Wednesday, December 26, 2012

கதாநாயகியாக நடித்தவர் கமலினி செல்வராசன்

பிரபலமான வானொலி, திரைப்பட, தொலைக்காட்சி நடிகையும், ஒலிபரப்பாளரும், ஒளிபரப்பாளருமான இவர் கவிஞர் சில்லையூர் செல்வராசனின் துணைவியாவார். “அன்னைதயை”, “தமிழன் எங்கே”, “ஈழநாட்டு தமிழ் சுடர்மணிகள்” போன்ற நூல்களை எழுதிய தென்புலோலி மு. கணபதிப் பிள்ளையின் மகளான இவர், ஒரு பட்டதாரியுமாவார்.
சில்லையூர் செல்வராசன் எழுதிய ‘தணியாத தாகம்’ வானொலித் தொடர் நாடகத்தில், குடும்பத்தின் இளைய மகளாக ‘கமலி’ பாத்திரத்தில் நடித்தவர். வானொலியில் ‘கலைக் கோலம்’ முதலாவன சஞ்சிகை நிகழ்ச்சிகள் பலவற்றை தயாரித்து வழங்கியிருக்கிறார்.
ரூபவாகினியில் ஒளிபரப்பான அருணா செல்லத்துரையின் நெறியாள்கையில், கே.எஸ். பாலச்சந்திரன் எழுதிய ‘திருப்பங்கள்’, எஸ். ராம்தாசின் ‘எதிர்பாராதது’, எஸ்.எஸ். கணேசபிள்ளை எழுதிய ‘சமூக சேவகி’ போன்ற பல தொலைக்காட்சி நாடகங்களில் நடித்துப் புகழ்பெற்றவர். ரூபவாகினியிலும், ஐ.ரி.என் தொலைக்காட்சியிலும் நிகழ்ச்சிகளை தயாரித்து வழங்கியவர். இவர் கோமாளிகள் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்திருக்கிறார்.

நடிகர் அசோகன் பாடிய பாடல்

எறந்தவன சொமந்தவனும் எறந்திட்டான் - அதை
இருப்பனுவம் எண்ணிப் பார்க்க மறந்திட்டான்
எறந்தவன சொமந்தவனும் எறந்திட்டான் - அதை
இருப்பவனும் எண்ணிப் பார்க்க மறந்திட்டான்

பறந்து பறந்து பணம் தேடி பாவக் குளத்தில் நீராடி
பறந்து பறந்து பணம் தேடி பாவக் குளத்தில் நீராடி
பிறந்து வந்த நாள் முதலாய்ப் பேராசையுடன் உறவாடி
இறந்தவன - அப்படி
எறந்தவன சொமந்தவனும் எறந்திட்டான் - அதை
இருப்பவனும் எண்ணிப் பார்க்க மறந்திட்டான்

தாயாரின் வேதனையில் பிறக்குறான் - மனுஷன்
தன்னாலே துடிதுடிச்சு எறக்குறான்
தாயாரின் வேதனையில் பிறக்குறான் - மனுஷன்
தன்னாலே துடிதுடிச்சு எறக்குறான் - இடையில்
ஓயாத கவலையிலே மிதக்கிறான் இடையில்
ஓயாத கவலையிலே மிதக்கிறான் - ஒருநாள்
உடலை மட்டும் போட்டு எங்கோ பறக்குறான் - ஒருநாள்
உடலை மட்டும் போட்டு எங்கோ பறக்குறான் - அப்படி

எறந்தவன சொமந்தவனும் எறந்திட்டான் அதை
இருப்பனும் எண்ணிப் பார்க்க மறந்திட்டான்
இளமையிலே சில நாள் முதுமையிலே சில நாள்
இளமையிலே சில நாள் முதுமையிலே சில நாள்
இன்பத்திலே சில நாள் துன்பத்திலே சில நாள்
அன்னையும் மனைவியும் அருமைப் பிள்ளையும்
அன்னையும் மனைவியும் அருமைப் பிள்ளையும்
கண்ணீர் சிந்திடவே கடைசி வழி ஒருநாள்
கடைசி வழி ஒருநாள் அப்படி

எறந்தவன சொமந்தவனும் எறந்திட்டான் - அதை
இருப்பவனும் எண்ணிப் பார்க்க மறந்திட்டான்

ஆங்கிலத்தில் கண்ணதாசன் பாடல்

‘பாசம்’ படத்தில் கண்ணதாசன் எழுதிய பாடல், ‘உலகம் பிறந்தது எனக்காக, ஓடும் நதிகளும் எனக்காக... இதை எம்.எஸ். விஸ்வநாதன் இசையில் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து பாடியிருக்கிறார் எஸ்.பி. பாலசுப்பிரமணியம். சேதுமணி அனந்தா என்பவர் இயக்கி வரும், ‘மனிதனாக இரு’ என்ற படத்தில் இது இடம்பெறுகிறது.
இது பற்றி அவர் கூறியதாவது,
நான் எம்.எஸ். வியின் ரசிகன். அவர் அடிக்கடி கூறும் மனிதனாக இரு என்ற வார்த்தையையே தலைப்பாக வைத்து படம் இயக்குகிறேன். புதுமுகங்கள் நடிக்கிறார்கள். கூட்டுக் குடும்ப வாழ்க்கை, தேசப்பற்று இவற்றை வலியுறுத்தும் படம். எம்.எஸ். விஸ்வநாதன் 19 பாடல்கள் போட்டுள்ளார். அதில் 10 பாடல்கள் இதில் இடம்பெறுகிறது. ஏதாவது புதுமை செய்ய வேண்டும் என்ற நோக்கில் உலகம் பிறந்தது எனக்காக பாடலை, ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து அமைத்திருக்கிறோம்.

ரஜினிக்கு கதை ரெடி பண்ணிட்டேன்.

ரஜினிக்கு கதை ரெடி பண்ணிட்டேன். அவரது ரசிகர்களுக்கு விருந்தளிக்கும் வகையில் இந்தக் கதையை அமைத்திருக்கிறேன். எனக்கு ஒரு வாய்ப்பு தருவாரா ரஜினி சேர்? என்று கேட்டுள்ளார் இயக்குநர் பேரரசு.
கோலிவுட்டில் ரொம்ப காலமாக இருக்கும் ரஜினி சேர் மட்டும் ரெடின்னா.... அவருக்கு அசத்தலாக ஒரு கதை வச்சிருக்கேன். அல்லது ‘ரஜினி சேர்க்கிட்ட சொல்லியிருக்கேன்.... பேசலாமனு சொல்லியிருக்கார்’ என்று இயக்குநர்கள் சொல்லிக்கொள்வது தான். இப்படிச் சொல்லிக் கொண்டவர்கள் பட்டியல் ரொம்பப் பெரியது. ஆனால் இதில் சுவாரஸ்யம் என்னவென்றால்...
இவர்களில் ஒருவருடன் கூட ரஜினி படம் பண்ணவில்லை என்பது தான்!! இப்போது இந்தப் பட்டியலில் புதிதாகச் சேர்ந்திருப்பவர் பேரரசு. சமீபத்தில் இவர் கொடுத்த திருத்தணி பார்த்த பாதிப்பில் சில ரசிகர்கள் கிட்டத்தட்ட தமிழ் சினிமாவே இனி பார்க்க வேணாம் என்று பின்னங்கால் பிடரியில் பட ஓடிவிட்டார்கள். இனி பேரரசுவின் நிலை கேள்விக்குறியாகிவிட்ட சூழலில், ஒரு பப்ளிசிட்டி பிட்டைப் போட்டுள்ளார். (விஜய்யோட ஆஸ்தான இயக்குநராச்சே!) ரஜினிக்காக ஒரு கதை தயார் செய்து வைத்துள்ளதாகவும், அது ரஜினி ரசிகர்களுக்கு விருந்ததாக அமையும் என்றும் அவர் கூறியுள்ளார். இது குறித்து சமீபத்தில் அவர் கூறுகையில், ‘நான் ரஜினிக்காக ஏற்கனவே திரைக்கதையும் தயாரித்து விட்டேன். அந்த கதைக்கு செங்கோட்டை என பெயரிட்டுள்ளேன். இந்தப் படம் ரஜினிக்கு மிகவும் பொருத்தமாக இருப்பது மட்டுமன்றி அவரது ரசிகர்களுக்கு நல்ல விருந்தாக அமையும் என்றார்.

கார்த்தி நடிக்கும் ~சார்பட்டா பரம்பரை'

கார்த்தி நடிக்கும் புதிய படத்துக்கு சார்பட்டா பரம்பரை என தலைப்பு சூட்டியுள்ளனர். வழக்கம் போல ஸ்டுடியோ கீரின் நிறுவனம் தயாரிக்கும் படம் இது. கார்த்தி நடிப்பில் அலெக்ஸ் பாண்டியன் படம் பொங்கல் தினத்தன்று திரைக்கு வரவிருக்கிறது. தற்போது வெங்கட்பிரவு இயக்கத்தில் பிரியாணி என்ற படத்தில் நடித்து வரும் கார்த்தி, அதன் பிறகு ஒரு கல் ஒரு கண்ணாடி படம் தந்த ராஜேஷ் எம் இயக்கத்தில் நடிக்கிறார்.
இந்த இரு படங்களும் முடிந்த பிறகு கார்த்தி நடிக்க ஒப்புக் கொண்டுள்ள படத்தை அட்டகத்தி படத்தை இயக்கிய ரஞ்சித் இயக்குகிறார். இந்தப் படத்துக்கு சார்பட்டா பரம்பரை என்று தலைப்பிட்டுள்ளனர். கார்த்தியின் உறவினர் ஞானவேல் ராஜாவின் ஸ்டூடியோ க்ரின் நிறுவனம் இந்தப் படத்தை தயாரிக்கிறது.

குடும்ப பிரச்சினையால் சினிமாவில் இருந்து ஒதுங்கினேன்

குடும்ப பிரச்சினையால் நடிக்காமல் ஒதுங்கி இருந்தேன் என்றார் பானு. இது பற்றி நடிகை பானு கூறியதாவது; ‘தாமிரபரணி’ படத்தில் விஷால் ஜோடியாக அறிமுகமானேன். நல்ல வரவேற்பு இருந்தது. ஆனால் அதன் பிறகு நான் தேர்வு செய்த வேடங்கள் தவறானவையாக அமைந்துவிட்டது. எதிர்பார்த்த வரவேற்பு கிடைக்கவில்லை. இதற்கிடையில் எங்கள் குடும்பத்தில் பிரச்சினை ஏற்பட்டது. எனது தந்தையுடன் ஏற்பட்ட குடும்ப பிரச்சினையால், சினிமாவிலிருந்து ஒதுங்கி இருந்தேன். இப்போது அந்த சூழல் மாறிவிட்டது. புதிய வேகத்தில் எனது இரண்டாவது இன்னிங்ஸ் தொடங்கி இருக்கிறேன்.
வசந்த் இயக்கும் ‘மூன்று பேர் மூன்று காதல்’ படத்தில் நடித்தது நல்ல அனுபவமாக அமைந்தது. 3 பக்கம் எழுதிய வசனத்தை என்னிடம் கொடுத்து மனப்பாடம் செய்யச் சொன்னார். அதற்கான நேரமும் கொடுத்தார். பின்னர் அழைத்து அந்த வசனத்தை நாகர்கோவில் வழக்கில் பேசி தகுந்த பாவனைகளுடன் நடித்து காட்டச் சொன்னார். அதன்படி செய்தேன். பிறகுதான் என்னை தேர்வு செய்தார். மீனவ பெண்ணாக இதில் நடிக்கிறேன். இதற்காக ஒரு மாதம் நாகர்கோவில் கடற்கரையில் வெயிலில் நின்றபடி எனது தோல் நிறத்தை கறுப்பாக்கச் சொன்னார். இனி பொருத்தமான வேடங்களை தேர்வு செய்வேன். இப்போதைய டிரெண்டுக்கு ஏற்ப பயிற்சி செய்து எனது தோற்றத்தையும் மற்ற நடிகைகளுடன் போட்டிபோடும் அளவுக்கு மாற்றி இருக்கிறேன். இவ்வாறு பானு கூறினார்.

