Wednesday, February 29, 2012

சிவாஜிக்காக முதன் முதலில் S.P. B பாட வந்த போது...


பொட்டு வைத்த முகமோ என்ற பாடலுக்கு முதலில் வேறு ஒருவர் பாடுவதாக இருந்தது. ஆனால் மெல்லிசை மன்னர் எஸ்.பி.பி.யைத்தான் தேர்ந்தெடுத்தார். சிவாஜியிடம் தான் பெயரெடுக்க வேண்டும் என்று எஸ்.பி.பி. மனத்திற்குள் ஒரு முடிவு செய்து கொண்டார். சிவாஜிக்குப் பாடப் போகும் முதல் பாடல் என்ற பயத்தோடு ஒத்திகைக்குச் சென்றார்.
பாடல் பதிவு நாள் வந்தது. ரிக்கார்டிங் தியேட்டரினுள் பாலு சென்றார். அங்கே நடிகர் திலகம் காத்திருந்தார். எஸ்.பி.பிக்கு நடிகர் திலகத்தைப் பார்த்தவுடன் எதற்காக வந்திருக்கிறார் எனப்புரியவில்லை. பாலுவைத் தனியாக அழைத்துச் சென்றார் சிவாஜி.
ரிக்கார்டிங் தியேட்டரில் உள்ளவர்களுக்கு ஒரே சஸ்பென்ஸ் சாதாரணமாக பாடல் பதிவுகளுக்கு சிவாஜி வருவது வழக்கம் இல்லையே, இன்று மட்டும் ஏன் வந்திருக்கிறார் என்பது யாருக்கும் புரியவில்லை.
அந்தக் காலத்தில் சிவாஜிக்கு அதிகமாக பின்னணி பாடிவந்தவர் டி.எம்.எஸ். தான். டி.எம்.எஸ் பாடல் பதிவுக்குக் கூட வராத நடிகர் திலகம், எஸ்.பி.பி. பாடல் பதிவுக்கு வந்தது மெல்லிசை மன்னரைக் கூட வியப்பில் ஆழ்த்தியது.
எஸ்.பி.பி.யும் சிவாஜியும், ரிக்கார்டிங் தியேட்டரில் இருந்த ரூமிற்குள் சென்றார்கள் கண்ணாடி பதிக்கப்பட்ட அந்த அறையில் சிவாஜி எஸ்.பி.பி.யிடம் ஏதோ சொல்லிக் கொண்டிருப்பது தெரிந்தது. ஆனால் என்ன பேசுகிறார்கள் என்பது புரியவில்லை. பத்து நிமிடத்திற்குப் பிறகு சிவாஜியும் எஸ்.பி.பியும் வெளியே வந்தார்கள். சிவாஜி நேரே மெல்லிசை மன்னரிடம் வந்து ஏதோ சொல்லிவிட்டுக் கிளம்பிச் சென்றுவிட்டார்.
நடிகர் திலகம் சிவாஜி, எஸ்.பி.பி.யிடம் என்ன சொல்லியிருப்பார் என்பது எல்லாருக்கும் சஸ்பென்ஸாக இருந்தது. மெல்லிசை மன்னர் எஸ்.பி.பி.யிடம் எதுவும் கேட்கவில்லை. ‘பொட்டு வைத்த முகமோ பாடல் திட்டமிட்டபடி எடுத்து முடிக்கப்பட்டது. பாடல் மிக நன்றாக வந்திருப்பதாக ரிக்கார்டிங் தியேட்டரில் பேசிக் கொண்டார்கள்.
ஆனால் பாடலைக் கேட்ட போது, டி.எம்.எஸ்.ஸின் குரலைப் போல இந்தப் புதிய குரல் அதுவும் மென்மையான குரல், நடிகர் திலகத்தின் நடிப்போடு இசையுமா என்று சிலர் சந்தேகப்படவும் செய்தனர். ‘சுமதி என் சுந்தரி’ படம் முடிந்தவுடன் பிரிவியூக்கு வழக்கம் போல் எல்லாத் தொழில் நுட்ப கலைஞர்களும் அழைக்கப்பட்டனர்.
