Wednesday, November 21, 2018

காற்றால் மூச்சுப்போன குடும்பங்களை காப்பாற்றுங்கள்- வைரமுத்து உருக்கம்



புயலால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு விரைவாக நிதி உதவி வழங்க வேண்டும் என்று மத்திய அரசை, கவிஞர் வைரமுத்து கேட்டுக்கொண்டுள்ளார்.


இதுதொடர்பாக ட்விட்டரில் வைரமுத்து கூறியுள்ளதாவது:
புயலால் பாதிக்கப்பட்ட

தமிழர்களுக்கு விரைந்து

நிதி வழங்க மத்திய

அரசைத் துயரத்தோடு
கேட்டுக்கொள்கிறேன்.

காதல் மன்னனின் மரண நாடகம்



ன் அப்பா அன்பானவர், அழகானவர், அடக்கமானவர், அமைதியானவர், நேர்மையானவர், அறிவுரை போதிப்பவர் மொத்தத்தில் எனக்குமிகவும் பிடித்தவர். அவ்வப்போது அப்பா சொல்வார், இந்த நேரத்தை தவறவிட்டால் அது திரும்ப வராது. அதனால் ஒவ்வொரு நிமிடத்தையும் பயனுள்ளதாகவும் உபயோகிக்கவேண்டும் என கூறுவார். இதனை நான் வேதவாக்காக இன்று வரை கடைப் பிடித்து வருகிறேன்.
அப்பா ஏழை, பணக்காரர் என வித்தியாசம் பாராமல் பழகுவார். குடிசை வீட்டிலும் உட்கார்ந்து சாப்பிடும் குணம் கொண்டவர். தனது உதவியாளருடன் வெளி நிகழ்ச்சிகளுக்கு செல்லும் போது அவருடனே உட்கார வைத்து சாப்பிடுவார். என் அப்பாவிற்கு என்ன மரியாதை கொடுக்கப்படுகிறதோ அதே அளவு தன் உடன் வந்தவர்களுக்கும் கொடுக்க வேண்டும் என்ற தாராள மனம் கொண்டவர். அப்பா அவருடைய ரசிகர்களுடன் அன்போடு பழகுவார். அவர்கள் வீட்டு திருமணம் அல்லது வேறு எந்த சுபநிகழ்வு என்று அவர்கள் அழைத்தாலும் அதற்கு மதிப்பு கொடுத்து சென்று வருவார்.
அப்பாவை எல்லோரும் கருமி என்று சொல்வார்கள். எனக்கும் அவரைப்பற்றி அந்த எண்ணம் உண்டு. ஆனால் கடைசியில் தான் தெரிந்து கொண்டேன் அப்பா அப்படிப்பட்டவர் இல்லை என்று. என்வீட்டிற்கு எதிரில் உள்ள சைக்கிள் கடைக்காரர் ஒருவர் சொன்னார், இன்னைக்கு நான் நல்லா இருக்கிறேன் என்றால் உங்கள் அப்பா தான் காரணம். நான் கஷ்டப்படும் போது பண உதவி செய்து என்னை இந்த அளவிற்கு உயர்த்திவிட்டவரே அவர்தான் என்று கூறினார். ஏன் இதை இன்று வரை சொல்லவில்லை என்று கேட்டதற்கு, உங்கள் அப்பா என்னிடம் “வலதுகை கொடுப்பதை இடது கைக்கு தெரியக் கூடாது” என்று கூறினார். அதனால்தான் அதனை இன்று வரை யாரிடமும் சொல்லவில்லை என்றார். இதை கேட்டவுடன் அப்பாவை பற்றி நான் தப்பாக நினைத்துவிட்டோமே என்று வருத்தப்பட்டேன்.
ஒருநாள் அப்பாவோடு நாங்கள் காரில் சென்ற போது எதிரில் வந்த ஒருவரை பார்த்து அப்பா கை அசைத்தார். ஆனால் அந்த நபர் அதனை கவனிக்கவில்லை. அப்போது என் தங்கை அப்பாவிடம் கேட்டார், ஏன் அப்பா அவர் தான் கை அசைக்கவில்லையே “நீங்கள் மட்டும் எதற்கு கைகாட்டினீர்கள் என்று”அதற்கு அப்பா சொன்னார், அவர் கைகாட்டி நான் கை அசைக்காமல் போனால் அவர் மனது கஷ்டப்படும், நான் கை அசைப்பதால் எனக்கு ஏதும் நஷ்டம் கிடையாது என்றார். அடுத்தவர் மனம் கோணாமல் அவர் நடந்து கொண்ட விதம் இன்றும் என்மனதில் நீங்காமல் உள்ளது.
அப்பா ஒருமுறை தனுஷ்கோடிக்கு போன போது பெரிய புயல் தாக்கி அந்த ஊரே மிகவும் சேதம் அடைந்துவிட்டது. அங்கு அப்பா என்ன ஆனார் என்று யாருக்கும் தெரிய வில்லை. அப்போது பத்திரிகைகளில் எல்லாம் அது பற்றி பரபரப்பாக செய்தி வந்தது. அது எனக்கு நன்றாக ஞாபகம் இருக்கிறது, நடிகர் முத்துராமன் எங்கள் வீட்டிற்கு வந்து எனது கங்கா பாட்டியிடம்(அப்பாவின் அம்மா), இப்படி நடந்து போச்சு மனதை தேற்றிக் கொள்ளுங்கள், இனி உங்கள் மகன் ஜெமினி வரமாட்டார் என்று வேதனையுடன் கூறினார். ஆனால் கங்கா பாட்டி மிகவும் கடவுள் பக்தி உடையவர், அவர் கூறியதற்கு எந்த வருத்தமும் இல்லாமல் என் மகன் எங்க போய்ற போறான் 2 நாள்ல வந்துருவான்” என்று இயல்பாக கூறினார். எங்களுக்கு ஒன்றும் புரியவில்லை. எங்கள் பாட்டி சொன்னது போலவே எனது அப்பாவும் 2 நாட்களில் வீடு திரும்பினார். அப்போது நான் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.
வீரபாண்டிய கட்டபொம்மன் படத்தில் என் அப்பா நடித்த கதாபாத்திரத்தில் நடிகர் எஸ்.எஸ்.ராஜேந்திரன் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார். ஆனால் படப்பிடிப்பு சமயத்தில் ஏதோ ஒரு காரணத்தால் அவர் நடிக்க முடியாமல் போனது. அப்போது என் அப்பாவை நாடினார்கள். ஆனால் அப்பா அதற்கு சம்மதிக்கவில்லை. காரணம் எஸ்.எஸ்.ஆர் கதாபாத்திரத்தை நான் தட்டி பறித்ததாக வெளி உலகம் பேசிவிடும் என்று எண்ணி மறுத்துவிட்டார். அதன் பிறகு எஸ்.எஸ்.ராஜேந்திரனிடம் இருந்து இந்த கதாபாத்திரத்தில் ஜெமினி நடிக்க எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை என்று கடிதம் வந்த பிறகு தான் அப்பா அதில் நடிக்க ஒப்புக்கொண்டார். இப்படி எல்லா இடத்திலும் உயர்ந்த எண்ணத்துடனேயே வாழ்ந்த மாமனிதர்.
அந்த காலத்தில் சிவாஜி, எம்.ஜி.ஆர் என்ற இரு பெரும் மலைகளுக்கு இடையில் எந்த விருப்பு, வெறுப்பு, போட்டி, பொறாமை இல்லாமல் தனி நட்சத்திரமாக மின்னியவர் என்அப்பா. எல்லா நடிகர்களுடனும் நட்புடனே பழகி வந்தார்.இவரது படங்கள் யாருக்கும் போட்டியாக இருந்ததே இல்லை. இவரது ரசிகர்கள் கூட்டம் என்றும் தனிதான்.அப்பா ஓய்வு எடுத்து நான் பார்த்ததே இல்லை. அவரது உடை, கண்ணாடிஅணியும் ஸ்டைல், நாற்காலியில் உட்காரும்விதம் எல்லாம் அழகுதான். நானே எத்தனையோ முறை ரசித்திருக்கிறேன்.
அப்பா கார் எப்போதும் வேகமாகவும், ஸ்டைலாகவும் ஓட்டுவார். எனக்கு 14 வயதில் கார் ஓட்ட கற்றுக் கொடுத்ததும் அப்பாதான். நான் சுலபமாக கற்றுக் கொண்டேன். அம்மாவுக்கும் கார் ஓட்ட கற்றுக் கொடுக்க நினைத்தார், அம்மா பயத்தில் சிறிது தவறு செய்தால் தலையில் நறுக்கென்று கொட்டு விழும். அதற்கு பயந்து கொண்டு அம்மா வேணாம், உங்க அப்பா கிட்ட கொட்டு வாங்கமுடியாது என்று கூறி கார் ஓட்ட கற்றுக் கொள்ளவே இல்லை. அந்த தருணம் மிகவும் இனிமையானது. நான் காதல் திருமணம் செய்ததால் என் மீது பெற்றோருக்கு கடுமையான கோபம் ஏற்பட்டது. திருமணத்துக்குப் பின் கணவருடன் தனிக் குடித்தனம் வந்து விட்டேன். பெற்றோர் என்னிடம் பேசமாட்டார்கள்.
அப்பாவின் ஒவ்வொரு பிறந்த நாளுக்கும் என்கையால் வரைந்த ஓவியத்தை பரிசாக கொடுப்பேன். எனக்கு திருமணம் ஆன வருடம், அப்பாவின் பிறந்தநாளை ஏனோ நான் மறந்து விட்டேன். அப்பாவின் பிறந்த நாளன்று எனக்கு ஒரு போன் வந்தது, போனில் பேசியவர் உங்கள் அப்பா இறந்துவிட்டார் என்று கூறினார். கடும் அதிர்ச்சி அடைந்த நான் பதறி அடித்துக் கொண்டு என் கணவருடன் ஸ்கூட்டரில் அப்பா வீட்டிற்கு சென்றேன். அங்கு அப்பா தலையை சாய்த்து படுத்துக் கொண்டிருந்தார். நான் கதறியபடி அவர் பக்கத்தில் சென்று என்ன ஆச்சு அப்பா என்றேன். அவர் கண்களில் நீர் ததும்ப என்னை கட்டிப்பிடித்தப்படி“ஏம்மா இன்று என் பிறந்தநாள் மறந்துட்டியா என்றார். “என்னால் என் துக்கத்தையும் அழுகையையும் கட்டுபடுத்தவே முடியவில்லை. அவரை கட்டிக் கொண்டு கதறி அழுதேன். பின்னர் தான் தெரிந்தது என்னை வீட்டுக்கு வரவழைக்க அவரே (ஜெமினி கணேசன்) போன் செய்து இந்த மரண நாடகத்தை நடத்தி இருக்கிறார் என்பது.
அன்றில் இருந்து இன்று வரை அவர் பிறந்தநாளை நான் மறந்ததே இல்லை.
அந்தக்காலத்தில் அப்பா நாள் முழுவதும் 4ஷிப்ட் சினிமா படப்பிடிப்பில் கலந்து கொள்வார். வீட்டுக்கு திரும்பியதும் கீழே படுத்துக் கொண்டு அலுப்பு தீர எங்களை அவர் முதுகில் ஏறி நின்று மிதிக்கச் சொல்வார். ஞாயிற்றுக் கிழமையன்று கடற்கரைக்கு அழைத்துச் செல்வார். பின்னர் ஓட்டலில் மாசால் தோசையும், பாதம் கீரும் வாங்கி கொடுப்பார்.
நடிகர் கமல்ஹாசனை பாலச்சந்தரிடம் அழைத்துச்சென்று காதாநாயகன் வாய்ப்பு கொடுக்கும்படி கேட்டார். அதற்கு பாலச்சந்தர் இவன் சின்னப்பையனாக இருக்கிறானே என்று கூறி இருக்கிறார். உடனே என் அப்பா அணிந்து இருந்த மூக்குக் கண்ணாடியை கமல்ஹாசனுக்கு மாட்டி விட்டு இப்போது பெரிய ஆளாகி விட்டான் என்று கூறவும் பாலச்சந்தர் சிரித்து விட்டாராம்.
இன்று அவருக்கு பிறந்தநாள். என்றும் அப்பாவும் அம்மாவும் என்னுள் என் உருவத்தில் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள். அப்பாவை நினைக்காதநாள் கிடையாது. இன்று என்னுள் இருக்கும் அனைத்து நல்ல குணங்களும் அப்பாவிடம் இருந்து கற்றுக்கொண்டது. அவரை நினைத்து நான் எழுதும் போதே என்கண்களில் கண்ணீர் வழிகிறது. அவ்வளவு பாசம் உள்ள அப்பா மகளாக நாங்கள் வாழ்ந்து இருக்கிறோம். இந்த பந்தம் என்றும் தொடரும். இதனை நினைக்கும் போதும் மிகவும் பெருமிதம் கொள்கிறேன்.
-டாக்டர் கமலா செல்வராஜ் (நடிகர் ஜெமினிகணேசன் மகள்)

