Tuesday, October 30, 2018

விஜயகுமாரியின் நடிப்பைப் பாராட்டி பரிசு வழங்கியவர் பானுமதி



விஜயகுமாரி நடித்த "சாரதா'' படத்தைப் பார்த்த பானுமதி அவர் நடிப்பைப் பாராட்டி பரிசு வழங்கினார்.

விஜயகுமாரி நடித்த சிறந்த படங்களில் ஒன்று "பொலிஸ்காரன் மகள்.'' இது எஸ்.வி.சகஸ்ரநாமம் நடத்தி வந்த நாடகம். அது, ஸ்ரீதர் டைரக்ஷனில் திரைப்படமாகியது. ஸ்ரீதர் டைரக்ஷனில் விஜயகுமாரி நடித்த இரண்டாவது படம் இது.

பொலிஸ்காரராக எஸ்.வி.சகஸ்ரநாமமும் அவர் மகளாக விஜயகுமாரியும் நடித்தனர். விஜயகுமாரியை ஏமாற்றி விடும் இளைஞனாக பாலாஜி நடித்தார்.

இந்தப் படத்தில் ஒரு கட்டத்தில் சகஸ்ரநாமம் தன் இடுப்பிலிருந்த `பெல்ட்'டைக் கழற்றி, விஜயகுமாரியை அடித்து விளாசுவார். பார்த்தவர்கள் திகைத்து உறைந்துபோய் விடும் அளவுக்கு, அக்காட்சி தத்ரூபமாக அமைந்திருந்தது.

இதில் இடம் பெற்ற "கண்ணிலே நீர் எதற்கு? காலம் எல்லாம் அழுவதற்கு!'' என்ற பாடல் பெரிய ஹிட்டாகியது.

ஸ்ரீதர் டைரக்ஷனில் "கொடி மலர்'' என்ற படத்திலும் விஜயகுமாரி நடித்தார். இதில் அவருக்கு ஊமைப்பெண் வேடம். அவருக்கு ஜோடி முத்துராமன் மற்றும் ஏவி.எம்.ராஜன், புஷ்பலதா, நாகேஷ் ஆகியோரும் நடித்தனர்.

இந்த படத்தில் நடிக்கும் போது தனக்கு ஏற்பட்ட ஒரு சுவையான அனுபவம் பற்றி விஜயகுமாரி கூறிய கருத்து:

"கொடிமலர்'' படப்பிடிப்பின்போது ஸ்ரீதர் என்னிடம் "நான் புதுமுகங்களைப் போட்டு ஒரு படம் எடுக்கலாம் என்று இருக்கிறேன். அதற்காக 2 பெண்களை மேக்கப் டெஸ்ட் எடுத்து இருக்கிறேன். இந்த 2 பேரில் ஒரு பெண்ணை போடலாம் என்று நாங்கள் நினைத்து இருக்கிறோம். நீ அந்தப் பெண்களின் படத்தைப் பார்த்து உன் அபிப்பிராயத்தை சொல்'' என்று கூறினார்.

மேக்கப் டெஸ்ட் எடுத்த 2 படங்களையும் போட்டு காட்டினார்கள். அதில் ஒரு பெண் மிகவும் ஒல்லியாக இருந்தார். கைகள் நீளமாக குச்சி குச்சியாக இருந்தன.

மற்றொரு பெண் அளவான உடம்போடு இருந்தார். முகம் பார்க்க அழகாக இருந்தது.

நான் இரண்டாவதாக நினைத்தப் பெண்ணை குறிப்பிட்டு "இந்தப் பெண் நன்றாக இருக்கிறாள்'' என்று சொன்னேன்.

"நாங்களும் அந்தப் பெண்ணைத்தான் தேர்வு செய்து வைத்திருக்கிறோம்'' என்று டைரக்டர் ஸ்ரீதர் கூறி, "இந்தப் பெண் யார் தெரியுமா? சந்தியா அம்மாவுடைய பெண்'' என்று சொன்னார். ஆம்; ஜெயலலிதாதான் அவர்.

மற்றொரு பெண் ஒல்லியாக குச்சிபோல் இருந்தார் என்று சொன்னேன் அல்லவா? பிற்காலத்தில் வடநாட்டில் கனவு கன்னியாக கொடிகட்டிப் பறந்த ஹேமமாலினிதான் அவர்!

ஸ்ரீதரின் "வெண்ணிறஆடை'' படத்தின் மூலமாக கதாநாயகியாக அறிமுகமான ஜெயலலிதா குறுகிய காலத்தில் நிறைய படங்களில் கதாநாயகியாக நடித்தார். பிற மொழிப் படங்களிலும் அவரே வசனம் பேசி நடித்தார். நானும் பல படங்களில் அவருடன் நடித்திருக்கிறேன்.

முக்தா பிலிம்சின் "சூரியகாந்தி'' படம் ஜெயலலிதாவின் 100-வது படம். அந்தப் படத்தின் விழா கலைஞர் கருணாநிதி தலைமையில் நடந்தது. அந்த விழாவிற்கு சந்தியா அம்மா என் வீட்டிற்கு வந்து, என்னை அழைத்திருந்தார். நானும் அந்த விழாவிற்கு போனேன். விழாவில் என்னை ஜெயலலிதாவுக்கு மலர் கிரீடம் வைத்து வாழ்த்தி பேசச் சொன்னார்.

