Thursday, May 15, 2014

முதல் மனைவியையும் குழந்தையையும் இழந்த எம்.ஜி.ஆருக்கு இரண்டாவது திருமணம்

ஹீம்பியால் இன்னும் இரண்டு நாட்கள் கழித்து தான் சூட்டிங் வர முடியும் என்பதை டைரக்டர்களுக்கு தெரியப்படுத்தினார்.

இதற்கிடையில் அண்ணி அவர்கள் எம். ஜி. ஆரை பார்த்து தம்பி நடந்தது நடந்துவிட்டது நீங்கள் கவலைப்பட்டு கொண்டு வீட்டிற்குள் இருப்பதால் இறந்துபோன உங்களுடைய தங்ககுட்டி திரும்ப வரவா போகிறாள், மூன்று நாள் எங்களிடம் யாரிடமும் பேசாமல் எதுவும் சாப்பிடாமல் இப்படி படுத்து கிடப்பது உங்களுடைய உடம்பு என்னவாகும். நீங்கள் இப்படி படுத்து கிடப்பதால் மணியும் ராமும் ஏன் சித்தப்பாவும் நீங்கள் சாப்பிடாமல் படுத்து கிடக்கிறார்கள் என்று கேட்கிறார்கள்.
நீங்கள் வீட்டிற்குள் நுழைந்த உடனே அவர்கள் இருவரையும் அழைத்து செல்லமாக கொஞ்சுவீர்களே. அந்த சின்ன சிறு குழந்தைகள் உங்களை நினைத்து உங்களிடம் வருவதற்கு பயந்து கொண்டு இருக்கிறார்கள். தயவு செய்து எழுந்து குளித்து வந்து சாப்பிடுங்க எந்த விஷயத்தையும்
எப்படிப்பட்டதாக இருந்தாலும் கவலைப்படாமல் உங்களுடைய முயற்சியே வீண் போகாமல் நடந்துகொள்ள கூடிய நீங்கள் இப்படி படுத்து கொண்டு இருக்கலாமா, உங்களுடைய வெற்றி பாதையை இடையிலேயே விட்டு விடலாமா என்று சொல்லிவிட்டு அவர் அந்த அறையை விட்டு போய்விடுகிறார். இவைகளையெல்லாம் நினைத்து பார்த்த எம். ஜி. ஆர். எழுந்து அவருடைய பணிகளை தொடங்க முயற்சி செய்தா¡ர்.
ஆனாலும், அவர் அடையாரில் அவர் தங்கி இருக்கும் வீட்டிலிருந்து அருகாமையில் உள்ள ஒரு கோயிலுக்கு சென்று ஒரு உருத்திராட்சை கொட்டை வாங்கி கழுத்தில் கட்டி கொண்டு நெற்றியில் விபூதிபட்டை அடித்துகொண்டு கதர்சட்டை கதர்ஜிப்பா அணிந்து கொண்டு நேராக அவர் நடித்து வரும் பட கம்பெனிகளுக்கு சென்றார்.
அங்கு எம். ஜி. ஆரை மிக ஆச்சர்யத்தோடு பார்த்தார்கள். ஏற்கனவே எம். ஜி. சி. சொன்ன தகவலை மனதில் நினைத்து கொண்டு வாங்க எம். ஜி. ஆர். உங்க அண்ணன் எம். ஜி. சி. ஏற்கெனவே எல்லா விஷயத்தையும் சொல்லிவிட்டார். நடப்பது எல்லாம் நம்ம கையிலா இருக்குது எல்லாம் அவன் செயல் கவலை படாதீர்கள் என்று ஆறுதல் கூறினார்கள்.
இதைக் கேட்ட எம். ஜி. ஆர். சற்று சிரித்த முகத்தோடு அவர்களை பார்த்து கடவுளே நான் ஏற்கனவே இந்த முடிவுக்கு வந்து விட்டேன். என் கடன் பணி செய்து கிடப்பதே, நான் கழுத்தில் உருத்திராட்சை கொட்டையும், நெற்றியில் விபூதி பட்டையும் போட்டு இருப்பதை பார்த்து என்னை ஒரு சாமியார் என்று நினைத்து விடாதீர்கள்.
இது ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு உள்ள விரதம் என்று சொல்லி விட்டு மற்ற கம்பெனிகளுக்கும் இவர் செல்லும் இடம் எல்லாம் இதே கேள்வி இதே பதில் எந்த எந்த கம்பெனியில் சூட்டிங் இருக்குது என்று அறிந்து கொண்டு வீட்டிற்கு திரும்பி வரும் போது தன்னுடைய அண்ணன் குழந்தைகளுக்கு பிஸ்கட் பக்கெட் வாங்கி கொண்டு வருகிறார். வீட்டிற்குள் நுழையும் போது மணி, ராமு என்று அண்ணன் குழந்தைகளை அழைக்கிறார். சித்தப்பாவின் குரலைக் கேட்ட அந்த குழந்தைகள் ஓடோடி வந்து கட்டிப்பிடித்து கன்னத்தில் முத்தம் இட்டு கொஞ்சுகிறார்கள்.
இந்த நிகழ்ச்சியைப் பார்த்துக் கொண்டு இருந்த அண்ணனும், அண்ணியும் கண்ணீர் விடுகிறார்கள். காரணம் எம். ஜி. ஆர். கழுத்தில் இருக்கும் உருத்திராட்ச கொட்டையும் நெற்றியில் உள்ள விபூதி பட்டையும் தான் அடுத்து எம். ஜி. ஆர். எப்போதும் போல் படப் பிடிப்புக்கு செல்ல ஆரம்பித்தார்.
தன் மனைவி ஊருக்கு செல்லும்போது குழந்தையை பெற்று நீ குழந்தையுடன் நீ வரும்போது நான் ஒரு கதாநாயகனாக சினிமாவில் நடித்து கொண்டு இருப்பேன் என்று சொன்னதை நினைத்து பார்க்கிறார். அதன்படி தான் கதாநாயகனாக நடிக்க வேண்டும் என்ற முயற்சியை இன்னும் தீவிரப்படுத்துகிறார். இந்த முயற்சியில்தான் பிரபல பட தயாரிப்பாளரான நாராயணன் கம்பெனியாரால் ஏ. எஸ். ஏ. சாமி டைரக்ஷனில் கலைஞர் கருணாநிதியுடைய கதை வசனத்தில் உருவாக இருக்கும் “ராஜகுமாரி” என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தமாகிற்று. ஒரு வருடத்தில் இந்த படப்பிடிப்பு முடிந்து வெளியே வந்தது.
