Tuesday, February 24, 2015

எங்க வீட்டுப்பிள்ளை பட்டம் எம்.ஜp.ஆருக்கு கிடைக்க காரணமானவர்

சீதிக திரைப்படங்களை தயாரித்தவர் என்று கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றவர்.
தெலுங்கு திரையுலகின் பிரபல தயாரிப்பாளரும் நடிகர் வெங்கடேஷின் தந்தையுமான டி.ராமா நாயுடு காலமானார். அவருக்கு வயது 78
தெலுங்கில் 1964 ஆம் ஆண்டு ‘ராமுடு பீமுடு’ படத்தின் மூலம் தயாரிப்பாளரானவர் ராமா நாயுடு. சமீபத்தில் தெலுங்கில் வெளியான ‘கோபாலா, கோபாலா’ வரை பல்வேறு வெற்றிப்படங்களை தயாரித்தவர். கணையப் புற்றுநோய் காரணமாக சில மாதங்களாக ராமா நாயுடு சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சை பலனின்றி இறந்தார்.
ஆந்திராவின் கரம்சேடு என்ற இடத்தில் பிறந்த டகுபதி ராமாநாயுடு தெலுங்கு சினிமாவின் செல்வாக்கு மிகுந்த தயாரிப்பாளராக திகழ்ந்தார். சாதாரண கூலித் தொழிலாளியாக இருந்து சினிமா மீதுள்ள ஈடுபாட்டால் சினிமா ஏஜென்சி தொடங்கி அதன் மூலம் திரைப்படத்துறைக்கு வந்தார். பின்னர் தனது மகன் பெயரில் சுரேஷ் புரொடக் ஷன்ஸ் என்ற நிறுவனத்தைத் தொடங்கி படங்களை தயாரித்தார். என்.டி. ராமாராவ், நாகேஸ்வரராவ் ஆகியோரை வைத்து திரைப்படங்களை தயாரித்தார்.
‘ராமுடு பீமுடு’ படம் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து பல படங்களைத் தயாரித்தார். தெலுங்கு, தமிழ், கன்னடம், இந்தி உட்பட 13 மொழிகளில் 150 க்கும் அதிகமான படங்களை தயாரித்துள்ளார். தனிநபராக அதிக திரைப்படங்களை தயாரித்தவர் என்று கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்ற பெருமை ராமா நாயுடுவுக்கு உண்டு.
தமிழில் சிவாஜி கணேசன் நடித்த வசந்த மாளிகை, ரஜினிகாந்த் நடித்த தனிக்காட்டு ராஜா உள்ளிட்ட படங்களை தயாரித்துள்ளார். இந்திய சினிமாவின் வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றியவர் என்ற வகையில் ‘தாதா சாகேப் பால்கே’ விருது மற்றும் பத்ம பூஷண் விருது வழங்கி மத்திய அரசு அவரை கவுரவித்தது. ராமா நாயுடுவின் மகன் வெங்கடேஷ், தெலுங்கு திரையுலகின் முன்னணி நாயகனாக இருக்கிறார். மற்றொரு முன்னணி நடிகரான ராணா, ராமா நாயுடுவின் பேரன். பிரபல நடிகர் நாகார்ஜுனாவின் முதல் மனைவி ராமா நாயுடுவின் மகள் லட்சுமி. இவர்களுக்கு பிறந்த நடிகர் நாக சைதன்யாவும் ராமா நாடுவின் பேரன் என்பது குறிப்பிடத்தக்கது.
‘எங்க வீட்டுப் பிள்ளை’ பட்டம் எம்.ஜி.ஆருக்கு கிடைக்க காரணமானவர்.
ராமா நாயுடு தெலுங்கில் தயாரித்த ‘ராமுடு பீமுடு’ படத்தில் என்.டி. ராமாராவ் நடித்திருந்தார். அந்தப் படம் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து. தமிழில் அதன் ரீமேக் உரிமையை ராமா நாயுடுவிடம் இருந்து விஜயா புரோடக்ஷன்ஸ் அதிபர் நாகிரெட்டி பெற்று எம்.ஜி.ஆர்.இரட்டை வேடங்களில் நடித்த ‘எங்க வீட்டுப் பிள்ளை’ திரைப்படத்தை உருவாக்கினார். 7 செண்டர்களில் வெள்ளிவிழா கொண்டாடிய அந்தப் படத்தின் வெற்றி மூலம் எம்.ஜி.ஆருக்கு ‘எங்க வீட்டுப் பிள்ளை’ பட்டம் நிலைத்தது.

ஜயலலிதாவின் வாழ்க்கையில் திருப்புமுனையை ஏற்படுத்தியது எது?

கோ மளவள்ளி ஜயராம் என்றால் யாருக்கும் தெரியாது அதே சமயம் ஜயலலிதா என்றால் இன்றைக்கு உலகம் முழுவதும் பிரபலம். ஸ்ரீரங்கத்தை பு+ர்வீகமாகக் கொண்டவர் என்று கூறப்படும் nஜயலலிதா, கர்நாடக மாநிலத்தில் பெங்களூர்-- மைசு+ர் நெடுங்சாலையில் மாண்டியா மாவட்டத்தில் மேல்கோட்டை என்ற கிராமத்தில் பிறந்தார். ஜயலலிதாவின் சித்தி (தாய் சந்தியாவின் தங்கை) வித்யாவதி ஏற்கனவே சினிமாவில் நடித்து வந்தார்.
அடுத்து சந்தியாவும் சினிமா நட்சத்திரமானார். ஜயலலிதாவுக்கு சினிமாவில் விருப்பமில்லை என்றாலும் குடும்ப நிலை காரணமாக திரை உலகில் புகுந்தார்.
nஜயலலிதா தொடக்கத்தில் சில கன்னடப்படங்களில் நடித்தாலும், அவர் கதாநாயகியாக நடித்து 1965ம் ஆண்டில் வெளிவந்த டைரக்டர் ஸ்ரீதரின் "வெண்ணிற ஆடை"தான் அவரது முதல் தமிழ்ப்படம். வெண்ணிற ஆடை படத்தில் நடித்துக்கொண்டிருக்கும் போதே பி.ஆர்.பந்துலுவின் ஆயிரத்தில் ஒருவன் படத்தில் எம்.ஜp.ஆருக்கு ஜோடியாக நடித்தார். 2 படங்களும் 100 நாட்கள் ஓடி வெற்றி பெற்றன.
எம்.ஜ.ஆருடன் ஜோடி சேர்ந்ததுதான் ஜயலலிதாவின் வாழ்க்கையில் திருப்புமுனையை ஏற்படுத்தியது.
முதல் படத்திலேயே கதாநாயகியாகி புகழ் ஏணியின் உச்சிக்கு சென்ற nஜயலலிதா, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி என்று பல மொழிகளிலும் நடித்தார். இதில் புரட்சித்தலைவர் எம்.ஜ.ஆருக்கு ஜோடியாக 28 படங்களில் நடித்துள்ளார். ஜயலலிதாவின் நிறம், அழகு அவருக்கு என்று தனி ரசிகர்களைப் பெற்றுக் கொடுத்தது. எம்.ஜp.ஆர்,, சிவாஜ, ஜமினி, என்.டி.ராமராவ், nஜய்சங்கர், ரவிச்சந்திரன், முத்துராமன், ஆகியோருடன் நடித்து முன்னணி கதாநாயகியாக உயர்ந்தார்.
அடிமைப் பெண், அரசகட்டளை, எங்க வீட்டுப் பிள்ளை, ரகசிய பொலிஸ், காவல் காரன், குடியிருந்த கோவில், ஒளி விளக்கு, தனிப்பிறவி, என் அண்ணன், பட்டிக்காடா பட்டணமா, கந்தன் கருணை, யார் நீ, நான் ,சு+ர்ய காந்தி ஆகிய படங்களில் nஜயலலிதாவின் திரை உலகப் பயணத்தின் மைல்கல். nஜயலலிதாவின் 100 வது படமான திருமாங்கல்யம் 1977ல் வெளிவந்தது. அதன்பின் படங்களில் நடிப்பதைப் படிப்படியாகக் குறைத்துக்கொண்டார்.
1960, 70களில் அசைக்க முடியாத நாயகியாக திகழ்ந்த nஜயலலிதா சுமார் 16 ஆண்டுகளில் 112 படங்களில் நடித்து முடித்தார். 1980ல் வெளிவந்த “~~நதியைத்தேடி வந்த கடல்" என்ற திரைப்படம்தான் அவர் நடித்து கடைசியாக வெளிவந்த படம்.
nஜயலலிதாவின் தாயார் சந்தியாவின் இயற்பெயர் வேதா. அவரின் நினைவாக தேனாம்பேட்டை போயஸ் தோட்டத்தில் வீடு ஒன்றைக் கட்டிய nஜயலலிதா, அந்த வீட்டிற்கு "வேதா நிலையம்" என்று பெயர் சு+ட்டி மகிழ்ந்தார் nஜயலலிதா.நடிகையாக இருந்த nஜயலலிதா எம்.ஜp.ஆருடன் நடித்து, அவரின் அன்பிற்கு பாத்திரமாகி அவர் அதிமுகவை தொடங்கிய பின்னர் கட்சியில் இணைந்தார். ராஜ் யசபா எம்.பியானார்.
எம்.ஜp.ஆரின் மறைவிற்குப் பின்னர் எம்.எல்.ஏவாக வெற்றி பெற்று, பின்னர் 1991 ஆம் ஆண்டு முதன் முறையாக முதல்வரான அவர் 2001, 2011 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தல்களில் வெற்றி பெற்று மூன்று முறை முதல்வராக வெற்றி பெற்றார். நடிகையின் மகளாக பிறந்து நடிகையாக வாழ்க்கையைத் தொடங்கிய nஜயலலிதா,

