Friday, May 29, 2020

உன் கண்ணில் நீர் வழிந்தால்

உன் கண்ணில் நீர் வழிந்தால் என் நெஞ்சில் உதிரம் கொட்டுதடி' என்ற மகாகவி பாரதியின் இரண்டு வரிகளைப் பல்லவியில் பயன்படுத்திக்கொண்டு, அதனைத் தொடர்ந்து கவியரசர் செய்தது மிகப்பெரிய ரசவாத வித்தை. எல்லா உறவுகளையும் தாண்டி கணவன் மனைவிக்குள் உள்ள நெருக்கத்தை, அன்பை, முக்கியத்துவத்தை அவ்வளவு அழகாக சொல்லியிருப்பார். ஒரு தாம்பத்யம் எப்படி இருக்கவேண்டும் என்பதற்கு இன்றளவும் எடுத்துக்காட்டு இந்தப்பாடல்தானே?

கேள்வி பிறந்தது அன்று

கேள்வி பிறந்தது அன்று நல்ல
பதில் கிடைத்தது இன்று

ஆசை பிறந்தது அன்று
யாவும் நடந்தது இன்று


 

கண்ணதாசனின் பாடல்களில் ஒரு சில வரிகள்

கவிஞர் கண்ணதாசனின் பாடல்களில் எத்தனயோ தத்துவ முத்துகளைக் கண்டு ரசிக்கலாம்.

 அவரின் பாடல்களின் ஒரு சில வரிகள் :

"நமக்கும் கீழே உள்ளவர் கோடி,
நினைத்துப் பார்த்து நிம்மதி ஆற்று."

"இருக்குமிடமே இனியதென்றெண்ணிச்
சுவைக்கும் வாழ்வே சுகம் பெரும் வாழ்வு."

"நம்பிக்கை என்னும்
நந்தா விளக்கு
உள்ள வரையிலும்
உலகம் நமக்கு !"

காலத்தால் அழியாத பாடல்களை தந்து பட்டொளி வீசும் கண்ணதாசன் !