விஜய் இருந்தா ஆடமாட்டேன் அடம்;பிடிக்கும்


பிந்து மாதவி
நடிகர் விஜய் இருந்தால் டான்ஸ் ஆட மாட்டேன் என்று பிந்து மாதவி அடம்பிடித்தாராம். சட்டம் ஒரு இருட்டறை ரீமேக் படம் வெளியாகி ஓடிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் படப்பிடிப்பின் போது நடந்த சுவாரஸ்யமான சம்பவம் குறித்த தகவல் கிடைத்துள்ளது. தனது உறவினர் ஸ்னேகா பிரிட்டோ இயக்கிய சட்டம் ஒரு இருட்டறை படப்பிடிப்புக்கு விஜய் சென்றுள்ளார்.
அப்போது டான்ஸ் காட்சியை படமாக்கியுள்ளனர். விஜயைப் பார்த்ததும் டான்ஸ் ஆடிக் கொண்டிருந்த பிந்து மாதவி வெடவெடத்துப் போனாராம். அய்யய்யோ விஜய் எவ்வளவு பெரிய டான்சர், அவருக்கு முன்னால் நான் எப்படி ஆடுவது என்று திகைத்து விட்டாராம். மேலும் விஜய் செட்டைவிட்டு போகும் வரை தான் டான்ஸ் ஆட முடியாது என்றும் தெரிவித்தாராம்.
ஆனால் விஜய் இடத்தைக் காலி செய்ய மறுத்து அங்கேயே இருந்துள்ளார். பின்னர் வேறு வழியின்றி பிந்து மாதவி ஆடியுள்ளார் அதைப் பார்த்து விஜய் நல்லாத் தானே ஆடுகிaர்கள் அப்புறம் ஏன் பயம் என்று சொல்விட்டு வந்துள்ளார். அடடா நான் நன்றாக டான்ஸ் ஆடுகிறேன் என்று விஜயே சொல்லிவிட்டாரே என்று பிந்து பூரித்துப் போயிருக்கிறார்.

தயாரிப்பாளரானார் செல்வபாரதி

‘நினைத்தேன் வந்தாய்’, ‘பிரியமானவளே’, ‘வசீகரா’ ஆகிய படங்களை இயக்கிய செல்வபாரதி இப்போது தயாரிப்பாளராகி உள்ளார். சென் மூவிஸ் என்ற நிறுவனத்தை தொடங்கி ‘காதலைத்தவிர வேறொன்றுமில்லை’ என்ற படத்தை தயாரித்து இயக்குகிறார். யுவன், சரண்யா, மோகன் நடிக்கிறார்கள். ஸ்ரீகாந்த் தேவா இசை, பூபதி ஒளிப்பதிவு.
படம் பற்றி செல்வபாரதி கூறியதாவது, காதல் வலியைத் தரக்கூடியது மட்டுமல்ல, வழியையும் காட்டக்கூடியது என்ற கருத்தை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட கதை. பள்ளி காதல், கல்லூரி காதல் நிறைய பார்த்து விட்டோம். இது டியூசன் காதல். டியூசன் டீச்சராக நடித்திருக்கிறார் சரண்யா மோகன். அவருக்கும் யுவனுக்கும் வருவது காதலா, நட்பா என்று புரிந்து கொள்ள முடியாத உணர்வுக்கு எளிய தீர்வு சொல்கிறது. படம் சிறுவர்களைக் கொண்டு உருவாக்கி இருக்கிறேன். டியூசனில் படிக்கும் மாணவர்களாக எனது மகன்கள் ராகுல், ரோஹித் நடித்துள்ளனர்.

ஹொலிவுட் படத்துக்கு ரமேஷ் விநாயகம் இசை

இசை அமைப்பாளர் ரமேஷ் விநாயகம், ‘தி காமன் மேன்’ என்ற ஹொலிவுட் படத்துக்கு இசை அமைத்துள்ளார். இது பற்றி அவர் கூறியதாவது, தமிழ் தெலுங்கு படங்களுக்கு இசை அமைத்து வந்தேன். இடையில் சில ஆண்டுகள் கர்நாடக இசைக்கு முக்கியத்துவம் கொடுத்தேன். குறிப்பாக நம்முடைய பாரம்பரிய இசைக்கு எழுத்து வடிவம் உருவாக்கும் முயற்சியில் இறங்கினேன். நம் இசையின் புகழ் உலகத்துக்கு சேர வேண்டுமானால் அதற்கு எழுத்து வடிவம் வேண்டும் என்று அதை உருவாக்கி வருகிறேன். அதன் அடிப்படை பணிகள் முடிந்து விட்டன.
இது குறித்து மியூசிக் அகாடமியில் இசை அறிஞர்கள் முன் விளக்கம் அளித்திருக்கிறேன். அந்த பணிகள் ஓரளவுக்கு முடிவடைந்து விட்டதால் மீண்டும் திரை இசைக்கு திரும்பி இருக்கிறேன். எனது பெயரில் இணைய தளம் தொடங்கியிருக்கிறேன். அதில் என் பணிகள் பற்றி விரிவாக அறிந்து கொள்ளலாம். தற்போது ‘தி காமன் மேன்’ என்ற ஹொலிவுட் படத்துக்கு இசை அமைத்திருக்கிறேன். தமிழில் நான்கு படங்களுக்கு இசை அமைக்க இருக்கிறேன். இது பற்றிய அறிவிப்பு விரைவில் வரும்.

அதிகம் சம்பளம் வாங்கும் நடிகை

கோலிவுட், டோலிவுட் இரண்டிலுமே இப்போது அதிகப்படியான சம்பளம் வாங்கும் நடிகை என்ற ‘பெருமை’... வேறு யார்... இன்றைய கனவுக் கன்னி சமந்தாவுக்குப் போயிருக்கிறது. சமந்தாவின் லேட்டஸ்ட் சம்பளம் ரூ. 1.25 கோடி. தெலுங்கில் இப்போது அவர் நடிக்க ஒப்புக் கொண்டுள்ள புதிய படத்துக்கு இந்த சம்பளம் தரப்பட்டுள்ளது.
நயன்தாரா, தமன்னா, த்ரிஷா, அனுஷ்கா போன்றவர்கள்தான் இதுவரை தமிழ் தெலுங்கில் அதிக சம்பளம் பெற்று வந்தனர். இப்போதும் இவர்கள் ஒரு கோடி ப்ளஸ் சம்பளமாகப் பெறுகின்றனர். ஆனால் இந்தத் தொகையை எட்ட அவர்கள் நிறைய படங்களில் நடிக்க வேண்டியிருந்தது.
ஆனால் சமந்தா நான்கைந்து படங்களில் அந்த ரேஞ்சுக்கு வந்துவிட்டார். இவரது சம்பளத்தை உயர்த்தியதில் இருவருக்கு முக்கியப் பங்குண்டு ஒருவர் தில் ராஜூ மற்றொருவர் பெல்லம் கொண்டா சுரேஷ் முதல் தயாரிப்பாளர் ரூ. 1 கோடி வரை சமந்தாவுக்கு கொடுத்தார். அடுத்தவர் இப்போது 1.25 கோடி தர ஒப்பந்தம் போட்டுள்ளார். இந்தப் படத்தில் ஜூனியர் என்.டி.ஆர் ஜோடியாக நடிக்கிறார் சமந்தா. தமிழில் அடுத்து ஒப்பந்தமாகும் படத்துக்கு சமந்தாவின் சம்பளம் இதுதானாம்!

விஜய் - அமலா போல் நடிக்கும் புதிய படம்

விஜய் - அமலா போல் நடிக்கும் புதிய படம்

துப்பாக்கி படத்துக்குப் பிறகு ஏ.எல். விஜய் இயக்கத்தில் விஜய் - அமலா போல் நடிக்கும் புதிய படத்தில் பூஜை சென்னையில் நடந்தது. இந்தப் படத்துக்கு முதலில் தலைவன் என்று பெயரிட்டிருந்தனர். ஆனால் அந்தத் தலைப்பை, சசிகலாவின் அக்காள் மகன் பாஸ்கரன் நடிக்கும் படத்துக்கு வைத்துவிட்டதால், வேறு தலைப்பை யோசித்து வருகின்றனர்.
இந்தப் படத்தை மிஸ்ரி புரொடக்சன்ஸ் சார்பில் சந்திரபிரகாஷ் ஜெயின் தயாரிக்கிறார். சத்யராஜ் நடித்த பல படங்களின் தயாரிப்பாளர் - பைனான்ஸியர் என்பதாலோ என்னமோ, சென்டிமென்டாக அவருக்கும் ஒரு வேடத்தைக் கொடுத்துள்ளனர். இந்தப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக அமலா போல் நடிக்கிறார். ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கிறார்.
நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்கிறார். இப்படப் பூஜை விழா சென்னையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சி யில் நடிகர் விஜய், இயக்குநர், ஏ.எல். விஜய், நடிகை அமலாபால் உள்ளி ட்ட திரையுலக நட்சத்திரங் கள் பங்கேற்றனர். படப் பிடிப்பை இம்மாத இறுதியில் வெளி நாட்டில் ஆரம்பிக்கின்றனர்.

Wednesday, December 19, 2012

வித்யாபாலன் திருமணம்

 

பொலிவுட் நடிகை வித்யா பாலனுக்கும், “யு டிவி நிறுவன தலைவர் சித்தார்த் ராய்க்கும், மும்பையில் திருமணம் நடந்தது. தமிழ் மற்றும் பஞ்சாப் பாரம்பரிய முறைப்படி நடந்த இந்தத் திருமணத்தில் இரு வீட்டாரின் நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் மட்டுமே பங்கேற்றனர்.
பிரபல பொலிவுட் நடிகை, வித்யா பாலன் (34), மறைந்த நடிகை, சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட “தி டர்ட்டி பிக்சர் என்ற இந்திப் படத்தில், நடித்து பிரபலமானவர். இந்தப் படத்தில் நடித்ததற்காக வித்யாவுக்கு தேசிய விருதும் கிடைத்தது. இதற்கு முன் ‘தம்மாரே தம், ககானி உள்ளிட்ட படங்களிலும், இவர் நடித்துள்ளார்.
இவர் “யு டிவி நிறுவன தலைவர் சித்தார்த் ராயை காதலித்தார். இருவருக்கும் திருமணம் முடிக்க பெற்றோர் முடிவு செய்தனர். மும்பை பாந்த்ரா பகுதியில் உள்ள ஒரு பங்களாவில், இவர்களுக்கு திருமணம் நடந்தது. வித்யா பாலன், பாலக்காட்டு தமிழ் குடும்பத்தைச் சேர்ந்தவர். சித்தார்த் பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்தவர். இதனால் இவர்களது திருமணம், தென் மற்றும் வட மாநில கலாசார முறைப்படி நடந்தது. திருமணச் சடங்கின் போது வித்யா, கடுகு மஞ்சள் நிற பட்டுப் புடவையும், இளம் சிவப்பு நிற ஜாக்கெட்டும் அணிந்திருந்தார்.
சித்தார்த், பஞ்சாப் கலாசாரப்படி, மஞ்சள் நிற குர்தாவும் இளம் சிவப்பு நிற தலைப்பாகையும் அணிந்திருந்தார். வித்யாவின் கழுத்தில் தமிழ் பாரம்பரிய முறைப்படி சித்தார்த் ராய், தாலி கட்டினார், தொடர்ந்து, வித்யாவின் கால் விரல்களில் மெட்டி அணிவித்தார். அப்போது, வித்யா பாலன், உணர்ச்சிவசப்பட்டு, ஆனந்த கண்ணீர் வடித்தார். அம்மி மிதித்து, அருந்ததி பார்க்கும் சடங்குகளும் நடந்தன. பஞ்சாப் முறைப்படியும் திருமணச் சடங்குகள் நடந்ததால் சடங்குகள் முடிவடைய ஒரு மணி நேரத்துக்கும் மேலானது.
இந்தத் திருமணத்துக்கு வித்யா மற்றும் சித்தார்த்தின் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமே அழைக்கப்பட்டிருந்தனர். வெளி நபர்கள் யாரும், அனுமதிக்கப்படவில்லை. திருமணம் நடந்த பங்களாவைச் சுற்றி தனியார் பாதுகாப்பு நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள், பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டு இருந்தனர். திருமண வரவேற்பு நிகழ்ச்சி, சென்னை, கொச்சி உள்ளிட்ட நகர்களில் நடக்க உள்ளது.