நான் பேசினேன். "ஜெயலலிதா சினிமா துறைக்கு வருவதற்கு முன்பே நான் அவரைப் பார்த்து இருக்கிறேன். அமைதியாக இருப்பார். அப்படிப்பட்டவர் இன்று 100 படங்கள் நடித்து கலைஞர் தலைமையில் விழா நடந்து கொண்டிருக்கிறது. அவர் இந்த 100 படங்களில் மட்டுமல்லாமல் இன்னும் பல 100 படங்களில் நடித்து விழா காணவேண்டும். அது மட்டும் இல்லை. வரும் காலத்தில் இவர் ஒரு இந்திரா காந்தி மாதிரி வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை'' என்று பேசினேன். நான் பேசும்போது அரசியலுக்கும் அவருக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அதற்காக நான் பேசியதால்தான் அவர் அரசியலுக்கு வந்தார் என்று யாரும் நினைத்துவிட வேண்டாம்!

கே.எஸ்.கோபாலகிருஷ்ணனின் சொந்தப்படம் "தெய்வத்தின் தெய்வம்.'' இந்தப் படத்தின் கதை - வசனம் - டைரக்ஷன் எல்லாம் அவர்தான். இந்தப் படத்தில் நான் எஸ்.எஸ்.ஆருக்கு ஜோடி. சந்தியாம்மா, மணிமாலா, ரங்காராவ், எஸ்.வி.ராஜம்மா எல்லோரும் நடித்தோம்.

இந்தப் படத்தின் கதை, கொமெடி கலந்த குடும்பப்பாங்கான கதை. உண்மையிலேயே நாங்கள் எல்லோரும் ரசித்து ரசித்து நடித்தோம். இந்தப்படம் ஒரு வெற்றிப்படமாக அமைந்தது.

பி.எஸ்.வி. பிக்சர்ஸ் "ஆலயமணி'' டைரக்டர் கே.சங்கர் டைரக்ஷனில் உருவான படம். சிவாஜிகணேசன் - சரோஜாதேவி ஆகியோருடன் எஸ்.எஸ்.ஆர், நான், நாகையா, எம்.ஆர்.ராதா, புஷ்பலதா, எம்.வி.ராஜம்மா எல்லோரும் நடித்தோம்.

இந்தப் படத்தில் வரும் பாட்டுக்கள் எல்லாமே நன்றாக இருந்தன. இந்தப் படத்தில் நடிக்க பி.எஸ்.வீரப்பா என்னிடம் கேட்டபோது, "இந்த வேடத்தில் நடிக்க எனக்கு பிடிக்கவே இல்லை'' என்று சொன்னேன். அப்படி விருப்பமில்லாமலே நடித்த அந்தப்படம் 100 நாட்களைத் தாண்டி ஓடியது.

அந்தப் படத்தில் வரும், "தூக்கமும் கண்களைத் தழுவட்டுமே'' என்ற பாடல் அந்த சமயத்தில் எல்லோராலும் நேசிக்கப்பட்ட பாட்டு.

மேகலா பிக்சர்ஸ் படம் "காஞ்சித் தலைவன்.'' கதை - வசனம் கலைஞர். டைரக்ஷன் காசிலிங்கம்.

இந்தப் படத்தில் எம்.ஜி.ஆர், பானுமதி, எஸ்.எஸ்.ஆர், நான், எம்.ஆர்.ராதா எல்லோரும் நடித்தோம்.

இந்தப் படத்தில் எம்.ஜி.ஆருக்கு நான் தங்கையாக நடித்தேன். அவரோடு நான் நடித்த முதல் படம் இதுதான்.

இந்தப் படத்தில் பானுமதி அம்மாவும், நானும் சேர்ந்து வருவது போல் ஒரு சீன்கூட இல்லை! இதனால், படப்பிடிப்பின்போது, ஒருநாள்கூட பானுமதி அம்மாவை பார்க்க முடியவில்லை. ஆகவே, அவரைப் பார்க்க வேண்டும் என்று நான் விரும்பினேன்.

அந்தச் சமயத்தில் "சாரதா'' படப்பிடிப்பு நிலையத்தில் எனக்கு "படித்த மனைவி'' படத்தின் சூட்டிங் நடந்து கொண்டிருந்தது. பக்கத்து செட்டில் "காஞ்சித் தலைவன்'' படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தது. அன்று என் கணவர் எஸ்.எஸ்.ஆரும், பானுமதி அம்மாவும் பங்கு கொள்ளும் காட்சியை படமாக்கிக் கொண்டு இருந்தார்கள்.

அன்று பலத்த மழை கொட்டிக் கொண்டிருந்தது. நான் ஒரு குடையைப் பிடித்துக்கொண்டு அவர்கள் இருவரும் இருக்கும் இடத்திற்குப் போனேன். அங்கு என்னை பானுமதி அம்மாவிற்கு எஸ்.எஸ்.ஆர். அறிமுகப்படுத்தி வைத்தார். என் தலையில் கையை வைத்து "நல்லா இரும்மா'' என்று பானுமதியம்மா வாழ்த்தினார். பிறகு, "நீ நடித்த படம் ஒன்றைப் பார்க்க வேண்டுமே'' என்றார்.

நான் நடித்த "சாரதா'' படத்தை அவர்களுக்குப் போட்டுக் காட்டினேன். படத்தைப்பார்த்த பானுமதி அம்மா, "நீ ரொம்ப நல்லா நடித்திருக்கிறாய்'' என்று என்னை பாராட்டினார்.

அதன் பின் வரலட்சுமி நோன்பு அன்று பானுமதி அம்மா என் வீட்டிற்கு வந்து எனக்கு காதில் போடும் ஒரு நகையை பரிசாகக் கொடுத்தார்.'' - இவ்வாறு கூறியவர் விஜயகுமாரி.

