Wednesday, July 31, 2013

காலத்தை வென்ற பாடல்களை எழுதிய தஞ்சை ராமையாதாஸ்

சினிமா பாடலாசிரியர்களில் கவிஞர் தஞ்சை ராமையாதாசுக்கு தனியிடம் உண்டு. எம்.ஜி.ஆர். நடித்த குலேபகாவலி படத்திற்கு “மயக்கும் மாலைப் பொழுதே நீ போ போ! இனிக்கும் இன்ப இரவே நீ வாவா” பாடலும் தந்தவர். மாயாபஜார் படத்துக்கு “கல்யாண சமையல் சாதம்” பாடலும் தந்தவர்.
காதலை நெஞ்சில் பதிக்கும் “மணாளனே மங்கையின் பாக்கியம்” படப்பாடலான “அழைக்காதே! நினைக்காதே! அவை தனிலே என்னை நீ ராஜா”வும் தருவார்.
நாட்டு நடப்புக்கு என்றும் பொருந்தும் “மலைக்கள்ளன்” படப்பாடலான “எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே” பாடலும் தந்தவர்.
புரியாத மொழியில் ‘ஜிகினா’ வார்த்தைகளை கோர்க்கும் இன்றைய கவிஞர்களுக்கும் இவர் அன்றே முன்னோடியாக இருந்திருக்கிறார். அமரதீபம் படத்தில் “ஜாலியோ ஜிம்கானா” பாடலை எழுதியதும் இவரே.
கிராமத்து திருமண வீடுகளில் இப்போதும் மணப்பெண்ணுக்கு அவள் அண்ணன் புத்திமதி சொல்கிற மாதிரி அமைந்த “புருஷன் வீட்டில் வாழப்போகும் பெண்ணே! தங்கச்சி கண்ணே” பாடலை போடுவார்கள். “பானை பிடித்தவள் பாக்கியசாலி” படத்துக்காக இந்தப் பாடலை எழுதியதும் இவர்தான்.
இப்படி காலத்தால் அழியாத பாடல்களை தந்து தமிழ் ரசிகர்களின் நெஞ்சில் நின்று கொண்டிருப்பவர் தஞ்சை ராமையாதாஸ்.
1939 இல் வெளிவந்த “மாரியம்மன்” படத்தில் இவர் எழுதிய பாடல்தான் சினிமா உலகுக்கு இவரை கவிஞராக அறிமுகம் செய்தது. தொடர்ந்து 250 படங்களுக்கு மேல் எழுதியவர். எழுதிய பாடல்கள் இரண்டாயிரத்துக்கும் மேல்.
தஞ்சையில் உள்ள மானம்பூச்சாவடி சொந்த ஊர். அங்குள்ள சென்ஸ் பீட்டர் மேல் நிலைப்பள்ளியில் பத்தாவது முடித்தவர். தஞ்சை கரந்தை தமிழ்ச் சங்கத்தில் படித்து “புலவர்” பட்டம் பெற்றார். அதோடு ஆசிரியர் பயிற்சிப் படிப்பையும் முடித்தார். தஞ்சை ஆட்டுமந்தைத் தெருவில் உள்ள ஆரம்பப் பாடசாலையில் ஆசிரியராக சேர்ந்தார்.
பள்ளி ஆசிரியராக இருந்தவர், சினிமாவுக்கு பாட்டெழுத வந்தது எப்படி?
கவிஞரின் மகன் ரவீந்திரன் இதற்கு பதில் சொல்கிறார்:
அப்பாவுக்கு அப்போதே பாட்டெழுதும் ஆர்வம் இருந்திருக்கிறது. அதற்கு எடுத்துக்காட்டாக ஒரு சம்பவம் நடந்திருக்கிறது. அப்போது தஞ்சை சரஸ்வதி மகாலில் அடிக்கடி புலவர்கள் கூடி பாடல்கள் பற்றி விவாதிப்பது வழக்கம். இதில் ராஜாவின் அரண்மனைப் புலவர்களாக இருந்தவர்களும் கலந்து கொண்டிருக்கிறார்கள். இந்த சபையில் நடந்த பாட்டுப்போட்டியில் அரண்மனைப் புலவர்களும் ஆச்சரியப்படும் விதத்தில் அப்பா முதல் பரிசான தங்கப்பதக்கம் பெற்றிருக்கிறார்.
அப்பா காங்கிரசில் இருந்தார். கட்சியில் ரொம்பவும் ஈடுபாடு. சுதந்திரப் போராட்ட காலத்தில் கட்சியின் கட்டளையை ஏற்று போராட்டத்திலும் கலந்து கொண்டார்.
சுதந்திரம் கிடைத்த பிறகு “சுதந்திர போராட்ட தியாகி” என்ற வகையில் கிடைத்த பட்டயம், பதக்கம் இரண்டையும் வேண்டாம் என்று கூறிவிட்டார்.
ஆசிரியப் பணியை தொடரும் போதே நாடகத் துறையிலும் நாட்டம் ஏற்பட, ஒரு நாடகக்குழு அவரை தன் சபாவில் வாத்தியாராக ஏற்றுக்கொண்டது. நாடக கதை - வசன - பாடலாசிரியருக்கு ‘வாத்தியார்’ என்ற பெயர் நிலைத்து விடும். இந்த வகையில் நாடகத் துறையிலும் ‘வாத்தியார்’ ஆனார். மச்சரேகை, பகடை, பவளக்கொடி, விதியின் வெற்றி, அல்லி அர்ஜுனா, வள்ளி திருமணம் போன்ற நாடங்களையும் நடத்தி வந்தார்.
ஊர் ஊராக நாடகம் போட்டு வந்த அப்பாவை ராமசாமி பாவலர் என்பவர் சேலத்தில் நாடகம் போட அழைத்து வந்தார். அதே ஊரில் அறிஞர் அண்ணாவின் “வேலைக்காரி”, “ஓர் இரவு” போன்ற நாடகங்களை கே.ஆர். ராமசாமி நடத்தி வந்தார். இரண்டு குழு நாடகங்களுக்கும் ரசிகர்களின் ஆதரவு அமோகமாக இருந்தது. அப்பாவின் வசனமும் பாடல்களும் நாடக மேடையில் பிரபலம் என்பதால் அவரது புகழ் சினிமாத்துறையிலும் பரவ ஆரம்பித்தது.
இதனால் அப்பாவுக்கு சினிமாவில் பாட்டெழுதும் வாய்ப்பு வந்தது. இவரை சிறந்த கவிஞராக கண்டுகொண்ட சேலம் மாடர்ன் தியேட்டர்ஸ் நிறுவனம் அப்போது தயாரித்து வந்த “ஆயிரம் தலை வாங்கிய அபூர்வ சிந்தாமணி” படத்துக்கு பாடல் எழுத வாய்ப்பு கொடுத்தது. அப்பா அந்தப் படத்துக்காக “வெச்சேன்னா வெச்சதுதான்” என்று ஒரு பாடலை எழுதிக்கொடுக்க அது அவர்களுக்கு பிடித்துப்போனது.
அப்பாவை நாடகம் மூலமாக ஏற்கனவே தெரிந்து வைத்திருந்த நடிகர் டி.ஆர். மகாலிங்கம், அப்பாவை மொடர்ன் தியேட்டர்சில் கவிஞராக பார்த்த போது வியந்திருக்கிறார்.

ஸ்ரீவித்தியா ஒரு குறிஞ்சி மலர்

ஸ்ரீவித்தியாவுக்கு ஜோர்ஜ் தோம்ஸிடமிருந்து விவாகரத்து 1990ல் கிடைத்தது. சற்று விடுதலை ஆனார். ஸ்ரீவித்யா உச்சநீதி மன்றம் அவருடைய சொத்துக்களை கணவரிடம் இருந்து மீட்டுக் கொடுத்தது. தொண்ணூறுகளின் இறுதியில் வாய்ப்புகள் குறையத் தொடங்கின.
யாரிடமும் சென்று வாய்ப்புக் கேட்டறியாத ஸ்ரீவித்யா தமிழில் நடிப்பதைக் குறைத்துக் கொண்டார். ஸ்ரீவித்யா தொலைக் காட்சிக்கு நடிக்க சென்றார். அழைக்கப்பட்ட சினிமா வாய்ப்புகளை மட்டுமே ஒப்புக்கொண்டார். அவற்றில் பெயர் சொல்லும்படி அமைந்தவை குறைவு.
2000ல் ஸ்ரீவித்யா சென்னையிலிருந்து கிளம்பி திருவனந்தபுரத்துக்குக் குடிபெயர்ந்திருந்தார். மலையாளப் படங்களிலும் தொலைக்காட்சித் தொடர்களிலும் நடித்துக் கொண்டிருந்தார். மலையாள சினிமா ஸ்ரீவித்யாவை சொந்தம் பாராட்டியது. ஏற்கனவே மலையாள சினிமா தமிழ் நடிகை ஸ்ரீவித்யாவை கொண்டாடி வித்தியாசமான பாத்திரங்கள் பலவற்றை கொடுத்தது. அதிகமான படங்களில் நாயகியாக ஸ்ரீவித்யா நடித்தது மலையாளத்தில் தான்.
கேரளாவில் இரண்டு முறை மாநில அரசின் சிறந்த நடிகைக்கான விருதையும் மூன்று முறை சிறந்த குணச்சித்திர நடிகைக்கான விருதையும் பெற்றார். ஓயாமல் மலையாளத்தில் நடித்து வந்தார். அந்தச் சமயத்தில்தான் அவருக்கு மார்பகப் புற்றுநோய் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. ஆனால் கடைசிவரை அதை ரகசியமாகவே வைத்திருந்தார்.
உருவக் குலைவு ஏற்படாமலிருக்கச் சிகிச்சைகள் மேற்கொண்டார். கடைசி வரை அந்த அகன்ற விழிகளின் உயிர்ப்பையும் முகத்தின் பிரகாசத்தையும் மருந்து காப்பாற்றியது. மரணம் நெருங்குவது தெரிந்ததனாலோ என்னவோ தீவிரமாக செயல்பட ஆரம்பித்தார். படங்கள், தொடர்கள் என்று தன்னை மறந்த நடிப்பில் ஈடுபட்டார். மேடையேறிக் கச்சேரிகள் செய்தார். சாயிபாபாவின் பக்தராகியிருந்தார்.
இறுதியில் மரணம் வேகமாக துரத்த பயந்து போய் கேரளாவின் திருவனந்தபுரத்தில் உள்ள மருத்துவமனையிலேயே அனுமதிக்கப்பட்டு, போராடி வந்தார். அப்போது சினிமா உலகத்தைச் சேர்ந்த யாரையுமே சந்திக்க மறுத்தார். எவரோடும் தொடர்பின்றி வாழ்ந்தார். சொத்துக்களை எல்லாம் தொண்டு நிறுவனங்களுக்கும், கலாஷேத்ராவுக்கும் எழுதி வைத்தார். ஒரு முறை கமல்ஹாசனை மட்டும் சந்தித்தார். அவரும் வெளி உலகில் எதையும் சொல்லாமல், என் நீண்ட கால தோழியைச் சந்தித்தேன் என்று கூறி விட்டுச் சென்றார்.
காலமெல்லாம் போராட்டத்தை சந்தித்து வந்த ஸ்ரீவித்யா மரணத்தோடும் போராடினார். 19 அக்டோபர் 2006 அன்று தன் போராட்டத்தை கைவிட்டு மரணத்திடம் தோற்றார். ஆம் 53 வயதில் அந்த கலையரசி மறைந்தார். சிறந்த பாடகி நாட்டிய தாரகை நடிகை என புகழப்பட்டவர் கேரளாவிலேயே மறைந்தார். அதற்கு மரியாதை அளிக்கும் விதமாக அவருடைய இறுதிச் சடங்கு கேரள அரசு மரியாதையுடன் நடத்தப்பட்டது. ஸ்ரீவித்யா ஒரு குறிஞ்சி மலர் அது கேரளாவுக்கு தெரிந்து இருந்தது.
அந்த நீண்ட விழிகளையும் அழகிய உதடுகளையும் மட்டுமல்ல, ஒரு கலை பொக்கிஷத்தையும் அன்று தீ தின்று கொண்டிருந்தது. அழகின் ரசிகர்கள் மனதுக்குள் அழுது கொண்டிருந்தார்கள்.

மஞ்சுளா...

அன்று எம். ஜி. ஆரால் சாந்தி நிலையத்தில் சிறு பெண்ணாக நடித்திருந்தாலும் ரிக்ஷாக்காரன், அழகிய தமிழ் மகள் இவள்... பாடல் காட்சி மிகவும் பிரசித்தமானது. இப்படம் மூலம் உலகறிய வலம் வந்தவர்.
தொடர்ந்து உலகம் சுற்றும் வாலிபனில், இதய வீணையில் லக்ஷ்மியுடன் நடித்திருந்தார். நினைத்ததை முடிப்பவன், நேற்று இன்று நாளை என்று தொடர் வெற்றிப் படங்கள் என்று பல படங்களில் நடித்தவர், சிவாஜியுடன் டாக்டர் சிவா, உத்தமன், அன்பே ஆருயிரே... மல்லிகை முல்லை பூப் பந்தல்... பாடல், என்று பல படங்களில் அன்றைய காலக் கட்டத்தில் கதாநாயகியாகிய இளமையான நடிகை இவர் ஒருவரே.
நடிகர் விஜயகுமாரை மணந்த பிறகு திரை உலக வாழ்வில் இருந்து ஒதுங்கிக் கொண்டார் எனலாம். மறுபிறவியில் முத்துராமனோடு நடித்தவர். பெரும்பாலும் இவர் நடித்த படங்கள் வெற்றிப் படங்களே. பாடல்களும் இவருக்கு நன்கமைந்தன. ஒரு புராணப் படத்திலும் இவர் நடித்துள்ளார்.
தமிழ்த் திரையில் இடையில் ஒதுங்கியிருந்தாலும் இவருக்கென்று ஒரு தனி நினைவு உண்டு. அது யாரும் மறுக்க முடியாது.

