Thursday, May 25, 2023

வத்தளை, மாபொல, பங்களாவத்தை ஶ்ரீ கனகதுர்க்கை அம்மன் ஆலய தேர்த்திருவிழா


வத்தளை, மாபொல, பங்களாவத்தை அருள்மிகு ஶ்ரீ கனகதுர்க்கை அம்மன் ஆலயத்தின் முதலாவது வருஷாபிஷேகம் கடந்த 30 ஆம் திகதி காலை நடைபெற்ற கணபதி ஹோமத்துடன் ஆரம்பமாகியது. அன்று மாலை மாரியம்மன் ஆலய திருவிழாவும் நடைபெற்றது.

கடந்த 2ஆம் திகதி முதல் மாலை 4. 30 மணிக்கு அருள்மிகு ஶ்ரீ கனகதுர்க்கை அம்மனுக்கும் பரிவார மூர்த்திகளுக்கும் விஷேட அபிஷேகங்களும் பூஜைகளும் நடத்தப்படுவதுடன் வசந்த மண்டப பூஜைகளும் நடத்தப்பட்டு அம்பாள் உள்வீதி வலம் வந்து அருள்பாலிக்கும் நிகழ்வும் இடம்பெறுகிறது. இந்நிகழ்வுகள் இவ்வாறு எதிர்வரும் 8ஆம் திகதி வரை நடைபெறும். எதிர்வரும் 9 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை காலை அஷ்டோத்திரசதா சங்காபிஷேகம், அபிஷேகம், பூஜை என்பன நடத்தப்படும். அன்று பிற்பகல் 2 மணிக்கு வசந்த மண்டப பூஜை நடத்தப்படு​ம். அதனைத் தொடர்ந்து வண்ணமிகு தேரில் ஆரோகணித்து அம்பாள் வௌிவீதி வலம் வந்து அருள்பாலிக்கும் நிகழ்வு இடம்பெறும்.

ஆலயத்திலிருந்து புறப்படும் தேர், அல்பர்ட் பீரீஸ் மாவத்தை, பரணவத்தை, கெரவலப்பிட்டிய அதிவேக வீதி சந்தி வரை சென்று கெரவலப்பிட்டி 20 அடி வீதி சாந்தி வீதி, பங்களாவத்தை சாந்தி வீதி, எட்டபலம்வத்தை வழியாக மீண்டும் ஆலயத்தை வந்தடையும். எதிர்வரும் 10 ஆம் திகதி பால்குடபவனியும் தீர்த்தோற்சவமும் நடைபெறும். எதிர்வரும் 10 ஆம் திகதி மாலை 5 மணிக்கு திருவூஞ்வல் திருவிழாவும் பூங்காவனமும் நடைபெறும். 12 ஆம் திகதி மாலை 6 மணிக்கு வைரவர் மடை இடம்பெறும்.

No comments:

Post a Comment