Thursday, May 16, 2013

வாராயோ வெண்ணிலாவே

அட்ட கத்தி’ தினேஷ், ஹரிப்பிரியா, காவ்யா ஷெட்டி, தம்பி ராமையா உட்பட பலர் நடிக்கும் படம் ‘வாராயோ வெண்ணிலாவே’ அபிஷேக் பிலிம்ஸ் சார்பில் பி. ரமேஷ், இமானுவேல் தயாரிக்கின்றனர்.
ஒளிப்பதிவு ராணா. இசை கார்த்திக்ராஜா. பாடல்கள் பா. விஜய், கபிலன், கானா பாலா. ஆர். சசிதரன் இயக்குகிறார். படம் பற்றி அவர் கூறும்போது, ‘சென்னையில் இருந்து கேரளாவுக்கு வேலைக்குச் செல்லும் தினேஷ் அங்கு ஒரு பெண்ணிடம் காதல் கொள்கிறார். எதிர்பாராத பிரச்சினைகள் வருகிறது. அதில் இருந்து எப்படி மீள்கிறார் என்பது கதை. கேரளாவில் ஷ¥ட்டிங் நடந்து வருகிறது’ என்றார்.

Tuesday, May 14, 2013

வைரங்களைப் புதைத்திருக்கும் வரிகளை கொண்ட உவமைகள் நிறைந்த பாடல்


மீண்டும் நாயகன் பாடும் சரணம். முத்தாரம் சிரிக்கின்ற சிரிப்பல்லவோ முழுநெஞ்சைத் தொடுகின்ற நெருப்பல்லவோ

சங்கீதம் பொழிகின்ற மொழியல்லவோ
சந்தோஷம் வருகின்ற வழியல்லவோ
என் கோவில் குடிகொண்ட சிலையல்லவோ
இப்போது கவிஞர் விஸ்வரூபம் எடுக்கிறார். இவ்வளவு நேரம் சொன்னதெல்லாம் மிகவும் சாதாரணம் என்பது போல நாயகி திருமணத்தை வெறுத்தவள். அவள் காதல் வயப்படும் போது,
அந்த மாற்றம் படிப்படியாகத்தான் நிகழ வேண்டும். முதலில் தன்னைப் பற்றிக் கூறிவிட்டுத் தான் நாயகனுக்கு ஏற்றவள்தான் என்ற கருத்தை முன் வைக்கிறாள். இப்போது நாயகன் அவளை முழுவதுமாக ஏற்றுக்கொண்டு விட்டான் என்று தெரிந்ததும், அவனோடு தான் இணைய விரும்புவதைத் தெரிவிக்கிறாள். முதலில் உவமைகளில் துவங்குகிறான்.
அலையோடு பிறவாத கடல் இல்லையே
நிலலோடு நடக்காத உடல் இல்லையே
துடிக்காத இமையோடு விழியில்லையே
உவமைகளை அடுக்கிக் கொண்டே போவதில் கவிஞருக்கு எந்த ஒரு சிரமமும் இரப்பதாகத் தெரியவில்லை.
எவ்வளவு நேரம்தான் மறைமுகமாகப் பேசிக் கொண்டிருப்பது? இதற்கு மேல் தயங்கக் கூடாது என்று முடிவு செய்து அடுத்த வரியில் தன் விருப்பத்தை நேரடியாகவே சொல்லி விடுகிறாள்.
துணையோடு சேராத இனம் இல்லையே!
இவ்வளவு நேரம் சொன்னதெல்லாம் பொருள்களைப்பற்றி உயிர் இனங்களும் அப்படித்தான் என்று வலியுறுத்துவது போல, ‘துணையோடு சேருவது எல்லா உயரினங்களுக்கும் இயல்பான ஒன்றதான் எனவே என் மனதைப் புரிந்து கொள்’ என்ற செய்தியைச் சொல்லி முடிக்கிறாள். இப்போதுதான் நாயகிக்குத்தான் செய்த தவறு உரைக்கிறது. ‘நான் சொன்ன உவமைகள் எல்லாம் சரிதானா? ஏதோ ஒன்று உதைக்கிற மாதிரி இருக்கிறதே! ஆமாம் நான் முதலில் சொன்ன மூன்று உவமைகளுக்கும், கடைசியாகச் சொன்ன உவமைக்கும் ஒரு அடிப்படையான வேறுபாடு இருக்கிறதே!
அலையும் கடலும் ஒன்றுதான்
உடலோடு பிறந்ததுதான் நிழல்
இமையும் விழியும் எப்பொழுதுமே இணைந்துதான் இருந்து வந்திருக்கின்றன.
ஆனால், உயிர் இனங்களில், ஒரு ஆணும், ஒரு பெண்ணும் தனித்தனியே பிறந்து வளர்ந்து, பின்னே இணைகிறார்கள். இது எப்படி மற்ற உவமைகளுடன் பொருந்தும்?