“ராஜ ராஜ சோழன்” திரைப்படத்தில் சிவாஜி கணேசனோடு நடித்தவர் ஸ்ரீசங்கர்




ஒருகாலத்தில் நாடகத் துறையிலும் சரி, சினிமாத் துறையிலும் சரி பண வசதி படைத்தவர்களாக இருவர் மட்டுமே திகழ்ந்தனர். ஒருவர் ஸ்ரீசங்கர். மற்றவர் உதயகுமார். ஸ்ரீசங்கர் வெளிநாட்டுக்கு தேயிலை ஏற்றுமதி செய்யும் ஒரு பிரபலமான கம்பனி ஒன்றின் தேயிலை பரிசோதகராக பணியாற்றி வந்தார். அந்நாளில் ஆயிரம் ரூபாய் சம்பளத்தில் பணியாற்றியவர்.  உதயகுமார்., வெளிநாட்டில் இருந்து வரும் கப்பல்களில் இருந்து பண்டங்களை இறக்குமதி செய்வதை தொழிலாகக் கொண்டவர். உதயகுமார் தான் அணியும் ஆடைகளில் அதிக கவனம் செலுத்துவார். இந்த இருவரும் கலைத்தாகம் நிரம்பிய நல்ல கலைஞர்கள். மஞ்சள் குங்குமம் ஸ்ரீசங்கரின் கடும் முயற்சியால் 1968ம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஆரம்பிக்கப்பட்ட திரைப்படமாகும். இத்திரைப்படத் தயாரிப்புக்கு ஸ்ரீசங்கருக்கு ஆரம்பம் முதல் இறுதிவரை பெருந்துணையாக நின்றவர் கிங்ஸ்லி எஸ். செல்லையா என்ற புகைப்படக் கலைஞராவார். கிங்ஸ்லி எஸ். செல்லையா கொழும்பு கிங்ஸ்லி தியேட்டரில் ஒபரேட்டராக பணிபுரிந்தவர்.

அகில இலங்கை ரீதியாக நாடக மேடைகளில் பெரும் வெற்றி பெற்ற “மஞ்சள் குங்குமம்” நாடகத்தை திரைப்படமாக்க முடிவு செய்யப்பட்டது.

மஞ்சள் குங்குமம்” திரைப்படத்தை இயக்கும் பொறுப்பு கிங்ஸ்லி எஸ். செல்லையாவின் நண்பரான நடிகர் எம். வி. பாலனிடம் ஒப்படைக்கப்பட்டது. நடிகர் எம். வி. பாலன் சிங்கள சினிமாவில் தனித்துவமான சிறந்த ஹாஸ்ய நடிகர். டாக்சி டிரைவர் நிர்மலா தமிழ் திரைப்படங்களில் நடித்தவர்.
தன்னிடம் ஓப்படைக்கப்பட்ட ‘இயக்குனர்’ பதவியின் பெறுமதியையும் தனது அதிர்ஷ்டத்தையும் உணராமல் அதனை ஹாஸ்யமாகவும் விளையாட்டாகவும் குரங்குக் கை பூமாலையாக அவர் எடுத்துக் கொண்டது துரதிர்ஷ்டவசமானது. அடிக்கடி கதையை மாற்றியமைத்தார். படத்தின் ஹாஸ்ய கதாபாத்திரத்தை தானே ஏற்று நடித்த இயக்குனர் எம். வீ. பாலன் படத்தின் உச்சக் கட்டத்தில் தனது கதாபாத்திரத்தை மாற்றியமைக்கவும் செய்தார். தானே படத்தில் ‘ஹீரோ’ ஆகியதாலும் படத்தின் தயாரிப்பு செலவு அதிகரித்தது.
நடிகர் ஸ்ரீசங்கர் படத்தை முடிக்க முடியாமல் திணறிய போது,  கிங்ஸ்லி எஸ். செல்லையாவின் நண்பரான கடுகண்ணாவையில் வசித்த எம். பதுர்தீன், கொழும்பு அம்பாள் கபே உரிமையாளர் ஜீ. நாராயணசாமி, சுந்தரம் ஐயர் போன்றோர் கிங்ஸ்லி எஸ். செல்லையாவின் கடும் முயற்சியினால், இணைத் தயாரிப்பாளர்களானார்கள். நீண்ட நாள் தயாரிப்புக்குப் பின்னர் அளவுக்கதிகமான செலவுகளுடன் காதுக்கினிய எட்டு பாடல்களைக் கொண்ட நல்லதொரு திரைப்படமாக ஆனால் குற்றுயிராகத் திரைக்கு வந்தது.
இக்காலக் கட்டத்தில் ஸ்ரீசங்கர் இந்தியாவில் தயாரான “ராஜ ராஜ சோழன்” திரைப்படத்தில் சிவாஜி கணேசனோடு ஈழத்துப் புலவராக நடித்தார்.




 ஸ்ரீசங்கர் நம்மை விட்டுப் பிரிந்து பல வருடங்களாகி இருந்தன.
கலைஞர் ஸ்ரீசங்கரின் 38வது நினைவு தினம் கடந்த 28ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாலை 5.30 மணிக்கு கொழும்பு புறக்கோட்டையில் உள்ள பழைய நகர சபை மண்டபத்தில் நடைபெற்றது. 38 ஆண்டுகளாக இவரது நினைவு தின நிகழ்வை வருடாந்தம் தவறாது நடத்திவருகின்ற ஸ்ரீசங்கர் நற்பணி மன்றத்தின் தலைவர் வீ.சண்முகராஜா இந்நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தார். அன்றைய தினம் பாடசாலை மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்களும் வழங்கப்பட்டன. எழுத்தாளர் ஏ.எஸ்.எம்.நவாஸ் நிகழ்வை தொகுத்து வழங்கினார். ஊடகவியலாளர் கே. ஈஸ்வரலிங்கமும் இங்கு கலைஞர் ஸ்ரீசங்கரைப் பற்றி உரையாற்றினார்.

