Tuesday, February 18, 2014

எம்.ஜி.ஆருக்கு வைத்தியம்

இந்த நேரத்தில் இவர்கள் குடியிருக்கும் வீட்டுக்காரரும், அவரது மனைவி மக்களும் தாங்கள் இதுவரைக்கும் எம்.ஜி.ஆரை பார்க்கவில்லை என்று சொல்லி பார்க்க வருகின்றார்கள். வீட்டு முதலாளி பெயர் ஆறுமுக நாடார். இவர் வயதானவர். அந்த ஊரிலேயே நல்லவர் என்று பெயர் உள்ளவர். இவருக்கு பல கள்ளுக்கடைகள் இருந்தன. சொந்தத்தில் தோப்புகளும் இருந்தன.

இவர் ஒரு நாட்டு வைத்தியர். இவர் எம். ஜி. ஆரை பார்த்துகொண்டே இருந்தவர் உடனே அவரே, அழைத்து கைபிடித்து நாடியை பார்த்தார். உடனே சத்தியதாயை பார்த்து உங்க மகன் ராமச்சந்திரனுக்கு வியாதி ஏதும் இல்லை. உஷ்ணம் அதிகமாக இருக்கிறது. அதனாலே குடல்புண், குடல் பூச்சி ஏற்பட்டு உடம்பு சரியில்லாமல் இருக்கிறான். இதை குணப்படுத்தி விடலாம்.
நீங்கள் கவலைப்படாதீர்கள் இதற்கு மருந்துகொடுத்து சரி செய்யலாம் என்று சொல்லி விட்டு பிறகு சத்தியபாமா அம்மாவை தனியாக அழைத்து அம்மா நாளை முதல் வைத்தியம் ஆரம்பிக்க வேண்டும். எப்படியாவது கம்பெனி முதலாளியிடம் சொல்லி ஒரு மாதம் லீவு வாங்கனும், இது எல்லாம் ரெடி செய்துகொண்டு என்னிடம் சொல்லுங்க என்று சொல்லிவிட்டு சென்றுவிடுகிறார்கள்.
இந்த விஷயத்தை சத்தியதாய் எம். ஜி. ஆரிடம் சொன்னார். எம். ஜி. ஆர். அதைக் கேட்டு நான் நல்லாத்தான் இருக்கேன். என்னை எதற்காக தொந்தரவு செய்கின்aர்கள் என்று சொல்லி வருத்தப்படுகிறார். எனக்கு ஒரு மாதம் லீவு எல்லாம் கிடைக்காது வேண்டாம். விட்டுறும்மா என்று சொல்லி இவர்கள் இருவரும் கம்பெனிக்கு சென்று விடுகிறார்கள். சத்திய பாமா கம்பெனிக்கு சென்று நாராயணனை சந்தித்து அவர்களிடம் தன் மகன் எம். ஜி. ஆர். உடல் நிலையைப் பற்றி கூறினார்.
எல்லாவற்றையும் கேட்ட நாராயணன் நீங்கள் இருங்க முதலாளியை பார்த்து பேசலாம் என்று நாராயணன் கூறினார். அதன்படி கம்பெனி முதலாளியிடம் சென்று ராமச்சந்திரன், சக்கரபாணி தாயார் வந்து இருக்கிறார். ராமச்சந்திரனின் உடல் நிலையை பற்றி தங்களிடம் பேசவேண்டுமாம் என்று அதன்படி கம்பெனி முதலாளியிடம் சத்திய பாமாவை அழைத்துச் சென்று பேச வைத்தார். முதலாளியை பார்த்த சத்திய பாமா பயபக்தியோடு வணக்கத்துடன் தன்னுடைய இளைய மகனை பற்றி சுருக்கமாக, விவரமாக சொன்னார்.
எல்லாவற்றையும் கேட்டு கம்பெனி முதலாளி சற்று யோசித்தார். பிறகு, சத்திய பாமாவை பார்த்து, அம்மா நீங்கள் சொல்கிறபடி ராமச்சந்திரனுக்கு உள்ள வேகமான செயலுக்கும், விவேகமான அறிவுக்கும் அழகுக்கும் அவனுக்கு தகுந்த உடம்பு இல்லையே என்பதை இப்போது தான் நான் யோசிக்கிறேன். நீங்கள் சொல்லுகிறபடி இந்த ஒரு மாதத்தில் ராமச்சந்திரனுடைய உடல் ஆரோக்கியத்தை சரியாககொண்டு வரலாம் என்றால், உடனே ராமச்சந்திரனிடம் சொல்லி உங்களிடம் அனுப்பி வைக்கிறேன். பெற்ற தாய் நான் எப்படியும் என் பிள்ளைகள் நல்லா இருக்கனும் என்று நினைத்து தான் செயல்களில் ஈடுபடுகிறேன்.