10 ஆண்டு இடைவெளிக்குப் பின் சினிமாவில் லதா மறு பிரவேசம்

எம்.ஜி.ஆருடன் நடித்த நட்சத்திரம் நடிப்பை விடுவதாக சொன்னால் எப்படி?
திருமணத்துக்குப் பின் படங்களில் நடிக்காமல் இருந்த லதா, 10 ஆண்டு இடைவெளிக்குப் பின் மீண்டும் நடித்தார்.
லண்டனில் இருந்து லதா திரும்பிய பின், பல பட அதிபர்கள் அவரை மீண்டும் நடிக்க அழைத்தனர். ஆனால், இனி நடிப்பதாக இல்லை என்பதையே பதிலாக சொல்லி வந்தார்.
ஆனால் நடிகரும் டைரக்டருமான ராஜ்கிரண் கேட்ட போது லதாவால் மறுக்க முடியவில்லை. அவர் இயக்கிய “பொன்னு விளையும் பூமி” படத்தில் நடித்தார் லதா. இதன் மூலம் சினிமாவில் மறுபிரவேசம் செய்தார்.
சினிமாவில் தனது மறுபிரவேசம் குறித்து
லதா கூறியதாவது,
“குடும்ப வாழ்க்கைக் குள் வந்த பிறகு நடிப்பு பற்றி நான் நினைத்துப் பார்க்கவில்லை.
2 மகன்களுக்கு அம்மா என்ற முறையில் அவர்களின் மகிழ்ச்சி, அவர்களின் கல்வி, கணவரின் தேவையறிந்து செயல்படுவது என்றே முழு நாட்களும் ஓடின.
இந்த சமயத்தில்கூட, டைரக்டர் கே. பாக்கியராஜ் என் லண்டன் முகவரியைத் தெரிந்து கொண்டு என்னிடம் தொடர்பு கொண்டார். அப்போது அவர், எம்.ஜி.ஆரும் நானும் நடித்து பாதியில் நின்றுபோன அண்ணா நீ என் தெய்வம் படத்தை கொஞ்சம் மாற்றி அவசர பொலிஸ் என்ற பெயரில் எடுக்கவிருப்பதாகவும், அதன் சில காட்சிகளில் நான் நடித்துத்தர வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.
நான் அவருடம் நடிப்பை அடியோடு மறந்து விட்டேன். அதனால் தயவு செய்து என்னை விட்டுவிடுங்கள்” என்று தெளிவாக கூறி, நடிப்புக்கு வைத்த முற்றுப்புள்ளியை உறுதி செய்தேன்.
லண்டனில் இருந்து எப் போதாவது ஊருக்கு வரும்போது, எங்கள் வீட்டின் அருகில் இருக்கும் “வீனஸ் ஸ்டுடியோ”வில் நடக்கும் படப்பிடிப்பு கண்ணில் படும். “நாமும் இந்த சினிமாவில்தானே இருந்தோம். இப்போது நடிப்பு பற்றிய சிந்தனையே வரவில்லையே” என்று நினைத்துக் கொள்வேன்.
இப்படியாக நடிப்பதில்லை என்ற முடிவுடன்தான் வெளிநாட்டில் நான் இருந்த 10 வருடங்களும் ஓடிற்று. அம்மாவுக்காக ஊர் வந்தபோது இங்கேயே நிரந்தரமானேன்.
தங்கையின் திருமணத்தையும் முடித்த நேரத்தில் ஒருநாள் மஞ்சுளாவின் பிறந்த நாளுக்காக அவர் வீட்டுக்குச் சென்றிரு ந்தேன்.
“உலகம் சுற்றும் வாலிபன்” படத்தில் நடித்த நாளில் இருந்தே நானும் மஞ்சுளாகவும் நல்ல தோழிகளாகி விட்டோம். நான் மஞ்சுளாவுடன் பேசிக் கொண்டிருந்த நேரத்தில், டைரக்டர் ராஜ்கிரன் அங்கே வந்திருந்தார். என்னைப் பார்த்ததும் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டவர், அப்போது அவர் இயக்கி நடிக்கவிருந்த “பொன்னு விளையும் பூமி” படத்தில் ஒரு கெரக்டரில் நடிக்க வேண்டும் என்று என்னைக் கேட்டுக் கொண்டார்.
அப்போதும், நான் நடிப்பதில்லை. நடிப்பையெல்லாம் விட்டு வருஷக்கணக்காச்சே என்றேன்.
ஆனால் அவர் விடவில்லை. எம்.ஜி.ஆருடன் நடித்த நட்சத்திரம் நடிப்பை விடுவதாக சொன்னால் எப்படி? என்றார்.
அவர் பேச்சில் எப்படியும் என்னை நடிக்க வைத்து விடவேண்டும் என்கிற குறிக்கோள் பிரதானமாக இருந்தது.
அன்றைக்கு முடியாது என்று மறுத்துவிட்டாலும், ஒரு மாதம் அவர் என்னை விடவில்லை. படத்தின் கதையைக் கேளுங்கள், மறுக்காமல் நடிப்பீர்கள் என்று வற்புறுத்தி வந்தார். ஒருநாள் என்னை சந்தித்து கதையும் சொன்னார்.
எம்.ஜி.ஆர். ஹீரோயினை எப்படியாவது நமது படத்தில் நடிக்க வைத்துவிட வேண்டும் என்ற அவரது ஆவல் தெரிந்தது.
மஞ்சுளாவும் என்னிடம், இவ்வளவு தூரம் உனக்காக காத்திருப்பவரை இனியும் “முடியாது” என்று சொல்லி நோகடிக்காதே. நல்ல கெரக்டராகத்தானே இருக்கிறது. நடியேன்” என்றார்.
ஒரு வழியாக இப்படி 1997 ல் நான் ஒப்புக் கொண்டு நடித்து வெளியான படம் “பொன்னு விளையும் பூமி”.
இந்தப் படத்துக்கான படப்பிடிப்பு பொள்ளாச்சியில் நடந்தது. முதன் முதலாக வயதான மேக்கப் போட்டு நடிக்க வைத்தார்கள். கெமரா முன் நிற்கும்வரை கூட எப்படி நடிக்கப் போகிறேனோ என்ற உதறல் இருந்தது. ஆனால் டைரக்டர் “ரெடி... டேக்” என்ற போது எப்படித்தான் நடித்தேன் என்பதே தெரியாது.
யுனிட் ஆட்கள் கரகோஷம் செய்த போதுதான் நடிப்பு மறுபடியும் எனக்கும் ஒட்டிக் கொண்டு விட்டதை உணர்ந்தேன். தொடர்ந்து மளமளவென படங்கள் வந்தன. எனக்குப் பிடித்த கெரக்டர்களை மட்டும் ஏற்று நடித்தேன்”
இவ்வாறு நடிகை லதா கூறினார்.
சென்னைக்கு வந்ததும் “ஏரோபிக்ஸ்” வகுப்புக்கு போகத் தொடங்கியிருந்தார். லதா இப்படி ஒருநாள் காலை வகுப்புக்கு காரில் போனபோது விபத்தில் சிக்கினார்.
அதுபற்றி லதா கூறியதாவது,
“காலை 6 மணிக்கே எழுந்து “ஏரோபிக்ஸ்” கிளாசுக்கு புறப்பட்டேன். காரை நானே “டிரைவ்” செய்தேன்.
கார் “டிரைவ் இன் உட்லண்ட்ஸ்” ஓட்டலைத் தாண்டும் போதும், நான் கொஞ்சமும் எதிர்பாராதவிதமாக ஓட்டல் சந்தியில் இருந்து ஒரு ஆட்டோ மெயின் ரோட்டுக்கு திரும்பியது.
ஆட்டோ வந்த வேகத்தில் என் கார் மீது உரசி விடும் என்று புரிந்து கொண்டு ஸ்டியரிங்கை கொஞ்சம் வேகமாக வலப்பக்கம் ஒடித்தேன். கார் என் கட்டுப்பாட்டை மீறி பிளாட்பார மேடையில் மோதி கவிழ்ந்து விட்டது.
அது காலை நேரம் என்பதால் ரோட்டில் வாகனப் போக்குவரத்து இல்லை. தலைகீழாக கிடந்த காருக்குள் முகத்தில் இரத்தம் கொட்டிய நிலையில் அரை மயக்கத்துடன் நான் கிடந்தேன். அப்போது, எங்கிருந்தோ வந்த இன்னொரு ஆட்டோ டிரைவர் ஒடிவந்து காருக்கு வெளியே நான் வர உதவினார்.
அதே வேகத்தில் அவரது ஆட்டோவிலேயே என்னை, அப்பல்லோ ஆஸ்பத்திரியில் கொண்டுபோய் சேர்த்தார். முகமெல்லாம் இரத்தம் கொட்டிய நிலையில் இருந்த என்னை யாரென்றே அவருக்குத் தெரியாது! அப்படியிருந்தும் எனக்கு உதவி செய்த அவருடைய மனித நேயம் என்னால் மறக்கவே முடியாது.
ஆஸ்பத்திரியில் இருந்து அவர் புறப்படும்போதுகூட, “உங்கள் முகவரியைக் கொடுத்துவிட்டுப் போங்கள்” என்றேன். அவரோ, “அதெல்லாம் இருக்கட்டும்மா” என்று சொல்லி விட்டுப் போய்விட்டார்.
5 மணி நேரம் அப்பலோவில் அப்பரேஷன் நடந்தது. கண் பக்கத்தில் ஸ்டியரிங்க இடித்ததில் கொஞ்சம் தவறினாலும் கண் போயிருக்கும். தெய்வாதீனமாக தப்பியதாகத் தான் இப்போதும் நினைக்கிறேன். தெய்வம் போல அந்த நேரத்தில் வந்து உதவிய ஆட்டோ டிரைவர் யாரென்றும் தெரியவில்லை. ஆனால் சமயத்தில் உதவிய அந்த அன்பை என்னால் மறக்கவே முடியாது.

