Thursday, January 31, 2013

ரஜினியின் நடிப்புக்கு மைல் கல்லாக அமைந்த படம்


“மூன்று முடிச்சு” குப் பின் பால சந்தர் இயக்கத்தில் ரஜினி நடித்த படம் ‘அவர்கள்’. பலரும் முக்கோணக் காதல் கதையை படமாக எடுப்பார்கள். அதிலிருந்து மாறுபட்டு, நான்கு கோணங்களில் காதலை படம் பிடித்துக் காட்டினார் பால சந்தர். திரைக்கதையை மிகத் திறமையாக அமைத்தார்.
கதையின் நாயகி சுஜாதா, இசைக்கலைஞன் ரவிக்குமாரை (புதுமுகம்) காதலிக்கிறார். அவர் எழுதும் கடிதங்கள் ரவிக்குமாருக்கு போய்ச் சேராததால், ரஜினிகாந்துக்கு கழுத்தை நீட்டுகிறார். ரஜனிகாந்த், ராமநாதன் என்ற கதாபாத்திரத்தில் நடித்தார். மனைவியை துன்புறுத்தி மகிழும் ‘சாடிஸ்ட்’ அவர்.
மனைவியை கட்டித் தழுவும் போது கூட, இந்த மாதிரி அணைத்தால் உனக்குப் பிடிக்குமா? உன் பழைய காதலன் உன்னை எப்படி அணைப்பான்? என்று. வார்த்தைகளால் தேள் போல கொட்டுவார்.
இதனால் இருவரும் விவாகரத்து செய்து கொள்ளும் நிலைமை ஏற்படுகிறது. குழந்தையுடன் சென்னையில் ஒரு கம்பெனியில் வேலைக்குச் சேருகிறார் சுஜாதா.
அங்கு கமலஹாசன் (கதாபாத்திரத்தின் பெயர் ஜானி) வேலை பார்க்கிறார். மனைவியை இழந்தவர். எல்லோருக்கும் உதவி செய்யும் நல்லவர். அவருக்கு தோழனாக இருப்பது ‘ஜுனியர்’ என்ற பெயருள்ள பேசும் பொம்மை.
அவர், சுஜாதாவுக்கு உதவிகள் செய்கிறார். கமல் வீட்டிலேயே குடியேறுகிறார், சுஜாதா.
சுஜாதாவின் கதையை அறியும் கமல், அவரை மனதுக்குள் நேசிக்கிறார். ஆனால், அது ஒரு தலைக்காதல்.
இந்த சமயத்தில், சுஜாதாவின் பழைய காதலன் ரவிக்குமார் பக்கத்து வீட்டில் வசிப்பது சுஜாதாவுக்குத் தெரிகிறது. இருவரும் சந்தித்துப் பேசும் போது, ரவிக்குமார் நிரபராதி என்பது சுஜாவுக்குத் தெரிகிறது.
இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்கிறார்கள். இந்த சமயத்தில் சுஜாதா வேலை பார்க்கும் கம்பனியின் மனேஜராக மாற்றல் ஆகிவருகிறார் ரஜினி. தான் திருந்திவிட்டதாக கூறி, சுஜாதாவுக்கு பல உதவிகள் செய்கிறார்.
இதனால் சுஜாதாவின் மனம் மாறுகிறது. கணவருடன் சேர்ந்து வாழ முடிவு செய்கிறார். அவருடைய வேண்டுகோளை ஏற்று வேறு பெண்ணை மணக்கிறார், ரவிக்குமார்.
இந்த கல்யாணம் முடிந்து சுஜாதா வீடுதிரும்பும் வேளையில் ஒரு வட இந்தியப் பெண் கைக்குழந்தையுடன் வந்து, தன்னை ராமநாதனின் (ரஜினி) மனைவி என்று கூறுகிறாள்.
இதைத் தொடர்ந்து நடைபெறும் சம்பவங்களால், ரஜினி மாறவே இல்லை என்பதை சுஜாதா தெரிந்து கொள்கிறார். ஏன் இப்படி செய்தீர்கள்? என்று சுஜாதா கேட்க நீ மறுமணம் செய்வதை தடுக்கவே அப்படிச் செய்தேன். நீ கதறி அழுவதை பார்க்க வேண்டும் என்பதே என் ஆசை! என்கிறார் ரஜினி.
மன உறுதி படைத்த சுஜாதா என்னை அழவைக்க மட்டும் உன்னால் முடியாது என்று கூறிவிட்டு, திருவனந்தபுரத்திற்கு ரயில் ஏறுகிறார்.
கண்ணீருடன் அவரை வழியனுப்பி வைக்கிறார், கமல்.
இந்தப் படத்தில் ஆன்டி ஹீரோ வேடத்தில் அற்புதமாக நடித்திருந்தார், ரஜினி.
மலையாளம் கலந்த தமிழிலே பேசி நடித்து, ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார் கமல்.
சுஜாதாவும் மிகச்சிறப்பாக நடித்தார்.
தன் மகன், சுஜாதாவை மணந்து அநியாயமாக கைவிட்டதை அறியும் ரஜினியின் தாயார். வேலைக்காரியாக மாறி சுஜாதாவுக்கு உதவுவது அருமையான குணச்சித்திர கதாபாத்திரம்.
மொத்தத்தில் ‘அவர்கள்’ பெரிய வெற்றிப்படமாக அமைந்ததோடு, ரஜினியின் நடிப்புக்கு ஒரு மைல்கல்லாக அமைந்துள்ளது. ‘எனக்கு நட்சத்திர அந்தஸ்தை பெற்றுத்தந்த படம் அவர்கள்’ என்று ரஜினி குறிப்பிட்டுள்ளார்.

சிவாஜியின் மனைவி ரத்னமாலா நாடக நடிகை மட்டுமல்ல சிறந்த பாடகி


சிவாஜியின் மனைவி கமலாம்மா என்பது நம் எல்லோருக்கும் தெரியும். ஆனால் சிவாஜிக்கு இன்னொரு மனைவி இருந்திருக்கிறார் என்பது தெரியுமா?
அந்தப் பெண்மணியின் பெயர் ரத்னமாலா சென்னை தியாகராய நகரில்தான் வசித்து வந்திருக்கிறார். கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்த பெண்மணி அவர் வீட்டு வாசலில் ‘ரத்னமாலா கணேசன்’ என்று பெயர்ப் பலகை இருந்துள்ளது. அந்த கணேசன் ஜெமினி கணேசனாக இருக்குமோ என்று பலர் குழம்பியிருக்கிறார்கள். இல்லை, அது சிவாஜி கணேசனைக் குறிப்பதுதான்.
ரத்னமாலா ஒரு நாடக நடிகை. ‘என் தங்கை’ படத்தில் எம். ஜி. ஆரின் தங்கையாக நடித்தவர் ஈ. வி. சரோஜா. அது படமாவதற்கு முன்பு நாடகமாக நடத்தப்பட்டது. அதில் எம். ஜி. ஆரின் தங்கையாக நடித்தவர் ரத்னமாலாதான். ‘என் தங்கை’ நாடக ரிகர்சல் எங்கே, எப்போ நடந்தாலும் தம்பி கணேசன் தவறாமல் வந்துடுவார் என்று எம். ஜி. ஆர். குறும்புப் புன்னகையோடு கமெண்ட் அடிப்பது வழக்கமாம். விஷயம் தெரியாதவர்களுக்கு இது சாதாரணமாகப்படும். சிவாஜி ரத்னமாலாவை நேசித்தார் என்று தெரிந்தவர்களுக்கு மட்டுமே அதன் உள்ளர்த்தம் புரியும்.
‘இன்பக் கனவு’ நாடகத்தில் எம். ஜி. ஆரின் ஜோடியாக நடித்தார் ரத்னமாலா. ‘பராசக்தி’ திரைப்படமாக எடுக்கப்படுவதற்கு முன்பு பலமுறை நாடகமாக நடிக்கப்பட்டது. அதில் சிவாஜிக்கு ஜோடியாக நடித்தவர் ரத்னமாலாதான்.
அதேபோல ‘வீரபாண்டிய கட்டபொம்மன் நாடகத்திலும் சிவாஜிக்கு ஜோடியாக ஜக்கம்மாவாக (திரைப்படத்தில் இந்த கேரக்டரைச் செய்தவர் எஸ். வரலட்சுமி) நடித்திருக்கிறார் ரத்னமாலா. சிலர் ‘எங்க வீட்டுப் பிள்ளை’ படத்தில் எம். ஜி. ஆருடன் ஜோடியாக ‘நான் மாந்தோப்பில் நின்றிருந்தேன்’ என்று பாடி ஆடிய நடிகைதான் ரத்னமாலா என்று தவறாக நினைத்துக் கொண்டு இருக்கிறார்கள் அல்ல; அவர் வெறும் ‘ரத்னா’ ரத்னமாலா திரைப்படங்களில் நடித்திருப்பதாகத் தெரியவில்லை.
ரத்னமாலா ஒரு நடிகை மட்டுமல்ல, நல்ல பாடகியும்கூட. படு ஹிட்டான பாடல் ஒன்றைச் சொன்னால் ‘அட அவரா என்பீர்கள். வீரபாண்டிய கட்டபொம்மன் படத்தில் ‘போகாதே போகாதே என் கணவா...’ பாடலைப்பாடியது ரத்னமாலாதான். ‘குமார ராஜா’ என்கிற படத்தில் ஜே. பி. சந்திரபாபு பாடிய ‘ஒண்ணுமே புரியலே உலகத்திலே’ பாடல் நமக்குத் தெரியும். அதே படத்தில் சந்திரபாபுவுடன் இணைந்து, ‘உன் திருமுகத்தை ஒருமுகமா திருப்பு’ என்ற பாடலைப் பாடியிருக்கிறார் ரத்னமாலா.
 ‘அன்னை என்றொரு படம், பி. பானுமதி நடித்தது. அதில் சந்திரபாபுவுடன் இணைந்து ‘தந்தனா பாட்டுப் பாடணும், துந்தனா தாளம் போடணும்’ என்று பாடுபவர் ரத்னமாலாதான். அதேபோல ‘குலேபகாவலி’ படத்தில் ‘குல்லா போட்ட நவாபு செல்லாதுங்க ஜவாபு’ பாடலைப் பாடியதும் ரத்னமாலாதான். வாழ்க்கை, ராணி சம்யுக்தா என இப்படி அவர் சுமார் 100 படங்களுக்கு மேல் பாடியிருக்கிறார்.
சிவாஜி ரத்னமாலாவை ஊரறியத் திருமணம் செய்துகொள்ள முயன்றபோது அவரைத் தடுத்து, ‘வேண்டாம்! உங்களிடம் மிகச் சிறந்த நடிப்புத் திறன் இருக்கிறது. நீங்கள் மேலும் மேலும் உயரங்களுக்குப் போக வேண்டியவர். உங்கள் இமேஜ் பாழாகிவிடக் கூடாது. ஊரறிய நம் திருமணம் நடக்கவில்லை என்றாலும், நான் உங்கள் மனைவிதான் அதில் சந்தேகம் இல்லை. நீங்கள் உங்கள் குடும்ப வாழ்க்கையைத் தொடருங்கள். அதில் குறுக்கே வர நான் விரும்பவில்லை என்று தீர்மானமாக மறுத்து ஒதுங்கிவிட்டார் ரத்னமாலா.
சிவாஜியின் மனைவி கமலாவுக்கும் இந்த விஷயம் தெரியும் என்றும், அவர் ரத்னமாலாவை தன் மனதில் மிகவும் உயர்ந்த இடத்தில் வைத்துப் போற்றினார் என்றும் சொல்கிறார்கள். சிவாஜி எந்த ஒரு புதுப் படத்தில் ஒப்பந்தம் ஆனாலும், எந்த ஒரு நல்ல செய்தி கிடைத்தாலும், முதலில் ரத்னமாலா வீட்டுக்குப் போய் அந்த சந்தோஷத்தைப் பகிர்ந்துகொள்வார் என்கிறார்கள். சிவாஜிக்கும் ரத்னமாலாவுக்கும் பிறந்த பெண் குழந்தையின் பெயர் லைலா. லைலாவின் கணவர் பெயர் தன்ராஜ். இவர் ஒரு நாடக நடிகர். விஷயம் தெரிந்தவர்கள் தன்ராஜை ‘சிவாஜியின் மருமகன்’ என்றே அழைப்பார்களாம்.
கடைசி காலத்தில் இதய நோயால் பாதிக்கப்பட்ட ரத்னமாலா 2007 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 3 ஆம் திகதியன்றுதான் இறைவனடி சேர்ந்தார். சாகும்போது அவருக்கு வயது 76 அவர் தம் கண்களை தானமாக எழுதி வைத்திருந்தார். தென்னிந்திய நடிகர் சங்கத்தின் சார்பில் சரத்குமார், மனோரமா, மஞ்சுளா உள்ளிட்ட பலர் சென்று அஞ்சலி செலுத்தினார்கள்.
கோவலனை மட்டுமே மனதில் நிறுத்தி கற்பு நெறியிலிருந்து பிறழாமல் வாழ்ந்ததால், சிலப்பதிகாரத்தில் கண்ணகிக்குச் சமமான இடம் மாதவிக்கும் உண்டு. அதேபோல, எந்தவொரு இடத்திலும் தன்னை வெளிப்படுத்திக் கொள்ளாமல், தன்னை நேசித்த சிவாஜியின் நலனையும் உயர்வையும் மட்டுமே கருத்தில் கொண்டு, அவரின் உண்மையான மனைவியாக வாழ்ந்து மறைந்த ரத்னமாலா அநேகரின் மனதில் ரத்தின மாலையாகவே ஜொலிக்கிறார்.

Wednesday, January 16, 2013

இனியாவாக மாறிய சுருதி சாவந்த்

முதல் படத்திலேயே ‘வாகை சூடிய நாயகி’ மாடலிங் வருகை என்றாலும், அழுக்கு சுமந்த அவரது பாத்திரம், முழு ‘மதியாய் ரசிகர் மனதில் பதிந்தது. தமிழ் பாரம்பரியம் பளிச்சிடும் முகம் என்றாலும், இறக்குமதியானது கேரளாவிலிருந்து, இவ்வளவு கூறிய பின், ‘சஸ்பென்ஸ் எதற்கு?’ சரசர சாரக் காத்து வீசும் போதும்... சாரை பார்த்து பேசும் போதும்... வரிகளுக்கு, வாய்க்கால், வயல்களில் புரண்டு, விழுந்தவர் சொரி, நடித்தவர், நடிகை இனியா.
சுருதி சாவந்த் என்ற பெயரை, இனியாவாக மாற்றியது தமிழ் சினிமா. 2005ல் ‘மிஸ் திருவனந்தபுரம் ‘டி. வி சீரியவ்கள், குறும்படங்களில் கலக்கிய இனியா, 2010ல் தமிழில் தலை காட்டினார். ‘வாகை சூடவா, மெளனகுரு, அம்மாவின் கைபேசி, என யதார்த்த பாத்திரங்களில் அடைக்கப்பட்டார். அதன் பிறகே, அவர் பிறந்த கேரளாவில், இனியாவிற்கான கதவு திறந்தது. தமிழ் மலையாளத்தில் ‘பிஸி ஆன இனியா, மாசாணி படப்பிடிப்பிற்கு காரைக்குடி வந்த போது, சிறிது நேரம் மடக்கினோம். இதோ தன் இனிமையைப் பகிர்கிறார் இனியா.
முதல் படத்தில் டீ மாஸ்டர்; முன் அனுபவம் உண்டோ? அப்போ... கிச்சன் பக்கம் யார் போனது? படத்திற்காக மதுரையிலிருந்து வரவழைக்கப்பட்டவர், கற்றுத்தந்தார். 50 படத்தில் நடித்த அனுபவத்தை, அந்த கதாபாத்திரம் தந்தது. அப்படம் தேசிய விருது வாங்கியதும், அடைந்த மகிழ்ச்சிக்கு அளவில்லை.
* தமிழ், மலையாளம், இருபடங்களை வேறுபடுத்தும் விஷயம்? பிரமாண்டம், தமிழ் படங்களில் எதிர்ப்பார்ப்பை கடந்த பிரமாண்டம் உள்ளது.
* மாடர்ன் பொண்ணு, அழுக்காய் நடித்துவிட்டீர்களே?
அழகை விட, கதை தான் முக்கியம். அந்த கதாபாத்திரம் தான், என்னை நிலைக்க வைத்தது.
* “ யதார்த்த நாயகிகள் நீடித்ததில்லை தெரியுமா?”
அனைத்து கதாபாத்திரத்திலும், நடிப்பேன். சேலையில் வந்த என்னை, இனிவரும் படங்களில் பாருங்கள்!
* கேரள நடிகைகளுக்கு தமிழ் சினிமாதான் அறிமுக களமா?
பல ஆண்டுகளுக்கு முன்பிருந்தே. கேரள நடிகைகளின் “தமிழ் படையெடுப்பு தொடர்கிறது. தமிழ் வாய்ப்புக்கு பிறகே, கேரளக் கதவு திறக்கிறது.

