Friday, January 23, 2015

கல்வியின் அவசியத்தை சொல்லும் ‘வஜ்ரம்

கல்வியின் அவசியத்தை சொல்லும் படமாக ‘வஜ்ரம்’ உருவாகிறது. ‘பசங்க’, ‘கோலிசோடா’  படங்களில் நடித்த ஸ்ரீராம், கிஷோர், பாண்டி, குட்டி மணி ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்கள். ஹீரோயினாக பவானி ரெட்டி அறிமுகமாகிறார். மற்றும் ஜெயபிரகாஷ், தம்பி ராமையா, மயில்சாமி, மூணார் ரமேஷ் உட்பட பலர் நடிக்கிறார்கள். பி.ராமு தயாரிக்கும் இந்தப் படத்தை எஸ்.டி.ரமேஷ் செல்வன் இயக்குகிறார். படம் பற்றி அவர் கூறியதாவது:முழுக்க முழுக்க கல்வியை மையமாக வைத்தே எடுக்கப்பட்டுள்ளது. அடுத்த தலைமுறைகள் சிறப்பாக அமையவேண்டுமானால் அதற்கு கல்வி அவசியம். அப்படிப்பட்ட கல்விக்காகப் போராடும் 4 சிறுவர்களின் கதைதான் இது. அனைவருக்கும் கல்வி என்ற அடிப்படையில் அனாதைகளாகக் கிடந்த சிறுவர்கள் மற்றும் சிறுமியை தத்தெடுத்து பள்ளிக்கூடம் நடத்துகிறார் தம்பி ராமையா. எதிரிகளால் பள்ளி அபகரிக்க படுகிறது. மாணவர்கள் அனைவரும் சிறுவர் சீர்திருத்த பள்ளியில் சேர்க்கப்படுகிறார்கள். அங்கிருந்து தப்பி, எப்படி போராடி தம்பி ராமையாவையும், பள்ளியையும் மீட்கிறார்கள் என்பது திரைக்கதை. பிப்ரவரி 6 ஆம் தேதி படம் ரிலீஸ் ஆகிறது.இவ்வாறு ரமேஷ் செல்வன் கூறினார்.

No comments:

Post a Comment