இதற்கு கடவுளுடைய கிருபையும் உங்களை போன்ற பெரிய மனிதர்களுடைய ஆசிர்வாதமும் உதவியும் கிடைக்கும் என்று நினைக்கிறேன். உடனே கம்பெனி முதலாளி உள்ளே சென்று சக்கரபாணியையும், ராமச்சந்திரனையும் அழைத்து வர சொல்லுகிறார். அழைத்து வரச் சொன்னதும், முதலாளி ஏன் அழைக்கின்றார் நாம் என்ன தவறு செய்தோம் என்று யோசித்துக்கொண்டு இருவரும் முதலாளியிடம் வருகின்றார்கள். அந்த இடத்தில் தன்னுடைய தாயை இருவரும் பார்க்கின்றார்கள். பார்த்து அம்மா எதற்கு கம்பெனிக்கு வந்து இருக்கிறார்கள்?
முதலாளியை பார்த்துக்கொண்டு அந்த நேரத்தில் பையன்கள் தாயாரை பார்க்காமல் கை கட்டிக்கொண்டு நிற்கிறார்கள். முதலாளி பிறகு இருவரையும் பார்த்து கொண்டு ராமசந்திரா உனக்கு உடல் மிகவும் மெலிந்து உள்ளது. இன்னும் கொஞ்சம் உடல் பெருத்தால் நல்லா இருக்கும். உன் அழகுக்கும் உன் திறமைக்கும் உன் புத்தி கூர்மைக்கும் உடல் பெருத்து இருப்பது நல்லது.
அதனாலே நீ இப்போ உங்க அம்மா கூடபோய் இருந்து ஒரு மாதத்திற்கு நீ உன் உடல் நிலையை சரிபார்த்துக்கொண்டு வா, அதோடு காலையில் உன் வழிபடி எப்போதும் எடுக்கும் என் உடல் பயிற்சியை செய்யத் தவறிவிடாதே இடையிலே உனக்கு முடிந்தவரையில் கம்பெனிக்கு வந்து போகலாம் என்பதை கூறி தாயார் அவர்கள் வசம் அனுப்பி வைத்தார். இதை எல்லாம் பார்த்துக் கொண்டு இருந்த சக்கரபாணி அவருக்கு மனதில் தம்பி எப்படியாவது நல்ல குணமாகி வரவேண்டும் என்று ஆண்டவனை நினைத்து பிரார்த்தனை செய்துகொண்டு வெளியே சென்று தாயாருடன் வழி அனுப்பி வைத்தார்.
போகின்ற வழியிலே தன் தாயை பார்த்து என்னம்மா இதெல்லாம் நான் ஒரு மாதம் வீட்டில் வந்து என்னுடைய உடம்பை பார்த்துக்கொள்ள வேண்டும் என்பது தேவையா, நம் குடும்பம் இருக்கும் நிலவரம் என்ன வீட்டுக்குப் போய் சென்ற பிறகு மறுநாள் காலையில் அந்த வீட்டிற்கு சொந்தக்காரர் ஆன ஆறுமுகம் நாடார் சத்திய பாமா வீட்டிற்கு வந்து ராமச்சந்திரனை அழைத்து நாடி பார்க்கின்றார்.
நாடி பார்த்த பிறகு எதுவும் சொல்லாமல் நாளை காலையில் 7 மணிக்கு அம்மா நான் உங்களிடம் சொன்னபடி அந்த மருந்தை ஒரு மெல்லிய துணியில் வடிகட்டி முடிந்தவரை 1/2 லீட்டருக்கு குறையாமல் கொடுக்க வேண்டும். மருந்து கொடுத்த பிறகு கண்டிப்பாக ஒரு மணி நேரத்திற்கு எதுவும் சாப்பிடக்கூடாது. நடக்கலாம், ஓடலாம், பசி எடுத்தால் நல்ல உணவுகளை கொடுங்கள் என்று சொல்லிவிட்டு சென்றார்.