ஐந்து வயதிலேயே வானொலியில் கூவத் தொடங்கிய சின்னக்குயில்

சின்னக்குயில் சித்ரா என்றாலே இனிய குரலும், மலர்ந்த சிரிப்புமே நமக்கு நினைவில் வரும். 1963 ஆம் ஆண்டில் ஜூலை 27ல் மேடைப் பாடகராக விளங்கிய கிருஷ்ணன் நாயனருக்கும் வீணை மேதை சாந்தகுமாரிக்கும் இளைய மகளாக கேரள திருவனந்தபுரத்தில் சித்ரா பிறந்தார்.
5 வயதிலேயே ரேடியோவில் பாடி புகழ் பெற்றார். பின்னர் கே. ஜே. ஜேசுதாசுடன் மேடையிலும், தரங்கிணி இசை தட்டுக்களிலும் பாடி புகழ் பெற்றார். பி. பி. ஸ்ரீனிவாசுடன் குசி ஒளர் குசி என்ற ஹிந்திப் படத்தில் முதல் பாடல் சென்னை வந்து பாடினார்.
அந்தப் பாடல் வெளிவரவே இல்லை. பின்னர் கே. ஜே. ஜேசுதாசு சிபாரிசால் இளையராஜா அவர்கள் இசையில் முதல் பாடலாக நீ தானா அந்தக் குயில் படத்தில் இரு பாடல்கள் பாடினார். பூஜைக்கேத்த பூவிது, கண்ணாண கண்ணா உன்ன என்ன சொல்லி இந்த இரு பாடலும் பெரும் ஹிட் ஆக அன்றிலிருந்து இன்றுவரை இந்திய மொழிகள் அனைத்திலும் பிஸியாக பாடிக்கொண்டிருக்கிறார். வங்காள, ஓரிய, படுகா, பஞ்சாபி உட்பட 15 மொழிகளில் பாடிக்கொண்டே இருக்கிறார்.
எண்ணற்ற கர்நாடகா, மெல்லிசை, பக்தி பாடல்களும் பாடி உள்ளனர். யாருமே வாங்காத அளவு 6 முறை தேசிய விருதும் 15 முறை கேரள அரசு விருதும், 6 முறை ஆந்திர அரசின் நந்தி விருதும், 5 முறை தமிழக அரசு விருதும் 2 முறை கர்நாடகா அரசு விருதும் கலைமாமணி விருதும் பெற்றவர். உள்நாட்டு, வெளிநாட்டு நிகழ்ச்சிகளிலும் பெருமளவு பங்கேற்றவர்.
இளையராஜா கே. வி.மகாதேவன், ரஹ்மான், தேவா, எம். எஸ். விஸ்வநாதன், சந்திரபோஸ், சிற்பி, மரகதமணி, சலீல் செளத்திரி, பாலபாரதி, வி. குமார், எஸ். பி. பி. தி. ராஜேந்தர், பாக்கியராஜ், வி. எஸ். நரசிம்மன், எல். வைத்தியநாதன், ஆர். டி. பர்மன், பப்பிலஹரி, லக்ஸ்மிகாந்த் பியர்ரிலால், தேவேந்திரன் ஹம்சலேகா என இந்திய இசை அமைப்பாளர்கள் எல்லோரிடமும் பாடி இருக்கிறார். எல்லா முன்னணி பாடகர், பாடகிகளுடன் பாடி உள்ளார். கர்நாடக, இந்துஸ்தானி பாடல்களில் நல்ல தேர்ச்சி பெற்றவர்.
32 ஆண்டுகள், 15000 ஆயிரம் பாடல்கள், எண்ணற்ற விருதுகள் தொடர்கிறது சின்னக்குயிலின் பயணம். சென்னை சாலிகிராமம் ஸ்ருதி இல்லத்தில் தன் கணவர் விஜயசங்கரோடு வசித்து வருகிறார். விஜயசங்கர் ஒரு பொறியியல் வல்லுநர். சித்ராவின் உடன்பிறந்தோர் வெளிநாடுகளில் வசிக்கின்றனர்.
தற்போது தமிழ், தெலுங்கு, மலையாள தொலைக்காட்சி இசை நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். நல்ல பாடல்களை மட்டுமே தேர்வு செய்து பாடி வருகிறார். அளப்பரிய சாதனை புரிந்தும் அடக்கமான கலைஞராக வாழ்கிறார்.

Wednesday, July 24, 2013

தமிழில் வாய்ப்புகள் வரவில்லை வருத்தம்

தமிழ் படங்களில் நல்ல வாய்ப்புகள் கிடைக்காததால் பிறமொழியில் கவனம் செலுத்துவதாக கூறினார் பாமா. எல்லாம் அவன் செயல் படத்தில் நடித்தவர் பாமா. இவர் கூறியது தமிழ், மலையாள படங்களில் நடிப்பதில்லையே என்கிறார்கள். இதற்குக் காரணம் வாய்ப்புகள் தான் கன்னடத்தில் நான் எதிர்பார்க்கும் கெரக்டர்கள் வருவதால் அதில் நடிக்கிறேன்.
இதே முக்கியத்துவத்தை தமிழ், மலையாளம் படங்களுக்கு தருகிறேன். தமிழில் எதிர்பார்த்த வாய்ப்பு வரவில்லை. மலையாளத்தில் இப்போது நல்ல வாய்ப்புகள் வருகின்றன. கடந்த வருடம் கன்னட படங்களில் கவனம் செலுத்தினேன். இந்த வருடம் மலையாளத்தில் 3 படங்கள் நடித்து முடித்திருக்கிறேன்.
ஆனால் ஒரு மொழியில் மட்டுமே தொடர்ந்து நடித்துக்கொண்டிருக்க விருப்பமில்லை. தென்னிந்தியாவில் எல்லா மொழியிலும் நடிக்க ஆசை. எல்லா சமயத்திலும் பணம்தான் முக்கியம் என்று பார்ப்பதில்லை. நல்ல கதைகளும் முக்கியம். ஆனால் மற்ற தொழிலைப்போல் சம்பளம் என்பதும் முக்கியம். நல்ல வாய்ப்புகள் வரும்போது அதை மிஸ் செய்ய மாட்டேன். நிறைய வாய்ப்புகள் வருகிறது. அதற்காக எல்லாவற்றையம் ஏற்பதில்லை. தேர்வு செய்தே ஒப்புக்கொள்கிறேன். இவ்வாறு பாமா கூறினார்.

ஐந்து வருடத்திற்குப் பின் திருமணம்

சிம்பு - ஹன்சிகா இருவரும் தங்கள் காதலை உறுதி செய்தனர். ஹன்சிகாவை மணக்கப் போவது எப்போது? என்று சிம்புவிடம் கேட்டபோது, ஹன்சிகாவை காதலிப்பது உண்மை. திருமணம் செய்துகொள்ள முடிவு செய்துள்ளோம். ஆனால் விரைவில் நடக்காது. ஹன்சிகாவுக்கு திரையுலகில் பிரகாசமான வாய்ப்புகள் இருக்கின்றன. முதலில் அவர் அதை நிறைவேற்றட்டும். நானும் நிறைய பணிகள் ஒப்புக் கொண்டிருக்கிறேன். அதை கண்டிப்பாக நிறைவு செய்ய வேண்டும். எங்கள் இரண்டு குடும்பமும் காதலுக்கு பச்சைகொடி காட்டி இருக்கிறார்கள் என்றார்.
ஹன்சிகா கூறும்போது, ‘வேட்டை மன்னன்’ படத்தில் எங்களுக்கு காதல் பிறக்கவில்லை. அதற்கு பிறகு தான் காதல் மலர்ந்தது. நட்பாக பழகி வந்தோம் எங்களுக்குள் இருப்பது நட்பல்ல காதல் என்பது பிறகுதான் தெரிந்தது. எதையும் வெளிப்படையாக பேசுபவள் நான். இதுசரியான நேரம் என்பதால் காதல் கிசு கிசுக்களுக்கு பதில் அளித்தேன். நான் இப்போது நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறேன் சில படங்களில் நடித்து வருகிறேன் இன்னும் சிலகாலம் நடிக்க முடிவு செய்துள்ளேன் அதனால் இன்னும் 5 வருடம் கழித்தே திருமணம் செய்வேன் என்றார்.

இசை கலைஞர்களின் படம்

இசை கலைஞர்கள் காதல் கதையாக உருவாகிறது ஜமாய். தயாரித்து இயக்குகிறார் எம். ஜெயக்குமார். இவர் ஏற்கனவே பாடும் வானம்பாடி படத்தை இயக்கியவர். புதிய படம் பற்றி அவர் கூறியது காதலுக்கும் கொமெடிக்கும் தரும் முக்கியத்துவம் இசைக்கும் தர வேண்டும் என்று எண்ணுகிறேன்.
அந்த வகையில் இசையுடன் கலந்த காதல் கதையாக ஜமாய் ஸ்கிரிப்ட் உருவாக இருக்கிறது. டிரம்ஸ் வாசிப்பதில் கைதேர்ந்த கல்லூரி மாணவன், பாடகர் இருவருக்கும் ஒரு பாடகி மீது காதல் பிறக்கிறது. மூவருக்குள் நடக்கும் சம்பவங்கள் முக்கோண காதல் கதையாக சொல்லப்படுகிறது.
நவீன, உதய் ஹீரோக்கள் வைஜெயந்தி, நிமிஷா ஹீரோயின்கள் ராதாரவி, டி. பி. கஜேந்திரன், பாண்டு, ராஜப்பா, சங்கீதா நடிக்கின்றனர். எம். டி. சுகுமாரன் ஒளிப்பதிவு, தினா இசை. இதன் முதல் கட்ட ஷ¥ட்டிங் கேரளாவில் நடந்தது. அடுத்த கட்ட ஷ¥ட்டிங் சென்னையில் நடக்கிறது.

குத்துச் சண்டை பயிலும் பிரியங்கா சோப்ரா

குத்துச் சண்டைப் போட்டியில் ஐந்து முறை உலக சம்பியன் பட்டம் பெற்றவர் மேரி கோம், இவர் மணிப்பூரில் ஒரு நடுத்தரக் குடும்பத்தில் பிறந்தவர். தனது கடின முயற்சி யால் படிப்படியாக வளர்ந்து உலக அளவில் குத்துச் சண்டையில் புகழ்பெற்று விளங்குகிறார்.
இவருடைய வாழ்க்கையை மையமாக வைத்து இந்தியில் ஒரு படத்தை உரு வாக்க இருக்கிறார்கள். இந்தப் படத்தில் மேரிகோம் வேடத்தில் முன்னாள் உலக அழகியும், பொலிவுட்டின் பிரபல நடிகையுமான பிரியங்கா சோப்ரா நடிக்கிறார். இப்படத்திற்காக கடுமையாக பொக்ஸிங் பயிற்சிகளை எடுத்து வருகிறார் பிரியங்கா.
பொக்ஸிங் சம்பந்தப்பட்ட விஷயங்களை அறிந்து கொள்வதற்காக சமீபத்தில் மேரிகோமை சந்திக்க அவரது சொந்த ஊரான மணிப்பூரிலுள்ள இம்பால் நகருக்கு சென்று அவருடன் சில நாட்கள் தங்கி பொக்ஸிங் சம்பந்தப்பட்ட விஷயங்களை விவாதித்து விட்டு வந்துள்ளார். மேலும் மேரிகோமின் பயிற்சியாளரையும் சந்தித்து ஆசி பெற்றுள்ளார். இந்த சந்திப்பின் போது இயக்குனர் ஓமாங்குமாரும் உடனிருந்தார்.
இப்படத்திற்காக தினமும் எட்டு மணி நேரம் குத்துச்சண்டை பயிற்சிக்கு வருகிறாராம் பிரியங்கா. இவர் போதுமான பயிற்சி பெற்றதும் படப்பிடிப்பை தொடங்க முடிவெடுத்துள்ளனர். இப்படம் தன்னுடைய சினிமா வாழ்வில் ஒரு மைல்கல்லாக இருக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்போடு களமிறங்கியிருக்கிறார் பிரியங்கா சோப்ரா.

Tuesday, July 23, 2013

ஏ.வி.எம். நிறுவனத்துக்கு எழுதிய முதல் பாடல் அவளுக்கென்ன அழகிய முகம்......

கவிஞர் வாலி ஏ.வி.எம். நிறுவனத்திற்காக எழுதிய முதல் பாடல் ‘சர்வர் சுந்தரம்’ திரைப்படத்தில் இடம்பெற்ற ‘அவளுக்கென்ன அழகியமுகம்’ என்ற பாடலாகும்.
பாடலின் காட்சியமைப்பில் நடித்துள்ள எம்.எஸ்.வி., டி.எம்.எஸ்.ஐ பலரும் கவனித்திருப்பீர்கள். வாலிபனாக அரைக்கை சட்டை, பேண்ட் அணிந்து ஸ்டைலாக டி.எம்.எஸ். க்கு முன்பாக அமர்ந்து பாடல் வரிகளை சரிபார்க்கும் கவிஞர் வாலியை பலரும் கவனிக்க மறந்திருப்பீர்கள்.
ஓர் மாலை நேரத்தில் நிதானமில்லால் இருந்த வாலி, ஏ.வி.எம். செட்டியார் முன்பாக வாய் நிறைய வெற்றிலை குதப்பியபடி எப்படியோ சமாளித்து அரைமணி நேரத்தில் எழுதிய பாடல்தான் இது. அதன் பின்னர் ஏ.வி.எம். மின் ஆஸ்தான கவிஞராக தொடர்ந்து 15 படங்களுக்கு பாடல்கள் எழுதினார் கவிஞர் வாலி.

வாலியால் வந்த வாளி

மறைந்த முதல் அமைச்சர் எம்.ஜி.ஆர். அ.தி.மு.க.வை தொடங்கிய நேரம். அவர் ஒருதடவை நெல்லைக்கு கட்சி பிரசார கூட்டத்தில் பங்கேற்க சென்றிருந்தார். அவர் தன்னுடன் கவிஞர் வாலியை அழைத்து சென்றிருந்தார்.
கூட்டம் முடிந்த மறுநாள் காலை தன் அறையில் இருந்து வெளியில் வந்த எம்.ஜி.ஆர். சுற்றும் முற்றும் பார்த்தபடி, வாலி எங்கே? வாலி எங்கே? என்றார். இதைக் கேட்ட தொண்டர் ஒருவர் எம்.ஜி.ஆர். வாளியைத்தான் கேட்கிறார் என்று தவறாகப் புரிந்து கொண்டு ஒரு பெரிய வாளியை தூக்கிக் கொண்டு ஓடி வந்தார்.
அதைப் பார்த்ததும் எம்.ஜி.ஆரும், மற்றவர்களும் விழுந்து விழுந்து சிரித்தனர்.

வால் இல்லை என்பதால் வாலியாகக் கூடாதா? கால் இல்லை என்பதால் கடிகாரம் ஓடாதா?