மலையாள தமிழச்சி ரம்யா நம்பீசன்

‘மலையாள தமிழச்சி’ என அழைக்கலாம் அந்தளவுக்கு தமிழை திருத்தமாக உச்சரிக்கிறார் ரம்யா நம்பீசன். ‘ரெண்டாவது படம்’, ‘யா யா’ உள்ளிட்ட படங்களில் பிஸியாக இருப்பவர் வசம் நான்கு மலையாளப் படங்களும் இருக்கின்றன.
ஹன்சிகா, அமலா பால்ன்னு உங்களுக்கு பின்னாடி வந்தவர்கள், எங்கேயோ போய் விட்டார்கள். உங்களால் ஏன் முடியவில்லை?
சினிமாவை நான் இப்போதுதான் சீரியஸாக பார்க்க ஆரம்பித்திருக்கிறேன். வருஷத்துக்கு இரண்டு மூன்று படங்கள் என மலையாளத்தில் வாய்ப்பு வரும். அது மட்டுமே போதும் என நினைத்துக் கொண்டேன். மலையாள சினிமாவைத் தவிர வேறு எங்கேயும் போகக் கூடாது என்ற முடிவிலும் இருந்தேன். சென்னைக்கு வந்த போதுதான், சேரன் சேரின் ‘ராமன் தேடிய சீதை’ படத்தில் நடிக்க அழைத்தார்கள்.
சேரன் சேர் சினிமா எனக்கு ரொம்பவே பிடிக்கும். ‘ஓட்டோகிராப்’ என் ஓல் டைம் பேவரைட் மலையாள சினிமா உலகையே சேரன் சேர் பேச வைத்தார். அதனால் அவரை பிடிக்கும். ‘ராமன் தேடிய சீதை’ நல்ல படம். இருந்தாலும் சரியாகப் போகவில்லை. அதன் பின் தமிழ்ப் பட வாய்ப்புகள் வரவில்லை.
யாராவது அழைத்தால் பார்க்கலாம் என இருந்தேன். சினிமாவில் ஆர்வம் இருந்ததே தவிர அங்கே எப்படி வேலை பார்க்கலாம் என்பதற்கான ஐடியாவே இல்லை. ‘ராமன் தேடிய சீதை’ படத்தில் கிடைத்த ஓப்பனிங்கையும் தவற விட்டு விட்டேன். அதன் பின் நான் தேர்ந்தெடுத்த இரண்டு, மூன்று படங்கள் தவறாக இருந்திருக்கலாம் என இப்போது தோன்றுகிறது.
அதனால்தான் இப்போது மீண்டும் முதலில் இருந்து ஆரம்பிக்கிறேன். அந்த கணக்கின் தொடக்கம்தான் ‘பீட்சா’ இப்போதுதான் புதிதாக நடிக்க வந்த மாதிரி சின்சியராக இருக்கிறேன். அதே சமயம் கதை தேர்வுகளிலும் நேர்த்தி இருக்கும். அடுத்த பேட்டியின் போது நீங்க இந்த கேள்வியை நிச்சயம் கேட்க மாட்டீங்க.
கிளாமரில் உங்களை அதிகமாக பார்க்க முடிவதில்லையே. ரேவதி, சுஹாசினி மாதிரியான கேரக்டர்கள்தான். உங்களுக்கு எடுபடும் என நீங்களே முடிவு எடுத்து விட்டீர்களா?
ஆமாம் எனக்கு கிளாமர் சுட்டுப் போட்டாலும் வராது நிச்சயம் தமிழ் சினிமாவில் என் கேரக்டர்கள் புதிதாக இருக்க வேண்டும். அந்த எண்ணம் மட்டும்தான் இப்போது இருக்கிறது. நான் ரொம்பவே போல்டான பொண்ணு ஆனால் ஸ்டைலான பொண்ணு கிடையாது. எனக்கு எது வருமோ அதை மட்டுமேதான் முயற்சி செய்வேன்.
எதையும் யாரும் என்னிடம் திணிக்க முடியாது. ஒரு பாடலில் இடுப்பு தெரிய டான்ஸ் ஆடினேன். அதை பற்றி என்னிடம் முதலில் சொல்லவே இல்லை. திடீரென்று கேட்டார்கள். தயாரிப்பாளருக்கு சிரமம் கொடுக்க கூடாதென ஆடினேன். என் கேரக்டர்களிலும், படங்களிலும் ரசிகர்கள் நேர்த்தியை மட்டுமே எதிர்பார்க்க வேண்டும்.
கிளாமரை எதிர்பார்த்தால் அதற்கு நான் ஆளில்லை. போல்டா, கிளாமரா ஒரு கேரக்டர் வந்து அதற்கு கிளாமர் தேவைப்பட்டால் நடிக்கலாம். ஆனால் அதற்கும் நிறைய யோசிப்பேன். முதல் இடம். அதிக சம்பளம் மட்டுமே எனக்கு தேவையில்லை. அதில் எனக்கு ஈர்ப்பும் இல்லை.
‘பீட்சா’வுக்குப் பின் எதிர்பார்ப்பு கூடியிருக்கிறது. இந்த சமயத்தில் இப்படி துணிச்சலா பேசுaங்க. சினிமாவில் இது சரியாக வருமா?
ன் நடிப்பை மட்டுமேதான் நம்பி இங்கே வந்திருக்கிறேன். அதற்கான கதைகள் மட்டுமே எனக்கு கிடைத்தால் போதும். இப்போது ‘ரெண்டாவது படத்தில் இதுவரை பார்க்காத ரம்யாவை நிச்சயம் பார்க்கலாம். கயல்விழின்னு நல்ல கேரக்டர்.
‘நீங்கதான் இதுக்கு பொருத்தம்’ன்னு அழைத்து வாய்ப்பு தந்தார். அமுதன் சேர் அவருக்கும் எனக்கும் என்ன சம்பந்தம் நான் வாய்ப்பு கேட்கவே இல்லை மலையாளத்தில் வருகிற வாய்ப்புகளே எனக்கு போதும். தமிழில் மனசுக்கு பிடித்த பத்து சினிமாவில் நடித்தாலே போதும்.
அமுதன் சார் படத்தில் விமல், விஜயலெட்சுமி பெரிய கூட்டமே இருக்கிறது. எல்லோரும் தங்களை ஒரு விதத்தில் நிரூபித்தவர்கள். அதில் நான் எப்படி தெரிகிறேன் என பாருங்கள். அப்படி தெரிந்தால் என்னை பாராட்டுங்கள் அழைத்து வாய்ப்பு கொடுங்கள். நல்ல கேரக்டர் என்றால் என்னை வருத்தியும் நடிக்க நான் தயார். சினிமாவில் ஜெயிக்க ஒரு நடிகைக்கு இதைவிட வேறு ஏதாவது வேண்டுமா என்ன?
இருந்தாலும், ஸ்டார் ஹீரோக்களின் பார்வை பட்டால் தான் நல்லது.

தமன்னா காட்டில் மழை

தமன்னா இப்ப இன்னும் அழகா இருக்கீங்க?
ஹைய்யோ... தேங்க் யூ! உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால் கொஞ்சம் வெயிட் போட்டு விட்டேன். இரவுத் தூக்கம் இல்லாததால் சொக்க வைக்கும் அழகு இப்போது என்னிடம் இல்லை பொலிவுட்டில் இரண்டு, தெலுங்கில் ஒரு படம் என எல்லா நாளுமே ஷ¥ட்டிங்குதான்.
நல்ல சினிமா, நல்ல இடம் இது இரண்டிலும் நான் இருக்க வேண்டும் என்கிற ஆசை, எப்போதும் என்னை விட்டு போகாது. தமிழ் சினிமாவில் சில விஷயங்கள் எனக்கு எதிராக நடந்த போது துணைக்கு வந்தவர்கள் சிலரே, என்னை வைத்து இலாபம் பார்த்தவர்கள், படத்தை விற்றவர்கள் என யார் மீது குறை சொல்ல முடியாது எனக்கென்று எந்த இடம் இருக்கிறதோ அந்த இடத்தில் நான் நிச்சயம் இருப்பேன். நீங்கள் சொல்லும் அழகு என்ற வார்த்தை உண்மையானதோ இல்லையோ, நான் சந்தோஷமாக இருக்கிறேன். அது போதாதா?
‘எனக்கு தமன்னாதான் ஜோடி’என்னு அஜித்தே அறிவிக்கிறார். இப்படி பெரிய சிபாரிசுகள் இருந்தும் ஏன் தமிழ் சினிமாவில் இந்த நிராகரிப்பு. வெளிப்படையாக பேச முடியுமா?
அஜித்துக்கு நல்ல மனசு. அவருக்கு நன்றி. ‘படிக்காதவன்’, ‘அயன்’, ‘சிறுத்தை’ என தொடர்ந்து ஹிட் படங்கள் என் கேரியரை நிரப்பிய போது, அடுத்தடுத்த பட வாய்ப்புகளை சிலர் தடுத்தார்கள். அதுதான் காரணமாக இருக்கலாம். சில விஷயங்களை வெளிப்படையாக பேசி விட முடியாது. சினிமாவில் சில விஷயங்களை ரகசியம் காத்தே ஆக வேண்டும்.
எனக்கெதிரான சிலரின் முடிவுகளை தகர்த்தெறிந்து இப்போது மீண்டும் தமிழுக்கு வந்து விட்டேனே. அது போதும். நண்பர்கள் யார், எதிரிகள் யாரென்று எனக்கு தெரிந்து விட்டது. குறிப்பிட்ட காலம் வரைக்கும்தான் ஹீரோயினுக்கு மார்க்கெட் அதை யாராலும் மாற்றி விட முடியாது. நம்பர் ஒன், நம்பர் டூ இதிலெல்லாம் எனக்கு நம்பிக்கை இல்லை. இப்போதும் ரசிகர்கள் எனக்காக காத்திருப்பார்கள். அந்த நம்பிக்கை மட்டுமே போதும்.
இப்படி சொன்னால் எப்படி ஹன்சிகா, அமலாபால், அஞ்சலி போன்ற சில பேர்தான் உங்களின் வாய்ப்புகள் நழுவ காரணமா?
உங்க பேட்டிக்கு நீங்கள் சுவாரஸ்யம் தேடுகிaர்கள். தவறில்லை இன்னும் பேசுவதற்கான காலம் இருக்கிறது. நேரம் வரும் போது சிலவற்றை நானே பேசுவேன். யார் மீதும் தனிப்பட்ட முறையில் வெறுப்பு இல்லை. இது மாதிரி விஷயங்களில் எல்லோருக்கும் வரும் கோபம்தான் எனக்கும் வந்திருக்கிறது. எல்லாத் துறைகளிலும் போட்டிகள் உண்டு. சினிமாவில் அது இன்னும் தீவிரமாக இருக்கும். என்னிடம் திறமையில் போட்டி போடுவதை காட்டிலும், என் வாய்ப்புகளை தட்டிப் பறித்தவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். ஆனால் நீங்கள் குறிப்பிடுகிறவர்களை நான் சந்தித்தது கூட கிடையாது. தொடர்ந்து ஸ்டார் படங்கள், எல்லாமே ஹிட். இப்படி ஒரு சூழலில் தமன்னா ஏன் தமிழ் சினிமாவில் இல்லை. யோசித்து பாருங்கள். (ப்Zஸ்... இனி சீரியஸ் கொஸ்டீன் வேண்டாமே)
கொலிவுட்டை விடுங்க, அதுதான் பொலிவுட் வரைக்கும் போயிட்டீங்களே.... எப்படி இருக்கு பொலிவுட் அனுபவம்?
சூப்பர்.... தமிழ் நாட்டிலிருந்து மும்பைக்கு போனதுமே, ஷ¥ட்டிங் ஆரம்பித்துவிட்டது. படத்தின் பெயர் ‘ஹிம்மத்வாலா’ நல்ல யூனிட் ரொம்பவே நல்லா பார்த்துக் கொண்டார்கள். பிறந்து வளர்ந்து படித்ததெல்லாம் மும்பைதான். அதனால் ஹிந்தி நல்லாவே வரும். வசனம் புரியாமல், பேசத் தெரியாமல் எந்த இடத்திலும் திணறி நிற்கவில்லை.
‘நல்லா ஹிந்தி பேசுaங்க. நிச்சயம் உங்களுக்கு நல்ல எதிர்காலம் இருக்குன்னு அங்கிருந்த ஒருவர் ஆசீர்வதித்தார். அந்த வாழ்த்துக்கள் என்னை நல்ல இடத்துக்கு கொண்டு போகும். ஆறே மாதங்களில் ஹிந்தியில் ஒன்று. தெலுங்கில் இரண்டுன்னு மூன்று படங்கள் முடிந்துவிட்டது. நினைத்துப் பார்த்தாலே மகிழ்ச்சியாக இருக்கிறது- இப்போதும் எனக்கேற்ற கதை. இயக்குநர்கள்ன்னு யோசனை போகிறது. இருந்தாலும் தமிழ் சினிமாதான் பெஸ்ட் இங்கே மட்டும்தான் இருக்க வேண்டும். அதற்கான முயற்சிகளில் தான் இப்போது இருக்கிறேன்.

கார்த்திகாவின் கவர்ச்சி நடிப்பு ஆரம்பம்!

கோ பட நாயகியான கார்த்திகா அந்த படத்திற்கு பிறகு பாரதிராஜா இயக்கியுள்ள அன்னக்கொடியும் கொடிவீரனும் படத்தில் ஆடுமேய்க்கும் கிராமத்து பெண்ணாக நடித்துள்ளார். இந்தப் படத்தில் நடித்தபோது அவரைத்தேடி பல வாய்ப்புகள் சென்றன. ஆனால் நான் பாரதிராஜா பட நாயகி ஆகிவிட்டேன். அதனால் இனிமேல் நார்மலான கதைகளில் நடிக்க மாட்டேன்.
கதைகளில் கதாநாயகனுக்கு இணையாக எனக்கும் முக்கியத்துவம் இருந்தால் மட்டுமே நடிப்பேன். அதோடு கிளாமர் விசயத்தில் கட்டுப்பாடு காப்பேன் என்று புதிய கண்டிசன்களை அள்ளிப்போட்டார். இதன்காரணமாக அதிர்ச்சியடைந்த இயக்குனர்கள். இப்பவே இப்படியென்றால் ஸ்பாட்டுக்கு வந்த பிறகு என்னென்ன பில்டப் கொடுப்பாரோ என்று சொல்லாமல் கொள்ளாமல் ஓட்டம் பிடித்து விட்டனர்.
விளைவு தன்னை கோடம்பாக்கமே தலையில் தூக்கி வைத்துக்கொண் டாடப்போகிறது என்று கனவு கண்டுகொண்டிருந்த கார்த்திகாவுக்கு தற்போது மார்க்கெட்டே இல்லாத அருண்விஜய் நடிக்கும் டீல் என்ற படம் மட்டுமே கைவசம் உள்ளது. அதனால் இனியும் அமைதியாக இருந்தால் இந்தப் படத்தோடு நமக்கு டாடாகாட்டி விடுவார்கள் என்பதை புரிந்து கொண்ட நடிகை, இப்போது சில மெகா பட்ஜெட் டைரக்டர்களை சந்தித்து அதிரடி கவர்ச்சிக்கு தான் மாற முடிவெடுத்திருப்பதாக காது கடித்து வருகிறார். அதோடு, முன்னணி ஹீரோ படம் என்றால் நீச்சல் உடை நடிகையாகவும் மாறத் தயார் என்றும் அவசர செய்தி வாசித்திருக்கிறார்.
இதனால் கார்த்திகாவின் வாட்டசாட்டமான உடல்கட்டு கவர்ச்சிப்பிரியர்களுக்கு நல்ல தீனியாக இருக்கும் என்று நினைக்கும் சில இயக்குனர்கள் அடுத்தடுத்து அவருக்கு சான்ஸ் கொடுக்கும் தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளனர்.