திரைப்படப் பாடல்களில் என்றென்றும் பட்டொளி வீசிப் பறப்பது கவிஞர் கண்ணதாசனின் கொடிதான் என்பதில் மாற்றுக்கருத்து இருக்க முடியாது. பிறப்பு, காதல், திருமணம், வாழ்க்கை, விரக்தி, அமைதி, தத்துவம் என அவர் தொடாத எல்லைகளே கிடையாது. காலத்தால் அழியாத பாடல்களைத் தந்த கவியரசர் கண்ணதாசனின் நினைவுதினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.
திரைப்பட பாடலாசிரியர்களில் கண்ணதாசனை முன்னோடி என்றே சொல்லலாம். எம்ஜிஆருக்கு கண்ணதாசன் எழுதிய வரிகள் எம்ஜிஆரின் அரசியல் வாழ்க்கைக்கும் பெரிய பலமாக இருந்தது என்பதை மறுக்க முடியாது. இன்றும் அரசியல் களங்களில் ஒலித்துக்கொண்டிருக்கும் எம்ஜிஆரின் சில புரட்சி பாடல்களுக்கு வரி கொடுத்தவர் கண்ணதாசன். எட்டாம் வகுப்பு மட்டுமே படித்துள்ள கண்ணதாசன் தமிழ் சினிமாவில் தத்துவப் பாடல்களுக்கு புதிய முகமாக விளங்கியவர். எம்.ஜி.ஆருக்கு மிகவும் பிடித்தமான பாடலாகக் கருதப்பட்ட 'அச்சம் என்பது மடமையடா' பாடல் இவர் இயற்றியதே.
கண்ணதாசன் 1927ஆம் ஆண்டு ஜூன் 24-ல் சிறுகூடல் பட்டியில் பிறந்தார்.கண்ணதாசன் கம்பரின் செய்யுளிலும், பாரதியாரின் பாடல்களிலும் மிகுந்த ஈடுபாடு கொண்டவர். பாரதியாரை மானசீகக் குருவாக ஏற்றுக் கொண்டவர். தான் பேசும் வார்த்தைகளே கவிதை தான், உதிர்க்கும் தத்துவங்களே பாடல் வரிகள் தான் என வாழ்ந்தவர் கண்ணதாசன். போகிறபோக்கில் வார்த்தைகளை கோத்து கவிதை மாலை தொடுத்தகண்ணதாசனை 'கவியரசர்' என உலகம் போற்றியதில் வியப்பேதுமில்லை.
பாடல் எழுதுவது மட்டுமல்லாமல் சில படங்களிலும் தலையை காட்டிய கண்ணதாசனுக்கு காமராசரின் வாழ்க்கை வரலாற்றை படமாக எடுக்க வேண்டும் என்பது நீண்ட நாள் ஆசை. இதற்காக சில காட்சிகளையும் படமாக்கிய அவரால், இறுதிவரை அந்த ஆசையை நிறைவேற்ற இயலவில்லை.
திரைப்பாடல்கள், இலக்கியம், நாவல், மொழிபெயர்ப்பு என கண்ணதாசன் தொடாதே துறைகளே இல்லை. நான்காயிரத்திற்கும் மேற்பட்ட கவிதைகளையும், ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட திரைப்படப் பாடல்களையும் படைத்த தமிழன்னையின் தவப்புதல்வன். சண்டமாருதம், திருமகள், திரை ஒலி, தென்றல், தென்றல்திரை, முல்லை, கண்ணதாசன் ஆகிய இதழ்களின் ஆசிரியராக இருந்தவர்.
தமிழக அரசின் அரசவைக் கவிஞராகவும் கண்ணதாசன் பதவி வகித்தார். 'சேரமான் காதலி' எனும் நாவலுக்காக சாகித்ய அகாடமி விருதினையும் கண்ணதாசன் பெற்றுள்ளார். இந்துமதம் குறித்து இவர் எழுதிய 'அர்த்தமுள்ள இந்துமதம்' இன்றளவும் விற்பனையில் முன்னணியில் உள்ளது.
இவரின் பாடல் வரிகள் அனைத்தும் இதயத்தின் வலிகளை எல்லாம் காற்றோடு கரைத்திடும் வலு உடையது. பாடல் வரிகளால் இன்றும் வாழ்ந்து வரும் கண்ணதாசன், உடல்நலக்குறைவால் அமெரிக்காவின் சிகாகோ மருத்துவமனையில் 1981, அக்டோபர் 17-ல் மறைந்தார். கண்ணதாசன் நினைவைப் போற்றும் வகையில் சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் அரசு சார்பில் மணிமண்டபம் அமைக்கப்பட்டுள்ளது.
தனது கடைசி பாடலை மூன்றாம் பிறை படத்திற்காக எழுதினார் கண்ணதாசன். 'கண்ணே கலைமானே' எனத்தொடங்கும் பாடலில் அவர் எழுதிய 'உனக்கே உயிரானேன் என்னாளும் எனை நீ மறவாதே' என்ற வரியை இன்றும் தமிழ் சினிமாவும், கண்ணதாசன் ரசிகர்களும் இதயத்தில் வைத்திருக்கிறார்கள். ஆமாம். எந்த நாளும் மறக்க முடியாத நபர் தான் கண்ணதாசன்!


காமராஜர் மறைவுக்கு கண்ணீரில் கவிதை வடித்த கண்ணதாசன்

1975 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 2ஆம் திகதி காந்தி பிறந்த நன்னாளில் காமராஜர் இந்த உலகை விட்டுப் பிரிந்தார். அவரது மறைவைக் கண்டு தமிழகமே அழுது புலம்பியது.பெருந்தலைவர் காமராஜரை மட்டுமே தன் தலைவனாக வாழ்நாள் முழுவதும் கொண்டாடிய கவிஞர் கண்ணதாசன், பேனாவில் கண்ணீர் ஊற்றி ஒரு கவிதை எழுதினார்.