சமந்தாவுக்கு ´உபத்திரவம் 

சமந்தா என்றாலே க்யூட்டான நடிகை என்பார்கள். அவரை அப்படி ரசிப்பது கொலிவுட் சினிமாவினர்தான். ஆனால் ஆந்திராவைச் சேர்ந்தவர்களோ சைவ நடிகையான அவரையும் அசைவ நடிகை கண்ணோட்டத்திலேயே பார்க்கிறார்களாம். குறிப்பாக சில டைரக்டர்கள் அவரை டூ - பீஸ் நடிகையாக்கும் முயற்சிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் சமந்தா மீது ஈர்ப்புக் கொண்ட சில நரைமுடி ஹீரோக்கள், சமீபகாலமாக தங்களுடன் டூயட் பாடுவதற்கு சமந்தாவுக்கு அழைப்பு விடுத்து வருகிறார்களாம். அதோடு கேட்கிற சம்பளத்தை தருவதாகவும் ஆசை காட்டுகிறார்களாம் என்றாலும், முதிர்ச்சியான நடிகர்களுடன் நடித்தால் தனது இமேஜ் போய்விடும் என்று தொடர்ந்து தட்டிக்கழித்து வருகிறாராம் நடிகை. இப்படி தொடர்ந்து சமந்தா தங்களுக்கு டேக்கா கொடுப்பதால் சில நடிகர்கள் நேரடியாக அவருக்கு போன் போட்டும் டார்ச்சர் கொடுக்கிறார்களாம். இதன் காரணமாக அடுத்து தெலுங்கு படங்களில் நடிப்பதை குறைத்து விட்டு தமிழில் கூடுதல் கவனம் செலுத்த முடிவெடுத்திருக்கிறாராம் சமந்தா.

ரகசிய திருமணமா? லட்சுமிராய் மறுப்பு

எனக்கு ரகசிய திருமணம் எதுவும் நடக்கவில்லை. இப்போதைக்கு கல்யாணம் செய்து கொள்ளும் ஆசையும் இல்லை, என்று நடிகை லட்சுமி ராய் கூறியுள்ளார்.
லட்சுமிராய்க்கு ரகசியமாக திருமணம் நடக்க இருப்பதாக செய்திகள் வெளியாயின. அதனை அவர் மறுத்துள்ளார். இதுபற்றி லட்சுமிராய் அளித்துள்ள பேட்டியில் எங்கள் வீட்டில் திருமண ஏற்பாடுகள் நடந்து வருவது உண்மைதான். திருமணம் எனக்கில்லை. என் அக்கா அஸ்வினிராய்க்கு. அடுத்து எனக்குத்தான் திருமணம். ஆனால் அது இப்போது இல்லை. இப்போதுதான் சினிமாவில் இரண்டாவது ரவுண்டை ஆரம்பித்திருக்கிறேன். இன்னும் தேசிய விருது வரைக்கும் போகவேண்டும். பிறகுதான் திருமணம். எப்போது திருமணம் செய்தாலும், அது காதல் திருமணம்தான். தற்போத யாரையும் காதலிக்கவில்லை. எனது திருமணம் ரகசியமாக நடக்காது, என்று கூறியுள்ளார்.

பாரதிராஜா ரஜினி, கமலுக்கு அழைப்பு

மதுரையில் நடக்கும் “அன்னக்கொடியும் கொடி வீரனும்” படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பங்கேற்க வருமாறு ரஜினி, கமல் மற்றும் ஸ்ரீதேவிக்கு அழைப்பு விடுத்துள்ளார் இயக்குநர் பாரதிராஜா. இந்த மூன்று நட்சத்திரங்களும் பாரதிராஜாவின் முதல்படமான 16 வயதினிலேயில் நடித்தவர்கள்.
அந்தப் படத்தில் கமல் சப்பானி கெரக்டரிலும், ரஜினி பரட்டை வேடத்தில் வில்லனாகவும், ஸ்ரீதேவி மயிலு கேரக்டரிலும் நடித்தனர். இப்படம் வெற்றிகரமாக ஓடியது. தற்போது பாரதிராஜா நீண்ட இடைவெளிக்குப் பின் அன்னக்கொடியும் கொடி வீரனும் என்ற படத்தை இயக்கியுள்ளார். இதன் படப்பிடிப்பு முடியும் தறுவாயில் உள்ளது. இதன் பாடல் வெளியீட்டு விழாவைத்தான் மதுரையில் நடத்த பாரதிராஜா ஏற்பாடு செய்துள்ளார்.
இதற்காக மூவரிடமும் பாரதிராஜா பேசி வருகிறார். அவர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் படத்தின் தொடக்க விழா தேனி அல்லி நகரத்தில் அமர்க்களமாக நடந்தது நினைவிருக்கலாம். ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ள இந்தப் படத்தின் பாடல்களை வைரமுத்து எழுதியுள்ளார்.

ரஜினி கெட்டப்பில் சிங்கமுத்து

ரஜினியின் தீவிர ரசிகர் நமச்சிவாய பாரதி என்பவர் இயக்கியுள்ள படம் பயபுள்ள. இப்படத்தின் ஆடியோ விழா ரஜினி பிறந்த நாளான 12ம் திகதி அன்று நடைபெற்றது. ரஜினி ரசிகர் என்பதால் ரஜினி அரசியலுக்கு வரவேண்டும் என்ற அனைத்து ரசிகர்களும் ஆவலோடு காத்திருப்பதை பிரதிபலிக்கும் வகையில் அப்படத்தில் ஒரு கொமெடி ட்ராக்கும் பண்ணியிருக்கிறார்.
அதில் ரஜினி போன்று நடிப்பவர் சிங்கமுத்துவாம். அதாவது, எந்த நேரமும் வீட்டில் தூங்கிக்கொண்டிருப்பாராம் சிங்க முத்து. அவரை, அவ்வூர் மக்கள், அரசியலுக்கு வாங்க என்று அழைப்பார்களாம். அதற்கு அரசியலுக்கு வந்தால் நிறைய செலவாகுமே என்று அவர் சொல்வாராம். அதான் நிறைய சொத்தெல்லாம் இருக்குல்ல விற்று செலவு பண்ணுங்க என்பார்களாம். அதைக்கேட்டு, ஒருவேளை அரசியலில் குதித்து தோற்றுவிட்டால், மொத்த பணமும் போய் விடுமே. அப்படியொரு நிலைமை ஏற்பட்டால் நான் என்ன பண்றது என்று மக்களைப் பார்த்து கேட்பாராம் சிங்கமுத்து.
அதற்கு இப்ப திண்ணையில் தூங்குறத தெருவோரம் போய் தூங்க வேண்டியதான் என்று கொமெடியாக சொல்வார்களாம். ரஜினி அரசியலுக்கு வரவேண்டும் என்ற ரஜினி ரசிகர்களின் ஆசையை சொன்னாலும், அதை கொமெடிக்காக இப்படி ஜாலி பண்ணியிருக்கிறாராம் இயக்குனர்.

2 1/4 மணி நேர படத்தை 2 மணிநேரத்தில் எடுத்து சாதனை

,ரண்டே கால் மணி நேரம் ஓடும் படத்தை இரண்டு மணி நேரத்தில் எடுத்து கின்னஸ் சாதனை படைத்துள்ளனர் அகடம் படக்குழுவினர். அதுமட்டுமல்ல, முழுப் படத்தையும் ஒரே ஷட்டில் எடுத்துள்ளார்களாம். இந்த விவரங்களை கின்னஸ் அமைப்புக்கு எழுதி, அங்கிருந்து அங்கீகாரக் கடிதமும் பெற்றுள்ளனர் அகடம் குழுவினர். தமிழகத்தில் நடந்த ஒரு உண்மைச் சம்பவத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள இந்தப் படத்தில் புதுமுகம் சீனி அய்யர், பாஸ்கர், கலை, தமிழ் உட்பட முற்றிலும் புதுமுகங்கள் நடித்துள்ளனர். நெளஷத் ஒளிப்பதிவு செய்ய, ஷ்யாம் பெஞ்சமின் இசையமைத்துள்ளார். இஸட் முகமது இசாக் கதை திரைக்கதை வசனம் எழுதி இந்தப் படத்தை இயக்கியுள்ளார். இவருக்கு இதுதான் முதல்படம்.
ஸ்க்ரிப்ட், நடிகர்கள், ஷ¥ட்டிங் ஸ்பாட் என அனைத்தையும் பக்காவாக ஏற்பாடு செய்தது கொண்ட இசாக், இரவில் இரண்டு மணிநேரத்தில் மொத்தப் படத்தையும் எடுத்து முடித்துவிட்டாராம்! இந்தப் படம் விரைவில் இந்தியிலும் தயாராகிறது.

8 நிமிட நடனத்துக்கு ரூ 1 கோடி 40 இலட்சம்

சத்தீஷ்கர் மாநிலம் உருவானதை கொண்டாடும் விதமாக கடந்த மாதம் 1ம் திகதி முதல் 7ம் திகதி வரை பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. சுற்றுலாத்துறை சார்பில் சத்தீஷ்கர் மாநிலத்தின் எல்லா மாவட்ட தலைநகரங்களிலும் இந்த விழா கொண்டாடப்பட்டது.
ராய்ப்பூர் நகரில் பிரபல இந்தி நடிகர்கள், நடிகைகள் பங்கேற்ற பிரமாண்ட நட்சத்திர இரவு நடத்தப்பட்டது. இதற்காகவே மும்பையில் இருந்து பல லட்சம் ரூபாய் செலவு செய்து 245 நடிகர், நடிகைகள், நடன கலைஞர்களை ராய்ப்பூருக்கு அழைத்து சென்றிருந்தனர்.
இந்த விழா கடும் சர்சையை ஏற்படுத்தியுள்ளது. மாநில அரசின் பணம் தேவை இல்லாமல் செலவழிக்கப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதையடுத்து கலைநிகழ்ச்சிக்கு செய்யப்பட்ட செலவு விவரங்களை சத்தீஷ்கர் மாநில சுற்றுலா துறை மந்திரி பிரிஜ்மோகன் அகர்வால் வெளியிட்டுள்ளார்.
ஒரு வாரம் நடந்த விழாவுக்கு மொத்தம் 5 கோடியே 21 இலட்சத்து 22 ஆயிரத்து 500 ரூபாய் கலைஞர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இதில் நடிகை கரீனா கபூருக்கு மட்டும் ஒரு கோடியே 40 இலட்சம் ரூபாய் சம்பளமாக கொடுக்கப்பட்டுள்ளது.