Sunday, October 7, 2018

25 வயது நிக்குக்கும்.. 36 வயது பிரியங்காவுக்கும் கல்யாணம்

ந்திய திருமணங்களில் பொதுவாக பெண்ணைவிட ஆணுக்கு வயது சற்று அதிகமிருக்கும். சினிமா நட்சத்திரங்களின் நிஜ திருமணங்களில் பெண்ணைவிட ஆணுக்கு வயது ரொம்ப அதிகமாக இருக்கும். அந்த பழைய வழக்கங்களை எல்லாம் முறியடிக்கும் முதல் அடியை எடுத்துவைத்திருக்கிறார், பிரியங்கா சோப்ரா. முன்னாள் உலக அழகியும், பிரபல நடிகையுமான இவர், அமெரிக்க தொடரிலும் நடித்து புகழ் பெற்றவர். இவரது வாழ்க்கையில் இணையப் போகிற வரும் அமெரிக்க இளைஞர்தான். அவருக்கு வயது 25. பெயர் நிக் ஜோனஸ். பிரியங்கா சோப்ரா இப்போது முதிர்கன்னி வரிசையில் இருக்கிறார், வயது 36.

‘தன்னைவிட 11 வயது சின்னவராக இருந்தாலும், பாசம் அதிகம் கொண்டவர் நிக்’ என்று பிரியங்கா காதல் புகழ் பாடுகிறார். இவர்கள் காதல் ஒரு வருடத்திற்கும் மேலாக தொடர்ந்து கொண்டிருக்கிறது. கடந்த ஆண்டு நியூயார்க்கில் நடந்த ‘மெட்கலா’ என்ற ஷோவில் இருவரும் கைகோர்த்துக்கொண்டு பங்குபெற்றார்கள். பலரது பார்வையும் அவர்களை ேநாக்கித் திரும்ப, “எங்கள் இரு வருக்கும் ரால்ப் லோரல் என்ற ஒரே டிசைனர், உடை வடிவமைத்திருந்தார். அதனால்தான் நாங்கள் இருவரும் ஒன்றாக கைகோர்த்து வந்தால் நன்றாக இருக்கும் என்று தோன்றியது. ஒன்றாக வந்ததற்கு அதை தவிர வேறு எந்த காரணமும் இல்லை” என்று பிரியங்கா விளக்கமளித்தார்.

அடுத்து சில மாதங்கள் கழித்து காதல் வானில் சிற கடித்துக்கொண்டிருந்தபோது நிக்கிடம், பிரியங்காவுடனான காதல் பற்றி கேட்டபோது, “ஒரு நண்பர் வழியாக நாங்கள் இருவரும் அறிமுகமானோம். எங்கள் நட்பு தொடர்ந்து கொண்டிருக்கிறது” என்றார். இனி இதுபோன்ற கேள்விகளுக்கு இடமில்லை. ஏனென்றால் 25-க்கும் 36-க்கும் திருமண நிச்சயதார்த்தம் நடந்துவிட்டது. அடுத்து திருமணம்தான். அதற்கான வேலைகளும் தொடங்கிவிட்டன. ‘முறைப்படி நீங்கள் வந்து பெண் கேட்கவேண்டும்’ என்று யாரோ சொல்லியிருப்பார்கள் போல் தெரிகிறது. அதற்கும் சரி சொல்லிவிட்ட நிக்கின் பெற்றோர், விரைவில் மும்பை வந்து பிரியங்காவின் பெற்றோரிடம் பேச இருக்கிறார்களாம்.

வயது குறைந்தவரை அதிரடியாக திருமணம் செய்வதுபோல் பிரியங்கா சோப்ராவின் வாழ்க்கையும் அதிரடி நிறைந்தவைதான். ஏரோநாட்டிக்கல் என்ஜினீயரிங் படித்துவிட்டு பைலட் ஆகவேண்டும் என்ற ஆசையில் இருந்த அவரை, திடீரென்று மாடலிங் உலகம் ஈர்த்தது. 18 வயதில் 2000-ம் ஆண்டு லண்டனில் நடந்த உலக அழகிப் ேபாட்டியில் இந்தியா சார்பில் பங்கேற்று, வெற்றியும் பெற்றார். அதன் மூலம் பிரியங்கா, இ்ந்தியாவில் உலக அழகிப் பட்டத்தை வென்ற ஐந்தாவது பெண் என்ற பெருமையையும் பெற்றார். அதன் பின்பு அவரை திரை உலகம் இருகரம் கூப்பி வரவேற்றது. நடிகர் விஜய்யுடன் ‘தமிழன்’ சினிமாவில் நடித்தார். இந்தியில் கொடிகட்டி பறந்தார். பேஷன் என்ற படத்தில் நடித்ததற்காக தேசிய விருது பெற்றார். அடுத்து பத்மஸ்ரீ, தாதா சாகேப் பால்கே விருது என்று புகழ் பட்டியல் நீண்டது.