வாலியின் உண்மையான பெயர் ரங்கராஜன். ஸ்ரீரங்கத்தில் பிறந்தவர். வாலிக்கு ஓவியத்தின் மீது தான் ஆரம்பத்தில் ஈர்ப்பு இருந்ததாம். அப்போது மிகவும் பிரபலமாக இருந்த ஓவியரின் பெயர் மாலி. அவரைப்போல தானும் பிரபலமான ஓவியனாக வேண்டும் என்கிற ஆசையில் தன் பெயரை ‘வாலி’ என்று மாற்றிக் கொண்டாராம். ஒரு பத்திரிகை அலுவலகத்தில் தன் ஓவியத்தை கொடுத்திருக்கிறார். அதன் ஆசிரியர் சிரித்துக்கொண்டே, ‘அதென்னப்பா பேரு வாலி? வாலே இல்ல, நீ வாலியா? என்றாராம்... நம்ம ஆளுக்கு தான் கோவம் பயங்கரமா வருமே.
‘வால் இல்லை என்பதால்
வாலியாகக் கூடாதா?
கால் இல்லை என்பதால் கடிகாரம் ஓடாதா?
என்று சட்டென ஒரு கவிதை பாடியிருக்கிறார்... ‘ஒனக்கு ஓவியத்தை விட கவிதை நல்லா வருது. நீ ஒழுங்கா கவிதை எழுது’னு அவர் தான் வாவியை கவிதை பக்கம் திருப்பிவிட்டவராம்...
அப்படியே வாலி சினிமாவில் நுழைந்து பாடல் எழுத ஆரம்பித்திருந்தார். கண்ணதாசன் என்னும் இமயமலை இருந்ததால் வாலி என்னும் சஞ்சீவி மலையை அப்போது பலரும் கண்டுகொள்ளவில்லை. சினிமா வாய்ப்பே இல்லாமல் பெட்டி படுக்கையோடு வேறு பிழைப்பு பார்க்க கிளம்பி ரயில்வே ஸ்டேசனில் காத்திருந்தார். அப்போது காற்றில் ஒரு பாடல் மெதுவாக அவர் காதில் நுழைந்திருக்கிறது. ‘மயக்கமா கலக்கமா... மனதிலே குழப்பமா? வாழ்க்கையில் நடுக்கமா’ பாடலை முழுதும் கேட்டவர் ஊருக்கு போகாமல் சென்னைக்கே வந்துவிட்டார்.
அவரை மீண்டும் பாடல் எழுத தூண்டிய அந்தப் பாடலை எழுதியவர் வாலி இனி சினிமாவே வேண்டாம் என கிளம்ப காரணமாக இருந்த கண்ணதாசன்!!!! இது தான் விதி என்பது...
****
காத்திருப்பது மெய்யப்ப செட்டியார் சர்வர் சுந்தரத்தில் வாலி பாட்டெழுத வேண்டுமாம். அரை மணியில் தயாராகி பாட்டில் தந்த மயக்கத்திலேயே வாலி எழுதிய பாடல்தான் ‘அவளுக்கென்ன அழகிய முகம்’....
வார்த்தையெல்லாம் நல்லாதான் இருக்கு, வாசனைதான் சரியில்லை என்று சொல்லி ஊதுபத்தி வைக்கச் சொல்லியிருக்கிறார் செட்டியார்.
நான் ஆணையிட்டால் பாடலை வாலி முதலில் வேறு மாதிரி எழுதியிருந்தார். நான் அரசன் என்றால், என் ஆட்சி என்றால், இங்கு ஏழைகள் வேதனைப்பட மாட்டார்... படத்தை தயாரித்த நாகிரெட்டிக்கு உடன்பாடில்லை. ரொம்ப அரசியல் என்கிறார்.
சென்சார் உறுப்பினர் பத்து வரியை நீக்கச் சொல்லியிருக்கிறார். கடைசியில் பஞ்சாயத்து வந்தது எம். ஜி. ஆரிடம் நானாக இருந்தால் பிள்ளையார் சுழியைத் தவிர எல்லாத்தையும் நீக்கச் சொல்லியிருப்பேன் என்கிறார். பின்னே... அண்ணா இருக்கையில் எம். ஜீ. ஆர். நான் அரசன் என்றால் என் ஆட்சி என்றால்.... பாடுவதா? கடைசியில் அண்ணாதான் வாலிக்கு வார்த்தை தந்தார். நான் ஆணையிட்டால் தமிழகத்தில் எந்த ரயிலும் ஓடாது என்று பொதுக்கூட்டத்தில் அண்ணா பேசியதை வைத்து நான் அரசன் என்றால், நான் ஆணையிட்டால் என மாறியது. பாட்டும் இன்றுவரை சூப்பர்ஹிட்.
படகோட்டி சமயம் வாலிக்கு ஃப்ளு காய்ச்சல், 104 டிகிரி 7 பாடல்களில் 6 முடித்தாயிற்று. ஒன்று பாக்கி, வாலியை தொந்தரவு பண்ண வேண்டாம் வேறு யாரையாவது எழுதச் சொல்லலாம் என்கிறார் தயாரிப்பாளர். மெல்லிசை மன்னர் எம். எஸ். வி.க்கு அதில் உடன்பாடில்லை. இசைச் சக்கரவர்த்திக்கு ஏது ஈகோ. ஆர்மோனிய பெட்டியுடன் வாலியின் வீட்டுக்கே சென்று டியூன் போட, படுத்துக் கொண்டே வாலி பாட்டெழுதினார்.
வாலி ஸ்கொட்ச் அடித்தும் பாட்டெழுதியிருக்கிறார். காய்ச்சலில் படுத்தும் எழுதியிருக்கிறார்.
இவை வாலி என்னும் வார்த்தை கடலின் சில துளிகள் மட்டுமே. அள்ளி குடிக்க விரும்புகிறவர்களுக்கு நெல்லை ஜெயந்தனின் வாலிப வாலி ஒரு தெள்ளிய நீரோடை.
‘ஓராறு முகமும் ஈராறு கரமும்
தீராத வினை தன்னைத் தீர்க்கும்
வாராத நிலை தன்னைச் சேர்க்கும்’
இது 1950 களில் கவிஞர் வாலி எழுதி டி. எம். எஸ். மனமுருகப் பாடிய முருகப் பெருமானைப் பற்றிய பாடல்.
வாலிக்கு வந்த தீராத வினையையெல்லாம் தீர்த்து, வாராத நிலைக்கும் அவரை வரவைத்த முருகப் பெருமானின் திருவடியை 18.07.2013 அன்று சரணடைந்துவிட்டார் வாலி.
1931 ல் திருச்சி ஸ்ரீரங்கத்தில் பிறந்த ரங்கராஜன், வாலியாகி ‘அழகர்மலைக் கள்ள’னில் முதல் பாட்டெழுதினாலும் அந்தப் படம் வெளிவரவல்லை. கே. எஸ். கோபாலகிருஷ்ணன் டைரக்ஷனில் வெளிவந்த ‘கற்பகம்’தான் வாலிக்கு வெளிச்சம் வழங்கிய படம். அந்தப் படத்தின் ‘அத்தைமடி மெத்தையடி’ முதற்கொண்டு அத்தனை பாடல்களும் அற்புதப் பாடல்கள். கற்பகத்துக்குப் பின் வாலிக்கு வாய்ந்ததெல்லாம் கற்பக விருட்சம் தான்.
முத்துராமனுக்கு, ஜெமினிகணேசனுக்கு, ஜெய்சங்கருக்கு, ரவிச்சந்திரனுக்கு, நாகேசுக்கு என பாட்டுக்கட்டி வந்த வாலியின் புகழ்க் கொடி, எம். ஜி. ஆருக்கு, சிவாஜிக்கு எழுத ஆரம்பித்ததும் மேலும் பட்டொளி வீசிப் பறக்க ஆரம்பித்தது. அதன் பின் ரஜினி, கமல், சத்யராஜ், பிரபு, கார்த்திக் என நீ...ண்ட அவரது திரைப்பாடல் இன்றைய தனுஷ் வரை தொடர்ந்தது.
அதேபோல டைரக்டர் கே. எஸ். கோபாலகிருஷ்ணனில் தொடங்கி இப்போதைய ஷங்கர் வரை அனைத்து இயக்குனர்களுடனும் ஐக்கியமானவர் வாலி. திரை இசைத் திலகம் கே. வி. மகாதேவன். மெல்லிசை மன்னர்கள் விஸ்வநாதன் ராமமூர்த்தி, சங்கர் கணேஷ், இசைஞானி இளையராஜா, இசைப்புயல் ஏ. ஆர். ரகுமான், இப்படி புகழ் பெற்ற இசை அமைப்பாளர்களுடன் மட்டுமல்ல, புகழ் பெறும் லட்சியத்தோடு வந்த புதுமுக இசை அமைப்பாளர்களுடனும் பேதம் பார்க்காமல் கீதம் வளர்த்தவர் வாலி.
ஐயராத்துப் பெண் ஒருத்தி, தாழ்த்தப்பட்டவள் என சான்றிதழல் வாங்கி கலெக்டரும் ஆகிவிடும் கதையுடன் வந்த படம். ‘ஒரே ஒரு கிராமத்திலே’ அந்தப் படத்திற்கு கதை, வசனம், எழுதிய வாலியும் கலெக்டராகும் கதாநாயகியாக நடித்த லட்சுமியும் தங்கள் வேலையைக் காட்டிவிட்டார்கள் என்று அப்போது பெரிய சர்ச்சை கிளம்பியது. அதே போல் ‘சமஞ்சது எப்படி’ என்ற பாட்டெழுதியும் சர்ச்சையில் சிக்கினாலும் ஜிக்குபுக்கு ஜிக்குபுக்கு ரயிலே எழுதி இளைஞர்களின் மனசில் வாலிபக் கவிஞன் ஆனார் காவியக் கவிஞர் வாலி.
‘அழகர்மலைக் கள்ளனில் முதல் வாய்ப்பு வாங்கிக் கொடுத்து, எனக்கு விலாசம் தந்த விசால மனதுக்குச் சொந்தக்காரன் வி. கோபாலகிருஷ்ணன்’ என அந்தக் குணச்சித்திர நடிகரை இன்றும் நன்றி மறவாமல் தன் இதயத்தில் சித்திரமாய் பதிய வைத்திருக்கும் ஓங்கி உயர்ந்த குணசீலர் வாலி. ‘மரணம் என்பது மனித வாக்கியத்தின் முற்றுப் புள்ளி தான். ஆனால், வெற்றுப் புள்ளிகளுக்குத்தான் அந்த முற்றுப் புள்ளி பொருந்தும்.
அரும்புள்ளி, பெரும்புள்ளி என்றெல்லாம் ஏத்துமளவு அரிய பெரிய சாதனைகளை ஆற்றியோர் விஷயத்தில் அது கரும்புள்ளியல்ல, காற்புள்ளி, ஆம் அவர்கள் இறந்தும் இருக்கிறார்கள். குரலால் தேன் வார்த்த பி. பி. ஸ்ரீனிவாசுக்கும் விரலால் தேன்வார்த்த (விஸ்வநாதன்) ராமமூர்த்திக்கும் இது பொருந்தும்’ என மனம் உருகி எழுதியிருந்தார்.

