Wednesday, July 4, 2012


 


குழந்தையைக் கவனித்துக் கொண்டே சினிமாவில் நடிக்கும் லாரா தத்தா!


தமிழ் இந்தி, தெலுங்கு என ஒரே நேரத்தில் மூன்று மொழிகளில் தயாராகும் டேவிட் திரைப்படத்தில் நடிக்க லாராதத்தா ஒப்பந்தமாகியுள்ளார். 13 ஆண்டுகளுக்குப் பின்னர் அவர் நடிக்கும் படம் என்பதால் குழந்தையை கவனித்துக் கொண்டே ஓய்வு நேரத்தில் நடித்துக் கொடுக்கிறேன் என்று கூறியுள்ளார்.
தமிழ், இந்தி, தெலுங்கு என 3 மொழிகளில் உருவாகும் ‘டேவிட்’ என்ற படத்தை பிஜாய் நம்பியார் இயக்குகிறார். விக்ரம், ஜீவா இணைந்து நடிக்கின்றனர். இப்படத்தில் முக்கிய வேடமொன்றில் நடிக்க லாரா தத்தாவிடம் கால்iட் கேட்டார் இயக்குநர்.
கடந்த ஜனவரி மாதம்தான் லாரா தத்தாவுக்கு குழந்தை பிறந்தது. குழந்தையை கவனித்துக் கொள்ளும் வேலை அதிகமாக இருப்பதால் பட வாய்ப்பை ஏற்கத் தயங்கினார். ‘குழந்தையை கவனித்த நேரம் போக மீது நேரத்தில் கால்iட் தருகிறேன். இதை ஏற்றுக் கொண்டால் நடிக்க தயார்’ என்று லாரா கூறினார். அதை இயக்குநர் ஏற்றுக் கொண்டார்.
பொலிவுட் ஹீரோயின் லாரா தத்தா ‘அரசாட்சி’ என்ற படத்தில் தமிழில் நடித்தார். 13 வருடத்துக்கு பிறகு மீண்டும் தமிழ் படத்தில் நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இது பற்றி கருத்து தெரிவித்துள்ள இயக்குநர் பிஜாய் நம்பியார், இது லாராவுக்கு சிறப்பான வேடமாக அமையும் சமீபத்தில் அவரை சந்தித்து இது குறித்து பேசினேன். குறிப்பிட்ட கதாபாத்திரத்தில் நீங்கள் நடித்தால்தான் பொருத்தமாக இருக்கும் என்றேன். அப்போது குழந்தையை கவனித்துக் கொள்ளும் வேலை இருப்பதால் நடிக்கத் தயங்கினார். பின்னர் அவர் ஓய்வு நேரத்தில் நடித்துக் கொடுக்க தயார் என்றார் அதை ஏற்றுக் கொண்டேன்.
நாசர், ரோகிணி ஹட்டாங்காடி, தபு, இஷா ஷர்வானி உள்ளிட்டோரும் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர் என்றார் இயக்குநர்.

ஓவியாவுக்கு அதுக்கு நேரமில்லையாம்


தன்னை பற்றி வரும் காதல் கிசுகிசுக்களை நம்ப வேண்டாம் என்றும், தான் யாரையும் காதலிக்கவில்லை என்றும் நடிகை ஓவியா கூறியுள்ளார். ‘களவானி’ படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை ஓவியா. தொடர்ந்து ‘மன்மதன்’, ‘அம்பு’, ‘முத்துக்கு முத்தாக’, ‘மெரினா’, ‘கலகலப்பு’ போன்ற படங்களில் நடித்துள்ளார். இது தவிர தமிழில் ‘சில்லுன்னு ஒரு சந்திப்பு’ உள்ளிட்ட படங்களிலும் தமிழ் தவிர வேறு மொழியிலும் பிஸியாக நடித்து வருகிறார்.
கேரளாவைச் சேர்ந்தவரான இவருக்கும் அங்குள்ள தொழில் அதிபர் ஒருவருக்கும் காதல் என்றும் அவரை ஓவியா திருமணம் செய்ய இருப்பதாகவும் கிசுகிசுக்கள் பரவின. ஆனால் இதனை ஓவியா முழுமையாக மறுத்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியுள்ளதாவது, சினிமாவில் இப்போது தான் படிப்படியாக முன்னேறி ஒரு நல்ல நிலைக்கு வந்து கொண்டு இருக்கிறேன். அதற்குள் நான் காதல் வயப்பட்டுள்ளேன் என்றெல்லாம் செய்திகள் வருகின்றன.
நான் யாரையும் காதலிக்கவில்லை. அதற்கான நேரமும் என்னிடம் இல்லை. அவ்வளவு பிஸியாக சினிமாவில் நடித்து கொண்டு இருக்கிறேன். இப்போதைக்கு எனது சிந்தனையெல்லாம் சினிமா பற்றியது தான். திருமணத்தை பற்றி யோசித்து கூட பார்த்ததில்லை என்று கூறியுள்ளார்.

 

 


நல்ல வாய்ப்புகளை நழுவ விடும் நடிகை

கொலிவுட்டில் ஒரு பெரிய நடிகையாக சமந்தா வலம் வருவார் என்று எதிர்பார்த்தால், இப்போது அது நடக்காது போல தெரிகிறது. தேடி வரும் நல்ல வாய்ப்புகளையெல்லாம் தக்க வைத்துக் கொள்ள முடியாத நடிகையாகி விட்டார்.
சமீபத்தில் மணிரத்தினத்தின் கடல் படத்திலிருந்து விலகிய சமந்தா, இப்போது ஷங்கர் இயக்கத்தில், விக்ரம் நடிப்பில் உருவாக உள்ள ஐ படத்திலிருந்தும் விலகப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது.
சமந்தாவுக்கு சருமத்தில் சில பிரச்சினைகள் இருப்பதாகவும், அதற்காக அவர் சிகிச்சை மேற்கொள்ள இருப்பதாகவும், சிகிச்சைக்கு பின்னர் 3 மாத காலத்திற்கு சூரிய வெளிச்சத்திலோ, படப்பிடிப்புக்கு பயன்படுத்தப்படும் பெரிய விளக்குகள் அருகிலோ நிற்க கூடாது என்று டொக்டர்கள் தெரிவித்து இருப்பதாலேயே ஐ படத்தில் இருந்து விலகியதாக கூறப்படுகிறது.
இதனிடையே சமந்தாவுக்கு பதில் மதராசப்பட்டினம் புகழ் எமி ஜாக்சனை நடிக்க வைக்க ஷங்கர் ஆலோசித்து வருவதாகவும், மேலும் எமியுடன் இன்னொரு நடிகையாக பிரபல பொலிவுட் நடிகை ஒருவரையும் நடிக்க வைக்க தீவிர முயற்சி மேற்கொண்டு வருவதராகவும் கூறப்படுகிறது.