Ciniminii - K. Easwaralingam


கண்ணுக்கினிய நல்ல மலர்களின் வாசம் வீசும் கவிரசாின் கவிதைப் பூங்காவில் பேசும் இலக்கிய நயம்


தமிழ் நூல்களில் மூன்று சொற்களில் அமைந்துள்ள சொல்லோவியங்கள் ஆயிரக் கணக்கில் உள்ளன. ஒவ்வொரு சொற்றொடரும் ஆழ்ந்த கருத்து. இலக்கிய அழகு, இன்சுவை, உணர்ச்சி வெளிப்பாடு போன்ற பல அம்சங்களை இனிதே தரும்.
கண்ணதாசனின் பாடல்களில் மூன்று சொல் முத்துக்களை எடுங்கள் என்றால் சுலபமாக அப்பாடல்களில் உளத்தைக் கொடுத்தோர் முன்னூறு பாடல்களை மூச்சு விடாமல் சொல்லி விடுவர்.
மொத்தப் பாடல்களையும் எடுத்து வைத்துக் கொண்டு ஒரு பருந்துப் பார்வை பார்த்தால் வியப்பு தான் மேலிடுகிறது. நாம் வியக்கிறோம் என்பது ஒரு புறம் இருக்கட்டும், கண்ணதாசனே கண்ணதாசனின் பாடல்களை கடும் விமரிசனத்திற்காகப் பார்த்தாலும் ஆச்சரியம் தான் படுகிறார். அப்படி ஒரு பரந்த களத்தின் அடிப்படையில் அவரது பாடல்கள் எழுந்துள்ளன.


இந்த வகையில் கவியரசரின் கவிதைப் பூங்காவில் நுழைவோம்; கண்ணுக்கினிய சில நல்ல மலர்களைப் பார்ப்போம்.
செந்தமிழா எழுந்து வாராயோ – உன்
சிங்காரத் தாய்மொழியைப் பாராயோ
அன்பு நெறியிலே அரசாள – இந்த
அகிலமெல்லாம் தமிழர் உறவாட
துன்பங்கள் யாவும் பறந்தோட
தூய மனங்கொண்டு கவிபாட படம்: மதுரை வீரன்
*****

தமிழனின் தாய்மொழியைப் பாராட்டி அகில உலக தமிழரை ஒன்று கூட்டி தூய மனம் கொண்டு கவி பாடி துன்பங்கள் யாவும் பறந்தோடச் செய்வோம் என்ற கற்பனையில் உயர்ந்த சிந்தனையைப் பார்க்கலாம்!
துள்ளித் திரிந்த பெண்ணொன்று
துயில் கொண்டதேன் இன்று
தொடர்ந்து பேசும் கிளியொன்று
பேச மறந்ததேன் இன்று படம்: காத்திருந்த கண்கள்
*****

அல்லி பூத்த முகத்தினிலே முல்லை பூத்த நகை எங்கே, துள்ளித் திரிந்த பெண்ணொன்று இன்று துயில் கொண்டதேன்? கவிஞர் கேட்கிறார். அவரே பதிலும் சொல்கிறார். அன்னை தந்த சீதனமோ, என்னை வெல்லும் நாடகமோ என்று!
மயக்கம் எனது தாயகம்
மௌனம் எனது தாய்மொழி
கலக்கம் எனது காவியம் – நான்
கண்ணீர் வரைந்த ஓவியம் படம்: குங்குமம்
*****
சோகம் ஒலிக்கும் குரலில் கலக்கம் வந்த காரணத்தையும் கவிஞர் கூறி விடுகிறார். நானே எனக்குப் பகையானேன் –என் நாடகத்தில் நான் திரையானேன் என்று.
ஆத்மைவ ஆத்மனோ பந்து: ஆத்மைவ ரிபுஆத்மன: (உனக்கு நீயே நண்பன்; உனக்கு நீயே பகைவன் என்ற கீதையின் கருத்து சாதாரணமாக இங்கு வந்து விழுவதைப் பார்க்கலாம்)
போனால் போகட்டும் போடா
போனால் போகட்டும் போடா – இந்த
பூமியில் நிலையாய் வாழ்ந்தவர் யாரடா?
போனால் போகட்டும் போடா படம்: பாலும் பழமும்
வாழ்க்கை கணக்கை சில வரிகளில் போட்டு வாழ்க்கை என்பது வியாபாரம், வரும் ஜனனம் என்பது வரவாகும், அதில், மரணம் என்பது செலவாகும் என்று வரவு செலவு கணக்கை இவ்வளவு கச்சிதமாக மூன்று மூன்று சொல் அடுக்குகளில் காண முடிகிறதே! நமக்கும் மேலே ஒருவன், அவன் நாலும் தெரிந்த தலைவன், அவன் தான் அனைத்தையும் இரவல் தந்தவன், அதை இல்லை என்றால் அவன் விடுவானா?
கவிஞரின் ஆணித்தரமான கேள்விகள் எவ்வளவு சிந்தனையைக் கிளப்பி விடுகிறது?
தொட்டால் சுடுவது நெருப்பாகும்
தொடாமல் சுடுவது சிரிப்பாகும்!
தெரிந்தே கெடுப்பது பகையாகும்
தெரியாமல் கெடுப்பது உறவாகும்
படம்: படித்தால் மட்டும் போதுமா – (அண்ணன் காட்டிய வழியம்மா பாடலில்)
எப்படி இருக்கிறது புது வியாக்கியானம்?
பிறக்கும் போதும் அழுகின்றான்
இறக்கும் போதும் அழுகின்றான்
ஒருநாளேனும் கவலை யில்லாமல்
தத்துவப் பாடல்களின் மன்னன் என்பதை நிரூபிக்க எத்தனை பாடல்கள் வேண்டும்?
உள்ளம் என்பது ஆமை – அதில்
உண்மை என்பது ஊமை!
சொல்லில் வருவது பாதி – நெஞ்சில்
தூங்கிக் கிடப்பது நீதி! படம்: படித்தால் மட்டும் போதுமா

ஜெயலலிதாவுடன் விஜயகுமார் நடித்த படங்கள்



நடிகர் விஜயகுமார் "மாற்றான் தோட்டத்து மல்லிகை'', "மணிப்பூர் மாமியார்'' என்று 2 படங்களில் ஜெயலலிதாவுடன் நடித்தார். ஆனால் இரண்டு படங்களுமே பாதியில் நின்றுவிட்டன.