அதே நேரத்தில் ஜெமினி ஸ்டூடியோவினால் டைரக்ஷன் ஜெமினி வாசனால் பல இலட்சக் கணக்கான ரூபாயால் தயாரிக்கப்பட்டது “சந்திரலேகா” இதில் நடித்தவர்கள் எம். ஜி. ஆருக்கு மிக வேண்டிய நண்பரான எம். கே. ராதா, டி. ஆர். ராஜகுமாரி, ரஞ்சன், என் . எஸ். கே., டி. ஏ. மதுரம் ஆகியோரே ஆவார்கள். இந்தப் படம் ஓ ஓ என்று ஓடிக்கொண்டு இருக்கும் போது எம். ஜி. ஆர். நடித்து “ராஜகுமாரி”யும் ஓடிக்கொண்டு இருந்தது.
இதற்கு முன்னாடி எம். கே. தியாகராஜபாகவதர், டி. ஆர். ராஜகுமாரி நடித்த படம் “அரிதாஸ்” இந்தப் படம் ஒரே தியேட்டரில் மதுரையில் ஒரு வருடத்திற்கு மேல் ஓடியது. சென்னையில் இதே போல் பி. யு. சின்னப்பா, பி. கண்ணாம்பாள் இருவரும் நடித்த கண்ணகி என்ற சரித்திர படம் இதைவிட பிரமாதமான பெண்களுக்கு உரிய கதை அம்ஸம் கொண்ட படம். இந்த மூன்று படத்துக்கும் இடையிலே புதுமுகமாக நடித்த எம். ஜி. ஆரின் முதல் படம் நான்காவது இடத்தில் ஓடிக் கொண்டு இருந்தது. இந்த நேரத்தில் எம். ஜி. ஆருக்கு அடுத்து கதாநாயகனாக நடிக்க வாய்ப்புகள் தேடி அலைந்து கொண்டு இருக்கும் போது ஒரு நாள் இவர்களையெல்லாம் சந்தித்து பேசி கொண்டு வரும் நேரத்தில் என். எஸ். கே. யை சந்திக்கிறார்.
அவரிடம் தன் நிலைமைகளை தெரிவிக்கிறார் என். எஸ். கே. எல்லாவற்றையும் கேட்டுவிட்டு தம்பி நீ எதற்கும் கவலைப்படாதே அவசரபடாதே உன் முயற்சியிலிருந்து தவறாதே காலங்கள் கடந்தாலும் உனக்கு ஒரு நல்ல வாய்ப்பு வரும் காலங்கள் இருக்கிறது. உன்னுடைய அழகுக்கும், திறமைக்கும் வாய்ப்புகள் உன்னை தேடிவரும். முதலில் இந்த வேஷத்தைக் கலைத்துவிடு, படப்பிடிப்பு இல்லாத நேரங்களில் என்னை வந்து பார்த்து பேசி செல்லு என்று வாழ்த்தி அனுப்புகிறார்.
அங்கிருந்த வீட்டுக்கு வந்த எம். ஜி. ஆர். கேரளாவுக்கு சென்று இருந்த தன் தாய் வீட்டிற்குள் இருப்பதை கண்டார். தன் மகன் வீட்டிற்குள் நுழைந்த உடன் தாய் ஓடோடி வந்து தன் மகனை பார்த்து மகனே என்று சொல்லி கட்டி பிடித்து அழுகிறார். மகனே என்னடா வேஷம் என்று சொல்லி கொண்டு அழுகிறாள். மகன் ஒன்றும் சொல்லாமல் தன் ரூமுக்குள் சென்று விட்டார். அடுத்தநாள் காலையில் என். எஸ். கே. சொன்ன அறிவுரைப்படி எப்போதும் போல் ஜிப்பாவும், வேஷ்டியும் அணிந்து சென்றார்.
இதைப் பார்த்த அம்மாவும். அண்ணனும் அண்ணியும் மூவரும் மன சந்தோஷப்படுகிறார்கள்.
முதல்நாள் இரவு எம். ஜி. ஆர். கட்டிபிடித்து இது என்ன கோலம் என்று தாய் கட்டி அழுததால் தான் எம். ஜி. ஆர். உடுத்தியிருந்த உடைகளை கழற்றிவிட்டார் என்று மூவரும் நினைத்து கொண்டார்கள். வெளியே சென்ற பிறகு எம். ஜி. ஆர். ஏற்கெனவே ஒப்பந்தம் செய்தபடி படங்களில் நடித்து வந்தார். இதற்கு இடையில் சில படங்களும் ஒப்பந்தமாகியது.
எம். ஜி. ஆர். தன்னுடைய முன்னேற்றப் பாதையில் மிக விறுவிறுப்பாக நடந்து கொண்டு இருந்தார். உலகில் முதல் யுத்தம் 1938 இல் நடந்து கொண்டு இருந்த சமயத்தில் இந்தியாவில் இந்தியாவுக்கும் ஆங்கிலேயருக்கும் கடும்போர் நடந்தது. சென்னையில் ஆங்கிலேயர்கள் குண்டு வீசும் அபாயகட்டத்தில் இருந்தது.
இந்த சூழ்நிலையில் கூட எம். ஜி. ஆர். எதற்கும் அஞ்சாமல் படப்பிடிப்புக்குப் போனார். சென்னையை தாக்க வந்த எதிரிகளின் விமானங்களை இந்திய படை விரட்டி அடித்தது. இந்த மாதிரி ஒரு நெருக்கடியான கால கட்டத்தில் சென்னையை போன்ற பெரிய நகரங்களில் உள்ள 18 வயது நிரம்பிய வாலிபர்களை கட்டாயமாக இராணுவத்திற்கு அழைத்தார்கள். இதை அறிந்த எம். ஜி. ஆர். சினிமாவில் நடிக்க ஸ்டூடியோக்களுக்கும், கம்பெனி களுக்கும் அலைவதை விட பேசாமல் இராணுவத்தில் சேர்ந்து ஒரு வீரனாகி விடலாம் என்று நினைத்தது உண்டு.