20 வயதில் திண்டுக்கல்லில் இருந்து சென்னைக்கு மல்லிகைப் பூ லொறியில் நடிக்க வந்தவர் சந்திரசேகர்

னிமாவில் நடிக்க விரும்பிய சந்திரசேகருக்கு, முதலில் நாடகங்களில் வாய்ப்பு கிடைத்தது. 4 வருடங்களில் படிப்படியாக முன்னேறி நாடக கதாநாயகனாக உயர்ந்தார்.
நாடகத்தில் நடித்த போது ஏற்பட்ட அனுபவங்கள் குறித்து சந்திரசேகர் கூறியதாவது,
“முதலில் சாதாரணமாக தலைகாட்டி விட்டுப் போகும் வேடங்கள் தான் கிடைத்தன. அதுவே போதும் என்றிராமல் நாடகத்தின் ஒட்டுமொத்த கேரக்டர்கள் பற்றியும், அந்த கேரக்டர்களுக்கான வசனங்கள் பற்றியும் தெரிந்து கொண்டேன். ஏற்ற இறக்கங்களோடு பேசிப் பார்த்தேன்.
ஒரு நாடகத்தில் யாராவது ஒருவர் வராமல் இருந்தால் அவருக்குப் பதிலாக நான் நடிக்கும் அளவுக்கு தேர்ந்திருந்தேன். அதனால்தான் சின்ன வேடத்தில் தோன்றிய அதே நாடகத்தில், கதாநாயகன் வேடம் வரை வர முடிந்தது. நடிப்பு என்பது எனக்குள் வெறியாகவே மாறிப்போனதால், ஊர் ஊராக நாடகம் போடப்போகிற இடத்தில் கூட, ரசிகர்கள் கிடைத்தார்கள்.
சீர்காழியை அடுத்த கோவில்பத்து என்ற ஊரில் எங்கள் நாடகக் குழு கேம்ப் போட்டிருந்த போது வித்தியாசமான அனுபவம் கிடைத்தது. அதாவது பகல் முழுக்க காய்ச்சலாக இருக்கும். மாலை 6 மணி ஆனதும், காய்ச்சல் விட்டுவிடும்! பகலில் காய்ச்சல் காரணமாக சாப்பிட முடியாத நிலை. இரவில் நாடகத்தில் நடித்ததாக வேண்டும். ‘பசி’யையும், காய்ச்சலையும் மறந்து ஏற்ற கேரக்டரோடு ஒன்றி விடுவேன். ரசிகர்களின் கரகோஷம்தான் எனக்கு சாப்பாடு!
ஒரு மாதம் இப்படி நீடித்த அந்த மர்மக் காய்ச்சலில், உடம்பு பாதியாகிவிட்டது. எனக்கு எப்போதுமே சுய மரியாதை உணர்வு அதிகம். நாடக கம்பெனி முதலாளி கொஞ்சம் முரட்டுக் குணம் கொண்டவர். அவரை பார்த்தாலே நாடகக் குழுவில் உள்ள அத்தனை பேரும் பயப்படுவார்கள். நான் மட்டும் இதில் விதிவிலக்கு. முதலாளி என்ற மரியாதை உண்டு என்றாலும், தேவையில்லாமல் ஏன் பயப்பட வேண்டும்’ என்று நினைப்பேன்.
“டீ வாங்கி வா!”
இந்த என் சுய மரியாதைக்கும் ஒரு நாள் சோதனை வந்தது. ஒருநாள் மேக்கப் ரூமில் நடிக்கத் தயாராகிக் கொண்டிருந்தேன். அப்போது அங்கு வந்த முதலாளி என்னை அழைத்தார். “டீ வாங்கிட்டு வாப்பா” என்றார்.
வழக்கமாக வரும் டீக்கடை பையன் அன்று வரவில்லை என்பதால் தான் என்னிடம் “டீ” வாங்கி வரச்சொன்னார். என்றாலும் அவர் கேட்ட தோரணை என் தன்மானத்தை உசுப்பி விட்டது. உடனே நான் அவரிடம் “உங்களுக்கு டீ வாங்கிட்டு வர்றது என் வேலையில்லை. நடிக்கிறதுதான் என் வேலை” என்று சொல்லிவிட்டேன்.
நான் இப்படிச் சொன்னதும் மேக்கப் ரூமில் இருந்த நடிகர்கள் முகத்தில் ஒருவித பதற்றம் தெரிந்தது. அடுத்து முதலாளியின் ‘ரியாக்ஷ்ன்’ என்ன மாதிரி இருக்குமோ என்பதில் ஏற்பட்ட பயம் அது.
ஆனால் நடந்தது என்ன தெரியுமா? முதலாளி என் பதிலை சர்வசாதாரணமாக எடுத்துக் கொண்டார். நான் “டீ” விஷயமாக அவரிடம் பேசியதை காட்டிக் கொள்ளாமல், வேறு சப்ஜெக்ட் பற்றி பேசத் தொடங்கி விட்டார். நாடகத்தில் நடித்த காலகட்டத்தில் என் குரல் சன்னமாக இருக்கும். குரல் கம்பீரமாக இருக்க, தொடர்ந்து பேசி பயிற்சி பெற விரும்பி னேன்.
எங்கள் நாடகம் நட க்கும் இடத்தைச் சுற்றி 50 கிராமங்களுக்கு மேல் இருக்கும். காலை நேரத்தில் இந்த கிராமங்களுக்கு வண்டி கட்டி மைக்கில் நாடகம் பற்றி அறிவிப்பார்கள். இப்படி மைக்கில் அறிவிக்கும் பொறுப்பை, நானாகக் கேட்டு பெற்றுக் கொண்டேன்! காலை 10 மணிக்கு இப்படி அன்பார்ந்த பெரியோர்களே! என்று ஆரம்பித்தால், அது முடிய மாலை 6 மணி ஆகி விடும்.
அதன் பிறகு 6 1/2 மணிக்கு தொடங்கும் நாடகத்தில் நடிக்கத் தயாராக வேண்டும். இப்படி பகல் முழுக்க ‘மைக்’கில் கத்திப் பேசிவிட்டு, நாடகத்திலும் உணர்ச்சி மயமான காட்சிகளில் நடிக்கும் போது வாயில் இருந்து ரத்தம் கசியும்.
ஆனாலும் இப்படியான கடினப் பயிற்சிதான், என் குரலை வளமாக்கியது.
மழை சீசனில் நாடகம் நடத்த முடியாது. அதனால் ஊருக்குப் போய் விடுவேன். அப்பாவிடம் என் நாடக அனுபவங்களை சொல்லுவேன். ராஜா தேசிங்கு நாடகத்தில் தேசிங்காக நடித்ததை அப்பாவிடம் சொன்னபோது “தேசிங்காக நடித்துக்காட்டு” என்றார் அப்பா. உடனே வசனங்களை ஏற்ற இறக்கத்துடன் தேசிங்குராஜனாகவே மாறி அப்பாவிடம் நடித்துக்காட்டினேன்.
கண் கலங்கிப் போன அப்பா என்னிடம், ‘நடிக்கணும்னு ஆசைப்பட்டே! அதில் திறமை இருந்தாதான் வரமுடியும். இப்போது உன் திறமையில் எனக்கு நம்பிக்கை வந்துவிட்டது. நிச்சயம் நீ சினிமாவிலும் ஜெயிப்பாய். நீ சிங்கக் குட்டியடா!” என்று சொன்னபடி என் முதுகில் தட்டிக் கொடுத்தார்.
ஆனால், என் சினிமாக் கனவு பலிக்கும் முன்பே அப்பா இறந்து போனார்.