இந்த முரண்பாட்டைச் சரிக்கட்டுவதற்காக நாயகி, புத்திசாலித்தனமாக அவசரமாக அடுத்த வரியை அமைக்கிறாள். ‘என் மேனி உனதன்றி எனதில்லையே’ அதாவது எப்படி அலை கடலுக்குச் சொந்தமோ,
நிழல் எப்படி உடலுக்குச் சொந்தமோ, இமை எப்படிக் கண்களுக்குச் சொந்தமோ, அது போல் நான் உனக்குச் சொந்தம் எனவே கடைசியாக நான் சொன்னது ஒரு சம்பிரதாயமான உவமைதான். முதலில் சொன்ன மூன்று உவமைகள்தான் எனக்கும் உனக்கும் பொருந்தும்.
இந்த விளக்கத்தை அவள் அவசரமாக வெளிப்படுத்துவது இசையிலும் பிரதிபலிக்கிறது. ‘துணையோடு சேராத இனம் இல்லையே’ என்ற வரியைத் தொடர்ந்து, ஒரு சிறு கால இடைவெளி கூட இல்லாமல், ‘என் மேனி உனதன்றி எனதில்லையே’ என்று வருவது சிறப்பு எனினும், முதல் சரணத்திலும் இவ்வாறே வருவதால், இது தற்செயலாக அமைந்தது என்றுதான் கருத வேண்டும். ஒரு தெய்வீக இசை அமைப்பில், இது போன்ற தற்செயலான ஆச்சரியங்கள் அமைவதில் வியப்பில்லை.
நாயகியின் இந்த வரிசைகளைக் கேட்டதும், நாயகனுக்கு உற்சாகம் பிறந்து விடுகிறது. காதலியுடன் இணைவதை நினைத்து, நாயகன் பாடத் துவங்கி விடுகிறான்.
இதழோடு இதழ் வைத்து இமை மூடவோ
இருக்கின்ற சுகம் வாங்கத் தடை போடவோ
மடி மீது தலை வைத்து இளைப்பாறவோ
முகத்தோடு முகம் வைத்து முத்தாடவோ
கண்ஜாடை கவி சொல்ல இசை பாடவோ
இவை பழைய (கிராம போன்) இசைத் தட்டுக்களில் இடம்பெற்ற வரிகள் சென்சாரின் வலியுறுத்தலாலோ என்னவோ, திரையில், இந்தச் சரணம் முழுவதுமாக மாற்றப்பட்டது. வாலியின் கற்பனை, உச்சியில் பறந்த வேளையில் நமக்குக் கிடைத்தது ஒரு கூடுதலான சரணம்.
எழிலோடு எழில் சேர்த்து இமை மூடவோ
எனக்கென்று சுகம் வாங்கத் துணை தேடவோ
மலர் மேனித்தனைக் கண்டு மகிழ்ந்தாடவோ
மணக்கின்ற தமிழ் மண்ணில் விளையாடவோ
கண்ஜாடை கவி சொல்ல இசை பாடவோ
பாடல் ஒரு சிறிய ஹம்மிங்குடன் முடிகிறது. இந்த ஹம்மிங் சற்று அழுத்தமாக அமைந்திருப்பதைக் கவனிக்கலாம். நாயகியின் தயக்கமான துவக்கம் முழுமையான ஆனந்தத்தில்முடிவதை ஹம்மிங் மாறுபாடு உணர்த்துகிறது. நாயகியின் சுய அறிமுகம், தன் விருப்பத்தை மெலிதாக வெளிப்படுத்துதல் நாயகனுடன் இணைதல் என்று மூன்று நிலைகளில் சரணங்களை அமைத்திருப்பது வாலியின் சிறப்பு. பெரும்பாலும், நாயகனுக்கு ஒரு விதமான பல்லவி, நாயகிக்கு சற்றே வேறுபாடான பல்லவி (அனுபல்லவி?) என்று அமைக்கும்மெல்லிசை மன்னார், இந்தப் பாடலில் நாயகன் நாயகி இருவருக்கும்ஒரே விதமான பல்லவியை அமைத்து (வரிகள் வேறுபட்ட போதிலும்) இருவருக்கும் வெவ்வேறு விதமான சரணங்களை அமைத்திருப்பது புதுமை.
இந்தப் பாடலைக் கேட்கும் போது இது காற்றினிலே வரும் கீதம் என்ற உணர்வை ஏற்படுத்துகிறது. ஒரு இனிமையான தென்றல் நம்மைத் தீண்டி விட்டுப் போவது போன்ற உணர்வு!மெல்லிசை மன்னரின் மாணிக்கக் கற்கள் பதித்த வாலியின் வைர வரிகளைக் கொண்டது இந்தப் பாடல்.