அமெரிக்க டெலிவிஷன் தொடரான குவாண்டிகோ அவரை சர்வதேச பிரபலமாக்கியது. அடுத்து ஹாலிவுட் படங்களிலும் நடித்தார். இவரது தாயும், தந்தையும் ராணுவத்தில் டாக்டர்களாக பணியாற்றியவர்கள். அதனால் சிறுவயதிலே பல்வேறு நாடுகளில் இவர் வசிக்கும் சூழ்நிலை ஏற்பட்டது. 13 வயதில் அமெரிக்காவில் பள்ளிப் படிப்பை தொடர்ந்து கொண்டிருந்தபோது இவரது உடல் அமைப்பை குறிப்பிட்டு பலர் கேலி செய்திருக்கிறார்கள். குறிப்பாக அவரது காலில் இருந்த தழும்புகளை பார்த்துவிட்டு கிண்டலடித் திருக்கிறார்கள். அதே உடலை பின்பு உலகப் புகழ்பெற்ற பிராண்டுகள் தங்கள் விளம்பரத்திற்கு பயன்படுத்த முன்வந்தன. பிரியங்கா 12 சர்வதேச பிராண்டுகளின் விளம்பரத்தில் பங்கேற்று, கோடிகளை சம்பாதித்தார்.

புகழின் உச்சியில் இருக்கும் அவரிடம், ‘உங்கள் வாழ்க்கை அதிரடியானதாக இருக்கிறது. உங்கள் வாழ்க்கை வரலாற்றை எழுதினால் அந்த புத்தகத்திற்கு என்ன பெயர் சூட்டுவீர்கள்?’ என்று கேட்டபோது, அவர் அளித்த பதில், “அபூர்வம்”.

ம்.. உண்மைதான்.. பிரியங்கா சோப்ரா அபூர்வமானவர்தான்!

'உன்ன நெனச்சேன் பாட்டு படிச்சேன்'




"அபூர்வ சகோதரர்கள் படத்திற்கு பாடல் வரிகள் எழுதும்போது கமல், காதல் தோல்வியை மையப்படுத்தி ஒரு பாட்டு எழுதுங்கள் என்று வாலியிடம் சொல்லியிருக்கிறார். அவரும் சுமார் 5 பாடல்களை கமலுக்கு எழுதி கொடுத்துள்ளார். ஆனால் கமல் திருப்திபடவில்லை. பின்னர் இறுதியாக 6வதாக ஒரு பாட்டை எழுதி கமலிடம் கொடுத்து, இதுக்கு மேல் என்னால் பாடல் எழுத முடியாது என்று சொல்லியுள்ளார். அந்தப்பாடல் தான் 'உன்ன நெனச்சேன் பாட்டு படிச்சேன்' என்ற பாடல்... அந்தப்பாடல் தான் தேசிய விருது பெற்றது." அதேபோல, மன்னன்' படத்துக்காக வாலி எழுதிய, ‘அம்மா என்றழைக்காத உயிரில்லையே...' பாடலின் வரிகள், தாய்மையின் மேன்மையை உணர்த்துகிறது என்று பாராட்டி, திருச்சியிலுள்ள ஐயப்பன் கோவிலில் அந்தப் பாடல் வரிகள் கல்வெட்டாக வைக்கப்பட்டுள்ளது. வேறெந்த கவிஞருக்கும் கிடைக்காத மணிமகுடம்.



15, 000-க்கு மேல் பாடல்களை எழுதி இருக்கிறார் வாலி. இது இல்லாமல் தனிப்பாடல்கள் வேறு. 17 திரைப்படங்களுக்கு திரைக்கதை வசனம் எழுதியிருக்கிறார். அத்துடன் `பொய்க்கால் குதிரை, `சத்யா', `பாத்தாலே பரசவம்', `ஹே ராம்', என நான்கு படங்களில் நடித்தும் இருக்கிறார் வாலி!. இருபதுக்கும் மேற்பட்ட புத்தகங்களை கவிஞர் வாலி எழுதி இருக்கிறார். அவற்றுள் ‘அவதார புருஷன்', ‘பாண்டவர் பூமி', ‘ராமானுஜ காவியம்', ‘கிருஷ்ண விஜயம்' ஆகியவை குறிப்பிடத்தக்கவை. வாலி பத்மஸ்ரீ விருது, 5 முறை சிறந்த திரைப்பட பாடலாசிரியருக்கான தமிழக அரசின் விருதை பெற்று இருக்கிறார்.

Thursday, October 4, 2018

"பொன்மணி" தயாரிப்பாளர் ராஜசிங்கம்



1976ஆம் ஆண்டு. இலங்கையில் ஒரு தமிழ் இளைஞரிடம் சிறு தொகைப்பணம் இருந்தது. மூன்று இலட்சம் ரூபா அளவு பணம் அது. அந்த இளைஞர் கொழும்பில் ஒரு ஹோட்டல் கட்டலாமா என்று எண்ணிக்கொண்டிருந்தார். இவருக்கு ஒரு மைத்துனர் இருந்தார். அவர் புகழ்பெற்ற எழுத்தாளர், வானெலி அறிவிப்பாளர், பெயர் பெற்ற விளம்பர நிர்வாகி, இவருக்கும் தமிழ்ப் படம் தயாரிக்க வேண்டுமென்று நீண்ட நாள் ஆசை.

இளைஞரும் மைத்துனரும் ஒருநாள் சந்தித்துக்கொண்டார்கள். மைத்துனர் ஒரு தமிழ்ப்படம் தயாரிக்கலாம் என்று ‘ஐடியா’ கொடுத்தார். இளைஞருக்கும் ஆசை வந்துவிட்டது. சர்வதேசத் தரத்துக்கு ஒரு தமிழ்ப் படம் தயாரித்தால் அதை வெளிநாடுகளுக்கு விற்றே அதிக பணமும் புகழும் பெறலாம் என்று ஆசைப்பட்டார் இளைஞர்.