வீட்டில் நான்தான் கடைசிப் பையன் அப்பா இறந்ததற்கு மொட்டை போட்டு, 16ம் நாள் காரியம் முடியும் வரை வீட்டில் இருந்தேன். அதன் பிறகு திருவெண்காட்டில் நடந்த எங்கள் நாடகத்துக்குப் போனேன்.
அந்த நாடகத்தில் எனக்கு பொலிஸ் இன்ஸ்பெக்டர் வேடம். ஒரு காட்சியில் உணர்ச்சிவசப்பட்டு பேசிய வேகத்தில் தொப்பியைக் கழற்றிவிட்டேன். என் மொட்டைத் தலையைப் பார்த்து, ரசிகர்கள் சிரித்து விட்டார்கள். உடனே நான் நடிப்பதை நிறுத்திவிட்டு, ஒலிபெருக்கியில் ரசிகர்களிடம் பேசினேன். “பலதரப்பட்ட வேடங்களில் என் நடிப்பை பார்த்திருப்பீர்கள். இந்த பொலிஸ் கெரக்டரில் என் நடிப்பைத்தாண்டி நீங்கள் சிரிக்கிற காரணம், என் அப்பாவின் மரணத்துக்காக நான் போட்ட மொட்டை. இது தந்தையின் இழப்புக்காக ஒரு மகனின் கடமை.
அந்தக் கடமையை முடித்து விட்டுத்தான் உங்கள் முன்பாக மேடையேறியிருக்கிறேன். இதற்குப் பிறகும் என் மொட்டைத் தலைக்காக நீங்கள் சிரிக்க மாட்டீர்கள் என்று நம்புகிறேன்” என்றேன்.
நான் பேசி முடித்ததும் ரசிகர்கள் மத்தியில் ஒரு அசாதாரண அமைதி நிலவியது, சிலருடைய கண்கள் கலங்கியிருந்தன. என் உணர்ச்சிகளை கட்டுப்படுத்திக் கொண்டு நடித்து முடித்தேன்.
எனக்கு அப்போது 20 வயதுதான். அந்த ஊரில் இருந்துதான் சினிமாவில் நடிக்க சென்னைக்கு புறப்பட்டேன்.
திண்டுக்கல்லில் இருந்து சென்னைக்கு மல்லிகைப்பூ ஏற்றி வந்த லொறியில், மல்லிகை வாசனையை முகர்ந்து கொண்டே சென்னை வந்து சேர்ந்தேன்.
அது 1975ம் வருடம். அப்போதுதான் டெலிவிஷன் மக்களிடையே அறிமுகமாயிருந்தது. நான் மைலாப்பூர் மாங்கொல்லையில் உள்ள, ஒரு லொட்ஜில் மாதம் 150 ரூபாய் வாடகையில் தங்கியபடி சினிமா வாய்ப்புக்கு முயன்றேன்.
அப்போது சென்னை டெலிவிஷனில் பணியாற்றிய கவிஞர் தஞ்சை வாணனின் நட்பு கிடைத்தது. அவரது நாடகங்கள் டெலிவிஷனுக்காக சீரியலாக உருவானபோது, எனக்கும் வாய்ப்பு கொடுத்தார். மாதம் ஒரு டெலிவிஷன் நாடகம் கிடைத்தது. நாடகத்தில் நடிக்க எனக்கு கிடைத்தது 75 ரூபாய்.
நான் நடித்த முதல் நாடகம் ஒளிபரப்பான நாளில் அதை டிவியில் எப்படியாவது பார்த்துவிட ஆசை. நான் இருந்த லொட்ஜ் ரூமில் டெலிவிஷன் கிடையாது. எனவே அப்போது எனக்கு அறிமுகமாயிருந்த ஆர்ட் டைரக்டரின் வடபழனி வீட்டுக்கு நானும் அவரும் மைலாப்பூரில் இருந்து பஸ்சில் புறப்பட்டோம்.
பஸ் வடபழனி வந்து சேரவும், நாடகம் ஒளிபரப்பாகும் நேரம் வரவும் சரியாக இருந்தது. அங்கிருந்து ஓட்டமாய் ஓடி, நான் வாசலில் கால் வைத்த போது தெரிந்தது என் முகம்தான். அப்போதுதான் நான் நடித்த காட்சி டிவியில் திரையில் ஓடிக் கொண்டிருந்தது. என் முகத்தை நானே திரையில் பார்த்தது அதுதான் முதல் தடவை என்பதால், அந்த நேரத்தில் ஏற்பட்ட என் பரவச உணர்வை என்னால் வார்த்தைகளில் வெளிப்படுத்த முடியவில்லை. அப்போதே சினிமாவில் நடித்து ஜெயித்து விட்ட மாதிரி அப்படி ஒரு சந்தோஷம்.
இப்படி டிவி நாடகங்கள் தொடர்ந்து கொண்டிருந்த நேரத்தில் தஞ்சை வாணனிடம் இருந்து நாடகத் துறை இன்னொருவர் கைக்கு மாறிவிட்டது. அவருக்கு ஏனோ என்னை பிடிக்காமல் போயிருக்கிறது. அடுத்த நாடகத்தில் நடிப்பதற்காக அவரை சந்தித்த போது, “கெரக்டர் இருக்கிறது” என்றார். மற்ற நடிகர் - நடிகைகளுக்கு இன்னின்ன கெரக்டர் என்று சொன்னவர், என்னிடம் மட்டும் எதுவும் சொல்லவில்லை. கடைசியில் எனக்கு கிடைத்தது “இறந்து போன கணவனின் அசரீ ரி குரல்!”
அதாவது நாடகத்தில் என் குரல் மட்டும்தான் ஒலிக்கும் நான் பேச வேண்டிய வசன பேப்பரை உதவி இயக்குநர் என்னிடம் நீட்டியபோது, எனக்கு வந்ததே கோபம்.
“இது டிவி நாடகம். ரேடியோ நாடகத்துக்குத்தான் குரல் தேவை” என்று சொன்னபடி, அந்த பேப்பரை வீசி எறிந்தேன்.
இந்த விஷயம் புது டிவி இயக்குநருக்கு போக, என்னை வரச்சொன்னார்.
போனேன். என்னைப் பார்த்ததும், “எல்லோருடைய முன்னிலையிலும் ஸ்கிரிப்ட் பேப்பரை தூக்கி வீசினாயாமே?” என்று கேட்டார்.
என்னை கோபப்படுத்த வேண்டும் என்பதற்காக அவரே இப்படியொரு சூழ்நிலையை உருவாக்கியிருக்கிறார் என்பது புரிந்தது.
“நடிப்பாயா!? மாட்டாயா?” என்று கேட்டார்.
“முடியாது” என்றேன்.
டிவி நாடகம் கை நழுவியது.
அன்று என்னை விரட்டி அடித்த அதே டிவி டைரக்டர், 5 ஆண்டுகள் கழித்து என்னை கை குலுக்கி பாராட்டிய சம்பவமும் நடந்தது. பாரதிராஜா இயக்கத்தில் நான் நடித்த “நிழல்கள்” படத்தின் பிரத்தியேக காட்சி மைலாப்பூரில் உள்ள “மேனா” தியேட்டரில் நடந்தது.
படம் பார்த்த முக்கிய பிரமுகர்கள் டைரக்டர் பாரதிராஜாவுக்கு கைகொடுத்து வாழ்த்து சொல்கிறார்கள். அப்போது ஒரு கரம் என் பக்கம் நீளுகிறது. பார்த்தால் டிவி இயக்குநர். “வாழ்த்துக்கள்! பிரமாதமா நடிச்சிருக்கீங்க” என்று கை குலுக்கி வாழ்த்தினார்.