நடிகர் விஜயகுமார் "மாற்றான் தோட்டத்து மல்லிகை'', "மணிப்பூர் மாமியார்'' என்று 2 படங்களில் ஜெயலலிதாவுடன் நடித்தார். ஆனால் இரண்டு படங்களுமே பாதியில் நின்றுவிட்டன.

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக வலம் வந்த நடிகர் விஜயகுமார் அன்றைய முன்னணி ஹீரோயின்கள் அனைவருடனும் இணைந்து நடித்தார்.

அப்போது படங்களில் நடிப்பதில் இருந்து சற்று ஒதுங்கியிருந்த ஜெயலலிதா 2 படங்களில் நடிக்க வந்த அழைப்பை ஏற்றார். 2 படத்திலுமே அவருக்கு விஜயகுமார் ஜோடியாக நடித்தார். துரதிருஷ்டவசமாக அந்தப் படங்கள் திரையை எட்டிப் பார்க்காமலே போய்விட்டன.

அதுபற்றி விஜயகுமார் கூறுகிறார்:-

"நான் மிகவும் மதிக்கும் ஒரு கலைஞராக மேடம் ஜெயலலிதா இருந்தார். அப்போது அவர் சில காலம் நடிப்புலகை விட்டு ஒதுங்கியிருந்தார். பிரபல எழுத்தாளர் மகரிஷியின் `நதியைத் தேடி வந்த கடல்' நாவலை படமாக்க முடிவு செய்தனர். இதில் சரத்பாபு நாயகன். ஜெயலலிதா நாயகி.

இதே நேரத்தில் டைரக்டர் பாலகிருஷ்ணன் "மாற்றான் தோட்டத்து மல்லிகை'' என்ற படத்தை இயக்க இருந்தார். இந்தப் படத்தில் ஹீரோவாக என்னை ஒப்பந்தம் செய்தார். படத்தில் எனக்கு ஜோடியாக ஜெயலலிதா நடிப்பார் என்றார்கள். இதற்கு முன் அவருடன் நான் எந்த படத்திலும் சேர்ந்து நடித்ததில்லை.

இதே நேரத்தில் டைரக்டர் வி.சி.குகநாதன் "மணிப்பூர் மாமியார்'' என்றொரு படம் இயக்க வந்தார். இதிலும் நானும் மேடம் ஜெயலலிதாவும்தான் ஜோடி.

மேடத்தை நான் செட்டில் பார்க்கும்போதே, அவரது பண்பையும் அறிவாற்றலையும் புரிந்து கொண்டேன்.

அவருக்கான காட்சி முடிந்ததும் நாற்காலியில் அமர்ந்து ஏதாவது படித்துக் கொண்டிருப்பார். சென்னையில் உள்ள முருகாலயா ஸ்டூடியோவில் "மாற்றான் தோட்டத்து மல்லிகை'' படப்பிடிப்பு தொடர்ந்து 10 நாட்கள் நடைபெற்றது. இந்த 10 நாட்களிலும் எதையும் அளந்து பேசும் அவரது பண்பும் விஷயங்களை அறிவுபூர்வமாக விவாதிக்கும் ஆற்றலும் என்னை பெரிதும் வியக்க வைத்தன.

அது 1978-ம் வருடம். அந்த நாட்களில் சிங்கப்பூர் போவதென்பது ரொம்பவும் அபூர்வ விஷயம். போகிறோம் என்று தெரிந்தாலே நட்பு வட்டமும் உறவினர்களும் `எனக்கு அது வாங்கி வாருங்கள், இது வாங்கி வாருங்கள்' என்று பெரிய லிஸ்ட்டை கொடுத்து விடுவார்கள்.

"மாற்றான் தோட்டத்து மல்லிகை'' படப்பிடிப்பு நடந்த நேரத்தில் நான் சிங்கப்பூருக்கு போய்வர இருந்தேன். படப்பிடிப்பில் இருந்த பலரும் அவரவருக்கு தேவையான லிஸ்ட்டை கொடுத்தார்கள். மேடம் மட்டும் எதுவும் சொல்லவில்லை. நானாக அவரிடம் போய், "மேடம்! சிங்கப்பூரில் உங்களுக்கு ஏதாவது வாங்கிவர வேண்டுமானால் சொல்லுங்கள்'' என்று கேட்டேன். அவரோ, "கேட்டதற்கு நன்றி. எதுவும் வேண்டாம்'' என்று ஒற்றை வரியில் முடித்து விட்டார்.

என்றாலும் நான் விடவில்லை. "எல்

Wednesday, November 14, 2018

இந்த வைத்த கண் வாங்காத பார்வை ஏன்?


திருவாரூர் தேராக நடந்து வரும் நாயகியை வைத்த கண் வாங்காமல் நாயகன் ஆச்சர்யத்தோடு பார்ப்பதன் மர்மம்தான் என்ன?
சண்டைப் பயிற்சியாளராக நடன இயக்குநர் பிரபு தேவா. கதாநாயகி லட்சுமி மேனன்.
படம்: எங் மங் சங்.

3 நாயகிகள் 3 நாயகன்கள்


அழகழகான பூக்களுக்குள் ஒளிந்திருப்பது வாசம்: மென்மையான பெண்களுக்குள் மறைந்திருப்பது பாசம்.

(ஜெகா, உமேஷ், ஏ.ஆர்.ஜெயகிருஷ்ணா, லுப்னா, நிகாரிகா, சஹானா. படம்: உன்னால் என்னால் )

"ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள்"

சிலோன் யுனெட்டெட் ஆர்ட் ஸ்டேஜ் குழுவினரின் "ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள்" என்ற நாடகம் வத்தளை நகர சபை மண்டபத்தில் அண்மையில் மேடையேற்றப்பட்டது.



இலங்கை நாடக வரலாற்றில் இதுவரை காலமும் மேடை நாடகங்களை மேடையேற்றி விட்டு பின்புதான் அவற்றை நூலாக வெளியிடுவது வழக்கமாக இருந்து வந்தது. ஆனால் முதன்முறையாக சிலோன் யுனெட்டேட் ஆர்ட் ஸ்டேஜ் அமைப்பின் தலைவரும் இயக்குனருமாகிய கே. செல்வராஜா இந்த நாடக நுாலை எழுதி வெளியிட்டு அண்மையில் இந்த நாடகத்தை மேடையேற்றி இருக்கிறார். இவரது இந்தப் பணி போற்றுதற்குரியது.


நீண்ட இடைவெளிக்குப் பின் வத்தளை ரசிகர்களுக்கு ஒரு சிறந்த நாடகத்தை கண்டு களிக்கக்கூடிய வாய்ப்பு கிடைத்தது. நல்லது, கெட்டது: உண்மை, பொய்: மேல், கீழ்: உள்ளே, வெளியே என இந்த உலகில் இருக்கின்ற அனைத்துக்கும் இரண்டு பக்கங்கள் இருப்பதுபோல ஒரு நாணயத்திற்கு எப்படி இரு பக்கங்கள் இருக்கின்றனவோ அதேபோல் இந்த நாடகத்தின் கதாநாயகனுக்கும் இரு பக்கங்கள் இருப்பதை நன்றாக புலப்படுத்தியது. இந்த நாடகத்தில் நடித்த அனைத்து நடிகர்களினதும் நடிகைகளினதும் நடிப்பு நன்றாகவே இருந்தது. மேடை நாடகங்கள், தொலைக்காட்சி நாடகங்கள் ஆகியவற்றில் நடித்து பாண்டியத்தியம் பெற்ற நடிகர் சுதாகர், நடிகை சாந்தி பானுஷா, பிரியா, ஜி. ஜே. ராஜ், இளங்கோ, ஏ. எல். ராஜா, பொன். பத்மநாதன் ஆகிய அனைவரினதும் நடிப்பு பாராட்டத்தக்க விதத்தில் இருந்தது. கலைவாணி இசைக்குழுவின் இசை அமைப்பாளர் சந்திரதாஸின் இசை வழங்கலும் பிரபல கலைஞரும் ஊடகவியலாருமான ராதா மேத்தாவின் ஒலி, ஒளி அமைப்புகளும் அறிவிப்பாளர்களான சீதாராமன், ஆர். எஸ். கேதீஸ்வன் ஆகியோரின் அறிவிப்பும் சிறப்பாக இருந்தது.

ஷகீலாவின் கவர்ச்சி வலையில் ரிச்சா சதா

துணிச்சலான வேடங்களில் நடிப்பதற்குப் பெயர் பெற்றவர் பொலிவுட் நடிகை ரிச்சா சதா. அவர் தற்போது நடித்துவரும் பாத்திரமும் அதிரடியானதுதான். பிரபல கவர்ச்சி நடிகை ஷகீலா கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.


