Thursday, December 26, 2013

கோத்திரம் ஒன்றாக இருந்தும் பாலுவின் காதலை பெற்றோர் எதிர்த்தது ஏன்?

பாலு சென்று கதவைத் திறந்தார். வாசலில் சாவித்திரியின் பெற்றோரும், பாலுவின் தகப்பனாரும் நின்றுகொண்டிருந்தார்கள். அவர்களுக்குப் பின்னே, அவர்களை அங்கு அழைத்துக்கொண்டு வந்தவரும் நின்றுகொண்டிருந்தார். அவர் யார் தெரியுமா?
கதவைத் திறந்த பாலுவிற்கு ஒரே ஷாக் முதலில் ரூமிற்குள் வந்தவர் கோதண்டபாணிதான். பாலு அன்று காலை ஒரு படப்பிடிப்பிலே பாடியதை அறிந்துகொண்டு, பாலு இருக்குமிடத்தைத் தெரிந்துகொண்டு சாவித்திரியின் பெற்றோரையும் உடன் அழைத்துக்கொண்டு வந்தவர் கோதண்டபாணிதான்.
சாவித்திரியின் பெற்றோர் கோபமாக உள்ளே வந்தாலும், தங்கள் பெண்ணைக் கண்டதும் அழுதுவிட்டார்கள். நடந்ததையெல்லாம் பாலு விவரமாகக் கூற, ஒரு நல்ல நாள் பார்த்து சாவித்திரியைக் கொண்டு வர ஒப்புக்கொண்டு அவளை அழைததுக்கொண்டு கிளம்பினார்கள்.
பாலுவின் சினிமா வாழ்விற்கு உறுதுணையாக நின்ற கோதண்டபாணிதான், பாலுவின் வாழ்வு நல்லபடியாக அமையவும் காரணமாயிருந்தார். இரு தரப்பிலும் பேசி, பாலுவையும் சாவித்திரியையும் இணைத்தவர் அவர் தான்.
இரு குடும்பத்தினரும் மனம் வந்து இந்தத் திருமணத்தை ஏற்றுக்கொள்ளவில்லை. அதனால் தனிக்குடித்தனம் அமைத்த பாலுவிற்கும், சாவித்திரிக்கும் பெரியவர்கள் துணையாக இருக்கவில்லை.
முதன் முதலாக சாவித்திரி கர்ப்பமாக இருந்தபோது பெரியவர்கள் துணையில்லாமல் கணவனும் மனைவியும், மனைவிக்குக் கணவனும் மட்டுமே ஆதரவாக இருந்தார்கள்.
முதல் குழந்தை, பெண் குழந்தை பிறந்தது. இசை சம்பந்தமான ‘பல்லவி’ எனப் பெயர் சூட்டப்பட்டது. பல்லவி குழந்தையாக இருந்தபோது திடீரென அழுதாள். காரணம் தெரியாமல் பாலுவும் அவர் மனைவியும் தவித்தார்கள்.
எத்தனையோ நாள் இரவில் காரை எடுத்துக்கொண்டு காற்றோட்டமாக பீச்வரை சென்று குழந்தை தூங்கியதும் வீட்டிற்குத் திரும்பிய இரவுகள் பல உண்டு.
ஆனால் எந்த பிரச்சினைகள் வந்தாலும், கணவன் மனைவியிடையே அது பிரதிபலித்ததில்லை. உண்மையான காதல், பாசம் ஆகிய இரண்டும் பிரச்சினைகளைச் சுருக்குவதற்கு பெரிதும் உதவின.
பாலுவிற்கு எந்தக் காலத்திலும் நண்பர்கள் பட்டாளம் அதிகம். அதனால் உறவினர்கள் ஆதரவில்லை என்பது ஒரு குறையாகவே தெரிய வில்லை பாலுவிற்கும், சாவித்திரிக்கும்.
பல்லவி பிறந்தவுடனேயே, பாலுவின் குடும்பத்தினரும், சாவித்திரியின் குடும்பத்தினரும் மனம் மாறி குழந்தையின் 8!வி=தி!8, பாலு வீட்டிற்கு வந்து போனார்கள். இந்தக் காலக்கட்டத்தில் பாலு மிகவும் பிஸியாகி, தனது சினிமா மார்க்கெட்டைத் தக்க வைத்துக்கொள்ள முழு மூச்சுடன் பாடல்களைப் பாடத் தொடங்கினார்.
பாலுவின் துணையியார் இரண்டாவது முறையாகக் கருத்தரித்தார். முதல் குழந்தைக்கும இரண்டாவது குழந்தைக்குமிடையே இடைவெளி ஒரு வயதை விடக் குறைவாகவேயிருந்தது. கைக் குழந்தையை வைத்துக்கொண்டு கணவன், மனைவி இருவரும் சிரமப்பட்டனர்.
இருந்தாலும் வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்ற இலட்சியம் வெறியாக மாறியிருந்த காலம் அது. சோதனைகளைச் சிரித்த முகத்துடன் தாங்கிக் கொண்டார்கள். சாவித்திரி நிறைமாத கர்ப்பிணியாக இருந்தபோது, சாவித்திரியின் தாயார், பிறந்த வீட்டிற்கு அழைத்துச் செல்ல வந்தார். பாலுவிற்கு, சாவித்திரியை அந்த நிலையில் அனுப்ப மனமில்லை. அந்த நேரத்தில் புதிதாகப் பிறக்கப் போகும் இந்தக் குழந்தை உறவை ஒட்டவைக்கும் ஒரு பாலமாக இருக்கும் என்ப¨தை மறுக்கவும் மனமில்லை.
எனவே,அன்றிருந்த ரிக்கார்டிங்கை அவசர அவசரமாக முடித்துவிட்டு, சாவித்திரியை வழியனுப்ப ஸ்டேஷனுக்குப் போனார் பாலு. சாவித்திரியும் தன் தாயுடன் கிளம்பினார். கணவரை விட்டுப் பிரியாத சாவித்திரிக்கு அந்தப் பிரிவு மிகுந்த கஷ்டத்தைத் தந்தது. பாலு அவரைத் தேற்றி வழியனுப்பி வைத்தார். பச்சை விளக்கு எரிந்தது.
அந்தப் பச்சை விளக்கு எரிவது பாலுவிற்குத் தன் வாழ்வு. ‘பசுமை’ யாக இருக்கப் போவதற்காக எரிவதாகத் தோன்றியது. வண்டி கிளம்பியது. பாலுவைத் தனிமை வாட்டியது. யாருமில்லா வீட்டில் நுழைய பாலுவிற்குப் பிடிக்கவில்லை. படுக்கையில் படுத்து தூக்கம் வராமல் புரண்டு கொண்டிருந்தார் பாலு.
டெலிபோன் மணியடித்தது. பாலு அதை அட்டண்ட் செய்தார். அரக்கோணம் ஸ்டேஷன் மாஸ்டர் பேசினார். பாலுவிற்கு ஒரு மகன்,அரக்கோணம் ரயில்வே ஆஸ்பத்திரியில் பிறந்திருப்பதாகக் கூறி பாலுவை வாழ்த்தினார்.