Tuesday, February 10, 2015

விஜய்க்கு மீண்டும் நாயகியாகிறார் சமந்தா

அட்லீ இயக்கத்தில் விஜய் நடிக்கவிருக்கும் படத்தின் மூலம் மீண்டும் விஜய்க்கு நாயகியாக நடிக்க சமந்தா ஒப்பந்தமாகி இருக்கிறார்.
சிம்புதேவன் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் 'புலி' படத்தைத் தொடர்ந்து, அட்லீ இயக்கவிருக்கும் படத்தில் நடிக்க தேதிகள் கொடுத்திருக்கிறார் விஜய்.
இப்படத்தை தயாரிப்பாளர் சங்கத் தலைவர் தாணு தயாரிக்க இருக்கிறார். ஜி.வி.பிரகாஷ் இசையமைக்க, ஜார்ஜ் வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்யவிருக்கிறார்.
இப்படத்தில் நடிக்கவிருக்கும் நடிகர், நடிகையியர் தேர்வு நடைபெற்று வருகிறது. சமந்தா இப்படத்தின் நாயகியாக முடிவு செய்யப்பட்டு இருக்கிறார்.
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்த 'கத்தி' படத்தில் நாயகியாக நடித்தவர் சமந்தா. தற்போது மீண்டும் விஜய்க்கு ஜோடியாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார்.
இப்படத்தில் விஜய், சமந்தா, 'நான் கடவுள்' ராஜேந்திரன் ஆகியோர் ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார்கள். 'புலி' முடிந்தவுடன் இப்படத்தின் படப்பிடிப்பை உடனடியாக தொடங்க விஜய் திட்டமிட்டு இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

சின்னத்திரை நடிகை நிஷாவுடன் நடிகர் கணேஷ் வெங்கட்ராமன் நிச்சயதார்த்தம்

நடிகர் கணேஷ் வெங்கட்ராமனுக்கும், சின்னத்திரை நடிகை நிஷாவுக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது.
தமிழ்த் திரையுலகில் 2008-ம் ஆண்டு வெளியான 'அபியும் நானும்' படத்தின் மூலம் அறிமுகமானவர் கணேஷ் வெங்கட்ராமன். அதனைத் தொடர்ந்து 'உன்னைப்போல் ஒருவன்', 'பனித்துளி', 'தீயா வேலை செய்யணும் குமாரு', 'இவன் வேற மாதிரி' உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கிறார். படங்கள் மட்டுமல்லாது பல்வேறு விளம்பரப் படங்களிலும் நடித்திருக்கிறார்.
சின்னத்திரையில் நாடகங்கள், நடன நிகழ்ச்சிகள் உள்ளிட்டவற்றில் பிரபலமான நிஷா கிருஷ்ணனை நீண்ட நாட்களாக கணேஷ் வெங்கட்ராமன் காதலித்து வந்திருக்கிறார். தற்போது இரு வீட்டாரும் சம்மதம் தெரிவித்து, திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்று இருக்கிறது.
இந்த ஆண்டு இறுதியில் இருவரும் திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டு இருப்பதாக கணேஷ் வெங்கட்ராமன் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார்.

சூர்யாவுக்கு ஜோடியாக அமலாபால்

பாண்டியராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் குழந்தைகள் படத்தில், சூர்யாவுக்கு ஜோடியாக அமலாபால் ஒப்பந்தமாகி இருக்கிறார்.
சிம்பு நடிப்பில் 'இது நம்ம ஆளு' படத்தை இயக்கி வருகிறார் பாண்டிராஜ். அப்படத்தின் படப்பிடிப்பு தாமதமாகி வரும் காரணத்தால் சூர்யாவின் தயாரிப்பில் ஒரு குழந்தைகளுக்கான படத்தை இயக்கி வருகிறார்.
இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு முடிவுற்று இருக்கிறது. இப்படத்தில் பிந்து மாதவி முக்கிய பாத்திரத்தில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், இப்படத்தில் சூர்யாவும் கெஸ்ட் ரோலில் நடிக்கவிருக்கிறார். அவருக்கு ஜோடியாக நடிக்க அமலா பால் ஒப்பந்தமாகி இருக்கிறார். 'வேலையில்லா பட்டதாரி' படத்தில் கல்யாணத்துக்கு முன்பு நடித்தாலும், கல்யாணத்துக்கு பிறகு வெளியானது. ஆகையால், அமலா பால் திருமணத்திற்கு பிறகு ஒப்பந்தமாகி இருக்கும் முதல் தமிழ் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
'இது நம்ம ஆளு' முழுப் படப்பிடிப்பையும் முடித்துவிட்டு, இக்குழந்தைகள் படத்தில் கவனம் செலுத்த திட்டமிட்டு இருக்கிறார் இயக்குநர் பாண்டிராஜ். இப்படத்திற்கு இன்னும் பெயரிடப்படவில்லை.