பாகவதர் யு.ஆர்.ஜீவரத்தினம் நடித்த வால்மீகி

(கடந்தவாரத் தொடர்)

பாகவதர் ஒப்பந்தமான படங்களில் ஜுபிடரின் “வால்மீகி”யும் ஒன்று. கொள்ளைக்காரனாக இருந்து, பிறகு முனிவரானவர் வால்மீகி.
பாகவதருக்கு ஜோடியாக நடிக்க, நடிகை யு.ஆர். ஜீவரத்தினம் ஒப்பந்தமானார். சொந்தமாக பாடி நடத்த ஒருசில நடிகைகளில் ஜீவரத்தினமும் ஒருவர். அவர் முதன் முதலாக பாகவதருடம் இணைந்து நடித்ததால், ரசிகர்களிடம் “வால்மீகி” பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. டி.ஆர். ராஜகுமாரி டி.எஸ். பாலையா, என்.எஸ். கிருஷ்ணன் ஆகியோரும் இப்படத்திற்கு ஒப்பந்தம் ஆயினர். “வால்மீகி” படப்பிடிப்பு தொடங்கியது. பாகவதரும், ஜீவரத்தினமும் நடித்த சில காட்சிகள் படமாக்கப்பட்டன.
இந்த நிலையில் “இந்து நேசன்” என்ற பத்திரிகையின் ஆசிரியரான லட்சுமிகாந்தன் கொலை செய்யப்பட்ட வழக்கில், பாகவதர் 1944 டிசம்பர் 28ம் திகதி கைது செய்யப்பட்டார். மறுநாள் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனும் கைதானார். இரு பெரும் கலைஞர்கள் கைதானது கண்டு தமிழகமே அதிர்ச்சி அடைந்தது.
பாகவதரும், கிருஷ்ணனும் விரைவில் விடுதலையாகி விடுவார்கள் என்றே அனைவரும் நினைத்தனர். ஆனால், அவர்களுக்கு சென்னை ஐகோர்ட்டு ஆயுள் தண்டனை விதித்தது. பாகவதர் வந்து விடுவார் என்று கருதி, “வால்மீகி” படப்பிடிப்பை சிறிது காலம் ஜுபிடர் நிறுவனம் நிறுத்தி வைத்தது.
ஆனால் அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டதால், வேறு வழியின்றி வால்மீகியாக ஹொன்னப் பகவதரை நடிக்க வைத்து, படத்தை முடிக்க சோமுவும், மொகிதீனும் முடிவு செய்தனர். ஹொன்னப் பாகவதர், கன்னடத்தில் பிரபல நடிகர், சில தமிழ்ப்படங்களிலும் நடித்திருந்தார். தியாகராஜ பாகவதர் நடித்த “ அம்பிகாவதி”யில் அரசவையில் பாடகராக கச்சேரி செய்வார்.
சொந்தக் குரலில் பாடி நடிப்பவர் என்ற முறையில், அவர் தேர்வு செய்யப்பட்டார். அவர் நடித்த “வால்மீகி” 13-4-1946 ல் வெளிவந்து, ஓரளவு வெற்றிகரமாகவே ஓடியது.

நினைவுகளில் ரீங்காரமிடும் ரோஜh மலரே ராஜகுமாரி சி.எல்.ஆனந்தன்

ரோஜா மலரே ராஜகுமாரி என்னும் பழைய சினிமாப் பாடலை இலகுவில் மறந்துவிட முடியாது. இன்றும் கூட அந்தப் பாடலை பழைய பட ரசிகர்கள் வாயில் முணுமுணுப்பதைக் காணக்கூடியதாக இருக்கிறது. இப்பாடல் இடம் பெற்ற படம் ‘வீரத்திருமகன்’ இப்படத்தில் ஆனந்தனும், சச்சுவும் கதாநாயகன், கதாநாயகியாக நடித்தனர். இப்படக் கதாநாயகன் ஆனந்தன் பற்றிய சில நினைவுகளை மீட்டிப் பார்ப்போம்.

