மேஜர் சுந்தர்ராஜன் என்று பரவலாக அறியப்பட்ட சுந்தர்ராஜன் (மார்ச் 1, 1935 - பெப்ரவரி 28, 2003) வயது - 69, 1965 முதல் 2003 வரை தமிழ்த் திரைப்படங்களில் நடித்து வந்த ஓர் திரைப்பட நடிகர்.

வாழ்க்கை வரலாறு
தேனி மாவட்டம் பெரிய குளம் நகரைச் சேர்ந்த சுந்தர்ராஜன் இளமையில் தொலைபேசித்துறையில் முழு நேரமாகப் பணி புரிந்து கொண்டே ஓய்வு நேரங்களில் மேடை நாடகங்களில் நடித்து வந்தார்.
1962ஆம் ஆண்டு இயக்குனர் சோமிவின் பட்டினத்தார் என்ற திரைப்படத்தில் அறிமுகமானார். மேஜர் சந்திரகாந்த் திரைப்படத்தில் பார்வையற்ற படைத்தலைவர் வேடமேற்று சிறப்பாக நடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். இவர் 900க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் பல்வேறு வகையான வேடங்களேற்று நடித்துள்ளார்.
இதில் கெளரவம், எதிர்நீச்சல், பாமா விஜயம், அபூர்வ ராகங்கள் , தெய்மகன் மற்றும் தெய்வச்செயல் போன்ற திரைப்படங்கள் குறிப்பிடத்தக்கவையாக அமைந்தன.
கூடவே மேடை நாடகங்களிலும் தொலைக்காட்சித் தொடர்களிலும் நடித்து வந்தார். இவர் சில மலையாள, தெலுங்குத் திரைப்படங்களிலும் நடித்துள்ளார். இவரது மகன் கெளதம் தொலைக்காட்சித் தொடர்களில் நடித்து வருகிறார்.
No comments:
Post a Comment