இதோ அந்தக் கவிதை.

தனியே எனக்கோர் இடம் வேண்டும் – தலை
சாயும் வரை நான் அழ வேண்டும்.
வானகம் போய்வர வழி வேண்டும் – எங்கள்
மன்னனை நான் பார்த்து வரவேண்டும்
தாயே எனக்கொரு வரம் வேண்டும்- என்
தலைவனை மீண்டும் தர வேண்டும்.
தமிழே எனக்கொரு மொழி வேண்டும் – அவன்
தன்மையைச் சொல்லிநான் தொழவேண்டும்.
இருப்பேன் பலநாள் என்றானே – எம்மை
ஏய்த்தது போல் இன்று சென்றானே – அவன்
சிரிக்கும் அழகைப் பார்ப்பதற்கே – அந்தத்
தேவன் அருகினில் அழைத்தானோ?
பறக்கும் பறவைக் கூட்டங்களே – எங்கள்
பாரத வீரனைக் காண்பீரோ – இங்கு
துடிக்குங் கோடி உள்ளங்களை – அந்தத்
தூயவனிடம் கொண்டு சேர்ப்பீரோ!

இந்த கண்ணதாசனின் வரிகளில்தான் எத்தனை உண்மை, எத்தனை நேர்மை

கவிஞர் கண்ணதாசனின் வாழ்வில் நடந்த ஒரு சுவையான சம்பவம்

கவிஞர் கண்ணதாசன் ஒரு கல்லூரி கவியரங்கத்தில் கலந்துகொண்டு கவிதை வாசிக்க ஆரம்பித்தார்.

 

 
அரங்கத்தில் இருந்தவர்கள் உற்சாக ஆரவாரம் எழுப்பினர். அவர் கவிதையின் ஒவ்வொரு வரியை வாசிக்கும்போதும் பலத்த கைதட்டல் எழுந்தது.
 
வாசித்து முடிந்ததும் கைத்தட்டல் அடங்க நீண்ட நேரம் ஆனது.
 
கைத்தட்டல்கள் முடிந்ததும், கண்ணதாசன் கூறினார், ''இன்று நான் வாசித்த கவிதை நான் எழுதியது அல்ல.
 
உங்கள் கல்லூரி மாணவர் ஒருவர் ஒரு கவிதை எடுத்துக் கொண்டு நேற்று என்னிடம் வந்து காண்பித்தார்.
 
அதுமிக நன்றாக இருந்தது. எனவே நான் எழுதிய கவிதையை அவரை வாசிக்க சொல்லிவிட்டு அவர் எழுதிய கவிதையை நான் வாசித்தேன்.
 
என் கவிதையை அவர் வாசிக்கும்போது, எந்தவித ஆரவாரமும் இல்லை. அவர் எழுதிய கவிதையை நான் வாசித்தபோது பலத்த கர ஒலியுடன் கூடிய வரவேற்பு.
 
ஆக, சொல்பவன் யார் என்பதைத்தான் உலகம் பார்க்கிறதே ஒழிய, சொல்லும் பொருளைப் பற்றிக் கவலைப்படுவதில்லை. என்பதுதான் உண்மை என்று புரிகிறது''. என்று கூறினார்.

Saturday, May 9, 2020

பாக்காத என்ன பாக்காத

பாக்காத என்ன பாக்காத
குத்தும் பார்வையால என்ன பாக்காத
போகாத தள்ளி போகாத
என்ன விட்டு விட்டு தள்ளி தள்ளி போகாத
கொடுத்தத திருப்பி நீ கேட்க
காதலும் கடனும் இல்ல
கூட்டத்தில் நின்னு பாத்து கொள்ள
நடப்பதும் கூத்தும் இல்ல

