Wednesday, October 24, 2012

குஜராத் குதிரையின் படவேட்டை

நமீதாவின் மிட்நைட் பார்ட்டி
தமிழக ரசிக பெருங்குடி மக்களை மச்சான்ஸ் என்று ஆசை ஆசையாக அழைப்பவர் நமீதா. ஆனால் என்ன காரணமோ ரசிகர்களின் மனதில் இன்னமும் நிறைந்திருக்கும் நமீதாவுக்கு சினிமாக்காரர்களின் மனதில்தான் இடமில்லை.
தினம் தினம் இயக்குனர் மற்றும் படாதிபதிகளை துரத்தி சான்ஸ் கேட்டு வருவதை இன்றுவரை அவர் விட்டபாடில்லை. தற்போது அரிராஜனின் இளமை ஊஞ்சல் படத்தில் நடித்து வருபவர், இந்தப் படம் திரைக்கு வரும் நேரத்தில் மேலும் சில படங்களை எப்படியேனும் பிடித்து விட வேண்டும் என்பதற்காக சில குறுக்கு வழிகளில் இறங்கியிருக்கிறார்.
அதன் முதல் கட்டமாக கடந்த வாரத்தில், சென்னையிலுள்ள பிரதான ஸ்டார் ஹோட்டல் ஒன்றில் சில சினிமா நபர்களை வரவைத்து விடிய விடிய மதுபான பார்ட்டி வைத்திருக்கிறார் நமீதா. இந்த சம்பவம் கோலிவுட்டில் காதும் காதும் வைத்த மாதிரி பரவி வருவதையடுத்து, நமீதாவின் பெயரை சொன்னாலே ஜொள் ஊறும் சில நரைமுடி சினிமா பிரபலங்களும் அம்மணியின் அழைப்புக்காக சீக்ரெட்டாக தொடர்பு கொண்டு வருகிறார்களாம். குஜராத் குதிரையின் இந்த படவேட்டையில் யார் யாரெல்லாம் பலியாகப் போகிறார்கள் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.


தாயுடன் தோன்றி அசத்திய விஜய்

விஜய்யுடன் சேர்ந்து நடித்தது ரொம்ப மகிழ்ச்சி அளிக்கிறது. பல வருடங்களுக்கு பிறகு எனது மகன் விஜய்யை மடியில் கிடத்தி கொஞ்சி மகிழும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்த ஜோஸ் அலுக்காஸ் நிறுவனத்திற்கு என் நன்றிகள் என விஜய்யின் அம்மா ஷோபா சந்திரசேகர் தெரிவித்துள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் விஜய், தனது படவேலைகளுக்கு மத்தியில் பல்வேறு விளம்பரப் படங்களில் நடித்துள்ளார். தமிழில் ஜோஸ் அலுக்காஸ் நிறுவனத்தின் விளம்பர தூதராகவும் இருக்கிறார்.
இந்நிலையில் விஜய்யும், அவரது அம்மாவும் பாடகியுமான ஷோபா சந்திரசேகர் இருவரும் முதன் முறையாக ஜோஸ் அலுக்காஸ் நிறுவனத்தின் புதிய விளம்பரத்தில் தோன்றி நடித்துள்ளனர். விஜய், தனது அம்மா ஷோபா சந்திரசேகரின் மடியில் படுத்தபடி பாசத்தை பொழிவது போன்றும், ஷோபாவும் விஜய் மீது பாசத்தை பொழிவது போன்றும் அந்த விளம்பரம் எடுக்கப்பட்டுள்ளது.
ரொம்ப தத்ரூபமாக எடுக்கப்பட்டுள்ள இந்த விளம்பரம் மக்களிடம் வெகு சீக்கிரத்தில் ரீச்சாகி உள்ளது. காரணம் அம்மா- மகன் பாசத்தை வெளிப்படுத்தும் விதத்தை அப்படியே ரியலாக எடுத்துள்ளனர். டென்ஸ் ஏஜென்ஸி மைண்ட் ஷேர் இன்டர்நேஷனல் நிறுவனம் இந்த விளம்பரத்தை உலகம் முழுக்க ரிலீஸ் செய்கிறது. தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மூன்று மொழிகளிலும் இந்த விளம்பரம் வெளியாகிறது.
இந்த விளம்பரத்தில் நடித்ததை ரொம்ப பெருமையாக கருதுகிறார் ஷோபா. இது குறித்து அவர் மகிழ்ச்சி பொங்க கூறியிருப்பதாவது, சின்ன வயதில் எனது மகனை (விஜய்) மடியில் கிடத்தி கொஞ்சி மகிழ்ந்தது உண்டு. இபபோது பெரிய ஸ்டாராகிவிட்டதால் நிற்க கூட நேரமின்றி ஷ¥ட்டிங், ஷ¥ட்டிங் என்று ஒடிக்கொண்டு இருக்கிறார்.
அப்படி இருக்கையில் பல வருடங்களுக்கு பிறகு மீண்டும் எனது மகனை எனது மடியில் கிடத்தி கொஞ்சி மகிழும் வாய்ப்பு கிடைத்தது. 2 நாளும் எனது மகனுடன் சேர்ந்து நடித்து, அவனுடன் கொஞ்சி மகிழ்ந்தது. மறக்க முடியாத அனுபவமாக இருந்தது. இப்படி ஒரு சந்தர்ப்பத்தை ஏற்படுத்தி கொடுத்த ஜோஸ் அலுக்காஸ் நிறுவனத்திற்கு எனது நன்றிகள் என்று கூறியுள்ளார்.
மேலும் இந்தக் காட்சிகள் படமாக்கி முடிக்கப்பட்டவுடன் உணர்ச்சி வசப்பட்டு அழுதே விட்டார் ஷோபா. ஷ¥ட்டிங், ஷ¥ட்டிங் என்று விஜய் பிஸியாக இருந்ததால் அவருடன் அதிக நேரம் செலவிட முடியவில்லையாம் ஷோபாவுக்கு நீண்ட நாட்களுக்கு பிறகு அப்படி ஒரு வாய்ப்பு அமைந்ததால் உணர்ச்சிவசப்பட்டு அழுததாக ஷோபா கூறியுள்ளார்.

எந்திரனில் ரோபோ ரஜpனி கண்ணாடி அணிந்ததன் ரகசியம்

எந்திரன் படத்தில் ரோபோ ரஜினி எப்போதுமே கண்ணாடி அணிந்து நடித்ததன் காரணம் தற்போது வெளியாகியுள்ளது.
ஏதோ விஞ்ஞானியான வசியையும், ரோபோ கதாபாத்திரமான சிட்டியையும் வேறுபடுத்திக் காட்ட ஷங்கர் செய்த வியூகம் இது என்று நாம் நினைத்திருந்தோம். ஆனால் அது விஷ¤வல் கிராபிக்ஸ்க்கு ஆகும் செலவை பண்மடங்கு குறைக்க எடுத்த முடிவு என்று இப்போதுதான் தெரிய வந்துள்ளது.
எந்திரன் படத்தில் விஷ¤வல் எபெக்ட்டுக்காக திட்டமிடப்பட்டிருந்தது ரூ. 70 கோடி. ஆனால், மூன்றே மூன்று விஷயங்களைக் கடைப்பிடித்து விஷ¤வல் எபெக்டுக்கான செலவை ரூ. 30 கோடியாக குறைத்துள்ளார் விஷ¤வல் எபெக்ட் கண்காணிப்பாளர் ஸ்ரீனிவாஸ் மோகன். விஷ¤வல் எபெக்டில் கண்களின் அசைவை துல்லியமாகக் கொண்டுவர நீண்ட நேரம் ஆகும். எனவேதான், ஷங்கரிடம் பேசி, ரோபோ ரஜினிகாந்தின் உடலில் மூன்று விதமான மாற்றங்களைச் செய்ய ஆலோசனை கூறினேன்.
முதலில் எப்போதுமே கூலிங் கிளாஸ் அணிந்து தோன்றுவது இதனால் கண்களின் அசைவை உருவாக்க அதிக நேரம் செலவிடத் தேவையில்லை.
பிறகு அதிகமாக அசையும் தலை முடியை ஒருபோல் குட்டையாகக் காண்பிப்பது, லெதர் ஆடை அணிவது போன்றவை கடைப்பிடிக்கப்பட்டதாகவும், இதனால் 70 கோடி ரூபாயில் இருந்து 20 கோடி ரூபாவாக விஷ¤வல் எபெக்டுக்கான செலவு குறைக்கப்பட்டதாகவும் ஸ்ரீனிவாஸ் கூறியுள்ளார்.

சென்னையில் ஒரு நாள்

சில வருடங்களுக்கு முன் சென்னையில் மூளைச்சாவு ஏற்பட்டு மரணம் அடைந்த சிறுவன் இதயந்திரன், தனது உடல் உறுப்புகளை வேறு ஒரு நோயாளிக்கு பொருத்தியதை செய்தித்தாள்கள் மூலம் நாம் படித்திருப்போம். இந்த உண்மை செய்தியை மலையாளத்தில் டிராபிக் என்ற பெயரில் சீனிவாசன் இயக்கி இருந்தார்.
பல விருதுகளை, பாராட்டுகளை பெற்ற இப்படம் இப்போது தமிழுக்கு வர இருக்கிறது. மலையாள படங்களில் உதவி இயக்குநராக பணிபுரிந்த சையத் என்பவர் இப்படத்தை சென்னையில் ஒருநாள் என்ற பெயரில் இயக்க உள்ளார். மலையாளத்தில் செய்ய முடியாத சில விஷயங்களை தமிழில் செய்துள்ளார்.
இந்தப் படத்தில் பெரும் நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர். பிரகாஷ்ராஜ் சுப்பர் ஸ்டார் நடிகராகவும், அவர் மனைவியாக ராதிகாவும், பிரசன்னா டொக்டராகவும், சரத்குமார் பொலிஸ் அதிகாரியாகவும், சச்சின் பத்திரிகையாளராகவும், இவர்கள் தவிர பலரும் நடித்துள்ளனர்.
இதில் யாருக்கும் யாரையும் தெரியாது. சென்னையில் ஒருநாள் காலையில் நடக்கும் சம்பவம், அன்று மாலையில் இவர்கள் எவ்லோரையும் சேர்த்து வைக்கிறது. இவர்கள் சேர்ந்து செய்யும் செயலை ஒரு திரைக்கதையாய் கொண்டு வந்துள்ளார் இயக்குநர்.

இந்திய திரை உலகில் வரதராஜ பெருமாளின் மகள் நீலாம்பரி

,ந்திய திரை உலகத்தில் இலங்கைத் தமிழ் பிரபலம் ஒருவருடைய வாரிசு இடம்பிடித்து இருக்கின்றார் என்று சொல்லப்படுகின்றது. அவர் இலங்கையின் வட மாகாண முன்னாள் முதலமைச்சர் வரதராஜ பெருமாளின் மகள் நீலாம்பரி பெருமாள் ஆவார்.
மலையாள திரை உலகம் இவருடைய அழகையும், நடிப்புத் திறமையையும் அடையாளம் கண்டுகொண்டது. மலையாள திரைப்படமான பம்பாய் மிட்டாயில் கொலை ஒன்றுக்கு பின்னால் உள்ள மர்மத்தை கண்டுபிடிக்கின்ற ஊடகவியலாளராக நடிதது இருந்தார்





நான் பாடும் பாடல் நலமாக வேண்டும்...

நான் பாடும் பாடல் நலமாக வேண்டும்
இசை வெள்ளம் நதியாக ஓடும்
அதில் இள நெஞ்சம் படகாக ஆடும் (நான் பாடும்...)

தாழம்பூவில் காணும் பொன்வண்ணம்
நாளும் வாழும் தோகைப் பூங்கன்னம் (2)
எங்கே நானென்று தேடட்டும் உன்னை
சிந்தாத முத்தங்கள் சிந்த (2)
அவளெந்தன் மனமேடை தவழ்கின்ற பணிவாடை (2)
காலம் கொண்டாடும் கவிதை மகள்
கவிதை மகள்.... (நான் பாடும்)

நாதத்தோடு கீதம் உண்டாக
தாளத்தோடு பாதம் தள்ளாட (2)
வந்தால் பாடும் என் தமிழுக்குப் பெருமை
வாராதிருந்தாலோ தனிமை (2)
நிழல்போலுன் குழலாட தளிர்மேனி எழுந்தாட (2)
அழகே என் பின்னால் அன்னம் வரும்
அன்னம் வரும்.... (நான்)

13 வயதிலேயே மேடை கச்சேரி நிகழ்த்திய பெருமைக்குரியவர் எம்.எஸ்.வி.

இசை என்பது ஒழுங்குபடுத்தப்பட்ட கட்டுப்படுத்தப்பட்ட அழகு ஒலி, இசை என்றால் இசையவைப்பது. மனிதர்களையும் உயிரினங்களையும் இசைய வைக்கின்ற பணிய வைக்கின்ற ஓர் அழகு சாதனம் இசை. இசை மக்களின் இதயங்களை இணைக்கும் பாலம். சோகம், இன்பம், துன்பம், அச்சம் ஆகிய அடிப்படை உணர்ச்சிகளை வழங்குவது இசை.
அதனால் தான் இசைக்கு மயங்காதார் எவருமில்லை. இசை கேட்டால் புவி அசைந்தாடும் என்றெல்லாம் இசையின் மகிமையை புகழ்ந்துரைப்பர் சான்றோர்கள்.
இப்படிப்பட்ட இன்றியமையாத் தன்மை வாய்ந்த இசையின் மூலம் நம் உள்ளங்களை எல்லாம் கொள்ளை கொண்டவர்கள் எம்.எஸ். விஸ்வநாதன் மற்றும் டி.கே. ராமமூர்த்தி, இசைப் பின்னணி ஏதுமில்லாத ஏழ்மை குடும்பத்தில் பிறந்த எம்.எஸ். விஸ்வநாதன் நான்கு வயதில் தனது தந்தையை இழந்த சூழ்நிலையில் நீலகண்ட பாகவதரிடம் இசையினை பயின்று 13வது வயதிலேயே மேடைக் கச்சேரி நிகழ்த்திய பெருமைக்குரியவர்.
புரட்சித் தலைவர் எம்.ஜி.அர். நடித்த ஜெனோவா திரைப்படம் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமாகிய எம்.எஸ். விஸ்வநாதன், பணம் திரைப்படம் முதல் ஆயிரத்தில் ஒருவன் திரைப்படம் வரை டி.கே. ராமமூர்த்தியுடன் இணைந்து 700 க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்து இருக்கிறார்.
தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி என பல்வேறு மொழிகளில் 1,200க்கும் அதிகமான திரைப்படங்களுக்கு இசையமைத்து ஆயிரக்கணக்கான பாடல்களுக்கு மெட்டமைத்த பெருமை எம்.எஸ்.வி.யையே சாரும். 50 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ்த் திரைப்பட உலகில் கோலோச்சிக் கொண்டிருக்கும் ஒரே இசையமைப்பாளர் எம்.எஸ்.வி. தான். முன்னூறுக்கும் மேற்பட்ட இசைக் கருவிகளை கொண்டும் பாடலுக்கு இசையமைத்து இருக்கிறார். மூன்றே இசைக் கருவிகளை வைத்தும் பாடலுக்கு இசையமைத்து இருக்கிறார் எம்.எஸ்.வி.
ஆர்மோனியம், பியானோ, கீ போர்டு என மூன்றையும் பிரமாதமாக வாசிக்கும் திறன் பெற்றவர் எம்.எஸ்.வி. தனித்தன்மை வாய்ந்த தனது குரலின் மூலம் 500க்கும் மேற்பட்ட பாடல்களை பாடிய ஒரே இசையமைப்பாளர் எம்.எஸ்.வி. மற்ற இசையமைப்பாளர்கள் இசையமைத்த திரைப்படங்களில் பாடிய பெருமையும் மனப் பக்குவமும் இவரைத் தவிர வேறு யாருக்கும் இல்லை. பிற இசையமைப்பாளர்களுடன் இணைந்தும் இசையமைத்து இருக்கிறார். அந்தக் காலத்தில் பல இசைக் கலைஞர்களுக்கு சாப்பாட்டிற்கே வழி இல்லை. இவருடைய குழுவில் சேர்ந்தவுடன் அவர்களுக்கு சாப்பிட நேரமில்லை. வறுமையில் வாடிய பல கலைஞர்கள் இவர் மூலம் வளம் பெற்றனர்.
இவை எல்லாவற்றிற்கும் மேலாக தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலான நீராருங் கடலுடுத்த என்ற பாடலுக்கு இசையமைத்து அனைத்து தமிழர்களின் நெஞ்சங்களிலும் நீக்கமற நிறைந்து இருப்பவர் எம்.எஸ். விஸ்வநாதன்.
டி.கே. ராமமூர்த்தி மெல்லிசை மன்னர் மட்டுமல்ல வில்லிசை மன்னரும் கூட இசைப் பாரம்பரியம் மிக்க குடும்பத்தில் பிறந்தவர்.
மிகப் பெரிய வயலின் வித்வான். பணம் படைத்தவன் என்ற திரைப்படத்தில் வரும் கண் போன போக்கிலே கால் போகலாமா, கால் போன போக்கிலே மனம் போகலாமா என்ற பாடலில் வரும் சோக இசை டி.கே. ராமமூர்த்தியின் வயலின் இசையாகும். சி.ஆர். சுப்பராமன் என்ற மிகப் பெரிய இசையமைப்பாளரின் குழுவில் வயலின் வாசித்துக் கொண்டிருந்தவர் டி.கே. ராமமூர்த்தி அப்போது அதே குழுவில் ஆர்மோனியம் வாசித்துக் கொண்டிருந்தவர் எம்.எஸ். விஸ்வநாதன்.
எதிர்பாராத சூழ்நிலையில் சுப்பராமன் இயற்கை எய்திய போது அவர் விட்டுச் சென்ற திரைப்படங்களுக்கு விஸ்வநாதன் ராமமூர்த்தி இருவரும் இணைந்து இசையமைத்து அதன் தொடர்ச்சியாக பல திரைப்படங்களுக்கு இசையமைத்து நம்மை எல்லாம் இசை என்னும் இன்பக் கடலில் மூழ்கடித்தவர்கள்.