சென்னையை சேர்ந்த நடிகை ஷகீலா தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடத்தில் ‘ஏ’கப்பட்ட படங்களில் நடித்தவர். ஷகீலாவின் நிஜ வாழ்க்கை வித்தியாசமானது. இவர் குண்டான உடல்வாகு கொண்டவர். பாடசாலையில் படிக்கும்போதே இவரை ஒரு ஆசிரியர் அடிக்கடி தண்டனை என்ற பெயரில் குனிந்து நிமிரும்படி செய்திருக்கிறார். அதனால் கிடைத்த கசப்பான அனுபவத்தால் பின்பு இவர், பாடசாலையில் ஒரு பெண் ரவுடி போல் வலம் வந்தவர். இவரது வாழ்க்கையில் காதலும் கண்ணீரும் உண்டு. பின்பு சினிமாவிற்கு வந்த ஷகீலா செக்ஸ் கலந்த படங்களில் கொடிகட்டி பறந்தார். ஒரு காலகட்டத்தில் பிரபல நடிகர் மம்முட்டி நடித்த படங்களையே இவரது படம் வசூலில் தோற்கடித்த சம்பவங்களும் உண்டு. இப்படிப்பட்ட ஷகீலாவின் வாழ்க்கை சினிமாவாகிக் கொண்டிருக்கிறது. அதில் ஷகீலா கதாபாத்திரத்தில் ரிச்சா சதா நடித்துக் கொண்டிருக்கிறார்.

Romanceல் சுஷ்மிதா

எனக்கு இப்போதைக்கு திருமணம் செய்து கொள்ளும் எண்ணம் இல்லை. தற்போது நான் ரோமனுடன் ரொமென்ஸில் மட்டுமே இருக்கிறேன் என்று சுஷ்மிதா சென் கூறியுள்ளார்.




பிரபல பொலிவுட் நடிகை சுஷ்மிதா சென். இவர் தமிழில் நாகர்ஜுனா ஜோடியாக ரட்சகன் படத்தில் நடித்திருந்தார். பின் முதல்வன் படத்தில் இடம்பெற்ற ‘சக்கலக்கா பேபி’ பாடலுக்கு நடனம் ஆடியிருந்தார். ஐதராபாத்தில் பிறந்த இவர், இந்தியாவின் சார்பில் முதன்முதலாகப் பிரபஞ்ச அழகி பட்டத்தை வென்றவர். தற்போது இவருக்கு 42 வயதாகிறது. இன்னும் திருமணம் செய்து கொள்ளவில்லை.

ரெனீ, அலிசா என்ற இரண்டு பெண் குழந்தைகளைத் தத்தெடுத்து வளர்த்து வருகிறார். சுஷ்மிதா சில சினிமா மற்றும் விளையாட்டு பிரபலங்களுடன் கிசுகிசுக்கப்பட்டவர். நட்சத்திர ஓட்டல் அதிபர் ஒருவருடன் அவருக்குக் காதல் மலர்ந்து அவரைத் திருமணம் செய்துகொள்ள இருப்பதாகக் கூறப்பட்டது. பின்னர் கருத்து வேறுபாடு ஏற்பட்டுப் பிரிந்தனர். இந்த நிலையில் சுஷ்மிதா சென் உத்தரப் பிரதேச மாநிலம் நொய்டாவைச் சேர்ந்த ரோமன் ஷால் என்ற 27 வயது மொடலை காதலித்து வருகிறார். முதலில் கிசுகிசுவாக பரவிய இந்தத் தகவலை பின்னர் சுஸ்மிதாவே உறுதிப்படுத்தினார். இருவரும் தாஜ்மகாலுக்கு ஜோடியாக சென்று எடுத்துக்கொண்ட படத்தை சுஷ்மிதா தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து காதலை உறுதிப்படுத்தினார். படத்தின் கீழ், எனது வாழ்க்கையின் காதல் என்று குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில் தனது டுவிட்டர் பக்கத்தில் உடற்பயிற்சி செய்யும் வீடியோவை வெளியிட்டுள்ள சுஷ்மிதா சென், இந்த உலகம் என்னுடைய திருமண செய்தியை எதிர்பார்க்கிறது. ஆனால் எனக்கு இப்போதைக்கு திருமணம் செய்து கொள்ளும் எண்ணம் இல்லை. என்னை பற்றிய வதந்திகள் இறந்து போகும். தற்போது நான் ரோமனுடன் ரொமான்ஸில் மட்டுமே இருக்கேன் இவ்வாறு கூறியுள்ளார்.

ஆண் வேடத்தில் நடித்த நடிகை


ருக்மணி தமிழகத்தின் தஞ்சை மாவட்டம் மெலட்டூரை பூர்வீகமாகக் கொண்டவர். இவர் நடிகை நுங்கம்பாக்கம் ஜானகியின் மகளும் நடிகை லட்சுமியின் தாயாரும் நடிகை ஐஸ்வர்யாவின் பாட்டியும் ஆவார். இவரது கணவர் பெயர் ஒய். வி. ராவ் பின்னர் இருவரும் பிரிந்துவிட்டனர்.
மும்பையில் ஹரிச்சந்திரா திரைப்படத்தின் படப்பிடிப்பு நடந்துவந்தவேளையில் லோகிதாசன் வேடத்துக்குப் பொருத்தமான சிறுவன் கிடைக்கவில்லை. அப்போது டி. பி. ராஜலட்சுமி தங்கியிருந்த விடுதியின் பக்கத்து அறையில் தங்கி இருந்தவரின் அழகான பெண் குழந்தையைக் கண்டு அக்குழந்தையின் பெற்றோரிடம் பேசி திரைப்படத்தில் லோகிதாசனாக நடிக்கவைத்தனர். இந்த ஹரிச்சந்திரா திரைப்படத்தில குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர்தான் குமாரி ருக்மணி. குமாரி ருக்மணிக்கு டி.பி. ராஜலட்சுமியுடன் தொடர்ந்து நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. ‘ஜலஜா’ என்னும் படம் வழியாக இந்தித் திரைப்படத்திலும் அறிமுகமானார். அம்மா ஜானகியும் ருக்மணியும் சேர்ந்து ‘பாக்யலீலா’ படத்தில் நடித்தார்கள்.


டி. ஆர். மகாலிங்கத்துக்கு இணையாக பூலோக ரம்பை, ஸ்ரீ வள்ளி போன்ற திரைப்படங்களில் நடித்தார்.

1946 இல் வெளியான லவங்கி திரைப்படத்தில் நாயகனாக நடித்த இயக்குநர் ஒய். வி. ராவுடன் குமாரி ருக்மணிக்கு காதல் திருமணம் நடந்தது.


1947 இல் வெளியான பங்கஜவல்லி திரைப்படத்தில் கிருஷ்ணனாக ஆண் வேடத்தில் நடித்தார்.
ஸ்ரீராம் ஜோடியாக நடித்த முல்லைவனம் திரைப்படம், குமாரி ருக்மணி கதாநாயகியாக நடித்த கடைசிப் படம்.
கப்பலோட்டிய தமிழன் படத்தில் சிவாஜி கணேசனின் மனைவியாக நடித்தார் ருக்மணி.
1961 தொடங்கி 1975 வரையில் பல திரைப்படங்களில் அன்னை வேடங்களில் நடித்தார்.