மூன்றாவது தலைமுறை நடிகை ஐஸ்வர்யா


குமாரி, ருக்மணி, லட்சுமி, இவர்களைத் தொடர்ந்து மூன்றாவது தலைமுறை நடிகையாக தமிழ் சினிமாவில் வலம் வந்து கொண்டிருக்கிறார் ஐஸ்வர்யா. ரஜினி, கமல், சூர்யா, விக்ரம், பிரபு போன்ற பலருடன் வெள்ளித் திரையில் நடித்தவர். தற்போது ஜெயா டி.வி.யில் ஒளிபரப்பாகி வரும் ஏ. வி. எம்.மின் ‘மனதில் உறுதி வேண்டும்’ தொடரில் நடித்து வருகிறார். அவருடனான சந்திப்பிலிருந்து....
தற்போது நடித்து வரும் தொடர், படங்கள் பற்றி சொல்லுங்கள்?
இப்போதுதான் ஒரு தமிழ் படம் முடிந்தது. அடுத்து தெலுங்கு நடிகர் மோகன்பாபு மகள் இயக்கி வரும் ‘வருவான் தலைவர் தமிழ் படத்தில் நடிக்கிறேன். அதன் தெலுங்கு பதிப்பிலும் நான் நடித்திருந்தேன். அதே கேரக்டரில் இப்போது தமிழில் நடிக்கிறேன்.
அடுத்து ‘ஓடுதளம்’ என்கிற தமிழ் படம் அதன் இயக்குநர் சசி மோகன் சேர் அவர் திடீர்ன்னு இறந்துட்டாரு. அந்தப் படமும் இப்போது ரிலீஸ் செய்யப் போறங்க, இதை தவிர மூன்று மலையாளப் படங்களில் நடித்து வருகிறேன். இதனால் சீரியல்களில் அவ்வளவாக கவனம் செலுத்த முடியவில்லை.
இப்போதைக்கு ஜெயா டி.வி.யில் ஒளிபரப்பாகி வரும் ஏ. வி. எம்.மின் ‘மனதில் உறுதி வேண்டும்’ தொடரில் மட்டும் தான் நடித்து வருகிறேன். அதில் ராம்ஜி சேரோட சித்து கேரக்டர் செய்கிறேன். சின்னதா நெகட்டிவ் ரோல் மாதிரி இருக்கும். ஆனால் வில்லி கேரக்டர் கிடையாது.
தென்றல் தொடரில் உங்கள் கதாபத்திரம் பேசும்படியாக இருந்ததே அதில் இருந்து ஏன் வெளியே வந்தீங்க?
நான் வெளியே வரவில்லை. அந்த நேரத்தில் எனக்கு தெலுங்கு பிராஜக்ட் ஒண்ணு போய்கிட்டு இருந்தது. அப்போது டேட்ஸ் பிரச்சினையால் ரெண்டு புரொடியூசருக்குள்ளும் சில கருத்து வேறுபாடு ஆகிவிட்டது. ஒரே ஒரு நாள் ரெண்டு பேருமே விட்டுக் கொடுக்கவில்லை. அதனால் நான் வெளியே வர வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுவிட்டது.
இல்லை என்றால் அது போன்ற ஒரு நல்ல பேனரில், நல்ல இயக்குநர், நல்ல கதாபாத்திரம், பிரபல சேனல் அப்படியிருக்கும் போது நான் ஏன் வெளியே வரவேண்டும்? ரெண்டு பேருக்கும் விட்டுக் கொடுக்க மனமில்லாததால் நான் பாதிக்கப்பட்டேன். அவ்வளவு தான். அப்பவே முடிவு பண்ணிட்டேன் இனி ரெண்டு மெகா தொடர்கள் ஒரே நேரத்தில் செய்யக் கூடாதுன்னு.
நீங்கள் சினிமாவுக்கு வந்து பல வருடங்கள் ஆகிவிட்டது. நடிப்பை தவிர தயாரிப்பு, இயக்கம் என டெக்னிக்கல் பக்கம் போகாதது ஏன்?
அய்யோ தயாரிப்பு வேண்டாம். இயக்கம் பக்கம் கொஞ்சம் ஆர்வம் இருக்கு. அதற்கான முயற்சிகள் செய்து வருகிறேன். கதையெல்லாம் எழுதி தயார் செய்து விட்டேன். அபியும் நானும் படத்தின் போதே ராதாமோகன் சேர்கிட்ட அந்த கதையை பற்றி விவாதித்தேன். அவர் கதை நல்லா இருக்கு நீங்க செய்யலாம்ன்னு ஐடியா கொடுத்தாரு. குடும்பம் நடிப்புன்னு இருப்பதால் டயலொக் எழுத நேரம் கிடைக்கவில்லை. இப்போ எழுதி வருகிறேன் விரைவில் படத்தை இயக்கவிருக்கிறேன்.
குடும்பம், நடிப்பு எப்படி சமாளிக்கிaங்க?
எங்க குடும்பத்தில் எல்லோருமே இப்படித்தான், கேரியர், குடும்பம் ரெண்டுமே சூப்பரா செய்துடுவோம். அம்மா இப்பவும் அப்படி தான். பாட்டி இருக்கும் போதும் அப்படி தான் வீட்டு வேலைகள் அனைத்தையும் நாங்களே செய்துவிடுவோம். சமைப்பது துணி துவைப்பது, என் பொண்ணு அனேனாவுக்கு சாப்பாடு கொடுப்பது என எல்லாமே என் வேலை தான். உண்மையா சொல்லனும்ன்னா அவுஸ் ஓய்ப் வேலை தான் ரொம்ப ரொம்ப கடினம். நடிப்பது சுலபமா செய்துடுவேன். ஹோட்டலில் சாப்பிடுவது எனக்கு பிடிக்காது. எத்தனை மணி ஆனாலும் நானே போய் தான் சமைப்பேன். சமைப்பது எனக்கு ரொம்பவும் பிடிக்கும். எல்லோரும் என்னை கேலி செய்வார்கள். ஐஷ¥ கிச்சன்னு ஒண்ணு ஆரம்பித்துவிடுன்னு.

அமலா பால்


விஜய்க்கு ஜோடியாக அறிவிக்கப் பட்டதில் இருந்து அமலாபால் செய்யும் அழிச்சாட்டியம் கொஞ்சம் நஞ்சமல்ல. ஏற்கனவே தான் நடித்துக்கொண்டிருந்த படப்பிடிப்பு தளங்களுக்கு அதன்பிறகு செல்லும் போது இவர்செய்த பந்தாக்கள் ஓவராகவே இருந்ததாம். அதற்கு முன்புவரை கொடுத்த வசதிகளை அட்ஜஸ்ட் பண்ணிக்கொண்டு வந்தவர். அதன்பிறகு பைவ் ஸ்டார் ஹோட்டலாக இருந்தால் தங்குவதற்கு வசதியாக இருக்கும் என்று ஆரம்பித்தவர், இதுவரை தந்த கேரவன் சரியில்லை. அதனால் முன்னணி ஹீரோக்களுக்கு கொடுப்பது போன்று எனக்கும் நவீன கேரவன்களை கொடுங்கள் என்று சொடக் போட்டாராம்.
அதோடும் விடவில்லையாம். அந்த மனநிலையில் தன்னிடம் கதை சொல்வதற்காக தினமும் ஸ்பாட்டுக்கு அலைந்துகொண்டிருந்த சில புதுமுக இயக்குனர்களிடம் இப்ப நான் கதை கேட்கிற மூடிலேயே இல்லை. மனசு முழுக்க விஜய் சாருடன் நடிக்கப்போகிற படத்தைப்பற்றிய சிந்தனையில்தான் பறந்துகொண்டிருக்கிறது. அதனால் இப்போதைக்கு என்னை தொந்தரவு செய்யாதீர்கள் என்று விரட்டியடித்து விட்டாராம். இதற்கிடையே, கேரவனுக்குள் காலை ஆட்டியபடி அமர்ந்து விஜய் நடித்த படங்களையே போட்டுப் பார்த்துக்கொண்டிருந்த அமலாபால், டேக் ரெடியாகிவிட்டது என்று உதவி இயக்குனர்கள் வந்து ஒரு தடவைக்கு பலதடவை சொன்ன பிறகுதான் வேண்டாத வெறுப்பாக ஸ்பாட்டுக்கு வந்தாராம். அதைப்பார்த்து, படாதிபதிகளும், இயக்குனர்களும் செம டென்சன் அடைந்தாலும், அம்மணிக்கு சுக்கிரன் உச்சத்தில் இருப்பதால், இப்போதைக்கு மோத வேண்டாம் என்று அடக்கி வாசித்தார்களாம்.

Tuesday, January 15, 2013

ரஜனி விட்ட ரீல்

சீபூர்வராகங்கள் படத்தில் தான் நடிப்பது பற்றி, பெங்களூரில் உள்ள தன் நண்பர்களுக்கு ஏற்கனவே ரஜினி கடிதம் எழுதியிருந்தார்.
அபூர்வராகங்கள் படத்தின் கதாநாயனாக நடித்து வருகிறேன். திரைப்படக் கல்லூரியில் 36 பேர் படித்த போதிலும், டைரக்டர் பாலசந்தரின் பார்வை என் மீது மட்டுமே பட்டது. எனவே, எனக்குக் கதாநாயகன் வாய்ப்பைத் தந்திருக்கிறார் என்று அதில் குறிப்பிட்டிருந்தார்.
இது பற்றி ரஜினிகாந்த் ஒரு பேட்டியில் கூறியதாவது,
அபூர்வராகங்களில் சின்ன வேஷத்தில்தான் நான் நடித்தேன். அதைச் சொன்னால், இதற்காகவா 2 வருஷம் படித்துக் கிழித்தாய்! என்று நண்பர்கள் கிண்டல் செய்வார்களே என்று நினைத்தேன். அதனால் நான் தான் கதாநாயகன் என்று சும்மா ரீல் விட்டேன்.
1 வருடம், 1 1/2 வருடம் கழித்துதான் அபூர்வராகங்கள் பெங்களூருக்கு வரும் என்று நினைத்து தைரியமாக அப்படிச் சொன்னேன்.
ன்னுடைய துரதிர்ஷ்டம், படம் 2 மாதத்திலேயே பெங்களூருக்கு வந்துவிட்டது. அப்போது நான பெங்களூரில் இருந்தேன். என் நண்பர்களுக்கு ஒரே குஷி எனக்கோ தர்மசங்கடம். என்ன செய்வது என்று தெரியவில்லை.
அபூர்வராகங்கள் படம் ரிலீஸ் ஆன அன்று, முதல் காட்சிக்கே என் நண்பர்கள் எல்லோரும் போனார்கள். இந்தப் படத்தின் ஹீரோ, எங்கள் பிரண்ட்தான்! என்று கூறி, எல்லோருக்கும் சுவீட் கொடுத்தார்கள்.
அவர்கள் பலூன்களை ஊதி, கையில் வைத்திருந்தார்கள். நான் திரையில் தோன்றியதும், பலூன்களை படார், படார் என்று உடைத்து என்னை வரவேற்கத்தான்! படம் ஆரம்பம் ஆச்சு. டைட்டிலில் சிவாஜிராவ் என்ற பேரைத் தேடுறாங்க. அந்தப் பெயர் வரவில்லை. ரஜினிகாந்த் என்ற பெயர் வருது. அது நான்தான் என்று அவர்களுக்குத தெரியவில்லை.
படம் ஓடிக்கிட்டே இருக்கு. திரையில் என்னைக் காணோம். இடைவேளையும் வந்துவிட்டது.
நான் அவர்கள் கண்ணில் படாமல் மெல்ல நழுவிவிட்டேன். படத்தில் நான் இல்லை என்ற முடிவுக்கு நண்பர்கள் வந்துவிட்டார்கள். இருந்தாலும் ‘படம் நல்லா இருக்கு. முழுவதையும் பார்த்துவிட்டு போகலாம்’ என்று உட்கார்ந்திருந்தார்கள். பலூனில் காற்றை இறக்கி விட்டு பக்கெட்டில் போட்டுக்கொண்டார்கள்.
இடைவேளை முடிந்து படம் ஆரம்பம் ஆச்சு.
இரண்டு கதவையும் தள்ளிவிட்டு ஒருவன் உள்ளே நுழைகிறான். தாடி, மீது பழைய கோர்ட்டு, ‘எங்கேயோ பார்த்த முகம் மாதிரி இருக்கே’ என்று நண்பர்கள் நிமிர்ந்து உட்காருகிறார்கள்.
கொஞ்ச நேரம் போனதும், அது நான்தான் என்பது தெரிகிறது. நண்பர்களுக்கு உற்சாகம் தாங்கவில்லை. பலூனை எடுத்து ஊதி, ‘டப் டப்’ என்று உடைச்சாங்க.
அதேநேரத்தில் கமலஹாசனோட முகமும் திரையில் தெரியும். தியேட்டருக்கு வந்திருந்தவர்கள், ‘கமலஹாசன் ரசிகர்கள்தான் பலூனை வெடிக்கிறார்கள்’ என்று நினைத்துக்கொணடார்கள். பெங்களூரில்கூட கமலஹாசனுக்கு இவ்வளவு ரசிகர்கள் இருக்கிறார்களே’ என்று ஆச்சரியப்பட்டாங்க.
இவ்வாறு ரஜினிகாந்த் கூறியுள்ளார்.
‘அபூர்வராகங்கள்’ சிக்கலான கதை. விக்கிரமாதித்தன் கதையில், வேதாளம் போடும் விடுகதையை அடிப்படையாக வைத்து, புதுபாணியில் இதை பாலசந்தர் எழுதியிருந்தார்.
படத்தில் மேஜர் சுந்தர்ராஜன் அப்பா, கமலஹாசன் மகன்.
கமலஹாசன் ஸ்ரீவித்யாவை காதலிக்க, ஸ்ரீவித்யாவின் மகளான ஜெயசுதாவை மணக்க மேஜர் சுந்தர்ராஜன் முடிவு செய்வார்.
படம் கிளைமாக்கை நெருங்கும்போது, ‘நான் தான் பைரவியின் (ஸ்ரீவித்யா) புருஷன்’ என்று சொல்லிக்கொண்டு ரஜினிகாந்த் திடீர் பிரவேசமாக நுழையும்போது, கதையில் பெரும் திருப்பம் ஏற்படும்.
இந்தக் கதையை மக்கள் ஏற்பார்களா? படம் ஓடுமா? என்று டைரக்டர் பாலசந்தர் உட்பட பலருக்கும் சந்தேகம் இருந்தது.
எனினும் படம் மிகச் சிறப்பாக அமைந்திருந்ததால், நூறு நாட்களைக் கடந்து ஓடியது.
படத்தின் நூறாவது நாள் விழாவில் அன்றைய முதல் அமைச்சர் கருணாநிதி கலந்துகொண்டு, படத்தில் பங்குகொண்ட கலைஞர்களுக்கு கேடயங்கள் வழங்கினார்.
அவர் வேறொரு முக்கிய நிகழ்ச்சிக்குப் போகவேண்டி இருந்ததால், டைரக்டர் பாலசந்தர், கதாநாயகன் கமலஹாசன், கதாநாயகி ஸ்ரீவித்யா உட்பட சிலருக்கு மட்டும் கேடயங்களை வழங்கி விட்டு, அடுத்த நிகழ்ச்சிக்குப் போய்விட்டார்.
ரஜினிகாந்துக்கும் மற்றவர்களுக்கும் ஏவி.எம். அதிபர் மெய்யப்ப செட்டியார் தான் கேடயங்களை வழங்கினார்.
முதல்வரிடம் கேடயம் வாங்க முடியவில்லையே என்ற மனக்குறை ரஜினிக்கு நீண்டகாலம் இருந்தது. ‘முத்து’’ படத்தில் சிறப்பாக நடித்ததற்கான தமிழக அரசின் பரிசை கலைஞரிடம் பெற்றபோது அந்த மனக்குறை தீர்ந்தது.