பாக்காத என்ன பாக்காத
குத்தும் பார்வையால என்ன பாக்காத
போகாத தள்ளி போகாத
என்ன விட்டு விட்டு தள்ளி தள்ளி போகாத
---
வேணாம் வேணான்னு நான் இருந்தேன்
நீதானே என்ன இழுத்து விட்டே
போடி போடின்னு நான் தொரத்த
வம்புல நீதானே மாடிவிட்ட
நல்ல இருந்த என் மனச
நாறாக திருச்சுபுட்ட
கருப்பா இருந்த என் இரவ
கலர மாத்திபுட்ட
என்னுடன் நடந்த என் நிழல
தனியா நடக்க விட்ட
உள்ள இருந்த என் உசுர
வெளிய மிதக்க விட்ட
---
பாக்காத என்ன பாக்காத
குத்தும் பார்வையால என்ன பாக்காத
போகாத தள்ளி போகாத
என்ன விட்டு விட்டு தள்ளி தள்ளி போகாத
---
வேணாம் வேணான்னு நினைக்கலையே
நானும் உன்ன வெறுக்கலையே
காணோம் காணோன்னு நீ தேட
காதல் ஒன்னும் தொலையலையே
ஒன்ன இருந்த ஞாபகத்த
நெஞ்சோடு சேர்த்துவெச்சேன்
தனியா இருக்கும் வலிய மட்டும்
தனியா அனுபவிச்சேன்
பறவையின் சிறகுகள் பிரிஞ்சாதான்
வானத்தில் அது பறக்கும்
காத்திருந்தால் தான் இருவருக்கும்
காதல் அதிகரிக்கும்
---
பாக்காத என்ன பாக்காத
குத்தும் பார்வையால என்ன பாக்காத
போகாத தள்ளி போகாத
என்ன விட்டு விட்டு தள்ளி தள்ளி போகாத
கொடுத்தத திருப்பி நான் கேட்க
கடனா கொடுக்கலையே
உனக்குள்ளே தானே நான் இருக்கேன்
உனக்கு அது புரியலையே

பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது

படம் : சூரியகாந்தி

இசை : MS விஸ்வநாதன்

பாடியவர் : TM சௌந்தர்ராஜன்

பாடல் வரிகள் : கண்ணதாசன்

பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது
கருடா சௌக்கியமா
பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது
கருடா சௌக்கியமா
யாரும் இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால்
எல்லாம் சௌக்கியமே.. கருடன் சொன்னது..
அதில் அர்த்தம் உள்ளது..
உயர்ந்த இடத்தில் இருக்கும் போது
உலகம் உன்னை மதிக்கும்
உன் நிலைமை கொஞ்சம் இறங்கி வந்தால்
நிழலும் கூட மிதிக்கும்
உயர்ந்த இடத்தில் இருக்கும் போது
உலகம் உன்னை மதிக்கும்
உன் நிலைமை கொஞ்சம் இறங்கி வந்தால்
நிழலும் கூட மிதிக்கும்
மதியாதார் தலைவாசல் மிதிக்காதே என்று
மானமுள்ள மனிதனுக்கு ஔவை சொன்னது
அது ஔவை சொன்னது.. அதில் அர்த்தம் உள்ளது
பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது
கருடா சௌக்கியமா
யாரும் இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால்
எல்லாம் சௌக்கியமே.. கருடன் சொன்னது..
அதில் அர்த்தம் உள்ளது..
வண்டி ஓட சக்கரங்கள் இரண்டு மட்டும் வேண்டும்
அந்த இரண்டில் ஒன்று சிறியதென்றால்
எந்த வண்டி ஓடும்
உனை போலே அளவோடு உறவாட வேண்டும்
உயர்ந்தோரும் தாழ்ந்தோரும் உறவு கொள்வது
அது சிறுமை என்பது.. அதில் அர்த்தம் உள்ளது
பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது
கருடா சௌக்கியமா
யாரும் இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால்
எல்லாம் சௌக்கியமே.. கருடன் சொன்னது..
அதில் அர்த்தம் உள்ளது..
நீயும் நானும் சேர்ந்திருந்தோம் நிலவு வானம் போலே
நான் நிலவு போல தேய்ந்து வந்தேன் நீ வளர்ந்ததாலே
நீயும் நானும் சேர்ந்திருந்தோம் நிலவு வானம் போலே
நான் நிலவு போல தேய்ந்து வந்தேன் நீ வளர்ந்ததாலே
என் உள்ளம் எனை பார்த்து கேலி செய்யும் போது
இல்லாதான் இல்வாழ்வில் நிம்மதி ஏது
இது கணவன் சொன்னது.. இதில் அர்த்தம் உள்ளது
பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது
கருடா சௌக்கியமா
பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது
கருடா சௌக்கியமா
யாரும் இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால்
எல்லாம் சௌக்கியமே.. கருடன் சொன்னது..
அதில் அர்த்தம் உள்ளது..

