தன் பாட்டில் இணைத்தது எப்படி?
இதோ அதற்கான பதில்
இப்பாடலிற்கான பாடல் பதிவு நடந்து கொண்டிருந்தது. அந்த நேரம், ‘தென்றல்’ பத்திரிகை அலுவலகத்தில், கண்ணதாசன் எழுதிக் கொண்டிருந்தார். அப்போது எம். எஸ். விஸ்வநாதனிடம் இருந்து போன் வந்தது. ‘அண்ணே பாட்டு நல்லா வந்திருக்கு இருந்தும், ஏதோ ஒரு குறை தெரியுது... மன நிறைவா இல்லை நேரில வாங்க பாட்டைக் கேட்டுட்டு என்ன செய்யலாம்ன்னு யோசிக்கலாம்” என்றார். உடனே புறப்பட்டார் கவிஞர். பாடலைக் கேட்டார். பிரமாதமாகப் பாடியிருந்தார் டி. ஆர். மகாலிங்கம் இருந்தாலும். ஒரு ‘பெப்’ இல்லை என்பதை உணர்ந்து கொண்டார் கவிஞர்.
‘விசு கொஞ்சம் பொறு’ என்றபடி வெளியே வந்து மரத்தடியில் இங்குமங்கும் நடத்தபடி இருந்தார். அப்போது அவர் காலில் ஒரு நெரிஞ்சி முள் குத்திவிட்டது. குனிந்து முள்ளைப் பிடுங்கி எறிந்துவிட்டு நிமிர்ந்தவர். ‘விசு... விசு’ என கூவியபடி ஒலிப்பதிவு அறைக்கு வந்து எழுதச் சொன்னார். ‘சில்லென்று பூத்த சிறு நெருங்சிக் காட்டினிலே, நில்லென்று கூறி நிறுத்தி வழி போனாளே! நின்றது போல் நின்றாள், நெடுந்தூரம் பறந்தாள், நிற்குமோ, ஆவி நிலைக்குமோ நெஞ்சம்! மணம் பெறுமோ வாழ்வே” என்று விருத்தம் பாடி ‘அவள் செந்தமிழ்த் தேன் மொழியாள்’ என பாடலைத் துவங்கச் சொல்” என்றார்.
ஒப்பாரிப் பாடலை... அழகான காதலிக்கு பாடலாக்கியது கவிஞரின் புலமைக்கு சான்றல்லவா...!

அஞ்சலியின் உதடுகளை தீண்ட ஆர்யாவுக்கு அதிர்ஷ்டம்

சீமலா பாலைத் தொடர்ந்து தற்போது அஞ்சலியின் உதடுகள் ஆரியாவின் கஸ்டடிக்குப் போகப் போகிறது. சேட்டை படத்திற்காக இருவரும் சேர்ந்து ஒரு லிப் லாக் காட்சியில் லவ்லியாக க(ந)டிக்கப் போகிறார்களாம்.
டெல்லி பெல்லி இந்திப் படத்தை சேட்டை என்ற பெயரில் ரீ மேக் செய்கின்றனர். கண்ணன் இயக்குறார் ஆர்யா ஹீரோவாக நடிக்கிறார். பிரேம்ஜி, சந்தானம் காமெடியைக் கவனிக்கிறார்கள். நாயகியாக மசாலா கபே அஞ்சலி.
டெல்லி பெல்லியின் சூடான, சுவையான லிப்லாக் உண்டு. அதேபோல் சேட்டையிலும் இருக்கிறதாம். அஞ்சலி உதடுகளை ஆர்யா கவ்விக் கொள்வது போல காட்சி வைத்துள்ளனராம்.
இந்த லிப்லாக்கின் அவசியம், முக்கியத்துவம், கட்டாயம் குறித்து ஆர்யாவிடமும், அஞ்சலியிடமும் கண்ணன் விளக்கினாராம். இதை ஏற்று இருவரும் முத்தமிட்டுக் கொள்ள சம்மதித்து விட்டனராம்.
இந்த ஒப்பந்தத்தைத் தொடர்ந்து காட்சியை வடிவமைத்து விட்ட கண்ணன், அக்காட்சியை மும்பையில் போய் ஷ¥ட் செய்ய திட்டமிட்டுள்ளாராம்.
இதையடுத்து ஆரியாவும், அஞ்சலியும் தங்களது உதடுகளுடன் மும்பை செல்ல தயாராகிக் கொண்டிருக்கிறார்களாம். அதேசமயம், டெல்லி பெல்லியில் வருவது போன்ற படுக்கை அறைக் காட்சி சேட்டையில் இருக்காதாம்.
ஏற்கனவே அமலா பாலின் உதட்டில் விளையாடியுள்ள ஆர்யா, இப்போது அஞ்சலியிடம் வருகிறார்...