 

 

 


600 பேரில் தெரிவான அதிதி


கொஞ்சம் காபி, கொஞ்சம் காதல் திரைப்படத்தின் கதாநாயகியாக நடித்து வரும் அதிதி டில்லி மொடல் அழகியாம். இந்த திரைப்படத்திற்காக 600 பேரை நடிக்க வைத்து அதில் சிறப்பாக நடித்த அதிதியை தேர்வு செய்திருக்கிறாராம் இயக்குநர் வெங்கி.
‘கொஞ்சம் காபி கொஞ்சம் காதல்’ படம் ஐன்ஸ்டீன் தத்துவத்தை மையமாக வைத்து உருவாகிறது. இது பற்றி இயக்குநர் வெங்கி கூறியதாவது, ‘பம்பாய்’ படத்தில் அரவிந் சாமியின் மகன்களாக வரும் இரண்டு சிறுவர்களில் ஒருவரான ஹிருதய் ராஜ் இப்படத்தில் ஹீரோவாக நடிக்கிறார். டில்லி மொடல் அழகி அதிதி செங்கப்பா ஹீரோயின் இப்படத்துக்காக 600 பேரை ஒடிசன் செய்ததில் தேர்வானவர்தான் அதிதி.
அறிவியல் அறிஞர் ஐன்ஸ்டீன் பல்வேறு தத்துவங்களையும் கூறியிருக்கிறார். வாழ்க்கையில் எதெல்லாம் நடக்கிறதோ அவை முன்கூட்டியே நிச்சயிக்கப்பட்டது என்று குறிப்பிட்டிருக்கிறார். இந்த கருத்து குறித்து பல்வேறு சர்ச்சைகள் இன்னும் நிலவுகிறது.
இந்த கருத்தை மையமாக வைத்துத்தான் கொஞ்சம் காபி கொஞ்சம் காதல் படத்தின் ஸ்கிரிப்ட் உருவாக்கி இருக்கிறேன். இதில் காதலையும் சேர்த்திருக்கிறேன். வழக்கமாக தமிழில் முக்கோண காதல் கதை, ஆக்ஷ்ன் கதை என்றுதான் படங்கள் வருகிறது. அது போல் இல்லாமல் இது வித்தியாசமான அனுபவம் தரும் படமாக இருக்கும். இதில் வரும் சம்பவங்கள் நிஜவாழ்க்கையிலிருந்து எடுக்கப்பட்டது என்றார் வெங்கி.

திருமணமாகி குழந்தை பெற்ற பின் சினிமாவில் அறிமுகமாகி ஏராளமான படங்களில் நாயகியாக நடித்தவர்

பதினைந்து ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வாய்ப்பு

பழம்பெரும் நடிகை செளகார் ஜானகி 15 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் சினிமாவில் நடிக்கிறார். நாடக துறையில் ஈடுபட்டு வந்த செளகார் ஜனாகி, 1949ம் ஆண்டு தெலுங்கு படம் மூலம் திரையுலகில் நுழைந்தார். அதையடடுத்து தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி ஆகிய மொழிகளில் அனைத்து முன்னணி நடிகர்களுடனும் 385 படங்களில் நடித்துள்ளார்.
திருமணமான நடிகைகளுக்கு சினிமா வாய்ப்புக்கள் கிடைக்காது. அப்படியே கிடைத்தாலும் கதாநாயகி வாய்ப்பு கிடைக்காது என்ற சூழ்நிலையில் திருமணமாகி குழந்தை பெற்ற பிறகே சினிமாவில் அறிமுகமாகி ஏராளமான படங்களில் கதாநாயகியாக நடித்த பெருமைக்குரியவர் செளகார் ஜானகி.
இந்நிலையில் ராஜ்மோகன் இயக்கத்தில் கிருஷ்ணா நடிக்கும் வானவராயன் வல்லவராயன் என்ற படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார் செளகார். மீண்டும் நடிக்க வருவது குறித்து அவர் கூறியதாவது; 15 வருடங்களுக்கு பிறகு நடிப்பது அதுவும் தமிழ்ப் படத்தில் நடிப்பது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.
இந்த இடைப்பட்ட காலத்தில் நான் நடிக்க மாட்டேன் என்று கூறியதில்லை, என்னை யாரும் நடிக்க அழைக்கவில்லை. அது குறித்து நான் வருத்தப் படவும் இல்லை. இயக்குனர் ராஜ்மோகன் கூறிய கதையில் என் கதாபாத்திரத்துக்கு அதிக முக்கியத்துவம் இருந்தது. இதில் அலிபாபா, கற்றது களவு, கழுகு படங்களில் நடித்த கிருஷ்ணா கதாநாயகனாக நடிக்கிறார்.
மீண்டும் நடிக்க வர காரணமாக இருந்த இயக்குனர் ராஜ்மோகன், திரைப்பட பத்திரிகை தொடர்பாளர் மெளனம் ரவி, தயாரிப்பாளர் ராஜபாண்டியன் ஆகியோருக்கு நன்றி. இதற்கு முன் நான் கடைசியாக நடித்த படம் தொடரும்.
அஜித், தேவயானி நடித்த படம் தொடரும். என்ற டைட்டிலில் நடித்து விட்டு நடிப்பை தொடர முடியாமல் போய் விட்டது. என்னுடைய 62 ஆண்டு கால சினிமா அனுபவத்தில் எத்தனையோ கலைஞர்களுடன் பழகியிருக்கிறேன். ஒவ்வொருவரும் ஒரு வகையில் திறமையானவர்கள். இப்போது ரஜினிக்கு இருக்கும் மக்கள் செல்வாக்கு பிரமிக்கவைக்கிறது.
கமல்ஹாசனின் திறமை வியக்க வைக்கிறது. ஹேராம் படத்தில் என்னை நடிக்க அழைத்திருந்தார் கமல், பார்த்தால் பசி தீரும் படத்தில் குழந்தையாக நடித்த கமல் என்னை வைத்து இயக்கும் அளவுக்கு வளர்ந்ததை நினைத்து மிகவும் பெருமையாக இருந்தது. அந்தப் படத்தில் ஒரே ஒரு காட்சியில் மட்டுமே நடித்தேன்.
அதற்குள் எனக்கு இதய அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய சூழ்நிலை. மேற்கொண்டு நடிக்க முடியாமல் போய் விட்டது. ஆனாலும் எனக்கு பேசிய தொகையை மொத்தமாக ஒரே செக்கில் கமல் அனுப்பி வைத்தார். அந்த நேரத்தில் அந்த தொகைதான் என்னுடைய மருத்துவ சிகிச்சைக்கு உதவியது. அதை எப்போதும் மறக்க மாட்டேன்.
வானவராயன் வல்லவராயன் படத்தின் மூலம் என்னுடைய இரண்டாவது இன்னிங்சை தொடங்கி உள்ளேன். கோபி செட்டிபாளையத்தில் படப்பிடிப்பில் கலந்து கொள்கிறேன். இப்போது எனக்கு வயது 81. ஆனாலும் மனதளவில் இன்னும் இளமையாக உணருவதால் ஆரோக்கியத் துடன் இருக்கிறேன். தொடர்ந்து படங்களில் நடிப்பேன் என்றார் செளகார் ஜானகி.