 

விபரம் தெரியாத வயதில் தாயை இழந்த ரஜpனி

ரஜினி காந்த் கர்நாடகத்தில் பிறந்து வளர்ந்தாலும் தாய் மொழி மராத்தி. குழந்தையாக இருக்கும்போதே ரஜினி துறுதுறுப்பும், புத்திசாலித்தனமும் மிகுந்தவராக விளங்கினார். ஐந்தாவது வயதில் பாலர் பாடசாலையில் சேர்க்கப்பட்டார். படிப்பிலும், விளையாட்டிலும் கெட்டிக்காரராக விளங்கினார்.
ரஜினிகாந்த் ஒன்பது வயது சிறுவனாக இருந்தபோது தாயாரை இழந்தார். உடல் நிலை கவலைக்கிடமாகி ஆஸ்பத்தியில் இருந்த தாயாரைப் பார்க்க ரஜினியை அவர் அண்ணன் சத்தியநாராயணா அழைத்துச் சென்றார். தன் முடிவு நெருங்கிவிட்டதை அறிந்த ராம்பாய், ரஜினியை தன் அருகே அழைத்து தலையைக் கோதிவிட்டார். கையை எடுத்து முத்தமிட்டார். அதுதான் மகனுக்கு அவர் கொடுத்த கடைசி முத்தம்; மறுநாள் இறந்து விட்டார்.
விவரம் அறியாத சிறு வயதிலேயே அன்னையை இழந்தார் ரஜினி. தாயார் இறந்துவிட்டார். இனி அவரைப் பார்க்க முடியாது என்பதைக்கூட அப்போது அவரால் உணர முடியவில்லை. இதுபற்றி ரஜினியின் அண்ணன் சத்தியநாராயணா ஒரு கட்டுரையில் எழுதியிருப்பதாவது :-
சின்ன வயதில் ரஜினி ஒரு விளையாட்டுப் பிள்ளையாகத் தான் இருந்தான். அம்மா இறந்த போது அவனுக்கு வயது 9. விவரம் தெரியாத வயது. அம்மா உடலை, மாலை போட்டு வைத்திருந்தோம். அப்போதுகூட அம்மா இறந்ததை உணராமல் வீதியில் சைக்கிள் விட்டுக் கொண்டிருந்தான்.
அம்மா தூங்கிக் கொண்டிருப்பதாக அவனுக்கு நினைப்பு. மறுநாள் வீட்டில் அம்மா இல்லை என்று தெரிந்ததும், அம்மா எங்கே? அம்மாவைப் பார்க்கணும் என்று அழுதான். அன்று முதல் அவனுக்கு அம்மா என் மனைவிதான். அண்ணியிடம் ரொம்பவும் பாசமாக இருப்பான். வீட்டு வேலைகளில் ஒத்தாசை செய்வான்.
நான் வீட்டுக்கு வந்ததும், அவன் இருக்கிறானா என்றுதான் முதலில் பார்ப்பேன். அவனைப் பார்க்காமல் ஒருநாள் கூட தூங்கியது கிடையாது. தினமும் அவன் நண்பர்களுடன் சுற்றிவிட்டு, லேட்டாகத்தான் வீட்டுக்கு வருவான். அது எனக்குப் பிடிக்காது சத்தம் போடுவேன். சில சமயம் அடித்தும் இருக்கிறேன். ஆனால் அதையெல்லாம் அவன் பெரிதாக நினைக்க மாட்டான். உடனே சமாதானமாகி என் பக்கத்தில் வந்து உட்காருவான். ஒன்றாக உட்கார்ந்து சாப்பிடுவோம்.
இவ்வாறு சத்தியநாராயணா குறிப்பிட்டுள்ளார்.
தாயார் பற்றி பிறகு ரஜினிகாந்த் கூறுகையில் :-
அம்மா இறந்தபோது நான் விவரம் அறியாத சிறுவனாக இருந்தேன். இப்போது எந்தத் தாயைப் பார்த்தாலும் எங்கம்மாவை நினைத்து ஏங்குகிறேன். அன்னை ஓர் ஆலயம் படத்தில் நான் நடித்தபோது அம்மா, நீ சுமந்த பிள்ளை என்ற பாடல் காட்சியில் நான் நிஜமாகவே என் அம்மாவை நினைத்து அழுதுவிட்டேன் என்று குறிப்பிட்டுள்ளார்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், சின்ன வயதில் முரட்டு சுபாவம் உள்ளவராக இருந்தார். நண்பர்களுடன் சேர்ந்து மது அருந்துவது, பெண்களை விரட்டுவது போன்ற செயல்களில் ஈடுபட்டார்.
மகன், கல்லூரியில் படித்து பட்டம் பெற்று, பொலிஸில் பெரிய அதிகாரியாக வேண்டும் என்பது ரஜினியின் தந்தை ஆசை. ஆனால் ரஜினிக்கு படிப்பில் நாட்டமில்லை. நண்பர்களுடன் சேர்ந்து ஊர் சுற்றிக் கொண்டிருந்தார்.
வாலிப வயதில் அடியெடுத்து வைக்கும்போது பருவத்தின் உந்துதலாலும், நண்பர்களின் பழக்கவழக்கங்களினாலும் தவறு செய்வோர் பலர்.
ரஜினியின் இளமைப் பருவத்திலும் இதுபோன்ற நிகழ்ச்சிகள் நடந்தன. அரும்பிக்கொண்டிருந்த மீசை நன்றாக இருக்க வேண்டும் என்று கருதி, மையினால் மீசை வரைந்து கொள்வார். சிகரெட் பிடிப்பார்.
ஒரு கட்டுரையில் அவர் கூறியிருப்ப தாவது :-
‘16 வயதில் ராமகிருஷ்ணா மிஷன் பள்ளியில் சேர்ந்தபோது இந்த அரகன்ஸ் முரட்டுத்தனம் கொஞ்சம் மட்டுப்பட்டன. பிரேயர், பிராணயாமம் எல்லாம் செய்தபோது என் சுபாவங்கள் சற்று குறைந்தன. ஆனால் எஸ். எஸ். எல். சி. முடித்தபின் மீண்டும் மூத்த வயது நண்பர்கள் கிடைத்தார்கள்.
முரட்டுத்தனம் மறுபடியும் வந்துவிட்டது. முரட்டுத்தனம் என்றால் சன்டை மாத்திரம் அல்ல. ‘நீ ஒரு கிளாஸ் சாராயம் குடிப்பியா? நான் 6 கிளாஸ் சாராயம் குடிப்பேன்’ என்று சவால் விடுகிற முரட்டுத்தனம். மற்றவர்கள் பார்வையை நம் மீது திருப்ப வேண்டும் என்ற வெறி. இவ்வாறு ரஜினி கூறியுள்ளார்.
ஒருமுறை ஒரு பெண்ணை விரட்டிச் சென்றபோது அவள் பொலிஸாரிடம் புகார் செய்ய பொலிஸார் ரஜினியையும், அவருடைய நண்பர்களையும் பிடித்து பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்றுவிட்டார்கள். ரஜினியின் தந்தை தலைமை பொலிஸ்காரர் என்பதையும் சிறந்த சேவை செய்ததற்காக அரசாங்க விருது பெற்றவர் என்பதையும் அறிந்து கொண்ட பொலிஸார் ரஜினியை விடுவித்து வீட்டில் கொண்டுபோய் விட்டனர்.
நடந்ததை அறிந்த ரஜினியின் அண்ணன் சத்தியநாராயணாவுக்கு கோபம் பொங்கியது. ரஜினியை செம்மையாக அடித்து நொறுக்கினார். ரஜினிகாந்த் சிறு வயதிலேயே பயம் இல்லாதவராக துணிச்சல் மிக்கவராக இருந்தார். அவர் ஆறாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கும் போது பள்ளிக்கூடத்துக்கு அருகில் உள்ள காட்டில் பூதச்சாமியார் என்று ஒரு சாமியார் இருப்பதாக மாணவர்கள் பேசிக்கொள்வார்கள்.
‘பூதமாவது சாமியாராவது’ என்று ரஜினி கேலி செய்வார் ‘அப்படியானால் நீ காட்டுக்கு தன்னந் தனியாகச் சென்று அந்த சாமியாரைப் பார்த்துவிட்டு வா பார்க்கலாம்!’ என்று மற்ற மாணவர்கள் சவால் விட்டனர்.
சவாலை ஏற்ற ரஜினி தன்னந்தனியாக காட்டுக்குள் நுழைந்தார். கால்போன போக்கில் வெகு தூரம் சென்றுவிட்டார். சாமியாரைக் காணோம் நடு காடு இருள் சூழ்ந்து கொண்டு வந்தது. ஆள் அரவமே இல்லை.
ரஜினிக்கு லேசாக பயம் வந்தது. அந்தச் சமயத்தில் ‘வா மகனே வா’ என்று ஒருகுரல் கேட்டது. ரஜினி திரும்பிப் பார்த்தார். அங்கே ஒரு சாமியார் நின்று கொண்டிருந்தார். வயது சுமார் 60 அல்லது 70 இருக்கும்.
தலைமுடி சடை சடையாகத் தொங்கியது. ரஜினி அவர் அருகில் சென்றார். அவர் ஏதோ மந்திரம் சொல்லி, அதை திருப்பிச் சொல்லும்படி ரஜினியிடம் கூறினார். அதன்படி ரஜினி திருப்பிச் சொன்னார். ‘இப்போது நீ திரும்பிப் போ நாளைக்கு வா’ என்று சொன்னார் சாமியார்.
ரஜினி காட்டுக்குள் போய் வெகு நேரமாகத் திரும்பி வராததால் அவருடைய நண்பர்கள் பயந்து போய்விட்டார்கள். அப்போது ரஜினிகாந்த், பூதச் சாமியாரை பார்த்துவிட்டேன்’ என்று கூறிக்கொண்டே ஓடிவந்தார்.
‘நிஜமாகவா! சாமியாரை பார்த்தாயா!’ என்று நண்பர்கள் வியப்புடன் கேட்டார்கள். நடந்த விவரங்களை எல்லாம் அவர்களிடம் ரஜினி கூறினார்.
தைரியமாக நடுக்காட்டுக்கு போய் சாமியாரைப் பார்த்துவிட்டுத் திரும்பிய ரஜினியை நண்பர்கள் பாராட்டினார்கள்.
மறுநாள் பூதச் சாமியாரை ரஜினி போய்ப் பார்த்தார். தொடர்ந்து சில நாட்கள் சென்று வந்தார். ரஜினிக்கு யோகாவையும், சில மந்திரங்களையும் சாமியார் கற்றுக்கொடுத்தார். பிறகு, ‘எதிர்காலத்தில் நீ பெரிய ஆளாக வருவாய்’ என்று ஆசீர்வதித்து அனுப்பி வைத்தார்.






Wednesday, October 17, 2012

 

பம்பரக்கண்ணாலே காதல் சங்கதி சொன்னாளே...

படம்: மணமகன் தேவை பாடியவர்: சந்திரபாபு இசை: எம். எஸ். வி.
பம்பரக்கண்ணாலே காதல் சங்கதி சொன்னாளே
பம்பரக்கண்ணாலே காதல் சங்கதி சொன்னாளே
தங்கச்சிலைபோல் வந்து மனதை தவிக்கவிட்டாளே
தங்கச்சிலைபோல் வந்து மனதை தவிக்கவிட்டாளே
பம்பரக்கண்ணாலே காதல் சங்கதி சொன்னாளே
தங்கச்சிலைபோல் வந்து மனதை தவிக்கவிட்டாளே
கட்டாணி முத்தழகி காணாத கட்டழகி
தொட்டாலும் கை மணக்கும் சிங்காரி
கட்டாணி முத்தழகி காணாத கட்டழகி
தொட்டாலும் கை மணக்கும் சிங்காரி
தொட்டாலும் கை மணக்கும் சிங்காரி
கட்டுப்படி ஆகலே காதல் தரும் வேதனை
கட்டுப்படி ஆகலே காதல் தரும் வேதனை
தங்கச்சிலைபோல் வந்து மனதை தவிக்கவிட்டாளே
பம்பரக்கண்ணாலே காதல் சங்கதி சொன்னாளே
தங்கச்சிலைபோல் வந்து மனதை தவிக்கவிட்டாளே
கண்டவுடன் காதலே கொண்டாளே நெஞ்சிலே
பெண்டாட்டி ஆகிடும் நாள் எப்போது
கண்டவுடன் காதலே கொண்டாளே நெஞ்சிலே
பெண்டாட்டி ஆகிடும் நாள் எப்போது - என்
பெண்டாட்டி ஆகிடும் நாள் எப்போது
திண்டாடி தவிக்கிறேன் தினம் தினமும் துடிக்கிறேன்
திண்டாடி தவிக்கிறேன் தினம் தினமும் துடிக்கிறேன்
தங்கச்சிலைபோல் வந்து மனதை தவிக்கவிட்டாளே
பம்பரக்கண்ணாலே காதல் சங்கதி சொன்னாளே
தங்கச்சிலைபோல் வந்து மனதை தவிக்கவிட்டாளே

முதன் முதலில் பெண்ணாக நடித்து அசத்தியவர் பாலாஜp

திவான்பகதூர், ரங்காச்சாரி அவர்களின் பேரன். இவர் சென்னை, புரசைவாக்கத்தில் இருக்கும் எம்.ஸி.டி. உயர்நிலைப் பள்ளியில் படித்துக்கொண்டிருந்த போது, மாடப்புறா டைரக்டர் எஸ்.ஏ. சுப்பராமன் அப்பள்ளியில் ஆசிரியராகப் பணிபுரிந்து வந்தார். பள்ளி நாடகங்களை அவர்தான் டைரக்ட் செய்வார்.
எதிரொலி என்ற நாடகத்தின் போது தலைமை ஆசிரியராக இருந்த கோபாலகிருஷ்ணய்யர் மேக்கப் அறைக்கு வந்தார். அங்கே எழிலே உருவாய்ப் பூத்து குலுங்கிய மங்கை ஒருத்தி, தலைமை ஆசிரியருக்குக் கை கூப்பி வணக்கம் செய்தாள்! ஆண்கள் பள்ளியில் மாணவர்கள் நடிக்கும் நாடகத்தில் ஒரு பெண்ணா என எண்ணிய அவர் ‘மிஸ்டர் சுப்பராமன்’ என்று கூப்பிட்டு சுப்பராமனை கோபத்தோடு அழைத்துக்கொண்டு வெளியே போனார். ‘என்ன இது! உங்கள் நாடகத்தில் பெண்கள் நடிக்கப் போவதாக என்னிடம் சொல்லவே இல்லையே? இது மகா தவறு’ என்றார்.
சுப்பராமன் சிரித்தபடி ‘சார் மன்னிக்கணும். அது பெண் அல்ல! நம்ம பள்ளி மாணவன்தான் சார்’ என்றார். தலைமை ஆசிரியருக்கு ஆச்சர்யம் தாள முடியவில்லை. அத்தனைப் பொருத்தமாகப் பெண் வேடம் அமைந்த அந்த நடிகர், படித்துக்கொண்டிருந்த போதே ஜெமினியின் ஒளவையார் படத்தில் முருகனாகத் தோன்றினார். பின்னர் தன் தந்தை பணியாற்றிய போஸ்ட் மாஸ்டர் ஜெனரல் ஒபீசிலேயே ஒரு குமாஸ்தாவாகச் சேர்ந்தார்.
சில மாதங்களில் அதை இராஜினாமா செய்து விட்டு நரசு ஸ்டூடியோவில் புரொடக்ஷன் மனேஜராகப் பணியாற்றினார். பின்பு அதையும் விட்டுவிட்டுத் திரையுலகில் நுழைந்து நடிப்பில் தீவிரமாக கவனம் செலுத்த ஆரம்பித்தார். முன்பு சோழவரத்தில் நடைபெற்ற நட்சத்திரங்கள் பங்கெடுத்துக் கொண்ட கார் பந்தயத்தில் முதலாவதாக வந்தார். கார் என்றால் இவருக்கு அலாதி ஆசை!
இவருடைய பிள்ளை சுரேஷ் நடிப்பில் தந்தையை மிஞ்சி விடுகிறானாம். இந்த நடிகரின் பெயர் பாலாஜி.