விஜயபுரி வீரன் படத்தில் கதாநாயகனாக அறிமுகமான சி.எல்.ஆனந்தன் சண்டைக் காட்சிகளில் சிறந்து விளங்கினார். திரைப்படங்களில் ஸ்டண்ட் நடிகராகவும் கோஷ்டி நடனத்தில் இடம்பெறுகிறவராகவும் இருந்தவர் ஆனந்தன்.
திறமை இருந்தும் வெளிச்சத்துக்கு வராமல் இருந்தார். 1960 ல் சிட்டாடல் பிலிம்சார் விஜயபுரி வீரன் படத்தைத் தயாரித்தனர். திருலோக சுந்தர் எழுதிய கதை ஜோசப் தளியத் டைரக்ட் செய்தார். படத்தில் எல்லோரும் புது முகங்கள். ஆனந்தன் கதாநாயகனாக அறிமுகமானார். டி.கே.எஸ்.சகோதரர்களின் நாடகக் குழுவில் நடித்து வந்த ஹேமலதா கதாநாயகி.
மற்றும் அசோகன், பாண்டி செல்வராஜ் ராமதாஸ் ஆகியோரும் நடித்தனர். வசனம் நாஞ்சில் ராஜப்பா, குதிரை சவாரி கத்திச் சண்டை முதலிய வீர தீரச் செயல்கள் நிறைந்த படம் இது.
ஆனந்தன் பிரமாதமாக நடித்தார். அவர் போட்ட கத்திச் சண்டைகள் விறுவிறுப்பாக இருந்தன. சாதாரண புதுமுகங்கள் நடித்த இந்தப் படம் சூப்பர் ஹிட்டாக அமைந்து நூறு நாட்களுக்கு மேல் ஓடியது.
அதன்பின்னர் 1962ல் ஏ.வி.எம். ஸ்டூடியோவில் உருவான வீரத்திருமகன் படத்தில் ஆனந்தனும், குமாரி சச்சுவும் நடித்தனர்.
தொடர்ந்து பல சண்டைப் படங்களில் ஆனந்தன் நடித்தார். எம்.ஜி.ஆரை அடுத்து நன்றாகக் கத்திச் சண்டை போடக்கூடியவர் என்ற பெயர் அவருக்குக் கிடைத்தது. கொங்கு நாட்டுத் தங்கம், யானை வளர்த்த வானம்பாடி மகன், நீயா, நானா, நானும் மனிதன் தான், காட்டு மல்லிகை, அடுத்த வாரிசு, அந்த ஒரு நிமிடம், செந்தூரப் பூவே ஆகியவை ஆனந்தனின் குறிப்பிடத்தக்க படங்கள்.
பிற்காலத்தில் எம்.ஜி.ஆருடன் தனிப்பிறவி, நீரும் நெருப்பும் ஆகிய படங்களில் நடித்தார். ஸ்டண்ட் படங்களுக்கு மவுசு குறையத் தொடங்கியதும் ஆனந்தனின் பட வாய்ப்புகள் குறைந்தன.
நண்பர்களுடன் சேர்ந்து ஆனந்தன் மூவிஸ் என்ற பெயரில் படக்கம்பனி தொடங்கினார். நானும் மனிதன் தான் என்ற படத்தை தயாரித்தார். பொருளாதார ரீதியில் இந்தப் படம் அவருக்கு வெற்றியைத் தேடித் தராவிட்டாலும் சிறந்த நடிகர் என்பதை ஊர்ஜிதப்படுத்தியது. கிராமத்து அப்பாவி கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்தார். துணிச்சல் சண்டை காட்சிகளில் டூப் போடாமலேயே நடித்தவர் ஆனந்தன். காட்டு மல்லிகை என்ற படத்தில் புலியுடன் சண்டை போடும் காட்சியில் அவரே நடித்தார். 1989ல் நடிகர் ஆனந்தன் மஞ்சள் காமாலை நோயினால் பாதிக்கப்பட்டார்.
25.03.1989 அன்று அதிகாலை ஆனந்தன் மரணம் அடைந்தார். ஆனந்தனின் மனைவி பெயர் லட்சுமி அம்மாள். 3 மகன்கள், 4 மகள்கள் பிற்காலத்தில் கவர்ச்சி நடன நடிகையாக விளங்கிய டிஸ்கோ சாந்தி அவரது மகள்களில் ஒருவர். இன்னொரு மகள் லலிதா குமாரி. மகன் ஜெயராம் ஆகியோரும் சினிமா படங்களில் நடித்தனர்.

40.50களின் கனவுக் கன்னி

தமிழ் திரையுலகில் 1940 மற்றும் 50 களில் முன்னணி கதாநாயகியாக கலக்கியவர் டி.ஆர்.ராஜகுமாரி. அப்போதைய இளைஞர்களுக்கு இவர்தான் கனவுகன்னி. சுண்டி இழுக்கும் பார்வை யாலும் போதை ஏற்றும் குரலாலும் தமிழக வாலிய பட்டாளங்களையெல்லாம் கட்டி போட்டு இருந்தார்.

திரையுலகின் முதல் கவர்ச்சி நடிகையும் இவர்தான். 1939ல் குமாரகுலோத்துன் படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். தியாகராஜ பாகவதரின் மெகாஹிட் படங்களான சிவகவி, ஹரிதாஸ் போன்றவற்றில் நடித்தார். சிவாஜியின் மனோகரா படத்தில் வில்லியாக தோன்றினார்.
மனோகரன் மன்னிப்பு கேட்க வேண்டும் எனும் இவரது குரூர வசனம் பலத்த வரவேற்பை பெற்றது. குலேபகாவலி படத்தில் எம்.ஜி.ஆருடன் நடித்தார். இதில் ஆசையும் நேசமும் ரத்த பாசத்தினால் ஏற்படுவதை பாராயடா என்று பாடி நடித்து கிறங்கடித்தார்.
தமிழில் அதிக செலவில் தயாரான முதல் பிரமாண்ட படமான சந்திர லேகாவில் கதாநாயகி யாக நடித்தார். சிவாஜியின் தங்கமலை ரகசியம், தங்க பதுமை, அன்பு, எம்.ஜி.ஆருடன் பாசம், புதுமைப்பித்தன், பி.யு.சின்னப்பாவுடன் வனசுந்தரி, கிருஷ்ணபக்தி விகடகவி என ஏராளமான படங்களில் நடித்துள்ளார்.
1963ல் கடைசியாக இரண்டு படங்களில் நடித்தார். அதன் பிறகு சினிமாவை விட்டு ஒதுங்கினார். இவர் கர்நாடக சங்கீத பாடகி.
நல்ல டான்சரும் கூட சென்னை தியாகராய நகரில் தன் பெயரிலேயே ராஜகுமாரி என்ற தியேட்டரை கட்டினார். ராஜகுமாரியின் சொந்த ஊர் தஞ்சாவூர். பழம்பெரும் டைரக்டர் டி.ஆர்.ராமண்ணாவின் தங்கை திருமணம் செய்து கொள்ளாமல் வாழ்ந்த இவர் 1977 இல் தனது 77 ஆவது வயதில் மரணம் அடைந்தார்.