தமிழ் சினிமாவில் செம்பருத்தியாக மலர்ந்த ரோஜா. ஸ்ரீலதா


தமிழ் சினிமாவில் செம்பருத்தியாக மலர்ந்த ரோஜh ஸ்ரீலதா

10 வயதிலேயே கமரா முன் நின்ற ஸ்ரீலதா பாரதிராஜாவால் ‘ரோஜா’ என்று பெயர் சூட்டப்பட்டு, நட்சத்திர நடிகையானார்
தமிழ் சினிமாவில் செம்பருத்தியாக மலர்ந்தவர் நடிகை ரோஜா. 1991ஆம் ஆண்டில் டைரக்டர் ஆர்.கே. செல்வமணி இயக்கிய “செம்பருத்தி” படத்தில் அறிமுகமான ரோஜா. தொடர்ந்து 15 ஆண்டுகள் சினிமாவில் நிலைத்து நின்றவர்.
தமிழிலும் தெலுங்கிலுமாக 140க்கும் மேற்பட்ட மேற்பட்ட படங்களில் கதாநாயகியாக நடித்தவர். திருப்பதியைச் சேர்ந்த ஸ்ரீலதா தான் சினிமாவுக்கு வந்த பிறகு ‘ரோஜா’ வாகியிருக்கிறார். அப்பா வை. என். ரெட்டி, அம்மா லலிதா. உடன் பிறந்தோர் 2 அண்ணன்கள். மட்டும். மூத்த அண்ணன் குமாரசாமி ரெட்டி. அடுத்த அண்ணன் ராம்பிரசாத் ரெட்டி.
ஒரே பெண் என்பதால் செல்லம் அதிகம் கிடைக்கும் என்பார்கள். ரோஜாவைப் பொறுத்தவரையில் ரொம்ப செல்லம். அதற்குக் காரணம் ரோஜாவே சொல்கிறார்.
“அப்பாவுக்கு அக்கா, தங்கை யாரும் கிடையாது. தாத்தாவுக்கும் அக்கா தங்கை கிடையாது. இதனால் குடும்பத்தில் பிறந்த முதல் பெண் குழந்தை என்பதால் ஆளாளுக்கு என்னை கொண்டாடினார்கள். பாசம் கொட்டினார்கள். ஆனாலும் நான் பையன் மாதிரிதான் வளர்ந்தேன். எப்போதும் யாரையாவது சீண்டியபடி ஜாலி ஜாலி ஜாலிதான். தாத்தா ஒருத்தருக்கு மட்டும்தான் கொஞ்சம் பயப்படுவேன்” சொல்லிச் சிரிக்கிறார் ரோஜா.
பள்ளிப் பருவத்தில் கூட ரோஜாவுக்குள் நடிப்பு வாசனை வீசவில்லை. நடிகையாக வேண்டும் என்று கனவு கூடக் கண்டதில்லை. ஆனால் நம்பர் ஒன் சினிமா ரசிகையாக இருந்திருக்கிறார். அதுபற்றி ரோஜா கூறுகிறார்.
பள்ளி நாட்களில் எல்லாம் ஒரு சினிமா விடமாட்டேன். ஸ்கூலுக்கு ‘கட்’ அடித்துவிட்டு தோழிகளுடன் போய் விடுவேன். ஆனால் அப்போது கூட சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆசை எனக்குள் துளிர்ந்ததே இல்லை”
இப்படிச் சொல்லும் ரோஜாவுக்கு நடிகை அந்தஸ்து எப்போதுதான் வந்தது?
‘அப்பா சாரதி ஸ்டூடியோவில் சவுண்டு என்ஜினியராக இருந்தார். சினிமா இயக்கும் ஆசை அவருக்கு இருந்தது. இதனால் வேலையை விட்டு விட்டு முதலில் கொத்தடி பொம்மா பூர்ணமா என்ற டாகுமெண்டரி படத்தை இயக்கினார்.
இதில் தெலுங்கில் பிரபல இயக்குனராக இருந்த கோடி ராமகிருஷ்ணாவின் மனைவியை நாயகியாக நடிக்க வைத்தார். அவரது மகளாக நடிக்க 10 வயதுப்பெண் தேவைப்பட்ட போது அப்பாவின் பார்வை என் மீது அப்போது நான் ஐந்தாவது படித்துக் கொண்டிருந்தேன். மாலையில் வீட்டுக்கு வந்த என்னிடம் “நாளை நீ பள்ளிக்குப் போக வேண்டாம்” என்றார் அப்பா.
“ஏன்?” என்று கேட்டேன்.
“நான் ஒரு டொக்கிமெண்டர் படம் இயக்குகிறேன். அல்லவா? அதில் உன் வயதப் பெண் நடிக்க தேவைப்படுகிறாள். அது ஏன் நீயாக இருக்கக் கூடாது” என்று கேட்டார் அப்பா.
“நடிப்பதா? நானா? எனக்கு என்ன தெரியும் டாடி?” என்று திப்பிக் கேட்டேன்.
“இதுவும் பாடம் மாதிரிதான் நான் சொல்லித் தருவதை அப்படியே செய்தால் போதும்” என்றார் அப்பா. படப்பிடிப்பில் அப்பா சொன்னதைச் செய்தேன். அவ்வளதான் அத்தோடு நடித்ததைக்கூட மறந்து மறுபடியும் மாணவியாகிவிட்டேன்”
இவ்வாறு கூறினார் ரோஜா. ரோஜாவுக்கு சினிமா வாய்ப்பு மறுபடியும் தேடி வந்தது. கல்லூரிப் பருவத்தில்தான் திருப்பதியில் உள்ள ஸ்ரீபத்மாவதி பெண்கள் கல்லூரியில் முதலாண்டு மாணவியாக இருந்த நேரத்தில் நடிப்பு தேடிவந்து அழைத்திருக்கிறது. அதுபற்றி ரோஜா கூறுகிறார்.
“அப்பாவின் நண்பர் எங்கள் கல்லூரியில் நடந்த விழா ஒன்றுக்கு வந்திருந்தார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு என்னைப் பார்த்த அவருக்குள் என்னை நடிக்க வைக்கும் எண்ணம் வெளிப்பட்டிருக்கிறது. இதைஅவர் எங்கள் வீட்டில் சொன்ன போது அம்மா, அண்ணன்கள் பயங்கர எதிர்ப்பு. அப்பாதான், “நடித்தால்தான் என்ன?” என்ற கேட்டு, நடிப்பதற்கு கிரீன் சிக்னல் கொடுத்தார்.
அப்பாவின் நண்பர் என்னை நிறைய படங்கள் எடுத்தார். அப்போது எனக்கு சிரிப்பு வந்தது. “ஏன் சிரிக்கிறாய்?” என்று கேட்டார். நான் “ஒன்றுமில்லை” என்று கூறி சமாளித்துவிட்டேன். ஆனால் அந்தப் படங்களில் ஒன்று. ஒரு தெலுங்கு சினிமாப் பத்திரிகையின் அட்டையில் வர அதுதான் தமிழில் என்னை நாயகியாக்கியது. அதுகூட உடனடியாக இல்லை. தெலுங்குப் படம் எடுக்க முன்னேற்பாடுகளை செய்த அப்பாவின் நண்பர், தமிழில் பிரபலமாக இருந்த டைரக்டர் பாரதிராஜாவுக்கும் நண்பராக இருந்திருக்கிறார். அவரை தனது படப்பிடிப்புக்கு அழைத்த அப்பாவின் நண்பர் எனக்கு ஒரு சினிமா பெயரை சூட்டும்படி பாரதிராஜாவைக் கேட்டிருக்கிறார். என்னைப் பார்த்தது ஒரு நொடிதான் உடனே ‘ரோஜா’ என்ற பெயர் வைத்துவிட்டார்.
எனக்குப் பெயர் வைத்ததையே பாரதிராஜா மறந்து விட்டார். இந்த நிகழ்ச்சியைப் பொறுத்தவரையில் அவருக்கு சம்பவம். எனக்கு சரித்திரம் அல்லவா! பின்னாளில் அவரது டைரக்ஷனில் தமிழ்ச் செல்வன் படத்தில் நடித்த போது நான் இந்த பெயர் சூட்டிய சம்பவத்தைச் சொன்னேன். ‘அடடா எனக்கு நினைவில்லையே?” என்று ஆச்சரியப்பட்டார் அவர்.
இவ்வாறு ரோஜா கூறினார்.