தருமி முதல் தசாவதாரம் வரை

நாகேஷ் என்றால் நகைச்சுவை புத்திசாலித்தனமான பாவனை வெளிப்பாடும் டைமிங் சென்ஸ¤ம் உடல் மொழியும் அவருடைய நகைச்சுவைக்குத் தனி ஈர்ப்பைத் தருகின்றன.
திருவிளையாடல், பாமா விஜயம், காதலிக்க நேரமில்லை. ஆயிரத்தில் ஒருவன் சர்வர் சுந்தரம் போன்றவை அவருடைய முதல் ரவுண்டு கொமெடிகள் உடல் சேட்டைகளும் ஓங்கி ஒலிக்கும் குரலும் பிரதானமாக இருந்தன. அதில் அவருடைய இரண்டாவது இன்னிங்ஸ், ஆழ்ந்த அமைதியான உடல் சேட்டைகள் குறைந்த கொமெடிகள். பேட்டி தருவதில் பெரிய விருப்பம் எதுவுமில்லை அவருக்கு. மிகவும் விருப்பமுள்ளவர்கள் அல்லது ஏற்கனவே பழகியவர்களிடத்தில் மட்டும் தான் அவர் பேசுவார். அப்படிப் பேசும்போது அங்கே தொடர்ந்து நகைச்சுவைப் பட்டாசு வெடிக்கும்.
கமல்ஹாசனின் மகளிர் மட்டும் படத்தில் அவர் நடிப்பதை கமல்ஹாசன் இப்படி அறிவித்தார். இந்தப் படத்தில் நாகேஷ் நடித்திருக்கிறார். உண்மையாகச் சொல்ல வேண்டுமானால் நடித்து ‘இருக்கவில்லை’ என்றுதான் சொல்ல வேண்டும். ஏனென்றால் இதில் நாகேஷ் பிணமாக நடித்திருக்கிறார் என்றார். ஒரு படத்தில் ஒரு நடிகர் முழுவதும் பிணமாகவே நடித்து சிரிக்க வைத்தது உலக சினிமா வரலாற்றிலேயே இது தான் முதல் முறை என்று தோன்றுகிறது.
‘அபூர்வ சகோதரர்கள்’,’காதலா காதலா’, ‘பஞ்சதந்திரம்’, ‘தசாவதாரம்’ என கமல் பல படங்களில் நாகேஷைப் பயன்படுத்தி இருக்கிறார். படத்தில் நடிப்பதில் அவருடைய பங்கு முக்கியத்துவமானது என்பது மட்டுமல்ல. படப்பிடிப்பு இடைவேளைகளில் அவர் தரும் பங்களிப்புக்காகவும் தான் அவருக்கு இந்தத் தொடர்ச்சியான வாய்ப்பு என்று நான் நினைக்கிறேன். பஞ்ச தந்திரம் படப்பிடிப்பின்போது நடைபெற்ற சிறு சம்பவம் இது. கமல்ஹாசன் எப்போதும் அதிக காரம் சாப்பிடமாட்டார்.
அவர் சாப்பிட்டுக் கொண்டிருந்த சிக்கன் துண்டில் ஒட்டியிருந்த மசாலாவைத் தவிர்க்கும் விதமான அதன் கழுத்துப் பகுதியைப் பிடித்துக் கொண்டு தட்டில் தட்டினார். மசாலா விழுவதாக இல்லை. வேகமாகப் பலமுறை தட்டினார். அருகில் இருந்த நாகேஷ் லேசாகத் திரும்பிப் பார்த்து என்னப்பா... கோழி சரியா சாகலையா. இந்த அடி அடிக்கிறே? என்றார் கூலாக. கமல் இதையெல்லாம் ரசிப்பார் என்று நாகேஷ¤க்குத் தெரியும். நாகேஷ் இப்படியெல்லாம் ரசிக்க வைப்பார் என்று கமல்ஹாசனுக்குத் தெரியும்.

மகளை நடிக்க வைப்பாரா ஸ்ரீதேவி

=தேவியின் மூத்த மகள் சினமாவில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கோலிவுட், பொலிவுட் என சினிமா உலகின் கனவுக் கன்னியாக திகழ்ந்த ஸ்ரீதேவி 15 ஆண்டுகளுக்கு பின்னர் இங்கிலிஸ் விங்கிலீஸ் படத்தின் மூலம் நடிக்க வந்திருக்கிறார்.
அவருடைய இரண்டு மகள்களுமே இப்போது மீடியாவின் கவனத்தை ஈர்த்து வருகின்றனர்.
இந்த நிலையில் ஸ்ரீதேவி - போனிகபூர் தம்பதியரின் மூத்த மகள் ஜான்வியை திரைப்படத்தில் கதாநாயகியாக நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடைபெறுவதாக செய்திகள் வந்துள்ளன.
திருமணமான போனிகபூரை இரண்டாவது திருமணம் செய்தவர் ஸ்ரீதேவி என்பது குறிப்பிடத்தக்கது. இவர்களுக்கு இரு மகள்கள் உள்ளனர்.
ஜான்வி இப்பொழுதே நடனம் கற்றுக் கொண்டிருக்கிறார். கொஞ்சம் புஷ்டியாக இருந்த இவர் இப்போது ரெகுலராக ஜிம்முக்கு சென்று உடலை பிட்டாக வைக்க முயன்று வருகிறாராம்.
அம்மா அளவுக்கு அழகு தேவதையாக இல்லாவிட்டாலும் மொடர்ன் லுக் கொண்டு வலம் வரும் ஜான்விக்கு இப்போது 15 வயதாகிறது.
அவரைப் போலவே சிறுவயதிலேயே நடிக்க வந்தாலும் வரலாம் என்கின்றனர் திரை உலக பிரமுகர்கள். ஆனால் இது குறித்து ஸ்ரீதேவி போனிகபூர் தம்பதியர் கருத்து எதுவும் கூறவில்லை.
மகளை நடிக்க வைக்கும் எண்ணமில்லை என்று சில மாதங்களுக்கு முன்பு ஸ்ரீதேவி கூறியது நினைவிருக்கலாம்.

சுனைனா புலம்பல்

vன்னைப் பற்றி நிறைய வதந்திகளை பரப்புகிறார்கள் என்று நடிகை சுனைனா புலம்பி வருகிறார். காதலில் விழுந்தேன். படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் சுனைனா.
தொடர்ந்து அவர் நடித்த படங்கள் எதுவும் பெரிதாக ஓடவில்லை. தற்போது புதுமுகங்கள் ஜோடியாக அவர் நடித்து வருகிறார். முன்னணி ஹீரோக்கள் படங்களில் நடிக்க வாய்ப்புகள் வராததால் புதுமுக நடிகர்களுடன் ஜோடி சேர்வதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
சுனைனா நடித்த பாண்டி ஒலிப்பெருக்கி நிலையம் படம் சமீபத்தில் ரிலீசானது. இப்படத்தில் புதுமுகம் சபரீஷ் ஜோடியாக நடித்தார்.
இவர் பிரபல ஸ்டண்ட் மாஸ்டர் பெப்சி விஜயன் மகன் ஆவார். தற்போது சீனுராமசாமி இயக்கும் நீர்பறவை படத்தில் விஷ்ணு ஜோடியாக நடித்து வருகிறார்.
அடுத்து நாஞ்சில் பி. சி. அன்பழகன் இயக்கும் நதிகள் நனைவதில்லை படத்தில் இன்னொரு ஸ்டண்ட் மாஸ்டரான ஜாகுவார் தங்கத்தின் மகன் ஜெய்ஜித் ஜோடியாக நடிக்கிறார். வாய்ப்புகள் இல்லாததால்தான் சுனைனா சிறு நடிகர்களுடன் நடிக்கிறார் என்று வெளியாகியுள்ளன. இதனை சுனைனா மறுத்துள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில், என்னைப் பற்றி தவறான வதந்திகள் பரப்பப்படுகின்றன. நல்ல கதையுள்ள படங்கள் எதுவானாலும் நடிப்பேன். சிறிய நடிகர்கள், பெரிய நடிகர்கள் என்றெல்லாம் பார்ப்பது இல்லை என்று கூறியுள்ளார்.

கேரளா சுசித்ரா உன்னி

கீதாலயா மூவிஸ் தயாரிப்பில் வேலு விஸ்வநாத் இயக்கியுள்ள படம், வெள்ளச்சி. நடிகர் பாண்டுவின் மகன், பிண்டு நாயகனாக அறிமுகமாகும் இப்படத்தில் கேரள வரவு சுசித்ரா உன்னி நாயகியாக நடித்துள்ளார்.
பாரதிராஜா இயக்கிய, ‘கருத்தம்மா படத்துக்கு இணையாக , ஒரு அழுத்தமான காதல் கதையில், இப்படம் உருவாகியிருப்பதாக சொல்லும் இயக்குனர் வேலு விஸ்வநாத், ‘நிஜமாக காதலிப்பவர்கள், தங்கள் காதலை மறைப்பதால் ஏற்படும் விபரீத விளைவுகளே இப்படம் என்கிறார்.
அழுத்தமான, சீரியசான கதைக்களம் என்றாலும், இன்றைய ரசிகர்களை மனதில் வைத்து கொமெடி கலந்து, ஜனரஞ்சகமாக கதையை நகர்த்தியுள்ளேன், பருத்திவீரன், மைனா போன்று, இப்படத்தின் கிளைமாக்சும் பேசப்படும் வகையில் இருக்கும் என்று சொல்லும் இயக்குனர், இப்படத்தில் இன்னொரு ஹைலைட் பவதாரிணியின் அற்புதமான இசை என்கிறார்.

 

 

அர்ஜுனின் மகள் ஐஸ்வர்யா அறிமுகம்

நடிகர் அர்ஜுனின் மகள் ஐஸ்வர்யா புதிய படத்தில் ஹீரோயினாக அறிமுகமாகிறார். படத்தின் தலைப்பு பட்டத்து யானை.
பூபதி பாண்டியன் இந்தப் படத்தை இயக்குகிறார்.
இந்தப் படத்தின் ஹீரோ விஷால். அர்ஜுனிடம் ஏழுமலை உள்ளிட்ட படங்களில் உதவி இயக்குநராகப் பணியாற்றியவர் விஷால் என்பது நினைவிருக்கலாம்.
எத்தனையோ ஹீரோக்கள் கேட்டபோதும் தன் மகளை நடிக்க அனுமதிக்காத அர்ஜுன், ஹீரோ விஷால் என்றதும் சந்தோஷத்துடன் ஒப்புக் கொண்டாராம். அர்ஜுனிடம் நேரில் போய் ஐஸ்வர்யாவை நடிக்க வைக்க வேண்டும் என்று கேட்டவரே விஷால்தானாம்.
‘என்ன நினைப்பாரோ என்ற சந்தேகத்துடன்தான் அர்ஜுனிடம் போய் கேட்டேன். ஆனால் அவர் எடுத்த எடுப்பிலேயே ஒப்புக் கொண்டார். இந்த கெரக்டருக்கு ஐஸ்வர்யா தவிர பொருத்தமான ஒருவர் கிடைப்பது கஷ்டம் என்கிறார் விஷால். விஷ¤வல் கொமியுனிகேஷன்ஸ் படித்துள்ள ஐஸ்வர்யாவுக்கு நடிப்பு மீது ரொம்ப ஆர்வமாம்.