ஊர்வசி, முன்னாள் கணவர்

விவேக், மனைவி

nஜயம்ரவி, மனைவி

கமல், சரிகா, வாணி கணபதி


சிம்ரன், கணவர்

விஜய், சங்கீதா

குஷ்பூ, சுந்தர்

Tuesday, December 18, 2012

ரஜpனியின் லவ் ஸ்டோரி

ரஜினி தன் காதலச் சொல்லி திருமணம் செய்து கொள்கிறாயா என்று கேட்டதற்கு லதா வெட்கப்பட்டுக் கொண்டு தனது பெற்றோரிடம் சம்மதம் கேட்குமாறு கூறியுள்ளார்.
தில்லுமுல்லு ஷ¥ட்டிங் ஸ்பாட்டில் தான் ரஜினிகாந்த் லதா ரங்காச்சாரியை முதன் முதலாக சந்தித்தார். லதாவின் தந்தை பெங்களூரில் பணியாற்றியதால் அவர்கள் மல்லேஸ்வரம் பகுதியில் வசித்தனர்.
சென்னை எத்திராஜ் கல்லூரியில் படித்த லதா கல்லூரி பத்திரிகைக்காக ரஜினியை பேட்டி எடுக்கச் சென்றபோதுதான் அவரை முதன் முதலாக சந்தித்தார்.
அவரை முதல் தடவைப் பார்த்ததுமே எனக்கு பிடித்துவிட்டது. ஒரு சினிமா நடிகரைச் சந்தித்தோம் என்ற மாதிரியே இல்லை. ஏதோ நீண்ட காலம் பழகியவரை சந்தித்தது போன்று இருந்தது என்றார் லதா.
ரஜினி உதவியாளர் சத்ய நாராயணா கூறுகையில், அந்த பேட்டியின்போதே ரஜினி லதாவிடம் தன்னை மணக்க இஷ்டமா என்று கேட்டார். அவர் வெட்கப்பட்டுக் கொண்டு எனது பெற்றோரிடம் கேளுங்கள் என்றார். லதா ரஜினியை சந்தித்தபோது தான் அவர் உடல் நலக் குறைவால் அவதிப்பட்டு தேறி வந்தார்.
அந்த சந்திப்பிற்கு பிறகு அவர்களுக்கு இடையேயான அன்பு வளர்ந்தது என்றார். ரஜினி சிறுவனாக இருந்தபோது கஷ்டப்பட்டது, குடும்பப் போராட்டம், இளம் வயதில் தாயை இழந்தது பற்றி லதா கொஞ்சம், கொஞ்சமாக தெரிந்துகொண்டார். அவருக்கு தாயின் அன்பு தேவைப்பட்டது என்பதை நான் உணர்ந்தேன் என்றார் லதா.
பெரிய ஹீரோவாக ஆன ரஜினிக்கு ஒரு துணை தேவைப்பட்டது. அந்த நேரத்தில் தான் லதா வந்தார். லதாவின் பெற்றோரை திருமணத்திற்கு ஒப்புக் கொள்ளச் செய்யும் பொறுப்பு நடிகர் ஓய்.ஜி. மகேந்திரனின் தலையில் விழுந்தது.
அபூர்வ ராகங்கள் படத்தில் இருந்தே ரஜினிக்கு ஓய்.ஜி. மகேந்திரனைத் தெரியும். லதாவின் சகோதரி சுதாவை ஓய்.ஜி.மகேந்திரன் மணந்திருந்ததால் ரஜினிக்கு பெண் கேட்கும் வேலை ஈசியாகிவிட்டது. மேலும் சத்யநாராயணாவும் லதாவின் பெற்றோரை சந்தித்து திருமணம் குறித்து பேசி சம்மதம் வாங்கினர்.
இதையடுத்து ரஜினியின் நண்பர் ராஜா பாதர் போயஸ் கார்டன் வீட்டுக்கு சென்று மணப்பெண் பற்றி கேட்டார். ரஜினி தன் காதலைப் பற்றியும் லதாவை மணக்க விரும்புவதைப் பற்றியும் ராஜாவிடம் தெரிவித்தார்.
உடனே ரஜினி லதாவை போன் செய்து வரவழைத்து இவர் தான் நான் மணக்க விரும்பும் பெண் என்றார். அதன் பிறகு ராஜா பாதர் பெண் குறித்து பல கேள்விகளை கேட்டுவிட்டு ஓ.கே. கல்யாணம் செய்துகொள் என்றார்.


கலைவாணரிடம் நடிகவேள் பட்டம் பெற்றவர் லடிஸ் வீரமணி

லடிஸ் வீரமணி (இறப்பு: மே 5. 1995) இலங்கையில் மேடை நாடகத்துறையில் நடிகராக, நாடகாசிரியராக, இயக்குனராக அறியப்பட்டவர். இவர் இயக்கிய நாடகங்களில் ‘சலோமியின் சபதம்’ ‘மதமாற்றம்’ என்பன குறிப்பிடற்குரியனவாகும். அரைநூற்றாண்டு காலம் தமிழ் நாடக மேடையின் ஆற்றல் மிகுந்த கலைஞராக தனது ஆளுமையை நிலை நாட்டியுள்ளார்.
கொழும்பு, ஜிந்துப்பிட்டி பிரதேசத்தில் இயங்கிய மனோரஞ்சித கான சபாவிலிருந்து வெளிவந்த கலைஞர்களில் முன்னோடி நடிகைவேள் லடிஸ் வீரமணி ஆவார். 1945 இல் மல்லிகா என்ற நாடகத்தின் மூலம் தனது நாடகவுலக பிரவேசத்தை மேற்கொண்டார்.
1954 ஆம் ஆண்டு இலங்கைக்கு வருகை தந்த கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன் – மதுரம் குழுவினருக்கு அளிக்கப்பட்ட வரவேற்பில் லடிஸ் வீரமணியின் நடிப்புக்காக நடிகவேள் என்ற பட்டத்தை வழங்கினார் என்.எஸ்.கே.
ஆரம்ப காலங்களில் இவரை நெறிப்படுத்தியவர்களில் மிக முக்கியமானவர் ஏ. இளஞ் செழியன். மற்றவர் முற்போக்கு இலக்கிய முன்னோடியுமான அ.ந. கந்தசாமி. அ.ந. கந்தசாமி எழுதிய மத மாற்றம் என்ற நாடகம் தமிழ் நாடக மேடையில் ஒரு திருப்புமுனையாக அமைந்தது.
மதமாற்றத்தை சிறப்பாக நெறியாள்கை செய்தார் லடீஸ் வீரமணி அ.ந. கந்தசாமி மகாகவியிடம் வீரமணியை அறிமுகப்படுத்தியதன் காரணமாக அவருக்காகவே கண்மணியாள்காதை என்ற வில்லுப்பாட்டை மகாகவி எழுதினார்.
1983இல் இலங்கையில் ஏற்பட்ட இனக் கலவரத்தின் பின் தமிழகத்திலிருந்தார் வீரமணி. அங்கிருந்து ஐரோப்பிய நாடுகளுக்குச் சென்று கண்மணியாள் காதை என்ற வில்லிசை நிகழ்ச்சியை அங்கு நடத்தினார். அவர் வெண்சங்கு, வாடைக் காற்று ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளார்.

இல்லத்தரசிகளின் அன்றாட பணிகளின் அழகியலை தனித்துவப்படுத்தி காட்சிப்படுத்திய பாடல்

ஆணி முத்து வாங்கி வந்தேன்
குறும்புகார சிறுமிகள் போல் ஆடி குதூகலிக்கும் அழகு
ஆணி முத்து வாங்கி வந்தேன் ஆவணி வீதியிலே என்ற பாடல் கே. பாலசந்தர் இயக்கத்தில் வெளியான ‘பாமா விஜயம்’ என்ற படத்தில் இடம்பெற்றது.
எம். எஸ்.வி. இசையில் கண்ணதாசன் எழுதிய பாடலது. பி. சுசிலா, எல். ஆர். ஈஸ்வரி, சூலமங்கலம் ராஜலட்சுமி ஆகிய மூவரும் பாடியிருக்கிறார்கள். திரைப்படத்தின் கதையோடு பாடல் எப்படிப் பொருந்திவர வேண்டும் என்பதற்கான முன்னுதாரணப் பாடலது. மிகவும் அற்புதமாகப் படமாக்கப்பட்டிருக்கிறது.
செளகார் ஜானகி, ஜெயந்தி, காஞ்சனா ஆகிய மூவரும் கதையின் மூன்று முக்கிய பாத்திரங்கள். மூவருமே இல்லத்தரசிகள். அவர்களது அன்றாட வேலைகளையே பாடல் காட்சிப்படுத்தியிருக்கிறது. அது தான் இப்பாடலின் தனித்துவம்.
சினிமாவில் பாடல்கள் எப்போதும் பெரிதும் மிகைப்படுத்தல் ஒன்றாகவே இருக்கிறது. கனவுக் காட்சி என்று அயல் நாட்டின் வணிக வீதிகளிலோ, பனிமலையிலோ ஓடியாடிப் பாடுவார்கள் அல்லது ஊட்டி, கொடைக்கானலின் புல்வெளிகளில் உருண்டு திரிந்து மரங்களைச் சுற்றிப் பாடுவார்கள்.
அதுவுமில்லை என்றால் ஒரு பிரம்மாண்டமான செட்டில் கைகால்களை இழுத்து வலிந்து ஆடிப்பாடுவார்கள். அதுபோன்ற எந்த மிகையுமற்று அன்றாடக் காரியங்களின் அழகியலைக் காட்சிப்படுத்தியிருக்கிறது என்பதற்காகவே இந்தப் பாடலை முக்கியமானது என்று கருதுகிறேன்.
கிணற்றடியில் தண்ணீர் இறைப்பது, பாத்திரம் கழுவுவது, துணிதுவைப்பது, குளிப்பது, அம்மி அரைப்பது, உரலில் இடிப்பது, விளக்கேற்றுவது, ஒருவரையொருவர் கேலி செய்து தண்ணீரை வாரி அடித்துக் குளிப்பது, தலைவாரிவிடுவது, காய்கறிகள் நறுக்குவது சமைப்பது, சாப்பாடு பரிமாறுவது, பல்லாங்குழி ஆடுவது, தயிர் கடைவது, காய்ந்த துணிகளை மடித்து வைப்பது, குழந்தைகளைத் தூங்க வைத்துத் தானும் அருகில் படுத்துக் கொள்வது என்று வீட்டுக்குள்ளாகவே நாளைக் கழிக்கும் பெண்களின் அன்றாட உலகை முழுமையாகக் காட்சிப்படுத்தியிருக்கிறது இப்பாடல். அந்த மூன்று பெண்களுக்குள் உள்ள அந்நியோன்யமும், பரஸ்பர கேலி கிண்டல்களும், ஒருவர் மற்றவர் மீது காட்டும் அக்கறையும் அபாரமான அழகாகயிருக்கிறது.
இதைப் பகலின் உன்னதப் பாடல் என்றே சொல்வேன். கிணற்றடியில் பாடல் துவங்குகிறது. கிணற்றடி கொண்ட வீடுகள் இப்போது இல்லை. ஆகவே கிணறு என்பது நம் நினைவில் வாழும் ஒன்று. அந்த வீட்டின் பின்புறம் வாழை மரங்களும் துணி துவைக்கும் கல்லும் காணப்படுகிறது. கிணற்றில் வாளியை விட்டுத் தண்ணீர் இறைக்கிறாள் மூத்த மருமகள். அடுத்தவள் கையில் பெரிய டிபன் கேரியரையும் ஒரு தூக்கு வாளியையும் எடுத்துக்கொண்டு ஒயிலாக நடந்து வருகிறாள்.
காஞ்சனா இந்தக் காட்சியில் நடந்து வரும் துள்ளல் நடை தனித்த வசீகரமானது. ஒருத்தி மற்றவள் மீது தண்ணீர் ஊற்றிக் குளிக்கச் செய்கிறாள். அவர்கள் பரஸ்பரம் வேடிக்கை செய்து கொள்கிறார்கள. அதைப் படமாக்கியுள்ள விதத்தில் அவர்களின் வயது கரைந்து போய் மூன்று குறும்புக்காரச் சிறுமிகள் ஒன்றாக விளையாடுவது போல அத்தனை ஆனந்தமாக உள்ளது.
மூவரும் நடுத்தரவர்க்க குடும்பத்தைச் சேர்ந்தவர்கள், மூவருக்கும் பகல் முழுவதும் வேலைகள் இருந்து கொண்டேயிருக்கின்றன. அத்தனை வேலைகளையும் அலுக்காமல் செய்தபடியே அதைத் தாண்டி அன்றாட வாழ்வின் சங்கீதத்தைக் கேட்டு தன்னை மறந்து ஆடுபவர்களைப் போல வீட்டிற்குள்ளாக ஆடிப்பாடுகிறார்கள்.
அதில் ஒரு மருமகள் வீட்டின் ஹோலில் காலைச் சுழற்றி சர்வ சுதந்திரமாக ஆடிப்பாடுகிறாள். இந்த உலகில் அவர்கள் மூவர் மட்டுமே இருக்கிறார்கள் என்பது போன்ற களிப்பு அவர்களிடமிருக்கிறது.