Saturday, May 11, 2013

மின் வெட்டு நாளில்

கவிஞர் வாலி சமகால அரசியல் நிகழ்வுகளை காதல் அல்லது கொமெடி பாடல்களில் சுவைபட திணித்து ருசி கூட்டுவதில் வல்லவர். அதில் மிக சமீபத்தில் வெளியான எதிர் நீச்சல் என்னும் படத்தில் மின்வெட்டு பற்றி சொல்லி அசத்தி இருக்கிறார். முகநூல் ட்விட்டர் என்ற பல வலைதளங்களில் மின்வெட்டு பிரச்சினைப்பற்றி பல நகைச்சுவை துணுக்குகள் வந்துள்ளன. ஆனால் அனுபவமிக்க கவிஞர் வாலியின் இந்தப் பாடல் வரிகள் கவனம் ஈர்க்க தவறவே இல்லை....
சிவ கார்த்திகேயன் நடிக்கும் படம் தான் இந்த எதிர் நீச்சல் இதை நடிகர் தனுஷ் தயாரிதது இருக்கிறார். இதற்கு கொலைவெறி இசை அனிருத்!
மின்சாரம் இல்லாத இரவுகளில் கூட
மின்னுகிறது உன் முகம்!
எனக்கு ஒளியாய் நீ
உனக்கு விசிறியாய் நான்!!
மின்சாரம் இல்லாமல் வாடும் நண்பர்களுக்கு சமர்ப்பணம் இந்த (காதல்)ஆறுதல்.

துரு துருவான ஆணை விரும்பும்

மீண்டும் சினிமாவில் முழுவீச்சில் இறங்கிவிட்டார் அஞ்சலி. என்றபோதும் அவரைப்பற்றிய வெளியாகும் கிசுகிசுக்களுக்கு பஞ்சமில்லை. அவர் ஒருவாரம் மாயமானதில் இருந்து அவருடன் நடித்த இளவட்ட நடிகர்கள் மீது சந்தேகம் கொண்டு விதவிதமான கிசுகிசுக்கள் பரவிக்கொண்டிருக்கின்றன. என்றாலும், இதையெல்லாம் நினைத்து நான் கவலைப்படவில்லை என்கிறார் அஞ்வலி. அவர் அளித்த பேட்டி ஒன்றில் தனது வருங்கால கணவர் குறித்த கேள்விக்கு இப்படி கூறியிருக்கிறார்.
அதாவது தன்னை கல்யாணம் செய்யும் ஆண்மகன், இந்திய கிரிக்கெட் அணியின் இளம் வீரர் வீராத் ஹோக்லி மாதிரி இருக்க வேண்டுமாம். காரணம், அவரை மாதிரி துருதுருவான ஆண்கள்தான் தனக்குப் பிடிக்கும். மேலும் அப்படி நான்கல்யாணம் செய்துகொள்ளும் ஆண், தினமும் ஷேவிங் செய்தால் எனக்கு சுத்தமாக பிடிக்காது. முகத்தில் சிறிய அளவு தாடி வைத்திருக்க வேண்டும். ஆனால் அதை அழகாக டிரிம் செய்திருக்க வேண்டும். ஒருவேளை எனக்கு வரப்போகிற கணவருக்கு தாடி வைக்கும் பழக்கமில்லை என்றால் என் விருப்பத்திற்காக அவரை சிறிய அளவில் அழகான தாடி வைத்துக்கொள்ளும்படி கேட்டுக்கொள்வேன் என்கிறார் அஞ்சலி.

கடும் குளிரிலும் கவர்ச்சி உடையில்

மார்க்கெட் உச்சத்தில் இருக்கும்போது நிறைய அலம்பல்கள் செய்வார்கள் நடிகர் - நடிகையர். ஆனால், ஹன்சிகா ரொம்ப மாறுபட்டவராக இருக்கிறார். ஆரம்பத்தில் எப்படி பணிவோடு நடந்து கொண்டாரோ அதே மாதிரிதான் இப்போதும் நடந்து கொள்கிறார். அதிலும் படப்பிடிப்புக்கு 7 மணி என்றால் 6.50 க்கு ஆஜராகி ஆச்சர்யத்தைக் கொடுத்து வருகிறார். சின்னச் சின்ன விசயங்களுக்கெல்லாம் கெரவனுக்குள் சென்று தலைமறைவாகிக் கொள்வதும் இல்லையாம்.
இதுபற்றி ஹன்சிகாவை வைத்து தீயா வேலை செய்யணும் குமாரு படத்தை இயக்கியுள்ள சுந்தர்.சி. கூறுகையில், இதுவரை எனது படங்களில் நடித்த நடிகைகளில் குஷ்புவுக்கு பிறகு ஒரு நல்ல நடிகை என்றால் அது ஹன்சிகாதான் என்கிறார். நடிப்புக்காக நிறையவே மெனக்கெடுகிறார். குறிப்பாக, இந்த படத்துக்காக ஜப்பான் சென்றிருந்தபோது கடுமையான குளிர் நிலவியது. ஆனால், உறைய வைக்கிற அந்த குளிரிலும் கவர்ச்சிகரமான உடையணிந்து நடித்தார். நாங்களெல்லாம் போர்த்திக்கொண்டு நிற்க, அவர் அந்த சிறிய உடையணிந்தும் எந்த நடுக்கமும் இல்லாமல் நடித்துக்கொண்டிருந்தார்.
இதற்குக் காரணம், அவரது உறுதிதான். மற்றவர்களாக இருந்தால், இந்த குளிரில் எப்படி சிறிய உடைகளை அணிந்து நடிப்பது என்று தயங்குவார்கள். ஆனால், ஹன்சிகா அப்படி எதுவும் சொல்லவில்லை. எந்த தடுமாற்றம் இல்லாமல் நடித்து முடித்தார். அந்த வகையில் டைரக்டர்களுக்கு ஒத்துழைப்பு கொடுப்பதில் ஹன்சிகாவுக்கு நிகர் இப்போதைக்கு யாரும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை என்கிறார் சுந்தர் சி.