மருதகாசிக்கு சவாலாக அமைந்த பாடல்


எம்.கே. தியாகராஜ பாகவதருடைய "புதுவாழ்வு' படத்திற்கு ஒரு நகைச்சுவைப் பாடல் எழுதுவதற்காக கலைவாணர் என்.எஸ்.கே. வீட்டிற்கு மருதகாசியையும் இசையமைப்பாளர் ஜி. ராமநாதனையும் அழைத்துச் சென்றார்கள். அந்தப் படத்தில் என்.எஸ்.கே.யும் டி.ஏ. மதுரமும் பாடுகின்ற பாடல் அது என்பதால் என்.எஸ்.கே.யின் ஒப்புதலைப் பெறுவதற்காகக் கூட்டிச் சென்றார்கள்.
அப்போதுதான் முதல்முறையாக என்.எஸ்.கே.யின் அறிமுகம் மருதகாசிக்குக் கிடைக்கிறது. மருதகாசியிடம் என்.எஸ்.கே. "எனக்கு இதுவரை உடுமலையாரும் கே.பி. காமாட்சி சுந்தரமும்தான் பாடல் எழுதியிருக்கிறார்கள். ஒரே ஒரு பாடலை சந்தானகிருஷ்ண நாயுடு மட்டும் எழுதியிருக்கிறார். நீங்கள் எழுதுகின்ற பாடல் எனக்குப் பிடித்திருந்தால் வைத்துக் கொள்வேன். இல்லையென்றால் உடுமலையாரைத்தான் அழைக்க வேண்டியிருக்கும். அப்படி நடந்தால் அதற்காக நீங்கள் வருத்தப்படக்கூடாது. அதற்குச் சம்மதமானால் எழுதுங்கள்'' என்று சொல்லியிருக்கிறார்.
மருதகாசி அதைச் சவாலாக எடுத்துக்கொண்டு, "காட்சி என்ன? அதைச் சொல்லுங்கள்'' என்றிருக்கிறார்.
"ஒரு குருவிக்காரனும் குருவிக்காரியும் தனித்தனியாக வியாபாரத்திற்குச் சென்றுவிட்டு தங்கள் குடிசைக்குத் திரும்புகிறார்கள். அப்போது குருவிக்காரன், குருவிக்காரி இருந்த தோற்றத்தைப் பார்த்து சந்தேகத்தோடு சில கேள்விகள் கேட்கிறான் அவளும் பதில் சொல்லிக் கொண்டு வருகிறாள்.
முடிவில் ஒரு உண்மையைச் சொல்கிறாள். அதாவது ஒரு காலிப்பயல் தன்னைக் கையைப் பிடித்து இழுத்ததாகவும் அதனால் ஏற்பட்ட சண்டையில் கைவளையல் உடைந்ததாகவும் சொல்கிறாள். உடனே கோபத்துடன் அவனுக்குப் புத்தி புகட்டப் போவதாகச் சொல்லி அவளையும் அழைத்துக் கொண்டு வெளியே வருகிறான். இதுதான் காட்சி'' என்று என்.எஸ்.கே. விளக்கியிருக்கிறார்.
"இது மிகவும் எளிதாயிற்றே. குற்றாலக் குறவஞ்சியில் வருகிற சிங்கன் சிங்கி கதைதானே!'' என்று மருதகாசி சொல்ல "ஓ, உங்களுக்கு இலக்கியப் பயிற்சி உண்டா?'' என்றார் என்.எஸ்.கே."தனக்கு இலக்கியப் பயிற்சியளித்தவர்
பாபநாசம் ராஜகோபாலய்யர்' என்றும் "தனது மானசீக குரு உடுமலை நாராயணகவி'யென்றும் "ராமநாடகக் கீர்த்தனை எழுதிய சீர்காழி அருணாசலக் கவிராயர், நந்தனார் சரித்திரம் எழுதிய கோபாலகிருஷ்ண பாரதியார், சர்வமத சமரசக் கீர்த்தனைகள் எழுதிய மாயூரம் முன்சீப் வேத நாயகம்பிள்ளை, பாபநாசம் சிவன், நாடகத் தந்தை சங்கரதாஸ் சுவாமிகள் இவர்களெல்லாம் என் வழிகாட்டிகள்' என்றும் மருதகாசி சொல்லியிருக்கிறார்.
உடனே என்.எஸ்.கே. அவரைக் கட்டிப்பிடித்துக் கொண்டு "உடுமலையார் இருக்கும் இதயத்தில் உங்களுக்குப் பாதியைக் கொடுத்துவிட்டேன். நீங்கள் நன்றாக வளருவீர்கள்'' என்று வாழ்த்தினார். மறுநாள் அந்தப் பாடலை எழுதிக்கொண்டு மருதகாசி என்.எஸ்.கே.யைச் சந்தித்துப் பாடிக் காட்டினார். அவரும் பரவசப்பட்டார்.
ஆனால் அந்தப் படத்தில் அந்தப் பாடல் இடம் பெறவில்லை. அதை என்.எஸ்.கேயும் பாடவில்லை. 1955இல் வெளிவந்த "முல்லைவனம்' என்ற படத்தில் அந்தப் பாடல் இடம் பெற்றது. அது இதுதான்.

ஆண் : சீனத்து ரவிக்கை மேலே
சேலம்பட்டு ஜரிகைச் சேலை
ஓரங்கிழிஞ்ச தென்னடி - என் குருவிக்காரி
உண்மையைச் சொல்லிப் போடடி

பெண் : பானையை எறக்க நானும்
பரணை மேலே ஏறும்போது
ஆணிமாட்டிக் கிழிஞ்சு போச்சுடா
என் குருவிக்காரா
அவநம்பிக்கை கொள்ள வேணாண்டா

ஆண் : சீவிச் சிணுக்கெடுத்து
சிங்காரிச்சுப் பூவும் வச்சு
கோயிலுக்குத் தானே போனே - என் குருவிக்காரி
கூந்தல் கலைஞ்ச தென்னடி

பெண் : கோயிலுக்குப் போயி நானும்
கும்பிட்டதும் என் மேலே
சாமிவந்து ஆடினதாலே - என் குருவிக்காரா
கூந்தல் கலைஞ்சு போச்சுடா -
இப்படிப் போகும் அந்தப் பாடல்


1968 - 2018: சாதனைகளின் பொன்விழா ஆண்டு!