புகைப்படக் கவிஞர் பாலுமகேந்திராவின் புகழோடு இணைந்த அகிலா, ஷோபா , மௌனிகா


kறைந்த புகைப்படக் கலைஞர், யதார்த்தத்துக்கு நெருக்கமாக தன் படைப்புக்களைத் தந்த அமரர் பாலுமகேந்திராவின் வாழ்க்கை முழுவதும் பெண்களால் நிரப்பப்பட்டதுதான். பாலு மகேந்திராவுக்கு மூன்று மனைவிகள். ஒருவர் அகிலா, இன்னொரு மனைவி பிரபல நடிகை ஷோபா தற்கொலை செய்துகொண்டார்.
ஆனால் பெரும்பாலும் அவரை மனைவி என்று குறிப்பிடுவதில்லை பாலுமகேதிரா. அவரை தன் தேவதை என்றே குறிப்பிடுவார். இன்னொரு மனைவி மெளனிகா. பாலு மகேந்திரா உடலைப் பார்க்கப் போராடியவர். தன் வாழ்க்கையில் இந்தப் பெண்ணின் பங்கு என்ன என்பதை ஒருபோதும் வெளிப்படையாகப் பேச மறுத்ததில்லை பாலுமகேந்திரா. பாலு மகேந்திராவின் மனைவி அகிலா. இவருக்கு ஷங்கி மகேந்திரா என்ற மகன் உள்ளார்.
மனைவி அகிலா குறித்து பாலு மகேந்திரா கூறியிருந்த கருத்து என்ன ... இதோ அவரது வார்த்தைகளில் ‘சினிமாவையும் இலக்கியத்தையும் அசுர வெறியோடு நேசிக்கும் எனக்கு என் வாழ்க்கைத் துணையும் சினிமாவோடும், இலக்கியத்தோடும் சம்பந்தப்பட்டவர்களாக, என் அலைவரிசையில் இருப்பவளாக வேண்டும் என்ற ஒரு பேராசை. இது அபத்தமான ஆசை. முட்டாள்தனமான எதிர்பார்ப்பு என்பதும் எனக்குத் தெரியும்.
அபத்தங்களும் முட்டாள் தனமும் நிறைந்ததுதான் என் வாழ்க்கை. ஏகப்பட்ட குழப்பங்கள் நிறைந்த என் வாழ்க்கையில் நேர்த்தியாக நான் வைத்திருக்கும் ஒரே விஷயம் சினிமாதான். இந்த உறவை (மெளனிக்காவுடனான) ஆரம்பிப்பதற்கு முன், என் அகிலாவைப் பற்றி நான் யோசித்திருக்க வேண்டும்.
இந்த உறவு எவ்வளவு தூரம் அவளைப் புண்படுத்தும், வேதனைக்குள்ளாக்கும் என்றெல்லாம் எண்ணிப் பார்த்திருக்க வேண்டும். வாழ்க்கையை அந்தந்த நொடிகளாகவே இன்றுவரை வாழ்ந்து கொண்டிருக்கிற எனக்கு என் அகிலாவின் துக்கத்தை நினைத்துப் பார்க்க அப்போது தோன்றவில்லை. உள்ளும் புறமும் அழகானவள் அகிலா. எனக்கு மனைவியாக வந்தபோது, அவளுக்குப் பதினெட்டு வயது சரியாகப் புடவை கட்டக் கூடத் தெரியாத வெகுளிப்பெண்.
அகிலாவைப் போன்ற பத்திணிப் பெண்கள் (பரிசுத்தவாதிகள்) புராண காலத்தில்தான் இருந்திருக்கிறார்கள். இந்த யுகத்தில் பிறந்திருக்க வேண்டிய பெண்ணல்ல அகிலா. என்னைப் போன்ற ஒரு பித்தனுக்கு வாழ்க்கைப்பட்டிருக்க வேண்டியவள் அல்ல. கனவுகளைத் துரத்தியபடி சதா ஓடிக்கொண்டு இருக்கும் நாடோடி நான் எனக்கு மனைவியாக வந்ததுதான் அகிலாவுக்கு ஏற்பட்ட மிகப்பெரிய துரதிர்ஷ்டம். மனைவியைத் தவிர மற்றொரு பெண்ணை ஏறெடுத்தும் பார்க்காத, மனசால் கூட நினைக்காத ஒரு நல்ல ஆண்மகனுக்கு வாழ்க்கைப்பட்டிருக்க வேண்டியவள் அகிலா.
