Wednesday, May 30, 2012

 

இந்தியாவில் 17 மொழிகளில் பாடி சாதனை படைத்த ஜhனகி


,ந்தியாவிலேயே திரைப்படங்களில் அதிகப் பாடல்கள் பாடிய பின்னணி பாடகி என்ற சாதனையைப் படைத்தவர் லதா மங்கேஷ்கர். ஆனால், 17 மொழிகளில் பாடிய ஒரே பாடகி என்ற சாதனைக்கு உரியவர் எஸ். ஜானகி. அவர் பாடிய பாடல்கள் எண்ணிக்கை 16 ஆயிரம்.
ஜானகி ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவர். குண்டூர் மாவட்டத்தில் உள்ள பல்லபட்லா என்ற ஊரில், 1938 ஆம் ஆண்டு ஏப்ரல் 23 ஆம் திகதி பிறந்தார்.
சிறு வயதிலேயே இசையில் ஆர்வம் ஏற்பட்டது. 1956 இல் அகில இந்திய வானொலி, பாட்டுப் போட்டி ஒன்றை நடத்தியது. அதில் கலந்துகொண்டு, இரண்டாம் பரிசு பெற்றார். அன்றைய ஜனாதிபதி டொக்டர் ராஜேந்திர பிரசாத்திடம் பரிசு பெற்றார்.
இதைத் தொடர்ந்து, ஏ. வி. எம். ஸ்டூடியோவில் ஒப்பந்த அடிப்படையில் பாடகியாக நியமிக்கப்பட்டார். தமிழில், ‘விதியின் விளையாட்டு’ என்ற படத்துக்காக அவர் முதன் முதலாக பின்னணி பாடினார். இசை அமைத்தவர் டி. சலபதிராவ்.
இதற்கு அடுத்த நாளே கண்டசாலாவுடன் சேர்ந்து ஒரு தெலுங்கு பாடலைப் பாடினார். முதல் வருடத்திலேயே, எவ்வித முயற்சியும் செய்யாமல் 6 மொழிகளில் 100 பாடல்களைப் பாடினார்.
ஜானகியின் வாழ்க்கையில், பெரும் திருப்பத்தை ஏற்படுத்திய படம் ‘கொஞ்சும் சலங்கை.’ இந்தப் படத்தில், ஜெமினி கணேசன் நாதசுர வித்துவானாகவும், சாவித்திரி அவருடைய காதலியாகவும் நடித்தார்கள். சாவித்திரி ‘சிங்காரவேலனே தேவா...’ என்ற பாட்டைப் பாட அதற்கேற்ப ஜெமினிகணேசன் நாதசுரம் வாசிப்பார்.
சாவித்திரிக்காக குரல் கொடுத்தார் ஜானகி. ஜெமினி கணேசனுக்காக நாதசுரம் வாசித்தார் காருக்குறிச்சி அருணாசலம். ஜனாகியின் பாடலும், காருகுறிச்சியின் நாதசுர இசையும் இணைந்து சர்க்கரைப் பந்தலில் தேன் மாரி பொழிந்தது போல் இருந்தது ரசிகர்களுக்கு. அந்தக் காலக்கட்டத்தில், திருமண வீடுகளில் தவறாது ஒலித்த பாடல் இது. இசைத்தட்டு விற்பனையிலும் சாதனை படைத்தது. இந்தப் பாடலைத் தொடர்ந்து, ஜானகி ரொம்பவும் ‘பிசி’யாகி விட்டார். அவர் பாடல் இடம் பெறாத படமே இல்லை என்ற நிலை ஏற்பட்டது. எல்லா பிரபல கதாநாயகிகளுக்கும் குரல் கொடுத்தார்.
ஒரே நாளில் நாலைந்து பாடல்கள் பதிவு செய்யப்பட்டன. பின்னணி பாடுவதில் ஜானகி நிகழ்த்தியுள்ள சாதனைகள் பல. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி, சிங்களம், வங்காளி, சமஸ்கிருதம், ஒரியா, குஜராத்தி, ஆங்கிலம், கொங்கினி, துளு, சவுராஷ்டிரா, ஜெர்மன், படுகா, பஞ்சாபி ஆகிய 17 மொழிகளில் சுமார் 16 ஆயிரம் பாடல்கள் பாடியிருக்கிறார்.!
அது மட்டுமல்ல, 5 வயது குழந்தையின் குரலிலும், 60 வயது கிழவியின் குரலிலும் (குரலை மாற்றி) பாடக்கூடிய ஆச்சரியமான திறமையும் அவருக்கு இருந்தது. சிறந்த பாடகிக்கான தேசிய விருதை நான்கு முறை பெற்றுள்ளார்.
அவருக்கு விருது வாங்கித் தந்த படங்களாவன :
(1) 16 வயதினிலே (தமிழ்) 1978
(2) ஓப்போல் (மலையாளம்) 1981
(3) சிதாரா (தெலுங்கு) 1985

எம். ஜி. ஆர். – சிவாஜி இருவர் மனங்களிலும் ஒரே எண்ணம்




ஒரே நேரத்தில் எம். ஜி. ஆர். படங்களுக்கும் சிவாஜி படங்களுக்கும் வசனம் எழுதிய ஒரே வசனகர்த்தா நானாகத்தான் இருக்க வேண்டும். 1962 ஆம் ஆண்டு ஒரே நாளில் நான் வசனம் எழுதிய எம். ஜி. ஆரின் ‘தாயைக் காத்த தனயன்’ படமும் சிவாஜியின் ‘படித்தால் மட்டும் போதுமா’ படமும் ரிலீஸானது.
ஒன்று தேவர் படமும் இன்னொன்று ரெங்கநாதன் பிக்சர்ஸ் படமுமாக இருந்த போதிலும், முறையே ஒன்றை எம். ஜி. ஆர். பிக்சர்ஸ¤ம், இன்னொன்றை சிவாஜி ஃபிலிம்ஸ¤ம் சென்னை நகரில் வெளியிட்டிருந்தார்கள்.
இரண்டுமே சூப்பர் வெற்றியடைந்து 100 நாட்களைத் தாண்டி ஓடிக் கொண்டிருந்தது. மவுண்ட்ரோடு ஏரியாவில் பிளாசாவில் தாயைக்காத்த தனயனும், மிட்லண்டில் படித்தால் மட்டும் போதுமாவும் ரசிகர்கள் கூட்டத்துடன் ஓடிக்கொண்டிருந்தன.
அன்று காலை எம். ஜி. ஆரின் அடுத்த படத்துக்காக வசனம் எழுதச் சென்றிருந்தபோது எம். ஜி. ஆர். என்னை அழைத்து, ‘போன படம் வெற்றியடைஞ்சதுக்கு உனக்கு எந்த பரிசும் நான் கொடுக்கலை.
இப்போ தாயைக்காத்த தனயன் பெரிய வெற்றியடைஞ்சிருக்கு, உனக்கு என்ன பரிசு வேணும்?’ என்று கேட்க, ‘அதெல்லாம் ஒண்ணும் வேண்டாம்னே, உங்க அன்பு இருந்தா போதும்’ என்றேன். ‘அப்படியா அப்போ நானே ஏதாவது பண்றேன்’ என்று சொல்லிவிட்டார்.
அன்று பிற்பகல் சிவாஜி பட ஷ¥ட்டிங் போனபோது அவர் என்னை தனியே அழைத்து, ‘ஆரூரான், இதற்கு முந்தி நீ எழுதின பாசமலர் பெரிய வெற்றியாச்சு. அதுக்கு நான் பரிசு எதுவும் தரலை. இப்போது நீ எழுதின படித்தால் மட்டும் போதுமாவும் நல்லா ஓடிக்கிட்டிருக்கு. உனக்கு என்ன பரிசு வேணும் சொல்லு.
அண்ணன் கிட்டே இருந்தா தர்ரேன். இல்லேன்னா வாங்கித் தர்ரேன்’ என்று கேட்டதும் நான் ஆடிப் போனேன். அதெப்படி அவர்கள் இருவரது மனதிலும் ஒரே மாதிரி எண்ணம் ஓடுதுன்னு ஆச்சரியப்பட்டேன். எம். ஜி. ஆருக்கு சொன்ன அதே பதிலையே இவருக்கும் சொன்னேன்.
‘அன்புதான் நிறைய இருக்கே, வேறென்ன வேணும்?’ என்றார் நான் ஒண்ணும் சொல்லவில்லை. இரண்டு நாள் கழித்து எம். ஜி. ஆர். பிக்சர்ஸ் அலுவலகத்தில் இருந்து போன் பண்ணி வரச்சொன்னாங்க.
போனபோது எம். ஜி. ஆர். இருந்தார். ஒரு பெரிய வெள்ளித் தட்டில் நான்கு மூலைகளிலும் சிறிய தங்கத் தகடுகள் பொருத்தியிருக்க, தட்டின் நடுவில் ‘எம்ஜியார் பிக்சர்ஸ் தாயைக் காத்த தனயன் வெற்றிக்கு ஆரூர்தாஸ¤க்கு அன்பளிப்பு’ என்று பொறிக்கப்பட்டிருந்த அந்த தட்டை எம். ஜி. ஆர். வழங்கினார்.
மறுநாள் பிற்பகல் சிவாஜி பிலிம்ஸிலிருந்து அழைப்பு வந்தது. போனால் அங்கே சிவாஜி மூன்றரை சவரன் எடையுள்ள, உள்ளங்கையை விட அகலமான தங்கப் பதக்கம் ஒன்றை எனக்கு அணிவித்தார்.
அதில் ‘சிவாஜி பிலிம்ஸ் படித்தால் மட்டும் போதுமா 100 வது நாள் வெற்றி விழா’ என்று சிவாஜி பிலிம்ஸ் எம்ப்ளத்துடன் பொறிக்கப்பட்டிருந்தது.
அவ்விரண்டு பரிசுகளையும் என் வீட்டு வரவேற்பறை ஷோகேஸில் பக்கம் பக்கமாக வைத்திருக்கிறேன். அவற்றைப் பார்க்கும் போது அந்தப் பரிசுகளைவிட அவ்விரண்டு மேதைகளின் முகம் தான் என் கண்களில் காட்சியளிக்கும்.

நடிகர்களை பிடிக்க அதிகாலையில் வாசலில் காத்திருக்க வேண்டும்




வாகினி அதிபர் நாகிரெட்டி தயாரித்த படம் ‘எங்க வீட்டுப் பிள்ளை’ (1965) அந்தப்படத்தில் கதாநாயகியாக சரோஜாதேவி நடித்தார். சரோஜாதேவியை ஒப்பந்தம் செய்வதற்காக அவர் சரோஜாதேவியைத் தேடி வந்தது ஒரு சுவாரஸ்யமான கதை.
இதுபற்றி நடிகை சரோஜாதேவி கூறியதாவது:- ‘ஒருநாள் அதிகாலை நாங்கள் விழித்து எழுந்து வெளியில் வந்த போது, வீட்டு வாசலில் ஒரு ஹெரால்டு வந்த போது, வீட்டு வாசலில், ஒரு ஹெரால்டு கார் நின்று கொண்டு இருந்தது.
காரில் தயாரிப்பாளர் நாகிரெட்டி இருந்தார். அவரைப் பார்த்ததும் எனது அம்மா அதிர்ச்சி அடைந்து, ‘நீங்கள் இப்படி செய்யலாமா? வந்த உடனே அழைப்பு மணியை அடித்து இருக்கலாமே’ என்று கூறினார்.
அதற்கு நாகிரெட்டி, ‘நீங்கள் அயர்ந்து தூங்கிக் கொண்டு இருந்ததால் உங்களை தொல்லைப்படுத்த வேண்டாம் என்று காத்து இருந்தேன் என்று கூறினார்.
பின்னர் ‘என் படத்தில் நடிக்க சரோஜாவை ஒப்பந்தம் செய்யவே வந்து இருக்கிறேன்’ என்று சொன்னார். அப்போதெல்லாம் அதிகாலை நேரத்தில் சென்றால் மட்டுமே நடிகர், நடிகைகளை வீட்டில் பிடிக்க முடியும் இல்லாவிட்டால் படப்பிடிப்புக்கு போய் விடுவார்கள். அதனால்தான் அதிகாலை நேரத்திலேயே நாகிரெட்டி வந்து காத்திருந்தார். அவர் கேட்டுக் கொண்டபடி ‘எங்க வீட்டுப் பிள்ளை’யில் நடித்தேன்.
இவ்வாறு சரோஜாதேவி கூறினார்.