ஆப்கானிஸ்தானில் விஸ்வரூபம்

ஹொலிவுட் பாணியில் தயாராகி இருக்கும் விஸ்வரூபம் படத்தின் டிரைலர் மற்றும் படக் காட்சிகளை கடந்த சில தினங்களுக்கு முன்னர் சிங்கப்பூர் சர்வதேச இந்திய திரைப்பட விருது விழாவில் வெளியிட்டார் நடிகர் கமல்ஹாசன், பயங்கரவாதமும், அதற்கு எதிரான போராட்டம்தான் படத்தின் கதை என்பது ட்ரைலரை பார்க்கும் போதே தெரிகிறது- அமெரிக்கா, ஆப்கானிஸ்தானில் இதுவரை பார்த்திராத இடங்களில் காட்சிகளை எடுத்திருக்கிறார்கள்.
ஒன்றரை நிமிடம் ஓடும் இந்த ட்ரைலரில், படத்தின் பிரமாண்டம் தெரிகிறது. அதுமட்டுமல்ல படத்தில் கதக் டான்சராகவும் மிரட்டியுள்ளார் கமல்.
விஸ்வரூபம் படம் குறித்து சிங்கப்பூரில் கமல் கூறியதாவது :-
கடந்த 7 வருடங்களாக என் மனதில் பதிந்திருந்த கதைதான் விஸ்வரூம். அமெரிக்காவில் தனது மேற்படிப்பை முடிக்க நினைத்த ஒரு நடுத்தர வர்க்க தமிழ்ப் பெண் நிருபமா. அங்குள்ள விஸ்வநாதனை திருமணம் செய்துகொள்கிறாள். 3 வருடம் காதல், ஊடல், கூடலின்றி இல்லறம் நடத்தி பி. எச். டி. முடித்து வேலைக்கும் செல்கிறாள்.
தனது நடன பள்ளியை சம்சாரம் இடைஞ்சலின்றி நடத்தி வருகிறார் விஸ்வநாத். ஆசை யாரை விட்டது. நிருபமா வேறு புதுக்கனவு காணுகிறாள். திருமணத்தை துறக்க விரும்புகிறாள் மன முறிவிற்கு என்ன காரணம் சொல்வது என குழம்புகிறாள். விஸ்வநாத்திடம் ஏதாவது களங்கம் உள்ளதாக என்பதை துப்பறிய ஒரு ஆளை அமர்த்துகிறாள். கிணறு வெட்ட பூதம் கிளம்பிய கதையாகிறது என்றோடு முடித்து கொண்ட கமல் மீதியை திரையில் நீங்களே பாருங்கள் என்று கூறி முடித்துவிட்டார்.

தாயாக சங்கீதா தாத்தாவாக சத்யராஜ்

நடிகை சங்கீதா எத்தனையோ தமிழ் படங்களில் நடித்தும் அவருக்கு பெயர் வாங்கிக் கொடுத்தது பிதாமகன் படம் தான். அந்தப் படத்துக்காக அவருக்கு பிலிம்பேர் விருதும், சிறந்த துணை நடிகைக்கான தமிழக அரசின் விருதும் கிடைத்தன. அதையடுத்து அவர் நடித்த உயிர் படத்தில் அவரது நடிப்பு பேசப்பட்டது. அதன் பிறகு கமல்ஹாசனின் மன்மதன், அம்பு படத்தில் அவரது நடிப்புக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.
சங்கீதா பாடகர் கிருஷ்-ஐ கடந்த 2009 ஆம்ஆண்டு பெப்ரவரி மாதம் 1 ஆம் திகதி திருவண்ணாமலையில் உள்ள அருணாச்சலேஸ்வரர் கோவிலில் வைத்து மணந்தார். திருமணமாகி மூன்று ஆண்டுகளுக்கு பிறகு தற்போது அவர் கர்ப்பமாக இருக்கிறார். இன்னும் ஒரு சில மாதங்களில் தாயாகிவிடுவார் என்று கூறப்படுகிறது.
இதற்கிடையே, நடிகர் சத்யராஜ் தாத்தாவாகப் போகிறார். அதாவது அவரது மகன் சிபிராஜ் தந்தையாகப் போகிறார். மேலும் இயக்குனர் வெங்கட் பிரபு மீண்டும் அப்பாவாகிறார். அவருக்கு ஏற்கனவே ஷிவாணி என்ற மகள் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