Wednesday, May 7, 2014

MGR in முதல் மனைவி மறைவு

ஜீர்ப்பமாக இருந்த தன் மனைவியை 7வது மாதத்திலேயே ஊருக்குப் தாய் வீட்டுக்கு கடிதம் போட்டு தங்கள் மகள் இப்போது 7 மாதமாக இருக்கிறாள். நீங்கள் வந்து முறை பிரகாரமாக அழைத்து செல்லுங்கள் என்று சொன்னவுடன் தன் மாமியார் வீட்டார் முறை பிரகாரம் செய்ய வேண்டிய முறைகளை செய்து தன் ஊருக்கு தன் மகளை அழைத்து சென்றார்கள். பிறகு ஒரு மாதம் கழித்து மாமனார் வீட்டிலிருந்து சத்திய தாய்க்கு ஒரு கடிதம் வந்தது.
உங்களது மருமகள் பார்க்கவி உடல் நலம் சரயில்லாமல் மிகவும் சிரமப்பட்டுக் கொண்டு இருக்கிறாள். தன் கணவரை பார்க்க வேண்டும் கடிதம் போட்டு என் கணவரை உடனடியாக வரச்சொல்லுங்க என்று சொல்கிறார். எனவே உடனடியாக தாங்கள் உங்கள் மகனை அழைத்து கொண்டு வரவேண்டும்.
இந்த கடிதத்தை பார்த்த சத்திய தாய் தன் மூத்த மருமகளுடன் ஆலோசனை நடத்தி தன் மகன்கள் படபிடிப்புக்கு சென்றவர்கள் வீட்டிற்கு வந்தவுடனே ஊருக்கு புறப்படலாம் என்று முடிவுடன் இருந்தார்கள்.
அன்று இரவு 7 மணிக்கு வீட்டிற்கு வந்த தன் மகன்களிடம் இந்த கடிதத்தை காண்பித்து மகனை என்னுடன் உடனே புறப்படு என்று எம். ஜி. ஆரிடம் சொல்லுகிறார். அவர் படித்து பார்த்துவிட்டு அம்மா நாங்கள் தினமும் இரண்டு, மூன்று நாட்களாக தொடர்ந்து சூட்டிங் போய் கொண்டு இருக்கிறோம்.
உடனே நீ ஊருக்குப் போகவேண்டும் புறப்படு என்றால் எப்படி தொடர்ந்து ஒரே படத்தில் படப்பிடிப்பு நடந்து கொண்டு இருக்கிறது. நாங்கள் காலை 7 மணிக்கு படப்பிடிப்புக்கு போக வேண்டும். இந்த படப்பிடிப்பு இன்னும் இரண்டு மூன்று நாட்களில் முடிந்து விடும் பிறகு நான் வருகிறேன் என்று உடனே சொல்லி அண்ணே உடனே அம்மாவை ரயில் ஏற்றி அனுப்பிவிட்டு வாங்க என்ற சொன்ன உடனே சத்தியதாய் ஏதும் மறுப்பு சொல்ல முடியாமல் புறப்பட்டு விட்டார். கடிதத்தை படித்த எம். ஜி. ஆருக்கு இது ஒரு பெரிய வேதனையாக இருந்தது.
இருந்தாலும் வாழ்க்கையில் தான் எடுத்த இலட்சியத்தை மனதில் மிகவும் உறுதியுடன் வைத்து கொண்டார். இங்கு இருந்து பாலக்காடு சென்ற தன் தாய் பாலக்காட்டிலிருந்து 20 மைல் உள்ள மருதூர் என்ற ஒரு சிறிய ஊர் அங்கு செல்ல வேண்டும். இங்கிருந்து இரவு 9 மணிக்கு ரயிலில் புறப்படடவர். அடுத்த நாள் மதியம் சம்பந்தி வீட்டிற்கு போய்சேருகிறார். அந்த நேரம் தன் மருமகளுக்கு இன்னும் மிக மோசமான நிலையில் வைத்தியர்கள் வைத்தியம் செய்து பார்த்து கொண்டிருக்கிறார்கள்.
இந்த நிலையில் வீட்டிற்குள் நுழைந்த சத்தியதாயை கண்டவுடன் உங்கள் மகன் வரவில்லையா என்ற ஆச்சரியத்தோடு கேட்கிறார்கள். உடனே சத்தியதாய் மகன் நாளைக்கு புறப்படுவார் என்று சொல்லிவிட்டு தன் மருமகளை பார்த்து என்ன செய்கிறது உனக்கு என்று ஆவலோடு மருமகள் கன்னத்தை தொட்டு பார்த்து கேட்கிறார். உடனே மருமகள் அறையும் குறையுமாக அந்த பக்கம் இந்த பக்கம் பார்த்து விடடு ஏக்கத்துடன் தன் கணவர் வரவில்லையா என்று மாமியாரை மீண்டும் பார்த்து கேட்கிறார்.
உடனே அவர் நாளைக்கு வருவான் என்று ஆறுதல் சொல்கிறர். அதை கேடடவுடன் மருமகள் தங்கமணியின் முகத்தில் ஆறுதல் இல்லை. பார்கவி என்ற தன் மருமகளுக்கு தங்கமணி என்ற பெயர் எப்படி வந்தது. சத்திய தாய்க்கு பிறந்த குழந்தைகளில் மூத்த மகளின் பெயர் தங்கமணி, அந்த குழந்தை மிகவும் அழகாக இருப்பார். அந்த இளைய மருமகளின் ஜாடை இருந்ததால் தன் மகளின் ஞாபகமாக தங்கமணி என்று வீட்டில் எல்லோரும் அழைக்க ஆரம்பித்தார்கள்.
இப்போ தங்கமணிக்கு திடீர் என்று பிரசவ வேதனை ஏற்பட்டது. மூன்று நாட்களாக காய்ச்சலில் படுத்து இருந்த தங்கமணிக்கு திடீர் என்று பிரசவ வலி வந்தது. உடனே வைத்தியரை அழைத்து பார்க்கும்போது சற்று நேரத்தில் குழந்தை பிறந்துவிடும் என்று சொல்லி வைத்தியத்தை பார்க்கிறார்கள். இதை பார்த்து கொண்டு இருந்த சத்திய தாய்க்கு மிகவும் கவலை அதிகமாகிவிட்டது.
இருந்தாலும் சத்தியதாயின் மன தைரியத்தை விடாமல் நடப்பது நடக்கட்டும் என்று எல்லாம் அந்த மகாகாளி கிருபை என்று நினைத்து கொண்டு 5 பிள்ளைகளை பெற்ற இந்த தாய் தன் மருமகளுடைய பிரசவ வேதனையால் துடித்து கொண்டு இருக்கும் தன் இளைய மருமகளின் நிலைமை என்ன ஆகும் என்பதை கூர்மையாக கவனிக்கிறார்.
இந்நிலையில் சிறிது நேரம் கழித்து வைத்திய ருடைய விடா முயற்சியால், குழந்தையை பிறக்க செய்கிறார்கள். ஆனால் குழந்தை உயிருடன் இல்லை. எப்படியோ குழந்தை வயிற்றுக்குள்ளே இருந்து வெளியே வந்தது போதும் என்ற நிலை இருந்தது.
