Monday, April 20, 2015

ஜயலலிதாவும் கமலும் இணைந்து நடித்த ஒரே படம்


எஸ்.பி.முத்துராமன் இயக்கத்தில் 1974ல் உருவான 'அன்புத் தங்கை'' படத்தில் முத்துராமன், nஜயலலிதா நடித்தனர். இதில் மேடை நாடகம் நடப்பது போன்ற ஒரு காட்சியில் nஜயலலிதாவுடன் புத்த பிக்கு வேடத்தில் கமல்ஹாசன் நடித்தது சிறப்பு. nஜயலலிதா, கமல்ஹாசன் சேர்ந்து நடித்த ஒரே படம் இதுதான்.
தென்னிந்திய மொழிகளில் மட்டுமின்றி இந்தி, பெங்காலியிலும் ரீமேக் ஆக காரணமாக இருந்த சு+ப்பர் ஹிட் படம் 'அவள் ஒரு தொடர்கதை''. கே.பாலசந்தருக்கு சிறப்பான பெயரை பெற்றுத் தந்த இப்படத்தில் nஜய்கணேஷ், விஜயகுமார், கமல்ஹாசன் நடித்திருந்தனர். நடிகை சுஜhதா அறிமுகமானது இப்படத்தில்தான் என்பது சிறப்பு.
nஜமினி கணேசன் தயாரித்த 'நான் அவன் இல்லை'' படத்தை கே.பாலசந்தர் இயக்கினார். பணத்துக்காக 5 பெண்களை ஏமாற்றும் மன்மதனின் கதை. படம் ஓடவில்லை.
ஆனால் இதே படம் ஜPவன் நடிப்பில் சில ஆண்டுகளுக்கு முன்பு ரீமேக் ஆகி ஹிட்டானது குறிப்பிடத்தக்கது. உலக சினிமா எடுக்கிறோம் எனக் கூறிக் கொண்டு திரையுலகில் பலர் பு+ச்சாண்டி காட்டிக் கொண்டிருக்கிறார்கள். தமிழ் சினிமாவில் 1970களின் கடைசியில் உலக தரமான படங்களை தந்து அந்த வேலையை சத்தம் இல்லாமல் செய்து காட்டியவர் மகேந்திரன்.
அவரை தமிழ் சினிமாவுக்கு கொண்டு வந்த படம் 'தங்கப் பதக்கம்''. மேடை நாடகத்துக்காக இந்த கதையை அவர் தயார் செய்தார். மேடையில் வெற்றி பெற்ற இக்கதையை படமாக தயாரிக்க சிவாஜp முடிவு செய்தார். மேடையில் வில்லன் நடிகர் செந்தாமரை ஏற்ற வேடத்தில்தான் சிவாஜp நடித்திருந்தார். படத்துக்கு கதை, திரைக்கதையுடன் வசனங்களை மகேந்திரன் எழுத, மாதவன் இயக்கினார். வெள்ளி விழா கண்ட படம் இது.
'அன்றே சிந்திய ரத்தம்'' படத்தில் எம்ஜpஆரும் ஸ்ரீதரும் இணைய இருந்தனர். சில காரணங்களால் '_ட்டிங் தொடங்கி, படம் நின்றுபோனது. அவர்கள் இணைய மாட்டார்களா என்ற ரசிகர்களின் ஏக்கத்தை போக்கியது 'உரிமைக் குரல்''. எம்ஜpஆருக்கு மாபெரும் வெற்றியை தந்த இப்படத்தில் லதா, புஷ்பலதா, சச்சு, நம்பியார், நாகேஷ் நடித்தனர். நடிகர் அசோகன் தயாரிப்பில் எம்ஜpஆர், மஞ்சுளா நடித்த படம் 'நேற்று இன்று நாளை''. நீண்ட நாள் தயாரிப்பில் இருந்த இந்த படத்தை ப.நீலகண்டன் இயக்கினார். இந்தியில் ஹேமமாலினி இரட்டை வேடங்களில் நடித்த படம் 'சீதா அவுர் கீதா''. 'எங்க வீட்டுப் பிள்ளை'' பாணி கதைதான்.