Thursday, October 11, 2012

தனக்குத்தானே இரங்கற்பா எழுதிகொண்ட கவிஞர்

காட்டுக்கு ராஜா, சிங்கம், கவிதைக்கு ராஜா, கண்ணதாசன் பெருந்தலைவர் காமராஜரின் வாக்கு இது. ‘நான் நிரந்தரமானவன், அழிவதில்லை. எந்த நிலையிலும் எனக்கு மரணமில்லை’ என்று கண்ணதாசனே அறிவித்தார். கவிரசத்தின் சில துளிகள்.... கண்ணதாசன் என்றால் கண்ணனுக்கு தாசன் என்று அர்த்தம் அல்ல.
‘அழகான கண்களைப் பற்றி வர்ணிப்பதிலும், வர்ணிக்கப்பட்டதைப் படிப்பதிலும் ஆசை அதிகம். அதனால் இந்தப் பெயரை வைத்துக்கொண்டேன்’ என்பது அவரே அளித்த விளக்கம். பெற்றோர் வைத்த பெயர் முத்தையா. சிறு வயதில் இன்னொரு குடும்பத்துக்கு 7,000 ரூபாய்க்குத் தத்துக் கொடுக்கப்பட்டவர் கண்ணதாசன்.
அந்த வீட்டில் அவர் பெயர், நாராயணன். ‘கலங்காதிரு மனமே, உன் கனவெல்லாம் நனவாகும் ஒரு தினமே’ என்று ‘கன்னியின் காதலி’ யில் எழுதியது முதல் பாட்டு. ‘மூன்றாம் பிறை’யில் வந்த, ‘கண்ணே கலைமானே’ கவிஞரின் கடைசிப் பாட்டு. எப்போதும் மஞ்சள் பட்டுச் சட்டை, வேட்டி அணிந்திருப்பார்.
திடீரென்று கழுத்து, கைகளில் நகைகள் மின்னும். திடீரென்று காணாமல் போய்விடும். ‘பள்ளிக்கூடத்துக்குப் போயிருக்கு’ என்று அவை அடகு வைக்கப்பட்டு இருப்பதைச் சொல்வார். மயிலாப்பூர் உட்லண்ட்ஸ் ஹோட்டல், அபிராமபுரம் கவிதா ஹோட்டல் இரண்டும் தான் கவிஞருக்குப் பிடித்த இடங்கள்.
பெரும்பாலான பாடல்கள் பிறந்தது இங்குதான். வெளியூர் என்றால் பெங்களூர் உட்லண்ட்ஸ். வேட்டியின் ஓரத்தைப் பிடித்துக்கொண்டு அறைக்குள் நடந்தபடி பாடல்களின் வரிகளைச் சொல்வார். நடந்துகொண்டே இருந்தால்தான் சிந்தனை துளிர்க்கும். கவிதை வரிகள் சொல்லும்போது செருப்பு அணிய மாட்டார்.
கொஞ்சம் மது அருந்திவிட்டால், என் சிந்தனை சுறுசுறுப்படைவது வழக்கம். அதைப்போல் இன்ப விளையாட்டில் எனக்கு ஆசை உண்டென்றாலும். சிந்திக்கிற நேரத்தில் ரதியே வந்தாலும் திரும்பிப் பார்க்க மாட்டேன் என்பது கவிஞரின் வாக்குமூலம். ‘முத்தான முத்தல்லவோ’ பாட்டைத்தான் மிகக் குறைவான நேரத்துக்குள் (10 நிமிடங்கள்) எழுதி முடித்தார்.
அதிக நாட்களுக்கு அவரால் முடிக்க முடியாமல் இழுத்தது ‘நெஞ்சம் மறப்பதில்லை.... அது நினைவை இழப்பதில்லை!’ கண்ணதாசன் அடிக்கடி கேட்கும் பாடல், ‘திருப்பாற்கடலில் பள்ளிகொண்டாயே ஸ்ரீமன் நாராயணா’ தனக்குப் பிடித்த பாடல்களாக ‘என்னடா பொல்லாத வாழ்க்கை’, ‘சம்சாரம் என்பது வீணை’ ஆகிய இரண்டையும் சொல்லியிருக்கிறார். கண்ணதாசனுக்குப் பிடித்த இலக்கியம் கம்பராமாயணம். ‘நான் பாடல் இயற்றும் சக்தியைப் பெற்றதே அதில் இருந்துதான்’ என்பார். காமராசர் வாழ்க்கை வரலாற்றைத் திரைப்படமாக எடுக்க விரும்பினார். சில காட்சிகளையும் எடுத்தார்.
ஆனால். முற்றுப் பெறவில்லை. ஆரம்ப காலத்தில் வேலை எதுவும் கிடைக்காததால், சந்திரமோகன் என்று பெயர் மாற்றிக்கொண்டு சினிமாவில் நடிக்க வாய்ப்பு கேட்டிருக்கிறார். பிற்காலத்தில் ‘பராசக்தி’ ‘ரத்தத்திலகம்’, ‘கறுப்புப்பணம்’, ‘சூரியகாந்தி’, உள்ளிட்ட படங்களில் நடித்தும் இருக்கிறார். முதல் மனைவி பெயர் பொன்னம்மா. அடுத்த ஆண்டே பார்வதி என்பவரை இரண்டாம் திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்குத் தலா ஏழு குழந்தைகள்.
50 வது வயதில் வள்ளியம்மையைத் திருமணம் செய்தார். இவர்களுக்குப் பிறந்தவர் தான் விசாலி. மொத்தம் 15 பிள்ளைகள்! படுக்கை அறையில் வைத்திருந்த ஒரே படம் கிருஷ்ணர். வெளிநாடு போவதாக இருந்தால், சாண்டோ சின்னப்பா தேவர் வீட்டுக்குப் போய். அவர் பூஜை அறையில் இருக்கும் முருகனை வணங்கிவிட்டுத் தான் செல்வார்.
‘கண்ணதாசன் இறந்துவிட்டார்’ என்று இவரே பலருக்கும் போன் போட்டு வதந்தியைக் கிளப்பி, வீடு தேடிப் பலரும் அழுது கூடிவிட, பிறகு இவரே முன்னால் தோன்றிச் சிரித்த சம்பவம் நடந்திருக்கிறது. உங்கள் புத்தகங்கள் அனைத்தையும் படிக்கும் ஒருவனுக்கு உங்களது புத்திமதி என்ன? என்று கேட்டபோது, அவர் சொன்ன பதில்... ‘புத்தகங்களைப் பின்பற்றுங்கள்.
அதன் ஆசிரியரைப் பின்பற்றாதீர்கள்!’ தன்னுடைய பல வீனங்களை வெளிப்படையாக ஒப்புக்கொண்டு சுயவரலாறு எழுதியவர். ‘வனவாசம், மனவாசம் இரண்டும் ஒருவன் எப்படி வாழக்கூடாது என்பதற்கான உதாரணங்கள்’ என்றார். காமராசர், அண்ணா, எம். ஜி. ஆர். கருணாநிதி ஆகிய நான்கு பேரையும் அதிகமாகப் பாராட்டியவரும், திட்டியவரும் இவரே! ஈ. வெ. கி. சம்பத், ஜெயகாந்தன், சோ, பழ. நெடுமாறன் ஆகிய நான்கு பேரும் அரசியல் ரீதியாக நெருக்கமான நண்பர்கள் ‘கவிஞரின் தோரணையைவிட அரசனின் தோரணைதான் கவிஞரிடம் இருக்கும்’ என்பார் ஜெயகாந்தன்.
திருமகள், திரையலி, மேதாவி, சண்டமாருதம் ஆகியவை இவர் வேலை பார்த்த பத்திரிகைகள், தென்றல், தென்றல் திரை, முல்லை, கடிதம், கண்ணதாசன் ஆகியவை இவரே நடத்தியவை. திருக்கோஷ்டியூர் தொகுதியில் முதல் தடவை நின்றார், தோற்றார். அதன் பிறகு தேர்தலில் நிற்கவே இல்லை. ‘இது எனக்கு சரிவராது’ என்றார். ‘குடிப்பதும், தவறுக்கென்றே தங்களை ஒப்புக்கொடுத்துவிட்ட பெண்களுடன் ஈடுபடுவதும், ஒரு தனி மனிதன் தன் உடல் நிலைக்கும் வசதிக்கும் ஏற்ப செய்யும் தவறுகளே தவிர, அதனால் சமுதாயத்தின் எந்த அங்கமும் பாதிக்கப்படுவதில்லை’ என்று தனது தவறுகளுக்கு வெளிப் படையான விளக்கம் அளித்து உள்ளார்.
பிர்லாவைப் போலச் சம்பாதித்து ஊதாரியைப் போலச் செலவழித்து, பல நேரங்களில் பிச்சைக்காரனைப்போல் ஏங்கி நிற்கும் வாழ்க்கை தான் என்னுடையது என்பது அவர் அளித்த வாக்கு மூலம்.
தான் வழக்கமாகப் படுத்துறங்கும் கருங்காலி மரத்தில் செய்யப்பட்ட கட்டிலுடன் தன்னை எரிக்க வேண்டும் என்பது கண்ணாதாசனின் கடைசி விருப்பம்! அச்சம் என்பது மடமையடா, ‘சரவணப் பொய்கையில் நீராடி’ மலர்ந்தும் மலராத... போனால் போகட்டும் போடா...’ கொடி அசைந்ததும் ‘உன்னைச் சொல்லிக் குற்றமில்லை’ கடவுள் மனிதனாகப் பிறக்க வேண்டும்’ எங்கிருந்தாலும் வாழ்க’ அதோ அந்தப் பறவைபோல வாழ வேண்டும்’ சட்டி சுட்டதடா கை விட்டதடா..’ ஆகிய 10 பாடல்களும் தமிழ் வாழும் காலம் முழுதும் இருக்கும் காவியங்கள் இறப்புக்கு 11 ஆண்டுகளுக்கு முன்பே தனக்குத் தானே இரங்கற்பா எழுதி வைத்துக்கொண்டார்.


எம்.ஜிஆரையும் சிவாஜியையும் வைத்து படம் எடுத்தவர் எனது கணவர்

எம். ஜி. ஆருடன் கத்தி சண்டை போட்ட பி. எஸ். சரோஜா
என் கணவர் இயக்கிய படங்களில் ‘வாழ பிறந்தவள்’, ‘பெரிய இடத்துப் பெண்’, ‘பணக்காரக் குடும்பம்’, ‘குலேபகாவலி’, ‘பாசம்’, ‘காத்தவராயன்’, ‘கூண்டுக்கிளி’, ‘தங்கச் சுரங்கம்’, ‘நான்’, ‘மூன்றெழுத்து’, ‘புதுமைப் பித்தன்’, ‘சொர்க்கம்’, ‘பறக்கும் பாவை’, ‘நாடோடி’, ‘என்னைப்போல் ஒருவன்’ இதெல்லாம் எனக்கு ரொம்ப ரொம்ப பிடித்த படங்கள் எந்த ஒரு படமானாலும் கதைகளிலும், காட்சிகள் அமைப்பிலும் வித்தியாசமாக ஏதாவது செய்யணும்னு என்னுடைய கணவர் நினைப்பார்.
‘அன்று வந்ததும் அதே நிலா’ அப்படிங்கிற பாடல் காட்சிக்கு எம். ஜி. ஆர். பேண்ட், கோட், ஸ¥ட் போட்டு, வெஸ்டர்டன் டான்ஸ் ஆட வைக்க முயற்சித்தபோது எம். ஜி. ஆர். இதையெல்லாம் என்னோட ரசிகர்கள் ஏத்துக்க மாட்டாங்கன்னு பிடிவாதம் பிடித்தார். அதற்கு என் கணவர், விடாப்பிடியாக எம். ஜி. ஆரைத் தன்னுடைய கற்பனைப்படியே உடைகள் அணிவித்து, நடனம் ஆட வைத்து படம் பிடித்தார்.
பாட்டும், அந்தக் காட்சியும் ரசிகர்கள் மத்தியில் மிகப் பெரும் வரவேற்பைப் பெற்றன. அதற்குப் பிறகு எல்லா இயக்குநர்களும் தங்கள் படங்களில் எம். ஜி. ஆரை வைத்து ஒரு வெஸ்டர்ன் நடனப் பாடல் அமையும்படி பார்த்துக்கொள்வார்கள். ‘நீங்க ஆரம்பிச்சு வைச்சிங்க எல்லா இயக்குநர்களும் அதையே பிடிச்சுக்கிட்டாங்க....’ன்னு எம். ஜி. ஆர். என்னிடமும் என் கணவரிடமும் சொல்லி மகிழ்ந்தார்.
அப்போதும் சரி, இப்போதும் சரி என் கணவரை நான்தான் இயக்குநராக்கினேன் என்ற பெருமையும் சந்தோஷமும் என் மனதிற்குள் நிறைந்திருக்கிறது.
எங்களுடைய தயாரிப்பில் வரவு செலவு கணக்கு பணப்பட்டுவாடா இதையெல்லாம் நான்தான் கவனித்துக் கொண்டேன். உழைத்தவர்களின் வியர்வை நிலத்திலே விழுவதற்குள் அவர்களுக்குப் பணத்தைக் கொடுத்துவிடுவேன்.
எங்களுடைய நிறுவனத்தின் படங்களில் நடித்த எம். ஜி. ஆர்., சிவாஜி, &ஜயலலிதா, சரோஜா தேவி, ராமச்சந்திரன் இப்படி எல்லோருக்கும் அவர்களுடைய வீட்டிற்கே போய் பணத்தை முன்கூட்டியே கொடுத்துவிட்டு வருவேன். அவர்கள் எல்லோரும், இதைப் பார்த்து ஆச்சர்யமும், சந்தோஷமும் அடைவார்கள்.
தோட்டக் கலையில் எனக்கு ரொம்ப ஆர்வம் உண்டு. தாம்பரத்தில் 18 ஏக்கரில் பழங்கள், காய்கறிகள், மலர்கள் என்று எல்லா வகையானவற்றையும் பயிரிட்டு தனி கவனம் செலுத்துவேன்.
அடையாரில் இருந்தபோதும், தி. நகரில் வசித்த போதும் வீட்டிலேயே காய்கறி, பழங்கள் பயிரிட்டு வீட்டுக்குத் தேவையானவைகளைப் பயன்படுத்தி வந்தேன். 1957 களில் மலர் கண்காட்சி போட்டிகளில் கலந்துகொண்டு விருது வென்றிருக்கிறேன்.
என்னுடைய தோட்டக்கலை பராமரிப்பில், நிர்வாகத் திறமை, நடிப்புத் திறமை, கதைகளைக் கேட்டு தேர்வு செய்து நடிப்பது போன்றவற்றையெல்லாம் என்னுடைய கணவரின் சகோதரி டி. ஆர். ராஜகுமாரி உடனுக்குடன் கூப்பிட்டு பாராட்டி மகிழ்வார்.
அருணகிரிநாதர் படத்தில் டி. எம். எஸ்.ஸின் அக்காவாக நடித்த காட்சிகளில் ‘தம்பி திருந்துவதற்காக ஒரு காட்சியில் நான் பேசி, நடித்ததைப் பார்த்து படப்பிடிப்பில் இருந்தவர்கள் எல்லோரும் அழுதே விட்டார்கள். படத்தைப் பார்த்துவிட்டு டி. ஆர். ராஜகுமாரியும் அழுது, புலம்பி என் நடிப்பை வெகுவாகப் பாராட்டினார். இதை என் வாழ்னாளில் என்றுமே மறக்க முடியாதது.
‘புதுமைப்பித்தன்’ படத்தில் என்னோடு எம். ஜி. ஆர். கத்தி சண்டை போடும்படியா காட்சி ஒன்றை என் கணவர் ஏற்பாடு செய்துவிட்டார். முதலில் எம். ஜி. ஆர். தயங்கினார். ‘ஒரு பெண்ணோடு கத்தி சண்டை போட வேண்டாம்...’ என்று கூறி, மறுத்தார். இது காட்சிக்குத் தேவை, நீங்கள் கொஞ்சம் வித்தியாசமாக இதில் இடது கையால் கத்தியைப் பிடித்து அவரோடு சண்டை போடுங்கள் பிரமாதமாக இருக்கும். உங்கள் ஸ்டைலில் இருந்து இது வித்தியாசப்படும் என்று சண்டைக் காட்சிக்கு விளக்கம் கூறி என்னுடைய கணவர், எம். ஜி. ஆரை சம்மதிக்க வைத்தார்.
நானும் சண்டைப் பயிற்சி மாஸ்டரிடம் நன்றாக பயிற்சி எடுத்துக்கொண்டு அந்தக் காட்சியில் நடித்தேன். உண்மையிலேயே அந்தக் காட்சி எனக்கும் எம். ஜி. ஆருக்கும் நல்ல பெயரை தேடித்தந்தது. ‘கூண்டுக்கிளி’ படத்தில் எம். ஜி. ஆர்., சிவாஜி இருவரையும் வைத்து நாங்கள் படம் எடுக்கும்போது அதில் எல்லோரும் உற்சாகமாக நடித்தார்கள்.
வித்தியாசத்தை விரும்பும் என் கணவர் சிவாஜியை எம். ஜி. ஆருக்கு வில்லனாக நடிக்க வைத்தார். என் கணவரிடம் அவர்கள் அண்ணன் தம்பி போலத்தான் பழகி வந்தார்கள். எதைச் சொன்னாலும் அதைச் செய்து கொடுத்தார்கள். இந்தப் படத்தில் இரு திலகங்களையும் சேர்த்து, நடிக்க வைத்த பெருமை என்னுடைய கணவரையே சாரும். சினிமா வரலாற்றில் எங்கள் தயாரிப்பில் ‘கூண்டுக்கிளி’ நிலையானதொரு இடத்தைப் பிடித்திருப்பதில் எனக்கு மகிழ்ச்சிதான்!
எங்களுக்கு கலாராணி, கணேஷ், சாந்தின்னு மூன்று செல்வங்கள். பேரன், பேத்திகள் ஆறு பேர். 1997 ல் என் கணவர் இயற்கை எய்தினார். அதற்கு முன்பே நான் சினிமாவில் நடிப்பதை நிறுத்திவிட்டேன்.
முக்கியமான திரைப்பட விழாக்கள், பொது நிகழ்ச்சிகளில் யாராவது கலந்துகொள்ளும்படி வற்புறுத்தி அழைத்தால் மட்டுமே சென்று வருகிறேன். எனக்கு தெய்வ பக்தி உண்டு. அடிக்கடி உள்ளூர், வெளியூர்களில் உள்ள முக்கிய கோயில்களுக்குச் சென்று கடவுளை தரிசனம் செய்து வருகிறேன்’ என்று இனிக்க இனிக்க கூறினார்.