எல்லோரும் குழந்தை ஆண் குழந்தை என்று தெரிந்து கொண்டார்கள். அடுத்து தங்கமணியுடைய நிலை எப்படி இருக்கிறது என்று கவனிக்கும் போது முன்பு இருந்ததை விட மிக மோசமாக இருப்பதை வைத்தியர்கள் அறிந்தார்கள். தங்கமணிக்கு மூளை காய்ச்சல் அதிகமாகிவிடடது. வைத்தியர்களும் தங்கமணி உடைய தாய், தந்தையர்களும், சம்பந்தி அவர்களும் பக்கத்தில் உள்ள கொல்லம் கோடு என்ற ஊரில் மருத்துவமனை இருக்கிறது. மருத்துவமனைக்கு கொண்டு போக ஏற்பாடு செய்தார்கள். இது சத்திய தாயின் தூண்டுதலின் பெயரில் நடந்தது. அப்படி இருந்தும் தங்கமணி நாடி துடிப்பு மிக மோசமாக இருப்பதை வைத்தியர் அறிந்தார். இதற்கிடையில் தங்கமணியை அந்த காலத்தில் கார். டாக்சி இந்த ஊரில் இல்லை.
ஆஸ்பத்திரிக்கு மாட்டு வண்டியின் மூலமாக கொண்டு போக ஏற்பாடுகளும் ஆக்விட்டது. வைத்தியர் சத்தியதாயை தனியாக அழைத்து இன்னும் ஒரு மணி நேரம் கழித்து ஆஸ்பத்திரிக்கு கொண்டு போகலாம் என்று சொல்கிறார். இதற்கிடையில் தன் மகன்களுக்கு இந்த செய்தியை எப்படியாவது மிக மோசமாக இருக்கிறாள். உடனடியாக புறப்பட்டு வா என தந்தி மூலமாக தெரியப்படுத்த வேண்டும் என்று வேண்டிய ஏற்பாடுகளை உடனடியாக செய்தார்.
தந்தி கொடுக்க வேண்டும் என்றால் பாலகாட்டிற்குத் தான் செல்ல வேண்டும். சென்னைக்கு தந்தி கொடுக்க சென்றவர் திரும்பி வருவதற்குள் எம். ஜி. ஆருடைய மனைவி பார்கவி என்ற தங்கமணி இறந்துவிட்டார். அடுத்த நாள் சென்னையில் தந்தியை பார்த்த எம். ஜி. ஆர். எம். ஜி. சியுடன் உடனே புறப்படுகிறார்கள். புறப்பட்டு தங்கமணியுடைய ஊருக்கு வருகிறார்கள். மூன்றாவது நாள் தன் மனைவி தங்கமணி வீட்டிற்கு அண்ணனும் தம்பியும் வருகிறார்கள். தங்கமணி இறந்து போன இரண்டாவது நாள் வருகிறார்கள், தங்கமணி வீடு மிக அமைதியாக இருக்கிறது.
எம். ஜி. ஆரும், எம். ஜி. சியும் பார்த்தவுடன் அங்கு இருந்த அனைவரும் தன் தாயும் சேர்ந்து தன் மகன் எம். ஜி. ஆரை கட்டி பிடித்து ஓ... என்று கதறி அழுகிறாள். இதை அறிந்த எம். ஜி. ஆரும் என் தங்ககுட்டிக்கு என்னவாயிற்று எங்கே என் தங்ககுட்டி என்று உடனே வீட்டிற்குள் செல்கிறார். தங்ககுட்டி இறந்து விட்டாள்.
நீங்கள் எல்லோரும் சேர்ந்து அவளை கொன்றுவிட்டீர்கள். ஓ என்று கத்துகிறார். இதை பார்த்த அந்த கிராமத்தில் உள்ள எல்லோரும் வீட்டிற்கு வந்து ஆறுதல் சொன்னார்கள். தங்கமணி எப்படி இறந்தார் என்ற விளக்கத்தையும் சொன்னார்கள். எல்லாவற்றையும் கேட்டு அறிந்த எம். ஜி. ஆர். மெளனம் அடைந்து வாய் திறந்து பேச முடியாத அளவிற்கு துக்கம் கொண்ட எம். ஜி. ஆர். யாரிடமும் பேசாமல் மெளனமாக அமர்ந்து விடுகிறார்.
சிறிது நேரம் கழித்து தன் மகன் கண்ணீரும, கவலையுமாக அமர்ந்து இருப்பதை பார்த்து தன் மகனிடம் வந்து மகனே, நீ அழாதே என்று ஆறுதல் சொல்கிறார். இதை கேட்ட மகன் தாயை பார்த்து எனக்கு இப்போ கல்யாணம் வேண்டாம் என்று சொன்னேன். அதை கேட்காமல் உன் இஷ்டத்திற்கு எனக்கு கட்டாயமாக கல்யாணம் செய்து வைத்து ஒரு வருடத்தில் அந்த அன்பு மனைவியை இழந்து என்னை இப்படி ஒரு விதவையாக்கிவிட்டாயே என்று தாயிடம் உங்களுடைய சமாதானம் தேவையில்லை என்று சொல்கிறார்.
இந்த வார்த்தைகளை கேட்ட தாய் வாய் அடைத்து போய்விட்டார். இதை பார்த்த எம். ஜி. சி. இப்போது தாயிடம் எதுவும் பேச கூடாது என்று மெளனமாக இருந்து கொண்டார். கொஞ்ச நேரத்தில் எம். ஜி. ஆர். தன் அண்ணனை அழைத்து அண்ணே அம்மாவிட்ட செலவுக்கு பணத்தை கொடுத்து எல்லா விஷயத்தையும் முடித்துவிட்டு சென்னைக்கு வர சொல்லங்கள் நாம இப்போ புறப்படுவோம்.
தன் மகளை பறிகொடுத்த மாமனாரும மாமியாரும் மற்றும் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் எல்லோரும் எம். ஜி. ஆரை பார்த்து என்னய்யா வந்தவுடன் புறப்படுகிaங்க உடனே எம். ஜி. ஆர். நான் என் தங்ககுட்டியை கல்யாணம் செய்து கொள்ளும் போது இந்த ஊருக்கு வந்தவன் அதற்கு பிறகு எனது தங்ககுட்டியை இறந்து போன பிறகு வந்து இந்த வீட்டில் இருக்க எனக்கு மனம் இல்லை என்று சொல்லிவிட்டு வாங்க அண்ணே போகலாம் என்று புறப்படுகிறார்கள்.
சென்னைக்கு வந்த சேரும் வரை எம். ஜி. ஆர். ஒரு டம்ளர் தண்ணீர் கூட குடிக்கவில்லை. அடுத்த நாள் சென்னைக்கு வந்த பிறகு வெளியே எங்கேயும் செல்லாமல் வீட்டிலேயே படுத்துவிட்டார்.
இதற்கிடையில் எம். ஜி. சியுடைய மனைவி தன் கணவருடன் தங்கமணியின் வீட்டில் நடந்த விஷயங்களை கேட்டு அறிகிறார்கள். எம். ஜி. சி. தன் தம்பி உடைய வாழ்க்கை நிலையை நினைத்து வேதனை பட்டாலும் அடுத்து என்ன செய்யவேண்டும் என்ற யோசனையில் தானும் வீட்டுக்குள் இருக்காமல் தம்பிக்கு அடுத்து எந்த கம்பெனியில் என்ன சூட்டிங் இருக்கிறது என்பதை அறிந்து கொண்டு தம்பியின் நிலைமைகளை சொல்கிறார்.