மான்போல் துள்ளித் துள்ளி ஆடி ரசிகர்களின் இதயத்தை வருடிய இ.வி.சரோ

எம்.ஜp.ஆரும் சிவாஜpயும் நாயகர்களாக உருவாகிவந்த ஐம்பதுகளின் தொடக்கத்தில்தான் நடனத் தாரகை இ.வி.சரோஜhவும் சினிமாவில் நுழைந்தார். 1952-ல் வெளியான 'என் தங்கை' படத்தில் எம்.ஜp.ஆரின் தங்கையாக அறிமுகமானார் சரோஜh.
அந்நாளில் தமிழகம் தாண்டி இலங்கை, ரங்கூன், பினாங்கு ஆகிய நாடுகளிலும் புகழ்பெற்றது டி.எஸ். நடராஜனின் 'என் தங்கை' என்ற நாடகம். அதை அப்படியே தழுவி சினிமாவாக எடுக்கப்பட்டது. சி.எல். நாராயணமூர்த்தி, எம்.கே.ஆர். நம்பியார் ஆகியோர் திரைப்படமாக இயக்கிய அந்த நாடகத்தில், அண்ணன் வேடத்தில் நாயகனாக நடித்தவர் சிவாஜp கணேசன்.
அசோகா பிக்சர்ஸ் இந்த நாடகத்தைத் திரைப்படமாகத் தயாரிக்க முன்வந்தது. அந்த நாடகத்தில் நடித்துவந்த சிவாஜpயையே படத்திலும் ஒப்பந்தம் செய்ய விரும்பினார்கள். அப்போது அவர் நே'னல் பிக்சர்ஸ் பெருமாள் முதலியாரின் 'பராசக்தி'' படத்தில் நடித்துக் கொண்டிருந்தார்.
~~பராசக்தி கதையிலும் அண்ணன் தங்கை பாசம் இருக்கிறது. 'என் தங்கை''யிலும் அதுதான் கருப்பொருள். எனவே இதில் சிவாஜp மீண்டும் நடிப்பதைவிட எம். ஜp. ராமச்சந்திரன் பொருத்தமாக இருப்பாரே" என்றார் பெருமாள் முதலியார். அதை ஏற்று எம்.ஜp. ராமச்சந்திரனைத் தேர்வு செய்தனர். கதாநாயகனுக்கு அடுத்து கதையைத் தோளில் சுமந்து செல்வது தங்கையின் வேடம்.
ஆனால் பொருத்தமான நடிகை கிடைக்கவில்லை. அதனால் ஒரு புதுமுகத்தையே தேர்வுசெய்துவிடுவது என்று முடிவு செய்தனர். அப்போது மயிலாப்பு+ரில் புகழ்பெற்ற நாட்டியக் கலாசேத்திரமாக இருந்தது வழுவு+ர் பி. ராமையாப் பிள்ளையின் நடனப்பள்ளி.
அதன் ஆண்டு விழாவில் அவருடைய மாணவி பி.இ. சரோஜhவின் நாட்டியத்தைக் கண்டு இவர்தான் தங்கை மீனாவாக நடிக்க வேண்டும் என்று முடிவு செய்தார்கள். அறிமுகப் படம் மாபெரும் வெற்றிபெற்றது. பராசக்திக்கு முன்பே வெளியாகி எம்.ஜp.ஆருக்கும் புகழைக் கொண்டு வந்தது. பார்வையற்ற பெண்ணாக நடித்து அறிமுகப் படத்திலேயே பெரும் புகழ்பெற்ற இ. வி. சரோஜh தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்தவர்.
என்கண் தந்த கலைச்செல்வி
இன்றைய திருவாரூர் மாவட்டத்தில் பழம்பெருமை மிக்க, பாடல்பெற்ற முருகன் தலமாக இருக்கும் 'என்கண்' தான் இ.வி.சரோஜh பிறந்து வளர்ந்த ஊர். வேணு பிள்ளை ஜhனகி அம்மையார் தம்பதியின் இரண்டாவது வாரிசாகப் பிறந்த இவருக்கு சிறு வயதுமுதலே நடனத்தில் ஆர்வம். இரண்டு வயதுமுதல் அம்மாவிடம் நடனம் கற்றுக்கொண்டு பிரகாசித்தார்.
அப்போது மயிலாடுதுறை அருகில் உள்ள வழுவு+ர் பரதக் கலையின் வித்தக மையமாக விளங்கியது. அதற்குக் காரணம் வழுவு+ர்ப் பாணி நாட்டியம் டெல்லிவரை புகழ்பெற்று விளங்கியது. காண்போரை மயக்கும் லயசுத்தமும், அங்க சுத்தமும் கொண்டதே அதற்குக் காரணம். அதை உருவாக்கியவர் நாட்டிய மேதை நட்டுவனார் பி. ராமையாபிள்ளை.
திரையுலகில் அன்று முத்திரை பதித்த குமாரி கமலா, வைஜயந்திமாலா, லலிதா, பத்மினி அனைவரும் வழுவு+ராரின் மாணவிகளே. பதினோரு வயதில் இ.வி. சரோஜhவின் திறமையைக் கண்டு, அவரைத் தனது பள்ளியில் சேர்த்துக் கொண்டு முறைப்படி நடனம் பயிற்றுவித்தார் வழுவு+ரார். ஆசானின் பெயரைக் காப்பாற்றும் விதமாக 14 வயதில் அரங்கேற்றம் செய்து 16 வயதுக்குள் 100 மேடை நிகழ்ச்சிகளில் ஆடிச் சாதனை புரிந்தார் சரோஜh.
மயக்கிய மான் நடனம்
அறிமுகப் படம் தந்த புகழ் அவரை மடமடவென்று புகழ்பெற்ற நட்சத்திரமாக்கியது. ஐம்பதுகளில் ஒல்லியான உடலமைப்பு கொண்ட கதாநாயகிகள் அபு+ர்வம். இ.வி. சரோஜhவுக்கு ஒல்லியான உடற்பாங்குடன் அகலமான நெற்றி, நீளமான முகம், கருணையும் கவர்ச்சியும் இணைந்த கண்கள், கொவ்வை இதழ்கள், குளிர் சிரிப்பு என்று ரசிகர்களைத் தன் கண்ணியமான அழகினால் கவர்ந்தார்.