அழகுக்கு கவனிப்பு வெற்றிக்கு விசாரிப்பு
 

அழகு இருந்தால் கவனிப்பார்கள்... வெற்றி தந்தால் விசாரிப்பார்கள்... என்றார் நடிகை பிரணிதா. உங்கள் பெயருக்கு என்ன அர்த்தம் என்றால்? “சகலகலா வல்லி”யென சட்டென ஆரம்பிக்கிறார் பிரணிதா சகலகலா வல்லி என்றால் எல்லாமும் தெரியுமா? என்ன தெரியாது என்று கேளுங்கள்? கேள்விகளால் நிரம்பி தொடர்கிறது பிரணிதாவின் பேட்டி.
பிரணிதா சினிமா எண்ட்ரி எப்படி நிகழ்ந்தது?
பள்ளி படிக்கும் வயதில் இருந்தே நடிப்பு டான்ஸ், விளையாட்டு என நான் ஆல் ரவுண்டர். வீட்டில் அம்மா, அப்பா டாக்டர்ஸ். அப்பா, அம்மா இரண்டு பேரும் செய்கிற வேலையை நாமும் ஏன் செய்யணும்ன்னு பி. காம் சேர்ந்துவிட்டேன்.
அது நல்ல கொலேஜ். நடிப்பு, டான்ஸ்ன்னு என் ஆர்வத்துக்கு அப்படியே தீனி போட்டது. இப்போதும் அந்த கொலேஜில்தான் படிக்கிறேன். எந்த கொலேஜ் எந்த இயர் என கேட்டு விடாதீர்கள். அப்புறம் என் வயதை கண்டு பிடித்து விடுவீர்கள்.
நான் நடிகையாக ஆனது கனவுமல்ல இலட்சியமுமல்ல. அது அதுவாகவே நடந்தது. சின்ன வயதில் இருந்தே நடிப்பதில் ஆர்வம். ஆனால் சினிமாவை நான் எதிர்பார்க்கவில்லை. திடீரென கொலேஜுக்கு வந்த ஒருவர் “நீ சினிமாவுக்கு வர்aயா?”ன்னு கேட்டு விட்டு போய் விட்டார்.
அப்போதே ஆர்வம் தொற்றிக் கொண்டது. நண்பர்களும் “உனக்கு நடிப்புதான் நல்லா வருதே, சினிமாவுக்கு போ என ஆசீர்வாதம் பண்ணினார்கள். வீட்டிலோ எதிர்ப்பு நான் பிடிவாதமாக இருந்தேன்.
அவர்களுக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை.
சரியென என் இஷ்டத்துக்கு விட்டு விட்டார்கள்? முதல் படம் கன்னடத்தில் என் தாய் மொழி கன்னடம் என்பதால் என் சினிமா எண்ட்ரியில் எந்த சிரமமும் இல்லை. அதன் பின் தெலுங்குப் படங்கள். தமிழ் சினிமா பிடிக்கும் என்பதால் எப்போது தமிழில் நடிப்போம் என காத்திருந்தேன். அதன் பின்தான் ‘உதயன்’ படம் மூலம் தமிழுக்கு வந்தேன்.
தமிழ் சினிமா பிடித்திருக்கிறதா?
ரொம்பவே பிடித்திருக்கிறது. கன்னடம், தெலுங்கு இந்த இரண்டு சினிமாக்களை விட தமிழ் சினிமாவில்தான் திருப்தி. தமிழ் சினிமா மேல் எல்லா ஹீரோயின்களுக்கும் ஒரு எதிர்பார்ப்புதான். இந்திய அளவில் எந்த ஹீரோயினாக இருந்தாலும் ‘தமிழ் சினிமாவுக்கு நடிக்க வர்aங்களா?”ன்னு கேட்டுப் பாருங்கள் எந்தத் தயக்கமும் இல்லாமல் வந்து விடுவார்கள்.
அந்த அளவுக்கு தமிழ் சினிமா ரீச் ஆகியிருக்கிறது. தமிழ் சினிமாவில் எத்தனை பெரிய லெஜண்டஸ் இருக்கிறார்கள். மியூசிக் டைரக்ஷன், சினிமாட்டோகிராபி, ஆக்டிங்ன்னு எல்லாவற்றிலும் சாதனையாளர்கள் இருக்கிறார்கள். மணிரத்னம் படங்களுக்கு எங்களூரில் ஒரு கூட்டமே இருக்கிறது.
ரஹ்மான் இசைக்கு உலகமே காத்தியிருக்கிறது. நானும் ‘மைனா’ பார்த்துவிட்டு இரண்டு நாள் தூங்கவில்லை தெரியுமா? விண்ணைத் தாண்டிவருவாயா சூப்பர் படம்.
நிறைய ஹீரோயின்களுக்கு முதல் படம் ‘கிளிக்’ ஆகும். உங்களுக்கு அப்படியில்லை. வருத்தம்தானே?
நிறையவே வருத்தம் ஆனால் ‘உதயன்’ படத்தில் நடிப்புக்கு ஸ்கோப் இல்லை. எனக்கு இரண்டு பாட்டு, நான்கு காட்சிகள்தான் இருந்தன. அதனால் அப்போது பெரிதாக வருத்தம் இல்லை. சில ஹீரோயின்கள் முதல் படத்திலேயே கிளிக் ஆகி பரபரப்பாகும் போது, நாமும் அது மாதிரி ஒரு படத்தை தேர்வு செய்திருக்கலாம் என தோன்றும்.
அப்படி அசர வைத்தவர் அமலாபோல் ‘மைனா’ படம் அவருக்கு நல்ல ரீச் தந்தது. எப்படி இது முடிந்தது என விசாரித்தால் ‘மைனா’ அவருக்கு முதல் படம் இல்லை.
தமிழில் இதற்கு முன் இரண்டு படங்கள் நடித்திருக்கிறார். இரண்டுமே ப்ளாப்” என்றார்கள். அழகு இருந்தால் கவனிப்பார்கள். வெற்றி தந்தால்தான் விசாரிப்பார்கள். இது அப்போது நான் கற்றுக்கொண்ட விஷயம். அதனால்தான் வெற்றிக்கு காத்திருந்தேன்.
இப்போது “சகுனி” கிடைத்திருக்கிறது. இது நல்ல வாய்ப்பு. சரியாக பயன்படுத்தி இருக்கிறேன். இனி ரசிகர்கள்தான் தீர்ப்பு சொல்ல வேண்டும். எதிர்பார்த்தது கிடைக்காத போது வருத்தம்தான். ஆனால் நிச்சயம் ஒரு நாள் கிடைக்கும். நம்பிக்கைத்தானே வாழ்க்கை.
பிரணிதா-சில செய்திகள் சொல்லுங்கள்?
நான் ரொம்ப கூல். எனக்கு கோபம் வராது. ஆடம்பரமான நகைகள் போட்டுக் கொள்ள பிடிக்காது. ஜீன்ஸ் - டி சாட்தான் என் ஃபேவரைட். இப்போது தாவணி புடவையில் சூப்பராஇருப்பதாக சொல்லுகிறார்கள். அப்புறம் மியூசிக் பைத்தியம் கேக் செய்வதில் எக்ஸ்பாட். கேரளாவுக்கு போவதென்றால் அவ்வளவு பிடிக்கும்.
“சகுனி” படத்தின் மூலம் உங்களின் இரண்டாவது இன்னிங்ஸ் தொடங்கிவிட்டது. அப்படித்தானே?
இன்னும் நான் என் முதல் இன்னிங்ஸயே தமிழ் சினிமாவில் முடிக்கவில்லை. அதற்குள் எப்படி இரண்டாவது இன்னிங்ஸ்க்கு போக முடியும்? சினிமா பிடித்து வந்தவள் நான். நல்ல நல்ல சினிமாக்கள் தந்து ரசிகர்களின் மனசுக்கு நெருக்கமாக இருக்க வேண்டும். எல்லோருடனும் நடிக்க வேண்டும்.
கொமர்ஷியல், அக்ஷன் இன்னும் என்ன என்ன வெரைட்டி சினிமாவில் இருக்கோ அதையெல்லாம் செய்து பார்க்க வேண்டும்.
அதற்குத்தான் சினிமாவுக்கு வந்திருக்கிறேன். மறுபடியும் எனக்கு நல்ல சினிமா, நல்ல ரோல் கிடைக்கவில்லையென்றாலும், தமிழ் சினிமாவில் நல்ல வாய்ப்புகளை பெற போராடிக்கொண்டே இருப்பேன்.
விட்டால் ரஜினியுடனும் நடிப்பேன் என சொல்வீர்கள் போல?
ஏன் நடிக்க கூடாதா? ரஜினி சேர் கூட நடித்தால் என்ன தவறு நிச்சயம் நான் நடித்து வெளிவரும் படம் ஒன்றை பார்த்துவிட்டு நிச்சயமாக எனக்கு ரஜினி வாழ்த்து சொல்லும் நாள் வரும். அப்போது நான் வெளிப்படையாக “ஒரு சான்ஸ் கொடுங்க சேர்” ன்னு சொல்லி விடுவேன்.
இப்போதும் எனக்கு ரஜினி சேர் படங்கள் என்றால் அவ்வளவு பிடிக்கும். என் அம்மாவுக்கும் அவர் படம்தான் பிடிக்கும். “நீ என்ன சினிமாவில் இருக்க ரஜினியுடன் ஒரு படத்திலாவது நடித்து விடு”ன்னு அம்மா அடிக்கடி சொல்லுவார். அம்மாவின் ஆசையை நிறைவேற்ற வேண்டும் இல்லையா?
எந்த மாதிரி படங்களில் நடிக்க ஆசை?
எனக்கு டான்ஸ் பிடிக்கும். அதிலும் பரதநாட்டியம் என்றால் உயிர். “சங்கராபரணம் படம் போல ஒரு படம் வந்தால் என் நடிப்பையும் டான்ஸ்யும் காட்டி விடுவேன். அப்படி ஒரு வாய்ப்பைத்தான் தமிழ் சினிமாவில் எதிர்பார்க்கிறேன். நிச்சயம் அது மாதிரி ஒரு வாய்ப்பு வரும். என் உடல்வாகு, நிறத்துக்கு கிராமத்துக் கதைகள் சரியாக வராது. மற்ற கதைகள் எல்லாமும் ஓகே தான்.
ஒரு படம் வெளிவந்தாலே ஆயிரம் கிசுகிசு வருகிற சினிமா இது.
உங்எளுக்கும் கிசுகிசு பிடிக்கும்தானே?
என்னடா இதுவரைக்கும் இது மாதிரி கேள்வி வரலையேன்னு பார்த்தேன். நான் ஒரு படம்தான் நடித்திருக்கிறேன். அதனால்தான் என்னைப் பற்றி பெரிதாக கிசுகிசு இல்லை.
கனனடத்திலும் தெலுங்கிலும் வந்து பிரணீதாவை பற்றி கேட்டு பாருங்கள் அவ்வளவு ஹோட் நியுஸ் கிடைக்கும். ஆனால் ஒரு செய்தியிலும் உண்மை இருக்காது.
கிசுகிசு எனக்கு பிடிக்கும். தமிழ் சினிமாவில் கிசுகிசுவை எதிர்பார்க்கிறேன். ப்Zஸ் பா. என்னைப் பற்றி கிசுகிசு எழுதுங்கப்பா. மெழுகு சிலை பிரணிதாவின் அழகு ரகசியம் என்னவோ? (தேங்க் காட்) நான் ப்யூர் வெஜிடேரியன் பொண்ணு.
 ஜிம் போய் உடம்பை வருத்திக்க மாட்டேன். டென்னிஸ் ஷட்டில் காக் என விளையாடிக் கொண்டே இருப்பேன். அதுதான் என்னை எப்போதும் புத்துணர்ச்சியாக வைத்திருக்கிறது.


சமந்தாவுக்கு சூனியமா?
 

சொந்தக் காசில் சூனியம் வைத்துக் கொள்வது என்று முதுமொழி உள்ளது. ஆனால் காசு பணத்தை செலவிட்டு தனக்கு வைக்கப்பட்ட சூனியத்தை எடுத்துள்ளாராம் சமந்தா.
“பாணா காத்தாடியில் அறிமுகம் ஆகி ‘நான் ஈ’ படவெற்றி மூலம் மணிரத்னம், ஷங்கர், கவுதம் மேனன் படங்களில் அடுத்தடுத்து ஒப்பந்தம் ஆனவர் சமந்தா ஆனால் திடீரென மணிரத்னம், ஷங்கர் படங்களிலிருந்து அவர் விலக வேண்டிய நிலைக்கு ஆளானார்.
அதற்குக் காரணம் சமந்தாவுக்கு வந்த தோல் நோய் அலர்ஜிதான். ஆனால் தோல் நோய் அலர்ஜிக்கு கூட யாரோ சக நடிகை வைத்த பில்லி சூனியம்தான் காரணம் என்று போட்டுக் கொடுத்திருக்கின்றனர் திரை உலக சகபாடிகள்.
அம்மணி ஆடிப்போய்விட்டாராம். மேலும் வினித் என்ற கேரள மந்திரவாதி பற்றிச் சொல்லி அவரிடம் போய் பில்லி, சூனியம் எடுக்கலாம் என்று சொல்லியிருக்கின்றனர். நலம் விரும்பிகள் இதை நம்பிய சமந்தாவும் சமர்த்தாக மந்திரவாதி வினித்தை சந்தித்து சிறப்பு பூஜை நடத்தியிருக்கிறாராம்.

10 ஹீரோக்களுடன் வித்யாபாலன்
 

10 ஹீரோக்களுடன் ஜோடி போட்டு நடிக்கப் போகிறார் வித்யாபாலன். ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு, இந்தியில் இந்தப் படத்தை சுடப் போகிறார். இயக்குநர் விட்சி வடிவுடையான்.
தம்பி வெட்டோத்தி சுந்தரம் படத்தை இயக்கியவர்தான் வடிவுடையான். இப்போது கரணை வைத்து ஒரு புதுப் படத்தை இயக்கப் போகிறார். படத்திற்கு சொக்கநாதன் என்ற பெயர்வைத்துள்ளார். இதை தமிழ், இந்தி, தெலுங்கில் எடுக்கிறாராம்.
இந்தப் படத்தில் பெரிய விசேஷம் என்னவென்றால் 10 ஹீரோக்கள் இருக்கிறார்களாம். அதேசமயம் ஹீரோயின் ஒரே ஒருவர்தான். அவர்தான் வித்யா பாலன்.
இது ஒரு அதிரடி சண்டைப் படம் ஹொலிவூட் பாணியில் படத்தை எடுக்கவிருக்கிறாராம். வடிவுடையான் இதற்காக விராபிக்ஸ் சாட்சிகளும் ஏகப்பட்டதைப் படத்தில் திணிக்கவுள்ளனர். இதை ஹாலிவூட்டில் வைத்தே சுடவும் உள்ளாராம் வடிவு.
முதலில் கரீனா கபூரைத்தான் இந்தப் படத்திற்காக பேசி வந்தார்களாம். இருப்பினும் தற்போது வித்யாவை புக் செய்துள்ளதாக செய்திகள் கூறுகின்றன.
 இந்தச் செய்தி உண்மையாக இருந்தால் வித்யா பாலன் நடிக்கும் முதல் படமாக இது அமையும் என்பது குறிப்பிடத்தக்கது. ‘டர்ட்டி’ வித்யாவை நல்ல ‘வடிவாக’ காட்டுங்க வடிவு....!


