Friday, June 19, 2020

"எங்கிருந்தாலும் வாழ்க" தந்தவன் ராகவன்

"புதையல்" படத்தில் சந்திரபாபுவுடன் இணைந்து "ஹலோ மை டியர் ராமி" என்ற பாடல் பாடினார்.. இதுதான் ஆண்குரலில் ராகவன் பாடிய முதல் பாட்டு..

அதன்பிறகு  அடுத்து வீட்டு பெண் படத்தில் பாடிய  "தக்கார் நிறைந்த சங்கமிது" என்ற தனி பாடல் பட்டிதொட்டி எங்கும் பரவியது.

"பார்த்தால் பசி தீரும்" படத்தில் "அன்று ஊமைப் பெண்ணல்லோ"
 
 "நெஞ்சில் ஓர் ஆலயம்" படத்தில் பாடிய "எங்கிருந்தாலும் வாழ்க", 
 
இருவர் உள்ளம் படத்தில் "புத்தி சிகாமணி பெத்த புள்ள", 
 
வேட்டைக்காரன் படத்தில் "சீட்டுக்கட்டு ராஜா",
 
 பூவா தலையா படத்தில் "போடச்சொன்னா போட்டுக்கறேன்" என்று பல தனித்துவம் மிக்க பாடல்களை பாடியவர். 
 
ஒருகட்டத்தில் இவர் படம் எடுக்கவும் ஆரம்பித்துவிட்டார்.. "கண்ணில் தெரியும் கதைகள்" என்ற படத்தை தயாரித்தார்.. ஆனால் அதிலும் ஒரு புதுமையை செய்தார்.. கேவி மகாதேவன், டிஆர் பாப்பா, இளையராஜா, ஜிகே. வெங்கடேஷ், சங்கர்-கணேஷ் என 5 மியூசிக் டைரக்டர்களை அந்த ஒரே படத்தில் இணைத்தார்..

No comments:

Post a Comment