Wednesday, December 12, 2012

நடிப்பு பயிற்சி பெற்று வாய்ப்பு கிடைக்காததால் மீண்டும் கண்டக்டராக பெங்களூர் வந்தார் ரஜனி

நடிப்பு பயிற்சி பெற்றும் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைக்காததால் மீண்டும் கண்டக்டர் வேலையில் சேரும் எண்ணத்துடன் பெங்களூருக்கு ரயிலில் ஏறினார் ரஜினி. ரயிலில், ரஜினியின் எதிரே ஒரு பெரியவர் அமர்ந்திருந்தார். உங்களை எங்கேயோ பார்த்தது மாதிரி இருக்கே என்றார் அவர்.
ரஜினி சிரித்துக்கொண்டாரே தவிர, பதில் சொல்லவில்லை. பெரியவர் சிறிது நேரம் யோசித்துக் கொண்டிருந்தார். பிறகு ஏதோ நினைவுக்கு வந்தவராக, நீங்கள் கண்டக்டர்தானே ஜெய்நகர் பஸ்சில் பார்த்திருக்கிறேன் என்றார்.
ஆமாம் என்றார் ரஜினி. பெரியவர் தொடர்ந்து சொன்னார்.
என் மூத்த பையன் பி. எஸ். சி. முதல் வகுப்பில் பாஸ் செய்தவன். நான்கு வருடமாக வேலைக்கு முயற்சி செய்தும் கிடைக்கவில்லை. கடைசியில் பஸ் கண்டக்டர் வேலைக்கு மனு போட்டோம். பத்தாயிரம் ரூபாய் கொடுத்தால், வேலை வாங்கித் தருவதாக ஒரு பெரிய அதிகாரி கூறியிருக்கிறார்.
அந்த வேலை நல்லபடியாகக் கிடைக்க வேண்டும் என்பதற்காக திருப்பதிக்குச் சென்று வெங்கடாசலபதியிடம் வேண்டிக்கொண்டு இப்போது ஊருக்குத் திரும்பிக் கொண்டிருக்கிறேன்.
பெரியவர் இப்படிக் கூறியதைக் கேட்டு ரஜினிக்கு ஆச்சரியம் தாங்கவில்லை.
பி. எஸ். சி. படித்த பட்டதாரிக்கு கண்டக்டர் வேலை கிடைக்க வேண்டும் என்று இவ்வளவு தூரம் முயற்சி செய்திருக்கிறார்கள். அந்த வேலையை மிகச் சாதாரணமானதாக நினைத்துக் கொண்டிருந்தோமே கண்டக்டர் வேலை எவ்வளவு பெரிய வேலை என்று நினைத்தார்.
நல்ல வேளையாக கண்டக்டர் வேலையை ராஜினாம செய்யவில்லை. தொடர்ந்து கண்டக்டர் வேலை பார்த்து, பிழைத்துக் கொள்ளலாம் என்று மகிழ்ச்சி அடைந்தார். ஒரு சிகரெட்டை எடுத்து பற்ற வைத்தார். ஆனந்தமாக புகை விட்டார்.
ரயில் பெங்களூர் போய்ச் சேர்ந்தது. ரெயிலில் இருந்து இறங்கிய ரஜினிகாந்த், வீட்டுக்குப் போவதற்காக 36 ஆம் நம்பர் பஸ்சில் ஏறினார். பஸ்சில் கண்டக்டராக இருந்தவர் புட்ராஜ், ரஜினியின் நண்பர் இருவரும் ஒரே நேரத்தில் தான் கண்டக்டர் வேலையில் சேர்ந்தார்கள்.
ரஜினியைப் பார்த்த அவர் வியப்பும், திகைப்பும் அடைந்தார். என்ன சிவாஜி எப்போது பெங்களூருக்கு வந்தாய்? என்று விசாரித்தார். இப்போதுதான் ரயிலில் இருந்து இறங்கினேன். வீட்டுக்குத்தான் போய்க்கொண்டிருக்கிறேன் என்று ரஜினி பதிலளித்தார்.
நடிப்பு பயிற்சி எல்லாம் எப்படி இருக்கிறது? பயிற்சி எல்லாம் முடிந்து விட்டது. இதுவரை பட வாய்ப்பு எதுவும் வரவில்லை.
உனக்கு ஒரு விஷயம் தெரியுமா? என்று தயக்கத்துடன் புட்ராஜ் கேட்டார்.
என்ன விஷயம்? ஒன்றும் தெரியாதே என்று ரஜினி கூறினார்.
புட்ராஜ் கொஞ்ச நேரம் பேசவில்லை. பிறகு மனதைத் திடப்படுத்திக் கொண்டு, போன வாரம் 12 கண்டக்டர்களை டிஸ்மிஸ் செய்து விட்டார்கள். அதில் நீயும் ஒண்ணு. இரண்டு வருடங்களுக்கு மேலாக விடுமுறையில் இருந்ததால், மேற்கொண்டு அனுமதிக்க முடியாது என்று கூறிவிட்டார்கள் என்றார்.
அந்த பஸ் மட்டுமல்ல, உலகமே திசை மாறி சுழல்வது போல் இருந்தது. ரஜினிக்கு, கவலைப்படாதே. நீ பெற்ற நடிப்பு பயிற்சி, உன்னை கைவிட்டு விடாது என்று ஆறுதல் கூறினார் புட்ராஜ். சோர்வுடன் வீட்டுக்குச் சென்றார், ரஜினி.
டிஸ்மிஸ் ஆன செய்தியை சொல்வதற்காகத்தான் அவசரமாக அழைத்திருக்கிறார்கள் என்பதை ரஜினி தெரிந்து கொண்டார்.
அன்று இருந்த மனநிலை பற்றி ரஜினி எழுதியிருப்பதாவது :-
நடிப்பு பயிற்சி முடிந்ததும் பட அதிபர்கள் என்னை ஒப்பந்தம் செய்ய கியூ வரிசையில் நிற்பார்கள் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். அது பலிக்கவில்லை. கண்டக்டர் வேலை பார்க்கலாம் என்று ஊர் திரும்பினால், அந்த வேலையும் போய்விட்டது. ரொம்பவும் சோர்ந்து போய்விட்டேன். வாழ்க்கையில் முதல் தடவையாக.
பஸ் டிப்போவுக்கு சென்றேன். அங்கிருந்தவர்கள் என்னை பரிதாபமாகப் பார்த்தார்கள்.
பத்து குண்டுகள் பாய்ந்தாலும் தைரியமாகத் தாங்கிக் கொள்வேன். ஆனால் பரிதாபத்தோடு பார்க்கிற ஒரு பார்வையைக்கூட என்னால் தாங்கிக்கொள்ள முடியாது.
முன்பெல்லாம் என்னை புகழ்ந்து பேசியவர்கள் இப்போது, நடிகனாக வேண்டும் என்று மெட்ராஸ் போனான். இவன் மூஞ்சிக்கு நடிகனாக முடியுமா? யார்- யார் எங்கே இருக்க வேண்டுமோ அங்கே இருக்கணும் என்று என் காதுபடவே பேசினார்கள்.
அப்போதே நான் முடிவு செய்தேன். நம்மிடம் இருக்கும் ஒரே ஆஸ்தி - தன்மானம். மீண்டும் சென்னைக்குத் திரும்ப வேண்டும். நடிகனாகாமல் பெங்களூருக்குத் திரும்பக்கூடாது என்று சபதம் எடுத்துக்கொண்டேன்.
அன்று இரவே சென்னைக்கு ரயில் ஏறினேன். இவ்வாறு ரஜினி குறிப்பிட்டுள்ளார்.

ஜெய்சங்கரும் வசந்தாவும் அறிமுகமான இரவும் பகலும்

நடிகர் ஜெய்சங்கரும், வசந்தாவும் ‘இரவும் பகலும்’ படத்தில் ஜோடியாக அறிமுகமானார்கள். நாடக உலகில் இருந்து சினிமாவுக்கு வந்தவர் வசந்தா. ஆச்சாரமான குடும்பத்தைச் சேர்ந்த வசந்தாவுக்கு சிறுவயதிலேயே அவரது தாயார் நடனப் பயிற்சிக்கு ஏற்பாடு செய்தார்.
நடனத்தை நன்கு கற்றுக் கொண்ட நிலையில் நாடகத்தில் நடிக்க விரும்பிய வசந்தாவுக்கு, கை கொடுத்தது ‘சேவா ஸ்டேஜ்’ நாடகக்குழு. இதுபற்றி வசந்தா கூறியதாவது;
1957ல் என் அப்பா இறந்த பிறகு அம்மாதான் கஷ்டப்பட்டு எங்களை வளர்த்தார். அப்போது குடும்ப பொருளாதாரம் சொல்லிக் கொள்கிற மாதிரி இல்லை. இருந்தாலும் அம்மா என்னை கொன்வென்ட்டில் படிக்க வைத்தார். இதனால் எனக்கு ஆங்கிலம் சரளமாக வரும். சேவா ஸ்டேஜ் நாடக குழுவில், நடிகர் எஸ்.வி. சஹஸ்ரநாமம் எனக்கு நடிப்பில் பயிற்சி கொடுத்தார்.
இதன் பிறகு 1961ல் டி.கே.எஸ். நாடக சபாவுக்கு வந்தேன். டி.கே.எஸ். நாடக சபா நடத்திய ‘ராஜராஜ சோழன்’ நாடகத்தைப் பார்க்க, சிட்டாடல் பட நிறுவன அதிபரும், டைரக்டருமான ஜோசப் தளியத் வந்தார். என் நடிப்பைப் பார்த்தவுடன், அவர் தயாரிக்க இருந்த ‘விளக்கேற்றியவள்’ படத்தில் கதாநாயகியாக நடிக்க என்னை ஒப்பந்தம் செய்தார்.
இதற்கிடையே, சிட்டாடல் பேனரில் ‘இரவும் பகலும்’ என்ற இன்னொரு படத்தையும் தயாரிக்க ஏற்பாடு செய்தார். அந்தப் படத்துக்கு நாயாகனாக நடிக்க ஜெய்சங்கரை ஒப்பந்தம் செய்தார். அதுதான் ஜெய்சங்கருக்கு முதல் படம். அவருக்கு ஜோடியாக ஒரு புதுமுகத்தை அறிமுகம் செய்யத் தீர்மானித்தார்.
‘விளக்கேற்றியவள்’ பட நாயகியான என்னையே ‘இரவும் பகலும்’ படத்திலும் கதாநாயகியாக நடிக்க வைத்தால் என்ன என்று அவருக்குத் தோன்றியது. நேராக என்னை வந்து பார்த்தவர், நீதான் இரவும் பகலும் படத்துக்கும் கதாநாயகி என்று சொல்லி ஒப்பந்தம் செய்தார்.
இரவும் பகலும் படத்தில் அசோகன், நாகேஷ், பண்டரிப்பாய் ஆகியோர் மட்டுமே தெரிந்த முகங்கள். நான் ஜெய்சங்கர், மற்ற நடிகர்கள் எல்லோருமே புதியவர்கள். அப்போது சம்பளமெல்லாம் பெரிதாக இல்லை. நாடகத்தில் நடித்துக் கொண்டே, சினிமாவிலும் நடித்தேன்.
ஜெய்சங்கர் கதாநாயகன் என்ற பந்தா இல்லாமல் நடந்து கொள்வார். எப்பவும் துறுதுறு என்று இருப்பார். நாங்கள் இரண்டு பேருமே புதுமுகமா இருந்ததால் அதிகமாகப் பேசிக் கொள்வது கிடையாது. படம் வேகவேகமாக வளர்ந்து, 1965 பொங்கல் தினத்தன்று வெளிவந்தது.
எங்கள் படம் ரிலீஸ் ஆனபோது, கூடவே எம்.ஜி.ஆர். நடித்த ‘எங்க வீட்டுப் பிள்ளை’, சிவாஜி நடத்த ‘பழனி’ ஆகிய படங்களும் ரிலீஸ் ஆயின.
பெரிய நடிகர்களுடன் போட்டி போட்டாலும் ‘இரவும் பகலும்’ 100 நாள் ஓடி வெற்றிபெற்றது. முதன் முதலாக நான் ஒப்பந்தமான ‘விளக்கேற்றியவள்’, 1965 ஏப்ரலில் வெளிவந்தது. அதே ஆண்டு இறுதியில், ‘கார்த்திகை தீபம்’ வெளிவந்தது. இந்தப் படத்தில் எனக்கு ஜோடியாக அதாவது கதாநாயகனாக கே.விஜயன் நடித்தார். இந்த விஜயன்தான் பின்னாளில் டைரக்டர் கே.விஜயனாகி, சிவாஜியின் ‘தீபம்’, ‘தியாகம்’, ‘திரிசூலம்’ உள்ளிட்ட பல வெற்றிப் படங்களை இயக்கினார்.
ஜெய்சங்கருடன் ‘இரவும் பகலும்’ படத்தில் ஜோடியாக நடித்த பிறகு அவர் வேறு நாயகிகளுடன் பல படங்களில் ஜோடியாக நடித்தார். மறுபடி நாங்கள் ‘எங்கவீட்டுப் பெண்’, ‘அடுத்த வாரிசு’, என இரண்டு படங்களில் ஜோடி சேர்ந்தோம். இதற்குள் கலைப்பயணத்தில் பல வருடங்கள் கடந்திருந்தது. இவ்வாறு வசந்தா கூறினார்.