எம். ஜி. ஆரின் தந்தை வழி பூர்வீகம்

இந்த நான்கு குழந்தைகளுடன் நல்ல வசதியோடு வாழ்ந்து கொண்டு இருக்கும் காலத்தில் கோபாலனுக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டது. கோபாலன் 1920ம் ஆண்டு மாரடைப்பால் இறந்துவிட்டார். பிறகு சத்திய தாய் தன் கணவர் இறந்த துயரத்திலே மூழ்கிவிட ராமுபிள்ளை வேலுப்பிள்ளை ஆறுதல் சொன்னார்கள்.
அதன் பின் தன் கணவரை இழந்த சத்தியபாமா தன் கணவர் வேலை பார்த்த காலத்தில் வாங்கிய சொந்த வீட்டில் அவர் சேர்த்துவைத்த பணம், நகைகள் ஆகியவற்றை வைத்துக்கொண்டு கண்டியிலே வாழ்ந்து வந்தார். இந்தக்காலகட்டத்தில் திடீர் என்று விஷகாய்ச்சல் ஏற்பட்டு இரண்டு பெண் குழந்தைகளும், ஒரு ஆண் குழந்தையும் இறந்து விடுகின்றார்கள்.
ஏற்கனவே தன் கணவரைப் பறிகொடுத்துவிட்டு துக்கத்தில் இருக்கும் சத்தியபாமாவுக்கு மேலும் துன்பம் ஏற்பட்டது. ஒன்றுக்குப் பின் ஒன்றாக அவரது மூன்று குழந்தைகளும் இறந்ததை நினைத்து அழுது புலம்பும் சமயத்தில் எம். ஜி. ஆர் தன் தாயின் கழுத்தைக் கட்டிப்பிடித்து அம்மா அழாதே! அம்மா என்று சொல்லுவாராம்.
ஐந்தாவது குழந்தையாக நீ பிறந்த பிறகு தானடா பெற்ற அப்பாவையும், உன் கூடப் பிறந்த 3 பேரும் செத்துப் போனார்களடா என்று எம். ஜி. ஆரை கட்டிப் பிடித்து அழுவாராம். அவருடைய சேட்டைகள், விளையாட்டுக்கள் எந்தத் கவலையும் தெரியாமல் ஓடி, ஆடி மழலை பேச்சு பேசும் போதும் எல்லாம் அந்தத் தாய் பழைய நினைவுகள் எல்லாம் மறந்து சக்கரபாணியையும், ராமச்சந்திரனையும் காப்பாற்ற வேண்டும் என்ற பெரிய சபதத்தோடு மீண்டும் வேலுபிள்ளை, ராமுபிள்ளையின் உதவியை நாடினார்.
அப்போது அவர்கள் இருவரும் அம்மா சத்திய தாயிடம் அண்டிப் பிழைக்க வந்த இடத்தை விட்டு விட்டு தங்களுடைய சொந்த இடத்திற்கே செல்வது மிக சிறந்தது என கூறினர். அப்போது சத்திய தாய், எனக்கு சொந்த இடம் என்பது கேரள வடவனூர்தான்.
அந்த ஊர் வேண்டாம் என்றுதான் சபதத்தோடு இங்கு வந்தோம். இப்போ அவர் இல்லாமல் வடவனூருக்கு எப்படி செல்வேன் என்ற கேள்வி அவருக்கு எழுந்த சமயம்தான் கும்பகோணத்தில் இருக்கும் மதுரை போய்ஸ் நாடக கம்பெனியில் வேலை செய்யும் நாராயணன் என்பவர் இவர் சத்தியபாமாவுக்கு நெருங்கிய உறவினர் நாராயணனுக்கு சத்தியபாமா தன் குடும்ப நிலைமைகளைப் பற்றி விரிவாக கடிதம் போடுகிறார்.
அதன்படி அவருடைய அழைப்பின்படி நீங்கள் குழந்தைகளை அழைத்துக் கொண்டு கும்பகோணம் வந்துவிடுங்கள் என்று சொல்லுகிறார். அதன்படி வேலுப்பிள்ளை, ராமுபிள்ளை உதவியுடன் சத்தியபாமா குழந்தைகளை அழைத்துக் கொண்டு கும்பகோணம் சென்றார்கள்.
சத்தியபாமா நாராயணனின் உதவியுடன் கும்பகோணத்தில் ஒரு சிறிய வீடு வாடகைக்கு பிடித்து வாழ்ந்து கொண்டு இருக்கும் நாட்களில் தன்னுடைய இரண்டு மகன்களையும் எப்படியாவது ஓரளவுக்கு படிக்க வைக்க வேண்டும் என்று நாராயணனிடம் சத்தியபாமா கூறினார். அதன்படி, இந்த இரண்டு பிள்ளைகளையும் கும்பகோணத்தில் உள்ள யானை அடி இடத்தில் உள்ள அரசாங்க பாடசாலையில் சேர்த்து விட்டார்கள்.
மேலும் படிப்பதற்கு சிலேட்டு புத்தகங்களையும் வாங்கிக்கொடுத்து விட்டு இந்தப் பிள்ளைகளின் படிப்புக்கான செலவுகளுக்கும், சாப்பாட்டிற்கும் என்ன செய்வது என்ற பிரச்சினை உண்டாகியது. இந்த நேரத்தில் சத்தியபாமா மிக மன தைரியத்தோடுதான் எங்கேயாவது வேலை செய்து தன் பிள்ளைகளைக் காப்பாற்றுவதாக நாராயணனிடம் கூறினார். அடுத்து சத்தியபாமா குடி இருக்கும் பகுதியில் அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் இந்த சத்தியபாமாவின் நிலைமைகளை பார்த்து இந்த அழகான பிள்ளைகளுடைய நிலைமைகளை அறிந்தும் சிலர் வேலைக்கு செல்ல உதவி செய்கிறார்கள்.
இந்த நிலையில் எம். ஜி. ஆருக்கும், சக்கரபாணிக்கும் 3 வயதுதான் வித்தியாசம். சங்கரபாணி தம்பியை ராமச்சந்திரா என்று அழைப்பார். பாடசாலை முடிந்து அவர்கள் வீட்டில் இருக்கும் நேரத்தில் இவர்களுடைய தந்தை பற்றி போதனை சொல்லுவார்கள். சத்தியம், தர்மம், நேர்மை, நீதி, பக்தி எல்லாம் நிறைந்தவர் உங்கள் தந்தை, நன்றாகப் படித்தவர் நீதிபதியாகவும், பேராசிரியராகவும் பணிபுரிந்து பலரிடம் மதிப்பும், மரியாதையும் பெற்றவர். அவர் போல நீங்களும் நன்கு படித்து வாழ்ந்து காட்ட வேண்டும்.
இதை கேட்ட இருவரும் தன் தாயிடம் உறுதிமொழி எடுத்துக் கொள்கிறார்கள். தந்தை சொல்லுக்கு மந்திரம் இல்லை என்பார்கள். ஆனால் இவர்களுக்கு தந்தைக்கு பதிலாக தாய் சொல்கிறார் மந்திர த்தை. அந்த மந்திரத்தை மனதில் பதிவு செய்து கொண்டவர்தான் மக்கள் திலகம் எம். ஜி.ஆர். தன் தாயினுடைய உழைப்பால் மூன்று வேளையும் சாப்பிட்டுக்கொண்டு பாடசாலை சென்று வருகிறோம் என்ற எண்ணம் எம். ஜி. ஆருக்கு மனதுக்குள் நாளுக்கு நாள் வளரத் தொடங்கியது.