அதே படத்தை தமிழ், தெலுங்கில் நாகிரெட்டி தயாரித்தார். தமிழில் 'வாணி ராணி'' என்றும் தெலுங்கில் 'கங்கா மங்கா' என்றும் தயாரானது. தர்மேந்திரா வேடத்தில் தமிழில் சிவாஜp நடித்தார். வாணிஸ்ரீP இரட்டை வேடங்களில் நடித்தார். சி.வி.ராNஜந்திரன் இயக்கத்தில் 100 நாள் கொண்டாடிய படம் இது.
1941ல் டிகேஎஸ் சகோதரர்கள் நடத்திய நாடகம் 'குமாஸ்தாவின் பெண்''. அதையே டிகேஎஸ் சகோதரர்கள் பின்பு படமாகவும் தயாரித்து, நடித்தனர். ஒரிஜpனல் நாடகத்தில் இயக்குநர் ஏ.பி.நாகராஜன் நடித்திருந்தார். எனவே அதே படத்தை 'குமாஸ்தாவின் மகள'' என்ற பெயரில் எடுக்க ஏ.பி.என். முடிவு செய்தார். அவரே இயக்கிய இப்படத்தில் சிவகுமார், கமல்ஹாசன் நடித்தனர்.
கன்னட நடிகை ஆர்த்தி நாயகியாக அறிமுகமானார். nஜயலலிதாவின் 100வது படம் 'திருமாங்கல்யம்''. கெமராமேன் வின்சென்ட் இயக்கி இப்படத்தில் முத்துராமன், லட்சுமி, பண்டரிபாய், ஸ்ரீதேவி, சச்சு, சுகுமாரி நடித்தனர்.
மேஜர் சுந்தர்ராஜனின் மேடை நாடகம் 'டைகர் சாத்தாச்சாரி'', அதே பெயரில் படமானது. வி.டி.அரசு தயாரித்து இயக்கினார். சிவகுமார், சசிகுமார், பி.ஆர்.வரலட்சுமி, சுகுமாரி ஆகியோர் நடித்திருந்த இப்படத்தில் மேஜர் சுந்தர்ராஜனே கதாநாயகன். கவிஞர் வாலியின் மேடை நாடகமான 'கலியுக கண்ணன்'', படமானது.
கிருஷ்ணன், பஞ்சு இயக்கிய இந்தப் படத்தில் nஜய்சங்கருடன் nஜயசித்ரா நடித்திருந்தார். அசோகனும் வாசுவும் கதாநாயகனாக நடித்த படம் 'வைரம்''.
இந்தியில் வெளியான 'விக்டோரியா 203'' படத்தின் ரீமேக் ஆன இப்படத்தை ராமண்ணா இயக்கியிருந்தார். nஜய்சங்கர், nஜயலலிதா ஜோடியுடன் சச்சு, கே.எஸ்.nஜயலட்சுமி, மனோகர் ஆகியோரும் நடித்திருந்தனர்.
தெலுங்கில் லட்சுமி நடிப்பில் இதே படம் வெளியானது. இந்தி சு+ப்பர் ஸ்டாராக அமிதாப் பச்சன் உயர காரணமாக அமைந்த படம் 'ஜன்ஜPர''. இந்த படத்தின் ரீமேக்கில் அமிதாப் வேடத்தில் புரட்சித் தலைவர் நடித்தார். எஸ்.எஸ்.வாசனின் மகன் எஸ்.எஸ்.பாலன் இயக்கினார். லதா கதாநாயகி.

எப்போதுமே அடிபட்டவனுக்குத்தானே அதிகம் வலிக்கும் குடும்ப வாழ்க்கையில் பாலசந்தர் சந்தித்த துயர சம்பவங்கள்

டை ரக்டர் கே.பாலசந்தர் வாழ்க்கையில் சில சோக சம்பவங்கள் நடந்தன. அதன் விளைவாக அவர் படங்களில் சமூக சீர்திருத்தக் கருத்துக்களைப் புகுத்தினார்.
பொதுவாக பாலசந்தரின் படங்களில் பெண் கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும். பெண்களின் பிரச்சினைகள் அலசப்படும். பெண் உரிமை வலியுறுத்தப்படும். சமூக சீர்திருத்த கருத்துக்கள் எடுத்துக் கூறப்படும்.
