Thursday, May 25, 2023

பங்குனி மாதம்

 

பங்குனி மாதம் என்பது எதற்கு உரிய மாதம்?

வழிபாட்டுக்கு

பங்குனி மாதம் என்பது வேறு எதற்கு உரிய மாதம்?

வணங்குவதற்கும் பூஜைக்கும்

பங்குனி மாதம் என்பது வேறு எதற்குரிய மாதம்? வைபவங்களுக்கான மாதம்.

அற்புதமான பங்குனி மாதத்தை வேறு எவ்வாறு அழைப்பர்?

தெய்வ மாதம் என்று போற்றுகின்றனர். பங்குனி உத்திரம் யாருக்கு உகந்த விழா?

தமிழ் கடவுள் முருகனுக்கு

பங்குனி மாதத்தில் பௌர்ணமியுடன் உத்திர நட்சத்திரம் இணைந்து வரும் நாள் என்னவாக கொண்டாடப்படுகிறது?

பங்குனி உத்திர திருவிழாவாக

தமிழ் மாதங்களில் பன்னிரண்டாவது மாதமாக வருவது எந்த மாதம்?

பங்குனி

அதே போல் நட்சத்திரங்களில் பன்னிரண்டாவதாக வருவது எந்த நட்சத்திரம்?

உத்திரம்

பங்குனி உத்திரத்தின் சிறப்பு என்ன?

அந்த நாளில் பௌர்ணமியும் இணைந்து வருவது சிறப்பாகும். தெய்வ திருமணங்கள் பலவும் நடைபெற்ற நாள் எது? பங்குனி உத்திரம்

பங்குனி உத்திரத்தன்ற விரதம் இருந்து வழிபட்டால் என்ன நடக்கும்?

நிச்சயம் திருமணம் நடைபெறும் என்பது ஐதீகம்.

அதனால் பங்குனி உத்திர விரதத்தை வேறு எவ்வாறு அழைப்பர்?

திருமண விரதம்

ஸ்ரீராமபிரான்- சீதாதேவி திருமணம் நடந்த நன்னாள் எது?

பங்குனி உத்திரம்

பரதன்- மாண்டவி திருமணம் நடந்த நன்னாள் எது?

பங்குனி உத்திரம்

லட்சுமணன்- ஊர்மிளை திருமணம் நடந்த நன்னாள் எது?

பங்குனி உத்திரம்

சத்ருக்னன்- ச்ருத கீர்த்தி ஆகியோருக்கு திருமணம் நடந்த நன்னாள் எது?

பங்குனி உத்திரம்

முருகப் பெருமான் தெய்வானையை திருமணம் செய்து கொண்டது எப்போது? பங்குனி உத்திர நன்னாளில்தான்.

ஸ்ரீவள்ளி அவதரித்த நாள் எது? பங்குனி உத்திரம் என்கிறது புராணம்.

தேவர்களின் தலைவன் என்று போற்றப்படுகிறவர் யார்?

தேவேந்திரன்

தேவேந்திரன் இந்திராணி திருமணம் நடைபெற்றது எப்போது?

பங்குனி உத்திர நன்னாளில்தான்.

நவக்கிரகங்களில் ஒருவரான சந்திர பகவான்,

அழகும் திறனும் கொண்ட 27 நட்சத்திரக் கன்னியரை மணம் புரிந்தது யார்? நவக்கிரகங்களில் ஒருவரான சந்திர பகவான்,

சந்திர பகவான் 27 நட்சத்திரக் கன்னியரை மணம் புரிந்தது எப்போது?

இதே பங்குனி உத்திர நாளில்தான் என்கிறது புராணம்.

ஸ்ரீமகாலக்ஷ்மி, மகாவிஷ்ணுவை நோக்கி கடும் தவம் மேற்கொண்டது எப்போது?

பங்குனி உத்திர நாளில்

ஸ்ரீமகாலக்ஷ்மி, மகாவிஷ்ணுவை நோக்கி கடும் தவம் மேற்கொண்டதுதால் மகிழ்ந்த திருமால் என்னசெய்தார்?

தன் திருமார்பில் மகாலக்ஷ்மிக்கு வீற்றிருக்கும் வரத்தைத் தந்தருளினார் என்கிறது எது?

புராணம்

எந்த புராணம்?

விஷ்ணு புராணம்.

தன்னுடைய நாவில் ஸ்ரீசரஸ்வதி தேவியை வைத்துக் கொண்டது யார்?

படைப்புக்கடவுளான பிரம்மா

அது எப்போது வைத்துக் கொண்டார்?

பங்குனி உத்திர நாளில்தான்!

ஐயப்ப அவதாரம் நிகழ்ந்தது எப்போது? பங்குனி உத்திர நாளில்தான்!

நம் வாழ்வில் நல் முத்திரை பதிக்க சித்திரையே

வா“கல்தோன்றி மண்தோன்றா காலத்தே முன் தோன்றிய மூத்த குடி” என்ற பெருமைக்குரிய தமிழினம் ஆனது ஒவ்வொரு வருடமும் தமிழில் சித்திரை முதலாம் திகதியை வருடப்பிறப்பாக கோலாகலமாக கொண்டாடுகிறது.

இந்தியா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளில் வாழும் உலக தமிழர்களால் இப்பண்டிகை சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

தமிழர்கள் ஆரம்ப காலங்களில் இருந்தே வானியல் ஜோதிடங்களில் சிறந்து விளங்கியதால் ஒரு தமிழ் ஆண்டு காலரீதீயாக சிறப்பாக கணிப்பிட படுகின்றது.

அதாவது சூரியன் மேடராசியில் பிரவேசிக்கும் போது தொடங்கும் வருடம் மீன ராசியில் பிரவேசிக்கும் போது முடிவடைகின்றது. இதனடிப்படையில் பஞ்சாங்கங்களின் வாயிலாக தமிழ் புத்தாண்டானது கணிப்பிடப்படுகிறது.

சித்திரை மாதம் காலநிலை அடிப்படையில் வசந்த காலத்தின் ஆரம்பமாகும் இதனால் மக்கள் மகிழ்ச்சியோடு இப்புத்தாண்டை வரவேற்கின்றனர்.

தமிழ் புத்தாண்டின் வரலாறு சித்திரையின் மரபுகள் சிறப்புக்கள் என்பவற்றை இக்கட்டுரையில் காண்போம்.

தமிழர்கள் இயற்கையோடு ஒன்றித்து வாழ்ந்தவர்கள். இதனால் பண்டிகைகளை பருவகாலங்களுக்கு ஏற்ப கொண்டாடினார்கள்.

தமிழர்களின் நாட்காட்டி 12 ராசிகளை அடிப்படையாக கொண்டதாகும். இதனால் ராசிகளில் முதலாவதான மேட ராசியில் சூரியன் ​ முதல் நாள் தமழிர்களின் புதுவருடம் ஆகும்.

இதை சங்க இலக்கியமான நெடுநல்வாடை “திண்ணிலை மருப்பின் ஆடுதலையாக விண்ணுர்பு திரிதரும் வீங்கு செலல் மண்டிலத்து” குறிப்பிடுகிறது.

மேலும் அகத்தியாயிரம் புட்பவிதி நூலின் மூலம் சித்திரை முதல் நாளே தமிழ்புத்தாண்டு என்பதற்கான சான்றுகள் கிடைக்கப்பெறுகின்றன.

சித்திரை புத்தாண்டு பலவகையான சம்பிரதாயங்களை கொண்டதாகும். புத்தாண்டு ஆரம்பித்து விட்டால் வீடுகளில் மகிழ்ச்சிக்கு பஞ்சம் இருக்காது.

புத்தாடை வாங்குதல், மருத்துநீர் வைத்து நீராடல், இனிப்பு பண்டங்களை பரிமாறி கொள்ளல், பொங்கல் இடுதல், கைவிசேடம் பெறுதல் சுபநேரத்தில் புதிய தொழில்களை ஆரம்பித்தல், பெரியவரக்ளிடம் ஆசி பெறுதல்,

கிளித்தட்டு, ஊஞ்சல், மாட்டுவண்டில் சவாரி, ஏறுதழுவுதல் என தமிழர் பாரம்பரிய விளையாட்டுக்கள் வழிபாடுகளோடு மங்களகரமாக மக்கள் புத்தாண்டை வரவேற்பர்.