தமிழ் திரையுலகில் சிறந்த படங்களை கொடுத்த பெண் இயக்குனர்கள்

நமது தமிழ் திரையுலகில் இதுவரை பல ஆண் இயக்குனர்கள் வந்து சென்றுள்ளார்கள். அதில் பலரும், பல விதமான சிறந்த படங்களை திரையுலகிற்கு தந்துள்ளார்கள்.
ஆனால், சில நேரங்களில் ஆண் இயக்குனர்களை விட சிறந்த படங்களை பெண் இயக்குனர்கள் மிக சிறந்த வகையில் நம் தமிழ் திரையுலகிற்கு தந்துளார்கள்.
அவர்களை பற்றி தான் நாம் தற்போது இங்கு பார்க்க போகிறோம்...
1." லட்சுமி ராமகிருஷ்ணன் "
# ஆரோகணம்
# அம்மணி
# ஹவுஸ் ஓனர்
2. " ஹலிதா ஷமீம் "
# பூவரசம் பீப்பீ
# சில்லு கருப்பட்டி
3. " மதுமிதா சுந்தரராமன் "
# வல்லமை தாராயோ
# கொல கொலயா முந்திரிக்கா
# மூணே மூணு வார்த்தை
# கே.டி என்கிற கருப்புத்துறை
4. " அனிதா உதீப் "
# குளிர் 100 டிகிரி
# 90 ML
5. " சுதா கொங்கரா "
# துரோகி
# இறுதிச்சுற்று
# சூரரை போற்று - { வெளிவர காத்திருக்கும் படம் }
6. " சௌதர்யா ரஜினிகாந்த் "
# கோச்சடையான்
# VIP 2
7. " ஐஸ்வர்யா தனுஷ் "
# 3
# வை ராஜா வை
8. " ஷோபா சந்திரசேகர் "
# இன்னிசை மலை
# நண்பர்கள்