என்னை மாதிரி ஒரு கோணங்கிக்கு வாழ்க்கைப்பட்டது அவள் விதி. இந்தப் பத்தினிக்கு வலிகளையும் காயங்களையும் தவிர, வேறு என்ன தந்தேன் என்று நினைக்கும் போது எங்காவது கண்காணாமல் போய்விடத் தோன்றுகிறது. மெளனிக்காவின் பேரன்பு... மெளனிகாவும் என் மனைவிதான். இந்த இடத்தில் மெளனியைப் பற்றியும், எனக்கும் அவளுக்குமான உறவு பற்றியும் நான் கொஞ்சம் விரிவாகப் பேச வேண்டியிருக்கிறது.
மெளனிக்கும் எனக்குமான உறவு ஒரு நடிகைக்கும், டைரக்டருக்குமான படுக்கையறை சம்பந்தப்பட்ட உறவு என்றுதான் பலர் நினைப்பார்கள். ஆனால், உண்மை அதுவல்ல! ஏறக்குறைய இருபது வருஷங்களுக்கு முன் ஆரம்பித்த உறவு அது. இனியும் எதையும் நான் மறைப்பதற்கில்லை. ரொம்பவும் உடைந்து போன ஒரு தருணத்தில், நான் உங்க கூடவே இருந்திரட்டுமா? என்று கண்கலங்கி நின்ற, அந்த சின்னப் பெண்ணுக்குப் புரியும்படி புத்திமதி சொல்லி, அந்த உறவை நான் முளையிலேயே கிள்ளிப் போட்டிருக்க வேண்டும். ஏனோ, அதை நான் செய்யவில்லை. அந்த அபலைப் பெண்ணின் கேள்விக்குப் பின்னே இருந்த வேதனை, அவமானம், வலி அனைத்தையும் நான் அறிவேன்.
புத்திபூர்வமாக வாழாமல் , உணர்வு பூர்வமாக மட்டுமே வாழத் தெரிந்த என்னை அது வெகுவாகப் பாதித்தது. அதன் விளைவுதான் எனக்கும் மெளனிக்குமான உறவு இவ்வளவு வேதனைப்படுகிற நீங்கள் ஏன் உங்கள் வாழ்வை இத்தனைச் சிக்கலாக்கிக் கொண்டீர்கள்?” “காரணம் மெளனியின் பேரன்புதான். “நீங்க எனக்குத் தாலி கட்ட வேண்டாம். உங்க காசு, பணம், சினிமா எதுவும் எனக்கு வேண்டாம். உங்கள் மூலமாக ஒரு குழந்தை கூட வேண்டாம்.
நீங்கள் என்னருகில் இருங்கள். அது போதும்! என்று சொல்லும் ஒரு ஆத்மாவை நான் எப்படி உதறித் தள்ளுவது? தன் இளமைக் காலத்தை எனக்காக, என்னுடன் பகிர்ந்து கொண்டவளை எப்படி உதற? எனீ; உறவு காரணமாகப் பழிச்சொல், அவமானம் அடைந்தவள் அவள். நான் வேலை இன்றி இருந்த மாதங்களில், தான் மட்டும் மாங்கு மாங்கென்று உழைத்து, பொருளாதார ரீதியாகவும் என்னைத் தாங்கிப் பிடித்தவள்.
இந்த செவ்வாய்க்கூட எனக்காக மாங்காடு அம்மன் கோயிலுக்கு வீட்டிலிருந்தே நடந்து போய், அங்கப்பிரதட்சணம் செய்திருக்கிறாள். ஒரு பெண்ணின் பூரணமான அன்பையும், அழுத்தமான பஜீ;தியையும் உணர்ந்தவர்களால் எங்கள் உறவைப் புரிந்துகொள்ள முடியும்.