~சந்திரா' வுக்காக சம்பளத்தை குறைத்த ஸ்ரேயா


தான் முதல் முறையாக கன்னடத்தில் நடிக்கும் சந்திரா படத்திற்காக சம்பளத்தை வெகுவாக குறைத்துக்கொண்டுள்ளாராம் ஸ்ரேயா.
சரியான இடுப்பழகி என்று ரகிசர்களால் பாராட்டப்பட்டவரான ஸ்ரேயா இப்போது தமிழில் சுத்தமாக வாய்ப்பிழந்து விட்டார். சீக்கிரம் கல்யாணம் செய்துகொள்ளப் போவதாகக் கூறி வரும் ஸ்ரேயா கன்னடத்தில் சந்திரா என்ற படத்தில் நடிக்கிறார். இப்படத்திற்காக அவர் தனது சம்பளத்தைக் கூட வெகுவாக குறைத்துக்கொண்டுள்ளாராம்.
ஸ்ரேயாவின் தற்போதைய மார்க்கெட் ரேட் 70 முதல் 80 இலட்சம் என்று கூறப்படுகிறது. இருப்பினும் கன்னட மார்க்கெட்டில் அந்த அளவுக்கு தந்தால் கம்பெனிக்கு கட்டுப்படியாகாது என்று அவரிடம் எடுத்துக் கூறப்பட்டதால், தனது சம்பளத்தை வெகுவாக குறைத்துக்கொள்ள ஒப்புக் கொண்டாராம் ஸ்ரேயா.
எவ்வளவு சம்பளத்திற்கு ஸ்ரேயா நடிக்கிறார் என்பது தெரிவிக்கப்படவில்லை. ஆனால் அங்கு முதலிடத்தில் உள்ள குத்து ரம்யாவுக்கு தரப்படும் சம்பளமே ஷ்ரியாவுக்கும் தரப்படுவதாக கூறப்படுகிறது.
முதலில் ரம்யாவைத்தான் இந்தப் படத்திற்குக் கூப்பிட்டனராம். ஆனால் சில பல காரணங்களால் அவர் மறுத்து விட்டாராம். பிறகு அமலா பாலை நாடினார்கள். தியா மிர்ஸாவை தேடினார்கள். அம்ரிதாவை ராவை நாடி ஓடினார்கள். எல்லோருமே விலகிப்போனதால் ஸ்ரேயாவை ‘ப்ரீஸ்’ செய்து ‘பிக்ஸ்’ பண்ணி விட்டனர்.
இப்படத்தில் இளவரசி வேடத்தில் வருகிறாராம் ஷ்ரியா. படத்தை இயக்குவது ரூபா ஐயர். படத்தில் ரம்யா கிருஷ்ணன், எஸ். பி. பாலசுப்ரமணியம் ஆகியோர் முக்கிய ரோல்களில் வருகின்றனராம்.
ஸ்ரேயாவுக்கு கன்னடத்தில் இதுதான் முதல் ஹீரோயின் படம் என்றாலும் கூட, ஏற்கனவே புனீத் ராஜ்குமார் நடித்த அரசு படத்தில் கெஸ்ட் ரோலில் வந்து போயுள்ளார் என்பது நினைவிருக்கலாம்.

 

பெரிய இடம் தேடும் பிரணீதா








நடித்தால் பெரிய நடிகர்களுடன் மட்டும்தான் நடிப்பேன் என்று அடம் பிடிக்கிறாராம் பிரணீதா. முதல் படம் வெளியாகி ஓடி முடிப்பதற்குள்ளாகவே ஏகப்பட்ட பந்தாக்களைப் போட்டு சீன் காட்டும் நாயகிகளின் பட்டியல் இன்னும் கோடம்பாக்கத்தில் நீடித்துக் கொண்டுதான் இருக்கிறது.
ஆரம்பத்தில் சின்ன ஹீரோவுடன் ஜோடி சேருவார்கள். அந்தப் படம் எக்குத்தப்பாக ஓடிவிட்டால், அடுத்து பெரிய ஹீரோக்களுடன் மட்டும்தான் ஜோடி போடுவேன். பெரிய பட்ஜெட் படமாக இருக்க வேண்டும். நல்ல கம்பெனியாக இருக்க வேண்டும் என்று பில்டப் செய்து பிலாக்காணம் பாடுவார்கள்.
இந்த நிலையில் சகுனி படம் மூலம் சினிமாவுக்கு வந்துள்ள பிரணீதாவும் அதேபோல ஏகப்பட்ட பில்டப், பிட்டப்புக்களுடன் சினிமாக்காரர்களை மிரள வைக்கிறாராம். முதல் படத்தில் கார்த்தியுடன் ஜோடி போட்டு விட்ட இவர் இப்போது வெயிட்டாக பேச ஆரம்பித்துள்ளாராம்.
அதாவது நடித்தால் பெரிய ஹீரோக்களுடன் மட்டும்தான் நடிப்பாராம். சின்னச் சின்ன ஹீரோக்களையெல்லாம் சீண்டக்கூட மாட்டாராம். கழுகு படத்தில் ஹீரோவாக நடித்த இயக்குநர் விஷ்ணுவர்த்தனின் தம்பி கிருஷ்ணாவுக்கு ஜோடியாக நடிக்க இவரைக் கேட்டபோது மறுத்துவிட்டாராம். அப்போதுதான் இப்படிப் பதிலளித்தாராம்.
முதல் படமே இன்னும் வந்து போணியாகவில்லை. அதற்குள்ளாகவே இப்படி ஒரு சீனா என்று புலம்புகிறார்களாம் ‘சின்ன நாயகர்களை கையில் வைத்துக் கொண்டு பெரிய நாயகிகளுக்காக காத்திருக்கும் இயக்குநர்கள் சங்கத்தைச் சேர்ந்தவர்கள்.

ஸ்ரீதேவியின் இடத்தில் தமன்னா


தமிழ்நாட்டின் சிவகாசி அருகே உள்ள மீனம்பட்டி கிராமத்தில் பிறந்து தமிழ் ரசிகர்களை மட்டுமன்றி தென்னிந்திய மொழிகள் அனைத்திலும் கலக்கி ஒருவழியாக இந்திப் படவுலகில்கரைசேர்ந்தவர் ஸ்ரீதேவி.
இவருக்கு பொலிவூட்டில் செம பிரேக் கொடுத்த படம் 1983ல் வெளியான ஹிம்மத்வாலா. 1981ம் ஆண்டு தெலுங்கில் வெளியான படத்தோட ரீமேக்தான் இது. தெலுங்குல ஜெயபிரதாவும் கிருஷ்ணாவும் நடிச்சிருந்தாங்க! ராகவேந்திராவ் இயக்கியிருந்தார். இந்தியில் ஜிதேந்திராவும் ஸ்ரீதேவியும் இணைந்திருந்தாங்க.
ஸ்ரீதேவி நடித்த ஹிம்மத்வாலா அந்த காலத்திலேயே 12 கோடி ரூபாய்க்கு கல்லா கட்டிய படம்! ஸ்ரீதேவி பாடிய “nainon சீலீin sapna” என்ற பாடல் அந்தக் காலத்து இளசுகளிடம் ரவுசு கட்டிய பாடல்! இப்ப இந்த படத்தை மீண்டும் இந்தியில் ரீமேக் எடுக்கப்போறாங்களாம்.
ஸ்ரீதேவி நடிச்ச ரேகா கேரக்டருக்கு யார் தெரியுமில்ல நம்ம தம்மன்னாதான் செலக்ட்! அந்த புகழ்பெற்ற பாடலுக்கு இந்த காலத்துக்கு ஏற்ற மாதிரி டான்ஸ் அமைக்கச் சொல்லி ஃபாரா கானிடம் சொல்லியிருக்கார் டைரக்டர் சஜித்கான். ஹிம்மத்வாலா அன்று ஸ்ரீதேவிக்கு கொடுத்த பிரேக்கை இன்னிக்கு தமன்னாவுக்கு கொடுக்குமா?

 

 

 

நயன்தாராவுடன் ஆர்யா காதலா?

மறுப்பு; ஆனால் விருந்துக்கு அழைப்பு

நயன்தாராவும் பிரபுதேவாவும் காதல் முறிந்து பிரிந்துள்ளனர். பிரபுதேவா இந்திப் படங்கள் இயக்கும் பணியில் மூழ்கி உள்ளார். நயன்தாரா மீண்டும் நடிக்க வந்துள்ளார். தமிழில் அஜீத், ஆர்யா இணைந்து நடிக்கும் படத்தில் நாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். தெலுங்கு படமொன்றில் நாகார்ஜுனா ஜோடியாக நடிக்கிறார்.
நயன்தாராவுக்கும் ஆர்யாவுக்கும் தற்போது நெருக்கம் ஏற்பட்டுள்ளதாக கிசு கிசு பரவியுள்ளது. சமீபத்தில் ஆர்யா புதிதாக கட்டியுள்ள தனது வீட்டின் கிரகப் பிரவேச விழாவை விமரிசையாக நடத்தினார். அதில் நயன்தாராவை சிறப்பு விருந்தினராக அழைத்து இருந்தார். அப்போது விசேஷ கேக் செய்து அதில் ‘வெல்கம் பேக் நயன்தாரா’ என ஆங்கிலத்தில் எழுதி வைத்து இருந்தார். நயன்தாரா வீட்டுக்கு வந்ததும் கைகுலுக்கி வரவேற்றார்.
அவர் கையாலேயே கேக்கும் வெட்ட வைத்தார். இதனால் இருவருக்கும் காதல் மலர்ந்துள்ளதாக சக நடிகர், நடிகைகள் செய்தி பரப்பினர். ஏற்கனவே ‘பாஸ் என்கிற பாஸ்கரன்’ படத்தில் இருவரும் ஜோடியாக நடித்தனர். அப்படம் வெற்றிகரமாக ஓடியது. காதலால்தான் ஆர்யா படத்தில் மீண்டும் நடிக்க நயன்தாரா ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது.
நயன்தாராவை காதலிக்கிaர்களா? என்று ஆர்யாவிடம் கேட்டபோது, அவர் கூறியதாவது, நயன்தாராவும் நானும் நண்பர்களாகத்தான் பழகுகிறோம். எங்களுக்குள் காதல் இல்லை. நயன்தாரா மன வருத்தத்தில் இருந்து மீண்டு வந்துள்ளதால், கேக்கில் அவ்வாறு வாசகம் எழுதி வைத்து வரவேற்றோம். விருந்துக்கு நயன்தாராவை மட்டுமின்றி வேறு சிலரையும் அழைத்து இருந்தேன். நயன்தாரா தற்போது சந்தோசமாக இருக்கிறார். இவ்வாறு ஆர்யா கூறினார்.

Wednesday, May 23, 2012

மூன்று தலைமுறை நடிகைகள்

லட்சுமி தமிழ்த் திரைப்பட நடிகையும் தொலைக்காட்சி தொகுப்பாளரும் ஆவார். இயக்குநர் பாலச்சந்தரால் தமிழ் தரையுலகிற்கு அறிமுகம் செய்யப்பட்டவர். அவரது முதல் படம் ஜீவனாம்சம் 1968 ஆம் ஆண்டு வெளிவந்தது. லட்சுமியின் தந்தை யரகுடிபாடி வரத ராவ் மற்றும், தாய் ருக்மணி இருவருமே திரைத் துறையில் பணியாற்றியவர்கள்.
தந்தை வரத ராவ் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த நெல்லூர் நகரைச் சேர்ந்தவர். நடிப்பதோடு சமூகப் பிரச்சினைகளை அலசும் திரைப் படங்களை தயாரிக்கவும் செய்தார், லட்சுமியின் தாய் ருக்மணியும் சிறந்த தமிழ் நடிகையாக விளங்கினார். எனவே திரைப்படங்களில் நடிப்பது அவருக்கு இயல்பாகவே அமைந்தது.

தேசிய விருது
1970 ஆம் ஆண்டுகளில் நான்கு தென்னிந்திய மொழிப் படங்களிலும் வெற்றிக்கொடி நாட்டினார். அவரது மலையாளப் படம் சட்டக்காரி (1974) அவருக்கு புகழ் தேடித் தந்தது. இத்திரைப்படம் 1975 ஆம் ஆண்டு ஜூலி என இந்தியிலும் மிஸ் ஜூலி பிரேம கதா என தெலுங்கிலும் எடுக்கப்பட்டன. இந்திப்பட நடிப்பிற்காக பிலிம்ஃபேர் விரும் வங்காள திரையிதழாளர்கள் விருதும் கிடைத்தது.
1977 ஆம் ஆண்டில் வெளிவந்த சில நேரங்களில் சில மனிதர்கள் என்ற எழுத்தாளர் ஜெயகாந்தனின் புதினத்தை ஒட்டி எடுக்கப்பட்ட தமிழ்த் திரைப்படத்திற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருது வாங்கினார். 1980 களில் முதன்மை பாத்திரங்களில் நடிப்பது குறைந்தபோது துணை நடிகையாக பல படங்களில் நடித்துள்ளார். ஜீன்ஸ் படத்தில் பாட்டியாக நடித்து கவனத்தைக் கவர்ந்தார். 400 படங்களுக்கும் மேலாக நடித்துள்ளார்.
சின்னத்திரையிலும் அச்சமில்லை அச்சமில்லை என்ற அரட்டைக் காட்சியில் தமது முத்திரையைப் பதித்தார். சமூகப் பிரச்சினைகளையும் தனிமனித அவலங்களையும் இத்தொடர் வெளிக்கொணர்ந்தது.
லட்சுமியின் திருமண வாழ்க்கை பிரச்சினைகள் நிறைந்ததாக அமைந்தது. தனது பதினேழாம் வயதில் அவரது பெற்றோர் ஏற்பாடு செய்த பாஸ்கர் என்பவரை மணம் புரிந்து 1971 ஆம் ஆண்டு ஐஸ்வர்யா என்ற பெண் குழந்தையை பெற்றெடுத்தார். இதன் பின்னர் பாஸ்கருடன் மணமுறிவு ஏற்பட்டு தனது மகளை தன்னுடன் வளர்க்கும் உரிமை பெற்றார்.
ஐஸ்வர்யா 1990 களில் இருந்து தமிழ் திரைப்படங்களில் நடித்து வருகிறார். மலையாள படம் சட்டக்காரியில் நடித்த போது நடிகர் மோகனுடன் ஏற்பட்ட உறவும் முறிந்தது. என் உயிர் கண்ணம்மா எனும் திரைப்படத்தில் நடிக்கையில் உடன் நடிகரும் பட இயக்குநருமாகிய சிவச்சந்திரன் உடன் காதல் ஏற்பட்டு திருமணம் செய்து கொண்டார்.