உலக சினிமா

* சீன் கானரி தன் 32 வது வயதிலேயே ‘007 ஜேம்ஸ்பாண்ட்’ ஆகி உலகப் புகழ்பெற்றார். ரோஜர் மூர் என்ற நடிகரோ 1973 ல் தான் ஜேம்ஸ்பாண்ட்டாக நடிக்க ஆரம்பித்தார். அப்போது ரோஜர் மூரின் வயது என்ன தெரியுமா? 44 ஆண்டுகள்.
* ஹார்டி ஆரம்ப காலத்தில் பெரும்பாலும் வில்லனாகத் தான் நடித்தார். ‘ஹிhலீ தீizarனீ’ என்ற படத்தில் அவரது வில்லன் நடிப்பு நினைவில் நிக்கும்படி அமைந்திருந்ததாம்.
* லாரல் கதை வசனம் எழுதி இருவரும் இணைந்து நடித்த முதல் படமான ‘ஷிlipping wivலீs’ என்ற படம் சக்கைபோடு போட்டதாம். இதில் லாரலுக்கு மிகச் சிறிய வேஷம்தான்.
* சென்னையில் அமைக்கப்பட்ட முதல் ஏர்கண்டிஷன் தியேட்டர் ‘மினர்வா’.
* முதன் முதலாக ஒரே கட்டடத்திற்குள் அமைக்கப்பட்ட மூன்று தியேட்டர்கள் சஃபையர், ப்ளூ டைமண்ட், எமரால்டு. (தற்போது இல்லை)
* இந்தியாவிலேயே முதன் முதலாக அமைக்கப்பட்ட சினிமா தியேட்டர் பெங்களூரிலுள்ள ‘கபாலி’ தியேட்டராகும்.
* போதனா சீனிவாசராவ் என்பவர் 1921 ஆம் ஆண்டு ஆந்திராவில் விஜயவாடா நகரில் ‘மாருதி தியேட்டர்’ என்ற பெயரில் நிரந்தரமான தியேட்டர் ஒன்றினை முதன்முதலாக கட்டினார்.
* 1905 ஆம் ஆண்டில் சந்தோணி, ஆல்பர்ட்னி ஆகிய இரண்டு திரைக்கலைஞர்களும் ஒன்றாக இணைந்து ‘டூரின்’ (ஹிurin) என்ற இடத்தில் முதல் முறையாக ‘சினி ஸ்டுடியோ’ என்ற பெயரில் ஆரம்பித்தனர். இந்த ஸ்டுடியோதான் இத்தாலியில் ஆரம்பிக்கப்பட்ட முதல் திரைப்பட ஸ்டுடியோவாகும்.
* 1 1914 ஆம் ஆண்டில் ‘பாஸ்ட்ரோன்’ என்ற இத்தாலிய திரைக்கலைஞர் ‘காபிரியா’ என்ற திரைப்படத்தை உருவாக்கி வெளியிட்டார். இத்திரைப்படத்தில்தான் முதன் முதலாக ‘டாலி’ (ளிolly) யை உபயோகப்படுத்தி படமாக்கினார்.
* ரஷ்ய நாட்டில் ‘ஜார்ஜ் நிக்கோலஸ்’ பட்டம் சூட்டிக்கொண்ட விழாவினை லுமியர் காமிராமேன்கள், பிரான்ஸிஸ் டப்ளியர் மற்றும் சார்லஸ் மாய்சன் ஆகியோர் படம் பிடித்தனர். இப்படப்பிடிப்புதான் ரஷ்ய நாட்டில் நிகழ்ந்த முதல் படப்பிடிப்பு ஆகும்.
* 1907 ஆம் ஆண்டில் முதன் முதலாக ‘அலெக்சாண்டர் ட்ரான்கோ’ என்ற புகைப்படக்காரர்தான் ரஷ்ய நாட்டில் முதன் முதலாக திரைப்படக் கம்பெனியைத் தொடங்கினார்.
* 1908 ஆம் ஆண்டில் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த பதேயும், கெளமாண்ட்டும் இணைந்து முதன் முதலாக மாஸ்கோவில் திரைப்பட ஸ்டுடியோவையும், சோதனைக் கூடத்தையும் நிறுவினர்.
* லெனின் ஆட்சிக் காலத்தில்தான் ரஷ்யாவில் முதன் முறையாக ‘பிலிம் இன்ஸ்டிடியூட்’ தொடங்கப்பட்டது.
* 1922 ஆம் ஆண்டு இந்தியாவில் திரையிடப்பெற்ற திரைப்படங்களுக்கு - குறிப்பாக, கல்கத்தாவிலும், பம்பாயிலும் திரையிடப்பெற்ற திரைப்படங்களுக்குக் கேளிக்கை வரி வசூலிக்கப்பட்டது.
* அமெரிக்க நாட்டைச் சேர்ந்த ‘எல்லீஸ் ஆர். டங்கன்’ தமிழ் மொழியில் இயக்கிய முதல் படம் ‘சதிலீலாவதி’. வந்த ஆண்டு 1936. கதை எஸ். எஸ். வாசன். இப்படத்தில் சிறிய வேடத்தில் அறிமுகமானார் மக்கள் திலகம் ‘எம். ஜி. ஆர்’.
* எல்லீஸ் ஆர். டங்கன் தான் தமிழ்த் திரைப்பட உலகில் முதன்முறையாக தண்டவாளங்கள் அமைத்து (traணீks) அதன் மீது trolly - யை வைத்து, அதன்மீது காமிராவை வைத்து படமாக்கினார். இவர் தமிழ் மொழியில் இயக்கிய படங்கள் எட்டு தான். என்றாலும் ஒவ்வொரு படமும் திரைக் காவியங்கள் எனலாம்.
* தமிழ்த் திரை உலகின் சிறந்த இயக்குனர்களில் ஒருவரான ‘கே. சுப்பிரமணியம்’ மூடநம்பிக்கை, பெண்ணடிமைத்தனம், விடுதலை உணர்ச்சி இல்லாமை - இவைகளுக்கு எதிராக சீர்திருத்த நோக்கோடு படம் எடுத்த சாதனையாளர். அமரர் கல்கியின் புகழ்பெற்ற நாவலான ‘தியாகபூமி’யைப் படமெடுத்து விடுதலை உணர்ச்சிக்கு வித்திட்டார். அன்றைய பிரிட்டிஷ் அரசாங்கம் இப்படத்திற்கு தடை விதித்தது.