 

 

 


முதன் முதலில் கெமரா மூலம் கதை சொல்லும் உத்தியை கையாண்டவர் ஸ்ரீதர்


டில்லியில் பட விழா ஒன்றில் கலந்து கொண்ட சரோஜாதேவிக்கு, பிரதமர் நேரு பரிசு வழங்கினார். அப்போது, “நீ பிரகாசமான நட்சத்திரம், மேலும் புகழ் பெற வாழ்த்துக்கள்” என்று கூறினார்.
தமிழ்ப்பட உலகில் மாபெரும் மாற்றத்துக்கு வழிவகுத்த ஸ்ரீதரின் “கல்யாணப் பரிசு” படத்தில் அற்புதமாக நடித்து, நட்சத்திர அந்தஸ்து பெற்றவர் சரோஜாதேவி,
அதுவரை கதை - வசன ஆசிரியராக மட்டுமே இருந்த ஸ்ரீதர், இப்படத்தின் மூலம் டைரக்டரானார். கெமரா மூலம் கதை சொல்லும் உத்தியைக் கையாண்டு வெற்றி பெற்றார்.
பின்னணி பாடகர் ஏ.எம். ராஜா இப்படத்தில் தான் இசை அமைப்பாளராக அறிமுகம் ஆனார். பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரத்தின் எல்லாப் பாடல்களும் அருமையாக அமைந்தன. கே.ஏ. தங்கவேலு - எம். சரோஜா கொமெடி மிகப்பிரமாதமாக இருந்தது. இவற்றுடன் ஸ்ரீதர் படைத்த பாஸ்கர். வசந்தி என்ற கதாபாத்திரங்களுக்கு ஜெமினி கணேசனும், சரோஜாதேவியும் உயிர் கொடுத்தனர்.
9-4-1959ல் வெளிவந்த “கல்யாணப் பரிசு” தமிழ்ப்பட வரலாற்றில் ஒரு மைல் கல்லாக அமைந்தது. சரோஜாதேவி நடித்த மிகச் சிறந்த படங்களில் ஒன்று “கல்யாணப் பரிசு”, தான் வெறும் அழகுப் பதுமை அல்ல, மிகச்சிறந்த நடிகை என்பதை, இப்படத்தின் மூலம் அவர் நிரூபித்தார்.

வாடிக்கை மறந்தது ஏனோ

பாடல் காட்சிக்காகவே சைக்கிள் ஓட்ட கற்றுக் கொண்டவர்


“கல்யாண பரிசு” படத்தில் நடித்த அனுபவம் பற்றி சரோஜாதேவி கூறியிருப்பதாவது “கல்யாணப்பரிசு” படத்தில் நானும் ஜெமினியும் நடித்த “வாடிக்கை மறந்ததும் ஏனோ” என்ற பாடல் காட்சியில் நான் சைக்கிள் ஓட்ட வேண்டும். அதுவரை எனக்கு சைக்கிள் ஓட்டிய அனுபவம் இல்லை! இந்தப் பாடல் காட்சிக்காகவே, சைக்கிள் ஓட்ட கற்றுக் கொண்டேன்.
நான் கல்லூரிக்கு புறப்படும் போது, “அம்மா போயிட்டு வர்றேன்” என்று, மாடியில் இருக்கும் ஜெமினி கணேசனுக்கு கேட்கும் விதத்தில் இரண்டு முறை உரத்த குரலில் கூறிவிட்டுப் புறப்படுவேன்.
இந்தக் காட்சிக்கு கல்லூரி மாணவ- மாணவிகளிடையே பெரிய வரவேற்பு! கல்யாணப் பரிசு, புதுமையான- அருமையான படம் அதனால் பெரிய வெற்றி பெற்றது’. இவ்வாறு சரோஜாதேவி குறிப்பிட்டுள்ளார்.
கல்யாணப்பரிசு மூலம் பெரும் புகழ் பெற்ற சரோஜா தேவியை, ஏராளமான பட அதிபர்கள் ஏக காலத்தில் அணுகி, தங்கள் படத்தில் நடிக்க அழைத்தனர். எம்-ஜி.ஆர், சிவாஜிகணேசன், ஜெமினி கணேசன் ஆகியோருடன் ஒரே சமயத்தில் நடிக்கக் கூடிய வாய்ப்புகள் கிடைத்தன. தங்கள் படத்தில் சரோஜாதேவி நடித்தே தீர வேண்டும் என்று விரும்பிய சில பட அதிபர்கள், ஹீரோக்களுக்கு கொடுக்கும் சம்பளத்தைவிட அதிக சம்பளத்தை சரோஜாதேவிக்குக் கொடுக்க முன்வந்தனர்.
ஒரு காலகட்டத்தில், அன்றைய சூப்பர் ஸ்டார்களைவிட அதிக சம்பளம் பெற்ற ஒரே நடிகையாக சரோஜாதேவி விளங்கினார். இந்த சமயத்தில், ஜெமினியின் “இரும்புத்திரை” படத்தில் நடிக்க, சரோஜாதேவிக்கு அழைப்பு வந்தது. இதுபற்றி சரோஜாதேவி கூறியிருப்பதாவது, “ஜெமினி அதிபர் எஸ்.எஸ். வாசன் என் தாயாரை சந்தித்து தான் எடுக்கப் போகும் இரும்புத்திரை என்ற படத்தில் வைஜயந்திமாலாவுக்கு தங்கையாக நடிக்க என்னை ஒப்பந்தம் செய்ய வந்து இருப்பதாகக் கூறினார்.
அந்தப் படம் தமிழிலும், இந்தியிலும் தயாராக இருந்தது தமிழில் நடிகர் திலகம் சிவாஜி கணேசனும், இந்தியில் திலீப் குமாரும் ஹீரோ நடிகைகளில் மாற்றம் இல்லை. வைஜயந்தி மாலா, அவருடைய தாயார் வசுந்தராதேவி, நான் ஆகியோர் இரண்டு மொழிகளிலும் நடிக்க இருப்பதாக வாசன் கூறினார்.
ஜெமினி நிறுவனம் பெரிய நிறுவனம், வாசன் போன்றவர்கள் தங்கள் படத்தில் நடிக்க அழைப்பதே பெரிய விடயம். என்றாலும் எனக்குக் கொடுக்கப்பட்ட வேடம் (வைஜயந்தி மாலாவின் தங்கை) சிறிதாக இருந்தால், என்னை நடிக்க வைக்க என் தாயார் விரும்பவில்லை. இப்போதெல்லாம் ஒரு நடிகை ஒரு குறிப்பிட்ட வேடத்தில் நடிக்க மறுத்துவிட்டால், உடனே வேறு நடிகையை போட்டுவிடுவார்கள். ஆனால், இரும்புத்திரையில் நான்தான் அந்த வேடத்தில் நடிக்க வேண்டும்” என்பதில் வாசன் உறுதியாக இருந்தார்.
அந்தப் பாத்திரத்தின் சிறப்பை எடுத்துக் கூறினார். எனக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும் என்று சொன்னார். இதன் இந்திப் பதிப்பில் திலீப்குமார் நடிக்கிறார். அவருடன் நடிக்கும் வாய்ப்பு கிடைப்பதால், நீங்கள் அகில இந்திய புகழ் பெறுவீர்கள்” என்று எடுத்துக் கூறினார். இதனால், நான் நடிக்கச் சம்மதித்தேன். அவர் சொன்னபடியே, இரும்புத் திரையின் இந்திப் பதிப்பான “பைகாம்” படத்தின் மூலம் அகில இந்தியப் புகழ் பெற்றேன்” இவ்வாறு சரோஜாதேவி கூறியுள்ளார்.