தமிழ்த் திரை உலக வரலாற்றில் ஒரு மறக்க இயலாத ஆண்டு 1968. தமிழ்த் திரைப்படங்கள், நடிகர் நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் பல்வேறு வகையில் சாதனை படைத்த ஆண்டு இது. அந்த சாதனைகளின் பொன்விழா ஆண்டு 2018.
இந்த காலகட்டத்தில் 46 படங்கள் வெளிவந்தன. அவற்றுள் "கலாட்டா கல்யாணம்', "ஒளி விளக்கு', "தாமரை நெஞ்சம்', "குடியிருந்தகோயில்', "உயர்ந்தமனிதன்', "எதிர்நீச்சல்', "பணமா பாசமா', "குழந்தைக்காக', "தில்லானா மோகனாம்பாள்' போன்ற படங்கள் 100 நாட்களைத் தாண்டி ஓடிய வெற்றிப்படங்கள். இந்த ஆண்டில் குடும்பக்கதையை அடிப்படையாகக் கொண்ட படங்கள் அதிகம் வெளிவந்தன.
இந்த ஆண்டில்தான் "ஜீவனாம்சம்' படத்தின் மூலம் லட்சுமி நடிகையாக அறிமுகமானார். சின்னப்பா தேவர் தான் தயாரித்த "நேர்வழி' படத்தில் எம்.ஜி.பாலு என்ற புதுமுக இயக்குநரை அறிமுகப்படுத்தினார்.
"புத்திசாலிகள்' படத்தில் இசையமைப்பாளர் வி.குமார், பின்னாளில் தனது மனைவியாக்கிக் கொண்ட ஒய். சொர்ணாவை பாடகியாக அறிமுகப்படுத்தினார். "குடியிருந்தகோயில்' படத்தில் இடம்பெற்ற "நான் யார்.. நான் யார்..' என்ற பாடல் மூலம் புலவர் புலமைப்பித்தன் தமிழ்ப்படவுலகிற்கு அறிமுகமானார். இதே படத்தில் பெண் கவிஞர் ரோஷானாரா பேகம் "குங்குமப் பொட்டின் மங்கலம்' என்ற பாட்டின் மூலம் அறிமுகமானார். இப்படி பல புதுமுகங்கள் திரைத்துறையில் நுழைந்த ஆண்டு இது.
1968 -ஆம் ஆண்டுக்கான தமிழக அரசின் சிறந்த படங்களுக்கான மூன்று விருதுகள் முறையே "உயர்ந்த மனிதன்', "தில்லானா மோகனாம்பாள்', "தாமரை நெஞ்சம்' ஆகிய படங்களுக்கு கிடைத்தன.
திரைப்படத்திற்கான தேசியவிருதுகள் ஒவ்வொரு வருடமும் வழங்கப்பட்டு வந்தாலும் 1968-ஆம் ஆண்டில்தான் பாடல் ஆசிரியர்களுக்கு தேசிய விருதினை மத்திய அரசு வழங்க ஆரம்பித்தது. தமிழ் பாடலாசிரியர்களில் பாடலுக்கான முதல் தேசிய விருதை பெற்ற பெருமை கவியரசர் கண்ணதாசனையே சாரும். "குழந்தைக்காக' என்ற படத்தில் இடம்பெற்ற "ராமன் என்பது கங்கை நதி, அல்லா என்பது சிந்து நதி, ஏசு என்பது பொன்னி நதி..' என்று ஆரம்பிக்கும் இந்த பாடலுக்காக அந்த விருது வழங்கப்பட்டது.
இதே ஆண்டில்தான் சிறந்த பின்னணி பாடகிக்கான தேசியவிருதினை "உயர்ந்த மனிதன்' படத்தில் இடம் பெற்ற "பால் போலவே வான் மீதிலே யார் காணவே நீ காய்கிறாய்' என்ற பாடலுக்காக பி. சுசீலா பெற்றார். பிரிவினால் பெண்படும் விரக வேதனையை இந்தப் பாடலில் தன் வரிகள் மூலம் வாலி அழகாக வெளிப்படுத்த அதற்கு தன் குரலால் மேலும் மெருகேற்றியிருப்பார் சுசீலா. இந்த விருதின் மூலம் தமிழில் தேசியவிருதுபெற்ற முதல் பின்னணிப் பாடகியானார் சுசீலா. இந்தப் பாடல் ஒலிப்பதிவு செய்யப்படுவதற்கு ஒரு மாதத்திற்கு முன்புதான் சுசிலாவின் நெருங்கிய உறவினர் காலமானார். எனவே இப்பாடலைப் பாடுவதற்கு அவரை அழைத்து வருவது கஷ்டமாக இருந்தது.
உறவினர் காலமான துக்கத்தைத் தாங்கிக்கொண்டு பாடினார். ஆனால் பாடி முடித்தவுடன் மயக்கமாகிவிட்டார். சமீபத்தில் கண்ணதாசன் - விஸ்வநாதன் நம்பிக்கைநிதியம் நடத்திய விழாவில் எம்.எஸ். விஸ்வநாதனின் உதவியாளராக இருந்த மதுரை ஜி.எஸ். மணி இச்சம்பவத்தைக் கூறி அந்தப்பாடலையும் பாடி பார்வையாளர்களின் ஏகோபித்த பாராட்டைப் பெற்றார். அவர் மேலும் கூறிய போது, "உயர்ந்த மனிதன்' படப்பிடிப்பு முடிந்து அதனை போட்டுப் பார்த்த ஏவி. மெய்யப்ப செட்டியார், இந்தப் பாடல் காட்சி முடிந்தவுடன் சுசிலாவை அழைத்து பாடலைப் அருமையாக பாடியுள்ளீர்கள், உங்களுக்கு நிச்சியமாக தேசிய விருது கிடைக்கும்'' என்றார். செட்டியாரின் வாக்கும் பலித்தது.
"குழந்தைக்காக' படத்தில் சிறப்பாக நடித்ததற்காக சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான தேசிய விருது பேபிராணிக்கு கிடைத்ததும் சிறந்த ஒளிப்பதிவாளருக்கான தேசிய விருது "தில்லானா மோகனாம்பாள்' படத்தில் பணியாற்றிய கே.எஸ். பிரசாத்திற்கு கிடைத்ததும் இதே ஆண்டில்தான்.
1968-ஆம் ஆண்டில் பதிமூன்று படங்களில் ஜெய்சங்கரும் இருபத்தி இரண்டு படங்களில் நாகேஷூம் பதிமூன்று படங்களில் ஜெயலலிதாவும் நடித்து புகழ்பெற்றது இதே ஆண்டில்தான். இத்தனைக்கும் 1967ஆம் ஆண்டு மூன்றுக்கும் மேற்பட்ட விபத்துகளை சந்தித்தார் ஜெயலலிதா. அதற்கான சிகிச்சைகளை எடுத்துக்கொண்ட போதும் தொடர்ந்து நடித்தது தொழில் மீது அவருக்கிருந்த அர்ப்பணிப்பைக் காட்டியது. அதற்குரிய பலனும் அவருக்குக் கிடைத்தது.
எம்.ஜி.ஆருடன் அவர் நடித்த "குடியிருந்தகோயில்', "ஒளிவிளக்கு', "புதிய பூமி', "ரகசிய பொலிஸ்' மற்றும் சிவாஜியுடன் நடித்த "கலாட்டா கல்யாணம்' போன்ற படங்கள் 100 நாட்களுக்கு மேல் ஓடிய வெற்றிப்படங்கள். இந்த வெற்றிகளின் மூலம் ஜெயலலிதா புகழின் உச்சிக்கே சென்றார்.
"தாமரை நெஞ்சம்' கே. பாலசந்தர் இயக்கிய படமாகும். இவர் எதையுமே வித்தியாசமாக செய்பவர். முதலில் படத்திற்கு அழகான பெயரை வைத்தார். ரசிகர்களின் மனதில் என்றும் நீங்கா மஞ்சம் "தாமரை நெஞ்சம்'. ஜெமினி கணேஷனை நடிக்க வைத்து பாலசந்தர் இயக்கிய முதல் படம். பின்னர் பாலசந்தரின் ஆஸ்தான கதாநாயகனாக பல படங்களில் நடித்தார்.
"தாமரை நெஞ்சம்' படம் சரோஜா தேவிக்கு திரையுலக வாழ்க்கையில் ஒரு திருப்புமுனைப் படம் என்றால் அது மிகையில்லை. அளவான நடிப்பை அற்புதமாக வெளிபடுத்தியிருப்பார்.
ஜெமினி கணேஷனும் சரோஜா தேவியும் நடித்த மற்றுமொரு வெற்றிப்படம் "பணமா பாசமா'. வாழ்க்கைக்குத் தேவை "பணமா பாசமா' என்ற பிரச்சினையை மையக் கருத்தாக எடுத்துக்கொண்டு அதற்கு திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியிருப்பார் கே.எஸ். கோபாலகிருஷ்ணன். இப்படத்தின் இறுதியில் பாசமே வெற்றி பெறும் என்று முடித்திருப்பார். குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான விஜயநிர்மலா இப்படத்தில் "எலந்தபழம் எலந்தபழம்' என்ற பாடலைப் பாடி நடித்திருப்பார். இந்தப் பாடல் காட்சி அவர் திரை வாழ்க்கையில் முன்னேறுவதற்கான படிக்கட்டுகளை அமைத்துக் கொடுத்தது. இதே 1968-ஆம் ஆண்டு "சோப்பு சீப்பு கண்ணாடி' படத்தில் நாகேஷுடன் ஜோடியாக நடித்து தனக்கு நகைச்சுவையும் வரும் என நிரூபித்துக்காட்டினார் விஜய நிர்மலா.
அடுத்து 1968ஆம் ஆண்டு வெளிவந்த வெற்றிப்படங்களில் ஒன்று "தில்லானா மோகனாம்பாள்' நாதத்திற்கும் நாட்டியத்திற்கும் நடந்த போட்டி என்றாலும் உண்மையாக சிவாஜிக்கும் பத்மினிக்கும் நடந்த போட்டியாக இன்றும் கருதப்படுகின்றது. இப்படத்தில் நடித்த அனைத்து நடிகர்களும் தங்களுக்குரிய கதாபாத்திரத்தை மக்கள் மனதில் நிற்கும்படி செவ்வனே செய்திருந்தார்கள். சிவாஜி, பத்மினி தவிர வாய்ச்சவுடால் பாத்திரத்தில் நடித்த நாகேஷையும் ஜில் ஜில் ரமாமணியாக நடித்த மனோரமாவையும் தலைமுறைகள் மாறினாலும் தமிழ் ரசிகர்கள் என்றென்றும் நினைவில் வைத்திருப்பார்கள். இப்படத்தில் இடம்பெற்ற அனைத்துப் பாடல்களும் எந்த வயதினரும் ரசித்துக் கேட்கும் பாடல்களாக அமைந்தன. இப்படத்தின் இசையமைப்பாளர் கே.வி.மகாதேவன் நாதஸ்வரத்திற்கு மதுரை எம்பி.என் சேதுராமன் - பொன்னுசாமி சகோதரர்களை பயன்படுத்தியிருப்பார். தமிழ்த் திரைப்பட வரலாற்றில் "தில்லானா மோகனாம்பாள்' ஆவணப்படுத்த வேண்டிய படம்.
பக்திப் படங்கள், குடும்பப் படங்கள் என்று அடுத்தடுத்து வெளிவந்த 1968-ஆம் ஆண்டில் முழுநீள நகைச்சுவையைச் சுமந்து வந்த படம் "கலாட்டா கல்யாணம்'. இப்படத்தில் மிகப்பெரிய நகைச்சுவை பட்டாளமே நடித்திருந்தனர். கோபுவின் வசனத்தில் சி.வி. ராஜேந்திரன் இயக்கிய சுப்பர் டூப்பர் வெற்றிப்படம். இப்படத்தின் பாடல்களும் சுப்பர் ஹிட்டாகும்.
எம்.ஜி.ஆர், சிவாஜி, ஜெமினி கணேசன் தவிர 1968ஆம் ஆண்டில் ஜெய்சங்கர் நடித்த அனைத்துப் படங்களும் எதிர்பார்த்த வெற்றியைப் பெற்றன. இவர் நடித்த "நீலகிரி எக்ஸ்பிரஸ்' படத்தில் கதைக்குத் தகுந்தவாறு சிஐடி அதிகாரியாக நடித்திருப்பார். இப்படத்திற்கு சோ திரைக்கதை - வசனம் எழுதியிருப்பார். 1967ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளிவந்த "கொச்சின் எக்ஸ்பிரஸ்' என்ற படத்தை தமிழில் ரீமேக் செய்தார்கள். இப்படத்தை இயக்கியவர்கள் திருமலை - மகாலிங்கம் இரட்டையர்கள், இயக்குநர் ஏ.பீம்சிங்கிற்கு உறவினர்கள்.
ஜெய்சங்கர் நடித்த "அன்பு வழி'படத்தில் தெள்ளூர் தர்மராசன் கீரைவகைகளையும் காய்கறிகளின் பெயர்களையும் மற்றும் அதன் பயன்பாடு பற்றியும் அருமையாக எழுதியிருப்பார்.
இசை மனிதனின் மன அழுத்தத்தைப் போக்கக்கூடியது. இவ்விசையின் மகத்துவத்தைக் "கல்லும் கனியாகும்' என்ற படத்தில்
கல்லும் இசையில் கனியாகும்
முள்ளும் அதனால் மலராகும்
உள்ளம் உருகும் பண்பாடும் - அந்த
ஓசையிலே நாதம் நின்றாடும் என்று கவிஞர் வாலி எழுதியிருப்பார்.
தன் திரை வாழ்வில் எம்.ஜி.ஆர் கதை எழுதிய ஒரே படம் "கணவன்'. அந்தக் காலகட்டத்தில் திமுகவின் முக்கிய பிரமுகரும் சிறுகதை மன்னன் என்றழைக்கப்பட்டவருமான எஸ்.எஸ். தென்னரசு வசனம் எழுதிய ஒரே படம் மற்றும் ஜேயார் மூவீஸ் எம்.ஜி.ஆரை வைத்து தயாரித்த ஒரே படம் "புதிய பூமி'.
ஜெமினி நிறுவனம் எம்.ஜி.ஆரை வைத்து தயாரித்த ஒரே படம் "ஒளிவிளக்கு' அதுவும் கலரில் தயாரிக்கப்பட்டது.
கே. பாலசந்தர் இயக்கத்தில் சரோஜா தேவி நடித்த ஒரே படம் "தாமரை நெஞ்சம்'.
பெண் கவிஞர் ரோஷானாரா பேகம் திரைப்படத்திற்கு எழுதிய ஒரே பாடல் "குங்குமப் பொட்டின் மங்கலம்' என்று தொடங்கும் பாடல்
பின்னணிப் பாடகர்கள் டி.எம்.செளந்திரராஜன் மற்றும் ஏ.எல். ராகவன் செüந்தர் ராகவன்மூவீஸ் என்ற பெனரில் தயாரித்த ஒரே படம் "கல்லும் கனியாகும்'.
மோகன் காந்திராமன் இயக்கத்தில் புகழேந்தி இசையில் வெளிவந்த ஒரே படம் "செல்வியின் செல்வன்' . இவர் இரண்டு தமிழ்த் திரைப்படங்களுக்குத்தான் இசையமைத்தார். மற்றொரு படம் "குருதட்சணை'. நடிகை எல்.விஜயலட்சுமியும் எம்.ஜி.ஆரும் இணைந்து நடித்த ஒரே படம் "குடியிருந்த கோயில்'.
கவிஞர் பூவை செங்குட்டுவன், எம்.ஜி.ஆர் நடித்த "புதியபூமி' மற்றும் "காதல் வாகனம்' படங்களுக்கு பாட்டு எழுதினார். இரு படங்களும் 1968ஆம் ஆண்டு வெளிவந்தன. அதன்பிறகு அவர் எம்.ஜி.ஆருக்கு பாட்டு எழுதவில்லை "உயர்ந்த மனிதன்' படத்தில் சிவாஜியின் நடிப்பைப் பற்றி சொல்ல வார்த்தைகளே இல்லை.
சிவாஜி, செளகார் நடிப்பிற்கு இணையாக சிவகுமாரும் தன் திறமை முழுவதையும் வெளிப்படுத்தி நடித்திருப்பார். இப்படத்தில் காந்தர்வக் குரலுக்குச் சொந்தக்காரரான டி.எம்.செளந்திரராஜன் தன் குரலில் வேற்றுமையைக் காட்டி சிவாஜிக்கும் சிவகுமாருக்கும் பாடியிருப்பார்.
விநாயகா பிக்சர்ஸ் நிறுவனம் தங்களுடைய முதல் படத்திற்கு "நீ' என்றும் இரண்டாவது படத்திற்கு "நான்' என்ற பெயரையும் மூன்றாவது படத்திற்கு "மூன்றெழுத்து' என்று பெயர்களை வைத்து திரைப்படங்களைத் தயாரித்தனர். 1968-ஆம் ஆண்டு வெளிவந்த "மூன்றெழுத்து' படத்தில் ரவிச்சந்திரன் கதாநாயகனாக நடித்திருந்தார். அந்த ஆண்டு ரவிச்சந்திரன் நடித்த படங்கள் அனைத்தும் சுமாராக ஓடின.
இந்த பொன்விழா ஆண்டில் (2018) அன்றைய படங்களில் நடித்து நம்முடன் வாழும் நடிகர்களையும், நடிகைகளையும் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களையும் போற்றுவோம். நடிகர் சங்கம் பொன்விழா ஆண்டு கலைஞர்களுக்கு விழா எடுத்தால் வரலாற்றில் வாழ்வார்கள்.