ஒரு தரமான தமிழ்ப்படம் தயாரிக்க வேண்டும் என்ற முடிவுக்கு இருவரும் வந்தார்கள். அந்த இளைஞரின் பெயர்தான் காவலூர் ராஜதுரை. அவர்கள் இருவரும் தயாரித்த படத்தின் பெயர்தான் ‘பொன்மணி’

‘பொன்மணி’ இலங்கையில் அதிக தினங்கள் ஓடாவிட்டாலும் அதீத பெயர் பெற்ற படம்.

இலங்கை ரூபாவாஹினியில்முதன் முதலில் காட்டப்பட்ட இலங்கைத் தமிழ்ப்படம் ‘பொன்மணி’ . 9.5.84இல் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பப்பட்டது.

அப்பொழுது வெளிவந்து கொண்டிருந்த ‘சிந்தாமணி’யில் ‘சஞ்சயன்’ பின்வருமாறு எழுதினார். ‘இலங்கைப் படமான’ பொன்மணியைப் பார்க்கும் வாய்ப்பு 21.3.85 இல் ரூபவாஹினி ரசிகர்களுக்குக் கிடைத்தது. இலங்கைப் படந்தானே என்று முன்பு சலித்துக்கொண்டவர்கள் கூட, பின்பு ‘பரவாயில்லை படம் நன்றாகவே இருக்கிறது’ என்று கூறக்கேட்டபோது ஈழத்துத் தமிழ் ரசிகர்களின் ரசனையில் எவ்வளவோ முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதை உணரமுடிகிறது. இப்படம் பல வருடங்களுக்கு முன் இலங்கையில் தயாரிக்கப்பட்டது. வெளிப்புறக் காட்சிகள் யாழ்ப்பாணத்தில் எடுக்கப்பட்டன. தென்னிந்தியப் படங்களின் ஆக்கிரமிப்பில் சிக்கியிருந்த கால கட்டத்தில் இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட துணிகர முயற்சி தொழில் நுட்பத் துறையில் முன்னேறியிருந்த தமிழ்நாட்டுப் படங்களின் முன்னே அன்று ‘பொன்மணி’ எடுபடவில்லை.

தமிழ்நாட்டுப் பாரதிராஜா, பாக்கியராஜாக்கள் தரும் இப்போதைய பாணியை என்றோ ‘பொன்மணி’ மூலம் தந்துவிட்டார் ஈழத்துப் பத்திராஜா…. தமிழகத்திலிருந்து புதுமைப் படைப்புகள் என்று இங்கு வரும் திரைப்படங்களைப் பார்க்கும்பொழுது இப்படங்களுக்கெல்லாம் முன்னோடி ‘பொன்மணி’ என்றே சொல்லவேண்டும்.

….அலைகள் ஓய்வதில்லை படத்தில் ஜாதி, மதம் இரண்டையுமே காதலுக்காக அறுத்தெறிந்து வெற்றிபெறும் இளம் ஜோடியைக் கண்டோம். ‘பொன்மணி’யிலோ ஜாதி, மத வெறிக்குப் பொன்மணி பலியாவதன் மூலம் ஜாதி, மத வெறியர்கள் வெற்றிபெறுவதைக் கண்டோம்…’

இவ்வாறு ‘பொன்மணி’யின் மையக் கருத்து அமைந்திருந்தது. எது எப்படியாயினும் இப்படியான புதுமைப்படைப்பு உருவாகக் காரணமாயிருந்த காவலூர் ராஜதுரையும் முத்தையா ராஜசிங்கமும் பாராட்டுக்குரியவர்களே.



பழக்க வழக்கங்களில் உள்ள குறைபாடுகளே புற்று நோய்க்கு காரணம்

நமது
பழக்க வழக்கங்களில் உள்ள குறைபாடுகளே புற்று நோய்க்கு முக்கிய காரணம் என நடிகை கௌதமி தொிவித்துள்ளார்.

புற்றுநோயில் இருந்து மீண்டு வந்த நடிகை கௌதமி அந்நோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் உரையாற்றி வருகிறார்.



விருதுநகரில் உள்ள வன்னியப்பெருமாள் மகளிர் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசும்போது அவர் இவ்வாறு கூறினார். இங்கு அவர் மேலும் கூறியதாவது:


நமது பழக்க வழக்கங்களில் உள்ள குறைபாடுகளே புற்று நோய்க்கு முக்கிய காரணம். வெள்ளையாக காணப்படும் அனைத்து பொருட்களும் சுத்தமானவை அல்ல. வெண்மைக்காக பல இரசாயனங்கள் சேர்க்கப்படுகின்றன. வெள்ளை சீனி, வெள்ளை உப்பு, மைதா போன்ற உணவு களை தவிர்ப்பது நல்லது. புகைப் பிடித்தல், மது, பிளாஸ்டிக் போத்தலில் உள்ள தண்ணீரைக் குடித்தல் போன்றவற்றை தவிர்க்க வேண்டும். புற்றுநோயை தொடக்கத்திலேயே கண்டறிந்தால், சிகிச்சை மூலம் குணமாக்க முடியும். அதற்கு நானே நேரடி சாட்சி. வெள்ளை சீனி, வெள்ளை உப்பு போன்றவை புற்றுநோயை உண்டாக்கும் வாய்ப்பு உள்ளது. இவற்றை ரேஷன் கடைகளில் விற்கக் கூடாது. நாட்டுச் சர்க்கரை, பனை வெல்லம், கருப்பட்டி, கடல் உப்பு போன்றவற்றை அரச வழங்க வேண்டும் என்றார்