 

தமிழ்த் திரையுலகில் மறக்க முடியாத குணசித்திர நடிகர் எஸ். வி. சுப்பையா









தமிழ்த்திரை உலகின் சிறந்த குணச்சித்திர நடிகர்களில் ஒருவரான எஸ். வி. சுப்பையா, சிவாஜிகணேசன் நடித்த ‘கப்பலோட்டிய தமிழன்’ படத்தில் பாரதியாராக மிகச் சிறப்பாக நடித்தார்.
எஸ்.வி. சுப்பையாவின் சொந்த ஊர் நெல்லை மாவட்டம் செங்கோட்டை ஆகும். கலை துறையில் ஆர்வம் கொண்ட எஸ். வி. சுப்பையா முதலில் டி. கே. எஸ். நாடகசபா, பிறகு சக்தி நாடகசபா ஆகியவற்றில் சேர்ந்து நாடகங்களில் நடித்தார்.
இதன் பலனாக சினிமா சான்ஸ் பெற்றார். 1952ல் சினிமாவில் சிறு சிறு வேடம் ஏற்று நடிக்கத் தொடங்கினார். எஸ். பாலசந்தர் பானுமதி நடித்த ‘ராணி’ படத்திலும் டி. ஆர். மகாலிங்கம் நடித்த ‘வேலைக்காரன்’ படத்திலும் குறிப்பிடத்தக்க வேடத்தில் நடித்தார்.
தெலுங்கில் மிக வெற்றிகரமாக ஓடிய ‘ரோஜலு மாராயி’ என்ற படம். ‘காலம் மாறிப்போச்சு’ என்ற பெயரில் தமிழில் தயாரிக்கப்பட்டது. ஜெமினிகணேசன்- அஞ்சலி தேவி ஜோடியாக நடித்த இப்படத்தில் முக்கியமான குணச்சித்திர வேடத்தில் எஸ். வி. சுப்பையா நடித்தார். சுப்பையா வாழ்க்கையில் திருப்புமுனை ஏற்படுத்திய படம்.
இதுதான் அவருடைய நடிப்பு மிகச் சிறப்பாக அமைந்திருந்தது. தொடர்ந்து குணச்சித்திர வேடங்களில் நடித்தார்.
அவர் நடித்த படங்கள் சுமா¡ர் 100 சிவாஜிகணேசன், ஜெமினிகணேசன், எஸ். எஸ். ராஜேந்திரன் ஆகியோருடன் பல படங்களில் நடித்திருக்கிறார். குறிப்பாக, சிவாஜிகணேசனுடன் எஸ். வி. சுப்பையா அதிக படங்களில் நடித்தார். ‘கப்பலோட்டிய தமிழன்’, ‘பாவமன்னிப்பு’, ‘இரும்புத்திரை’ போன்றவை பிரபலமான படங்கள் குறிப்பாக ‘கப்பலோட்டி தமிழன்’ படத்தில் சிவாஜிகணேசன் வ. உ. சிதம்பரனாராக நடிக்க எஸ். வி. சுப்பையா மகாகவி பாரதியாராக நடித்தார், நடித்தார் என்பதைவிட, பாரதியாரையே நம் கண்முன்கொண்டு வந்து நிறுத்தினார் என்று கூறுவதே பொருந்தும். ஜெமினிகணேசனுடன் செளபாக்கியவதி, ‘மணாளனே மங்கையின் பாக்கியம்’ ‘வஞ்சிக் கோட்டை வாலிபன்’ ஆகிய படங்களிலும், ‘கூடி வாழ்ந்தால் கோடி நன்மை’ என்ற படத்தில் எஸ். எஸ். ராஜேந்திரனுடனும் நடித்தார்.
பழம் பெரும் நடிகர்கள் கே. ஆர். ராமசாமி, எம். கே. ராதா ஆகியோருடனும் சேர்ந்து நடித்திருக்கிறார். 1955ல் வெளிவந்த ‘வள்ளியின் செல்வன்’ என்ற படத்தில் எஸ். வி. சுப்பையா முக்கிய ரோலில் நடித்தார். அவருடன் சகஸ்ரநாமம் டி. எஸ். துரைராஜ், ஜெமினிகணேசன் ஆகியோர் நடித்தனர்.
எம். ஜி. ஆர். நடித்த இதயக்கனி படத்திலும், ‘நீங்க நல்லா இருக்கணும் நாடு முன்னேற’ என்ற சூப்பர் ஹிட் பாடல் காட்சியில் தோன்றினார். எஸ். வி. சுப்பையா சொந்தமாகத் தயாரித்த படம் ‘காவல் தெய்வம்’, எஸ். வி. சுப்பையா, செளகார் ஜானகி, சிவகுமார். லட்சுமி ஆகியோர் நடித்த இப்படத்தில், சாமுண்டி கிராமணி என்ற கதாபாத்திரத்தில் கெளரவ வேடத்தில் சிவாஜி கணேசன் நடித்தார். இதன் கதை வசனத்தை ஜெயகாந்தன் எழுதினார்.
வெற்றிகரமாக ஓடிய படம் இது. தமிழ்த் திரை உலகில் மறக்க இயலாத சிறந்த குணச்சித்திர நடிகராக விளங்கிய எஸ். வி. சுப்பையா 29.1.1980 அன்று மரணம் அடைந்தார். காலமானபோது அவருக்கு வயது 57. எஸ். வி. சுப்பையாவின் மனைவி பெயர் கோமதி அம்மாள். இவர்களுக்கு 5 மகள்கள், ஒரு மகன்.