சாதாரணமாக எஸ்.பி.பி. இது போன்ற காட்சிகளுக்குப் போகும் வழக்கமில்லை. ஆனால் ‘சுமதி என் சுந்தரி’ படத்திற்கு குடும்பத்தோடு சென்றார். இவர் சென்ற அதே காட்சிக்குத்தான் மெல்லிசை மன்னரும் வந்திருந்தார். அந்தப் பாடல் காட்சி படமாக்கப்பட்ட போது எஸ்.பி.பி.யின் நளினமான குரலுக்கு ஏற்ப தமது நடையையும் பாவனைகளையும் அசைவுகளையும் குழையக் குழைய வெளிப்படுத்தி இருந்தார் நடிகர் திலகம். சந்தேகப்பட்டவர்கள் பிரமித்துப் போனார்கள்.
படத்தில் ‘பொட்டு வைத்த முகமோ’ பாடலுக்கு பாலுவின் குரலுக்கு ஏற்ப நடிப்பு ஸ்டைலை மாற்றிக் கொண்டு நடிகர் திலகம் நடித்திருப்பதைப் பார்த்து வியந்தார் பாலு. படம் முடிந்து வெளியே வந்த போது, எம்.எஸ்.வி. பாலுவிடம் “உங்க பாட்டு ஓஹோன்னு வந்திருக்கிறது எனக் கூறி பாராட்டினார். அதற்குப் பிறகு நடிகர் திலகத்திற்கு பல பாடல்களைப் பாடக்கூடிய வாய்ப்புகள் எஸ்.பி.பிக்குக் கிட்டியது.
நடிகர் திலகம் முதல் ரிகார்டிங்கில் பாலுவைச் சந்தித்து என்ன கூறினார் தெரியுமா? “பாலு! எனக்குப் பாடப்போறேன்னு நினைச்சு உன்னுடைய ஸ்டைலை மாத்திப் பாட முயற்சி பண்ணாதே. உன்னுடைய ரிக்கார்டிங் கேட்கணும்னு நான் இங்க வரலை.
இங்கே சில பேர் உன்கிட்ட வேறு ஒரு பாடகர் ஸ்டைலில் பாடினாத்தான் எனக்குப் பிடிக்கும்னு சொல்லி உன்னை கன்ஃப்யூஸ் பண்ணக்கூடாது என்பதால்தான். நானே நேராக வந்தேன் உன்னோட ஒரிஜினல் ஸ்டைல்ல பாடு அதுக்கு ஏத்த மாதிரி நான் நடிக்க முயற்சி செய்றேன்’ என்பதுதான். உண்மையில் நடிகர் திலகத்தின் அறிவுரைகள் எஸ்.பி.பி.க்கு தைரியத்தைக் கொடுத்தன சிவாஜி கொடுத்த டானிக் பாலுவை அந்தப் பாடலை அற்புதமாகப் பாட வைத்தது.
சிவாஜி சொன்னபடி எஸ்.பி.பி. தமக்கே இயல்பான நளினம் கொஞ்சும் நந்தவனக் குரலில் அந்தப் பாடலை மிக சுதந்திர உணர்வோடு பாடினார். அவருடைய ஸ்டைலுக்காக தன் ஆக்டிங் ஸ்டைலை மாற்றிக் கொண்ட அந்த நடிப்புச் செல்வத்தை, மனதாக பாராட்டிக் கொண்டும் அதே நேரத்தில் அவரின் திறமையைக் கண்டு பிரமித்துக் கொண்டும் இருக்கிறார் எஸ்.பி.பி. இன்றளவும் எஸ்.பி.பி.வியக்கும் ஒரு விடயம் இது.
அந்தப் பாடல், சுமதி என் சுந்தரி படத்தில் மெல்லிசை மன்னரின் இசை வார்ப்பில் மலர்ந்த பொட்டு வைத்த முகமோ’