ஜனனி ஐயர்



பல தமிழ் விளம்பரங்களில் நடித்துள்ள ஜனனி ஐயர், அவன் இவன் திரைப்படத்தின் மூலம் நன்கறியப்படுகிறார். ஜனனி ஐயர் சென்னையில் ஓர் தமிழ்க் குடும்பத்தில் பிறந்தவர்.
இவரை அடுத்த ஓவியா என்று பலரும் அழைக்கின்றனர். விஷால் மற்றும் ஆர்யா நடிப்பில் வந்த அவன் இவன் படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். ஆனால் இப்படத்திற்கு முன்னதாக திரு திரு துரு துரு படத்தில் நடித்துள்ளார். மேலும், சிம்பு நடிப்பில் வந்த விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில் சிறப்புத் தோற்றத்திலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்து தமிழ் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் பல படங்களில் நடித்துள்ளார். தற்போது தொலைக்காட்சி படத்தில் விறுவிறுப்பாக நடித்து வருகிறார்.

கொட்டாச்சியின் மகள் மானஸ்வி



ஓங்குடா... ஓங்குடா... ஓங்குடா.. ஓங்கிப்பாரேன் ஓங்குவானாமே சொட்ட... சொருகிடுவேன்', 'இமைக்கா நொடிகள்' படத்தில் பொலிஸ் கெரக்டரை பார்த்து வெறித்தனமாக இப்படி டயலொக் பேசி தெறிக்கவிட்ட குழந்தை நட்சத்திரம் மானஸ்வி, தமிழ் சினிமாவிற்கு கிடைத்த குட்டி ஹீரோயின். இந்த படத்தில் நயன்தாராவின் மகளாக நடித்துள்ள இவர் வேறு யாருமில்லை. கொமெடி நடிகர் கொட்டாச்சியின் மகள் தான். 'ஜூனியர் நயன்தாரா' என்ற பட்டத்துடன் அடுத்தடுத்த படங்களில் 'ஓவர் பிசி'யாக இருந்த 6 வயது மானஸ்வியை பேட்டிக்காக 'ஓவர் டேக்' செய்து பேசினோம்...

* 'இமைக்கா நொடிகள்'ல் நடித்தது ?

எனக்கு இது தான் முதல் படம். ரொம்ப 'ஹெப்பியா' இருக்கு. இயக்குனர் அஜய் ஞானமுத்து சொக்லேட், பிஸ்கட்ஸ் எல்லாம் வாங்கி கொடுத்தாரு.

* நயன்தாரா என்ன சொன்னாங்க ?

ஷூட்டிங் ஸ்பாட்டில் நயன்தாராவை பார்த்ததும் 'ராஜா ராணி' படத்தில் அவங்க பேசின டயலொக் பேசி காட்டினேன், அப்படியே என்னை துாக்கி 'கிஸ்' பண்ணிட்டாங்க. நடிக்கும் போது 'நல்லா நடிச்சிருக்கடி, ஐ லவ் யூ பேபி'ன்னு சொன்னாங்க.

* 'ஐ லவ் யூ மட்டும்' தானா ?

இல்லை, ஒரு 'ஷொட்' நடிச்சு முடிச்சதும் 'உனக்கு என்ன வேணும்'னு கேட்டாங்க, 'லிப்ஸ்டிக்' வேணும்னு கேட்டேன். உடனே ஆள் அனுப்பி வாங்கிட்டு வரச்சொல்லி கொடுத்தாங்க.


* படத்தில் கோவக்கார மானஸ்வி... நிஜத்தில் ?
எனக்கு கோபமே வராது. படத்துக்காக கொஞ்சம் கொஞ்சம் கோபம் வர வைச்சிருக்குறேன்.

* இப்பெல்லாம் ஓவர் பிசியாமே?

ஆமா... 'சதுரங்க வேட்டை 2' அரவிந்த்சாமிக்கு, 'பரமபத விளையாட்டு' திரிஷாவுக்கு, 'இருட்டு' சுந்தர்.சிக்கு, 'சுட்டுப்பிடிக்க உத்தரவு' விக்ராந்துக்கு மகளா நடிக்கிறேன். 'கும்கி 2'ல் சின்ன வயசு ஹீரோயினா வரேன். 'கண்மணி பாப்பா' படத்தில் ஹீரோயின் சௌமியாவுக்கு பொண்ணா நடிச்சிருக்கேன்.

* 'கும்கி 2' யானையை பார்த்து பயம் ?
முதல்ல பயம் இருந்தது. அப்புறம் கும்கியும் நானும் பிரண்டாயிட்டோம்.
* உங்க இலட்சியம் என்ன ?

பெரிய ஹீரோயினாகி நிறைய படங்களில் நடிக்கணும். அப்பா கொட்டாச்சி, அம்மா அஞ்சலி என் நடிப்பை பார்த்து ரசிக்கணும்.

இந்த குறும்புக்கார குட்டி நடிகையின் தந்தை கொட்டாச்சியிடம் சில கேள்விகள்...

* மானஸ்விக்கு நடிப்பு எப்படி ?

சின்ன வயசிலயே 'ரோலிங், கெமரா, அக்ஷன்'னு சொல்லி தான் அவளுக்கு சாப்பாடு ஊட்டுவேன். சினிமா டயலொக் பேச சொல்லி நடிக்க வைச்சு வீடியோ எடுத்து பேஸ்புக்கில் பதிவிடுவேன். அதை பார்த்த சினிமா மெனேஜர் கணேஷ் எங்களை 'இமைக்கா நொடிகள்' இயக்குனரிடம் அறிமுகம் செய்தார். பாப்பா 'சொட்ட சொருகிடுவேன்' டயலொக் பேசினதும் இயக்குனர் ஓ.கே., சொல்லிட்டார்.