லட்சுமியின் தாயார் ருக்மணி


நடிகை லட்சுமியின் தாயாரும், பழம்பெரும் நடிகையுமான ருக்மணி சென்னையில் மரணமடைந்தார்.
டி.ஆர். மகாலிங்கம் நடிக்க, ஏவி.எம். ருக்மணி வித் டீ.ஆர்.மகாலிங்கம் தயாரிப்பில் உருவான ஸ்ரீவள்ளி படம் மூலம் நடிகையானவர் ருக்மணி.
இதையடுத்து லவங்கி, முல்லைவன், கப்பலோட்டிய தமிழன் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். கப்பலோட்டிய தமிழன் படத்தில் சிவாஜி கணேசனுக்கு ஜோடியாக நடித்தார்.
ருக்மணியின் கணவர் ஒய். வி. ராவும் ஒரு பிரல நடிகர், எம். எஸ். சுப்புலட்சுமிக்கு ஜோடியாக சாவித்ரி என்ற படத்தில் நடித்துள்ளார்.
பின்னர் தியாகராஜ பாகவதர் நடித்த சிந்தாமணி படத்தை இயக்கினார். இப்படத்தில் ருக்மணியும் நடித்தார். இதில் நடித்தபோது தான் ராவுக்கும், ருக்மணிக்கும் காதல் மலர்ந்து மணமுடித்துக்கொண்டனர்.
81 வயதான ருக்மணி சில மாதங்களாக உடல் நலம் சரியின்றி சிகிச்சை பெற்று வந்தார். இவர் 2007 செப்டெம்பர் 05 ஆம் திகதி மரணமடைந்தார்.

எம்.ஜp.ஆர் பற்றி சரோஜhதேவி


கன்னடப் படத்தில் எடுத்த எடுப்பிலேயே கதாநாயகியாக அறிமுகமாகிப் புகழ்பெற்ற சரோஜாதேவிக்கு, தமிழ்நாட்டில் பெரிய புகழைத் தேடித் தந்த படம் எம். ஜி. ஆரின் ‘நாடோடி மன்னன்’. இதுபற்றி சரோஜாதேவி ஒரு கட்டுரையில் எழுதியிருப்பதாவது :-
‘கன்னட கச்சதேவயானி படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நடந்து கொண்டு இருந்தது. அப்போது கோடி சூரிய பிரகாசத்துடன் ஒருவர் படப்பிடிப்பு நடந்த இடத்துக்கு வந்தார்.
அவரைப் பார்த்ததும், அங்கு இருந்த எல்லோரும் எழுந்து, வணக்கம் தெரிவித்தனர். ஆனால், அவர் யார் என்று எனக்கு தெரியாது. எனவே நான் பேசாமல் உட்கார்ந்து இருந்தேன்.
அவர் படப்பிடிப்பு தளத்தினை சுற்றிப் பார்த்துவிட்டு இயக்குனரிடம் சென்றார். என்னைக் காட்டி, ‘யார் அந்தப் பெண்’ என்று கேட்டார்.
அதற்கு இயக்குனர் ‘அவர்தான் இந்தப் படத்தின் கதாநாயகி. புதுமுகம் பெங்களூரைச் சேர்ந்தவர். பெயர் சரோஜாதேவி’ என்று தெரிவித்தார்.
வந்தவர் பேசாமல் சென்றுவிட்டார். அவர் போகும்போதும் எல்லோரும் எழுந்து வணக்கம் தெரிவித்து பணிவுடன் வழியனுப்பினார்கள். அவர் சென்றபிறகு ‘வந்தது யார்’ என்று நான் இயக்குனரிடம் கேட்டேன். ‘அவர்தான் எம். ஜி. ஆர்’ என்று அவர் தெரிவித்தார்.
அதைக் கேட்டு நான் அதிர்ச்சி அடைந்தேன். ‘அவ்வளவு பெரிய மனிதர் வந்து இருக்கிறார். எதுவும் தெரியாமல் சும்மா இருந்து விட்டோமே’ என்று நான் வருந்தினேன்.
எம். ஜி. ஆர். நடிக்க ஒப்பந்தமாகியிருந்த ‘திருடாதே’ என்ற படத்தில் நடிக்க கதாநாயகியை தேடிவந்தனர். பட அதிபர் ஏ. எல். சீனிவாசனிடம் எம். ஜி. ஆர். ‘கச்சதேவயானி படத்தில் ஒரு கன்னடப் பெண் நடித்து வருகிறார். அவரை அழைத்து வந்து ஒப்பனை செய்து பாருங்கள், பிடித்து இருந்தால் கதாநாயகியாக போடலாம்’ என்று கூறினார்.
அதன்படி ஏ. எல். சீனிவாசன், சின்ன அண்ணாமலை, மா. லட்சுமணன் மற்றும் பலர் முன்னிலையில் எனக்கு ‘மேக்கப் டெஸ்ட்’ நடந்தது.
எம். ஜீ. ஆர். என்னைத் தேர்வு செய்தாலும், ‘ஒரு புதுமுகத்தை எப்படி நமது படத்தில் போடுவது’ என்று அவர்களுக்கு குழப்பமாக இருந்தது. அவர்கள் யாரும் எம். ஜி. ஆரிடம் இதைப் பற்றி ஒன்றுமே சொல்லவில்லை.
ஆனால் எம். ஜி. ஆர். அதை புரிந்துகொண்டார். என்றாலும் என்னைத்தான் கதாநாயகியாக போடவேண்டும் என்று அவர் வற்புறுத்தவில்லை. என்றுமே அவர் யாரையும் எதற்காகவும் வற்புறுத்தியது கிடையாது. அவருடைய கருத்தை யார் மீதும் திணித்தது கிடையாது.
இந்த சூழ்நிலையில் என்னை கதாநாயகியாகப் போடவேண்டும் என்ற எம். ஜி. ஆரின் எண்ணத்தில் மட்டும் மாற்றம் இல்லை. அவருடைய சொந்த தயாரிப்பான ‘நாடோடி மன்னன்’ படத்தில் இரண்டாவது கதாநாயகியாக என்னை அவர் நடிக்க ஒப்பந்தம் செய்தார்.

 

இயக்குநர் சிகரம் கே. பாலச்சந்தர்



இயக்குநர் சிகரம் கே. பாலச்சந்தருக்கு ‘தாதா சாகேப் பால்கே’ விருதும் வழங்கப்பட்டுள்ளது. இந்திய திரைப்படத் துறையில் சாதனையாளர்களுக்கு வழங்கப்படும் மிக உயர்ந்த விருது இதுவாகும். தங்கத் தாமரை பதக்கமும், 10 இலட்சம் ரூபா ரொக்கப் பரிசும் கொண்டது இந்த விருது. 45 ஆண்டுகளுக்கு மேலாக திரைத்துறையில் உள்ள பாலச்சந்தர் தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தியில் 101 படங்களை இயக்கியுள்ளார். ஏராளமான படங்களைத் தயாரித்துள்ளார்.
அசாதாரண கதைகளைப் படமாக்குவதில் பாலச்சந்தரின் துணிச்சலுக்கு நிகர் அவரே. மிகச் சிறந்த கலைஞர்களான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், கலைஞானி கமல்ஹாசன், மெகா ஸ்டார் சிரஞ்சீவி, மிகச் சிறந்த நடிகரான நாகேஷ், ராதாரவி, நடிகைகள் ஜெயந்தி, ஸ்ரீபிரியா, ஜெயசுதா, ஜெயப்பிரதா, சுஜாதா என 30க்கும் மேற்பட்டோரை அறிமுகப்படுத்திய பெருமைக்குரியவர்.
பாலச்சந்தர், கமல்ஹாசன் உள்ளிட்ட 12 இயக்குநர்களை உருவாக்கியவர். இவர் இயக்கிய ‘இருகோடுகள்’ ‘அபூர்வராகங்கள்’ ‘தண்ணீர் தண்ணீர்’ ‘அச்சமில்லை அச்சமில்லை’ ‘ஒரு வீடு இரு வாசல்’ ஆகிய நான்கு தமிழ்ப் படங்களும் ‘ருத்ரவீணா’ தெலுங்குப் படமும் தேசிய விருதுகளை வென்றுள்ளன.
பல முறை தமிழக அரசின் விருதுகளைப் பெற்றுள்ளார். இந்திய அரசு இவருக்கு பத்மஸ்ரீ விருதினையும் அளித்து கெளரவித்துள்ளது. தஞ்சை மாவட்ட நன்னிலத்தில் 1930ம் ஆண்டு பிறந்தவர் பாலச்சந்தர். ‘மேஜர் சந்திரகாந்தா’ ‘சர்வர் சுந்தரம்’ என நாடகங்கள் மூலம் புகழ்பெற்ற அவரை திரையுலகுக்கு அழைத்து வந்தவர் அமரர் எம். ஜி. ஆர். அவரது தெய்வத்தாய்தான் பாலச்சந்திரரின் முதல் திரைப் பிரவேசம்.
பாலச்சந்தர் இயக்கிய முதல் படம் ‘நீர்க்குமிழி’ 1965ம் ஆண்டில் அவர் இயக்கிய இந்தப் படத்தில் நாகேஷ் நடித்தார். தமிழகம் தவிர, ஆந்திரம், கர்நாடகத்திலும் பல விருதுகளை வென்றுள்ளார் பாலச்சந்தர். சின்னத் திரையில் அட்டகாசமான தரம் கொண்ட நாடகங்களை அறிமுகப்படுத்தியதும் பாலந்தர்தான்.
தூரதர்ஷனுக்காக இவர் இயக்கிய ‘ரயில் சினேகம்’ மறக்க முடியாத ஒரு படைப்பாகும். ‘அவர்கள்’ ‘47 நாட்கள்’ ‘சிந்துபைரவி’ ஆகியவை பாலச்சந்தரின் மாபெரும் படைப்புகளாகும்.



சிரஞ்சீவி மகன் ராம் சரணுக்கு திருமணம்


காங்கிரஸ் எம்.பி.யும் நடிகருமான சிரஞ்சீவி மகன் ராம் சரண். இவரும் தெலுங்கில் முன்னணி நடிகராக உள்ளார். ராம் சரணுக்கும் அப்பலோ மருத்துவமனை தலைவர் பிரதாப் ரெட்டி பேத்தி உபஷனாவுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் ஜூன் 14 ஆம் திகதி இவர்களது திருமணம் நடக்கிறது. திருமண ஏற்பாடுகளை சிரஞ்சீவி குடும்பத்தினர் பிரமாண்டமாக செய்து வருகிறார்கள் திருமண அழைப்பிதழ் அச்சடிக்கப்பட்டு விட்டது.
திருமண அழைப்பிதழுடன் சிரஞ்சீவி மனைவி சுரேகா திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சென்றார். அர்ச்சகர் மூலம் ஏழுமலையான் பாதத்தில் அழைப்பிதழ் வைத்து வழிபட்டார். பின்னர் பத்திரிகையை உண்டியலில் போட்டார்.
இது பற்றி சுரேகா கூறும்போது, ஏழுமலையான் சந்நிதியில் திருமண அழைப்பிதழ் வைத்து வழிபட்டேன். முதலில் தெய்வத்தின் ஆசி பெற்ற பிறகு மற்றவர்களுக்கு திருமண அழைப்பிதழ் வழங்கப்படும் என்றார். சுரேகாவுடன் அவரது தங்கை வசுந்தரா சென்று இருந்தார்.

நடிகையின் தலையெழுத்து வெள்ளியில் நிர்ணயம்


எல்லோரையும் டொப் நடிகை எனக் கூறுகிறார்கள். ஒருவர்தான் டொப் நடிகையாக இருக்க முடியும் என்றார் சமந்தா. ‘பாணா காத்தாடி’, ‘மாஸ்கோவின் காவிரி’ ஆகிய படங்களில் நடித்தவர் சமந்தா. அவர் கூறியதாவது :-
இந்த வருடம் நான் நடித்து 8 படங்கள் வெளிவர உள்ளது. ஆனாலும் சந்தோஷமாக இருக்க முடியவில்லை. சந்தோஷமாக இல்லாததற்கு காரணம் என்ன என்கிறார்கள். இண்டஸ்ட்ரீயில் பெரும்பாலான நடிகைகளை நம்பர் வன் நடிகைகள் என்று சொல்கிறார்கள். எல்னையும் அந்தப் பட்டியலில் குறிப்பிடுகிறார்கள்.
நான் கேட்கிறேன், நம்பர் வன்னாக ஒருவர்தானே இருக்க முடியும். ஆனால் அத்தனை பேரையும் நம்பர் வன் என்று எப்படி சொல்கிறார்களோ தெரியவில்லை. ஒவ்வொரு நடிகையின் தலையெழுத்தும் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் நிர்ணயிக்கப்படுகிறது. இதுதான் நிஜம். மணிரத்னம், கெளதம் மேனன் என பெரிய இயக்குனர்களுடனும், மகேஷ் பாபு, நாக சைதன்யா உள்ளிட்ட டொப் நடிகர்களுடனும் நடித்து வருகிறேன்.
இதுதவிர ஒப்புக்கொள்ளாத படங்கள் நிறைய உள்ளன. பெரிய இயக்குனர்கள், பெரிய படங்கள் என்பதை நானாக தேர்வு செய்யவில்லை. அது தன்னால் அமைந்தது. இண்டஸ்ட்ரிக்கு வந்து 2 வருடங்களில் இவ்வளவு பெரியவர்களுடன் பணியாற்றுவேன் என்று நினைத்துக்கூட பார்க்கவில்லை.
கடின உழைப்புக்கு கிடைத்த பலன் என்ற கருதுகிறேன். ஒரே படத்தில் பள்ளி மாணவி, கல்லூரி மாணவியாக நடிக்கிறேன். பள்ளி மாணவி தோற்றத்துக்காக உடல் இளைக்க வேண்டி உள்ளது. கல்லூரி மாணவிக்காக சற்று குண்டாக வேண்டி உள்ளது. இதெல்லாம் புதிய அனுபவம். மணிரத்னம் படத்தில் நடிப்பது சந்தோஷமாக இருப்பதைவிட பயமாகவே உணர்கிறேன். அவர் இயக்கத்தில் நடிக்க வேண்டும் என்ற கனவு நனவாகி இருக்கிறது. ஆனால் அவருடைய எதிர்பார்ப்பு என்னை நடுங்க வைக்கிறது. இவ்வாறு சமந்தா கூறினார்.