இருபது வருடங்கள், தன்னுடைய எல்லாவற்றையும் எனக்காக அர்ப்பணித்துவிட்டு இப்போது 35 வயதாகும். மெளனியை எப்படி நான் தூக்கிப் போடுவது? அதே சமயம், என் அகிலாவை நான் எந்தக் காலத்திலும் எவளுக்காகவும் விட்டு விலகியவன் அல்ல. அவளை நான் ஆத்மார்த்தமாக, ஆழமாக நேசிக்கிறேன் என்றாவது ஒரு நாள், என் நெஞ்சில் நிறைந்து வழியும் அன்பை, பொங்கிப் பிரவாகமெடுக்கும் பாசத்தை அகிலா புரிந்துகொண்டால் எனது இறுதி மூச்சு நிம்மதியாகப் பிரியும்! “மெளனிகாவுக்கும் உங்களுக்குமான உறவில், உங்கள் மகன் ஷங்கியின் நிலை என்ன?” “ஷங்கி என் சிநேகிதன். என்னை அணு அணுவாகப் புரிந்தவன். (தொடரும்)

Thursday, February 6, 2014

300 படங்களுக்கு மேல் நடித்த நடிகை சுந்தரிபாய்

நாளொன்றுக்கு, ரூ. 20 சம்பளத்தில் நடித்தவர் அரங்கேற்றத்தில் முக்கிய வேடத்தில் நடித்தார்.
நகைச்சுவை நடிகையாக அறிமுகமாகி, கதாநாயகி, வில்லி வேடங்களையும் ஏற்று 300 படங்களுக்கு மேல் நடித்தவர் சுந்தரிபாய்.
சுந்தரிபாயின் சொந்த ஊர் மதுரை. 1927 இல் பிறந்தார். சின்ன வயதிலேயே இசை மீது ஆர்வம் கொண்டவர். அப்போது எம். கே. தியாகராஜபாகவதர், நடித்த சிந்தாமணி படம் வெளிவந்து ஒரு வருடத்துக்கு மேலாக ஓடிக்கொண்டிருந்தது. அதில் இடம்பெற்ற பாடல்களைப் பாடிக்கொண்டிப்பதுதான் அவரது பொழுதுபோக்கு.
இசை மீது சுந்தரிபாய்க்கு இருந்த ஆர்வத்தை கவனித்த அவர் பெற்றோர்கள், முறைப்படி சங்கீதம் கற்றுத்தந்தனர்.
உறவினர் ஒருவர் எடுத்துக்கொண்ட முயற்சி காரணமாக , 1937 இல் ‘சுகுணசரசா’ என்ற படத்தில் நடிக்கும் வாய்ப்பு சுந்தரிபாய்க்கு கிடைத்தது. நாள் ஒன்றுக்கு இருபது ரூபாய் சம்பளத்தில் மூன்று நாட்கள் நடித்தார்.
அதன் பின், ஜெமினி நிறுவனத்தில் மாத சம்பளத்திற்கு சேர்ந்தார். இதே சமயத்தில்தான், கொத்தமங்கலம் சுப்புவும் ஜெமினி கதை இலாகாவில் சேர்ந்தார்.
ஜெமினியின் முதல் படமான ‘மன்மதமகாராஜன்’ படத்தில் கொத்தமங்கலம் சுப்புவும், சுந்தரிபாயும் நடித்தனர். அதைத் தொடர்ந்து காதல் ஏற்பட்டு இருவரும் மணந்து கொண்டனர்.
இதுபற்றி சுந்தரிபாய் ஒரு கட்டுரையில் குறிப்பிட்டிருப்பதாவது:-
‘இது காதல் திருமணம் மட்டுமல்ல கலப்புத் திருமணமும் கூட. என் தாய் மொழி மராத்தி அவர் தமிழர்
அதன்பின் ஜெமினி எடுத்த படங்களில் எல்லாம் எனக்கொரு வேடம் தவறாமல் கிடைத்து வந்தது.
1945ல் ஜெமினி தயாரித்த ‘கண்ணம்மா என் காதிலி’ என்ற படத்தில் நான் கதாநாயகியாக நடித்தேன் வசனமும், பாடலும் எழுதியதுடன் டைரக்ஷனையும் சுப்புதான் கவனித்தார். இந்தப் படத்தின் கதாநாயகனாக எம். கே. ராதா நடித்தார்.
இவ்வாறு சுந்தரிபாய் குறிப்பிட்டுள்ளார்.
1948இல் ஜெமினியின் பிரமாண்டமான படமான சந்திரலேகா வெளிவந்தது. அதில் முக்கிய வேடத்தில் சுந்தரிபாய் நடித்தார்.