48 வருடங்களுக்குப் பின்னர் நீயும் பொம்மை நானும் பொம்மை

48 வருடங்களுக்கு முன்பு வெளியாகி பெரும் ஹிட்டடித்த நீயும் பொம்மை நானும் பொம்மை என்ற அட்டகாசமான பாடல் ரீமிக்ஸ் ஆகிறது. அந்தப் பாடலை பாடிய அதே கே. ஜே. ஜேசுதாஸ்தான் இப்பாடலையும் பாடியுள்ளாராம்.
மூடர் கூடம் என்ற படத்திற்காக இந்தப் பாடலை ஜேசுதாஸ் பாடியுள்ளார். அன்று பாடியதைப் போலவே இன்றும் இப்பாடலில் ஜீவனை வெளிப்படுத்தி அசத்தி விட்டாராம் ஜேசுதாஸ்.
1964ம் ஆண்டு வெளியான படம் பொம்மை அந்தப் படத்தில் இடம்பெற்ற பாடல்தான் இந்த நீயும் பொம்மை நானும் பொம்மை பாடல் அந்தக் காலத்தில் இந்த அசாதாரணமான பாடல் பெரும் ஹிட்டானது.
அமானுஷ்யப் பின்னணியில் அமைக்கப்பட்டிருந்த இந்தப் பாடல் ஜேசுதாஸ¤க்கும் பெரிய பெயரை வாங்கிக் கொடுத்தது மேலும் இன்னொரு விசேஷம் என்னவென்றால் இந்தப் பாடல்தான் தமிழ் திரையுலகில் ஜேசுதாஸ் பாடிய முதல் தமிழ்ப்பாடல் என்பதாகும். எனவே இந்தப் தமிழ்ப் பாடல் என்பதாகும்.
 எனவே இந்தப் பாடல் ஜேசுதாஸின் வாழ்க்கைப் பயணத்திலும் முக்கிய இடம்பிடித்த ஒன்று. இப்பாடலை மீண்டும் அதன் பொலிவு மாறாமல் மூடர் கூடம் படத்தில் வைத்துள்ளனர்.





Wednesday, October 3, 2012


அகத்தியன் மகள் விஜயலட்சுமி நடித்துள்ள வனயுத்தம் படம் இன்னும் சில தினங்களில் வெளிவர இருக்கிறது. இதில் வீரப்பன் மனைவி முத்துலட்சுமியாக நடித்துள்ளார்.

பாரதிராஜாவை நம்பும் இனியா

சின்னச் சின்ன படங்களில் நடித்து வந்த இனியா, வாகைசூடவாவில் நடித்து அனைத்து தரப்பினரையும் திரும்பிப் பார்க்க வைத்தார். அடுத்து பாரதிராஜாவின் அன்னக்கொடியும் கொடி வீரனும் படத்தில் அமீருக்கு ஜோடி என்ற தகவலுடன் டாப் கீயரில் சென்றார். அதன் பிறகு என்ன நடந்தது என்பது யாருக்கும் தெரியாது.
அமீர் அ.கொ.கொ.வீயிலிருந்து விலக்கப்பட அவருக்கு ஜோடியாக நடிக்க இருந்த இனியாவுக்கும் அதே நிலை. சந்தோஷத்தின் உச்சத்தில் இருந்த இனியா சோர்ந்து போனார். ஆனாலும் கவலைப்படவில்லை, முயற்சிகளை தொடர்ந்தார். இப்போது தமிழ், மலையாளத்தில் 7 படங்கள் கைவசம் வைத்திருக்கிறார்.
தமிழில் அடுத்த அம்மாவின் கைபேசி வர இருக்கிறது. அது தனக்கு பெரிய திருப்புமுனை தரும் என்று நம்புகிறார். நீண்ட நாள் மெளனமாக இருந்தவர் இப்போது மனம் திறந்திருக்கிறார்.
“வாகை சூடவா” திடீர்னு என்னை உயரத்துக்குக் கொண்டு போச்சு, அதே அளவுக்கு அடுத்தடுத்து இரண்டு ஏமாற்றங்கள். “வாகைசூடவா”க்கு தேசிய விருது கிடைச்சுது. எனக்கும் கிடைக்க வேண்டியதாம். கடைசி ரவுண்டுல நானும், வித்யாபாலனும் இருந்தோம். நான் சொந்தக் குரலில் பேசாததால் தேசிய விருது வித்யாபாலனுக்கு போயிடுச்சி.
தேசிய விருது மட்டும் கிடைச்சிருந்தா என்னோட இன்றைய இடமே வேற. அதனால இனி எந்தப் படத்தில் நடிச்சாலும் சொந்த குரல்லதான் டப்பிங் பேசுறதுன்னு முடிவு பண்ணினேன். அடுத்த ஏமாற்றம் அன்னக்கொடியும் கொடிவீரனும், பாரதிராஜா படம், அமீர் ஜோடின்னு மகிழ்ச்சி வானத்துல பறந்தேன். அமீரோட போட்டோ ஷ¥ட் நடந்தப்போ பாரதிராஜா சார் அப்படி பண்ணும்மா, இப்படி பண்ணும்மான்னு சொன்னாரு. சார் நீங்க சொன்னா கையை கூட வெட்டிக்குவேன்னு சொன்னேன். அந்த அளவுக்கு நம்பினேன்.
இப்பவும் அந்த நம்பிக்கையை இழக்கல. படத்துல நான் நடிக்கிறதா இருந்த மல்லாங்கிணறு மங்காத்தா என்ற கேரக்டர் ரெம்பவே பவர்புல்லானது, ஜல்லிக்கட்டு காளைகளை வளர்த்து விற்கிற பொண்ணு. இதுக்கா மாட்டு வண்டி ஓட்டுறது. முரட்டு காளைங்கள எப்படி கையாள்றது, வயல்காட்டுல உழவு செய்றதுன்னு நிறைய ஹோம் ஒர்க் பண்ணினேன்.
மதுரை ஸ்லாங் கத்துக்கிட்டேன். ஆனால் எல்லாமே திடீர்னு கைவிட்டுபோனது கனவு மாதிரி இருக்கு. “இந்த கேரக்டர் வந்தா அன்னக்கொடி கேரக்டர் அடிவாங்கிடும். அதனால அந்தக் கதைய தனியா பண்றேன். அதை எப்ப பண்ணினாலும் நீதான் மங்காத்தா”ன்னு பாரதிராஜா சேர் சொன்னார். அதை இப்போதும் முழுசா நம்புறேன். என்னோட ஆசையெல்லாம் வாகைசூடவால இழந்த தேசிய விருதை எப்படியாவது வாங்கியே தீருவதுங்றதுதான்.


படு கவர்ச்சியாக விஜயலட்சுமி

அகத்தியன் மகள் அகத்தியன் மகள் விஜயலட்சுமி நடித்துள்ள வனயுத்தம் படம் இன்னும் சில தினங்களில் வெளிவர இருக்கிறது. இதில் வீரப்பன் மனைவி முத்துலட்சுமியாக நடித்துள்ளார். விஜயலட்சுமி நடித்துள்ள வனயுத்தம் படம் இன்னும் சில தினங்களில் வெளிவர இருக்கிறது. இதில் வீரப்பன் மனைவி முத்துலட்சுமியாக நடித்துள்ளார்.
அடுத்து வர இருப்பது தமிழ் படம் எடுத்த சி. எஸ். அமுதனின் ரெண்டாவது படம். இதில் விஜயலட்சுமி படு கவர்ச்சியாக நடத்திருப்பதாக கூறப்படுகிறது. இது பற்றி அவர் என்ன சொல்கிறார் என்று பார்ப்போம்.
“படித்துல எனக்கு நெகட்டிவ் கெரக்டர். எதையும் தூசு மாதிரி பார்க்குற பொண்ணு எவ்வளவு திமிரா நடிக்க முடியுமோ, அவ்வளவு திமிரா நடிச்சிருக்கேன்.
எத்தனை படத்துல தான் குடும்ப குத்துவிளக்காக நடிச்சிட்டிருக்க முடியும். அதான் கிளாமரா நடிச்சிருக்கேன். ஏன் நான் கிளாமரா நடிக்க கூடாதா என்ன? வன யுத்தம் பார்த்துட்டு ரெண்டாவது படம் பார்த்தீங்கன்னா கொஞ்சம் ஷாக்காத்தான் இருக்கும்” என்கிறார்.


கடல்' வரும் வரை கார்த்திக் ராதாவுக்கு நிபந்தனை

கடல் படம் ரிலீஸாகும் வரை கெளதம், துளசியின் போட்டோக்களை வெளியிடக் கூடாது என்று மணிரத்னம் கார்த்திக் மற்றும் ராதாவுக்கு நிபந்தனை போட்டுள்ளார்.
மணிரத்னம் கார்த்திக் மகன் கெளதம் மற்றும் ராதாவின் இளைய மகள் துளசியை வைத்து கடல் படத்தை எடுத்து வருகிறார். மீனவர்களின் வாழ்க்கையை மையமாக வைத்து படம் எடுக்கப்படுகிறது என்று கூறப்படுகிறது. படத்தில் படப்பிடிப்பு ராமேஸ்வரத்தில் நடந்து வருகிறது. படம் துவங்கி இத்தனை நாட்களாகியும் அது குறித்து தகவல்கள் கசிந்து விடாமல் மணி ரகசியமாக வைத்துள்ளார்.
படப் பிடிப்பு நடக்கும் இடங்களில் வெளியாட்கள் வருவதை தடுக்க தனியார் பாதுகாப்பு நிறுவன ஆட்களை நிறுத்தி வைத்துள்ளனர்.
இந்நிலையில் கார்த்திக் மற்றும் ராதா தங்கள் பிள்ளைகளின் போட்டோக்களை வெளியிட்டு விளம்பரம் செய்ய விரும்பினர். ஆனால் அதற்கு மணிரத்னம் ஒத்துக் கொள்ளவில்லை.
படம் ரீலிஸாகும் வரை கெளத்தம், துளசியின் போட்டோக்களை எந்த பத்திரிகைகளிலும் வெளியிடக் கூடாது என்று திட்டவட்டமாகக் கூறிவிட்டார். இதனால் கார்த்திக் மற்றும் ராதா தங்கள் பிள்ளைகளை பொது நிகழ்ச்சிகள் ஏன் நண்பர்கள் வீடுகளுக்கு கூட அனுப்பாமல் பொத்தி பொத்தி வைத்துள்ளனர்.
சமீபத்தில் பத்திரிகை ஒன்றுக்கு பேட்டியளித்த துளசி தன்னை போட்டோ எடுக்கக் கூடாது என்று கடுமையாக கூறிவிட்டார்.

 

உண்மையான பிரசவ காட்சி படத்துக்கு

நடிகை சுவேதாவுக்கும், மும்பையில் பத்திரிகை ஆசிரியராக உள்ள ஸ்ரீவல்சன் என்பவருக்கும் கடந்த ஆண்டு திருமணம் நடைபெற்றது. நிறைமாத கர்ப்பிணியான அவர், மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில் தனது பிரசவ காட்சியை படமாக்க அனுமதித்துள்ளதாக சுவேதா ஏற்கனவே தெரிவித்திருந்தார். கடந்த சனிக்கிழமை மதியம் அவருக்கு பிரசவ வலி ஏற்பட்டதை தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மாலை 5.27 மணிக்கு பெண் குழந்தை பிறந்தது.
சுவேதா மேனன் ஏற்கனவே கூறியது போல அவரது பிரசவ காட்சியை ‘களிமண்ணு’ என்ற மலையாள திரைப்படத்திற்காக படம்பிடிக்க அனுமதிக்கப்பட்டது. சுமார் 20 நிமிடங்கள் நடைபெற்ற பிரசவத்தை இயக்குனர் பிளஸி படம் பிடித்தார். பிரசவத்தின் முடிவில் சுவேதா மேனன் தனது குழந்தைக்கு முத்தமிடு வதுடன் படப்பிடிப்பு முடிந்தது.
இந்தியாவிலேயே ஒரு நடிகை உண்மையிலேயே பிரவசத்தில் இருக்கும் காட்சி படப்பிடிப்பு நடத்துவது இதுவே முதல் முறையாகும். படத்தின் ஒளிப்பதிவாளர் ஜிபி ஜேக்கப் மற்றும் 2 உதவியாளர்கள், சுவேதா கணவர் ஸ்ரீவல்சன் ஆகியோர் பிரசவத்தின் போதும் காட்சி படமான போதும் உடனிருந்தனர்.
‘களிமண்ணு’ படத்தில் சுவேதா மேனன், பிஜுமேனன் ஆகியோர் நடிக்கின்றனர். கர்ப்பிணியாக உள்ள போது ஒரு தாய்க்கும், சேய்க்கும் இடையிலான அன்பு எப்படி இருக்கும் என்பதை வெளிப்படுவதாக ‘களிமண்ணு’ படத்தின் கதை அமைந்துள்ளது. இதற்காக சுவேதா மேனன் கர்ப்பம் தரித்தது முதல் பல கட்டங்களாக, படப்பிடிப்பு நடத்தப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.



 