முதல்நாள் படப்பிடிப்பில் வசந்தாவுக்கு வந்த சோதனை

கே.பாலசந்தர் இயக்கத்தில் வசந்தா நடித்த படம் ‘பத்தாம் பசலி’. இது, கவிஞர் ஆலங்குடி சோமு தயாரித்த படம். இந்தப் படத்தின் முதல் நாள் படப்பிடிப்பின் போதே, வசந்தாவுக்கு சோதனை ஏற்பட்டது. பாலச்சந்தரும், மற்ற கலைஞர்களும் படப்பிடிப்புக்குத் தயாராகக் காத்திருக்க, வசந்தா தாமதமாக வந்தார். அதற்குக் காரணம் அவர் அல்ல.
அவருக்கு சிகை அலங்காரம் செய்த ஹேர் டிரஸ்சர் அதிக நேரம் எடுத்துக் கொண்டதே காரணம். இதனால், பாலசந்தர் கோபமாக இருக்கிறார் என்பதை வசந்தாவிடம் கிசு கிசுத்துவிட்டுப் போனார் நாகேஷ். அதன் பிறகு நடந்தது பற்றி வசந்தா கூறுகிறார்.
பாலசந்தர் சேர் என் அருகே வந்து, படமாக்கப்பட இருந்த காட்சியை விவரித்தார். சுமார் 200 அடி வரக்கூடிய காட்சியில் எப்படி நடிக்க வேண்டும் என்பதை நடித்துக் காட்டினார். படப்பிடிப்பை ஆரம்பிக்கலாமா?’ என்று அவர் கேட்க, நானும் சரி என்றேன். வரிசையாக பலரிடம் கை குலுக்கிவிட்டு, இயல்பாக நடந்தபடி என் அலுவலக அறையில் நுழைந்து என் இருக்கையில் அமர வேண்டும். டைரக்டர் சொல்லிக் கொடுத்தபடியே நடித்தேன்.
ஒரே டேக்கில் 200 அடி காட்சியும் ‘ஓ.கே’ ஆயிற்று. இதற்குப் பிறகு, நாகேஷ் என்ன செய்தார் தெரியுமா? பாலு! நான் அப்போதே சொன்னேன் இல்லையா? வசந்தா நாடகத்தில் இருந்து வந்த பொண்ணு, ஒரே டேக் போதும். இப்போது கோபம் போய்விட்டதா?’ என்று செட்டில் எல்லோருக்கும் கேட்கும்படி கூறினார். பாலசந்தர் பதில் சொல்லவில்லை. நாகேஷின் வார்த்தைகளை அவர் ஏற்றுக் கொண்டதை அவர் மெளனம் புலப்படுத்தியது.
பாலசந்தர் டைரக்ஷனில் நடித்தது, எனக்குக் கிடைத்த பாக்கியம். பெண்களின் உணர்ச்சிகளை, மனப்போராட்டங்களை சித்தரிப்பதில் அவருக்குள்ள ஆற்றலைக் கண்டு பிரமித்துப் போயிருக்கிறேன். பத்தாம்பசலிக்குப் பிறகு அவரது இயக்கத்தில் நடிக்க எனக்கு வாய்ப்பு கிட்டவில்லை. எனக்கான கெரக்டர் அவர் படங்களில் உருவாக்கவில்லை என்பதாகவே எடுத்துக் கொண்டிருக்கிறேன்.
இவ்வாறு வசந்தா கூறினார்.

குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான ஜெயசித்ரா

அஞ்சலி தேவியின் மகளாக குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமான ஜெயசித்ரா, பின்னர் கதாநாயகியாக உயர்ந்து, 200 படங்களுக்கு மேல் நடித்தார்.
ஜெயசித்ராவின் சொந்த ஊர் ஆந்திர மாநிலம் காக்கிநாடா. ஆனால் ஜெயசித்ரா பிறந்து வளர்ந்தது எல்லாமே சென்னைதான். தந்தை மகேந்திரா இவர் கால்நடை டொக்டராகவும், சட்டத்தரணியாகவும் இருந்தார். தாயார் ஜெயஸ்ரீ ஜெயசித்ராவுக்கு பெற்றோர் வைத்த பெயர் லட்சுமி கிருஷ்ணவேணி ரோகினி பார்வதிதேவி என்பதாகும்!
ஜெயசித்ராவின் தாயாரும் நடிகைதான். அந்த காலகட்டத்தில் ஜெயஸ்ரீ பிரபல நடிகையாக விளங்கினார். அவர் 1954ம் ஆண்டு ‘ரோஜலு மாராயி’ (தெலுங்கு ‘காலம் மாறிப்போச்சு’) படத்தில் அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து அன்னதாத்தா, டைகர்ராமுலு உள்ளிட்ட பல தெலுங்கு படங்களில் நடித்தார்.
1955ம் ஆண்டு ‘மகாவீரபீமன்’ என்ற தமிழ்ப்படத்தில் அறிமுகமானார். அந்தப் படத்தில் திரெளபதியாக நடித்து ரசிகர்களை கவர்ந்தார். அதன் பின்னர் ‘தெய்வபலம்’, ‘சிவகாமி’ உட்பட பல படங்களில் நடித்து உள்ளார். மொத்தம் 40 படங்கள் வரை நடித்து இருக்கிறார்.
திருமணமாகி, குழந்தை பிறந்த பிறகு ஜெயஸ்ரீ திரைப்படத்தில் நடிப்பதை நிறுத்திக் கொண்டார். பின்னர் தனது குழந்தையான ஜெயசித்ராவை நன்றாக வளர்க்க வேண்டும், நிறையப் படிக்க வைக்க வேண்டும் என்பதில் ஆர்வமாக இருந்தார். இந்த நிலையில் 5வயது குழந்தையாக இருந்த போது ‘பக்தபோதனா’ என்ற தெலுங்கு படத்தில் நடிகை அஞ்சலி தேவிக்கு மகளாக ஜெயசித்ரா நடித்தார்.
ஜெயசித்ரா படிக்கும் போதே நாட்டியமும் கற்று வந்தார். பரதநாட்டியத்தை முழுமையாக கற்றுக் கொண்டபின், ஜெசித்ராவின் 11 வது வயதில் நாட்டிய அரங்கேற்றம் சென்னை வாணிமகாலில் நடந்தது. நடன அரங்கேற்றத்துக்கு சிவாஜி கணேசன் தலைமை தாங்கினார்.
முழுக்க முழுக்க படிப்பிலேயே ஆர்வம் காட்டி வந்த ஜெயசித்ராவிற்கு நடிகையாகும் வாய்ப்பு தேடி வந்தது. ஆனால் அவரோ சினிமாவில் நடிக்க சிறிதும் ஆர்வம் இல்லாமல் இருந்தார்.
இந்த நிலையில் 7ம் வகுப்பு படித்துக் கொண்டு இருந்த ஜெயசித்ராவை விட்டலாச்சாரியா தனது படத்தில் நடிக்க வைக்க நினைத்தார்.
ஒரு தெலுங்கு படத்திற்கு நாகேஸ்வரராவ் ஜோடியாக நடிக்க வைக்க ‘கெமரா டெஸ்ட்’ எடுத்தனர். ஆனால், உருவத்தில் குமரிப்பெண்ணாக இருந்தாலும், குரல் இன்னும் குழந்தைக் குரலாக இருக்கிறது என்று கூறி, ‘நீ இப்போது நாகேஸ்வரராவ் ஜோடியாக நடிக்க முடியாது. பிறகு வாய்ப்புத் தருகிறேன்’ என்று கூறிவிட்டார் விட்டலாச்சாரியார்.
திரைத்துறைக்கு வந்தது பற்றி ஜெயசித்ரா கூறியதாவது,
‘நான் சென்னை வித்யோதயா பள்ளியில் 11ம் வகுப்பு வரை படித்து உள்ளேன். எனது தாயார் என்னை படிக்கவைக்க வேண்டும் என்றுதான் ஆசைப்பட்டார். நான் வழுவூர்ராமையா பிள்ளை மகன் சாமராஜிடம் பரதநாட்டியமும், சின்னசத்தியம் மாஸ்டர், எம்.எஸ். சைவா ஆகியோரிடம் குச்சுப்புடி நடனமும் கற்றேன்.
இந்த நிலையில்தான் விட்டலாச்சாரியாவின் பீதலபாட்லு என்ற தெலுங்கு படத்தில் நடிக்க வாய்ப்பு வந்தது. ஆனால் எனக்கு அப்போது நடிக்க ஆர்வம் இல்லை. அந்த சமயத்தில் 7ம் வகுப்பு படித்துக் கொண்டு இருந்தேன். படத்தில் நடிப்பதற்காக கெமரா டெஸ்ட் எடுத்தனர். நான் பேசும்போது தொண்டை கீச், கீச் என்றதால், ‘இன்னும் குழந்தைத்தனம் போகவில்லை, பிறகு வாய்ப்பு தருகிறேன்’ என்றார் விட்டலாச்சாரியார்.
அதன் பின்னர் டைரக்டர் கே.எஸ். கோபாலகிருஷ்ணன், நான் பள்ளியில் படித்துக் கொண்டு இருந்த போது அழைத்துச் சென்று, இரண்டு வசனங்களை பேசச் சொன்னார். நானும் பேசினேன். நான் பேசியதை கேட்டு சந்தோஷப்பட்ட டைரக்டர், ‘தமிழ்நாட்டிற்கு ஒரு சிறந்த கதாநாயகி கிடைத்துவிட்டார்’ என்று படப்பிடிப்பில் இருந்து அனைவரையும் அழைத்து மகிழ்ச்சி பொங்க கூறினார்.’

Wednesday, January 9, 2013

ஏமாற்றங்களும் நம்பிக்கைகளும்


தமிழின் முன்னணி நடிகர்கள் அனைவருமே விலைமதிப்பற்ற நாயகர்களாக பரிணாம வளர்ச்சி அடைந்திருப்பதை உணர்த்தியபடியே 2012ம் ஆண்டு நிறைவு பெற்றிருக்கிறது.
அஜீத்தின் பில்லா-2, விஜய்யின் துப்பாக்கி, சூர்யாவின் மாற்றான், விக்ரமின் தாண்டவம் ஆகிய அனைத்துப் படங்களின் களமுமே விலைமதிப்பற்ற நகரைத்தான் பின்புலமாகக் கொண்டிருக்கின்றன. தமிழ்ச் சினிமாவின் சந்தை விரிவும், வசூலுக்கான சாத்தியங்களும் பெருகிக் கொண்டு வருவதன் வெளிப்பாடு இது.
ரூபாய் 100 கோடி வசூலை கடந்த இரண்டாவது தமிழ்ப் படம் என்ற பெருமையை துப்பாக்கி பெற்றிருக்கிறது. பழைய கதையை புதிய தொழில்நுட்பத்துடன் சொல்லும் இப்படம் கொமர்ஷியல் திரைப்படங்களுக்கான திரைக்கதையில் ஒரு பாய்ச்சலை நிகழ்த்தியிருக்கிறது என்றாலும் சிறுபான்மை சமூகத்தினரை மட்டுமே தீவிரவாதிகளாக அடையாளப்படுத்தியிருப்பது இப்படத்தின் வெற்றியில் பதிந்த அழிக்க முடியாத கரும்புள்ளி.
நகைச்சுவை என்பதையும் தாண்டி ‘ஒரு கல் ஒரு கண்ணாடி’ படம் நிகழ்த்தியிருக்கும் சாதனை அபாரமானது. சினிமாவின் வேலை கதை சொல்வதல்ல. நிகழ்ச்சி அல்லது சம்பவங்களின் சங்கிலித் தொடர் வழியாக ஒரு பயணத்தை விவரிப்பதே ஸ்கிரிப்ட் என்பதை மீண்டும் அழுத்தமாக நிரூபித்திருக்கும் படம் இது.
ஒருவகையில் கலகலப்புக்கும் இது பொருந்தும். ஒரு இடைவெளிக்குப் பிறகு சுந்தர் சி இயக்கியிருக்கும் இப்படம் துணுக்குத் தோரணம் என்ற அடைமொழியில் இருந்து மைக்ரோ மில்லி மீட்டர் அளவில் தப்பித்திருக்கிறது.
சுந்தர பாண்டியனையும் வெறும் கொமெடி படம் என்ற குடுவையில் அடக்கிவிட முடியாது. சிறு நகரங்களின் பஸ் பயணத்தை, அதன் வழியாக அவர்களது வாழ்வியலை பதிவு செய்ய முயற்சித்துள்ள படம் இது. ஆனால், ஆதிக்க சாதியின் கொடூரமான கரத்தை தன்னையும் அறியாமல் இப்படம் ஆதரிப்பது மைனஸ்.
பெரிய பெரிய நட்சத்திரங்கள் எல்லாம் ரசிகர்களை ஏமாற்றிய இந்த ஆண்டில்தால் பல புதியவர்கள், மிகப்பெரிய மாற்றத்தை தமிழ்ச் சினிமாவில் ஏற்படுத்தியிருக்கிறார்கள். அம்புலி 3டி படத்தை இப்படித்தான் பார்க்க வேண்டியிருக்கிறது. குறைந்த பட்ஜெட்டில் டிஜிட்டல் கெமராவை பயன்படுத்தி ஹொலிவூட் தரத்தில் உருவாக்கப்பட்ட இப்படம். புறக்கணிக்க முடியாத முத்திரையை பதித்திருக்கிறது.
போலவே குறும்படங்களை எடுத்து தங்களை நிரூபித்த பல இளைஞர்கள் பெரிய திரையில் சடுகுடு விளையாடி இருக்கிறார்கள். ‘காதலில் சொதப்புவது எப்படி’ ‘பீட்சா’ ‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ ஆகியவை இதற்கு நல்ல உதாரணங்கள். இந்த மூன்று படங்களுமே இதுவரை நம்பப்பட்டு வந்த திரைக்கதைக்கான மரபை அலட்சியமாக மீறியிருக்கின்றன.
அடித்து நொறுக்கியிருக்கின்றன. யானை வரும் பின்னே மணியோசை வரும் முன்னே என்பது போல வரும் ஆண்டுகளின் புதிய பாணியில் தமிழ் சினிமா ஜொலிக்கப் போவதை இந்த மூன்று படங்களின் வெற்றிகள் உணர்த் துகின்றன. பழைய கர்ணன் வெறும் டிஜிட்டல் மயமாக்கப்பட்டதால் மட்டுதே ரீ ரிலிஸ் ஆகி ஓடியது என்று சொல்வது நம்மை நாமே ஏமாற்றிக் கொள்வதற்கு சமம் அந்தப் படம் பேசும் அரசியல், காலம் கடந்தும் நிற்கிறது. வெற்றியின் ஆட்சுமம் அடங்கியிருக்கிறது. வெறும் புராணப்படமாக இல்லாமல், மனித உணர்வுகளின் சங்கமமாக இந்தப் படம் உருவாக்கப்பட்டிப்பதை மனதில் கொள்வது நல்லது.
புறநகர் பகுதியில் வாழும் தலித் மக்களின் வாழ்வியலை நேர்மையாக பதிவு செய்த வகையில் அட்டகத்தி முக்கியத்துவம் பெறுகிறது. கொஞ்சம் பிசகினாலும் பிரசார படமாக மாறியிருக்கும் என்ற ஆபத்தில் இருந்து தப்பித்திருக்கும் சாட்டையை இந்தப் பட்டியலில் இணைக்காவிட்டால் கட்டை வேகாது உயர் நடுத்தர வர்க்கத்தின் மனநிலையையும், உழைக்கும் மக்களின் வாழ்வியலையும் ரத்தமும் சதையுமாக பதிவு செய்துள்ள வழக்கு என் 18/9, தமிழ்ச் சினிமா பெருமைப்பட வேண்டிய படங்களில் ஒன்றுதான்.
டப்பிங் படமாக இருந்தாலும் நேரடியாக எடுக்கப்பட்ட தமிழ்ப் படம் போல் காட்சியளித்த நான் ஈ, ஒரு இயக்கநரின் அர்ப்பணிப்பு எந்த அளவுக்கு ஒரு படத்துக்கு முக்கியத்துவம் என்பதை உரக்க கூவியிருக்கிறது. புளித்துப் போன வழி வாங்கும் கதையை சீட்டின் நுனியில் அமர்ந்து பார்க்கும் வகையில் எடுக்கப்பட்டிருப்பது இப்படத்தின் ப்ளஸ். ஒரு படத்தை எந்தளவுக்கு நேர்மையாக ரீமேக் செய்ய வேண்டும் என்பதற்கு நண்பன் உதாரணம் டைட்டில் கார்டில் திரைக்கதை என்ற தலைப்பின் கீழ் கூட, தன் பெயரை இயக்குநர் ஷங்கர் போட்டுக் கொள்ளவில்லை மற்ற ரீமேக் இயக்குநர்கள் கற்க வேண்டிய பாடம் இது. பல வகைகளில் கடந்த ஆண்டு தமிழ் சினிமாவுக்கு ஏமாற்றத்தை அளித்திருக்கிறது. என்றாலும் புதியவர்களின் வருகை நம்பிக்கை கீற்றாக ஒளிவீசுகிறது.