இதற்குக் காரணம் என்ன என்பது குறித்து பாலசந்தர் எழுதியிருப்பதாவது:-
எங்கள் குடும்பம் பெரிய குடும்பம்தான். அண்ணன் பாலசுப்பிரமணியன் மூத்தவர். அவருக்குப்பின் சேதுலட்சுமி, மங்களம், சரசுவதி என்ற மூன்று மூத்த சகோதரிகள். ஐந்தாவதாக நான். எனக்கு அடுத்து ஒரு தங்கை nஜயலட்சுமி.
நான் சின்னஞ்சிறுவனாக இருந்தபோதே எனது மூத்த சகோதரிகளான சேதுலட்சுமி, மங்களம், சரசுவதி ஆகியோருக்கு திருமணமாகிவிட்டது.
அதுவும் நான் பிறப்பதற்கு முன்பே மங்களம் அக்காவுக்குத் திருமணம் முடிந்து விட்டது. அப்போது அக்காவுக்கு வயது 8.
நான் பிறப்பதற்கு முன்பே திருமணமான மங்களம் அக்கா, அடுத்த ஆண்டே கணவனை இழந்து விட்டாள். 8 வயதில் திருமணம்; 9 வயதில் விதவை. பெயரோ மங்களம். என்ன வினோதம்?
சின்னஞ்சிறு வயதில் என் சகோதரிக்கு ஏற்பட்ட அந்த இழப்பு நெடுநாளாக என் நெஞ்சை கனக்க வைத்தது என்று பாலசந்தர் கூறியுள்ளார்.
இதெல்லாம் புரிய எனக்கு 13 ஆண்டுகளாயின. அவ்வளவு இடைவெளிக்குப் பிறகுதான் அதன் தாக்கம் முழுமையாக எனக்குத் தெரிந்தது.
என்னுடைய இளைய சகோதரி nஜயா, மும்பையில் தனது கணவர் சங்கருடன் வாழ்ந்து வந்தாள். அவளது கணவர் எல்.ஐ.சி.யில் மிகப்பெரிய பொறுப்பில் இருந்து வந்தார்.
அப்போது எனக்கு 27 வயது இருக்கும். என் தங்கைக்கு 25 வயது இருக்கும். அவளுக்கு இரண்டு பெண் குழந்தைகள்.
என் கணவருக்கு உடல் நலம் இல்லை. ஆஸ்பத்திரியில் சேர்த்திருப்பதால் உதவிக்கு நீ இங்கு வந்து சில நாட்கள் தங்கவும் என்று தங்கையிடம் இருந்து கடிதம் வந்தது. நானும் என் மனைவியும் புறப்பட்டுச் சென்றோம். மும்பை ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்ட என் மைத்துனருக்கு என்ன நோய் என்பதை என் தங்கையிடம் சொல்லவே இல்லை. நான் டொக்டரைப் போய்ப் பார்த்தேன்.
அவர் உங்கள் மைத்துனருக்கு கேன்சர். அவர் அதிக நாள் உயிரோடு இருக்கமாட்டார். இதை உங்கள் தங்கையிடம் சொல்லவில்லை. வேறு யாரிடமாவது சொல்ல வேண்டும் என்பதால் உங்களிடம் மட்டும் சொல்லி இருக்கிறேன். நீங்கள் அவரை இங்கிருந்து அழைத்துச்சென்று விடுங்கள். அவருக்கு என்ன மருந்து தந்தாலும் பயன் இல்லை. வீண் செலவு செய்யவேண்டாம் என்றார்.
டொக்டர் சொன்னதைக் கேட்டு எனக்கு தலை சுற்றியது. என்ன செய்வது என்று தெரியவில்லை. மனைவியிடம் சொல்லலாமா அல்லது தங்கையிடம் சொல்லி விடலாமா என்று தவித்தேன். ஏனென்றால் அப்போது எனக்கும் இள வயதுதானே.
வீடு திரும்பும்போது, வழியில் ரயில் நிலையத்தில் உட்கார்ந்து அழுதேன்.
பிறகு என் தங்கையை சந்தித்தபோது, டொக்டர் என்ன சொன்னார்... இன்னும் ஒரு வாரத்தில் வீட்டுக்கு அனுப்பி விடலாம் என்று என்னிடம் கூறினாரே...! என்றாள்.