Friday, December 7, 2012

நிறைவேறாத கனவு

விருந்துகளில்
அதிகமாக அவரைப் பார்க்க முடியாது. தேவையில்லாமல் பத்திரிகைப் பேட்டிகள் கொடுப்பதில்லை. ஆனாலும் பத்திரிகைகளில் பரபரப்பாக அடிபடுபவர் ஏறத்தாழ 50 படங்களில் நடித்துவிட்டார். அதில் பாதிக்கு மேற்பட்ட படங்கள் வெற்றிப் படங்கள். அல்லது பாராட்டையும் விருதுகளையும் அள்ளிக் குவித்த படங்கள். ‘அய்யா’ படத்தின் வெற்றியை எதிர்பார்த்துக் காத்திருக்கும் ராணி முகர்ஜி மனம் திறக்கிறார்.
* வலைத் தளங்களில் இல்லாமல் இருப்பது பற்றி :-
‘நான் எப்போதும் அடக்கி வாசிப்பதையே விரும்புகிறவள். எனக்கு விருந்துகளில் கலந்து கொள்வது இணையத் தளத்தில் உறவாடுவது வலைத்தளத்தின் மூலம் கருத்துப் பரிமாறிக் கொள்வது என்பதில் எல்லாம் ஈர்ப்பு இல்லை. ஏன் இல்லை என்றால் இல்லை. அவ்வளவுதான். ஏதாவது முக்கியமான செய்தி சொல்ல வேண்டும் படம் வெளி வருவதற்கு முன்னால் அதுபற்றிக் கருத்துத் தெரிவிக்க வேண்டும் என்றால் மட்டும்தான் பேட்டி கொடுப்பது வழக்கம்.
எனது தனிப்பட்ட வாழ்க்கை பற்றி எதுவும் பேச நான் விரும்புவதில்லை. நான் எனது ரசிகர்களையும் வாசகர்களையும் திரைப்படங்களில் எனது நடிப்பின் மூலமாக மட்டுமே சந்திப்பதை விரும்புகிறேன். மற்றவர்களைப் பற்றி நான் கருத்துத் தெரிவிக்க விரும்பவில்லை.
* அய்யா படத்தைப் பற்றி
நான் நடிக்கும் ஒவ்வொரு திரைப்படத்திலும் எனது முழு உழைப்பையும் கொடுத்து அதன் வெற்றிக்குப் பாடுபடுகிறேன். நான் விரும்பி நடிக்கிறேன், முழு மனதுடன் அந்தக் கதாபாத்திரத்தில் நடிக்கிறேன். ஒவ்வொரு திரைப்படமும் ரசிகர்களின் மனதைக் கவர வேண்டும். விமர்சகர்களின் பாராட்டைப் பெற வேண்டும் என்கிற எதிர்பார்ப்புடன்தான் எடுக்கப்படுகிறது. வெற்றி தோல்வி என்பது நமது கையில் இல்லை. யாராலும் எந்தத் திரைக்கதையானாலும் இது நிச்சயம் வெற்றி பெறும் என்று சொல்லிவிட முடியாது.
* ‘அய்யா’ திரைப்பட மேக்கப்புக்காக 10 இலட்ச ரூபாய செலவிட்டது உண்மையா?
பொய்யைக் கூறிவிட்டு இது உண்மையா என்று கேட்டால் எப்படி? மேக்கப்புக்கு 10 இலட்சம் செலவானது என்று சொல்பவனை விடுங்கள், கேட்பவர்களுக்கு புத்தி எங்கே போயிற்று?
* பிரித்விராஜுடன் நடித்த அனுபவம்
பிரித்விராஜ் ஒரு அற்புதமான நடிகர். நடிப்பு அவரது ரத்தத்திலேயே இருக்கிறது என்பது அவர் நடிப்பதிலிருந்தே தெரிகிறது. அவர் நடிக்க வருவதற்கு முன்பே நான் நடித்த ‘குச் குச் ஹோத்தா ஹை’ திரைப்படத்தைப் பார்த்து எனது ரசிகராகி விட்டதாகக் கூறினார் மகிழ்ச்சியாக இருந்தது.
‘அய்யா’ திரைப்படத்தைப் பொறுத்தவரை நான் நிறைய விஷயங்களைக் கற்றுக் கொண்டேன். பிரித்விராஜிடமிருந்து நடிப்புக் கலை பற்றிக் கற்றுக்கொள்ள நிறையவே இருக்கிறது.
* பிரித்விராஜுக்கு நீங்கள் சிபாரிசு செய்வது பற்றி
நான் பிரித்விராஜுக்கு சிபாரிசு செய்கிறேனா? எனது சிபாரிசை ஏற்றுக்கொண்டு அவருக்கு வாய்ப்புத் தரப் போகிறார்களா? அப்படித் தருவதாக இருந்தால் நான் சிபாரிசு செய்யத் தயார் என்னிடம் அவரைப் பற்றிக் கேட்டால் நிச்சயமாக ஒரு திறமையான நடிகர் என்று பரிந்துரைப்பதில் எனக்குத் தயக்கமே இருக்காது.
நம்முடன் நடிக்கும் ஒருவரது நடிப்பு நன்றாக இருந்தால் அதைப் பற்றி பேசத்தானே செய்வோம்? யாருக்குத் தலையில் என்ன எழுதி இருக்கிறதோ அதுதான் நடக்கும். கிடைக்கும். யார் எந்த இடத்தை அடைவார்கள் என்பதை யாரும் தீர்மானித்துவிட முடியாது.
* ஆதித்ய சோப்ராவைத் திருமணம் செய்து கொண்டீர்களாமே?
என்னுடைய திருமணம் பத்திரிகையாளர்களுக்கும் வம்பு பேசுபவர்களுக்கும் வேடிக்கையாகத் தெரிகிறது. ஆளுக்கு ஆள் இஷ்டத்திற்குக் கதை கட்டுகிறார்கள். என்ன செய்வது சினிமா போன்ற ஒரு தொழிலில் ஈடுபட்டால் நம்மைப் பற்றி என்ன வேண்டுமானாலும் எழுதவும் பேசவும் மற்றவர்களுக்கு உரிமை வந்துவிடுகிறது. இது தவிர்க்க முடியாதது.
என்னைப் பொறுத்தவரை திருமணம் என்பது
வேடிக்கைக்காக ஏற்பட்டது அல்ல. மிகவும் கவனமாகவும் தீர யோசித்தும் முடிவு செய்ய வேண்டிய ஒன்று.
உலகத்திற்கு வரும் எல்லா உயிர்களும் ஜோடி ஜோடியாகத்தான் வருவதாகச் சொல்வார்கள். எனக்காக எங்கேயோ ஒருவர் இல்லாமலா இருப்பார்?
அவர் வரும்வரை நான் தனிமையை ரசிக்கிறேன்.
மற்றவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதைப் பற்றியெல்லாம் கவலைப்பட நான் தயாராக இல்லை.
நிறைவேறாத கனவு.

ஒத்தவீடு

சாமி என்றால் காப்பாற்றத்தான் செய்யும், தண்டிக்காது. சாமி தண்டிப்பதாகச் சொல்லி ஒருவருக்கு துன்பம் ஏற்பட்டால் அது ஆசாமி தரும் தண்டனையாகத்தான் இருக்கும் என்ற கருத்தை மையமாகக் கொண்டு உருவாகி வருகிறது “ஒத்தவீடு”
“திகில் கதைக்களத்தோடு, மூட நம்பிக்கையால் ஏற்படும் விளைவுகளையும், குடும்ப உறவுகளுக்குள் நடக்கும் பாலியல் வன்கொடுமைகளையும் நாகரிகமாகச் சொல்லியிருக்கிறேன்” என்கிறார் படத்தின் இயக்குநரான பாலு மலர்வண்ணன்.
இவர் யாரிடமும் உதவி இயக்குநராகப் பணிபுரிந்ததில்லை. பத்திரிகையாளராகவும், மக்கள் தொடர்பாளராகவும் பணியாற்றியிருக்கிறார். இந்த அனுபவங்களைக் கொண்டே தன் முதல் படத்தை இயக்குகிறார் பாலு மலர் வண்ணன்.
படத்தில் திலீப்குமார் ஜானவியின் காதல் எதார்த்தமாக இருக்குமாம். ஹீரோ திலீப்குமாரின் அண்ணன் தேவ்குமார் படத்தைத் தயாரிக்கிறார். இசையமைப்பாளர் வி. தஷி பல்வேறு படங்களுக்கு இசையமைத்தும், இரண்டாயிரம் படங்களுக்கு மேல் இசைக்குறிப்புகள் எழுதியும் உள்ளார்.
ஒளிப்பதிவாளர் ஸ்ரீரஞ்சன்ராவ் கே. பாலசந்தர் தயாரித்த படங்களில் உதவி ஒளிப்பதிவாளராகப் பணிபுரிந்துள்ளார்.
“சாமியாடி கேரக்டரில் வரும் எம்.எஸ்.பாஸ்கரின் காமெடிக்கும், வெள்ளந்தித் தாயாக வரும் வடிவுக்கரசியின் நடிப்பு சென்டிமென்டுக்கும் கியாரண்டி என்கிறார் பாலு மலர்வண்ணன். எழுத்தாளர் கெளதம் நீலாம்பரன் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

காதலனைப் பிரிந்த

எமி ஜhக்ஸன்

தமிழில் ஆர்யா ஜொடியாக மதராசி பட்டினம் படத்தில் அறிமுகமானவர் லண்டனைச் சேர்ந்த எமி ஜாக்ஸன். இதையடுத்து விக்ரம் ஜோடியாக தாண்டவம் படத்தில் நடித்தார். இதற்கிடையில் தமிழில் வெளியான விண்ணைத் தாண்டி வருவாயா படத்தை கெளதம் மேனன் இந்தியில் ‘ஏக் திவானா தா’ என்ற பெயரில் இயங்கினார். இதில் பிரதீக் ஹீரோவாக நடித்தார். ஹீரோயினாக எமி நடித்தார். அப்போது பிரதீக், எமி இருவருக்கிடையே நட்பு மலர்ந்தது.
இதையடுத்து இருவரும் பல்வேறு இடங்களில் ஜோடியாக சுற்றினர். நெருக்கமான காதலர்களான நிலையில் இருவரும் அதன் நினைவாக தங்கள் பெயர்களை பச்சை குத்திக் கொள்ள முடிவு செய்தனர். பிரதீக் லண்டன் சென்று எமி ஜாக்ஸன் பெயரை பச்சை குத்திக் கொண்டார். அங்கு வசிக்கும் எமியின் குடும்பத்தாரையும் சந்தித்துப் பேசினார். இவர்களின் காதலை எமியின் பெற்றோர் ஏற்றுக் கொண்டனர். மும்பையில் உள்ள பிரபலமான பச்சை குத்தும் ஷொப்பிற்கு சென்று தனது கையில் பிரதீக் பெயரை பச்சைக் குத்திக்கொண்டார் எமி.
காதல் மலர்ந்து ஒரு வருடம் மட்டுமே கடந்த நிலையில், இருவருக்குள்ளும் திடீரென்று மனக்கசப்பு ஏற்பட்டது. இதையடுத்து பிரதீக்கை பிரிந்து லண்டன் புறப்பட்டுச் சென்றார் எமி. அதாவது, பிரிவை தாங்க முடியாமல் வருத்தம் அடைந்து வீட்டிலேயே முடங்கினார் பிரதீக். இனி எமியிடம் நெருக்கமாவதற்கு வாய்ப்பில்லை என்று தெரிந்ததும். மனதை தேற்றிக்கொண்டு வெளியில் வர ஆரம்பித்திருக்கிறார். இதையடுத்து புது நங்கைகளிடம் அவர் நட்பு தேடத் தொடங்கி இருக்கிறார் என பொலிவூட் வட்டாரங்கள் தெரிவித்தன.