தமிழர்கள் உலகமெங்கும் புலம் பெயர்ந்து வாழ்ந்தாலும் தமது பண்பாடான பண்டிகையை கொண்டாட தவறவில்லை.

தமிழ் மாதங்களிள் ஒவ்வொரு மாதங்களும் தனி சிறப்புடையன. அவற்றில் சித்திரை தனித்துவமானது.. அம்மாதத்தின் பௌர்ணமி அன்று சித்திரை நட்சத்திரம் வருவதனால் இம்மாதம் சித்திரை என அழைக்கப்படுகிறது.

“சித்திரையே வா நம் வாழ்வில் நல் முத்திரை பதிக்க வா” என்று சொல்லும் மரபு காணப்படுகிறது இதன்மூலம் சித்திரையின் சிறப்பினை காணலாம். காலநிலை ரீதியாக சித்திரை சிறுமாரி என்று குறிப்பிடுவார்கள்.

இக்காலத்தில் நெல் விதைப்பில் சிறுபோகம் ஆரம்பமாவதுடன் விவசாயிகள் பயிர்செய்ய ஆரம்பிப்பார்கள். இவ்வாறு பல மகத்துவங்களை தன்னகத்தே கொண்டது இம்மாதமாகும்.

சங்கடஹர சதுர்த்தி

பங்குனி மாதத்தில், ஐயப்பனின் அவதார தினமும் வரும். ஸ்ரீராமபிரானின் அவதார நன்னாளும் வரும். ஸ்ரீவள்ளி அவதரித்ததும் பங்குனி மாதத்தில்தான். இத்தனைப் பெருமையும் புண்ணியமும் நிறைந்த மாதத்தில், விநாயகப் பெருமானை தினமும் வழிபட்டு வந்தாலே உன்னத பலன்கள் நமக்குக் கிடைக்கும் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்

எந்த தெய்வத்தை வணங்குவதாக இருந்தாலும் முதலில் பிள்ளையாரை வழிபட வேண்டும் என்று விவரிக்கிறது தர்மசாஸ்திரம். ஆகம விதிப்படியும் ஆலயங்களில், முதலில் பிள்ளையாரை வணங்குகிறோம். அதன் பின்னரே மூலவரை தரிசிக்கிறோம்.

எந்த தெய்வத்தை வணங்குவதாக இருந்தாலும் முதலில் பிள்ளையாரை வழிபட வேண்டும் என்று விவரிக்கிறது தர்மசாஸ்திரம். ஆகம விதிப்படியும் ஆலயங்களில், முதலில் பிள்ளையாரை வணங்குகிறோம். அதன் பின்னரே மூலவரை தரிசிக்கிறோம்.

விநாயகர், முழுமுதற் கடவுள் என்று போற்றப்படுகிறார். பிரமாண்டமான கோயிலிலும் பிள்ளையாரைத் தரிசிக்கலாம். தெருமுனைக் கோயிலிலும் கணபதி காட்சி தருவார். ஆற்றங்கரையிலும் குளக்கரையிலும் கூட, அரசமரத்தடி நிழலில் கூட பிள்ளையாரப்பா அற்புதமாகக் காட்சி தந்து, நமக்கு அருளையும் பொருளையும் அள்ளித்தந்தருளுகிறார் என்று போற்றுகின்றனர் பக்தர்கள்.

நம் விக்னங்களையெல்லாம் தீர்த்து அருளுகிறார். அதனால்தான் அவருக்கு விக்ன விநாயகர் என்றே திருநாமம் அமைந்தது. கணங்கள் என்றால் பொழுதுகள் என்று அர்த்தம். நம்முடைய ஒவ்வொரு கணத்துக்கும் அதிபதி பிள்ளையார்தான். அதனால்தான் அவருக்கு கணபதி எனும் திருநாமமும் அமைந்தது என்று சொல்லிச் சிலிர்க்கிறார்கள் ஆச்சார்யர்கள்.

இத்தனை பெருமைகள் கொண்ட பிள்ளையாருக்கு உகந்தது சங்கட ஹர சதுர்த்தி நன்னாள். நாளை, சங்கடஹர சதுர்த்தி. பங்குனி மாதத்தின் சங்கடஹர சதுர்த்தி. இந்த நன்னாளில், விரதம் இருந்து பிள்ளையாரை தரிசிப்போம். விநாயகர் அகவல் பாராயணம் செய்வோம். மகா கணபதி மந்திரம் ஜபித்து வேண்டிக்கொள்வோம்.

விநாயகப் பெருமானுக்கு அருகம்புல் சார்த்தி வேண்டிக் கொள்வது ரொம்பவே மகத்துவம் மிக்கது. அதேபோல், பிள்ளையாருக்கு வெள்ளெருக்கு மாலை சார்த்தி வேண்டிக்கொண்டால், நம் விக்னங்களெல்லாம் பறந்தோடும். கவலைகள் அனைத்தும் காணாமல் போகும். துக்கங்களையெல்லாம் போக்கித் தருவார் தும்பிக்கையான்! சங்கடஹர சதுர்த்தியில் ஆனைமுகத்தானை மனதார பிரார்த்திப்போம்

araneri

 

அறநெறி

ஒரு வீட்டில் புதிதாக திருமணம் நடைபெற்று இருந்தால், அந்த வீட்டில் இருப்பவர்கள் அந்த வீட்டில் வசிக்கும் குழந்தைகளுக்கு காது குத்தலாமா?

கூடாது

எவ்வளவு காலத்திற்கு இவ்வாறு செய்யக் கூடாது?

ஆறு மாதத்திற்குள்ளாக காது குத்துதல் சடங்கை செய்யக்கூடாது.

சிலர் ஆண் குழந்தைகளுக்கு பூணூல் அணிவிக்கும் வழக்கம் கொண்டவர்களாக இருப்பார்கள். அவ்வாறு அந்த பூணூல் அணிவிக்கும் சடங்கினை செய்யலாமா?

கூடாது

எவ்வளவு காலத்திற்கு செய்யக்கூடாது?

திருமணம் நடந்த ஆறுமாதத்திற்கு செய்யக்கூடாது.

6 மாத காலத்தில் புண்ணிய நதிகளைக் கடந்து செல்லும் தீர்த்த யாத்திரை மேற்கொள்ளலாமா?

கூடாது.

வேறு என்ன செய்யக்கூடாது?

தாங்கள் வசிக்கின்ற வீட்டிலிருந்து புதிதாக ஒரு வீட்டிற்கு இந்த ஆறு மாத காலத்திற்குள்ளாக குடியேறக்கூடாது.

வாடகை வீட்டில் வசிப்பவர்களாக இருந்தால் என்ன செய்யலாம்?

புது வீட்டுக்கு ஒரு சுப நாளில், சூரிய உதயத்திற்கு முன்பாக குடியேறிவிட வேண்டும்.

புது வீட்டில் குடியேறிய பிறகு என்ன செய்ய வேண்டும்?

அங்கு தங்கள் குலதெய்வத்திற்கென்று ஒரு தீபம் ஏற்றி வழிபட வேண்டும். அந்த குலதெய்வத்தின் ஆணைப்படியே தற்போது புது வீட்டிற்கு வந்ததாக நினைத்து, தோஷங்கள் ஏற்பட்டுவிட்டதோ என எண்ணி வருந்தாமல், தங்களின் அன்றாட கடமைகளை செய்ய வேண்டும்.

சில குறிப்பிட்ட நாட்களில் கடன் வாங்கினால் அதை திருப்பி செலுத்த முடியாது என சாஸ்திரங்கள் அறிவுறுத்துகின்றன. அது என்னென்ன நாட்களில்?

மாத பிறப்பு, அஸ்தம் நட்சத்திரத்தில் வரும் ஞாயிற்றுக்கிழமை, செவ்வாய்க்கிழமை இந்த தினங்களில் கடன் வாங்கக்கூடாது.

அப்படி வாங்கினால் என்ன நடக்கும்?

தீர்க்க முடியாத கடனாக அது வளர்ந்து கொண்டே போகும்.

அதே நேரத்தில் செவ்வாய்க்கிழமை வாங்கிய கடனை திருப்பி செலுத்தினால் என்ன நடக்கும்?