என்ன சொல்வது என்று தெரியாமல் தவித்தேன்.
அவர்தான் ஒரு வாரத்தில் வந்து விடுவாரே! நீ நாலைந்து நாள் லீவு போட்டு விட்டு இங்கேயே இரு என்றாள்.
டொக்டர் சொன்னதை தங்கையிடம் சொல்லி, அவள் கணவரை ஆஸ்பத்திரியில் இருந்து அழைத்து வந்து விடலாம் என்று நான் எண்ணிக்கொண்டிருந்தபோது, அந்த சில மணி நேரங்களில் ஆஸ்பத்திரியில் எனது தங்கையின் கணவர் இறந்து போனார். எனக்கு இது பேரிடிபோல் இருந்தது. இதற்குமுன் எத்தனையோ துயர நிகழ்ச்சிகள் என் வாழ்க்கையில் நடந்திருந்தாலும் இதுதான் பேரிடியாக வந்து இறங்கியது.
இளம் வயதிலேயே விதவையான எனது தங்கையின் நிலையைக்கண்டு இடிந்து போய்விட்டேன்.
அங்கேயே காரியங்கள் எல்லாம் முடிந்தன. சில நாள் கழித்து மூட்டை முடிச்சுகளுடன் சென்னைக்குப் புறப்பட்டோம். நான்கு வயது, இரண்டு வயது என்று இரு பெண் குழந்தைகளோடு எனது வீட்டுக்கு வந்தாள் என் தங்கை.
என் மனைவிக்கு பெரும் பொறுப்பாகி விட்டது. பள்ளிக்குச் செல்லும் இரண்டு குழந்தைகளையும் பராமரிப்பது எப்படி என்று முதலில் சங்கடம் ஏற்பட்டாலும், பின்னர் எனது சகோதரியை அவளது சகோதரியாகவும், அவள் குழந்தைகளை தன் குழந்தைகளாகவும் ஏற்றுக்கொண்டாள்.
ஒவ்வொரு மனிதனுக்கும் பின்னே இனம் புரியாத சோகம் உள்ளது. அந்த சோகத்தின் தாக்கம் அவ்வப்போது வெளிப்படும்போதும் அது புதிய சிந்தனைகளை -சீர்திருத்தக் கருத்துக்களை அள்ளி வழங்குகிறது. எப்போதுமே அடிபட்டவனுக்குத்தானே அதிகம் வலிக்கும்.
எனது படங்களில் வந்த சீர்திருத்தக் கருத்துக்களுக்குப் பின்னணி என்ன என்பது இப்போது புரிகிறதா?
இவ்வாறு பாலசந்தர் எழுதியுள்ளார்.

Wednesday, April 15, 2015

இரட்டை வேடங்கள் ஒரே காட்சியில் தோன்றுவதை படம்பிடிக்கும் விதம்

அபிமானத்துக்குரிய தங்கள் கதாநாயகன் இரட்டை வேடங்களில் நடித்தால் அதைக் கொண்டாடத் தவறியதில்லை ரசிகர்கள். அன்று எம்.ஜp.ஆரும் சிவாஜpயும் இரட்டை வேடங்களில் நடித்தபோது இன்றைய அதிநவீனக் கொம்போசிட்டிங் (உழஅpழளவைiபெ) தொழில்நுட்பம் இல்லை.
அன்று இரட்டை வேடங்கள் ஒரே காட்சியில் தோன்றுவதைப் படம்பிடிக்க நடிகரோடு தொழில்நுட்பக் குழுவும் கடும் உழைப்பைத் தர வேண்டியிருந்து. உதாரணத்துக்கு 'நாடோடி மன்னன'' படத்தை எடுத்துக் கொள்வோம். எம்.ஜp.ஆர் ராஜh மார்த்தாண்டனாக ஒரு வேடத்திலும், அவரது ஆட்சியை எதிர்த்து மக்களாட்சி வேண்டும் எனப் போராடும் புரட்சியாளன் வீராங்கன் என்ற மற்றொரு வேடத்திலும் நடித்திருந்தார்.