ஏ.ஆர்.ரஹ்மான் அடிக்கடி அமெரிக்கா செல்வது ஏன்?

நாமெல்லாம் ஏ. ஆர். ரஹ்மான் இசையமைப்பதற்காக மட்டும்தான் அமெரிக்கா செல்கிறார் என்று நினைக்கிறோம். ஆனால் இது பற்றி அவரைக் கேட்டால், நான் ஆரம்பத்தில் அங்கு இசையமைப்பதற்காக மட்டும்தான் சென்றேன். அதையடுத்து, தொடர்ந்து ஹொலிவுட் படங்களுக்கு இசையமைத்ததால் தங்குவதற்கு வசதியாக அங்கு ஒரு வீடும், ஸ்டுடியோவும் வாங்கினேன்.
மேலும், அங்கு இருக்கும் நாட்களில் இசையமைக்கும் நேரம் போக மீதமுள்ள நேரங்களில் ஷொப்பிங் செல்வேன். சில நாட்களில் ரோட்டில் ஜாலியாக நடந்து செல்வேன். டீக்கடைக்கு தனியாக சென்று டீ குடிப்பேன். அந்த சுதந்திரம் எனக்கு ரொம்ப பிடித்திருந்தது. தமிழ் நாட்டில் நான் அப்படி இருக்க முடியுமா? அதனால் தான் அடிக்கடி அமெரிக்கா சென்று வருகிறேன். வருசத்தில் பாதி நாட்களுக்கு மேல் அங்கு இருப்பதற்கான காரணமும் இதுதான் என்கிறார் ரஹ்மான்.

நஸ்ரியா சீமுக்கு நல்ல காலம்

தனுஷ் நடித்து வரும் நையாண்டி படத்துக்கு கதாநாயகி கிடைக்காமல் அல்லாடிக் கொண்டிருந்தார் அப்படத்தை இயக்கும் களவாணி சற்குணம், காஜல் அகர்வால், ஹன்சிகா, சமந்தா, அமலாபால் என்று பலரிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருந்தவர், யாருமே தான் சொன்ன திகதிகளில் ப்ரியாக இல்லாததால், நமக்கேற்ற ஒரு புதுமுகத்தை தேடுவோம் என்று மும்பை, பெங்களூர் என்று வலை வீசி தேடிக் கொண்டிருந்தார்.
அப்போதுதான், நயன்தாரா சாயலில் ஒரு அழகான மலையாள நடிகை இருக்கிறார். அதுவும் தமிழில் நேரம் என்றொரு படத்தில் தற்போது நடித்து வருகிறார் என்று செய்தி வர, உடனடியாக சென்று பார்த்த சற்குணம், அந்த இடத்திலேயே நஸ்ரியாவை தன் படத்துக்கு ஒ.கே. செய்து விட்டார்.
இந்த நிலையில், நஸ்ரியாவை அடுத்தடுத்து புக் பண்ணியிருக்கும் முன்னணி இயக்குனர்கள், அவரை பார்த்துவிட்டு, இந்த நடிகைக்கு தமிழில் ஒரு பெரிய இடம் இருக்கு என்று ஆரூடம் சொல்லி வருகின்றனர். இதனால் சந்தோசத்தின் உச்சாணியில் இருக்கும் நஸ்ரியா நசீம், இதுவரை மலையாளத்தில் முகாமிட்டு தமிழ்ப்படங்களில் நடித்துவருபவர், விரைவில், கோடம்பாக்கத்தில் வீடுபார்த்து குடியேறப்போவதாக கூறி வருகிறார்.

மயக்கமா? ஐஸ்வர்யா மறுப்பு

தற்போது கதாநாயகனாக நடித்துக் கொண்டிருக்கும் அர்ஜூன் தனது மகள் ஐஸ்வர்யாவை விஷால் நடித்து வரும் பட்டத்து யானை படத்தில் அறிமுகம் செய்துள்ளார். இப்படத்தில் காதல் மட்டுமின்றி கொமெடி காட்சிகளிலும் அவர் அற்புதமாக நடித்து வருவதாக விஷால் உட்பட அப்படத்தின் முக்கிய கலைஞர்கள் அனைவரும் பில்டப் கொடுத்து வருகின்றனர்.
இந்த நிலையில் திருச்சியில் நடந்து வரும் அப்படத்தின் படப்பிடிப்பில் வில்லன்கள் துரத்துவது போன்ற காட்சியில் விஷாலுடன் ஓடியபடி நடித்தபோது ஐஸ்வர்யா மயங்கி விழுந்து விட்டதாக செய்திகள் வெளியாகின. ஆனால் இந்த செய்தியை மறுத்துள்ளார் அவர். அன்று முழுக்க வெயிலில் தான் ஓடியபடி நடித்தேன். ஆனால், மயங்கியெல்லாம் விழவில்லை. அந்த அளவுக்கு என்னை கஷ்டப்படுத்தவும் இல்லை என்று கூறியுள்ள ஐஸ்வர்யா, இருப்பினும் உண்மைக்கு புறம்பாக யாரோ செய்தி பரப்பி விட்டுள்ளனர் என்றார்.

Tuesday, May 7, 2013

வைரங்களைப் புதைத்திருக்கும் வரிகளை கொண்ட உவமைகள் நிறைந்த பாடல்


மிகவும் சாதாரணமான, சுவாரஸ்யமற்ற கதையைக் கொண்ட சந்திரோதயம் படத்துக்கு முத்து முத்தான பாடல்களை எழுதியிருக்கிறார் வாலி. அவை அனைத்துக்கும் சத்தான இசையை ஊட்டி, உலவ விட்டிருக்கிறார் மெல்லிசை மன்னர்.