 

 

ஸ்ரீவித்யாவை காதலித்த கமலஹாசன் திருமணம் முடிப்பதாகவும் கூறினாராம்



தமிழில் கமலஹாசனும், ஸ்ரீவித்யாவும் இணைந்து நடித்த முதல் திரைப்படம் 1973ல் வெளிவந்த ‘சொல்லத்தான் நினைக்கிறேன்’ இயக்குநர் சிகரம் கே. பாலசந்தர் இயக்கிய இத்திரைப்படத்தில் கமல் கிட்டத்தட்ட ஒரு வில்லன் போலத்தான் வருவார். ஆனாலும் இருவருக்குள்ளும் இதற்கு முன்பேயே அறிமுகங்கள் உண்டு.
அதன் பின் 1975ல் ‘அபூர்வ ராகங்கள்’ இப்படத்தில் ‘பைரவி’ என்கிற பாடகியாக நடித்திருந்த தனக்கும், தன் காதலருக்கும் இடையேயான காதல் இந்தப் படத்தில்தான் உறுதியானதாக ஸ்ரீவித்யாவே சொல்லியிருந்தார். “அதிசய ராகம்’ பாடல் காட்சியில் கமல் காட்டியிருக்கும் உணர்ச்சிப் பிரவாகத்தை இன்றைக்குப் பார்த்தாலும் அப்படித்தான் நினைக்கத் தோன்றுகிறது.
ஆனால் அது நிறைவேறாமல் போனதற்கான காரணம் இதே ஆண்டில் வெளிவந்த இன்னொரு திரைப்படமான ‘மேல் நாட்டு மருமகள்’ தான். இது ஸ்ரீவித்யாவுக்கு அப்போதே தெரியாமல் போனது அவருடைய துரதிருஷ்டம்தான்.
‘மேல் நாட்டு மருமகள்’ படத்தில் நடித்த வாணிகணபதிக்கும், கமலுக்குமான நட்பு ஸ்ரீவித்தியாவுக்குத் தெரியாமல் போயிருக்கலாம். அதனால் இன்னொருபுறம் கிடைத்த சந்தர்ப்பங்களிலெல்லாம் ஸ்ரீவித்யா தனது காதலை வளர்த்துக்கொண்டு வந்திருக்கிறார்.
1976ல் ‘saசீassiya’என்கிற மலையாளப் படத்தில் இருவரும் இணைந்து நடித்தார்கள். இதே ஆண்டில் கமல் புகழ் பெற்றத் திரைப்படமான ‘உணர்ச்சிகள்’ படத்திலும் ஸ்ரீவித்யாவுடன் இணைந்தார். 1977ல் ‘அன்னை வேளாங்கண்ணி’ திரைப்படத்தின் மலையாளப் பதிப்பில் ஸ்ரீவித்யாவுடன் நடித்திருக்கிறார்.
கமல், “படப்பிடிப்பு நடக்கும் நாட்களில் நாங்கள் சந்திக்கும், பேச சந்தர்ப்பம் கிடைக்கும் நாட்களிலெல்லாம் என்னை உருகி, உருகி காதலிப்பதாகச் சொன்ன அவர், “உன்னைத்தான் திருமணம் செய்து கொள்ளப்போகிறேன்” என்று வாக்குறுதியும் அளித்துவிட்டுப் போன மறுநாளே அவரது திருமணச் செய்தியை காலை நாளிதழில் பார்த்து அதிர்ச்சியாகிப் போனேன் என்று தனது வாழ்க்கை வரலாற்றில் குறிப்பிடுகிறார் ஸ்ரீவித்யா.
1978ல் கமல்-வாணி கணபதி காதல் திருமணம் நடந்தது. இதன் பின்னர் கமலும், ஸ்ரீவித்யாவும் கிட்டத்தட்ட 8 ஆண்டு காலம் இணைந்து நடிக்கவில்லை. 1986ல் வெளிவந்த ‘புன்னகை மன்னன்’ தான் இருவரையும் மீண்டும் இணைத்து வைத்த திரைப்படம்.
1989ல் ‘அபூர்வ சகோதரர்கள்’, ‘இந்திரன் சந்திரன்’, 1995ல் ‘நம்மவர்’ 1998ல் ‘காதலா, காதலா’ என்று அவருக்கும், கமலுக்குமான இரண்டாவது சினிமா வாழ்க்கையை இப்படி முடித்துக்கொண்டார் ஸ்ரீவித்யா.
இத்திரைப்படம் சொல்வதைப் போல் அம்மாவின் வற்புறுத்தலால் ஸ்ரீவித்யா திரையுலகத்திற்குள் வரவில்லை. ஸ்ரீவித்யாவின் சினிமா பிரவேசத்தை கடுமையாக எதிர்த்தார் அவருடைய தாயார் எம். எல். வசந்தகுமாரி.
அதேபோல் பத்திரிகைகளுக்கு பேட்டியும் அளித்திருந்தார். தனது அம்மா மற்றும் குடும்பத்தினருக்குப் பிடிக்காமல்தான் மலையாள சினிமா தயாரிப்பாளர் ஜோர்ஜை திருமணம் செய்துகொண்டார் ஸ்ரீவித்யா. அப்போது அவருக்கு புத்தி சொன்ன சக நடிகைகளை பகைத்துக் கொள்ளவும் அவர் தயங்கவில்லை.
1997ல் கணவர் ஜோர்ஜுடனான விவாகரத்து வழக்கு நீதிமன்றத்துக்கு வந்த பொழுது முதல் முறையாக ‘பத்திரிகையில் தனது வாழ்க்கையின் துயரங்களை பதிவு செய்ய முன் வந்தார். ஆனால் தன்னுடைய துயரங்களை வெளியிட அப்போதே அவர் மறுத்துவிட்டார்.
ஸ்ரீவித்யா உயிரிழப்பதற்கு முன் நோய்வாய்ப்பட்டு கேரளா மருத்துவமனையில் இருந்தபோது கமலஹாசன் அவரை சென்று பார்த்தார். அதன் பின்புதான் ஸ்ரீவித்யா உயிரிழந்தார்.