வழுவு+ர் பாணி நடனத்தை சினிமாவுக்கான நடனத்துடன் இணைத்து ஒவ்வொரு நடன அசைவையும் இவர் நளினமாக வெளிப்படுத்திய பாங்கில் ரசிகர்கள் உருகிப்போனார்கள்.
இளம் மான்போல் துள்ளித் துள்ளி பல படங்களில் இவர் ஆடிய நடனம், ரசிகர்களின் இதயத்தை வருடியது.
பின்னாளில் புகழ்பெற்ற இயக்குநராக விளங்கிய திரைக்கதாசிரியர் ஏ. பி. நாகராஜன் கதை, வசனம் எழுதி நடித்த 'பெண்ணரசி'' படத்தை வேணுசெட்டியாரின் தயாரிப்பில் இயக்கினார் கே.சோமு. அதில் நான்கு கதாநாயகிகளில் ஒருவராக நடித்துத் தனது திறமையான நடனத்தால் கவர்ந்தார். பின்னர் டி.ஆர். ராமண்ணா இயக்கத்தில் எம்.ஜp. ஆர், டி.ஆர். ராஜகுமாரி, நடித்த 'குலேபகாவலி' படத்தில், முக்கிய வேடத்தில் நடித்தார். அந்தப் படத்தில் ~~சொக்கா போட்ட நவாப்பு... செல்லாதுங்க ஜவாபு" என்ற பாடலுக்கு பாடி ஆடிய நடனம், சரோஜhவைப் பட்டிதொட்டியெங்கும் பிரபலப்படுத்தியது.
பின்னர் எம்.ஜp. ஆருக்கு வெள்ளிவிழா காவியமாக அமைந்த 'மதுரை வீரன்'' படத்தில் கதாநாயகி பொம்மியின் (பானுமதி) தோழியாக நடித்தார். அந்தப்புரத்துக்குள் நுழைந்துவிடும் புள்ளிமானைத் துரத்திவரும் மதுரைவீரன் எம்.ஜp.ஆரை ~~வாங்க மச்சான் வாங்க, வந்த வழியைப் பார்த்துப் போங்க" என்று பகிடி செய்யும் விதமாக இ.வி.சரோஜh பாடி ஆடிய நடனம் அமோக வரவேற்பைப் பெற்றது.
இதேபடத்தில் பானுமதி, பத்மினி ஆகியோர் ஆடிய நடனங்கள் இடம்பெற்றிருந்தாலும் இ.வி. சரோஜhவின் நடனமே ரசிகர்களைத் திரையரங்குக்குத் திரும்பத் திரும்பச் சுண்டி இழுத்தது. இ. வி. சரோஜhவின் நடனக் காட்சி இருந்தால் அந்தப் படம் வெற்றிபெறும் என்று நம்பப்பட்டது. இதனால் 50க்கும் அதிகமான படங்களில் அவரது நடனம் கதையில் பொருத்தப்பட்டது.
மதுரை வீரனுக்குப் பிறகு 'அமர தீபம்'', 'பாவை விளக்கு'', 'கற்புக்கரசி'', 'எங்க வீட்டு மருமகள்'', 'தங்கப் பதுமை'', 'நீலமலைத் திருடன'' என்று சரோஜhவுக்குப் புகழைச் சேர்த்த படங்கள் பல. நகைச்சுவை நடிகருடன் ஜோடி சேர்ந்தால் கதாநாயகி ஆக முடியாது என்ற மாயையையும் சரோஜhவே முதலில் உடைத்தார்.
சந்திரபாபுவுடன் மூன்று படங்களில் இணையாக நடித்த அவர், பிறகு எம். ஜp.ஆர், சிவாஜp, nஜமினி கணேசன், தெலுங்குப் படவுலகில் அக்னிநேனி நாகேஷ் வரராவ் என முன்னணிக் கதாநாயகர்களுடன் இணைந்து நடித்தார். பதினைந்து வயதில் தொடங்கி 26 வயதுவரை மட்டுமே நடித்த இவர், தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி, சிங்களம் உட்பட சுமார் 60 படங்களில் நடித்திருக்கிறார். சில படங்களுக்கு நடன இயக்குநராகவும் பணியாற்றியிருக்கிறார்.
நடனத் தாரகை
புகழின் உச்சியில் இருந்தபோது, இயக்குநர் டி.ஆர்.ராமண்ணாவைத் திருமணம் செய்துகொண்டார். தன் சகோதரர் இ.வி. ராஜனுடன் இணைந்து படநிறுவனம் தொடங்கி 'கொடுத்து வைத்தவள்'' என்ற படத்தைத் தயாரித்தார். ப. நீலகண்டன் இயக்கிய இந்தப் படத்தில் எம்.ஜp.ஆரும், இ.வி.சரோஜhவும் இணைந்து நடித்தனர். இதுவும் மிகப்பெரிய வெற்றிப் படமாக அமைந்தது.
அந்தப் படத்தில் சரோஜhவின் நடிப்புக்குப் பாராட்டு மழை கிடைத்தது. ஆனால் அதுவே அவரது கடைசிப் படமாக அமைந்தது. சரோஜh ராமண்ணா தம்பதிக்கு நளினி என்ற ஒரே மகள். திருமணத்துக்குப் பிறகு நடிப்பதை நிறுத்திவிட்டாலும் நடனத்தைத் தன் கண்ணென நேசித்ததால் 'மனோன்மணியம்'' காவியக் கதையை நாட்டிய நாடகமாக தயாரித்து இந்தியா முழுவதும் நடத்திக் காட்டி நடனத்திலும் தனது பங்களிப்பைச் திறம்படச் செய்த இவர் 2006-ம் ஆண்டு இறையடி சேர்ந்தார். ஆனால் நடனத்தில் அவர் வைத்த ஒவ்வொரு அடியும் அமரத்துவம் பெற்றது.