குனிந்து நிமிரும ;போது குதூகலம் தந்த உடை

கொஞ்சம் அரோகன்டான நடிகை என்றுதான் அம்மணிக்கு பெயர். குணத்தில் மட்டுமல்ல ஒன்றாக இருக்கும் குடும்பத்தைப் பிரிப்பதிலும் நடிகையின் மூர்க்கம் கோடம்பாக்கம் அறிந்ததுதான்.
மிக சமீபத்தில் அண்மையில் ஒரு பேஷன் ஷோ நிகழ்ச்சியில் கலந்துகொள்ள சென்றிருக்கிறார் இந்த நடிகை. ஏடாகூடமான உடையில் எக்கச்சக்க கவர்ச்சி ததும்ப வந்திருந்தாராம்.
அவர் ஒவ்வொரு முறை குனிந்து நிமிரும்போதும் புகைப்படக்காரர்கள் வேறு பக்கம் பார்க்கும்படி இருந்ததாம் நிலைமை. அவர் எதையும் கண்டு கொள்ளாமல், மீண்டும் மீண்டும் குனிந்து நிமிர, எதற்கும் இருக்கட்டுமே என்று ஒரு க்ளிக் அடித்திருக்கிறார் போட்டோகிராபர்.
அவ்வளவுதான், கோபத்தின் உச்சிக்கே போய்விட்ட நடிகை, போட்டோகிராபரை அருகில் அழைத்து பளார் விட்டாராம். கடுமையாக அவரை எச்சரித்ததோடு, அந்த போட்டோக்களையும் அழித்துவிட்டாராம்.
கன்னத்தைத் தடவிக் கொண்டே கேமராவைக் கொடுக்கும்போது நடிகை குனிந்து நிமிர்ந்ததை கடைசியாகப் பார்த்தபடி வெளியேறினாராம் போட்டோகிராபர்.

ஏற்கனவே அமலா பாலின் உதட்டில் விளையாடியுள்ள ஆர்யா, இப்போது அஞ்சலியிடம் வருகிறார்...!

குனிந்து நிமிரும்போது குதூகலம் தந்த உடை

கொஞ்சம் அரோகன்டான நடிகை என்றுதான் அம்மணிக்கு பெயர். குணத்தில் மட்டுமல்ல ஒன்றாக இருக்கும் குடும்பத்தைப் பிரிப்பதிலும் நடிகையின் மூர்க்கம் கோடம்பாக்கம் அறிந்ததுதான்.
மிக சமீபத்தில் அண்மையில் ஒரு பேஷன் ஷோ நிகழ்ச்சியில் கலந்துகொள்ள சென்றிருக்கிறார் இந்த நடிகை. ஏடாகூடமான உடையில் எக்கச்சக்க கவர்ச்சி ததும்ப வந்திருந்தாராம்.
அவர் ஒவ்வொரு முறை குனிந்து நிமிரும்போதும் புகைப்படக்காரர்கள் வேறு பக்கம் பார்க்கும்படி இருந்ததாம் நிலைமை. அவர் எதையும் கண்டு கொள்ளாமல், மீண்டும் மீண்டும் குனிந்து நிமிர, எதற்கும் இருக்கட்டுமே என்று ஒரு க்ளிக் அடித்திருக்கிறார் போட்டோகிராபர்.
அவ்வளவுதான், கோபத்தின் உச்சிக்கே போய்விட்ட நடிகை, போட்டோகிராபரை அருகில் அழைத்து பளார் விட்டாராம். கடுமையாக அவரை எச்சரித்ததோடு, அந்த போட்டோக்களையும் அழித்துவிட்டாராம்.
கன்னத்தைத் தடவிக் கொண்டே கேமராவைக் கொடுக்கும்போது நடிகை குனிந்து நிமிர்ந்ததை கடைசியாகப் பார்த்தபடி வெளியேறினாராம் போட்டோகிராபர்.