கடனை விரைவில் முழுவதுமாக அடைக்க முடியும்.

புதன்கிழமை வாங்கிய கடன் தொகையை திரும்ப செலுத்துவது தவிர்க்க வேண்டும் என்று சொல்லப்படுகிறது? அது ஏன்?

ஒருவேளை செலுத்தினால், மீண்டும் மீண்டும் கடன் வாங்கவும், வாங்கிய கடனை கட்ட முடியாமல் போகும் நிலையும் உருவாகும் என கூறப்படுகிறது.

தங்களுக்கென்று புதிதாக வீடு, வாகனம், நகை இதர வீட்டு உபயோக பொருட்கள் போன்றவற்றை வாங்க எந்த கிழமை நல்லது?

புதன்கிழமை சிறப்பான நாளாகும்.

வேறு எந்த நாட்களில் வாங்கலாம்?

ஞாயிற்றுக்கிழமைகளிலும் புதிய பொருட்களை தாராளமாக வாங்கலாம்.

புதிய பொருட்களை வாங்குவதால் மேலும் புதிய பொருட்களை வாங்கும் யோகம் எப்பொழுது வாங்கினால் உண்டாகும்?

“அசுவதி, சித்திரை, சுவாதி, திருவோணம், சதயம், ரேவதி” நட்சத்திர தினங்களில்

அதே போன்று தங்களிடம் இருக்கின்ற பழைய பொருட்களை விற்க நினைப்பவர்கள் எந்த நட்சத்திர தினங்களில் விற்கலாம்?

“பரணி, கிருத்திகை, ஆயில்யம், பூரம், விசாகம், பூராடம், பூரட்டாதி” ஆகிய நட்சத்திர தினங்களில் விற்கலாம்.

பழைய பொருட்களை விற்க ஏற்ற தினங்கள் எவை? வாரத்தில் திங்கட்கிழமை, வியாழக்கிழமை ஆகியவை ஏற்ற தினங்களாக இருக்கின்றன.

ஒருவரின் ஜென்ம நட்சத்திர தினத்தன்று ஒரு சில காரியங்களை செய்யலாம் என முன்னோர்கள் சாஸ்திர விதிகளாக வகுத்துள்ளனர்.

அவை எவை?

புதிதாக கல்வி பயிலுதல், நிலம், தோட்டம் போன்றவற்றை வாங்குதல், குழந்தைகளுக்கு அன்னபிரசன்னம் எனப்படும் சடங்கு செய்தல், பூணூல் போட்டுக் கொள்ளுதல், யாகம் செய்தல் போன்ற செயல்களை ஒவ்வொருவரும் தாங்கள் பிறந்த நட்சத்திர தினமான ஜென்ம நட்சத்திர தினத்தன்று செய்யலாம்.

ஒருவரின் ஜென்ம நட்சத்திர நாளில் என்னென்ன செய்வதை தவிர்க்க வேண்டும்?

வளைகாப்பு, சீமந்தம், முடி இறக்குதல், முகச்சவரம், நோய்க்கு முதன்முதலாக மருந்து சாப்பிடுதல், வெளியூர் பயணங்கள், கடல் கடந்த பயணங்கள் போன்றவற்றை

araneri

 

காலை சூரிய உதயம், மாலை சூரிய அஸ்தமனம் ஆகிய இரு வேளைகளும் எப்படி அழைக்கப்படுகிறது?

சந்தியா காலங்கள்

இந்த இரு வேளைகளிலும் என்ன செய்யக்கூடாது?

தெய்வ வழிபாட்டை தவிர எந்த விஷயங்களையும் செய்யக்கூடாது. மகாலட்சுமி நம் வீட்டிற்கு வரும் வேளையில் விளக்கேற்றி வரவேற்க வேண்டுமே தவிர மற்றதைச் செய்யக்கூடாது.

மாலை நேரத்தில் சாப்பிடக் கூடாது என்று பெரியவர்கள்

சொல்வதன் காரணம் என்ன?

சாப்பிடுவது, தூங்குவது, நகம் வெட்டுவது போன்றவை குறிப்பிட்ட நேரங்களில் தான் செய்ய வேண்டும். காலை, மாலை ஆகிய இரு வேளைகளும் தெய்வ வழிபாட்டை தவிர மேற்படி விஷயங்களை செய்யக்கூடாது.

செவ்வாய், வெள்ளிக்கிழமையில் வீட்டில் ஒட்டடை அடிக்கக் கூடாதா ஏன்?

செவ்வாயும், வெள்ளியும் பொருள் வாங்கிச் சேர்த்தால் என்ன நடக்கும்?

வளரும்.

செவ்வாய், வெள்ளிக்கிழமையில் வீட்டில் ஒட்டடை அடிக்கலாமா? இவ்விரு நாட்களிலும் வீட்டைத் துடைப்பதில்லை. முதல்நாளே ஒட்டடை அடித்து சுத்தப்படுத்தி விடுங்கள்.

வீட்டில் விளக்கேற்றும் போது சுவாமி படங்களுக்கு பூ கட்டாயம் போட வேண்டுமா?

காலையில் விளக்கேற்றி பூ சாத்தி வழிபடவேண்டும். மாலையில் பூ கட்டாயமில்லை.

கண்ணை மூடிக் கொண்டு கடவுளை வழிபடக்கூடாது என்கிறார்களே! உண்மையா?

கடவுளின் திருவுருவம் கண் முன்னே இருக்கும்போது கண்ணாரக் கண்டு வழிபட வேண்டும். திருவுருவம் இல்லாத இடத்தில் வழிபட வேண்டிய காலத்தில், கண்ணை மூடி மனதில் கடவுளின் உருவத்தை நிலை நிறுத்தி வழிபாடு செய்யலாம்.

araneri

 கோயிலில் முதலில் யாரை தரிசித்து வலம் வரவேண்டும்?

பிரதான மூலவரை

அடுத்து யாரை தரிசித்து வலம் வரவேண்டும்?

அம்பாள் மற்றும் பரிவாரங்களை தரிசித்து வலம் வரவேண்டும்.

மூன்றாவது யாரை தரிசித்து வலம் வரவேண்டும்?

நவக்ரஹம், சண்டிகேஸ்வரர், பைரவர் ஆகியோரை தரிசித்து வலம் வரவேண்டும்.

பஞ்சாங்கத்தில் நட்சத்திரம் திதி போன்றவை மதியம் ஆரம்பித்து மறுநாள் மதியம் வரை இருந்தால் விரதம் வழிபாட்டை எப்போது செய்ய வேண்டும்?

விரதம், வழிபாடு மேற்கொள்வதற்கு இரவில் திதி வியாபித்து இருக்கவேண்டும் என்பது நியதி. அதனால் முதல்நாளிலேயே விரதத்தை மேற்கொள்ள வேண்டும் என கூறப்படுகிறது. திதி கொடுப்பது, தர்ப்பணம் செய்வது போன்றவற்றிற்கு இது பொருந்தாது.

பொதுவாக எவற்றுக்கு இடையில் அல்லது யாருக்கு குறுக்கே செல்லக்கூடாது என்பார்கள்?

சுவாமி - நந்தி, கணவன் - மனைவி, பெற்றோர் - குழந்தை, குரு -சிஷ்யன், பசு - கன்று ஆகியோரது குறுக்கே செல்லக்கூடாது என்பது சாஸ்திர நியதி.

சிவன் கோயிலில் சுவாமிக்கும் நந்திக்கும் இடையில் செல்லக்கூடாது என்பது ஏன்?

நந்திதேவர் தமது மூச்சுக் காற்றின் வாயிலாக சுவாமிக்கு சாமரம் வீசி வழிபட்டுக் கொண்டே இருக்கிறார். அது தடைபடாமல் இருக்க நாம் இடையில் செல்லாமல் இருக்க வேண்டும். சுவாமிக்கு சாத்திய

மாலையை வாகனத்தின் முன்

கட்டிக் கொள்ளலாமா?

சுவாமிக்கு சாத்திய மாலைகள் என்னவாகும்?

பிரசாதம் எனும் புனிதப் பெயரையடைகின்றன.

இதனால் இதை பாதுகாக்க வேண்டுமா? எப்படி பாதுகாக்கவேண்டும்?