Tuesday, February 3, 2015

டி.எஸ்.பாலையா


இன்றைய தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள சுண்டாங்கோட்டை என்ற சின்னஞ்சிறு கிராமம்தான் டி. எஸ். பாலையாவின் சொந்த ஊர். சர்க்கஸில் சேர்ந்து பெரிய கலைஞனாக வேண்டும் என்ற உந்துதலோடு, அப்பா அம்மாவிடம் செல்லாமல் 14 வயதில் வீட்டை விட்டு ஓடி வந்தவருக்கு அடைக்கலம் கொடுத்தது மதுரை மண். அங்கே பிரபலமாக இருந்த மதுரை ஒரிஜினல் போய்ஸ் நாடக கம்பனியில் சேர்ந்துவிடத் துடித்தவருக்கு ஒரு வாய்ப்பு அமைந்தது. போய்ஸ் கம்பனியிலிருந்து விலகி பல இளம் நடிகர்கள் ஒன்றிணைந்து ஆரம்பித்த ‘பாலமோஹன சபா”வில் இடம் கிடைத்தது.
அப்போது பாலையாவுக்கு 15 வயது. அந்த சபாவில் பாலையாவுக்கு நடிப்புக் கலையைச் சொல்லிக் கொடுத்தவர் அவரது வாத்தியார் கந்தசாமி முதலியார். அவர் ஒரு திரைப்படத்துக்கு வசனம் எழுதினார்.
அந்தப் படம் எல்லீஸ் ஆர். டங்கன் முதல்முறையாக இயக்கிய ‘சதி லீலாவதி’ (1936). அந்தப் படத்தில் தனக்கு மிகவும் பிடித்த மாணவன் பாலையாவுக்கு வாய்ப்பு வாங்கிக் கொடுத்தார். அறிமுகப் படத்திலேயே வில்லன் வேடம் என்பதுதான் பாலையா திரை வாழ்க்கையில் ஆச்சரியமான தொடக்கம்.
எம். ஜி. ஆர். சுயசரிதையில் பாலையா சதி லீலாவதி எம். ஜி. ஆருக்கு மட்டும் முதல் படம் என்று நினைத்துவிடாதீர்கள்.
அந்தப் படத்தின் கதாநாயகன் எம். கே. ராதா, என். எஸ். கிருஷ்ணன், டி. எஸ். பாலையா, கே. ஏ. தங்கவேலு ஆகியோருக்கும் கூட முதல் படம் ‘சதி லீலாவதி’ தான். அந்தப் படத்தில் ஒல்லியான வில்லனாக டி. எஸ். பாலையா வருவார்.
பி. யூ. சின்னப்பா நடித்த ஆரிய மாலா (1941), ஜகதலப் பிரதாபன் (1944) போன்ற படங்களிலும் வில்லனாக நடித்தார் பாலையா. மீரா படத்தில் பாலையாவுடன் வரும் தாடி வைத்த இளைஞர்தான் எம். ஜி. ஆர். ஒரு படத்தில் எம். ஜி. ஆருக்கு ஒரு நல்ல பாத்திரம் கிடைத்து கல்கத்தாவுக்குப் படப்பிடிப்புக்காகப் போன போது, பாலையா அங்கு வந்தாராம்.
எம். ஜி. ஆருக்கு ஒதுக்கப்பட்ட அந்தப் பாத்திரம் பாலையாவுக்குப் போய்விட்டது. எம். ஜி. ஆருக்குச் சின்ன கதாபாத்திரம் கிடைத்தது. “அந்த ரோலை அன்று பாலையா செய்த மாதிரி என்னால் நிச்சயமாகச் செய்திருக்க முடியாது” என்று ‘நான் ஏன் பிறந்தேன்?” சுயசரிதையில் எழுதினார் எம். ஜி. ஆர்.
மீட்டு வந்த சுந்தரம்
ஒரு குறிப்பிட்ட காலத்தில் விரக்தியில் சாமியாராகப் போய்விட்டார் பாலையா. பாண்டிச்சேரிக்குப் பட வேலையாகச் சென்றிருந்த மாடர்ன் தியேட்டர் டி. ஆர். சுந்தரம் கண்ணில் பட்டிருக்கிறார். ‘யார்டா அந்தச் சாமியார்.
பாலையா மாதிரி தெரியுதே’ என்று ‘கண்டு’ அவரைப் ‘பிடித்து’ அந்தக் கணமே அவரை வலுக்கட்டாயமாகத் தனது காரில் ஏற்றிக் கொண்டு சேலம் வந்து சேர்ந்துவிட்டார். அடுத்தநாளே அங்கே படப்பிடிப்பு நடந்துவந்த ‘பர்மா ராணி’ என்ற படத்திலும் நடிக்க வைத்துவிட்டாராம்.
மாடர்ன் தியேட்டர்ஸ் ‘சித்ரா’ படத்தில் பாலையா கதாநாயகனாக நடித்தார். ஒரு மலையாளப் படம் ‘ப்ரசன்ன’. லலிதா, பத்மினி நடித்த அந்த மலையாளப் படத்திலும் பாலையா கதாநாயகனாக நடித்தார். இதன் பிறகு பாலையா தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நடிகரானார்.
முன்னோடிக் கதாபாத்திரம்
வேலைக்காரி (1949) படத்தில் பாலையா செய்த பகுத்தறிவாளன் பாத்திரம் தான் பின்னாட்களில், எம். ஜி. ஆர்., சிவாஜி, எஸ். எஸ். ஆர். செய்த பகுத்தறிவுக் கதாபாத்திரங்களுக்கு முன்னோடி என்று அசோகமித்திரன் சொல்வார்.
இதில் விசித்திரம் என்னவென்றால் பாலையா ஒரு பழுத்த காங்கிரஸ்வாதி என்றாலும் பகுத்தறிவு இயக்கத்தின் அபிமானியாகவும் இருந்தார். திரையில் பகுத்தறிவு பீரங்கியாக இருந்த நடிகவேள் எம். ஆர். ராதாவுடன் கடைசி நாட்கள் வரை இணை பிரியாத நண்பராக இருந்தார்.
நகைச்சுவை வில்லன் முத்திரை
1956ல் ‘மாமன் மகள்’ படத்தில் ஜெமினி, சாவித்திரி, சந்திரபாபு, டி. எஸ். துரைராஜ் ஆகியோருடன் பாலையா நடித்தார். அதே வருடம் மதுரை வீரன் படத்தில் எம். ஜி. ஆருக்கு வில்லனாகி ஆக்ரோஷமாகக் கத்தியை உருவி ‘இன்று என்ன கிழமை’ என்பார். வெள்ளிக்கிழமை என்று அல்லக்கை சொல்லவும் ‘அடடா என்று விரதம்” என்று மீண்டும் உறையில் போட்டு விடுவார்.
‘அரசே நாங்கள் பின்தொடர்ந்து போனோம். ஆனால் அவர்கள் முன்தொடர்ந்து போய்விட்டார்கள்” என்பார்.
‘புதுமைப்பித்தன்’ (1957) படத்தில் எம். ஜி. ஆர். “அதோ வருகிறது வஞ்சகத்தின் மொத்த உருவம்” என்பார். அப்போது பாலையா குண்டாகக் கொழுகொழுவென்று நடந்து வருவார்.
வில்லனாக நடித்ததில் அவர் கலந்து செய்த நகைச்சுவை எம். ஆர். ராதாவின் பாணிக்கு முற்றிலும் மாறானது. நகைச்சுவை வில்லனாக அவர் ஏற்படுத்திய தாக்கம் அத்தனை சீக்கிரம் மறையக்கூடியது அல்ல.
புதையல் படத்தில் அவர் “இங்கு சகலவிதமான சாமான்களும் விற்கப்படும்” என்ற வரிகளை “இங்கு சகலவித ‘மான’ சாமான்களும் விற்கப்படும்” என்று பிரித்து வாசிப்பார். வசன உச்சரிப்பில் அவரது வித்தகத் தன்மை ஒவ்வொரு படத்திலும் பளிச்சிட்டது.
மாற்று இல்லாத குணச்சித்திரம்
குணச்சித்திர நடிப்பிலும் ரங்காராவ் போல உச்சத்தைத் தொட்டவர் பாலையா. பாகப் பிரிவினை (1959) படத்தில் பாகப் பிரிவினை செய்யும் காட்சியில் பாலையா, வாயில் துண்டை வைத்துக் கொண்டிருக்கும் தன் தம்பி எஸ். வி. சுப்பையாவிடம் தாய், தந்தையர் போட்டோவைக் காட்டிப் பேசும் நடிப்பில் தியேட்டரில் அழாதவர்கள் இருக்க முடியாது.
பாலையாவும் நாகேஷ¤ம் காதலிக்க நேரமில்லை (1964) படத்தில் அடிக்கும் லூட்டி மறக்கவே முடியாதது. நகைச்சுவையின் அதிகபட்ச சாதனை அது.
‘திருவிளையாடலில்’ (1965) வித்துவச் செருக்கை அழக்காகக் காட்டி நடித்த ‘ஒரு நாள் போதுமா?’ பாடல் காட்சியும், என்னடா இது மதுரைக்கு வந்த சோதனை?’ என்று பேசிய வசனமும் இன்றும் பிரபலம். ‘பாட்டும் நானே, பாவமும் நானே’ பாடலைக் கேட்டபின் அவர் வெளிப்படுத்தும் மிரட்சியும்தான். கர்வம், எகத்தாளம், மிரட்சி என்ற உணர்வுகள் பாலையாவின் நடிப்பில் விசேஷ பரிமாணங்கள்.
தில்லானா மோகனாம்பாள் (1968) அவரது நகைச்சுவை நடிப்பின் மற்றொரு சிகரம். ‘தம்பி, வயிறு சரியில்ல சோடாக் கடைக்குப் போனேன். அவன் என்னத்தையோ ஊத்திக்கொடுத்துட்டான். பித்த உடம்பா... தூக்கிடுச்சி’ அடிமைப் பெண் படத்தில் செங்கோடன் வில்லன் பாத்திரத்தை பாலையா செய்ய ஆசைப்பட்டார்.
அந்தப் பாத்திரத்தை எம். ஜி. ஆர். தரவில்லை. அசோகன்தான் அந்தப் பாத்திரத்தில் நடித்தார்.
பாலையாவின் மூத்த மகன் சாய்பாபா திரையில் நாகேஷ¤க்கு இரண்டு பாடல்கள் பாடியிருக்கிறார். ‘எங்கிருந்தோ வந்தாள்’ படத்தில் ‘ஹலோ மை டார்லிங்’, ‘வீட்டுக்கு வீடு’ படத்தில் ‘மலர்களில் படுத்தவள் சகுந்தலை’ போன்ற பாடல்கள் சாய்பாப பாடியவைதான்.
அப்பா வழியில் திரைக்கு நடிக்க வந்த அவரது மற்றொரு மகன் ஜூனியர் பாலையா. அப்படியே பாலையாவின் மற்றொரு நகலாக விளங்குகிறார்.