Wednesday, July 17, 2013

ஆயிரம் வசனங்களை பேசிடும் ஆற்றல் படைத்த கண்ணசைவை கொண்ட கண்ணழகி

பொண்ணுக்குத் தங்கமனசு, அவள் கண்ணுக்கு நூறு வயசு
நடிகையரில் எவரையுமே குறிப்பிட்டு பாராட்டாத கவியரசு கண்ணதாசன் நடிகை ஸ்ரீவித்தியாவை மட்டும் குறிப்பிடும் போது “பொண்ணுக்குத் தங்கமனசு, அவள் கண்ணுக்கு நூறு வயது” என்று அவரது அழகையும், கண்வீச்சு நடிப்பையும் பாராட்டி எழுதினார்.
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். ஒரு பாராட்டு விழாவில் குறிப்பிடும் போது “ஒரு நடிகைக்கான சர்வ லட்சணமும் கொண்ட பெண் இவர்” என்று பாராட்டினார். அழகும், திறமையும் கொண்ட அதிசய நடிகை இவர். கண்ணழகி என்று பாராட்டப்பட்டவர்.
இசை பேரரசி எம்.எல். வசந்தகுமாரி, விகடம் கிருஷ்ணமூர்த்தி தம்பதியரின் மகளாக 1953 ஜுலை 14இல் பிறந்தவர் ஸ்ரீவித்தியா. ஸ்ரீவித்தியாவின் இயற் பெயர் மீனாV. தன் தாயைப் போலவே நல்ல இசை வளம் கொண்டவரான ஸ்ரீவித்தியா, நடனத்திலும் சிறந்து விளங்கினார். சிறு வயது முதலே சினிமாவின் மீது ஈர்ப்பு கொண்டு வளர்ந்தார்.
தாயாரின் எதிர்ப்பையும் மீறி 13வது வயதில் நடிக்கத் தொடங்கினார் ஸ்ரீவித்தியா. திருவருட் செல்வர் படத்தில் சிவகுமாருக்கு ஜோடியாக சக்தியாக நடித்து தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார். அதன் பின்னர் தொடர்ந்து நிறையப் படங்களில் எம்.ஜி.ஆர். தவிர்த்து எல்லா பிரபல நடிகர்களுடனும் நடிக்க ஆரம்பித்தார் ஸ்ரீவித்தியா.
ஏ.வின் சென்ட் இயக்கத்தில் 1973 இல் வெளியான மலையாளப் படம் ‘செண்ட்’ மூலம் மலையாளத்திலும், பாலச்சந்தரின் அபூர்வ ராகங்கள் மூலம் தமிழிலும் முன்னணிக் கதாநாயகியானார்.
கதாநாயகியாக நடிக்கத் தொடங்கிய ஸ்ரீவித்தியா பின்னர் குணசித்திர வேடங்களிலும் நடிக்கத் தொடங்கினார். தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் என எல்லா தென்னிந்திய மொழிகளிலும் 900 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார் ஸ்ரீவித்தியா.
சினிமாவில் தொடர்ந்து நடித்தாலும் அவரது ஆர்வம் நடிப்பில் அல்ல, நடனத்தில் தான் இருந்தது. 1971 இல் திருமண வாய்ப்பும் வந்தது. அமெரிக்கா வாழ் விஞ்ஞானி ஒருவர் அவரை மணந்து கொள்ள விரும்பினார். குடும்பச் சூழ்நிலையைக் கவனத்தில் கொண்டிருந்த தாயார் எம்.எல்.வி. மூன்று ஆண்டுகளுக்குப் பிறகே திருமணம் என்று சொன்னதில் அந்த வாய்ப்பு கிடைக்காமல் போனது.
ஸ்ரீவித்தியா மிக அற்புதமான நடிகை, அவர் கண்ணசைவு ஒன்றே ஆயிரம் வசனங்களை பேசிவிடும் ஆற்றல் படைத்தவை எனலாம். அதற்கு இரண்டே, இரண்டு உதாரணம் கூறலாம்.
அபூர்வராகங்கள் படத்தின் பைரவி வேடத்தை ஹிந்தியில் ஹேமாமாலினி கமலோடு சேர்ந்து நடித்து இருந்தார். ஸ்ரீவித்தியா ஹேமமாலினி இருவருமே நாட்டிய தாரகைகள் என்றாலும், சிறந்த நடிகைகள் என்றாலும் ஹேமாமாலினி நடிப்பு கொஞ்சம் குறைவாகவே ரசிகர்களுக்கு பட்டது. காரணம், ஸ்ரீவித்தியாவின் கண்ணசைவு மிஸ் என்பதே. அதேபோல ரஜினியின் மாப்பிள்ளை படத்தின் ராஜேஸ்வரி அம்மா வேடம் ஸ்ரீவித்தியா அளவுக்கு மனிஷா கொய்ராலாவுக்கு கொஞ்சம் கூட பொருந்தவில்லை.
என்றே படத்தின் தோல்வி கூறியது. ஸ்ரீவித்தியா ஸ்ரீவித்தியா தான் என்று பலரும் கூற செய்தது இவர் நடிப்பு திறன். 1973 இல் பாலசந்தர் இயக்கத்தில் சொல்லத்தான் நினைக்கிறேன் படத்தில் நடித்தார்.
அப்போது தான் கமலுடன் முதல் முறை நடித்தார். அதன் பின்னர் 1975 இல் அபூர்வ ராகங்கள் கமலுடன் ஸ்ரீவித்தியா காதல் வயப்பட்டார். இப்படத்தில் நடித்திருந்த தனக்கும், தன் காதலருக்கும் இடையேயான காதல் இந்தப் படத்தில்தான் உறுதியானதாக ஸ்ரீவித்தியாவே சொல்லியிருக்கிறார். பின்னர் சமஸ்சியா மலையாள படத்தில் இருவரும் இணைந்து நடித்தனர்.
நாங்கள் சந்திக்கும், பேச சந்தர்ப்பம் கிடைக்கும் நாட்களிலெல்லாம் என்னை உருகி, உருகி காதலிப்பதாகச் சொன்ன அவர், “உன்னைத்தான் திருமணம் செய்து கொள்ளப் போகிறேன் என்று வாக்குறுதியும் அளித்துவிட்டுப் போன மறுநாளே, அவரது திருமணச் செய்தியை காலை நாளிதழில் பார்த்து அதிர்ச்சியாகிப் போனேன்” என்று தனது வாழ்க்கை வரலாற்றில் குறிப்பிடும் போது சொல்லியிருக்கிறார் ஸ்ரீவித்தியா.
கிட்ட தட்ட இருவர் வீட்டிலும் திருமணத்துக்கு சம்மதித்த நிலையில் மேல் நாட்டு மருமகள் படத்தில் நடித்த வாணி கணபதிக்கும், கமலுக்குமான நட்பு ஸ்ரீவித்தியா கமல் காதலை மூழ்கடித்தது.
காதல் சோகம் அவரை வாட்டியது. மிகுந்த குழப்பத்தில் என்ன செய்கிறோம் என்பதை கூட உணராது, 1976 தீக்கனல் என்ற மலையாளப் படத்தில் நடிக்கும் போது அந்த படத்தின் துணை இயக்குநர் ஜார்ஜ் தாமசைக் காதலிக்கத் தொடங்கினார். தீவிரமாக இருந்த காதல் எல்லோரின் எதிர்ப்பையும் மீறி இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு திருமணத்தில் முடிந்தது.
ஆனால் அவர் அமைதியோ, நிம்மதியோ அவருக்கு திரும்ப கிடைக்கவில்லை. காதல் கணவரின் பணத்தாசை ஸ்ரீவித்தியாவை துரத்தியது. தினமும் சண்டை, பிரச்சினை என்று உறவு கசிந்தது.
ஒன்பதாவது ஆண்டு இருவரது திருமணமும் விவாகரத்தில் முடிந்தது. சம்பாதித்த எல்லாவற்றையும் ஸ்ரீவித்தியா இழந்தார், நடு வீதிக்கு வந்தார். வீடு வங்கிக் கையிருப்பு, சொத்துகள் எல்லாம் கணவரால் பறிபோயின. மீதமிருந்தவற்றை மீட்க சட்ட ரீதியாக போராடியதில் அவருடைய வாழ்க்கை நிம்மதி அற்று போனது. எனினும் தொடர்ந்து நடித்தார்.
1978 கமல் - வாணி கணபதி திருமணத்துக்கு பிறகு கமலும், ஸ்ரீவித்யாவும் 8 ஆண்டு காலம் சேர்ந்து நடிக்கவில்லை. பின்னர் 1986 இல் வெளிவந்த புன்னகை மன்னன் தான் இருவரும் சேர்ந்து நடித்த திரைப்படம். பிறகு கேளடி கண்மணி, தளபதி, கண்டுகொண்டேன் கண்டு கொண்டேன், ஆனந்தம் என அற்புதமான படங்கள் தொடர்ந்து வெளியாகின.
1990 அக்டோபரில் மீண்டும் ஒரு காரிருள் அவர் வாழ்க்கையை சூழ்ந்தது. அது அவருக்கு பெரிய இடி. ஸ்ரீவித்தியாவுக்கு இருந்த ஒரே அடைக்கலமும் மறைந்தது. ஆம் அவரது தாயார் இசையரசி எம்.ல்.வி. மறைந்தார்.

எப்படி இருந்த நான், இப்படி ஆயிட்டேன்

நடிகை நிஷா எயிட்ஸ் நோயின் காரணமாக 2007ம்ஆண்டில் இறந்துவிட்ட அவரைப் பற்றி அவர் நோயால் பாதிக்கப்பட்டிருந்த போது எழுதப்பட்ட ஒரு பதிவுஇது. படித்துப் பாருங்கள். பலருக்கு ஒரு பாடமாக இருக்கும் அவரது வாழ்க்கை) காலம் ஒரு மோசமான வாத்தியார்.
அது அடித்து சொல்லிக் கொடுக்கும்.
கமலோடு டிக்... டிக்.... டிக்... ரஜனியின் ஸ்ரீராகவேந்திரா, பாலசந்தர் இயக்கத்தில் கல்யாண அகதிகள் இன்னும் விசு, சந்திசேகர் டைரக்ஷனில் என பல படங்கள் மற்றும் இளமை இதோ இதோ, முயலுக்கு மூணு கால், மானாமதுரை மல்லி, எனக்காகக் காத்திரு போன்ற பல படங்களில் கதாநாயகியாக நடித்தவர் நடிகை நிஷா.
இப்போது நாகூர் தர்கா வாசலில் ஈ, எறும்பு மொய்க்க சாகக் கிடந்த அவரை, யாரும் சரியாக கவனிக்கவில்லை. அப்படியே சில நாட்கள் அனாதையாகக் கிடந்தார் நடிகை நிஷா. எய்ட்ஸ் நோய் இளமையை உருக்குலைத்து விட்ட நிலையில், கேட்க ஆளின்றிக் கிடந்தார் நிஷா. நிஷா பிறந்த ஊரே நாகூர்தான்.
அவரது அப்பா, அத்தை, பெரியப்பா என ஓர் உறவு பட்டாளமே அந்த ஊரில் வசதியுடன் வாழ்ந்து வருவது, அதிர்ச்சியான செய்தி. பின்னர் ஒரு முஸ்லிம் அமைப்பின் உதவியுடன் நிஷாவை சென்னை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு போய் அட்மிட் செய்தனர்.
தன்னை சந்தித்த பத்திரிகையாளரிடம் ‘சார்! சார் என்னை போட்டோ எடுங்க சார்! என் நிலையைப் பற்றி பத்திரிகையில் எழுதி என்னைக் காப்பாற்றுங்க சார். நான் மறுபடியும் நடிக்கணும்” என்று கதறினார்.
சினிமா ஒளிவெள்ளத்தில் குளித்த ஒருவர், இப்படி தன்னை ஒரு போட்டோ எடுக்கும்படி கெஞ்சியது உறுத்தியது. நிஷாவிடம் பேசினோம். என்னதான் எலும்பும் தோலுமாக இருந்தாலும் அவரது பேச்சில் ஒரு நடிகைக்குரிய நளினம் குறையவில்லை. கூடவே குரலில் சோகத்தைக்கோடிட்டுக் குழைத்தது நம்மிடம் பேசினார். “எனக்குச் சொந்த ஊர் நாகூர் தான். அப்பா பெயர் அப்துல் ஜப்பார்.
அவரது முதல் மனைவி பேபிக்குப் பிறந்த பெண்தான் நான். குழந்தையாக நான் இருந்த போது அப்பாகிட்டே கோவிச்சிக்கிட்டு அம்மா என்னைத் தூக்கிட்டு சென்னைக்கு வந்திட்டாங்க. என்னை வளர்த்து, சினிமாவில் நடிக்க வச்சாங்க. பல படங்களில் ஹீரோயினா நடித்தேன்.
அம்மா இறந்த பிறகு அந்த துக்கத்தில் சரியாகச் சாப்பிடாமல் மெலிந்து விட்டேன். நடிக்கிறதையும் விட்டுட்டேன். பேங்கில் சேமிச்சு வைச்ச பணமெல்லாம் கரைஞ்சு போச்சி. நிறைய பேர்சான்ஸ் தரேன்னு ஏமாத்தினாங்க. எனக்கு சென்னையில் உறவுன்னு சொல்லிக்கொள்ள ஒருத்தரும் இல்லை. அனாதையாக இருந்த எனக்கு உதவி செய்யவும் ஆளில்லை. நடிகர் சங்கத் தலைவராக இருந்த விஜயகாந்திடம் ஒருமுறை உதவி கேட்டுப் போனனென். “உனக்கு சினிமாவில் சான்ஸ் கிடைக்கலேன்னா, டி. வி. யில் நடிக்க வேண்டியது தானேன்னு சொல்லி என்னை வெறும் கையோட திருப்பியனுப்பிவிட்டார்.
நடிகர் சுமன், சந்திரசேகர், நடிகை ராதிகா எல்லோருமே என் மேல் ரொம்பப்பாசமா இருப்பாங்க. நான் இப்படி படுத்த படுக்கையாகக் கிடப்பது அவங்களுக்குத் தெரியுமோ என்னவோ” என்றார் கண்ணீருடன். ‘உங்கள் அப்பா மற்றும் உறவுகள் உங்களை ஏன் ஏற்க மறுக்கிறார்கள்?” என்று கேட்டோம்.
இதைக் கேட்டதும் சற்று கோபப்பட்ட நிஷா, “நான் வசதியாக இருந்த காலத்தில் என்னிடம் நிறைய வாங்கிக்கொண்ட அவர்கள், இப்போது என்னைக் கண்டுகொள்ள மாட்டேன் என்கிறார்கள். சொந்த ஊரில, பெற்ற தந்தையின் கண்முன்னே ரோட்டில் ஈ, எறும்பு மொய்க்க அனாதையாகக் கிடந்த நிலைமை என்னைத் தவிர, வேறு யாருக்கும் வராது’ என்றவர் குரல் உடைந்து போய் அழத் தொடங்கினார்.
அதன் பிறகு “சார் தப்பா நினைக்காதீங்க, கையில சுத்தமாக காசேஇல்லை. ஒரு முட்டை புரோட்டா சாப்பிடணும் போல ஆசையாக இருக்கு! ஒண்ணு வாங்கிக் கொடுத்துட்டுப் போங்களேன். பிZஸ்! என்ற கெஞ்சினார். ஏதோ உள்ளுக்குள் உடைந்து போனது. நடிகை நிஷா தன்னை எய்ட்ஸ் நோய் தாக்கியிருக்கிறது என்பது கூடத் தெரியாமல் இன்னும் இருக்கிறார் என்ற தகவல் நம்மை உலுக்கியது.
நிஷாவின் தந்தை அப்துல் ஜப்பாரை சந்தித்துப் பேசிய போது, நிஷா எனக்குப் பிறந்தவள்தான். அவளோட அம்மா பேபியை நான் லவ் பண்ணினேன். சின்ன சண்டைல குழந்தையைத் தூக்கிக்கிட்டு ராவோட ராவா பேபி சென்னைக்கு ஓடிப் போயிட்டா. சென்னையில் பேபிக்கு பல பேரோட தவறான தொடர்பிருந்தது. நிஷாவை சினிமாவில் நடிக்க வைத்ததால் பணம் வர ஆரம்பித்தது.
தேடிப் போன என்னை விரட்டி விட்டுட்டா. பிறகு நிஷாவும் நடிகை ஆகி எங்களை மறந்துட்டா. இப்ப நோய் வந்து, சொந்தம் கொண்டாட வந்தா அவளை யார் ஏற்பார்? நானே என் தங்கச்சி வீட்டில் ஓசிச் சாப்பாடு சாப்பிடுறேன். இதில் அவளையும் வச்சி எப்படிக் காப்பாத்த முடியும்? என்றார். சென்னையில் பல பேர் அவளை ஆண்டு அனுபவிச்சிட்டு, இப்போ அவங்க பாட்டுக்கு இங்கே விட்டுட்டுப் போயிட்டாங்க. இதுல நாங்க எதுவும் செய்ய முடியாது’ என்றார்.
அவ தைரியமான பொண்ணு. ஒருமுறை இன்ககம்டாக்ஸ் ஆபீஸர்னு சொல்லி போலி ரெய்டுக்கு வந்து பிளாக்மெயில் செய்ய முயன்ற ஒரு படத் தயாரிப்பாளரை, அவளே பொலிஸ¤க்கு போன் பண்ணி; பிடித்துக்கொடுத்தாள். அப்படிப்பட்டவளுக்கா இப்படி ஒரு நிலைமை என்றார் ஃபிலிம்நியூஸ் ஆனந்தன்.
ஆடி அடங்கி விட்ட நிஷா பலரால் மறக்கடிக்கப்பட்டிருக்கலாம். காலம் ஒரு மோசமான வாத்தியார், அது அடித்து சொல்லி கொடுக்கும், முட்டி போட வைத்து கதறடிகும். குறைந்த பட்சம் ஒழுக்கத்தைக் கூடக் கடைப்பிடிக்காதவர்களின் வாழ்வு இப்படித்தான் இருக்கும். அதற்கு நடிகைகள் கூட விலக்கில்லை. பார்த்தோ, படித்தோ திருந்தி கொள்வது நல்லது.
இவ்வாரப் பாடல்....

தெய்வம் தந்த வீடு வீதியிருக்கு..