காலில் படும்படியாக எங்கும் விழ வைக்கக்கூடாது.

வாகனங்களில் கட்டிக் கொள்ளலாமா?

வாகனங்களில் கட்டிக் கொள்வதால் அது செல்லும் இடம் எல்லாம் சிதறி விழும்.

இதனால் என்ன நடக்கும்?

அதன் மீது மற்றைய வாகனங்கள் ஏறிச்செல்வது, நம் காலில் படுவது போன்ற தவறுகள் ஏற்படலாம். இது பாவச் செயல். செய்யக்கூடாது.

வீட்டிலிருந்து கிளம்பும்போது மூன்று பேராகச் செல்லக்கூடாது

என்பது உண்மைதானா?

சுபநிகழ்ச்சிகள் தொடர்பாக பேசச் செல்லும் போது மட்டும் மூன்று பேராகச் செல்லக்கூடாது. மற்ற நிகழ்ச்சிகளுக்கு பிரச்சினையில்லை என்று சொல்லப்படுகிறது.

வாழ்க்கை நவக்கிரகங்களுக்கு கட்டுப்பட்டதா அல்லது முற்பிறவி பாவபுண்ணிய அடிப்படையில் அமைக்கப்படுகிறதா?

முற்பிறவி பாவ புண்ணிய பலன்களின் அடிப்படையில் தான் வாழ்வு அமைகிறது. அதற்கான பலனைத் தரும் அதிகாரம் நவக்கிரகங்களின் கையில் உள்ளது. இதனால் தான் நவக்கிரகங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து வழிபடுகிறோம்.



வத்தளை, மாபொல, பங்களாவத்தை ஶ்ரீ கனகதுர்க்கை அம்மன் ஆலய தேர்த்திருவிழா


வத்தளை, மாபொல, பங்களாவத்தை அருள்மிகு ஶ்ரீ கனகதுர்க்கை அம்மன் ஆலயத்தின் முதலாவது வருஷாபிஷேகம் கடந்த 30 ஆம் திகதி காலை நடைபெற்ற கணபதி ஹோமத்துடன் ஆரம்பமாகியது. அன்று மாலை மாரியம்மன் ஆலய திருவிழாவும் நடைபெற்றது.

கடந்த 2ஆம் திகதி முதல் மாலை 4. 30 மணிக்கு அருள்மிகு ஶ்ரீ கனகதுர்க்கை அம்மனுக்கும் பரிவார மூர்த்திகளுக்கும் விஷேட அபிஷேகங்களும் பூஜைகளும் நடத்தப்படுவதுடன் வசந்த மண்டப பூஜைகளும் நடத்தப்பட்டு அம்பாள் உள்வீதி வலம் வந்து அருள்பாலிக்கும் நிகழ்வும் இடம்பெறுகிறது. இந்நிகழ்வுகள் இவ்வாறு எதிர்வரும் 8ஆம் திகதி வரை நடைபெறும். எதிர்வரும் 9 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை காலை அஷ்டோத்திரசதா சங்காபிஷேகம், அபிஷேகம், பூஜை என்பன நடத்தப்படும். அன்று பிற்பகல் 2 மணிக்கு வசந்த மண்டப பூஜை நடத்தப்படு​ம். அதனைத் தொடர்ந்து வண்ணமிகு தேரில் ஆரோகணித்து அம்பாள் வௌிவீதி வலம் வந்து அருள்பாலிக்கும் நிகழ்வு இடம்பெறும்.

ஆலயத்திலிருந்து புறப்படும் தேர், அல்பர்ட் பீரீஸ் மாவத்தை, பரணவத்தை, கெரவலப்பிட்டிய அதிவேக வீதி சந்தி வரை சென்று கெரவலப்பிட்டி 20 அடி வீதி சாந்தி வீதி, பங்களாவத்தை சாந்தி வீதி, எட்டபலம்வத்தை வழியாக மீண்டும் ஆலயத்தை வந்தடையும். எதிர்வரும் 10 ஆம் திகதி பால்குடபவனியும் தீர்த்தோற்சவமும் நடைபெறும். எதிர்வரும் 10 ஆம் திகதி மாலை 5 மணிக்கு திருவூஞ்வல் திருவிழாவும் பூங்காவனமும் நடைபெறும். 12 ஆம் திகதி மாலை 6 மணிக்கு வைரவர் மடை இடம்பெறும்.

52 ஆண்டுகால வரலாற்றை கொண்ட பொரளை ஶ்ரீ முத்துமாரியம்மன் ஆலயம்

கொழும்பு 08, பேஸ் லைன் வீதி, பொரளை சந்தியின் சந்தைக்கு அருகில் உள்ள அமைந்துள்ளது 66ஆம் இலக்க தோட்டம். இந்த தோட்டத்தில் 66ஆம் ஆம் இலக்கத்தில் அமைந்துள்ளது அருள்மிகு ஶ்ரீ முத்துமாரியம்மன் ஆலயம். இந்த ஆலயம் இங்கு அமைக்கப்பட்டு 52 வருடங்களாகின்றன. இவ்வாயத்தில் செவ்வாய், வௌ்ளி தோறும் பூஜைகள் நடத்தப்படுவதுடன் வருடாந்த திருவிழாவும் நடத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. இந்த வருடாந்த தேர்த்திருவிழாவின் போது அம்பாள் வண்ணமிகு தேரில் ஆரோகணித்து வௌிவீதி வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். இவ்வாயலயத்தில் தேர்த்திருவிழா நடைபெறும் போது பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்படுவதுடன் இந்த வருடாந்த உற்சவம் நடைபெறுகின்றபோது இப்பகுதியில் உள்ள பிள்ளைகளின் கலைநிகழ்ச்சிகளும் மேடையேற்றப்படும்.

இங்குள்ள இளைஞர்கள் 52 ஆண்டுகளுக்கு முன் உதைப்பந்தாட்டம் விளையாடுவதில் மிகவும் ஆர்வமாக இருந்தார்கள். இவர்கள் உதைப்பந்தாட்டம் விளையாடுவதற்கு ஒன்று கூடுகின்ற இடம் தான் இந்த ஆலயம் அமைக்கப்பட்டுள்ள இடம். இவ்வாறு உதைப்பந்தாட்டம் விளையாட ஒன்று கூடியவர்களின் எண்ணத்தில் இங்கு ஒரு ஆலயம் அமைக்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டது. அதன்பயனாக ஆரம்பத்தில் சூலாயுதம் ஒன்று வைத்து வணங்கி வந்தார்கள். காலப்போக்கில் அம்மன் சிலையை கொண்டு வந்து வைத்து வழிபடத் தொடங்கினார்கள்.

இந்த பகுதியிலே பௌத்தா்கள், கிறிஸ்தவர்கள், முஸ்லிம்கள், இந்துக்கள் அனைவரும் ஒற்றுமையாக வாழ்ந்து வந்த, வாழ்ந்து வருகின்ற ஒரு பிரதேசமாகும். எனவே இவ்வாலயத்தில் திருவிழா நடைபெறுகின்றபோது அனைவரும் உதவி ஒத்துழைப்புகள் வழங்கத் தவறுவது இல்லை.

இந்த ஆலயம் பொரளை சந்தியில் சந்தைக்கு அருகில் அமைந்துள்ளதால் சந்தையிலுள்ள வர்த்தகர்களும் வியாபாரிகளும் இவ்வாலய உற்சவசத்துக்கு நிதியுதவிகளும் பொருள் உதவிகளும் வழங்கி வந்தார்கள்.

இவ்வாறு ஆலயம் அமைக்கப்பட்டதும் காலப்போக்கில் இங்கு நிர்வாக சபையொன்று அமைக்கப்பட்டு அந்த நிர்வாக சபையின் பரிபாலத்தின் கீழ் பூசைகள், வருடாந்த உற்சவங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.



தானம், தர்மம், அறம்

தானம், தர்மம் இரண்டும் ஒன்றா? இல்லை

தர்மம் என்பது என்ன?

தர்மம் என்பது யாரும் கேட்காமல், அவருக்கே தெரியாமல் அவருக்கு செய்யக் கூடிய நன்மையாகும்.

பசியால் வாடும் ஒருவர் தன் பசியை கூறி கேட்டால் அது என்ன?