சாவித்திரியை மண முடிக்க காரணமான விடயம்

சாவித்திரி சினிமா உலகில் காலடி எடுத்துவைப்பதற்கு செளத்திரி என்னும் ஒருவர்தான் உதவிசெய்தார். பிற்காலத்தில் அவரையே தனது கால்iட்டுக்களைக் கவனிக்கும் கார்டியனாக சாவித்திரி நியமித்திருந்தார்.
ஆனால் அவரோ தான் முதலில் செய்த உதவியால்தான் சாவித்திரி இந்த அளவுக்கு பெரிய ஆளாகினார் என்று அனைவருக்கும் கூறி சாவித்திரிக்கு ஏகப்பட்ட நிபந்தனைகள் போட்டு அவரை ஒரு அடிமைபோல நடத்த ஆரம்பித்தார்.
சினிமா உலகில் நுழைவதற்கு உதவியவர்தான் என்றாலும் செளத்ரி தன்னை அடிமைபோல் நடத்தியது சாவித்திரிக்கு வெறுப்பை அளித்தது. இருவருக்கும் இடையே தகராறு மூண்டது. இதனால் அவரது குடும்பத்தினரும் சாவித்திரிக்கு ஆதரவளிக்க மறுத்தனர்.
யோசித்துப் பார்த்த சாவித்திரி அந்த நேரத்தில் தனக்கு ஆதரவு அளிக்கக் கூடிய ஒரே ஒருவர் ஜெமினி கணேசன்தான் என்ற முடிவுக்கு வந்து அவரது வீட்டில் தஞ்சம் புகுந்தார். ஜெமினியும் அவரை ஆதரித்து தன்னோடு தங்கவைத்துக்கொண்டார்.
இது பின்னர் இருவருக்கும் இடையில் காதலாக மலர ஆதரவின்றித் தவித்த சாவித்திரியை மணமுடித்துக்கொண்டார் ஜெமினி.
இதுதான் ஜெமினி சாவித்திரியை மணமுடிக்க காரணமான

நகைச்சுவை வேடத்தில்; நடிக்க ஸ்ரேயா விருப்பம்


கவர்ச்சி ஆடையில் பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்று சர்ச்சைகளிலும் வழக்குகளிலும் சிக்கிய ஸ்ரேயா இப்போது அவற்றில் இருந்து விடுபட்டு அமைதியாய் இருக்கிறார்.
தெலுங்கு, ஆங்கில படங்களில் பிசியாக நடித்து வரும் அவர் ஐதராபாத்தில் பேட்டி அளித்தார். அப்போது அனுபவ முதிர்ச்சியோடு தத்துவார்த்தமாக பேசினார். அவர் கூறியதாவது :-
காலம் எல்லா கேள்விகளுக்கும் பதில் சொல்லும். நேற்று போல் இன்று இருப்பது இல்லை. இன்று போல் நாளை இருப்பது இல்லை. என்னை பொறுத்தவரை, தமிழ், இந்தி, தெலுங்கு, ஆங்கில மொழிகளில் திருப்தியான வேடங்களில் நடித்து முடித்துவிட்டேன்.
ஆனாலும் முழுக்க காமெடி வேடத்தில் ஒரு படத்தில் நடிக்க வேண்டும் என்ற ஆர்வம் எனக்கு இருக்கிறது. எனக்கு பிடிக்காதது திகில் கதைகள். திகில் படங்களை நான் பார்ப்பதே இல்லை. அது போன்ற படங்களில் நடிக்கவும் மாட்டேன். பணம் கொடுத்து பார்க்க வரும் ரசிகர்களுக்கு இது போன்ற பயங்கர கதைகளை காட்டுவது உகந்தது இல்லை.


இப்படியும் ஒரு நடிகையா?

வாங்கிய அட்வான்ஸை திருப்பி கொடுத்த பு+ர்ணா!