Wednesday, June 6, 2012

தமிழ்த் திரையுலகில் முதன் முதல் ரூ. ஒரு இலட்சம் சம்பளம் வாங்கிய நடிகை

10 வயதில் ரயிலில் பாடி சம்பாதித்த சுந்தராம்பாள்

nஹீன்னக மேடைக் கலைஞர், இந்திய நாடகராணி, இசைவாணி, சுதந்திர போராட்ட முதல் கலையுலகப் பிரஜை, தமிழ்த் திரை உலகில் முதன் முதல் ஒரு இலட்சம் ரூபா சம்பளம் வாங்கிய நடிகை இப்படிப் பல சிறப்புகளையும் ஒருங்கே பெற்றவர் திருமதி சுந்தராம்பாள்.
கொடுமுடி சுந்தரம் என்றழைக்கப்பட்ட இவர் 1908 இல் பிறந்தார். சிறு வயதிலேயே நல்ல குரல் வளம் கொண்டிருந்ததால் அனைவரும் இவரைப் பாடச் சொல்லிக் கேட்பது வழக்கம். பத்து வயதில் ஏழ்மை காரணமாக ரயிலில் பாடி சம்பாதித்தார். ஊர்மக்கள் கோவிலிலும் பாடச் சொல்லிக் கேட்பதுண்டு.
நடேச ஐயர் என்ற நாடக நடிகர், தயாரிப்பாளர், பின்னர் முனிசிபல் சேர்மன் என்பவரும், பொலிஸில் சேவை பார்த்த கிருஷ்ணசாமி என்பவரும் சுந்தரத்திற்கு மிகவும் உதவ, சிறு வேடங்களில் நடிக்க ஆரம்பித்தார். பிறகு வேலு நாயர் கும்பகோணம் அழைத்துச் சென்று தன் நாடகக் கம்பெனியில் நடிக்க வைத்தார். சிறுமி தன் பாட்டாலும், நடிப்பாலும் எல்லோரையும் கவர்ந்தாள்.
1927 இல் தன்னுடன் நடித்த எஸ்.ஜி. கிட்டப்பாவை மணந்து கொண்டார்.
இவர் நடித்த ‘வள்ளி திருமணம்’, ‘பவளக்கொடி’, ‘ஹரிச்சந்திரா’ பெரும் வெற்றியைத் தந்தன. 1931 ஆம் ஆண்டு தமிழின் முதல் பேசும் படமான ‘மஹா கவி காளிதாஸ்’ மிகப் பெரிய வெற்றி அடைந்தது. இருவரும் காங்கிரஸ் அபிமானிகள் என்பதால், நாடக மேடையில் காதி உடுத்தி சுதந்திர எழுச்சிப் பாடல்கள் பாடி மக்களுக்கு விழிப்பு ஊட்டினர்.
துரதிர்ஷ்டவசமாக கிட்டப்பா 1933 இல் மரணமடைந்தார். நடிப்பதை விட்டு விட்டு சோகத்தில் இருந்தவரை, காந்தி அடிகள் நேரில் சென்று தேசப்பாடல்கள் பாட அழைத்தார். அதனால் மீண்டும் நடிக்க வந்த அவர் செய்த சாதனைகள் அதிகம்.
அவர் நடித்த திருவிளையாடல், ஒளவையார், நந்தனார், மணிமேகலை, காரைக்கால் அம்மையார், கந்தன் கருணை, வீர சுந்தரி, பூம்புகார், சக்தி லீலை, திருமலை தெய்வம், உயிர்மேல் ஆணை, துணைவன் படங்கள் அவர் பாடிய பாடல்களால் ஓடியது என்றால் அது மிகையல்ல. பல பாடல்களின் இனிமை எல்லோரையும் பாட வைத்தது.
காங்கிரஸ் தலைவர் சத்தியமூர்த்தியும், காமராஜரும் அரசியலுக்கு அழைக்க 1951 ஆம் ஆண்டு சென்னை சட்ட மன்ற மேல் சபை உறுப்பினரானார்.
பாட்டுக்காக இரு முறை தேசிய விருது பெற்றுள்ளார். 1964 இல் இசைச் சங்கம் “தமிழிசை பேரறிஞர்” என கெளரவித்தது. ‘70 இல் இந்திய அரசு கலைத் துறையில் ‘பத்ம ஸ்ரீ’ பட்டம் அளித்தது.
இன்று வரை இவர் பாடிய “பழம் நீ அப்பா”, “வாழ்க்கை என்னும் ஓடம்”, சிறைச்சாலை என்ன செய்யும்” போன்ற பாடல்கள் செவிகளைக் குளிர வைக்கின்றன.

பஜனை பாடி கிடைக்கும் 5 ரூபாயில் ஓடியதுதான் டி.எம்.எஸ்ஸின் ஜPவனம்

இவர் இரு படங்களில் கதாநாயகனாக நடித்தவர்

டி. எம். எஸ்..... தமிழ் மக்களைத் தனது காந்தர்வக் குரலால் கட்டிப்போட்ட ஏழிசை வேந்தன். தமிழ் மொழியை அதற்கே உரிய அழகோடு தெள்ளத் தெளிவாக உச்சரித்துப் பாடிய பாட்டுத் தலைவன்!
டி. எம். எஸ். என்பதில் உள்ள ‘எஸ்’ என்றால் செளந்தரராஜன், ‘எம்’ என்பது அவரின் தந்தை மீனாட்சி அய்யங்கார் ‘டி’ என்பது அவரின் குடும்பப் பெயர் ‘தொகுளுவா’. கர்ப்பம் தரித்திருக்கும் பெண்களுக்கு சத்து மாவு தயாரித்துத் தருவதில் பிரபலமான குடும்பம் அவருடையது!
டி. எம். எஸ் ஸ¤க்கு டி. எம். எஸ்ஸே சொல்லும் வேறு சில விளக்கங்கள் சுவையானவை. தியாகராஜ பாகவதர் (டி), மதுரை சோமு (எம்), கே. பி. சுந்தராம்பாள் (எஸ்) ஆகிய மூவரையும் தன் மானசீக குருமார்களாக வைத்திருப்பதையே இது குறிக்கிறது என்பார்.
தவிர, தியாகைய்யர் (டி), முத்துசாமி தீட்சிதர் (எம்), சியாமா சாஸ்திரிகள் (எஸ்) ஆகிய இசை மும்மூர்த்திகளின் அனுக்கிரகமும் தனக்குக் கிடைத்துள்ளதையே இது குறிப்பிடுகிறது என்று மகிழ்வார். மதுரை வரதராஜப் பெருமாள் கோயிலில் பூசாரியாகப் பணியாற்றியவர் டி. எம். எஸ்ஸின் தந்தை மீனாட்சி அய்யங்கார்.
டி. எம். எஸ்ஸின் முதல் பாடல் ‘ராதே என்னை விட்டு ஓடாதேடி’ ஒலிப்பதிவான இடம் கோவை சென்ட்ரல் ஸ்டுடியோ. 60 ஆண்டுகளுக்குப் பிறகு, ஒரு தொலைக்காட்சித் தொடருக்காக, மீண்டும் அங்கே போய், இடிபாடாகக் கிடந்த அதே பழைய ஒலிப்பதிவு அறையில் நின்று மீண்டும் அதே பாடலைப் பாடி மகிழ்ந்திருக்கிறார்.