* பிரபலங்களின் பாராட்டு ?

ஒரு நாள் நயன்தாரா எனக்கு போன் பண்ணி பாராட்டினாங்க, பாப்பாக்கிட்ட பேசினாங்க. என் வாழ்க்கையிலயே முதன் முதலில் எனக்கு போன் பண்ணின ஒரே ஹீரோயினும் இவங்க தான். நிறைய பேருக்கு பாப்பா என் பொண்ணுதான்னு தெரியலை. ஆனால் இயக்குனர்கள் பலர் பாராட்டினர்.

* உங்க நடிப்புக்கு இடைவெளி ஏன் ?

பெரியளவில் வாய்ப்பு கிடைக்கலை. தாய்லாந்தில் 'கும்கி 2' ஷூட்டிங் நடந்தப்போ பிரபுசாலமனிடம் 'எனக்கும் சின்ன கெரக்டர் கொடுங்க'ன்னு கேட்டேன். உன் பொண்ணுக்காக நடிக்க வைக்குறேன்னு, எனக்கு சுப்பர் கெரக்டர் கொடுத்திருக்கார். ரொம்ப நாளைக்கு அப்புறம் என் பொண்ணால் வாய்ப்பு கிடைச்சிருக்கு. அதுவும் என் பொண்ணு கூடவே நடிப்பதால் குஷியா இருக்கேன்.

தல தங்கமானவர், கடவுள் மாதிரி: சொல்வது 'மெர்சல்' சிட்டுக்குருவி



அஜித் கடவுள் மாதிரி என்று மெர்சல் படத்தில் சிட்டுக்குருவியாக நடித்த பாட்டி தெரிவித்துள்ளார்.


விஜய்யின் மெர்சல் படத்தில் சிட்டுக்குருவியாக நடித்து பிரபலமானவர் சீனியம்மா. அவர் தற்போது சிவா இயக்கத்தில் அஜித் நடித்து வரும் விஸ்வாசத்தில் நடித்துள்ளார்.

அஜித்துடன் நடித்துள்ள சிட்டுக்குருவி அவர் கடவுள் மாதிரி என்று கூறியுள்ள வீடியோ வெளியாகி வைரலாகியுள்ளது. அந்த வீடியோவில் சிட்டுக்குருவி கூறியிருப்பதாவது,
தல ஒரு கடவுள் மாதிரி. மக்களுடன் தான் இருப்பார். எங்களுடன் தான் பேசுவார். எங்களுடன் தான் சாப்பிடுவார். கடவுள் என்றால் அவர் தான் கடவுள். தங்கமானவர் தல என்று தெரிவித்துள்ளார்.

விஸ்வாசம் படத்தில் நயன்தாரா, ஈஸ்வரி ராவ், தம்பி ராமையா, விவேக், ரோபோ ஷங்கர், கோவை சரளா என்று பெரிய நட்சத்திர பட்டாளமே உள்ளது. படத்தில் புதிது புதிதாக ஆட்களை சேர்த்தபடியே உள்ளார் சிவா. விஸ்வாசம் படம் குறித்து எந்தத் தகவலும் கசிந்து விடாமல் கவனமாக இருக்கிறார் சிவா. இந்நிலையில் படப்பிடிப்பு தளத்தில் இருந்து சில புகைப்படங்கள் கசிந்து படக்குழுவினரை அதிர்ச்சி அடைய வைத்தது. விஸ்வாசம் படம் பொங்கல் ஸ்பெஷலாக திரையிடப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இது இளையராஜா

மழை வருவதற்கு முன்பு மேகங்கள் காட்டும் தோரணை, பறவைகளின் முன்னேற்பாடு, வறண்ட நிலத்தின் ஏக்கம் என இயற்கையின் பல செயல்பாடுகளை கரிசனமாகக் கையாண்டவர் இளையராஜா. மழை வருது மழை வருது குடை கொண்டு வா.. மானே உன் மாராப்பிலே.. என்ற பாடலில் இறுதிவரை மழை வராது. ஆனால் மழை வரும் முன்பு இயற்கை ஆயத்தமாகும் உணர்வைக் கொடுத்திருப்பார்

இளையராஜா.

நடிகை விஜயாள் பீட்டர்



விஜயாள் பீட்டர், 1970களில் இலங்கை மக்களின் பேரபிமானத்தைப் பெற்றிருந்த ஒரு கலைஞர்.
பல மேடை நாடகங்கள்...
பல வானொலி நாடகங்கள்...
சில தொலைக்காட்சி நாடகங்கள்...
இவர் தன் நடிப்பாற்றலால் இலங்கை மக்கள் மனங்களில் தனக்கென தனியானதோர் இடத்தைப் பிடித்திருந்தார்...
தற்பொழுது தமிழகத்தில் வாழ்ந்து வருகிறார்.
#அன்று
1978 ஆம் ஆண்டு
கே.எம்.வாசகரின்"சுமதி" மேடை நாடகம் பம்பலப்பிட்டி சரஸ்வதி மண்டபத்தில் மேடையேற்றப்பட்ட வேளையில்
கே.சந்திரசேகரனுடன் நடித்தவா்.
("சுமதி" வானொலியிலும் ஒலிபரப்பானது...
தொலைக்காட்சியிலும் ஒளிபரப்பானது!)
#இன்று
2018 இந்த ஆண்டு 2018.09.23 ஒளிபரப்பான "BIG BOSS தமிழ்-2" நிகழ்ச்சியில்
உலக நாயகன் கமல் ஹாஸனுடன் காணப்படுகிறாார். .

Big Boss - K. Easwaralingam J.P


Big Boss- k. Easwaralingam