எம்.ஜி.ஆரையும் சிவாஜியையும் வைத்து படம் எடுத்தவர் எனது கணவர்

எம். ஜி. ஆருடன் கத்தி சண்டை போட்ட பி. எஸ். சரோஜா
‘விகடயோகி’, ‘நாட்டிய ராணி’, ‘தன அமராவதி’, ‘பாண்டித்தேவன்’ ‘ஜெனோவா’, ‘ஓர் இரவு’, ‘கூண்டுக்கிளி’, ‘புதுமைப்பித்தன்’, ‘வண்ணக்கிளி’, ‘குமுதம்’, ‘வாழப்பிறந்தவள்’, ‘அருணகிரிநாதர்’ போன்ற ஏராளமான தமிழ்ப் படங்களிலும் இதைத் தவிர மலையாளம், தெலுங்கு, கன்னடம், ஹிந்தியென்று வேற்று மொழிப் படங்களிலும் கதாநாயகியாக வலம் வந்து சாதனைகள் பல புரிந்தவர் நடிகை பி. எஸ். சரோஜா. அவர் கூறியதாவது :-
‘எங்க தாத்தாவுக்கு பூர்வீகம் திருவனந்தபுரம். எங்க அப்பா பாலசுப்பிரமணியம் அம்மா ராஜலட்சுமி இவங்களெல்லாம் சென்னையிலேயே தங்கிவிட்டதால் நானும் சிங்காரச் சென்னை வாசியானேன். எங்க அம்மா நல்லா பாட்டு பாடுவாங்க ஹார்மோனியம் பிரமாதமா வாசிப்பாங்க. தாத்தா நல்லா வயலின் வாசிப்பார்.
இவங்களையெல்லாம் பார்த்துப் பார்த்து எனக்கும் சங்கீதத்து மேலே ஆர்வம் வந்து, எங்க அம்மாவோட ஊகத்தினால் நன்றாக பாட்டு கற்றுக்கொண்டு பாட ஆரம்பித்தேன். ‘பாலநாகம்மா’ என்கிற தெலுங்குப் படத்திற்காக பின்னணிப் பாடல் அதாவது கோரஸ் பாடத்தான் முதலில் என்னோட பெற்றோர்களின் முயற்சியால் படவுலகில் காலடி எடுத்து வைத்தேன்.
அது ஜெமினி நிறுவனம் அதனால் அவங்க கோரஸ் குழுவில் மாதச் சம்பளம் 45 ரூபாய்க்கு ஒப்பந்தம் போட்டு என்னை வைத்துக்கொண்டார்கள். அப்போது ஸ்டூடியோவில் யோகமங்களம், எம். வி. ராஜம்மா, வசந்தான்னு பல பிரபலமான நடிகைகளை ஆர்வமாய் போய் வேடிக்கைப் பார்ப்பேன்.
ஒரு சமயம் யோகமங்களத்த பாத்து அவர்களோடு பேசிக்கிட்டு இருக்கும் போது நைசாக அவங்களைத் தொட்டுப் பார்த்து பூரித்துப் போனேன். இதை, அவர்களிடம் சினிமாவில் நான் கொஞ்சம் பிரபலமான நடிகையாக வந்த சமயம் சொல்லி மகிழ்ந்தேன்.
இதைக்கேட்டு அவர் ஆச்சர்யப்பட்டார். என்னை ஸ்டூடியோக்களில் அடிக்கடி பல தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள் பார்த்ததின் பயனாக ‘விகடயோகி’ என்ற படத்தில் முதன் முதலில் கதாநாயகியாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. நாயகனாக குமரேசன் என்பவர் நடித்தார். அதன்பிறகு பல படங்களில் நடித்தேன்.
நான் கொஞ்சம் துணிச்சல் பேர்வழி படப்பிடிப்பில் துறுதுறுன்னு இருப்பேன். மரத்து மேலே மலை மீது, மாட்டு வண்டியின் மீது, இப்படியாக பாடல் காட்சிகளில் இயக்குநரும், நடன இயக்குநரும் என்னை வைத்து படம் பிடிப்பார்கள், அவர்கள் சொன்னவுடனே படபடவென்று மரமோ, மலையோ ஏறிவிடுவேன். படப்பிடிப்பு முடிந்ததும், துணிச்சலா யாருடைய உதவியின்றி கீழேயும் இறங்கிவிடுவேன். இதைப் பார்த்து எல்லோரும் ஆச்சர்யப்படுவாங்க. இளம் கன்று பயமறியாதுன்னு சொல்வாங்களே அதுமாதிரி.
இயக்குநர்கே. சுப்பிரமணியம் ஒலிப்பதிவு பொறியாளராக இருந்தவர் டி. ஆர். ராமண்ணா. அவரும் நானும் நன்றாகப் பழகினோம். காதலித்தோம். இரண்டு பேரின் வீட்டு சம்மதத்துடன் மிகவும் எளிமையாக மகாபலிபுரம் ரெங்கநாதர் கோவிலில் (1949) எங்களது திருமணம் நடந்தது.
திருமணமான பிறகு, நான் என் கணவரிடம், ‘ஒலிப்பதிவு பொறியாளராக இருந்தது போதும். உங்க திறமை, உழைப்பு இதையெல்லாம் நான் பார்த்திருக்கிறேன். நீங்க டைரக்ஷன் துறையில் இறங்கினீங்கன்னா பிரமாதமா வருவீங்க. உங்க திறமை மீது எனக்கு நம்பிக்கை இருக்கு’ன்னு தைரியம் கொடுத்தேன்.
கிரியேஷனஸ்ன்னு மூன்று பட நிறுவனங்களை நடத்தினோம்.
(தொடரும்...)
என் கணவர் இயக்கிய படங்களில் ‘வாழ பிறந்தவள்’, ‘பெரிய இடத்துப் பெண்’, ‘பணக்காரக் குடும்பம்’, ‘குலேபகாவலி’, ‘பாசம்’, ‘காத்தவராயன்’, ‘கூண்டுக்கிளி’, ‘தங்கச் சுரங்கம்’, ‘நான்’, ‘மூன்றெழுத்து’, ‘புதுமைப் பித்தன்’, ‘சொர்க்கம்’, ‘பறக்கும் பாவை’, ‘நாடோடி’, ‘என்னைப்போல் ஒருவன்’ இதெல்லாம் எனக்கு ரொம்ப ரொம்ப பிடித்த படங்கள் எந்த ஒரு படமானாலும் கதைகளிலும், காட்சிகள் அமைப்பிலும் வித்தியாசமாக ஏதாவது செய்யணும்னு என்னுடைய கணவர் நினைப்பார்.
‘அன்று வந்ததும் அதே நிலா’ அப்படிங்கிற பாடல் காட்சிக்கு எம். ஜி. ஆர். பேண்ட், கோட், ஸ¥ட் போட்டு, வெஸ்டர்டன் டான்ஸ் ஆட வைக்க முயற்சித்தபோது எம். ஜி. ஆர். இதையெல்லாம் என்னோட ரசிகர்கள் ஏத்துக்க மாட்டாங்கன்னு பிடிவாதம் பிடித்தார். அதற்கு என் கணவர், விடாப்பிடியாக எம். ஜி. ஆரைத் தன்னுடைய கற்பனைப்படியே உடைகள் அணிவித்து, நடனம் ஆட வைத்து படம் பிடித்தார்.
பாட்டும், அந்தக் காட்சியும் ரசிகர்கள் மத்தியில் மிகப் பெரும் வரவேற்பைப் பெற்றன. அதற்குப் பிறகு எல்லா இயக்குநர்களும் தங்கள் படங்களில் எம். ஜி. ஆரை வைத்து ஒரு வெஸ்டர்ன் நடனப் பாடல் அமையும்படி பார்த்துக்கொள்வார்கள்.
‘நீங்க ஆரம்பிச்சு வைச்சிங்க எல்லா இயக்குநர்களும் அதையே பிடிச்சுக்கிட்டாங்க....’ன்னு எம். ஜி. ஆர். என்னிடமும் என் கணவரிடமும் சொல்லி மகிழ்ந்தார். அப்போதும் சரி, இப்போதும் சரி என் கணவரை நான்தான் இயக்குநராக்கினேன் என்ற பெருமையும் சந்தோஷமும் என் மனதிற்குள் நிறைந்திருக்கிறது.
எங்களுடைய தயாரிப்பில் வரவு செலவு கணக்கு பணப்பட்டுவாடா இதையெல்லாம் நான்தான் கவனித்துக் கொண்டேன். உழைத்தவர்களின் வியர்வை நிலத்திலே விழுவதற்குள் அவர்களுக்குப் பணத்தைக் கொடுத்துவிடுவேன்.
எங்களுடைய நிறுவனத்தின் படங்களில் நடித்த எம். ஜி. ஆர்., சிவாஜி, &ஜயலலிதா, சரோஜா தேவி, ராமச்சந்திரன் இப்படி எல்லோருக்கும் அவர்களுடைய வீட்டிற்கே போய் பணத்தை முன்கூட்டியே கொடுத்துவிட்டு வருவேன். அவர்கள் எல்லோரும், இதைப் பார்த்து ஆச்சர்யமும், சந்தோஷமும் அடைவார்கள்.
தோட்டக் கலையில் எனக்கு ரொம்ப ஆர்வம் உண்டு. தாம்பரத்தில் 18 ஏக்கரில் பழங்கள், காய்கறிகள், மலர்கள் என்று எல்லா வகையானவற்றையும் பயிரிட்டு தனி கவனம் செலுத்துவேன். அடையாரில் இருந்தபோதும், தி. நகரில் வசித்த போதும் வீட்டிலேயே காய்கறி, பழங்கள் பயிரிட்டு வீட்டுக்குத் தேவையானவைகளைப் பயன்படுத்தி வந்தேன். 1957 களில் மலர் கண்காட்சி போட்டிகளில் கலந்துகொண்டு விருது வென்றிருக்கிறேன்.
என்னுடைய தோட்டக்கலை பராமரிப்பில், நிர்வாகத் திறமை, நடிப்புத் திறமை, கதைகளைக் கேட்டு தேர்வு செய்து நடிப்பது போன்றவற்றையெல்லாம் என்னுடைய கணவரின் சகோதரி டி. ஆர். ராஜகுமாரி உடனுக்குடன் கூப்பிட்டு பாராட்டி மகிழ்வார்.
அருணகிரிநாதர் படத்தில் டி. எம். எஸ்.ஸின் அக்காவாக நடித்த காட்சிகளில் ‘தம்பி திருந்துவதற்காக ஒரு காட்சியில் நான் பேசி, நடித்ததைப் பார்த்து படப்பிடிப்பில் இருந்தவர்கள் எல்லோரும் அழுதே விட்டார்கள். படத்தைப் பார்த்துவிட்டு டி. ஆர். ராஜகுமாரியும் அழுது, புலம்பி என் நடிப்பை வெகுவாகப் பாராட்டினார். இதை என் வாழ்னாளில் என்றுமே மறக்க முடியாதது.
‘புதுமைப்பித்தன்’ படத்தில் என்னோடு எம். ஜி. ஆர். கத்தி சண்டை போடும்படியா காட்சி ஒன்றை என் கணவர் ஏற்பாடு செய்துவிட்டார். முதலில் எம். ஜி. ஆர். தயங்கினார். ‘ஒரு பெண்ணோடு கத்தி சண்டை போட வேண்டாம்...’ என்று கூறி, மறுத்தார்.
இது காட்சிக்குத் தேவை, நீங்கள் கொஞ்சம் வித்தியாசமாக இதில் இடது கையால் கத்தியைப் பிடித்து அவரோடு சண்டை போடுங்கள் பிரமாதமாக இருக்கும். உங்கள் ஸ்டைலில் இருந்து இது வித்தியாசப்படும் என்று சண்டைக் காட்சிக்கு விளக்கம் கூறி என்னுடைய கணவர், எம். ஜி. ஆரை சம்மதிக்க வைத்தார்.
நானும் சண்டைப் பயிற்சி மாஸ்டரிடம் நன்றாக பயிற்சி எடுத்துக்கொண்டு அந்தக் காட்சியில் நடித்தேன். உண்மையிலேயே அந்தக் காட்சி எனக்கும் எம். ஜி. ஆருக்கும் நல்ல பெயரை தேடித்தந்தது.
‘கூண்டுக்கிளி’ படத்தில் எம். ஜி. ஆர்., சிவாஜி இருவரையும் வைத்து நாங்கள் படம் எடுக்கும்போது அதில் எல்லோரும் உற்சாகமாக நடித்தார்கள். வித்தியாசத்தை விரும்பும் என் கணவர் சிவாஜியை எம். ஜி. ஆருக்கு வில்லனாக நடிக்க வைத்தார். என் கணவரிடம் அவர்கள் அண்ணன் தம்பி போலத்தான் பழகி வந்தார்கள். எதைச் சொன்னாலும் அதைச் செய்து கொடுத்தார்கள்.
இந்தப் படத்தில் இரு திலகங்களையும் சேர்த்து, நடிக்க வைத்த பெருமை என்னுடைய கணவரையே சாரும். சினிமா வரலாற்றில் எங்கள் தயாரிப்பில் ‘கூண்டுக்கிளி’ நிலையானதொரு இடத்தைப் பிடித்திருப்பதில் எனக்கு மகிழ்ச்சிதான்!
எங்களுக்கு கலாராணி, கணேஷ், சாந்தின்னு மூன்று செல்வங்கள். பேரன், பேத்திகள் ஆறு பேர். 1997 ல் என் கணவர் இயற்கை எய்தினார். அதற்கு முன்பே நான் சினிமாவில் நடிப்பதை நிறுத்திவிட்டேன். முக்கியமான திரைப்பட விழாக்கள், பொது நிகழ்ச்சிகளில் யாராவது கலந்துகொள்ளும்படி வற்புறுத்தி அழைத்தால் மட்டுமே சென்று வருகிறேன். எனக்கு தெய்வ பக்தி உண்டு. அடிக்கடி உள்ளூர், வெளியூர்களில் உள்ள முக்கிய கோயில்களுக்குச் சென்று கடவுளை தரிசனம் செய்து வருகிறேன்’ என்று இனிக்க இனிக்க கூறினார்.

மணப்பாற மாடு கட்டி மாயாவரம்...

மணப்பாற மாடு கட்டி
மாயாவரம் ஏரு பூட்டி
மணப்பாற மாடு கட்டி மாயாவாரம் ஏரு பூட்டி
வயக்காட்ட உழுது போடு சின்னக்கண்ணு
பசுந்தழைய போட்டு பாடு படு செல்லக்கண்ணு
மணப்பாற மாடு கட்டி மாயவரம் ஏரு பூட்டி
மணப்பாற மாடு கட்டி மாயாவரம் ஏரு பூட்டி
வயக்காட்ட உழுது போடு சின்னக்கண்ணு
பசுந்தழைய போட்டு பாடு படு சின்னக்கண்ணு
ஆத்தூரு கிச்சிலி சம்பா
ஆத்தூரு கிச்சிலி சம்பா பார்த்து வாங்கி விதை விதைச்சி
ஆத்தூரு கிச்சலி சம்பா
நாத்த பறிச்சி நட்டுப்போடு சின்னக்கண்ணு
தண்ணிய ஏற்றம் புடிச்சு இறக்கி போடு சின்னக்கண்ணு
நாத்த பறிச்சி நட்டுப்போடு சின்னக்கண்ணு
தண்ணிய ஏற்றம் புடிச்சு இறக்கி போடு சின்னக்கண்ணு
கருதை நல்ல வியளவச்சு மருத ஜில்லா ஆளை வச்சி
கருதை நல்ல விளயவச்சு மருத ஜில்லா ஆளை வச்சி
அறுத்து போடு களத்த மேட்டுல சின்னக்கண்ணு
நல்லா அடிச்சி கூட்டி அளந்து போடு சின்னக்கண்ணு
(என்றா பல்லக்காட்டுற... அட தண்ணிய சேந்து...)
பொதிய ஏத்தி வண்டியில் பொள்ளாச்சி
சந்தையிலே ஆ... ஆ.... ஆ.... ஆ.....
பொதிய ஏத்தி வண்டியிலே பொள்ளாச்சி சந்தையிலே
விருதுனகா வியாபாரிக்கு சின்னக்கண்ணு
நீயும் வித்த போட்டு பணத்தை எண்ணு சின்னக்கண்ணு
விருதுநகர் வியாபாரிக்கு சின்னக்கண்ணு
நீயும் வித்த போட்டு பணத்தை எண்ணு சின்னக்கண்ணு
சேத்த பணத்த சிக்கனமா செலவு பண்ண பக்குவமா
அம்மா கையில கொடுத்து போடு சின்னக்கண்ணு
உங்க அம்மா கையில கொடுத்து போடு சின்னக்கண்ணு
அவங்க ஆற நூறு ஆக்குவாங்க செல்லக்கண்ணு
சேத்த பணத்த சிக்கனமா செலவு பண்ண பக்குவமா
அம்மா கையில கொடுத்து போடு சின்னக்கண்ணு
உங்க அம்மா கையில கொடுத்து போடு சின்னக்கண்ணு
அவங்க ஆற நூறு ஆக்குவாங்க செல்லக்கண்ணு (மணப்பாற)


 

எம்.ஜP.ஆரின் தீவிர ரசிகரான சத்யராஜ் எம்.ஜP.ஆரை சந்தித்தது எப்படி?