டி. எம். செளந்தரராஜன் பற்றி சுவையான சிறு குறிப்புகள்
மதுரை, வரதராஜப் பெருமாள் கோயில் வளாகத்திலேயே ஓர் ஓரமாக பெஞ்சுகள் போட்டு, இந்தி வகுப்புகள் நடத்தியது தவிர வேறு ஏதும் வேலை பார்த்தது இல்லை. மற்றபடி எல்லாக் கோயில் விஷேசங்களுக்கும் சென்று, பஜனைப் பாடல்கள் பாடி, கிடைக்கும் ஐந்து ரூபாய், பத்து ரூபாய், வெற்றிலை பாக்கு, பழத்தில்தான் அவரின் ஜீவனம் ஓடியது!
டி. எம். எஸ்ஸின் முருக பக்தி அனைவருக்கும் தெரியும். ‘கற்பனை என்றாலும் கற்சிலை என்றாலும்...’, ‘உள்ளம் உருகுதய்யா முருகா’, ‘சொல்லாத நாளில்லை சுடர்மிகு வடிவேலா’, ‘மண்ணானாலும் திருச்செந்தூரில் மண்ணாவேன் போன்ற உள்ளம் உருக்கும் பலப்பல முருகன் பாடல்களுக்கு இசையமைத்துப் பாடியவர்!
டி. எம். எஸ். இசையமைத்துப் பாடிய ‘கற்பகவல்லி நின் பொற்பதங்கள் பிடித்தேன்’ இன்றளவிலும் நேயர்களால் விரும்பிக் கேட்கப்படும் பக்திப் பாடல். இந்திப் பாடலில் ஒவ்வொரு பந்தியிலும் ஒரு குறிப்பிட்ட ராகத்தின் பெயர் இடம்பெறும். அந்தந்தப் பந்தியை அந்தந்த ராகத்திலேயே இசையமைத்துச் சாதனை செய்தார்!
‘அடிமைப் பெண்’ படத்தின் போதுதான் டி. எம். எஸ்ஸின் மகளுக்குத் திருமணம். ‘பாடி முடித்துவிட்டுத்தான் போக வேண்டும்’ என்று எம். ஜி. ஆர். உத்தரவிட்டும் கோபத்தில் கிளம்பிச் சென்றுவிட்டார் டி. எம். எஸ். அந்தப் பாடல் வாய்ப்பு அப்போதுதான் திரையுலகில் இளம் பின்னணிப் பாடகராக நுழைந்திருந்த எஸ். பி. பாலசுப்பிரமணியமுக்குக் கிடைத்தது. அந்தப் பாடல்தான். ‘ஆயிரம் நிலவே வா’
பொது நிகழ்ச்சிகளுக்குத் தங்க நகைகள் அணிந்து செல்வதில் விருப்பம் உள்ளவர். ‘இல்லாட்டி ஒருத்தனும் மதிக்க மாட்டான்யா! பாவம் டி. எம். எஸ்ஸ¤க்கு என்ன கஷ்டமோன்னு உச்சுக் கொட்டுவான். அதனால், இந்த வெளிவேஷம் தேவையா இருக்கு’ என்பார்!
கவிஞர் வாலியைத் திரை உலகுக்கு அழைத்து வந்தது டி. எம். எஸ். அந்த நன்றியை இன்று வரையிலும் மறவாமல் ‘இப்போ நான் சாப்பிடுற சாப்பாடு டி. எம். எஸ். போட்டது’ என்று சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் நெகிழ்வார் வாலி!
‘நீராரும் கடலுடுத்த..’ என்னும் தமிழ்த் தாய் வாழ்த்துப் பாடலையும், ‘ஜன கண மன’ என்னும் தேசிய கீதத்தையும் யாரும் பாட முன்வராத நிலையில் டி. எம். எஸ்ஸ¤ம் பி. சுசீலாவும் இணைந்து பாடித் தந்தது அந்நாளில் பரபரப்புச் செய்தியாக இருந்தது!
தனலட்சுமி என்ற பெண்ணைக் காதலித்தார். அவர்கள் சற்று வசதியான குடும்பம் என்பதால், டி. எம். எஸ்ஸ¤க்குப் பெண் தர மறுத்துவிட்டார்கள். காதல் தோல்வி பாடலைப் பாட நேரும் போதெல்லாம், அந்த தனலட்சுமியின் முகம் தன் மனக் கண்ணில் தோன்றுவதாகச் சொல்வார் டி. எம். எஸ்.
‘வசந்தமாளிகை’ படத்தில் வரும் ‘யாருக்காக’ பாடலை பாடும்போது, அதற்கு எக்கோ எஃபெக்ட் (எதிரொலி) வைக்கச் சொன்னார். ‘அதெல்லாம் வீண் வேலை’ என்று தயாரிப்பாளர் மறுத்துவிட ‘எக்கோ எஃபெக்ட்’ வைத்தால்தான் பாடுவேன் என்றார் தீர்மானமாக. தியேட்டரில் எக்கோ எஃபெக்ட்டுடன் அந்தப் பாடல் பிரமாண்டமாக ஒலித்தபோது, ரசிகர்களிடையே எழுந்த கைத்தட்டலைக் கண்டு வியந்தார் தயாரிப்பாளர்.