தேசிய விருது பெற்ற சிவகுமாரின் மறுபக்கம்



சிவகுமார் நடித்த ‘மறுபக்கம்’ என்ற படத்துக்கு தேசிய விருது (தங்கத்தாமரை) கிடைத்தது. எழுத்தாளர் இந்திரா பார்த்தசாரதி எழுதிய குறுநாவல் ‘உச்சிவெயில்’ அதை ‘மறுபக்கம்’ என்ற பெயரில் டைரக்டர் கே.எஸ். சேதுமாதவன் படமாகத் தயாரித்தார்.
இந்தப் படத்துக்கு ‘தேசிய திரைப்பட வளர்ச்சிக் கழகம்’ நிதி உதவி செய்தது. மொத்தம் .14 லட்சம் செலவில் இப்படம் தயாரிக்கப்பட்டது.
வெம்பு அய்யர் என்ற வேடத்தில் சிவகுமார் நடித்திருந்தார் அவருடன் ராதா நடித்தார். 1991ல் வெளிவந்த இப்படத்துக்கு அகில இந்திய ரீதியில், சிறந்த படம் என்பதற்கான தேசிய விருது (தங்கத்தாமரை) கிடைத்து.
பிரபலமான மூத்த கலைஞர்களுடன் சேர்ந்து நடிப்பதை 1974 முதல் சிவகுமார் தவிர்த்து வந்தார். கதாநாயகனாக நடிப்பதில் மட்டும் கவனம் செலுத்தினார்.
சிவாஜிகணேசன் நடிக்க,பாரதிராஜா இயக்கிய ‘பசும்பொன்’ படத்தில் நடிக்க , 1995ல் அழைப்பு வந்தது. பாரதிராஜாவின் டைரக்ஷனில் நடிக்க வேண்டும் என்ற ஆவல், சிவகுமாருக்கு நீண்ட காலமாக இருந்தது.
எனவே, தனது ‘விரதத்தை முடித்துக்கொண்டு, 21 ஆண்டு இடைவெளிக்குப் பிறகு சிவாஜியுடன் இணைந்து நடித்தார். சிவகுமார் ‘பசும்பொன்’ படத்தைப் பற்றி சிவகுமாரின் கருத்து
‘பாரதிராஜாவுடன் நான் பணியாற்றிய ஒரே படம் இது. செதுக்கி செதுக்கி, இழைத்து இழைத்து காட்சிகளைப் படமாக்கினார்.
எங்கோ ஓரிடத்தில் நடந்த தவறினால் ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பைப் பெற படம் தவறிவிட்டது. எனினும், பாரதிராஜாவின் மிகச்சிறந்த படைப்புக்களில் பசும் பொன்னும் ஒன்று.
ராதிகாவின் கதாபாத்திரம் “மாஸ்டர் பீஸ்” வயதுக்கு மீறிய கதாபாத்திரத்தில் வாழ்ந்து காட்டினார் அவர்.
திரைக்கதையை உருவாக்க சுமார் 6 முதல் 8 மாதங்கள் வரை உழைத்து, அதன்பின் அதை நண்பர்களிடம் படித்துக்காட்டி, அதை மேம்படுத்தி, அதற்கு பிறகுதான் படப்பிடிப்புக்குச் செல்வார். கதாசிரியர், இயக்குனர், தயாரிப்பாளரான நண்பர் எம். பாஸ்கர் தீர்ப்புகள் திருத்தப்படலாம், பவுர்ணமி அலைகள், தண்டிக்கப்பட்ட நியாயங்கள் ஆகிய படங்கள் இவர் இயக்கத்தில் நான் நடித்தவை.
இவ்வாறு சிவகுமார் கூறினார்.
சினிமாவில் தந்தையும், மகனும் ஒரே படத்தில் நடிப்பது விசேஷமானது.
இந்தி நடிகர் ராஜ்கபூரின் குடும்பத்தில் இப்படி நடந்துள்ளது. தமிழ்நாட்டில் சிவாஜிகணேசனும், அவர் மகன் பிரபுவும் சேர்ந்து நடித்துள்ளனர்.
22.9.2000ல் வெளிவந்த ‘உயிரிலே கலந்தது’ என்ற படத்தில் சிவகுமாரும், சூர்யாவும் சேர்ந்து நடித்தனர். இதில் சூர்யாவுக்கு ஜோடி ஜோதிகா.
1997ல் வெளிவந்த “காதலுக்கு மரியாதை” படத்தில் இளம் நடிகர் விஜய்க்கு தந்தையாக நடித்தார். சிவகுமார்.
