
பீ,யக்குனர், கொமெடி நடிகர், குணச்சித்திர நடிகர் என் பன்முக திறமை கொண்ட நடிகர்
தம்பி ராமையா ‘உ’ படத்திற்காக ஒரு பாடலை பாடி பாடகராகவும் தன்னை
நிரூபித்திருக்கிறார். தேசிய விருது பெற்ற நடிகர் தம்பி ராமையா உ படத்தில் ஒரு
முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். நாலு வால் சிஷ்யர்களுடன் அவர் அடிக்கின்ற
கொமெடி தான் ‘உ’ படம். படப்பிடிப்பு முழுவதும் முடிந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன்
வேலைகள் நடந்து வருகின்றன. இப்படத்தில் ஒரு சப்ரைஸாக தம்பி ராமையா ஒரு பாடலை
பாடியிருக்கிறார். அறிமுக இசையமைப்பாளர் அபிஜித் இராமசாமி இசையில், முருகன்
மந்திரம் எழுதியுள்ள ‘ஒரு படி மேல’ என்று தொடங்கும் தத்துவக் குத்துப் பாடலை பாடி
அசத்தியுள்ளார். அதோடு ஒரு அசத்தலான ஆட்டமும் போட்டிருக்கிறார்.
இது குறித்து தம்பி ராமையா கூறியுள்ளதாவது, இந்த யூத் டீம் கூட ஓர்க் பண்றது
உற்சாகமான அனுபவம். கிட்டத்தட்ட இந்த டீம்ல எல்லாருக்குமே 24 வயசுக்கும் குறைவு.
அதோட இந்த டீம் கிட்ட ஈகோ அப்டிங்கிறது சுத்தமா இல்ல. நான் அதைப் பார்த்து ரொம்ப
ஆச்சரியப்பட்டேன். இந்த ஒரு படி மேல பாட்டை நான் ரசிச்சி பாடி இருக்கேன். என்
பாட்டுக்கு நானே பாடகராகவும் டான்சராகவும் இருப்பது இதுதான் முதல் முறை. தம்பி
அபிஜித்தோட அற்புதமான ட்யூன். தம்பி முருகன் மந்திரம் ஆழமான வரிகள் எழுதி
இருக்கிறார். கண்டிப்பா இந்தப் பாட்டு மெலடியாவும் அதே சமயம் கமர்சியலாவும் பெரிய
ஹிட் ஆகும்னு நம்புறேன். இந்த யூத் பெரிசா வருவாங்க. அவங்களுக்கு என்னோட அட்வான்ஸ்
வாழ்த்துக்கள் என்றார்.
No comments:
Post a Comment