அனைவரும் விரும்பும்  அன்பே வா' சரோஜாதேவியின் ஆடை


ஏவி.எம். தயாரித்த ‘அன்பே வா’ படத்தில் எம்.ஜி.ஆரும், சரோஜாதேவியும் இணைந்து நடித்தனர். அந்தப் படத்தில், வித்தியாசமான உடையில் சரோஜா தேவி தோன்றுவார். அந்த உடையை தேர்வு செய்தவர் ஏவி. மெய்யப்ப செட்டியார்தான். ‘அன்பே வா’ படம் தயாராகி வந்தபோது, ஒரு நாள் ஏவி.எம். பெங்களூருக்குச் சென்றிருந்தார்.
அங்கு ‘வக்த்’ என்ற இந்திப்படம் ஓடிக்கொண்டு இருந்தது. அந்தப் படத்தை மெய்யப்ப செட்டியார் பார்த்தார். படத்தில் கதாநாயகி அணிந்து இருந்த சுடிதார் போன்ற உடை அவருக்கு மிகவும் பிடித்து விட்டது. அந்த உடை, நிச்சயம் தனது ‘அன்பே வா’ படத்தில் இடம் பெறவேண்டும் என்று முடிவு செய்துவிட்டார். சென்னைக்குத் திரும்பியதும் முதல் வேலையாக ‘அன்பே வா’ படத்தின் தையல் கலை நிபுணரை விமானத்தில் பெங்களூருக்கு அனுப்பி வைத்தார்.
தான் பார்த்த இந்திப்படத்தை பார்க்கும்படியும், அந்தப் படத்தில் கதாநாயகி அணிந்து இருக்கும் அதே மாதிரி உடையை சரோஜாதேவிக்கு தைத்துக் கொடுக்க வேண்டும் என்றும் சொன்னார்.
அதன்படி, அந்த உடையை தையல் கலைஞர் தைத்துக் கொடுக்க, அதை அணிந்து சரோஜாதேவி நடித்தார். அந்த உடை புதுமையாக இருந்தது. குறிப்பாக, பெண்களை அந்த உடை வெகுவாகக் கவர்ந்தது. பலர் அதே மாதிரி உடை அணிய ஆரம்பித்தனர். அதுவே அனைவரும் விரும்பும் பெஷன் ஆகிவிட்டது.





 

தங்கைக்காக தன் வாழ்நாளை அர்ப்பணித்தவர் பண்டரிபாய்




திரும்பிப்பார் படத்தில் சிவாஜியும், பண்டரிபாயும் போட்டி போட்டு நடித்தனர். கதைப்படி, சிவாஜி கணேசன் பெண் பித்தன். கண்ணில் படுகிற பெண்களையெல்லாம் காதலிப்பார், கற்பை சூறையாடுவார். அவர் ஒரு பெண்ணை கெடுக்கப் போகும் போது, பண்டரிபாய் வழி மறித்து நிற்பார்.
“பரந்தாமா” உனக்கு இப்போதும் ஒரு பெண்தானே வேண்டும். இதோ, நான் இருக்கிறேன், என்னை எடுத்துக் கொள்!” என்பார். சிவாஜி கதறுவார். பிறகு அவர் திருந்திவிட்டதை அறியாத பண்டரிபாய், தன் கையினாலேயே சுட்டுக் கொன்றுவிடுவார்.
சிவாஜியும், பண்டரிபாயும் வாழ்ந்து காட்டிய படம் “திரும்பிப்பார்” சிவாஜியின் பிற்காலப் படங்களில் அவருக்கு அம்மாவாகவும் பண்டரிபாய் நடித்துள்ளார். 1960 வரை முக்கிய கதாபாத்திரங்களை ஏற்று வந்த பண்டரிபாய் பிற்காலத்தில் தாய் வேடத்திலும் சிறந்த குணச்சித்திர வேடங்களிலும் முத்திரை

பதித்தார். தொடக்க காலத்தில் அதாவது 1951ல் எம்.ஜி.ஆர். நடித்த “மர்ம யோகி” படத்தில் சிறு வேடத்தில் பண்டரிபாய் நடித்தார். பிற்காலத்தில் “எங்க வீட்டு பிள்ளை”, “குடியிருந்த கோவில்”, “அடிமைப்பெண்”, “தெய்வத்தாய்” ஆகியவை உட்பட ஏராளமான படங்களில் நடித்தார். ரஜினிகாந்துடன் பண்டரிபாய் நடித்ததில் “மன்னன்” படம் குறிப்பிடத்தக்கது.
பண்டரிபாய்க்கு இருந்த மற்றொரு திறமை தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் உட்பட 7 மொழிப் படங்களில் நடித்ததாகும். மொத்தத்தில் சுமார் 1,500 படங்கள் வெளிவந்துள்ளன. கடைசியாக அவர் நடித்த படம் “ஜெய்ஹிந்த்” “அனுராதா” என்ற கன்னட படத்தை சொந்தமாக தயாரித்தார். இந்தப் படத்துக்காக அவருக்கு ஜனாதிபதி விருது கிடைத்தது. தமிழில் “அவளும் பெண்தானே” என்ற படத்தை சொந்தமாகத் தயாரித்தார். இந்தப் படத்தின் மூலம் நடிகை சுமித்ரா, டைரக்டர் துரை ஆகியோர் அறிமுகமானார்கள்.
பண்டரிபாய் 1965ம் ஆண்டு தமிழக அரசின் “கலைமாமணி” விருது பெற்றார். பண்டரிபாயின் தங்கை மைனாவதி “குலதெய்வம்”, “கண்கள்”, “பொன்வயல்” உட்பட பல தமிழ்ப் படங்களில் நடித்து இருக்கிறார். பண்டரிபாயின் பிற்கால வாழ்க்கை மிகவும் சோகம் நிறைந்ததாகவே அமைந்துவிட்டது.அவர் பயணம் செய்த கார் மீது வேலூர் அருகே ஒரு லொறி மோதியதில், ஒரு கையை இழக்க நேர்ந்தது. அன்று முதலே அவருடைய உடல் நிலை பாதிக்கப்பட்டது.
நீரிழிவு நோயாலும் அவதிப்பட்டார். சிறுநீரகம் பாதிக்கப்பட்டது. மூச்சு கூட விட முடியாமல் சிரமப்பட்ட அவரை வடபழனியில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பண்டரிபாயின் உடல்நிலை மோசமாக இருப்பதை அறிந்த முதல் அமைச்சர் ஜெயலலிதா நேரில் போய் அவரை பார்த்தார். பண்டரிபாயின் மருத்துவ செலவுக்கு உதவி செய்தார்.
அதைத் தொடர்ந்து அவர் “அப்பலோ” ஆஸ்பத்திரிக்கு மாற்றப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தார்கள். உடல் நிலை கொங்சம் தேறிவந்தது. இருப்பினும் அது அதிக நாள் நீடிக்கவில்லை. 29-01-2003 அன்று அதிகாலை பண்டரிபாய் மரணம் அடைந்தார். அப்போது அவருக்கு வயது 74, முதல்- அமைச்சர் ஜெயலலிதா சார்பில் அமைச்சர் கே.கே. பாலசுப்ரமணியம் சென்று பண்டரிபாய் உடலுக்கு இறுதி மரியாதை செலுத்தினார். தி.மு.க.தலைவர் கருணாநிதி பண்டரிபாய் மகன் குருபிரசாத்துக்கு இரங்கல் செய்தி அனுப்பினார்.
பண்டரிபாயின் உடல் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு ஏ.வி.எம். ஸ்டூடியோ பின்புறம் உள்ள மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. தங்கைகளுக்காகவும், குடும்பத்துக்காகவும் தன் வாழ்நாளை அர்ப்பணித்தவர் பண்டரிபாய். தங்கைகளுக்கு திருமணம் செய்து வைத்துவிட்டு, அவர் திருமணம் செய்து கொள்ளாமல் இருந்தார். பல ஆண்டுகளுக்குப் பின் திருமணம் செய்து கொண்டார். கணவர் பெயர் ராமாராவ். இவர்களுக்குக் குழந்தைகள் இல்லை.