இந்தப்படத்தில் இந்து மதத்தைச்சேர்ந்த விஜய்யும் கிறிஸ்துவ மதத்தைச் சேர்ந்த ஷாலினியும் காதலிப்பார்கள். காதலுக்கு மதம் தடையாக இருந்தாலும், இருவரும் பெற்றோர் மீது கொண்ட பாசத்தின் காரணமாக, காதல் வெற்றி பெறும். இந்தப் படத்தில் நடித்தது பற்றி சிவகுமார் கூறியதாவது:- ‘காதல் இயற்கையானது தவிர்க்க முடியாதது மனித இனம் தோன்றிய காலம் தொட்டு நிகழ்வது.
ஆனால், 25 வயது வரை பெற்று வளர்த்து ஆளாக்கி வாழ்க்கையை கொடுத்த பெற்றோரை உதாசீனப்படுத்தி விட்டு புது உறவுடன் ஓடிப்போகலாமா? அது தவறு. போராடி, பெற்றோர் சம்மதத்தை பெற்று வாழ்க்கையில் ஒன்று சேருங்கள் என்ற உயர்ந்த படிப்பினையைச் சொன்ன படம் ‘காதலுக்கு மரியாதை’
நானும், ஸ்ரீ வித்யாவும் விஜய்க்கு பெற்றோர்களாக நடித்தோம்.
பாசில் உருவாக்கிய மிகச்சிறந்த படங்களில் இந்தப்படமும் ஒன்று இவ்வாறு கூறினார் சிவகுமார். திரை உலக அனுபவங்கள் பற்றி அவர் மேலும் கூறியதாவது ; ‘நான் நடித்த மொத்த படங்கள் 193, 152 தயாரிப்பாளர்களுடனும், 98 டைரக்டர்களுடனும் பணியாற்றியுள்ளேன். என்னுடன் நடித்த கதாநாயகிகள் 87 பேர் எனக்குப் பிறகு திரைப்படங்களில் அறிமுகமாகி, எனக்கு ஜோடியாக அதிகபடங்களில் நடித்தவர்கள் லட்சுமி, ஜெயசித்ரா. ஸ்ரீபிரியா, சுஜாதா, சரிதா, அம்பிகா, ராதிகா ஆகியோர்.
மூன்று நான்கு படங்களில் இணையாக நடித்தவர்கள் ஸ்ரீவித்யா, ஜெயசுதா, ஸ்ரீதேவி, ராதா, சுஹாசினி ஆகியோர். கதாநாயகியாக வளர்ந்து கொண்டிருந்த கட்டத்தில் ‘கவிக்குயில்’ , ‘சாய்ந்தாடம்மா சாய்ந்தாடு’, ‘மச்சானைப் பார்த்தீங்களா’ என்ற மூன்று படங்களில் ஸ்ரீதேவி என்னுடன் இணைந்து நடித்தார். துரதிர்ஷ்டவசமாக மூன்றுமே வெற்றிபெறத் தவறிவிட்டன.
என்னுடன் அதிக படங்களில் கதாநாயகியாக நடித்தவர் லட்சுமி. மிகுந்த தைரியசாலி. சோதனைகளைச் சந்திக்க நேர்ந்தாலும், அவற்றால் துவண்டு விடாமல், தன் நடிப்பாற்றலைக் கொண்டு, வெற்றிகரமாக வாழ்ந்து காட்டுபவர். புத்தகம் படிக்கும் ஆர்வம் உள்ளவர்.
‘சில நேரங்களில் சில மனிதர்கள்’ படத்தில் அவர் ஏற்ற வேடம், அவரது அன்றைய வயதுக்கும், அனுபவத்துக்கும் மீறிய ஒன்று ரொம்பவும் ‘மெச்சூர்டாக’ அந்தப் பாத்தித்தில் நடித்து, ‘ஊர்வசி’ விருது வாங்கினார். தமிழ்த்திரை உலகுக்கு அறிமுகம் ஆகும்போதே சுஜாதாவின் தோற்றத்தில் ‘மெச்சூரிட்டி” இருந்தது. அதனால், குடும்பத் தலைவி, வக்கீல், டாக்டர், பழி வாங்கத் துடிக்கும் நடுத்தரப் வர்க்கத்துப்பெண் என்று குணச்சித்திர வேடங்கள் அவருக்கு ரொம்பவும் கை கொடுத்தன. உணர்ச்சிகரமான கட்டங்களில், நீண்ட தமிழ் வசனங்களை சுத்தமான உச்சரிப்புடன் பொரிந்து தள்ளுவதில் வல்லவர்.
சரிதா ரொம்பவும் திறமை சாலியான நடிகை. அவருடைய கண்களே ஆயிரம் கதைகள் பேசும்’
இவ்வாறு சிவகுமார் கூறினார்.