கதாநாயகி டி. ஆர். ராஜகுமாரியைக் காப்பாற்றுவதற்காக, இச்சைக்களைத் தீர்க்கும் பச்சை மரப்பாவையாக மாறுவேடத்தில் சென்று ரஞ்சனை ஏமாற்றும் கட்டத்தில் ரசிகர்களிடம் சபாஷ் பெற்றார்.
சுந்தரிபாய், ஜெமினியில் சேர்ந்தபோது அவரது மாத சம்பவளம் 150 ரூபாய் சந்திரலேகாவில் நடித்த போது, அது 1,500 ரூபாயாக உயர்ந்தது.
ஜெமினியின் வெற்றிப்படமான ‘சம்சாரத்தில் வில்லி வேடத்தில் சுந்தரிபாய் நடித்தார்.
வள்ளியின் செல்வன் படத்தில், குணச்சித்திர வேடத்தில் நடித்தார். ஏறத்தாழ 17 ஆண்டுகள் ஜெமினியில் பணியாற்றினார். ஒப்பந்தம் முடிவடைந்தபின், வெளிப்படங்களிலும் நடித்தார். அவற்றில் பெரும்பாலானவை வில்லி வேடங்கள்.
சுந்தரிபாய் நடித்த படங்கள் ஏறத்தாழ 300 சில ஆண்டுகள் உடல் நலம் இல்லாமல் இருந்த சுந்தரிபாய் காலமாகிவிட்டது குறிப்பிடத்தக்கது.

நல்ல தங்காள் நாடகத்தில் 7வது மகனாக எம். ஜி ஆர்


.

இந்த நாடகம் இந்த தேதியில் இந்த கிழமையில் நடைபெறும் விளம்பரம் செய்யப்பட்டு வந்தது. அந்தக் காலத்தில் சினிமாவைவிட நாடகங்கள் தான் அதிகம். ஒவ்வொரு நாட்களுக்கும் ஒவ்வொரு நாடகங்கள் நடத்தி வந்தார்கள்.
சில ஊர்களில் சில கிராமங்களில் இம்மாதிரி நாடகங்கள் நடக்கும் போது, நாடக கொட்டைகளில் மின்சார வசதி இருக்காது. மைக் இருக்காது பெட்ரோமாஸ் லைட்களும் மண்ணெண்ணெய் லைட்களும் தான் எங்கும் இருக்கும். நாடகத்தில் நடிப்பவர்கள் வசனங்களையும், பாடல்களையும் மிக சத்தமாக பேச வேண்டும். நாடகம் நடக்கின்ற அன்று நாடகத்தைப் பார்க்க வந்த மக்கள் கூட்டம் மிக மிக அதிகம்.
நாடகம் நடந்து கொண்டு இருக்கிறது. இதில் நல்லதங்காள் தன் குழந்தைகளை கிணற்றில் தூக்கிப் போட்டுக் கொல்லும் காட்சி மேடைக்கு வருகிறது. ஏழு குழந்தைகளையும் மேடையில் அமைக்கப்பட்ட கிணற்று பக்கத்தில் நிற்க வைத்துவிட்டு கிணற்றில் தண்ணீர் இருக்கின்றதா? கிணற்றில் போட்டால் குழந்தைகள் செத்துப் போய் விடுமா என்று கிணற்றை நோக்கிப் பார்க்கிறார்.
கதையில் அமைப்பின்படி வாழ்க்கையில் தோல்வி அடைந்த நல்லதங்காள் தான் பெற்ற மனம் வெறுத்து 7 குழந்தைகளையும் கொன்று விட்டு தானும் சாக வேண்டும் என்ற முடிவோடு கிணற்றை பார்க்கின்றார். அதன்படி தன்னுடைய குழந்தைகளைக் கட்டி அழுகிறார். அந்த நேரத்தில் நாடகத்தை பார்க்கின்ற bபாது மக்ஜீளிடமிருந்து ஒரு சிறிய சத்தம் கூட கேட்கவில்லை.
இது ஒரு முக்கியமான பெரிய அம்சமான காட்சி, மேடையின் திரையின் உள்பகுதியில் நாடகத்தில் அமைப்பாளரும் முதலாளியும் மற்ற திரைகளை ஏற்றி இறக்கும் தொழிலாளிகளும் மிக கவனத்தோடு தயாராக இருக்கிறார்கள். இப்போது நல்லதங்காள் ஒவ்வொரு குழந்தையாக கிணற்றில் தூக்கி போடுகிறார்.