இரண்டு கதாபாத்திரங்களும் சந்தித்துக்கொள்ளாதவரை பிரச்சினை இல்லை. ஆனால் இரண்டு கதாபாத்திரங்களும் சில காட்சிகளில் ஒன்றாகத் தோன்றியே ஆக வேண்டும் அல்லவா? இந்தப் படத்தை இயக்கி நடித்த எம். ஜp.ஆர்.
முதலில் மார்த்தாண்டன் தொடர்புடைய காட்சிகளையெல்லாம் படம்பிடித்துக் கொண்டார். பிறகு வீராங்கன் சம்பந்தப்பட்ட காட்சிகளைப் படம்பிடித்தார். இருவரும் தோன்றிய காட்சிகளை எப்படிப் படம்பிடித்திருப்பார்? அதற்கு அப்போது பயன்படுத்திய தந்திரம்தான் 'பிளாக் மாஸ்க்''.
நாடோடி மன்னனில் மார்த்தாண்டன், வீரங்கனுடன் கைகுலுக்கும் காட்சியை எடுத்துக்கொள்ளுங்கள்.
செட்டில் எந்த இடத்தில் இரண்டு வேடக் கதாபாத்திரங்களும் நிற்கவேண்டும், அந்த n'hட்டின் வடிவமைப்பு (ளாழவ உழஅpழளவைழைn) என்ன, அப்போது செட்டின் ஒளியமைப்பு என்ன என்பதையெல்லாம் ஒளிப்பதிவாளர் முடிவு செய்துவிடுவார்.
முதலில் மார்த்தாண்டன் வலப்புறம் நின்று கைகளை நீட்டி, எம்.ஜp.ஆருக்கான ஒரு ^ப் வே' நடிகரின் கைகளைக் குலுக்குவார். இப்போது கெமராவின் கண்கள் என்று வருணிக்கப்படும் அதன் லென்ஸ் வழியே இந்தக் காட்சி பதிவாக வேண்டும். வீராங்கன் நிற்கப்போகும் இடப்பக்கம் கெமராவில் பதிவாகாமல் இருக்க வேண்டும். இதனால் கெமராவின் பார்வையை அதன் இடப்பக்கம் முழுவதையும் கருப்பு வண்ணக் காகிதத்தால் பாதி மறைத்துவிடுவார்கள்.
இப்போது மார்த்தாண்டன் நடிக்கும் n'hட்டைப் படம்பிடித்து விடுவார்கள். n'hட் பதிவாகி முடிந்ததும் கெமராவில் மறைக்கப்பட்ட பகுதியானது பிலிமில் எதுவும் பதிவாகாமல் அப்படியே நெகட்டிவாக இருக்கும். இப்படி எடுக்கப்பட்ட முதல் n'hட்டில் எத்தனை பிரேம்கள் படம் பிடிக்கப்பட்டிருக்கிறதோ அத்தனை பிரேம்களை பிலிம்ரோலில் ரிவர்ஸ் செய்து சரியான முதல் பிரேமில் 'க்யு+' செய்து வைப்பார்கள். இம்முறை மார்த்தாண்டன் நின்றிருந்த இடத்தை கெமரா பதிவு செய்யாமல் இருக்க கெமராவின் மற்றொரு பாதி கறுப்புக் காகிதத்தால் மறைக்கப்பட்டுவிடும்.
வீராங்கன் நிற்க வேண்டிய இடப்புறத்தில் மேக்அப்பை மாற்றிக்கொண்டு எம்.ஜp. ஆர். வீராங்கன் தோற்றத்தில் நிற்பார். ^ப் நடிகர் கைகுலுக்கியபோது ஒளிப்பதிவாளர் குறித்துக் கொண்ட அதே இடத்தில் நின்று வீராங்கனாக நடிப்பார்.
இப்போது ஒரே பிலிமில் ஒரே நடிகரால் நடிக்கப்பட்ட இரண்டு வேடக் காட்சி தயார்.
இந்தக் கடின முறையை நவீன கொம்போசிட்டிங் முறை சுலபமாக்கிவிட்டது.