Tuesday, December 10, 2013

மனோரமாவின் காதல் திருமணம்

வறுமையுடன் போராடிக்கொண்டிருந்த மனோரமா, நாடக நடிகையானார். அப்போது அவருடைய காதல் திருமணம் நடந்தது.
மனோரமாவும், அவரது தாயாராகும் வேலையில்லாமல் கஷ்டப்பட்டு வந்த நேரத்திலும், மனோரமாவின் இலவச பாட்டுக் கச்சேரி அனைத்து மங்கல நிகழ்ச்சிகளிலும் நடந்துகொண்டு இருந்தது.
இந்த நிலையில் கோட்டையூரில் ஏகாதசி நாள் விழா நடந்தது. அன்றைய தினம் இரவு ‘அந்தமான் காதலி’ என்ற நாடகம் நடந்தது. அந்த நாடகத்தில் பெண் வேடம் போட்டவருக்கு பாட வராது எனவே, அவருக்காக பாடவும், நாடகத்திற்கு இடையே நடனம் ஆடவும் ஒரு பெண்ணைத் தேடினார்கள். அந்த வாய்ப்பு மனோரமாவுக்கு கிடைத்தது.
இந்த நாடகத்தில் பணிபுரிந்த டைரக்டர் சுப்பிரமணியன், உதவியாளர் திருவேங்கடம், ஆர்மோனிய வித்வான் தியாகராசன் ஆகியோர் வெகுவாக பாராட்டியதோடு, மனோரமா என்ற பெயரையும் வைத்தார்கள்.
கோட்டையூர் நாடகத்திற்கு எலக்ட்ரீசியனாக இருந்த பால்ராஜ் என்பவர், மனோரமாவின் திறமையை பார்த்து வியந்தார். புதுக்கோட்டையில் நடந்த ‘விதியின் விசித்திரம்’ என்ற நாடகத்தில் இரண்டாவது கதாநாயகியாக நடிக்க மனோரமாவுக்கு வாய்ப்பு வாங்கிக் கொடுத்தார். வெறுமனே பாடியும், நடனமாடியும் வந்த மனோரமா, நாடக நடிகையானார். அதன் பிறகு அவர்கள் பசிக் கவலையும் மெல்ல, மெல்ல மறைந்தது.
அதன் பின்னர், எலக்ட்ரீசியன் பால்ராஜ் எழுதி தயாரித்த ‘யார் மகன்?’ என்ற நாடகத்தில் கதாநாயகியாக நடித்தார். சித்தன்னவாசலில் நடந்த இந்த நாடகத்திற்கு டைரக்டர் ‘வீணை’ எஸ். பாலசந்தர் தலைமைதாங்கினார்.
நாடகத்தின் இடைவேளையில் அந்த நாடகத்தில் இரண்டாவது கதாநாயகியாக நடித்தவருக்கு ஒரு வெள்ளி டம்ளரை பரிசளிக்கும்படி டைரக்டர் எஸ். பாலசந்தரிடம் கொடுத்தனர். அதை வாங்கிக்கொண்டு நாடகத்திற்கு தலைமை தாங்கி பேசிய எஸ். பாலசந்தர், ‘இந்த நாடகத்தில் இரண்டாவது கதாநாயகியாக நடித்த பெண்மணிக்கு பரிசு கொடுக்குமாறு என்னிடம் ஒரு வெள்ளி டம்ளரை தந்து இருக்கிறார்கள். ஆனால் நியாயமாக இந்த பரிசை, சிறந்த முறையில் கதாநாயகியாக நடித்த மனோரமா வுக்குத்தான் தரவேண்டும் என்றார். அதன் பிறகு, மனோரமாவுக்கு பரிசு வழங்கப்பட்டது.
மனோரமா தொடர்ந்து பல நாடகங்களில் நடிக்கத் தொடங்கினார். திருச்சி டால்மியாபுரத்திலிருந்து, ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் தாண்டி, மதுரை வரை அந்த நேரம் யாரும் அசைக்க முடியாத பிரபல நடிகையாகிவிட்டார்.
அந்தக் காலக் கட்டத்தில் வட இந்திய திரை உலகில் புகழ்பெற்று விளங்கிய நடிகை சுரையாவை ஒப்பிட்டு, தென்னாட்டு சுரையா மனோரமா’ என்று விளம்பரம் செய்தார்கள்.
சபா நாடகக் குழுவில் மனோரமா நடித்துக்கொண்டு இருந்தபோது, அந்த சபாவில் முக்கிய பொறுப்பில் இருந்த எஸ். எம். ராமநாதன், மனோரமாவை காதலித்தார்.
அந்தக் காதலை மனோரமா ஏற்றுக்கொண்டார். மனோரமா- ராமநாதன் திருமணம் திருச்செந்தூர் முருகன் கோவிலில் நடைபெற்றது.
இளம் வயதில் வறுமையால் வாடினார். தாயாருடன் தற்கொலை செய்துகொள்ளும் அளவுக்கு வாழ்க்கையின் ஓரத்துக்குச் சென்றார். பிறகு எதிர்நீச்சல் போட்டு புகழின் சிகரத்தை அடைந்தார். அவர்தான் ‘மெல்லிசை மன்னர்’ எம். எஸ். விஸ்வநாதன்.
எம். எஸ் விஸ்வநாதனின் சொந்த ஊர் கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் உள்ள இலப்புள்ளி கிராமம்.
தந்தை பெயர் சுப்பிரமணியன். தாயார் நாராயணி. கேரள வழக்கப்படி ஒவ்வொரு வீட்டுக்கும் ஒரு பரம்பரை பெயர் உண்டு. ‘மனையங்கத் ஹவுஸ்’ என்பது எம். எஸ். விஸ்வநாதனின் பரம்பரை பெயர் அதனால்தான் மனையங்கத் சுப்பிரமணியன் விஸ்வநாதன் என சேர்த்து ‘எம். எஸ். விஸ்வநாதன் ஆனார்.