இது ஒரு வழக்கமான காதல் டூயட்தான் என்றாலும், இதை ஒரு சிற்பம்போல மிக அழகாக செதுக்கியிருக்கிறார் வாலி.
இந்தப் பாடலில் நாயகன் பாடும் வரிகள் வழக்கமானவைதான். ஆனால் நாயகியின் வரிகளில்தான் வைரங்களைப் புதைத்திருக்கிறார் இந்த வித்தகக் கவிஞர். ஒரே பாடலில் எத்தனை உவமைகள்! இத்தனை உவமைகள் நிறைந்த பாடல் வேறொன்று இருக்குமா (அத்திக்காய் நீங்கலாக) என்பது சந்தேகம்தான்.
இந்தப் பாடலில் இசைக் கருவிகளைக் குறைந்த அளவே பயன்படுத்தியிருக்கிறார் எம். எஸ். வி. என்று தோன்றுகின்றது. பாடல் முழுவதும் அவர் நடத்தியிருக்கும் கச்சேரிக்கு இசைக்கருவிகள் தடங்கலாக இருக்கக் கூடாது என்பதாலோ என்னவோ!
மிக எளிமையான துவக்க இசை கட்டியம் கூறும் குழல் இசை (பாடல் முழுவதிலுமே, புல்லாங்குழலின் இனிமைதான் தூக்கி நிற்கிறது) ஒரு பிரமாண்டமான இசை வேள்வி நடக்கப்போகிறது என்பதற்கான எந்த ஒரு குறிப்பும் இல்லாமல் மெல்ல மென்மையாக ஆர்ப்பாட்டமில்லாமல் இசைத்துவிட்டுப் போகிறது துவக்க இசை.
கேட்டவுடனேயே மயங்க வைக்கும் இனிமையான பல்லவியை டி. எம். எஸ். துவங்கி வைக்கிறார். பல்லவியிலேயே மூன்று உவமைகளைத் தாராளமாக அநாயாசமாக இந்தா எடுத்துக்கொள் என்பது போல எடுத்து வீசியிருக்கிறார் கவிஞர் வாலி.
சந்திரோதயம் ஒரு பெண்ணானதோ
செந்தாமரை இரு கண்ணானதோ
பொன்னோவியம் என்று பேரானதோ
என் வாசல் வழியாக வலம் வந்ததோ
அடுத்து நாயகி தன்னைப் பற்றிப் பேசுகிறாள் நான் எப்படிப்பட்டவள் தெரியுமா?
குளிர்காற்று கிள்ளாத மலர்
கிளி வந்து கொத்தாத கனி
நிழல்மேகம் தழுவாத நிலவு
வியப்பாக இருக்கிறதா? ஆயினும் என்ன? இப்படிப்பட்டவளை நீ உன் நெஞ்சோடு சேர்த்துக் கொண்டு விட்டாயே!
இந்த வரிகளில் நாயகியின் பெருமை தெரிகிறது. எப்படிப்பட்ட தூய்மையான பொருளை நீ அடைந்திருக்கிறாய் என்பதை நீ உணர வேண்டும்’ என்று நாயகனுக்கு உணர்த்துவதாக அமைந்திருக்கின்றன இவ்வரிகள். இப்படி என்னைத் தூய்மையாக வைத்துக் கொண்டதெல்லாம் நீ உன் நெஞ்சுடன் என்னை இணைத்துக் கொள்ளத்தானா?’ என்ற (போலியான) ஆதங்கமும் இவ்வரிகளில் ஒலிக்கிறது.
இவ்வரிகளுக்கு இன்னொரு விதமாகவும் பொருள் கொள்ள முடியும்.
குளிர் காற்று கிள்ளாத (என்ன அருமையான சொல்! குளிர் காற்று உடலில் படும்போது ஏற்படும் சிலிர்ப்பை ‘கிள்ளல்’ என்று வாணித்திருக்கிறார். மலர், கிளி வந்து கொத்தாத கனி, நிழல் மேகம் தழுவாத நிலவு இவை எல்லாம் இயற்கையில் இருக்க முடியாதே? அப்படியானால் நான் மட்டும் எப்படி? நீ என்னை உன் நெஞ்சோடு சேர்த்துக் கொண்டு விட்டதால் வேறு எந்த விதத் தீண்டல்களும் எனக்கு ஏற்படவில்லை!
குளிர்காற்று கிள்ளாத மலரல்லவோ
கிளி வந்து கொத்தாத கனியல்லவோ
நிழல்மேகம் தழுவாத நிலவல்லவோ
நெஞ்சோடு நீ சேர்த்த பொருளல்லவோ
எந்நாளும் பிரியாத உறவல்லவோ
இதைத் தொடர்ந்து, நாயகி நாயகனை வர்ணிக்கும் பல்லவி
இளம் சூரியன் உந்தன் வடிவானதோ
செவ்வானமே உந்தன் நிறமானதோ
பொன்மாளிகை உந்தன் மனமானதோ
என் காதல் உயிர் வாழ இடம் தந்ததோ
பாடல் இன்னும் பாதி கூட முடியவில்லை அதற்குள் பன்னிரண்டு உவமைகளை அள்ளித் தெளித்து விட்டார் இரண்டாம் கம்பன். உவமைக் கவிஞர் என்ற பட்டம் இவருக்கும் பொருந்தும். இந்த ஒரு பாடலுக்காகவே இளம் சூரியன் உந்தன் வடிவம். செவ்வாணம் உந்தன் நிறம் என்பதெல்லாம் வழக்கமான வர்ணனைகள் ஆனால் ‘பொன்மாளிகை உந்தன் மனமானதோ’ என்ற வரியில் ஒரு பொடியை (பொறியை) வைத்திருக்கிறார் கவிஞர். ‘என் காதல் உயிர் வாழ இடம் தந்ததோ’ என்ற அடுத்த வரியின் மூலம் ‘நீ பொன்மனச் செம்மல்தான். ஆனால் அது எதனால்? என் காதல் உன் மனதில் உயிர் வாழ்கிறதே அதனால்தான் என் காதல்தான் பொன் அது உன் மனதில் இருப்பதால்தான் அது பொன் மாளிகை’
மீண்டும் பல்லவியின் இரு வரிகளைப் பாடுகிறார் நாயகி
(இளம் சூரியன்)
இந்த இடத்தில் மெல்லிசை மன்னருக்கு ஒரு எண்ணம் தோன்றுகிறது. இது ஒரு நீளமான பாடல் இந்த நீளமான பாடலின் சுருக்கத்தை அளித்தால் என்ன? எப்படி அளிப்பது? ஒரு ஹம்மிங் மூலமாகத்தான்! ஆஹாஹாஹா
என்ன ஒரு ஹம்மிங் (இதற்கு சரியான தமிழ்ச் சொல் இருக்கிறதா?)
இந்த ஹம்மிங்கைக் கேட்கும் போது வேறு இரண்டு ஹம்மிங்குகள் நினைவுக்கு வருகின்றன. மூன்றையும் ஒப்பிட்டு இந்தப் பாடலின் ஹம்மிங் காற்றில் லேசாக மிதப்பது போன்ற உணர்வைத் தருகிறது. இங்கே நாயகி இப்போதுதான் காதலின் உணர்வை அறியத் தொடங்கியிருக்கின்றாள்.
‘சிட்டுக்குருவி முத்தம் கொடுத்து’ பாடலில் வரும் ஹம்மிங். ஒரு இன்பக் கடலில் மூழ்கி மூழ்கி எழும் உணர்வை வெளிப்படுத்துகிறது. இந்த நாயகியின் காதல் உறுதியாகி விட்ட ஒன்று.
யாருக்கு மாப்பிள்ளை யாரோ’வில் வரும் ஹம்மிங் நாயகியின் உல்லாசமான, குறும்புத்தனமான, சீண்டிப் பார்க்கும் மனப்பான்மையை வெளிப்படுத்துகிறது.
பகவத் கீதையை முழுமையாகப் படிக்க முடியாதவர்கள், ‘ஸர்வ தர்மான பரித்யஜ்ய என்ற சரல் ஸ்லோகத்தை மட்டும் படித்தால் போதும் என்று சொல்வார்கள். அது போல், இந்தப் பாடலை முழுமையாகக் கேட்க நேரம் இல்லாவிட்டால், இந்த ஹம்மிங்கை மட்டும் கேட்டுப் பாடல் முழுவதையும் கேட்ட உணர்வைப் பெறலாம்.