உடலோடு ஒட்டிப்பிறந்த இரட்டைக் கதாபாத்திரங்களில் மாற்றன் படத்தில் சு+ர்யா நடித்திருந்தார். அவர் அந்தப் படத்தில் ஏற்றிருந்த அகிலன், விமலன் ஆகிய கதாபாத்திரங்களின் குணாதிசயம் வெளிப்படும்படி, உடல்மொழி, வசன உச்சரிப்பு இரண்டிலும் வேறுபாடு காட்டி இரண்டு கதாபாத்திரங்களையும் சிறப்பாக நடித்திருந்தார் என்று விமர்சகர்கள் பாராட்டினார்கள். உண்மையில் நவீன கொம்போசிட்டிங் முறை தரும் வசதியால் சு+ர்யா இதைச் சுலபமாகச் செய்துவிட்டார் என்று சொல்ல வேண்டும்.
முதலில் ஒரு கதாபாத்திரத்தை அதற்குரிய அத்தனை காட்சிகளிலும் நடித்து முடித்துவிட்டார் சு+ர்யா. பிறகு மற்றொரு வேடத்திற்கு சு+ர்யா நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட்டன. என்றாலும் இந்த இரட்டையர் வேடங்கள் இடம்பெறும் எல்லா காட்சிகளும் 'கிரீன் மேட்'' பின்னணியில் பச்சை வண்ணத் துணியை செட்டின் பின்புலத்தில் கட்டி படம் பிடிக்கப்பட்டன.
எதற்காக இந்தப் பச்சை வண்ணத் திரையின் பின்னணியில் இவர்கள் தோன்றும் காட்சிகள் படம்பிடிக்கப்பட்டன?
வேறுபட்ட இரண்டு கதாபாத்திரங்களை அல்லது காட்சிகளை வெட்டி ஒட்டவே இந்த பச்சை வண்ணப் பின்னணி பயன்படுகிறது.

கன்னடக் கனவுலகின் கலைக்க முடியாத சித்திரமாகத் திகழ்ந்தவர் 'மினுகு தாரா'' கல்பனா

கேரளம் இன்று தமிழ் சினிமாவுக்குக் கதாநாயகிகளை வாரி வழங்கி வருவதுபோன்று அன்று கர்நாடகம் கருணை காட்டியது. கன்னடத்துப் பைங்கிளி என்று தமிழர்களும் பாசத்தைக் கொட்டினார்கள்.
சரோஜhதேவியைப் போல இவரும் இங்கேயே தங்கிவிட மாட்டாரா எனத் தமிழ் ரசிகர்கள் ஏங்கினார்களா என்று தெரியவில்லை. ஆனால் தன் தாய்மொழித் திரைக்குத் தன்னைப்போல் ஒரு தனிப்பெரும் நாயகி தேவை என்று கன்னடம் திரும்பினார். இந்தியத் திரையில் யாருமே நிகழ்த்த முடியாத சாதனையை நிகழ்த்திக் காட்டினார்.
20 வயதில் கதாநாயகியாக அறிமுகமாகி 36 வயதில் தற்கொலை செய்து கொண்டது வரை 16 ஆண்டுகள் கதாநாயகியாக மட்டுமே அரிதாரம் பு+சியிருக்கிறார். கறுப்பு வெள்ளையில் பயணத்தைத் தொடங்கி வண்ணப்படங்களில் வண்ணக் கோலங்கள் வரைந்து மறைந்த அந்தக் கன்னடத்துக் கண்ணீர்க் கவிதை வேறு யாருமல்ல.. 'மினுகு தாரா'' (மின்னும் தாரகை) என்று கர்நாடக மக்களால் வாஞ்சையுடன் அழைக்கப்பட்ட கல்பனாதான்.
பீம்சிங் தயாரிப்பில் இரட்டை இயக்குநர்கள் திருமலை மகாலிங்கம் எழுதி இயக்கிய தமிழின் முதல் ரோடு மூவியான 'மெட்ராஸ் ^ பாண்டிச்சேரி'(1966) படத்தில் கதாநாயகியாக நடித்தவர்தான் கல்பனா. சினிமாவில் கதாநாயகியாக வேண்டும் என்ற கனவுடன் வீட்டை விட்டு ஓடிவரும் ஓர் இளம்பெண் கதாபாத்திரத்தை இந்தப் படத்தில் ஏற்று நடித்தார்.