 

மனசுக்கு பிடித்தவர் கிடைத்தால் காதல்


குழந்தை நட்சத்திரமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை மோனிகா. தொடர்ந்து பகவதி, சண்டைக்கோழி போன்ற படங்களில் துணை நடிகையாக நடித்த அவர் சிலந்தி படம் மூலம் ஹீரோயினாக அவதரித்தார்.
ஹீரோயினாக மட்டும் அல்லாமல் அந்தப் படத்தில் அதிரடி கவர்ச்சியும் காட்டினார். தொடர்ந்து அ ஆ இ ஈ, வர்ணம் போன்ற படங்களில் நடித்தார். தமிழ் தவிர மலையாளம், கன்னடம் போன்ற மொழிகளிலும் நடித்துள்ள மோனிகாவிடம் சில கேள்விகள்... கேட்டோம். அதற்கு அவரின் பதில்கள்...
திரைக்குப் பின்னால் நீங்கள் எந்த மாதிரியான கேரக்டர்?
ரொம்ப ஜாலியான பெண் என்னைச் சுற்றியிருப்பவர்கள், எப்போதும் கலகலப்பாக இருக்க வேண்டும் என்று நினைப்பேன். நிறைய காமெடியாக பேசுவேன்.
அம்மா முத்தம் – சினிமா முத்தம், வித்தியாசம் என்ன?
அம்மாவின் முத்தம் ரியல்; சினிமா முத்தம் ரீல்.
மூடு அவுட்டானால் என்ன செய்வீர்கள்?
இசை மீது கவனத்தை திருப்புவேன். பிடித்த பாடலைப் போட்டு, ஆடிப் பாடுவேன்; மனசு ரிலக்சாகிவிடும்.
எத்தனை நாய்க்குட்டி வளர்க்கிaர்கள்? இப்போதைக்கு எதுவும் இல்லை. ஆனால், பூனை, முயல், கிளி வளர்க்க வேண்டும் என்ற ஆசை இருக்கு.
அழகை பராமரிக்க, என்ன பயிற்சி செய்கிaர்கள்?
உணவுக் கட்டுப்பாட்டுடன் உடற்பயிற்சி மற்றும் நடனம் ஆடுவதுண்டு. மேலும், நீச்சல் பயிற்சி, எனக்கு ரொம்ப பிடிக்கும். நீச்சல் குளத்தில் குதித்தால், ஒரு மணி நேரத்திற்கு பிறகே வெளியேறுவேன்.
காதலித்த அனுபவம் உண்டா?
நான் யாரையும் காதலித்ததில்லை. ஆனால், என் மனசுக்கு பிடித்தவர் கிடைத்தால் காதலிப்பேன். ஒருவேளை அப்படிப்பட்டவர் கிடைக்கவில்லை என்றால், பெற்றோர் பார்க்கும் மாப்பிள்ளையையே, காதலித்து திருமணம் செய்வேன்.

வித்யாபாலன் விளம்பரத்தில் நடிக்க ரூ. 10 இலட்சம்

விளம்பர படத்தில் நடிக்க நடிகை வித்யா பாலன் ரூ. 30 இலட்சம் ரூபா வாங்குகிறாராம். தி டர்ட்டி பிக்சர்ஸ் படத்திற்கு பிறகு வித்யா பாலனின் மார்க்கெட் எகிறியிருக்கிறது. தனது சம்பளத்தை 2 கோடி ரூபாவாக உயர்த்தியுள்ளார்.
இதன் மூலம் பொலிவுட் நடிகைகள் கத்ரீனா, தீபிகா ஆகியோரின் சம்பளமான ரூ. 2.5 கோடி ரூபாவை நெருங்கி இருக்கிறார் வித்யா பாலன். மேலும் இப்போது அதிகமாக விளம்பர படங்களிலும் தோன்ற ஆரம்பித்து இருக்கிறார்.
சமீபத்தில் கேரளாவில், விளம்பர படம் ஒன்றில் நடிக்க வித்யா பாலனை அணுகியுள்ளனர். ஆனால் அவரோ அந்த விளம்பர படத்தில் நடிக்க 30 இலட்சம் ரூபா கேட்டுள்ளார். அந்த நிறுவனமும் அதற்கு சம்மதம் தெரிவித்துள்ளது. விரைவில் இதன் படப்பிடிப்புக்காக கேரளா செல்ல இருக்கிறார் வித்யா பாலன்.






Thursday, May 17, 2012

 


07 மொழிகளில் 1500 க்கு படங்களில் நடித்து சாதனை படைத்தவர்

‘தேன்மொழியாள்’ பண்டரிபாய் 14 வயதில் நடிக்கத் தொடங்கினார்.

சிவாஜிகணேசனின் முதல் படமான பராசக்தியில் அவருக்கு ஜோடியாக நடித்தவர் என்ற பெருமைக்கு உரியவர் பண்டரிபாய். பிறகு அவருக்கு தங்கையாக, அக்காவாக, அண்ணியாக, அம்மாவாகவும் நடித்தார்.
7 மொழிகளில் 1500 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து சாதனை படைத்தார். பண்டரிபாயின் சொந்த ஊர் கர்நாடக மாநிலத்தில் உள்ள பத்கல் என்ற கிராமம். 1930ம் ஆண்டு நவம்பர் மாதத்தில் பிறந்தார். தந்தை ரங்காராவ். தாயார் காவேரிபாய். பண்டரிபாயுடன் உடன் பிறந்தவர்கள் 9 பேர்.
பண்டரிபாயின் தந்தை ஓவிய ஆசிரியர். என்றாலும் நாடகத்தன் மீது அபார மோகம். எனவே, வேலையை விட்டு விலகி, நாடகக் கம்பனி ஆரம்பித்தார். எனினும் தன் மகள்கள் யாரும் நாடகத்தில் நடிக்கக் கூடாது என்பதில் உறுதி கொண்டிருந்தார்.
நாடகம் பற்றிச் பேசக் கூடாது என்று தடை உத்தரவு போட்டிருந்தார். நாடகத்துக்கு பதிலாக, மகள்களுக்குக் கதாகாலட்சேபம் கற்றுக் கொடுத்தார். பண்டரிபாய் தன் 10 வயதிலேயே கன்னடத்திலும், மராத்தியிலும் கதாகாலட்சேபம் செய்யக் கூடிய ஆற்றலைப் பெற்றார். இவ்வளவு சிறப்பாக காலட்சேபம் செய்கிற பண்டரிபாய் சினிமாவில் நடித்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்?” என்று அவரது அண்ணன் நினைத்தார்.
அவர் முயற்சியால் “வாணி” என்ற கன்னட படத்தில் ஒரு சிறு வேடத்தில் நடிக்கும் வாய்ப்பு பண்டரிபாய்க்கு கிடைத்தது. ஹரிதாஸ் எம். கே. தியாகராஜ பாகவதர் நடித்த ஹரிதாஸ் மெகாஹிட் படத்தில் பண்டரிபாய்க்கு ஒரு சிறு வேடம் கிடைத்தது.
தமிழில் அது தான் அவருக்கு முதல் படம். படத்தின் முதல் காட்சியில் “வாழ்விலோர் திருநாள்” என்று பாடிக் கொண்டே குதிரையில் வருவார் பாகவதர். பெண்களை துரத்துவார். ஒரு ஊஞ்சலில் ஆடிக்கொண்டிருக்கும் பண்டரிபாயை விரட்டிக் கொண்டு போவார். அவரை துயில் உரிய முயற்சிப்பார். பிறகு ஒரு மோதிரத்தை பரிசளிப்பார்.
இந்தக் காட்சியில் பண்டரிபாய் நடித்தார். அப்போது அவருக்கு வயது 14 தான். பிறகு ஏ. வி. எம். தயாரித்த “வேதாள உலகம்” என்ற படத்தில் காளியாகத் தோன்றினார் பிறகு, வைஜயந்தி மாலா கதாநாயகியாக அறிமுகமான “வாழ்க்கை” படத்தில் இரண்டாவது கதாநாயகியாக பண்டரிபாய் நடிப்பதாக இருந்தது.
ஆனால் தமிழில் சரிவர பேச வராததால் அந்த வேடத்தில் டி. கே. எஸ். நாடகக் குழுவைச் சேர்ந்த எம். எஸ். திரவுபதி நடித்தார். “வாழ்க்கை” படம் “ஜீவிதம்” என்ற பெயரில் தெலுங்கில் தயாரிக்கப்பட்ட போது இரண்டாவது கதாநாயகியாக நடித்தார்.
பண்டரிபாய்க்கு தமிழ் கற்றுக் கொடுக்க பி. டி. சம்பந்தம் என்ற நடிகரை ஏ. வி. எம். நிறுவனம் ஏற்பாடு செய்தது. விரைவிலேயே தமிழில் அழகாக வசனம் பேச பண்டரிபாய் கற்றுக் கொண்டார். ஏ வி. எம். கூட்டுறவுடன் நேஷனல் பிக்சர்ஸ் 1952 இல் தயாரித்த பராசக்தி படத்தில், சிவாஜியின் ஜோடியாக பண்டரிபாய் நடித்தார்.
சின்ன வேடங்களில் நடித்த படங்களை ஒதுக்கி விட்டுப் பார்த்தால் பண்டரிபாய் முக்கிய வேடத்தில் நடித்த முதல் தமிழ்ப் படம் பராசக்தி தான். அதில் சிறப்பாக நடித்ததுடன் கலைஞரின் வசனங்களை தெளிவாகவும், இனிமையாகவும் பேசி தேன்மொழியாள் என்று போற்றப்பட்டார். தொடர்ந்து சிவாஜிகணேசனுடன் பல படங்களில் பண்டரிபாய் நடித்தார். “கண்கள்” படத்தில் தங்கை, “திரும்பிப்பார்” படத்தில் அக்காள், “அந்தநாள்” படத்தில் மனைவி..... இப்படி மாறுபட்ட கதாபாத்திரங்களில் நடித்தார்.

 

எம்.ஜp.ஆர். ஜhனகியை மறுமணம் செய்தது ஏன்?