வெஸ்டர்ன் டைப்பில் விஸ்வநாதன் இசையமைத்த பாடல் ‘யாரந்த நிலவு... ஏன் இந்தக் கனவு’ கனத்த குரலுடைய டி. எம். எஸ்ஸால் இதைப் பாட முடியுமா என்று தயாரிப்பாளருக்குச் சந்தேகம். எதிர்பார்த்ததை விட அற்புதமாகப் பாடி அத்தனை பேரையும் அசத்திவிட்டார் டி. எம். எஸ்.!
காஞ்சிப் பெரியவர், புட்டபர்த்தி சாய்பாபா இருவரிடமும் மிகுந்த பக்திகொண்டவர் டி. எம். எஸ். இவரது வீட்டுக்கு பகவான் சாய்பாபா ஒரு முறை வருகை தந்திருக்கிறார். காஞ்சிப் பெரியவர், டி. எம். எஸ்ஸை ‘கற்பகவல்லி’ பாடச் சொல்லிக் கேட்டு மகிழ்ந்து, தான் போர்த்தியிருந்த சிவப்புச் சால்வையைப் பரிசாக அளித்ததைத் தனது பாக்கியமாகச் சொல்லி மகிழ்வார்! கடவுள் பக்தி அதிகம் உள்ளவர் டி. எம். எஸ். கண்ணதாசன் எழுதிய ‘கடவுள் மனிதனாகப் பிறக்க வேண்டும்: அவன் காதலித்து வேதனையில் சாக வேண்டும்’ என்ற வரிகளைப் பாட மறுத்துவிட்டார். பின்னர், கவிஞர் ‘சாக வேண்டும்’ என்பதை ‘வாடவேண்டும்’ என்று மாற்றித் தந்த பிறகே பாடினார்!
நீளமான குடுமியும் வடகலை நாமமும் டி. எம். எஸ்ஸின் ஆதி நாளைய அடையாளங்கள். சினிமாவில் வாய்ப்புத் தேடும் பொருட்டு கோயம்புத்தூர் வருவதற்கு முன்பாக, இதே கோலத்தில் தன்னை ஒரு புகைப்படம் எடுத்துக்கொண்டு விட்டு பின்பு குடுமியை எடுத்துவிட்டுக் கிராப் வைத்துக்கொண்டார். நாமம் அகன்று, பட்டையாக விபூதி பூசியதும் அப்போது தான்!
எம். ஜி. ஆர்., சிவாஜி, கருணாநிதி, ஜெயலலிதா என அனைவரிடமும் நெருங்கிப் பழகியிருந்தாலும், இன்று வரையில் தனக்காக எந்த ஒரு விஷயத்துக்கும், யாரிடமும் சிபாரிசுக்காக அணுகாதவர்!
‘பாகப் பிரிவினை’ படத்தில் 100 வது நாள் விழாவில் இயக்குநர், நடிகர் எனப் பலருக்கும் விருது வழங்கப்பட, பாடகர்களுக்கு மட்டும் விருது இல்லை. இது பாரபட்சமானது என்று கருதிய டி. எம். எஸ். விழாவில் ‘கடவுள் வாழ்த்து’ பாட மறுத்துவிட்டார். அதன் பின்னர்தான் பட விழாக்களில் பாடகர்களுக்கும் விருதுகள் வழங்கப்பட்டன.
‘நவராத்திரி’ படத்தில் சிவாஜி கணேசனின் ஒன்பது வித்தியாசமான வேடங்களுக்கும் ஏற்ப தன் குரலை வித்யாசப்படுத்திப் பாடியிருப்பார் டி. எம். எஸ்.
‘பட்டினத்தார்’, ‘அருணகிரிநாதர்’ என இரண்டு படங்களில் கதாநாயகனாக நடித்திருக்கிறார்’
மத்திய அமைச்சர் மு. க. அழகிரி, டி. எம். எஸ்ஸின் பரம ரசிகர். காரில் பயணம் செய்யும் போதெல்லாம், டி. எம். எஸ். பாடிய ஏதாவதொரு பாட்டு ஒலித்துக்கொண்டே இருக்கும்!
தமிழில் மட்டும் 10,000 க்கும் மேற்பட்ட சினிமா பாடல்களைப் பாடியுள்ளார். தவிர, தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழி படங்களிலும் சில பாடல்களைப் பாடியுள்ளார். (அவரே இசையமைத்துப் பாடிய பக்திப் பாடல்கள் மேலும் சில ஆயிரங்கள் இருக்கும்.) சக பாடகர்கள், தொழிலோடு தொடர்புடையவர்கள் தவிர தனிப்பட்ட நண்பர்கள் வட்டாரம் என்று டி. எம். எஸ்ஸ¤க்கு எதுவும் இல்லை.