தானம்,

இதில் எது புண்ணிய கணக்கில் சேரும்? தர்மம்

அவன் பசி அறிந்து அவன் கேட்காமலே அவனுக்கு உணவு அல்லது உதவி செய்வது தர்மமாகும்.

தர்மம் என்றால் என்ன? தானம் என்றால் என்ன? அறம் என்றால் என்ன?

இருப்பதில் கொடுப்பது “தானம்”……. இருப்பதையே கொடுப்பது “தர்மம்”…… கொடுப்பதையும் தக்க இடம்நோக்கிக் கொடுப்பது “அறம்”…..!

தன்னிடம் இருந்த பொன் பொருளை, அள்ளி அள்ளி “வலதுகை கொடுப்பதை இடதுகை அறியாமல்” கொடுத்த “கொடை” யானது என்ன?

தானம்

அப்படி கொடுத்தவர் யார்? “கர்ணன்”

தனக்கென ஒன்றே ஒன்றுதான் உள்ளது, அதை இழந்துவிட்டால் மீண்டும் பெறமுடியாது என்னும் சூழலைக் கொண்ட, “கவச குண்டலம்”

அந்தணன் உருவில், இந்திரன் வந்து, தந்திரம் செய்தபோது, அதனை அறுத்தெடுத்துக் கொடுத்தமை என்ன?

“தர்மம்”

இப்போது “குருஷேஸ்த்ரம்….! அர்ஜுனனின் அம்புபட்டு அமரனாகப்போகும் சூழ்நிலையில், தன்னிடம் வந்து, அந்தணன் உருவில் கையேந்தும் கண்ணன்……கொடுத்த்து என்ன?

இருப்பதில் கொடுக்கவோ, இருப்பதைக் கொடுக்கவோ ஏதுமில்லையேயென கர்ணன் தவித்தபோது, இதுவரை சேர்த்துவைத்த ”புண்ணியம்” அனைத்தையும், கண்ணன் கையிலே, உதிரத்தால் தாரைவார்த்தான்……..!

இது தானமா, தர்ம்மா, அறமா? அறம்

அறத்துக்குள் சங்கமம் ஆவது என்ன?

தானத்தின் பெருமையும், தர்மத்தின் சிறப்பும் அறத்துக்குள் சங்கமம் ஆகின்றன.

தானமும், தர்மமும் இமியளவேனும் சுயநலம் கருதாது செய்யப்படும்போது, அவையே என்னவாகின்றன?

அறமாகின்றன.

அந்த அறமானது, எங்கே படைக்கப்பட வேண்டியது? ஆண்டவன் பாதத்தில்

ஆனால், அதனைப் பகவானின் திருக்கரத்திலே தாரைவார்த்து ஒப்படைக்கின்ற பேறு யாருக்குக் கிடைத்தது?

கர்ணனுக்கு

விழலுக்கு இறைக்காமல், வீணரிடம் போகாமல் எங்கே போகவேண்டுமோ அங்கேயே போய்ச் சேருவது என்ன?

அறம்.நம் வீட்டில் உள்ள பொருட்களில் எவற்றை மற்றவர்களுக்கு தானமாக கொடுக்க கூடாது?

கத்தரிக்கோல், கத்தி, ஊசி போன்றவற்றை

இந்த பொருட்களை தானமாக கொடுத்தால் என்ன நடக்கும்?

கஷ்டம் வந்து கொண்டே இருக்கும்

முதலில் தானமாக கொடுக்கக்கூடாது என்று சொல்லப்படும் பொருள் எது?

நம் வீட்டில் எரிந்த தீபம்.

அதாவது நம் வீட்டில் ஏற்றப்பட்ட, எரிந்த தீபத்தை தானமாக கொடுக்க கூடாது.

நம் வீட்டிலிருந்து திருடும் போகலாமா?

கூடாது என்று சொல்லப்பட்டுள்ளது.

நம் வீட்டில் எரிந்த தீபம் தானமாகக் கொடுத்தாலும், திருட்டுப் போனாலும் என்ன நடக்கும்?

அந்த விளக்கு எந்த இடத்திற்கு சென்றதோ, அவர்களுக்கு நம்முடைய அதிர்ஷ்டமும் சென்றுவிடும் என்கிறது சாஸ்திரம்.

எந்த பொருட்களையெல்லாம் கட்டாயமாக திருமணமாகி சென்ற பெண்ணிற்கு கொடுக்கக்கூடாது என்று சொல்லுவார்கள்?குறிப்பாக வீட்டின் பூஜை அறையில் வைத்து பூஜை செய்து கொண்டிருக்கும் சுவாமி படங்களாக இருந்தாலும் சரி, சுவாமி சிலைகளாக இருந்தாலும் சரி, அந்த பொருட்களையெல்லாம்

இதற்கு என்ன காரணம் சொல்லப்படுகிறது?

பிறந்த வீட்டு லட்சுமி தேவியை, புகுந்த வீட்டுக்கு கொடுத்த அனுப்புவதற்கு சமம் என்று சொல்லுவார்கள்.

தானம் கொடுக்க கூடாத பொருட்கள், சூழ்நிலை காரணமாக தானம் கொடுக்கப்பட்டாலும், நம் வீட்டை விட்டு வெளியே சென்றாலும், ‘அந்த பொருட்களினால் பயன் அடையப் போவது யார்?

நம் வாரிசு தான்!

அதனால் அதில் எந்த ஒரு தவறும் இல்லை’. என்ற எண்ணம் உங்களுக்கு இருந்து விட்டால் என்ன நடக்கும்?

எந்த ஒரு தோஷமும் உங்களை தாக்காது என்பது குறிப்பிடத்தக்கது.



சுதுமலை ஶ்ரீ புவனேஸ்வரி அம்பாள் தேவஸ்தான தேர்த்திருவிழா

 


சுதுமலை ஶ்ரீ புவனேஸ்வரி அம்பாள் தேவஸ்தானத்தின் தேர்த்திருவிழா எதிர்வரும் 2023.06.02ஆம் திகதி காலை 10 மணிக்கு நடைபெறவுள்ளது. எதிர்வரும் 2023.06.03 ஆம் திகதி காலை 10.51 மணிக்கு தீர்த்தத்திருவிழா நடைபெறும்.

இவ்வாலயத்தின் கொடியேற்றம் கடந்த 17 ஆம் திகதி நடைபெற்றது. இவ்வாலயத்தில் தினமும் அதிகாலை 5 மணிக்கு ஆயத்தமணியும் 5.30 மணிக்கு உதயபூஜையும் 7 மணிக்கு காலை பூஜையும் 8 மணிக்கு அபிஷேகமும் 9.30 மணிக்கு விஷேட பூஜையும் 10 மணிக்கு ஸ்தம்ப பூஜையும் 11 மணிக்கு வசந்த மண்டபப் பூஜையும் தொடர்ந்து அம்பாள் வீதியுலா வருதலும் பகல் 1 மணிக்கு சண்டேஸ்வரி பூஜையும் இடம்பெறும்.

மாலை 4 மணிக்கு ஆயத்த மணியும் 4.30 மணிக்கு சாயரட்சை பூஜையும் 5 மணிக்கு ஸ்தம்ப பூஜையும் தொடர்ந்து அம்பாள் வீதியுலாவும் இரவு 8 மணிக்கு அர்த்தஜாமப் பூஜையும் நடைபெறும்.

எதிர்வரும் 2 ஆம் திகதி காலை 9 மணிக்கு வசந்த மண்டபப் பூஜை, 10 மணிக்கு தேர்பவனி ஆரம்பமாகும். மாலை 3 மணிக்கு பச்சை சாத்தல் அம்பாள் தேரில் இருந்து இறங்கி வருதல், மாலை 4.30 மணிக்கு சாயரட்சை பூஜை தொடர்ந்து தேரடி உற்சவம் என்பன இடம்பெறும். எதிர்வரும் 3ஆம் திகதி காலை5 மணிக்கு உதயபூஜையும் 5.30 மணிக்கு காலைச் சந்தியும் 5.45 மணிக்கு அபிஷேகமும் 7 மணிக்கு விஷேட பூஜையும் 7.30 மணிக்கு ஸ்தம்பப் பூஜையும் 8 மணிக்கு பேரீதாடனமும் சூர்ணோற்சவமும் 9 மணிக்கு வசந்த மணடபப்பூஜையும் 10.51 மணிக்கு தீர்த்த வாரியும் 11.30 மணிக்கு யாக கும்ப அபிஷேகமும் நண்பகல் 12 மணிக்கு உச்சிகால பூஜையும் அருட்பிரசாதம் வழங்கலும் இடம்பெறும். அன்று மாலை 4 மணிக்கு சாயரட்சை பூஜையும் 5 மணிக்கு திருவூஞ்சலும் 6 மணிக்கு துவஜாரோஹணமும் இடம்பெறும்.

