Thursday, July 10, 2014

என்.எஸ்.கே. குடும்பத்துக்கு உதவி

என்.எஸ்.கே. அவர்களுடைய இரண்டாவது மனைவி டி.ஏ. மதுரம்; சென்னையில் என்.எஸ்.கே. மறைவுக்கு பிறகு ஒரு காலகட்டத்தில் மிகவும் சிரமப்பட்டார். அவருக்கு எம். ஜp. ஆர் தன் மனைவி ஜhனகி அம்மாள் வழியாக அப்ப அப்ப வேண்டிய உதவிகளை செய்து வந்தார் இறக்கும் வரையில்.
அடுத்து, எம்.கே. தியாகராஜ பாகவதர் மறைவுக்கு பிறகு திருச்சியில் உள்ள அவரது குடும்பத்தின் அவர்களுடைய வீட்டிற்கு சென்று உதவி செய்து உள்ளார். அடுத்து பி.யு. சின்னப்பா அவர்களுடைய குடும்பம் புதுக்கோட்டையில் இருந்தது. அவர்களுக்கும் புதுக்கோட்டைக்குச் சென்று உதவி செய்து உள்ளார்.
மக்கள்திலகம்; பொதுவாகவே பழைய நடிகர்களுக்கு, தனக்கு உதவி வேண்டும் என்று கேட்டால் உடனே, அவர்களுக்கு தகுந்தாற் போல் உதவி செய்வார். ஆனால் அவர்கள் குடி பழக்கம் உள்ளவர்களாக இருக்கக் கூடாது.
இது போல கலைவாணர் என்.எஸ்.கே. மறைந்த பிறகு அவரைப் போலவே நாகர்கோயிலை சேர்ந்தவர் சந்திரபாபு, இவர் சினிமாவில் குறுகிய காலத்தில் பிரபல நடிகரானவர், இவர் சொந்த குரலில் பாடி நடிப்பவர், சில படங்களில் மக்கள் திலகத்துடன் கூடசேர்ந்து நடித்து உள்ளார்.
இவர் பிரபலமானவர். ஆனால் இவரிடம் குடிபழக்கம் உண்டு. இதனால் உடல் நல குறைவு ஏற்பட்டு சினிமாவில் நடிக்க வாய்ப்பு இல்லாமல் போய்விட்டது. இந்த சமயத்தில் மிகவும் சிரமப்பட்டார். இதை அறிந்த மக்கள் திலகம் அவரை தன் வீட்டுக்கு அழைத்து பண உதவி செய்தார்.

மக்கள்திலகம், நடிகர் திலகம்

திறமைதான் முக்கியம் இதில் சிவாஜயின் நடிப்பு திறமையை சினிமா உலகத்தில் பாராட்டதவர்கள் இல்லை, நடிப்பில் அவர் பாணி எனக்கு வராது, என்னுடைய பாணி அவருக்கு வராது.
எங்கள் இருவருடைய படங்களும் வெளியிலே வெளியிடும்போது தியேட்டர்களில் ரசிகர்கள் அந்த தியேட்டரை அலங்காரம் செய்வதும் ஆரவாரத்தோடு முதல்நாள் அன்று படத்தை பார்ப்பதும் முக்கியமான விடயமாக இருக்குமே தவிர மக்கள்திலகம், நடிகர் திலகம் என்று ரசிகர்களுக்குள் கூட போட்டி இருக்காது.
எங்கள் இருவருக்கும் தமிழ்நாடு எங்கும் ரசிகர் மன்றங்கள் அமைக்கப்பட்டன. அது படிப்படியாக வளர்ந்து வெளிநாடு எங்கும் எங்களுக்கு ரசிகர் மன்றங்கள் உண்டாகின.
இது சினிமா சிவாஜ 1953இல் தி.மு.கவிலிருந்து காங்கிரசில் இணைந்தார். நான் தி.மு.கவில் அண்ணா முன்னிலையில் இணைந்தவன். நாங்கள் இருவரும் தமிழ்நாடு அரசியலில் முக்கியஸ்தர்களாக இருந்தோம்.
அப்போ கூட எங்களுக்குள் போட்டி இல்லை, பொறாமை இல்லை, ஒருவருக்கு ஒருவர் தாக்கி பேசி கொண்டதும் இல்லை. சார், உங்களிடம் இதை நான் மிக சுருக்கமாக சொல்லி உள்ளேன் என்று சொன்னவுடன் அவர் சிரமத்துக்கு மன்னிக்கனும் சார் நீங்கள் எவ்வளவோ உயர்ந்த மனிதராக இருக்கிறீர்கள்.
உங்களுடைய நல்ல பண்பாட்டுக்கு உங்களை யாராலும் வெற்றி பெற முடியாது. வணக்கம் சொல்லி அவர் விடைபெறுகிறார்.