தமன்னா இப்ப இன்னும் அழகா இருக்கீங்க?

நல்ல சினிமா, நல்ல இடம் இது இரண்டிலும் நான் இருக்க வேண்டும் என்கிற ஆசை, எப்போதும் என்னை விட்டு போகாது. தமிழ் சினிமாவில் சில விஷயங்கள் எனக்கு எதிராக நடந்த போது துணைக்கு வந்தவர்கள் சிலரே, என்னை வைத்து இலாபம் பார்த்தவர்கள், படத்தை விற்றவர்கள் என யார் மீது குறை சொல்ல முடியாது எனக்கென்று எந்த இடம் இருக்கிறதோ அந்த இடத்தில் நான் நிச்சயம் இருப்பேன். நீங்கள் சொல்லும் அழகு என்ற வார்த்தை உண்மையானதோ இல்லையோ, நான் சந்தோஷமாக இருக்கிறேன். அது போதாதா?
‘எனக்கு தமன்னாதான் ஜோடி’என்னு அஜித்தே அறிவிக்கிறார். இப்படி பெரிய சிபாரிசுகள் இருந்தும் ஏன் தமிழ் சினிமாவில் இந்த நிராகரிப்பு. வெளிப்படையாக பேச முடியுமா?
அஜித்துக்கு நல்ல மனசு. அவருக்கு நன்றி. ‘படிக்காதவன்’, ‘அயன்’, ‘சிறுத்தை’ என தொடர்ந்து ஹிட் படங்கள் என் கேரியரை நிரப்பிய போது, அடுத்தடுத்த பட வாய்ப்புகளை சிலர் தடுத்தார்கள். அதுதான் காரணமாக இருக்கலாம். சில விஷயங்களை வெளிப்படையாக பேசி விட முடியாது. சினிமாவில் சில விஷயங்களை ரகசியம் காத்தே ஆக வேண்டும்.
எனக்கெதிரான சிலரின் முடிவுகளை தகர்த்தெறிந்து இப்போது மீண்டும் தமிழுக்கு வந்து விட்டேனே. அது போதும். நண்பர்கள் யார், எதிரிகள் யாரென்று எனக்கு தெரிந்து விட்டது. குறிப்பிட்ட காலம் வரைக்கும்தான் ஹீரோயினுக்கு மார்க்கெட் அதை யாராலும் மாற்றி விட முடியாது. நம்பர் ஒன், நம்பர் டூ இதிலெல்லாம் எனக்கு நம்பிக்கை இல்லை. இப்போதும் ரசிகர்கள் எனக்காக காத்திருப்பார்கள். அந்த நம்பிக்கை மட்டுமே போதும்.
இப்படி சொன்னால் எப்படி ஹன்சிகா, அமலாபால், அஞ்சலி போன்ற சில பேர்தான் உங்களின் வாய்ப்புகள் நழுவ காரணமா?
உங்க பேட்டிக்கு நீங்கள் சுவாரஸ்யம் தேடுகிaர்கள். தவறில்லை இன்னும் பேசுவதற்கான காலம் இருக்கிறது. நேரம் வரும் போது சிலவற்றை நானே பேசுவேன். யார் மீதும் தனிப்பட்ட முறையில் வெறுப்பு இல்லை. இது மாதிரி விஷயங்களில் எல்லோருக்கும் வரும் கோபம்தான் எனக்கும் வந்திருக்கிறது. எல்லாத் துறைகளிலும் போட்டிகள் உண்டு. சினிமாவில் அது இன்னும் தீவிரமாக இருக்கும். என்னிடம் திறமையில் போட்டி போடுவதை காட்டிலும், என் வாய்ப்புகளை தட்டிப் பறித்தவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். ஆனால் நீங்கள் குறிப்பிடுகிறவர்களை நான் சந்தித்தது கூட கிடையாது. தொடர்ந்து ஸ்டார் படங்கள், எல்லாமே ஹிட். இப்படி ஒரு சூழலில் தமன்னா ஏன் தமிழ் சினிமாவில் இல்லை. யோசித்து பாருங்கள். (ப்Zஸ்... இனி சீரியஸ் கொஸ்டீன் வேண்டாமே)
கொலிவுட்டை விடுங்க, அதுதான் பொலிவுட் வரைக்கும் போயிட்டீங்களே.... எப்படி இருக்கு பொலிவுட் அனுபவம்?
சூப்பர்.... தமிழ் நாட்டிலிருந்து மும்பைக்கு போனதுமே, ஷ¥ட்டிங் ஆரம்பித்துவிட்டது. படத்தின் பெயர் ‘ஹிம்மத்வாலா’ நல்ல யூனிட் ரொம்பவே நல்லா பார்த்துக் கொண்டார்கள். பிறந்து வளர்ந்து படித்ததெல்லாம் மும்பைதான். அதனால் ஹிந்தி நல்லாவே வரும். வசனம் புரியாமல், பேசத் தெரியாமல் எந்த இடத்திலும் திணறி நிற்கவில்லை.
‘நல்லா ஹிந்தி பேசுaங்க. நிச்சயம் உங்களுக்கு நல்ல எதிர்காலம் இருக்குன்னு அங்கிருந்த ஒருவர் ஆசீர்வதித்தார். அந்த வாழ்த்துக்கள் என்னை நல்ல இடத்துக்கு கொண்டு போகும். ஆறே மாதங்களில் ஹிந்தியில் ஒன்று. தெலுங்கில் இரண்டுன்னு மூன்று படங்கள் முடிந்துவிட்டது. நினைத்துப் பார்த்தாலே மகிழ்ச்சியாக இருக்கிறது- இப்போதும் எனக்கேற்ற கதை. இயக்குநர்கள்ன்னு யோசனை போகிறது. இருந்தாலும் தமிழ் சினிமாதான் பெஸ்ட் இங்கே மட்டும்தான் இருக்க வேண்டும். அதற்கான முயற்சிகளில் தான் இப்போது இருக்கிறேன்.
No comments:
Post a Comment