2012 இல் உதிர்ந்த பூக்கள்

நிறைவாய் வாழ்ந்தவர்களும், அங்கீகாரத்துக்காக போராடியவர்களு கனவை அடைந்தவர்களும் மெய்ப்பட உழைத்தவர்களுமாக பல்வேறுபட்ட கலைஞர்கள் கடந்த ஆண்டு மரணமடைந்திருக்கிறார்கள். பட்டியலில் பதிந்த அவர்கள்.
அன்னக்கிளி, ரோசாப்பூ ரவிக்கைக்காரி உள்ளிட்ட பல படங்களை இயக்கிய எஸ். தேவராஜ் (81)
இயக்குநர் நேதாஜி (61) ஜனனி, தாயகம், கோவில் மணி ஓசை உட்பட 20 படங்களுக்கும் மேல் இயக்கியவர் சில படங்களைத் தயாரித்தவர்.
எடிட்டர் பால் துரைசிங்கம் (79), படித்தால் மட்டும் போதுமா, பாகப்பிரிவினை, ஜானி உட்பட 150 படங்களுக்கு மேல் பணியாற்றியவர்.
கொமெடி நடிகர் இடிச்சபுளி செல்வராஜ் (72) பழம்பெரும் இசை அமைப்பாளர் எஸ். தட்சனா மூர்த்தி (90).
ஒளிப்பதிவாளர் ஆர். என். கே. பிரசாத் (81).
பழம்பெரும் நடிகை எஸ். என். லட்சுமி (84).
நடிகர் வாளமீன் முத்துராஜா (34), சித்திரம் பேசுதடி படத்தில் வாளமீன் பாடலில் நடித்தவர்.
இயக்குநர் கே. எம். பாலகிருஷ்ணன் (82), ஆறு புஷ்பங்கள், பார்வையின் மறுபக்கம் உட்பட பல படங்களை இயக்கியவர்.
நடிகர் ஜெகன் நளினியின் சகோதரர்.
பழம் பெரும் நடிகை சரோஜா (79).
தயாரிப்பாளர், வசனகர்த்தா, இயக்குநர் பி. கலைமணி (62) தயாரிப்பாளர் அப்பச்சன் (88).
நடிகை சண்முக சுந்தரி (75)
நடிகர் திலீப் (52)
இயக்குநர் கே. எஸ். ஆர். தாஸ் (76)
பழம்பெரும் நடிகர் காகா ராதாகிருஷ்ணன் (86)
தயாரிப்பாளர் கே. ஆர். ஜி. (74)
நடிகர் தாராசிங் (87) மல்யுத்த வீரர் பொலிவூட் நடிகர். தமிழில் ரஜனியுடன் மாவீரன் படத்தில் நடித்தவர். ராஜேஷ் கண்ணா (69)
எம். ஆர். கிருஷ்ணமூர்த்தி (73) ரஜினி, கமலுடன் குணசித்திர வேடங்களில் நடித்தவர்.
நகைச்சுவை நடிகர் என்னத்த கண்ணையா (87)
தயாரிப்பாளர் ஏ. வி. எம். முருகன் (77)
கொமெடி நடிகர் லூஸ் மோகன் (84)
பெரிய கருப்பு தேவா (75)
நடிகை அஸ்வினி (43) பொண்டாட்டி தேவை படத்தில் அறிமுகமானவர்.
தயாரிப்பாளர் விவேக் சித்ரா ஏ. சுந்தரம் (78)
இயக்குநர் சசி மோகன் (56)
இயக்குநர் ஏ. ஜெகநாதன் (76)
ஒளிப்பதிவாளர் ஏ. சபாபதி (55)
நடிகர் திலீபன் (32) செம்பட்டை படத்தில் நாயகனாக நடித்தார்.
பழம்பெரும் நடிகை டி. ஏ. ஜெயலட்சுமி (85) திரிஷாவின் தந்தை கிருஷ்ணன் (66) சுபா புடடேலா (21) மாலைப்பொழுதின் மயக்கத்திலே படத்தின் நாயகி.
இயக்குநர் அகஸ்திய பாரதி (50)
பழம்பெரும் நடிகை மைனாவதி (78)

என் உருவத்தை திரையில் பார்த்தபோது உடம்பெல்லாம் சிலிர்த்து போனது -ரஜினி

அபூர்வராகங்கள் படத்தில் நடித்து முடிக்கும்வரை சிவாஜிராவ் ஆக இருந்தவர். பிறகு ரஜினிகாந்த் ஆக மாறினார். புதிய பெயரை சூட்டியவர் டைரக்டர் கே. பாலசந்தர். இதுபற்றி ரஜினிகாந்த் கூறியிருப்பதாவது:-
அபூர்வராகங்கள் படத்திற்காக, நான் இன்னொரு காட்சியில் நடித்தேன். நானும், ஸ்ரீவித்யாவும் பங்குகொள்ளும் லவ் சீன் இரண்டு பேரும் ஒருத்தர் கையை ஒருத்தர் பிடித்துக்கொண்டு, சிரித்துக்கொண்டும், பேசிக்கொண்டும் வரவேண்டும். அக்காட்சியில் வசனம் கிடையாது. வெறும் உதட்டசைவு மட்டும்தான்.
இதனால், உங்கள் இஷ்டப்படி ஏதாவது பேசிக்கொண்டும், சிரித்துக்கொண்டும் நடந்து வாருங்கள் என்று சொன்னார்கள். நான் கன்னடத்தில் பேச ஸ்ரீவித்யா மலையாலத்தில் பேசினார். இந்தக் காட்சி முடிந்தது. ‘நீங்க வீட்டுக்குப் போகலாம்’ என்றார்கள். நான் மேக்கப்பைக் கலைத்துவிட்டு வெளியே வந்தேன். அபூர்வராகங்கள் படப்பிடிப்பு அத்துடன் முடிவடைந்தது.
என் காட்சிகளுக்கு வசனம் பேச (டப்பிங்) ஜெமினி ஸ்டூடியோவுக்குப் போனேன். அப்போது கமல்ஹாசனும், ஸ்ரீவித்யாவும் ‘டப்பிங்கில்’ வசனம் பேசிக்கொண்டிருந்தார்கள்.
என்னுடைய காட்சி எப்போது வரும் என்று காத்திருந்தேன். திடீரென்று திரையில் ஒரு காட்சி கோட்டு போட்ட ஒரு தாடி ஆசாமி கதவைத் திறந்து கொண்டு வருகிறான். ஏதோ பேசுகிறான். என்னால் அடையாளம் கண்டுபிடிக்க முடியவில்லை. அப்புறம்தான் தெரிந்தது அது நான்தான் என்று.
என்னை மறந்து அந்தக் காட்சியைப் பார்க்கிறேன். அதே காட்சி சுற்றிச்சுற்றி வருகிறது. வசனம் பேசுவதை மறந்து அதையே பார்த்துக் கொண்டு இருக்கிறேன். என் உருவத்தைத் திரையில் பார்த்த போது உடம்பெல்லாம் சிலிர்த்துப் போச்சி இதற்காகத்தானே இவ்வளவு நாள் காத்துக்கிட்டிருந்தேன்.
இதை கவனித்துக் கொண்டிருந்த டைரக்டர் பாலசந்தர் சேர் ‘என்ன! வசனத்தைப் பேசலாமா?’ என்று கூறியதும், நான் இந்த உலகத்துக்குத் திரும்பி வந்தேன்.
இந்த சமயத்தில் ஒன்றை சொல்ல வேண்டும். எனக்கு தமிழ் சரிவரத் தெரியாததால் வேறு யாரையாவது எனக்குக் குரல் கொடுக்கச் சொல்லலாம் என்று சிலர் கூறினார்கள். பாலசந்தர் சேர் அதை ஏற்கவில்லை. கூடவே கூடாது ஒரிஜினல் வொய்ஸ்தான் வேண்டும்’ என்று கூறிவிட்டார். அபூர்வராகங்களில் எனக்கு வசனம் கொஞ்சம்தான். அதை எப்படி உச்சரிக்க வேண்டும் என்று பாலசந்தர் சேர் சொல்லிக் கொடுத்தார். அதை அப்படியே பேசினேன். அதை டைரக்டர் ‘ஓகே’ செய்தார். டப்பிங் வேலை முடிந்தது. இவ்வாறு குறிப்பிட்ட ரஜினிகாந்த், தனக்கு அந்தப் பெயர் வந்தது பற்றி சொன்னதாவது:-
1975 ஆகஸ்ட் 15ம் திகதி அபூர்வராகங்கள் படம் வெளிவரும் என்று திகதி குறிப்பிடப்பட்டது.
பாலசந்தர் சேர் என்னை அழைத்தார். ‘டைட்டிலில் பெயர் போட வேண்டும். சிவாஜிராவ் என்ற பெயர் வேண்டாம். ஏனென்றால் ஏற்கனவே நடிகர் திலகம் சிவாஜி கணேசன் இருப்பதால், சிவாஜி என்ற பெயர் வேண்டாம். ‘ராவ்( என்கிற பெயரும் தமிழ்நாட்டுக்குப் பெருந்தாது என்றார். “நீங்கள் ஏதாவது பெயர் சொல்லுங்க சேர்” என்று கூறிவிட்டுத் திரும்பினேன். என் நண்பர்களிடம் கலந்து ஆலோசித்தேன். ‘சரத்’ ‘ஆர். எஸ். கெய்க்வாட்’ என்று இரண்டு பெயர்கள் என் மனதில் இருந்தன. அதைச் சொன்னேன். நண்பர்கள் எல்லோரும் ஒட்டுமொத்தமாக ‘நன்றாக இல்லை’ என்று கூறினார்கள்.
மறுபடியும் பாலசந்தர் சேர் கிட்டப் போய் நீங்களே ஆசிர்வாதம் செய்து ஒரு பெயர் வையுங்க! என்றேன். அந்த நாள் என் வாழ்க்கையில் மறக்க முடியாத நாள். பெளர்ணமி தினம்.
பாலசந்தர் சேர் சொன்னார். என்னுடைய மேஜர் சந்திரகாந்த் நாடகத்தில் சந்திரகாந்துக்கு இரண்டு பிள்ளைகள். ஒருவன் ஸ்ரீகாந்த், மற்றவன் ரஜினிகாந்த். ஸ்ரீகாந்த் என்ற பெயரை ஏற்கனவே ஒருவருக்கு வைத்தாகிவிட்டது. ரஜினிகாந்த் என்ற பெயரை யாருக்கு வைக்கலாம் என்று ரொம்ப நாளா நினைத்துக் கொண்டிருந்தேன். அதை உனக்கு வைக்கிறேன்.
இவ்வாறு பாலசந்தர் சொன்னதும், அவர் காலைத் தொட்டுக் கும்பிட்டேன். “நல்ல வில்லனா வரணும் என்று ஆசிர்வாதம் செய்யுங்க’ என்றேன். ‘வில்லன் எதுக்கப்பா’ நீ பெரிய நடிகனாக வருவே பார்த்துக் கொண்டே இரு’ என்றார் பாலசந்தர் சேர்.
எனக்குத் தாங்க முடியாத உற்சாகம். நேராக மெரீனா கடற்கரைக்கு ஓடினேன். கடற்கரை மணலில் உட்கார்த்து நீலக்கடலை நீண்ட நேரம் பார்த்துக் கொண்டிருந்தேன். எனக்கு மனக்கஷ்டம் வந்தாலும் உற்சாகம் வந்தாலும் கடற்கரைக்குச் சென்று தனியாக உட்கார்ந்து சிந்தனையில் மூழ்கிவிடுவேன்.
இவ்வாறு ரஜினி கூறியுள்ளார்.
1975ம் ஆண்டு, ஆகஸ்ட் 15ம்திகதி அபூர்வராகங்கள் ரிலீஸ் ஆயிற்று.
மாறுபட்ட கதை அம்சம் கொண்ட படம். பாலசந்தர் தன் படங்களில் தனி முத்திரை பதித்துக் கொண்டிருந்த காலக்கட்டம்.எனவே, அதை டைரக்டர் படமாகத்தான் ரசிகர்கள் நினைத்தார்கள்.
சென்னை தியாகராய நகரில் உள்ள கிருஷ்ணவேணி தியேட்டரிலும் இப்படம் ரிலீஸ் ஆகியிருந்தது. படம் பார்க்கப் போனார் ரஜினி. டிக்கெட் கிடைக்கவில்லை.
தியேட்டர் மனேஜரை சந்தித்து நான் இந்தப் படத்தில் நடித்திருக்கிறேன் எனக்கு ஒரு டிக்கெட் வேண்டும் என்று கெஞ்சிக் கேட்டுக்கொண்டார். அவரை மேலும் கீழுமாகப் பார்த்த மனேஜர் இரக்கப்பட்டு ஒரு டிக்கெட் கொடுத்தார்.
துள்ளிக்குதித்து ஓடிய ரஜினி திரையில் தன் உருவத்தைப் பார்த்து மகிழ்ந்தார். நம்கனவு நிறைவேறிவிட்டது. வில்லன் வேடங்களாவது தொடர்ந்து கிடைக்கும்” என்று நினைத்தார்.