இது முதல் மனைவி சதானந்தவதிக்கு தெரியாதா? 1950ம் ஆண்டு வெளிவந்த ‘மருதநாட்டு இளவரசி’யைத் தொடர்ந்து வி. என். ஜானகியை வாழ்க்கைத் துணைவியாக எம். ஜி. ஆர். ஏற்றார். ‘ராஜகுமாரி’ க்குப் பிறகு அபிமன்யு, என்ற படத்தை ஜுபிடர் பிக்சர்சார் தயாரித்தனர். இந்தப் படத்தில் எஸ். எம். குமரேசனும் அவருடைய ஜோடியாக யு. ஆர். ஜீவரத்தினமும் நடித்தனர்.
அபிமன்வின் தந்தை அர்ஜுனனாக எம். ஜி. ஆர். நடித்தார். படத்தின் பிற் பகுதியில் தான் அவர் வருவார். எனினும், நடிப்பு சிறப்பாக இருந்தது. மற்றும் நரசிம்மபாரதி, எம்.ஜி. சக்ரபாணி, நம்பியார். கே. மாலதி எம். ஆர். சந்தானலட்சுமி ஆகியோரும் நடித்தனர்.
அபிமன்யுவின் வசனங்களை கருணாநிதி தான் எழுதினார் என்றாலும், படத்தில் அவர் பெயர் இடம்பெறவில்லை. திரைக்கதை வசனம் ஏ. எஸ். ஏ. சாமி என்று டைட்டில் கார்டு போடப்பட்டது. இந்தப் படத்தை எம். சோமசுந்தரமும், ஏ. காசிலிங்கமும் இணைந்து டைரக்ட் செய்தனர்.
லட்சுமிகாந்தன் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அடைந்து, லண்டனில் உள்ள பிரிவுகவுன்சில் (வெள்ளையர் ஆட்சியின்போது உச்சநீதி மன்றம்) வரை சென்று விடுதலையான எம். கே. தியாகராஜ பாகவதர், ‘ராஜமுக்தி’ என்ற படத்தை தயாரித்தார். படப்பிடிப்பு புனா நகரில் நடந்தது.
இதில் பாகவதரும், வி. என். ஜானகியும் ஜோடியாக நடித்தனர். பாகவதருக்கு அடுத்த வேடத்தில், தளபதியாக எம். ஜி. ஆர். நடித்தார். வில்லி போன்ற வேடத்தில் பி. பானுமதி நடித்தார். அவர் நடித்த முதல் தமிழ்ப் படம் இதுதான். இந்தப் படத்தில் நடிக்கும்போது, எம். ஜி. ஆரும், வி. என். ஜானகியும் முதன் முதலாக நேரில் சந்தித்துக் கொண்டனர்.
ஜானகியை எம். ஜி. ஆர். ஏற்கனவே படத்தில் பார்த்திருக்கிறார். எம். ஜி. ஆரின் முதல் மனைவியான பார்கவி என்கிற தங்கமணியைப் போலவே ஜானகி இருந்தது அவருக்கு வியப்பளித்தது. நேரில் சந்தித்தபோது அசந்தே போனார். பார்கவியின் அசல் அச்சு போலவே ஜானகி காட்சி அளித்தார்.
இதன் காரணமாக, இருவரும் நெருங்கிப் பழகினார்கள். ஒருவர் மனதில் ஒருவர் இடம்பெற்றனர். இதே சமயத்தில், ஜூபிடரின் ‘மோகினி’ படத்தில் எம். ஜி. ஆரும், ஜானகியும் ஜோடியாக நடித்தனர்.
1948 அக்டோபர் 9ம் திகதி ‘ராஜமுக்தி’யும் அதே மாதம் 31ம் திகதி மோகினியும் திரையிடப்பட்டன. இதில் ‘ராஜமுக்தி’ தோல்வி அடைந்தது. மோகினி வெற்றி பெற்றது.
பின்னர் கோவிந்தன் கம்பெனி தயாரித்த மருதநாட்டு இளவரசியில் எம். ஜி. ஆரும். வி. என். ஜானகியும் இணைந்து நடித்தனர். மற்றும் எம். ஜி. சக்ரபாணி, பி. எஸ். வீரப்பா, சி.கே. சரஸ்வதி ஆகியோரும் நடித்தனர். கதை வசனத்தை மு. கருணாநிதி எழுதினார். ஏ. காசிலிங்கம் டைரக்ட் செய்தார். இந்தப் படத்தில் வி. என். ஜானகி மருதநாட்டின் இளவரசி. அவர் சாதாரண இளைஞனான எம்.ஜி. ஆரை காதலிப்பார். அவர் இளவரசி என்று எம். ஜி. ஆருக்குத் தெரியாது. அதனால் அவரும் காதலிப்பார். எம்.ஜி. ஆருக்கு கத்திச் சண்டை கற்றுத் தருவார் ஜானகி.
அரசருக்கு எதிராக, அரசனின் இளைய மனைவியின் சகோதரன் திட்டம் தீட்டுவான். அதை எம். ஜி. ஆரும் ஜானகியும் சேர்ந்து முறியடிப்பார்கள். இந்தப் படத்தில் எம். ஜி. ஆர். ஒரு வேட்டி மட்டும் அணிந்து சாதாரண குடிமகனாக நடிப்பார். படம் முழுவதும் இந்த ஒரே உடைதான்.
கருணாநிதியின் வசனம் அருமையாக அமைந்தது. எம். ஜி. ஆரும் ஜானகியும் சிறப்பாக நடித்திருந்தனர். எம். ஜி. ஆரின் கத்திச் சண்டைகள் ரசிகர்களைக் கவர்ந்தன. படம் வெற்றி பெற்றது.
மருதநாட்டு இளவரசி 1950ல் வெளி வந்தது. அதைத் தொடர்ந்து, ஜானகியை தன் வாழ்க்கைத் துணைவியாக ஏற்க எம். ஜி. ஆர். தீர்மானித்தார். அதற்கு முன் மனைவியின் சம்மதத்தைப் பெற எண்ணினார். ஜானகியை தன் வீட்டுக்கு அழைத்துச் சென்று, மனைவி சதானந்தவதியிடம் அறிமுகம் செய்து வைத்தார். சதானந்தவதியை, ‘அக்கா’ என்றே அழைத்தார் ஜானகி. இருவரும் சகோதரிபோலவே பழகினார்கள். நாளடைவில், எம். ஜி. ஆர். மனதில் ஜானகி இடம் பெற்றிருப்பதை சதானந்தவதி தெரிந்துகொண்டார்.
கணவரை ஒரு நாள் அழைத்து, ‘வாழ்நாள் முழுவதும் உங்களுக்கு பாரமாக இருந்து வருகிறேன். என்னால் உங்களுக்கு ஒரு சுகமும் இல்லை. என் தங்கையை (ஜானகி) நீங்கள் ஏற்றுக் கொள்ளுங்கள்’ என்று கூறினார். இதைக் கேட்டு எம். ஜி. ஆர். கண்கலங்கினார். ‘நீ மனப் பூர்வமாகத்தான் சொல்கிறாயா?’ என்று கேட்டார். மனப்பூர்வமாகத்தான் கூறுகிறேன். ஜானகியை நீங்கள் மணந்து கொள்ளுங்கள். ஆனால் நானும் ஜானகியும் ஒரே வீட்டில் இருக்கவேண்டாம்.
அவளுக்குத் தனி வீடு பார்த்து குடிவையுங்கள் என்றார் சதானந்தவதி. மனைவியின் பூரண சம்மதத்துடன், ஜானகியை வாழ்க்கைத் துணைவியாக ஏற்றார். எம். ஜி. ஆர். பாகவதர், சின்னப்பா காலத்தில் பெரிய பாடல் ஆசிரியராகத் திகழ்ந்த பாபநாசம் சிவனின் அண்ணன் பி. ஆர். ராஜகோபாலய்யரின் மகள் தான் வி. என். ஜானகி. (வைக்கம் நாராயணி ஜானகி என்பதன் சுருக்கமே வி. என். ஜானகி) எம். ஜி. ஆர். சாதாரண வேடங்களில் நடித்து வந்த காலகட்டத்திலேயே அவர் கதாநாயகியாக புகழ் பெற்று விளங்கினார். எம். ஜி. ஆரை விட அதிக சம்பளம் வாங்கி வந்தவர். எனினும் எம்.ஜி. ஆரை மணந்தபின் நடிப்பதை நிறுத்திவிட்டார். கணவரின் சாதனைகளுக்கு துணை நின்றார்.

 

நாடு கடத்தப்பட்ட பெற்றோருடன் இலங்கைக்கு வந்தவர் சந்திரபாபு


சந்திரபாபு தூத்துக்குடியில்கிறிஸ்தவக் குடும்பத்தில் பிறந்தவர். ஜோசப் பிச்சை என்னும் பெயரிடப்பட்ட இவரை பாபு என்று செல்லமாக அழைத்து வந்தனர். பின்னாளில் சந்திரகுல வம்சத்தில் பிறந்தவர் என்று தமது பெயரைச் சந்திரபாபு என இவர் மாற்றிக்கொண்டார்.
விடுதலைப் போராட்டத்தில் கலந்துகொண்டமையால் இவரது பெற்றோர் இலங்கைக்கு நாடு கடத்தப்பட அவர்களுடன் சென்ற சந்திரபாபு, கொழும்பு நகரில் பள்ளிப் படிப்பை முடித்தார்.
சிறு வயதிலேயே பாடும் திறமை பெற்றிருந்த சந்திரபாபு, ஆங்கிலேயரின் நவநாகரிகப் போக்கினால் பெரிதும் ஈர்க்கப்பட்டார். தமது 16 ஆம் வயதில் சென்னையை அடைந்து திரையுலகில் நுழைய முயற்சிகளை மேற்கொண்டார்.
ஒரு படத்தளத்தின் உள்ளே சென்று வாய்ப்புத் தேட அனுமதிக்கப்படாததால், தற்கொலைக்கும் முயன்றவர். நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்ட சந்திரபாபு, நீதிபதியின் முன்னால் ஒரு தீக்குச்சி கொண்டு தமது கையைச் சுட்டுக் கொண்டு கூறினார். உங்களுக்கு நான் சுட்டுக் கொண்டது தான் தெரியும், என் காயத்தை உங்களால் உணர முடியாது. அதுபோலத்தான் என் துயரும்.
1937 ஆம் ஆண்டு அமராவதி என்னும் திரைப்படம் மூலமாக திரையுலகில் அடியெடுத்து வைத்த சந்திரபாபு விரைவிலேயே முன்னணி நகைச்சுவை நடிகரானார். 1950 களில் பெரும் நட்சத்திரங்களாக உருவாகிக் கொண்டிருந்த எம். ஜி. ஆர்., சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன் என அனைவரது திரைப்படங்களிலும் நகைச்சுவை வேடங்களில் நடித்தார்.
சபாஷ் மீனா என்னும் வெற்றிப் படத்தில் இரு வேடம் தாங்கி நடித்த இவருக்கு அவற்றில் ஒரு வேடத்தில் சரோஜாதேவி இணையாக நடித்திருந்தார். அதன் கதாநாயகனான சிவாஜி கணேசனின் ஜோடியாக மாலினி நடித்திருந்தார். இதைப்போலவே புதையல் திரைப்படத்தில், கதாநாயகன் சிவாஜி கணேசனுக்கு ஈடாக, கதாநாயகி பத்மினியைக் காதலித்து ஏமாற்றமுறும் பாத்திரம் ஒன்றில் திறம்பட நடித்திருந்தார்.
தற்போது சென்னைத் தமிழ் எனவும், அன்றைய நாளில் மெட்றாஸ் பாஷை எனவும் வழங்கிய வட்டார வழக்கைச் சிறப்பாகக் கையாளுவதில் அவர் பெயர் பெற்றிருந்தார்.
தமது நடிப்பிற்காகவும் பாடல் திறமைக்காகவும் பிரத்தியேகமான ரசிகர் குழாமைக் கொண்டிருந்தார்.
நகைச்சுவை நடிகரான சந்திரபாபுவின் சொந்த வாழ்க்கை மகிழ்ச்சிகரமானதாக இல்லை. அவர் மணந்த பெண் முதலிரவன்றே தான் வேறொருவரைக் காதலிப்பதாகக் கூற, மறு நாள் அவரை மரியாதையுடன் அனுப்பி வைத்தவர் சந்திரபாபு. (இந்தச் சம்பவத்தை ஒற்றியே தாம் அந்த 7 நாட்கள் படத்தின் திரைக்கதையை அமைத்ததாக பின்னாளில் நடிக இயக்குனர் பாக்கியராஜ் கூறினார்)
சர்ச்சைகளும் சக நடிகர்களுடனான சச்சரவுகளும் சந்திரபாபுவைச் சூழ்ந்தே இருந்தன.
கவலை இல்லாத மனிதன் மற்றும் குமாரராஜா என்னும் இரு திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்ததும் இனி நகைக்சுவை நடிகராகப் போவதில்லை என்று அறிவித்தார். ஆயினும் அவை இரண்டுமே வர்த்தக ரீதியாக வெற்றி பெறாததால், மீண்டும், பொலிஸ்காரன் மகள் போன்ற திரைப்படங்களில் நகைச்சுவை வேடமேற்கத் துவங்கினார்.
அவர் தாமே கதாநாயகனாக நடித்து தயாரித்து இயக்கிய தட்டுங்கள் திறக்கப்படும் என்னும் திரைப்படத்தின் படுதோல்வியுடன் அவரது திரை வாழ்க்கை அநேகமாக இறுதிக் கட்டத்தை அடைந்து விட்டது என்றே கூறலாம். 1960 களில் நாகேஷ் பின்னர் சோ ஆகியோர் நகைச்சுவை நடிகர்களாக முன்னேறத் துவங்கியதும், சந்திரபாபுவின் திரையுலக வாழ்வில் தேக்கம் உண்டானது. மேலும் அச்சமயம் அவர் மீளாக் குடிக்கும், பெத்தடின் போதைக்கும் அடிமையாகி இருந்தார். இருப்பினும் அடிமைப்பெண் ராஜா, கண்ணன் என் காதலன் (இதில் சோவும் உடன் நடித்தார்) போன்ற ஒரு சில படங்களிலும் நடித்தார்.
1975 ஆம் ஆண்டு வெளிவந்த பிள்ளைக் கனியமுது என்னும் திரைப்படமே இவரது கடைசிப் படமாகும். அது வெளிவருவதற்கு முன்பாகவே. 1974 ஆம் ஆண்டு இவர் மரணமடைந்தார்.
சந்திரபாபுவின் வாழ்க்கை பற்றிய புத்தகம் ஒன்று, கண்ணீரும் புன்னகையும் என்ற பெயரில் வெளியிடப்பட்டது. பலங்களும், பலவீனங்களும் கலந்த மனிதரான சந்திரபாபு திரையுலகம் மறக்க இயாலாத திறமையாளர்களில் ஒருவர்.

 

 

 

மடிசார் மாமிக்கு அமெரிக்காவில்

தேனிலவு

புதுமணத் தம்பதிகளாய் மாறியிருக்கும் சினேகா - பிரசன்னா ஜோடி தங்களது ஹனிமூனை வெளிநாட்டில் கொண்டாட திட்டமிட்டுள்ளனர். சினேகா - பிரசன்னா அச்சமுண்டு அச்சமுண்டு படம் அமெரிக்காவில் உருவான போதுதான் சினேகாவும், பிரசன்னாவும் காதலிக்க தொடங்கினர். அதன் காரணமாக தங்களது ஹனிமூனை அமெரிக்காவில் கொண்டாட திட்டமிட்டுள்ளனர்.
இதற்காக அமெரிக்காவில் சில குறிப்பிட்ட இடங்களை இருவரும் தேர்வு செய்துள்ளனர். இன்னும் ஒரு வாரத்தில் இருவரும் ஹனிமூனுக்காக அமெரிக்கா பறக்க இருக்கின்றனர்.