அக்காவாக நடிக்க அசின் மறுப்பு

நடிகை அசின் பொலிவுட்டில் பெரிய ஆளாகிவிட வேண்டும் என்ற குறிக்கோளோடு நடித்து வருகிறார். ஷங்கரின் புதிய படத்தில் அவர் நடிப்பதாக பேச்சு அடிபட்டது. ஆனால் அதுவும் இல்லை என்றாகிவிட்டது.
இந்நிலையில் லிங்குசாமி, மாதவன், ஆர்யா, சமீரா ரெட்டி, அமலா பாலை வைத்து எடுத்த வேட்டையை இந்திக்கு கொண்டு செல்லத் திட்டமிட்டுள்ளார். நம்ம ஊர்ல இருந்து அங்க போன பொண்ணாச்சே என்று நினைத்து சமீரா ரெட்டி கதாபாத்திரத்தில் நடிக்க அசினை அணுகியுள்ளார். அதற்கு அசின் ஆளை விடுங்க என் நைசாக நழுவி விட்டார்.
இதற்கு அசின் கொடுத்துள்ள விளக்கம். பல கதாநாயகிகள் உள்ள படத்தில் நடிக்க நான் ரெடியாக இல்லை. அதிலும் அக்கா ரோலுக்கு நான் ஆளில்லை. மேலும் எனக்கு கால்iட் பிரச்சினையும் உள்ளது என்று கூறியுள்ளார்.

சமந்தாவுக்கு மிகப் பெரிய வாய்ப்பு

சமந்தாவிற்கு இந்த வருடம் சூப்பராக தான் அமைந்துள்ளது போல, கெளதம் மேனன், மணிரத்தினம் போன்ற மெகா இயக்குநர்களின் படங்களில் கதாநாயகியாக நடிக்கிறார்.
இதனையடுத்து, பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் விக்ரம் கதாநாயகனாக நடிக்கும் படத்தில் கதாநாயகியாக சமந்தா நடிக்கிறார்.
இது சமந்தாவிற்கு கிடைத்த மிகப் பெரிய வாய்ப்பு. தமிழ்ச் சினிமாவில் ஒரு வலம் வருவதற்கு முன்பே இவருக்கு ஏகப்பட்ட வாய்ப்புக்கள் ஷங்கர் இயக்கும் இந்தப் படத்திற்கு ‘தேர்தல்’ எனப் பெயரிடப்பட்டுள்ளதாக தெரிகிறது.
மேலும் படத்திற்கு ஒளிப்பதிவாளராக பி. சி. ஸ்ரீராமும், இசையமைப்பாளராக ஏ. ஆர். ரகுமானும் பணியாற்றுகின்றனர்.

