Thursday, May 25, 2023

araneri

 கோயிலில் முதலில் யாரை தரிசித்து வலம் வரவேண்டும்?

பிரதான மூலவரை

அடுத்து யாரை தரிசித்து வலம் வரவேண்டும்?

அம்பாள் மற்றும் பரிவாரங்களை தரிசித்து வலம் வரவேண்டும்.

மூன்றாவது யாரை தரிசித்து வலம் வரவேண்டும்?

நவக்ரஹம், சண்டிகேஸ்வரர், பைரவர் ஆகியோரை தரிசித்து வலம் வரவேண்டும்.

பஞ்சாங்கத்தில் நட்சத்திரம் திதி போன்றவை மதியம் ஆரம்பித்து மறுநாள் மதியம் வரை இருந்தால் விரதம் வழிபாட்டை எப்போது செய்ய வேண்டும்?

விரதம், வழிபாடு மேற்கொள்வதற்கு இரவில் திதி வியாபித்து இருக்கவேண்டும் என்பது நியதி. அதனால் முதல்நாளிலேயே விரதத்தை மேற்கொள்ள வேண்டும் என கூறப்படுகிறது. திதி கொடுப்பது, தர்ப்பணம் செய்வது போன்றவற்றிற்கு இது பொருந்தாது.

பொதுவாக எவற்றுக்கு இடையில் அல்லது யாருக்கு குறுக்கே செல்லக்கூடாது என்பார்கள்?

சுவாமி - நந்தி, கணவன் - மனைவி, பெற்றோர் - குழந்தை, குரு -சிஷ்யன், பசு - கன்று ஆகியோரது குறுக்கே செல்லக்கூடாது என்பது சாஸ்திர நியதி.

சிவன் கோயிலில் சுவாமிக்கும் நந்திக்கும் இடையில் செல்லக்கூடாது என்பது ஏன்?

நந்திதேவர் தமது மூச்சுக் காற்றின் வாயிலாக சுவாமிக்கு சாமரம் வீசி வழிபட்டுக் கொண்டே இருக்கிறார். அது தடைபடாமல் இருக்க நாம் இடையில் செல்லாமல் இருக்க வேண்டும். சுவாமிக்கு சாத்திய

மாலையை வாகனத்தின் முன்

கட்டிக் கொள்ளலாமா?

சுவாமிக்கு சாத்திய மாலைகள் என்னவாகும்?

பிரசாதம் எனும் புனிதப் பெயரையடைகின்றன.

இதனால் இதை பாதுகாக்க வேண்டுமா? எப்படி பாதுகாக்கவேண்டும்?

காலில் படும்படியாக எங்கும் விழ வைக்கக்கூடாது.

வாகனங்களில் கட்டிக் கொள்ளலாமா?

வாகனங்களில் கட்டிக் கொள்வதால் அது செல்லும் இடம் எல்லாம் சிதறி விழும்.

இதனால் என்ன நடக்கும்?

அதன் மீது மற்றைய வாகனங்கள் ஏறிச்செல்வது, நம் காலில் படுவது போன்ற தவறுகள் ஏற்படலாம். இது பாவச் செயல். செய்யக்கூடாது.

வீட்டிலிருந்து கிளம்பும்போது மூன்று பேராகச் செல்லக்கூடாது

என்பது உண்மைதானா?

சுபநிகழ்ச்சிகள் தொடர்பாக பேசச் செல்லும் போது மட்டும் மூன்று பேராகச் செல்லக்கூடாது. மற்ற நிகழ்ச்சிகளுக்கு பிரச்சினையில்லை என்று சொல்லப்படுகிறது.

வாழ்க்கை நவக்கிரகங்களுக்கு கட்டுப்பட்டதா அல்லது முற்பிறவி பாவபுண்ணிய அடிப்படையில் அமைக்கப்படுகிறதா?

முற்பிறவி பாவ புண்ணிய பலன்களின் அடிப்படையில் தான் வாழ்வு அமைகிறது. அதற்கான பலனைத் தரும் அதிகாரம் நவக்கிரகங்களின் கையில் உள்ளது. இதனால் தான் நவக்கிரகங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து வழிபடுகிறோம்.



No comments:

Post a Comment