 

மனசு இலேசானால் என்றும் இளமைதான்

நதியா


1980 களில் ஏராளமான ரசிகர்களின் கனவு கன்னியாக வாழ்ந்தவர் நடிகை நதியா. டைரக்டர் பாசிலின் பூவே பூச்சூடவா படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நதியா தொடர்ந்து பூக்களை பறிக்காதீர்கள், உயிரே உனக்காக, நிலவே மலரே, சின்னதம்தம்பி பெரியதம்பி, அன்புள்ள அப்பா, பூமழை பொழியுது உள்ளிட்ட தொடர் ஹீட் படங்களை கொடுத்தார்.
4 வருடம் சினிமாவில் இருந்த நதியா பல வெற்றிப் படங்களை கொடுத்தவர். நடித்து கொண்டிருக்கும் போதே வங்கி அதிகாரியாக இருந்த தனது குடும்ப நண்பரை திருமணம் செய்து கொண்டு லண்டனில் போய் செட்டில் ஆனார். பிறகு நீண்ட இடைவெளிக்கு பிறகு ஜெயம் ரவியின் அம்மாவாக ‘எம். குமரன் சன் ஆப் மகாலட்சுமி’ படம் மூலம் பிரவேசித்தார்.
தொடர்ந்து சில படங்களில் நடித்தார். இப்போது தெலுங்கு மற்றும் மலையாள படங்களில் மட்டுமே நடித்து வரும் நதியா அளித்த பிரத்தியேக பேட்டி இதோ....
தமிழ் சினிமாவில் நான் நடித்த சில படங்கள் பக்கத்து வீட்டு பெண் போன்ற ரோலில் தான் அதிகம் நடித்தேன். நிறைய ரசிகர்கள் என்னை கொண்டாடினார்கள். பல பாடல்கள் சூப்பர் ஹிட். குறிப்பா என்னுடைய ஸ்டைல் ரொம்ப பேசப்பட்டது. ஆனா, நான் ரொம்ப சாதாரணமா ஒரு டிரஸ் போட்டு கொண்டாலும் அது எல்லோருக்கும் பிடிச்சது. ரோட்டில் விற்பனையான குறைந்த விலையில் உள்ள பிளாஸ்டிக் தோடுகளை தான் அதிகம் அணிந்தேன். ஆனால் அது கூட ஒரு ஸ்டைலாச்சு.
இப்போது எனக்கு இரண்டு பெண் குழந்தைகள் இருக்கிறார்கள். மூத்த பெண் சனம் (15), 2வது பெண் ஜனா (11) இப்போ நாங்கள் மும்பையில் இருக்கோம். இரண்டு பேரும் என்னை அப்படி வேலை வாங்குவாங்க. விளையாட்டு, மியூசிக் என்று எல்லா கிளாஸ்க்கும் நான் தான் அழைத்து போகணும். என் குழந்தைகளுக்கு சுத்தமா சினிமா ஆர்வம் கிடையாது.
என் கணவருக்கு நான் பாதியில் நடிப்பை விட்டுவிட்டு கல்யாணம் பண்ணியது கொஞ்சம் வருத்தம். அதனால் தான் இப்பவும் என்னை நடிக்க சொல்லுவார். அதனால் தான் சில படங்களில் நடித்து வருகிறேன். எல்லோரும் நான் இன்னும் அப்படியே இளமையா இருக்கேன் என்று சொல்றாங்க.
நாம் எந்தளவு உணவு உட்கொள்கிறமோ, அந்தளவுக்கு உடற் பயிற்சியும் அவசியம். மனசு எப்பவும் ரிலாக்ஸா வச்சிக்கணும். அது போதும் எத்தனை வருஷம் ஆனாலும் எல்லோரும் இளமையாக இருக்கலாம் என்று சொல்லி முடித்த நதியா, அடுத்து தெலுங்கில் தன்னுடைய படம் ஒன்று ரிலீஸ் ஆக இருப்பதாக கூறினார்.

 

 

பிரான்ஸ் பட விழாவில் 5 மாத குழந்தையுடன் ஐஸ்வர்யா ராய்


கேன்ஸ் பட விழா பிரான்சில் இன்று 16 ஆம் திகதி தொடங்குகிறது. இந்தப் பட விழாவில் 4 இந்திய திரைப்படங்கள் திரையிடப்பட உள்ளன. அவற்றில் மூன்று படங்கள் அனுராக் காஷ்யாப் தயாரித்த படங்கள் ஆகும். கேன்ஸ் பட விழாவில் நடிகர் அர்ஜுன் ராம்பால், மனைவி மெஹர், ஐஸ்வர்யா ராய் உட்பட பலர் கலந்து கொள்கின்றனர்.
நடிகை ஐஸ்வர்யா ராய் தனது 5 மாத குழந்தையான ஆராத்யாவுடன் கலந்து கொள்கிறார். 38 வயதாகும் ஐஸ்வர்யா ராய், கேன்ஸ் பட விழாவில் கலந்து கொள்வது இது 11 வது தடவையாகும்.
சில ஆண்டுகள் கேன்ஸ் பட விழா குழுவின் விளம்பர தூதராக ஐஸ்வர்யா ராய் பணியாற்றி இருக்கிறார். கடந்த ஆண்டு நடந்த கேன்விஸ் பட விழாவின்போது ‘ஹீரோயின்’ என்ற படத்தில் நடிக்க ஐஸ்வர்யா ராய் ஒப்பந்தமானார்.
பின்னர் அந்த சினிமா படத்தில் இருந்து அவர் நீக்கப்பட்டார். ஐஸ்வர்யா ராய் கர்ப்பிணியாக இருப்பதால் அவர் நீக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. அவருக்கு பதிலாக அந்த படத்தில் கரீனா கபூர் நடித்தார். கேன்ஸ் பட விழாவில் நடிகை சோனம் கபூரும் கலந்து கொள்ள உள்ளார்.

Wednesday, May 9, 2012

நடிகர்களுக்கு சினேகாவின் Special Party


திருமணத்துக்கு முன்பு நடிகர், நடிகைகளுக்கு ஸ்பெஷல் பார்ட்டி தருகிறார் சினேகா. நடிகர் பிரசன்னா - சினேகா திருமணம் எதிர்வரும் 11ம் திகதி நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. இது பற்றி சினேகா கூறியதாவது: எனது திருமண விழாவை 4 நாள் விழாவாக கொண்டாட முடிவு செய்துள்ளேன்.
முதலாவதாக என்னுடன் நடித்த நடிகர், நடிகைகள் மற்றும் நெருங்கிய நண்பர்கள், தோழிகளுக்கு என் வீட்டில் ஸ்பெஷல் பார்ட்டி தருகிறேன். நான்கு நான் விழாவில் மெஹந்தி, சங்கீத் என இரண்டு விழாக்கள் ஆடம்பரமாக நடக்க உள்ளன. திருமணத்தக்காக எல்லா நிறத்திலும் பட்டுச் சேலை வாங்கிவிட்டேன்.
மணமேடையில் அமரும் போது அணிவதற்காக காஞ்சிபுரம் சென்று பட்டுச் சேலைகள் வாங்கினேன். இருமுறைப்படி திருமணம் நடப்பதால் பிராமண முறைப்படி மடிசாரும் அணிந்து கொள்ள உள்ளேன்.
ஒவ்வொரு விழாவின் போதும் விதவிதமான சேலையும், ‘ஹம் ஆப்கே ஹைன் கோன்’ படத்தில் திருமண காட்சியில் மாதுரி தீட்சித் அணிந்து வந்தது போல் காக்ரா உடை அணியவும் உள்ளேன். எல்லா கொஸ்டியூம் டிசைன்களையும் எனது அக்காதான் வடிவமைக்கிறார். பாரம்பரிய முறையிலேயே இந்தத் திருமணம் நடக்கவுள்ளது. திருமண நாளை நினைத்தால் மனசுக்குள் ஆயிரக்கணக்கில் பட்டாம் பூச்சிகள் பறக்கிறது. பிரசன்னா எனக்கு மிக பொருத்தமான ஜோடி இவ்வாறு சினேகா கூறினார்.


சில்க் மாதிரி பிந்து மாதவி


வெப்பம், கழுகு என்று இரண்டே படங்கள்தான் நடித்திருக்கிறார் பிந்து மாதவி, இவர் நடித்த கழுகு பட விழாவில் சில்க் மாதிரி இருக்கீங்க என்று போகிற போக்கில் போட்டுத் தாக்கிவிட்டு போன சில இயக்குநர்களின் வாழ்த்துரை விளைவு? சில்க் மாதிரி ஒரு கெரக்டர் இருக்கு. பண்aங்களா என்கிறார்களாம். அதை கேட்டு அலுத்துக் கொள்கிற பிந்து மாதவி நல்ல கதைக்காக வெயிட் பண்ணிக் கொண்டிருக்கிறார்.
இதற்கிடையில் பெயரை மாற்றினால் ராசி மாறும் என நினைத்தாரோ என்னவோ தனது பெயரை பிந்து சாகர் என மாற்றிக் கொண்டுள்ளாராம். ஆனால் சமீபத்தில் இறந்த போன அவரது சகோதரர் நினைவாக சாகர் என்ற பெயரை சேர்த்துக் கொண்டுள்ளதாக கூறுகிறாராம் அம்மணி சகோதரர் சென்டிமென்ட் எப்படி வேர்க் அவுட் ஆகுதுன்னு பார்ப்போம்...!




பாட்டு தர்பார்



கிரியேட்டிவ் கோம்ப் நிறுவனம் சார்பில் அர்ச்சித் தயாரிக்கும் நிகழ்ச்சி, ‘பாட்டு தர்பார்’ மதன்பாப் நடத்துகிறார் ஞாயிற்றுக்கிழமை தோறும் காலை 10 மணி முதல் 11 மணி வரை இந்நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது.
இது குறித்து அவர் கூறியதாவது, இந்த நிகழ்ச்சி 3 பகுதிகளைக் கொண்டது. முதல் பகுதி ‘பாட்டோட கதை கேளு’! பாடல் பிறந்த கதை, சிறப்பு உள்ளிட்ட விவரங்களை சொல்வேன். இரண்டாவது பகுதி ‘சிரிப்பு மழை’ இதில் மிமிக்ரி கலைஞர்கள் சிரிக்க வைப்பார்கள் அடுத்து, ‘என் கேள்விக்கு என்ன பதில்’ இதில் திரைப்பட கலைஞர்களை பேட்டி காண்கிறேன். ஒரு கோப்பி ஷொப்பில் நடப்பது மாதிரியான நிகழ்ச்சி இது இவ்வாறு மதன்பாபு கூறினார்.


எம். ஜி. ஆரின் கால் முறிந்தது எவ்வாறு? எப்போது?

நாடோடி மன்னன் மகத்தான வெற்றிக்குப் பின், கண் திருஷ்டி போல் எம். ஜி. ஆருக்கு ஒரு விபத்து ஏற்பட்டது. புகழ்பெற்ற திரைப்பட நடிகராக விளங்கிய போதிலும், படப்பிடிப்பு இல்லாத நேரங்களில் தனது நாடகக் குழுவின் நாடகங்களில் நடிப்பது எம்.ஜி. ஆரின் வழக்கம்.
சீர்காழியில், ‘இன்பக்கனவு’ நாடகத்தில் நடித்தபோது, ஒரு சண்டைக் காட்சியில் நடிகர் குண்டுமணியை அலாக்காகத் தூக்கினார். குண்டுமணி, மிகப் பருமனான நடிகர். அப்படியும், அவரை எம். ஜி. ஆர். எளிதாகத் தூக்கிவிட்டார். ஆனால், சற்றே சரிந்ததால், கால் எலும்பு முறிந்து விட்டது. இதனால் மேடையில் விழுந்து விட்டார் எம். ஜி. ஆர்.
வலி கடுமையாக இருந்த போதிலும், அதைத் தாங்கிக் கொண்டு, மேடையில் அமர்ந்தவாறே எம்.ஜி.ஆர். பேசினார். ‘எதிர்பாராத விதமாக, கால் எலும்பில் முறிவு ஏற்பட்டு விட்டது. தொடர்ந்து நடிக்க முடியாத நிலையில் இருப்பதற்காக வருந்துகிறேன். விரைவில் குணம் அடைந்து, இந்த நாடகத்தை மீண்டும் உங்கள் முன் நடத்துவேன்’ என்று கூறினார்.
எம். ஜி. ஆருக்கு கால் எலும்பு முறிந்ததை அறிந்து, ரசிகர்கள் கண்ணீர் விட்டு அழுதனர். அவர்களுக்கு ஆறுதல் கூறிவிட்டு, காரில் சென்னைக்குப் புறப்பட்டார். இதற்குள் எம். ஜி. ஆருக்கு விபத்து ஏற்பட்ட செய்தி, சென்னைக்கு எட்டிவிட்டது. அவர் வீட்டு முன் பெரும் கூட்டம், சென்னை திரும்பிய எம். ஜி.ஆர். எனக்கு ஒன்றும் நேராது, கவலைப்படாதீர்கள்’ என்று ஆறுதல் கூறிவிட்டு மருத்துவமனைக்குச் சென்றார்.
அங்கு ‘எக்ஸ்ரே’ எடுக்கப்பட்டது. கால் எலும்பு அடியோடு முறிந்துவிடவில்லை என்றும், விரிசல் தான் ஏற்பட்டிருக்கிறது என்றும் சிகிச்சை மூலம் சரி செய்து விடலாம் என்றும் டொக்டர்கள் கூறினர். சில நாட்கள் அசையாமல் படுக்கையில் இருக்க வேண்டியது அவசியம் என்றும் டொக்டர்கள் தெரிவித்தனர். அதன்படி, ஆஸ்பத்திரியில் எம். ஜி. ஆர். அனுமதிக்கப்பட்டார்.
எம். ஜி. ஆர். கால் எலும்பு முறிந்து விட்டதால், அவர் குணம் அடைந்தாலும் முன்போல் சண்டைக் காட்சிகளில் நடிக்க முடியாது என்று தமிழ்நாடு முழுவதும் வதந்தி பதவியது. இதனால் எம். ஜி. ஆர். அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில் அவர் கூறியிருந்ததாவது;
என் உடல் நலம் குறித்து, அக்கறையோடு விசாரிக்கும் அனைவருக்கும் என் உளமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். எனக்கு வர இருந்த பேராபத்து, உதய சூரியனைக் கண்ட பனித்துளிபோல் விலகி விட்டதற்கு முக்கிய காரணம், உங்களைப் போன்ற ரசிகர்களின் அன்பும், ஆசியும் தான். என் உடல் நலம் தேறிய பின், நான் இதுவரை இருந்ததைவிட பன்மடங்கு அதிக சக்தியுடனும், தெம்புடனும் மீண்டும் கலைக்கும், நாட்டுக்கும் பணியாற்றுவேன் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு அறிக்கையில் எம். ஜி. ஆர். குறிப்பிட்டிருந்தார்.
அவர் கூறியது போலவே, விரைவாக குணம் அடைந்தார். விரிசல் ஏற்பட்ட எலும்பு சரியாகியது. முன்னரிம் அதிக வலிமை பெற்றார். நிருபர்கள் முன்னிலையில் அவர் பெரும் பளுவைத் தூக்கிக் காட்டினார். நடையில் எவ்வித மாற்றமும் இல்லை. வேகம் சற்று கூடியிருந்தது.