புருஷன் வீட்டில் வாழப்போகும் பெண்ணே தங்கச்சி கண்ணே

புருஷன் வீட்டில் வாழப்போகும் பெண்ணே
தங்கச்சி கண்ணே - சில
புத்திமதிக சொல்லுறன் கேளு முன்னே
தங்கச்சி கண்ணே - சில
புத்திமதிக சொல்லுறன் கேளு முன்னே

அரசன் வீட்டுப் பொண்ணாக இருந்தாலும் - அம்மா
அகந்தை கொள்ளக் கூடாது எந்நாளும்
புருஷன் வீட்டில் வாழப்போகும் பொண்ணே
தங்கச்சி கண்ணே - சில
புத்திமதிகள் சொல்லுறேன் கேளு முன்னே

மாமனாரை மாமியாளை மதிக்கணும் - உன்னை
மாலையிட்ட கணவனையே துதிக்கணும்
சாமக்கோழி கூவையிலே முழிக்கணும் குளிச்சு
சாணம் தெளிச்சு கோலம் போட்டு சமையல் வேலை துவக்கணும்
புருஷன் வீட்டில் வாழ்ப்போகும் பொண்ணே
தங்கச்சி கண்ணே - சில
புத்திமதிக சொல்லுறன் கேளு முன்னே

கண்ணால் பேசும் பயக முன்னே நில்லாதே - நீ
காணாததைக் கண்டேனுன்னு சொல்லாதே
கண்ணால் பேசும் பயக முன்னே நில்லாதே - நீ
காணாததை கண்டேனுன்னு சொல்லாதே - இந்த
அண்ணே சொல்லும் அமுதவாக்குத் தள்ளாதே - நம்ம
அப்பன் பாட்டன் பேரைக் கெடுத்துக் கொள்ளாதே
புருஷன் வீட்டில் வாழப்போகும் பொண்ணே
தங்கச்சி கண்ணே - சில
புத்திமதிக சொல்லுறன் கேளு முன்னே

புருஷன் உயிரை மீட்டுத் தந்தவ பொண்ணுதான் - ஓடும்
பொழுதை அங்கே நில்லுன்னு சொன்னவ பொண்ணுதான் -
அரசன் நடுக்க நீதி சொன்னவ பொண்ணுதான் - அவுங்க
ஆஸ்திக் கணக்கு சொன்னாக் கற்பு ஒண்ணுதான்
ஆஸ்திக் கணக்கு சொன்னாக் கற்பு ஒண்ணுதான்
புருஷன் வீட்டில் வாழப்போகும் பொண்ணே
தங்கச்சி கண்ணே - சில
புத்திமதிக சொல்றேன் கேளு முன்னே

புருஷன் கூட நீ இருந்து பூவும் மணமும் போல மகிழ்ந்து
கூரைச் சேலையும் தாலியும் மஞ்சளும்
குங்குமப் பொட்டும் நகையும் நட்டும்
கொறைஞ்சிடாம நெறைஞ்சு கிட்டு ஆஆஆஆஆ


மக்களைப் பெத்து மனையப் பெத்து மக்க வயத்திலே பேரனைப் பெத்து
பேரன் வயத்திலே புள்ளையப் பெத்து நோயில்லாம நொடியில்லாம
நுறூ வயசு வாழப்போற தங்கச்சி- நமக்கு
சாமி துணை இருக்கு சாமி துணை இருக்கு தங்கச்சி

டில்லி மாணவி வேடத்தில் லட்சுமிராய்

சினிமா உலகத்தினருக்கு ஏதாவது ஒரு பரபரப்பு சம்பவம் நடைபெற்றுவிட்டால் போதும், உடனே அதை படமாக்கி காசு பண்ணத் தொடங்கி விடுவார்கள். அந்த வகையில் சமீபத்தில் டில்லியில் மருத்துவ மாணவி ஒருவர் 6 பேர் கொண்ட கும்பலால் கொடூரமான முறையில் கற்பழிக்கப்பட்டு பஸ்சில் இருந்து தூக்கி வீசப்பட்ட சம்பவத்தையும் தற்போது படமாக்கும் முயற்சி நடக்கிறது. இந்தியில் தயாராக உள்ள அப்படத்தை இந்தியா முழுக்க மொழி மாற்றம் செய்தும் வெளியிட திட்டமிட்டுள்ளனர்.
ஆனால், இந்த செய்தி வெளியானதில் இருந்து அந்த கற்பழிக்கப்பட்ட மாணவியின் வேடத்தில் நடிக்க பல நடிகைகள் நான் நீயென்று போட்டி போட்டு வருகின்றனர். அதில் லட்சுமிராய் குறிப்பிடத்தக்கவர். மற்ற நடிகைகளெல்லாம் வாய்பேச்சில் சொல்லிக்கொண்டிருக்க இவரோ, அந்தக் கதையை படமாக்கவிருக்கும் பட நிறுவனத்தையே மும்பை சென்று சந்தித்து விட்டு வந்திருக்கிறார். அதோடு, இப்படியொரு வேடத்தில் நடிப்பது என்னை பரபரப்பான நடிகையாக காட்டிக்கொள்வதற்காக அல்ல. பெண்கள் மத்தியில் விழிப்புணர்ச்சி ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தினால்தான் நடிக்க ஆசைப்படுகிறேன் என்று சொல்லும் லட்சுமிராய், இந்தப் படத்தில் தனக்கு சான்ஸ் கிடைத்தால் அதற்கு சன்மானமாக ஒரு பைசாகூட தர வேண்டாம் என்றும் கூறியுள்ளாராம்.

இஷா ஷெர்வானி

விக்ரம், ஜீவா, லாரா தத்தா, தபு, நாசர், இஷா ஷெர்வானி நடிப்பில் தமிழ், இந்தியில் தயாராகும் படம், ‘டேவிட்’. பிஜோய் நம்பியார் எழுதி இயக்குகிறார் அனிரூத், பிரசாந்த் பிள்ளை உட்பட 6 பேர் இசையமைக்கின்றனர். இதன் பாடல் வெளியீட்டு விழா, சென்னையில் அண்மையில் நடந்தது. விழாவில் விக்ரம் பேசியதாவது:
இதில் நான் மீனவனாகவும், ஜீவா இசைக் கலைஞனாகவும் நடிக்கிறோம் மங்களூரில் ஷ¥ட்டிங் நடந்தபோது.,
எனக்கு அருகில் ஒரு பெண் வந்தார். நான் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்தபோது, அவரும் செய்தார். தன் காலை கழுத்தில் தூக்கிப் போட்டுகொண்டார். அவரை அசத்தலாம் என்று ஜிம்மில் ஏகப்பட்ட வெயிட்டைத் தூக்கிய நான். அவரது செயலைப் பார்த்து ஷொக் ஆனேன். பிறகு ‘நீ யார்?’ என்றேன் நான் உங்ககூட நடிக்கப்போறேன் என்றார். பிறகுதான் அவர் இஷா ஷெர்வானி என்று தெரிந்தது.
அவரது அப்பா, அம்மாவுக்கு நடனத்தில் ஈடுபாடு இருந்ததால், அவர்களின் ஜீன் இஷாவுக்குள்ளும் இருந்ததில் வியப்பில்லை. இந்தப் படத்தில் மீனவனாக நடித்ததை மறக்க முடியாது. கடலில் சுழன்றடிக்கும் காற்றில் படகு செல்லும்போது இஷாவுடன் நடித்த காட்சிகளை கஷ்டப்பட்டு படமாக்கி இருக்கிறார்கள். இதில் ஜீவாவுடன் இணைந்து நடித்ததும் சிறந்த அனுபவமாக இருந்தது. இவ்வாறு விக்ரம் பேசினார். இதில் ஜீவா, இஷா, ஷெர்வானி, அனிரூத், பாடகர் கார்த்திக் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

அக்ஷன் பிரின்சஸ்’ஆவேன் கிங் மகள்

அக்ஷன் கிங் அர்ஜுன் மகள் ஐஸ்வர்யா பட்டத்து யானை படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமாகிறார். அவர் அளித்த பேட்டி :
திட்டமிட்டு சினிமாவுக்கு வரவில்லை. என் பிரண்ட் விஷால் கேட்டுக் கொண்டதாலும், கதை பிடித்திருந்ததாலும் நடிக்கிறேன். என் சுதந்திரத்தில் அப்பா எப்பவுமே தலையிட மாட்டார். அதுமாதிரி இதற்கும் ஒப்புக் கொண்டார். ஒரு பெரிய நடிகரின் மகள் என்பதால் எனக்கு பத்தாயிரம் சதவிகிதம் பொறுப்பு இருக்கிறது. அவர் பெயருக்கு களஞ்கம் ஏற்படாத வகையில் நடந்து கொள்வேன். அக்ஷன் கிங் மகள் அக்ஷன் பிரின்சஸ் என்று எல்லோரும் பாராட்டும்படி நடிப்பேன். அப்பா மாதிரி சண்டை காட்சிகள் நிறைந்த அக்ஷன் படத்தில் நடிப்பேன். அவரது இயக்கத்தில் நடிக்கவும் ஆசையாக இருக்கிறது. நிறைய ஐஸ்வர்யாக்கள் இருப்பதால் எனது பெயரை ஐஸ்வர்யா அர்ஜுன் என்று வைத்துள்ளேன் என்றார்.

தீயா வேலை செய்யணும் குமாரு

சமீபகாலமாக தமிழ் சினிமாக்களில் தலைப்புக்கு ரொம்ப பஞ்சமாகிவிட்டது. இதனால் பழைய பட தலைப்புகள் மீண்டும் இப்போது உருவாகி வரும் படங்களுக்கு வைக்கப்பட்டு வருகிறது. இன்னொரு பக்கம் வித்தியாசமான தலைப்புகளை அதிகமாக வைக்கத் தொடங்கிவிட்டனர். அந்த வகையில் அட்டகத்தி, யாருடா மகேஷ், கண்ணா லட்டு திண்ண ஆசையா, ஹாய் டா உள்ளிட்ட பட தலைப்புகளின் வரிசையில் இப்போது புதிதாக சேர்ந்திருக்கும் தலைப்புதான் ‘தீயா வேலை செய்யணும் குமாரு...’ சுந்தர் சி தான் இப்படியொரு தலைப்பை தனது படத்திற்கு வைத்திருக்கிறார்.
கலகலப்பு படத்தை தொடர்ந்து தற்போது விஷாலை வைத்து இயக்கி வரும் மத கஜ ராஜா படத்தை அடுத்து இயக்கப் போகும் புதிய படத்தின் தலைப்பு தான் இது. இப்படத்தில் போய்ஸ் நாயகன் சித்தார்த் ஹீரோவாகவும், ஹன்சிகா மோத்வானி ஹீரோயினாகவும் நடிக்கின்றனர். இவர்கள் இருவரும் தமிழில் இணையும் முதல்படம் இது. ஏற்கனவே இவர்கள் தெலுங்கில் ஓ மை பிரண்ட் என்ற படத்தில் ஜோடி சேர்ந்து நடித்துள்ளனர். சித்தார்த் ஹன்சிகாவுடன் சந்தானமும் இப்படத்தில் நடிக்கிறார். தற்போது படத்திற்கான பிற கலைஞர்கள் தேர்வு நடந்து வருகிறது. விரைவில் படப்பிடிப்பு துவங்க உள்ளது. சுந்தர் சி யின் மனைவி குஷ்பு இப்படத்தை தயாரிக்கிறார். பொதுவாக சுந்தர் சி படம் என்றாலே கொமெடிக்கு குறை இருக்காது. அதேபோல் இப்படமும் கொமெடி படமாக உருவாக இருக்கிறது.

மேக்னா ராஜ்

சசிகுமார், லட்சுமி மேனன் நடித்து தமிழில் ஹிட்டான படம் ‘சுந்தரபாண்டியன்’ பிரபாகர் இயக்கி இருந்த இந்தப் படம். இப்போது கன்னடத்தில் ரீமேக் ஆகிறது. யாஷ் ஹீரோவாக நடிக்கிறார்.
குருதேஷ்பாண்டே இயக்குகிறார். இதில் ஹீரோயினாக மேக்னா ராஜ் நடிக்கிறார். இதுபற்றி மேக்னா கூறும்போது, ‘தமிழில் ‘சுந்தரபாண்டியன்’ படத்தை பார்த்துவிட்டேன்.
அதில் ஹீரோயின் கேரக்டருக்கான முக்கியத்துவத்தை பார்த்தேன். கன்னட ரீமேக்குக்கு என்னிடம் கேட்டபோது மறுக்காமல் சம்மதித்தேன். மலையாள படங்களில் பிசியாக நடித்துவருவதால் மற்ற மொழி படங்களுக்கு அதிகமாக கால்iட் கொடுக்க முடியவில்லை’ என்றார்.

சமந்தாவுக்கு பதிலாக நடிக்க ரூ.1 கோடி சம்பளம் கேட்ட ஸ்ருதி

சமந்தாவுக்கு பதில் நடிக்க ரூ. 1 கோடி சம்பளமாக கேட்டார் ஸ்ருதிஹாசன். இது பற்றிய விவரம் வருமாறு; தமிழ், தெலுங்கு, இந்தி என 3 மொழிகளில் நடித்து வருகிறார் ஸ்ருதிஹாசன். தெலுங்கில் அவர் நடித்த கப்பேர் சிங் படம் ஹிட்டானதையடுத்து தனது சம்பளத்தை 1 கோடிக்கு உயர்த்தியதாக கூறப்படுகிறது. இந்நிலையில் ராம் சரண் தேஜா ஹீரோவாக நடிக்கும் எவடு படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க சமந்தாவிடம் கால்iட் கேட்டார் தயாரிப்பாளர் தில் ராஜு. முதலில் ஓகே சொன்ன சமந்தா பின்னர் கால்iட் பிரச்சினையால் விலகினார். இதையடுத்து புதிய ஹீரோயினை உடனடியாக தேட வேண்டிய கட்டாயத்துக்கு ஆளானார் தயாரிப்பாளர். ஸ்ருதி ஹாசனை நடிக்க வைக்கலாம் என்று படக் குழுவினர் கருத்து தெரிவித்ததையடுத்து அவரை அணுகினார்.
அவரோ ஒரு கோடி ரூபா சம்பளம் தந்தால் நடிப்பதாக கூறினாராம். அதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்தார் தயாரிப்பாளர். சம்பளத்தை குறைக்க வேண்டும் என்று கேட்டார். 2 வார காலம் இருதரப்பிலும் பேச்சுவார்த்தை நடந்தது. சம்பளத்தை குறைக்காத பட்சத்தில் வேறு ஹீரோயினை ஒப்பந்தம் செய்யத் தயாரிப்பாளர் எண்ணினார். ஆனால் ராம் சரணுடன் நடிக்கும் வாய்ப்பை இழக்க ஸ்ருதி விரும்பவில்லை. இதையடுத்து தனது சம்பளத்தை 60 இலட்சமாக குறைத்துக்கொண்டாராம். இதைத் தயாரிப்பாளரும் ஏற்றுக்கொண்டாராம். ஆனால் ஸ்ருதி தரப்பில் கூறும்போது பணம் பெரிய விஷயமில்லை. நல்ல கதாபாத்திரங்கள்தான் முக்கியம். இப்படத்தில் நடிக்க தாமதம் ஆனதற்கு காரணம் கால்iட் பிரித்து தருவதில் பிரச்சினை இருந்தது. இதற்கும் சம்பளத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றனர்.

Thursday, January 3, 2013

தேசிய விருதுகள்

சிறந்த பொழுது போக்குப் படம் அழகர் சாமியின் குதிரை ஜப்பானில் நடந்த ஒசாகா பட விழாவில் விக்ரம் நடித்த தெய்வத்திருமகள் சிறந்த படத்துக்கான விருதைப் பெற்றது

79 நாயகர்களும் 78 நாயகிகளும் அறிமுகம்

கடந்த ஆண்டு 79 கதாநாயகர்கள் அறிமுகமானார்கள், அவர்களில், உதயநிதி ஸ்டாலின் (ஒரு கல் ஒரு கண்ணாடி) விஜய் அண்டனி (நான்) விக்ரம் பிரபு (கும்கி) ஆகியோர் வெற்றி பெற்றார்கள்.
சிவகார்த்திகேயன் (மெரீனா), வாசகர் (பச்சை என்கிற காத்து), லகுபரன் (ராட்டினம்), தினேஷ் (அட்டக்கத்தி) ஆகியோர் கவனிக்க வைத்தனர்.
78 கதாநாயகிகள் அறிமுகமானவர்கள் அவர்களில், லட்சுமி மேனன், (சுந்தரபாண்டியன், கும்கி), வரலட்சுமி (போடா போடி), ராதிகா ஆப்தே (டோனி), மனீஷா, ஊர்மிளா (வழக்கு என் 18/9, ஸ்வாதி (ராட்டினம்), நந்திதா (அட்டக்கத்தி), காயத்ரி (18 வயசு) ஆகியோர் கவனிக்க வைத்தனர்.
கடந்த ஆண்டு 97 இயக்குநர்கள் தங்கள் முதல் படைப்பை தந்திருக்கிறார்கள். அவர்களில் கார்த்திக் சுப்புராஜ் (பீட்சா), எஸ். ஆர். பிரபாகரன் (சுந்தரபாண்டியன்), ஜீவா சங்கர் (நான்), பாலாஜி மோகன் (காதலில் சொதப்புவது எப்படி), ஹரி சங்கர் - ஹரிஷ் நாராயணன் (அம்புலிமாமா), எம். அன்பழகன் (சாட்டை), பாலாஜி தரணிதரன் (நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்) பா. ரஞ்சித் (அட்டகத்தி) ஆகியோர் வெற்றியை சுவைத்தார்கள்.
ஐஸ்வர்யா தனுஷ் (3 பிரகாஷ்ராஜ் (டோனி), கீரா (பச்சை என்கிற காத்து), கே. எஸ். தங்கசாமி (ராட்டினம்), கமலக்கண்ணன்
(மதுபானக்கடை), தனபார் பத்மநாபன் (கிருஷ்ணவேணி பஞ்சாலை), எல்ரெட் குமார் (முப்பொழுதும் உன் கற்பனையில்), இரா சுப்பிரமணியம் (சேவற்கொடி), சத்யசிவா
(கழுகு), எஸ். ஜெய்சங்கர் (மன்னாரு), அஸ்லம் (பாகன்) லட்சுமி ராமகிருஷ்ணன் (ஆரோகணம்), எஸ். பாலன் (உடும்பன்), ஆண்ட்ரோ லூயிஸ் (லீலை), விக்னேஷ் மேனன் (விண்மீன்கள்) ஆகியோர் பாராட்டும்படியான படைப்பைக் கொடுத்தார்கள் எஸ். எஸ். ராஜமெளலி (நான் ஈ), சந்தோஷ் சிவன் (உருமி), கெளரி (இங்கிலீஷ் விங்கிலிஷ்) ஆகியோர் வேறு மொழிகளிலிருந்து தமிழுக்கு வந்தார்கள்.