சொந்த வாழ்க்கை பற்றி சொல்ல மறுப்பு


என் சொந்த வாழ்க்கை பற்றி எதுவும் கேட்காதீர்கள் என்று ஆவேசப்பட்டார் அனன்யா. அவர் மேலும் கூறியதாவது, என் திருமணம் பற்றி கேட்காதீர்கள். ரசிகர்களுக்கு என் சொந்த வாழ்க்கையைப் பற்றி சொல்ல வேண்டியது இல்லை. நான் நடிக்கும் படங்கள் பற்றி தெரிவிக்க வேண்டியது கடமை.
திருமணம் எப்போது நடந்தாலும், பகிரங்கமாக நடக்கும். நானே மீடியாவிடம் சொல்வேன். தமிழில் நடிக்கவில்லை. கன்னடத்தில் நடித்த ‘கோகுல கிருஷ்ணா’ ரீலீசுக்கு தயார். மலையாளத்தில் பல படங்களில் நடிக்கிறேன்.
‘ரத்த ரக்ஷக்’ படத்தில், முதல் முறையாக அக்கா, தங்கை என இரட்டை வேடத்தில் நடிக்கிறேன். ஒரு வேடம், பேய், தினமும் இரவு ஒரு மணிக்கு மேல் ஷ¥ட்டிங் நடக்கும். இரண்டு மணி நேரத்துக்கு மேல் எனக்கு மேக்கப் போடுவார்கள். சைக்கோ த்ரில்லரான இப்படம், கண்டிப்பாக விருது பெற்றுத் தரும். இதில் 4 கிளைமாக்ஸ் காட்சிகள் இடம்பெறுகின்றன.







 

அரவாணிக்கு அமோக வரவேற்பு வில்லன் வேடத்தில் விவேக்


நகைச்சுவை நடிகர் விவேக் சென்னையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அவற்றுக்கு விவேக் அளித்த பதில்களும் வருமாறு:-
நகைச்சுவை நடிகராக பிரபலமான நீங்கள் ‘வழிப் போக்கன்’ படத்தில் வில்லன் வேடத்தில் நடிப்பது ஏன்?
அது ஒரு ‘சைக்கோ த்ரில்லர்’ கதாபாத்திரம். தேன்நிலவுக்காக வந்த தம்பதிகள் அந்த வில்லனிடம் மாட்டிக்கொள்கிறார்கள். இந்த படத்தின் கதாநாயகனாக மிதுன் நடிக்கிறார். ‘சைக்கோ’வாக நான் நடிக்கிறேன். நான் ஏன் ‘சைக்கோ’வாக மாறினேன்? என்பதற்கு ஒரு முன் கதை இருக்கிறது. அதற்காகவே இந்த வில்லன் வேடத்தை ஒப்புக்கொண்டேன். என்னாலும் வில்லன் வேடம் பண்ண முடியும் என்று நிரூபித்து இருக்கிறேன்.
தமிழில் ‘வழி போக்கன்’ என்ற பெயரிலும், கன்னடத்தில் ‘மாரீச்சன்’ என்ற பெயரிலும் 2 மொழிகளில் படம் தயாராகிறது. முதன் முதலாக நான் கன்னடம் பேசி நடித்து இருக்கிறேன்.
முரட்டுக்காளை படத்தில் அரவாணியாக நடித்து இருக்கிaர்கள். அதற்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு எப்படி இருக்கிறது?
பாராட்டுக்கள் வந்து குவிந்த வண்ணம் உள்ளன. இப்படி பாராட்டுக்களை கேட்கும்போது தொடர்ந்து இதுபோல் மாறுபட்ட வேடங்களில் நடிக்க வேண்டும் என்ற உற்சாகம் வந்திருக்கிறது. ஷக்தி சிதம்பரம் இயக்கும் ‘மச்சான்’ படத்தில் ‘அனிமல் அரசு’ என்ற கதாபாத்திரத்திலும், வி. சேகர் டைரக்ட் செய்ய அவருடைய மகன் காரல்மாக்ஸ் கதாநாயக னாக அறிமுகமாகும் படத்தில் நடிகர் விவேக் ஆகவும் வருகிறேன்.
டைரக்ட் செய்யப்போவதாக ஒரு பேச்சு அடிபடுகிறதே?
பசுமை கலாம் திட்டத்தின் கீழ் மரம் நட்ட அனுபவத்தை வைத்து ஒரு கதை எழுதியிருக்கிறேன். நல்ல தயாரிப்பாளர் கிடைத்தால் அந்த கதையை டைரக்ட் செய்யலாம் என்று இருக்கிறேன்.’ இவ்வாறு விவேக் கூறினார்.


ரம்யாவுக்கு சினிமா வாய்ப்பு




சினிமாவில் நடிக்க நிறைய அழைப்பு வருகிறது. ஆனால் எனக்கு அதில் ஆர்வம் இல்லை என்று சின்னத்திரை தொகுப்பாளர் ரம்யா கூறியுள்ளார்.
விஜய் டி.வி.யில் பிரபல தொகுப்பாளராக இருப்பவர் ரம்யா. இவர் தொகுத்து வழங்கும் உங்களில் யார் அடுத்த பிரபுதேவா சீசன் 2, நம்ம வீட்டு கல்யாணம் உள்ளிட்ட பல நிகழ்ச்சிகள், ரசிகர்களை ரொம்பவே கவர்ந்துள்ளன. ஏராளமான ரசிகர்கள் ரம்யாவின் தொகுப்பை புகழ்ந்து தள்ளி கடிதம் எழுதி வருகிறார்கள்.
இது குறித்து ரம்யா அளித்துள்ள பேட்டியில், வைஷ்ணவா கல்லூரியில் விஷ¥வல் கொமியூனிகேசன் முடித்த பிறகு மொடலிங் செய்து வந்தேன். அப்போதுதான் கொம்பயரிங்கில் ஆர்வம் வந்தது.
கொம்பயரிங் ஒன்றும் சுலபமான வேலை அல்ல. எவ்வளவு பெரிய ஆட்கள் வந்தாலும் எங்களைத்தான் எல்லோரும் கவனிப்பார்கள்.
கொம்பயரிங் செய்யும் போது தமிழில் பேசுவதையே விரும்புகிறேன். சினிமாவில் நடிப்பதற்கு தினமும் அழைப்புக்கள் வந்த வண்ணம் உள்ளன.
ஆனால் அதில் எனக்கு ஆர்வம் சுத்தமாக இல்லை. சினிமாதான் வாழ்க்கையென்று கிளம்பியிருந்தால், இதுவரை நிறைய படங்களில் என்னையும் சராசரி நடிகையாக இந்த உலகம் பார்த்திருக்கும் என்று கூறியுள்ளார்.