ஆனால் அதற்கு முன்பே 1963-ல் பி.ஆர். பந்துலு கன்னடத்தில் இயக்கிய 'சாகு மகளு' படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். மூன்றே ஆண்டுகளில் கன்னட சினிமாவில் முன்னணிக் கதாநாயகியாக உயர்ந்தார். மெட்ராஸ் ^ பாண்டிச்சேரியைத் தொடர்ந்து ஒரு சில தமிழ்ப் படங்களில் நடித்தாலும் கன்னடப் படவுலகம் தனது தவப் புதல்வியாகக் கல்பனாவைத் தத்தெடுத்துக்கொண்டது. அதற்குக் காரணமாக அமைந்தது புட்டண்ணா கனகல் கல்பனா கூட்டணி.
கன்னட சினிமாவை வெகுஜன சினிமாத் தளத்தில் மட்டுமல்ல, இந்திய அரங்கிலும் உலக அரங்கிலும் கம்பீரமாக இடம்பெறச் செய்த படைப்பாளிகளில் முக்கியமானவர் புட்டண்ணா கனகல். அவரது இயக்கத்தில் 1967-ம் ஆண்டு வெளியானது 'பெல்லி மூடா'' என்ற திரைப்படம். கல்யாண்குமார் நாயகனாக நடித்திருந்தாலும் கல்பனா ஏற்று நடித்திருந்த 'சந்திரா' கதாபாத்திரமே கதையின் மையம்.
எஸ்டேட் தொழிலாளர்களின் வாழ்க்கையைப் பேசிய இந்தப் படத்தில்தான் புட்டண்ணா கனகல் இயக்கத்தில் முதன்முதலாகக் கல்பனா நடித்தார். இந்தப் படம் புட்டண்ணா கனகலுக்கு முதல் வெற்றியையும் கல்பனாவுக்கு மாநில அரசின் சிறந்த நடிகைக்கான முதல் விருதையும் கொண்டு சேர்த்தது.
இந்தப் படத்தின் டைட்டில் பாடலில் இடம்பெற்ற வார்த்தைகளைக் கொண்டே பின்னர் 'மின்னும் தாரகை''யாக இவர் ரசிகர்களால் கிரீடம் சு+ட்டப்பட்டார். புகழின் உச்சியில் பெங்க@ரில் கட்டிய தனது வீட்டுக்கும் இந்தப் படத்தின் பெயரையே வைத்தார் கல்பனா.
இதன் பிறகு பெண் கதாபாத்திரங்களை உயர்த்திப் பிடித்த புட்டண்ணா கனகலின் உயர்தரமான படங்களின் ஆஸ்தான நாயகியானர் கல்பனா. 'nஜஜ் ஜp பு+Nஜ' (சலங்கை பு+iஜ) படத்தில் தேவதாசிக் குடும்பத்திலிருந்து மீண்டெழுந்து படித்துப் பட்டம் பெற்று முறையான திருமண வாழ்வு வாழ நினைக்கும் பெண்ணாக நடித்தார்.
காதலனால் கைவிடப்பட்டு மீண்டும் தேவதாசி வாழ்வில் தள்ளப்படும் இந்தக் கதாபாத்திரம், வைர மோதிரத்தை விழுங்கித் தற்கொலை செய்துகொள்வதுபோலப் படத்தை முடித்திருந்தார் புட்டண்ணா கனகல். கல்பனாவின் நிஜவாழ்வும் மணவாழ்வில் ஏற்பட்ட விரிசலால் தற்கொலையில் முடிந்துபோனது பெரும் சோகம்.
புட்டண்ணா கனகலின் தலைசிறந்த படங்களில் முதன்மைக் கதாபாத்திரமாக வாழ்ந்து புகழை அள்ளிய கல்பனா, அவருடன் இணைத்துக் கிசுகிசுக்கப்பட்டார். இதனால் தனது கதாநாயகியைப் பிரிய வேண்டிய நிர்ப்பந்தம் கனகலுக்கு ஏற்பட்டது. அவரது படங்களில் கல்பனாவின் இடத்தை பாரதி, ஆர்த்தி ஆகியோர் எடுத்துக் கொண்டாலும் கல்பனாவே கன்னடக் கனவுலகின் கலைக்க முடியாத சித்திரமாகத் தொடர்ந்தார்.