Friday, November 9, 2018

சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்கியதால் சர்கார் பிரச்சினை முடிவு: கடம்பூர் ராஜூ

சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்கியதால் சர்கார் பிரச்சினை முடிவுக்கு வந்து விட்டது என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் சர்கார் . கதை திருட்டு உள்ளிட்ட பல்வேறு சர்ச்சைகளை தாண்டி தீபாவளியன்று இப்படம் வெளியாகி பெரும் வசூல் சாதனை படைத்து வருகிறது.
இந்தப் படத்தில் கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி சரத்குமார், பழ கருப்பையா, யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்தின் வில்லி கதாபாத்திரத்தில் நடித்துள்ள வரலட்சுமி சரத்குமாருக்கு ஜெயலலிதாவின் இயற்பெயர் என கூறப்படும் கோமளவல்லி எனும் பெயர் சூட்டப்பட்டுள்ளது. மேலும் படத்தில் தமிழக அரசின் இலவச திட்டங்களை விமர்சிப்பது உள்ளிட்ட பல்வேறு சர்ச்சை காட்சிகள் இடம்பெற்றுள்ளதாக கூறி அதிமுகவினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதன் காரணமாக சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்குவதாக தியேட்டர் உரிமையாளர் சங்கம் தெரிவித்தது.
இதைத் தொடர்ந்து சர்ச்சைக்குரிய காட்சிகள் நீக்கப்பட்டு படத்தை மறு தணிக்கை செய்யும் பணிகள் முடிந்தன. இந்த நிலையில் சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்கியதால் சர்கார் பிரச்சினை முடிவுக்கு வந்து விட்டது என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
கடம்பூர் ராஜூ மேலும் கூறும் போது, “மறு தணிக்கை செய்து படத்தை வெளியிட தயாரிப்புக்குழு உறுதி அளித்ததால் பிரச்சினை முடிந்தது எனவும் சர்ச்சைக்குரிய காட்சிகள் நீக்கப்பட வேண்டும் என்பதே எங்கள் கோரிக்கை, முதல்வர் பழனிசாமியை சந்திக்க நடிகர் விஜய் நேரம் கேட்கவில்லை” என்றார்.

அ.தி.மு.க.வினர் நேற்று 2-வது நாளாக போராட்டம்!


பல்வேறு நகரங்களில் சர்கார்
படத்தின் காலை காட்சிகள் ரத்து

அ.தி.மு.கவினர் நேற்று 2-வது நாளாக போராட்டம் நடத்தினார்கள். இதனால் பல்வேறு நகரங்களில் சர்கார் படத்தின் காலை காட்சிகள் ரத்து செய்யப்பட்டன.

தஞ்சையில் சர்கார் படம் திரையிடப்பட்டுள்ள சாந்தி திரையரங்கு முன்பு அ.தி.மு.கவினர் நேற்று காலையிலேயே திரண்டனர். ஜெயலலிதாவை இழிவுபடுத்தும் வகையிலான காட்சி மற்றும் இலவச பொருட்களுக்கு எதிரான காட்சியை நீக்கும் வரை சர்கார் படத்தை திரையிடக்கூடாது என்று அவர்கள் முழக்கங்களை எழுப்பினர். இதனை அடுத்து காலை காட்சியை ரத்து செய்வதாக சாந்தி திரையரங்க நிர்வாகம் அறிவித்தது. இதே போல் தஞ்சையில் ஜூபிடர் திரையரங்கிலும் சர்கார் காலை காட்சி ரத்து செய்யப்பட்டது.
காஞ்சிபுரத்திலும் அ.தி.மு.கவினர் கார்த்திகேயன் மற்றும் பாபு திரையரங்கு முன்பு திரண்டு சர்கார் திரைப்படத்திற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டனர். இயக்குனர் முருகதாஸ், தயாரிப்பாளர் சன் பிக்சர்ஸ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.
சர்கார் படத்திற்கு அனுமதியின்றி பெனர் வைத்ததாக தஞ்சையில் 25 பேர் மீதும் திருவாரூரில் 24 பேர் மீதும் நாகையில் 20 பேர் மீதும் கரூரில் 10 மீதும் திருச்சியில் 4 பேர் மீதும் புதுக்கோட்டையில் - 4 பேர் மீதும் என மொத்தம் 87 பேர் மீது பொலிஸார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.

நாயகிக்கு டூயட் பாடிய `மெளனராகம்' வர்ஷா ரஞ்சித்

நான் உன்பாடல்
நீயென் தேடல்
இடையில் ஏனிந்த மெளனங்கள்.... ***
இது விஜய் டிவியின் `மெளனராகம்' சீரியலின் டைட்டில் பாடல். அந்த சீரியலின் கதையே ஒரு சிறுமி, தனது பாடல் திறமையால் இந்த உலகுக்குத் தன்னை அடையாளப்படுத்த விரும்புவதே. அதில் கிருத்திகா எனும் சிறுமி மிக அழகாக நடித்துவருகிறார். அவர் பாடுவது போன்ற காட்சிகளைப் பார்க்கும்போது சொந்தக் குரலில் அவரே பாடுகிறாரோ என நினைக்கவைக்கும். ஆனால் அவருக்குப் பின்னணி பாடியிருப்பவர் எட்டாம் வகுப்புப் படிக்கும் வர்ஷா.