இளையராஜாவின் சகோதரர்களை கலக்கிய பாலு, பாரதிராஜா மோதல்

நடிப்புத் திறமையை காட்ட நடத்திய நாடகம்
ghலு சினிமாவில் பாட ஆரம்பித்த காலத்தில்தான் பாரதிராஜாவைச் சந்தித்தார். இளையராஜாவை பாலுவிற்கு தெரியும். அந்தக் காலகட்டத்தில் பாரதிராஜாவின் அறிமுகம் பாலுவிற்குக் கிடைத்தது.
பாலு வெளியூர் கச்சேரிகளுக்குப் போகும்போது பாரதிராஜா ஓய்வாக இருந்தால், அவருடன் செல்வது வழக்கம். காரில் பாலு சென்றால், முன் சீட்டில் அவர் பக்கத்தில் அமர்ந்து பாலுவிடம் தனது எதிர்கால சினிமா உலகக் கனவுகளைக் கூறுவது பாரதிராஜாவின் வழக்கம். தான் சினிமா உலகில் சாதனை புரிய வேண்டும் என்ற வெறி அந்தக் காலத்திலேயே பாரதிராஜாவின் உள்ளத்தில் ஒரு தீயாக எரிந்து கொண்டிருந்தது.
ஒரு சமயம் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பாலுவின் கச்சேரி நடைபெற்றது. பாலுவுடன் பாரதிராஜாவும் சென்றிருந்தார். பாரதிராஜா பாலுவின் அறையில் உட்கார்ந்து கொண்டு பேசிக் கொண்டிருக்கும் போது ஒரு ஜடத்தைக் கூட தன்னால் நடிக்க வைக்க முடியும் என்று பெருமையுடன் கூறிக் கொண்டிருந்த போதுதான், அந்த விபரீத யோசனை பாலுவுக்குத் தோன்றியது. பாரதிராஜாவிடம் ‘உனக்கு நடிக்கச் சொல்லிதர முடியும் என்ற நம்பிக்கை இருக்கு.
அதையும் ‘டெஸ்ட்’ பண்ணிப் பார்த்து விடுவோம். நானும் நீயும் இப்பொழுது ஒரு சண்டை போட்டுக் கொள்ள வேண்டும்.
அந்தச் சண்டை உண்மையானதாக மற்றவர்களுக்கு தோற்றமளிக்க வேண்டும். அப்படி நம் குழுவில் இருப்பவர்கள் நமது சண்டையை நம்பினால் உண்மையிலேயே உனக்கு நடிக்கிற திறமையிருக்கு உன்னாலும் நடிப்புச் சொல்லித்தர முடியும் என்று ஏத்துக்கிறேன்’ என பாலு கூற உற்சாகமாக பாலுவின் சவாலை ஏற்றார் பாரதிராஜா.
உடனே பாரதிராஜா பாலுவைப் பார்தது ‘நீ என்ன? உன் மனசுக்குள்ள பெரிய முகமது ரபின்னு நினைப்போ? நாலு சினிமாவில் பாடினதுக்கே இவ்வளவு கொழுப்பா?’ என்று கேட்க அதற்கு பாலு ‘நானாவது நாலு படத்தில் பாடியிருக்கேன். சினிமாவுக்குள்ள நுழையாமலே உனக்கு பெரிய சாந்தாராம் என்ற நினைப்பா?’ என்று கேட்க வார்த்தைகள் பின்னி சிறிய வாக்குவாதம் பெரிய சண்டையாக உருவெடுத்தது.
இவர்கள் சண்டை போட்டுக் கொண்டு ரூமை விட்டு வெளியே வர இவர்களின் குரலைக்கேட்டு இளையராஜாவின் சகோதரர் பாஸ்கர், கங்கை அமரன், மற்றும் இசைக்குழுவினர் வெளியே வர, பாரதிராஜாவும், பாலுவும் சண்டை போடுவது ஒரு பெரிய குழப்பத்தை அவர்களிடத்தில் ஏற்படுத்தியது.
ஒரு கட்டத்தில் பாலுவும், பாரதிராஜாவும் கை கலக்கும் அளவிற்குப் போய்விட்டவுடன், பாஸ்கரும் அமரனும் இருவரையும் பிரித்துவிட்டார்கள். தங்கள் ஊரைச் சேர்ந்த பாரதிராஜாவுடன் பாலு சண்டை போட்டது பாஸ்கருக்குப் பிடிக்கவில்ல.
அதே நேரத்தில் சாதுவான பாலுவிற்குப் கோபம் வரும்படி பாரதிராஜா நடந்துகொண்டது அமரனுக்குப் பிடிக்கவில்லை. அதே நேரத்தில் ஒற்றுமையான குழுவின் இடையே இப்படியொரு பிளவு ஏற்பட்டதை யாராலும் தாங்க முடியவில்லை. ஒரு மாதிரியாக சண்டை ஓய்ந்து, பாலுவும் பாரதிராஜாவும் நடித்ததாகக் கூற இவர்கள் சண்டையைப் பார்த்துக் கண்ணீர் விட்டுக் கொண்டிருந்த பாஸ்கரும், கங்கை அமரனும் கோபம் தாங்காமல், பாலுவையும் பாரதிராஜாவையும் அடிக்கவே வந்து விட்டனர்.

கங்கை அமரனுக்கு கல்யாணம் பண்ணி வச்ச பிள்ளையார் யார்?

rந்திரகாந்தா நாடகக் குழுவின் மிகப் பிரம்மாண்டமான நாடகம் மணியன் எழுதிய ‘சொல்லத்தான் நினைக்கிறேன்’ இந்த நாடகத்திற்கு இசையமைக்கும் பொறுப்பு பாவலர் பிரதர்ஸ் குழுவைச் சேர்ந்தது.
சந்திரகாந்தாவின் நெருங்கிய உறவினர் மணிமேகலை என்கிற கலா என்ற பெண், தவறாமல் நாடகத்திற்கு வருவாள். அந்தப் பெண்ணுக்கு இசை கற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஆசை பிறந்தது. அந்தப் பெண்ணுக்கு கிதார் கற்றுக் கொடுக்க ஆரம்பித்தார்.
கிதார் வாத்தியத்தின் தந்திகளை மீட்டச் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்த கங்கை அமரன் அந்தப் பெண்ணின் மனத்தை நேசிக்க இருவரிடையே காதல் பிறந்தது. இலைமறைவு, காய் மறைவாக இருந்த காதல் மெதுவாக வளர்ந்தது. அமரனின் இந்தக் காதலைப் பற்றி அறிந்து பாலு அவரது காதல் நிறைவேற வள்ளி கல்யாணத்துக்கு உதவி செய்த விநாயகப் பெருமான் மாதிரி, இருவரிடையே தூது போனார்.
இறுதியில் கங்கை அமரன் கல்யாணத்தை வெற்றிகரமாக முடித்து வைத்தார் பாலு. இன்றும் மேடையில் கங்கை அமரன் பாலுவைப் பார்த்து ‘எனக்கு கல்யாணம் பண்ணிவச்ச பிள்ளையார் (உடம்பு சைஸைப் பார்த்து) இவர்தான்’ என்று கூறி ரசிகர்களைச் சிரிக்க வைப்பது வழக்கம்.