வெள்ளைக்கார சிப்பாயாக நடித்து அப்பாவிடம் உதை வாங்கியதால் காய்ச்சல்


நடிகனாக வேண்டும் என்ற எண்ணம் சிவாஜியின் மனதில் ஆழமாகப் பதிந்தது 7 வயதில்



சிவாஜி கணேசன் 7வது வயதிலேயே நாடகக் கம்பெனியில் சேர்ந்து நடிகரானார். பள்ளிக்கூடத்தில் படிக்கும் போதே, சிவாஜிக்கு நடிப்பதிலும், பாடுவதிலும் ஆர்வம் இருந்தது.
ஒருமுறை ‘வீரபாண்டிய கட்டபொம்மன்’ நாடகத்தைப் பார்க்க தந்தையுடன் சென்றார். அக்காலத்தில், சின்ன வேடங்களுக்கு ஆட்கள் தேவைப்பட்டால், நாடகத்துக்கு வரும் சிறுவர்களில் சிலரை அழைத்துப் போய், மேடையில் ஏற்றிவிடுவார்கள்.
‘கட்டபொம்மன்’ நாடகத்தில் வெள்ளைக்கார சிப்பாய் வேடத்தில் நடிக்க சிலர் தேவைப்பட்டதால், சிவாஜியை நாடகக்காரர்கள் அழைத்துச் சென்றுவிட்டார்கள். வெள்ளைக்கார சிப்பாய்கள் அணிவகுத்து வரும் காட்சியில், அந்த சிப்பாய்களில் ஒருவராக சிவாஜியும் நடித்து வந்தார்.
நாடகம் முடிந்து வீட்டுக்குச் சென்றதும், சிவாஜிக்கு அவர் அப்பாவிடம் உதை கிடைத்தது. ஏனென்றால் தேசியவாதியான சின்னையா மன்றாயருக்கு வெள்ளைக்காரர்கள் என்றாலே பிடிக்காது. சிவாஜி, வெள்ளைக்கார சிப்பாய் வேடம் போட்டதால், அவருக்கு அளவு கடந்த கோபம்! ‘டேய் கூத்தாடிப் பயலே உனக்கு என்ன தைரியம் இருந்தால் என் எதிரியின் படையில் சேர்ந்து கூத்தாடுவாய்’ என்று கூறியபடி அடித்தார்.
இதனால் சிவாஜிக்கு காய்ச்சல் வந்துவிட்டது. படுக்கையில் போய் விழுந்தார். ‘நாமும் நடிகனாக வேண்டும், கட்டபொம்மனாக நடிக்க வேண்டும்’ என்ற எண்ணம் மனதில் ஆழமாகப்பதிந்தது.
இந்த நேரத்தில், யதார்த்தம் பொன்னுசாமிப்பிள்ளையின் ‘மதுரை ஸ்ரீபாலகான சபா’ என்ற நாடகக் கம்பெனி திருச்சியில் முகாமிட்டு நாடகங்கள் நடத்தி வந்தது. (யதார்த்தம் பொன்னுசாமிப்பிள்ளை என். எஸ். கிருஷ்ணன் நடித்த பெரும்பாலான படங்களில் அவருடன் நடித்தவர். பிற்காலத்தில் சிவாஜி நடித்த ‘தூக்குத் தூக்கி’யில் வாத்தியாராக நடித்தவர்)
இந்த நாடகக் குழுவில் சேர்ந்து விட வேண்டும் என்று சிவாஜி விரும்பினார். நாடகக் குழுவினர் திருச்சியில் நாடகங்கள் நடத்தி முடித்துவிட்டு, வெளியூருக்கு செல்ல ஏற்பாடுகள் செய்து கொண்டிருந்தனர். நாடகக் கம்பெனிக்கு சிவாஜி சென்றார்.
“எனக்கு பாடத்தெரியும். ஆடத்தெரியும். நான் அப்பா... அம்மா இல்லாத அனாதை நாடகத்தில் சேர்த்துக் கொள்ளுங்கள்” என்று கூறினார்.
அப்போது சிவாஜி நன்றாகப் பாடும் அளவுக்கு பயிற்சி பெற்றிருந்தார். அவரை ஒரு பாட்டுப் பாடச் சொன்னார்கள். ‘பழனிவேல் இது தஞ்சம்’ என்ற பாடலை சிவாஜி பாடினார். நாடகக் கம்பெனிக்காரர்களுக்குப் பிடித்துவிட்டது. உடனே கம்பெனியில் சேர்த்துக் கொண்டார்கள். அப்போது, அந்தக் கம்பெனியில் காக்கா ராதாகிருஷ்ணனும் நடிகராக இருந்தார். அவர் சிவாஜியின் பக்கத்து வீட்டுக்காரர்.
சிவாஜியைப் பார்த்த அவருக்கு ஒரே ஆச்சரியம். ‘இங்கே எப்படியடா வந்தாய் கணேசா’ என்று கேட்டார். ‘நான் வீட்டுக்குத் தெரியாமல் இந்த கம்பெனியில் வந்து சேர்ந்துவிட்டேன். வெளியே யாரிடமும் சொல்லிவிடாதே’ என்று சிவாஜி கேட்டுக்கொண்டார்.
நாடகக் கம்பெனி, திருச்சியில் இருந்து திண்டுக்கல்லுக்கு சென்று முகாமிட்டது. அந்த நாடகக் கம்பெனியில், புது நடிகர்களுக்கு பயிற்சி அளிக்கும் வாத்தியாராக சின்ன பொன்னுசாமி படையாச்சி என்பவர் இருந்தார். இவர்தான் சிவாஜி கணேசனுக்கு நடிப்புப் பயிற்சி அளித்தார்.
‘சின்ன பொன்னுசாமிதான் என் நாடக குரு’ என்று சிவாஜி குறிப்பிட்டுள்ளார். சிவாஜி நடித்த முதல் நாடகம் ‘ராமாயணம்’ அதில் அவர் போட்ட வேடம் சீதை. “யாரென இந்தப் புருஷனை அறிகிறேன்’ என்ற பாட்டைப்பாடி, அதற்கு ஏற்ற மாதிரி ஆட்டம் ஆடி நடித்தார்.
முதல் நாளே சிறப்பாக நடித்தார். சிவாஜி வேஷத்தை கலைத்து உள்ளே சென்ற போது, வாத்தியார் பொன்னுசாமி, அவர் முதுகில் தட்டிக்கொடுத்து ‘மிகவும் நன்றாக நடித்தாய்’ என்ற பாராட்டினார்.
நாட்கள் ஆக ஆக புதுப்புது வேடங்களை ஏற்று நடித்தார். சீதை வேஷம் போட்ட அவர் பிறகு பரதன் வேடம் போட்டார். சூர்ப்பனகை அழகியாக மாறி ராமனை மயக்கும் கட்டத்தில் அந்த அழகு சூர்ப்பனகையாக நடித்தார். இராவணனின் மகன் இந்திரஜித் வேடமும் அவருக்குக் கிடைத்தது.
இப்படி, சிறுவனாக நாடகங்களில் நடித்த போதே, மாறுபட்ட வேடங்களில் நடிக்கும் ஆற்றலைப் பெற்றார். பல்வேறு நாடக வசனங்கள் அவருக்கு மனப்பாடம். எனவே, திடீரென்று எந்த வேடத்தையும் கொடுத்து நடிக்கச் சொன்னாலும் அவர் ஏற்று நடித்தார்.
அந்தக்காலத்தில் நாடகத்தில் நடிக்கும் சிறுவர்கள் வெளியே எங்கேயும் போக முடியாது. கம்பெனியின் வீட்டிலேயே அடைந்து கிடக்க வேண்டும். ‘சிறை’ வைக்கப்பட்டது மாதிரிதான்.
‘ஊருக்கு வா’ என்று பெற்றோர் கடிதம் எழுதினால், அதை பையன்களிடம் கொடுக்கமாட்டார்கள். கடிதங்களைப் பிரித்து படித்துப் பார்த்துவிட்டு, கொடுக்கக் கூடியதாக இருந்தால் மட்டும் கொடுப்பார்கள். ஒரு முறை காக்கா ராதாகிருஷ்ணன் கெஞ்சிக் கூத்தாடி, எப்படியோ அனுமதி பெற்று ஊருக்கு போய்விட்டு வந்தார். “என்ன ராதாகிருஷ்ணா என் வீட்டுக்குப் போனாயா? எல்லோரும் செளக்கியமா?’ என்று சிவாஜி விசாரித்தார்.
“எல்லோரும் நன்றாகத்தான் இருக்கிறார்கள். ஆனால் உனக்கு ஒரு துயரச்செய்தி கணேசா’ என்று கூறினார் ராதாகிருஷ்ணன். ‘என்ன?’ என்று பதற்றத்துடன் சிவாஜி கேட்க, ‘உன் அண்ணன் திருஞான சம்பந்தமூர்த்தி இறந்துவிட்டார். என்று கூறினார் ராதாகிருஷ்ணன்.
சிவாஜி பதறினார். உள்ளே சென்று தனியாக அழுதார். ஊருக்குப் போய்வர கம்பெனி நிர்வாகிகளிடம் அனுமதி கேட்டார். அவர்கள் அனுதாபம் தெரிவித்தார்களே தவிர, அனுமதி தரவில்லை.
சில காலத்துக்குப் பிறகு, சிவாஜியின் இன்னொரு அண்ணன் கனகசபாநாதனும் இறந்து போனார். அப்போதும் சிவாஜி தன் வீட்டுக்குப் போக முடியவில்லை. முக்கிய வேடங்களில் அவர் நடித்து வந்ததால், ஒரு நாள் கூட விடுமுறை கொடுக்க நாடகக் கம்பெனி நிர்வாகிகள் மறுத்துவிட்டனர்.