மெளனராகம்' பாடலை வர்ஷா பாடிய வீடியோ யூ-டியூப்பில் நான்கரை இலட்சம் பார்வையாளர்களைக் கடந்துவிட்டது. இந்த பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் பெற்று மகிழ்ச்சியில் திளைத்துவருகிறார். சோஷியல் மீடியாவில் பலராலும் ஷேர் செய்யப்பட்டுக் கொண்டாடப்படுகிறார் வர்ஷா. சமீபத்தில் திரைப்படம் ஒன்றில் பாடல் ஒன்றும் பாடியிருக்கிறார். சின்ன வயதில் இவ்வளவு ஆச்சர்யங்களைத் தரும் வர்ஷாவிடம், `எப்போதிருந்து மியூசிக் கத்துக்கறீங்க?" எனப் பேச்சைத் தொடங்கினோம்.
சின்னச் சிரிப்புடன், `` நான் முறைப்படி மியூசிக் கத்துக்கலை. அப்பா ரஞ்சித் வாசுதேவ், சித்தார், மிருதங்கம், தபேலா, கீபோட், டோலக் எனப் பல இன்ஸ்ட்ரூமென்ட்ஸ் வாசிப்பார். பாடல்கள் பாடியிருக்கார். படங்களுக்கு மியூசிக் பண்ணியிருக்கார். சமீபத்தில், `செம்மறி ஆடு' படத்தில் அவர் மியூசிக்கில் நான் ஒரு பாட்டு பாடியிருக்கிறேன். அம்மா பாட்டு டீச்சர். இவங்கக்கிட்ட கத்துக்கிட்டதோடு சரி. லெவன்த் படிக்கும் அண்ணன், டிரெம்ஸ் கத்துக்கிட்டிருக்கான். அவனோடு நிறைய சண்டை, கொஞ்சம் சமாதானம்னு இருப்பேன். எனக்கு ரெண்டு ஆசை. ஒண்ணு, சிங்கர் ஆகணும். இன்னொண்ணு, டாக்டர் ஆகணும். அப்பா நான் விரும்பும்போது பாட்டு பிராக்டீஸ் பண்ணவும், பாடம் படிக்கவும் விடுவாங்க. ஆனா அம்மாதான் கொஞ்சம் ஸ்ட்ரிக்.
மலையாளத்தில் `வானம்பாடி' என்ற சீரியலுக்கு மியூசிக் ஜெயசந்திரன் அங்கிள்தான். அவர் அப்பாவுக்கு குளோஸ் ஃப்ரெண்ட். அவருக்கு என் குரல் ரொம்ப ரொம்பப் பிடிக்கும். அதனால் என்னை அந்த சீரியலில் பாடவெச்சார். அவர்தான் `மெளனராகம்' சீரியலின் மியூசிக் டைரக்டர். அதனால் நான் பாடறதுக்கு சான்ஸ் கிடைச்சது. பழநிபாரதி அங்கிளின் வரிகள் எல்லாம் சுப்பரா இருந்துச்சு. நீங்க சொல்ற மாதிரி சீரியலில் நடிக்கும் கிருத்திகாவே அந்தப் பாட்டைப் பாடுற மாதிரி இருக்குனு நிறைய பேர் சொல்றாங்க. அந்தளவுக்கு என் குரல் அவங்களுக்குப் பொருத்தமா இருக்குதுன்னா எனக்கும் ரொம்ப சந்தோஷம். பலரும் அப்பாவுக்கு போன் பண்ணி என்னைப் பாராட்டறாங்க. ஒருநாள் பெரியப்பாகிட்டேயிருந்து போன் வந்துச்சு. (அவரும் மியூசிக் டைரக்டர்தான்) நான் பாடினதை எஸ்.பி.பி அங்கிள் யூ-டியூப்பில் பார்த்தாராம். உடனே போன் பண்ணி `வர்ஷா ரொம்ப நல்லா பாடியிருக்கா, நல்ல எதிர்காலம் இருக்கு. என் ஆசிர்வாதங்களைச் சொல்லு'னு சொன்னாராம். இதைக் கேட்டதும் எனக்குக் காத்துல பறக்கிற மாதிரி இருந்துச்சு. அவ்வளவு பெரிய லெஜண்டின் ப்ளஸிங் கிடைச்சிருக்கு." எனச் சொல்லும் வர்ஷாவின் குரலில் அவ்வளவு சந்தோஷம்.
`சினிமாவில் பாடும் வாய்ப்புகள் வருகிறதாமே?' என்றதும் `நிறைய வருது. `டிராஃபிக் ராமசாமி' படத்தில் `போராளி அனந்தம்...' பாடலில் நானும் பாடியிருக்கேன். அமேசான் வெப்சைட்டுக்கான ரைம்ஸ் பாடிட்டிருக்கேன். வித்யாசாகர் அங்கிள் மியூசிக்ல பா.விஜய் ஹீரோவாக நடிக்கும் `ஆருத்ரா' படத்தில், `செல்லம்மா செல்லம்' என்ற பாடலை சமீபத்தில் பாடினேன். கார்த்திக் சாரும் நானும் சேர்ந்து பாடியிருக்கும் டூயட் பாடல். இதன் ஓடியோ பங்ஷனில் `இந்தப் படத்துல பா.விஜய் பாடகராக அறிமுகமாகிறார். அவர் மட்டுமல்ல வர்ஷாவும்தான். வர்ஷாவோட குரல் அருமையாக இருக்கும். என்கிட்ட மூணு வருஷமா பாடிட்டிருக்கா. இப்போதுதான் தனியா பாடுகிறாள். ஹீரோயினுக்குச் சின்னப்பொண்ணோட குரல் பொருந்துமான்னு சந்தேகமாக இருந்துச்சு. பா.விஜயிடம் இதைச் சொல்லி வேறு யாரையாவது பாடவைக்கலாமான்னு சொன்னப்போ, `யார் பாடினாலும் வர்ஷா பாடினது மாதிரி வராது'னு மறுத்துட்டார். இந்த வாய்ப்பை எனக்குக் கொடுத்தற்கு வித்யாசாகர் அங்கிளுக்கு பா.விஜய் சாருக்கும் ரொம்ப ரொம்ப நன்றி" என்கிறார்.
ஆருத்ரா படப் பாடலின் சில வரிகளைப் பாடச் சொன்னதும் இனிய குரலில் நிறைவாக முடிக்கிறார்...
செல்லம்மா செல்லம்....
என் பேச்சு வெல்லம்
தித்திக்குதா... தித்திக்குதா...
குட்டிம்மாகூட குயிலம்மா பாட
ஒத்துக்குதா... ஒத்துக்குதா...



“என்ன புள்ள! களைப்பு தெரியாமல் இருக்க பாடுவதுதானே நாட்டுப்புறப் பாடல்"

`சுப்பர் சிங்கர்' செந்தில் கணேஷ்-ராஜலட்சுமி


புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள களபம் என் ஊர். வானம் பார்த்த பூமி. விவசாயம் செய்ய நீர்ப்பாசனம் பெரிய அளவில் இல்லை. சுத்தி இருக்கிற தைல மரங்கள், இருக்கின்ற கொஞ்சநஞ்ச நிலத்தடி நீரையும் உறிஞ்சிக் கொள்ளும். மழைக்காலம் தவிர, மற்ற காலங்களில் எங்கள் ஊரில் வறட்சிதான். அதனால் ஊரில் இருப்பவர்கள் பெரும்பாலும் கூலி வேலைக்குத்தான் செல்வார்கள். அங்கே களைப்பு தெரியாமல் இருக்க நாட்டுப்புறப் பாடல்களைப் பாடுவது உண்டு'' - பாடலுக்குப் பின்னால் இருக்கும் பிளாஷ்பேக் கதையிலிருந்து தொடங்குகிறார், செந்தில் கணேஷ். `சுப்பர் சிங்கர்' சீஸன் 6-ல் வெற்றிபெற்று புகழேணியில் ஏறியிருக்கும் செந்தில் கணேஷ் - ராஜலட்சுமி ஜோடியிடம் பேசினோம்.

``விசேஷ காலங்களில் மைக்செட் கட்டி நாட்டுப்புறப் பாடல்களை ஒலிக்கவிடுவார்கள். எங்கள் ஊரின் புகழ்பெற்ற நாட்டுப்புறக் கலைஞர்கள் கோட்டைச்சாமி, ஆட்காட்டி ஆறுமுகம், மாரியம்மாள். இவர்களுடைய பாடல்களைக் கேட்டுதான் நான் வளர்ந்தேன். தவிர பெண்களுக்குப் பேய் ஓட்டுபவர் பாடும்போது அதிலும் ஒரு ராகம் இருக்கும். அதையும் ஆழ்ந்து கவனிப்பேன். நான் கேட்கிற இசையையெல்லாம் `ஹம்' செய்துகொண்டே இருப்பேன். இதெல்லாம் 25 வருஷங்களுக்கு முன்னால்... டி.வி, ரேடியோ என எங்களுக்கு எந்தப் பொழுதுபோக்கும் இல்லாத காலம். அப்படி ஒருநாள், பள்ளிக்கூட வாசலில் அமர்ந்து என் நண்பர்களுடன் தாளம்போட்டுப் பாடிக் கொண்டிருந்தேன். அப்போது என் குருநாதர் செல்லத் தங்கையா அங்கே வந்தார் (அப்போ என் குருநாதர், பிறகு என் அக்காவின் கணவர்). அவர் கல்லூரி மாணவர். நான் எட்டு வயதுப் பையன். அவர் கவிதைகள், பாடல்கள் எழுதுவதில் ஆர்வமானவர். எங்களைப் பொறுத்தவரை, அவர் பெரிய ஆள். அவரைப் பார்த்ததும் ஆளுக்கொரு பக்கமாக ஓடிவிட்டோம். எங்களை விரட்டிப் பிடித்து, `என்னடா பாடுறீங்க?' எனக் கேட்டு, அவர் முன்பு என்னைப் பாடச் சொன்னார். பாடினேன். `நல்லா பாடுற... நான் பாட்டு எழுதித் தர்றேன், அதைப் பாடு' என்று சொன்னவர், கொஞ்சம் கொஞ்சமாக என்னை வளர்த்தெடுத்தார்.

ஈஸ்வரலிங்கத்திற்கு விஸ்வபந்தன விருது

இலங்கை  மேல் மாகாண சபை 2017-12-14ஆம் திகதி  கொழும்பிலுள்ள மேல் மாகாண அழகியற்கலை மண்டபத்தில் நடத்திய விழாவில் தமிழர் நற்பணி மன்றத் தலைவரும் கலைஞருமாகிய கே. ஈஸ்வரலிங்கத்திற்கு விஸ்வபந்தன விருது வழங்கப்பட்டபோது.....இந்த "சினிமினி" இணையத்தளத்தின் பொறுப்பாளரும் இவரே ஆவார்.