கல்யாணமாகிவிட்டால் ஹீரோயினாக நடிக்கக் கூடாதா?

கல்யாணமாகிவிட்டால் ஹீரோயினாக நடிக்கக் கூடாதா என்றார் சினேகா கிஷோர் சினேகா நடிக்கும் படம் ‘ஹரிதாஸ்’. ஜி. என். ஆர். குமாரவேலன் எழுதி இயக்குகிறார். விஜய் ஆண்டனி இசை அமைக்கிறார். வி. ராமதாஸ் தயாரிக்கிறார். இப்படத்தில் நடிப்பதுபற்றி சினேகா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது, திருமணத்துக்கு முன்பே ஹரிதாஸ் பட கதையை என்னிடம் சொல்ல வந்தார் இயக்குனர் குமாரவேலன். அப்போதே அவரிடம், சீக்கிரமே எனக்கு திருமணம் நடக்க உள்ளது. உங்கள் பட ரிலீசுக்கு முன்பே திருமணம் ஆகிவிடும் திருமணமான நடிகை ஹீரோயினாக நடிக்கக் கூடாது என்ற நிலைதான் ஹோலிவூட்டில் இருக்கிறது.
அதனால் இப்படத்தில் நான் நடிப்பதுபற்றி நீங்கள்தான் முடிவு செய்துகொள்ள வேண்டும் என்று அவரிடம் கூறினேன். அதைக்கேட்ட அவர், அதுபோன்ற சென்டிமெண்டில் எனக்கு நம்பிக்கை இல்லை. இந்த கதாபாத்திரத்துக்கு நீங்கள்தான் பொருத்தமாக இருப்பீர்கள் என்று சொன்னார். பிறகுதான் நடிக்க ஒப்புக்கொண்டேன். திருமணத்துக்கு பிறகு ஹீரோயினாக நடிக்கக் கூடாது என்று யார் சொன்ன விதியோ தெரியவில்லை. இப்பட ஹீரோ கிஷோர் தன்னைப்பற்றி குறிப்பிடும்போது; ‘பேட் ஆக்டர் என்று சொல்லிக்கொண்டார். அதை ஏற்க முடியவில்லை. தனது கதாபாத்திரத்தை உணர்ந்து இதில் நன்றாக நடித்திருக்கிறார்.
தன்னை பேட் ஆக்டர் என்று அவர் குறைத்து மதிப்பிடக்கூடாது. பிருத்விராஜ்தாஸ் என்ற சிறுவனும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறான்.

பூஜா ரகசிய திருமணம்

உள்ளம் கேட்குமே படத்தில் அறிமுகமானவர் பூஜா. அதன் பிறகு பல படங்களில் நடித்தாலும் பாலாவின் நான் கடவுள்அவருக்கு தேசிய விருது பெற்றுத் தரும் என்று எதிர்பார்க்க வைத்தது.
மாநில விருது கிடைத்தது. அதன் பிறகு பூஜா எந்தப் படத்திலும் நடிக்கவில்லை. அவர் எங்கிருக்கிறார் என்பதேதெரியாததால் வாய்ப்பு கொடுக்க நினைப்பவர்களும் அவரை நெருங்க முடியவில்லை. கடைசியாக கிடைத்த தகவல் படி அவர் பெங்களூரில் ஒரு சொப்ட்வேர் கொம்பனியில் உயர் அதிகாரியாக இருப்பதாகவும் அந்த நிறுவனத்தின் அதிபர் மகனை திருமணம் செய்து கொண்டு செட்டிலாகிவிட்டதாகவும் சொல்கிறார்கள்.
பூஜா இலங்கையை சேர்ந்தவர். அம்மா சிங்களவர், அப்பா தமிழர். தற்போது அவர் சிங்களப் படத்தில் நடித்து வருவதாகவும், சிங்களவர் ஒருவரைதிருமணம் செய்துகொண்டு இலங்கையிலேயே செட்டிலாகிவிட்டதாகவும் சொல்கிறார்கள். இதில் எது உண்மை. எது வதந்தி என்பதை பூஜா சொன்னால்தான் தெரியும்.




பாட்டு, நடனம் இல்லாமல் 22 நாட்களில் உருவான விருதுகளை அள்ளிக் குவித்த ~பசி'

நடிகர் - நடிகைகளுக்கு ‘மேக்கப்’ போடாமல், பாட்டு, நடனம் இல்லாமல் டைரக்டர் துரை 22 நாட்களில் தயாரித்த ‘பசி’ படம் ஏராளமான விருதுகளைப் பெற்றதுடன், ஷோபாவுக்கு அகில இந்திய சிறந்த நடிகைக்கான ‘ஊர்வசி’ விருதைப் பெற்றுத்தந்தது.
தொடர்ந்து பல படங்களை இயக்கிக் கொண்டிருந்த டைரக்டர் துரைக்கு, அரசு விருதுகளைப் பெறக்கூடிய படங்களைத் தயாரிக்க வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டது. அதற்காக அவர் எழுதிய கதைதான் ‘ஒரு வீடு ஒரு உலகம். இந்தப் படத்துக்கு நடிகை ஷோபா பொருத்தமாக இருப்பார் என்று தீர்மானித்தார். அதே சமயம், பிராமண குடும்பம் பற்றிய கதையாக இருந்ததால், அதற்கு ஷோபா பொருந்த வேண்டுமே என்ற கவலையும் ஏற்பட்டது.
இதனால் திருக்காட்டுப்பள்ளியில் நடக்கவிருந்த படப்பிடிப்புக்கு முன்னதாகவே ஷோபாவை வரவழைத்து, அங்கிருந்த பிராமணப் பெண்களின் நடை, உடை, பாவனைகளை கவனிக்கச் செய்தார். இதன் விளைவாக படப்பிடிப்பு தொடங்கும் முன்பே, மனதளவில் பிராமணப் பெண்ணாகவே மாறிவிட்டார். ஷோபா.
இந்தப்பட அனுபவம் பற்றி துரை கூறியதாவது:-
படம் தயாராகி சென்சாருக்குப் போனபோது, அன்றைய சென்சார் உறுப்பினராக இருந்த ‘வீணை’ எஸ். பாலசந்தரின் முதல் பாராட்டு கிடைத்தது. படம் வந்தபோது ரசிகர்களின் வரவேற்பும் கிடைத்தது. தமிழ் மொழிப்படங்களில் சிறந்த படத்துக்கான விருதும், சிறந்த இயக்குனர் விருதும் எனக்கு கிடைத்தன.
பல ஆண்டுகளுக்கு முன்பே என் மனதில் உருவானது. ‘பசி’ கதை டைரஷ்னுக்கு என்னை அழைக்கும் தயாரிப்பாளர்களிடம்’பசி’ கதையை கூறுவேன். கேட்டு ரசிப்பார்களே தவிர, படமாக்க யாருமே முன்வரவில்லை. இதனால் நாமே இந்தப் படத்தை தயாரித்தால் என்ன என்ற எண்ணம் ஏற்பட்டது. கதை மீது அந்த அளவுக்கு எனக்கு நம்பிக்கை இருந்ததால், மேலும் நாட்களை கடத்தாமல் என் மகள் சுனிதா பெயரில்
சுனிதா சினி ஆர்ட்ஸ் என்ற பட நிறுவனத்தை தொடங்கினேன். கதாநாயகியாக ஷோபாவையும் மற்றும் விஜயன், டெல்லி கணேஷ் போன்றவர்களையும் ஒப்பந்தம் செய்தேன். சில கேரக்டர்களுக்கு புதுமுகங்களைத் தேடினேன்.
அப்போது எனக்கு கிடைத்த முத்துக்கள்தான் நடிகை பிரவீணா செந்தில், சத்யா, நாராயணன். (நடிகை பிரவீணா, பின்னாளில் டைரக்டர் கே. பாக்யராஜை மணந்தார்)
டைரக்டர் கே. பாலசந்தர் தலைமையில் ‘பசி’ படத்தின் தொடக்க விழா பூஜை நடைபெற்றது. பூஜையன்றே தினத்தந்தியில் முழுப்பக்க விளம்பரம் செய்திருந்த நான். இன்று முதல் பாரிஸ், பர்மா, சைனாவில் படப்பிடிப்பு ஆரம்பம் என்று கொட்டை எழுத்துக்களில் குறிப்பிட்டு இருந்தேன்.
கொஞ்சம் இடைவெளி விட்டு பாரீஸ் என்ற வார்த்தைக்கு அருகே ‘கார்னர்’ என்றும், பர்மா, சைனா வார்த்தைகளுக்கு அருகே ‘பஜார்’ என்றும்சின்ன எழுத்தில் போட்டிருந்தேன் படப்பிடிப்பு தொடங்கிய அன்றே, ரிலீஸ் தேதியையும் குறிப்பிட்டு இருந்தேன்.
‘பசி’ படம் சென்னை பாரீஸ் கார்னரில் இருந்து மைலாப்பூர் வரை உள்ள சாலைகளிலும், குடிசைப் பகுதிகளிலும் படமாக்கப்பட்டது. இந்தப் படத்தில் சேரிப்பெண் கேரக்டரில் நடித்த ஷோபாவை அங்குள்ள குடிசைப் பகுதி பெண்களுடன் சந்திக்க வைத்து, பேசிப் பழக வைத்தேன். இதனால் ஷோபா, குடிசைப் பகுதி குப்பம்மாவாகவே மாறிப்போனார். கதையில் ரிக்க்ஷ¡ ஓட்டும் வேடத்தில் நடிக்கவிருந்த டெல்லி கணேஷ், ரிக்ஷ¡ ஒட்டிப்பழக ஒரு ரிக்ஷ¡வை சொந்தமாக வாங்கி அவரை ஓட்டிப்பழக வைத்தேன்.
தினமும் எடுக்கவிருக்கும் காட்சிகளுக்கு அலுவலகத்திலேயே ஒத்திகை பார்த்துக் கொள்வோம். ஒத்திகையில் திருப்தி ஏற்பட்டதும் நடிகர் - நடிகைகளை காரில் ஏற்றிச்சென்று, படப்பிடிப்பு நடக்கும் குடிசைப் பகுதியில் இறக்கி விட்டு விடுவோம்.
பிறகு அவர்களை ஏற்றி வந்த காரை சற்றுத்தள்ளி நிறுத்தி விடுவோம். நடிகர் - நடிகைகள் பேசி நடிக்கும் காட்சிகளை இன்னொரு காரில் இருந்த கேமரா மூலம் படமாக்கி விடுவோம். படப்பிடிப்பு நடப்பது யாருக்கும்தெரியாது காரணம் யாருக்கும் மேக்கப் கிடையாது. படத்தில் பாடலோ, நடனமோ இல்லை. இப்படி 22 நாட்களில் முழுப்படத்தையும் எடுத்து முடித்தேன். படம் தயாரானதே தவிர அதை வாங்க ஆளில்லை. படத்தை பார்த்த விநியோகஸ்தர்களும், குப்பைத்தொட்டியில் எடுத்த இந்தப்படம் ஓடாது என்று சொல்லி விட்டுப் போனார்கள்.
விநியோகஸ்தர்கள் தரப்பில் வரவேற்பு இல்லை என்று தெரிந்ததும், சினிமாவில் இருந்த எல்லா மொழி இயக்குனர்களையும், எழுத்தாளர்களையும் தயாரிப்பாளர்களையும் அழைத்து படத்தை போட்டுக் காட்டினேன். படம் பார்க்க வந்த அனைவரும் என்னை பாராட்டிவிட்டுப்போக, தயாரிப்பாளர்அரங்கண்ணல் மட்டும்எதுவும் பேசாமல் புறப்பட்டுப் போனார்.
நான் அவரைப் பின்தொடர்ந்தபடி படம் உங்களுக்கு பிடிக்கவில்லையா சார்? என்று கேட்டேன் அவரோ என்னை ஒரு பார்வை பார்த்தபடி நாளை காலை தினத்தந்தயைப் பார் என்று மட்டும் சொல்லிவிட்டு போய்விட்டார். மறுநாள் தினத்தந்தியை பார்த்தபோது எனக்கு ஒரு ஆச்சரியம் காத்திருந்தது. ‘பசி’ ஒரு குறிஞ்சி மலர் என்று இராம அரங்கண்ணல் விளம்பரம் செய்திருந்தார்.
‘பசி’ படத்தை சென்னை நகரில் நானே ரிலீஸ் செய்தேன். 2 ஏரியாக்களை பிரபல மலையாளப்பட டைரக்டர் கே.எஸ்.சேதுமாதவன் வாங்கினார். என் மீது நம்பிக்கை வைத்து மற்ற ஏரியாக்களையும் சிலர் வாங்கினார்கள்.
21-12-1979 அன்று ‘பசி’ ரிலீஸ் ஆயிற்று.
அன்று செய்த விளம்பரத்தில், கதையைப் பற்றி ஒரு கவிதையும் எழுதியிருந்தேன். கோதைக்கோ மானப்பசி குழந்தைக்கோ வயிற்றுப்பசி காதகனுக்கோ காமப்பசி காலத்திற்கோ மரணப்பசி என்ற அந்தக் கவிதைக்கு பெரிய அளவில் வரவேற்பு கிடைத்தது.
விநியோகஸ்தர்களால் இது ‘ஓடாது’ என்று மதிப்பிடப்பட்ட ‘பசி’ ஓகோ என்று ஓடியது. படத்தின் பல காட்சிகள் பெண்களின் இதயத்தைத் தொட்டு, கண்ரீவரச்செய்தது. மக்களின் ஆதரவைப் பெற்ற ‘பசி’ விருதுகளையும் குவித்தது. அகில இந்திய சிறந்த நடிகைக்கான ‘ஊர்வசி’ விருதை, ஷோபா பெற்றார். சிறந்த மாநில மொழிப்படத்துக்கான மத்திய அரசின் விருதையும்,தமிழக அரசின் விருதையும் ‘பசி’ பெற்றது. மாநில மொழிப்படத்தின் சிறந்த டைரக்டருக்கான விருது எனக்குக் கிடைத்தது.
டெல்லியில் நடந்த விழாவில் நானும், ஷோபாவும் கலந்து கொண்டு பரிசுகளைப் பெற்றோம். அன்றைய ஜனாதிபதி சஞ்சீவரெட்டி அளித்த விருந்திலும் கலந்து கொண்டோம்.
இதுமட்டுமல்ல ரஷியாவில் உள்ள தாஷ்கண்ட் நகரில் நடைபெற்ற திரைப்பட விழாவில் ‘பசி’ படம் திரையிடப்பட்டது.
இதற்காக ரஷ்யா சென்றிருந்தேன் என்னை மேடைக்கு அழைத்தபோது, நான் தமிழன் என்பதை வெளிப்படுத்த வேட்டி - சட்டையில் மேடையேறினேன். மேடையில் நான் பார்வையாளர்களை கை கூப்பி வணங்கி பிராட்டியா ஸ்தோத்தரியா என்றேன் நான் இப்படிச் சொன்னதும், அரங்கத்தில் கூடி இருந்தவர்கள் பலமாக கை தட்டி ஆரவாரம் செய்தார்கள்.
இதற்குக் காரணம் நான் கூறிய ரஷிய மொழிச் சொற்களுக்கு ‘சகோதர, சகோதரிகளே’ என்று அர்த்தம்! இதை நான், ரஷிய மொழியும், தமிழும் தெரிந்த நிகழ்ச்சி நிர்வாகியிடம் ஏற்கனவே கேட்டுத் தெரிந்து கொண்டு மேடையில் பேசினேன். இவ்வாறு துரை கூறினார். பசி படத்தின் மூலம் புகழ் பெற்ற சத்யா, பின்னர்’பசி’ சத்யா ஆனார். நாராயணன் ‘பசி’ நாராயணன் ஆனார். மகத்தான வெற்றி பெற்ற ‘பசி’யின் வெற்றி விழா சென்னையில் நடைபெற இருந்தது. அன்றைய தினம் ஷோபா மரணத்தைத் தழுவியது அனைவரையும் அதிர்ச்சி அடையச் செய்தது. விழாவை ரத்து செய்துவிட்டு. ஷோபாவுக்கு அஞ்சலி செலுத்தினார், துரை.
பின்னர் ‘பசி’ கதையை பேட் பியார் அவுர் பாப் என்ற பெயரில் இந்தியிலும் துரை தயாரித்தார். ‘பசி’ படம் பற்றி தெரிந்து வைத்திருந்த பிரபல இந்தி நடிகர் ராஜ்பாப்பரும், நடிகை சுமிதா பட்டேலும் இதில் நடிக்க உடனே சம்மதம் தெரிவித்தனர்.
அமிதாப்பச்சன், அம்ஜத்கான், மெஹமூத், தனுஜா, மவுஷ்மி சாட்டர்ஜி, அருணா இராணி என்று பல பிரபல நட்சத்திரங்களும்நடித்தார்கள். தமிழ் ‘பசி’யில் பாடல்கள் இல்லாதிருக்க, இந்தி ‘பசி’யிலோ பப்பிலஹரி இசையில் 5 பாடல்கள்.
மும்பை குடிசைப் பகுதியில் படமாக்கப்பட்ட இந்தி ‘பசி’யும், வெற்றிப் படமாக அமைந்தது. இப்படத்தில் சுமிதா பட்டேலின் நடிப்பை அனைவரும் புகழ்ந்தனர். பதிலுக்கு சுமிதா பட்டேல் என்ன சொன்னார் தெரியுமா?
இந்தப் படத்தில் என் நடிப்பை பாராட்டிய நீங்கள் யாருமே தமிழ் ‘பசி’ படம் பார்க்கவில்லை. அதில் ஷோபா நடிப்பை பார்க்க நேர்ந்திருந்தால், இப்போது என்னை பாராட்டிக் கொண்டிருக்க மாட்டீர்கள் ஷோபா நடிப்புக்கு முன் என் நடிப்பு ஒன்றுமே இல்லை என்றார் பெருந்தன்மையான நடிகை!