ரஜினி முதன் முதலாக கதாநாயகனாக நடித்த ~பைரவி' யில் ஜோடி சேர்ந்தவர் ஸ்ரீபிரியா


வில்லனாக நடித்துக் கொண்டிருந்த ரஜினிகாந்த் முதன் முதலாக ‘பைரவி’ படத்தில் கதாநாயகனாக நடித்தார். அந்தப் படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்கும் வாய்ப்பு ஸ்ரீபிரியாவுக்கு கிடைத்தது.
ஸ்ரீபிரியாவின் முதல் படமான ‘முருகன் காட்டிய வழி’ படம் தயாராகிக் கொண்டிருந்த நேரத்தில் டைரக்டர் கே. பாலசந்திரனின் ‘அவள் ஒரு தொடர்கதை’ படத்திலும் ஒப்பந்தமானார் ஸ்ரீபிரியா.
‘முருகன் காட்டிய வழி’ படம் 1974 ஜூன் மாதம் ரிலீசானது. இதே ஆண்டில் தீபாவளி தினத்தில் ‘அவள் ஒரு தொடர்கதை’ படம் வெளியானது. இந்த நேரத்தில் எம். ஜி. ஆர். நடித்து டைரக்டர் ஸ்ரீதர் இயக்கிய ‘உரிமைக்குரல்’ உள்ளிட்ட சில பெரிய படங்களும் வெளிவந்தன. இருந்தும் முற்றிலும் புதுமுகங்களை வைத்து கே. பாலசந்தர் இயக்கிய ‘அவள் ஒரு தொடர்கதை’ படம் மகத்தான வெற்றிபெற்றது
இதுபற்றி ஸ்ரீபிரியா கூறியதாவது ::-
‘அவள் ஒரு தொடர்கதை’ படத்தில் நடிக்கும்போதே டைரக்டர் கே. பாலசந்தர் என்னிடம் ‘படத்தில் எத்தனை கெரக்டர்கள் இருந்தாலும் உன் கெரக்டர் தனித்துப் பேசப்படும்’ என்றார். அப்படியே நடந்தது.
தமிழில் வெற்றிபெற்றதைத் தொடர்ந்து இந்தப் படத்தை தெலுங்கிலும் கே. பாலசந்தர் அந்துலேனி கதா’ என்ற பெயரில் உருவாக்கினார். தமிழில் சுஜாதா நடித்த கெரக்டரில் தெலுங்கில் ஜெயபிரதா நடித்தார். தமிழில் படாபட் ஜெயலட்சுமியும், நானும் ஏற்றிருந்த அதே கெரக்டர்களை தெலுங்கிலும் நடித்தோம். தெலுங்கிலும் படம் பெரிய அளவில் வெற்றி பெற்றது.
இந்த வெற்றியைத் தொடர்ந்து தெலுங்கு ரசிகர்களிடமும் நான் பிரபலமானேன். தமிழில் என் அண்ணன் கெரக்டரில் ஜெய்கணேஷ் நடித்திருந்தார். தெலுங்கில் இந்தக் கெரக்டரில் ரஜினி நடித்து பிரபலமானார்.
இப்படி ரஜினியும், ஸ்ரீபிரியாவும் தெலுங்கில் நல்லவிதமாக அறிமுகமானதைத் தொடர்ந்து ‘சிலகம்மா செப்பந்தி’ என்ற தெலுங்குப் படத்தில் இருவரும் ஜோடியாக நடித்தனர். இது ‘அடிமைகள்’ என்ற மலையாளப் படத்தின் ரீ மேக், மலையாளத்தில் சாரதா நடித்த கெரக்டரில் தெலுங்கில் ஸ்ரீபிரியா நடித்திருந்தார். கே. பாலசந்தர் மேற்பார்வையில் ஈரங்கி ஷர்மா டைரக்ட் செய்திருந்தார்.
இந்த தெலுங்குப் படமும் வெற்றிபெற்றது. இதையே தமிழில் ‘நிழல் நிஜமாகிறது’ என்ற பெயரில் சில மாற்றங்களுடன் உருவாக்கினார். தெலுங்கில் ரஜினி நடித்த கெரக்டரில் தமிழில் கமலஹாசனும், ஸ்ரீபிரியா நடித்த கெரக்டரில் ஷோபாவும் நடித்தார்கள். தமிழிலும் படம் வெற்றிபெற்றது.
தமிழில் பாலசந்தர் கேட்ட திகதிகளை தரமுடியாத அளவுக்கு ஸ்ரீபிரியா பிசியாக இருந்ததால், தமிழில் ஸ்ரீபிரியாவுக்கு பதிலாக ஷோபா நடித்தார்.
இதுபற்றி ஸ்ரீபிரியா கூறும்போது, ‘1974 ல் வருஷத்துக்கு ஐந்தாறு படம் என்ற நிலையில் இருந்தேன். ஆனால் அடுத்து வந்த வருடங்களில் வருடத்துக்கு 16 முதல் 18 படம் வரை நடித்தேன்! அந்த ஆண்டுகளில் அதிக படங்களில் நடித்த நடிகை என்ற பெயரை தொடர்ந்து தக்க வைத்துக் கொண்டிருந்தேன்’ என்கிறார்.