எதிர்வரும் 5 ஆம் திகதி பூங்காவனத் திருவிழா நடைபெறும்.

இதனை மானிப்பாய் சுதுமலை ஶ்ரீ புவனேஸ்வரி அம்பாள் தேவஸ்தானத்தின் தலைமை குருக்கள் சிவஶ்ரீ கலாநிதி ம, பாலகைலாச குருக்கள் தெரிவித்தார்.



தானம், தர்மம், அறம்

 

இப்போது “குருஷேஸ்த்ரம்….! அர்ஜுனனின் அம்புபட்டு அமரனாகப்போகும் சூழ்நிலையில், தன்னிடம் வந்து, அந்தணன் உருவில் கையேந்தும் கண்ணன்……கொடுத்த்து என்ன?

இருப்பதில் கொடுக்கவோ, இருப்பதைக் கொடுக்கவோ ஏதுமில்லையேயென கர்ணன் தவித்தபோது, இதுவரை சேர்த்துவைத்த ”புண்ணியம்” அனைத்தையும், கண்ணன் கையிலே, உதிரத்தால் தாரைவார்த்தான்……..!

இது தானமா, தர்ம்மா, அறமா? அறம்

அறத்துக்குள் சங்கமம் ஆவது என்ன?

தானத்தின் பெருமையும், தர்மத்தின் சிறப்பும் அறத்துக்குள் சங்கமம் ஆகின்றன.

தானமும், தர்மமும் இமியளவேனும் சுயநலம் கருதாது செய்யப்படும்போது, அவையே என்னவாகின்றன?

அறமாகின்றன.

அந்த அறமானது, எங்கே படைக்கப்பட வேண்டியது? ஆண்டவன் பாதத்தில்

ஆனால், அதனைப் பகவானின் திருக்கரத்திலே தாரைவார்த்து ஒப்படைக்கின்ற பேறு யாருக்குக் கிடைத்தது?

கர்ணனுக்கு

விழலுக்கு இறைக்காமல், வீணரிடம் போகாமல் எங்கே போகவேண்டுமோ அங்கேயே போய்ச் சேருவது என்ன?

அறம்.நம் வீட்டில் உள்ள பொருட்களில் எவற்றை மற்றவர்களுக்கு தானமாக கொடுக்க கூடாது?

கத்தரிக்கோல், கத்தி, ஊசி போன்றவற்றை

இந்த பொருட்களை தானமாக கொடுத்தால் என்ன நடக்கும்?

கஷ்டம் வந்து கொண்டே இருக்கும்

முதலில் தானமாக கொடுக்கக்கூடாது என்று சொல்லப்படும் பொருள் எது?

நம் வீட்டில் எரிந்த தீபம்.

அதாவது நம் வீட்டில் ஏற்றப்பட்ட, எரிந்த தீபத்தை தானமாக கொடுக்க கூடாது.

நம் வீட்டிலிருந்து திருடும் போகலாமா?

கூடாது என்று சொல்லப்பட்டுள்ளது.

நம் வீட்டில் எரிந்த தீபம் தானமாகக் கொடுத்தாலும், திருட்டுப் போனாலும் என்ன நடக்கும்?

அந்த விளக்கு எந்த இடத்திற்கு சென்றதோ, அவர்களுக்கு நம்முடைய அதிர்ஷ்டமும் சென்றுவிடும் என்கிறது சாஸ்திரம்.

எந்த பொருட்களையெல்லாம் கட்டாயமாக திருமணமாகி சென்ற பெண்ணிற்கு கொடுக்கக்கூடாது என்று சொல்லுவார்கள்?குறிப்பாக வீட்டின் பூஜை அறையில் வைத்து பூஜை செய்து கொண்டிருக்கும் சுவாமி படங்களாக இருந்தாலும் சரி, சுவாமி சிலைகளாக இருந்தாலும் சரி, அந்த பொருட்களையெல்லாம்

இதற்கு என்ன காரணம் சொல்லப்படுகிறது?

பிறந்த வீட்டு லட்சுமி தேவியை, புகுந்த வீட்டுக்கு கொடுத்த அனுப்புவதற்கு சமம் என்று சொல்லுவார்கள்.

தானம் கொடுக்க கூடாத பொருட்கள், சூழ்நிலை காரணமாக தானம் கொடுக்கப்பட்டாலும், நம் வீட்டை விட்டு வெளியே சென்றாலும், ‘அந்த பொருட்களினால் பயன் அடையப் போவது யார்?

நம் வாரிசு தான்!

அதனால் அதில் எந்த ஒரு தவறும் இல்லை’. என்ற எண்ணம் உங்களுக்கு இருந்து விட்டால் என்ன நடக்கும்?

எந்த ஒரு தோஷமும் உங்களை தாக்காது என்பது குறிப்பிடத்தக்கது.



வேலையும் மயிலையும் வணங்க சிறந்த நாள் வைகாசி விசாகம்

முருகப் பெருமானுக்குரிய முக்கிய விரத நாட்களில் ஒன்று வைகாசி விசாகம் ஆகும். அனைத்து மாதங்களிலும் விசாகம் நட்சத்திரம் வரும் என்றாலும், வைகாசி மாதத்தில் வரும் விசாகம் தனிச்சிறப்பு வாய்ந்ததாகும். இது முருகப் பெருமான் அவதரித்த தினம் என சொல்லப்படுகிறது. ஈசனின் நெற்றிக்கண்ணில் இருந்து தோன்றியவர் முருகப் பெருமான். நெற்றிக்கண்ணில் உதித்த குழந்தை ஆயிரம் இதழ் கொண்ட தாமரை இதழின் மேல் காணப்பட்டது.

கார்த்திகை பெண்களை அழைத்த சிவ பெருமான், இந்த குழந்தையை வளர்க்கும் பொறுப்பை அளித்தார். ஆறு பேரும் தொட்டவுடன் அது ஆறு குழந்தைகளாக தோன்றியது. ஆறு உருவங்களாக இருந்த முருகப் பெருமானை அன்னை பார்வதி தேவி, ஒன்றாக சேர்த்து அணைத்ததும் ஆறு உருவமும் ஒரே உருவாகமாக மாறி, ஆறு முகங்களுடன் முருகப் பெருமான் காட்சி அளித்த தினம் தான் இந்த வைகாசி விசாக திருநாள். நெற்றிக்கண்ணில் இருந்து தோன்றியதால் அவருக்கு கந்தன் என்ற பெயரும் ஏற்பட்டது.

விசாக நட்சத்திரத்தில் புதிய உருவம் கொண்டவர் என்தால் முருகனுக்கு விசாகன் என்ற திருநாமம் உண்டு. 'வி' என்றால் பக்ஷி என்றும், 'சாகன்' என்றால் வாகனமாக கொண்டவன் என்றும் பொருள். மயிலை வாகனமாக கொண்டவன் என்பது விசாகன் என்ற சொல்லுக்கு பொருளாகும். இதனால் வைகாசி விசாகத்தன்று வேலையும், மயிலையும் வணங்குவது மிக சிறப்பானதாகும். அதே சமயம் 6 முனிவர்களின் சாபங்களை போக்கி, முருகன் அருள் செய்த தினமும் இதே வைகாசி விசாகம் தான். வைகாசி மாதத்தில் பெளர்ணமி திதியும், விசாகம் நட்சத்திரமும் கூடி வரும் நாளை வைகாசி விசாகம் என்கிறோம். இது ஆண்டு தோறும் மே அல்லது ஜூன் மாதங்களில் கடைபிடிக்கப்படுகிறது. 2023 ம் ஆண்டில் வைகாசி விசாகமானது ஜூன் 2 ம் திகதி காலை 05.55 மணிக்கு துவங்கி, ஜூன் 03 ம் திகதி காலை 05.54 வரை விசாகம் நட்சத்திரம் உள்ளது.