படத்தில் நடிப்பதற்கு நாற்பது இலட்சம் அட்வான்ஸ் வாங்கி, படத்தில் நடிக்கவும் செய்யாமல், பணத்தையும் திருப்பித் தராமல் தயாரிப்பாளரை மொட்டையடித்த இலியானாக்கள் உலவும் இந்தியா தேசத்தில் இப்படியும் ஒரு நடிகை. கேட்கையில் புல்லரிக்கத்தான் செய்கிறது.
கருவாச்சி என்ற படத்தில் பூர்ணா நடித்து வருகிறார் இல்லையா? இந்தப் படத்தைதான் கடைசி வைக்கோல் துரும்பாக அவர் எண்ணிக் கொண்டிருக்கிறார். படத்தைப் பற்றி அவர் தரும் பில்டப்புகளைப் பார்த்தால் கருவாச்சி பாரதிராஜாவின் கருத்தம்மாவை பீட் பண்ணுமோ என்று தோன்றுகிறது.
இந்தப் படத்தின் தயாரிப்பாளருக்கு மேற்கொண்டு படத்தை நகர்த்த பணம் தேவை. இதையறிந்ததும் படத்துக்காக தான் வாங்கிய அட்வான்ஸை திருப்பிக்கொடுத்திருக்கிறார். அட்வான்ஸை வச்சு நாம என்ன பண்ணப் போறோம். தயாரிப்பாளரிடம் அது இருந்தால் படப்பிடிப்பாவது நடக்கும் என்று நெகிழ்கிறார் பூர்ணா.
பூர்ணாவின் இந்த நிலை வரும் போது இலியானாக்கள் தானாக திருந்திவிடுவார்கள்.



No 01 ஆக ஆசை இல்லை



தமன்னாவுக்கு தெலுங்கில் ராச்சா, ரிபெல் என இரு படங்கள் கைவசம் உள்ளன. தமிழில் கடைசியாக நடித்த படம் வேங்கை. அதன் பிறகு தமிழ் படங்களில் வாய்ப்பு இல்லை. மீண்டும் தமிழ்ப் படங்களில் நடிக்க கதை கேட்டு வருகிறார். இந்தியிலும் வாய்ப்பு தேடுகிறார். தமன்னா அளித்த பேட்டி வருமாறு :-
வாழ்க்கையில் ஜெயிக்க நிறைய கனவு காண வேண்டும். வெற்றி பெறுவோம் என்றும் நம்ப வேண்டும். எல்லாவற்றுக்கும் ஆசைப்பட வேண்டும். ஆனால் பேராசை மட்டும் கூடாவே கூடாது. பேராசை கேடு செய்யும் சினிமாவில் நிறைய சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் உள்ளது. உயர்ந்த இடத்தை பிடிக்க வேண்டும் என்றும் ஆர்வப்படுகிறேன்.
அதற்காக நம்பர் ஒன் இடத்துக்கு வரவேண்டும் என்றெல்லாம் ஆசை கிடையாது. தமிழ், தெலுங்கில் நிறைய படங்கள் நடித்துவிட்டேன். வெற்றியும் தோல்வியும் கிடைத்துவிட்டது. இப்போது சினிமாவில் நிறைய பக்குவப்பட்டு விட்டேன். இனிமேல் நல்ல கதையம்சம் உள்ள படங்களை தேர்வு செய்து நடிப்பேன்.



நான் இனி நடிக்க மாட்டேன்

உதயதாரா

தமிழ் மற்று மலையாளப் படங்களில் நடித்தவர் உதயதாரா. இவருக்கும், சார்ஜாவில் வசிக்கும் பைலட் ஜூபின் ஜோசப் என்பவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது.
இவர்களின் நிச்சயதார்த்தம் மார்ச் 7 ஆம் திகதி கோட்டயத்தில் நடைபெறுகிறது. 16 ஆம் திகதி கோட்டயம் அருகிலுள்ள கடுத்துருக்கி என்ற இடத்தில் திருமணம் நடக்கிறது. திருமணத்துக்குப் பிறகு நடிப்பீர்களா என்று உதயதாராவிடம் கேட்டபோது ‘இனி நான் நடிக்க மாட்டேன்.
திருமணம் முடிந்ததும் கணவருடன் சார்ஜாவில் குடியேறுகிறேன். நடித்த படங்களின் ஷ¥ட்டிங்கை முடித்து விட்டேன்’ என்றார்.


