
இசை அமைப்பாளர் ரமேஷ் விநாயகம், ‘தி காமன் மேன்’ என்ற ஹொலிவுட் படத்துக்கு இசை
அமைத்துள்ளார். இது பற்றி அவர் கூறியதாவது, தமிழ் தெலுங்கு படங்களுக்கு இசை அமைத்து
வந்தேன். இடையில் சில ஆண்டுகள் கர்நாடக இசைக்கு முக்கியத்துவம் கொடுத்தேன்.
குறிப்பாக நம்முடைய பாரம்பரிய இசைக்கு எழுத்து வடிவம் உருவாக்கும் முயற்சியில்
இறங்கினேன். நம் இசையின் புகழ் உலகத்துக்கு சேர வேண்டுமானால் அதற்கு எழுத்து வடிவம்
வேண்டும் என்று அதை உருவாக்கி வருகிறேன். அதன் அடிப்படை பணிகள் முடிந்து விட்டன.
இது குறித்து மியூசிக் அகாடமியில் இசை அறிஞர்கள் முன் விளக்கம் அளித்திருக்கிறேன்.
அந்த பணிகள் ஓரளவுக்கு முடிவடைந்து விட்டதால் மீண்டும் திரை இசைக்கு திரும்பி
இருக்கிறேன். எனது பெயரில் இணைய தளம் தொடங்கியிருக்கிறேன். அதில் என் பணிகள் பற்றி
விரிவாக அறிந்து கொள்ளலாம். தற்போது ‘தி காமன் மேன்’ என்ற ஹொலிவுட் படத்துக்கு இசை
அமைத்திருக்கிறேன். தமிழில் நான்கு படங்களுக்கு இசை அமைக்க இருக்கிறேன். இது பற்றிய
அறிவிப்பு விரைவில் வரும்.
No comments:
Post a Comment