தெய்வம் தந்த வீடு வீதியிருக்கு
தெய்வம் தந்த வீடு வீதியிருக்கு
இந்த ஊரென்ன சொந்த வீடென்ன ஞானப் பெண்ணே
வாழ்வின் பொருளென்ன நீ வந்த கதை என்ன?
நான் கேட்டுத் தாய் தந்தை படைத்தாரா? ஆ
நான் கேட்டுத் தாய் தந்தை படைத்தாரா?..
இல்லை
என் பிள்ளை எனைக் கேட்டுப் பிறந்தானா?
தெய்வம் செய்த பாபம் இதுபோடி தங்கச்சி
கொன்றால் பாபம் தின்றால் போச்சு இது தான் என் கட்சி
ஆதி வீடு அந்தம் காடு இதில்
நான் என்ன அடியே நீ என்ன ஞானப் பெண்ணே.
வாழ்வின் பொருளென்ன நீ வந்த கதை என்ன?
வெறும் கோவில் இதிலென்ன அபிஷேகம் உன்
மனமெனங்கும் தெருக்கூத்து பகல் வேஷம்
கள்ளிக் கென்ன முள்ளில் வேலி போடி தங்கச்சி
காட்டுக்கேது தோட்டக்காரன் இதுதான் என் கட்சி
கொண்டதென்ன கொடுப்பதென்ன இதில்
தாயென்ன மணந்த தாரம் என்ன ஞானப் பெண்ணே
வாழ்வின் பொருளென்ன நீர் வந்த கதையென்ன?
தெளிவாகத் தெரிந்தாலே சித்தாந்தம் - அது
தெரியாமல் போனாலே வேதாந்தம்
மண்ணைத் தோண்டித் தண்ணீர் தேடும் அன்புத் தங்கச்சி
என்னைத் தோண்டி ஞானம் கண்டேன் இதுதான் என் கட்சி
உண்மை என்ன பொய்மை என்ன இதில்
தேனென்ன கடிக்கும் தேளென்ன ஞானப் பெண்ணே
வாழ்வின் பொருளென்ன நீ வந்த கதை என்ன?
தெய்வம் தந்த வீடு வீதியிருக்கு
தெய்வம் தந்த வீடு வீதியிருக்கு

எனக்கொரு boy friend வேண்டுமடா

வாய்ப்பின்றி இருக்கும் அசின் வெளிநாட்டு காதலனை மணக்கப் போகிறார் என்ற வதந்தி பரவி வரும் வேளையில் இது பற்றி அவரே கூறியது...
மலையாளம், கொலிவுட்டிலிருந்து, பின்னர் பாலிவுட்டுக்கு சென்றிருக்கிaர்கள், எப்படி இருந்தது?
பொலிவுட்டை விட, மலையாளம், கொலிவுட் படப்பிடிப்புகளில், கட்டுப்பாடு அதிகமாக இருக்கும் ஆனாலும், நான் ரொம்ப லக்கி. எந்த சூழ்நிலையையும் சமாளிக்கும் திறமை, சின்ன வயதிலேயே எனக்கு வந்து விட்டது. அதனால், எந்த படிப்பிடிப்பில் எப்படி நடந்து கொள்ள வேண்டுமோ, அதேபோல் நடந்து கொள்வேன்.
ஷாரூக் கானுடன் நடிக்காதது வருத்தமா?
ஆமாம், நான் ஷாரூக் கான் படம் பார்த்து வளர்ந்தவள். பள்ளிக்கு சுற்றுலா சென்று விட்டு திரும்பும் போது, பஸ்சில் 'குச் குச் கோதா ஹை' படம் பார்த்தேன். அன்று முதல், ஷாருக்கின் ரசிகையாகி விட்டேன். அன்று, பஸ்சிலிருந்து இறங்கவே மனம் இல்லை. சரியான வாய்ப்பு கிடைத்தால், கண்டிப்பாக ஷாரூக் கானுடன் நடிப்பேன். உங்களுக்கு மற்ற நடிகைகளோடு நட்பு இருக்கிறதா?
என்னிடம், எந்த ஈகோவும் இல்லை. யாரிடமும் பிரச்சினைக்குரிய விஷயங்களை பேசுவதில்லை. சோனா கபூர், ஜாக்குலின் பெர்னாண்டஸ் போன்ற நடிகைகள் என் நெருங்கிய தோழிகள்.
அனைவருடனும் இயல்பாகவே நட்பு வைத்துள்ளேன். உங்களின் போய் பிரண்ட்ஸ் குறித்த செய்தி?
அப்படி யாரும் இல்லை. எனக்கு போய் பிராண்ட்ஸ் என, யாரும்இல்லை, பொய் சொல்லவில்லை. உண்மையைத்தான் சொல்கிறேன். என் கெரக்டருடன் ஒத்துப் போகின்ற என்னை புரிந்து கொள்ளக் கூடிய ஒரு நபர் தான் என் பாய் பிரண்ட் ஆக இருக்க வேண்டும். இது வரை அப்படிப்பட்ட ஒரு நபரை நான் சந்திக்கவில்லை. தேடிக் கொண்டிருக்கிறேன். வந்தால் பார்க்கலாம்.
திருமணம் பற்றி பரபரப்பு செய்திகள் வெளியாகிறதே. வெளிநாட்டு மாப்பிள்ளை என்று கூட?
இல்லவே இல்லை. ஏன் இப்படி நடக்கிறது. அது தான், எனக்கும் புரியவில்லை. பள்ளியில் படிக்கும்போது, உடன் படித்த நண்பர்கள், தற்போது வெளிநாடுகளில் உள்ளனர். ஓய்வு கிடைக்கும் போது, அவர்களை பார்ப்பதற்காக செல்வேன். திரும்பி வந்து பார்த்தால், வெளிநாட்டு மாப்பிள்ளையுடன், அசினுக்கு திருமணம் என்பதை போன்ற செய்திகள், பரபரப்பாக வெளியாகி இருக்கும். யாருக்கும் தெரியாமல் கல்யாணம் செய்து கொள்ள மாட்டேன்.

கவர்ச்சி பாவனா.

அதிகமாக கவர்ச்சி காட்ட சொல்வதால் தமிழ் படங்களி ல் நடிப்பதில்லை என்கிறார் பாவனா. ஜெயம் கொண்டான் சித்திரம் பேசுதடி, தீபாவளி உள்ளிட்ட படங்களில் நடித்திருப்பவர் பாவனா.
அவர் கூறியதாவது; சமீப காலமாக தமிழ், கன்னடம், தெலுங்கு படங்களில் நடிக்காமல் மலையாளத்தில் மட்டும் நடிப்பது ஏன் என்று கேட்கிறார்கள். மலையாளத்தில் நல்ல கதைகளில் நடித்துக்கொண்டிருக்கிறேன். இதனால் கன்னட படங்களை ஏற்க முடியவில்லை. கடந்த வாரம்தான் ஹரிஹரன் இயக்கமும் ‘எழமதே வரவு’ ஷ¥ட்டிங் முடித்தேன்.
தற்போது ‘ஆங்ரி பாடிஸ்’ என்ற படத்தில் நடிக்கிறேன். வரும் செப்டெம்பர் மாதம் வரை இதற்கு கால்iட் கொடுத்திருக்கிறேன். ஆனாலும் கன்னட படங்களில் நடிக்க கதை கேட்பதை நிறுத்தவில்லை. புனித் ராஜ்குமார், மோகன்லால் இணைந்து நடிக்கும் ‘மைத்ரி’ படத்தில் கெளரவு வேடத்தில் நடிக்கிறேன். திக்நாத் நடிக்கும் ‘பவானி’ என்ற படத்தில் நடிக்கக் கேட்டார்கள். செப்டெம்பர் 10ம் திகதி வரை காத்திருந்தால் நடிப்பேன் என தெரிவித்திருக்கிறேன். 10 வருடத்துக்கு முன் நடிக்க ஆரம்பித்தேன்.
ஏதோ ஒரு கதையில் நடித்துவிட்டு பின்னர் வருந்துவதைவிட நல்ல கதைகளில் நடிக்க விரும்புவதால் அதற்காக காத்திருந்து நடிக்கிறேன். சமீப காலங்களில் தமிழ், தெலுங்கு படங்களில் என்னை பார்த்திருக்க முடியாது. அங்கு அதிக கவர்ச்சியாக நடிக்க கேட்கிறார்கள். அப்படி நடிக்க விரும்பாததால் தவிர்க்கிறேன்.

சமந்தா செம கட்ட

பரபரப்பான ஹீரோவாக சித்தார்த் தமிழ் சினிமாவில் உருவாகி விட்டார். சமீபத்தில் சித்தார்த் அளித்த பேட்டியில், உங்க படம் ஹிட்டானதில் எப்படி பீல் பண்aங்க?
தீயா வேலை செய்யனும் குமாரு படம் ஹிட்டானதால் சந்தோஷத்தில் இருக்கிறேன். முதல் வாரத்திலேயே ரூ. 10 கோடி வசூலித்துள்ளது. பத்து வருட சினிமா வாழ்க்கையில் தமிழில் இப்போது தான் ஜெயித்துள்ளேன்.
அடுத்து?
கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் ஜிகர்தண்டா படத்தில் தற்போது நடிக்கிறேன். வசந்தபாலன் இயக்கும் காவியத் தலைவன் படத்திலும் நான் சொந்தமாக தயாரிக்கும் பட மொன்றிலும் நடிக்க உள்ளேன்.
தமிழ் ரசிகர்கள் பற்றி?
தமிழ் ரசிகர் வித்தியாசமான படங்களை ஜெயிக்க வைக்கின்றனர். சூது கவ்வும் போன்ற படங்கள் அதற்கு உதாரணம். தொடர்ந்து நல்ல கதையம்சம உள்ள படங்களை தேர்வு செய்து நடிப்பேன். சுந்தர் சி. இயக்கத்திலும் மீண்டும் நடிக்க ஆசை உள்ளது. படங்கள் இயக்கவும் ஆசை உள்ளது. அதற்கான நேரம் வரும்போது செய்வேன்.
உங்களுடன் நடித்த நடிகைகள் பற்றி?
நடிகைகளில் பாய்ஸ் படத்தில் நடித்த ஜெனிலியாவை பிடிக்கும், தமிழ் பேசும் சமந்தாவையும் பிடிக்கும். பழகுவதற்கு சமந்தா இனியவர்.
உங்கள் திருமணம் பற்றி?
பள்ளி கல்லூரியில் படிக்கும்போது நான் அழகாக இருப்பதாக எந்த பெண்களும் சொல்லவில்லை. பெண்களுக்கு என் முகம் பிடிக்கவில்லை என்ற வருத்தம் இருந்தது. நடிகரான பிறகு எல்லா பெண்களும் நான் அழகாக இருக்கிறேன் என்றனர். திருமணம் பற்றி இன்னும் முடிவு செய்யவில்லை. மனைவியாக வருபவர் நடிகையா, தொழில் அதிபர் மகளா என்பதும் தெரியாது என்றார்.

காதல்' சரண்யா

சென்னையில் பிறந்து தெளிவான தமிழில் பேசி நடிக்கும் என்னைப் போன்ற நடிகைகளை கொலிவுட் புறக்கணித்து விட்டது. எனவே, தெலுங்குக்கு சென்றுவிட்டு தமிழுக்கு வந்திருக்கிறேன்' என்றார் சரண்யா நாக்.
காதல் தானே முதல் படம்?
இல்¨லை, 'காதல் கவிதை படத்தில் ஹீரோயின் இஷா கோபிகருக்கு சில தோழிகள் இருப்பாங்க. அதில் நானும் ஒருத்தி. பிறகு நீ வருவாய் என படத்தில் நடித்தேன். காதல் படித்துக்கான ஆடிஷன் நடந்தது. ஹீரோயினா நடிக்கப் போனேன். சந்தியாவுக்கு தோழியானேன். பிறகு சில படங்கள் பண்ணினேன். எதுவும் பெரிசா எடுபடலை. பேராண்மை வெளியே கொண்டு வந்தது.
காதல் பட்டம் தொடருதே?
'காதல்' சரண்யான்
னுதான் இன்னும் சொல்றாங்க. அதுக்காகத்தான் 'சரண்யா நாக்'குன்னு பேரை மாத்திக்கிட்டேன். 'காதல்' பட்டம் தொடர்ந்து கிட்டு இருந்தா, புதுசா ஒப்பந்தம் பண்ண வர்றவங்க, ஹீரோயினுக்கு தோழியா நடிங்கன்னு கேட்கிறாங்க. எனக்குள்ளேயும் தனித்திறமை இருக்கும், அதை வெளிப்படுத்த சான்ஸ் கொடுக்கணுமனு நினைக்கிறது இல்லை. ஒரே மாதிரி கெரக்டர்கள் பண்ணக் கூடாதுன்னுதான் நல்ல படங்களுக்கு காத்துகிட்டிருக்கேன்.
இப்ப?
தமிழில், 'ரெட்ட வாலு', 'ஈர வெயில்', 'முயல்' படங்கள் பண்றேன். எல்லா கெரக்டரும் வித்தியாசமா இருக்கும். மாடர்ன், வில்லேஜ், கிளாமர் அப்படின்னு மாறுபட்ட சரண்யாவை பார்க்கலாம். தெலுங்கில் 'பிரேம ஒக்க மயக்கம்' முடிந்தது. அடுத்து மோகன் பாபு தயாரிப்பில், அவர் மகன் விஷ்ணு ஜோடியா படம் பண்றேன். அங்கே ஜெயிச்சா, மறுபடியும் கொலிவுட்டில் நடிக்க கூப்பிடுவாங்க.
கொலிவுட்டில் தமிழ் நடிகைக்கு மதிப்பு இல்லையா? ஒரேயடியா அப்படி சொல்ல முடியாது. நான் தமிழ் நாட்டில் பிறந்து வளர்ந்தேன். நல்லா தமிழ் பேசுவேன். ஆனா, மும்பை, ஆந்திரா, கர்நாடகா, கேரளா வரவுகளுக்குதான் அதிக மெளசு இருக்கு. மும்பையில் இருந்து வரும் ஒரு ஹீரோயினுக்கு முதல் படம் ஹிட்டானா, அதுக்குப் பிறகு அவரை நிறைய படங்களில் ஒப்பந்தம் பண்றாங்க. கேட்ட சம்பளத்தை கொடுக்கிறாங்க. ஆனா, தமிழ் ஹீரோயின்களோட நிலைமை என்ன? போராட்டம்தான். தமிழ் நாட்டை சேர்ந்த ஹீரோயின்கள், லேட்டா ஜெயிச்சாலும், கடைசி வரைக்கும் சினிமாவிலோ, டி.வி.யிலோ நடிச்சுகிட்டு இருக்காங்க, ஸோ, எனக்கும் நல்ல காலம் வரும்.
லேடீஸ் ஹாஸ்டலில் தங்கி நடிக்கிaங் களாமே?
இது யாரோ பரப்பிய புரளி. நான் என் வீட்டில் இருந்துதான் ஷ¥ட்டிங்கிற்கு போய் நடிச்சிட்டு வாறேன்.
உங்க அம்மா கூட சண்டை?
அது ரெண்டு மூணு வருஷத்துக்கு முன்னாடி. ஆனா, ஒரு அம்மாவும், பொண்ணும் எப்பவுமே மோதிக்கிட்டு இருக்க முடியுமா? பிரச்சினைன்னு வந்தா, அதுக்கு முடிவுன்னு இருக்காதா? எங்க ரெண்டு பேர் பிரச்சினையும் தீர்ந்துடுச்சி. நாங்க ஒண்ணாதான் இருக்கோம்.
ஒளிப்பதிவாளரை காதலிக்கிaங்களாமே?
அப்படியா? நீங்க சொல்லிதான் எனக்குத் தெரியுது. வேறன்ன கேள்விப்பட்டீங்க?
ஏன், காதல் பிடிக்காதா?
இப்ப என் கவனம், தமிழில் வெற்றி பெறணும். தெலுங்கு ஃபீல்டில் ஹிட் படங்கள் கொடுக்கணும். சிறந்த நடிகையா பேர் வாங்கணும். இப்போதைக்கு இதுலதான் என் கவனம்.
திடீர்னு புடவைக்கு மாறிட்டீங்க?
சினிமா ஷ¥ட்டிங்ல. அவங்க கொடுக்கிற டிரெஸ்களை போட்டு நடிக்க வேண்டிய கட்டாயம் இருக்கு. நிஜ வாழ்க்கையில் நம்ம விருப்பத்துக்கு வாழலாம். புடவை மேல் எனக்கு பெரிய கிரேஷ். அதான் விழாக்களுக்கு புடவைல வர்றேன்.