7வது குழந்தையாக எம். ஜி ஆரை தூக்கி கிணற்றில் போட வேண்டும். தனக்கு முன் 6 குழந்தை கிணற்றில் போட்டு கொண்டு இருக்கும் காட்சியைப் பார்த்த எம். ஜி. ஆர் தன்னிடம் அந்தத் தாய் வரும்போது தாயின் பிடியில் அகப்படாமல் அங்கும் இங்கும் ஓட ஆரம்பித்து விட்டார். இதை அறிந்த கம்பெனி முதலாளியும் நாடக இயக்குனரும் திரைக்கு மறைவில் நின்று கொண்டு இருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்து போய் பையனை எப்படியாவது அழ வைக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு பையன் ஓடி திரை அருகே வரும் போது தன் கையில் இருந்த பிரம்பால் தலையில் ஓங்கி அடித்து விடுகிறார்கள்.
அந்த அடியின் வலி தாங்க முடியாமல் எம். ஜி. ஆர். அம்மா, அம்மா என்று பலத்த குரலில் கிணற்றை சுற்றி சுற்றி வரும்போது தன் தாயான நல்லதங்காள் இவனை பிடித்து விடுகிறாள். பிடித்தவுடனே அந்த பையன் அம்மா என்னை கொன்றுவிடாதீர்கள் என்னை கொன்று விடாதீர்கள் என்று பலத்த குரலில் கத்துகிறான்.

திரைப்படப் பாடல்களில் உழைப்பாளிகள்


உண்மையில் இந்த சமூகத்தில் படைப்பாளிகள் ஆளும் வர்க்கங்களின் நலனுக்காகவே பணியிலமர்த்தப்பட்டிருக்கின்றனர். அப்படிப்பட்ட படைப்பாளிகளைத்தான் பெரும்பாலானவெகு சன ஊடகங்கள் வாய்ப்பளித்துப் பயன்படுத்திக் கொள்ளும் சினிமாவும் இதற்கு விதிவிலக்கல்ல தான். இந்த நிபந்தனைகளையெல்லாம் மீறித்தான் உழைப்பவர்களின் குரல் மிகத்துல்லியமாக இல்லா விட்டாலும் உண்மைக்கு மிக அருகில் வந்துசென்றிருப்பதை நாம்மால் உணர்ந்து ரசிக்கவும் போற்றவும் முடிகிறது.
இதிலும் விதிவிலக்க உண்டு. உதாரணம், பட்டுக்கோட்டையார். அவர் மட்டுமே தன்னைத் தொழிலாளிவர்க்கத்தின் கவிஞனென அறிவித்துக் கொண்டு எழுதியவர். அதனாலும் தமிழ் சினிமா பயனடையத்தான் செய்தது, அதே நேரத்தில் தொழிலாளி வர்க்கமும்.
விடுதலைப் போராட்ட காலத்திலேயே மகா கவி பாரதி இப்படி எழுதிவிட்டான்.
இரும்பைக் காய்ச்சி உருக்கிடுவீரே
யந்திரங்கள் வகுத்திடுவீரே
கரும்பைச் சாறு பிழிந்திடுவீரே
கடலில் மூழ்கி நன்முத்தெடுப்பீரே
அரும்பு வேர்வை உதிர்த்துப் புவிமேல்
ஆயிரந்தொழில் செய்திடுவீரே
பெரும்புகழ் நுமக்கே யிசைக்கின்றேன்
பிரம்ம தேவன் கலையிங்கே நீரே!
உண்மையில் உழைப்போரே படைப்பாளராக இருப்பதால் பிரம தேவன் எனும் பெயர் பொருத்த முடையதுதானே!
பாரதியை அடியொற்றியும் அவரின் தோளில் அமர்ந்தும் இன்னமும் பார்வையை அகல விரிக்கிறார் பாவேந்தர் பாரதிதாசன் இப்படி.
சித்திரச் சோலைகளே உமை நன்கு
திருத்த இப்பாரினிலே முன்னர்
எத்தனை தோழர்கள் ரத்தம் சொரிந்தனரோ
உங்கள் வேரினிலே?