நடிகர் சத்யராஜ், மக்கள் திலகத்தின் அவர்களுடைய ரசிகர் ஆரம்ப காலத்தில் இருந்தே இவர் ஒரு தீவிர ரசிகராக இருந்தவர். இவர் கோயம்புத்தூரை சேர்ந்தவர். மக்கள் திலகம் எம். ஜி.ஆரை நேரில் பார்த்து பேச பல வருடங்கள் முயற்சித்துள்ளார். மக்கள் திலகம் நடித்த படங்களை பார்க்கத் தவறுவதில்லை.
இப்படி இருந்த இவர் சென்னைக்கு வந்து சினிமாவில் நடிக்க வாய்ப்பு பெற்று இவரும் ஒரு பிரபல நடிகராகி விட்டார். பிறகு என்ன மக்கள் திலகம் எம். ஜி. ஆரை ஈசியாக பார்த்து விடலாமே என்று நினைக்கும்போது, அவர் தமிழக முதலமைச்சராகிவிட்டார். இருந்தாலும் சத்யராஜ் தன்னுடைய முயற்சியை விடவில்லை.
தன்னுடைய நண்பர்களிடம் இதற்கு வழியை கேட்டுக்கொண்டே இருந்தார். பல வருடங்கள் முயற்சி செய்துகொண்டு இருந்த இவருக்கு ஒரு வழி கிடைத்தது. அதாவது சத்யராஜுடைய தங்கைகளுக்கு திருமண ஏற்பாடு செய்து பத்திரிகை அடித்து கோயம்புத்தூரில் உறவினர்களுக்கு எல்லாம் கொடுக்க ஆரம்பித்துவிட்டார்கள். சென்னையில் சினிமா துறையில் முக்கியஸ்தர்களுக்கு கொடுக்க பத்திரிகை வந்து விட்டது.
இது 1987 மே மாதம் கடைசியில் தன் தங்கையின் திருமண பத்திரிகையை முதல்வரிடம் நேரில் தானும் தன் மனைவியும் ராமாபுரம் எம். ஜி. ஆர். தோட்டத்திற்கு சென்று கொடுத்து அவரிடம் பேசி வணங்கி வாழ்த்தும் பெற்று வரணும் என்ற எண்ணம் ஏற்பட்டது. அதற்கான ஏற்பாடுகளைச் செய்தார்.
அதற்கான பலன் இரண்டே நாளில் கிடைத்துவிட்டது. ஒரு நாள் காலை 9.00 மணிக்கெல்லாம் எம். ஜி. ஆர். தோட்டத்திற்கு திருமண பத்திரிகையுடன் தன் மனைவியையும் அழைத்துக்கொண்டு போனார். தோட்டத்திற்குள் போகத் தடை ஒன்றும் இல்லை. வீட்டு வராண்டாவில் அரசாங்க அதிகாரி ஒருவரும் பொலிஸ் அதிகாரி ஒருவரும் இருப்பார்கள்.
அவர்கள் சத்யராஜ் மனைவியுடன் வந்து இருப்பதை மேலே உள்ள இன்டர்காம் வழியாக மக்கள் திலகத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டது. பிறகு மக்கள் திலகம் ஜானகி அம்மாளுடன் 15 நிமிடத்தில் கீழே வந்து விட்டார். இந்த இருவரையும் பார்த்த அந்த இருவரும் நாம் யாரை பார்க்கிறோம் என்பது போல், பிரமித்து நிற்கிறார்கள்.
முதல்வரும், ஜானகி அம்மையாரும் அவர்களைப் பார்த்து சிரித்த முகத்துடன் அமர சொல்கிறார். சத்யராஜுக்கு ஆனந்தத்தில் பேச்சு வரவில்லை. பிறகு தன் தங்கைகளுடைய திருமண பத்திரிகையை கொடுக்கிறார். அதை வாங்கி உடனே படிக்கிறார். முதல்வர் பத்திரிகையில் எந்த பிரமுகர் பெயரும் இல்லை மிக எளிமையான குடும்பப் பத்திரிகையாக இருந்தது. சற்று நேரம் மக்கள் திலகம் எதையோ யோசித்துக்கொண்டு இருந்தார்.
சத்யராஜ் இப்போ ஒரு பெரிய நடிகர் மக்களுக்கெல்லாம் மிகவும் அறிந்தவர் நல்லநடிகர் இவர். எந்த வித விளம்பரமும் இல்லாமல் தன்னுடைய தங்கைகளுடைய திருமணத்தை நடத்துகிறாரே இந்தத் திருமணத்திற்கு நாம் எப்படியும் போகவேண்டும் என்ற யோசனைதான் அது.
பிறகு, சத்யராஜை பார்த்து நானும் ஜானுவும் இந்த திருமணத்திற்கு வருகிறோம் என்றார். உடனே சத்யராஜ், “அண்ணே! நீங்கள் இந்த திருமணத்திற்கு வரவேண்டாம். இந்த பத்திரிகையில் உங்கள் பெயரை போடவில்லை. மேலும் காலை 4 மணிக்கு திருமணம் தயவு செய்து வரவேண்டாம்.
உங்களுடைய வாழ்த்துச் செய்தி மட்டும் கிடைத்தால் போதும், அண்ணே உங்களை எப்படியாவது நேரில் பார்க்கனும் உங்களிடம் இரண்டு வார்த்தையாவது பேசணும் உங்களிடம் ஆசிர்வாதம் பெறணும் என்ற ஆசையோடு தான் வந்தேன். நீங்கள் இந்த நாட்டின் முதல் அமைச்சர் நீங்கள் தயவு செய்து வரவேண்டாம்.
உங்களுடைய வாழ்த்து செய்தியே போதும் நீங்கள், நேரில் வந்த மாதிரிதான் என்னை மன்னிக்கணும் என்று சொல்லி முடித்தவுடனே மக்கள் திலகம் சத்யராஜுடைய தோள் பட்டையை தட்டிக்கொண்டே நான் வருவேன் என்று சொல்லி கொண்டே அவர்களை வழி அனுப்பி வைத்தார். பிறகு, அந்தப் பத்திரிகையை தன்னுடைய அரசு உதவியாளரிடம் கொடுத்து நாங்கள் இந்த திருமணத்திற்கு போகனும் மறக்காமல் ஞாபகப்படுத்துங்கள் முதல் நாளே போகனும் அதற்கு தகுந்தாற்போல் ஏற்பாடு செய்யுங்கள்.
இந்த விசயம் ரகசியமாக இருக்கட்டும் என்று சொல்லிய மக்கள் திலகம் பிறகு, காண வந்து இருந்த மற்றவர்களை எல்லாம் அழைத்துப் பேசினார். சத்யராஜுடைய தங்கைகள் திருமண விழாவிற்கு முதல் நாளே தன் மனைவி ஜானகி அம்மாளுடன கோயம்புத்தூர் புறப்படுகிறார். கூடபேச்சு துணைக்கு அப்போதைய போக்குவரத்து துறை அமைச்சர் முத்துசாமியையும் அழைத்துச் செல்கிறார்.
இந்த விசயத்தை உடனடியாக முதல்வருடைய செயலாளர் கோவை மாவட்ட கலெட்டருக்கு தகவல் கொடுக்கிறார். இந்தத் தகவலை கேட்ட கலெக்டர் உடனே சத்யராஜ் வீட்டுக்குச் சென்று முதல்வர் கோவைக்கு புறப்பட்டுவிட்டார்.
உடனே, விமான நிலையத்துக்கு போகணும் நீங்களும் விமான நிலையத்துக்கு வருவது தான் நல்லது என்று சற்று கோபமாக பேசிவிட்டு, கலெக்டர் முதல் அமைச்சரை வரவேற்க விமான நிலையத்துக்கு சென்றுவிட்டார். கலெக்டர் கோபமாக ஏன் சத்யராஜிடம் பேசினார். முதல்வர் உங்கள் குடும்ப திருமணத்திற்கு வருகிறார் என்பதை ஏன் எனக்கு முன்னதாக தெரிவிக்கவில்லை என்றதற்காகத்தான்.
இதை அறிந்த சத்யராஜும் உடனே விமான நிலையத்துக்கு கிளம்பி சென்று எம். ஜி.ஆர் தன் மனைவியோடு விமானத்திலிருந்து இறங்கும் காட்சியை சத்யராஜும் மற்றவர்களும் பார்க்கிறார்கள்.
மக்கள் திலகம் மைதானத்திற்கு வந்தவுடனே, சத்யராஜ் ஓடோடி வந்து ராமருடைய பாதங்கள் தொட்டதுபோல் இந்த ராமச்சந்திரனுடைய பாதங்களை தொட்டு வணங்கி வரவேற்றார். பிறகு, விமான நிலையத்தில் இருந்து முதல்வர் தங்குவதற்கு ஏற்பாடு செய்து உள்ள விடுதிக்கு செல்ல காரில் ஏறும்போது அருகில் நின்று கொண்டிருந்த சத்யராஜை தன் காரிலே ஏற்றிக்கொண்டு உடன் வந்த அமைச்சர் முத்துசாமியையும் அதே காரில் ஏற்றிச் செல்கிறார்கள்.
அடுத்த நாள் காலையில் நடக்கும் திருமணத்தைப் பற்றி பேசிக்கொண்டே செல்கிறார்கள். இதன்படி அடுத்த நாள் காலை 4 மணிக்கு நடைபெறும் திருமணத்திற்கு முதல்வர் தன் துணைவியாருடன் மற்றும் அமைச்சர் முத்துசாமியுடன் செல்கிறார். முதல்வர் வந்ததை அறிந்து எல்லோரும் சென்று வரவேற்கிறார்கள்.
தமிழக முதல்வரான மக்கள் திலகம் எந்த முன் அறிவிப்பும் இல்லாமல் திடீர் என்று வந்து இருக்கிறாரே என்று எல்லோரும் ஆச்சரியப்பட்டார்கள். இந்த விசயம் அப்போதைக்கு தமிழகம் முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டது. திருமண மேடையில் மண மக்களை வாழ்த்தி அவர்களுக்கு பரிசுகளை வழங்கி செல்கிறார். இந்த சம்பவத்தை நினைத்து சத்யராஜும் அவரது குடும்பமும் ‘தெய்வமே’ நேரில் வந்து வாழ்த்தி சென்றது போல, நினைத்து ஆனந்தம் அடைந்தனர்.
மக்கள் திலகம் திருமண மண்டபத்தில் ஒரு மணி நேரத்துக்கு மேல் இருக்கிறார் மேடையில் ஐயர்கள் பூஜை அதாவது மாங்கல்ய பூஜை நடக்கும். இதற்கிடையில் இந்தத் திருமணத்திற்கு முதல் அமைச்சர் எம். ஜி. ஆர். வந்து இருக்கிறார். மேடைக்கு அருகில் அமர்ந்து இருக்கிறார் என்ற செய்தியை திருமணத்திற்கு வருகிறவர்கள் அறிந்ததும், உடனே முதல்வர் இருந்த இடத்திற்கு வந்து, அவரைப் பார்த்து வணங்கிச் செல்பவர்களும், அவருக்கு அருகிலேயே அமருபவர்களும் உண்டு.
இப்படி இருக்கும் நேரத்தில் சிவாஜி, சிவகுமார் ஆகியோர் மண்டபத்திற்குள் நுழைந்தார்கள். மக்கள் திலகம் திருமணத்திற்கு வந்து அமர்ந்திருக்கிறார் என்பதை அறிந்தவுடன் மக்கள் திலகம் அமர்ந்து இருக்கும் இடத்திற்கு நடிகர் திலகமும், சிவகுமாரும் வந்து நடிகர் திலகம் மக்கள் திலகத்தை கட்டிப் பிடித்துக் கன்னத்தைக் கிள்ளிக் கொண்ட காட்சியை கண்டவர்கள் மனமகிழ்ந்தார்கள். சிவாஜிக்கும், சிவகுமாருக்கும் முதல்வர் அருகிலேயே கதிரைகள் போடப்பட்டன.
மக்கள் திலகம், ஜானகி அம்மாள், சிவாஜி, சிவகுமார் இவர்கள் மேடைக்கு அருகில் வரிசையாக அமர்ந்து இருக்கும் அழகான காட்சியை பார்த்து பார்த்து ரசித்து அளவற்ற அளவிற்கு ஆனந்தப்பட்டார்கள். சத்யராஜும் அவரது குடும்பமும் இதற்கு இடையில், திருமண மேடைக்கு அருகில் அமர்ந்து வாசித்துக் கொண்டு இருந்த நாதஸ்வரத்தையும், மேளத்தையும் கவனிக்கத் தவறவில்லை. மக்கள் திலகத்து மேளக் கச்சேரி என்றால் மிகவும் பிடிக்கும்.
அதற்கு ஏற்ற மாதிரி அவர்களும் நல்ல நயத்துடன் வாசித்தார்கள். காலை 5 1/2 மணிக்கெல்லாமத் திருமணம் முடிந்தது. மக்கள் திலகமும் ஜானகி அம்மாவும் இவர்கள் தங்கி இருக்கும் அரசு மாளிகைக்குச் சென்றார்கள். அன்று கோவையிலேயே தங்கி இருந்து அடுத்த நாள் நடக்கும் சத்யராஜுடைய மற்றொரு தங்கையின் திருமணத்தில் கலந்துகொண்டு விட்டு சென்னைக்கு புறப்படும்போது, சத்யராஜும் விமான நிலையத்துக்கு வழியனுப்ப வந்தார்.
வந்தவர் விமானம் நிற்கும் இடம் வரை வந்து, முதல்வர் படிக்கட்டில் ஏறி, விமானத்தில் நுழையும் வரை படிக்கட்டு அருகிலேயே நின்று கொண்டிருந்த சத்யராஜைப் பார்த்து கை அசைத்து வாழ்த்தினார் மக்கள் திலகம் இதில் ஒரு முக்கிய விஷயம் விமானப் பயணிகளைத் தவிர வேறு பயாரும் விமானம் வரை போகக் கூடாது இது விமான நிலைய சட்டம். இதை மீறி சத்யராஜ் விமானம் வரை அருகே சென்று மக்கள் திலகத்தை வழி அனுப்பியது மக்கள் திலகம் அவர்களுக்கும், மற்றவர்களுக்கும் மிக மிக ஆச்சர்யமாக இருந்தது.
இதில் மற்றொரு விஷயம் சத்யராஜையோ அவரது குடும்பத்தையோ முன் அறிமுகம் இல்லாமல் அந்தக் குடும்பத் திருமண விழாவிற்கு கோயம்புத்தூருக்குப் போய், தன் மனைவியுடன் சென்று, இரண்டு நாள் அங்கேயே தங்கி, வேறு எந்தவித நிகழ்ச்சிகளையும் வைத்துக்கொள்ளாமல், அந்தத் திருமணத்திற்கு சென்று வந்தது. அதுவும், தமிழ்நாட்டு முதல் அமைச்சர் எப்படி என்று இந்த விஷயத்தை ஆச்சரியமாக சினிமா துறை, அரசியல் துறையினர்கள் பரவலாக பேசினார்கள்.
சத்யராஜும் ஒரு நடிகர் குறுகிய காலத்தில் பிரபலம் ஆனவர். மக்கள் திலகம் தன்னுடைய உயர்வுக்கு அதிக செல்வாக்கை கொடுத்தது சினிமாவா? அரசியலா? என்பதை அடிக்கடி அளந்து பார்க்கக்கூடியவர்.ஆனாலும் தனக்கு சினிமா தான் முதலில் அப்புறம் தான் அரசியல் என்று மக்கள் திலகம் நினைப்பவர்.
மக்கள் திலகத்தை புகழ் ஏணியில் ஏற்றிவிட்டது சினிமா தான் இது எல்லோருக்கும் தெரிந்த விஷயம், மக்கள் திலகத்தை மக்களுக்கு அறிமுகப்படுத்தியது சினிமாதான். சத்யராஜ் தன்னுடைய பரம ரசிகர் இப்போதுஅந்த மாமனிதருடைய பக்தராக உள்ளார். அவருடைய இல்லத்தில் எம். ஜி. ஆருடைய புகைப்படத்தை வைத்து வணங்கி வருகிறார்
பிறகு? ஒரு நாள் சத்யராஜ் தன் மனைவியுடன் ராமாபுரம் எம். ஜி. ஆர். தோட்டத்திற்கு முதல்வரை சந்திக்க நேரத்தை தெரிந்துகொண்டு காலை 8.30 மணிக்கு செல்கிறார்.
தோட்டத்திற்கு சென்றவுடன் சத்யராஜும் அவரது மனைவியும் வந்திருக்கும் தகவல் முதல்வருக்கு தெரிவிக்கப்படுகிறது. அதன்படி முதல்வரும் துணைவியார் ஜானகி அம்மையாரும் கீழே இறங்கி வந்து இவர்களை பார்த்து குடும்ப நலனை விசாரிக்கிறார்.
அந்தநேரம் உடனே சத்யராஜ் தனது தங்கையின் திருமணத்திற்கு நேரில் வந்து வாழ்த்தி சென்ற, உங்களுக்கு எனது குடும்பத்தினர் சார்பில் நானும் என் மனைவியும் நன்றி சொல்ல வந்து இருக்கிறோம். எங்களை வாழ்த்தி அனுப்புங்கள் என்று சொன்னபோது அவர்களை வாழ்த்தி விட்டு சத்யராஜை பார்த்து தம்பி உனக்கு வேற ஏதாவது என்னால் உதவி வேண்டும் என்றால் கேள்! எதுவாக இருந்தாலும் செய்கிறேன் என்று அன்புடன் சிரித்து கொண்டே கேட்கிறார். உடனே, சத்யராஜ் அண்ணே நான் இப்போ நிறைந்த வசதியுடன் இருக்கிறேன்.
எனக்கு உங்களுடைய உடற் பயிற்சி பொருள்களில்இருந்து ஏதாவது ஒன்றை தாருங்கள். அதை நான் உங்களுடைய ஞாபகமாக தினமும் உடற் பயிற்சி எடுத்து செய்றேன் என்றார். உடனே மக்கள் திலகம் சற்று யோசித்து அருகில் நின்றுகொண்டிருந்த மாணிகத்திடம் மேலே உள்ள என்னுடைய கர்லா கட்டையில் ஒன்றை எடுத்துக் கொண்டு வா என்று சொன்னார்.
உடனே கர்லா கட்டை வந்தது மக்கள் திலகம் அந்த கர்லாகட்டையை தன் கைபட கொடுத்தார். அத்துடன் தினமும் காலையில் உடற் பயிற்சி செய்ய வேண்டும் உடல் நல்லா இருந்தால் தான் உழைக்க முடியும். உழைப்பால் உயர்வதே முக்கியம் என்று அறிவுரை சொல்லி வாழ்த்தி அனுப்பினார். இதை மறக்காமல் சத்யராஜ் பின்பற்றி வருகிறார்.