நான்கு திசைகளில் மட்டுமின்றி சொர்க்கம் மற்றும் பாதாளத்தில் உள்ள அடியவர்களையும் காப்பதற்காகவே முருகப் பெருமான் ஆறு திருமுகங்களைக் கொண்டுள்ளார் என புராணங்கள் சொல்கின்றன. இந்த ஆறு முகங்களும் முறையே ஞானம், வைராக்கியம், பலம், கீர்த்தி, செல்வம், ஐஸ்வர்யம் ஆகிய ஆறு விதமான பலன்களை தரக் கூடியதாகும். வைகாசி விசாகத்தன்று முருகனின் அருள் வேண்டுவோர் பால்குடம், காவடி எடுத்து வழிபடுவார்கள்.

பொன்விழா நாயகன் கலைஞர் கலாபூஷணம் கே. செல்வராஜன்.

கலைஞர், கவிஞர், நாடக நெறியாளர் என கலைத்துறையிலே பல்வேறு ஆளுமைகளைக் கொண்டவர் கலாபூஷணம் கே. செல்வராஜன்.

இலங்கையில் கலைத்துறைக்காக தன்னை அர்ப்பணித்து 50 வருடங்களுக்கு மேலாக கலைத்துறைக்கு அரும்பணி ஆற்றி வருபவர் கலாபூஷணம் கே. செல்வராஜன்.

பெயரிலேயே செல்வத்தையும் ராஜாவையும் கொண்ட இவர் காசு பணம் இருக்குதோ இல்லையோ கலைத்துறையிலே செல்வச் செழிப்புடன் என்றும் ராஜாவாகத் திகழ்கிறார்.

இவர் கலைத்துறைக்கு வந்து 50 ஆண்டுகள் நிறைவடைவதையொட்டி எதிர்வரும் 2023.05.28ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3 மணிக்கு கொழும்பு மருதானை டவர் மண்டபத்தில் பொன்விழா நிகழ்வுகள் நடைபெறவுள்ளன. இந்த விழாவில் கலைஜோதி விருது வழங்கி 35 கலைஞர்கள் கௌரவிக்கப்படவுள்ளார்கள்.

இங்கு சிறப்பு அம்சமாக துள்ளுவதோ இளமை என்ற நகைச்சுவை நாடகமும் அரங்கேறவுள்ளது. இந்த நாடகத்தை பொன் பத்மநாதன் தயாரித்து அளிக்கிறார். இந்த நாடகத்தில் பி. நந்தகுமார், எம். கே. சிதாகர், தேவர் முனிவர், கே. விஷய், எஸ். யுவராஜா, பி. மாக்ரட், ஏ. வீரபுஸ்பநாதன், எஸ். சரவணா, ஆர். கணேறன், வீ. டிலுக்‌ஷன், எஸ். சந்தியா ஆகியோர் நடிக்கின்றனர். கலாபூஸணம் கே. செல்வராஜன் இயக்கும் இந்த நாடகத்தின் உதவி தயாரிப்பு பணியில் எஸ். யுவராஜாவும் இசையமைப்பில் கே. அசோகனும் தங்கள் திறன்களை காட்டவுள்ளனர். இவ்விழாவில் கலைஞர்களின் பரத நாட்டியமும் நாட்டிய நாடகமும் திரையிசை நடனங்களும் இடம்பெறவுள்ளன. கலாபூஷணம் கே. செல்வராஜனின் பொன்விழா சிறப்பு நிகழ்வை சிலோன் யுனைட்டட் ஆர்ட் ஸ்டேஜ் அமைப்பின் போஷகர் பொன் பத்மநாதன், செயலாளர் எம். தேவர் முனிவர், வித்யாசாகர் ஏ. சசாங்கன் சர்மா ஆகியோர் நடத்துகின்றனர். நிழ்ச்சிகளை வித்யாசாகர் ஏ. சசாங்கன் சர்மா தொகுத்து வழங்குகிறார்.

இதில் வரவேற்புரையை கலைமாமணி பொன் பத்மநாதனும் தலைமையுரையை கே,டீ. குருசாமி, பாராட்டுரையை தமிழ்மணி மானா மக்கீனும் சிறப்புரையை கலாபூஷணம் கலைச்செல்வன், வாழ்த்துரையை டீ. மகேந்திரனும் நிகழ்த்தவுள்ளனர்.

1953ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 05ஆம் திகதி வடகொழும்பில் சுப்பிரமணியம் கந்தையா, சங்கரம்மாள் தம்பதிகளுக்கு மகனாகப் பிறந்த இவர், ஜிந்துப்பிட்டி, ஊருகொட வத்தை, புதுச்செட்டித்தெரு ஆகிய இடங்களில் வளர்ந்தவர். கொழும்பு 09, தெமட்டகொடை அரசினர் தமிழ் வித்தியாலயத்தில் கல்வி பயின்றார். இந்த பாடசாலை இன்று விபுலானந்தர் மகா வித்தியாலயமாக பெயர் மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது. இந்தப் பாடசாலை அறிவிப்பாளர் அப்துல் ஹமீட், நடிகரும் தயாரிப்பாளருமான கே. சந்திரசேகரன், கல்வியியலா

ளர் ஜி.போல்அந்தனி, வி.கே.டி. பாலன், எம். கனகராஜ் பிரபல்யங்களை பலரை உருவாக்கிய பாடசாலையாகத் திகழ்கிறது.

பாடசாலையிலே பயில்கின்ற காலத்திலேயே கவிதை எழுதுவதில் நாட்டம் கொண்டவர் கலைஞர் கலாபூஷணம் கே. செல்வராஜன். இவர் கவிதை எழுதும் திறனைக் கண்ட ஆசிரியர்கள் பாராட்டினார்கள்.

ஊருகொடவத்தையில் ஒரு நாள் 'அரிச்சந்திரா' நாடகத்தை மேடையேற்றினார்கள். பலகைகளை அடுக்கி மேடை

அமைத்து ஓலைகளால் மறைத்து, மைதானத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் முன்னிலையில் இந்த நாடகத்தை மேடையேற்றினார்கள். சுமார் மூன்று மணி

நேரம் மேடையேற்றப்படும் இந்த நாடகத்தைப் பார்த்துப் பரவசம் அடைந்து இருக்கும் தருவாயில் இரவு

பதினொரு மணிக்கு மீண்டும் இந்த நாடகம் இரண்டாவது தடவையும் மேடையேற்றப்படும் என்று அறிவிக்கப்பட்டதும் அதே பரவசத்துடன் ஒரு மணி நேரம் காத்திருந்து மீண்டும் அந்த நாடகத்தைப் பார்த்து விட்டுத் தான் வீட்டுக்கு சென்றுள்ளார். நாடகத்தின் மீது அவருக்கு அப்போதே அவ்வளவு ஆர்வம் இருந்தது.

இந்த நாடகம் தந்த ஈர்ப்பால் தன்னுடன் பாடசாலையில் படிக்கும் சக மாணவர்களையும் இழுத்துக் கொண்டு 'நல்ல நாடு' என்ற ஒரு நாடகத்தைத் தானே எழுதி மாணவர்களை நடிக்க வைத்து பாடசாலைக் கலைவிழாவில் அரங்கேற்றியுள்ளார்.

தனது 18வது வயதில் பெற்றோர்களுடன் இவர் ஜிந்துப்பிட்டிக்கு இடம்பெயர்ந்துள்ளார். அவருக்குள் இருந்த அரங்கு பற்றிய ஆர்வமும் செல்வராஜனை அங்கிருந்த நாடகக் கலைஞர்களுடன் இணைத்து விட்டது.

எம்.எம்.ஏ. லத்தீப், கே.ஏ.ஜவாகர், ஆர்.பி. மகாராஜா, ஏ.ஸி.எம் ஹூசைன் பாருக், ஜோபு நசீர் போன்றவர்களுடன் இளம் கலைஞர் குழுவில் இணைந்து கொண்டார்.