உலக சினிமா

i ‘அரவுண்டு தி வேர்ல்டு’ என்னும் படம் இந்தியாவின் முதல் 70 எம். எம். படமாகும். ஆண்டு 1967.
i அகன்ற திரையில் திரைப்படம் காண்பிக்கும் முறை 1928 ஆம் ஆண்டு பிரெஞ்சு நாட்டைச் சேர்ந்த டாக்டர் ஹென்றி செர்ட்டின்’ என்பவரால் முயற்சிசெய்து பார்க்கப்பட்டது. அப்போது அதற்குப் பெயர் ‘அனமோர்போஸ்கோப்’ என்பது. 1953 ஆம் ஆண்டு ஓர் அமெரிக்க சினிமா கம்பெனி தான் இதன் இயற்பெயரை மாற்றி ‘சினிமாஸ்கோப்’ என்ற பெயரை சூட்டியது.
i இந்தியாவின் முதல் ஏர்கண்டிஷன் திரையங்கம் தெற்கு பம்பாயில் இருக்கிறது 1935 ல் கட்டப்பட்ட ‘ரீகல் தியேட்டர்’ தான் இதன் சிறப்பைப் பெறுகிறது. அத்துடன் முதன் முதலில் சினிமாஸ்கோப் திரையிடப்பட்டதும் இங்குதான்.
i முப்பது அல்லது நாற்பது நிமிட ஓட்டங்கொண்ட கதை சொல்லும் துண்டுப் படங்களை 1905 ல் ஜே. எஃப். மதன் என்பவர் தயாரித்தார். அவரது ‘எல்ஃபின்ஸ்டோன் பயாஸ்கோப் கம்பெனி’ (கல்கத்தா) இந்தப் படங்களை வெளியிட்டது.
i முதல் நீளமான கதைப் படத்தைத் தயாரித்தவர் ‘ஆர். ஜி. டோர்னே’, ‘புண்டலிக்’ என்ற இந்தப் படம் மகாராஷ்டிரத்தைச் சேர்ந்த மகான் ஒருவரின் வாழ்க்கையைச் சொல்லுவதாகும். மே 18, 1912 ல் இது வெளியிடப்பட்டது. ஆனால் முழுக்க முழுக்க இந்தியரால் தயாரிக்கப்பட்ட முதல் கதைப் படம் தாதா சாகிப் பால்கேயின் ராஜா ஹரிச்சந்திரா. இது மே 3 1913 ல் வெளியிடப்பட்டது.
i ஹாலிவுட் பேரழகி ‘மர்லின் மன்றோ’வின் திருமண ஒப்பந்தப் பத்திரம் அண்மையில் லண்டனில் நடைபெற்ற ஏலத்தில் 2.5 இலட்சம் ரூபாய்க்கு ஏலம் எடுக்கப்பட்டதாம். 1956 ல் அமெரிக்க நாடகாசிரியர் ‘ஆர்தர் மில்லரை’ மன்றோ தனது மூன்றாவது கணவராக மணம் செய்தபோது அந்த மண ஒப்பந்தம் கையெழுத்தானதாம். மில்லருக்காக யூதராக மதம் மாறி மணம் புரிந்த மன்றோ, 1961 ல் அவரை விவாகரத்து செய்துவிட்டார்.
i ஒரு பாடல் கூட இல்லாது வெளிவந்த முதல் திரைப்படம் ‘நெளஜவான்’. 24 மணி நேரத்தில் நிகழும் நிகழ்ச்சிகளை ஆதாரமாகக் கொண்டு எடுக்கப்பட்ட துப்பறியும் திரைப்படமான ‘நெளஜவான்’ - ல் பாடல்களைச் சேர்க்காமல் தயாரிப்பாளர் ரசிகர்களை ஏமாற்றி விட்டார் என்று பல இடங்களில் போராட்டங்கள் நடத்தப்பட்டு இரு பாடல் காட்சிகளைப் பிறகு இணைத்தார்களாம்.
i ‘மேன் வித் தி அயர்ன்மாஸ்க்’ என்ற ஆங்கிலப் படத்தைத் தழுவி எடுக்கப்பட்ட படம்தான் ‘உத்தம புத்திரன்’. நடிகர் பி. யு. சின்னப்பா நடித்தது. வெளியான ஆண்டு 1940. இதில் சின்னப்பா இரட்டை வேடம் ஏற்று நடித்து புகழ்பெற்றார். தயாரிப்பு மாடர்ன் தியேட்டர்ஸ். இதே கதை, வீனஸ் பிக்சர்சால் தயாரிக்கப்பட்டு சிவாஜி கணேசன் இரட்டை வேடத்தில் நடித்துள்ளார்.
i முதல் மலையாளப் படத்தை எடுத்த மாடர்ன் தியேட்டர்ஸ் நிறுவனம் 1961 ல் ‘கண்டம் வெச்ச கோட்டு’ என்ற பெயரில் முதல் மலையாள வண்ணப் படத்தையும் எடுத்தது.
i 1920 - 1930 களில் உலகிலேயே மிகவும் பிரபலமான நபராக இருந்தவர் நகைச்சுவை நடிகர் ‘சார்லி சாப்ளின்’ தானாம். ஒரு முறை அவர் தன் சொந்த ஊரான லண்டனுக்குச் சென்றிருந்த போது இரண்டே நாட்களில் சார்லி சாப்ளினுக்கு 73,000 ரசிகர் கடிதங்கள் வந்தனவாம்.
i சார்லி சாப்ளின் 1977 ஆம் ஆண்டு டிசம்பர் 27 அன்று சுவிட்சர்லாந்தில் அவரது இல்லத்திற்கு அருகிலேயே கார்சியர்கார்வேலி என்னும் இடுகாட்டில் அடக்கம் செய்யப்பட்டார். இரண்டு மாதங்களுக்குப் பிறகு அவரது ஊர்க்காரர்களுக்கு ஒரு அதிர்ச்சி. காரணம் சார்லியின் உடல் தோண்டி எடுக்கப்பட்டிருந்தது.
i கொள்கைக்காரர்கள் 6,00,000 டாலர்கள் கேட்டு சார்லி குடும்பத்திற்கு எழுதினார்கள். அவரது மனைவி மறுத்துவிட்டார். கடைசியில் போலந்து, பல்கேரிய நாடுகளைச் சேர்ந்த இரண்டு அகதிகளை பொலிஸ் கைது செய்தது. சாப்ளின் மீண்டும் 1978 ஆம் ஆண்டு மே 23 அன்று அதே இடத்தில் கான்கிரீட்டால் அடக்கமானார்.

Tuesday, December 3, 2013

தற்கொலை செய்யும் அளவிற்கு வறுமையால் வாடிய எம். எஸ். விஸ்வநாதன்.