Thursday, May 3, 2012

இரு இமயங்களுடன் இருபது வருடங்கள் புகழ்கொடி பறக்க விட்டவர்


1960 களில் இருந்து 80 வரை இருபது வருடங்கள் தமிழ் சினிமாவில் புகழ்க்கொடி பறக்க விட்டவர் கே.ஆர்.விஜயா. எம்.ஜி.ஆர்., சிவாஜி ஆகிய இரண்டு இமயங்களுக்கும் ஜோடியாக நடித்தவர்.
தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மூன்று மொழிகளில் 450 படங்களுக்கும் மேல் நடித்தவர் கே.ஆர். விஜயா. சென்னை தியாகராய நகர் ராமன் தெருவில் உள்ள அவருடைய வீட்டில் முன்பொருமுறை அவரை சந்தித்த போது....
‘1963 இல் நான் சினிமாவுக்கு வந்த போது நடிகர், நடிகைகளை ‘நட்சத்திரங்கள்’ என்றுதான் சொல்வார்கள். நடிகைகளை, சினிமா தாரகைகளாக மதித்தார்கள்.
செளகார் ஜானகி, கே.ஆர். விஜயா, சரோஜாதேவி ‘கற்பகம்’ படத்தில் நான் பாதி படம் வரைதான் வருவேன். என்றாலும் அந்தப் படம் பார்த்தவர்கள் அத்தனை பேர் மனதிலும், ‘கற்பகம்’ கதாபாத்திரம் பதிந்து விட்டது. எனக்கு ரசிகைகள் நிறைய பேர் உருவானார்கள். நிறைய ரசிகர், ரசிகைகளை நான் சந்தித்து இருந்தாலும், ஒரே ஒரு ரசிகையை இன்று வரை என்னால் மறக்க முடியவில்லை.
‘கற்பகம்’ படம் பார்த்துவிட்டு எங்கள் வீட்டுக்கு வந்து என்னை சந்தித்த அந்த ரசிகை, தனது கழுத்தில் கிடந்த தங்கச் சங்கிலி, காதில் கிடந்த கம்மல், கைகளில் அணிந்திருந்த வளையல்கள் அத்தனையையும் கழற்றி கையில் வைத்துக்கொண்டு “எடுத்துக் கொள்ளுங்கள்” என்றார்.
அவருடைய அன்பைப் பார்த்து நெகிழ்ந்துபோன நான், “இதெல்லாம் வேண்டாம். உங்க அன்பு போதும்” என்று அந்தப் பெண்ணின் நகைகளை மீண்டும் அவருக்கே அணிவித்தேன். “நான் உங்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும்....” என்று திரும்பத் திரும்ப சொல்லிக் கொண்டிருந்தார்.
பிறகு ஒருநாள் ஒரு பட்டுப்புடவையுடன் என் வீட்டுக்கு வந்தார். இதையாவது நீங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றார். வேண்டாம் என்று சொன்னால், அவர் மனம் புண்படும் என்பதற்காக அந்தப் பட்டுப்புடவையை வாங்கிக் கொண்டேன்.
எனக்கு நிறைய ரசிகைகளை உருவாக்கிக் கொடுத்த இன்னொரு படம், ‘நம்ம வீட்டு தெய்வம்’ அந்தப் படம் பார்த்துவிட்டு என்னை சந்தித்த பெண்கள் எல்லோரும், “பூஜை ரூமுக்குப் போனால், உங்க முகம்தான் தெரியுது” என்றார்கள்.
“மிருதங்க சக்ரவர்த்தி” படம் வந்த நேரத்தில், சுசீந்திரம் போய் அங்குள்ள ஒரு கோவிலில் சாமி கும்பிட்டுக்கொண்டிருந்தேன். யாரோ என் முதுகில் தட்டினார்கள். சாமி கூட கும்பிட விடாமல் இடையூறு செய்வது யார்? என்று திரும்பிப் பார்த்த போது ஒரு அழகான பெண் நின்று கொண்டிருந்தார்.
“மிருதங்க சக்ரவர்த்தி படம் என் வாழ்க்கையை போலவே இருக்கிறது. எங்க வீட்டுக்காரர் ஒரு மிருதங்க கலைஞர். நான் பாடகி. எங்கள் வாழ்க்கையில் நடந்த பல சம்பவங்கள் படத்தில் உள்ளன” என்றார். அதைக்கேட்டு நான் ஆச்சரியப்பட்டேன்.
எனக்கு பாராட்டு வாங்கி கொடுத்த இன்னொரு படம், ‘இதயக்கமலம்’ அந்தப் படம் பார்த்துவிட்டு “எங்கள் வீட்டுக்கு உங்களைப்போல் ஒரு மருமகள் வரவேண்டும்” என்று பல வயதான பெண்கள் பாராட்டினார்கள்.
அந்த காலகட்டத்தில் நடிகர், நடிகைகள் “நட்சத்திரங்களாக” மதிக்கப்பட்டதற்கு எம்.ஜி.ஆரும், சிவாஜியும்தான் காரணம். எம்.ஜி.ஆருடன் நான் சுமார் பத்துப் படங்களிலும், சிவாஜியுடன் சுமார் பதினைந்து படங்களிலும் நடித்து இருக்கிறேன்.
பொதுமக்கள் மத்தியில் நடிகர், நடிகைகள் எப்படி நடந்து கொள்ள வேண்டும்? என்று எம்.ஜி.ஆர். சொல்லித்தருவார். யாரைப்பார்த்தாலும், இரண்டு கையெடுத்து கும்பிட வேண்டும் என்று சொல்வார்.
ஒருநாள் எம்.ஜி.ஆர். என்னிடம், “நீ காலையில் எழுந்ததும் என்ன செய்வாய்?” என்று கேட்டார். “டீ குடிப்பேன்” என்றேன். “பல் துலக்குவதற்கு முன், கொஞ்சம் அரிசியை எடுத்து வாயில் போட்டு பிறகு துப்பினால் அந்த அரிசியை சாப்பிடுகிற கோழி செத்துப்போயிடும். அந்த அளவுக்கு அதில் விஷம் இருக்கிறது. அதனால் பல் துலக்குவதற்கு முன் எதையும் சாப்பிடக்கூடாது” என்று சொன்னார்.

அன்று முதல் நான் பல் துலக்கிவிட்டுத்தான் டீ, காபி சாப்பிடுவேன்.
சிவாஜியிடம் இருந்து நிறைய ஒழுக்கத்தை கற்றுக்கொண்டேன். அவர் சரியான நேரத்துக்கு படப்பிடிப்புக்கு வந்துவிடுவார் என்பது எல்லோருக்கும் தெரிந்த தகவல்.
என் மகள் திருமணத்தன்று “விஜயா பொண்ணுக்கு இன்று திருமணம்” என்று தன்னுடன் குடும்பத்தினரையும் அதிகாலையிலேயே எழ வைத்து முதல் ஆளாக திருமண மண்டபத்துக்கு வந்துவிட்டார்.
எம்.ஜி.ஆர்., சிவாஜி வந்த பிறகுதான் நடிகர், நடிகைகளுக்கு சமூகத்தில் மரியாதையும், அந்தஸ்தும் கிடைத்தது. வெறும் நடிகர்களாக மட்டுமல்லாமல், அரசியலிலும் நடிகர், நடிகைகள் பிரகாசிப்பதற்கு அவர்கள் இருவரும்தான் காரணம்.
என் கணவர் வேலாயுதம் அந்த காலத்தில், சொந்தமாக விமானமும், கப்பலும் வைத்திருந்தார். மொத்தம் 4 பேர் அமரக்கூடிய அந்த விமானத்தை என் கணவரே ஓட்டுவார். ஒருமுறை கோவையில் இருந்து சென்னை திரும்பும் போது அந்த விமானத்தின் ஒரு டயர் கீழே இறங்கவில்லை. அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். அந்த சம்பவத்துக்குப்பின் விமானத்தை விற்றுவிட்டோம். அதேபோல் கப்பலையும் ஒரு சூழ்நிலையில் கொடுத்து விட்டோம்.
எங்க குடும்பத்தில் நான் ஒருத்திதான் படிக்காதவள். படிக்காத காரணத்தால்தான் நான் நாடகங்களில் நடிக்க ஆரம்பித்தேன். 16 வயதில் சினிமாவுக்கு வந்துவிட்டேன். அப்போது எனக்கு தமிழ் சரியாக பேச வராது. ‘டியூஷன்’ வைத்து தமிழ் கற்றுக்கொண்டேன்.
என் முதல் படமே (கற்பகம்) வெற்றி பெற்றதால் நிறைய பட வாய்ப்புகள் வந்தன. வருடத்துக்கு பத்து படங்கள் வரை நடித்தேன். பத்து வருடங்கள் ரொம்ப பிசியாக இருந்தேன். 1963 இல் திரையுலகுக்கு வந்த நான் 73 இல் நூறு படங்களில் நடித்து முடித்து விட்டேன்.
என்னை சினிமாவுக்கு அறிமுகப்படுத்தியவர், டைரக்டர் கே.எஸ். கோபால கிருஷ்ணன். ‘கற்பகம்’ படப்பிடிப்பு நடைபெற்றுக்கொண்டிருந்த போது ஒருநாள் மாலையில் “சார் நான் நாடக்தில் நடிக்க போகணும்” என்று டைரக்டரிடம் கேட்டேன்.
“உனக்கு சினிமா வேண்டுமா, நாடகம் வேண்டுமா? இரண்டில் ஒன்றை முடிவு செய்துகொள்” என்று டைரக்டர் கூறிவிட்டார். அன்று முதல், படப்பிடிப்பு நடக்கும் போது வேறு எதைப் பற்றியும் சிந்திக்கக் கூடாது என்ற முடிவுக்கு வந்தேன். நான் கதாநாயகியாக நடித்துக்கொண்டிருந்த காலகட்டத்தில் பத்து நாட்கள் அல்லது பதிமூன்று நாட்களில் எல்லாம் ஒரு படத்தை எடுத்து முடித்து இருக்கிறார்கள்.
‘பலே பாண்டியா’ 13 நாட்களில் எடுக்கப்பட்ட படம். 20 நாட்களுக்குள் பெரும்பாலும் படத்தை எடுத்து முடித்து விடுவார்கள். அதிகபட்சம், மூன்று மாதங்கள் படம் எடுத்தால், அது மிக பிரமாண்டமான படம் என்று அர்த்தம்.
450 படங்களுக்கு மேல் நடித்திருந்தாலும், இன்று வரை சில படங்கள் என் நெஞ்சைவிட்டு அகலவில்லை. அந்தப் படங்கள்: கற்பகம், செல்வம், கந்தன் கருணை, சரஸ்வதி சபதம், இதயக்கமலம், நம்ம வீட்டு தெய்வம், தங்கப்பதக்கம், திரிசூலம், கல்தூண், மிருதங்க சக்ரவர்த்தி, வாயாடி, திருடி, ரோஷக்காரி.
இறைவன் என் படிப்புக்கும், தகுதிக்கும் மீறி எனக்கு செல்வமும், செல்வாக்கும் கொடுத்து இருக்கிறார். கணவர், மகள், மருமகன், 2 பேரன்களுடன் சந்தோஷமாக வாழ்ந்து கொண்டிருக்கிறேன்”.


சிவாஜpயின் மாண்பு







நடிகர் திலகம் நடிக்கும் சாந்திப் படத்தில் அவர் பாடுவதாக உணர்வு பூர்வமான பாடல் ஒன்று. மெல்லிசை மன்னர் எம். எஸ். வி. மிகவும் வித்தியாசமாக அந்தப் பாடலுக்கான மெட்டை உருவாக்கினார். டி. எம். எஸ். பாட வேண்டிய பாடல் அது என்பதால் அவரிடம் அந்தப் பாடலைப் பாடிக்காட்டினார் மெல்லிசை மன்னர் மெட்டைக் கேட்டுப் பார்த்த போது டி. எம். எஸ். முகத்தில் திருப்தியின் அறிகுறிகள் எதுவும் தெரியவில்லை.
நான் வழக்கமாகப் பாடும் பாடல்களில் இருந்து இதற்ப் பாடலின் மெட்டமைப்பு மிகவும் வித்தியாசமாக இருக்கிறது. அது மட்டுமன்றி இந்த மெட்டு என் பாணிக்கு ஒத்துவரக் கூடிய விதத்திலும் இல்லை. எனவே மன்னிக்க வேண்டும். இந்தப் பாடலை என்னால் பாட முடியாது’ என்று கண்டிப்பாகச் சொல்லிவிட்டார் டி. எம். எஸ். “நீங்கள் அப்படிச் சொல்லக் கூடாது.
இது கொஞ்சம் வித்தியாசமான மெட்டுத்தான் என்பதை நான் ஒப்புக் கொள்கிறேன். ஆனால் உங்களுக்கு இருக்கும் அபாரமான இசைப்புலமைக்கும் குரல் வளத்துக்கும் இந்தப் பாடலை உங்களால் வெகு சிறப்பாகப் பாட முடியும். எனவே நீங்கள் மறுக்காமல் இந்தப் பாடலைப் பாடிக் கொடுக்க வேண்டும்” என்று டி. எம். எஸ். ஸிடம் வேண்டுகோள் விடுத்தார். எம். எஸ். வி.
‘அப்படியா? இந்தப் பாடலோடு என்னை வீட்டுக்கு அனுப்பத் திட்டமிட்டு இருக்கிaர்களோ?’ என்று மறுபடியும் கொஞ்சம் கோபமாகவே கேட்டார் டி. எம். எஸ். ஆனால் எம். எஸ். வி. தமது முடிவில் இருந்து பின் வாங்குவதாகத் தெரியவில்லை. ‘நீங்கள் வேண்டுமானால் பாருங்கள், இந்தப் பாடலும் உங்கள் பாடல்களில் மற்றுமொரு தனித்துவம் பெற்ற பாடலாக மிளிரத்தான் போகிறது’ என்று சொல்லிய எம். எஸ். வி டி. எம். எஸ். ஸை சமாதானம் செய்து அந்தப் பாடலைப் பாட வைத்தார்.
பாடல் காட்சியில் நடிக்க வந்த நடிகர் திலகத்திடம் அந்தப் பாடலைப் போட்டுக் காட்டினார்கள். பாடலைக் கேட்ட நடிகர் திலகம் ‘உடனடியாக படப்பிடிப்பை ரத்துச் செய்யுங்கள். இன்னொரு தினம் இந்தப் பாடல் காட்சிக்கான படப் பிடிப்பை வைத்துக் கொள்ளலாம் என்றார்.
அவரிடம் காரணம் கேட்ட போது அவர் சொன்னார். ‘மிக மிக வித்தியாசமாக இந்தப் பாடலின் மெட்டை எம். எஸ். வி. உருவாக்கி இருக்கிறார். டி. எம். எஸ். மிகவும் அபாரமாக இந்தப் பாடலைப் பாடிக்கொடுத்து இருக்கிறார்.
இந்தப் பாடலை ஒரு சவாலான பாடலாக நான் கருதுகிறேன். டி. எம். எஸ். ஸ¤ம், எம். எஸ். வியும் உயிரைக் கொடுத்து உழைத்த இந்தப் பாடலில் எனது நடிப்பும் உயிரோட்டமாக அமையுமாறு நான் பார்த்துக் கொள்ள வேண்டாமா? அதற்கு எனக்கு அவகாசம் வேண்டும். அதனால்தான் படப்பிடிப்பை ரத்த செய்யச் சொன்னேன்” என்றாராம் சிவாஜி.
சொன்னது போலவே அந்தப் பாடலை பல முறை கேட்டுப் பார்த்து அந்த மெட்டையும் டி. எம். எஸ்.ஸின் குரலில் உள்ள பாவங்க¨யும் நன்கு உள்வாங்கிக் கொண்ட நடிகர் திலகம் மிக வித்தியாசமாக அந்தப் பாடல் காட்சியை நடித்துக் கொடுத்தார்.
அந்தப் பாடல் எது என்று கேட்கிaர்களா, சாந்தி திரைப்படத்தில் இடம்பெற்ற ‘யார் அந்த நிலவு’ ஏன் இந்தப் கனவு?’