Wednesday, July 10, 2013

முஸ்லிம் இளைஞனாக விஜய்


ஏ ஆர். முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்த படம் துப்பாக்கி. இந்த படத்தில் முஸ்லிம்களை தீவிரவாதிகளாக காட்சிப்படுத்தியிருந்ததால் அந்த சமயத்தில் சில அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தன.
அதையடுத்து சில காட்சிகள் கட் செய்யப்பட்டு படம் ரிலீஸ் ஆனது.
மேலும் என் மகன் ஒரு படத்தில் முஸ்லிம் வேடத்தில் நடிப்பார் என்று விஜய்யின் தந்தை எஸ். ஏ. சந்திரசேகரன் அப்போது கூறியிருந்தார்.
அதை நிறைவேற்றும் வகையில் இப்போது ஜில்லா படத்தில் முஸ்லிம் இளைஞராக நடிக்கிறாராம் விஜய்.
அதனால் இப்போது மூன்றாம் கட்ட படப்பிடிப்பு நடைபெற்று வரும் நிலையில் முஸ்லிம்கள் அணிவது போன்ற கொஸ்டியூம் மற்றும் தாடி வைத்துக்கொண்டு ஸ்பாட்டில் காட்சி தருகிறாராம் விஜய்.
ஆனால் படம் முழுக்க இந்த மாதிரி கெட்டப்பில் வருகிறாரா? இல்லையா? என்பது பற்றிய விவரங்கள் தெரியவில்லை.

புதியவர்களை செங்கம்பளம் விரித்து வரவேற்ற 2013

2013 ஆம் ஆண்டின் முதல் அரையாண்டில் (ஜனவரி முதல் ஜூன் வரை) 78 படங்கள் ரிலீசாகியுள்ளன. சுமார் 10 படங்கள் தான் ஹிட்டடித்துள்ளன. மீதி படங்களால் தயாரிப்பாளருக்கு நஷ்டம்.
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பல படங்கள் எதிர்பார்ப்புகளை பொய்யாக்கி பெப்பே காட்டியுள்ளன. சத்தமில்லாமல் கலெக்ஷனை அள்ளிய படங்கள் எது, ஏகப்பட்ட பில்டப் கொடுத்து பிளாப்பான படங்கள் என்னென்ன என்பதை இப்போது பார்ப்போம்.
கலெக்ஷனை அள்ளிய படங்கள்....
கண்ணா லட்டு தின்ன ஆசையா, கலெக்ஷனை பொறுத்தவரை காசு.... பணம்... துட்டு... மணி... மணி.... என்று கொண்டாடியது கண்ணா லட்டு தின்ன ஆசையா. குறைந்த முதலீட்டில் நிறைய இலாபம். தயாரிப்பாளரான முதல் படத்திலேயே கோடிகளை அள்ளினார் சந்தானம்.
‘விஸ்வரூபம்’ பெரிய முதலீட்டில் பெரிய லாபம் கண்டது. ‘விஸ்வரூபம்’ தடை, போராட்டம் அது இது என்று படத்துக்கு ஏகத்துக்கு நெகட்டிவ் பப்ளிசிட்டி கிடைத்த கமல் ஆழ்வார் பேட்டை வீட்டை காப்பாற்றிக் கொண்டார்.
‘சூது கவ்வும்’ அதிரடியாய் வந்து அள்ளியது. ‘தில்லு முல்லு’, ‘தீயா வேலை செய்யணும் குமாரு’ இரண்டுமே சிரிக்க வைத்தே சில்லறையை மூட்டை கட்டியது. ‘கேடி பில்லா கில்லாடி ரங்கா’, ‘உதயம் என். எச். 4’, ‘எதிர்நீச்சல்’, ‘நேரம்’ படங்கள் இலாபத்தை சம்பாதித்துக் கொண்டன.
பில்டப் கொடுத்த பிளாப்பான படங்கள்...
‘அலெக்ஸ் பாண்டியன்’ கார்த்தி நடித்த அலெக்ஸ் பாண்டியன் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. ஆனால் அந்தப் படம்தான் அவருக்கு இறங்கு முகத்தை உண்டாக்கியது. ‘ஆதிபகவான்’ நீண்ட இடைவெளிக்குப் பிறகு அமீர், ‘ஆதிபகவான்’ படத்தை இயக்கினார். சுமார் இரண்டு வருடம் படப்பிடிப்பு நடந்தது. படத்தின் கதையை சீக்ரெட்டாக வைத்திருந்தார்.
ஜெயம்ரவி திருநங்கையாக நடிக்கிறார் என்கிற தகவல் கசிய எதிர்பார்ப்பு எகிறியது. படம் எதிர்பாராத வகையில் படுதோல்வி அடைந்தது. தயாரிப்பாளர் அன்புக்கு பல கோடி நஷ்டம்.
‘டேவிட்’ இந்தி, தமிழ் இரண்டு மொழிகளிலும் ஒரே நேரத்தில் தயாராகி வெளிவந்தது. ‘டேவிட்’ இந்தியில் சைத்தான் ஹிட் கொடுத்த பிஜு நம்பியாரின் படம். ஏற்கெனவே முகமூடியில் மூடி கழன்றிருந்த ஜீவாவும், ராஜாபாட்டையில் கிரீடத்தை இழந்திருந்த விக்ரமும் இந்தப் படத்தை நம்பிக்கையோடு எதிர்பார்த்தனர். டேவிட். இரண்டு பேர் நம்பிக்கையையும் பொய்யாக்கியது.
‘மூன்று பேர் மூன்று காதல்’ இயக்குனர் வசந்த் தனது ‘மூன்று பேர் மூன்று காதல்’ படத்துக்கு எப்போதும் இல்லாத அளவிற்கு விளம்பரம் கொடுத்தார். அர்ஜூன், விமல் உள்ளிட்ட மூன்று ஹீரோக்கள். ஜோதிகா சாயலில் ஒரு ஹீரோயின், சிம்ரன் சாயலில் ஒரு ஹீரோயின் என்ற பில்டப் வேறு. தாமிரபரணி பானு ரீ எண்ட்ரி என எகிறிக்கிடந்தது எதிர்பார்ப்பு அத்தனையும் கவிழ்த்து போடது மூன்று மூன்று.
‘சேட்டை’இந்தியில் மெகா ஹீட் அடித்த டெல்லி பெல்லியை அதே யுடிவி நிறுவனம் தமிழில் ரீமேக் மன்னன் கண்ணனை வைத்து ரீமேக்கியது. ஆர்யா, ஹன்சிகா, சந்தானம் என மெகா கூட்டணி இருந்தும் சேட்டையின் டொய்லெட் சேட்டையை மக்கள் ரசிக்கவில்லை.
சந்தானத்திற்கு லேசான சறுக்கலைக் கொடுத்தது. ‘சமர்’ விஷாலின் ‘சமர்’ சறுக்கிக் கொண்டது எல்லாவற்றுக்கும் முத்தாய்ப்பாக இரண்டு விஷயங்கள் நடந்தது. யாருமே எதிர்பாராத வகையில் இரண்டு மிகப்பெரிய ஜாம்பவான்களை கவிழ்த்துப் போட்டது 2013.
‘கடல்’, ‘ராவணன்’ தோல்விக்குப் பிறகு மணிரத்னம் இயக்கிய கடல் ஏகத்துக்கு எல்லோரது பிபிபையும் எகிற வைத்தது. காரணம் அதில் அலைகள் ஓய்வதில்லை படத்தில் அறிமுகமான கார்த்திக் மகன் கெளதமும், ராதா மகள் துளசியும் அறிமுகமானார்கள். உலக சினிமா வரலாற்றில் இது அரிதான ஒரு நிகழ்வு அதேபோன்ற கடற்புறத்து கதை ஏ. ஆர். ரகுமான் இசை.
அர்ஜூன் முதன் முறையாக வில்லன். அரவிந்தசாமி ரீ எண்ட்ரி என ஏகப்பட்ட பில்டப்புகள் இருந்தும் படம் ஓடாதது மணிரத்னத்திற்கு மட்டுமல்ல ரசிகர்களுக்கே அதிர்ச்சிதான். கடல் படத்தால் கோடிக்கணக்கில் பணம் இழந்த விநியோகஸ்தர்கள் மணிரத்னம் வீட்டு வாசலில் போராட்டம் நடத்தியது மோசமான வரலாற்று கரும்புள்ளி.
‘அன்னக்கொடி’ மண்ணின் மைந்தர் பாரதிராஜாவின் அன்னக்கொடி அரைக் கம்பத்தில் பறந்தது. என் கனவு படம், இலட்சிய படம் என்றெல்லாம் ஏகத்துக்கு சொன்னார். ரிலீசுக்குப் பிறகு படத்தை மீடியாக்கள் கிழித்து தொங்கவிட பாராதிராஜா அப்செட்.
பெரிய ஜாம்பவான்களையும் ஹீரோக்களையும் படுத்தி எடுத்துவிட்டது 2013 இன் முன்பகுதி.
பாராட்டு பெற்ற ஹரிதாஸ் சென்னையில் ஒரு நாள்...
தசைக் குறைபாடு உள்ள சிறுவன் மராத்தான் சேம்பியனாகும் கதைகொண்ட ஹரிதாஸ், உடல் உறுப்புதான் விழிப்புணர்வை ஏற்படுத்திய சென்னையில் ஒரு நாள் இரண்டுமே மக்களின் பாராட்டைப் பெற்றது. செ. ஓ. நா. இலாபம் சம்பாதித்தது. ஹரிதாஸ் புகழை மட்டும் சம்பாதித்தது.
மன்சூரலிகான் தனது லொள்ளு தாதா பராக் பராக் படத்துக்கும், ராஜ்குமாரனின், திருமதி தமிழ் படத்துக்கும் பண்ணிய பப்ளிசிட்டி கூத்துக்கள் பவர் ஸ்டார் இல்லாத குறையை போக்கியது.
கூட்டி கழித்துப் பார்த்தால் 2013 ஆம் ஆண்டின் முதல் பாதி ஹீரோக்களையும் ஜீனியஸ்களையும் சற்றே விலகி இரும் பிள்ளாய் என்று சொல்லிவிட்டு புதியவர்களுக்கு ரெட் கார்பெட் விரித்தது.

தொட்டி கட்டி தூங்க தோலி கட்டி ஆட

தொட்டி கட்டி தூங்க தோலி கட்டி ஆட
ஆத்துல மீன் பிடிக்க ஆப்பனுக்கு தல தெவட்ட
தொட்டி கட்டி தூங்க தோலி கட்டி ஆட
ஆத்துல மீன் பிடிக்க ஆப்பனுக்கு தல தெவட்ட
பார்த்தாலே சேர்த்தனைக்க தோணு
நா செத்தாலும் யென்ன போத்தா வேணும்
பார்த்தாலே சேர்த்தனைக்க தோணு
நா செத்தாலும் யென்ன போத்தா வேணும்
(ஆத்தா....)
ஓ... ஓ.... ஓ....
தெட்டிக்குள்ள நடிச்சா அது அழகு முத்து மாலை
காயம் பட்டு வெரலுக்கு கட்டு போடும் உன் சோலை
நீ கட்டி இருக்கும் சோலை அது கண்ணீர் மனக்கு
உன் சோலை கட்டி இரைச்சா தண்ணி சக்கரையா இனிக்கும்
என் உசுருக்குள்ள சோலை அது மயிலிரகா விரியும்
உன் வெலுத்த சோலை திரி போட்ட வெளக்கு நல்லா எரியும்
உன் சோலை தானே பூஞ்சோல தானே
ஆதா... ஆதா.... ஆதா.... ஆதா....
ஆத்தா உன் சேல ஆகாயம் போல
ஆத்தா உன் சேல ஆகாயம் போல
அக்கா கட்டி பழக நான் ஆடு கட்டி மேய்க்க
ஓட்ட குடிசை வெயிளுக்கு ஓட்டு போட்டு மரைக்க
யென் கண்ணில் ஒரு தூசிபட்டா ஒத்தடமும் கொடுக்கும்
அட கஞ்சி கொண்டு போன சோலை சும்மாடாக இருக்கும்
நா தூங்கும் போது கூட அது தலையணையாக போசும்.
அட வேக்க வரும் போது ஒரு விசிரி போல வீசும்
உன் சோலை தானே பூஞ்சோல தானே
ஆதா ஆதா ஆதா ஆதா....
ஆத்தா உன் சேல ஆகாயம் போல
ஆத்தா உன் சேல ஆகாயம் போல
(தொட்டி கட்டி)
பார்த்தாலே சேர்த்தனைக்க தோணு
நா செத்தாலும் யென்ன பொத்தா வேணும்
சேத்தாலும் யென்ன போத்த வேணும்
படம் : குட்டிப்புலி, இசை : M. Ghibran
வரிகள் : Yegadesi, பாடியவர் : சுந்தர் நாராயண ராவ்

,யற்கைக்கு மாறாக உறவுகொள்ள வற்புறுத்தி துன்புறுத்துகிறார் என்று கூறி தன் கணவர் மீது புகார் கொடுத்துள்ளார் நடிகை யுக்தா முகி.
1999ல் உலக அழகி பட்டம் வென்றவர், பல இந்திப் படங்களில் நடித்தவர் யுக்தா முகி. தமிழில் அஜீத்துடன் பூவெல்லாம் கேட்டுப்பார் படத்தில் நடித்து ள்ளார்.
நியூயோர்க்கைச் சேர்ந்த தொழில திபரும் நிதி ஆலோசகருமான பிரின்ஸ் டுலி என்பவரை அவர் திருமணம் செய்து செட்டிலானார்.
இப்போது கணவர் மீது மும்பை அம்போலி பொலிஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். தன் கணவர் பிரின்ஸ் தன்னை அடிக்கடி அடித்து உதைத்து கொடுமைப்படுத்துவதாகவும் வரதட்சணை கேட்டு தொந்தரவு செய்வதாகவும் யுக்தா முகி தனது புகாரில் குறிப்பிட்டுள்ளார்.
அதன் அடிப்படையில் கொடுமை மற்றும் துன்புறுத்துதல் இயற்கைக்கு மாறான உறவு கொள்ளுதல் ஆகிய சட்டப் பிரிவுகளில் பிரின்ஸ் டுலி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஆனால் இதுவரை அவர் கைது செய்யப்படவில்லை. புகார் கொடுத்த யுக்தா முகிக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
டுலி மீது ஏற்கனவே அம்போலி பொலிஸ் நிலையத்தில் யுக்தா முகி புகார்கள் அளித்திருந்தார். ஆனால், தண்டிக்க இயலாத குற்றத்தின்கீழ் வழக்கு பதிவு செய்ததால் நீதிமன்ற உத்தரவின்றி முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய முடியாத நிலை இருந்தது.
தற்போது முதல் முறையாக டுலி மீது எப். ஐ. ஆர். பதிவு செய்யப்பட்டுள்ளது.