கெட்டி மேளம்

* நடிகை வர்ஷினி- ஸ்ரீவர்ஷா (ஜன 01)
* எங்கேயும் எப்போதும் இயக்குநர் சரவணன், சந்தியா (ஜன 30)
* ஜெனிலியா, ரிதேஷ் தேஷ்முக் (பெப். 3)
* ‘ஆல்பம்’ ஹீரோ ஆர்யன் ராஜேஷ், சுபாஷினி (பெப். 14)
* ரீமாசென், ஷிவ்கரண் சிங் (மார்ச் 11)
* பிரசன்னா, சினேகா (மே 11)
* உதயதாரா, பைலட் ஜுபின் ஜோசப்
* வெயில் பிரியங்கா, இயக்குநர் லோரன்ஸ் ராம் (மே 23)
* முரண் இயக்குநர் ராஜன் மாதவ், சந்தியா (மே 23)
* இயக்குநர் சிம்புதேவன், கலைவாணி (ஜூன் 1)
* மாஸ்டர் சங்கர், மோனிகா நந்தினி (ஜூன் 10)
* சாயாசிங், ஆனந்தபுரத்து வீடு கிருஷ்ணா (ஜூன் 16)
* ஹேமமாலினி, தர்மேந்திரா தம்பதியர் மகள் இஷா தியோல் (ஆயுத எழுத்து) பரத் தக்தானி (ஜூன் 29)
* இசையமைப்பாளரும், பாடகருமான ஜாஸி- கிஃப்ட் அதுல்யா (செப் 11)
* சம்விருதா, அகில் ராஜ் (நவ 1)
* தமிழ்ப் படம் சிவா, பிரியா (நவ 15)
* இயக்குநர் ஏ. எம். ஜோதிகிருஷ்ணா, ஐஸ்வர்யா (நவ 23)
* டான்ஸ் மாஸ்டர்கள் ஷோபி பவுல்ராஜ், லலிமா (நவ 23)
* அத்வைதா, கன்னட இசையமைப்பாளர் அனுப்சீலின்
* ராம்சரண், எபாசனா (ஜூன் 4)
* உதயகிரன், விஷிதா (அக். 24)
* ‘நான் ஈ’ நானி, அஞ்சனா (அக் 27)
* வித்யா பாலன், சித்தார்த்த ராய் கபூர் (டிச. 14)

குவா குவா...

* இயக்குநர் செல்வராகவன், கீதாஞ்சலி தம்பதியருக்கு பெண் குழந்தை (ஜன 20)
* லாரா தத்தா, மகேஷ் பூபதி தம்பதியருக்குப் பெண் குழந்தை (ஜன 20)
* ஷில்பா ஷெட்டிக்கு ஆண் குழந்தை (மே 21)
* நடிகர் பாலா, பாடகி அம்ரிதா சுரேஷ் தம்பதியருக்கு பெண் குழந்தை (செப் 21)
* ஸ்வேதா மேனனுக்கு பெண் குழந்தை (செப். 27)
* சங்கீதா, பாடகர் கிரிஷ் தம்பதியருக்கு பெண் குழந்தை (டிச. 3)

வெற்றிவாகை சூடிய நடிகைகள்

நடிகைகளில் அமலாபோலும் சுனேனாவும் முதல் இடத்தில் இருக்கிறார்கள். கடந்த ஆண்டு அமலாபோல் ‘வேட்டை’ ‘காதலில் சொதப்புவது எப்படி’ ‘முப்பொழுதும் உன் கற்பனைகள்’ என மூன்று படங்களில் நடித்துள்ளார். அதேபோல் சுனேனா ‘பாண்டி ஒலிபெருக்கி நிலையம்’ ‘நீர்பறவை’ ‘திருத்தணி’ என மூன்று படங்களில் நடித்துள்ளார். காஜல் அகர்வால் (மாற்றான், துப்பாக்கி), ஓவியா (கலகலப்பு) மெரீனா காயத்திரி, 18 வயசு நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்) லட்சுமி மேனன் (சுந்தர பாண்டியன், கும்கி), பிந்து மாதவி (கழுகு, சட்டம், ஒரு இருட்டறை) ஆகியோர் தலா இரண்டு படங்களில் நடித்துள்ள்னர். இவர்கள் தவிர இலியானா (நண்பன்) ஸ்ருதி (3) ஹன்சிகா (ஓகே ஓகே) அஞ்சலி (கலகலப்பு) ஆகியோர் தலா ஒரு படத்தில் நடித்துள்ளனர்.
நடிகர்கள்
நடிகர்களில் கடந்த ஆண்டு மூன்று படங்களில் நடித்து முதல் இடத்தில் இருப்பவர் ஜீவா. நண்பன், முகமூடி, நீ தானே என் பொன் வசந்தம் ஆகியவை அவர் நடித்த படங்கள். விஜய் (நண்பன், துப்பாக்கி) ஸ்ரீகாந்த் (நண்பன், பாகன்) விமல் (இஷ்டம், கலகலப்பு) சிவகார்த்திகேயன் (மெரீனா, மனம் கொத்திப் பறவை) விஜய சேதுபதி (பீட்சா, நடுவுல கொஞ்சம் பக்கத்தக் காணோம்) ஆகியோர் தலா இரண்டு படங்களில் நடித்துள்ளனர்.
அஜீத் (பில்லா-2), சூர்யா (மாற்றான்) தனுஷ் (3), ஆர்யா (வேட்டை), அர்ஜுன் (மாசி), ஆதி (அரவான்) ஆகியோர் தலா ஒவ்வொரு படத்தில் நடித்துள்ளனர். கடந்த ஆண்டு நடிகர்களைப் பொறுத்தவரை டொப் 5 வரிசைப்படுத்த வழியில்லை.
நகைச்சுவை நடிகர்கள்
நகைச்சுவை நடிகர்களில் சந்தானம் 11 படங்களில் நடித்து முதல் இடத்தில் இருக்கிறார். 8 படங்களில் கஞ்சா கருப்பும், பரோட்டா சூரி, எம். எஸ். பாஸ்கர் ஆகியோர் தலா மூன்று படங்களிலும் நடித்துள்ளனர். துப்பாக்கி, நண்பன் படத்தில் நடித்துள்ளார் சத்யன். 2011ஆம் ஆண்டு அதிக படங்களில் நடித்த வடிவேலு கடந்த ஆண்டு மறுபடியும் ஒரு காதல் என்ற ஒரே படத்திலும் விவேக் முரட்டுக்காளை என்ற படத்திலும் மட்டுமே நடித்துள்ளனர்.
இசை அமைப்பாளர்கள்
கடந்த ஆண்டு அதிகப் படங்களில் இசை அமைத்து முதல் இடத்தில் இருப்பவர் இளையராஜா செங்காத்து பூமியிலே, தோனி,
மயிலு, அஜந்தா, நீதானே என் பொன் வசந்தம் ஆகியவை அவர்
இசை அமைத்த படங்கள். வி. தஷியும், ஒத்தவிடு, சங்கா ஊர் ராஜபாளையம், பரத்குரு, புதிய காவியம், சக்கரவர்த்தி திருமகள், ஆகிய 5 படங்களுக்கு இசை அமைத்துள்ளார். நண்பன், ஒரு கல் ஒரு கண்ணாடி, மாற்றான், துப்பாக்கி ஆகிய 4 படங்களுக்கு இசை அமைத்துள்ளார் ஹாரிஸ் ஜெயராஜ். யுவன் சங்கர் ராஜா வேட்டை, பில்லா-2, கழுகு ஆகிய படங்களுக்கும் இமான் மனம் கொத்திய பறவை, கும்கி, சாட்டை ஆகிய படங்களுக்கும் தமன் தடையறத்தாக்க, இஷ்டம், காதலில் சொதப்புவது எப்படி ஆகிய படங்களுக்கும் ஜீ. வி. பிரகாஷ்குமார் முப்பொழுதும் உன் கற்பனைகள், தாண்டவம், சகுனி ஆகிய படங்களுக்கும் ஸ்ரீகாந்த் தேவா ஆதிநாராயணா, மறுபடியும், ஒரு காதல், முரட்டுக்காளை ஆகிய படங்களுக்கும் தினா மேதை, சூழ்நிலை, மாசி ஆகிய படங்களுக்கும் என். ஆர். ரகுநந்தன் (கிருஷ்ணவேணி, பஞ்சாலை, சுந்தர பாண்டியன், நீர்ப்பறவை ஆகிய படங்களுக்கும் இசையமைத்துள்ளனர். தேவா கொண்டான் கொடுத்தான், மாட்டுத் தாவணி ஆகிய படங்களுக்கும் விஜய் அண்டனி நான், சட்டம் ஒரு இருட்டறை ஆகிய படங்களுக்கும் இசை அமைத்துள்ளனர்.

Tuesday, January 1, 2013

சிங்கள மொழியில் பேசி புகழ்பெற்ற நடிகர்

எஸ். செல்வசேகரன் கொழும்பைப் பிறப்பிடமாகக் கொண்ட புகழ்பெற்ற மேடை, வானொலி நடிகராவார். கோமாளிகள் நாடகத் தொடரில் சிங்கள மொழியில் பேசும் உபாலி பாத்திரத்தில் நடித்துப் புகழ் பெற்றதை அடுத்து ‘உபாலி செல்வசேகரன்’ எனவும் அழைக்கப்படுகிறார். நகைச்சுவையோடு குணசித்திர பாத்திரங்களிலும் திறமையாக நடிப்பவர்.
செல்வசேகரனின் பெற்றோர் முத்தையா, அந்தோனியம்மா. இவர் இலங்கையின் தெற்கே பாணந்துறையில் பிறந்தார். தந்தை பாணந்துறையில் ஒரு உடுப்புத் தைக்கும் கடை வைத்திருந்தார். பின்னர் கொட்டாஞ்சேனைக்குக் குடிபெயர்ந்தார்கள்.
கொழும்பு கொச்சிக்கடை சென் பெனடிக்ட் கல்லூரியில் கல்வி பயின்றார் செல்வசேகரன்.
இலங்கை வானொலியின் வர்த்தகச் சேவையில் எஸ். ராம்தாஸின் (கோமாளிகளின் கும்மாளம்’ தொடரிலும் எஸ். எஸ். கணேச பிள்ளையின் ‘இரை தேடும் பறவைகள்’ தொடரிலும் கே. எஸ். பாலசந்திரனின் ‘கிராமத்துக் கனவுகள்’ தொடரிலும் முக்கிய பாத்திரங்களில் நடித்தவர். இவர் ரூபவாஹினியில் எதிர்பாராதது என்ற தொலைக்காட்சி நாடகங்களில் நடித்தவர்.
இவர் கோமாளிகள், ஏமாளிகள், நாடு போற்ற வாழ்க போன்ற திரைப்படங்களில் நடித்தவர். நடிகர் வி. பி. கணேசனுக்கு புதிய காற்று, நான் உங்கள் தோழன், நாடு போற்ற வாழ்க போன்ற படங்களில் பின்னணிக் குரல் கொடுத்தவர் இவரே. இதனால் இவர் நாடு போற்ற வாழ்க படத்தில் நடித்த போது இவருக்கு எஸ். என். தனரத்தினம் குரல் கொடுக்க நேர்ந்தது.
புஞ்சி சுரங்கனாவி என்ற சிங்களப் படத்தில் நடித்ததற்காக இவருக்கு சிறந்த துணை நடிகருக்கான விருதம் வழங்கப்பட்டது. கே. எம். வாசகரின் சுமதி எஸ். ராம்தாசின் ‘காதல் ஜாக்கிரதை கலாட்டாக் காதல் போன்ற பல மேடை நாடகங்களில் நடித்தவர். இவர் என்பது குறிப்பிடத்தக்கது. புஞ்சி சுருங்கனாவ, மச்சான், மாப்பா, சூரிய அரண ஆகிய சிங்கள படங்களிலும் இவர் நடித்துள்ளார்.