இவருடைய கவிதைகள் மெட்டமைத்த பாடல்களாக இவர்களின் நாடகங்களில் இடம்பிடித்துக் கொண்டன.

1973ல் இவர் எழுதிய 'பாவ சங்கீர்த்தனம்' என்னும் நாடகம் ஏ.ஸி.எம் ஹூசைன் பாருக் இயக்கத்தில், லத்தீப் ப்ரொடக்சன் மூலம் மேடை ஏறப் போவதாக விளம்பரங்கள் வந்தன.

அடுத்த நாள் செல்வராஜனை பாதையில் இருவர் வழிமறித்து 'நீ தான் செலவராஜனா?

பாவ சங்கீர்த்தனம் நாடகம் நீ தான் போடுகின்றாயோ... பாவ சங்கீர்த்தனம் என்னும் பெயரை மாற்று அல்லது நாடகத்தை நிறுத்திக் கொள். எங்கள் லடீஸ் வீரமணி அண்ணன் உனக்கு முன்பிருந்தே எழுதிக் கொண்டிருக்கிறார். அந்தப் பெயரில் நாடகம் போட அவருக்கே உரிமை உண்டு. மரியாதையாக நிறுத்தி விடு' என்றார்கள்.

அவர்களது அடாவடித்தனம் இவருக்குப் பிடிக்கவில்லை. பாவ சங்கீர்த்தனம் என்பது ஒரு பொதுச் சொல். யாருக்கும் சொந்த மானது அல்ல.

போஸ்டர், நோட்டீஸ் என்று அடித்தாகிவிட்டது. ஆகவே தீர்மானமாகக் கூறினார் 'பெயரை மாற்ற மாட்டேன். நாடகத்தை நிறுத்தவும் மாட்டேன்' என்று. பலத்த வாக்கு வாதம் நடந்தது. அவர்களில் ஒருவர் செல்வராஜனின் கன்னத்தில் 'பளார்' என்று அறைந்தார்.

'நிறுத்துடான்னா சும்மா சொன்னதையே சொல்லிகிட்டு.........' பேரை மாற்றாமல் பாவ சங்கீர்த்தனம் நாடகம் போட்டுப் பார் என்ன நடக்குதுன்னு...' என்றபடி போய்விட்டார்.

இளங்கலைஞர் குழு கூடியது. ஆராய்ந்தது. நீண்ட ஆலோசனைகளுக்குப் பின் 'கேளுங்கள் தரப்படும்' என்று பெயர் மாற்றப்பட்டது.

இந்த நாடகத்தின் முக்கிய பாத்திரமான பாதிரியார் வேஷசத்தை ஏற்று நடித்தவர் லடீஸ் வீரமணியே என்பது எத்தனை ஆச்சர்யமானது. கே.செல்வராஜின் இந்த முதல் நாடகம் தந்த வெற்றியுடன் உருவானது தான் 'சிலோன் யுனைட்டட் ஆர்ட் ஸ்டேஜ்' என்னும் அரங்கியல் அமைப்பு. இந்த நாடக மன்றத்தின் இயக்குனர் கே.செல்வராஜ் இந்த மன்றத்தின் தயாரிப்பில், செல்வராஜனின், கீழ் கண்ட நாடகங்கள் மேடை ஏறியுள்ளன.

1973 - கேளுங்கள் தரப்படும், 1974 - உறவுகள் - பொரளை வை. எம். எம்.ஏ மண்டபம், 1975 - புதுப் பணக்காரன் - பொரளை

வை. எம். எம்.ஏ மண்டபம், 1976 - அவள் ஒரு மெழுகுவர்த்தி -

பொரளை வை. எம். எம்.ஏ மண்டபம், 1976 - உனக்கு நான் சொந்தம் -பம்பலபிட்டி கதிரேசன் மண்டபம், 1977 - மோகம் முப்பது நாள் - லயனல் வெண்ட் அரங்கு, 1988 - இங்கேயும் மனிதர்கள் - டவர் அரங்கு, 1997 - பிரளயம் - எல்பின்ஸ்டன் மாளிகை, 1998 - வரம் - கலைஞர் எஸ். உதயகுமார்

டவர் அரங்கு, சத்திய சோதனை - கே. செல்வராஜன்

டவர் அரங்கு.

இரண்டு நாடகங்களை ஒரே மேடையில் அரங்கேற்றிய ஒரு புதுமையையும் செய்தவர் இந்த செல்வராஜன்.

2002 - ஒரு கொலைவலை - பொரளை வை. எம். எம்.ஏ மண்டபத்தில் இரண்டு காட்சிகள். இவைகள் அனைத்தும் இவர் எழுதி இயக்கி மேடையேற்றிய நாடகங்கள்.

இவை தவிரவும் தனது நாடக மன்றம் (சிலோன் யுனைட்டட் ஆர்ட் ஸ்டேஜ்) மூலமாக மற்றக் கலைஞர்களின் நாடகங்களையும் மேடை ஏற்றி இருக்கின்றார்.

1975 'உதிர்ந்த ரோஜா' (திவ்யராஜன்), 1977 சுஜாதாவின் 'முதல் நாடகம்', 1979 ஜீவகீதம், 1980 சுஜாதாவின் கடவுள் வந்திருந்தார், 1981 கோமல் சுவாமிநாதனின் தண்ணீர்

தண்ணீர், 1981 வியட்நாம் வீடு சுதந்திரத்தின் ஞான

ஒளி, 1987 கோமல் சுவாமிநாதனின் மனிதன் என்னும் தீவு;

1994 பூகம்பம், 1997 சலங்கையின் நாதம் -எம். உதயகுமார்,

1999 ஸ்ரீதர் பிச்சையப்பாவின் இதற்குத் தானே ஆசைப்பட்டாய்.

(1998ல் காரைதீவு குண்டு வெடிப்பில் பார்வை பாதிக்கப்பட்ட ஸ்ரீதர் பிச்சையப்பாவின் கண் சிகிச்சைக்காக 1999 மார்ச், ஏப்ரல்

மாதங்களில் இரண்டு முறை மேடையேறி அதன்மூலம் திரட்டப்பட்ட நிதி ஸ்ரீதர் குடும்பத்தினரிடம் கையளிக்கப்பட்டது.

2001 பேராதனை ஜூனைதீனின் சலனம், 2002 நீர்க் கொழும்பு முத்துலிங்கத்தின் மௌனத்திரை, 2003 ஜூனைதீனின் 'வேலி', நாகூர்கனியின் இப்போ இதெல்லாம் சகஜங்க கொழும்பிலும் நாட்டின் இதர பகுதிகளிலும் இத்தனை நாடகங்களை மேடை யேற்றியுள்ள ஒரு அசுரத் துணிவைக் கொண்ட மனிதர்

இந்த கே.செல்வராஜன். இதுமட்டுமா முத்தாக மூன்று நுால்களையும் அச்சிட்டு வௌியிட்டவர். இவர் தன்னுடைய நாடக உலக அனுபவங்களை 'என் நினைவுகளும் நிஜங்களும்' என்னும் தலைப்பில் ஒரு நூலாக வெளியிட்டிருக்கின்றார். நாடக உலகோடு தனது தொடர்புகள் பற்றியும் தன்னுடன் நடித்தவர்கள் பற்றியும் தனது அனுபவங்களை விரிவாகக் கூறியுள்ளார்.

தனது ஐம்பது வருட காலத்தை கலையுலக அனுபவங் களோடு கலை உலகிற்காகவும் அதன் வளர்ச்சிக்காகவும் அர்ப்பணித்திருக்கின்ற ஒரு அற்புதமான மனிதர் இவர்.

தனது 'சிலோன் யுனைட்டெட் ஆர்ட் ஸ்டேஜ்'

என்னும் நாடக மன்றத்தினூடாக கொழும்பிலும் அதன் சுற்றுப் புறங்களிலும் பல நாடகங்களை மேடைமேற்றியிருக்கின்றார். இவர் அவ்வப்போது கலைஞர்களைப் பாராட்டி பரிசில்கள் கொடுத்து கௌரவித்திருக்கின்றார். இலங்கை வானொலி, மற்றும் ரூபாவாஹினி சேவைகளிலும் இவரது ஒலி, ஒளி நிகழ்ச்சிகள் கூடுதலாக இடம் பெற்றதுண்டு.