நடிகை சந்தியா ஓட்டம்

 

 படப்பிடிப்பிலிருந்து ஓட்டம் பிடித்து பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தியதாக நடிகை சந்தியா மீது தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் செய்யப்பட்டுள்ளது.


தயாரிப்பாளர் எழில் இனியன் மாயை என்ற படத்தை தயாரித்தார். ஜே. ஆர். கண்ணன் இயக்கினார். இந்தப் படத்தின் ஷ¥ட்டிங்கின் போது சந்தியா திடீரென காணாமல் போய்விட்டாராம்.
இதனால் தனக்கு நஷ்டம் ஏற்பட்டதாக தயாரிப்பாளர் கூறியுள்ளார். இதுகுறித்து எழில் இனியன் கூறுகையில் :-
சென்னை புரொடக்ஷன் பட நிறுவனம் சார்பில் ‘சை’ என்ற படத்தை தயாரித்து கதாநாயகியின் தந்தையாகவும் நடித்தேன். பிறகு படத்தின் பெயர் ‘மாயை’ என மாற்றப்பட்டது.
படப்பிடிப்பு மற்றும் பின்னணி இசை சேர்ப்பு பணிகள் முடிந்த பிறகு கதாநாயகி தனம் நன்றாக நடிக்கவில்லை என்று இயக்குனர் கண்ணணன் கூறினார்.
அவருக்கு பதில் சந்தியாவை ஒப்பந்தம் செய்து மீண்டும் படப்பிடிபை துவக்கினார். ஊட்டியில் படப்பிடிப்பு தொடங்கியது. அங்கு வந்த சந்தியா தனக்கு கொடுத்த கவர்ச்சி உடையை அணிய மறுத்தார். இதுபோன்ற ஆடை உடுத்தி தன்னால் நடிக்க முடியாது என்று கூறிவிட்டு கிளம்பி போய்விட்டார்.
முதலிலேயே சந்தியாவிடம் கொஸ்ட்யூம் பற்றி சொல்லாமல் அழைத்து வந்தது டைரக்டர் செய்த தப்புதான். இதனால் படப்பிடிப்பு நின்று நஷ்டம் ஏற்பட்டது. நடிகை கொஞ்சம் அட்ஜஸ்ட் செய்திருக்கலாம். அவர் கொஞ்சமும் யோசிக்காமல் ஓடிவிட்டார்.
இயக்குநனருடன் தகராறு எனக்கும் டைரக்டர் கண்ணனுக்கும் தகராறு ஏற்படாததால் ரூ. 24 இலட்சம் பெற்றுக்கொண்டு படத்தில் இருந்து விலகி விடும்படி டைரக்டர் கண்ணன் தெரிவித்தார்.
நான் சம்மதித்தேன். அட்வான்சாக ரூ. 2 இலட்சம் தந்தார். மீதி பணத்தை படம் ரிலீசுக்கு முன் தருவதாக கூறினார். ஆனால் பணத்தை தராமலேயே படத்தை ரிலீஸ் செய்யும் வேலைகளில் ஈடுபட்டுள்ளார். இதை எதிர்த்து நீதிமன்றத்துக்கு செல்ல முடிவு செய்துள்ளேன்’ என்றார்.

Tuesday, July 9, 2013

லதா திருமணம்


ஒரு கட்டத்தில் படங்களில் நடித்தது போதும் என்ற எண்ணம் ஏற்பட்டபோது லதா திருமணம் செய்துகொண்டார். கணவர் சபாபதி, சிங்கப்பூரில் பிஸினஸில் இருந்ததால் கணவருடன் அங்கே போனார். கணவரின் பிஸினஸ் லண்டன், பிரான்ஸ், மலேசியா என்று விரிவுபடுத்தப்பட 10 ஆண்டுகளுக்கும் மேலாக வெளிநாடுகளிலேயே இருந்தார்.
லதா தம்பதிகளுக்கு 2 மகன்கள். லதா கணவருடன் வெளிநாடுகளில் இருக்க நேர்ந்தாலும், மகன்கள் சென்னையில் பாட்டி வீட்டில் தங்கி படித்தார்கள். சென்னை கோபாலபுரத்தில் உள்ள டி. ஏ. வி. பள்ளியில் பிளஸ் – 2 வரை படித்த கார்த்திக் அதன் பிறகு மேல் படிப்புக்காக லண்டன் போனார்.
அதே பள்ளியில் பத்தாவது வரை படித்து விட்டு சீனிவாஸ் மேற்படிப்புக்காக லண்டன் போனார். மூத்தவர் கார்த்திக் லண்டனில் உள்ள இம்பீரியல் கல்லூரியில் கணித நிர்வாகத்தில் பட்டப் படிப்பை முடித்து விட்டு இரண்டாண்டுகள் ‘பேங்கிங்’ படிப்பை தொடருகின்றார்.
இளையவர் ‘லண்டன் ஸ்கூல் ஒப் எக்னாமிக்ஸ் கல்லூரியில்’ இரண்டாம் ஆண்டு பட்டப்படிப்பை தொடர்ந்து வருகிறார்.
இப்படி 10 ஆண்டுகள் கடந்த நிலையில் லதாவின் அம்மாவுக்கு உடல் நலக் குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பரிசோதனையில் ‘கேன்சர்’ என்பது உறுதியானதும் லதாவுக்கு தகவல் பறக்க அடுத்த விமானத்தில் பறந்து சென்னை வந்தார் லதா.
மீண்டும் சென்னை விஜயம் பற்றி லதா கூறியதாவது :-
‘கணவரின் தொழில், பிள்ளைகளின் படிப்பு என்று வெளிநாட்டு வாழ்க்கை 10 வருடமாக தொடர்ந்தது. இடையிடையே ஊருக்கு வந்து போவதுண்டு. ஆனால் அம்மாவுக்கு கேன்சர் என்றதும் மனம் தாங்காமல் சென்னை வந்துவிட்டேன்.
இந்த நேரத்தில் எம். ஜி. ஆருக்கும் உடல் நலக்குறைவு ஏற்பட்டு, அமெரிக்காவில் உள்ள புரூக்ளின் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். நான் சென்னை வந்த நேரத்தில் எம். ஜி. ஆரும் சிகிச்சை முடிந்து பூரண சுகம் பெற்று சென்னை திரும்பியிருந்தார். சென்னைக்கு வந்ததும் என் அம்மாவின் உடல்நிலை அவருக்கு சொல்லப்பட, உடனே அம்மாவை பார்க்க ஆஸ்பத்திரிக்கே வந்து விட்டார். அப்போது அவர் மூன்றாவது முறையாக முதல் அமைச்சர் ஆகியிருந்தார்.
என்னைப் பார்த்ததும், ‘அம்மாவுக்கு இப்படி இருப்பதை என்னிடம் ஏன் முன்பே சொல்லவில்லை?’ என்று கேட்டார். நான் லண்டனில் இருந்து சென்னை வந்ததே அம்மாவை கவனித்துக் கொள்ளத்தான் என்பதை சொன்னேன். சிகிச்சை முறைகளை டொக்டர்கள் மூலம் தெரிந்து கொண்டவர், சிறப்பான சிகிச்சைக்கு ஏற்பாடு செய்யும்படி கூறினார்.
அமெரிக்க சிகிச்சைக்குப் பிறகு அவருக்கு சரியாக பேச்சு வராத நேரம். அப்படியிருந்தும் அக்கறை எடுத்துக்கொண்டு நேரில் வந்து அம்மாவை பார்த்த அவரது அன்பை இப்போது நினைத்தாலும் கண்கள் கலங்குகின்றன.
கேன்சர் முற்றிவிட்டதால் அம்மா சிகிச்சை பலனின்றி இறந்து போனார். இதனால் என் கடைசித் தங்கைக்கு நான் தாயாகும் நிலை ஏற்பட்டது.
அம்மா இருந்திருந்தால் எவ்வளவு சிறப்பாக என் தங்கை தேவி திருமணத்தை நடத்தி வைப்பார்களோ, அதற்கு கொஞ்சமும் குறைவில்லாமல் அவள் திருமணத்தை நடத்தி வைக்க விரும்பினேன். தங்கைக்கேற்ற வரன் தேடிய போது ஹோட்டல் பார்க் ஷெரட்டன் அதிபரின் மகன் கெளரவ் கோயல் கிடைத்தார். திருமணத்தை சிறப்பாக நடத்தி முடித்தேன்.
அன்றையதினம் அவள் தாய்போல நான் மன நிறைவுபெற்ற நாள். என் தம்பிகளில் ராஜ்குமார் பற்றி கொஞ்சம் சொல்ல வேண்டும். நான் படித்த ஹோலிகிராஸ் கொன்வென்ட் பெண்களுக்கானது என்றாலும், முதல் ஐந்து வகுப்புகளில் மட்டும் ஆண், பெண் சேர்ந்து படித்து வந்தனர். இந்த வகையில் தம்பி ராஜ்குமார் ஹோலிகிராஸ் கொன்வென்டில் சேர்ந்தான்.
நான் நடிக்க வந்த நேரத்தில் ராஜ்குமார் முழு எம். ஜி. ஆர். ரசிகனாகவே மாறிவிட்டான். ஒருமுறை அவன் வீட்டில் இருந்த நேரத்தில் டெலிபோன் ஒலித்திருக்கிறது. எடுத்துப் பேசியபோது, ‘நான் எம். ஜி. ஆர். பேசுகிறேன்’ என்று எம். ஜி. ஆர். சொல்ல அவரிடம் பேசி முடித்துவிட்டு அன்று முழுக்க அவன் அடைந்த சந்தோஷத்தை வார்த்தைகளில் விவரிக்க முடியாது. அப்போது, ‘ரிக்ஷ¡க்காரன்’ படம் ரிலீசாகி, வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருந்தது.
ராஜ்குமாரின் வகுப்பாசிரியர் அன்று மாணவர்களிடம், ‘எதிர்காலத்தில் யார் யார் என்னென்னவாக வரப்போகிaர்கள்?’ என்று கேட்டிருக்கிறார். மாணவர்களில் பலரும் ‘டொக்டராவேன்’, ‘என்ஜினீயராவேன்’, ‘பைலட்டாவேன்’ என்று சொல்ல, ராஜ்குமார் முறை வந்தபோது அவன் எழுந்து, ‘நான் ரிக்ஷ¡க்காரன் ஆவேன் சார்’ என்றிருக்கிறான்.
மாணவர்கள் குபீரென சிரித்து வகுப்பறையை அலற வைத்திருக்கிறார்கள். ஆசிரியரும் அந்தப் பதிலை எதிர்பார்க்கவில்லை என்பதால், ‘ஏன் அப்படி?’ என்று கேட்டிருக்கிறார். அப்போது, ரிக்ஷ¡க்காரன் படத்தில் எம். ஜி. ஆர். நடித்த ரிக்ஷ¡க்காரன் கெரக்டர் அந்த அளவுக்கு ஒரு நல்ல கெரக்டராக ராஜ்குமார் மனதில் பதிந்திருப்பதை ஆசிரியர் தெரிந்து கொண்டார். மறுநாள் படப்பிடிப்பில் பள்ளியில் ‘ரிக்ஷ¡க்காரன்’ ஆக விரும்பிய தம்பியின் எதிர்கால ஆசை பற்றி எம். ஜி. ஆரிடம் சொன்னேன்.
ஆச்சரியமாக கேட்ட எம். ஜி. ஆர். ‘பார்த்தியா லதா! இதுதான் நம் உழைப்புக்கான மரியாதை ரிக்ஷ¡ ஓட்டுபவர் தனது நேர்மையான கெரக்டர் மூலம் உன் தம்பி மனதில் பதிந்திருக்கிறார். ஒரு கெரக்டர் மக்கள் மனதில் நல்லவிதமாய் பதிய வேண்டும் என்பதற்காகத்தானே அவ்வளவு கஷ்டப்படுகிறோம். அதற்குக் கிடைத்த பலன்தான் உன் தம்பியின் மனதில் பதிந்த ‘திக்ஷ¡க்காரன்’ ஆசை என்று விளக்கம் தந்தார்.
ராஜ்குமார் பின்னாளில் நடிகராகி நடிகை ஸ்ரீபிரியாவை திருமணம் செய்துகொண்டு 2 பிள்ளைகளுக்கு அப்பா ஆனாலும், இப்போதும் எம். ஜி. ஆர். ரசிகன்தான்’
இவ்வாறு லதா கூறினார்.