Tuesday, February 28, 2012






 யார் இந்த கோமள வள்ளி?

கோமளவள்ளி என்ற பெயரை அவரே மறந்தி ருப்பார். பிறந்ததும் ஜெயலலி தாவிற்குச் சூட்டப்பட்ட பெயர் அது. ஆனால் சில காலத்தில் ஜெயலலிதா ஆனார். ஜெயா, ஜெய், லில்லி எனப் பல பெயர்களில் பள்ளித் தோழிகளால் அழைக்கப்பட்டவர், அவரது அம்மாவுக்கு அம்மு, அ. தி. மு. க. வினர் அனைவருக்கும் அம்மா!
சேர்ச் பார்க் மாணவி என்றுதான் பலருக்கும் தெரியும். ஆனால் மாம்பலம் ஹோலி ஏஞ்சல்ஸ் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு வரை படித்துவிட்டுத்தான் மெட்ரிக் வரைசேர்ச் பார்க்கில் படித்தார். எனக்கு இன்னொரு வாய்ப்பு கிடைத்தால் சேர்ச்
பார்க்கில் படிக்க வேண்டும் என்பதைத் தனது ஆசையாகச்சொல்லியிருந்தார்.
போயஸ் கார்டன், சிறுதாவூர் பங்களா, ஊட்டி கொடநாடு எஸ்டேட், ஹைதராபாத் திராட்சைத் தோட்டம் ஆகிய நான்கும் ஜெயலலிதா மாறி மாறித் தங்கும் இடங்கள். உடம்பை ஸ்லிம்மாக வைத்துக் கொள்வதில் ஆரம்ப காலத்தில் அதிக அக்கறையுடன் இருந்தார். தினமும் வெந்நீரில் எலுமிச்சம் பழச் சாறும் தேனும் கலந்து குடித்தார். ஜெயலலிதா நடித்த மொத்தப் படங்கள் 115. இதில் எம். ஜி. ஆருடன் நடித்தவை 28. ‘சின்னப் பயலே சின்னப் பயலே சேதி கேளடா’ என்ற ‘அரசிளங்குமரி’ படப் பாடல்தான் தனக்கு எப்போதும் பிடித்த நல்ல பாட்டு என்பார்.
அந்தப் பாடலை எழுதிய பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரத்தின் மனைவியிடம் 10 இலட்சம் ரூபா பணம் கொடுத்து, அவரது எழுத்துக்களை நாட்டுடைமை ஆக்கியவர் ஜெயலலிதா.
‘அரசியலில் நான் என்றுமே குதிக்க மாட்டேன்’ என்று முன்பு ஒருமுறை பேட்டி கொடுத்தவர் ஜெயலலிதா. ‘நாடு போகிற போக்கைப் பார்த்தால், ஜெயலலிதாகூட முதலமைச்சர் ஆகிவிடுவார்போல’ என்று அவர் நடிக்க வந்த காலத்தில் பேட்டியளித்தார் முரசொலி மாறன்.
ஜெயலலிதா முதலில் குடியிருந்தது சென்னை தியாகராயர் நகர் சிவஞானம் தெருவில். பிறகு, அடையாறு பகுதியில் குடி இருந்தார். படங்கள் குவிந்து நடிப்பில் கொடிகட்டிய காலத்தில்தான், போயஸ் கார்டன் வீடு கட்டப்பட்டது. அதன் ஒவ்வொரு செங்கல்லையும் பார்த்துக் கட்டியவர் அவரது அம்மா சந்தியா.
‘வீட்டுக்குள்ளே என்ன மாற்றமும் செய்யலாம், ஆனா, எங்க அம்மா வைத்த வாசலை மட்டும் மாற்றக் கூடாது’ என்று அப்போது சொன்னவர் ஜெயலலிதா. எப்போதும் அம்மா செல்லம்தான். அவருக்கு இரண்டு வயது இருக்கும்போதே அப்பா இறந்துபோனதால் அந்த நினைவுகள் இல்லை.