கமல் நடிப்பை பார்த்து பிரமித்த ரஜினி

ரஜினிகாந்த் நடித்த முதல் படமான ‘அபூர்வ ராகங்கள்’ படப்பிடிப்பு, அவருடைய அதிர்ஷ்ட நாளான வியாழக்கிழமை அன்று நடந்தது. 3 படங்களில் நடிக்க வைக்கப் போவதாக டைரக்டர் கே. பாலசந்தர் கூறியதால் மகிழ்ச்சியின் உச்சிக்குச் சென்ற ரஜினிகாந்த், நேராக டிரைவ் – இன் - உட்லண்ட்ஸ் ஓட்டலுக்குச் சென்றார். அவரிடம் 20 ரூபாய் இருந்தது. ஓட்டலில் இருந்த நண்பர்களிடம் விஷயத்தைச் சொன்னார். அவர்கள் ஆனந்தக் கூத்தாடினார்கள்.
எல்லோருக்கும் சுவிட், மசாலா தோசை, காபி வாங்கிக் கொடுத்தார். ‘தமிழ் கற்றுக் கொண்டால், உங்களை எங்கோ கொண்டுபோய் விட்டு விடுவேன்’ என்று பாலசந்தர் சொன்னது, ரஜினியின் மனதில் ஆழமாகப் பதிந்து விட்டது.
அன்று முதல், தமிழ் படிக்க ஆரம்பித்தார். தமிழ்ப் பத்திரிகைகளில் வரும் செய்திகள், கதைகளை எல்லாம் படித்தார். ஒவ்வொரு வார்த்தையையும் எப்படி உச்சரிக்க வேண்டும் என்பதை மற்றவர்களிடம் கேட்டுத் தெரிந்து கொண்டார்.
ஒருநாள் ஞாயிற்றுக்கிழமை கலாகேந்திரா அலுகலகத்தில் இருந்து ரஜினிக்கு போன்வந்தது.
‘அபூர்வ ராகங்கள் படத்தின் ஷ¥ட்டிங் நாளைக்கு நடக்கிறது. உங்கள் சம்பந்தப்பட்ட காட்சிகளை பாலசந்தர் எடுக்கப் போகிறார். ஸ்டூடியோவுக்கு வந்துவிடுங்கள்’ என்று கூறினார்கள்.
ரஜினிக்கு ஏக சந்தோஷம். இருந்தாலும் ஒரு நெருடல் அவருக்கு வியாழக்கிழமைதான் அதிர்ஷ்ட நாள். முக்கிய நிகழ்ச்சிகள் எல்லாம் வியாழக்கிழமைகளில் தான் நடந்து வந்திருக்கின்றன. ‘முதல் நாள் படப்பிடிப்பு வியாழக்கிழமை இருக்கக் கூடாதா?’ என்று எண்ணினார்.
ஆனால், படப்பிடிப்புக்காக முதல் முதலாக அழைப்பவர்களிடம் இதையெல்லாம் கூறமுடியுமா? எனவே, அவர்கள் சொன்னபடியே திங்கட்கிழமை ஸ்டூடியோவுக்குப் போனார். ஆனால், அன்று அவரது காட்சிகள் எடுக்கப்படவில்லை. மறுநாளும் போனார். அன்றும், அதற்கு அடுத்த நாளும் கூட படப்பிடிப்பு இல்லை.
கடைசியில், வியாழக்கிழமையன்று அவர் சம்பந்தப்பட்ட காட்சிகளைப் படமாக்கினார். பாலசந்தர்தான் விரும்பியபடியே முதல் நாள் ஷ¥ட்டிங் தானாகவே வியாழக்கிழமை நடந்ததில் ரஜினிக்கு ஏகப்பட்ட மகிழ்ச்சி.
முதலில் படமாக்கப்பட்ட காட்சி
ஒரு பெரிய பங்களா. அதற்கு ஒரு பெரிய கதவு. அதைத் திறந்துகொண்டு, தாடி மீசையுடன் உள்ளே நுழைகிறார் ரஜினி. ‘பைரவி வீடு இதுதானா? நான் பைரவியோட புருஷன்’ என்று கமல்ஹாசனிடம் கூறுகிறார் ரஜினி பேசிய முதல் வசனம் இதுதான். படப்பிடிப்புக்கு முன் இந்த வசனத்தை சுமார் ஆயிரம் தடவை பேசிப் பேசி ஒத்திகை பார்த்திருந்தார் முதல் நாள் அனுபவம் பற்றி ரஜினி கூறியிருப்பதாவது :
‘என் முகம் எல்லாம் கம் தடவி, தாடியை ஒட்ட வைத்திருந்தார்கள். சிரிக்கவும் முடியாது அழவும் முடியாது. சுமார் 20 கிலோ எடையுள்ள கோட்டை அணிந்திருந்தேன். அதைத் துவைத்து எத்தனை வருடம் இருக்குமோ தெரியவில்லை! ஒரே வியர்வை நாற்றம் தாங்க முடியாத அரிப்பு!
கிளாப் அடிக்கும் உதவி டைரக்டர் வெள்ளைக்காரன் மாதிரி இருப்பார். அதனால் அவரை ‘ஜப்பான்’ என்று எல்லோரும் செல்லமாக கூப்பிடுவார்கள். ஜப்பான் என் முன்னால் கிளாப் அடித்துவிட்டு ஓடினார். எனக்கு ஒரே பதற்றம். எப்படியோ டயலாக்கை சொல்லிவிட்டேன். உண்மையில் உளறினேன் என்பதுதான் பொருந்தும்.
நான் கமலைப் பார்த்துத்தான் இந்த வசனத்தைச் சொன்னேன். ஆனால், சற்று தூரத்தில் நின்று கொண்டிருந்த பாலசந்தர் சார்தான் என் கண்ணுக்குத் தெரிந்தார். நான் கேமராவைக் கண்டோ, அங்கிருந்த கூட்டத்தைக் கண்டோ பயப்படவில்லை. என் பயம் எல்லாம் பாலசந்தர் சார் கிட்டதான்.
அவருடைய பர்சனாலிட்டி, ஜென்டில்னஸ், அவருடைய அப்பியரன்ஸ் எல்லாம் சேர்ந்து, அவரிடம் எனக்கு ஒருவித பயத்தை ஏற்படுத்தி இருந்தன. பாலசந்தர் சாரைப் பார்த்தேன். நான் அவ்வளவு சரியா செய்யவில்லை என்பதை, அவர் முகத்திலிருந்து தெரிந்து கொண்டேன்.
அருகே இருந்த சுவர் பக்கம் ஒடினேன். ஒரு சிகரெட்டை எடுத்து, சுருள் சுருளாகப் புகை விட்டேன். ‘சிவாஜி’ என்று குரல் கேட்டது. நான் ஓடிப்போய் கேமரா முன் நின்றேன். என் சம்பந்தப்பட்ட அடுத்த காட்சியை படமாக்கினார் பாலசந்தர் சார்.
மேலேயிருந்த கமல் என்னிடம் ஒடிவருகிறார். ‘என்ன சொன்னீங்க?’ என்று கேட்கிறார்,
‘நான் பைரவியோட புருஷன்’ என்று மீண்டும் சொல்கிறேன். கமல் என்னை இழுத்து மோட்டார் பைக்கில் உட்காரவைத்து, பைக்கை கேட்டுக்கு வெளியே ஓட்டிச் செல்கிறார்.
இந்தக் காட்சி படமாக்கப்பட்ட போது, கமல் நடிப்பைப் பார்த்து நான் பிரமித்துப் போய்விட்டேன். ‘நாம் இப்படி ஆவது எப்போது?’ என்று நினைத்தேன்.
இதே படத்துக்காக, நாகேஷ் சாரோடு ஒரு சீனில் நடித்தேன். அந்தக் காட்சி படமாக்கப்பட்டதும், நாகேஷ் என்னிடம் வந்தார். ‘உங்களுக்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது’ என்று கூறியபடி என் முதுகைத் தட்டிக் கொடுத்துவிட்டுப் போனார். அவர் கூறிய வார்த்தை அப்போது மட்டும் அல்ல, இப்போதுகூட டானிக்தான்!’
இவ்வாறு ரஜினி குறிப்பிட்டுள்ளார்.

நடைப் பயிற்சி பற்றி பாடலாசிரியர்

நடைப் பயிற்சிக்குப் பெரிதும் உகந்த நேரம் காலைதான். அது ஓசோன் நிறையும் நேரம், அதிக ஒட்சிஜன் கிடைக்கும் நேரம். படுக்கையில் அசைவற்றுக் கிடந்த உங்கள் மூட்டுகள் விறைத்திருக்கும். காலை நேர நடைப் பயிற்சியால் மூட்டுகள் முடிச்சவிழும்.
அடுத்த வீட்டு நண்பரை அழைத்துக்கொண்டு அடுத்த தெருவில் காப்பி சாப்பிட்டு ஒரு மணி நேரத்தில் வீடுவந்து சேர்வதே நடைப் பயிற்சி என்று பலர் நம்புகிறார்கள், தவறு. நடைப் பயிற்சியில் முக்கியமானது நேரமல்ல, தூரம். குறைந்த நேரத்தில் அதிக தூரம் நடப்பது நல்ல பயிற்சி, பூமிக்கு வலிக்குமென்று பொடி நடை போவதெல்லாம் ஒரு நடையா? கைவீசி நடக்க வேண்டும், காற்று கிழிபடும் ஓசை கேட்க வேண்டும்.
63 தசைகள் இயங்கினால்தான் நீங்கள் நன்றாய் நடந்ததாய் அர்த்தம். நடைப் பயிற்சியின் போதே லாவகமாய்ச் சுழற்றிக் கழுத்துக்கு ஒரு பயிற்சி தரலாம். தோள்களை மெல்ல மெல்ல உயரத்திக் காதுகளின் அடிமடல் தொடலாம். விரல்களை விரித்து விரித்துக் குவிக்கலாம். நடைப் பயிற்சியில் பேசாதீர்கள். உங்கள் ஒட்சிஜனை நுரையீரல் மட்டுமே செலவழிக்கட்டும்.
ஒருபோதும் உண்டு விட்டு நடக்காதீர்கள். சாப்பிட்டவுடன் உடம்பின் ரத்தமெல்லாம் இரைப்பைக்குச் செல்ல வேண்டும்; இரைப்பையின் ரத்தத்தைத் தசைகளுக்கு மடைமாற்றம் செய்யாதீ ர்கள். உங்கள் விலாச் சரிவுகளில் திரவ எறும்பு போல் ஊர்ந்து வழியட்டும் வேர்வை. அதை இயற்கைக் காற்றில் மட்டுமே உலர விடுங்கள். இருக்கும் சக்தியை எரிக்கத்தானே நடந்தீர்கள். எரித்ததற்கு மேல் வழியிலேயே நிரப்பிக் கொண்டு வந்துவிடாதீர்கள்.
இப்படி... சொன்னது வேற யாருங்க...? நம்ப கவிப்பேரரசு வைரமுத்து தான். அவர் எழுதிய ஒரு கவிதை “உடல் எழுத்து” அதில் மேல் சொன்னது போல மிக அழகாக தனக்கே உரிய கவிதை நடையில் அ முதல் ஃ வரை
அவர் எழுதியதை உங்களுடன்...
உடல் எழுத்து
(அ முதல் ஆஹா வரை...!!)
அதிகாலை எழு
ஆகாயம் தொழு
இருதயம் துடிக்க விடு
ஈரழுந்த பல் தேய்
உடல் வேர்வை கழி
ஊளைச்சதை ஒழி
எருதுபோல் உழை
ஏழைபோல் உண்
ஐம்புலன் பேணு
ஒழித்துவிடு புகை, மதுவை
ஓட்டம் போல் நட
ஔடதம் பசி
அஃதாற்றின் எஃகாவாய்

7 வயதில் சினிமாவுக்கு குரல் கொடுத்தவர்

மறக்க முடியாத பழைய குரல்களில் ஒன்று ஜமுனா ராணியினுடையது. இன்று குத்துப்பாடல்கள் என இள அளைக் கவரும் பாடல்களை அன்று பாடியவர்களில் ஜமுனாராணியும் ஒருவர்.
ஜமுனாராணி எல்.ஆர்.ஈஸ்வரி ஆகியோரின் அந்தக் கால குத்துப்பாடல்கள் அந்தக் கால இளைஞர்களை மட்டுமல்லாது முதியவர்களையும் கவர்ந்திழுத்தன. 1952 ம் ஆண்டு மொர்டன் தியேட்டர்ஸ் தயாரித்த வளையாபதி படத்தில் டி.எம்.எஸ்.ஸ¤டன் இணைந்து குளிர் தாமரை மலர்ப் பொய்கை என்ற பாடலை முதன் முதலாக பாடினார்.
ஜமுனாராணி அவருடைய குரலில் ஒரு கவர்ச்சி இருந்தது. அதே படத்தில் உள்ள இன்னொரு பாடலான குலுங்கிடும்பூவில் எல்லாம் தேனருவி பாய்வதனால் என்ற பாடல்தான் ஜமுனா ராணியை அடையாளம் காட்டியது. இந்த இரண்டு பாடல்களும் பாரதிதாசனால் எழுதப்பட்டவை.
டி.எம். செளந்தர ராஜனின் கம்பீரக் குரலுக்கு இணையாக ஜமுனாராணி பாடிய பாடல்கள் இன்றைக்கும் மறக்க முடியாதவையாக உள்ளன. ஏழு வயதில் சினிமாவுக்கு குரல் கொடுத்தவர், 14 வயதில் கதாநாயகிக்காக பின்னணி பாடியவர், நான்கு வயதில் சங்கீதப் போட்டியில் முதல் பரிசு பெற்றவர், ஐந்து வயதில் வானொலிக்காக தேர்வு செய்யப்பட்டவர் போன்ற பெருமைகளின் சொந்தக்காரர் ஜமுனாராணி.
1964 ம் ஆண்டு தெலுங்குத் திரைப்படமான தியாகய்யா வெளியான போது பிரபல இசை வித்தகர்களின் பாடல்கள் அப்படத்தில் இடம்பெற்றன. அவர்களுடன் ஏழு வயதான ஜமுனாராணியும் மதுரை நகரிலே என்ற பாடலைப்பாடி இருந்தார்.
நடன மங்கையாகத்தான் சினிமாவில் ஜமுனாராணி அறிமுகமானார். நாடகங்களில் தனியாகவும் குழுவாகவும் நடமாடினார். தீன பந்தாஜீவன் முக்திராவால்மீது, கருடகர்வ பங்கயம் போன்ற தெலுங்குப் படங்களில் ஜமுனாராணி நடனமாடி இருந்தார். 1952 ம் ஆண்டு வெளியாகி தமிழ்த்திரை உலகின் பெரும் புரட்சியை உருவாக்கிய தேவதாஸ் படத்தில் ஜமுனாராணி பாடிய “ஓ தேவதாஸ் படிப்பு இதானா வாத்தியாரு தூங்கிப் போனா ஓட்டம் பிடிக்கிறே” என்ற பாடல் ஜமுனாராணிக்கு பெரும் புகழைத் தேடிக் கொடுத்தது.

கவிஞர் கண்ணதாசனை புகழ்கிறார் புரட்சித் தலைவர்

கவியரசர் கண்ணதாசனைப் பற்றி புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். கூறியுள்ள கருத்துக்களில் சிலவற்றைத்தான் இங்கே காணப்போகிறோம்.
“காலக்காற்ற இந்த மாபெரும் கவிஞரை எங்கெல்லாமோ அலைக்கழித்தது. எந்தத் துறை முகத்திற்கு இந்தப் படகு பயணப் பட்டாலும், அங்கெல்லாம் இது சீரோடும், சிறப்போடுமே போற்றப்பட்டது. அவரிடமிருந்த தமிழ்தான் அதற்குக் காரணம்.
மற்றவர்கள் கவிதை எழுதினார்கள். கவியரசு கவிதையாகவே வாழ்ந்தார்.
‘கவிஞர்’ என்றால் அது கண்ணதாசன் ஒருவரைத்தான் குறிக்கும் என்கிற அளவுக்கு அவருக்குப் புகழ் சேர்ந்தது.
பாரதி - பாரதிதாசனுக்குப் பிறகு தமிழுக்கு அவர்தான் என்பது நிலைமை அவர் காலத்தில் வாழ்ந்தது தமிழர்களாகிய நமக்குப் பெருமை. பல கவிஞர்கள் வாழ்க்கைப் பயணத்தை முடித்த பிறகே வாழ்த்தப்பட்டார்கள்.
கவியரசு கண்ணதாசன் வாழ்ந்த போதே வரலாறாகிவிட்டார். மரணத்திற்குப் பிறகு அவருக்குச் சூட்டப் போகிற கீர்த்தி கீரிடத்தை, வாழ்ந்த போதே பார்க்கக் கொடுத்து வைத்த கவிஞர்களில் அவரே தலையானவர்.
மற்றவர்கள் சரித்திரம் படித்தவர்கள். கவிஞர் சரித்திரமே படைத்தார். பள்ளியிறுதி பார்க்காத அவர், பழந்தமிழ்ச் சாற்றைப் பருகி, புதுத் தமிழ் பொழிய வாழ்ந்தார் என்பது அதிசயமாகவே இருக்கிறது.
அவர் சொன்னால் கவிதை. அவரை சொன்னதெல்லாம் கவிதை என்று வாழ்ந்தவர் அவர்.
இலக்கியம் படைக்க முடிந்தவர்களால், எளிதான் கவிதைகளைப் படைக்க முடிந்ததில்லை. இந்த இலக்கியவேலி, கவியரசு காலத்திலேதான் அவராலேதான் வீழ்த்தப்பட்டது.
‘மாங்கனி’ போன்ற காவியங்களை எழுதிய அவரது கரமே, கோடிக்கணக்கானவர்கள் கேட்டு மகிழ்க்கின்ற எளிதான், இனிமையான திரைப்படப் பாடல்களையும் எழுதியது. திரைப்படப் பாடல்கள் தமிழ் இலக்கியத்தில் ஆராய்ச்சிக்குரிய அற்புதங்களாவதற்கு அவரே பெருங் காரணமாக இருந்தார். அருவி நடை, ஆன்றபுலமை, அன்புள்ளம், பிள்ளை மனது உயர்ந்த சிந்தனை- உலகளாவிய பார்வை இவையே கவியரசு கண்ணதாசன்.
நூறு கவிஞர்கள் சேர்ந்து செய்ய வேண்டிய இலக்கியப் பணியைக் கவிஞர் அவர்கள் ஒருவரே செய்தார்.
எப்போதோ ஒருமுறை தோன்றுகின்ற இதிகாசக் கவிஞர் அவர்”
கண்டீர்களா?
சாகாவரம் பெற்ற சக்தியக் கவிஞர் கண்ணதாசனைப் பற்றிப் புவிபோற்ற வாழ்ந்த புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். கூறியுள்ள கருத்துக்களை... பார்வையை... இதனைவிடக் கவியரரைப் புவியியல் யார், ஆழழ்ந்து நோக்கி ஆய்வு செய்திட இயலும்? சொல்லுங்கள் பார்ப்போம்!
எதனையும் நுட்பமாக ஆய்கின்ற ஆற்றல் பெற்ற எம்.ஜி.ஆர். அற்புதமாகக் கவியரசரை அணுகி, ஆய்ந்து கூறிய கருத்துக்கள் காலத்தை வென்று நிற்கும் கருத்தாய்வுப் பெட்டகந்தானே!
தன்னை இந்த அளவிற்கு ஆய்கின்ற ஆற்றல் பெற்ற எம்.ஜி.ஆர். அற்புதமாகக் கவியரரை அணுகி, ஆய்ந்து கூறிய கருத்துக்கள் காலத்தை வென்று நிற்கும் கருத்தாவுப் பெட்டகந்தானே! தன்னை இந்த அளவிற்கு ஆய்கன்ற அன்புள்ளம் கொண்ட எம்.ஜி.ஆர். படங்களுக்கு அந்தக் கவியரசர் அள்ளித் தந்த பாடல்களை... இல்லை!... இல்லை!... பார்ப்போற்றும் பாடல்களைத் தொடர்ந்து நாமும் காப்போகமாக.