ரூ. 196 கோடி சம்பளம் வாங்கும் நடிகை


ஹொலிவுட் ஹீரோக்கள் அதிகபட்சமாக 40 முதல் 50 கோடி ரூபா வரை சம்பளம் பெற்று வருகையில் ஹொலிவுட்டில் ஒரு நடிகை ஒரு படத்திற்கு 196 கோடி சம்பளம் வாங்குகிறார்.
பிரபல போர்பஸ் பத்திரிகை மே 2011 முதல் மே 2012 ஆம் ஆண்டு முடிய ஹொலிவுட்டில் அதிக சம்பளம் வாங்கும் நடிகைகள் பட்டியலை வெளியிட்டுள்ளது.
இதில் 22 வயதாகும் ஹொலிவுட்டின் கிறிஸ்டன் ஸ்டீவெர்ட் ஒரு படத்திற்கு 34.5 மில்லியன் டொலர் (இந்திய ரூபாயில் சுமார் 196 கோடி ரூபா) பெறுகிறார்.
இவருக்கு அடுத்தபடியாக கெமரூன் டய்ஸ் 34 மில்லியன் டொலரும், சாண்டரா புல்லாக் 25 மில்லியன் டொலரும் பெறுகின்றனர். ஹொலிவுட்டில் அதிக சம்பளம் வாங்கும் டொப் 10

நடிகைகள் பட்டியல்

01. கிறிஸ்டீன் ஸ்டீவெர்ட்
(34.5 மில்லியன் டொலர்)
02. கெமரூன் டய்ஸ்
(34 மில்லியன் டொலர்)
03. சாண்ட்ரா புல்லாக்
(25 மில்லியன் டொலர்)
04. ஏஞ்சலா ஜூலி
(20 மில்லியன் டொலர்)
05. சார்லிஸ் தெரான்
(18 மில்லியன் டொலர்)
06. ஜூலியா ராபர்ட்ஸ்
(16 மில்லியன் டொலர்)
07. சாரா ஜெஸிகா பார்கர்
(15 மில்லியன் டொலர்)





திருமணமாகி குழந்தை பெற்ற பின் சினிமாவில் அறிமுகமாகி ஏராளமான படங்களில் நாயகியாக நடித்தவர்

பதினைந்து ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வாய்ப்பு

பழம்பெரும் நடிகை செளகார் ஜானகி 15 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் சினிமாவில் நடிக்கிறார். நாடக துறையில் ஈடுபட்டு வந்த செளகார் ஜனாகி, 1949ம் ஆண்டு தெலுங்கு படம் மூலம் திரையுலகில் நுழைந்தார். அதையடடுத்து தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி ஆகிய மொழிகளில் அனைத்து முன்னணி நடிகர்களுடனும் 385 படங்களில் நடித்துள்ளார்.
திருமணமான நடிகைகளுக்கு சினிமா வாய்ப்புக்கள் கிடைக்காது. அப்படியே கிடைத்தாலும் கதாநாயகி வாய்ப்பு கிடைக்காது என்ற சூழ்நிலையில் திருமணமாகி குழந்தை பெற்ற பிறகே சினிமாவில் அறிமுகமாகி ஏராளமான படங்களில் கதாநாயகியாக நடித்த பெருமைக்குரியவர் செளகார் ஜானகி.
இந்நிலையில் ராஜ்மோகன் இயக்கத்தில் கிருஷ்ணா நடிக்கும் வானவராயன் வல்லவராயன் என்ற படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார் செளகார். மீண்டும் நடிக்க வருவது குறித்து அவர் கூறியதாவது; 15 வருடங்களுக்கு பிறகு நடிப்பது அதுவும் தமிழ்ப் படத்தில் நடிப்பது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.
இந்த இடைப்பட்ட காலத்தில் நான் நடிக்க மாட்டேன் என்று கூறியதில்லை, என்னை யாரும் நடிக்க அழைக்கவில்லை. அது குறித்து நான் வருத்தப் படவும் இல்லை. இயக்குனர் ராஜ்மோகன் கூறிய கதையில் என் கதாபாத்திரத்துக்கு அதிக முக்கியத்துவம் இருந்தது. இதில் அலிபாபா, கற்றது களவு, கழுகு படங்களில் நடித்த கிருஷ்ணா கதாநாயகனாக நடிக்கிறார்.
மீண்டும் நடிக்க வர காரணமாக இருந்த இயக்குனர் ராஜ்மோகன், திரைப்பட பத்திரிகை தொடர்பாளர் மெளனம் ரவி, தயாரிப்பாளர் ராஜபாண்டியன் ஆகியோருக்கு நன்றி. இதற்கு முன் நான் கடைசியாக நடித்த படம் தொடரும்.
அஜித், தேவயானி நடித்த படம் தொடரும். என்ற டைட்டிலில் நடித்து விட்டு நடிப்பை தொடர முடியாமல் போய் விட்டது. என்னுடைய 62 ஆண்டு கால சினிமா அனுபவத்தில் எத்தனையோ கலைஞர்களுடன் பழகியிருக்கிறேன். ஒவ்வொருவரும் ஒரு வகையில் திறமையானவர்கள். இப்போது ரஜினிக்கு இருக்கும் மக்கள் செல்வாக்கு பிரமிக்கவைக்கிறது.
கமல்ஹாசனின் திறமை வியக்க வைக்கிறது. ஹேராம் படத்தில் என்னை நடிக்க அழைத்திருந்தார் கமல், பார்த்தால் பசி தீரும் படத்தில் குழந்தையாக நடித்த கமல் என்னை வைத்து இயக்கும் அளவுக்கு வளர்ந்ததை நினைத்து மிகவும் பெருமையாக இருந்தது. அந்தப் படத்தில் ஒரே ஒரு காட்சியில் மட்டுமே நடித்தேன்.
அதற்குள் எனக்கு இதய அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய சூழ்நிலை. மேற்கொண்டு நடிக்க முடியாமல் போய் விட்டது. ஆனாலும் எனக்கு பேசிய தொகையை மொத்தமாக ஒரே செக்கில் கமல் அனுப்பி வைத்தார். அந்த நேரத்தில் அந்த தொகைதான் என்னுடைய மருத்துவ சிகிச்சைக்கு உதவியது. அதை எப்போதும் மறக்க மாட்டேன்.
வானவராயன் வல்லவராயன் படத்தின் மூலம் என்னுடைய இரண்டாவது இன்னிங்சை தொடங்கி உள்ளேன். கோபி செட்டிபாளையத்தில் படப்பிடிப்பில் கலந்து கொள்கிறேன். இப்போது எனக்கு வயது 81. ஆனாலும் மனதளவில் இன்னும் இளமையாக உணருவதால் ஆரோக்கியத் துடன் இருக்கிறேன். தொடர்ந்து படங்களில் நடிப்பேன் என்றார் செளகார் ஜானகி.







No comments:

Post a Comment