,ளம் வயதில் வறுமையால் வாடினார். தாயாருடன் தற்கொலை செய்து கொள்ளும் அளவுக்கு வாழ்க்கையின் ஓரத்துக்குச் சென்றார். பிறகு எதிர்நீச்சல் போட்டு, புகழின் சிகரத்தை அடைந்தார். அவர்தான் மெல்லிசை மன்னர் எம். எஸ். விஸ்வநாதன்.
எம். எஸ். விஸ்வநாதனின் சொந்த ஊர் கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் உள்ள இலப்புள்ளி கிராமம். தந்தை பெயர் சுப்பிரமணியன் தாயார் நாராயணி.
கேரள வழக்கப்படி ஒவ்வொரு வீட்டுக்கும் ஒரு பரம்பரை பெயர் உண்டு. மனையங்கக் ஹவுஸ் என்பது எம். எஸ். விஸ்வநாதனின் பரம்பரை பெயர் அதனால்தான் மனையங்கத் சுப்பிரமணியன் விஸ்வநாதன் என சேர்த்து எம். எஸ். விஸ்வநாதன் ஆனார்.
எம். எஸ். விஸ்வநாதன் 1928 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 24 ஆம் திகதி பிறந்தார். அப்போது தந்தை சுப்பிரமணியன் பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலையில் பொதுப்பணித் துறையில் வேலை பார்த்து வந்தார்.
எம். எஸ். விஸ்வநாதன் குழந்தையாக இருந்தபோது சில பிரச்சினை காரணமாக சுப்பிரமணியன் தனது வேலையை ராஜினாமா செய்துவிட்டார். அதன் பின்னர் திருச்சியில் ஜெயில் வார்டர் வேலை கிடைத்தது. தாய் வழி தாத்தா கிருஷ்ணன் நாயரும் அங்கே ஜெயில் வார்டர் பணியில் இருந்தார்.
திருச்சியில் இருந்தபோது சுப்பிரமணியன் திடீரென்று நோய்வாய்ப்பட்டு இறந்து போனார். அப்போது எம். எஸ். விஸ்வநாதனுக்கு 4 வயது.
தந்தை இறந்த 15 நாட்களுக்குள் இன்னொரு இழப்பும் ஏற்பட்டது. விஸ்வநாதனின் தங்கை வேசம்மாவும் மரணம் அடைந்தார். இந்த சோகங்களை 4 வயதில் விஸ்வநாதன் தாங்க நேரிட்டது.
எனவே ஊரார் விஸ்வநாதனை அதிர்ஷ்டமில்லாதவன் என்று ஏளனமாகப் பேசினார்கள்.
இதனால் விஸ்வநாதனின் தாயார் நாராயணி, மிகவும் மனதளவில் பாதிக்கப்பட்டார். அதனால் ஒரு விபரீத முடிவு எடுத்தார்.
ஒருநாள் அதிகாலை 3 மணிக்கு மகன் விஸ்வநாதனை எழுப்பினார் நாராயணி. மகனை தோளில் தூக்கி வைத்துக்கொண்டு திருச்சியிலிருந்து புதுக்கோட்டைக்குச் செல்லும் சாலைக்கு சென்றார். ஒரு குளக்கரையில் வந்து நின்றனர்.
மகனை குளத்தில் தள்ளிவிட்டு, தானும் குதித்து தற்கொலை செய்து கொள்ளத் தீர்மானித்தார்.
என்ன நடக்கப்போகிறது என்பதை லேசாகப் புரிந்துகொண்ட விஸ்வநாதன் ‘நீ முதலில் குதிம்மா’ என்றார்.
‘ஏன்டா, அப்படிச் சொல்றே?’ என்றார் தாயார்.
‘என்னை தள்ளிவிட்டு, நீ அப்புறம் குதிக்காமல் தப்பிச்சுப் போயிட்டா என்ன செய்வது?’ என்றார். விஸ்வநாதன்.
இப்படி தாய்க்கும், மகனுக்கும் இடையே உரையாடல் நடந்து கொண்டிருந்தபோது அங்கே தாத்தா கிருஷ்ணன் நாயார் வந்தார். நடந்ததை தெரிந்துகொண்டார்.
நாராயணிக்குட்டி செத்துப்போயிட்டா எல்லாம் சரியா போயிடுமா? இதென்ன பைத்தியக்காரத்தனம் அந்த புள்ளைய குளத்தில் தள்ள எப்படி உனக்கு மனம் வந்தது? நான் இருக்கும்போது உனக்கென்ன கவலை? உங்களையெல்லாம் நான் காப்பாற்றாமல் போயிடுவேனா? வா வீட்டுக்கு’ என்று ஆறுதல் கூறி இருவரையும் வீட்டுக்கு அழைத்துச் சென்றார்.
இந்த நிலையில் கிருஷ்ணன் நாயருக்கு திருச்சியிலிருந்து தெற்கு மலபாரான கண்ணனூருக்கு வேலை மாற்றல் உத்தரவு வந்தது.
கண்ணனூர் போனவுடன் அங்குள்ள ஒரு பள்ளியில் விஸ்வநாதனை சேர்த்தார். ஆனால் விஸ்வநாதனுக்கு படிப்பு மீது ஆர்வம் இல்லை.
பள்ளிக்கு செல்லாவிட்டால் தாத்தா திட்டுவார் என்பதற்காக பையை எடுத்துக்கொண்டு கிளம்புவார்.
மாணவர்களின் வருகையைப் பதிவு செய்வதற்காக விஸ்வநாதன் பெயரை ஆசிரியர் படித்ததும் உள்ளேன் ஐயா என்று குரல் கொடுத்து விட்டு, அடுத்த சில நிமிடத்தில் விஸ்வநாதன் மாயமாய் மறைந்துவிடுவார்.
பள்ளிக்கூடம் அருகே ஓர் இசைப்பள்ளி இருந்தது. அங்கு சென்று ஓரமாக நின்று பாடல்களைக் கேட்டுக்கொண்டு இருப்பார். பள்ளிக்கூடம் விடுகிற நேரத்தில் மீண்டும் புத்தகத்தை தூக்கிக்கொண்டு வீட்டுக்கு கிளம்புவார்.
எம். எஸ். விஸ்வநாதனுக்கு படிப்பைவிட இசை ஆர்வமே அதிகமாக இருந்தது.