මරදන්කඩවල යකඩයා



“මරදන්කඩවල යකඩයා”; මේ නම රට පුරා ප්‍රසිද්ධ වුණේ කැකිරාවේ තැපැල් ස්ථානයේ වෙච්ච දරුණු කොල්ල කෑමක් නිසයි. කොල්ල කෑම විතරක් නෙවෙයි, ඒකෙ ස්ථානාධිපති වෙලා ඉඳපු තම්බයියා නම් පුද්ගලයාව මරණයට පත් කරපු මරදන්කඩවල යකඩයාගේ උපන් ගෙයි නම වෙන්නේ සාංචි ආරච්චිගේ ජිනදාස. නොපනත්කම්, අසාධාරණකම්වලට එරෙහිව කතා කරපු ජිනදාස, දාමරික වැඩවලට යොමු වුණේ තමන්ගේ පෙම්වතිය දෙවැනි ලෝක යුද සමයේදී ලංකාවේ ඉඳපු කාපිරි හමුදා අතින් දූෂණය වෙලා මරණයට පත් වුණු නිසා කියලත් කතාවක් තියෙනවා.
මරදන්කඩවල යකඩයා කියන නම පට බැඳුණු විදිය ගැනත් කතා බොහෝමයි. ඒ අතරින් වැඩිපුර ප්‍රසිද්ධ කතාව වෙන්නේ මනම්පිටියේදී ඔහු හා ගැටෙන්න ආව පුද්ගලයෙක් ව ඔහු යකඩ කූරක් නවා සිර කරපු කතාවයි. කොහොම වුණත් ඔහුට තිබුණු කාය ශක්තිය ගැන නම් කතන්දර නිරතුරුව ම පුවත්පත් වාර්තාවලින් දැකගන්න ලැබුණා.
ධනවතුන්ගෙන් සොරකම් කරන සල්ලි, දුප්පතුන්ට ලබාදුන් රොබින්හුඩ් ගණයේ වීරයෙක් වෙච්ච ජිනදාසගේ කතාව තමයි “යකඩයා” චිත්‍රපටයේ දැක්වුණේ. ගාමිණී ෆොන්සේකා මහත්මයා එහි නිරූපණය කරපු ජිනදාසගේ චරිතය, ලොකු ආන්දෝලනයකට ලක්වුණා. ඒකට හේතුව ඇත්ත ජිනදාස මස් මාංශ නොකන, දුම් පානය හෝ මත්පැන් නොබොන කෙනෙක් වීමත්, චිත්‍රපටයේ ජිනදාස ඒ සේරම කරන කෙනෙක් වීමත් නිසයි.
ගාමිණී ෆොන්සේකා මහත්මයා හැරුණා ම, රවීන්ද්‍ර රන්දෙණිය, ජෙනිටා සමරවීර, අනුලා කරුණාතිලක වගේ ප්‍රවීණ නළු නිළියන් රැසක් මේකේ රඟපෑවා. මේක අධ්‍යක්ෂණය කළේ නීල් රූපසිංහ මහත්මයායි.

මරුවා සමඟ වාසේ

එල්ලුම් ගහට ගිය කෙනෙක්ගේ මිනිය ගොඩ අරගෙන, ඔහු මරණයට පත් වෙලා ඇති බවට සැක හැරලා තහවුරු කිරීමක් කරපු සිදුවීමක් අපේ අධිකරණ වෛද්‍ය ඉතිහාසයෙන් වාර්තා වෙන්නේ එක සැරයයි. ඒ 1975 අවුරුද්දේ අගෝස්තු 05 වැනිදා එල්ලුම් ගහට ගිය මරුසිරා හෙවත් සිරිපාලයි. මුළු රටක් ම බයෙන් අවුලවපු මරුසිරා ගැන මිනිස්සුන්ගේ හිතේ කම්පාවක් ඇති වුණේ මෙන්න මේ අවස්ථාවේදියි. මොකද නම් දරාපු අපරාධකරුවෙක්  වුණත්, ඔහු මරණයට අසීමිත විදියට බය වුණා. ඒ බය නිසා ම, එල්ලුම් ගහට යන්න නියමිත දවසට කලින් දා රෑ නිදි පෙති තොගයක්  බොන්නත් ඔහු පෙළඹුණා. පහුවෙනිදා උදේ ආගමික වතාවත් කරන්න ස්වාමීන් වහන්සේ කෙනෙක් බන්ධනාගාරයට වැඩම කරනකොටත් මරුසිරා මර නින්දේ. නින්දෙන් ඉඳිද්දී ම එල්ලුම් ගහට යවපු මරුසිරාගේ මිනිය එයින් පිටතට අරගෙන නැවත පරීක්ෂාවක් කරන්න තීරණය වුණේ ඒ නිසයි.

මරුසිරාගේ මේ කතාව 1977 අවුරුද්දේදී චිත්‍රපටයකට නැගුණා. ඒ ටයිටස් තොටවත්ත මහත්මයා අධ්‍යක්ෂණය කරපු “මරුවා සමඟ වාසේ” සිනමාපටයයි. විජය කුමාරතුංග, එඩී අමරසිංහ, විමල් කුමාර ද කොස්තා, සෝමසිරි දෙහිපිටිය වගේ රංගන ශිල්පීන් මේකේ චරිත නිරූපණය කළා.