Thursday, May 25, 2023

தானம், தர்மம், அறம்

தானம், தர்மம் இரண்டும் ஒன்றா? இல்லை

தர்மம் என்பது என்ன?

தர்மம் என்பது யாரும் கேட்காமல், அவருக்கே தெரியாமல் அவருக்கு செய்யக் கூடிய நன்மையாகும்.

பசியால் வாடும் ஒருவர் தன் பசியை கூறி கேட்டால் அது என்ன?

தானம்,

இதில் எது புண்ணிய கணக்கில் சேரும்? தர்மம்

அவன் பசி அறிந்து அவன் கேட்காமலே அவனுக்கு உணவு அல்லது உதவி செய்வது தர்மமாகும்.

தர்மம் என்றால் என்ன? தானம் என்றால் என்ன? அறம் என்றால் என்ன?

இருப்பதில் கொடுப்பது “தானம்”……. இருப்பதையே கொடுப்பது “தர்மம்”…… கொடுப்பதையும் தக்க இடம்நோக்கிக் கொடுப்பது “அறம்”…..!

தன்னிடம் இருந்த பொன் பொருளை, அள்ளி அள்ளி “வலதுகை கொடுப்பதை இடதுகை அறியாமல்” கொடுத்த “கொடை” யானது என்ன?

தானம்

அப்படி கொடுத்தவர் யார்? “கர்ணன்”

தனக்கென ஒன்றே ஒன்றுதான் உள்ளது, அதை இழந்துவிட்டால் மீண்டும் பெறமுடியாது என்னும் சூழலைக் கொண்ட, “கவச குண்டலம்”

அந்தணன் உருவில், இந்திரன் வந்து, தந்திரம் செய்தபோது, அதனை அறுத்தெடுத்துக் கொடுத்தமை என்ன?

“தர்மம்”

இப்போது “குருஷேஸ்த்ரம்….! அர்ஜுனனின் அம்புபட்டு அமரனாகப்போகும் சூழ்நிலையில், தன்னிடம் வந்து, அந்தணன் உருவில் கையேந்தும் கண்ணன்……கொடுத்த்து என்ன?

இருப்பதில் கொடுக்கவோ, இருப்பதைக் கொடுக்கவோ ஏதுமில்லையேயென கர்ணன் தவித்தபோது, இதுவரை சேர்த்துவைத்த ”புண்ணியம்” அனைத்தையும், கண்ணன் கையிலே, உதிரத்தால் தாரைவார்த்தான்……..!

இது தானமா, தர்ம்மா, அறமா? அறம்

அறத்துக்குள் சங்கமம் ஆவது என்ன?

தானத்தின் பெருமையும், தர்மத்தின் சிறப்பும் அறத்துக்குள் சங்கமம் ஆகின்றன.

தானமும், தர்மமும் இமியளவேனும் சுயநலம் கருதாது செய்யப்படும்போது, அவையே என்னவாகின்றன?

அறமாகின்றன.

அந்த அறமானது, எங்கே படைக்கப்பட வேண்டியது? ஆண்டவன் பாதத்தில்

ஆனால், அதனைப் பகவானின் திருக்கரத்திலே தாரைவார்த்து ஒப்படைக்கின்ற பேறு யாருக்குக் கிடைத்தது?

கர்ணனுக்கு

விழலுக்கு இறைக்காமல், வீணரிடம் போகாமல் எங்கே போகவேண்டுமோ அங்கேயே போய்ச் சேருவது என்ன?

அறம்.நம் வீட்டில் உள்ள பொருட்களில் எவற்றை மற்றவர்களுக்கு தானமாக கொடுக்க கூடாது?

கத்தரிக்கோல், கத்தி, ஊசி போன்றவற்றை

இந்த பொருட்களை தானமாக கொடுத்தால் என்ன நடக்கும்?

கஷ்டம் வந்து கொண்டே இருக்கும்

முதலில் தானமாக கொடுக்கக்கூடாது என்று சொல்லப்படும் பொருள் எது?

நம் வீட்டில் எரிந்த தீபம்.

அதாவது நம் வீட்டில் ஏற்றப்பட்ட, எரிந்த தீபத்தை தானமாக கொடுக்க கூடாது.

நம் வீட்டிலிருந்து திருடும் போகலாமா?

கூடாது என்று சொல்லப்பட்டுள்ளது.

நம் வீட்டில் எரிந்த தீபம் தானமாகக் கொடுத்தாலும், திருட்டுப் போனாலும் என்ன நடக்கும்?

அந்த விளக்கு எந்த இடத்திற்கு சென்றதோ, அவர்களுக்கு நம்முடைய அதிர்ஷ்டமும் சென்றுவிடும் என்கிறது சாஸ்திரம்.

எந்த பொருட்களையெல்லாம் கட்டாயமாக திருமணமாகி சென்ற பெண்ணிற்கு கொடுக்கக்கூடாது என்று சொல்லுவார்கள்?குறிப்பாக வீட்டின் பூஜை அறையில் வைத்து பூஜை செய்து கொண்டிருக்கும் சுவாமி படங்களாக இருந்தாலும் சரி, சுவாமி சிலைகளாக இருந்தாலும் சரி, அந்த பொருட்களையெல்லாம்

இதற்கு என்ன காரணம் சொல்லப்படுகிறது?

பிறந்த வீட்டு லட்சுமி தேவியை, புகுந்த வீட்டுக்கு கொடுத்த அனுப்புவதற்கு சமம் என்று சொல்லுவார்கள்.

தானம் கொடுக்க கூடாத பொருட்கள், சூழ்நிலை காரணமாக தானம் கொடுக்கப்பட்டாலும், நம் வீட்டை விட்டு வெளியே சென்றாலும், ‘அந்த பொருட்களினால் பயன் அடையப் போவது யார்?

நம் வாரிசு தான்!

அதனால் அதில் எந்த ஒரு தவறும் இல்லை’. என்ற எண்ணம் உங்களுக்கு இருந்து விட்டால் என்ன நடக்கும்?

எந்த ஒரு தோஷமும் உங்களை தாக்காது என்பது குறிப்பிடத்தக்கது.



No comments:

Post a Comment