துயரம் கவ்விய கதாபாத்திரங்களில் அதிகம் நடித்திருந்தாலும் அழகும் இளமையும் காதலும் மிளிர்ந்த கதாபாத்திரங்களிலும் வசீகரிக்கத் தவறவில்லை. கன்னடச் சினிமாவில் 60களில் தொடங்கி எழுபதுகளின் இறுதிவரை இவர் இணைந்து நடிக்காத நடிகர்களோ இயக்குநர்களோ இல்லை என்ற நிலை உருவானது.
திரைப்படங்களில் நவீன டிசைன்களில் இவர் அணிந்த 'pபான் புடவைகள், பெரிய கை மற்றும் சிறு கைகளில் விதவிதமான ப்ரில்கள் வைத்த ரவிக்கைகள், பெரிய காது வளையங்கள் போன்றவை தென்னிந்திய சினிமா முழுவதும் /பே'னாகப் பரவி நின்றன.
திரை நடிப்பில் முத்திரை பதித்த அதேநேரம் ஆரம்பம் முதலே நாடகங்களிலும் நடிக்கத் தவறவில்லை கல்பனா. வட கர்நாடகத்தின் மாபெரும் நாடக மேதையாகக் கொண்டாடப்படும் குடுசேரி பசவராஜ் நாடகக் குழுவில் முக்கிய நடிகையாகப் பிரகாசித்து வந்த கல்பனா, அவரை மணந்துகொண்டு குடும்ப வாழ்வில் கனவுகளுடன் காலடி வைத்தார். ஆனால் எந்தப் புள்ளியில் அந்த வாழ்க்கை கசந்ததோ தெரியவில்லை! தனது 36 வயதில் தற்கொலை செய்து கொண்டார்.
நடிகைகளின் வாழ்க்கைக் கதைகளை படமாக்குவதில் அவ்வப்போது ஆர்வம் காட்டும் இந்திய சினிமாவில் கல்பனாவின் வாழ்க்கையை மட்டும் விட்டு வைப்பார்களா என்ன? இம்முறை மற்றொரு முன்னணி நடிகையே கல்பனாவின் கதாபாத்திரத்தை ஏற்று அந்தப் படத்தைத் தயாரிக்கவும் செய்தார். அவர் பு+ஜh காந்தி. பிரபுசாலமன் இயக்கிய 'கொக்கி' படத்தின் மூலம் கவர்ந்தாரே அவரேதான்.
அந்த பு+ஜhவா இவர் என்று எண்ண வைத்தார் அவரது அடுத்த படத்தில். கர்நாடகத்தையே கதிகலங்க வைத்த 'தண்டுபாளையாம்' கொலை, கொள்ளை கும்பலின் நிஜக்கதை படமானபோது அதில் சுருட்டுக் குடித்தபடி, பன்றியின் கால்களைக் கட்டி தோளில் போட்டுத் தூக்கிச் செல்லும் கிரிமினல் பெண் கதாபாத்திரத்தில் அதிர வைத்தார்.
தமிழிலும் வெளியான அந்தப் படத்தின் அதிரடி அழகியான பு+ஜh காந்திதான் கல்பனா கதாபாத்திரத்திலும் நடித்து கர்நாடகத்தை மாநிலத்தைத் தற்போது கலங்கடித்திருக்கிறார்.
'அபிநேத்ரி'' என்ற தலைப்புடன் கடந்த 2013 ஜ_லையில் பு+ஜh படத்தைத் தொடங்கியபோதே வரிசையாய் படத்தை எதிர்த்து வழக்குகள் தொடுக்கப்பட்டன. புட்டண்ணா கனகல், கல்பனா ஆகிய இருதரப்பு உறவுகளும் வழக்குகளைத் தொடுக்க எல்லாவற்றையும் உடைத்துக் கொண்டு வந்துவிட்டது அபிநேத்ரி. கல்பனா கதாபாத்திரத்துக்கு பு+ஜh காந்தியின் குரல் எடுபடவில்லை என்று விமர்சனங்கள் வந்தாலும், கணிசமான வெற்றியை அள்ளிவிட்டது. மினுகு தாராவின் நினைவுகளைக் கன்னட ரசிகர்களின் இதயத்தில் மீட்டிச் சென்றுவிட்டது அபிநேத்ரி 2015.