வி. சி. குகநாதன் டைரக்ட் செய்த ‘மாங்குடி மைனர்’ படத்தில் ஸ்ரீபிரியா கதாநாயகியாக நடித்தார். இப்படத்தில் ரஜினி நடித்திருந்தாலும், விஜயகுமார்தான் ‘மாங்குடி மைனர்’. ரஜினி, வில்லனாகவே நடித்துக் கொண்டிருந்த காலக்கட்டம் இது.
இந்தியில் ‘ராம் கு காலட்சுமண்’ என்ற பெயரில் ரந்திர்கபூர், சத்ருகன் சின்கா, ரேகா நடித்த படத்தில் தமிழ்ப் பதிப்பு இது. இந்தியில் சத்ருகன் சின்கா ஏற்றிருந்த வேடத்தை தமிழில் ரஜினி ஏற்க, ரேகா கெரக்டரில் ஸ்ரீபிரியா நடித்தார்.
இந்த சமயத்தில்தான் ‘பைரவி’ படத்தில் ரஜினியை கதாநாயகனாக அறிமுகப்படுத்தினார் தயாரிப்பாளர் கலைஞானம். இந்தப் படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடிக்கும்படி ஸ்ரீபிரியாவை கேட்டார்.
ஸ்ரீபிரியா ஏராளமான படங்களில் நடித்துக் கொண்டு பிசியாக இருந்த நிலையிலும், கால்iட்டுகளை அட்ஜஸ்ட் செய்து ‘பைரவி’யில் கதாநாயகியாக நடித்தார்.
இதுபற்றி ஸ்ரீபிரியா கூறியதாவது :-
‘அப்போது நான் நிறைய தெலுங்குப் படங்களை கைவசம் வைத்திருந்தேன். நான் கமல், ரஜினி, மூவருமே சம காலத்தில் நடிக்க வந்தவர்கள். டைரக்டர் கே. பாலசந்தர் படங்களில் நடிக்கும்போதே எங்களுக்குள் நல்ல நட்பு இருந்து வந்தது. ருத்ரையா டைரக்ஷனில் ‘அவள் அப்படித்தான்’ படத்தில் கமல், ரஜினி, நான் என்று மூவருமே நடித்தும் இருக்கிறோம். ரஜினியுடன் ‘ஆடுபுலி ஆட்டம்’ போன்ற சில படங்களில் நடிப்பை தொடர்ந்திருக்கிறேன்.
‘அவள் அப்படித்தான்’ படத்தில் என் நடிப்புக்காக தமிழக அரசு ‘சிறந்த நடிகை’ விருது தந்தது. உண்மையில் இந்தப் படத்தின் கதையை கேட்டதும் நான் நடிக்கத் தயங்கினேன். திருமணமானவரை விரும்பும் பெண் கெரக்டரை ரசிகர்கள் ஏற்பார்களோ, மாட்டார்களோ என்று பயந்தேன். ஆனால் கமல்தான், ‘நிச்சயமாக இந்த கெரக்டர் உனக்கு பேரும் புகழும் வாங்கித் தரும், நடி’ என்று வற்புறுத்தினார்.
இப்படி ஒருவர் வளர்ச்சியில் மற்றவர்கள் அக்கறை செலுத்தி மகிழ்ந்து கொண்டிருந்தோம்.
முதல் முதலாக ரஜினி கதாநாயகனாக நடித்த படத்தில், அவருடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பு எனக்கு வந்ததும், அப்போது ‘பத்மாலயா’ நிறுவனத்தின் தெலுங்குப் படத்துக்கு கொடுத்திருந்த கால்iட்களை அவர்களிடம் கேட்டு மாற்றிக்கொண்டு? ‘பைரவி’ படத்தில் நடித்தேன். படமும் வெற்றிபெற்றது’ என்றார் ஸ்ரீபிரியா.
தேவர் பிலிம்ஸ் தயாரித்த ‘ஆட்டுக்கார அலமேலு’ படம் ஸ்ரீபிரியாவுக்கு மிகவும் புகழ் தேடித்தந்த படம். ஸ்ரீபிரியா நடித்த வேடத்தில், முதலில் படாபட் ஜெயலட்சுமிதான் நடிக்க இருந்தார். அப்போது தெலுங்கில் தாசரி நாராயணராவ் இயக்கத்தில் ‘படாபட்’ நடித்த தெலுங்குப் படம் தமிழில் ‘சொர்க்கம் - நரகம்’ என்ற பெயரில் வெளியாகி இங்கும் வெற்றி பெற்றிருந்தது. இதனால் ‘படாபட்’ ஜெயலட்சுமியை ஆட்டுக்கார அலமேலுவாக நடிக்கச் செய்ய ஏற்பாடு நடந்தது.