இப்படித் தொடங்கி,
தாரணியே தொழிலாளர் உழைப்புக்கு சாட்சியும் நீரன்றோ? - பசி
தீருமென்றால் உயிர் போகுமெனச் சொல்லும் செல்வர்கள் நீதி நன்றோ?
என்று கோபமாகக் கேட்கிறார்.
பாவேந்தரின் இந்தப் பாடலைத் தமிழ் சினிமா பயன்படுத்திக் கொண்டது. அதனால் இப்பாடல் மக்களிடையே பரவியது.
மாடா உழைச்சவன் வாழ்க்கையிலே - பசி
வந்திடக் காரணம் என்ன மச்சான்?
- எனும் காதலியின் நியாயமான கேள்விக்கு காதலன் இப்படி பதிலளிக்கிறான்.
அவன் தேடிய செல்வங்கள் வேறயிடத்தினில்
சேர்ந்ததினால் வந்த தொல்லையடி
- பட்டுக்கோட்டையாரின் இந்தத் தெளிவை நாம்
புரிந்துகொள்ள முடிகிறது
“இலக்கியத்திற்கும் கலைக்கும் மூலப் பொருள்களின் சுரங்க மலைபோல உதவு வது மக்களின் வாழ்க்கையாகும்!” - என்றார் மாவோ. அத்தகைய பெரும்பாலான மக்களின் வாழ்க்கைத் துயரங்கள் மலிந்திருக்கிற இந்த சமூக அமைப்பில் அவற்றைப் பதிவு செய்து, மாற்றத் தைக் கோருகிற பல பாடல்கள் இன்னுமிருக்கின்றன. இதோ ஒன்று:
கல்லைக் கனியாக மாற்றும் தொழிலாளி
கவனம் ஒருநாள் திரும்பும்- அதில்
நல்லவர் வாழும் இனிய சமுதாயம்
நிச்சயம் ஒருநாள் அரும்பும்
சமுதாய மாற்றத்திற்குத் தலைமை தாங்குவதற்கான தகுதி தொழிலாளிக்குத்தான் உண்டு என்பதை இப்பாடல் கோடிகாட்டுகிறதல்லவா?
தருமத்தின் வாழ்வுதன்னை சூது கவ்வும் தருமம் மறுபடி வெல்லும் - என்றான் பாரதி. இங்கே அந்தச் சிந்தனை வேறுவிதத்தில்.. உருசில பேர்கள் ஒருசில நாட்கள் உண்மையின் கண்களை மறைத்துவைப்பார் பொறுத்தவரெல்லாம் பொங்கியெழுந்தே மூடிய கண்களைத் திறந்துவைப்பார். (வாலி, படம் தாழம்பூ) - என்கிறது.
உழைத்து வாழ வேண்டும் - பிறர்
உழைப்பில் வாழ்ந்திடாதே!
ன்று சின்னஞ்சிறு குழந்தைகளுக்கு அறிவுறுத்துகிறது ஒரு பாடல். அதேபோல, சுரண்டு பவனை இப்படித் தயவுதாட்சண்யமின்றி இன்னொரு பாடல் சாடுகிறது.
ஊரார் வேர்வையில் உடலை வளர்ப்பவன்
உலகத்தில் கோழைகள் தலைவன்
உழைப்பவன் உயிரோடு மட்டும் இருந்து, தொடர்ந்து உழைத்துக் கொண்டே இருந்தால் அதனால் சிலருக்கு லாபம். ஆனால், அந்த உழைப்பாளியிடம் செல்வம் ஏதும் மிஞ்சி விடக்கூடாது என்பதுதான் சுரண்டலின் அடிப்படை இலக்கணம். தொழிலாளிகள் இதனை உணர்ந்துவிடக் கூடாதென்பதற்காகவே பல்வேறு தத்துவங்களும் நீதிநெறிகளும் கற்பிக்கப்பட்டன.
ஒரு நீண்ட நெடிய வரலாற்றையுடைய இந்த வர்க்க முரணையும் சமுதாயத்தில் இதனால் எழுந்த எல்லாவகைச் சிந்தனை மரபுகளையும் நமது தமிழ் சினிமா தன்னாலியன்ற அளவு பதிவு செய்திருக்கிறது என்றே சொல்ல வேண்டும். இதை இன்னமும் விரிவாக ஆய்வு செய்ய வேண்டும்.