பொட்டு வைத்த முகமோ பாடலின் சரணம் பாட முடியாமல் மூன்று முறை தவித்த பாலு

மூன்று முறையும் ‘பொட்டு வைத்த முகமோ’ பாடலின் சரணம் பாட முடியாமல் தவித்த பாலு பார்த்தசாரதி சுவாமி சபையின் ரசிகர்களிடம் மன்னிப்புக் கேட்டுக்கொண்டு பாதியில் பாடலை நிறுத்திவிட்டு உள்ளே சென்றார். பாலுவின் குழுவில் டி. எம். எஸ். பாடல்களைப் பாடும் பாடி வாசு, பாலுவிற்குப் பிறகு இரண்டு பாடல்களைப் பாடினார். மேடையிலிருந்து உள்ளே வந்த பாலு தனக்கு ஏன் இப்படி ஒரு நிலைமை உருவாயிற்று என்று புரியாமல் குழம்பினார்.
இரண்டு பாடல்கள் இடைவெளிக்குப் பிறகு மேடைக்கு வந்த பாலு, ரசிகர்களிடம் ‘நான் மீண்டும் பொட்டு வைத்த முகமோ’ பாடலைப் பாடப் போகிறேன்’ என்று கூறிவிட்டு பாட்டைப் பாட, பாடல் வெகு நேர்த்தியாக அமைந்தது. ரசிகர்களும் அமோகமாகக் கைதட்டி ஆரவாரம் செய்து பாலுவை உற்சாகப் படுத்தினார்கள்.
அதற்குப் பிறகு ஆயிரக் கணக்கான கச்சேரிகள் நடந்து விட்டன. இன்றுவரை அது மாதிரி ஒரு சம்பவம், பாலுவின் கச்சேரிகளில் நடைபெற்றதேயில்லை. அதேபோல், அன்று அந்தக் கச்சேரியில் அப்படி நடந்ததற்குக் காரணமும் புரியவில்லை.
கல்லூரி மாணவராக இருந்து, படிப்பை நிறுத்திவிட்டு பின்னர் பாடகரான பாலு கல்லூரியில் கச்சேரி செய்ய வேண்டுமானால், இன்று மிகவும் கவனமாக நடந்து கொள்வார்.
கல்லூரியில் படிக்கும் இளநெஞ்சங்களின் உள்ளங்களை நன்கு அறிந்தவர் பாலு. ஒரு சமயம் சென்னை குரோம்பேட்டையில் உள்ள எம். ஐ. டி. (மெட்ராஸ் இன்ஸ்டியூட் அப் டெக்னாலஜி) மாணவர்கள் தினத்திற்கு கச்சேரி செய்ய ஒப்புக் கொண்டிருந்தார். பாலு சினிமாவில் பிரபலமாகிக் கொண்டிருந்த நேரம்.
கச்சேரியன்று, பாலுவின் குழுவில் பாடிக் கொண்டிருந்த திருமதி சசிரேகாவிற்கு ஒரு சினிமா பாடல் பதிவு ஜெமினி ஸ்டுடியோவில் இருந்தது. பாலு தன்னுடைய இசைக் குழுவை இளையராஜாவின் தலைமையில் அனுப்பி விட்டு சசிரேகாவை உடன் அழைத்துக் கொண்டு ஜெமினி ஸ்டுடியோவுக்குச் சென்றார் பாலு.
சினிமா பாடல் பதிவு என்பது சில சமயங்களில் பத்து பதினைந்து டேக்குகள் கூட எடுக்கும். இந்தக் காலத்தில் உள்ளபடி தனித்தனியாக இசையைப் பதிவு செய்து கொள்ளக் கூடிய கருவிகள் அப்போதில்லை. அதனால் ஒரு வாத்தியம் வாசிப்பவர் தவறு செய்தாலும் மீண்டும் முதலிலிருந்துதான் தொடங்க வேண்டும் அன்று அப்படிப்பட்ட சில தவறுகள் காரணமாக ரிக்கார்டிங் இரவு 7.30 மணிக்குத்தான் முடிந்தது.
பாலு எம். ஐ. டி. போய்ச் சேரும்போது மணி இரவு 8.15. மாணவர்கள் கோபத்திலிருந்தார்கள். அவர்களை விட மேலும் அதிகமான கோபத்தோடு பாலுவை வரவேற்றார் இளையராஜா. மேடைக்குச் சென்றார் பாலு பல திக்குகளிலிருந்து காகித அம்புகள் பறந்தன. மாணவர்களின் நியாயமான கோபத்தை மதித்து மெளனமாக இருந்தார் பாலு. ஒரு மாணவன் ஒரு முழு அப்பிளைத் தூக்கி பாலுவை நோக்கி எறிய, பாலுவிற்கு பள்ளி நாட்களில் விளையாடிய கிரிக்கெட் உதவி செய்தது.
அப்பிளை கெட்ச் பிடித்தார். பாலுவின் இந்தச் செய்கைக்கு மாணவர்களிடமிருந்து ஒல்ரவுண்ட் கைதட்டல் கிடைத்தது. உடனே பாலு மைக்கில் ‘இசை நிகழ்ச்சிக்குப் பிறகு டின்னர் சாப்பிடும் நேரத்திற்குத் தான் நான் வந்திருக்கிறேன். நான் பசியோடுதான் இருக்கிறேன் என்று தெரிந்துகொண்டு என்னுடைய நண்பர் எனக்கு அப்பிளைக் கொடுத்திருக்கிறார்.
அதற்கு நன்றி இதைச் சாப்பிட்டுவிட்டு அனைவரும் போதும் போதும் என்று சொல்லும் வரை பாடுகிறேன்’ என்று கூறி அப்பிளைக் கடித்துச் சாப்பிட நிலைமை சற்று அடங்கியது. அவ்வளவுதான் அன்று இரவு பன்னிரண்டு மணி வரை பாலுவும், அவர் இசைக் குழுவும் பாடி மாணவர்களை மகிழ்ச்சிக் கடலில் மூழ்கடித்தனர். கச்சேரி முடிந்ததும் அப்பிள் வீசிய மாணவர் பாலுவைச் சந்தித்து மன்னிப்புக் கேட்டார். அதற்கு பாலு என்ன சொன்னார் தெரியுமா?
தம்பி நீங்கெல்லாம் ரொம்ப நல்லவங்க, அப்பிள் அடிப்பதோடு நிறுத்திக் கொண்டீங்க. உங்கள் கோபத்தில் அப்பிளுக்குப் பதிலாக கல்லை எறிந்தால் கூட நான் உங்களிடம் கோபித்துக் கொண்டிருக்க முடியாது.’
அன்றிலிருந்து இன்றுவரை மாணவர்களுக்காக நடக்கும் கச்சேரி என்றால் பாலு குறித்த நேரத்தில் வந்துவிடுவார். மற்றொரு முறை மாணவர்கள் மத்தியில் மறக்க முடியாத சண்டை செய்துள்ளார் பாலு. சண்டை யாருடன் தெரியுமா?
பிரபலமான இயக்குநர் பாரதிராஜாவுடன் தான் சண்டை. நடந்த இடம் அண்ணாமலைப் பல்கலைக்கழக மாணவர் விடுதி. ‘பாரதிராஜாவுக்கும், எஸ். பி. பி.க்கும் சண்டை வருவானேன்?’ என்கிaர்களா?

உன்னை நான் சந்தித்தேன்


உன்னை நான் சந்தித்தேன்
நீ ஆயிரத்தில் ஒருவன் ஆயிரத்தில் ஒருவன்
என்னை நான் கொடுத்தேன் என் ஆலயத்தின் இறைவன்
என் ஆலயத்தின் இறைவன்
உன்னை நான் சந்தித்தேன் நீ ஆயிரத்தில் ஒருவன்
உன்னை நான் சந்தித்தேன்
நீ ஆயிரத்தில் ஒருவன் ஆயிரத்தில் ஒருவன்
பொன்னைத்தான் உடல் என்பேன் சிறு
பிள்ளை போல் மனம் என்பேன்
கண்களால் உன்னை மணந்தேன் தொட்ட
கைகளால் நான் மலர்ந்தேன்
உள்ளத்தால் வள்ளல்தான் ஏழைகளின் தலைவன்
எண்ணத்தால் உன்னைத் தொடர்ந்தேன்
ஒரு கொடி போல் நெஞ்சில் படர்ந்தேன்
சொல்லத்தான் அன்று துடித்தேன்
கொண்ட நாணத்தால் அதை மறைத்தேன்
மன்னவா உன்னை நான் மாலையிட்டால் மகிழ்வேன்
உன்னை நான் சந்தித்தேன்
நீ ஆயிரத்தில் ஒருவன் ஆயிரத்தில் ஒருவன்
என்னை நான் கொடுத்தேன் என் ஆலயத்தின் இறைவன்
என் ஆலயத்தின் இறைவன்
உன்னை நான் சந்தித்தேன் நீ ஆயிரத்தில் ஒருவன்
உன்னை நான் சந்தித்தேன்
நீ ஆயிரத்தில் ஒருவன் ஆயிரத்தில் ஒருவன்