Wednesday, January 21, 2015

முன்னாள் மனைவி சரிகாவிடம் நலம் விசாரித்த கமல்ஹாசன்

பாலா இயக்கத்தில் உருவாகி வரும் "தாரை தப்பட்டை' படத்தின் மூலம் ஆயிரம் படங்களை நிறைவு செய்துள்ள இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு மும்பையில் நேற்று பாராட்டு விழா நடைபெற்றது.
இந்த விழாவில் அமிதாப்பச்சன், ரஜினிகாந்த், கமல்ஹாசன், தனுஷ்,அபிஷேக்பச்சன் உள்ளிட்ட பல நடிகர்கள் கலந்து கொண்டனர். மேலும் அமிதாப்பின் மனைவி ஜெயப்பச்சன், கமலின் முன்னாள் மனைவி சரிகா, ஸ்ருதிஹாசன், ஐஸ்வர்யா ராய் உள்ளிட்ட பல நடிகைகளும் வந்திருந்தனர்.
விழாவில் முதல் வரிசையில் அமர்ந்திருந்த சரிகாவை பார்த்த கமல்ஹாசன் கை குலுக்கி நலம் விசாரித்தார். அப்போது, சரிகா சிரித்துக் கொண்டே கமலுடன் கை குலுக்கி்னார்.

No comments:

Post a Comment