குழந்தை நட்சத்திரமாக 175க்கு மேற்பட்ட படங்களில் நடித்த குட்டி சாவித்திரி பத்மினி

இந்தியாவிலேயே -ஏன், அகில உலகத்திலேயே எந்தக் குழந்தை நட்சத்திரத்துக்கும் கிடைத்திராத பெருமை, குட்டி பத்மினிக்கு உண்டு. குழந்தை நட்சத்திரமாக 175 க்கு மேற்பட்ட படங்களில் நடித்தவர்! “குழந்தையும் தெய்வமும்” படத்தில், இரட்டை வேடங்களில் பிரமாதமாக நடித்து குழந்தை நட்சத்திரத்துக்கான தேசிய விருது பெற்றவர்.
சிறு வயதிலேயே விருதுகள் பெற்ற “குட்டி பத்மினி, இப்போது சின்னத்திரை தொடர் தயாரிப்பாளராக தனது கலைப்பணியை தொடர்ந்து கொண்டிருக்கிறார்.
சினிமாவில், குழந்தை நட்சத்திரமாக நடிக்க வாய்ப்பு கிடைத்தது எப்படி?
“குட்டி” பத்மினி கூறியதாவது,
“குடும்ப வழியில்தான் எனக்கும் நடிப்பு வந்தது. தாத்தாவுக்கு மதுரை பக்கம் சொந்த ஊர். ஒயில் மில் வேலைக்காக “பொஷியா” நாட்டுக்கு போனார். அங்கே பாட்டிக்கும், தாத்தாவுக்கும் காதல் ஏற்பட, இந்தக் காதல் திருமணத்தில் முடிந்தது.
தாத்தா, பாட்டியுடன் சொந்த ஊர் மதுரைக்கு திரும்பி வந்த போது, அம்மாவுக்கு 17 வயது அம்மாவுக்கும் காதல் திருமணம்தான். மைசூரைச் சேர்ந்த சீனிவாசன் சக்ரவர்த்தி அய்யங்காரை காதலித்து மணந்து கொண்டார். அப்பாவின் அப்பா மைசூர் சாமுண்டீஸ்வரி கோவிலில் போஷகராக இருந்தவர்.
எனக்கு 2 அக்கா 2 அண்ணன்கள் வீட்டில் நான்தான் கடைக்குட்டி. சிறு வயதிலேயே குறும்பு அதிகம் என்று அம்மா சொல்வார்கள்.
அப்பாவுக்கு, சினிமாத்துறை மீது நாட்டம் ஏற்பட்டு சொந்தமாக படம் தயாரிக்கத் தொடங்கினார். அப்போது அம்மாவுக்கும் நடிக்க வாய்ப்புகள் வந்தன. சில படங்களில் கதாநாயகியாகவும் நடித்தார். பின்னாளில் சில படங்களில் அம்மா, அக்கா வேடங்களையும் ஏற்றார். “ஜெமினி”யின் பெரும்பாலான படங்களில் அம்மா இருப்பார்.
நடித்துக் கொண்டிருந்த காலகட்டத்தில் அம்மாவுக்கும் நடிகை சாவித்திரிக்கும் நெருங்கிய நட்பு ஏற்பட்டது. இந்த நட்பு ஆழமானபோது சாவித்திரியின் “ஹேர் டிரஸ்ஸராகவும்” அம்மா இருந்தார். நான் மூன்று மாதக் குழந்தையாக இருந்த நேரத்தில் அம்மா “பாக்யலட்சுமி” என்ற படத்தில் நடித்துக் கொண்டிருந்தார்.
அந்தப் படத்தின் ஒரு பாடல் காட்சியில் நடிக்க 3 மாதக் கு¡ந்தை ஒன்று தேவைப்பட்டிருக்கிறது. குழந்தையை கொண்டு வருவதாகச் சொன்னவர்கள் வரத் தாமதமாக, அதற்கு மேல் பொறுமையில்லாத டைரக்டர் பார்வையில் நான் பட்டிருக்கிறேன்.
“இது யார் குழந்தை?” என கேட்டிருக்கிறார். அம்மா “இது என் குழந்தைதான்” என்று சொல்ல “குழந்தையை தொட்டிலில் போட்டு இன்றைய பாடல் காட்சியை எடுத்து விடலாமா?” என்று கேட்டிருக்கிறார் அம்மாவும் சம்மதம் சொல்ல, அந்தப் பாடல் காட்சிதான் சினிமாவில் நான் வந்த முதல் காட்சி.
கொஞ்சம் வளர்ந்த நிலையில் “காத்திருந்த கண்கள்”, “பாசமலர்” படங்களில் குட்டி சாவித்திரியாக வந்ததும் நான்தான் இப்படி “நடிப்பு” என்றே தெரியாமல் இரண்டொரு படங்களில் நடித்த நிலையில் வந்த வாய்ப்புதான் டைரக்டர் ஸ்ரீதரின் “நெஞ்சில் ஓர் ஆலயம்” பட வாய்ப்பு ஸ்ரீதர் சார் படத்தில் நடிக்க குழந்தை நட்சத்திரம் தேவைப்படுகிறது என்று தெரிய வந்ததும் நிறைய தாய்மார்கள் தங்கள் குழந்தைகளுடன் படக்கம்பெனிக்கு படையெடுத்திருக்கிறார்கள். அம்மா என்னை அழைத்துப் போயிருக்கிறார்கள்.
குழந்தை நட்சத்திர தேர்வுக்கு, பின்னாளில் குணச்சித்ர நடிகையாக பரிமளித்த ஸ்ரீவித்யாவும் வந்திருந்தார். ஆனால், தேர்வு செய்யப்பட்டது நான்தான்!
இந்தத் தேர்வின் போது டைரக்டர் ஸ்ரீதர் சார், கெமரா மேன் வின்சென்ட், பி. மாதவன் உட்பட தனது குழுவினருடன் அறைக்குள் இருந்தார். அந்த அறைக்கு இருந்த தள்ளு கதவு மூலம் அறைக்குள் நடப்பதை பார்க்க முடியும். நான் கீழே குனிந்து “என்னை எப்ப கூப்பிடப் போaங்க அங்கிள்?” என்று கேட்டேன். “அட யாரது? சரியான சுட்டிக் குழந்தையாக இருக்கிறதே’ என்று என்னைப் பார்த்து ஸ்ரீதருடன் இருந்த பி. மாதவன் வியந்தார். அறைக்குள் நான் அழைக்கப்பட்டதும் மாதவன் சார் எனக்கு டயலாக் சொல்லிக் கொடுத்து பேசச் சொன்னார். அப்படியே பேசினேன். செல்க்ட் ஆனேன்.
பின்னாட்களில் நடிகையாகி விட்ட ஸ்ரீவித்யா என்னைப் பார்க்கும் போதெல்லாம் “எனக்கு கிடைக்க வேண்டிய “நெஞ்சில் ஓர் ஆலயம்” பட வாய்ப்பு உனக்கு வந்திருச்சு” என்று கலாட்டா செய்து கொண்டிருப்பார்.
இந்தப் படத்தின் படப்பிடிப்புக்காக விஜயா வாகினி ஸ்டூடியோவில் ஆஸ்பத்திரி செட் போட்டிருந்தார்கள். காலை 6 மணிக்கு செட்டுக்கு போனால் படப்பிடிப்பு முடிய இரவு 9 மணி ஆகிவிடும்.
படப்பிடிப்பில் நடிகர் நாகேஷ் சார் என்னிடம் ஏதாவது கலாட்டா பண்ணிக் கொண்டே இருப்பார். கல்யாண்குமார், தேவிகா இருவரும் என் மீது ரொம்ப பாசமாக இருப்பார்கள். முத்துராமன் சார் அதிகம் பேசாமல் அமைதியாக இருப்பார். செட்டில் எனக்கு பிஸ்கெட், சொக்லெட் தருவார்கள். நடிக்கிற நேரம் தவிர மற்ற நேரம் என் கையில் பிஸ்கெட் அல்லது சொக்லெட் இருக்கும்.
டைரக்டர் ஸ்ரீதர் சேர் ஒரு நாள் படப்பிடிப்புக்கான செலவு கணக்கு நோட்டை பார்த்திருக்கிறார். அதில் என் பெயரைப் போட்டு தினமும் 7 பிஸ்கெட் பக்கெட் என எழுதப்பட்டு இருந்திருக்கிறது. “ஒரு சின்னக்குழந்தை எப்படி தினமும் 7 பிஸ்கெட் பக்கெட்டுகள் சாப்பிடும்?” என்று ஸ்ரீதர் சாருக்கு சந்தேகம் எழ, “நிஜமாகவே தினமும் 7 பிஸ்கெட் பக்கெட் நான் காலி பண்ணுகிறேனா?” என்று பார்க்க ஆள் வைத்திருக்கிறார்.
மறுநாள் என் கையில் புரொடக்ஷனில் இருந்து 2 பிஸ்கெட் பக்கெட்டுகள் கொடுத்தார்கள். அடுத்த வினாடியே அங்கு வந்த நாகேஷ் சார், அதில் ஒரு பக்கெட்டை என்னிடம் இருந்து பறிக்காத குறையாக வாங்கிக் கொண்டார் பக்கெட்டை பிரித்து அவர் “கறுக் மொறுக்” என்று தின்றதோடல்லாமல் தன் யூனிட் நண்பர்களுக்கும் ஆளுக்கு இரண்டு பிஸ்கெட் கொடுத்து பக்கெட்டை காலி செய்தார். இந்தத் தகவல் ஸ்ரீதர் சேருக்கு போனது. அவர் நாகேஷ் சேரை அழைத்து “அடப்பாவி! சின்னக் குழந்தை கிட்ட இருந்து பிஸ்கெட்டை பிடுங்கி சாப்பிடுறது நீதானா?” என்று கேட்டார் இந்த வகையில் தினம் 7 பிஸ்கெட் பக்கெட் என்ற பிரச்சினை முடிவுக்கு வந்தது”.
இவ்வாறு குட்டி பத்மினி கூறினார்.

Monday, July 8, 2013

இவ்வாரப் பாடல்....

பளிங்கினால் ஒரு மாளிகை
பளிங்கினால் ஒரு மாளிகை
பருவத்தால் மணி மண்டபம்
உயரத்தில் ஒரு கோபுரம்
உன்னை அழைக்குது வா......
(பளிங்கினால்..........)
இருப்பதோ ஒரு நாடக மேடை
இரவு நேரத்தில் மல்லிகை வாடை
திறப்பதோ ஒரு சிந்தனை கதவு
தேடி எடுத்தால் ஆனந்த உறவு
உறவு..உறவு...உறவு...உறவு...
(பளிங்கினால்....)
நாளை வருவது யாருக்கு தெரியும்
நடந்து பார்த்தால் நாடகம் புரியும்
காலை பொழுது ஊருக்கு விடியும்
கன்னி நினைக்கும் காரியம் முடியும்
முடியும்...முடியும்....முடியும்...முடியும்
(பளிங்கினால்.......)

Wednesday, July 3, 2013

சிவகார்த்திகேயன்


‘மான்கராத்தே’ என்ற படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ஹன்சிகா நடிக்கிறார் என்பது முடிவாகி விட்டது. அதனால் இந்த இனிப்பு செய்தியை கோலிவுட்டில் உள்ள தனது நட்பு வட்டாரங்களுக்கு தெரியப்படுத்தி தனது ரேஞ்ச் உயர்ந்து விட்டதை நோட்டீஸ் கொடுக்காத குறையாய் சொல்லி வருகிறார்
சிவகார்த்திகேயன்.
ஆனால், இந்த சேதியை கோலிவுட்டில் உள்ள முன்னணி கலைஞர்கள் சிலர் நம்ப மறுக்கிறார்களாம். ஹன்சிகாவின் கைவசம் அரை டஜன் படங்கள் உள்ளன. அப்படி நடிக்கும் எல்லா படங்களிலுமே முன்னணி ஹீரோக்களுக்குத்தான் ஜோடியாக நடிக்கிறார்.
இன்னும் சில முன்னணி நடிகர்களின் படங்கள் அவரது கால்சீட்டுக்காக காத்திருக்கின்றன. இந்த நேரத்தில் எப்படி வளர்ந்து வரும் நடிகரின் படத்துக்கு கால்சீட் கொடுத்து அவரது ரேஞ்சை தாழ்த்திக்கொள்வார் என்கிறார்களாம்.
இன்னும் சிலர், எங்களுக்கும் சினிமா தெரியும். இதே பீல்டுல வருடக்கணக்குல குப்பை கொட்டிக்கிட்டுதான் இருக்கோம். யாராவது மஞ்சப் பையை தூக்கிட்டு ஏவிஎம் வாசலில் வந்து நிப்பாங்க அவங்ககிட்ட போயி சொல்லுங்க தம்பி, காதை தீட்டி வச்சிக்கிட்டு கேட்பாங்க என்று சிலர் கிண்டலாகவும் பேசுகிறார் களாம். இதனால் நம்ம வளர்ச்சி பிடிக்காம இப்படி பேசுறாங்களா? இல்லை வேண்டுமென்றே நம்மளை கலாய்க்கிறாங்களா? என்பது புரியாமல் குழம்பிப் போய் இருக்கிறார் சிவகார்த்திகேயன்.

டாப்சி


‘ஆடுகளம்’ படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர் டாப்சி. இவர் தற்போது லோரன்சுடன் ‘கங்கா’ படத்திலும், கோபி சந்த்துடன் ‘சாகசம்’ என்ற தெலுங்கு படத்திலும் நடித்து வருகிறார்.
டாப்சி கூறியதாவது :- எனக்கு சாகச காட்சிகளில் நடிக்க ஆசை. ‘சாகசம்’ படத்தில் அந்த வாய்ப்பு கிடைத்துள்ளது. கிளாமர் இல்லாத சினிமாவை யாராலும் நினைத்து பார்க்க முடியாது. ஆனால் கிளாமர் என்பது அருவருப்பாக மாறி விடக்கூடாது. கிளாமருடன் நடிப்பும் தெரிந்தால்தான் சினிமாவில் முன்னுக்கு வர முடியும்.
‘ஆடுகளம்’ படம் எனக்கு நல்ல பெயரை வாங்கி கொடுத்தது. அதில் சேலஞ்சிங் ரோலில் நடித்தேன். இதுபோன்ற வாய்ப்பு கிடைப்பது அரிதானது ஆனால் எனக்கு முதல் படத்திலேயே கிடைத்துள்ளது.
சினிமாவில் 10 வருடம் மட்டும்தான் கதாநாயகியாக தாக்குபிடிக்க முடியும். தொடர்ந்து கதாநாயகியாக நடிக்கலாம் என்று யார் கூறினாலும் நம்ப மாட்டேன். 10 வருடங்களுக்கு பிறகு சினிமாவில் வாய்ப்பு வராத பட்சத்தில் நான் நடிகை என்று தெரியாத இடங்களுக்குச் சென்று சாதாரண பெண் போல வாழ்க்கையை நடத்துவேன். இவ்வாறு அவர் கூறினார்.