நடிகை லட்சுமியின் தங்கையாக நடித்தவர் பரீனாலை

மலாய் முஸ்லிம் இனத்தைச் சேர்ந்த பரீனாலை, 1970 ஆம் ஆண்டு வெளியான மஞ்சள் குங்குமம் என்ற தமிழ்த் திரைப்படத்தில் முதன் முதலில் நடனமாடியதன் மூலம் திரைப்படத் துறைக்கு அறிமுகமானார். தொடர்ந்து பல சிங்களப் படங்களில் நடனக் காட்சிகளில் தோன்றினார். மேலும் இரவுக் கேளிக்கை விடுதிகளில் பாடகர் எம். எஸ். பெர்னாந்துவுடன்
இணைந்து நடனமாடினார்.
1975 ஆம் ஆண்டில் வெளியான புதிய காற்று திரைப்படத்தில் வி. பி. கணேசனுடன் இணைந்து கதாநாயகியாக நடித்தார். சிங்கள நடிகர் காமினி பொன்சேகா தயாரித்த ‘சருங்கலே’ (1979), ‘உதுமானென’ (1979) போன்ற சிங்களப் படங்களில் காமினி பொன்சேகாவின் தங்கையாக நடித்தார். இலங்கை, இந்திய கூட்டுத் தயாரிப்பான நங்கூரம் படத்தில் நடிகை லட்சுமியின் தங்கையாக நடித்தார். பிற்காலத்தில் குணசித்திர நடிகையாக நடித்தார். நெஞ்சுக்கு நீதி, அவள் ஒரு ஜீவநதி திரைப்படங்களில் நடனமாடி நடித்திருந்தார்.
சில்லையூர் செல்வராசனின் மகன் திலீபன் செல்வராஜன் கதாநாயகனாக நடித்த ‘ஆதரகதாவ’ என்ற சிங்களத் திரைப்படத்தில் திலீபனின் சகோதரியாகத் தமிழில் பேசி நடித்தார். இவர் கடைசியாக ‘அலிபாபா ஹொரு ஹதலிய’ எனும் சிங்களப் படத்தில் ரொபின் பெர்னாந்துவுக்கு சோடியாக நடித்தார். இவர் நடித்த திரைப்படங்கள்
சில தமிழ்த்
திரைப்படங்கள்
மஞ்சள் குங்குமம் (1970)
புதிய காற்று (1975)
நங்கூரம்
நெஞ்சுக்கு நீதி
அவள் ஒரு ஜீவநதி
சிங்களத்
திரைப்படங்கள்
ரேமனமாலி
சிரில்மல்லி
லோக்க ஹொரு
சமன்மலி
மினிசுன்அதர மினிஹெக்
லஸ்சன கெல்ல
சருங்கலே (1979)
உதுமானெனி (1979)
செனகெலிய (1974)
சிஞ்சிஞ்நோனா (1977)
மல்கெருலு (1980)
ஆதரகதாவ
அலிபாபா ஹொரு ஹதலிய


சாதனை படைத்த காதல் காவியம்

1972ம் ஆண்டு செப்டம்பர் 29 அன்று வெளியான வசந்த மாளிகை திரைப்படம் நடிகர் திலகம் சிவாஜிகணேசன், வாணிஸ்ரீயின் காதல் நடிப்பாலும், அருமையான பாடல்களாலும் தமிழ்த் திரையுலகில் ஒரு மறக்க முடியாத காதல் காவியம் எனப் பெயரெடுத்தது.
அந்த காதல் காவியத்தை தற்போது டிஜிட்டல், சினிமாஸ்கோப் கலர் திருத்தம் ஆகியவற்றைச் செய்து மீண்டும் வெளியிட இருக்கிறார்கள். சாய் கணேஷ் பிலிம்ஸ் சார்பாக சீனிவாசன் இத் திரைப்படத்தை டிசம்பர் 7ம் திகதியன்று தமிழகம் முழுவதும் வெளியிடுகிறார்.
1972ல் வெளிவந்த வசந்த மாளிகை திரைப்படம் தமிழ்நாடு, இலங்கையில் பல சாதனைகளைப் புரிந்து 250 நாட்கள் ஓடிய திரைப்படமாக அமைந்தது. கே.எஸ். பிரகாஷ் ராவ் இயக்கத்தில் கே.வி. மகாதேவன் இசையமைத்துள்ள இப்படத்தில் ஒரு கிண்ணத்தை ஏந்துகிறேன், குடிமகனே, கலைமகள், மயக்கம் என்ன ஆகிய சூப்பர் ஹிட் பாடல்கள் அமைந்துள்ளன. நாகேஷ், பாலாஜி சுகுமாரி ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். காதலை காதலிப்பவர்கள் மீண்டும் ஒரு காதல் காவியத்தை பார்க்கத் தயாராகுங்கள்.

மயக்கமென்ன இந்த மெளனம்...

மயக்கமென்ன இந்த மெளனம் என்ன
மணி மாளிகை தான் கண்ணே
தயக்கம் என்ன இந்தச் சலனம் என்ன
அன்புக் காணிக்கை தான் கண்ணே
கற்பனையில் வரும் கதைகளிலே
நான் கேட்டதுண்டு கண்ணா - என்
காதலுக்கே வரும் காணிக்கை என்றே
நினைத்ததில்லை கண்ணா
தேர் போலே ஒரு பொன்னூஞ்சல்
அதில் தேவதை போலே நீ ஆட
பூவாடை வரும் மேனியிலே
உன் புன்னகை இதழ்கள் விளையாட
கார்காலமாய் விரிந்த கூந்தல்
கன்னத்தின் மீதே கோலமிட
கை வளையும் மை விழியும்
கட்டியணைத்து கவி பாட (மயக்க)
அன்னத்தைத் தொட்ட கைகளினால்
மதுக் கிண்ணத்தை இனி நான் தொட மாட்டேன்
கன்னத்தில் இருக்கும் புன்னகை எடுத்து
மதுவருந்தாமல் விட மாட்டேன்
உன்னையல்லால் ஒரு பெண்ணை இனி
நான் உள்ளத்தினாலும் தொட மாட்டேன்
உன் உள்ளம் இருப்பது என்னிடமே அதை
உயிர் போனாலும் தரமாட்டேன் (மயக்க)