ஏ.ஆர்.ரகுமானின் சம்பளம் 1 1/2 கோடி ரூபா

தமிழில் ‘ரோஜா’ படத்தின் மூலம் இசை அமைப்பாளராக அறிமுகமானவர் ஏ. ஆர். ரகுமான். தமிழ், தெலுங்கு, மட்டுமல்லாத இந்திப் படங்களிலும் புகழ் பெற்றார். பின்னர் ஹொலிவுட் படங்களுக்கும் இசை அமைத்தார்.
ஸ்லம்டாக் மில்லியனர் ஆங்கிலப் படத்துக்காக ஏ. ஆர். ரகுமான் ஒஸ்கார் விருதுகள் பெற்றார். ஏ. ஆர். ரகுமானுக்கு உலகம் முழுவதும் இளம் ரசிகர்கள் இருப்பதால் அவரது இசைக்கு மவுசு ஏற்பட்டுள்ளது. ஒவ்வொரு படத்துக்கும் சிரத்தை எடுத்துக் கொண்டு இசை அமைக்கிறார். இதற்கு நீண்ட காலம் எடுத்துக் கொள்கிறார்.
இதனால் ஏ. ஆர். ரகுமானின் சம்பளம் படத்துக்கு படம் உயர்ந்து கொண்டே போகிறது. தற்போது ரகுமான் ‘சேன்டல் உட்’ என்ற கன்னட படத்துக்கு இசை அமைத்து வருகிறார். இது தமிழில் அஜீத் நடித்த ‘வரலாறு’ படத்தின் கன்னட ரீமேக் ஆகும்.
அஜீத் கேரக்டரில் பிரபல கன்னட நடிகர் உபேந்திரா நடிக்கிறார். இந்தப் படத்தில் ரகுமான் இசை அமைக்க

ரூபா 1 1/2 கோடி சம்பளம் என்று கூறப்படுகிறது. இது எந்த இசை அமைப்பாளரும் வாங்காத சம்பளம் என்றும் பேசப்படுகிறது.
ஏ. ஆர். ரகுமானுக்கு இது 2வது கன்னடப் படம் ஆகும். இதற்கு முன் ‘சஜினி’ படத்துக்கு இசை அமைத்துள்ளார். இதில் தமிழில் வெளியான ‘ஜோடி’ பட பாடலை கன்னடத்தில் பயன்படுத்தி இருந்தார்.

ஹன்சிகாவின் அதிர்ஷ்ட எண்

தமிழ், இந்தியில் முன்னணி நடிகையான ஹன்சிகா தற்போது சேட்டை, வாலு, சிங்கம் – 2, வேட்டை மன்னன் படங்களில் நடித்து வருகிறார். பெரிய கதாநாயகர்களுடன் ஜோடி சேர்வதால் சம்பளத்தையும் உயர்த்தி விட்டார். சமீபத்தில் வெளிநாட்டு சொகுசு கார் ஒன்றையும் வாங்கியுள்ளார்.
இதுகுறித்து ஹன்சிகா கூறியதாவது :-
நான் சொகுசு கார் வாங்கியுள்ளேன். 20வது வயதில் பி. எம். டபுள்யூ வெளிநாட்டு சொகுசு காருக்கு உரிமையாளராகி இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. எனது தாய் மற்றும் சகோதரனை காரில் உட்கார வைத்து ஓட்டிச் சென்றேன், இது சந்தோஷமான அனுபவமாக இருந்தது. எனது அதிர்ஷ்ட எண் 9. அந்த நம்பரே காருக்கும் கிடைத்து உள்ளது. இந்த வருடம் எனக்கு சிறப்பாக அமைந்து இருக்கிறது. இவ்வாறு ஹன்சிகா கூறினார்.

சிரஞ்சீவி மகன் திருமணத்தில் ஸ்ரேயா, தமன்னா நடனம்

பிரபல தெலுங்கு நடிகர் ராம்சரண். இவர் சிரஞ்சீவியின் மகன் ஆவார். தெலுங்கில் ராம்சரண் நடித்து வெற்றிகரமாக ஓடிய ‘மகதீரா’ படம் தமிழில் ‘மாவீரன்’ என்ற பெயரில் ரிலீசானது.
ராம்சரனுக்கு திருமணம் நிச்சயமாகி உள்ளது. மணமகள் பெயர் உபாசனா காமினேனி. இவர் அப்பலோ ஆஸ்பத்திரியின் தலைவர் பிரதாப் ரெட்டியின் பேத்தி ஆவார்.
ராம்சரண் உபாசனா திருமணம் வருகிற 14ந் திகதி ஐதராபாத்தில் நடக்கிறது. திருமண சடங்குகள் இரு தினங்களுக்கு முன்னதாகவே வருகிற 11ந் திகதி துவங்குகிறது. அன்றைய தினம் மணமகளுக்கு மருதாணி சடங்கு நடக்கிறது. இதில் நடிகைகள் ஸ்ரேயா, தமன்னா இருவரும் நடனம் ஆட ஒப்புக் கொண்டு உள்ளனர். பல்வேறு தெலுங்கு பாடல்களுக்கு ஆடுகிறார்கள்.
தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுனும் அவர்களுடன் நடனம் ஆடுகிறார். 12ம் திகதி இரு வீட்டாரும் முத்தயாலம்மா கோவிலுக்கு சென்று வழிபடுகிறார்கள். நடிகர் நடிகைகளுக்கும் முக்கிய பிரமுகர்களுக்கும் ராம்சரண் அழைப்பிதழ் கொடுத்து வருகிறார்.